தேவனின் அதிகாரத்தையும் ஜீவிதத்தில் ராஜ்யபாரத்தையும் அறிவது

ஏப்ரல் 24, 2021

By Xinxin, United States

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “உன் கற்பனையை நம்புவதன் மூலம் தேவனுடைய அதிகாரம், தேவனுடைய வல்லமை, தேவனுடைய சொந்த அடையாளம் மற்றும் தேவனுடைய சாராம்சம் பற்றிய அறிவை அடைய முடியாது. தேவனுடைய அதிகாரத்தை அறிய நீங்கள் கற்பனையை நம்ப முடியாது என்பதால், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உண்மையான அறிவை எவ்வாறு அடைய முடியும்? இதைச் செய்வதற்கான வழி, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பதும், ஐக்கியப்படுவதும், தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதுமாக இருக்கிறது. எனவே, தேவனுடைய அதிகாரத்தின் படிப்படியான அனுபவமும் சரிபார்ப்பும் உங்களிடம் இருக்கும் மற்றும் படிப்படியாக புரிதலைப் பெறுவீர்கள் மற்றும் அதைப் பற்றிய அறிவை அதிகமாகப் பெறுவீர்கள். தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவை அடைய ஒரே வழியாக இது இருக்கிறது. குறுக்குவழிகள் எதுவும் இல்லை. நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம் என்று கேட்பது அழிவுக்காக காத்திருக்க உங்களை செயலற்ற முறையில் உட்கார வைப்பது அல்லது எதையும் செய்யவிடாமல் தடுப்பது போன்றதல்ல. சிந்திக்கவும் கற்பனை செய்யவும் உங்கள் மூளையைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது தர்க்கத்தை யூகிக்க பயன்படுத்தாமல் இருப்பது, பகுப்பாய்வு செய்ய அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பது, அறிவியலை அடிப்படையாகப் பயன்படுத்தாமல் இருப்பது என்பதல்ல. மாறாக, நீ நம்புகிற தேவனுக்கு அதிகாரம் உண்டு என்பதைப் புரிந்து சரிபார்த்து உறுதிப்படுத்துதல் மூலமாக, உன் தலைவிதியின் மீது அவர் ஆளுகையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமாக மற்றும் தேவனுடைய வார்த்தைகள் மூலமாகவும், சத்தியத்தின் மூலமாகவும், ஜீவிதத்தில் நீ சந்திக்கும் எல்லாவற்றின் மூலமாகவும் அவருடைய வல்லமை எல்லா நேரங்களிலும் அவரே உண்மையான தேவனாக இருப்பதை நிரூபிக்கிறது. தேவனைப் பற்றிய புரிதலை எவரும் அடையக்கூடிய ஒரே வழியாக இது இருக்கிறது(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் I”). ஏதாச்சு பெரிய விஷயத்த செய்றதோ அல்லது அற்புதங்களை பார்க்கிறதோ மட்டும்தான் தேவனோட அதிகாரத்தை அறிந்துகொள்ள ஒரே வழினு நான் நினைச்சேன். தேவனோட அதிகாரத்தைப் பத்தின என்னோட புரிதல் உண்மையில குறைவா தான் இருந்துச்சு. அவரோட அதிகாரத்த அறிந்துகொள்றதில ரொம்ப முக்கியமானது என்னன்னா, அவருடைய வார்த்தைகளை வழக்கமான ஜீவிதத்துல அனுபவிக்கிறதும், அவருடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம், எல்லாவற்றிற்கும் மேலே அவருடைய அதிகாரத்தையும் ராஜ்யபாரத்தையும் காண்போம் அப்படிங்கிறதையும் தேவனோட வார்த்தைகள்ல நான் பார்த்திருக்கேன். தேவன் மீதான நம்மோட விசுவாசம் அப்படித்தான் வளருது.

கடந்த ஆண்டு என் குடும்பம் நடவு செய்திருந்த ஏறக்குறைய கால் ஏக்கர் தக்காளி நிலத்துல திடீர்னு அதிகளவில பூச்சி தொற்று ஏற்பட்டுச்சு, அந்த பூச்சிங்க பழம், பூக்கள், இலைகள்னு எல்லாத்தையும் சாப்பிட்டுச்சுங்க. நான் அதை நினைச்சு ரொம்ப கவலைப்பட்டேன், என் குடும்பத்தோட அதுங்களை எப்படி அகற்றுவதுனு விவாதிச்சேன். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது மண்ணை அழித்து புற்றுநோய் காரணிகளை விட்டுச்செல்லும், இது அங்கு நடப்பட்ட எதையும் சாப்பிட ஆபத்தானதா மாத்தும். நாங்க அதுங்களை கையால பிடிக்க முயற்சித்தோம் ஆனா அதுங்க ரொம்ப சீக்கிரமா இனப்பெருக்கம் செய்துருச்சு. நாங்க மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலை செய்தோம், ஆனால் எதுவும் செய்ய முடியல. அதுங்களோட எண்ணிக்கை மட்டும் அதிகரிச்சுது. அதுங்களை அகற்ற நான் வேறு வழிகளை அவசரமாக முயற்சித்தேன். இது நடந்தபோது நான் ஜெபம் செய்தபோதும், தேவனோட அதிகாரத்தையும் ஆட்சியையும் நான் புரிஞ்சுக்கல, அதனால அவருக்கு என் இருதயத்தில் இடம் இல்லை. தேவனை உண்மையா எப்படி சார்ந்திருக்கிறதுனும், அவருடைய சித்தத்தை எப்படி நாடுவதுனும் எனக்குத் தெரியலை. அந்த குறிப்பிட்ட பூச்சியை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை ஆனா நான் பல தசாப்தங்களா உணவுப் பயிரை வளர்த்திருக்கிறேன், பூச்சி கட்டுப்பாடு அனுபவம் நிறைய இருந்திருக்கு. நான் தொடர்ந்து இதை சரியான கவனிச்சா இதுக்கு விடை கிடைக்கும்னு நான் உணர்ந்தேன். எனக்குத் தெரிஞ்ச ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொன்னா முயற்சித்தேன், ஆனா எந்த முடிவுகளும் இல்லாம நான் ஆறு அல்லது ஏழு விஷயங்கள முயற்சித்தேன். நான் பயிர் வளர்த்த இத்தனை ஆண்டுகள்ல, அகற்ற இந்தளவுக்கு கஷ்டமான பூச்சிய நான் ஒருபோதும் பார்த்ததில்லை. கடந்த காலங்கள்ல இந்த மாதிரி பூச்சிகளை என்னால எப்போதும் கட்டுப்படுத்த முடிஞ்சுது, ஆனா இந்த நேரத்தில என்னோட உழைப்பு ரீதியா வளர்க்கப்பட்ட முறைகள் எதுவும் செயல்படலை. வேப்பெண்ணெய் ஒரு நல்ல பூச்சி தடுப்பு மருந்துனு வேளாண் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் கூறினார்னு ஒரு நண்பர் என்கிட்ட கூறினார், அதனால நான் அப்பவே கொஞ்சம் வாங்கினேன், ஆனா அதுவும் வேலை செய்யலை. என்கிட்ட வேற யோசனையே இல்ல, ஒரு தீர்வு கூட கிடைக்கல. அடுத்த இரண்டு நாட்கள்ல தினமும் காலையில் வயலை பார்க்க போனேன் பூச்சிகளால் அழிக்கப்பட்ட தக்காளி செடிகள் அனைத்தையும் பார்த்தேன். சில செடிகள்ல பூக்கள் பாதிப்படைஞ்சு இருந்துச்சு, சில இலைகளின் நுனிகள் வாடியிருந்துச்சுங்க, சில பழங்கள் அழுகிட்டு இருந்துச்சுங்க. நான் பரிதாபமா இருந்தேன். அந்த தக்காளியை நடவு செய்ய சகோதர சகோதரிகள் ஒவ்வொரு நாளும் உதவி செய்தாங்க. அவங்க குறுக்கு நெடுக்கா கட்டை கட்டுறது, கிளை நறுக்குறது, செடிகளுக்கு தாங்கு கம்பு பொருத்துறதுனு நிறைய வேலைகளைச் செய்தாங்க, ஆனா தக்காளி செழித்துக் கொண்டிருந்தப்ப, ஒரு பெரிய அறுவடை இருக்குனு நினைச்சப்ப, இந்த பூச்சிங்க திடீர்னு படையெடுத்துச்சுங்க. அந்த வருஷத்தோட அறுவடை தோல்வியா இருக்கும்னு நான் முடிவு செய்துட்டேன். பூச்சிகளால மூடப்பட்ட செடிகளைப் பார்த்து, நான் ரொம்ப கஷ்டத்தில இருந்தேன். என்னோட பக்கத்து வீட்டுக்காரர் வாங் பயிர்களைப் பத்தி நிறைய அனுபவம் கொண்டிருந்தார், மற்றும் பூச்சிகளைப் பத்தி நிறைய அறிந்திருந்தார், அதனால அவர்கிட்ட ஒரு தீர்வு இருக்கலாம்னு நினைச்சேன். நான் அவர்கிட்ட கேட்கப் போனேன், ஆனா அவர் சொன்னார், “என்னோட 30 ஆண்டு விவசாயத்தில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. நான் ஒரு நாளைக்கு மூன்று முறை பூச்சிக்கொல்லிகளை தெளிச்சுட்டு வர்றேன், அது என் தக்காளிகளைத்தான் கொன்னுது, பூச்சிகளை கொல்லலை.” மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் ஜாங், நம்பிக்கையில்லாம சொன்னார், “நான் மூன்று அல்லது நான்கு பூச்சிக்கொல்லிகளைக் கூட கலந்தேன், ஆனா எதுவும் அதுங்களைக் கொல்லாது!” இதைக் கேட்டதும் எனக்கு உண்மையிலேயே விரக்தி ஆகிருச்சு. இது பூச்சிகளோட வாதை நோய், இதுங்கள அகற்ற எந்த வழியும் இல்லை. என் தக்காளிங்க எல்லாம் அழிக்கப்படும்னு தோனுச்சு. உதவியற்றவனா உணர்ந்த நான் தேவன்கிட்ட ஜெபிச்சேன்: “ஓ தேவனே! இந்த திடீர் பூச்சிபரவலை என்ன செய்றதுனு எனக்குத் தெரியலை. நான் நஷ்டத்தில இருக்கேன். இதை நான் எப்படி அனுபவிக்கணும், நான் என்ன பாடம் கத்துக்கணும்னு நான் தெரிஞ்சுக்க தயவுசெய்து எனக்கு தெளிவூட்டி வழிகாட்டுங்க.”

ஒரு முறை ஒரு கூட்டத்தில தேவனிடமிருந்து இந்த வார்த்தைகளைப் படிச்சேன். “தேவனுடைய சர்வவல்லமை மற்றும் கட்டுப்பாட்டின்கீழ், அனைத்துமே அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப உருவாகின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. அவற்றின் இருப்பை நிர்வகிக்கும் விதிகள் எழுகின்றன. மேலும் அவை விதிகளுடனேயேவளர்ந்து பெருகுகின்றன. எந்தவொரு மனிதனும் அல்லது விஷயமும் இந்த விதிகளுக்கு மேற்படவில்லை. இது ஏன்? ஒரே பதில் இதுதான்: இதற்குகாரணம் தேவனுடைய அதிகாரமாகும். அல்லது, இதை வேறு விதமாகக் கூறினால், இதற்குகாரணம் தேவனுடைய எண்ணங்களும், அவருடைய வார்த்தைகளும், அவருடைய தனிப்பட்ட செயல்களுமாகும். இதன் பொருள் என்னவென்றால் தேவனுடைய அதிகாரமும் தேவனுடைய எண்ணமும் தான் இந்த விதிகளுக்கு வழிவகுக்கின்றன. அவை அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப மாறுகின்றன. மேலும் இந்த மாற்றங்கள் அனைத்தும் அவரது திட்டத்தின் நிமித்தம் நிகழ்கின்றன அல்லது மறைந்துவிடுகின்றன. உதாரணமாக, தொற்றுநோய்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவை எச்சரிக்கையின்றி வருகின்றன. அவற்றின் தோற்றமோ அவை ஏன் நிகழ்கின்றன என்பதற்கான சரியான காரணங்களோ யாருக்கும் தெரிவதில்லை. மேலும் ஒரு தொற்றுநோய் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும்போதெல்லாம், அங்குள்ளவர்கள் பேரழிவிலிருந்து தப்பமுடியாது. தீய அல்லது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் பரவலால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களை மனித அறிவியல் புரிந்துகொள்கிறது. அவற்றின் வேகம், பரவும் தூரம் மற்றும் பரவும் முறை ஆகியவற்றை மனித அறிவியலால் கணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஜனங்கள் தொற்றுநோய்களை ஒவ்வொரு வழியிலும் எதிர்க்கிறார்கள் என்றாலும், தொற்றுநோய்கள் வரும் போது, மனிதர்கள் அல்லது விலங்குகள் தவிர்க்க முடியாமல் பாதிப்படைகின்றன என்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. மனிதர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவற்றைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்ப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் எடுக்கும் முயற்சி மட்டுமே ஆகும். ஆனால் எந்தவொரு தனிப்பட்ட தொற்றுநோயின் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கும் மூலக்காரணங்கள் யாருக்கும் தெரிவதில்லை, அவற்றை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு தொற்றுநோயின் எழுச்சி மற்றும் பரவலை எதிர்க்கொள்ள, மனிதர்கள் எடுக்கும் முதல் நடவடிக்கை ஒரு தடுப்பூசியை உருவாக்குவதே ஆகும். ஆனால் தடுப்பூசி தயாராகும் முன்பே தொற்றுநோய் தானாகவே மறைந்துவிடுகிறது. தொற்றுநோய்கள் ஏன் மறைகின்றன? கிருமிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் பருவங்களின் மாற்றத்தால் மறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்…. இந்த கண்மூடித்தனமான யூகங்கள் நியாயமானவையா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, விஞ்ஞானம் எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது. துல்லியமான பதிலையும்கொடுக்க முடியாது. மனிதகுலம் இந்த யூகங்களை மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் தொற்றுநோய்களைப் பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் பயத்தையும் கணக்கிடவேண்டும். இறுதி ஆய்வில், தொற்றுநோய்கள் ஏன் தொடங்குகின்றன அல்லது அவை ஏன் முடிவடைகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் மனிதகுலத்திற்கு அறிவியலில் மட்டுமே நம்பிக்கை உள்ளது, அதை முழுவதுமாக நம்பியுள்ளது. மேலும், சிருஷ்டிகருடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை அல்லது அவருடைய சர்வவல்லமையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆகையால் அவர்கள் ஒருபோதும் ஒரு பதிலையும் பெறமாட்டார்கள்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவன் எல்லாத்தையும் ஆளுறார். எல்லாம் அவருடைய கைகள்ல இருக்கு. பெரியதா இருந்தாலும் சிறியதா இருந்தாலும், கண்ணுக்குத் தெரியுதோ இல்லையோ, ஜீவனுள்ளதோ இல்லையோ, எதுவா இருந்தாலும் அது தேவனோட சித்தத்துக்கு ஏற்ப தான் இருக்கும். ஒவ்வொரு பேரழிவும் தேவனோட ஆட்சிக்குட்பட்டது தான். வாதைகளும் பூச்சிகளாலான கொள்ளைநோய்களும் எங்கிருந்து வருதுனோ அல்லது அதை எப்படி தடுப்பதுன்னோ மக்களுக்குத் தெரியலை. அவை எப்போது மறையும்னும் எங்களுக்குத் தெரியாது. இவை எல்லாமே தேவனால ஆளப்படுது. ஆனா தேவனோட அதிகாரத்தையும் ராஜபாரத்தையும் நான் உண்மையிலேயே புரிஞ்சுக்கல, அதனால அந்த பூச்சிங்க என் தக்காளிகளைத் தொற்றுனப்ப நான் முதல்ல தேவனைத் தேடவும் அவரை சார்ந்திருக்கவும் அவருக்கு முன்னாடி வரலை, ஆனா என்னோட சொந்த முறைகளோட தீர்வு காண முயற்சி செய்தேன். அது பயனில்லாம போச்சு, ஆனாலும் நான் தேவன்கிட்ட போகல அல்லது அவரை சார்ந்திருக்கல. பூச்சிக்கொல்லிகள் கூட வேலை செய்யலைனு அறிஞ்சப்ப நான் நம்பிக்கையற்றவனாவும் உதவியற்றவனாவும் உணர்ந்தேன். நான் தேவன்மேல நம்பிக்கை வச்சிருந்தேன், அவர்கிட்ட ஜெப வார்த்தைகளைப் பேசினேன், ஆனால் அவருக்கு என் இருதயத்தில் இடம் இருக்கலை. இந்த பூச்சிங்களை நானே அகற்றலாம்னு நினைச்சேன். எவ்வளவு ஆணவம்! அறியாமை! அப்புறம் தான் உணர்ந்தேன் அந்த பூச்சிங்க எப்போ தோன்றணும், எப்போ போகணும்னு தேவன்தான் தீர்மானிக்கறார்னு. நம்ம கையில எதுவும் இல்ல. அந்த தொற்றுநோய்கள்ல தேவனோட விருப்பம் என்னனு எனக்கு இன்னும் புரியலை ஆனா நான் என் பங்கை செய்துட்டு, ஆராயுற விஷயத்த தேவன்கிட்டயே விட்டுடணும்னு எனக்கு தெரியும். தேவனோட ஏற்பாடுகளுக்கு நான் அடிபணிய வேண்டியிருந்துச்சு. அந்த உணர்வு எனக்கு அமைதியைக் கொடுத்த்சு. நான் தேவன்கிட்ட பிரார்த்தனை செய்தேன், நான் கீழ்ப்படியவும் அவர் ஏற்பாடு செய்ததை அனுபவிக்கவும் தயாராக இருந்தேன்.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு நான் வயலுக்குப் போனேன், அங்க தக்காளி செடிகள்ல நிறைய சிலந்தி வலைகளை பார்த்தேன். அதெல்லாம் எங்கிருந்து வந்துச்சுனு நான் ஆச்சரியப்பட்டேன். நான் நெருக்கமா போய் பார்த்தேன், வலைகள்ல நிறைய சிறிய அந்துப்பூச்சிகளைப் பார்த்தேன், அப்பத்தான் சிலந்திகள் அவற்றை சாப்பிட விரும்பும்ங்கிறது எனக்கு நினைவில வந்துச்சு. அந்துப்பூச்சிகள் இல்லாம, எந்த முட்டையும் இருக்காது, அதனால இயற்கையாவே குறைவான பூச்சிங்கதான் இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்னாடி இருந்ததை விட குறைவான பூச்சிகள் இருப்பதை நான் உணர்ந்தேன். இது தேவனோட செயல்னு எனக்குத் தெரியும், பூச்சிகளைச் சாப்பிட சிலந்திகளைக் கொண்டு வந்தார். நான் தேவனுக்கு ரொம்ப நன்றியுள்ளவனா இருந்தேன்! இன்னொரு ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு அப்புறம் நான் பார்த்தேன் அந்த பூச்சிங்க எல்லாம் தக்காளி செடிகளோட பழம், கிளைகள், பூக்கள் மற்றும் இலைகளிலிருந்து போயிருந்துச்சு. நான் ரொம்ப உற்சாகமா இருந்தேன். ஒரு சில நாட்கள்ல சிலந்திகள் அந்த பூச்சிகள் எல்லாத்தையும் சாப்பிடும்னு நான் நினைத்துப் பார்த்ததில்லை. தேவன் உண்மையில சர்வவல்லவர்! நான் அதை என் கண்களால பார்க்கலைனா அது உண்மைனு நான் நம்பியிருக்க மாட்டேன். தேவனுக்கான நன்றியும் போற்றுதலும் எனக்குள்ள நிறைஞ்சு இருந்துச்சு. அவிசுவாசிகள் தேவனோட ஆட்சியையும் அதிகாரத்தையும் புரிஞ்சுக்கிறதில்லை. பேரழிவுகளைப் பத்தி அறிஞ்சுக்கவும் அவற்றை தவிர்க்கவும் அவங்க விஞ்ஞானத்தை நம்புகிறாங்க, அதைச் சார்ந்திருக்காங்க ஆனா அவங்களால அவற்றை முழுமையா புரிஞ்சுக்க முடியாது. அவங்க எதையும் சார்ந்திருக்கலை, பேரழிவுகளை எதிர்கொள்றதுல அவங்க உதவியற்றவங்களா இருந்தாங்க, அதனால அவங்களோட பயிர் விளைச்சல் நிறைய பாதிக்கப்படுது. ஆனா நான் தேவனை நோக்கி திரும்பினதும், தேவனுக்குக் கீழ்படியவும் அவர சார்ந்திருக்கவும் தயாராக இருந்தப்ப, எல்லா பூச்சிகளையும் சாப்பிட இந்த சிறிய சிலந்திகளைப் பயன்படுத்தி, தொற்றுநோயை ரொம்ப எளிதா கையாண்டுட்டார். தேவன்தான் எல்லாத்தையும் ஆளுறார், எல்லாத்தையும் திரட்டுறார் என்பதை இது உண்மையில எனக்குக் காட்டுச்சு. அவர் ரொம்ப புத்திசாலி, சர்வவல்லவர்! தக்காளிகள் பழுக்க வேண்டிய நேரம் வந்தப்ப, தொற்றுநோயால இது ஒரு மோசமான அறுவடையா இருக்கும்னு நான் நினைச்சேன், ஆனா என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில, இதுவொரு பம்பர் அறுவடையா இருந்துச்சு. தேவன் அற்புதமான வழிகள்ல கிரியை செய்யுறார்! சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் இப்படி சொல்லுது: “அவருடைய செயல்கள் எங்கும் நிறைந்தவை, அவருடைய வல்லமை எங்கும் வியாபித்திருக்கிறது, அவருடைய ஞானம் எங்கும் வியாபித்திருக்கிறது, இந்த கோட்பாடுகள் மற்றும் விதிகள் அனைத்தும் அவருடைய செயல்களின் உருவகமாகும், மேலும் ஒவ்வொன்றும் அவருடைய ஞானத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய அதிகாரத்திலிருந்து யார் தங்களை விலக்கிக் கொள்ள முடியும்? அவருடைய வடிவமைப்புகளிலிருந்து யார் தங்களை வெளியேற்றிக்கொள்ள முடியும்? எல்லாமே அவருடைய பார்வைக்கு கீழாக உள்ளன, மேலும், எல்லாமே அவருடைய அதிகாரத்தின் கீழ் வாழ்கின்றன. அவருடைய செயல்களும் அவருடைய வல்லமையும் மனிதகுலத்தை வேறு வழியில்லாமல் விட்டுவிடுகின்றன, அதாவது அவர் உண்மையிலேயே இருக்கிறார் என்பதையும் எல்லாவற்றிலும் அதிகாரம் கொண்டிருக்கிறார் என்பதையும் ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்”). தேவனோட அதிகாரமும் ஞானமும் எல்லா இடங்களிலும் இருப்பதை நான் இதன் மூலம் அனுபவிச்சேன். வானிலை, சூரியன் மற்றும் மழைனு எல்லாமே தேவனால ஆளப்படுகின்றன, அதே மாதிரிதான் ஒவ்வொரு வகையான பூச்சியும் தேவனால ஆளப்படுது. எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் அது எதையும் கட்டுப்படுத்த முடியாது. தேவனோட சிருஷ்டிப்பு மற்றும் எல்லாவற்றையும் நிர்வகிப்பதில இருக்கும் ஒவ்வொரு சிறிய விவரத்திலும், தேவனோட தனித்துவமான அதிகாரத்தை நாம உண்மையில காணலாம். அவர் மிகவும் ஞானமுள்ளவர், சர்வவல்லவர்! எதிர்காலத்தில என்ன நடந்தாலும் நான் தேவனை விசுவாசிக்கணும்னும், அவருடைய செயல்களை நல்லா புரிஞ்சுக்கணும்னும் நினைச்சேன்.

இரண்டு மாதங்கள் கழிச்சு நாங்க ஒரு தொகுதி முளைக்கீரையை நட்டோம், இரண்டு வாரங்களுக்கு அப்புறம் ஒரு நல்ல பச்சை நிலம் தோன்றுச்சு. நாங்க ஒரு பெரிய அறுவடை செய்வோம்னு நினைச்சேன். ஆனா ஒருநாள் காலைல, செடிகள்ல டையமண்ட்பேக் அந்துப்பூச்சியின் முட்டைப் புழுக்கள் இருப்பதா என் மனைவி என்னிடம் சொன்னாள், அதை ஒழிக்கச் சொன்னாள். இதைக் கேட்டதும் நான் பயந்துட்டேன். அந்த புழுக்கள் உண்மையில சுறுசுறுப்பானவை, அதுங்கள கையால பிடிக்கறது கஷ்டம், அதுங்க பைத்தியம் போல இனப்பெருக்கம் செய்யும். அதுங்கள ஒன்று அல்லது இரண்டு நாட்கள்ல முதிர்ச்சியடையும். முன்னாடி நாங்க நட்ட சில முலாம்பழம்கள்ல அதுங்க வளர்ந்தன, நான் ஒரு டஜன் விஷயங்களுக்கு மேல முயற்சித்தேன், ஆனால் எதுவும் வேலை செய்யலை. அதுங்க எங்க காய்கறிகளை ஓரிரு நாட்கள்ல சாப்பிட்டு எங்க செழிப்பான தோட்டத்த ஒரு தரிசு நிலமாக மாத்திருச்சுங்க. நான் கொஞ்சம் கவலைப்பட்டேன், ஓரிரு நாட்களுக்குள்ள அதுங்க எங்க முளைக்கீரை எல்லாத்தையும் சாப்பிட்டிரும்னு நினைச்சேன். என்ன செய்றதுனு எனக்குத் தெரியவிலை. நான் விரைவா தேவன்கிட்ட ஜெபம் செய்தேன், அவருடைய சித்தத்தைப் புரிஞ்சுக்க எனக்கு வழிகாட்டும்படி அவர்கிட்ட கேட்டேன்.

இதை நான் பின்னர் தேவனோட வார்த்தைகள்ல படிச்சேன்: “தேவனைக் காணவோ அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கேட்கவோ முடியாத யோபு இவற்றைக் கொண்டிருந்தார். அவர் தேவனைப் பார்த்ததில்லை என்றாலும், தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்பதை அவர் அறிந்து கொண்டார். அவ்வாறு செய்யும் தேவ ஞானத்தை அவர் புரிந்துக்கொண்டார். தேவன் பேசிய வார்த்தைகளை அவர் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை என்றாலும், மனிதனுக்கு வெகுமதி அளிப்பது, மனிதனிடமிருந்து எடுப்பது போன்ற செயல்கள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்பதை யோபு அறிந்திருந்தார். அவரது ஜீவிதத்தின் ஆண்டுகள் எந்தவொரு சாதாரண மனிதரிடமிருந்தும் வேறுபட்டவை அல்ல என்றாலும், எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய தனது அறிவைப் பாதிக்கவோ அல்லது தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான வழியைப் பின்பற்றுவதை பாதிக்கவோ அவர் தனது ஜீவிதத்தின் குறிப்பிடத்தக்க குணத்தை அனுமதிக்கவில்லை. அவருடைய பார்வையில், எல்லாவற்றின் சட்டங்களும் தேவனுடைய கிரியைகளால் நிறைந்திருந்தன, தேவனுடைய இறையாண்மையை ஒரு மனிதனுடைய ஜீவிதத்தின் எந்தப் பகுதியிலும் காணலாம். அவர் தேவனைக் காணவில்லை, ஆனால் தேவனுடைய செயல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன என்பதை அவரால் உணர முடிந்தது. பூமியில் முக்கியத்துவம் பெறாத அவருடைய காலத்தில், அவரது ஜீவிதத்தின் ஒவ்வொரு மூலையிலும் தேவனுடைய அசாதாரண மற்றும் அதிசயமான கிரியைகளை அவரால் காணவும் உணரவும் முடிந்தது. தேவனுடைய அற்புதமான ஏற்பாடுகளைக் காணவும் முடிந்தது. தேவனுடைய மறைவான தன்மையும் மௌனமும் தேவனுடைய கிரியைகளை யோபு உணர்ந்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கவில்லை. எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய அவரது அறிவை அவை பாதிக்கவில்லை. எல்லாவற்றிலும் மறைந்திருக்கும் தேவனுடைய இறையாண்மை மற்றும் ஏற்பாடுகளை உணர்ந்துக்கொள்வது என்பது அவரது அன்றாட ஜீவிதத்தில் உணரப்பட்டது. எல்லாவற்றிலும் அமைதியாக இருப்பதன் மூலமும், எல்லாவற்றின் சட்டங்களையும் நிர்வகிப்பதன் மூலமும் தம் இருதயத்தின் குரலையும் தம் வார்த்தைகளையும் வெளிப்படுத்தும் தேவனுடைய இருதயத்தின் குரலையும், தேவனுடைய வார்த்தைகளையும் தனது அன்றாட ஜீவிதத்தில், யோபு கேட்டார், புரிந்து கொண்டார். அப்படியானால், யோபுவைப் போலவே மனிதர்களுக்கும் மனிதம் மற்றும் தேடல் இருந்தால், அவர்கள் யோபுவைப் போலவே அதே உணர்தலையும் அறிவையும் பெற முடியும். யோபுவைப் போல எல்லாவற்றிலும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய அதே புரிதலையும் அறிவையும் பெற முடியும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II”). தேவனோட வார்த்தைகள்ல பார்த்தேன் யோபு தன்னோட அன்றாட ஜீவிதத்துல தேவனோட அதிகாரத்தைப் புரிந்துகொள்றதுலயும், தேவனோட ஆட்சியையும் சர்வவல்லமையையும் அனுபவிக்கிறதுலயும் கவனம் செலுத்தினான். இதன் மூலம், எல்லாமே தேவன்கிட்ட இருந்து வர்றதையும், தேவன் எல்லாத்தையும், மனுக்குலத்தோட தலைவிதியையும் ஆளுறதையும், கட்டுப்படுத்துறதையும் அவன் கண்டான். அந்த செல்வம் எல்லாம் தன்னோட கடின உழைப்பிலிருந்து வரலை தேவனோட ஆசீர்வாதம் மற்றும் ஆட்சியின் காரணமாத்தான் அது எல்லாத்தையும் தாம் கொண்டிருந்தோம்னு யோபுவுக்கு சந்தேகம் இல்லாம தெரியும். அவனோட செல்வம் பறிக்கப்பட்டபோது, அது முற்றிலும் தேவனோட அனுமதியுடன் நடந்ததுனு அவன் விசுவாசித்தான். கொடுக்கப்பட்டவையும் எடுத்துக்கொள்ளப்படுபவையும் தேவனால் ஆளப்பட்டு தீர்மானிக்கப்படுன்றன. அதனால்தான் அவன் குறைகூறாம தேவனைப் புகழ்ந்தான். ஆனா கடினமான அல்லது எனக்குப் பிடிக்காதது ஏதாச்சு நடந்தப்ப, என்னால அதை ஏத்துக்கிட்டு தேவனுக்குக் கீழ்ப்படிய முடியலை. என் இருதயத்தில தேவனுக்கு இடம் இல்லைனு நான் உணர்ந்தேன், என்னோட விசுவாசமும் குறைஞ்சுட்டு வந்துச்சு. இந்த எண்ணம் என்னை வெட்கமா உணர வச்சுது, மேலும் தேவன்தான் இதை எல்லாம் நடக்க அனுமதிக்கிறார்னு நான் புரிஞ்சுகிட்டேன். தேவனோட சர்வவல்லமையையும் ஆட்சியையும் நான் தெரிஞ்சுக்கணும்னும், என் அன்றாட வாழ்க்கையில உண்மையிலேயே அவருக்குக் கீழ்ப்படியணும்னும் அவர் விரும்பினார். பூச்சிகளை அகற்றுவதும் முளைக்கீரை நன்றாக வளர்ந்ததா என்பது எல்லாம் தேவனோட கைகள்ல இருந்துச்சு. இந்த பழமொழி போல, “பயிரிடுவது மனிதன்கிட்ட இருக்கு, அறுவடை சொர்க்கத்தில இருக்கு.” இந்த அனுபவத்த நான் ஏத்துக்கணும்னும், தேவனோட சித்தத்தைத் தேட கத்துக்கணும்னும், அவரோட ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியணும்னும் எனக்குத் தெரியும். அந்த எண்ணத்த நினைச்சு நான் ரொம்ப நல்லா உணர்ந்தேன், நான் அமைதியா தேவன்கிட்ட ஜெபிச்சேன், “ஓ தேவனே, முளைக்கீரை எவ்வளவு நல்லா விளையுதுங்கிறது உங்க கைகள்ல தான் இருக்குனு நான் நம்புறேன். என்னோட திட்டங்களையும் கவலைகளையும் விட்டுடுவேன், இந்தச் சூழல்ல உமது வார்த்தைகளை அனுபவித்து உமக்குக் கீழ்ப்படிவேன்.” அதுக்கப்புறம் லார்வாக்களை அகற்ற சில விஷயங்களை முயற்சித்தோம், ஆனா எதுவும் செயல்படலை. ஆனாலும் நான் அமைதியா இருந்தேன். இது எல்லாமே தேவனோட கைகள்ல இருந்தது எனக்குத் தெரியும், நாம ஒரு நல்ல அறுவடை பெறமுடியாவிட்டாலும், அது தேவனோட சித்தமாத்தான் இருக்கும். அவர் ஏற்பாடு செய்ததுக்கு நான் கீழ்ப்படிஞ்சேன். ஓரிரு நாட்களுக்கு அப்புறம் நான் காய்கறி வயலுக்குப் போனேன், அங்க குருவிக் கூட்டம் முளைக்கீரையில இருந்து பூச்சிகளை பிடிச்சு சாப்பிடுவதை நான் கண்டேன். தேவன் மீண்டும் எனக்காக ஒரு வழியைத் திறந்து, என்னால தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். நான் தேவனுக்கு ரொம்ப கடமைப்பட்டிருந்தேன்! அடுத்த இரண்டு நாட்களுக்கு அப்புறம் புழுக்கள் எல்லாத்தையும் சிட்டுக்குருவிகள் சாப்பிட்டன. நாங்க மகிழ்ச்சியா இருந்தோம், தேவனுக்கு நன்றி தெரிவிச்சு மீண்டும் மீண்டும் போற்றினோம். தேவன் உண்மையிலேயே சர்வவல்லவர்!

பின்னர், இதை தேவனோட வார்த்தைகள்ல படிச்சேன்: “தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தபோது, அவற்றை சமநிலைப்படுத்தவும், மலைகள் மற்றும் ஏரிகள், தாவரங்கள் மற்றும் அனைத்து வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் ஜீவித நிலைமைகளை சமப்படுத்தவும் எல்லா வகையான முறைகளையும் வழிகளையும் பயன்படுத்தினார். அவர் நிறுவிய கட்டளைகளின் கீழ் அனைத்து வகையான ஜீவன்களையும் ஜீவிக்கவும் பெருகவும் அனுமதிப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. சிருஷ்டிப்பின் எந்தவொரு விஷயமும் இந்த கட்டளைகளுக்கு வெளியே செல்ல முடியாது மற்றும் கட்டளைகளை உடைக்க முடியாது. இத்தகைய அடிப்படை சூழலுக்குள் மட்டுமே மனிதர்கள் பாதுகாப்பாக தலைமுறை தலைமுறையாக ஜீவிக்கவும் பெருகவும் முடியும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IX”). தேவன் எல்லாத்தையும் சிருஷ்டிச்சப்ப, அவர் அவர்களோட ஜீவித நிலைமைகளை எல்லா விதத்திலும் சமப்படுத்தினார், இதனால அவருடைய ஆட்சியின் கீழ் உள்ள ஒவ்வொரு உயிருள்ள ஜீவனும் ரொம்ப ஒழுங்கான முறையில ஜீவித்து, இனப்பெருக்கம் செய்கின்றனனு, தேவன் தீர்மானித்தபடி ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கின்றனன்னு, ஒன்றுக்கொன்று கட்டுக்குள் வைத்திருக்கின்றனன்னு, தேவனோட வார்த்தைகளிலிருந்து நான் கண்டேன். தேவன் உருவாக்கிய இந்த விதிகளுக்கு எதிரா எதுவும் போக முடியாது. நம்ம ஜீவித சூழலைப் பாதுகாக்கவும், ஸ்திரத்தன்மையை வழங்கவும், சுற்றுச்சூழல் சமநிலைக்காக தேவன் எல்லா மிருகங்களையும், செடிகளையும், பூச்சிகளையும் படைத்தார். தேவனோட இந்த ஏற்பாடுகள் இல்லாம, அவர் நிர்ணயித்த விதிகள் இல்லாம, மிருகங்களும் பூச்சிகளும் குழப்பத்துக்கு உள்ளாகும் அது நம்ம ஜீவிதத்த குழப்பத்தில தள்ளும். நம்மால பிழைக்க முடியாது. தேவனோட பரிசீலனைகள் ரொம்ப நுணுக்கமானவை. எல்லாமே அவருடைய பெரிய வல்லமை, ஞானம் மற்றும் அதிசயத்தன்மைய வெளிப்படுத்துகின்றன, அதுக்கும் மேல, மனுக்குலம் மேல அவருக்கு இருக்க அன்ப வெளிப்படுத்துகின்றன. நாங்கள் பார்த்த வரைக்கும், எங்க காய்கறிகள்ல தோன்றிய பூச்சிகளுக்கு எந்த தீர்வும் இல்லை, ஆனா தேவன் அவற்றை சாப்பிட சிட்டுக்குருவிகளையும் சிலந்திகளையும் பயன்படுத்தினார், அதனால தேவன் எங்களுக்கு வழங்கிய உணவை எங்களால அனுபவிக்க முடிஞ்சுது. தேவனால சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொன்னுக்கும் அதுக்குனு ஒரு நோக்கம் இருக்கு, சிறிய சிலந்திகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட அவற்றுக்குனு சொந்த வேலையைக் கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழலை சமப்படுத்த தேவன் அவற்றைப் பயன்படுத்துறார். தேவன் எல்லாத்தையும் ஒன்னோடொன்னு தொடர்புபடுத்துறார். இது எல்லாம் நாம் சிறப்பா ஜீவிக்கனும்னு தான் செய்யுறார். நாங்கள் பின்னர் பயிரிட்ட காய்கறிகள்ல சில சின்ன கருப்பு பூச்சிகளும் நாத்தப்பூச்சிகளும் தோன்றின, நான் தேவன்கிட்ட ஜெபிச்சேன், அப்புறம் அந்த பூச்சிகளோட இயற்கையான எதிரி தேரைய பத்தி நினைச்சேன். நிலத்துல ஐந்து தேரைகளை விட்டோம், இரண்டு மாசங்கள்ல, அவை சுமார் 30ஆ வளர்ந்தன. பூச்சிகள் எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சுது, எங்களுக்கு ஒரு பெரிய அறுவடை கிடைச்சுது. இதுக்காக நான் தேவனுக்கு ரொம்ப கடமைப்பட்டிருந்தேன். அப்ப தேவனோட வார்த்தைகளை நான் நினைச்சேன், “‘தேவனுடைய அதிகாரம்’ என்ற சொற்றொடர் புரிந்துக்கொள்ள முடியாததாகத் தோன்றினாலும், தேவனுடைய அதிகாரம் சுருக்கமானது அல்ல. மனிதனுடைய ஜீவிதத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அவர் மனிதனுடன் இருக்கிறார், ஒவ்வொருநாளும் அவனை வழிநடத்துகிறார். எனவே, நிஜ வாழ்வில், ஒவ்வொரு மனிதரும் தேவனுடைய அதிகாரத்தின் மிக உறுதியான அம்சத்தை நிச்சயமாகவே பார்த்து அனுபவிப்பார்கள். தேவனுடைய அதிகாரம் மெய்யாகவே உள்ளது என்பதற்கு இந்த உறுதியான அம்சம் போதுமான சான்றாகும். மேலும் தேவன் அத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்ற சத்தியத்தை ஒருவர் அறிந்துக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் இது முழுமையாக உதவுகிறது(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனோட அதிகாரத்தைப் புரிஞ்சுக்க நான் சில முக்கிய நிகழ்வுகளையெல்லாம் சந்திக்கணும்னு நினைச்சேன், அதனால அன்றாட ஜீவிதத்தில சின்ன விஷயங்களை அனுபவிப்பதில நான் கவனம் செலுத்தலை. அதுக்கப்புறம், தேவனோட அதிகாரம் நான் நினைச்சபடி புரிஞ்சுக்க கஷ்டமானது இல்லனு நான் உணர்ந்தேன். அவருடைய அதிகாரமும் வல்லமையும் எப்போதுமே தெளிவாத் தெரியும், அவை நம்மோட அன்றாட ஜீவிதத்தில நம்மகூட இருக்கின்றன. அது பெருசா இருந்தாலும் சரி, சின்னதா இருந்தாலும் சரி, தேவனோட வார்த்தைகளை அனுபவிப்பதில நாம கவனம் செலுத்துற வரைக்கும், அவருடைய அதிகாரத்தைப் பார்த்துட்டு இருப்போம்.

நான் அந்த பூச்சிகளை எதிர்கொண்ட அந்த சில மாதங்களைப் பத்தி யோசிச்சுப் பார்த்தா, முதல்ல என்னோட அனுபவத்தையும் விஞ்ஞான அறிவையும் மட்டுமே நான் நம்பியிருந்தேன், ஆனா அது எனக்கு எந்த நன்மையையும் கொடுக்கலை. நான் தேவனோட வார்த்தைகளுக்குக் கீழ்படிஞ்சு, அவற்றை அனுபவிச்சப்ப, அவரோட செயல்களைப் பார்த்து தேவனோட அதிகாரம் மற்றும் ராஜ்யபாரத்தைப் பத்தின நடைமுறை புரிதலை நான் பெற்றேன். தேவன்மீதான என்னோட விசுவாசமும் வளர்ந்தது. தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

Christian Testimony | தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது (Tamil Subtitles)

கதையின் நாயகி எப்பொழுதும் உற்சாகமாக தேவனுக்காக தன்னை செலவழித்து, தேவன் திரும்புவதற்காக காத்திருக்கிறார். பின்னர் தற்செயலாக, தேவன் ஏற்கனவே...

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

கடைசி நாட்களின் அடையாளம்: இரத்த நிற மலர் சந்திர கிரகணம் 2022 இல் தோன்றுகிறது

உங்களுக்கு தெரியுமா? இரத்த நிலவு அடிக்கடி தோன்றுவதற்குப் பின்னால் கர்த்தர் திரும்பும் மர்மம் மறைந்துள்ளது. தெரிந்துகொள்ள இப்போது படியுங்கள்.

Leave a Reply