புத்தியுள்ள கன்னிகைகளால் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்

ஜனவரி 7, 2023

கர்த்தராகிய இயேசு தாம் திரும்பிவரும்போது, புத்தியுள்ள கன்னிகைகள் மற்றும் புத்தியில்லாத கன்னிகைகள் அப்படின்னு ரெண்டு வகையான ஜனங்கள் இருப்பாங்கன்னு தீர்க்கதரிசனம் உரைச்சாரு. கர்த்தரோட சத்தத்தக் கேட்டு, அத ஏத்துக்கிட்டு கீழ்ப்படியறவங்க எல்லாருமே புத்தியுள்ள கன்னிகைகள். அவரோட சத்தத்தக் கேட்காதவங்க அல்லது அதக் கேட்டும் விசுவாசிக்காதவங்க அல்லது அவரை மறுத்து கண்டனம் செய்பவங்க எல்லாரும் புத்தியில்லாத கன்னிகைகள். கர்த்தரோட சத்தத்தக் கண்டுணர்றது சாதாரண விஷயமல்ல. ஜனங்க கருத்துக்களாலும் கற்பனைகளாலும் நிறைஞ்சிருக்கிறப்ப, அவங்க கர்த்தரோட சத்தத்த கேட்கறப்ப தயங்குவாங்க, சந்தேகங்கள் நிறைஞ்சவங்களாவும் இருப்பாங்க. புத்தியுள்ள கன்னிகைகள் புத்தியுள்ளவங்களா இருக்காங்க, ஏன்னா அவங்க கர்த்தரோட சத்தத்தக் கேக்கிறாங்க, கர்த்தரோட ஆவியானவர்தான் பேசுறாருங்கிறத அவங்களால பாக்க முடியுது. அவங்களால கருத்துக்கள விட்டுட்டு, தேவனோட தோன்றுதலயும் கிரியையயும் ஏத்துக்க முடியுது. அதனாலதான் அவங்களால கர்த்தர வரவேற்க முடியுது. ஆனா புத்தியில்லாத கன்னிகைகள் கர்த்தருக்கு செவிகொடுப்பதில்ல, அவங்க குருமாருக்கு மட்டுமே செவிகொடுத்து, தங்களோட சொந்தக் கருத்துக்களையே விசுவாசிக்கிறாங்க. அவங்க கர்த்தரோட சத்தத்தக் கேட்கலாம், ஆனா அவங்க அத ஏத்துக்கிறதில்ல, அதனாலே அவங்க கர்த்தர வரவேற்கிற தங்களோட வாய்ப்ப இழந்து போயிடுறாங்க. இந்த இடத்திலதான் புத்தியில்லாத கன்னிகைகள் தவறிடுறாங்க. நான் ஒரு புத்தியில்லாத கன்னிகையா இருந்ததுண்டு. நான் கண்மூடித்தனமாக குருமாருக்கு செவிகொடுத்தேன், கடைசி நாட்கள்ல கள்ளக்கிறிஸ்துக்கள் தோன்றுவாங்க அப்படிங்கிறதனால, கடைசி நாட்கள்ல கிரியை செய்யவும் நியாயந்தீர்க்கவும் கர்த்தராகிய இயேசு திரும்பி வந்து, சத்தியத்த வெளிப்படுத்துறாருங்கிற சாட்சிகள ஆராயக்கூடாதுன்னு நெனச்சேன். கடைசி நாட்களின் கர்த்தரோட இரட்சிப்ப நான் கிட்டத்தட்ட இழந்திட்டேன். நான் என் அனுபவத்த பகிர்ந்துக்க விரும்பறேன்.

நான் சிறுபிள்ளையா இருக்குறப்ப என் குடும்பத்தாரோட விசுவாசத்தயே பின்பற்றினேன், திருப்பலியில குருமார் சொல்றதயே நான் எப்போதும் கேட்பேன், “ஆண்டவர் திரும்பி வர்றதுக்கான நேரம் சமீபத்திருக்கு. வேறு யாரோட பிரசங்களுக்கும் செவிகொடுக்காதீங்க. திருவிவிலியம் சொல்லுது, ‘அப்பொழுது உங்களிடம் எந்த மனிதனாவது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அல்லது அங்கே இருக்கிறார் என்று சொன்னால் நீங்கள் அவரை நம்ப வேண்டாம். ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துகளும், கள்ள இறைவாக்கினர்களும் தோன்றி, (முடியுமானால்) தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும்கூட ஏமாற்றுமளவிற்கு மாபெரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்(மத்தேயு நற்செய்தி 24:23-24). கடைசி நாட்கள்ல கள்ளக்கிறிஸ்துக்கள் தோன்றுவாங்க. உங்க வளர்ச்சி சின்னது, பகுத்தறிவுல குறைவுபட்டிருக்கீங்க, அதனால நீங்க சுலபமா தவறா வழிநடத்தப்படுறீங்க. தவறான பாதைய விசுவாசிக்கிறது ஆண்டவர காட்டிக்கொடுப்பதா இருக்கும்! நாம் ஆண்டவரோட பாதையில நடந்து, அவர் வந்து நம்மள அவரோட ராஜ்யத்துக்கு அழைச்சுட்டுப் போறதுக்காகக் காத்திருக்கணும். நாம வேறு யாரோட போதனைகளயும், குறிப்பா ஆண்டவர் ஏற்கனவே திரும்பி வந்திருக்கார்ன்னு சொல்ற யாரோட போதனைகளயும் கேட்கவோ, வாசிக்கவோ அல்லது ஆரயவோ கூடாது.” இவை எல்லாமே எனக்கு நியாயமா பட்டுச்சு. நான் முதிர்ச்சியற்றவளாவும், பகுத்தறிவற்றவளாவும் இருந்தேன், அதனால நான் கள்ளக்கிறிஸ்துவால தவறா வழிநடத்தப்பட்டிருந்தா, அத்தனை வருடங்களான என்னோட விசுவாசம் விணா போயிருக்கும். நான் கவனமா இருக்கணும், வித்தியாசமா பிரசங்கிக்கிற யாருக்கும் செவிகொடுக்கக்கூடாதுன்னு உறுதி எடுத்துக்கிட்டேன்.

2012 ஏப்ரல்ல ஒரு நாள், சகோதரர் முஷேங் சொன்னாரு, “கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்காரு. அவர்தான் மாம்சத்திலுள்ள சர்வவல்லமையுள்ள தேவன். அவர் புதிய கிரியைய செய்றாரு, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்றாரு, இது வேதாகமத்தில தீர்க்கதரிசனமா சொல்லப்பட்டிருக்கு.” நான் இதக் கேட்டப்ப எனக்கு ஆச்சரியமாவும் சந்தேகமாவும் இருந்துச்சு. நான் கேட்டேன், “கர்த்தர் திரும்பி வந்து புதிய கிரியைய செய்றாருன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களால எப்படி உறுதியா சொல்ல முடியுது?” கர்த்தராகிய இயேசு சொன்னதுதான் அவரோட பதிலா இருந்துச்சு, “‘என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன: நானும் அவற்றை அறிவேன், அவைகளும் என்னைப் பின்பற்றுகின்றன(யோவான் நற்செய்தி 10:27). ‘நடு இரவில் ஓர் உரத்த சத்தம் கேட்டது: இதோ மணமகன் வருகிறார். அவரைச் சந்திக்க வாருங்கள்(மத்தேயு நற்செய்தி 25:6). ‘இதோ, நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எந்த மனிதனாவது எனது குரலைக் கேட்டு, எனக்குக் கதவைத் திறந்தால், நான் அவனிடம் சென்று அவனோடு உணவருந்துவேன், அவனும் என்னோடு உணவருந்துவான்(திருவெளிப்பாடு 3:20). கர்த்தராகிய இயேசு தாம் திரும்பிவந்து, தம்மோடு வார்த்தைகளால நம்ம கதவுகள தட்டுவாருன்னு நமக்குச் சொல்லியிருக்காரு. அவரோட ஆடுகள் அவர் சொல்றதில இருந்து அவரோட சத்தத்த அறிஞ்சுக்கிடும். அவங்க கர்த்தர் திரும்பிவர்றத வரவேற்று, ஆட்டுக்குட்டியானவரோட கல்யாண விருந்தில கலந்துக்குவாங்க. அவங்க புத்தியுள்ள கன்னிகைகள். கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செய்தத நெனச்சிப்பாரு. பேதுரு, யோவான், பிலிப்பு போன்றவங்க அவரோட சத்தத்துக்குச் செவிகொடுத்தாங்க, வருவார்னு அவங்க காத்திக்கிட்டிருந்த மேசியா அவர்தான்னு தெரிஞ்சுகிட்டாங்க. அவங்க கர்த்தராகிய இயேசுவ பின்பத்தி, அவரோட இரட்சிப்ப பெற்றாங்க. நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தகள் பலவற்ற வாசிச்சி, அவைதான் சத்தியம்னு உறுதிபடுத்தியிருக்கேன். அவை அதிகாரமுள்ளவையாவும், தேவனோட சத்தமாவும் இருக்கு. அதனாலதான் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கிறதுல உறுதியா இருக்கேன். கர்த்தரோட சத்தத்துக்கு செவிகொடுக்கிறதுல நாம கவனம் செலுத்தாம, கள்ளக்கிறிஸ்துக்கள கண்மூடித்தனமா பின்பற்றி, தவறா வழிநடத்தப்படுவோம்னு பயந்து நம்மோட கதவுகள அடச்சோம்னா, நாம கர்த்தருக்குக் கதவுகள அடச்சி, கடைசி நாட்கள்ல அவரோட இரட்சிப்ப இழக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு!”

இந்த ஐக்கியம் என்ன பிரகாசமாக்குவதா இருந்துச்சு. கர்த்தர வரவேற்க அவரோட சத்தத்துக்கு செவிகொடுக்கிறது வேதாகமத்துக்கும் கர்த்தரோட வார்த்தைகளுக்கும் இணக்கமா இருக்குது. கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறார்னு யாரவாது சொல்லுறப்ப நான் அத ஆராய்ஞ்சி பார்க்கவோ அல்லது கர்த்தரோட சத்தத்துக்கு செவிகொடுக்கவோ முயற்சிக்கலன்னா, நான் எப்படி அவர வரவேற்பேன்? நான் அப்படிப்பட்ட ஒரு அருமையான ஐக்கியத்த எப்பவும் கேட்டதே இல்ல, நான் அதிகமா கண்டறிய விரும்புனேன், ஆனா நம்மள வஞ்சிக்க கடைசி நாட்கள்ல கள்ளக்கிறிஸ்துக்கள் வருவாங்க, அதனால நாம வேறு யாரோட பிரசங்கங்களுக்கும் செவிகொடுக்கக்கூடாதுங்கிறத பத்திய குருமாரோட தொடர்ச்சியான எச்சரிக்கைகள நான் அப்போ நெனச்சுப் பாத்தேன். நான் உடனடியா சுதாரிச்சுக்கிட்டேன், நாம மத்தவங்களோட போதனைகளுக்குச் சும்மா செவிகொடுக்கக்கூடாதுன்னு முடிவெடுத்தேன். தவறான காரியத்த விசுவாசிக்கிறது என்னோட பல வருஷ விசுவாசத்த வீணாக்கிவிடாதா? நான் முஷேங் அவர்கள் சொன்னத மறுத்தேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் தேவனோட சத்தம்தானாங்கிறத பாக்க நான் அவற்றை வாசிக்கனும்னு அவர் மேலும் சில தடவை என்னிடம் சொன்னாரு, ஆனா நான் ரொம்ப எச்சரிக்கையா இருந்தேன், அதனால அவரத் தட்டிக்கழிக்க நான் எப்போதும் சாக்குப்போக்குகள தேடினேன்.

இரண்டு மாதங்கள் கழிச்சு ஒருநாள் என்னோட கணவர் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையோட ஒரு பிரதியோட வீட்டுக்கு வந்தாரு. அதுதான் “திருச்சபைகளுக்குத் தூய ஆவியானவர் சொல்வது(திருவெளிப்பாடு 3:6). அப்படின்னும், சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுன்னும் சொன்னாரு. நான் அத வாசிக்கனும்னு அவர் பரிந்துரைச்சாரு. அவர் தவறா வழிநடத்தப்பட்டிருந்தாரோன்னு பயந்தேன், அதனால யாருக்கும் சும்மா செவிகொடுக்கக்கூடாதுன்னு அவர்கிட்ட சொன்னேன், ஆனா சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கிறதுல அவர் உறுதியா இருந்தாரு. அவர் ஆண்டவருக்கு துரோகம் செஞ்சிட்டாரோன்னு பயந்தேன். என்னால அவருக்காக அழவும், உபவாசமிருந்து ஜெபிக்கவும் மட்டுந்தான் முடிஞ்சது. ஒரு சில நாட்கள் கழிச்சு, என்னோட மாமியாரும் வந்து கர்த்தர் திரும்பி வந்திருக்கார்னு சொன்னார். அவர் சொன்னார், “கர்த்தர் சொல்லியிருக்கார், ‘நான் சீக்கிரத்தில் வருகிறேன்(திருவெளிப்பாடு 22:7). நாம கள்ளக்கிறிஸ்துக்களால தவறா வழிநடத்தப்படுவோம்னு பயந்து, கர்த்தர் திரும்பி வந்திருக்கிறத பத்திய எந்த செய்தியயும் பொய்யுன்னு முடிவெடுத்து, அவற்றயெல்லாம் முற்றிலுமா புறக்கணிச்சா, நாம கர்த்தர் திரும்பி வர்றத மறுத்து கண்டிப்பதா இருக்காதா? பிரச்சனைக்கு பயந்து நம்மை நாமே அழிச்சுக்கிறதா இருக்காதா? நாம மெய்யான கிறிஸ்துவுக்கு கதவ அடச்சிட்டோம்னா, நாம வருத்தப்படுறது ரொம்பக் கால தாமதமா இருக்கும். கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிரா கர்த்தர் நம்மள பாதுகாத்திருக்காரு, கடைசி நாட்கள்ல மெய்யான கிறிஸ்து வருவார், கள்ளக்கிறிஸ்துக்கள் தங்கள மெய்யான கிறிஸ்துக்களா காண்பிச்சுக்குவாங்கன்னு நமக்கு சொல்லியிருக்கார், அதனால நாம கள்ளக்கிறிஸ்துக்கள கண்டறிய கத்துக்கணும். நம்மளால அதச் செய்ய முடியாம, கர்த்தரோட வருகையப் பத்திய எந்த செய்தியயும் புறக்கணிச்சு மறுத்தோம்னா, நாம கர்த்தர வரவேற்கிற நம்மோட வாய்ப்ப இழக்க அதிக வாய்ப்பிருக்கு, அப்புறம் நாம அவரால கைவிடப்படுவோம்.” அவங்க சொன்னது என்னைய தொட்டுச்சு. “கர்த்தர வரவேற்க நான் இரவு பகலா காத்துக்கிடக்கறேன். நான் என்னோட கண்களயும் காதுகளயும் மூடிட்டா, நான் எப்படி தேவனோட சத்தத்தக் கேட்டு கர்த்தர வரவேற்பேன்?” அப்படின்னு நான் நெனச்சேன். எச்சரிக்கையா இருக்கிறது தீர்வு அல்லங்கிற மாதிரி தோணுச்சு. கர்த்தர புறக்கணிக்கிறது என்னோட பெரிய முட்டாள்தனமா இருந்திருக்கும். என்னோட மாமியார் போனதுக்கப்புறமா, என்னோட கணவர் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தைய கவனமா படிக்கிறதப் பாத்தேன். கடந்த சில வருடங்களா, திருச்சபை எப்படி கனியற்றதாக உணர்ந்தது, குருமார்கள் எப்படி பலவீனமாவும் எதிர்மறையாவும் இருந்தாங்க, அவங்க விசுவாசம் எப்படி தணிஞ்சுப்போச்சுங்கிறத பத்தி யோசிச்சேன். என் கணவரோட விசுவாசம் எப்போதையும் விட வலுவாக இருப்பதா தோணுச்சு. அந்த வார்த்தைகள் அவங்க சொல்றதப்போலவே வல்லமையாவும் அதிகாரமுள்ளதாவும் இருக்குமோ? அவை தேவனோட சத்தமா இருக்குமோ? முஷேங் அவர்கள் சொன்னது எவ்வளவு பிரகாசமாக்குவதா இருந்துச்சிங்கிறத பத்தியும் நான் யோசிச்சேன். கர்த்தர் உண்மையிலேயே திரும்பி வந்திருந்தா என்ன செய்வது? கர்த்தர் திரும்பி வர்றத வரவேற்கும் வாய்ப்ப நான் தவறவிடலங்கிறத உறுதிப்படுத்த நான் ஆராஞ்சி பாக்கணுங்கிறத கண்டறிஞ்சேன். அதனால, நான் தேவனோட சத்தத்தக் கேட்கக்கூடிய விதத்தில எனக்குப் பகுத்தறிவ தருமாறு நான் அவரிடத்தில ஜெபிச்சேன்.

எனது கணவரும் நானும் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் இந்தப் பத்திய வாசிச்சோம். “‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்’ என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்’ என்று அழைக்கலாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). தேவனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகள் அற்புதமா இருந்துச்சு. விசுவாசங்கிறது தினமும் வெறுமென ஜெபம் சொல்வதோ, கூடுகைகளிலும் திருப்பலியிலும் வழக்கமா கலந்துகொள்வதோ அல்லங்கறத நான் பாத்தேன். அது தேவனோட வார்த்தைகள கடைபிடிப்பதாவும், நமது சீர்கேடான மனநிலைகள நீக்குவதாவும், தேவனைப் பற்றிய மெய்யான அறிவ அடைவதாவும் இருக்குது. அப்படிப்பட்ட விசுவாசந்தான் தேவனோட சித்தத்திற்கு இணக்கமானது. அதப் பத்தி நான் எவ்வளவு அதிகமாக யோசிச்சேனோ, அவ்வளவு அதிகமா சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் எவ்வளவு மகத்துவமானவைங்கிறதயும், அவைதான் சத்தியங்கிறதயும், அவை எந்த மனுஷனாலும் சொல்லக்கூடியதல்லங்கிறதயும் உணர்ந்தேன். அவை தேவனுடைய வார்த்தைகளாதான் இருக்கணுங்கறத கண்டறிஞ்சேன். நான் எச்சரிக்கையா இருப்பத விட்டுட்டேன்.

ஒரு சில நாட்களுக்கப்புறமா, முஷேங் அவர்கள் எங்க கடைக்கு வந்தாங்க, நான் அவருகிட்ட என்னோட கவலைகளப் பகிர்ந்துகிட்டேன். அவரும் இதே விதமாத்தான் உணர்ந்ததா என்கிட்ட சொன்னாரு. அவர் ஒரு கள்ளக்கிறிஸ்துவால தவறா வழிநடத்தப்படுவதா பயந்தார், அதனால அவர் கண்மூடித்தனமா குருவுக்கு செவிகொடுத்தார், கர்த்தர் திரும்பி வந்திருக்கிறார்னு சொன்ன எந்த சுவிசேஷத்துக்கும் செவிகொடுக்கல. ஆனா குருவானவர் சொன்னவை கர்த்தரோட வார்தைகளுக்கு இணக்கமாக இருந்துச்சாங்கிறத அவர் ஒருபோதும் கருத்தில் கொள்ளல. கள்ளக்கிறிஸ்துக்கள் கடைசி நாட்கள்ல ஜனங்கள தவறா வழிநடத்துவாங்கன்னு கர்த்தர் சொல்லியிருக்கார், அதனால அவங்கள கண்டுபிடிக்கிறது எப்படின்னு நாம கத்துக்கணும். ஆனா குருவானவர் கர்த்தராகிய இயேசு சொன்னத தவறா சித்தரிச்சு, ஆண்டவர் திரும்பி வர்றதப் பத்திய எந்தச் செய்தியயும் ஆராயவோ, செவிகொடுக்கவோ கூடாதுன்னு எங்ககிட்ட சொன்னாரு. கர்த்தர் திரும்பி வந்திருக்கிறத வரவேற்க விடாம எங்கள தடுக்க அவர் முயற்சி செய்தாரில்லையா? நாம வஞ்சிக்கப்படுவதப் பத்தி அவர் உண்மையிலே கவலப்பட்டிருந்தா, அவர் ஏன் கள்ளக்கிறிஸ்துக்களில் இருந்து மெய்யான கிறிஸ்துவ எப்படி பகுத்தறிவதுன்னு நமக்குப் போதிக்கல? நம்மால அதச் செய்ய முடியலன்னா, நாம தவறா வழிநடத்தப்பட்டிருக்க மாட்டோம். அவரோட விளக்கம் எனக்கு அறிவ ஊட்டிச்சு. நாம எச்சரிக்கையா இருக்கணும்னு குருவானவர் நம்மகிட்ட செயலற்றவிதமா சொன்னது கர்த்தர் சொன்னதுக்கு முற்றிலும் எதிரா இருந்துச்சு, அவரோட வருகைய வரவேற்கிறதில இருந்து நம்ம தடுப்பதுக்கான ஒரு தந்திரமா இருந்துச்சு. என்னால இதுக்குமேல சும்மா கண்மூடித்தனமா அவருக்கு செவிகொடுக்க முடியாதுங்கிறத தெரிஞ்சுக்கிட்டேன். நான் புத்தியுள்ள கன்னிகையா இருந்து, கர்த்தர வரவேற்க தேவனுடைய சத்தத்த தேட வேண்டியதாயிற்று. கள்ளக்கிறிஸ்துக்களிலிருந்து மெய்யான கிறிஸ்துவ கண்டறிவது எப்படின்னு எனக்கு விளக்கிக்கூறுமாறு நான் முஷேங் அவர்கள்கிட்ட கேட்டுக்கிட்டேன். அவர் சொன்னார், “கர்த்தராகிய இயேசு மத்தேயு 24:24 இல் அவங்கள பிரித்தறியும் கோட்பாட்ட நமக்கு சொலியிருக்காரு. கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் அற்புதங்களயும் அடையாளங்களயும் செய்வாங்க. ஜனங்கள தவறா வழிநடத்துறதுக்கு கடைசி நாட்கள்ல முக்கியமா அவங்க செய்றது இதுதான்.” அப்புறமா அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்திய எனக்கு வாசிச்சு காண்பிச்சாரு. “இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்”). இத வாசிச்சதுக்கப்புறமா, முஷேங் சொன்னார், “தேவன் எப்போதுமே புதியவர், பழையவர் அல்ல. ஒவ்வொரு முறையும் அவர் கிரியை செய்ய வரும்போது, அவர் ஒரு புதிய காலத்தத் துவக்கி, பழையத முடிவுகட்டி, புத்தம் புதிதான, மிகவும் உயர்வான கிரியயக் கொண்டுவர்றார். கர்த்தராகிய இயேசு தமது கிரியையச் செய்தபோது, அவர் நியாயப்பிரமாண காலத்தின் கிரியைய திரும்பச் செய்யல. மனுக்குலத்த மீட்கும் காலத்தின் கிரியையின் அஸ்திபாரத்தின் மீது அவர் கட்டினார். அவர் கிருபையின் காலத்தத் துவக்கி, நியாயப்பிரமாணத்தின் காலத்த முடித்தார். கர்த்தர் வந்து கடைசி நாட்களில் மீட்பின் பணிய மீண்டும் செய்து, பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்தி, அற்புதங்களயும் அடையாளங்களயும் செய்திருந்தா, தேவனுடைய கிரியை தேக்கமடைஞ்சிருக்கும். சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல வந்து, ராஜ்யத்தின் காலத்தத் துவக்கி, கிருபையின் காலத்த முடிக்கிறார். அவர் மீட்பின் பணியின் அஸ்திபாரத்தில் தேவனுடைய வீட்டில் துவங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்து, ஜனங்கள நியாயந்தீர்க்கவும் சுத்திகரிக்கவும் சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, இதன் மூலமா நம்மால நமது பாவ சுபாவத்தின் கட்டுகளில் இருந்து முழுமையா விடுவிக்கப்படவும், சுத்திகரிக்கப்படவும், தேவனால் முழுமையா இரட்சிக்கப்படவும் முடியும். ஆனால் கள்ளக்கிறிஸ்துக்கள் சாராம்சத்தில் பொல்லாத ஆவிகளும் பிசாசுகளுமாக இருக்காங்க. அவங்க என்ன விதமான அற்புதங்களயும் அடையாளங்களயும் செஞ்சாலும், அல்லது அவங்க தங்களையே தேவன்னு சொல்லிக்கிட்டாலும், அவங்களால சத்தியத்தயோ அல்லது தேவனுடைய வார்த்தைகளயோ வெளிப்படுத்த முடியாது. அவங்களால குறிப்பா ஒரு புதிய காலத்தத் துவக்கி பழைய காலத்த முடிக்க முடியாது. கள்ளக்கிறிஸ்துக்களால் கர்த்தரோட பழைய வார்த்தைகளயும் கிரியையயும் பின்பற்றவும், சில எளிய அற்புதங்களயும் அடையாளங்களயும் காட்டவும், அல்லது பகுத்தறிவில்லாத ஜனங்கள வஞ்சிக்க உண்மையா தோண்ற பொய்யான விஷயங்களச் சொல்லவும் மட்டுமே முடியும். ஆனா 5,000 பேரை ஐந்து அப்பங்களயும் இரண்டு மீன்களயும் கொண்டு போஷித்தது, காற்றையும் கடலையும் கடிந்துகொண்டது, லாசருவை உயிரோடு எழுப்பியது போன்ற கர்த்தராகிய இயேசுவின் அற்புதங்கள அவங்களால ஒருபோதும் செய்ய முடியாது. கள்ளக்கிறிஸ்துக்களால் அது போன்ற காரியங்கள ஒருபோதும் செய்யவே முடியாது.” இது என்னப் பிரகாசமாக்குவதா இருந்துச்சு. நான் நெனச்சேன், “கள்ளக்கிறிஸ்துக்களிலிருந்து மெய்யான கிறிஸ்துவை எப்படிச் அறிவதுங்கிறதுக்கான ஒரு தெளிவான விளக்கத்த நான் ஒருபோதும் கேட்டதே இல்ல. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள்தான் சத்தியம், அவை ஜனங்கள் பின்பற்றுறதுக்கான ஒரு பாதைய திறக்குது. கள்ளக்கிறிஸ்துக்களால் கடந்தகாலத்தில கர்த்தர் செய்த கிரியைய போலச்செய்யவும், ஜனங்கள வஞ்சிக்க சில அற்புதங்களயும் செய்வும் மட்டுமே முடியும். தேவனால மட்டுமே ஒரு புதிய காலத்தத் துவக்கி பழையத முடிக்கவும், நம்மை நிலைத்திருக்கச் செய்ய சத்தியங்கள வெளிப்படுத்தவும் முடியும்.”

முஷேங் அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் இன்னும் இரண்டு பத்திகள வாசிச்சார். “மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவனின் சாராம்சத்தையும், மனிதனால் அடைய முடியாத தேவனின் மனநிலையையும், அவருடைய கிரியையில் இருக்கும் ஞானத்தையும் அவர் கொண்டிருப்பதால் எதுவும் கூடுதலாக இல்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை ஒரு மனிதனால் பதிலீடுசெய்ய முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்துவின் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). “தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).

அவர் என்னிடம் இத வாசிச்சுக் காண்பிச்சதுக்கப்புறம், அவர் சொன்னார், “கிறிஸ்து மனுஷர் மத்தியில் தோன்றி கிரியை செய்ய வந்திருக்கிற மனுஷகுமாரனாக மாம்சத்தைத் தரித்திருக்கிற தேவனா இருக்கிறார். வெளிப்புறத்தில் அவர் ஒரு சாதாரண நபராகவே தோற்றமளிக்கிறார், ஆனா அவருடைய சாராம்சம் தெய்வீகமானது. அதனால்தான் அவரால் சத்தியத்தயும் தேவனுடைய மனநிலையயும் வெளிப்படுத்தவும், மனுக்குலத்த மீட்கும் மற்றும் இரட்சிக்கும் கிரியையயும் செய்ய முடிகிறது. எந்த மனுஷனாலும் அதை அடைய முடியாது. மெய்யான கிறிஸ்துவ கண்டறிய முக்கியமானது என்னன்னா அவர்களால் சத்தியத்த வெளிப்படுத்தவும் இரட்சிப்பின் கிரியையச் செய்யவும் முடிகிறதாங்கிறத பார்ப்பதுதான். இது மிக அடிப்படையான, மிக முக்கியமான கோட்பாடு. கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செய்தப்ப, அவர் ஒரு சாதாரண நபர் போலவே தோற்றமளிச்சார், ஆனா அவர் பரலோகராஜ்யத்தின் மறைபொருட்கள வெளிப்படுத்தினார், மனந்திரும்புதலுக்கான பாதையக் கொண்டுவந்தார். அவர் கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்கூரும்படிக்கும், தங்களைப் போலவே பிறனிடத்திலும் அன்புகூரும்படிக்கும், ஜனங்களை ஏழெழுபதுதரம் மன்னிக்கும்படிக்கும் ஜனங்களுக்குப் போதித்தார். அவர் தேவனுடைய அன்பான, இரக்கமுள்ள மனநிலையை வெளிப்படுத்தினார், இறுதியா மனுக்குலத்திற்கான பாவநிவாரணபலியாக சிலுவையில அறையப்பட்டார், இவ்வாறு மனுக்குலத்த மீட்கும் கிரியைய முடிச்சாரு. கர்த்தராகிய இயேசுவின் கிரியை மற்றும் வார்த்தைகள், அப்புறம் அவர் வெளிப்படுத்திய மனநிலை ஆகியவற்றின் மூலமா அவர்தான் கிறிஸ்துவாக இருந்தார், அவர்தாமே மாம்சத்திலிருந்த தேவனாக இருந்தார்ங்கிறத நம்மால உறுதியாச் சொல்ல முடியும். இப்போ சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல வந்திருக்கிறார், அவர் தேவனுடைய வீட்டில் துவங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்கிறார். அவர் மனுக்குலத்த இரட்சித்து சுத்திகரிக்கும் எல்லா சத்தியங்களயும் வெளிப்படுத்துறார். மனுக்குலத்த இரட்சிப்பதற்கான தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் மறைபொருட்கள், நாம எப்படி சாத்தானால சீர்கெடுக்கப்பட்டிருக்கோம், தேவன் எப்படி நம்ம படிப்படியா இரட்சிக்கிறார், தேவனுடைய மனுவுருவாதல்களின் மறைபொருள், கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்புக் கிரியையின் முக்கியத்துவம், அவர் எப்படி ஜனங்களின் சென்றடையும் இடத்தையும் முடிவையும் தீர்மானிக்கிறார், கிறிஸ்துவின் ராஜ்யம் எப்படி பூமியில் உணரப்படுது மற்றும் பலவற்றையும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் வேதாகமத்தின் இந்த மறைபொருட்கள வெளிப்படுத்துவது மட்டுமில்லாம, ஜனங்கள் பாவம் செஞ்சி தேவனை எதிர்ப்பதற்கான மூலக் காரணத்தையும் அவர் வெளிப்படுத்தி நியாயந்தீர்கிறார், இதுவே நமது சாத்தானிய சுபாவமும் நமது சாத்தானிய மனநிலைகளுமாயிருக்குது. எந்தக் குற்றத்தையும் சகிக்காத அவருடைய நீதியையும், பரிசுத்தமான மனநிலையயும் அவர் வெளிப்படுத்துறாரு, பாவத்தை விட்டுவிட்டு சுத்திகரிக்கப்படும் வழியையும் அவர் நமக்குக் காட்டுறாரு. எவ்வாறு மனந்திரும்பி தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதுங்கிறதயும், நாம எப்படி விசுவாசத்த கொண்டிருக்கணும், நாம எப்படி தேவனுக்குக் கீழ்படிஞ்சு தேவனை நேசிக்கணுங்கிறதயும், அவருடைய சித்தத்த செய்றதுன்னா என்னங்கறதயும் மற்றும் பலவற்றையும் அவர் நம்மிடம் சொல்றார். கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையானது ஏற்கனவே ஒருகூட்ட ஜெயங்கொள்ளுகிறவர்களை உருவாக்கியிருக்கு, மேலும் சாத்தானை ஜெயங்கொள்ளுகிற பல சாட்சிகள உருவாக்கியிருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவி, கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த முற்றிலுமா நிறைவேற்றியிருக்கு: ‘ஏனெனில், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரைக் காணப்படுவது போல: மானிட மகனின் வருகையும் இருக்கும்(மத்தேயு நற்செய்தி 24:27). அவர் வெளிப்படுத்தும் சத்தியங்கள், அவர் செய்யும் நியாயத்தீர்ப்பின் கிரியை, அவருடைய கிரியையின் பலன் ஆகிய அனைத்துமே அவர்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கிறத நிரூபிக்குது. அவர்தான் கடைசி நாட்களின் கிறிஸ்துவின் தோன்றுதல் ஆவார். இதை யாராலும் மறுக்க முடியாது. சர்வவல்லமையுள்ள தேவன் இவ்வாறு சொல்றார்: ‘அவர் தமது கிரியையை அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அனுமதிக்கிறார், மேலும் அவர் வெளிப்படுத்தியதைக் கொண்டு அவருடைய சாராம்சத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் அனுமதிக்கிறார். அவரது சாராம்சம் ஆதாரமற்றது அல்ல; அவரது அடையாளம் அவரது கையால் கைப்பற்றப்படவில்லை; அது அவருடைய கிரியை மற்றும் அவரது சாரம்சம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது”). கள்ளக்கிறிஸ்துக்களிடம் தெய்வீக சாராம்சம் கிடையாது, அவங்களால சத்தியத்த வெளிப்படுத்த முடியாது. அவங்க தங்கள தேவன்னும், தங்கள கிறிஸ்துன்னும் வலியுறுத்தினாலும், அவையெல்லாம் பொய்யானதாவும் வஞ்சகமானதாவும் இருக்கு. அவங்கள பின்பற்றுறது கடற்கொள்ளையர்களின் கப்பலில் ஏறுறது போல. அது நல்லதா முடியாது. அவங்க கிறிஸ்துவா காட்டிக்கிட்டாலும், அவங்களால ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே ஜனங்கள வஞ்சிக்க முடியும். அவங்க விரைவில் உண்மைகளால் அம்பலப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படப் போறாங்க. கிறிஸ்துவால் மட்டுமே சத்தியத்த வெளிப்படுத்தி, மனுக்குலத்த இரட்சிப்பதற்கான கிரியைய செய்ய முடியும். அதனாலதான் கள்ளக்கிறிஸ்துக்களிடமிருந்து மெய்யான கிறிஸ்துவை அறிந்துகொள்றதுக்கு முக்கியமானது அவங்களால சத்தியத்தயும் தேவனோட சத்தத்தயும் வெளிப்படுத்த முடியுதாங்கிறத பார்க்கிறதுதான். அது ரொம்ப முக்கியமானது.”

நான் இதன் மூலமா ரொம்ப பிரகாசமாக்கப்பட்டேன். மெய்யான கிறிஸ்துவ கண்டறிவதுக்கு முக்கியமானது அவங்களால சத்தியத்த வெளிப்படுத்த முடியுதாங்கிறத பார்க்கிறதுதான், அப்படிப் பார்த்தா, அதுதான் கிறிஸ்து, அதுதான் திரும்பி வந்திருக்கிற கர்த்தர். சத்தியத்த வெளிப்படுத்த முடியாம, தங்கள கிறிஸ்துன்னு சொல்லுகிற எவரும் கள்ளக்கிறிஸ்துவாவும், வஞ்சகருமா இருக்காங்க. பகுத்தறியும் இந்த வழிமுறை ரொம்ப எளிதாவும் நடமுறையாவும் இருந்ததா நான் உணர்ந்தேன். என்ன ஒரு அற்புதமான நடைமுறைப் பாத! மெய்யான கிறிஸ்துவிலிருந்து கள்ளக்கிறிஸ்துக்களைக் கண்டறிந்து சொல்வது எப்படி என்பதுல சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் தெளிவா இருக்கு. அவைதான் உண்மையிலே சத்தியம்! நான் எவ்வளவு முட்டாள்தனமாவும், அறிவில்லாமலும் இருந்து, கண்மூடித்தனமா குருமாருக்கு செவிகொடுத்தேங்கிறத நெனச்சிப் பார்த்தேன். கள்ளக்கிறிஸ்துக்களால தவறாக வழிநடத்தப்பட்டுவிடுவேனோன்னு பயந்து கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியைய நான் தேடவோ ஆராயவோ இல்ல. நான் தேவனோட சத்தத்துக்கு செவிகொடுக்க முயற்சிக்கல, அதனால கர்த்தர வரவேற்கும் என்னோட வாய்ப்ப நான் கிட்டத்தட்ட இழந்திட்டேன். உண்மையிலே எனக்கு நானே தீங்கு செய்துகிட்டு, புத்தியில்லாத கன்னிகையா இருந்தேன்! தேவனுடைய இரக்கமும் சகிப்புத்தன்மயும் இல்லாதிருந்தா, எனக்குப் பிரியமானங்க என்னோட கதவ தட்டாதிருந்தா, முஷேங் அவர்கள் மீண்டும் மீண்டும் சுவிசேஷத்த பகிராம இருந்திருந்தா, கர்த்தரோட சத்தத்த கேட்காம அல்லது கர்த்தரோட வருகைய வரவேற்காம என் வாழ்க்கை முழுவதும் மதத்திலேயே இருந்திருப்பேன். நான் உண்மையிலே தேவனுடைய இரட்சிப்புக்கு நன்றி செலுத்துறேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 2)

கர்த்தரின் வருகையை வரவேற்பதில், ஒருவர் தவறான வழியைத் தேர்ந்தெடுத்து உண்மையான வழியை நாடவில்லை என்றால், அவர்கள் உண்மையில் கர்த்தரின் வருகையை வரவேற்க முடியுமா?

வானத்தைநோக்கி அண்ணாந்து பார்ப்பதனால் உண்மையில் உங்களால் கர்த்தரை வரவேற்க முடியுமா?

By Jin Cheng, South Korea பேரழிவுகளுக்கு முன்னாடி தேவனுடைய ராஜ்யத்துக்குள்ல எடுத்து கொள்ளப்பட்ரனும்னு கர்த்தராகிய இயேசு மேகத்துல வருவதற்காக...

வேதாகமம் மற்றும் தேவனுக்கு இடையில் இருக்கும் தொடர்பை இப்போது நான் புரிந்துகொள்ளுகிறேன்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய மதங்களில் ஒன்றான...

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 1)

தேவாலயங்கள் இன்னும் வெறிச்சோடி காணப்படுகின்றன மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் பலவீனமாக உள்ளனர். உண்மையான மற்றும் பொய்யான வழியை நாம் எவ்வாறு வேறுபடுத்தி கர்த்தரின் வருகையை வரவேற்க வேண்டும்? கற்றுக்கொள்ள இப்போது படிக்கவும்.