சுவிசேஷத்தைப் பகிர்வதற்கான சரியான மனநிலை

ஜனவரி 7, 2023

ஒரு தடவ, ஒரு சகோதரர் என்கிட்ட, அவரோட சின்ன தங்கச்சி லீ பிங் சின்ன வயசுல இருந்தே ஒரு விசுவாசி, அதோட கர்த்தருக்காகப் பல வருஷங்களா ஆர்வத்தோட வேல செஞ்சாங்க, அவங்க விசுவாசத்துல அவங்க உண்மையா இருந்தாங்க அப்படின்னு சொன்னாரு. நான் அவங்க கிட்ட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கணும்னு அவர் விரும்பினாரு. நான் சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். ஆனா நான் லி பிங் கிட்ட பேசும்போது அவங்க எந்திரிச்சு பதட்டத்தோட, “ஜனங்கள தவறா வழிநடத்த கடைசி நாட்கள்ல கள்ளக் கிறிஸ்துகள் தோன்றுவாங்க, அதோட கர்த்தரோட வருகையப் பத்தின எந்தச் செய்தியும் பொய்யானது அப்படின்னு எங்க போதகர் சொன்னாரு. நீங்க கிழக்கத்திய மின்னலுக்காக பிரசங்கிக்கிறீங்க. நான் கேட்க மாட்டேன். நம்ம வேற விஷயத்த பத்தி பேசலாம், ஆனா விசுவாசப் பத்தின விஷயங்கள என்கிட்ட பேசாதீங்க” அப்படின்னு சொன்னாங்க. போதகரோட வதந்திகளாலயும் பொய்களினாலயும் அவங்க ரொம்ப தவறா வழிநடத்தப்பட்டிருப்பத பாத்து, நான் அவங்ககிட்ட, “சகோதரி, ‘கிழக்கத்திய மின்னல்’னா என்ன உங்களுக்குத் தெரியுமா? கர்த்தராகிய இயேசு தெளிவா தீர்க்கதரிசனம் சொல்லிருக்காரு, ‘மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). ‘கிழக்கத்திய மின்னல்’ அப்படிங்கறது தேவனோட கிரியையயும் வார்த்தைகளயும் குறிக்குது. சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்படுற எல்லா சத்தியங்களும் கிழக்கில தோன்றுற ஒரு பெரிய வெளிச்சம் மாதிரி இருக்குது, அதனாலதான் ‘கிழக்கத்திய மின்னல்’ ங்கற பேரு. சத்தியத்தோட இந்த ஒளி ஏற்கெனவே கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் பிரகாசிச்சிருக்கு. கர்த்தரோட தீர்க்கதரிசனம் முழுசா நிறைவேறிறுச்சு. கிழக்கத்திய மின்னல்ங்கறது தேவனோட தோற்றமும் கிரியையுமா அப்படிங்கறத நாம ஆராயலாம்” அப்படின்னு சொல்ல முயற்சி பண்ணேன். அவங்க கேக்கல, அதோட “நம்மகிட்ட இருந்து வித்தியாசமான முறையில யாராவது பிரசங்கம் பண்ணா அவங்க எவ்ளோ நல்லா பேசினாலும் நாம கேக்க முடியாது. நம்ம சொந்த பெத்தவங்க இல்ல கூட பிறந்தவங்க பேச்சக் கூட நாம கேக்க முடியாது, அதோட அந்நியர்கள நம்மால ஏத்துக்கவே முடியாதுன்னு எங்க போதகர் சொன்னாரு” அப்படின்னு சொன்னாங்க. அது கர்த்தரோட சித்தம் இல்ல, வேதாகமம் சொல்லுது, “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” (எபிரெயர் 13:2). நான் பொறுமையா, “சகோதரி, வேதாகமம் சொல்லுது, ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2:7). ‘நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). இந்தத் தீர்க்கதரிசனங்கள் நாம கர்த்தர வரவேற்பதுக்கு அவரோட சத்தத்த கேக்கணும்னு நமக்கு சொல்லுது. கர்த்தர் திரும்பி வந்துட்டாருன்னு யாராவது சாட்சி கொடுத்தா நாம அவர சந்திக்கப் போகணும். அப்பதான் கர்த்தர வரவேற்கிற வாய்ப்பு நமக்கு கிடைக்கும். கர்த்தர் திரும்பி வந்துட்டாருன்னு யாராவது சாட்சி சொல்றத நாம கேட்காம இல்ல தேடாமல் இருந்தம்னா, நாம அவர வரவேற்குற வாய்ப்ப இழந்துருவோம்!” அப்படின்னு பதில் சொன்னேன். ஆனா அவங்க கேக்க மறுத்துட்டு அங்கிருந்து போறதுக்கு சாக்கு சொன்னாங்க. லி பிங்கோட அணுகுமுற எனக்கு கடினமா இருந்துது. அவங்க கேட்க விரும்பலைனா, நான் எப்படி சுவிசேஷத்த அவங்க கிட்ட பகிர்ந்துக்க முடியும்? ஆனா அது சரியான மனநில இல்லைன்னு எனக்குத் தெரியும். கர்த்தரோட திரும்பிவருதல நான் சாட்சியா கூட சொல்லல, அப்ப எப்படி நான் ரொம்ப எளிதா விட்டுட முடியும்? அவங்க உண்மையான விசுவாசியா இருக்குற வரைக்கும், அவங்களோட சுவிசேஷத்த பகிர்ந்துக்கறதுக்கு நான் என்னோட எல்லா முயற்சியும் செய்ய வேண்டிய இருந்துச்சு.

சுவிசேஷத்த அவங்ககிட்ட பகிர்ந்துக்கறதுக்கு லி பிங்கோட வீட்டுக்கு நாங்க அப்புறமா போனோம், ஆனா அவங்க எங்கள பார்த்த உடனே கதவ சாத்திட்டு, நாங்க என்ன சொல்லியும் கதவ திறக்க மறுத்துட்டாங்க. எங்களால எதயும் செய்ய முடியல, அதனால நாங்க அங்க இருந்து கிளம்பிட்டோம். நாங்க இன்னும் சில தடவ போனோம் ஆனா அவங்க கதவ திறக்கல, அதோட, “நீங்க ஆடுகள திருட விரும்புகிறீங்க, அதோட கிழக்கத்திய மின்னல்ல இருந்து வர யாரயும் சாகுற அளவுக்கு அடிச்சு, அவங்கள ஆத்துல தூக்கிப் போடணும், இல்லன்னா காவல்துறகிட்ட புகார் செய்யணும்னு எங்க போதகர் சொன்னாரு. இங்கிருந்து போயிருங்க, எங்க போதகர் உங்கள பாக்காதபடிக்கு கவனமா இருந்துக்கோங்க” அப்படின்னு சொன்னாங்க. அவங்க அப்படி சொன்னதக் கேட்டு எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துது, நான் விட்டுட விரும்புனேன். ஆனா அந்த நேரத்துல, விட்டுவிடுறது தேவனோட சித்தத்துக்கு ஏற்ப இருந்துதா இல்லையான்னு எனக்குத் தெரியல, அதனால நான் அமைதியா ஒரு ஜெபத்த செஞ்சேன். அப்போ தேவனோட வார்த்தைகள்ல இருந்து ஒரு பகுதி என் மனசுல வந்துது. “சுவிசேஷத்தைப் பரப்புவதில், நீ உன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் மற்றும் யாருக்கு நீ அதைப் பரப்புகிறாயா அவர்கள் ஒவ்வொருவரையும் அக்கறையாய்க் கையாள வேண்டும். முடிந்த அளவுக்கு தேவன் மக்களை இரட்சிக்கிறார், மற்றும் நீ தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மெய்யான வழியைத் தேடி கருத்தில் கொள்ளும் யாரொருவரையும் நீ அலட்சியமாகக் கடந்துபோகக் கூடாது. … அவர்கள் மெய்யான வழியைக் கருத்தில் கொண்டு, சத்தியத்தைத் தேடக்கூடிய வரைக்கும், நீங்கள் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிக்கவும், மேலும் சத்தியத்தைக் குறித்து அதிகமாக அவர்களுடன் ஐக்கியங்கொள்ளவும், தேவனுடைய கிரியைக்குச் சாட்சியளிக்கவும், அவர்களது கருத்துகளைத் தீர்க்கவும் உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும், அதன்மூலமாக, நீங்கள் அவர்களை ஆதாயப்படுத்தி, தேவனுக்கு முன்பாக அவர்களை அழைத்துக்கொண்டு வரலாம். இதுவே சுவிசேஷத்தைப் பரப்பும் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதாய் இருக்கிறது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சுவிசேஷத்தைப் பரப்புவது பொறுப்புள்ள எல்லா விசுவாசிகளுக்கான கடமையாகும்”). தேவனோட வார்த்தைகள நினைச்சப்போ நான் வெட்கப்பட்டேன். தேவன் முடிஞ்ச வரைக்கும் ஜனங்கள இரட்சிக்கிறாரு. நம்பிக்கைக்கான அடையாளம் இருக்குற வரைக்கும் தேவன் யாரையும் கைவிட மாட்டாரு. சுவிசேஷத்த பகிர்ந்துக்கிற ஒருத்தியா இருக்கிற நான், என்னோட எல்லாத்தயும் கொடுக்கணும். ஒரு நபர் கொள்கைகளுக்குப் பொருந்துற வரைக்கும், நான் அவங்களுக்குப் பொறுமையாவும் அன்பாவும் பிரசங்கம் பண்ணனும், அதோட என்னோட கடமைகள நிறைவேத்தணும். அது என்னோட கடம. ஆனா நான் சின்ன கஷ்டத்த சந்திச்சப்போ பின்வாங்கவும் விட்டுடவும் விரும்புனேன். நான் என்னோட கடமையில கொஞ்சங்கூட அர்ப்பணிப்பா இல்ல. நான் அத உணர்ந்தப்போ ரொம்ப குற்ற உணர்ச்சியா உணர்ந்தேன். நான் ஜெபிச்சு லி பிங் என்னை எப்படி நடத்தினாலும் அவங்க கிட்ட நல்ல மனிதத்தன்ம இருந்ததாலயும் அவங்க உண்மையான விசுவாசியா இருந்ததாலயும், நான் விட்டுடாம, தேவனோட வார்த்தைகள், கிரியைய பத்தின சாட்சிய அவங்களுக்குச் சொல்லி அவங்கள தேவனுக்கு முன்னாடி கொண்டு வருவேன்னு தீர்மானம் எடுத்தேன். நான் முதல் முதல்ல கடைசி நாட்களோட தேவனோட கிரியைய ஆராஞ்சப்போ, என்னோட கருத்துகள தீர்க்க சகோதர சகோதரிகள் சத்தியத்த பத்தி பொறுமையா ஐக்கியம் கொள்ளாம இருந்திருந்தா, நான் அநேகமா மதத்திலதான் நெலச்சிருந்திருப்பேன். சுவிசேஷத்தப் பகிர்றதுக்கு ரொம்ப அதிகமான அன்பும் பொறுமையும் வேணும், நம்மால முடிஞ்ச எல்லாத்தயும் செய்றோம் அதோட நம்மோட கடமைகள நிறைவேத்தறோம். அதுதான் தேவனோட சித்தம்.

ஆச்சரியமா, லி பிங்கோட வீட்டுக்கு அடுத்த தடவ நாங்க போனப்போ, அவங்க எங்களுக்காக கதவ திறந்தாங்க. ஆனா அதுக்கப்புறம் அவங்க எங்ககிட்ட சரியா நடந்துக்கல பேசவும் இல்ல. அவங்க கதவ திறக்கிற வரைக்கும் ஐக்கியப்படுவதுக்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு இருக்குது, அதோட அவங்க கொஞ்சம் கவனிச்சா கூட படிப்படியா விஷயங்கள புரிஞ்சுக்குவாங்கன்னு நான் நினைச்சேன். அவங்களோட ஐக்கிப்படறதுக்கு இந்த வாய்ப்ப நாங்க பயன்படுத்திட்டோம். நான், “சகோதரி, கர்த்தர வரவேற்கிறது ஒரு பெரிய விஷயம். நமக்கு கர்த்தரோட வார்த்தைகள பின்பற்றாம, உண்மையான வழிய ஆராயும்போது கண்மூடித்தனமா மனுஷங்க சொல்றத கேட்டோம்னா, நாம தேவனுக்கு எதிரா போறதுக்கு வாய்ப்பிருக்கு” அப்படின்னு சொன்னேன். “கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செஞ்சப்போ, யூத விசுவாசிகள் அவங்களோட மதத்தலைவர்களோட பேச்ச கேட்டாங்க, அவங்களோட சேர்ந்து தேவன கண்டனம்பண்ணி நிராகரிச்சாங்க. அவங்க கடைசியில் தேவனால தண்டிக்கப்பட்டாங்க. இன்னையோட மதத்தலைவர்களும் போதகர்களும் கடைசி நாட்களின் தேவனோட கிரியைய தேடவும் மாட்டாங்க ஆராயவும் மாட்டாங்க, அதோட அவங்களோட திருச்சபைகள மூடி வெக்கறதுக்கும் விசுவாசிகள தவறா வழிநடத்த பொய்கள பரப்பறதுக்கும் அவங்களால முடிஞ்ச அத்தனையயும் கூட செய்வாங்க. கர்த்தரோட வருகைய பத்தின எந்தச் செய்தியும் பொய், நம்மோட சொந்த சகோதரர்கள் அப்படி சொன்னாக் கூட நாம அவங்க பேச்ச கேக்கக் கூடாது, அவங்கள காவல் நிலையத்தில புகார் செய்யணும்னு அவங்க சொல்றாங்க. அப்படிச் சொல்றதும் செயல்படுறதும் தேவனோட போதனைகளுக்கு இசஞ்சு போகுமா? அப்படிச் சொல்றவங்கள விசுவாசியா கூட நினைக்க முடியுமா?” நாங்க சொல்றது எல்லாமே உண்மைன்னு அவங்க பார்த்தப்போ, அவங்களோட மனப்பான்ம ரொம்பவே மேம்பட்டுச்சு, எங்களோட பேச விருப்பமா மாறுனாங்க. அங்கள குழப்பினது எதுங்கறதயும் எங்ககிட்ட பகிர்ந்துகிட்டாங்க: “கர்த்தராகிய இயேசு நம்மள எச்சரிச்சாரு, ‘அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்(மத்தேயு 24:23-24). கர்த்தர் திரும்பி வர்ற கடைசி நாட்கள்ல, ஜனங்கள தவறா வழி நடத்துற கள்ளகிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் இருப்பாங்க. கர்த்தர் திரும்பி வர்றத பத்தின எந்தப் பிரசங்கமும் ஜனங்கள தவறா வழிநடத்துற ஒரு பொய்யான கிறிஸ்தவ பத்தினதுன்னு எங்க போதகர் சொன்னாரு. எங்களுக்கு வேதாகமம் நல்லாத் தெரியாது, அதனால கவனமா இருக்கணும், இல்லைனா வருஷகணக்கான எங்க விசுவாசம் வீணாப்போயிரும்னு அவரு சொன்னாரு. தவறான காரியத்தில எனக்கு விசுவாசம் இருந்தா என்ன நடக்கும்னு நான் கவலப்படுறேன்.” நான் உடனடியா, “சகோதரி தவறா வழிநடத்தப்படுவோம்னு நினைக்கிற உங்க பயம் எங்களுக்குப் புரியுது. ஆனா நாம் கர்த்தரோட சித்தத்தப் புரிஞ்சுக்கணும். கள்ளக்கிறிஸ்துகளப் பத்தி நாம பகுத்தறிஞ்சு அவங்களால ஏமாத்தப்படாம இருப்பதுக்காக அவரு இதச் சொன்னாரு, அதுக்காக நாம கண்மூடித்தனமா அவங்களுக்கு எதிரா நம்மள பாதுகாத்துட்டு கர்த்தர வரவேற்கத் தவறுவதுக்காக சொல்லல. கள்ளக்கிறிஸ்துகளோட வெளிப்பாடுகள அவரு தெளிவா விளக்கியும் இருக்காரு. ஜனங்கள தப்பான வழியில போக வெக்க அடையாளங்களயும் அற்புதங்களயும் காட்டுறத அவங்க நம்பியிருக்காங்க. ஒரு கள்ள கிறிஸ்துவோட அடையாளங்கள் நமக்குத் தெரியும், அதனால நாம இவற்ற கவனிச்சுக்கிற வரைக்கும் நாம தவறா வழிநடத்தப்பட மாட்டோம். நாம சூழல்ல இருந்து தேவனோட வார்த்தைகள புரிஞ்சுட்டு, கர்த்தரோட வருகையை பத்தின எந்த சாட்சியம் பொய்யானதுன்னு நம்பி எப்பவும் தேடாம ஆராயாம இருந்தா, நாம கர்த்தராகிய இயேசுவோட சொந்த வருகையயே கண்டனம் பண்ணுவோம் தானே? அப்புறம் எப்படி நாம கர்த்தர வரவேற்கிறது?” அப்படின்னு பதில் சொன்னேன். “அதனால இது கர்த்தராகிய இயேசுவோட வருகையாங்கறத நாம தீர்மானிக்க விரும்புனா, தேவனோட சத்தத்த கேட்டு கள்ள கிறிஸ்துகள்ல இருந்து உண்மையான கிறிஸ்துவ பகுத்தறியறது தான் முக்கியம். எப்பவும் பாதுகாப்பா இருந்துட்டு எல்லாத்தயும் நிராகரிக்கிறது பிரச்சினய தீர்க்காது. கர்த்தர வரவேற்கிறதுல முக்கியமானது அவரோட சத்தத்த கேக்கறதுதான். கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20).”

அதுக்கப்புறம், கள்ளக்கிறிஸ்துகள்ல இருந்து உண்மையான கிறிஸ்துவ எப்படி சொல்றதுங்குறத பத்தின தேவனோட வார்த்தைகள்ல ரெண்டு பகுதிகள நாங்க படிச்சோம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்”). “தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). தேவனோட வார்த்தைகள படிச்சதுக்கு அப்புறம் நான் ஐக்கியப்பட்டேன், “தேவனோட வார்த்தைகள் ரொம்ப தெளிவானவை. கள்ளக்கிறிஸ்துகள்ல இருந்து உண்மையான கிறிஸ்தவப் பிரிச்சறிஞ்சி சொல்றது தேவனோட கிரியையில, வார்த்தைகள்ல அதோட அவர் வெளிப்படுத்துற மனநிலையில இருந்து செய்யணும். ஏன்னா கிறிஸ்துவோட சாராம்சமே வழியும், சத்தியமும் ஜீவனுமா இருக்கு. அவரு மனுக்குலத்துக்கு சத்தியத்த கொடுக்கிறாரு அதோட தேவனோட மனநிலைய வெளிப்படுத்தறாரு. அவர் மீட்போட, இரட்சிப்போட கிரியைய செய்றாரு. கர்த்தராகிய இயேசு கிரிய செஞ்சப்போ, அவர் மனக்குலத்துக்கு மனந்திரும்புவதுக்கான வழிய கொடுத்தாரு. அறிக்கயிடவும் மனந்திரும்பவும், மத்தவங்கள நம்மளப் போலவே நேசிக்கவும், சகிப்புத்தன்மையோட பொறுமையா இருக்கவும் நமக்கு சொல்லிக் கொடுத்தாரு. அவர் நிறைய அடையாளங்களயும் அதிசயங்களயும் காட்டினாரு, நோயாளிகள சுகப்படுத்தினாரு, பிசாசுகள துரத்துனாரு, மரிச்சவங்கள உயிர்பிச்சாரு, ஊனமுற்றவங்கள மறுபடியும் நடக்க செஞ்சாரு. அவர் மனுஷனுக்கு முடிவில்லாத கிருபைய கொடுத்தாரு, தேவனோட இரக்கத்தயும் அன்பயும் ருசிபாக்கவும், அதோட அவரோட வல்லமையயும் அதிகாரத்தயும் பாக்கவும் நம்மள அனுமதிச்சாரு. கடைசில, கர்த்தராகிய இயேசு சிலுவையில அறையப்பட்டு, மீட்பின் கிரியைய முடிச்சாரு. கர்த்தரோட வார்த்தைகள், கிரியை, அவரு வெளிப்படுத்தின மனநிலையில இருந்து, அவரு ஒரு தெய்வீகமான சாராம்சத்தக் கொண்டிருந்தாரு, அவரு தேவனோட மனுவுருங்கறத நாம பாக்க முடியும். இப்ப அவர் கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்திருக்கிறாரு. அவரு சத்தியத்த வெளிப்படுத்தி மனக்குலத்த நியாயந்தீர்த்து சுத்திகரிக்கிற கிரியைய செய்யறாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் வளமானவை அதோட மிகுதியானவை, நாம எப்படி பாவத்தோட கட்டுகள்ல இருந்து தப்பிக்கிறது, எப்படி மனநிலை மாற்றத்த பின்தொடர்ந்து முழுமையா இரட்சிக்கப்படறது என்பதயும், மனுஷனோட முடிவயும் போய்சேர்ற இடம் பத்தின நெறைய இரகசியங்களயும் சத்தியங்களயும் வெளிப்படுத்துது. இரட்சிக்கப்படுவதுக்கும் தேவனோட ராஜ்யத்தில் பிரவேசிக்கிறதுக்குமான பாதைய நோக்கி அவரு நமக்கு வழிகாட்டுறாரு. சர்வவல்லமையுள்ள தேவன் நியாயந்தீர்க்கவும், சாத்தானால சீர்கெடுக்கப்பட்ட மனுக்குலத்தோட சீர்கேட்டோட சத்தியத்த வெளிப்படுத்தவும், தேவனுக்கு விரோதமான அகந்தையா இருக்கிற, தந்திரமா, பொல்லாதவர்களா இருக்கிற மனுசனோட சாத்தானிய மனப்பான்மைகள அப்பட்டமா வெளிப்படுத்துறாரு. எந்த அவமானத்தயும் பொறுத்துக்காத தம்மோட நீதியான மனநிலயயும் வெளிப்படுத்துறாரு. பயிற்சிக்கான, உள்ளே பிரவேசிக்கிறதுக்கான பாதைகள அதாவது எப்படி நேர்மையான ஜனங்களா இருக்கறது, நம்மளையே எப்படி கடமைக்கு அர்ப்பணிக்கிறது, எப்படி தேவனுக்குக் கீழ்ப்படிகிறதுங்கறத அவரோட வார்த்தைகள் நமக்குக் காட்டுது. தேவனோட வார்த்தைகள புசித்துக் குடிச்சு, தேவனோட நியாயத்தீர்ப்பயும் சிட்சயயும் அனுபவிக்கிறது மூலமா, அவரால தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களோட மனநிலைகள் மாறுது, அதோட அவங்களுக்கு நெறைய அனுபவங்களும் சாட்சியங்களும் இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியை, வார்த்தைகள்ல இருந்து அவரு கடைசி நாட்களோட கிறிஸ்து, அவர் தேவன்னு நம்ம பாக்குறோம். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தர். ஆனா கள்ளக் கிறிஸ்துகள் சாரம்சத்துல பொல்லாத ஆவிகள். அவங்க கிட்ட சத்தியம் இல்ல, அவங்களால ஜனங்கள இரட்சிக்கவோ சுத்திகரிக்கவோ முடியாது. அடையாளங்களயும் அற்புதங்களயும் காட்டி ஜனங்கள வழிதவற செய்றது மட்டுந்தான் அவங்களால செய்ய முடியும். கள்ள கிறிஸ்துகள் கிறிஸ்துவோட சாராம்சத்த கொண்டிருக்கல அதோட அவரோட கிரியைய செய்ய முடியாதுன்னு நாம பார்க்க முடியும். அவங்க அவங்களயே தேவன்னு கூப்படறாங்க, ஆனா அவங்க பொய்யானவங்க அதோட தற்காலிகமாக தான் ஜனங்கள முட்டாளாக்க முடியும்.”

அவங்க, “நீங்க படிச்சது பெரிய விஷயம்—ரொம்ப இணங்கச் செய்றதா இருக்கு. நீங்க பிரசிங்கிப்பத கேட்டவுடனே நாங்க ஈர்க்கப்படுவோம்னு எங்க போதகர் சொன்னதுல ஆச்சரியமில்ல. உங்ககிட்ட இருந்து கேட்டது எனக்கு உண்மைல பிடிச்சிருக்கு, ஆனா நான் இன்னும் அதப் பத்தி கொஞ்சம் யோசிக்கணும்” அப்படின்னு சொன்னாங்க. நான், “சகோதரி இத்தன வருஷம் விசுவாசத்துல நாம கர்த்தரோட வருகைக்காக ஏங்குனோம் இல்லயா? நீங்க இத எச்சரிக்கையா அணுகுவீங்கன்னு நான் நம்புறேன். தேவனோட இரட்சிப்புக்கான வாய்ப்ப நீங்க தவற விட்டுட்டீங்கன்னா அது வாழ்நாளுக்கும் வருத்தமா இருக்கும்” அப்படின்னு பதில் சொன்னேன். அதுக்கப்புறம் நாங்க எப்படி ஐக்கியப்பட்டாலும், அவங்க எதிர்வின செய்யவுமில்ல ஒரு வார்த்தையும் சொல்லவுமில்ல. நான் சோர்வா உணர்ந்தேன் என்னோட பொறுமை முடிஞ்சிருச்சு. எங்ககிட்ட இருந்து இவ்ளோ ஐக்கியத்துக்கப்புறமும் அவங்க அத ஏத்துக்காததுனால, எங்களால எதுவும் செய்ய முடியாதுன்னு நான் நினைச்சேன். ஆனா அந்த எண்ணம் எனக்குச் சங்கடமாய் இருந்துது. தேவன் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வந்துது: “உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஓர் எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானரை நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு விண்கல் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்தப் பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷமாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா? ஒட்டுமொத்தமாக, உன் அசாதாரண வாழ்க்கையை வாழ நீ தேவனால் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு விளக்குவாய்? ஒரு பக்தியுள்ள, தேவனைச் சேவிக்கும் நபரின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான உறுதியும் நம்பிக்கையும் உனக்கு உண்மையாகவே இருக்கிறதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?”). தேவன் எவ்ளோ துக்கத்திலயும் கவலைலயும் இருக்காரு ஒவ்வொரு பிரிவுல இருந்தும், இருள்ல இருக்குற, கர்த்தரோட வருகைக்காக ரொம்பவும் ஏங்கிட்டிருக்குற எல்லா உண்மையான விசுவாசிகளும், தேவனுடைய சத்தத்த சீக்கிரமா கேட்டு அவரோட வீட்டுக்குள்ள திரும்ப வரணும்னு அவர் எதிர்பார்த்துட்டு இருக்காருன்னு அவரோட வார்த்தைகள் நமக்கு சொல்லுது. ஆனா சுவிசேஷத்த ஏத்துக்கக்க கூடிய ஒருத்தரு அவங்க போதகரால தவறா வழிநடத்தப்பட்டு மதக் கருத்துகளால கட்டப்பட்டு என் முன்னாடி இருக்கிறப்போ, என்னால சத்தியத்தப் பத்தி பொறுமையா ஐக்கப்பட்டு அவங்கள வழிநடத்த முடியல. நான் சாதாரணமா அவங்கள கொறச்சி மதிப்பிட்டு அவங்க மேல இருக்குற நம்பிக்கைய விட்டுட்டேன். என்னோட அன்பும் பொறுப்புணர்ச்சியும் எங்க இருந்துது? ஒவ்வொரு நாளும் கர்த்தரோட வருகைக்காக நான் எப்படி ஏங்கிட்டு இருந்தேன்னு நான் நெனச்சுப் பார்த்தேன். நான் பொய்யான கிறிஸ்துவால தவறா வழிநடத்தப்பட்டுருவனோன்னு பயந்தேன், அதனால கர்த்தர் திரும்பி வந்துட்டாருன்னு யாராவது சாட்சி சொல்றத நான் கேக்கும்போது அத ஆராய நான் துணியல. அது கஷ்டமான காலமா இருந்துது. லி பிங் அவங்களுக்கு முன்னாடி கடைசி நாட்களோட தேவனோட கிரியைய ஏத்துக்கிற அதிர்ஷ்டம் எனக்குக் கிடச்சுது, அதனால அவங்ககிட்ட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறது என்னோட பொறுப்பு, என்னோட கடமையா இருந்துது. அதோட, கண்ணிமைக்கிற நேரத்துல நான் இந்தக் கிரியயோட கட்டத்த ஏத்துக்கல. எனக்கும் முதல்ல நெறைய கருத்துகள் இருக்கத்தான் செஞ்சுது. அதிர்ஷ்டவசமா, சகோதர சகோதரிகள் நான் தேவனுக்கு முன்னாடி வர்ற அளவுக்கு பொறுமையா என்னோட திரும்பத் திரும்ப ஐக்கிப்பட்டாங்க. ஆனா நான் அவங்க நிலையில என்ன வெச்சு அவங்களோட கண்ணோட்டத்தில இருந்து காரியங்கள பாக்கல. எனக்கு அன்பு பொறுமயும் இல்லாம இருந்துச்சு, அதோட நான் என் பொறுப்ப நிறைவேத்தல. நம்பிக்கையோட ஒரு சிறு துளி இருக்குற வரைக்கும் தேடறதுக்கும் விசாரிக்கிறதுக்கும் அவங்களுக்குக் கொஞ்சம் விருப்பம் இருக்கிற வரைக்கும், அவங்களோட தொடர்ந்து ஐக்கியப்பட நான் எந்த வழியயும் யோசிக்க வேண்டி இருந்துது. அதுதான் என் பொறுப்ப நிறைவேத்தறதா இருந்துது. அப்படி யோசிச்சப்போ எனக்கு அவங்க மேல அனுதாபம் வந்துது. தேவன வரவேற்கிறதுங்கறது நம்மோட கடைசி முடிவ பத்துன ஒரு பெரிய விஷயம். அவங்களோட எச்சரிக்கையான அணுகுமுற ரொம்ப இயல்பானதா இருந்துது. நான் ரெண்டு தடவதான் கூடுதலா அங்க போனேன், அவங்களுக்கு நெறைய கருத்துகள் இருந்ததப் பாத்து, நான் அவங்கள கொறச்சி மதிப்பிடவும் விட்டுடவும் விரும்புனேன். நான் ரொம்ப அகந்தையாவும் நியாயமில்லாதவளாவும் இருந்தேன். அதப் பத்தி அந்த மாதிரி நான் நினைச்சுப் பார்த்தப்போ நான் ரொம்ப பயங்கரமாவும் குற்ற மனசாட்சியயும் உணர்ந்தேன். நான் தேவன் கிட்ட ஜெபிச்சு நான் அவங்க கிட்ட தொடர்ந்து சுவிசேஷத்த பகிர்ந்துக்குவேன் அதோட அவங்கள தேவனுக்கு முன்னாடி கொண்டு வர என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செய்வேன்னு சத்தியம் பண்ணேன்.

ரெண்டு நாளைக்கப்புறம் சகோதரி செங் அய்கெனோடு சேர்ந்து லி பிங் அவங்க வீட்டுக்கு நான் திரும்பப் போனேன். எங்களப் பார்த்த உடனே அவங்க எங்கள அன்போட வாழ்த்தி, “சகோதரிகளே, நீங்க சாப்டீங்களா? இல்லைனா நான் போய் சாப்பிடுறதுக்கு ஏதாவது செய்றேன். இன்னைக்கு ரொம்ப குளிரா இருக்கு, நீங்க வீட்லயே இருங்க” அப்படின்னு சொன்னாங்க. அவ்ளோ சீக்கிரமா அவங்களோட அணுகுமுற மாறியிருச்சா? அய்கெனும் நானும் ஆச்சரியத்துல ஆழ்ந்துட்டோம். அவங்க எங்கள ஏத்துக்குவாங்களா இல்லையாங்குறத பத்தி நான் கவலப்பட்டுட்டிருந்தேன். அவங்க அணுகுமுற தலைகீழா மாறுனது எதிர்பார்க்காததா இருந்துது. நாங்க ஒக்காந்ததுக்கப்புறம், லி பிங் அவங்க மனசுல என்ன இருந்ததுங்கறத எங்களோட பகிர்ந்துக்கிட்டாங்க: “கடந்த சில நாட்களாக நான் யோசிச்சுட்டு இருந்தேன். நீங்க என்கிட்ட திரும்பத் திரும்ப சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க வந்தீருக்கீங்க. உங்க விசுவாசம் மெய்யான வழியில இல்லைன்னா, அது பரிசுத்த ஆவியானவர் கிட்ட இருந்து வரலைன்னா, எப்படி உங்ககிட்ட இவ்ளோ அன்பும் பொறுமையும் இருக்க முடியும்? அதோட நான் நெனெச்சேன் நீங்க வந்த எல்லா தடவயும் நான் உங்க பேச்ச கேக்கல இல்ல உங்கள சரியா கவனிக்கல, ஆனா தவறான கிறிஸ்துவால தவறா வழிநடத்தப்படுவமோன்னு பயந்து நான் என் போதகரோட பேச்ச மட்டும் கேட்டேன். நான் தேவனோட சத்தத்த கேக்கல. கர்த்தர் திரும்பி வந்துட்டாருங்கற உங்க சாட்சிய நான் ஆராயல, ஆனா உங்கள பார்த்த உடனே ஒளிஞ்சுகிட்டேன். எப்படி அந்த மாதிரி என்னால தேவன வரவேற்க முடியும்? நான் ரொம்ப முட்டாள்தனமாவும் அறியாதவளாவும் இருந்தேன்!” அப்படின்னாங்க. அவங்க அத சொன்னதக் கேட்டு நான் ரொம்ப நெகிழ்ந்து போனேன் அதோட என் மனசுல தேவனுக்குத் திரும்பத் திரும்ப நன்றி சொன்னேன். தேவன் சொன்ன ஒரு காரியத்த நான் நினைச்சுப் பார்த்தேன்: “மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). அன்னைக்கு நாங்க கடைசி நாட்களோட தேவனோட நியாயத்தீர்ப்ப ஏத்துக்காம வெறும் பாவத்திலிருந்து மட்டும் மீட்கப்பட்டிருந்தோம்னா எப்படி நாம தேவனோட ராஜ்யத்துக்குள்ள நுழைய முடியாதுங்கறத பத்தியும் பேசுனோம். நான், “கர்த்தர நம்பறது, அறிக்க பண்றது, மனந்திரும்புறதுங்கறது தேவன் நம்மள மீட்கிறதயும், அதோட நம்மள பாவமா பார்க்கலைங்கறதயும் குறிக்குது, ஆனா நாம பாவத்துல இருந்து விடுதலையாக்கப் பட்டுட்டோம்னு அதுக்கு அர்த்தமில்ல. நாம இன்னும் பாவம் பண்றது அப்புறம் அறிக்கை பண்றதுங்குற சுழற்சியில தான் வாழ்றோம். நம்மோட சீர்கேடான மனநிலைகள் தீர்க்கப்படாம, நாம தொடர்ந்து பாவம் செஞ்சுட்டும் தேவன எதிர்த்துட்டும் இருப்போம், அதோட நம்மால அவரோட ராஜ்யத்துல பிரவேசிக்க முடியாது. வேதாகமம் சொல்லுது ‘பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே(எபிரெயர் 12:14). ‘நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:45). ‘பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்(யோவான் 8:34-35). தேவன் பரிசுத்தமானவர் அதோட அவரு அசுத்தமான மனுஷங்க பரிசுத்த பூமிய கெடுக்க அனுமதிக்க மாட்டாரு, ஆனா எல்லா நேரத்திலயும் நாம பாவம் செய்யறத நம்மால தடுக்க முடியாது. நாம சீர்கேடு நெறஞ்சவங்களாவும் பாவத்தால கட்டப்பட்டவங்களாவும் இருக்கும்போது, தேவனோட ராஜ்யத்தில எப்படி பிரவேசிக்க முடியும்? தேவனால மட்டுந்தான் நம்மள இரட்சிக்க முடியும். கடைசி நாட்கள்ல தேவன் தோன்றி கிரிய செய்றாரு, சத்தியத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்தோட சீர்கேட்ட தீக்கறதுக்கு நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சு, பாவத்தோடு கட்டுகள்ல இருந்து ஜனங்கள முழுமையா விடுதலயாக்கி, நம்மள சீர்கேட்டில இருந்து சுத்திகரிக்கிறாரு, அதனால நாம கடைசியா தேவனோட பரிசுத்த பூமியில பிரவேசிக்க முடியும்.” லி பிங் உணர்ச்சிப் பெருக்கோட, “அப்படின்னா நாம சுத்திகரிக்கப்படணும்னா, நாம கடைசி நாட்களோட தேவனோட நியாயத்தீர்ப்ப அனுபவிக்கணும், இல்லைன்னா நமது சீர்கேடான மனநிலைகள் எப்பவும் மாறாது” அப்படின்னு சொன்னாங்க. அவங்களால அதப் புரிஞ்சுக்க முடிஞ்சதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

அதுக்கப்புறம் மத போதகர்களான பரிசேயர்கள எப்படி பகுத்தறியறதுங்கறத பத்தி நாங்க ஐக்கியப்பட்டோம். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளல ரெண்டு பகுதிகள நாங்க படிச்சோம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒவ்வொரு சபைப் பிரிவின் தலைவர்களையும் பார்—அவர்கள் அனைவரும் அகந்தையுள்ளவர்களும் சுயநீதிக்காரர்களாகவும் இருக்கின்றனர், மேலும் வேதாகமத்தை அவர்கள் விளக்குவது சூழலுக்குப் பொருத்தமற்று அவர்களது சொந்தக் கருத்துகளாலும் கற்பனைகளாலும் வழிகாட்டப்படுகின்றன. அவர்கள் தங்கள் கிரியையைச் செய்ய வரங்களையும் அறிவையும் சார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பிரசங்கமே செய்ய முடியாவிட்டால் ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுவார்களா? எது எப்படி இருந்தாலும், அவர்களுக்கு சிறிது அறிவு இருக்கிறது மேலும் சில உபதேசங்களைப் பற்றி பிரசங்கிக்க முடியும், அல்லது பிறரை எப்படிக் கவர்வது என்றும் சில உபாயங்களை பயன்படுத்தவும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஜனங்களை வஞ்சிக்கவும் தங்களுக்கு முன்னால் அவர்களைக் கொண்டு வரவும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பெயரளவில், அந்த ஜனங்கள் தேவனை விசுவாசிக்கின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் தங்கள் தலைவர்களைப் பின்பற்றுகின்றனர். யாராவது ஒருவர் சத்திய வழியைப் பிரசங்கிப்பதை அவர்கள் எதிர்கொண்டால், அவர்களில் சிலர் ‘எங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எங்கள் தலைவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். ஜனங்கள் தேவனை விசுவாசித்து மெய்யான வழியை ஏற்றுக்கொள்ளும்போது பிறருடைய இசைவும் ஒப்புதலும் அவர்களுக்கு இன்னும் எவ்வாறு தேவைப்படுகிறது என்று பாருங்கள்—இது ஒரு பிரச்சினை இல்லையா? பின்னர், அந்தத் தலைவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்கள், பரிசேயர்கள், கள்ள மேய்ப்பர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகி ஜனங்கள் சத்திய வழியை ஏற்றுக்கொள்வதற்குத் தடைக்கற்களாக மாறவில்லையா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). நான், “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் தேவனுக்கு எதிரா இருக்குற மத தலைவர்களோட சுபாவத்தயும் சாராம்சத்தயும் தெளிவா வெளிப்படுத்துது. கடந்த காலத்துல, மத குருமார்கள் பத்தி எங்களுக்கு எந்தப் பகுத்தறிவும் இல்லாம இருந்துச்சு. அவங்களுக்கு வேதாகமத்த நல்லாத் தெரியும், அவங்களுக்கு வளர்ச்சி இருந்துது, சத்தியத்த புரிஞ்சுட்டாங்கன்னு நாங்க நினைச்சு குருட்டுத்தனமா அவங்க சொல்றத அப்படியே கேட்டோம். அவங்க என்ன ஏற்பாடு செஞ்சாலும் நாங்க ஏத்துக்குவோம். கர்த்தரோட வார்த்தைகள விட எங்க போதகர்களோட வார்த்தைகள முக்கியமானதா பாத்தோம், அதோட தேவன வரவேற்கறத போல ஒரு பெரிய காரியத்துக்கு அவங்களோட ஒப்புதல் வாங்க வேண்டி இருந்துச்சு. அது இல்லன்னா, தேவனுடைய சத்தத்தை நாங்க கேட்டா கூட, தேடவோ ஏத்துக்கவோ துணிய மாட்டோம். அவங்களப் பத்தி நாங்க ரொம்ப யோசிச்சோம். நாங்க விசுவாசிகளாகவோ இல்ல சிஷர்களாவோ இருக்கல” அப்படின்னு ஐக்கியப்பட்டேன். “மத உலகத்துல இருக்குற தலைவர்கள் கர்த்தராகிய இயேசுவோட வருகைய பத்தின சாட்சிய கேக்கும்போது, அவங்க விசுவாசிகள அத ஆராஞ்சு பாக்குறதுக்கு வழிகாட்டுறதில்ல, ஆனா எல்லா வகையான பொய்களாலயும் அவங்கள தவறா வழிநடத்தி அதோட மெய்யான வழிய ஆராய விடாம அவங்கள தடுக்கறாங்கன்னு இப்போ உண்மைகள் நமக்கு காட்டிருக்கு. அவங்களுக்கு ஒரே ஒரு குறிக்கோள் தான்: கடைசி நாட்களோட தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கிறதுல இருந்து விசுவாசிகள தடுக்கணும், அவங்களோட பிடியில அவங்கள உறுதியா கட்டுப்படுத்தி வெக்கணும், அவங்களோட சேர்ந்து அவங்களையும் நரகத்துக்கு இழுத்துட்டு போகணுங்கறதுதான். அவங்களோட இந்த நடத்தையில இருந்து, அவங்களோட சாராம்சமே தேவனுக்கு எதிரானது, அவங்க ஜனங்களோட ஆத்துமாக்கள விழுங்கற பேய்கள் அப்படிங்குறத நாம பாக்க முடியும். கர்த்தராகிய இயேசு சொன்ன மாதிரியே, ‘மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை(மத்தேயு 23:13).” லி பிங்கோட பதில், “தேவன் கடைசி நாட்கள்ல மனுவுரு எடுத்து, தோன்றி, கிரியை செஞ்சு, சத்தியங்கள வெளிப்படுத்தி, இந்த மதத்தலைவர்களோட மாய்மாலத்த அம்பலப்படுத்தி இருக்காம இருந்திருந்தா, நாம அவங்களோட உண்மையான முகங்களயும், அவங்களோட மாய்மாலத்தயும் துரோகத்தயும் பாத்திருக்கவே மாட்டோம், ஆனா அவங்களால ஏமாத்தப்பட்டுட்டே இருந்திருப்போம். எவ்ளோ முட்டாள்தனம்!” என்பதா இருந்துச்சு. தேவனால தான் அவங்க போதகர பத்துன பகுத்தறிவு அவங்களுக்கு கெடச்சது. லி பிங் அதுக்கப்புறம் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள அதிகமா படிச்சாங்க அதோட தேவனோட மூன்று கட்ட கிரியைகள், கடைசி நாட்களில் தேவன் என் மனுவுரு எடுத்தாரு, சுத்திகரிக்கப்படறதுக்கு தேவனோட நியாயத்தீர்ப்ப எப்படி அனுபவிக்கிறது, அதோட சத்தியத்தோடு பல அம்சங்கள பத்தி நாங்க ஒண்ணா ஐக்கியப்பட்டோம்.

கொஞ்ச நேரம் தேடுதல், ஆராய்ச்சிக்கப்புறம், சர்வவல்லமையுள்ள தேவன் திரும்பி வந்திருக்கிற இயேசு கிறிஸ்துன்னு அவங்க உறுதியா நம்புனாங்க. ஆனா நாங்க எதிர்பாக்காதது என்னன்னா அவங்க தேவனோட கிரியைய பத்தி உறுதியான பின்னாடி அவங்களோட போதகர் கண்டுபிடிச்சிட்டாரு.

ஒரு நாள் சாயங்காலம் உட்கார்ந்ததுட்டிருந்த கொஞ்ச நேரத்துல, கதவ அவசரமா தட்டுற சத்தத்த நாங்க கேட்டோம். லி பிங் கதவுக்கு அடியில இருந்த விரிசல் வழியா நெறைய கால்கள பார்த்து பீதியடஞ்சு, “ஐயோ, அவங்க கைல கிடைச்சா உங்கள கொல்லுவோம், காவல்துற கிட்ட ஒப்படைப்போம்னு அவங்க சொன்னாங்க. அவங்க உங்கள பாக்க நான் அனுமதிக்க முடியாது” அப்படின்னு சொன்னாங்க. அவங்க உடனே எங்கள ஒளிய வெச்சாங்க, அதுக்கப்புறம் உடனே 7 இல்ல 8 பேர் உள்ள புகுந்தாங்க. கோபத்துல கொதிச்செழுந்து எல்லாரும் ஒட்டுக்கா பேசி, “அந்த மனுஷங்க எங்க? உங்க வீட்டுக்கு ரெண்டு பேர் வர்றத நாங்க பாத்தோம் அதோட அவங்க வெளியே போகல. அவங்க இங்கதான் இருக்கணும். அவங்க எங்ககிட்ட கிடைச்ச உடனே அவங்க கை கால்கள ஒடச்சிடுவோம்” அப்படின்னு சொன்னாங்க. ஒரு சின்ன விரிசல் வழியா, ஓநாய்க மாதிரியே அவங்க கண்கள்ல இருந்த தீமையான தோற்றத்த நான் பார்த்தேன். அவங்க எல்லா இடங்கள்லயும், முற்றத்துல, படுக்கைகளுக்கு அடியில, பண்ணிகள அடச்சு வெக்கிற இடத்தில, ஒவ்வொரு மூலமுடுக்குகளயும் தேட ஆரம்பிச்சாங்க. அவங்க நாங்க மறஞ்சிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவுடனே எல்லா இடங்கள்லயும் மின்விளக்குகள ஒளிர செஞ்சாங்க அவங்க கிட்டத்தட்ட எனக்கு முன்னாடி இருந்தப்போ என் இருதயம் பயத்தால படபடத்துச்சு. அவங்க எங்கள கண்டுபிடிச்சிட்டா, அவங்க எங்கள அடிச்சு கொல்லலைன்னா கூட, எங்கள முடமாக்கிருவாங்க. ஒரு கணங்கூட தேவன் கிட்ட இருந்து பிரிய தைரியமில்லாம, நான் சீக்கிரமா ஒரு ஜெபத்த அவர்கிட்ட செஞ்சேன். தேவன்தான் என்னோட கன்மலைன்னு எனக்குத் தெரியும், அதோட அவங்க அன்னைக்கு எனக்கு என்ன செஞ்சாங்களோ அது அவரோட கரத்துல இருந்துச்சு. தேவன் அனுமதிக்கலைன்னா அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது. அந்த எண்ணத்துல நான் அவ்வளவா பயப்படல. அவங்க நெறைய இடங்கள்ல தேடியும் எங்கள கண்டுபிடிக்கவேயில்ல. அது தேவனோட பாதுகாப்பா இருந்துச்சு! அப்போ யாரோ ஒருத்தர் கோபமா, “அது ரொம்ப விசித்திரமா இருக்கு. ரெண்டு பேர் நிச்சயமா உன் வீட்டுக்குள்ள வந்தாங்க அதோட வெளிய போகல. ஏன் நம்மால அவங்கள கண்டுபிடிக்க முடியல?” அப்படின்னு சொன்னத கேட்டேன். லி பிங் கோபமா, “நீங்க நடந்துக்கிற விதத்தில இருந்து நீங்க விசுவாசிக மாதிரியே இல்லைங்கறத என்னால பாக்க முடியாது. அவங்க சுவிசேஷத்த பகிர்ந்துக்க வந்தாங்க, ஆனா அவங்க சாபங்களயும் அடி வாங்குவதயும் எதிர்கொண்டு, ஒரு ஓநாயோட குகக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்கு. கர்த்தராகிய இயேசு நம்மள மாதிரியே மத்தவங்களயும் நேசிக்க நமக்குக் கத்துக் கொடுத்தாரு. உங்க நடத்தயின் அடிப்படையில, நீங்க ஒரு அவிசுவாசிய போல கூட நல்லவங்களா இல்ல. நீங்க என்னவா இருக்கீங்கறத இப்போ நான் பாத்துட்டேன். நீங்க கிறிஸ்தவர்கள் தானா? நீங்க பரிசேயர்கள்” அப்படின்னு திட்டுனாங்க. அவங்க அதை சொன்னதுக்கப்புறம் அவங்க கடுகடுப்போட கிளம்பிட்டாங்க. அய்கெனும் நானும் அவங்க கிட்ட இருந்து அது கேட்டப்போ ரொம்ப உற்சாகமடஞ்சோம். அந்த மதத் தலைவர்கள பத்தி அவங்களுக்கு கடைசியா பகுத்தறிவு உண்டாச்சு அதோட அதுக்கு மேல அவங்களால தவறா வழி நடத்தப்படவுமில்ல தொந்தரவு செய்யப்படவுமில்ல. அவங்க போனதுக்கு அப்புறம் லி பிங் உணர்ச்சி பொங்க, “இன்னைக்கு அவங்க இடையூறுக்கு அப்புறம், அவங்களோட உண்மையான குணத்த நான் பாத்துட்டேன். அவங்க அந்திக்கிறிஸ்துகள் தேவனோட எதிரிகள். அவங்க என்னை எப்படி தொந்தரவு செஞ்சாலும் நான் சர்வவல்லமையுள்ள தேவன பின்பற்றுறேன்” அப்படின்னு சொன்னாங்க. அவங்க அத சொன்னதக் கேட்டு நான் ரொம்ப நெகிழ்ந்து போனேன், அதோட தேவனுக்கு திரும்பத் திரும்ப நன்றி சொன்னேன்.

அந்த அனுபவம் தேவன எதிர்க்கிற மதத் தலைவர்களோட பேய் முகங்கள பத்தின தெளிவான பார்வைய எனக்குக் கொடுத்துச்சு. அவங்க சுத்தமா தேவனோட கிரியைய தேடவோ இல்லை ஆராயவோ மாட்டாங்க, கர்த்தரோட வருகைக்கு யாராவது ஒருத்தர் சாட்சி சொல்றது கேட்ட உடனே அவங்க கோபத்துல வெடிப்பாங்க, அதோட அவங்கள மரண வாசல்ல நிறுத்துவாங்க. அவங்க விசுவாசிகள் இல்ல. அவங்க சத்தியத்தக் குறிச்சு அலுத்துப் போன, அத வெறுக்குற அந்திக்கிறிஸ்துகள், பரிசேயர்கள். நான் தேவனோட அற்புதமான செயல்கள பார்த்தேன், இது ஏன் விசுவாசத்த பலப்படுத்துச்சு. சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிறதுல நான் என்ன சிரமங்கள எதிர்கொண்டாலும், சுவிசேஷத்த ஏத்துக்குற ஒரு நபர் இருக்குற வரைக்கும், நான் தேவனோட கிரியைக்கும் வார்த்தைகளுக்கும் சாட்சியம் அளிக்க அன்பயும் பொறுமையயும் பயன்படுத்தணும் அதனால அவங்களால தேவனோட சத்தத்த கேட்டு கடைசி நாட்களோட அவரோட இரட்சிப்ப ஏத்துக்க முடியும். அதுதான் என்னோட பொறுப்பயும் கடமையயும் நிறைவேத்தறதுக்கு ஒரே வழி.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சாலையில் ஒரு முட்கரண்டி

நான் கிராமப்புறத்துல பிறந்து ஏழ்மையான குடும்பத்துல வளர்ந்தேன். என்னோட பெற்றோர் பாமர விவசாயிகளா இருந்தாங்க, அவங்க ரொம்ப கொடுமைய...

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும்,...