தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

ஏப்ரல் 24, 2021

By Danchun, the United States

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவத்தினுடையது) வேதாகமத்தை வாசிப்பதாக இருந்து வருகிறது; வேதாகமத்திலிருந்து வெளியேறுவது என்பது கர்த்தர் மீதான நம்பிக்கை என்று ஆகிவிடாது, வேதாகமத்திலிருந்து வெளியேறுவது மதங்களுக்கு எதிரான கொள்கையும் வழக்கத்திற்கு மாறான நம்பிக்கையுமாக இருக்கிறது. ஜனங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்கும்போதும், இந்தப் புத்தகங்களின் அஸ்திபாரம் வேதாகமத்தைக் குறித்த விளக்கமாக இருக்க வேண்டும். அதாவது, நீ கர்த்தரை விசுவாசித்தால், நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதாகமத்திற்கு வெளியே வேதாகமத்திற்கு தொடர்பில்லாத எந்த புத்தகத்தையும் நீ ஆராதிக்கக்கூடாது. நீ அவ்வாறு செய்தாயானால், நீ தேவனுக்குத் துரோகஞ்செய்கிறாய். வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது. … வேதாகமம் ஜனங்களுடைய மனதில் ஒரு விக்கிரகமாக மாறியுள்ளது, அவர்களுடைய மூளையில் அது ஒரு புதிராக மாறியுள்ளது. மேலும், வேதாகமத்திற்கு வெளியேயும் தேவனால் கிரியை செய்ய முடியும் என்று நம்புவதற்கு அவர்களால் முடியவில்லை, தேவனை வேதாகமத்திற்கு வெளியேயும் காண முடியும் என்பதை ஜனங்களால் நம்ப முடிவதில்லை, இறுதி கிரியையின்போது தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி புதியதாக ஆரம்பிக்க முடியும் என்பதையும் அவர்களால் நம்ப முடிவதில்லை. இது ஜனங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாகும். அவர்களால் அதை நம்பவும் முடியவில்லை, அவர்களால் அதை கற்பனை செய்துபார்க்கவும் முடியவில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு வேதாகமம் ஒரு பெரிய தடையாகவும், இந்த புதிய கிரியையை தேவன் விரிவுபடுத்துவதில் சிரமமாகவும் மாறியுள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)”). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் கர்த்தர்மேல் உள்ள நம்ம முந்தைய விசுவாசத்தில உள்ள பிரச்சனைகள வெளிப்படுத்துதுங்க. நான் முன்பு மதத்தை கடைபிடிச்சப்ப, வேதாகமத்தில இருக்கிற விசுவாசந்தான் தேவன்மேல இருக்கிற விசுவாசமுன்னு நினைச்சேன். வேதாகமம் தேவனைவிட உயர்ந்ததுன்னுகூட நம்பினேன். வேத வசனங்கள, குறிப்பா பழமையானவைகளை, நான் உறுதியாகப் பிடிச்சுக்கிட்டிருந்தேன். நான் உண்மையிலேயே தேவனோட சத்தத்தைக் கேட்கல, குறிப்பா கர்த்தரை வேரவேற்கிற விஷயத்த கேட்கல. கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனாக, சத்தியத்தைப் பேசுகிறவராக, கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியையை செய்கிறவராக திரும்பி வந்திருக்காருன்னு சாட்சி கொடுக்கிறத நான் கேட்டேன், ஆனா நான் அதை தேடல. கர்த்தரை வரவேற்கும் வாய்ப்ப நான் கிட்டத்தட்ட தவறவிட்டுட்டேன். கர்த்தரை வரவேற்கவும், கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கொள்ளவும் தேவனோட நம்பமுடியாத வழிகாட்டுதல் என்னை அனுமதிச்சது.

2001 ல, நான் ஞானஸ்நானம் எடுத்து, கர்த்தராகிய இயேசுவை முறையா ஏத்துக்கிட்டேன், அதுக்கப்புறம் திருச்சபையில எனது ஊழியத்துல நான் ரொம்ப தீவிரமா இருந்தேன். ஆனா போதகர் அதே பிரசங்கங்களையே சுழற்சி முறையில் திரும்ப திரும்ப பிரசங்கிக்கிறார் என்பதை நான் விரைவிலேயே கண்டுபிடிச்சேன், பிரசங்கிக்க புதுசா எதுவுமில்ல. அவர் திருச்சபை பணத்தை கையாடலும் செய்தார். சக ஊழியர்கள் தொடர்ந்து அந்தஸ்துக்காக போட்டியிட்டாங்க. இவையெல்லாம் ரொம்ப ஏமாற்றமா இருந்தது, நான் சபை ஆராதனையை விட்டு விலகினேன். அடுத்த சில வருடங்களா, நான் தொடர்ந்து ஜெபிக்கவும் வேதாகமத்த வாசிக்கவும் செய்தேன், ஆனா நான் எப்பவுமே ஆவிக்குரிய ரீதியா வெறுமையா உணர்ந்தேன். நான் ஒரு சிறந்த வழிய தேட ஆரம்பிச்சேன், பரிசுத்த ஆவியானவரோட கிரியை உள்ள, என் ஆவிக்குரிய வெறுமையை போக்கக்கூடிய ஒரு திருச்சபைய அல்லது ஆவிக்குரிய வழிகாட்டுதல கண்டுபிடிப்பேன்னு நம்பினேன்.

அப்பதான் நான் சகோதரி லி அவர்கள 2018 ல ஆன்லைன்ல சந்திச்சேன். அவங்க தான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய பத்தி ஆராய்வதாகவும், கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்திருக்காருன்னும், நானும் அதை ஆராய்ந்து பார்க்கனும்னு சொன்னாங்க. நான் அதிர்ச்சியாகி சிந்திச்சேன், “வேதாகமந்தான் உண்மையான கிறிஸ்தவ நியதி என்றும், அதுதான் முழு அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது என்றும், நம்ம விசுவாசம் வேதாகமத்தின் அடிப்படையிலானது என்றும், மற்றதெல்லாம் மதங்களுக்கு எதிரான கொள்கை என்றும் போதகரும் மூப்பர்களும் எப்பவுமே சொன்னாங்க. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையோட வழி வேதாகமத்த தாண்டி போகுது, அதனால் அது எவ்வளவு பெருசா தோனினாலும், நம்மால அதை கேட்கவோ, வாசிக்கவோ அல்லது தொடவோ முடியாது.” நான் சகோதரி லீ அவங்ககிட்ட மரியாதையா திரும்பினேன். ஆனா அப்போ நான் நினைச்சதப் பத்தியெல்லாம் கொஞ்சம் விசனமா உணர்ந்தேன், “கர்த்தர் திரும்பி வருவது ஒரு பெரிய விஷயம். நான் அதைப் பத்தி கொஞ்சமும் ஆராயாம கண்மூடித்தனமாக மறுக்கனும்னு கர்த்தர் விரும்பினாரா? கர்த்தராகிய இயேசு சொன்னார்: 'ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது' (மத்தேயு 5:3). கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாருங்கிறத நான் கேட்கும்போது நான் ஒரு திறந்த மனதோட தேடனும்.” ஆனா நான் போதகரோட வார்த்தைகள நினச்சப்ப, எனக்கு துணிவு வரல. அந்த இரவுல தூக்கம் வராம, உருண்டு பிரண்டு படுத்தேன். நான் ரொம்ப முரண்பாடா உணர்ந்தேன், என்ன செய்றதுன்னே தெரியல. நம்பிக்கையற்றவளா உணர்ந்தேன், கர்த்தர்கிட்ட ஜெபிச்சேன், சரியானத தேர்வு செய்றதுக்கு என்னை வழிநடத்துமாறு அவர்கிட்ட கேட்டேன். அடுத்த இரண்டு நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையையும் அதோட வழியையும் பத்தி இணையத்தில அதிக தகவலை பார்த்தேன். சில எதிர்மறையான காரியங்கள பார்த்தப்ப நான் தயங்கினேன். “நான் அதை ஆராயனுமா?” அப்படின்னு கேள்வி கேட்டேன். ஆனா அப்போது நான் கர்த்தர் திரும்பி வர்றது எவ்வளவு முக்கியமானதுன்னு நினைச்சுப் பார்த்தேன். என்னால மத்தவங்க சொல்லுறத கண்மூடித்தனமா கேட்கவோ அல்லது கூட்டத்தப் பின்பற்றவோ முடியல. நான் அதை உண்மையிலே ஆராய வேண்டியதாயிற்று. நான் திருச்சபையோட இணையதளத்தையும் அதோட வீடியோக்களையும் பார்த்தேன். அப்புறம், “கிறிஸ்துவின் ராஜ்யம் ஒரு அரவணைப்பான வீடு” என்ற ஒரு கீர்த்தனை இசை வீடியோவை பார்த்தேன். அது ரொம்ப இன்பமானதா இருந்துச்சு. நான் அதால கவர்ந்திழுக்கப்பட்டேன். நான் அந்த தளத்திலிருந்த மற்றவைகளையும் பார்த்தேன், குழுப் பாடல்கள், இசை வீடியோக்கள், சுவிசேஷ திரைப்படங்கள், தேவனுடைய வார்த்தைகளை ஒப்பித்தல், பாமாலைகள், அனுபவமிக்க சாட்சிப் படங்கள் உட்பட சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தயாரித்த அனைத்து வகையான அருமையான வீடியோக்களையும் திரைப்படங்களையும் பார்த்தேன். அவையெல்லாம் உண்மையிலேயே அருமையான பாடங்களைக் கொண்ட வல்லமைபடைத்தவையாக இருந்தன. அவை உண்மையிலேயே என்னை அசைத்தன. நான் அவற்றை ஒரே தடவையில் பார்க்க ஆரம்பிச்சேன், ஒரு வாரத்தில ஒரு டஜனுக்கும் மேல பார்த்தேன்.

அவற்றிலுள்ள ஐக்கியம் நடைமுறையாவும் ஒளியூட்டுவதாவும் இருப்பதாக கண்டேன். மத உலகம் ஏன் வெறுமையாவும் பரிசுத்த ஆவியாவரோட கிரியை இல்லாமலும் இருக்கின்றன என்பதை அது காட்டியது, மேலும் கர்த்தரை நாம எவ்வாறு சரியாக வரவேற்கனுங்கிறதையும் அது முற்றிலுமா தெளிவுபடுத்திச்சு. தேவன் யாரை ஆசீர்வதிக்கிறார், யாரை தண்டிக்கிறார் என்கிறதையும் வீடியோக்கள் விளக்கின. பல வருஷமா எனக்குள்ளிருந்த அநேக சந்தேகங்களும் கடினமான கேள்விகளும் தெளிவுபடுத்தப்பட்டன. திருச்சபையோட திரைப்படங்கள் உண்மையிலே ரொம்ப உதவிகரமாவும் திருப்திகரமாவும் இருந்ததா நான் உணர்ந்தேன். அது உண்மையிலே என்னை சிந்திக்க வைச்சது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை மதவெறியுள்ளதா தோனல! அது உண்மையிலே நல்லதா இல்லன்னா, அவங்களால எப்படி இந்த திரைப்படங்கள இவ்வளவு ஒளியூட்டுவதாவும் திருப்திகரமாவும் தயாரித்திருக்க முடியும்? எல்லா சபைப் பிரிவுகளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான விசுவாசமாக இருப்பதா கூறுகின்றன, ஆனா வேற யாரும் தேவனை சாட்சி பகரும் பல திரைப்படங்கள தயாரிக்கல. பல சபைப் பிரிவைச் சேர்ந்த உண்மையான விசுவாசிகள் அநேகர் சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துக்கிட்டதாவும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை இப்போ உலகம் முழுக்க இருப்பதாவும் போதகர்களும் மூப்பர்களும் சொல்றதப் பத்தியும் நினைச்சுப் பார்த்தேன். கமாலியேல் சொன்னத அது எனக்கு நினைப்பூட்டிச்சு: “இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்” (அப்போஸ்தலர் 5:38-39). தேவன்கிட்ட இருந்து வர்றது செழித்தோங்கனும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உண்மையிலே தேவன்கிட்ட இருந்து வந்ததா தோன்றிச்சு. ஆனா என்கிட்ட இன்னும் நிறைய கேள்விகள் இருந்தன: “மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற இந்த குறிப்பிட்ட புத்தகம் அவங்களோட ஒவ்வொரு திரைப்படத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கு. அவங்களோட திருச்சபை உறுப்பினர்கள் ஏன் வேதாகமத்த வாசிக்கிறதில்ல? அது வேதாகமத்த கைவிடுவதாகாதா? வேதாகமந்தான் கிறிஸ்தவத்தோட நியதியாவும் முழுமையான அதிகாரம் கொண்டதாவும் இருக்குது, எல்லாத்துக்கும் மேல, வேதாகமத்த பின்பற்றுறதுதான் ரொம்ப முக்கியமானது, மற்றது எதுவும் மதங்களுக்கு எதிரானது அப்படின்னு போதகரும் மூப்பர்களும் எப்பவுமே சொன்னாங்க.” நான் யோசிச்சி யோசிச்சி பார்த்தேன், ஆனா நான் எவ்வளவு தூரம் போனாலும் அதை கண்டுபிடிக்க முடியல. கர்த்தராகிய இயேசுவோட இந்த வார்த்தைகள் அப்போ என்கிட்ட வந்தன: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்(மத்தேயு 7:7). நான் எனக்குள்ள சொல்லிக்கிட்டேன், “கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துட்டதா மக்கள் சொல்றதுனால, என்கிட்ட எத்தனை சந்தேகங்கள் இருந்தாலும், உண்மைக்கு ஒரு சின்ன வாய்ப்பு இருந்தால், அந்த சிறு நம்பிக்கைக்குப் பின்னால நான் போகனும். கர்த்தரை வரவேற்கிற வாய்ப்ப என்னால இழக்க முடியாது.”

ஒருமுறை நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையோட இணையதளத்த பார்த்துக்கிட்டிருந்தப்ப, வேதாகமத்திலிருந்து வெளியே வாருங்கள் அப்படிங்கிற திரைப்படத்தோட ஒரு கிளிப்ப பார்த்தேன் “தேவன் வேதாகமத்தின்படி கிரியை செய்கிறாரா?” என்கிற தலைப்பு என்னை உடனடியா கிட்டத்தட்ட தாக்கியது. என்னால காத்திருக்க முடியல. நான் உடனடியா திரைப்படத்த பார்க்க ஆரம்பிச்சேன், சுவிசேஷகரான வாங் என்கிற சகோதரி ஒரு போதகரிடம் கேட்கிறாங்க: “தேவன் தமது இரட்சிப்பின் கிரியையைச் செய்றதுக்கு வேதாகமத்தில இருந்து வெளியேற முடியாதுன்னும், வேதாகமத்துக்கு வெளியே உள்ள எதுவும் மதங்களுக்கு எதிரானதுன்னும் நீங்க சொன்னீங்க. அப்படின்னா எது உண்மையிலேயே முதலில் வந்தது, வேதாகமமா அல்லது தேவனுடைய கிரியையா?” நான் அந்த கேள்விய கேட்டப்ப, “நிச்சயமா தேவனுடைய கிரியைதான் வேதாகமத்துக்கு முன்னாலேயே வந்தது!” அப்படின்னு என் மனசாட்சி சொல்றத கேட்டேன், சகோதரி வாங் கேட்டாங்க, “ஆதியில தேவன் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தாரு. அவர் உலகத்த ஜளப்பிரளயத்தால மூழ்கடிச்சாரு, அவர் சோதோம் கொமோராவ எரிச்சாரு, மேலும் பலவற்றை செய்தாரு. அவர் இதெல்லாம் செய்தப்ப பழைய ஏற்பாடு இருந்துச்சா?” என் மனசாட்சி என்கிட்ட பதில் சொல்லிக்கிடிருந்துச்சு: “இல்ல. தேவன் ஆதியாயிருக்கிறார். எழுத்தும் வேதாகமும் வர்றதுக்கு முன்னாடியே அவர் சகலத்தையும் சிருஷ்டிச்சிட்டாரு!” சகோதரி வாங் தொடர்ந்து பேசினாங்க: “தேவன் தமது கிரியையை செய்தப்ப வேதவசனங்கள் எதுவும் கிடையாது. அதாவது, தேவனோட கிரியைதான் முதல்ல செய்யப்பட்டது, அப்புறம்தான் அது வேதவசனங்கள்ல எழுதப்பட்டுச்சு. கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில கிரியை செய்ய வந்தப்ப, புதிய ஏற்பாடு கிடையாது. முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதிலுமுள்ள பல மத தலைவர்களோட ஒரு மாநாடு கூட்டப்பட்டுச்சு. கர்த்தராகிய இயேசுவோட கிரியைய பத்தி அவங்க தேர்ந்தெடுத்த பதிவுகளாக நான்கு சுவிசேஷங்கள தேர்ந்தெடுத்தாங்க, அப்போஸ்தலர்கள் சபைகளுக்கு எழுதின சில நிருபங்களயும் யோவான் பதிவுசெய்த வெளிப்டுத்துதலையும் சேர்த்தாங்க. அவங்க இதயெல்லாம் நமக்கு தெரிந்த புதிய ஏற்பாடா தொகுத்தாங்க. தேவனோட கிரியைதான் முதல்ல வந்தது, அதுக்கப்புறம்தான் வேதாகமத்தில அது எழுதப்பட்டதுன்னு நாம வேதாகமத்த உருவாக்கும் செயல்முறையிலிருந்து பார்க்கலாம். தேவனோட கிரியை இல்லாம, வேதாகமும் வந்திருக்காது. அதாவது, வேதாகமத்தின் அடிப்படையில தேவன் கிரியை செய்றதில்ல, அதுக்குள்ள அவர் அடங்கியும் இருக்கிறதில்ல. அவர் தமது சொந்த திட்டத்துக்கும் மனுக்குலத்தோட குறிப்பிட்ட தேவைகளுக்கும் ஏற்ப கிரியை செய்கிறாரு. அதனால, தேவனோட கிரியைய வேதாகமத்தில உள்ளதுக்குள்ள மட்டுமே கண்டிப்பாக அடைச்சு வைச்சுறவோ அல்லது அவரோட கிரியைய மட்டுப்படுத்த வேதாகமத்த பயன்படுத்தவோ முடியாது. வேதாகமத்துக்கு அப்பால உள்ள எதையும் மதங்களுக்கு எதிரானது என்று நாம உண்மையிலே சொல்ல முடியாது.”

திரைப்படத்தில சகோதரி யாங் அதுக்கப்புறம் ரொம்ப பயனுள்ள ஐக்கியத்த பகிர்ந்துகிட்டாங்க: “கர்த்தராகிய இயேசு பழைய ஏற்பாட்டின் படி தமது கிரியைய செய்யல. அவர் மனந்திரும்புதலுக்கான வழியை பிரசங்கிச்சார், வியாதியஸ்தர்களை குணமாக்கினார், பிசாசுகளை துரத்தினார், ஓய்வுநாள்ல கூட கிரியை செஞ்சாரு. அது எதுவுமே அந்த நேரத்தில வேதவசனங்கள்ல எழுதப்பட்டிருக்கல. அது பழைய ஏற்பாட்டோட நியாயப்பிரமாணங்களுக்கும் முரண்பட்டதா தோன்றிச்சு. எல்லா பிரதான ஆசாரியர்களும், வேதபாரகரும், பரிசேயரும் கர்த்தராகிய இயேசுவை கண்டிச்சாங்க, ஏன்னா அவரோட கிரியையும் வார்த்தைகளும் வேதவசனங்களுக்கு எதிரா இருந்தன. வேதாகமத்துக்கு வெளியே உள்ள எல்லாமே மதங்களுக்கு எதிரானதுன்னு நாம சொன்னா, காலங்கள் முழுவதும் தேவன் செய்த எல்லா கிரியைகளையும் அது கண்டிக்கவில்லையா?”

நான் அதிர்ச்சியடைஞ்சேன், சட்டென்று அதுதான் உண்மைன்னு உணர்ந்தேன். கர்த்தராகிய இயேசு ஓய்வுநாள்ல பிரசங்கித்து கிரியை செய்து, வியாதியஸ்தர்களைக் குணப்படுத்தினார், பிசாசுகள துரத்தினார். பழைய ஏற்பாட்டில அப்படி எதுவுமே ஒருபோதும் குறிப்பிடப்படல. அவரோட கிரியை வேதவசனங்களுக்கு அப்பால போனதால, பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும், குறிப்பா பரிசேயர்களும் கர்த்தராகிய இயேசுவோட கிரியைய மதங்களுக்கு எதிரானது என்று கண்டனம் செய்தாங்க, கடைசியா அவர சாகும் வரைக்கும் சிலுவையில் அறைஞ்சாங்க. அவங்க தேவனால தண்டிக்கப்பட்டாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலே திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுவா இருந்து, வேதாகமத்த தவிர வேறு எதுவும் மதங்களுக்கு எதிரானது என்று நாம நம்பினா, அது தேவனோட கிரியைய கண்டிக்கிறதா இருக்காதா? அது தேவனுக்கு இடறலுண்டாக்குவதா இருக்கும்! இந்த எண்ணம் என்னை உண்மையிலே கொஞ்சம் பயமுறுத்திச்சு. என்னோட பழைய யோசனைகள அதுக்குமேல வைச்சிருக்க முடியலங்கிறது எனக்கு தெரியும். நான் தொடர்ந்து பார்த்துக்கிட்டிருந்தேன்.

திரைப்படத்தில சகோதரி சர்வவல்லமையுள்ள தேவனோட சில வார்த்தைகள வாசிச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “வேதாகமத்தைக் குறித்த யதார்த்தம் ஒருவருக்கும் தெரியவில்லை. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஒரு ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்த புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)”). “வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நீ கிருபையின் காலத்தில் பழைய ஏற்பாட்டை புசித்துக் குடித்திருந்தால் மற்றும் கிருபையின் காலத்தின்போது பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவையானதை நீ கடைப்பிடித்திருந்தால், இயேசு உன்னை புறந்தள்ளி, உன்னை கடிந்துகொண்டிருந்திருப்பார். நீ பழைய ஏற்பாட்டை இயேசுவின் கிரியைக்கு பயன்படுத்தியிருந்தால், நீ ஒரு பரிசேயனாக இருந்திருப்பாய். இன்று, நீ பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை ஒன்றாகச் சேர்த்து புசித்துக் குடித்து, அதன்படி நடந்தால், இன்றைய தேவன் உன்னை கடிந்துகொள்வார். இன்றைய பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் நீ விழுந்து கிடக்கிறாய்! நீ பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் புசித்துக் குடித்தாயானால், நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருக்கிறாய்! இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதை கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாண காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாண காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதை பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்கு பழைய ஏற்பாட்டை பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றி பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். அவர் பழைய ஏற்பாட்டை விளக்கவோ அல்லது அதன் கிரியையை ஆதரிக்கவோ வரவில்லை. நியாயப்பிரமாண காலத்தை தொடர்ந்து வளர அனுமதிப்பதற்காக அவருடைய கிரியை செய்யப்படவில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை வேதாகமத்தை அதன் அடிப்படையாகக் கொண்டிருந்ததா என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இயேசு தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே வந்தார். ஆகவே, அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களை விளக்கவுமில்லை, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண காலத்தின் வார்த்தைகளின்படி அவர் கிரியை செய்யவுமில்லை. அவர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பதை புறக்கணித்தார், அது தமது கிரியையுடன் ஒத்திருக்கிறதா இல்லையா என்று அவர் கவலைப்படவில்லை, மற்றவர்கள் தமது கிரியையைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் அதை எவ்வாறு கண்டித்தார்கள் என்பது குறித்தும் கவலைப்படவில்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பை பலர் கண்டித்தபோதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர் செய்து வந்தார். அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அதன்படி நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”).

சகோதரி வாங் இதை பகிர்ந்துகிட்டாங்க: “நாங்க பல வருஷங்களா தேவனையும் வேதாகமத்தையும் ஒன்னுக்கொன்னு சரிசமமா வைச்சிருக்கோம், அவரோட கிரியை வேதாகமத்த தாண்டி போக முடியாதுன்னும், வேதாகமத்துக்கு வெளியே உள்ள எந்த விசுவாசமும் மதங்களுக்கு எதிரானதே தவிர விசுவாசம்ன்னு அழைக்க முடியாதுன்னும் நினைச்சிருக்கோம். உண்மையில, வேதாகமங்கிறது தேவனோட முதல் இரண்டு கட்ட கிரியைகளோட ஒரு பதிவு மட்டுமே. வானத்தையும், பூமியையும், சகலத்தையும், மனுக்குலத்தயும் சிருஷ்டிச்சதுக்கு பிறகு மனுஷன வழிநடத்துறதுக்கும் இரட்சிக்கிறதுக்கும் தேவனோட முதல் இரண்டு கட்ட கிரியைகளோட சாட்சி இது இது மனுஷன இரட்சிப்பதுக்கான அவரோட எல்லா கிரியைகளையும் குறிக்கல. வேதாகமத்தில இருக்கிற தேவனோட வார்த்தைகள் ரொம்ப குறைவா இருக்கு. அதில் தேவனோட ஜீவிய மனநிலைய பத்தின சில குறிப்புகள் உள்ளன, ஆனா வெறுமென அதயெல்லாத்தையும் கொண்டிருக்கல. தேவன் வேதாகமத்தின் படி கிரியை செய்றதுமில்ல அல்லது அவரோட கிரியையில அதை குறிப்பிடுறதுமில்ல. தம்மை பின்பற்றுகிறவங்களுக்கு வழிகாட்டும் பாதைய தீர்மானிக்கவும் அவர் அதைப் பயன்படுத்துறதில்ல. அவரோட கிரியை தொடர்ந்து முன்னேறி போய்க்கிட்டே இருக்கு. தேவன் ஒரு புதிய காலத்த தொடங்கி, புதிய கிரியைய செய்துக்கிட்டுருக்கார். நாம மாபெரும் இரட்சிப்ப அடையும்படிக்கு அவர் மக்களுக்கு ஒரு புதிய பாதையையும் மாபெரும் சத்தியத்தையும் காண்பிச்சிருக்கார். அதனால, தேவன் தமது பழைய கிரியையின் அடிப்படையில மனுக்குலத்த வழிநடத்துறதில்ல. அதாவது, தேவன் வேதாகமத்தின் அடிப்படையில கிரியை செய்றதில்ல. அவர் ஓய்வுநாள் மற்றும் வேதாகமம் இரண்டுக்கும் கர்த்தரா இருக்கார். வேதாகமத்த தாண்டி கிரியை செய்றதுக்கும் அவரோட சொந்த திட்டம் மற்றும் மனுகுலத்தோட தேவை ஆகியவற்றின் அடிப்படையில புதிய கிரியைகள செய்றதுக்கும் அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு. தேவனோட கிரியை நிச்சயமா ஒரு வேறுபட்ட காலத்தில இருந்து மற்றொரு காலம் வரை ஒரே மாதிரியா இருக்க முடியாது. வேதாகமத்துக்கு வெளியே உள்ள எதையும் சொல்றது மதங்களுக்கு எதிரானதுங்கிறது எந்த அர்த்தத்திலும் தவறானது.”

இதப் பார்த்தப்ப எனக்கு வெட்கமா இருந்துச்சு. அவங்க பகிர்ந்துகிட்ட ஐக்கியம் உண்மைகளுக்கு ஒத்து இருந்துச்சு. கிருபையின் காலத்தில கர்த்தராகிய இயேசுவோட கிரியை பழைய ஏற்பாட்ட ரொம்பவும் தாண்டி போனது. சிருஷ்டிப்பின் கர்த்தர் என்பத அது நமக்கு காண்பிக்கலயா, தேவன் வேதாகமத்தையும் தாண்டி கிரியை செய்ய முற்றிலும் வல்லவராக இல்லயா? இதுக்கு முன்னாடி நான் ஏன் இதப் பத்தி ஒருபோதும் சிந்திக்கல? “வேதாகமத்துக்கு வெளியே உள்ள எதுவும் மதங்களுக்கு எதிரானது” அப்படின்னு சொல்றது தவறானது, அர்த்தமில்லாதது. நான் ரொம்ப முட்டாள்தனமாவும் அறியாமையோடும் இருந்தேன்!

நான் பார்த்துக்கிட்டே இருந்தப்ப, சகோதரி சொன்னது உண்மையிலே என் கவனத்தை ஈர்த்துச்சு. அவங்க சொன்னாங்க: “வேதாகமங்கிறது தேவனோட கிரியைகளின் பதிவு, ஒரு சாட்சி மட்டுந்தான். அதனால நித்திய ஜீவன கொடுக்க முடியாது. அது பாரம்பரிய கருத்துக்கள்ல இருந்து வேறுபட்டிருந்தாகூட, கர்த்தராகிய இயேசு பரிசேயர்கள நீண்ட காலத்திற்கு முன்பே இப்படி சொல்லி கடிந்துகொண்டார்ங்றத மறுக்க முடியாது, 'வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை' (யோவான் 5:39-40). வேதவசனங்கள்ல நித்திய ஜீவன் காணப்படாதுன்னும், அதுல நித்திய ஜீவன கண்டுபிடிக்க முயற்சிக்கிறது முற்றிலும் தவறுன்னும் கர்த்தராகிய இயேசு தெளிவா சொல்லியிருக்கார். சத்தியத்தையும் ஜீவனையும் பெற வேதாகமம் மட்டும் போதாது. நாம அவற்றை கிறிஸ்துவில் மட்டுமே காண முடியும்.” இதக் கேட்டது கண்ணை திறப்பதாக இருந்துச்சு. வேதாகமத்தில நித்திய ஜீவன் கிடையாதுன்னு கர்த்தராகிய இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே சொன்னத நான் பார்த்தேன். தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறார், தேவனால மட்டுமே நமக்கு நித்திய ஜீவன கொடுக்க முடியும். நான் இதுக்கு முன்னாடி அதை வாசிக்கிறப்ப ஏன் அதை உணரல?

சகோதரி படத்தில தேவனுடைய வார்த்தைகளோட இன்னொரு பகுதிய வாசிச்சாங்க. “உயர்ந்த வழி இருக்கும்போது, அந்த தாழ்ந்த, காலாவதியான வழியை ஏன் படிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளும் புதிய கிரியையும் இருக்கும்போது, பழைய வரலாற்றுப் பதிவுகளுக்கு மத்தியில் ஏன் ஜீவிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளை உனக்கு வழங்க முடியும், இதுவே புதிய கிரியை என்பதை நிரூபிக்கிறது. பழைய பதிவுகளால் உனக்கு மனநிறைவூட்டவோ அல்லது உனது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது, அவை வரலாறே தவிர, இப்போதைய கிரியை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. மிகவும் உயர்ந்த வழியே புத்தம்புதிய கிரியையாகும். மேலும், புதிய கிரியையைக் கொண்ட கடந்த காலத்தின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது இன்னும் ஜனங்களுடைய பிரதிபலிப்புகளின் வரலாறுதான். மேலும், அதன் மதிப்பு குறிப்பாக இருந்தாலும், அது இன்னும் பழைய வழிதான். இது 'புனித நூலில்' பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பழைய வழி என்பது வரலாறுதான். 'புனித நூலில்' அது குறித்த எந்தப் பதிவும் இல்லையென்றாலும், புதிய வழியே இன்றைக்குரியதாக இருக்கிறது. இந்த வழியால் உன்னை இரட்சிக்க முடியும். மேலும், இந்த வழியால் உன்னை மாற்ற முடியும். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). அதுக்கப்புறம் அவங்க இதை பகிர்ந்துகிட்டாங்க: “வேதாகமத்தில கடைசி நாட்கள்ல தேவனோட கிரியையைப் பற்றின தீர்க்கதரிசனங்கள் மட்டுமே இருக்கு, அதைப் பற்றின விவரங்கள் இல்ல, ஆனா இது உண்மையிலே மனுக்குலத்தோட தற்போதய தேவைகளின் அடிப்படையிலான ஒரு ஆழமான, ரொம்ப உயர்வான ஒரு கட்ட கிரியை. நியாயப்பிரமாணத்தின் காலத்தோட பிற்பகுதியில, எல்லாருமே ரொம்ப ஆழமா சீர்கெட்டுப் போயிருந்தாங்க, எந்த நேரத்திலும் நியாயப்பிரமாணத்தின் கீழ கொல்லப்பட இருந்தாங்க. தேவன் தனிப்பட்ட முறையில மாம்சமாகி, பூமிக்கு வந்தார், அதுக்கப்புறம் மனுஷனுக்கான பாவநிவாரணபலியா சிலுவையில் அறையப்பட்டார். தேவன் தமது மீட்பின் கிரியையை நியாயப்பிரமாண கிரியையின் அடிப்படையில செய்தார். இது வேதவசனங்களில் எழுதப்படாவிட்டாலும், அவர் மனுக்குலத்தோட தேவைகளுக்கும் அவரோட சொந்தத் திட்டத்திற்கும் ஏற்ப கிரியை செய்தார். அவர் ஒருபோதும் நியாயப்பிரமாணத்த ஒழிக்காம, நியாயப்பிரமாணத்த நிறைவேற்றினார். இப்போ கடைசி நாட்கள்ல, தேவன் தமது திட்டத்தினாலும் கர்த்தராகிய இயேசுவோட மீட்பின் கிரியையில கட்டப்பட்டுள்ள மனுஷனோட தேவைகளினாலும் கிரியை செய்துகொண்டிருக்கிறார். நம்ம பாவ சுபாவத்தில இருந்து இரட்சிக்கிறதுக்காகவும், பாவ கட்டுகளிலிருந்து நம்ம முழுமையா விடுவிக்கிறதுக்காகவும், நித்தியத்திற்கும் அழகாக இருக்கும் சென்றடையும் இடத்திற்கு நம்மை வழிநடத்திச் செல்வதற்காகவும் அவர் தேவனோட வீட்ல இருந்து தொடங்கி அவரோட நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்துகொண்டிருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவுமே எல்லா சத்தியங்களையும் பேசுகிறார், அவர் தமது நிர்வாகத் திட்டத்தின் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துறார். இந்த வார்த்தைகள்ல எதையும் அவர் நியாயப்பிரமாணத்தின் காலத்திலோ அல்லது கிரிபையின் காலத்திலோ ஒருபோதும் பேசியதில்ல. இதுவே கடைசி நாட்களில் திறக்கப்பட்ட ஏழு முத்திரைகளான புஸ்தகச்சுருள், இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவது வெளிப்படுத்துதல்ல காணப்படுது: 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்' (வெளிப்படுத்தல் 2:7). அப்புறம், இதுவும்கூட: 'இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்' (வெளிப்படுத்தல் 5:5). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் ராஜ்யத்தின் காலத்துக்கான வேதாகமமான மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதில் காணப்படுகின்றன. இவையே வாழ்வதற்கான சிறப்பு வார்த்தைகளும், தேவன் மனிதனுக்கு கொடுக்கும் நித்திய ஜீவனுக்கான வழியும், முழு இரட்சிப்புக்கான ஒரே மெய்யான பாதையுமாகும். நாம இதை ஏத்துக்க மறுத்தா, நாம ஒருபோதும் தேவனோட ஜீவ தண்ணீரால் போஷிக்கப்பட மாட்டோம் அல்லது அவரோட சத்தியத்தையும் ஜீவனையும் பெற மாட்டோம்.”

நான் பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள வேறொரு திரைப்படத்தில் அதிகமா கேட்டேன் “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும். இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளும் ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). அந்த திரைப்படத்தில ஒரு சகோதரர் இப்படி பகிர்ந்துகிட்டார்: “கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷனை இரட்சிக்கவே சகல சத்தியங்களையும் வெளிப்படுத்துறார். அவை ஏராளமானவையாவும், பரந்த அளவில் கடந்து செல்பவையாகவும், உண்மையிலே தேவன்கிட்ட இருந்து வாழ்வாதாரத்தை கொடுப்பனவாகவும் இருக்கின்றன. அவையெல்லாம் கண்னைத் திறப்பனவாகவும் ஒளியூட்டுவனாகவும் உள்ளன. கிறிஸ்துவே வழியும், சத்தியமும், ஜீவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்ங்றத அவையெல்லாம் நமக்கு காண்பிக்கின்றன. ராஜ்யத்தின் காலத்தில தேவனோட வார்த்தைகளோ நியாயப்பிரமாணம் மற்றும் கிருபையின் காலங்கள்ல இருந்த அவரோட எல்லா வார்த்தைகளையும் தாண்டி செல்கின்றன. குறிப்பா, 'மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை' என்பதிலுள்ள 'முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்' என்பது தேவன் முதல் முறையா மனுக்குலதுகிட்ட வெளிப்படையா பேசியதாகும், சிருஷ்டிப்பின் கர்த்தர் சகல மனுக்குலத்திடம் பேசிய அவரோட வார்த்தைகள மனிதர்கள் கேட்டது இதுவே முதல் முறை. அவை உண்மையிலே பிரபஞ்சத்த உலுக்கி நம்ம கண்களயெல்லாம் திறந்துச்சு. ராஜ்யத்தின் காலங்கிறது தேவன் தமது நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யும், மனுஷனிடம் தமது நீதியான மனநிலைய முழுமையா வெளிப்படுத்தும் காலமாகும். அதனாலதான் இந்த காலத்தில நியாயந்தீர்க்கும், சுத்திகரிக்கும், மனுஷன பரிபூரணமாக்கும் வார்த்தைகள அவர் பேசுறார், அவர் பேரழிவுகள வரப்பண்ணி, நல்லவர்களுக்கு வெகுமதியளித்து, துன்மார்க்கரை தண்டித்து, அவரோட நீதிய வெளிப்படுத்துறார். மனுஷன சுத்திகரிக்கவும், இரட்சிக்கவும், உண்மையிலேயே பரிபூரணமாக்கவுமே சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தும் சத்தியங்களே அவர் கடைசி நாட்கள்ல மனுஷனுக்கு கொடுக்கும் நித்திய ஜீவனின் வழியாய் இருக்கின்றன. அவை அவரோட சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவ தண்ணீராக இருக்கின்றன.”

சர்வவல்லமையுள்ள தேவனிடமிருந்து வரும் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை தான் கடைசி நாட்கள்ல தேவன் மனுஷனுக்கு கொடுக்கிற நித்திய ஜீவனுக்கான வழி அப்படிங்கிறத நான் இந்த கட்டத்தில இறுதியா உணர்ந்தேன். அவரோட ஜீவ தண்ணீர் தரும் வாழ்வாதாரத்தையும் அவரோட முழு இரட்சிப்பையும் பெற நான் அப்படியே தேவனோட புதிய கிரியைய கடைபிடிக்கவும் அவரோட புதிய வார்த்தைகள வாசிக்கவும் வேண்டியதாயிற்று அப்புறம், நான் உடனடியா சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபைய தொடர்புகொண்டு சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள அதிகமா வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சகல இரகசியங்களையும் உண்மையிலே வெளிப்படுத்துகிறார் அப்படிங்கிறது நான் பார்த்தேன். தேவனோட நிர்வாகத் திட்டம், அவரோட மனுவுருவெடுத்தல் குறித்த இரகசியங்கள், வேதாகமத்திலுள்ள உண்மையான சம்பவம், சத்தியத்தின் சகல அம்சங்கள் ஆகிய எல்லாமே வெளிப்படுத்தப்பட்டிருக்கு. நான் தேவன்மீது பத்து வருஷத்துகும் மேல கொண்டிருந்த விசுவாசத்தக் காட்டிலுலும் அதிகமாக கத்துக்கிட்டேன்! கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் கடைசியா ஏத்துக்கிட்டேன்.

போதகராலயும் மூப்பர்களாலயும் நான் எப்படி தவறுதலா வழிநடத்தப்பட்டிருக்கேன்னு நினைச்சுக்கிட்டேன். தேவனோட கிரியையும் வார்த்தைகளும் வேதாகமத்தில மட்டுந்தான் இருக்குன்னு நம்பினேன், வேற எதுவும் மதங்களுக்கு எதிரானதுன்னு நினைச்சேன். கர்த்தராகிய இயேசு திரும்பி வர்றத சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய சேர்ந்தவங்க சாட்சியமளிப்பத நான் கேட்டேன் ஆனா நான் அதை ஆராய்ந்து பார்க்கல. நான் திருசபையோட குருமார்களை கண்மூடித்தனமாக பின்பற்றினேன், என் பழைய நம்பிக்கைகள் காரணமா தேவனுடைய கிரியைய புறந்தள்ளினேன். நான் ஒரு விசுவாசியா இருந்தேன், ஆனா நான் தேவனை எதிர்த்தேன். என்னால எப்படி இவ்வளவு குருட்டுத்தனமாவும் முட்டாள்தனமாவும் இருக்க முடிந்தது! அதிர்ஷ்டவசமா, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையிலும் அவர்கள் தயாரித்த திரைப்படங்கள்லயும் அவரோட சத்தத்த கேட்கவும், என் பழைய நம்பிக்கைகளை உண்மையிலே விட்டுவிடவும் தேவனோட வழிகாட்டுதல் என்னை அனுமதிச்சது. நான் அதுக்குப்பிறகு வேதாகமத்த குருட்டுத்தனமா வணங்கிறவளா இருக்கல. அது உண்மையிலே விசுவாசமில்லங்கிறதையும் வேதாகமம் நித்திய ஜீவனை கொடுக்கிறதில்லங்றதயும் நான் கத்துக்கிட்டேன். கிறிஸ்து மட்டுமே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறார். கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனுக்கான வழிய காட்ட முடியும், கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பதன் மூலமா மட்டுமே நாம சத்தியத்தையும் ஜீவனையும் அடைய முடியும். தேவன் அங்கீகரிக்கும் ஒரே வகையான விசுவாசம் அதுதான். கர்த்தரை வரவேற்பதே முற்றிலும் தேவனோட கிருபையாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கு. தேவனோட இரக்கத்துக்கும் இரட்சிப்புக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

கடைசி நாட்களின் அடையாளம்: இரத்த நிற மலர் சந்திர கிரகணம் 2022 இல் தோன்றுகிறது

உங்களுக்கு தெரியுமா? இரத்த நிலவு அடிக்கடி தோன்றுவதற்குப் பின்னால் கர்த்தர் திரும்பும் மர்மம் மறைந்துள்ளது. தெரிந்துகொள்ள இப்போது படியுங்கள்.

தமிழ் பைபிள் பிரசங்கம்: கர்த்தராகிய இயேசு எப்போது திரும்பி வருவார்? நாம எப்படி அவரை வரவேற்க முடியும்?

இதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள் “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்” மத்தேயு 24:36, கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிற செய்தி உங்களுக்குத் தெரியும்.

Leave a Reply