பரலோக ராஜ்யத்திற்கான பாதையை நான் கண்டுபிடித்தேன்
By Mengai, Taiwan சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயத்தீர்ப்பின் யுகத்தை முடித்துவைத்து...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
கர்த்தரோட வருகைய வரவேற்கறதுக்கு முக்கியமானது என்னது? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” (யோவான் 10:27). “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று” (மத்தேயு 25:6). வெளிப்படுத்தின விசேஷம் தீர்க்கதரிசனம் உரைச்சிருக்கு: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்” (வெளிப்படுத்தல் 3:20). “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (வெளிப்படுத்தல் 2:7). தேவனோட சத்தத்தக் கேட்கறதுதான் கர்த்தர வரவேற்கறதுக்கு முக்கியமானதுங்கறத இந்த தீர்க்கதரிசனங்கள் காட்டுது. தேவனோட சத்தத்தக் கேட்கறதுதான் ஒரே வழி. ஆனா நெறைய விசுவாசிங்க குருமாருக்குத்தான் வேதாமத்தத் தெரியும்னும், எல்லா நேரத்திலயும் அதப் பத்திதான் விளக்குறாங்கன்னும், இது மாதரியான முக்கியமான ஒண்ணுக்கு அவங்கதான் வாயிற்காவலர்களா இருக்கணும்னும் நெனைக்கறாங்க. அதனால கர்த்தர் திரும்பி வந்துருக்காருங்கற சாட்சியக் கேட்குறப்ப அவங்க அத ஆராய்ஞ்சு பாக்குறதில்ல, அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் பாக்குறப்ப, அவங்க அப்பவும் அவற்ற அவமதிக்கறாங்க. அந்த மாதிரியானவங்க தேவனை விசுவாசிக்கறாங்களா அல்லது மதகுருமார விசுவாசிக்கறாங்களா? கர்த்தரோட வருகையப் பொறுத்தவரையில நாம யாருக்கு செவிகொடுக்கணும்? நாம தேவனோட சத்தத்துக்கு செவிகொடுக்கணுமா அல்லது நம்மோட போதகர்களுக்கு செவிகொடுக்கணுமா? இதுக்கு முன்னாடி என்னோட விசுவாசத்துல நான் இத ஒருபோதும் புரிஞ்சிக்கிடமா, ஆனா என் போதகர் சொல்றத கண்மூடித்தனமா கேட்டுக்கிட்டிருந்தேன் மேலும் கர்த்தர் திரும்பி வர்றத வரவேற்கற என்னோட வாய்ப்ப கிட்டத்தட்ட தவறவிட்டிருந்தேன்.
2017 ஜுன்ல, ஜெர்மனியச் சேர்ந்த சகோதரி மின்டி என்பவங்களயும் சகோதரர் டெக்கர் என்பவரயும் நான் ஃபேஸ்புக்ல சந்திச்சேன். எங்களோட தொடர்பு மூலமா, அவங்க அடக்கமானவங்களாவும் நம்பகமானவங்களாவும் இருந்ததயும், வேதாகமத்தப் பத்திய தெளிவான புரிதலயும் பிரகாசமான ஐக்கியத்தயும் கொண்டிருந்ததயும் நான் பாத்தேன். நான் நிறைய ஆதாயம் அடஞ்சேன். நாங்க ஒரு சில தடவ கூடுகைகள்ல கலந்துக்கிட்டோம், மெய்யான விசுவாசம் மற்றும் மெய்யான மனந்திரும்புதல்னா என்ன, தேவன பின்பற்றுறது மற்றும் அவருக்குக் கீழ்ப்படியறுதுன்னா என்ன, ஜனங்கள பின்பற்றுறது மற்றும் அவங்களுக்குக் கீழ்ப்படியறுதுன்னா என்ன, கர்த்தராகிய இயேசுவ பரிசேயர்கள் எதிர்த்ததுக்கான சாரம்சமும் மூலக்காரணமும் என்ன, தேவனோட சத்தத்தக் கேட்டு கர்த்தர வரவேற்கறது எப்படி, மற்றும் இதுபோன்ற நான் இதுக்கு முன்னாடி ஒருபோதும் புரிஞ்சுக்கிடாத நெறைய சத்தியங்கள கத்துக்கிட்டேன். இதிலயிருந்து நான் நெறைய வாழ்வாதாரத்தப் பெற்றுக்கிட்டதா உணர்ந்தேன், அது என்னோட இருதயத்தப் பிரகாசமாக்கிச்சு. நான் இந்த கூடுகைகள அனுபவிச்சேன். அதுல ஒண்ணுல, டெக்கர் ரெண்டு வேத வசனங்கள வாசிச்சாரு: “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது” (லூக்கா 17:24-25). கடைசி நாட்கள்ல கர்த்தர் மனுஷகுமாரனா வந்து கிரியை செய்றதுக்காக திரும்பவும் மனுவுருவாகுறாருன்னும் இந்தத் தீர்க்கதரிசனம் கொஞ்ச காலத்துக்கு முன்னால நிறைவேறியிருக்குதுன்னும் அவர் சொன்னாரு. “கர்த்தர் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்திருக்காரு, அவர் சத்தியங்கள வெளிப்படுத்திக்கிட்டும், தேவனுடைய வீட்லயிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையச் செஞ்சிக்கிட்டும் இருக்காரு. மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிக்குற எல்லா சத்தியங்களயும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியிருக்காரு, அது மாபெரும் வெளிச்சம் கிழக்கிலிருந்து பிரகாசிப்பதப் போல இருக்கு, இதுதான் கிழக்கிலிருந்து வரும் ‘மின்னல்’” அப்படின்னு அவரு சொன்னாரு. இதக் கேட்டு நான் கொஞ்சம் அதிர்ச்சியடைஞ்சுட்டேன். “கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பி வந்துருக்காரா?” அப்படின்னு நெனச்சேன். கிழக்கத்திய மின்னல் மட்டுந்தான் தேவன் மாம்சத்தில திரும்பி வந்திருக்காருன்னு சாட்சி பகருதுன்னும், கர்த்தராகிய இயேசு மட்டுமே கிறிஸ்துவா இருப்பதனால நாம அத விசுவாசிக்கக் கூடாதுன்னும் மதகுருமார் சென்னத நான் அப்ப நெனச்சுப் பாத்தேன். அதுக்கப்புறமா நான் உண்மையிலயே குழம்பிப் போயிட்டேன், டெக்கர் அவர்களோட ஐக்கியத்துல என்னால கவனம் செலுத்த முடியல, “போதகரும் மூப்பர்களும் கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுறாங்க, வேதாகமத்த நல்ல அறிஞ்சிருக்கறாங்க. இது முக்கியமான ஒண்ணுங்கறதப் பத்தி அவங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கணும், அதனால நான் போய் முதல்ல அவங்ககிட்ட கேட்கறேன்” அப்படின்னு நான் நெனச்சேன்.
அந்த ஞாயிற்றுக்கிழம நான் திருச்சபைக்குப் போய், போதகர்கிட்ட கேட்டேன், அதுக்கு அவர் சொன்னாரு, “சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கறவங்க பிரசங்கிக்கறதுல அர்த்தம் இருக்குது, ஆனா கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவனாக மாம்சத்துல திரும்பி வந்திருக்காருன்னு அவங்க சாட்சி கொடுக்கறாங்க. அது சாத்தியமில்ல. கர்த்தராகிய இயேசு மட்டுந்தான் மனுவுருவான தேவன், அதனால அவங்க மனுஷன விசுவாசிக்கறாங்க. அவங்களோட திருச்சபை சீன கம்யூனிஸ அரசாங்கத்தால ஒடுக்கப்படுது, கிழக்கத்திய மின்னல விசுவாசிக்கறது கர்த்தராகிய இயேசுவுக்கு துரோகம் செய்றதா இருக்கும்.” இதக் கேட்டது எனக்குள்ள ஒரு பயத்தின் அலையை அனுப்பிச்சு. இது உண்மையா இருந்தா, மின்டியும் டெக்கரும் கர்த்தரிடத்திலிருந்து விலகியிருந்திருக்கணும்னு நான் நெனச்சேன். நான் அவங்களப் பத்திய சந்தேகங்கள வளத்துக்கிட்டு, என்னையப் பாதுகாத்துக்க ஆரம்பிச்சேன், அதுக்குமேல அவங்கள நான் சந்திக்க விரும்பல. ஆனா கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்காருங்கற அவங்களோட சாட்சியப் பத்தி நான் நெனச்சுப் பாத்தப்போ, நான் தயங்குனேன். அது உண்மையா இருந்து, நான் அத ஆராய்ஞ்சுப் பாக்கலன்னா, கர்த்தர் என்னைய புறம்பாக்கிவிட மாட்டாரா? ஆனா அதுக்கப்புறம் திரும்பவும், சர்வவல்லமையுள்ள தேவன் மனுவுருவான தேவனா இருந்தா, போதகர் ஏன் அத ஏத்துக்கிடாம, ஒரு மனுஷன விசுவாசிக்கறதா அவங்க சொல்றாங்க? என்னைய விட அதிகமா போதகர் வேதாமத்த அறிஞ்சு புரிஞ்சிக்கிட்டவர், அதனால வழிவிலகிப் போறதத் தவிர்க்க அவங்ககிட்ட இருந்து விலகியிருக்கணும்னு நான் நெனச்சேன். ஆனா நான் வீட்டுக் வந்ததுக்கப்புறமா, நான் அமைதியில்லாமலும் நிம்மதியில்லாமலும் இருந்தேன். நான் வருத்தமாவும் சோகமாவும் இருந்தேன். நான் கர்த்தரிடத்தில ஒரு ஜெபத்த செஞ்சேன்: “ஓ கர்த்தாவே, நான் இன்னைக்குப் போதகருக்கு செவிகொடுத்தேன், நான் இப்ப மின்டியயும் டெக்கரயும் சந்தேகப்பட ஆரம்பிச்சிருக்கேன். நான் இதுக்குமேல கிழக்கத்திய மின்னல ஆராய்ஞ்சுப் பாக்க பயப்படுறேன். நான் உம்மோட வருகைக்காக ஏங்குறேன், ஆனா நான் தவறான பாதையில நடந்து உமக்குத் துரோகம் செஞ்சிருவேனோன்னு பயப்படுறேன். நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியல. நான் சரி எது தவறு எதுன்னு தெரிஞ்சுக்க என்னைய பிரகாசிப்பிச்சு வழிநடத்துங்க.”
என்னோட ஜெபத்துக்கப்புறமா நான் படிப்படியா சமாதான உணர்வப் பெற்றேன், மின்டி அவங்க ஒரு தடவ ஐக்கியப்பட்ட ஒண்ணு மனசுல தோன்றிச்சு: நம்மோட விசுவாசத்துல தேவனே பிரதானமானவராக இருக்காரு, எல்லா காரியங்களும் குறிப்பா மெய்யான வழிய ஆராய்ஞ்சு பாக்குற முக்கியமான ஒண்ணு தேவனோட வார்த்தைகளின் அடிப்படையில இருக்கணும். நாம எல்லாத்துலயும் மத்தவங்க சொல்றதுக்கு மட்டுமே செவிகொடுத்து, நாம ஜனங்கள விசுவாசிச்சுப் பின்பற்றுனா, நாம கர்த்தரோட வழியிலிருந்து விலகிப் போயிருவோம். நான் என்னைய பத்தி சிந்திச்சுப் பாக்க ஆரம்பிச்சேன். கர்த்தர் திரும்பி வந்திருக்காருங்கறத நான் கேள்விப்பட்டப்போ, நான் முதல்ல கர்த்தரோட சித்தத்த நாடவுமில்ல, அதப் பத்தி கர்த்தரோட வார்த்தைகள் என்ன சொல்லுதுங்கறதயோ இது தேவனிடத்திலிருந்து வந்ததாங்கறதயோ பாக்கவுமில்ல. அதுக்குப் பதிலா நான் போதகர ஆராதிச்சிக்கிட்டு, அவருக்கு செவிகொடுத்தேன். அது கர்த்தரோட சித்தம் இல்ல. ஒவ்வொரு கூடுகையிலயும் நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உறுப்பினர்களோட இருந்தேன், அவங்களோட ஐக்கியம் பிரகசாமாவும் வேதாகமத்துக்கு ஒத்ததாவும் இருந்துச்சு, தேவனோட சித்தத்தப் பத்திய அவங்களோட விளக்கங்கள் தெளிவா இருந்துச்சு. நான் அதுக்கு முன்னாடி ஒருபோதும் அறிஞ்சிராத நிறைய சத்தியங்கள ஒரு சில கூடுகைகள்லயே நான் புரிஞ்சிக்கிட்டேன், நான் தேவனோடு நெருக்கமாயிட்டேன்ங்கறதயும், என்னோட விசுவாசம் வளர்ந்திருக்குங்கறதயும் உணர்ந்தேன். இது தெளிவா தேவனிடமிருந்து வந்ததாவும், பரிசுத்த ஆவியானவரோட கிரியையாவும் இருந்துச்சு. ஆனா திருச்சபையில பரிசுத்த ஆவியானவரோட கிரியையோ அல்லது சத்தியத்தின் ஆதாரமோ இருந்துச்சாங்கறத நான் ஆராய்ஞ்சுப் பாக்கல. போதகருக்கு வேதாகமம் நல்லாத் தெரியும்னு மட்டுந்தான் நெனச்சேன், அதனால கர்த்தர் திரும்பி வரலன்னு அவர் சென்னத நம்புனேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில சத்தியமும் பரிசுத்த ஆவியானவரோட கிரியையும் இருந்துச்சுங்கறதுல நான் உறுதியா இருந்தேன், ஆனா நான் அப்பவும் அத ஆராய்ஞ்சுப் பாக்கல. அது போதகர் மேல விசுவாசம் வைச்சிருக்கறதா இருந்திச்சில்லயா? அது எப்படி தேவன விசுவாசிப்பதாவோ அல்லது பின்பற்றுறதாவோ இருந்திருக்கும்? கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செஞ்சத நான் நெனச்சுப் பாத்தேன். தேவாலயத்தில ஊழியஞ் செஞ்ச பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்கள் எல்லாருக்கும் வேத வசனங்களும் நியாயப்பிரமாணங்களும் ரொம்ப நல்லாத் தெரியும், ஆனா அவங்க கர்த்தராகிய இயேசுவ மேசியாவா அடையாளம் காணல. அதுக்குப் பதிலா, அவங்க வெறித்தனமா அவர எதிர்த்து கண்டனம் செஞ்சு, அவரை சிலுவையில அறைஞ்சாங்க. வேதாகமத்த நல்லா அறிஞ்சிருக்கறது தேவன அறிஞ்சிருக்கறதுன்னு அர்த்தமில்லங்கறத நான் உணர்ந்தேன், நான் போதகருக்குக் கண்மூடித்தனமா செவிகொடுத்தா, அது தேவனோட சித்தத்துக்கு எதிரா இருக்கும், நான் அவரை எதிர்க்கக்கூடும்! நான் மின்டி மற்றும் டெக்கர் அவங்களோட கூடுகைகள்ல தொடர்ந்து கலந்துக்க முடிவு செஞ்சேன், சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்த கர்த்தரா இருந்தா, நான் அவரை ஏத்துக்கிட்டு பின்பற்றுவேன்னு தீர்மானிச்சேன்.
அடுத்த கூடுகையில அவங்களோடு என்னோட குழப்பங்கள பகிர்ந்துக்கிட்டேன். டெக்கர் அவர்கள், “சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை ஒரு மனுஷன விசுவாசிப்பதா உங்க போதகர் சொன்னதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? அவரு சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சிருக்கரா அல்லது அவரோட கிரியைய ஆராய்ஞ்சுப் பாத்திருக்காரா? திருச்சபைய இந்த மாதிரி கண்டனம் செய்றதன் மூலமா தேவனை எதிர்க்கறதுக்கு அவரு பயப்படலையா?” அப்படின்னு சொன்னாரு. “கர்த்தராகிய இயேசு வெறும் ஒரு சாதாரண நபராத்தான் இருப்பாருன்னு பரிசேயர்கள் கருதுனாங்க. அவர் வெளிப்படுத்தின சத்தியங்களுக்கு அவங்க செவிகொடுக்காம, அவரக் கடுமையா எதிர்த்து கண்டனம் செஞ்சாங்க, கடைசில அவரை சிலுவையில அறைஞ்சு, தேவனோட தண்டனையப் பெற்றாங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சத்தயமான்னோ, அவை தேவனோட சத்தமான்னோ இன்றைய குருமார்கள் பாக்கறதில்ல, ஆனா அவரை வெறுமென மறுத்து கண்டனம் செய்றாங்க. அது பரிசேயர்கள் செய்த அதே தவறாகத்தான் இருக்கிறதல்லவா? சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலயே மனுவுருவான தேவன்தானா, அவர் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுதானாங்கறது மத உலக அல்லது அரசாங்க ஒப்புதலால தீர்மானிக்கப்படுறதில்ல. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகைள் சத்தியம்தானான்னும், அவர் தேவனோட கிரியையச் செய்றாரான்னும் நாம பாக்கணும். இதுதான் முக்கியம்.” மனுவுருவாதல நல்லா விளக்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் சில பத்திகள டெக்கர் எனக்கு வாசிச்சுக் காட்டுனாரு. “‘மனுஷரூபமெடுத்தல்’ என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன் நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”). “மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவனின் சாராம்சத்தையும், மனிதனால் அடைய முடியாத தேவனின் மனநிலையையும், அவருடைய கிரியையில் இருக்கும் ஞானத்தையும் அவர் கொண்டிருப்பதால் எதுவும் கூடுதலாக இல்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை ஒரு மனிதனால் பதிலீடுசெய்ய முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). “தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”).
டெக்கர் இந்த ஐக்கியத்தப் பகிர்ந்துக்கிட்டாரு: “மனுவுருவான தேவன் என்பவர் மாம்சத்த உடுத்தியிருக்கற தேவனோட ஆவியானவர். மனுக்குலத்த இரட்சிக்க அவர் பூமியில ஒரு சாதாரண மனிதனாகி, பேசுறாரு கிரியை செய்யறாரு. மனுவுருவான தேவன் ரொம்ப இயல்பாவும் ரொம்ப சாதாரணமாவும் தோன்றுறாரு. அவர் சாதாரண மனிதத்தன்மையக் கொண்டிருக்காரு, மற்ற எல்லாத்தயும் போலவே சாப்பிடுறாரு, உடை உடுத்துறாரு, அவருக்கு சாதாரண மனித உணர்வுகளே இருக்கு. ஆனாலும், அவரோட சாராம்சம் தெய்வீகமானது. மனுஷனப் போஷிக்க அவரால எந்த நேரத்துலயும் எந்த இடத்துலயும் சத்தியத்த வெளிப்படுத்த முடியும். அவர் தேவனோட சொந்தக் கிரியையச் செய்யறாரு, அவர் தேவனோட மனநிலையயயும் அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார்ங்கறதயும் வெளிப்படுத்தறாரு. இது எந்த சிருஷ்டியாலும் செய்ய முடியாத ஒண்ணு. அது ஒரு சாதாரண மனுஷனப் போலவே தோற்றமளிச்சு, சத்தியத்த வெளிப்படுத்தி மனந்திரும்புதலுக்கான வழியக் கொண்டுவந்த கர்த்தராகிய இயேசுவப் போலவே அது இருக்கு. அவர் மனுஷனோட பாவங்கள மன்னிச்சு, இரக்கம் அன்பு என்னும் தேவனோட மனநிலைகள வெளிப்படுத்தினாரு. அவர் நோயாளிகளக் குணமாக்கினார், பிசாசுகளத் துரத்தினார், ஐந்து அப்பங்களயும் இரண்டு மீன்களயும் கொண்டு 5,000 பேரை போஷித்தல், ஒரு வார்த்தையில் கடலை அமைதிப்படுத்துதல், மரித்தவனை உயிரோடு எழுப்புதல் போன்ற பல அற்புத அடையாளங்களயும் செய்தார். அவர் தேவனுடைய வல்லமையயும் அதிகாரத்தயும் காண்பித்தார். கடைசில அவர் சிலுவையில அறையப்பட்டு, மனுக்குலத்தப் பாவத்தில இருந்து விடுவிக்கற தம்மோட கிரியைய நிறைவேற்றுனாரு. அவர்தான் மனுவுருவான தேவன்கறதயும், அவர்தான் கிறிஸ்துங்கறதயும் கர்த்தரோட கிரியை மற்றும் வார்த்தைகள் மூலமாவும், அவர் வெளிப்படுத்திய மனநிலைகள் மூலமாவும் நாம பாக்கலாம். தேவன் மீண்டும் ஒருமுறை சர்வவல்லமையுள்ள தேவனாக கடைசி நாட்கள்ல மாம்சமாகியிருக்காரு. கர்த்தராகிய இயேசுவப் போலவே, வெளிப்புறத்தில ஒரு சாதாரண நபராகவே தோற்றமளிக்கறாரு. அவர் உண்மையிலே மனுக்குலத்துக்கு மத்தியில வாழுறாரு, கொஞ்சங்கூட இயற்கைக்கு அப்பாற்பட்டவராக இல்ல, ஆனா சர்வவல்லமையுள்ள தேவன் மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிக்கற எல்லா சத்தியங்களயும் வெளிப்படுத்தறாரு. மனுக்குலத்த சுத்திகரிச்சு, பாவத்திலயிருந்து முழுசா இரட்சித்து நம்மல தேவனோட ராஜ்யத்துக்குள்ள கொண்டுசெல்லவும் அவர் கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்யறாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் மனுக்குலத்த இரட்சிக்க தேவனோட நிர்வாகத் திட்டத்தோட எல்லா இரகசியங்களயும் வெளிப்படுத்துது. அதுல நியாயப்பிரமாண காலம், கிருபையின் காலம், ராஜ்யத்தின் காலத்தில செய்யப்படும் தேவனோட மூன்று கட்ட கிரியைகளப் பத்திய சத்தியம், அவை எவற்றை அடைகின்றன, தேவனோட நாமங்கள் மற்றும் அவரோட மனுவுருவாதல் பத்திய இரகசியங்கள், கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்பின் முக்கியத்துவம், தேவன் எப்படி ஒரு காலத்த முடிவுக்குக் கொண்டு வாராறு, ஜனங்கள அவங்கவங்களோட வகைக்கு ஏற்ப வகைப்படுத்தறாரு, பல்வேறு ஜனங்களோட முடிவுகள், கிறிஸ்துவோட ராஜ்யம் பூமியில எப்படி உணரப்படும் மற்றும் பல காரியங்களும் அடங்கும். சர்வவல்லமையுள்ள தேவன் சாத்தானால் உண்டான நமது சீர்கேடு பத்திய சத்தியத்தயும், தேவன எதிர்க்கற சாத்தானிய சுபாவத்தயும் வெளிப்படுத்தியிருக்கறாரு, அதனால அகந்தை, வஞ்சகம், சத்தியத்தை வெறுத்தல் போன்ற நமம்மோட சாத்தானிய சுபாவங்கள நாம பாக்கலாம். தேவனோட நீதியான, குற்றத்தப் பொறுத்துக்கொள்ளாத மனநிலைய நமக்கு வெளிப்படுத்தியிருக்காரு, அதோட நம்மோட மனநிலைகள மாற்றுறதுக்கான குறிப்பிட்ட பாதயயும் இன்னும் பலவற்றயும் நமக்குக் காட்டியிருக்காரு. தேவன விட்டு விலகியிருக்கற யாரால சத்தியத்தயும் தேவனோட நிர்வாகத் திட்டத்தின் இரசியங்களயும் வெளிப்படுத்த முடியும்? மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிக்க நியாயத்தீர்ப்பின் கிரியைய வேற யாரால செய்ய முடியும்? தேவனோட நீதியான, குற்றமற்றற மனநிலைய வேற யாரால வெளிப்படுத்த முடியும்? ஜனங்களோட முடிவுகள வேற யாரால தீர்மானிக்க முடியும்? மாம்சத்துல உள்ள தேவனால மட்டுமே மனுக்குலத்தோடு இரட்சிப்புக்கான இந்த மாதிரியான நடைமுறைக் கிரியையச் செய்ய முடியும். சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைகள் மற்றும் வார்த்தைகள் எல்லாமே கர்த்தரோட மீட்பின் பணியின் அடிப்படையிலயே செய்யப்படுது. இது ஒரு புதிய, உயர்மட்ட கிரியையாக இருக்கு. இது கர்த்தரோட தீர்க்கதரிசனங்கள முழுசா நிறைவேற்றுது: ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்’ (யோவான் 16:12-13). ‘நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது: நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்’ (யோவான் 12:47-48). சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள், அவரோட நியாயத்தீர்ப்பின் கிரியை, அவர் காட்டுகிற மனநிலைகள் எல்லாமே சர்வவல்லமையுள்ள தேவன் மாம்சத்திலுள்ள தேவனாக இருக்குறாருங்கறதயும், அவரே திரும்பி வந்த கார்த்தராகிய இயேசுவா இருக்குறாருங்கறதயும் நிரூபிக்குது. அவர்தான் கடைசி நாட்களின் கிறிஸ்து. அவர் கிறிஸ்துங்கறத தீர்மானிக்கறதுல நம்மால தோற்றத்த வச்சு முடிவு செய்ய முடியாது. அவர் சத்தியத்த வெளிப்படுத்துறாரா, அவரால மனுக்குலத்த மீட்டு இரட்சிக்க முடியுதாங்கறதுதான் முக்கியம்.”
டெக்கரோட ஐக்கியம் எனக்கு ரொம்ப உற்சாகமூட்டுவதா இருந்துச்சு. மனுவுருவாதல்ங்கறது பரலோகத்தின் தேவன் ஒரு சாதராண மனுஷனா மாம்சத்த உடுத்தியிருக்கறதாகும். அவர் எல்லாரயும் போலவே தோற்றமளிக்கறாரு, ஆனா அவருக்கு தேவனோட சாராம்சம் இருக்கு. அவரால சத்தியத்த வெளிப்படுத்தவும், தேவனோட சொந்தக் கிரியையச் செய்யவும் முடியும். இது எந்த மனுஷனாலும் செய்ய முடியாத ஒண்ணு. அது என்னைய இந்த வேதாகம வசனத்த சிந்தித்துப் பாக்க வச்சுது: “தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்” (1 கொரிந்தியர் 2:11). மனுவுருவான தேவனத் தவிர வேற யாரால மனுவுருவாதலின் இரகசியத்த இவ்வளவு தெளிவா விளக்க முடியும்? சர்வவல்லமையுள்ள தேவனோட சத்தியங்கள வாசிக்காம, வெளிப்புறத்துல நீங்க கிறிஸ்துவ ஒரு சாதாரண நபரா தவறா நெனச்சீங்கன்னா, நீங்க தேவன புறக்கணிச்சு எதிர்க்கக்கூடும்!
அதுக்கப்புறமா மின்டி கொஞ்சம் ஐக்கியத்தப் பகிர்ந்துகிட்டாங்க. அவங்க, “சர்வவல்லமையுள்ள தேவனோட தோற்றமும் கிரியையும் வேதாகமத்தோட தீர்க்கதரிசனங்கள முழுசா நிறைவேத்துது. அவர்தான் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு” அப்படின்னு சொன்னாங்க. “பல சபைப் பிரிவுகளச் சேர்ந்த நெறைய உண்மையான விசுவாசிங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சிருக்காங்க, அவை சத்தியம்ங்கறதயும் தேவனோட சத்தம்ங்கறதயும் பாத்திருக்காங்க, அவங்க சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நேரா திரும்பியிருக்காங்க. அவரோட கிரியையும் வார்த்தைகளும் முழு மத உலகத்தயும் அசைச்சிருக்கு. மதகுருமார்கள் இதப் பத்தி நிச்சயமாக கேள்விப்பட்டிருக்கணும், அப்படின்னா அவங்க ஏன் அத ஆராய்ஞ்சுப் பாக்கல, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிக்கல? அவங்க ஏன் அத எதிர்க்கறதுக்கு வலியுறுத்துறாங்க? கர்த்தராகிய இயேசு நோயாளிகளக் குணமாக்கினாருன்னும், பிசாசுகளத் துரத்தினாருன்னும், மனந்திரும்புதலுக்கான வழிய பிரசங்கிச்சாருன்னும், அது தேவனிடத்திலிருந்து வந்ததுன்னும் பரிசேயர்களுக்குத் தெரியும், ஆனா அவங்க வேணும்னே அவரை மறுத்து, அவரை ஒரு நசரேயன்னும், தச்சனின் மகன்னும் சொன்னாங்க. அவரை வெறித்தனமா எதிர்த்து கண்டனம் செஞ்சாங்க, ரோம அரசாங்கத்தோட சேர்ந்து அவரை சிலுவையில அறைஞ்சாங்க. அவங்க கிறிஸ்துவ மறுத்து கண்டனம் செஞ்சாங்க. அவங்க அவரோட எதிரிகளா இருந்தாங்க. அவங்க தேவனோட கிரியையால அம்பலப்படுத்தப்பட்ட அந்திக்கிறிஸ்துகளா இருந்தாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல தோன்றியிருக்கறாரு, நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்ய அவர் சத்தியங்கள வெளிப்படுத்துறாருங்கறது இப்ப போதகர்களுக்கும் மூப்பர்களுக்கும் தெரியும். அவங்க அத ஆராய்றதுக்கு மறுக்கறது மட்டுமில்லாம, சர்வவல்லமையுள்ள தேவன மறுத்து கண்டனம் செய்றதுக்கு வதந்திகளயும் பரப்புறாங்க. அவங்களோட திருச்சபைகள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய அவதிக்கற சிசிபியோட வதந்திகளயும் பொய்களயும் அவங்க பரப்புறாங்க, அவர எதிர்க்க நாத்திகக் கட்சிகளுடான சக்திகளோட அவங்க இணையுறாங்க. கர்த்தராகிய இயேசுவ எதிர்த்த பரிசேயர்களிடமிருந்து அவங்க எந்தவிதத்திலாவது வேறுபட்டவங்களா இருக்காங்களா? வேதாகமம் சொல்லுது ‘மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்’ (2 யோவான் 1:7). ‘மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது’ (1 யோவான் 4:3). மதகுருமார் கடைசி நாட்களின் கிறிஸ்துவ கண்டனம் செஞ்சி, தேவன பிடிவாதமா எதிர்க்கறதன் மூலமா கிறிஸ்துவ மறுக்கறாங்க. அவங்க கடைசி நாட்களின் தேவனோட கிரியையினால அம்பலப்படுத்தப்பட்ட அந்திக்கிறிஸ்துகளா இருக்கலயா?”
மின்டி அவங்களோட ஐக்கியம் என்னோட குழப்பங்கள கடைசில தெளிவுபடுத்துச்சு. மதகுருமார்களுக்கு கிறிஸ்துவப் பத்தியோ மனுவுருவாதலப் பத்தியோ எதுவுமே தெரியாதுங்கறத நான் உணர்ந்தேன். அவங்க கர்த்தராகிய இயேசுவ விசுவாசிக்கறாங்க, ஆனா அவரோட சாராம்சத்தப் பத்தி அவங்களுக்கு சுத்தமா தெரியல. கர்த்தராகிய இயேசு மாம்சத்தில கிரியை செய்ய திரும்பி வந்திருக்கறாரு, அதிகதிகமான சத்தியங்கள வெளிப்படுத்தறாரு, ஆனா அவங்க அத ஆராய்ஞ்சுப் பாக்குறதுமில்ல, அவரை அங்கீகரிக்கறதும் இல்ல. அவங்க அவரை பொறுப்பில்லாம கண்டனம் செஞ்சு எதிர்க்க மட்டுமே செய்யறாங்க. என்னால அவங்கள அதுக்குமேல பின்பற்ற முடியாதுன்னும், ஆனா சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டு, தேவனோட அடிச்சுவடுகளப் பின்பற்ற வேண்டியிருந்தததுன்னும் எனக்குத் தெரியும். என்னோட போதகர் என்ன செஞ்சாலும் சர்வவல்லமையுள்ள தேவனப் பின்பற்ற நான் முடிவு செஞ்சேன்.
சர்வவல்லமையுள்ள தேவன் மேல எனக்கிருந்த விசுவாசத்த என்னோட போதகர் கொஞ்ச நாட்கள்லயே கண்டுபிடிச்சுட்டாரு. அவர் உடனடியா கோபப்பட்டு, சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கறதுக்காக என்னையத் திட்டுனாரு. நான் ஒரு மனுஷன விசுவாசிப்பதாவும், அது தவறுன்னும், என்னோட மனச மாத்துறதுக்கு என்னோட கணவர் முயற்சிக்கணும்னும் அவரு சொன்னாரு. போதகரோட பொய்களப் பத்திய எந்தப் பகுத்தறிவும் என்னோட வீட்டுக்காரருக்கு இல்ல, அதனால அவரு என்னோட விசுவாசத்தத் தடுக்க ஆரம்பிச்சாரு. அவரு வேற ஒரு நபராக இருந்த மாதிரி இருந்துச்சு. நான் கூடுகையில இருக்கறத அவர் கண்டுபிடிச்சப்பவெல்லாம் அவர் கோபப்பட்டு, பொருட்களத் தூக்கி எறிவாரு, என்னோட விசுவாசத்தக் கைவிடுமாறு என்னைய கட்டாயப்படுத்த முயற்சித்து எங்கக் குடும்பத் தொழிலக்கூட அவர் புறக்கணிச்சாரு. அது எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. போதகரோட மனைவியும் என்னையத் தடுக்க முயற்சி செஞ்சாங்க. அவங்க ஒரே நேரத்தில மணிக்கணக்கா எங்க வீட்டிலயே தங்கியிருப்பாங்க, நான் அவங்களோட இருக்க வேண்டியதிருந்ததால, தேவனோட வார்த்தைகள என்னால வாசிக்க முடியல. வீட்டு வேலையக் கூட செய்ய முடியல. அது எல்லாம் எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு.
போதகரோட செயல்பாடுகள் உண்மையிலயே என்னையப் பைத்தியமாக்கிடுச்சு. அவரு கர்த்தரோட வருகைய ஆராய்ஞ்சுப் பாக்கல, மெய்யான வழிய ஏத்துக்க விடாம தடுக்க பொய்களக் கொண்டு என்னைய ஏமாற்ற அவர் முயற்சித்தாரு. நான் தேவனோட இரட்சிப்ப இழந்துபோகும்படியா என்னையத் தடுக்க என்னோட கணவரயும் கூட அவர் பயன்படுத்துனாரு. எவ்வளவு இழிவானது! கர்த்தராகிய இயேசு பரிசேயர்கள அம்பலப்படுத்தி கண்டனம் செஞ்சத நான் நெனச்சுப் பாத்தேன்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை” (மத்தேயு 23:13). நவீனகால போதகர்களும் மூப்பர்களும் அந்த மாதிரியே இருக்கறத நான் உணர்ந்தேன். அவங்க தேவனோட சத்தத்க் கேட்டு கர்த்தர வரவேற்கறதில்ல, கர்த்தர வரவேற்று தேவனோட ராஜ்யத்துல பிரவேசிக்க விரும்பற நம்மளப் போன்றவங்களத் தடுக்க அவங்க பொய்களப் பரப்புறாங்க. நாம அவங்களோட நரகத்துப் போய் தண்டிக்கப்படணும்னும், அவங்களோடவே புதைக்கப்படணும்னும் அவங்க விரும்புறாங்க. அவங்க ராஜ்யத்துக்கான பாதையில நமக்குத் தடைக்கல்லா இருக்கறாங்க. அவங்க ஆத்துமாவை விழுங்கும் அந்திக்கிறிஸ்துகளாவும் பிசாசுகளாவும் இருக்காங்க! சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுறாரு: “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). போதகரோட மாயையான, சத்தியத்த வெறுக்கற சராம்சத்த நான் புரிஞ்சுக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனப் பின்பற்ற இன்னும் அதிகமா ஊக்கமானேன். நான் எப்பவுமே போதகர்கள வணங்குனேன், வேதாகமத்த அறிஞ்சு தேவனுக்கு ஊழியஞ் செய்யுற இவங்க விசுவாசிகள தேவனோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க விடாம தடுக்கற உண்மையிலயே சத்தியத்த வெறுக்கற அந்திக்கிறிஸ்துகளா இருக்காங்கங்கறத நான் ஒருபோதும் கற்பனை செஞ்சு பாக்கல. சர்வவல்லமையுள்ள தேவன் மாம்சத்தில தோன்றி கிரியை செய்து, திருச்சபைகள்ல மறைஞ்சிருக்கற இந்தப் பொல்லாத ஊழியக்காரர்களயும் அந்திக்கிறிஸ்துகளயும் வெளிப்படுத்தாம இருந்திருந்தா, அத அறிஞ்சுக்கவிடாமலயே போதகர்கள் என்னைய அழிச்சிருந்திருப்பாங்க. நான் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டது தேவனோட இரக்கமும் இரட்சிப்பும்தான்!
அதுக்கப்புறமா, நான் தேவன சார்ந்திருந்து, சாட்சியா நின்னேன், என்னோட கணவர் என்னையத் தடுக்கறத நிறுத்திட்டாரு. நான் இப்போ சகோதர சகோதரிகளோடு கூடுகைகள்ல கலந்துக்கிட்டு, திருச்சபையில என்னோட கடமையச் செய்யறேன். நான் சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் நெறஞ்சிருக்கறேன். சர்வவல்லமையுள்ள தேவனுக்கே நன்றி!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
By Mengai, Taiwan சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயத்தீர்ப்பின் யுகத்தை முடித்துவைத்து...
By Danchun, the United States சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய...
ஜெங்சின், ஆஸ்திரேலியா ஆசிரியரின் குறிப்பு: இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவனை விசுவாசிக்கும் அனைவரும் வழிபாட்டு முறைமை, பாவசங்கீர்த்தனம்,...
By Jack, Canada சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால்...