கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருந்ததிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்

ஜனவரி 7, 2023

நான் ஒரு வீட்டுத் திருச்சபையில சக ஊழியரா இருந்தேன். 2000 ல ஒரு நாள், மேல்மட்டத் தலைவர்கள் ஒரு சக ஊழியர் கூட்டத்தக் கூட்டினாங்க. அவங்க, “கடைசி நாட்கள்ல, ஜனங்கள வஞ்சிப்பதற்கு கள்ளக்கிறிஸ்துகள் தோன்றுறாங்க. சிலர் கிழக்கத்திய மின்னல பிரசங்கம் பண்றாங்க, அவங்களோட பிரசங்கம் ரொம்ப நவீனமா தெரியுது. சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுன்னும் சொல்றாங்க. அவங்களுக்கு செவிகொடுக்காதீங்க, அவங்களோட தொடர்பும் வச்சுக்காதீங்க. கிழக்கத்திய மின்னல சேர்ந்தவங்க ஆடுகள திருட திருச்சபைக்குள்ள நுழைவத தடுக்க நீங்க கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள எடுக்கணும். வேதாகமம் தெளிவா சொல்லுது, ‘அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்(மத்தேயு 24:23-24). இந்த வசனங்கள்தான் கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கான அடையாளம். கடைசி நாட்கள்ல, கள்ளக்கிறிஸ்துகள் தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள வஞ்சிக்க மாபெரும் அற்புதங்களச் செய்வாங்க, அதனால நாம விசுவாசத்தில உறுதியான அஸ்திபாரத்தப் போட்டு, கிழக்கத்திய மின்னலின் பிரசங்கங்களுக்கு செவிகொடுக்கக்கூடாதுன்னும் அது விசுவாசிகள எச்சரிக்குது. மற்றபடி, நீங்க கள்ளக்கிறிஸ்துகள பின்பற்றினா, கர்த்தர வரவேற்கும் உங்க வாய்ப்ப இழந்து போயிருவீங்க” அப்படின்னு சொன்னாங்க. சக ஊழியர்கள் எல்லோரும் இந்தக் காரியத்தக் குறிச்சு விவாதிச்சு, கர்த்தர் வர்ற வரைக்கும் மந்தைய அவங்க பாதுகாக்கணும்னு சொன்னாங்க. நாமும் கர்த்தர வரவேற்கிறதுல அவசரமா செயல்படக் கூடாது, கள்ளக்கிறிஸ்துகளக் குறிச்சி எச்சரிக்கையா இருக்கணும், இல்லைனா நாம வஞ்சிக்கப்பட்டுருவோம்னும் நெனச்சேன். அடுத்த நாள், நான் தலைவர்களோட அறிவுறுத்தல்கள பின்பற்றி, என் பொறுப்பில் இருந்த கூட்ட இடங்களுக்குப் போய், கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிரா எச்சரிக்கையா இருக்கும்படிக்கும், அந்நியர்கள, குறிப்பா கிழக்கத்திய மின்னல பிரசங்கிக்கிறவங்கள ஏத்துக்க வேண்டாம்னும் வலியுறுத்தினேன். அவங்க உயர்மட்ட சக ஊழியர்களா இருந்தாலும், அவங்க தேவன் புதிய கிரியைய செய்ய வந்திருக்கார்னு பிரசங்கிச்சா, அவங்கள ஏத்துக்கக்கூடாது. இல்லன்னா, கள்ளக்கிறிஸ்துகளால வஞ்சிக்கப்பட்டவங்க கர்த்தர விணாக விசுவாசிச்சிருப்பாங்க. அந்த நேரத்தில, எல்லாருமே நாங்க கிழக்கத்திய மின்னலின் பிரசங்கங்களுக்கு ஒருபோதும் செவிகொடுக்க மாட்டோம்னு சொன்னாங்க.

ஒரு சில மாசங்களுக்கப்புறமா, எங்களுடைய ரெண்டு உயர்மட்ட சக-ஊழியர்கள் கிழக்கத்திய மின்னல ஏத்துக்கிட்டாங்கன்னு எங்கள் தலைவர்கள் சொன்னாங்க, நாங்க வஞ்சிக்கப்படாதபடிக்கு அவங்கள ஒருபோதும் ஏத்துக்கக்கூடாதுன்னும் எங்க தலைவர்கள் சொன்னாங்க நான் நெனச்சேன், “அவங்க வேதாகமத்த நன்கு அறிஞ்சிருந்த உயர்மட்ட சக ஊழியர்கள். நாங்க கிழக்கத்திய மின்னலோடு தொடர்புகொள்வத அவங்க தட செஞ்சாங்க. அவங்களால எப்படி அத ஏத்துக்க முடிஞ்சது?” எனக்குப் புரியல, ஆனா அதுக்கப்புறமா மீண்டும், அவங்க என்ன செஞ்சாலும், நான் கர்த்தரோட வழியில நடந்து மந்தைய பாதுகாக்க வேண்டியதா இருந்துச்சு. அதற்கப்புறம், அந்த ரெண்டு உயர்மட்ட சக-ஊழியர்களையும் ஏத்துக்கக்கூடாதுன்னு நான் கூடுகையில சகோதர சகோதரிகள்கிட்ட சொன்னேன். ஒரு நாள், சக ஊழியரான சியாவோ அவர்கள் ஒரு சகோதரரோட என் வீட்டுக்கு வந்தாரு, நான் உடனே எச்சரிக்கையானேன். சக ஊழியரான சியாவோ கிழக்கத்திய மின்னல ஏத்துக்கிட்டதாவும், அவரால நான் வஞ்சிக்கப்பட்டு கர்த்தர காட்டிக் கொடுக்கக்கூடாதுன்னும் உயர்மட்டத் தலைவர்கள் சொல்லியிருந்தாங்க. அதனால, அன்னைக்கு அவங்க என்கிட்ட எப்படி ஐக்கியப்பட்டப்பவும், நான் அவங்கள கண்டுக்காம அலட்சியப்படுத்தினேன். கடைசில, அவங்களுக்கு வெளியேறுவதத் தவிர வேறு வழியில்லாம இருந்துச்சு. அவங்க போனதப் பாத்ததும், நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நான் அவங்களால வஞ்சிக்கப்படலன்னு சந்தோஷப்பட்டேன். அதுக்கப்புறம், எங்க திருச்சபைய சேர்ந்த சகோதரர் ஜாங் மிங்கி அவர்களும் என்கிட்ட சுவிசேஷத்த பிரசங்கிக்க வந்தாங்க, ஆனா நான் மறைஞ்சிக்கிட்டு, அவர சமாளிக்குமாறு என் மனைவிகிட்ட கேட்டுக்கிட்டேன், வஞ்சிக்கப்படுவத தவிர்க்க அவரோட ஐக்கியத்துக்கு செவிகொடுக்க வேண்டாம்னும் அவகிட்ட சொன்னேன். அதுக்கப்புறம், எங்க திருச்சபையில சூழ்நில ரொம்ப மோசமாயிக்கிட்டே இருந்துச்சு. எங்க பிரசங்கியார் ஆர்வமில்லாம பேசினாரு, புதிய வெளிச்சத்தக் கொண்டு வர முடியல, எங்ககிட்ட பரிசுத்த ஆவியானவரோட கிரிய இல்லாம இருந்துச்சு. சகோதர சகோதரிகள் வாழ்வின் ஆதாரத்தப் பெறல, ஆவிக்குரிய ரீதியா அவங்க எல்லாரும் இருளாவும், மந்தமாவும், பலவீனமாவும் இருந்தாங்க, அவங்க கூடுகைகள்ல கலந்துக்க விரும்பல. அவங்கள்ல பெரும்பாலானவங்க விதிமுறைகள மட்டுமே பின்பற்றினாங்க, உரையாடலின் மையம் குடும்பம், வேலை, போன்றவையாவே இருந்துச்சு. நான் குழப்பமடைஞ்சேன். பரிசுத்த ஆவியானவரோட வழிநடத்துதல ஆரம்பத்துல இருந்து கொண்டிருந்த ஒரு திருச்சப ஏன் இந்த மாதிரி ஆச்சுன்னு எனக்குத் தெரியல, ஆனா எனக்கு மூலக் காரணமோ அல்லது தீர்வோ தெரியல. கர்த்தரோட போதனைய கடைபிடிச்சு, கர்த்தர் வர்றதுக்காக காத்திருக்கணும்னு மட்டுமே எனக்குத் தெரிஞ்சிருந்துச்சு.

ரெண்டு வருஷங்களுக்கப்புறமா, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேஷத்த அதிகதிகமான பேர் என்னிடம் பிரசங்கிச்சாங்க. அவங்க, “கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்(மத்தேயு 7:7). நாம தேடி ஆராஞ்சதுக்கப்புறமாதான் அது மெய்யான வழியான்னு நம்மால அறிஞ்சுக்க முடியும். நாம தேடலன்னா, நம்மால எப்படி கர்த்தர வரவேற்க முடியும்?” அப்படின்னு ஐக்கியப்பட்டாங்க. அந்த நேரத்தில, அவங்க சொன்னது சரின்னு நான் நெனச்சேன், ஆனா கள்ளக்கிறிஸ்துகளால வஞ்சிக்கப்பட்டு விடுவோமோன்னு நான் பயந்தேன், அதனால “கர்த்தர் புதிய கிரியைய செய்ய வந்திருக்காருன்னு பிரசங்கிக்கிற யாருக்கும் நான் செவிகொடுக்க மாட்டேன்” அப்படின்னு முடிவெடுத்தேன். அப்படியே, திருடர்களுக்கு எச்சரிக்கையா இருக்கறது போலவே ஒவ்வொரு நாளையும் செலவழிச்சேன். சுவிசேஷகர்கள் வர்றத பாத்து ஓடி ஒளிஞ்சேன், ஆனா அவங்க எப்பவும் போல சுவிசேஷத்த பிரசங்கிக்க என் வீட்டுக்கு அப்பவும் வந்துக்கிட்டே இருந்தாங்க. நான் நெனச்சேன், “நான் எப்படி மறுத்தாலும், அவங்க இன்னும் வர்றாங்க. அவங்களால எப்படி இவ்ளோ விசுவாசத்தயும் அன்பயும் கொண்டிருக்க முடியுது?” நான் கொஞ்சம் சுய கடிந்துகொள்ளுதல உணர்ந்தேன். அவங்க ஜனங்கள் மீது ரொம்ப அன்பு வச்சிருந்தாங்க, ஆனாலும் நான் அவங்கள அப்பவும் இப்படியே நடத்தினேன். இது கர்த்தரோட சித்தத்துக்கு இணக்கமா இல்ல. ஆனா அதுக்கப்புறம் மீண்டும், நாங்க கிழிக்கத்திய மின்னலின் பிரசங்கங்களுக்கு செவிகொடுக்கக்கூடாதுன்னு எங்கள் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினாங்க. நான் வஞ்சிக்கப்பட்டா, கர்த்தர விசுவாசிச்சு பல வருடங்களா சகிச்ச துன்பம் வீணாயிருக்கும். நான் கர்த்தரோட வழிய கடைபிடிச்சு, வேற சுவிசேஷத்த ஒருபோதும் ஏத்துக்காம இருக்க வேண்டியிருந்துச்சு. யார் பிரசங்கிக்க வந்தாலும், என்னால செவிகொடுக்க முடியல. அதனால, நான் ஒருபோதும் கிழக்கத்திய மின்னலின் பிரசங்கங்கள தேடவோ ஆராயவோ இல்ல.

அதுக்கப்புறமா, என் திருச்சபைய சேர்ந்த பல சகோதர சகோதரிகள் சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்டாங்க, என் மனைவி கூட ஏத்துக்கிட்டா. கர்த்தராகிய இயேசுவ விசுவாசிப்பதுங்கிறது தேவனோட மீட்பின் கிரியைய மட்டுமே ஏத்துக்கிறதுன்னு அர்த்தம்னு அவங்க அடிக்கடி என்கிட்ட சொன்னாங்க. கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நாம கடைப்பிடிக்கலன்னா, நாம உண்மையில தேவன விசுவாசிகல, அதோட நாம ஆட்டுக்குட்டியானவரோட அடிச்சுவடுகள பின்பற்றல. நான் அசைக்கப்பட்டேன். இத்தன வருஷங்களா, திருச்சபை மேலும் மேலும் பாழடைஞ்சு போயிருந்துச்சு, பலரும் எதிர்மறையாவும் பலவீனமாவும் இருந்தாங்க, அவங்களோட விசுவாசம் தணிஞ்சுப்போச்சு, சக ஊழியர்கள் கூட கூடுகைகளுக்கு வரல, திருச்சபையில அதுக்குமேல பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்ல. ஆனா சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபைய சேர்ந்தவங்க என்னிடம் சுவிசேஷத்த பிரசங்கிச்சிக்கிட்டு இருந்தாங்க, நான் அவங்கள எப்படி மறுத்தாலும், அவங்க அப்பவும் வந்துக்கிட்டுதான் இருந்தாங்க. பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்லன்னா, அவங்களால எப்படி இவ்ளோ பெரிய அன்பயும் பொறுமையயும் கொண்டிருக்க முடியும். கிழக்கத்திய மின்னல் உண்மையிலே தேவனோட கிரியைதானா? உண்மய கண்டறிவதற்கு, என் மனைவி வீட்டில இல்லாதப்ப நான் இரகசியமா சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சேன். ஒரு நாள், நான் இந்தப் பத்திய வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசுவை விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களைச் சபிக்கவோ கண்டிக்கவோ தகுதி பெறவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உனது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீ நம்பினால், பின்னர் இந்த வார்த்தைகளின் 10,000வது வார்த்தையில் நீ தொடர்ந்து தேட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உன்னை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் இன்னும் உனக்கு அறிவுறுத்துகிறேன். தேவனிடம் இத்தகைய அற்ப பயபக்தியை உனது இருதயம் கொண்டிருப்பதால், நீ மாபெரும் வெளிச்சத்தைப் பெறுவாய். இந்த வார்த்தைகளை நீ கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், அவை ஜீவனா இல்லையா என்பதையும் நீ புரிந்துகொள்வாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைய வாசிச்சதுக்கப்புறமா, என் இருதயம் கலங்குச்சு. அது உண்மையா இருந்துச்சு. கர்த்தரின் விசுவாசியா, நான் பகுத்தறிவயும், தேடுவதற்கான தாழ்மையயும் கொண்டிருக்கணும். நான் யாரயும் நியாயந்தீர்க்கவோ கண்டனம் செய்யவோ தகுயுள்ளவனா இருக்கல. பல வருடங்களா, பலரும் எனக்கு சுவிசேஷத்தப் பிரசங்கிச்சிருக்காங்க, தேவன் ஒரு புதிய கட்ட கிரியைய செய்றாருன்னு சாட்சி பகர்ந்திருக்காங்க, ஆனா நான் அத ஏத்துக்கல, தேடுவதுக்கான தாழ்மை முற்றிலும் இல்லாதவனா இருந்தேன். அது என் கருத்துகளுக்குப் பொருந்தினாலும் பொருந்தாம போனாலும், நான் தாழ்மையா தேடியிருக்கணும். இந்தப் பத்தாயிரம் வார்த்தைகள்ல ஒண்ணே ஒண்ணு மட்டும் வேதாகமத்துக்கு இணக்கமா இருந்திருந்தா, இந்தப் பத்தாயிரத்தல இந்த ஒண்ண நான் தேடி ஆராஞ்சிருக்கணும், அத மறுத்திருக்கக்கூடாது. என் மனைவி சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிச்சதுக்கப்புறமா, அவளோட நிலை குறிப்பிடத்தக்க அளவு எப்படி மேம்பட்டிச்சுங்கிறதயும் நான் யோசிச்சுப் பாத்தேன். அவள் தினமும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சு, கூட்டங்கள்ல சுறுசுறுப்பா கலந்துக்கிட்டு, சுவிசேஷத்தப் பிரசங்கிச்சா. நான் தவறா இருக்கிறேனோன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன்தான் உண்மையிலே திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவா இருப்பாரோ? அடுத்த முற யாராச்சும் ஒருத்தர் என்கிட்ட சுவிசேஷத்த பிரசங்கிச்சா, நான் மறுக்கக்கூடாதுன்னு தீர்மானிச்சேன்.

ஒரு நாள், சகோதரர் லின் முக்வாங் அவர்கள் என்கிட்ட மீண்டும் சுவிசேஷத்தப் பிரசங்கிக்க வந்தாரு. அந்த நேரத்தில, அவர் என்கிட்ட கேட்டாரு, “உங்களோட ஆவிக்குரிய நில இப்போ எப்படி இருக்கு?” நான் உதவியற்ற விதத்தில சொன்னேன், “என் ஆவி அந்தகாரத்தில இருக்கு, என்னால பிரசங்கங்கள பிரசங்கிக்க முடியல, என்னோட சகோதர சகோதரிகளாலும் போஷிப்பப் பெற முடியல. கரத்தர் எங்கள பரலோகராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கிறதுக்காக காத்திருப்பத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.” முக்வாங் சொன்னார், “கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்(யோவான் 4:14). தேவனே வாழ்க்கையோட ஆதாரமாவும், முடிவில்லாதவராவும், வற்றாதவராவும் இருக்காரு, கர்த்தர விசுவாசிக்கிறவங்களுக்கு, தாகமில்லாம, ஜீவத் தண்ணீரோட ஊற்றிலிருந்து வழங்கப்படணும், ஆனா இப்போ, உங்கப் பிரசங்கத்தில புதிய ஒளியே இல்ல, சகோதர சகோதரிகள் ஆவிக்குரிய ரீதியா தாகமாவும், மந்தமாவும், பலவீனமாவும் இருக்காங்க. திருச்சபையில அதுக்குமேல பரிசுத்த ஆவியானவரின் கிரியையே இல்லங்கிறது தெளிவா தெரியுது. அதனால, நீங்க கர்த்தரின் வருகைக்காக காத்திருக்கிறது அவருடைய சித்தமா இருக்குமா? நீங்க கர்த்தரால கைவிடப்பட மாட்டிங்கங்கிற நிச்சயம் உங்களுக்கு இருக்கா?” முக்வாங் அவர்களோட கேள்விகள் என்னை வாயடச்சுப் போகச் செய்துச்சு. கர்த்தருக்காக இப்படிக் காத்திருக்கிறது சரியா படல, ஆனா நான் கர்த்தராகிய இயேசுவோட போதனைகளிலும் நிலச்சிருந்தேன். அதனால, நான் சொன்னேன், “வேதாகமம் தெளிவா சொல்லுது, ‘அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்(மத்தேயு 24:23-24). கடைசி நாட்கள்ல, கள்ளக்கிறிஸ்துகள் தோன்றி, கர்த்தர் வந்திருக்கார்னு சொல்ற யாரும் பொய்யானவங்க அப்படின்னு இந்த இரண்டு வசனங்களும் நமக்குத் தெளிவா சொல்லுது. நான் கர்த்தரோட போதனைகள பின்பற்றுறேன். கர்த்தரோட வருகைய மத்தவங்க பிரசங்கிக்கிறப்ப நான் அத ஆராயாம இருக்கிறதுல உண்மையில ஏதாவது பிரச்சன இருக்கா?” முக்வாங் சொன்னாரு, “கர்த்தராகிய இயேசு தாம் கடைசி நாட்கள்ல திரும்பி வருவேன்னு தெளிவா சொல்லுறாரு, ஆனா கர்த்தர் வந்திருக்கிறார்னு சொல்லுற யாரும் பொய்யானவங்கன்னு நீங்க சொல்லுறீங்க. இது கர்த்தரோட வார்த்தைகள மறுக்கிறதாவும், கடைசி நாட்கள்ல அவரோட வருகைய மறுக்கிறதாவும் கண்டனம் செய்றதாவும் இல்லயா? கடைசி நாட்கள்ல கர்த்தரோட வருகைய பத்தி சிந்திப்போம். கள்ளக்கிறிஸ்துகள் தோன்றுறதனால, கிறிஸ்து நிச்சயமா வருவார்ங்கிறதுதான் இதுக்கு அர்த்தம். நாம கண்மூடித்தனமா கள்ளக்கிறிஸ்துகளுக்கு எச்சரிக்கையா இருந்து, கர்த்தராகிய இயேசு மனுவுருவானவரா திரும்பிவரும்போது நாம செவிகொடுக்கவோ அல்லது வாசிக்கவோ மறுத்தா, நாம கர்த்தராகிய இயேசுவுக்கு கதவுகள பூட்டுவதா இருக்காதா? நம்மால எப்படி கர்த்தர அவ்விதமா வரவேற்க முடியும்? கடைசி நாட்கள்ல கள்ளக்கிறிஸ்துகள் தோன்றுவத எதிர்கொள்றதுக்கு, வஞ்சிக்கப்படுவோம்னு பயப்படுறதுனால மட்டுமே பிரயோஜனமில்ல. மெய்யான கிறிஸ்துவையும் கள்ளக்கிறிஸ்துகளையும் பகுத்தறியக் கத்துக்கறதே முக்கியமானது. இது கள்ளக்கிறிஸ்துகளால வஞ்சிக்கப்படுவதிலிருந்து உங்கள பாதுகாக்கும்.” அது முற்றிலும் சரிதான். அவற்ற பகுத்தறிய கத்துக்கறதே முக்கியமானது!

நான் இதக் கேட்டப்ப என் இருதயம் பிரகாசமடஞ்சுது. அவரோட ஐக்கியம் அறிவூட்டுச்சு. நான் கண்மூடித்தனமா எச்சரிக்கையா இருந்து, கள்ளக்கிறிஸ்துகளுக்கு பயந்து, செவிகொடுக்கவோ, தேடவோ அல்லது ஆராயவோ மறுத்து, சர்வவல்லமையுள்ள தேவன்தான் உண்மையிலே திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவா இருந்தா, பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்குற வாய்ப்ப நான் இழக்கமாட்டனா? அதனால, நான் துரிதமா கேட்டேன், “அப்படின்னா கள்ளக்கிறிஸ்துகள நம்மால எப்படி பகுத்தறிய முடியும்?” முக்வாங் சொன்னார், “வேதாகம தீர்க்கதரிசனங்கிறது ஜனங்களுக்கு கர்த்தராகிய இயேசுவோட எச்சரிக்கை. கடைசி நாட்கள்ல, ஜனங்கள வஞ்சிக்க கள்ளக்கிறிஸ்துகள் தோன்றுவாங்க, ஆனா அதக் பகுத்தறியறதுக்கான ரொம்ப முக்கியமான கோட்பாடுகள்ல ஒண்ண கர்த்தராகிய இயேசு நமக்கு சொல்லியிருக்காரு, கள்ளக்கிறிஸ்துகள் அற்புதங்களயும் அடையாளங்களயும் செய்றதன் மூலமா ஜனங்கள வஞ்சிப்பாங்கங்கிறதுதான் அது. கடைசி நாட்கள்ல கிறிஸ்து அற்புதங்கள் இல்லாம வர்றாருங்கிறதுல தெளிவா இருக்கணும், ஏன்னா தேவனோட கிரியை எப்பவும் புதிதாவே இருக்கு, ஒருபோதும் பழையதா இருக்கிறதில்ல, ஒருபோதும் திரும்பவும் செய்யப்படுறதுமில்ல. அது எப்பவுமே புதிதாகவும், உயர்வான கிரியையாவும் இருக்கு. நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்றதுக்கு சத்தியத்த வெளிப்படுத்தி. மனுக்குலத்த முழுமையா சுத்திகரிச்சு இரட்சிக்கறதுக்குத்தான் கடைசி நாட்கள்ல கிறிஸ்து வர்றாரு. ஆனா கள்ளக்கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் தேவனோட சாராம்சத்தக் கொண்டிருப்பதில்ல. அவங்க எல்லாருமே பொல்லாத ஆவிகள். அதனால, அவங்ககிட்ட சத்தியம் இருப்பதே இல்ல, அவங்களால சத்தியத்த வெளிப்படுத்த முடியாது. ஜனங்கள வஞ்சிக்க அவங்களால கர்த்தர பாசாங்கு செஞ்சு அற்புதங்கள செய்ய மட்டுமே முடியும். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நாம வாசிச்சா நமக்குப் புரியும். ‘இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். … மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்’” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்”). முக்வாங் அவர்கள் தொடர்ந்து பேசினாங்க, “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்கு. தங்கள திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுன்னு சொல்லிக்கிட்டு, அற்புதங்கள செஞ்சி, பிணியாளிகள சுகமாக்கி, பிசாசுகள துரத்துறவங்க நிச்சயமா கள்ளக்கிறிஸ்துகளா இருக்காங்க, ஏன்னா கர்த்தராகிய இயேசு ஏற்கனவே அந்த மாதிரியான கிரியைய செய்திட்டார், தேவனோட கிரிய மீண்டும் செய்யப்படுறதில்ல. கர்த்தராகிய இயேசு கிரியயை செய்ய வந்தப்ப, அவர் நியாயப்பிரமாண காலத்து கிரியைய திரும்பச் செய்யல. மாறா, இரட்சிப்பின் கிரியைக்கான தேவனோட திட்டத்துக்கு ஏற்பவும், மனுக்குலத்தோட தேவைகளின் அடிப்படையிலும், அவர் மீட்பின் கிரியைய செய்தார். அவரு நித்திய பாவநிவாரணபலியாக மனுக்குலத்துக்காக தனிப்பட்ட முறையில சிலுவையில அறையப்பட்டாரு, பாவத்திலிருந்து மனுக்குலத்த மீட்டாரு, நியாயப்பிரமாணத்தின் காலத்த முடிச்சு, கிருபையின் காலத்தத் துவக்கினாரு. கடைசி நாட்கள்ல, தேவன் தோன்றி மாம்சத்தில் கிரியை செய்யறாரு, அங்கே அடையாளங்களும் அற்புதங்களும் இருப்பதில்ல. கர்த்தராகிய இயேசுவோட கிரியையின் அடிப்படையில, உயர்வான, ஆழமான ஒரு கட்ட கிரியைய செய்யறாரு, கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யறாரு, இதில அவரு ஜனங்களோட பாவங்கள நியாயந்தீர்த்து சுத்திகரிக்க சத்தியத்த வெளிப்படுத்தி, முழுமையா பாவத்திலிருந்து இரட்சிக்கிறாரு, இதன் மூலமா நம்மால தேவனிடத்துக்குத் திரும்பவும், அவரோட ராஜ்யத்திற்குள்ள பிரவேசிக்கவும் முடியும். சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியையானது கிருபையின் காலத்த முடிச்சு, ராஜ்யத்தின் காலத்தத் துவக்குது. இந்தக் கிரியை கர்த்தராகிய இயேசுவோட கிரியையிலிருந்து வித்தியாசமானது, அது மீண்டும் செய்யப்படுறதில்ல. இதன் மூலமா, தேவனோட கிரியை எப்பவும் புதுசாவே இருக்குமே தவிர, ஒருபோதும் பழசா இருப்பதில்லங்கறத நாம பாக்கலாம். இதுதான் தேவனோட கிரியையோட ரொம்ப வெளிப்படையான பண்பான புதுமையா இருக்கு. தேவன் அவரோட கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு புதிய யுகத்தைத் துவக்குறாரு, யுகத்திற்குப் பொருத்தமான பயிற்சி செய்யும் பாதையயும் திசையயும் ஜனங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறார், இதன் மூலமா படிப்படியா ஜனங்கள் பாவத்திலிருந்து முற்றிலுமா இரட்சிக்கப்பட்டு தேவனோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கிறாங்க. மாறாக, கள்ளக்கிறிஸ்துகளால சத்தியத்த வெளிப்படுத்தவோ புதிய கிரியைய செய்யவோ முடியவே முடியாது, நிச்சயமா ஜனங்கள சுத்திகரிக்கவோ இரட்சிக்கவோ முடியாது. கர்த்தராகிய இயேசு செஞ்ச கிரியைய அவங்களால பாசாங்கு செய்யவும், ஜனங்கள வஞ்சிக்க சின்ன சின்ன அற்புதங்களயும் அடையாளங்களயும் செய்யவும் மட்டுமே முடியும். சத்தியத்தின் இந்த அம்சத்த நாம புரிஞ்சுக்கிட்டதும், இந்தக் கோட்பாட்ல தேறினவர்களாகிருவோம், நாம அதற்குமேல கள்ளக்கிறிஸ்துகளால வஞ்சிக்கப்படுவோம்னு பயப்பட வேண்டியதில்ல.”

முக்வாங் அவர்களோட ஐக்கியத்த கேட்டதுக்கப்புறம், நான் திடீர்னு உணர்ந்தேன்: “தேவனோட கிரியையின் பண்பு புதுமையா இருக்கு. அது சரிதான். நியாயப்பிரமாண காலத்திலும் கிருபையின் காலத்திலும் தேவன் செஞ்ச கிரியை முற்றிலுமா வித்தியாசமா இருந்துச்சு. ஒன்னுல, ஜனங்கள் பூமியில வாழ அவர் வழிநடத்தினாரு, நியாயப்பிரமாணங்களயும் கற்பனைகளயும் கடைப்பிடிக்க அவங்களுக்குப் போதிச்சாரு, இன்னொன்னுல, மனுக்குலம் முழுவதயும் மீட்க அவரு சிலுவையில அறையப்பட்டாரு. கடைசி நாட்கள்ல தேவனோட கிரியையானது கர்த்தராகிய இயேசு செய்த கிரியையிலிருந்து நிச்சயமா வேறுபட்டதா இருக்குது. இது புதிய துவக்கப் புள்ளியிலிருந்து செய்யப்படுற புதிய கிரியையா இருக்கு. இந்த ஐக்கியம் ரொம்ப நடமுறையானதா இருக்கு.” இந்தக் கட்டத்தில, நான் அவரிடம் மனந்திறந்து சொன்னேன், “உங்க ஐக்கியம் ரொம்ப நடமுறையானதா இருக்கு, என்னால அத முழுவதுமா புரிஞ்சிக்க முடியுது. கள்ளக்கிறிஸ்துகளால புதிய கிரியைய செய்யவே முடியாது, ஜனங்கள வஞ்சிக்க அவங்களால அற்புத அடையாளங்கள செய்வதன் மூலமா தேவனோட கடந்தகால கிரியைய பாசாங்கு செய்ய மட்டுமே முடியும். ஆனா எனக்குப் புரியாத ஒரு காரியம் இன்னும் இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவன்தான் கடைசி நாட்களின் கிறிஸ்துவும், திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுவுமா இருக்காருங்கிறத நம்மால எப்படி உறுதிப்படுத்த முடியும்?”

முக்வாங் அவர்கள் சந்தோஷமா சொன்னாங்க, “உங்க கேள்வி ஒரு நல்ல கேள்வி. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளால நம்மோட எல்லா குழப்பங்களயும் தீக்க முடியும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைய வாசிச்சா நாம புரிஞ்சுக்குவோம்.” சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). “மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவனின் சாராம்சத்தையும், மனிதனால் அடைய முடியாத தேவனின் மனநிலையையும், அவருடைய கிரியையில் இருக்கும் ஞானத்தையும் அவர் கொண்டிருப்பதால் எதுவும் கூடுதலாக இல்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை ஒரு மனிதனால் பதிலீடுசெய்ய முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, முக்வாங் அவர்கள் ஐக்கியம் கொண்டாங்க, “சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுவாங்கிறத தீர்மானிக்க, வெளிப்புறத் தோற்றத்தக் காட்டிலும் நாம சாராம்சத்தப் பாக்கணும். பரலோகத்தில இருக்குற தேவன் பூமிக்கு வந்து, சாதாரண மாம்சத்தத் தரித்து, மனிதனா மாறி, ஜனங்களுக்கு மத்தியில தோன்றி கிரியை செய்றவரே கிறிஸ்து. வெளிப்புறத்தில, கிறிஸ்து ஒரு சாதாரண இயல்பான நபர், ஒரு சாதரண நபருக்குரிய வாழ்க்கை முறைகளயும், ஒரு சாதாரண நபருக்குரிய இன்பங்களயும் துன்பங்களயுமே அவர் கொண்டிருக்கிறாரு. மகிழ்ச்சியான காரியங்கள் அவர சந்தோஷப்படுத்துது, வேதனையான காரியங்கள் அவர துக்கப்படுத்துது. ஆனா அவரு எவ்வளவுதான் சாதாரண, இயல்பான கிறிஸ்துவா தோன்றினாலும், அவரோட வாழ்க்கயோட சாராம்சம் மனுஷங்க கிட்டயிருந்து முற்றிலுமா வேறுபட்டுருக்கு. கிறிஸ்து மாம்சம் தரித்த தேவனோட ஆவியானவரா இருக்காரு, தேவனோட ஆவியானவர் கிறிஸ்துவுக்குள்ள வாசம் செய்யறாரு, கிறிஸ்து முற்றிலும் தெய்வீகமானவரு, அதனால அவரால எந்த நேரத்திலயும் சத்தியத்த வெளிப்படுத்த முடியும், அவரால மனித சீர்கேட்ட வெளிப்படுத்தவும் பகுத்தறியவும் முடியும், ஜனங்களின் பாவங்கள போக்கவும், தேவனால இரட்சிக்கப்படவும் அவங்களுக்கான பாதையயும் திசையயும் அவரால சுட்டிக்காட்ட முடியும், அவரால மனுக்குலத்த முற்றிலுமா சுத்திகரிச்சு இரட்சிக்க முடியும். கிறிஸ்து வெளிப்படுத்துறது தேவனோட மனநிலையாவும், தேவன் என்ன கொண்டிருக்கிறாரு அதோட என்னவா இருக்காருங்கறது தான், அவர் செய்றது தேவனோட சொந்தக் கிரியையா இருக்கு. இவை எந்த மனுஷனும் கொண்டிருக்கவோ அடையவோ முடியாத காரியங்கள். கிருபையின் காலத்தில, தேவன் முதல் முறையா மனுவுருவானப்போ, வெளிப்புறத்தில, சமூக அந்தஸ்தோ அல்லது எந்த உயர்ந்த, மேன்மையான அந்தஸ்தோ இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில பிறந்த ஒரு சாதாரண, இயல்பான நபராவே இருந்தாரு, ஆனா கர்த்தராகிய இயேசுவோட சாராம்சமா தேவனே இருந்தாரு. அவரு நமக்கு பரலோகராஜ்யத்தோட சுவிசேஷத்தயும் மனந்திரும்புதலுக்கான வழியயும் தந்தார், ஜனங்கள போஷிப்பதுக்காகவும் வழிநடத்துவதுக்காகவும் அவரு எந்த நேரத்திலயும் எங்கயும் சத்தியத்த வெளிப்படுத்தினாரு, கடைசியா அவரு மனுக்குலத்துக்காக சிலுவையில அறையப்பட்டு எல்லா ஜனங்களயும் மீட்டாரு, அதனாலதான் ஜனங்களோட பாவங்கள் மன்னிக்கப்பட முடியுது, ஜனங்கள் உயிர்வாழவும் தொடர்ந்து முன்னேறவும் தகுதியானாங்க. கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள் மற்றும் கிரியை மூலமா, அவர்தான் கிறிஸ்துவாகிய மனுவுருவான தேவன் என்பதுல நம்மால முற்றிலுமா நிச்சயமுள்ளவங்களா இருக்க முடியுது. சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவாங்கிறத தீர்மானிக்க, நாம அவரோட வார்த்தைகளயும் கிரியையயும் ஆராய்றது மூலமாவும் அப்படிச் செய்யணும். கடைசி நாட்கள்ல, கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் கிரியையின் அடிப்படையில மில்லியன்கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தவும், ஆயிரக்கணக்கான வருஷங்களா மறைக்கப்பட்டிருக்கிற மனுவுருவாதலின் ரகசியங்கள், மூன்று கட்ட கிரியைகள், தேவனோட நாமங்கள், இன்னும் இது போல வேதாகமத்திலுள்ள ரகசியங்கள வெளிப்படுத்தவே சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்கிறாரு. சர்வவல்லமையுள்ள தேவன் நியாயந்தீக்கவும் சாத்தானால உண்டான மனுஷனோட சீர்கேடு பத்தின சாராம்சத்தயும் சத்தியத்தயும் வெளிப்படுத்தவும், உண்மையான மனந்திரும்புதல அடையறது எப்படி, இயல்பான மனிதத்தன்மையின்படி வாழ்றது எப்படி, தேவன் யார நேசிக்கிறாரு, யார வெறுக்கிறாரு, எந்த வகையான ஜனங்கள் இரட்சிக்கப்படுறாங்க, எந்த வகையான ஜனங்கள் புறம்பாக்கப்படுறாங்க, மனுக்குலத்தோட முடிவு மற்றும் சென்றடையும் இடம், ராஜ்யத்தோட அழகு போன்ற மனந்திரும்புதலோட பாதையயும் மாற்றத்தையும் சுட்டிக் காட்டுறாரு. மனுக்குலம் இரட்சிக்கப்படுவதுக்குத் தேவையான எல்லா சத்தியங்களயும் சர்வவல்லமையுள்ள தேவன் விவரிக்கிறாரு, இது மூலமா ஜனங்களுக்கு ஒரு பாதை கிடைக்குது, அவங்களால பாவத்தின் கட்டிலிருந்து விடுபடவும், மனநிலை மாற்றத்த அடையவும், தேவனால இரட்சிக்கப்படவும் முடியுது. இது கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகள முற்றிலுமா நிறைவேத்துது, ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). மேலும் வெளிப்படுத்தின விசேஷத்துல உள்ள தீர்க்கதரிசனம் சொல்லுது, ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்கள்). நாம இத கருத்தில கொள்வோம். சீர்கெட்ட முழு மனுக்குலத்திற்கு மத்தியில யாரால இந்தச் சத்தியங்களயும் ரகசியங்களயும் வெளிப்படுத்த முடியும்? ஜனங்கள முற்றிலுமா சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் நியாயத்தீர்ப்பின் கிரியைய யாரால செய்ய முடியும்? ஜனங்களின் முடிவ தீர்மானிக்கவும், அவங்களுக்கு ஒரு அழகான சென்றடையும் இடத்தக் கொடுக்கவும் யாருக்குத் திராணி இருக்கு? தேவனத் தவிர, யாருக்கும் இந்த அதிகாரமோ வல்லமையோ கிடையாது. இருதயமும் ஆவியும் உள்ளவங்க சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியவற்ற வாசிக்குறப்ப நம்புறாங்க, சர்வவல்லமையுள்ள தேவன் தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுன்னு இருதயத்தில நிச்சயமுள்ளவர்களாகுறாங்க. இது சந்தேகமற்றதா இருக்கு.” சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் கிரியையும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் கடைசி நாட்களின் கிறிஸ்துவின் தோன்றுதல்ங்கிறத முற்றிலுமா நிரூபிக்குது.

இந்தக் காரியங்கள கேட்டதுக்கப்புறமா என்னோட இருதயம் பிரகாசமடஞ்சுது, ஏவுதல் அடஞ்சுது, நான் என் சகோதரர்கிட்ட சொன்னேன், “உங்க ஐக்கியத்தின் மூலமா, என்னால மெய்யான கிறிஸ்துவயும் கள்ளக்கிறிஸ்துகளயும் பகுத்தறிய முடியுது, கிறிஸ்து யாருன்னு எப்படித் தீர்மானிக்கனும்னு எனக்குத் தெரியும். கிறிஸ்து தேவனோட சாராம்சத்தக் கொண்டிருக்கிறாரு, அவரால சத்தியத்த வெளிப்படுத்தவும் தேவனோட கிரியைய செய்யவும் முடியும், அதோட ஜனங்கள சுத்திகரிச்சு இரட்சிக்கவும் முடியும். ஆனா கள்ளக்கிறிஸ்துகள் தேவனோட மனுவுருவாதல் இல்ல, அவங்க தெய்வீக சாராம்சத்தக் கொண்டிருப்பதில்ல, அதனால அவங்களால சத்தியத்த வெளிப்படுத்தவோ ஜனங்கள இரட்சிக்கும் கிரியைய செய்யவோ முடியாது. தேவனோட கடந்தகால கிரியைய பின்பற்றுறது மூலமாவும் அற்புதங்களயும் அடையாளங்களயும் செய்றது மூலமாவும் ஜனங்கள வஞ்சிக்க மட்டுமே முடியும்.” நான் இதச் சொல்றத கேட்டதுக்கப்புறம், முக்வாங் அவர்கள், “தேவனுக்கு நன்றி! அப்படின்னு உண்மையா சொன்னார். இவ்விதமா உங்களால புரிஞ்சுக்க முடியறது உண்மையிலே தேவனோட இரக்குமும் கிருபையும்தான். மனுவுருவான தேவன் தோன்றி கிரியை செய்றப்ப, எத்தனபேர் அவர மறுத்தாலும் அல்லது கண்டனம் செஞ்சாலும், முழு மனித இனமும் அவர புறக்கணிச்சாலும், அவர் இன்னும் தேவனாவும் கிறிஸ்துவாவும்தான் இருக்காரு. கள்ளக்கிறிஸ்துகள் எப்படி தங்களுக்கே சாட்சி பகர்ந்துகிட்டாலும், அவங்க பொய்யானவங்கதான், அவங்களால நிலைச்சிருக்க முடியாது.” நிஜம் பொய்யா இருக்க முடியாது, பொய் நிஜமா இருக்க முடியாது. இது யாராலும் மாற்ற முடியாத உண்ம.

அடுத்ததா, முக்வாங் அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய எனக்கு வாசிச்சு காண்பிச்சாங்க, அது தேவனோட மூன்று கட்ட கிரியைகளைப் பத்தின ரகசியத்தப் பத்தி கொஞ்சம் புரிதல எனக்குக் கொடுத்துச்சு, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கிறதுக்கு இன்னும் அதிகப்படியான நிச்சயத்த எனக்கு உண்டாக்கிச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, இயேசு மனுஷரிடையே தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தார். அவருடைய கிரியை தனிமையில் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. நியாயப்பிரமாணத்தின் காலம் முடிந்தபின் தேவன் செயல்படுத்திய ஒரு புதிய யுகத்திற்கான கிரியை இது. இதேபோல், இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் அடுத்த யுகத்திற்காகத் தனது கிரியையைத் தொடர்ந்தார், ஏனென்றால் தேவனின் முழு ஆளுகையானது எப்போதும் முன்னேறியபடியே இருக்கிறது. முதுமையடைந்த யுகம் கடந்து செல்லும் போது, அதற்குப் பதிலாக ஒரு புதிய யுகம் வரும், மேலும் பழைய கிரியை முடிவடைந்ததும், தேவனின் ஆளுகையைத் தொடர புதிய கிரியை ஒன்று இருக்கும். இந்த மனுஷ அவதாரம் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் ஆகும், இது இயேசுவின் கிரியையைப் பின்பற்றுகிறது. நிச்சயமாக, இந்த மனுஷ அவதாரம் சுயாதீனமாக ஏற்படாது; இது நியாயப்பிரமாணத்தின் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றிற்குப் பிறகான கிரியையின் மூன்றாம் கட்டம் ஆகும். ஒவ்வொரு முறையும் தேவன், கிரியையின் புதிய கட்டத்தைத் தொடங்கும்போது, எப்போதும் ஒரு புதிய ஆரம்பம் இருக்க வேண்டும், மேலும் அது எப்போதும் ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவர வேண்டும். தேவனின் மனநிலையிலும், அவர் கிரியை செய்யும் முறையிலும், அவருடைய கிரியை செய்யப்படும் இடத்திலும் மற்றும் அவரது நாமத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படியானால், புதிய யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்வது மனுஷனுக்கு கடினம் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தேவன் மனுஷனால் எவ்வாறு எதிர்க்கப்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் தனது கிரியையைச் செய்கிறார், எப்போதும் மனுஷகுலம் முழுவதையும் முன்னோக்கிக் கொண்டுசெல்கிறார். இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). முக்வாங் அவர்கள் ஐக்கியப்பட்டாங்க, “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல இருந்து, மனுக்குலத்த இரட்சிக்குற தேவனோட கிரியை மூன்று கட்டங்கள கொண்டிருக்குன்னு நமக்குத் தெரியும். இந்தக் கட்டங்கள் சுயாதீனமானதல்ல. முந்தைய கிரியையின் அடிப்படையிலேயே ஒவ்வொன்னும் செய்யப்படுது, படிப்படியா அவை ஆழாமாவும் உயர்ந்ததாவும் இருக்கு, அதனால முடிவுல, ஜனங்கள் பாவத்திலிருந்து முற்றிலுமா இரட்சிக்கப்பட்டு தேவனோட ராஜ்யத்துக்குள்ள கொண்டு வரப்படுறாங்க. நியாயப்பிரமாணத்தின் காலத்தில, மனுக்குலம் பூமியில வாழ வழிநடத்துறதுக்கு தேவன் நியாயப்பிரமாணத்த அறிவிச்சி, பாவம்னா என்ன, யேகோவா தேவன எப்படி ஆராதிக்கிறதுங்கிறத ஜனங்களுக்குப் போதிச்சாரு. கிருபையின் காலத்தில, ஜனங்களுக்கு மனந்திரும்புதலின் வழிய கொடுக்க தேவன் மனுவுருவா வந்து, சிலுவையில அறையப்படுற கிரியைய செஞ்சு, முழு மனுக்குலத்தயும் மீட்டு, நமது பாவங்கள மன்னிச்சார், நாம அதற்குமேலயும் நியாயப்பிரமாணத்தால கண்டனம் செய்யப்படாம இருக்கும்படி நம்மல கிருபையால இரட்சிக்க்கப்படும்படி செஞ்சாரு. ஆனா கர்த்தராகிய இயேசுவின் கிரியை மனுஷனோட பாவங்கள மன்னிக்குற மீட்பின் கிரியையாத்தான் இருக்கு. நம்மோட பாவ சுபாவம் இன்னும் தீர்க்கப்படல, நாம இன்னும் பாவத்திலயும் சாத்தானோட வல்லமையின் கீழும்தான் வாழ்றோம். ராஜ்யத்தின் காலத்தில, சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி கிரியை செய்யறாரு, ஜனங்கள முற்றிலும் சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் சத்தியத்த வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்கிறார், இது மூலமா நம்மால சாத்தானின் ஆதிக்கத்துக்குத் தப்பி தேவனோட ராஜ்யத்தில பிரவேசிக்க முடியும். இதுல இருந்து, தேவனோட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் மனுக்குலத்தோட தேவைகளின் அடிப்படையில இருக்குங்கிறத நம்மால பாக்க முடியும். அவை ஒருபோதும் மீண்டும் செய்யப்படுறதில்ல அல்லது ஒண்ணுக்கொண்ணு முரண்பட்டதா இருக்கு, நாம தேவனால முற்றிலுமா ஆதாயப்படுத்தப்படும்படிக்கு இவையெல்லாம் நம்மல பாவத்திலிருந்து முற்றிலும் இரட்சிப்பதா இருக்கு. இந்த மூன்று கட்ட கிரியைகளும் மனுக்குலத்த இரட்சிப்பதுக்கான தேவனோட முழு நிர்வாகத் திட்டமா இருக்கு. கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியையே தேவனோட நிர்வாகத் திட்டத்தின் கடைசி கட்டமா இருக்கு. ஜனங்கள் கடைசி நாட்களோட கிறிஸ்துவின் நியாத்தீர்ப்பயும் சுத்திகரிப்பயும் ஏத்துக்கலன்னா, அவங்க தேவனோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க ஒருபோதும் தகுதிபெறமாட்டாங்க.”

அவரோட ஐக்கியத்த கேட்டதுக்கப்புறமா, என்னோட இருதயம் இன்னும் பிரகாசமாச்சு. மனுக்குலத்த இரட்சிக்க தேவன் மூன்று கட்ட கிரியைகள செய்றாருன்னு இப்போ எனக்குத் தெரிஞ்சுது. ஒவ்வொரு கட்ட கிரியையும் முந்தையத விட ஆழமா இருக்கு, அவை இறுதியா ஜனங்கள பாவத்திலிருந்து இரட்சிக்குது. இப்படிப்பட்ட ஐக்கியம் வேதாகமத்தோடும் உண்மைகளோடும் இணக்கமா இருந்துச்சு. நான் கர்த்தர பல வருஷங்களா விசுவாசிச்சிருந்தேன், ஆனாலும் நான் ஒருபோதும் இப்படிப்பட்ட பிரசங்கத்த கேட்டதில்ல. எந்தப் போதகரோ அல்லது பிரசங்கியாரோ மனுக்குலத்த இரட்சிக்குற தேவனோட கிரியையப் பத்தி இவ்ளோ முழுமையா விளக்கியதில்ல. நான் என் சொந்த அகந்தையயும், என்னோட தலைவர்கள் மற்றும் சக ஊழியர்களோட பொய்களின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையயும் வெறுத்தேன். கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்த நான் பல வருடங்களா புறக்கணிச்சிட்டிருந்தேன். நான் ரொம்ப அறிவில்லாம இருந்தேன்! இந்த மாதிரி, கர்த்தர வரவேத்து பரலோகராஜ்யத்தில பிரவேசிக்குற என்னோட வாய்ப்ப இழந்துடுவேன். அதனால, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய தொடர்ந்து ஆராய முடிவுவெடுத்தேன். கிளம்பறதுக்கு முன்னாடி, முக்வாங் அவர்கள் தேவனோட வார்த்தைகளின் புத்தகம் ஒண்ண என்கிட்ட கொடுத்தாரு.

அதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நான் ஆர்வமா படிச்சேன். நான் பல சத்தியங்களயும் ரகசியங்களயும் புரிஞ்சுக்கிட்டேன், நான் எவ்ளோ அதிகமா படிச்சேனோ, அவ்ளோ அதிகமா சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கார்த்தராகிய இயேசு, கடைசி நாட்களின் கிறிஸ்துவோட தோன்றுதல்ங்கிறத விசுவாசிச்சேன். அப்ப இருந்து, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் அதிகாரப்பூர்வமா ஏத்துக்கிட்டிருக்கேன். நான் கர்த்தர வரவேற்கிறதுல சந்தோஷமாவும் அவமானமாவும் இருந்தேன். கடந்த சில ஆண்டுகளா, சகோதர சகோதரிகள் என்னிடம் மீண்டும் மீண்டும் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சாங்க, ஆனா நான் பிடிவாதமா இருந்தேன். நான் தேடவும் ஆராயவும் இல்லங்கிறது மட்டுமில்லாம, நான் அவங்கள எதிரியாவும் பாவிச்சேன். நான் திருச்சபைய மூடக் கூட செஞ்சேன், மத்தவங்க கர்த்தரோட சத்தத்தக் கேட்டு அவர வரவேற்கிறதயும் தடுத்தேன். நான் பொல்லாப்பு செய்துக்கிட்டிருந்தேன்! கர்த்தராகிய இயேசு தோன்றி கிரியை செய்தப்ப, பரிசேயர்கள் எல்லா விதமான பொய்களயும் பரப்பினாங்க, விசுவாசிகள் கர்த்தர பின்பற்றுறத தடுக்க கர்த்தராகிய இயேசுவ எதிர்த்து கண்டனம் செஞ்சாங்க. நான் செஞ்சதுக்கும் பரிசேயர்கள் செஞ்சதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாம இருந்துச்சு. தேவனால சபிக்கப்படுவதுக்கும் தண்டிக்கப்படுவதுக்கும் நான் உண்மையிலே தகுதியானவனா இருந்தேன். ஆனா தேவன் என்னோட மீறுதல்கள நினைவுகூரல, நான் கடைசியா தேவனோட சத்தத்த கேக்கிற வரைக்கும் எனக்கு சுவிசேஷத்தப் பிரசங்கிக்க அவர் மீண்டும் மீண்டும் சகோதர சகோதரிகள அனுப்பினார். என் மீதான தேவனோட அன்பும் இரக்கமும் ரொம்ப பெருசா இருந்துச்சு! நான் மனசாட்சியயும் பகுத்தறிவயும் கொண்டிருக்கவும், வதந்திகளால வஞ்சிக்கப்பட்டு கர்த்தரோட வருகைக்காக ஏங்குகிறவங்களுக்கு தேவனோட சுவிசேஷத்தப் பிரசங்கிக்க வேண்டியதா இருந்துச்சு, இதன் மூலமா அவங்கள என்னால தேவனோட வீட்டுக்குக் கொண்டு வந்து, தேவனோட இருதயத்த ஆறுதல்படுத்த முடிஞ்சுது.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பூமியதிர்ச்சிக்குப் பின்

நான் 2019 இல் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டேன். அப்புறமா பின்னால நான் சர்வவல்லமையுள்ள தேவனின் பல வார்த்தைகள...

சாலையில் ஒரு முட்கரண்டி

நான் கிராமப்புறத்துல பிறந்து ஏழ்மையான குடும்பத்துல வளர்ந்தேன். என்னோட பெற்றோர் பாமர விவசாயிகளா இருந்தாங்க, அவங்க ரொம்ப கொடுமைய...

Leave a Reply