சுவிசேஷத்தைப் பகிர்வதில் சிரமங்களை எதிர்கொள்வது எப்படி

ஜனவரி 7, 2023

என்னோட முழு குடும்பமும் கத்தோலிக்கர்களாயிருந்தாங்க, அங்கிருந்த மற்ற கிராமவாசிகள்ல பெரும்பாலானோரும் அப்படித்தான் இருந்தாங்க. ஆனா, எங்களோட கிராமத்துல உள்ள கத்தோலிக்க திருச்சபைக்குத் தலம தாங்குவதுக்கு போதகர் இல்லாததால, ரொம்ப காலமாவே யாரும் திருச்சபையில வேதாகமத்தப் படிக்கப் போகல. அதுக்கப்புறமா, 2020 ஆம் வருஷம் மே மாசம் 22 ஆம் தேதி சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள ஆன்லைன்ல நான் வாசிச்சேன். தேவனோட வார்த்தைகள வாசிச்சதன் மூலமா, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறாருங்கறதையும் அவர்தான் சர்வவல்லமையுள்ள தேவனாகிய, கடைசி நாட்களின் கிறிஸ்துங்கறதையும் நான் உறுதியாக நம்புனேன், அதோட, கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன். அதுக்கப்புறமா, நான் இதை சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல வாசிச்சேன்: “மனிதன் தேவனை நம்புகிறான் என்பதால், அவன் படிப்படியாக, தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவேண்டும்; அவன் ‘ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்ற’ வேண்டும். இவர்கள் மட்டுமே உண்மையான வழியை நாடுகிற ஜனங்களாக இருக்கிறார்கள், இவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்”). விசுவாசிகளாகிய நாம தேவனோட கிரியைய அறிஞ்சுக்கிட்டு, தேவனோட அடிச்சுவடுகளப் பின்பற்றணும்ங்கறது எனக்குத் தெரியும். கிராமத்துல நிறைய விசுவாசிகள் இருந்தாங்க, அவர்கள்ல யாருமே தேவனோட சத்தத்தக் கேட்கவோ அல்லது திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவ வரவேற்கவோ இல்ல. அதனால, நான் கர்த்தர் திரும்பி வந்திருக்கிற அற்புதமான செய்திய அவங்களோட பகிர்ந்துக்க விரும்புனேன். ஆனா, எனக்குக் கொஞ்சம் பயமா இருந்துச்சு. நான் இளமையா இருந்தேன்னும், சுவிசேஷத்த எப்படிப் பகிர்வதுன்னு எனக்குத் தெரியலன்னும் அதனால, அவங்க நிச்சயமா நான் சொல்றதக் கேட்க மாட்டாங்கன்னும் நான் நெனச்சேன். அதுமட்டுமல்லாம, அவங்க பல வருஷங்களா விசுவாசிகளா இருந்து வந்திருக்காங்க, அப்படியிருக்கும்போது, கர்த்தராகிய இயேசுவின் திரும்பி வருதலப் பத்திய என்னோட சாட்சிய அவங்க கேட்பாங்களா? அவங்களுக்கு இருக்கும் ஏதாவது கருத்துகள இல்லேன்னா குழப்பங்கள என்னால எப்படித் தீர்த்துவைக்க முடியும்? நான் சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிப்பதயும் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிறதயும் அவங்க எதிர்த்தா நான் என்ன செய்வேன்? அவங்க என்னைய எப்படி நடத்துவாங்க? அவங்க என்னைய இழிவாப் பார்ப்பாங்கன்னும் அதோடு, “நீ ரொம்ப சின்ன பையனா இருக்குற, பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு பதிலா, அல்லது வேலைக்குப் போறதுக்கு பதிலா ஏன் இங்கயும் அங்கயும் பிரசங்கிக்க ஓடுற?” அப்படின்னு சொல்லுவாங்கன்னும் நான் கவலப்பட்டேன். நான் அதப் பத்தி நிறைய யோசிச்சேன், ஆனா, சுவிசேஷத்தப் பரப்புவது தேவனோட சித்தம்ங்கறது எனக்குத் தெரியும். நான் சுவிசேஷத்தப் பகிர்ந்து, தேவனுக்குச் சாட்சிகொடுக்க வேண்டியிருந்துச்சு.

அதனால், நான் தேவனிடத்துல ஜெபிச்சு, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிப்பதன் மூலம் என் நம்பிக்கைய பலப்படுத்திக்கிட்டேன். இத அவருடைய வார்த்தைகள்ல வாசிச்சேன்: “உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஓர் எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானரை நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு விண்கல் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்தப் பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷமாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா? ஒட்டுமொத்தமாக, உன் அசாதாரண வாழ்க்கையை வாழ நீ தேவனால் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு விளக்குவாய்? ஒரு பக்தியுள்ள, தேவனைச் சேவிக்கும் நபரின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான உறுதியும் நம்பிக்கையும் உனக்கு உண்மையாகவே இருக்கிறதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?”). நான், சுவிசேஷத்தப் பகிர்றது நம்மளோட கடம. நிறைய பேர் இன்னும் தேவனோட சத்தத்தக் கேட்டிருக்கலங்கறதயும் கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாரு, ஜனங்களச் சுத்திகரிக்க நியாயத்தீர்ப்பின் கிரியையச் செஞ்சுக்கிட்டிருக்கிறாருங்கறது அவங்களுக்குத் தெரியலங்கறதயும் புரிஞ்சுக்கிட்டேன். அவங்க இன்னும் சாத்தானோட சீர்கேட்டின் துன்பத்துலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. நாம எல்லாருமே அவரோட சித்தத்தக் கருத்துல கொண்டு, எழுந்து நின்னு, தேவனோடு ஒத்துழைக்க முடியும்ன்னு தேவன் எதிர்பாக்குறாரு. நாம் எப்படிப்பட்ட பிரச்சனைகள அல்லது சிரமங்கள எதிர்கொண்டாலும், நாம அதிகமா ஜெபிக்கணும், தேவன சார்ந்திருக்கணும், ராஜ்யத்தின் சுவிசேஷத்தப் பரப்ப நம்மால முடிஞ்ச எல்லாத்தயும் செய்யணும். ஆனா நான் தேவனோட சித்தத்தப் புரிஞ்சுக்கல—நான் ரொம்ப இளைஞனா இருக்கறதால, என்னால சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க முடியலன்னு நெனச்சேன். கிராமத்து ஜனங்க என் பேச்சக் கேட்க மாட்டாங்கன்னும், என்ன இழிவா பார்ப்பாங்கன்னும் நான் பயந்தேன், அதனால, நான் என்னோட சொந்த கற்பனைகளின் சிரமங்கள்ல சிக்கி, கவலைகளால பாரமடஞ்சிருந்தேன். நான் தேவனோட சித்தத்தக் கருத்துல வைக்காம என்னோட சொந்த கஷ்டங்களப் பத்தி மட்டுமே நெனச்சேன். இந்தப் போராட்டங்கள் மத்தியில நான் ஜெபிக்கவும் தேவன் மேல சார்ந்துக்கவும், என்னோட கடமைய செஞ்சு பொறுப்ப ஏத்துக்கவும் நான் நினைக்கல. கர்த்தரோட வருகைக்காகவும், இருள்ல இருந்து இரட்சிக்கப்படுவதுக்காகவும் எத்தனையோ பேர் எப்படி ஏங்கிக்கிட்டு இருந்தாங்கங்கறத நான் நெனச்சப்போ, நான் ஒரு அவசரத்த உணர்ந்தேன். கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்தப் பரப்புவதுக்கும் சாட்சி பகருவதுக்கும் என்னால் முடிஞ்ச எல்லாத்தையும் செய்யவும், என்னோட நேரம் ஆற்றல் முழுவதயும் சுவிசேஷப் பணியில செலுத்தவும் நான் தீர்மானிச்சேன்.

அதுக்கப்புறம், அவங்களோடு சுவிசேஷத்தப் பகிர்ந்துகொள்ளத் திட்டமிட ஆரம்பிச்சேன். முதல்ல, என்னோட வீட்டுல பிரசங்கத்தக் கேட்பதுக்காக பத்துக் குடும்பங்களுக்கான சில அழைப்பிதழ்கள அச்சிடுவதுக்கு நகல் எடுக்கும் கடைக்குப் போனேன். அவங்க எல்லாரும் ரொம்பவே ஆச்சரியப்பட்டாங்க நான் செய்யுற வேலையப் பார்த்து அவங்க என்னைப் பாராட்டுனாங்க. நான் ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். அதுக்கப்புறம், நான், அன்னைக்கு சாயங்காலம் நிறைய பேர் வந்துட்டா, என்னோட சின்ன கைபேசியில, பிரசங்கத்தக் கேக்கும்போது, தேவனோட வார்த்தைகள வாசிப்பது எல்லாருக்கும் கடினமா இருக்கும்னு நெனச்சேன். அதனால, ஒரு நண்பர்கிட்ட அவரோட மடிக்கணினிய கடன் வாங்கறதுக்காகப் போனேன். அன்னைக்கு சாயங்காலம், பிரசங்கத்தக் கேட்க 13 பேர் வந்தாங்க. அதோடு, கூடுகையில தேவனோட வார்த்தைகள வாசிப்பத எல்லாருமே விரும்புனாங்க. யாரெல்லாம் வாசிக்க விரும்புனாங்களோ எழுந்திருச்சு நின்னு தன்னார்வமா வாசிச்சாங்க, அவங்க அத விரும்புனாங்க. கூடுகைக்குப் பிறகு எல்லாருமே ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. தேவனோட வார்த்தைகள் அற்புதமானவைன்னும், தங்களுக்கு ஊட்டமளிப்பதா உணர்வதாவும் தேவனோட வார்த்தைகள வாசிப்பதுக்கு ஒண்ணுகூடுறது ரொம்பவே நல்லா இருந்துச்சுன்னும் அவங்க சொன்னாங்க. அவங்க தங்களோட குடும்ப உறுப்பினர்களயும் அடுத்த நாள் கூட்டிட்டு வர விரும்புனாங்க. தேவனோட வார்த்தைகளுக்காக எல்லோரும் எப்படி ஏங்குறாங்கங்கறதப் பாத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, எப்பவுமே என்னோட நண்பரின் மடிக்கணினியக் கடன் வாங்குறது சாத்தியமில்லாததா இருந்துச்சு. அதனால, எனக்குன்னு சொந்தமா ஒரு மடிக்கணினிய வாங்க விரும்புனேன். ஆனா, என்னோட பணம் எல்லாத்தையும் சேர்த்து வச்சுப் பார்த்தபோது, மடிக்கணினி வாங்குவதுக்கு இன்னும் அது போதுமானதா இல்ல. நான் ஒரு குழப்பத்துல இருந்ததா உணர்ந்தேன். இங்கயும் அங்கயும் விசாரிச்சதுல, கணினிய விட ப்ரொஜெக்டர்கள் மலிவானதுங்கறதத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, மத்த கிராமவாசிகளும் தேவனோட வார்த்தைகள அதன் மூலமா வாசிக்க முடியும்படி, ப்ரொஜெக்டர் வாங்கறதுக்காக கடன் வாங்க முடிவு செஞ்சேன். கடன் வாங்க முக்கிய நகரத்துக்குப் போய், ஒரு ப்ரொஜெக்டரை நான் வாங்குனேன். அடுத்த கூடுகைய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் ஏற்பாடு செஞ்சுட்டேன். ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே கிராம ஜனங்கள் வரத் தொடங்கிட்டாங்க. பத்தொன்பது பேர் கலந்துக்கிட்டு அந்த அறை முழுவதயும் நிரப்பிட்டாங்க. அந்த நேரத்துல தேவன் எல்லாத்தயும் ஏற்பாடு செஞ்சிருந்ததப் பாத்தேன், நான் ரொம்பவே உற்சாகமா இருந்தேன். தேவனோட வார்த்தைகள எல்லாரும் கேட்குற மாதிரி நான் ஒரு ஒலிபெருக்கிப் பெட்டிய கண்டுபிடிக்க ஓடுனேன். கர்த்தருடைய வருகையின் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேற்றப்பட்டது, அவர எப்படி வரவேற்கறது, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துருக்காருன்னு எப்படி உறுதியா இருக்கறது, அதோட ஒவ்வொரு வகையான நபரையும் அம்பலப்படுத்துவதுக்கு தேவன் வந்திருக்கிறாருங்கறத பத்தின சத்தியத்த நான் ஐக்கியப்படுத்தினேன். வந்திருந்த ஜனங்கள் எல்லாரும் தேவனோட வார்த்தைகள வாசிப்பதுல ஆர்வத்தோட கலந்துக்கிட்டாங்க, அதோட, சில குழந்தைகளும் தேவனோட வார்த்தைகள வாசிக்க ஆர்வமா இருந்தாங்க. தேவனோட வார்த்தைகளுக்காக அவங்க எவ்வளவு தாகமா இருந்தாங்கங்கறதப் பார்த்தப்போ, இதெல்லாம் தேவனோட கிரியைன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். கூடுகை முடிஞ்சுதுக்கப்புறமா, சிலர் அங்கயே கொஞ்ச நேரமா இருந்தாங்க, அவங்க அத ரொம்பவே சந்தோஷமா அனுபவிச்சதா சொன்னாங்க. கிராமத் தலைவரும் மத்தவங்க எல்லாருமே ரொம்ப நெகிழ்ந்துட்டாங்க, கிராமத் தலைவர் எல்லா உள்ளூர் ஜனங்களும் தேவனோட வார்த்தைகளக் கேக்குறதுக்கு வரச்செய்ய விரும்புனாரு. இது அப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா இருந்துச்சு. இந்தப் பலன் என்னோட எண்ணங்களயும் கற்பனைகளயும் முழுசா வீழ்த்திருச்சு-நான் வெட்கப்பட்டேன். நான் உண்மையிலயே தேவனோட கிரியையயும் வழிநடத்துதலயும் கண்ணாரப் பார்த்தேன், அதோடு சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறதுல அதிக விசுவாசத்தப் பெற்றுக்கிட்டேன். அதுக்கப்புறமா தினமும் பிரசங்கங்களக் கேக்குறதுக்கு கிராமத்து ஜனங்களக் கூப்பிட்டேன். அதோடு, அதிகமதிகமான ஜனங்கள் வரத் தொடங்குனாங்க. அவங்க எல்லாரும் பரவசமடஞ்சு, “இதுவரை நான் இதப் போல எதையும் வாசிச்சதில்லை. தேவன் மாம்சமாகி திரும்பி வந்திருக்காரு, நாம அவர்கிட்ட நேருக்கு நேர் வரலாம். கர்த்தர வரவேற்க முடிஞ்சதால நாங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிகள்” அப்படின்னு சொன்னாங்க. சுற்றுவட்டார நகரங்கள்ல இருந்து அதிகமான ஜனங்கள ஒரு கூடுகைக்கு அழைக்குற நிகழ்ச்சியயும் அவங்க திட்டமிட்டாங்க. அவங்க என்கிட்ட, “நீங்க ரொம்ப இளைஞனா இருக்கீங்க, ஆனா, நீங்க கிராம ஜனங்களுக்காக இதச் செய்யுறீங்க. தேவனோட வார்த்தைகளக் கேக்குறதுக்கும், அதப் பத்தி ரொம்ப மனசாட்சியுள்ளவங்களா இருப்பதுக்கும் எங்களுக்கு உதவுறீங்க. இதுவர யாரும் எங்களுக்கு இப்படிப்பட்ட எதையும் செஞ்சதில்ல. உங்கள மாதிரி ஒரு இளைஞன் இதச் செய்வான்னு நாங்க நெனச்சுப்பாத்தது இல்ல—இது அற்புதம்” அப்படின்னு சொன்னாங்க. என்னைய உற்சாகப்படுத்தி, என்னோட விசுவாசத்த பலப்படுத்தின இது முழுக்க முழுக்க தேவனோட கிரியைன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

ஆனா, இந்த புதிய விசுவாசிகளுக்கு நான் தண்ணீர் பாய்ச்சும்போது எல்லாவிதமான சிரமங்களயும் சந்திக்க நேரிட்டுச்சு. சில நேரங்கள்ல என்னோட இணைய இணைப்பு நல்லா கிடைக்கல, கூட்டங்கள நடத்த நான் வீடு வீடா போக வேண்டியிருந்துச்சு. மோசமான விஷயம் என்னான்னா, அங்க ரொம்பவே மழை பேஞ்சுச்சு, மழை பேஞ்சபோது சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி, நடப்பதுக்குக் கடினமா இருந்துச்சு. நான் அவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதுக்காக வெளியில போனபோது, வீடு வீடா அலஞ்சுக்கிட்டிருப்பேன். சில சமயங்கள்ல மழை பேயத் தொடங்குறதுக்கு முன்னாடியே நான் ஒரு புதிய விசுவாசியின் வீட்டுக்கு ஓடுவதுண்டு, அவங்க அப்பவும் வீட்டுக்கு வராததால நான் காத்திருக்க வேண்டியிருந்துச்சு. அதுக்கப்புறமா, அவங்களோடு ஐக்கியங்கொண்டு முடிச்சப்ப, வீட்டுக்கு போற பாதை மோசமா இருந்துச்சு. நான் சோர்வா இருக்கும்போது, எதிர்மறையாவும் பலவீனமாவும் உணருவேன், அதனால, நான் ஜெபிச்சு, தேவனோட வார்த்தைகள வாசிப்பேன். அதுக்கப்புறமா, நான் இதை சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல வாசிச்சேன்: “சோர்வடைய வேண்டாம், பலவீனமாக இருக்க வேண்டாம், நான் உனக்கு விஷயங்களைத் தெளிவுபடுத்துவேன். ராஜ்யத்திற்குரிய பாதை அவ்வளவு சமமாக இல்லை; எதுவும் அவ்வளவு எளிதானதல்ல! உனக்கு ஆசீர்வாதங்கள் எளிதில் வரவேண்டுமென்று விரும்புகிறாய், இல்லையா? இன்று, எதிர்கொள்ளும்படி கசப்பான உபத்திரவங்கள் அனைவருக்கும் இருக்கும். இத்தகைய உபத்திரவங்கள் இல்லாமல் நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பான இருதயம் வலுவடையாது, மேலும் நீங்கள் என்மீது உண்மையான அன்பைக் கொண்டிருக்க மாட்டீர்கள். இந்த உபத்திரவங்கள் வெறுமனே சாதாரண சூழ்நிலைகளைக் கொண்டிருந்தாலும், எல்லோரும் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்; உபத்திரவங்களின் துன்பம் மட்டுமே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடும். உபத்திரவங்கள் என்னிடமிருந்து வரும் ஒரு ஆசீர்வாதமே, உங்களில் எத்தனை பேர் எனக்கு முன்பாக அடிக்கடி வந்து, என்னுடைய ஆசீர்வாதங்களுக்காக உங்கள் முழங்காலில் நின்று கெஞ்சுகிறீர்கள்? முட்டாள்தனமான பிள்ளைகளே! ஒரு சில அநுகூலமான வார்த்தைகளை என் ஆசீர்வாதம் என்று நீங்கள் எப்போதும் நினைக்கிறீர்கள், ஆனால் கசப்பும் என் ஆசீர்வாதங்களில் ஒன்று என்று நீங்கள் கண்டுணர்ந்து கொள்வதில்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 41”). “நீ துன்பத்தை எதிர்கொள்ளும்போது, நீ மாம்சத்தைப் பற்றிய அக்கறையை ஒதுக்கி வைக்கவும், தேவனுக்கு எதிராகக் குறைகூறாமல் இருக்கவும் வேண்டும். … உன் உண்மையான வளர்ச்சி எதுவாக இருந்தாலும், நீ முதலில் கஷ்டத்த தாங்கும் மனவுறுதியையும் உண்மையான விசுவாசத்தையும் கொண்டிருக்க வேண்டும் மற்றும் மாம்சத்தை கைவிடுவதற்கான மனவுறுதியும் உன்னிடத்தில் இருக்க வேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தனிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கவும், உன் தனிப்பட்ட ஆர்வங்களை இழக்கக் கொடுக்கவும் நீ ஆயத்தமாக இருக்க வேண்டும். நீ உன் இருதயத்தில் உன்னைப் பற்றி வருத்தப்படும் திறனுடனும் இருக்க வேண்டும்: கடந்த காலத்தில், உன்னால் தேவனை திருப்திப்படுத்த முடியவில்லை, இப்போது நீ உன்னை வருத்திக் கொள்ளலாம். இந்த விஷயங்களில் நீ குறைவில்லாமல் இருக்க வேண்டும். இவற்றின் மூலம் தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவார். இந்த அளவுகோல்களை உன்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், உன்னால் பரிபூரணமாக்கப்பட முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). மனம் தளரவோ பலவீனமாகி விடவோ வேண்டாம்னும், தேவன் எனக்கு வழிகாட்டி உதவுவார்ன்னும் தேவனோட வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தி தேற்றுச்சு. நான் சில சரீரப் பிரகாரமான அசௌகரியங்கள அனுபவிச்சு, சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க கொஞ்சம் விலைக்கிரயம் செலுத்தினேன், ஆனா, அது அர்த்தமுள்ளதாவும் மதிப்புமிக்கதாவும் இருந்துச்சு, அது செய்றதுக்கான ரொம்பவே நீதியான காரியமாவும், தேவனோட அங்கீகாரத்தயும் ஆசீர்வாதங்களயும் அதிக அளவுல பெறக்கூடியதாவும் இருந்துச்சு. சுவிசேஷத்தப் பரப்புவதுக்கு அதிகமா கஷ்டப்பட்டவங்களான, பேதுரு, மத்தேயு மற்றும் கர்த்தராகிய இயேசுவின் மத்த அப்போஸ்தலர்களப் பத்தி நான் நெனச்சுப் பார்த்தேன், சிலர் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்குற முயற்சியில மரிச்சுகூட போனாங்க. ஆனா, அவங்க தேவனோட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறதுல உறுதியா இருந்தாங்க, ஒருபோதும் பின்வாங்கல. அவங்களோட ஒப்பிட்டுப் பார்க்கையில, நான் அனுபவிச்சிருந்த கொஞ்ச துன்பம், சொல்லிக்கற அளவுக்கு எதுவுமில்ல. கடைசி நாட்கள்ல தேவனோட கிரியைய ஏத்துக்குற அதிர்ஷ்டம் கிடச்சிருப்பதும், அதோடு ராஜ்யத்தின் சுவிசேஷத்தப் பரப்புவதுக்கு என்னோட கடமையச் செய்ய முடிஞ்சதும் தேவனோட உயர்வாவும் கிருபையாவும் இருந்துச்சு. ஒரு சின்ன கஷ்டத்துக்கு பயந்து, என்னோட சொந்த சரீரத்தக் குறிச்சுக் என்னால தொடர்ந்து கவலப்பட்டுட்டிருக்க முடியாது. நான் கஷ்டப்படுவதுக்குத் தயாரா இருந்திருக்கணும். எந்தச் சிரமத்துலயும் என்னால சோர்வடைய முடியாது. சரீர அசௌகரியங்கள அனுபவிச்சாலும் கூட, நான் இன்னும் சுவிசேஷத்தப் பகிர்ந்து, தேவனோட கிரியைக்கு சாட்சி கொடுத்து, தேவனத் திருப்திப்படுத்த என்னோட கடமையசெய்ய வேண்டியிருந்துச்சு.

அதுக்கப்புறமா, ஒரு கட்டத்துல நான் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களா சளி பிடிச்சிருந்துச்சு. சாயங்காலத்துல எனக்கு காய்ச்சலும் தலைவலியும் வயிற்றுவலியும் வந்துச்சு. என்னால பேசக்கூட முடியல. ஒரு சகோதரி நான் மோசமான நிலமையில இருந்ததப் பாத்து, “இன்னைக்கு ராத்திரி கூடுகைக்கு நீங்க போகக்கூடாது” அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க. அந்த நேரத்துல நான் ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கப்புறமா, புதிய விசுவாசிகள தாங்களாவே கூடிவரச் செய்யுறது பத்திய எண்ணம் எனக்குக் கவலைய ஏற்படுத்துச்சு. உடல்நில சரியில்லாம இருப்பது எனக்கு ஒரு சோதனைன்னும், நான் இன்னும் என் கடமைய சரியாகச் செய்ய வேண்டியிருந்துச்சுன்னும் நான் நெனச்சேன். ஒருமுறை நான் நோய்வாய்ப்பட்டு காலில் காயம் ஏற்பட்டதுக்கப்புறமும், கால்பந்து விளையாடப் போனது எனக்கு ஞாபகம் வந்தது. அப்படியிருக்க, இப்ப ஏன் என்னால என் கடமையச் செய்ய முடியல? இத நெனச்சுக்கிட்டு, என்னோட இருசக்கர வாகனத்துல ஏறி கூடுகைக்குப் போனேன். ஆச்சரியம் என்னன்னா, நான் அங்க போனதுக்கப்புறம் எனக்கு உடல்நில சரியில்லங்கறதப் போல நான் உணரல. நான் உண்மையிலயே சந்தோஷமா இருந்தேன். ரெண்டு நாட்கள்லயே நான் குணமடஞ்சுட்டேன்.

அதுக்கப்புறம், ஒரு மாத கடின உழைப்புக்கு அப்புறம், வெளியூர்ல வேலை செய்பவங்களத் தவிர, பெரும்பாலான கிராமவாசிகள் சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் சுவிசேஷத்த ஏத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் நான், நான் எல்லா கிராமவாசிகளோடும் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டாலும், தேவனோட சித்தத்தப் பூர்த்தி செய்ய இது போதாதுன்னு நெனச்சேன். அதிகமான ஜனங்கள் தேவனோட சத்தத்தக் கேட்கணும்னு நான் விரும்புனேன், ஏன்னா, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறாருங்கறதயும் நிறைய சத்தியங்கள வெளிப்படுத்தி, மனிதகுலத்த சுத்திகரிச்சு இரட்சிக்குற கிரியைய செஞ்சுக்கிட்டு இருக்கிறாருங்கறதையும் அறியாதவங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அதனால, நான் மத்த கிராமங்களுக்கும் போய் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க முடிவு செஞ்சேன். “சர்வவல்லமையுள்ள தேவனே, நான் விசுவாசத்த இழக்காம, தொடர்ந்து முன்னேற முடியும்படி தயவுசெய்து என்னை வழிநடத்தும். நான் எதிர்கொள்ளும் எந்த சிரமங்களயும் தீர்க்க நீங்க எனக்கு உதவுவீங்கன்னு நான் உறுதியா நம்புறேன்” அப்படின்னு மனசுக்குள்ள ஜெபிச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம், சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க பக்கத்து கிராமத்துக்குப் போனேன். அவங்களுக்கு சுவிசேஷத்தப் பிரசங்கிப்பதுக்காக நான் 30 நிமிஷங்களா சேறும் சகதியுமான பாதையில மலையடிவாரத்துக்கு நடந்தேன். ஆனா, முதல் மூன்று வீட்டுக்காரர்கள் எல்லாருமே தங்களுக்கு நேரம் இல்லன்னு சொல்லி என்னைய பணிவா திருப்பி அனுப்பிட்டாங்க. நான் உண்மையிலயே ஏமாற்றமாவும், ஒருவிதத்துல மனச்சோர்வும் அடஞ்சேன். அன்னைக்கு ராத்திரி நான் ரொம்ப தாமதமா வீட்டுக்கு வந்தேன். என்னுடைய சுவிசேஷ பகிர்வு எப்படி இருந்துச்சுன்னு கேட்க சகோதரி ஆனி அவங்க என்னையக் கூப்பிட்டாங்க. அதோடு, அவங்க என்னோடு தேவனோட வார்த்தைகள்ல ஐக்கியப்பட்டு, என்னைய உற்சாகப்படுத்தி உதவுனாங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல ஒன்றை நான் வாசிச்சேன். “இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என்னில் நீ வைக்கும் விசுவாசத்தின் கடமை என்னவென்றால் எனக்கு நீ சாட்சி கொடுப்பதும், எனக்கு உண்மையாய் இருப்பதும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிதலுடன் இருப்பதும் தவிர வேறில்லை. என் கிரியையின் அடுத்த படியை நான் தொடங்கும் முன் எனக்கு நீ எவ்வாறு சாட்சிகொடுப்பாய்? எவ்வாறு நீ எனக்கு உண்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவனாய் இருப்பாய்? நீ உன் முழு உத்தமத்தையும் உனது பணிக்கு அர்ப்பணிப்பாயா, அல்லது விட்டுவிடுவாயா? எனது ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் (மரணமாக அல்லது அழிவாக இருந்தாலும்) ஒப்புக்கொடுப்பாயா அல்லது எனது சிட்சைக்கு விலகி நடுவழியில் ஓடிவிடுவாயா? நீ எனக்குச் சாட்சியாக விளங்க வேண்டும் என்றும், எனக்கு உண்மையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் என்றே நான் உன்னை சிட்சிக்கிறேன். மேலதிகமாக, தற்போதைய சிட்சை என் கிரியையின் அடுத்த படியை அவிழ்க்கவும் கிரியை தடைபடாது நடக்கவுமே ஆகும். எனவே, ஞானம் உள்ளவனாக இருந்து உன்னுடைய ஜீவனையும் வாழ்வின் முக்கியத்துவத்தையும் அற்பமான மணலைப் போன்றது என எண்ணி நடந்துகொள்ளாதே என நான் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். வரவிருக்கும் என் கிரியை சரியாக என்னவாக இருக்கும் என்று உன்னால் சரியாக அறிய முடியுமா? வரவிருக்கும் நாட்களில் நான் எவ்வாறு கிரியை செய்வேன் என்பதும் எவ்வாறு என் கிரியை கட்டவிழும் என்பதும் உனக்குத் தெரியுமா? என் கிரியையில் உனக்குள்ள அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மேலதிகமாக, என்னில் இருக்கும் உன் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் நீ அறிய வேண்டும். நான் மிக அதிகமாக செய்துவிட்டேன்; நீ கற்பனை செய்வதுபோல என்னால் எப்படி பாதியில் விட்டுவிட முடியும்? நான் அப்படிப்பட்ட விசாலமான கிரியையைச் செய்திருக்கிறேன். நான் அதை எவ்வாறு அழிக்க முடியும்? உண்மையில், இந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே நான் வந்திருக்கிறேன். இது உண்மையே, ஆனால் மேலும் நான் ஒரு புதிய யுகத்தை, புதிய கிரியையைத் தொடங்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கவும் இனிவரும் காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப ஓர் அடித்தளத்தை அமைக்கவும், எதிர்காலத்தில் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மட்டுமே என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என் கிரியை நீ நினைப்பது போல் மிக எளிதானதும் அல்ல, நீ நம்புவது போல மதிப்பற்றதும் அல்லது அர்த்தமற்றதும் அல்ல. ஆகவே, நான் இன்னும் உன்னிடம் கூறவேண்டியது: நீ உன் ஜீவனை என் கிரியைக்கு அளிக்க வேண்டும், மேலும், நீ என் மகிமைக்கு உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீண்ட காலமாக நீ எனக்கு சாட்சி கொடுக்க வேண்டும் என நான் ஆவலாய் இருந்தேன், மேலும் இன்னும் அதிகமாக நான் நீ என் சுவிஷேஷத்தைப் பரப்ப வேண்டும் என்று ஏங்கினேன். என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”). தேவனோட வார்த்தைகள்ல இதை வாசிச்சது எனக்கு கொஞ்சம் பலத்தக் கொடுத்துச்சு. நான் அவர விசுவாசிக்கணும்னு, தேவன் என்கிட்ட சொல்றதப்போல உணர்ந்தேன், அதோட எப்படிப்பட்ட சிரமங்கள நான் எதிர்கொண்டாலும் சரி, நான் பலவீனமாவோ அல்லது எதிர்மறையாவோ இருக்கக் கூடாது, சோர்ந்துபோகவோ அல்லது துக்கப்படவோ கூடாது, ஏன்னா தேவன் நம்மை வழிநடத்துறாரு. நான் தேவனோட சித்தத்தக் கவனிச்சு, அவரோட ராஜ்யத்தின் சுவிசேஷத்தப் பரப்புவதுக்காகப் புறப்பட்டுப் போகிற வரைக்கும், அவர் எனக்காக ஒரு பாதையத் திறந்து வைப்பாரு. சுவிசேஷத்தப் பகிர்வதுக்கான பாதை சுலபமானது அல்லங்கறதயும் அதுக்கு மாறா, துன்பப்படுதலும் விலைக்கிரயம் செலுத்துதலும் தேவைப்படுதுங்கறதயும், தேவனோட வார்த்தைகள் மூலமா நான் பார்த்தேன். நோவா 120 வருஷங்களா சுவிசேஷத்த பிரசங்கிச்சாரு அதோடு அவர் ஜனங்களால, கேலி செய்யப்பட்டும், அவதூறுபண்ணப்பட்டும், அவமதிக்கப்பட்டும் இருந்தாரு. அவர் ரொம்ப கஷ்டப்பட்டாரு, அவர் யாரையும் மதம் மாத்தலேன்னாலும், அவர் அப்பவும் கைவிட்டுவிடல, பலவீனமானவரா மாறல—அவர் சுவிசேஷத்தத் தொடர்ந்து பகிர்ந்துக்கிட்டாரு. நோவா தன்னோட பக்தியிலயும் தேவனுக்குக் கீழ்ப்படிவதுலயும் உறுதியா இருந்தாரு. ஒரு சிருஷ்டியா தன்னோட கடமைய செஞ்சாரு அதோடு, தேவனோட அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கிட்டாரு. உலகத்த அழிக்கறதுக்கு தேவன் வெள்ளத்த அனுப்பியப்போ, எட்டு பேர் கொண்ட நோவாவோட குடும்பத்தினர் தேவனால் காப்பாற்றப்பட்டாங்க. அவங்க உயிர் பிழச்சுக்கிட்டாங்க. அப்புறம், நான் என்னப் பத்தி நெனச்சுப் பார்க்கும்போது, நான் மூணு குடும்பங்களோடு மட்டுந்தான் சுவிசேஷத்தப் பகிர்ந்திருந்தேன், அவங்க அதை ஏத்துக்காததால நான் மனம் உடஞ்சுபோனேன். நான் தேவன் மேல உண்மையான விசுவாசம் கொண்டிருக்கல. உண்மையில, என் விசுவாசத்தயும் தேவன் மீதான பக்தியயும் பூரணப்படுத்தறதுக்காக, இந்தச் சூழ்நிலையும், இந்தச் சிரமமும் எனக்கு வரும்படி தேவன் அனுமதிச்சிருந்தாரு. அதனால அவங்க சுவிசேஷத்த ஏத்துக்கிட்டாங்களோ இல்லையோ, நான் சுவிசேஷத்தப் பிரசங்கிக்கப் போக வேண்டியிருந்துச்சு. அது என் கடமையா இருந்துச்சு.

தேவனோட வார்த்தைகள் எனக்கு பலத்தக் கொடுத்துச்சு. அடுத்த நாள் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கத் தொடங்குவதுக்காக இன்னோரு கிராமத்துக்குப் போனேன். அவரோட வார்த்தைகளப் புரிஞ்சுக்கும்படி சுவிசேஷத்த ஏத்துக்கக்கூடியவங்களப் பிரகாசிக்குமாறு சர்வவல்லமையுள்ள தேவனிடத்துல மன்றாடி, நான் ஒரு ஜெபத்தயும் கூட ஏறெடுத்தேன். அன்னைக்கு சாயங்காலம், சுவிசேஷத்தக் கேட்பதுக்கு ஆர்வமுள்ள ஒருத்தரக் கண்டுபிடிச்சேன். இன்னும் என்னன்னா, அதுக்கப்புறமா, நான் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கும்படி தொடர்ந்து மத்தவங்கள கண்டுபிடிச்சேன், அன்னைக்கு ராத்திரி ஆறு பேரை மதம் மாத்துனேன். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு ஏன்னா, சுவிசேஷத்த ஏத்துக்கிட்ட சிலர் கத்தோலிக்கர்களும் நிறைய கருத்துகளக் கொண்டிருந்தவங்களுமா இருந்தாங்க, ஆனா, நான் அவங்களோடு தேவனோட வார்த்தைகள ஐக்கியப்பட்ட பிறகு, அவங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு, அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் சுவிசேஷத்த ஏத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறமா, வேறு இடத்துக்குப் போனேன். ஒவ்வொரு முறையும் நான் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க வெளியில போகும்போதும், தேவனோட வார்த்தைகள எப்படி பிரசங்கிச்சு சாட்சி கொடுப்பதுன்னு நான் அறிஞ்சுக்கும்படி, என்னைப் பிரகாசிப்பிச்சு வழிநடத்தணும்னு சொல்லி நான் தேவனிடத்துல மன்றாடி ஜெபிப்பேன். அதிகமதிகமான ஜனங்க தேவனோட சுவிசேஷத்த ஏத்துக்கிட்டதால, என்னோட விசுவாசம் வளர்ந்துச்சு. சில சமயங்கள்ல நான் அந்நியர்களுக்குப் பிரசங்கிக்க மத்த கிராமங்களுக்குப் போனபோது, நான் கொஞ்சம் வெட்கப்பட்டு பயந்தாலும் கூட, தேவனோட வார்த்தைகளோட வழிகாட்டுதல் எனக்கு நம்பிக்கையயும் அத எதிர்கொள்ளும் தைரியத்தயும் கொடுத்துச்சு. நான் அவங்களோடு நிச்சயமா ஐக்கியங்கொள்ளணும்னும், அது என்னோட கடமைன்னும் நான் அவங்களோட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கலேன்னா, பயிற்சி செய்ய எனக்கு அதிக வாய்ப்புகள் இருக்காதுன்னும், அதோடு நான் அதிக சத்தியங்களக் கத்துக்கிட்டு பெற்றிருக்க மாட்டேன்னும் எனக்குத் தெரியும். அதுக்கப்புறம், தொடர்ந்து சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறத பயிற்சி செஞ்சதன் மூலமா, நான் அதற்கப்புறம் ரொம்ப பதட்டத்தையும் பயத்தையும் உணரல. அதோடு தரிசனங்களப் பத்திய சத்தியத்த இன்னும் அதிகத் தெளிவா புரிஞ்சுக்கிட்டேன். நான் ரொம்பவே நிம்மதியாவும் விடுதலையாவும் உணர்ந்தேன்.

இந்த சுவிசேஷத்தப் பகிரும் செயல்பாட்டின் மூலமா நான் உண்மையிலயே அதிகமா பெற்றுக்கிட்டேன். இதயெல்லாம் நான் அனுபவிக்காம இருந்திருந்தா, தேவனோட சர்வவல்லமையுள்ள ஆளுகைய நான் புரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல. அதோடு, என்னோட கடமைய செய்வதன் முக்கியத்துவத்தயோ அல்லது கஷ்டத்தின் மூலம் தேவன எப்படித் தேடுவதுங்கறதயோ என்னால கத்துக்க முடிஞ்சிருக்காது.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

கடந்த ஜூலை மாதத்துல, என்னை காணொளிப் பணிக்குப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினாங்க. ஆரம்பத்துல, நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை...

எனது தெரிந்தெடுப்பு

மார்ச் 2012 இல், என் அம்மா கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் ஒவ்வொரு நாளும் தேவனுடைய...