வேதாகமத்தைத் தவிர வேறெதிலாவது தேவன் பேசியிருக்கிறாரா?

ஜனவரி 7, 2023

2018 ஜனவரியில ஒரு நாள் நான் சகோதரி சியேயையும் சகோதரி சென்னையும் ஆன்லைன்ல சந்திச்சேன், அவங்களுக்கு வேதாகமத்த பத்திய ஒரு பிரத்தியேகமான நுண்ணறிவு இருந்திச்சி. அவங்களுடய ஐக்கியம் நடமுறையானதாவும் பிரகாசத்தால் நிரம்பியதாவும் இருந்திச்சி. சபைகள் பாழடயுறதுக்குக் காரணம், எப்படி ஒரு புத்தியுள்ள கன்னிகையா இருக்கிறது, கர்த்தர வரவேற்கிறது, பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவ ஏன் எதிர்த்தாங்க, வெளிப்படுத்தல் தீர்க்கதரிசனத்தின்படி கடைசி நாட்கள்ல தேவன் செய்யும் கிரிய மற்றும் பலவற்ற பத்தி அவங்க சொன்னாங்க. அவங்க பல நாளா என்னோட ஐக்கியப்பட்டாங்க என் போதகர் சொன்னத 10 வருஷமா கேட்டத விட அதிகமா நான் புரிஞ்சிக்கிட்டேன். கேக்குறதுக்கு புத்துணர்ச்சி ஊட்டுற மாதிரியும் புதுசாவும் இருந்திச்சி, வேதாகமத்தில இருந்து இவ்வளவு பிரகாசத்த அவங்களால எப்படி பெற முடிஞ்சுதுன்னு நான் ஆச்சரியத்தில மூழ்கிப்போனேன். மேலும் சத்தியங்களயும் ரகசியங்களயும் கத்துக்கிடவும் கர்த்தர இன்னும் நல்லா அறிஞ்சிக்கவும் நான் அவங்க கூட்டங்களுக்குப் போக ஆரம்பிச்சேன்.

இந்தக் கூட்டங்கள்ல ஒண்ணுல, சகோதரி சியே எங்கிட்ட மகிழ்ச்சியோட சொன்னாங்க, “எங்கிட்ட சில அருமையான செய்திங்க இருக்கு! கர்த்தர் மறுபடியும் வந்து சத்தியத்த வெளிப்படுத்தி கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியய செய்றாரு.” இதக் கேக்க எனக்கு சிலிர்ப்பா இருந்திச்சி, ஆனா நம்புறதுக்கும் முடியல, அதனால கேட்டேன், “இது உண்மயா?” சகோதரி சென் சொன்னாங்க, “ஆமா, இது உண்மதான். கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவனா திரும்பி வந்திருக்காரு. அவர் வார்த்தைகளப் பேசி நியாயத்தீர்ப்பின் கிரியய செய்றாரு.” நான் திடீர்னு முகநூல்ல ஒரு பதிவை பாத்தேன். அதில கிழக்கத்திய மின்னல் கர்த்தர் பேசுறதுக்காகவும் நியாயத்தீர்ப்பின் கிரியய செய்றதுக்காகவும் திரும்பி வந்திருக்காருன்னு சாட்சி கொடுக்கிறதாவும், மேலும் அவங்க பிரசிங்கிக்கறது வேதகமத்துக்கு அப்பால் போவதாவும் சொல்லப்பட்டிருந்திச்சு. நான் எச்சரிக்கையா வேகமா சகோதரி சென்கிட்ட கேட்டேன், “நீங்க கிழக்கத்திய மின்னல நம்புறீங்களா?” அவர் வெளிப்படயா சொன்னாரு, “ஆமா.” எனக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டிச்சி போதகரும் மூப்பர்களும் தேவனின் எல்லா வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்தில் இருக்குதுன்னும், கர்த்தர் மேல இருக்கிற விசுவாசம் வேதாகமத்தின் அடிப்படயில இருக்கணும், வேதாகமத்த விட்டு விலகிறது மதத்துக்கு எதிரானதுன்னும் எப்போதும் சொல்றத நினச்சிப் பாத்தேன். இந்த சகோதரிங்க பிரசங்கிக்கிறது வேதாகமத்த தாண்டி போச்சுது. அவங்க கர்த்தருடைய வழியில இருந்து விலகிப் போகலையா? அதனால நான் சொன்னேன், “நீங்க பிரசங்கிக்கிறது போதகரும் மூப்பர்களும் பிரசங்கிப்பத விட வேறா இருக்கு. அதனால இனிமேலும் என்னால உங்க கூட்டத்துக்கு வரமுடியாதோன்னு பயப்படறேன்.” நான் உடனடியா இணைப்ப துண்டிச்சிட்டேன். ஆனா கர்த்தர் திரும்பி வந்திட்டார்ங்கற செய்தி அதுக்கப்புறம் பல காலம் என் மனசுல ஒலிச்சிக்கிட்டே இருந்திச்சி. அந்த சகோதரிகளோட ஐக்கியம் எவ்வளவு பிரகாசமாகவும் நடைமுறையாகவும் இருந்திச்சின்னு நினச்சேன். வேதாகமத்தில இருக்கிற ரகசியங்களயும் தேவனுடைய சித்தத்தயும் பத்தி நான் நிறய புரிஞ்சிக்கிட்டேன். நான் ஆச்சரியப்பட்டேன்: “கிழக்கத்திய மின்னலும் தேவனிடத்தில் இருந்துதானா வந்திருக்க முடியும்? நான் இதக் கேக்காம, கர்த்தர வரவேற்கும் வாய்ப்ப இழந்திட்டேன்னா, அது வருத்தப்படுற மாதிரி ஆயிடும்.” ஆனா சபை ஊழியர் சொன்னத நினைக்கும்போது நான் வழிவிலகிப் போயிடுவேனோன்னு கவலப்பட்டேன். என் இருதயம் இரு வெவ்வேறு திசைகள நோக்கி இழுக்கப்படுற மாதிரி இருந்திச்சி. அதனால நான் சரியான முடிவ எடுக்குறதுக்கு வழிகாட்டும்படி ஊக்கமா கர்த்தரிடத்தில ஜெபிச்சேன்.

அடுத்த நாள் காலையில அந்த சகோதரியோட இன்னொரு கலந்துரையாடல் ஆன்லைன்ல செய்ய வேண்டியிருந்தது. அவங்க எப்போதும் எவ்வளவு அன்பாகவும் பொறுமையாகவும் இருந்தாங்கங்றத நினச்சி, நான் கலந்துக்க மாட்டேங்கறத சொல்லாம இருந்தா அது மரியாத இல்லன்னு நினச்சேன். அதனால வழக்கம்போல ஆன்லைனுக்குப் போனேன், இணைப்பு கிடைச்சதும் நான் சொன்னேன், “உங்க ஐக்கியம் மிகவும் பிரகாசப்படுத்துறதாவும் நீங்க வாசிச்சது உண்மயிலேயே நடமுறையாவும் இருந்திச்சி. ஆனா நீங்க கர்த்தராகிய இயேசு மறுபடியும் வந்திட்டார்ன்னும் புதிய கிரியய செஞ்சி புதிய வார்த்தைகள வெளிப்படுத்துறார்னும் சொல்றீங்க. இது வேதாகமத்த தாண்டிப் போகுது, கர்த்தரின் வழியில இருந்து விலகிச் செல்லுது. தேவனுடய வார்த்தைகளும் கிரியைகளும் வேதாகமத்துக்குள்ள இருக்குன்னு போதகர்களும் மூப்பர்களும் சொல்றாங்க. வேதாகமத்துக்கு வெளியில தேவனிடத்தில இருந்து புதிய வார்த்தைகள் எப்படி வர முடியும்?” அப்போது சகோதரி சியே பொறுமையா சொன்னாங்க, “போதகர்களும் மூப்பர்களும் எப்பவும் என்ன சொல்றாங்கன்னா, ‘தேவனுடய எல்லா வார்த்தைகளும் கிரியயும் வேதாகமத்துக்குள்ளதான் இருக்கு வேற எங்கயும் பாக்க முடியாது.’ ஆனா இந்தக் கருத்து உண்மைகளோடும் தேவனுடைய வார்த்தைகளோடும் இணக்கமா இருக்கா? கர்த்தராகிய இயேசு எப்பவாவது இதச் சொன்னாரா? பரிசுத்த ஆவியானவர் சொன்னாரா? அது தேவனுடைய வார்த்தைகளயும் சத்தியத்தயும் அடிப்படையா கொண்டிருக்கலன்னா, இந்தக் கருத்து வெறும் மனுஷனுடைய கருத்துக்களில் ஒன்றுதானே தவிர, இதுக்கு ஆதாரமில்லை. வேதாகமத்த நல்லா அறிஞ்சவங்களுக்கு அது தெரியும் ஏன்னா பழய ஏற்பாட்ட தொகுத்தவங்க விஷயங்கள விட்டுருக்காங்க, தீர்க்கதரிசிகளால சொல்லப்பட்ட யேகோவா தேவனின் சில வார்த்தைகள் பழய ஏற்பாட்டில பதிவாகல. உதாரணமா எஸ்றாவின் தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில சேர்க்கப்படல, இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு உண்ம. கத்தராகிய இயேசு கிரிய செய்தபோது, நான்கு சுவிசேஷங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள குறைவான வார்த்தைகள மட்டுமே பேசல. அது யோவான் சுவிசேஷம் சொல்றபடிதான் இருக்கு, ‘இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்’ (யோவான் 21:25). போதகர்களும் மூப்பர்களும் சொல்ற கருத்த நாம ஏத்துக்கிட்டா, நாம வேதாகமத்தில பதிவுசெய்யப்படாத தேவனுடய வார்த்தைகள மறுதலித்து கண்டனம் செய்வதாகாதா? மேலும், கர்த்தராகிய இயேசு தெளிவா முன்னரே கூறியிருக்காரு: ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). வெளிப்படுத்தலில் இது பலமுற தீர்க்கதரிசனமா சொல்லப்பட்டிருக்கு: ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது(வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்கள்). அதன் பின் ஆட்டுக்குட்டியானவரால் திறக்கப்பட வேண்டிய புத்தகச்சுருள் மற்றும் ஏழு இடிகளின் முழக்கம். இந்த வார்த்தைகள், கடைசி நாட்களில் கர்த்தர் திரும்பி வரும்போது, அவர் அதிகமானவற்றைப் பேசுவார்ங்கறதையும் இந்த பேச்சுக்களை முன்கூட்டியே வேதாகமத்தில் பதிவுசெய்ய முடியாது என்பதையும் நமக்குச் சொல்லுது. தேவனுடைய வார்த்தைகள வேதாகமத்தில மட்டுந்தான் காண முடியும்னா, இந்த தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும்? தேவனே சிருஷ்டிகர், நித்தியமாய்ப் பாயும் ஜீவ தண்ணீரின் ஊற்று, அவர் எப்படி வேதாகமத்தில பதிவு செய்யபப்ட்டுள்ள இந்த குறைவான வார்த்தைகள மட்டுமே பேசியிருக்க முடியும்? ‘தேவனுடய கிரியையும் வார்த்தைகள் எல்லாமும் வேதாகமத்திலதான் இருக்கு வேறெங்கயும் பாக்க முடியாதுன்னு’ மத போதகர்கள் சொல்றாங்க, ஆனா இது மறுபடியும் வந்துள்ள கர்த்தராகிய இயேசுவின் கிரியையும் வார்த்தைகளயும் மறுத்து கண்டனம் செய்யலையா?”

அவரது ஐக்கியத்தக் கேட்ட பிறகு, “ஆமா, கர்த்தர் திரும்பி வந்து இன்னும் வார்த்தைகள பேசுவேன்னு தீர்க்கதரிசனம் சொல்லி இருக்காரு, மேலும் அந்த வார்த்தைகள் வேதாகமத்தில இருக்கிறதயும் தாண்டினதாக இருக்கணும்ன்னு” நான் நினச்சேன். ஆனா வேதாகமத்தில இருந்து விலகுறது எனக்கு தொந்தரவ அளிச்சிது, நான் நினச்சேன், “வேதாகமத்தில இருந்து விலகிறது மத நிந்தனைன்னு எப்போதும் போதகர்களும் மூப்பர்களும் சொல்றாங்க. நான் என் விசுவாசத்தில இருந்து விலகிப்போனா என்ன நடக்கும்? நான் கர்த்தர நீண்ட காலமாக விசிவாசிச்சி எப்போதும் வேதாகமத்த வாசிச்சிருக்கேன். உலகம் முழுதும் இருக்கிற கிறிஸ்தவங்களுக்கு வேதாகமமே விசுவாசத்துக்கான அடிப்பட. வேதாகமம்தான் நம்முடய விசுவாசத்தின் தூண். ஒருவர் அதிலிருந்து விலகிய பின் கர்த்தர அதுக்குமேலும் எப்படி விசுவாசிக்க முடியும்?” இத நினச்சி நான் அமைதியானேன்.

நான் ஒரு வார்த்தயும் பேசாதத பார்த்த சகோதரி சென் ஐக்கியத்த தொடர்ந்து கொண்டு போகல. எங்க தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, தேவன் வேதாகமத்தின்படி கிரியை செய்கிறாரா? என்ற ஒரு கிளிப்ப எனக்கு அனுப்பினார். இது வேதாகமத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்ற சுவிசேஷ திரைப்படத்தில் உள்ளது, அதப் பார்க்கும்படி என்னக் கேட்டிருந்தாரு. நான் அந்த லிங்கை திறந்தேன் அதில் முக்கிய கதாபாத்திரமான வாங் யுயே ஒரு போதகருடன் ஐக்கியப்படுவத பாத்தேன். அது என்ன உடனே கவர்ந்திச்சி. அவர் சொன்னார், “நீங்க தேவன் வேதாகமத்துக்கு வெளியே ரட்சிப்பின் கிரியய செய்றதில்லைன்னும், வேதாகமத்த தாண்டியது எதுவா இருந்தாலும் அது மதத்துக்கு விரோதம்னும் சொன்னீங்க. அதனால நான் உங்கக்கிட்ட ஒரு கேள்வி கேக்கணும்: முதலில் வந்தது எது, வேதாகமா அல்லது தேவனுடய கிரியயா? ஆதியில தேவன் எல்லாத்தையும் சிருஷ்டித்தார். அவர் பிரளயத்தால் பூமிய அழிச்சார், சோதோம் கொமோராவை எரிச்சார். இந்த விஷயங்கள செஞ்ச போது பழய ஏற்பாடு இருந்திச்சா? கிருபயின் காலத்தில கர்த்தராகிய இயேசு கிரிய செய்ய வந்தப்போ புதிய ஏற்பாடு இருந்திச்சா? பழைய, புதிய ஏற்பாடுகள் ரெண்டும் தேவனுடைய முடிக்கப்பட்ட கிரியைகளப் பத்திய ஜனங்களின் பதிவுகளின் அடிப்படயில தொகுக்கப்பட்டது. தேவன் வேதாகமத்திற்கு ஏற்ப கிரிய செய்றதில்ல, அது அவரக் கட்டுப்படுத்தாது ஏன்னா அவரு தம்முடய சொந்த நிர்வாகத் திட்டத்தின்படியும் மனுக்குலத்தின் தேவையின் படியுந்தான் கிரிய செய்றாரு. அதனால நாம தேவனுடய கிரியய வேதாகமத்துக்குள்ள அடக்க முடியாது அல்லது வேதாகமத்த பயன்படுத்தி தேவனுடய கிரியயின் எல்லய குறிக்க முடியாது, ஏன்ன தேவன் தம்முடய கிரியய செய்ய அவருக்கு உரிம இருக்கு.” சகோதரி வாங்கின் ஐக்கியத்தால என் இருதயம் பிரகாசமடஞ்சிது. நான் நினச்சேன், “கர்த்தராகிய இயேசு கிரிய செய்ய வந்தப்ப புதிய ஏற்பாடு இல்ல, தேவன் எல்லாத்தையும் சிருஷ்டிச்சி நியாயப்பிரமாணங்கள வெளியிட்டப்ப பழையஏற்பாடு இல்ல. இது மறுக்க முடியாதது! இதப் பத்தி நான் முன்னமே எப்படி யோசிக்காம இருந்தேன்?”

வீடியோவில ஐக்கியம் தொடர்ந்திச்சி: “வேதாகமத்த தாண்டி நாம எதயாவது சொன்னா அது மதவிரோதம்னா, வரலாறு முழுசும் இருக்கிற தேவனுடய வார்த்தைங்களயும் கிரியயையும் நாம கண்டனம் செய்றோமில்லயா? கர்த்தராகிய இயேசு கிரிய செஞ்சப்ப, அவர் அத பழைய ஏற்பாட்டின்படி செய்யல. அவரு மனந்திரும்புதலுக்கேற்ற வழிய பிரசங்கித்தாரு, வியாதியஸ்தர்கள சொஸ்தமாக்கினாரு, பிசாசுகளத் துரத்தினாரு, ஓய்வுநாள கடபிடிக்கல, ஜனங்கள ஏழு எழுபது தடவ மன்னிச்சாரு, மேலும் பல செஞ்சாரு—இதில ஒண்ணும் பழய ஏற்பாட்டில இல்ல. பரிசேயர்களும், பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இந்த விஷயங்கள கர்த்தருக்கு விரோதமா உபயோகிச்சி அவருடய கிரியய மதவிரோதம்னு கண்டனம் செஞ்சாங்க. அவங்க தேவன விசுவாசிச்சாங்க ஆனா அவர எதிர்த்தாங்க.” அந்த சகோதரி அப்புறமா சர்வவல்லமையுள்ள தேவனின் ரெண்டு பகுதிகள வாசிச்சாங்க. “வேதாகமத்தைக் குறித்த யதார்த்தம் ஒருவருக்கும் தெரியவில்லை. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஓர் ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)”). “இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதைக் கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாணக் காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாணக் காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதைப் பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்குப் பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றிப் பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். … அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளின் வெளிச்சத்தில் நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”).

சகோதரி வாங்க் அப்பறம் தொடர்ந்து சொன்னாங்க: “நியாயப்பிரமாண மற்றும் கிருபயின் காலங்களில தேவன் செஞ்ச இரு கட்ட கிரியைகளின் பதிவுதான் வேதாகமம். இது தேவனுடய இரு கட்ட கிரியயின் ஒரு சாட்சி, இதில அவரு எல்லாத்தையும் சிருஷ்டிச்சி மனுக்குலத்தயும் சிருஷ்டிச்ச பிறகு மனுக்குலத்துக்கு வழிகாட்டி மீட்டாரு. இது மனுக்குலத்த ரட்சிக்கும் தேவனின் முழு கிரியயையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவனுடய கிரிய எப்போதும் முன்னோக்கித்தான் போகுது. கடைசி நாட்கள்ல தேவன் ஒரு புதிய காலத்த ஆரம்பிச்சி புதிய கிரியய செய்றாரு. நம்மை பாவத்தில இருந்து நிரந்தரமா விடுவிக்கும் அதிகமான சத்தியங்கள அவரு மனுஷனுக்கு கொடுக்கிறாரு, அதனால நாம சுத்திகரிக்கப்பட்டு, ரட்சிக்கப்பட்டு, அவருடைய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். அதனால வேதாகமத்தில பதிவு செய்யப்பட்டுள்ள அவருடய பழய கிரியயின் அடிப்படயில தேவன் மனுஷன வழிநடத்தல, மேலும் குறிப்பா அவரு ஏற்கெனவே செஞ்ச் கிரியய திருப்பி செய்றதில்ல. சிருஷ்டிப்பு மற்றும் வேதாகமம் ஆகிய ரெண்டுக்கும் தேவன்தான் கர்த்தர். வேதாகமத்துக்கு அப்பாலும் போகவும் அவருடய நிர்வாகத் திட்டத்தின்படி புதிய கிரியய செய்யவும் அவருக்கு உரிம உண்டு. அதனாலதான் ‘தேவனுடய எல்லா வார்த்தயும் கிரியயும் வேதாகமத்தில இருக்கு மேலும் வேதாகமத்த விட்டு விலகிறது மதவிரோதம்’ என்கிறது ஏத்துக்க முடியாத ஒண்ணு, அது தேவன வரம்புக்குள் அடக்கி தேவன தூஷிக்கிது. இதச் சொல்ற யாரா இருந்தாலும் அவங்களுக்கு தேவனுடய கிரியயப் பத்தி தெரியல மற்றும் தேவன எதிர்க்கிறாங்க. தேவன் தமது திட்டப்படிதான் கிரிய செய்றாரு, வேதாகமத்தின்படி அல்ல. கர்த்தராகிய இயேசு மனந்திரும்புதலுக்கான வழிய பிரசங்கித்தாரு, பிசாசுகள துரத்தினாரு, வியாதியஸ்தர்கள சொஸ்தமாக்கினாரு, அவரு ஓய்வுநாள கடபிடிக்கல மேலும் ஜனங்களுக்கு எப்போதும் மன்னிகிறதுக்கு போதிச்சாரு—இது எல்லாம் பழய ஏற்பாட்ட தாண்டி போகலயா? அவரு பழய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்கள கூட மீறினாரு, இருந்தாலும் கூட இது தேவனுடய கிரிய இல்லயா?” நீண்ட காலமா எனக்கு கர்த்தர் மேல் விசுவாசம் இருந்திச்சி, மத போதகர்கள் சொன்னதையே நம்பி பற்றிக்கிட்டு இருந்தேன், அதாவது “தேவனுடய எல்லா வார்தைகளும் கிரியையும் வேதாகமத்தில இருக்கு, வேதாகமத்த விட்டு விலகுறது மதவிரோதம்.” அப்படின்னா இது நான் தேவனுடய கிரியய கண்டனம் செய்றது இல்லயா? நான் எவ்வளவு முட்டாள்தனமாவும் குழப்பத்தோடும் இருந்திருக்கேன்னு இப்ப புரியுது!

அதுக்குப் பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம், நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தயாரிச்ச சுவிசேஷப் படங்களயும் வீடியோக்களயும் யுடியூப்ல பாத்தேன். தேவனுக்கும் வேதாகமத்துக்கும் இடையிலான சம்பந்தம் என்ன? என்கிற ஒரு மூவி கிளிப்ப கிளிக் பண்ணேன். அந்தக் கிளிப்பில இருந்த தேவனுடய வார்த்தைகள் என்ன ஆழமா தொட்டுச்சி. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாகத் திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாகப் பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). “அவர்கள் நான் இருப்பதை வேதாகமத்தின் எல்லைக்குள் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்கள் என்னை வேதாகமத்துடன் ஒப்பிடுகிறார்கள்; வேதாகமம் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் வேதாகமம் இல்லை. அவர்கள் எனது பிரசன்னத்துக்கோ அல்லது கிரியைகளுக்கோ செவிசாய்ப்பதில்லை, மாறாக வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் தீவிரமான மற்றும் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். வேதத்தால் முன்னறிவிக்கப்பட்டிருந்தாலொழிய நான் செய்ய விரும்பும் எதையும் நான் செய்யக்கூடாது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அவர்கள் வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அளவிடுவதற்கும் என்னை நிந்திப்பதற்கும் அவர்கள் வேதாகமத்தின் வசனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு, வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்று கூறலாம். அவர்கள் தேடுவது என்னுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்லது சத்தியத்திற்கு இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்ல, ஆனால், வேதாகமத்தின் வார்த்தைகளுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள், மற்றும் அவர்கள் வேதாகமத்திற்கு இணங்காத எதையும் விதிவிலக்கு இல்லாமல், எனது கிரியை அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அத்தகையவர்கள் பரிசேயர்களின் கடமைப்பட்ட சந்ததியினர் அல்லவா? யூத பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்க மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் அந்தக் கால இயேசுவோடு இணக்கத்தைத் தேடவில்லை, ஆனால் எழுத்துக்களுக்கான நியாயப்பிரமாணத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றினார்கள், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவில்லை என்றும் மேசியாவாக இல்லை என்றும் அவரைக் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்று, அவர்கள் இறுதியில் குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களின் சாராம்சம் என்ன? அவர்கள் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேடவில்லை அல்லவா? எனது சித்தத்திற்கு அல்லது எனது கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பற்று வைத்திருந்தனர். அவர்கள் சத்தியத்தை நாடிய ஜனங்கள் அல்ல, மாறாக வார்த்தைகளைத் திடமாகப் பற்றிக்கொண்ட ஜனங்கள்; அவர்கள் தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் அல்ல, வேதத்தை விசுவாசிப்பவர்கள். அடிப்படையில், அவர்கள் வேதத்தின் கண்காணிப்பாளர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்”). இந்தக் கிளிப்ப பாத்த பிறகு நான் என்ன உணர்ந்தேன்னா வேதாகமத்த நல்லா அறிஞ்சிருக்கிறதும் தேவன உண்மயா அறியறதும் அல்லது அவருக்குக் கீழ்படிஞ்சிருக்கிறதும் ஒண்ணில்ல. யூத பரிசேயர்கள் வேதத்த விளக்கிறதில திறமபடச்சவங்க, ஆனா அவங்கதான் கர்த்தராகிய இயேசுவ சிலுவையில அறஞ்சாங்க. வேதாகமத்த புரிஞ்சிக்கிறது தேவன புரிஞ்சிக்கிறதுன்னு அர்த்தமாகாதுங்கிறத இது காட்டுது, வேதாகமத்த பின்பத்றதால மட்டும் அவங்க கர்த்தருடய வழிய பின்பத்துறாங்கன்னு அர்த்தமாகாது. நான் பல வருஷமா வேதாகமத்த வாசிச்சி அதப் பத்தி கொஞ்சம் அறிஞ்சிருந்தாலும், தேவன நான் அறியவே இல்லன்னு உணர்ந்தேன். கர்த்தர வேதாகமம் பிரதிநிதித்துவப் படுத்துதுன்னும், வேதாகமத்த விசுவாசிக்கிறது அவர விசுவாசிக்கிறதுன்னும், வேதாகமத்தப் பின்பத்றது கர்த்தருடய வழிய பின்பத்றதுன்னும் நான் தவறா நம்பினேன். தேவன் தோன்றிட்டார்ன்னும் அவர் கடைசி நாட்கள்ல கிரிய செய்றாருன்னும் சகோதரி சியே சாட்சி சொன்னப்ப நான் அதப் பாக்கத் துணியல. அப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள படிச்ச பிறகு, என் இருதயத்தில அவருடய வார்த்தைகள்தான் சத்தியமும் தேவனுடய சத்தம்ன்னும் அறிஞ்ச பிறகும் அத ஏத்துக்க எனக்கு கஷ்டமா இருந்திச்சி, ஏன்னா அவை வேதாகமத்தில பதிவு செய்யப்படல. நான் வேதாகமத்த ஆராதிச்சி அதப் பிடிச்சிக்கிட்டேனே தவிர தேவனுடய புதிய பேச்சையும் கிரியயையும் ஏத்துக்க மறுத்தேன். கர்த்தராகிய இயேசுவ எதிர்த்த பரிசேயர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? இந்த நினப்பு என்ன பயமுறுத்திச்சி. “நான் என்னுடய கருத்துக்கள விடணும்னு,” நான் நினச்சேன். “சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள நான் அதிகமா வாசிக்கணும்.”

அடுத்தக் கூட்டத்தில, அந்த சுவிசேஷ படங்கள பாத்ததில இருந்து எனக்கு என்ன கிடச்சிது, என்ன புரிஞ்சிக்கிட்டேங்கறத சகோதரிகளிடம் சொன்னேன். அவங்க ரொம்பவும் சந்தோஷப்பட்டு தேவனுடய வார்த்தைகளின் ஒரு பகுதிய எனக்குப் படிச்சிக் காட்டினாங்க. “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

அப்புறமா சகோதரி சியே ஐக்கியத்த பகிர்ந்துகொண்டு சொன்னாங்க, “கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் ராஜ்யத்தின் காலத்தை தொடங்கி கிருபயின் காலத்த முடிக்கிறாரு. முற்றிலுமா மனுக்குலத்த சுத்திகரிச்சி ரட்சிக்க அவர் சத்தியத்த வெளிப்படுத்தி தேவனுடய விட்டில இருந்து ஆரம்பிச்சி நியாயத்தீர்ப்பின் கிரியய செய்றாரு. சர்வவல்லமையுள்ள தேவன் மில்லியன்கணக்கான வார்த்தைகள பேசி இருக்காரு. பெரும்பாலானவைகள ராஜ்யத்தின் கால வேதாகமமான மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதில காணலாம். வேதாகமத்தில உள்ள முக்கியமான பின்வருவது போன்ற ரகசியங்கள அவர் வெளிப்படுத்தியிருக்காரு புத்தியுள்ள கன்னிகைகள் கர்த்தர வரவேற்கிறாங்க, எடுத்துக்கொள்ளப்படுதல்னா என்ன, பேரழிவுக்கு முன்னால ஜெயங்கொள்றவங்கள உருவாக்குதல், தேவனின் 6000 ஆண்டு நிர்வாகக் கிரியயின் ரகசியங்கள், அவருடைய மூன்று கட்ட கிரியை, மூன்று கட்ட கிரியைகளுக்கு இடையிலான தொடர்புகள், அவற்றின் பலன்கள், கடைசி நாட்களில் மனுவுருவெடுத்தல், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றின் ரகசியங்கள், வேதாகமத்த பற்றிய சத்தியம், இப்படிப் பல. எந்தக் குற்றங்களையும் சகித்துக் கொள்ளாத அவருடய நீதியான, மகத்துவமான மன்நிலயயும் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துறாரு. மனுக்குலத்த சாத்தான் சீர்கெடுத்தத பற்றிய சத்தியத்த அவர் வெளிப்படுத்தி நியாயந்தீர்க்கிறாரு, ஜனங்க ஏன் தேவனுக்கு கீழ்ப்படிய மறுத்து எதிர்க்கிறாங்க என்பதற்கான மூல காரணத்த பகுத்தறியுறாரு, மனுஷனப் பொறுத்த வரயில அவருடய சித்தத்தையும் அவர் மனுஷனிடத்தில் எதிபார்க்கிறதையும் நமக்கு சொல்றாரு. தேவனிடத்தில் வைக்கும் உண்மையான விசுவாசம்னா என்ன, தேவனுக்குக் கீழ்ப்படிதல், தேவனுக்குப் பயப்படுதல், தேவனுக்கு சாட்சி பகர்தல்னா என்ன, சத்தியத்த எப்படிக் கடபிடிச்சி நேர்மயா இருப்பது, எப்படி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கய வாழ்றது போன்றவையெல்லாம் இதில அடங்கும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் ஏராளம், நமக்கு தேவையானதெல்லாம் அதில இருக்கு. கடைசி நாட்கள்ல தேவன் மனுஷனுக்குக் கொடுக்கிற நித்திய ஜீவனுக்கான வழிதான் இந்த சத்தியங்கள். அவை நம்மள சுத்திகரிச்சு மாத்தும், பாவத்தில இருந்து நம்ம விடுவிக்கும், நம்ம முற்றிலுமா ரட்சிச்சி தேவனுடய ராஜயத்துக்குள்ள வழிநடத்தும்.”

அந்த சகோதரியின் ஐக்கியம் எல்லாத்தையும் சுத்தமா தெளிவாக்கியிருச்சி. சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, அவர் உண்மயில ஜீவ தண்ணீரின் நித்திய ஊற்று! சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள்தான் தேவனுடய சத்தம்னு நான் இருதயத்துக்குள்ள அறிஞ்சேன் மேலும் அவர்தான் மறுபடியும் வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு. நான் இவ்வளவு வருஷமா தேவன விசுவாசிக்கிறேன் ஆனா ஒருபோதும் அவர உண்மயா அறிஞ்சிக்கல, ஆனா அதுக்குப் பதிலா போதகரும் மூப்பர்களும் சொன்னத நம்பினேன். நான் தேவனின் பேச்சுக்களயும் கிரியையும் வேதாகமத்துக்குள்ளேயே சுருக்கிட்டேன், தேவனின் ராஜ்யத்தின் சுவிசேஷத்த ஏத்துக்க மறுத்தேன். இருந்தாலும் தேவன் என்ன கைவிடல, அந்த சகோதரிகளக் கொண்டு சுவிசேஷத்த மீண்டும் மீண்டும் பிரசங்கிக்க வச்சாரு. தேவனுடய சத்தத்தக் கேக்கவும் கர்த்தருடய வருகய வரவேற்கவும், சிங்காசனத்தில இருந்து பாயும் ஜீவ தண்ணீரின் ஆதாரத்த அனுபவிக்கவும் நான் பாக்கியம் பெற்றிருக்கேன். இது எனக்குக் கிடச்ச தேவனுடய கிருப. நான் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென...

பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தேவன் மீதான நம்பிக்கை பைபிளில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், பைபிளிலிருந்து கூறப்படுவது மதங்களுக்கு எதிரானது என்றும் பல சகோதர சகோதரிகள் நம்புகிறார்கள். சகோதரி சுன்கியு இந்த கருத்தையும் வைத்திருந்தார். பின்னர், ஒரு காலகட்டத்தில், அவள் பைபிளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றாள், இதனால் கர்த்தரை வரவேற்றாள்.

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 1)

தேவாலயங்கள் இன்னும் வெறிச்சோடி காணப்படுகின்றன மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் பலவீனமாக உள்ளனர். உண்மையான மற்றும் பொய்யான வழியை நாம் எவ்வாறு வேறுபடுத்தி கர்த்தரின் வருகையை வரவேற்க வேண்டும்? கற்றுக்கொள்ள இப்போது படிக்கவும்.