வானத்தைநோக்கி அண்ணாந்து பார்ப்பதனால் உண்மையில் உங்களால் கர்த்தரை வரவேற்க முடியுமா?

ஏப்ரல் 24, 2021

By Jin Cheng, South Korea

பேரழிவுகளுக்கு முன்னாடி தேவனுடைய ராஜ்யத்துக்குள்ல எடுத்து கொள்ளப்பட்ரனும்னு கர்த்தராகிய இயேசு மேகத்துல வருவதற்காக விசுவாசிகள் பலபேர் காத்துக்கிட்டிருக்காங்க. ஆனா இத்தன காலமும் பேரழிவுகள் அதிகரிக்கிறத அவங்க பாக்கிறப்ப, கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்துல இன்னும் வரல. நிறைய ஜனங்களோட விசுவாசம் தடுமாறுது. சிலர் சொல்றாங்க கர்த்தர் வருவது அவரோட சொந்த காரியமா இருக்கிறப்ப நாமதான் காத்திருக்கணும். மத்தவங்க சொல்றாங்க அவர் பேரழிவுகளுக்கு முன்னாடி வரலனா, அவர் அப்பயோ அல்லது அதற்கு பின்னாடியோ வருவார். இவங்க சொல்றது எதக் காட்டுது? அங்களோட விசுவாசம் அடிமட்டத்துல இருக்கிறதா அவை காட்டலையா? அவங்க விசுவாசத்த இழந்துட்டாங்க, அவங்க அத நாடுறதோ தேடறதோ இல்ல, ஆனா பேரழிவுகள் ஏற்பட காத்துட்டு இருக்காங்க. அவங்களுக்கு வேற என்ன செய்யறதுன்னு தெரியல. அவங்க பல வருஷமா வானத்த அண்ணாந்து பாத்துட்டிருக்காங்க, ஆனா இன்னும் கர்த்தர வரவேற்கல. இது உண்மயில சரியான அணுகுமுறையா? கர்த்தர வரவேற்கறதுல ரொம்ப முக்கியமானது எது? கர்த்தராகிய இயேசு சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வருது: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது(யோவான் 10:27). “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளி 3:20). வெளிப்படுத்துதல்ல பல இடத்துல இந்த தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கு: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் அத்தியாயம் 2, 3). ஆவியானவர் சபைகளுக்குச் சொல்றத தேடிக் கண்டுபிடிக்கறதும் தேவனுடைய சத்தத்த கவனித்துக் கேட்கறதும், தேவனோட வருகையை வரவேற்க மிக முக்கியமானதுனு இவ்வசனங்கள் காண்பிக்குது, மேலும் தேவ குரலக் கேளுங்க. தேவனோட குரலக் கேக்கிறவங்க கர்த்தர வரவேற்கிறாங்க, அவங்கதான் ஞானமுள்ள கன்னிகைகள். இந்த சத்தியம் எனக்கு முன்னாடி புரியல ஆனா என்னோட கருத்துகள், கற்பனைகளால, வானத்த அண்ணாந்து பாத்துக்கிட்டிருந்தேன். கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பி வந்து பல சத்தியங்கள வெளிப்படுத்தினாருனு ஒருத்தர் சாட்சி சொல்றத கேட்டப்ப, நா அத தேடவோ விசாரிக்கவோ இல்ல, நா கிட்டதட்ட கர்த்தர வரவேற்று, எடுத்து கொள்ளப்படும் வாய்ப்ப இழந்துட்டேன்.

என் பழைய திருச்சபையில, போதகர் இத பத்தி எப்பவும் பேசுவார். அப்போஸ்தலர் 1:11: “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.” கர்த்தர் திரும்ப வரும்போது அவர் ஒரு மேகத்துல வருவாருனு அவர் சொன்னார். அதனால நாம விழிச்சிருந்து, கர்த்தர வரவேற்க ஜெபிக்கனும். நா வேதாகமத்த வாசிச்சு, தினமும் ஜெபிப்பேனு உறுதியா இருந்தேன், கர்த்தர் ஒரு மேகத்துல வந்து, இந்த நாட்கள் ஒன்னுல என்ன அவர் ராஜ்யத்துக்கு எடுத்து கொள்வார்னு நம்பிக்கிட்டிருந்தேன்.

ஒரு நாள், நா ஒரு நண்பர் வீட்டுக்கு போனேன். அவர் ஒரு சீன மருத்துவ பிசியோதெரபி சிகிச்சை செய்துட்டிருந்தார். நாங்க பேசிட்டிருந்தப்ப, பிசியோதெரபிஸ்ட் திரு.ஜாங்க், ஒரு கிறிஸ்தவருனு கண்டுபுடிச்சேன், அதனால எங்க பேச்சும் வேதாகமம் பத்தி திரும்பிச்சு. சகோ.ஜாங்க் கடைசி நாட்களின் தேவ கிரியை சிலதக் குறிப்பிட்டார். அப்புறம் ஒரு வேதாகம வசனத்த மேற்கோள் காட்னார்: “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22). பிறகு அவர் என்ட, “கர்த்தராகிய இயேசு ஏற்கனவே சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்துட்டார்னு சொன்னார். அவர் மாம்சத்தில வந்து, கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பின் கிரியைகள செய்யும்படியாய், சத்தியங்கள வெளிப்படுத்துறாரு.” கர்த்தர் திரும்ப வந்துட்டார்னு கேள்விப்பட்டப்ப, நா மகிழ்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இப்படி நெனச்சுக்கிட்டேன், “கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருப்பது எவ்வளவு அற்புதம்! நா பல வருஷங்களா இந்த நாளுக்காக ஏங்குறேன்—அவர் இறுதியாக வந்துட்டார்!” ஆனா நா மகிழ்ச்சியாக உணர்ந்தப்ப சகோ.ஜாங்க் “மாம்சத்தில்” னு சொன்னத நா திடீர்னு உணர்ந்தேன். அப்ப என் இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சுது. ஏன்னா போதகரும் மூப்பர்களும் எப்பவும் கர்த்தர் ஒரு மேகத்துல வருவாருனும், அவர் மாம்சத்தில் வருவாருனும் சொல்ற எந்த செய்தியும் பொய்யானது, நாம அத ஏத்துக்கொள்ளக்கூடாதுனு சொல்வாங்க. சகோ.ஜாங்கினால் நான் பாதிக்கப்படாதபடி எச்சரிப்பானேன். நா பல வருஷங்களா விசுவாசியா இருந்து, வேதாகமத்தை அதிகமாக வாசிச்சேன். ஆனா கர்த்தர் மாம்சத்தில திரும்பி வர்றத பத்தி நா எதயும் எப்பவும் பாத்ததில்ல. அதனால நா அவர்ட்ட, “கர்த்தர் மாம்சத்தில திரும்பி வந்திருப்பது எப்படி சாத்தியம்னு? கேட்டேன். அப்போஸ்தலர் 1:11 கூறுது: ‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.’ வெளிப்படுத்தல் 1:7 கூறுது: ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்.’ இந்த வசனங்கள்ல இருந்து நாம பாக்கலாம், கர்த்தர் ஒரு மேகத்தின் மீது எடுத்துக்கொள்ளப்பட்டதால, அவர் திரும்பவரும்போதும் மேகத்துல தான் வருவாரு. நீங்க கர்த்தர் மனுஉருவத்துல திரும்பி வந்துட்டார்னு சொல்றது வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கு முரணானது.”

பிறகு அவர் சிரிச்சுகிட்டே என்ட, “சகோதரரே, கர்த்தர் மேகத்து மேல வருவார்னு வேதாகமம் குறிப்பிட்டாலும், கர்த்தர் எப்படி வருவாருன்றத பத்தி ஒரே மாதிரியான தீர்க்கதரிசனம் இல்ல. கடைசி நாட்கள்ல அவர் மனுஷகுமாரனா மாம்சத்தில் ரகசியமா வருவதைப் பத்தி நிறைய தீர்க்கதரிசனங்களும் இருக்கு.” அவர் வேறு சில வசனங்களையும் குறிப்பிட்டார்: “திருடனைப்போல் உன்மேல் வருவேன்(வெளி 3:3). “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்(மாற்கு 13:32). “நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). அதோட “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). அப்புறம் அவர் இந்த வேதாகம வசனங்கள்ல ஐக்கியப்பட்டு, “திருடனைப்போல்” “மற்றொருவனும் அறியான்” னு குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் யாரும் அறியாம கர்த்தர் ரகசியமா வருவார், அவர அவங்க பாத்தாலும் யாரும் அவர அடையாளம் கண்டுபிடிக்காதபடி வருகிறாருனு அர்த்தம்னு சொன்னார். தீர்க்கதரிசனங்கள்ல “மனுஷகுமாரன்” மனுஷகுமாரனின் வருகையை பத்தியும் சொல்லப்பட்டிருக்கு. “மனுஷகுமாரன்” பத்திய எந்த குறிப்பும் அவர் மனுசனிடத்துல பிறந்தவர், அவர் மாம்சமும் இரத்தமும் கொண்டவர், சாதாரண மனிதத்தன்மை கொண்டவர்னு சொல்லுது. கர்த்தராகிய இயேசு மனுஷகுமாரனாகிய கிறிஸ்துனு அழைக்கப்பட்டார். அவர் பார்க்கறதுக்கு நம்ம போலவே இருந்தார். அவர் ஒரு சாதாரண மனிதரப் போல உண்டு, உடுத்தி, மத்த ஜனங்களோடவே வாழ்ந்தார். அது தேவனோட ஆவியானவராகவோ அல்லது உயிர்த்தெழுதலுக்கு பிறகான கர்த்தராகிய இயேசுவோட ஆவிக்குரிய உடலாகவோ இருந்திருந்தா, அவர் “மனுஷகுமாரன்” னு அழைக்கப்பட்டிருக்க மாட்டார். அதனால மனுஷகுமாரனோட வருகையக் குறிப்பிடுறது கர்த்தர் மாம்சத்தில் திரும்ப வர்றார்னு அர்த்தமாகும். சகோ.ஜாங்க் அந்த ஐக்கியத்த பகிர்ந்துக்கிட்டார்: “கர்த்தர் ஒரு மேகத்துல வரது நிச்சயமா மனசுல ஆழமா பதியர மாதிரி உலகயே அசைக்கிற காட்சியா இருக்கும். எல்லாரும் நிலைதடுமாறுவாங்க, ஒருத்தர் கூட அவர துணிஞ்சு எதிர்க்க மாட்டாங்க. ஆனா கர்த்தரோட தீர்க்கதரிசனத்த பத்தி சிந்திங்க: ‘அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ அது எப்படி நிறைவேறும்?” அவர் சொன்னார், “தேவன் மனுஷகுமாரன் போலவே மாம்சத்தில தோன்றி கிரியை செய்தார்னா, அவர் பாடுபட்டு, இந்த சந்ததியால ஆகாதவனென்று தள்ளப்பட மட்டுமே முடியும். கர்த்தராகிய இயேசு தோன்றி, கிரியை செஞ்சது போல தான் இதுவும். தேவனோட சத்தத்த கேட்க முடியாதவங்க, கர்த்தராகிய இயேசுவோட தெய்வீக தன்மையை அடையாளம் காணாதவங்க; தங்களோட கருத்துக்கள பிடிச்சுக்கிட்டு, அவர எதிர்த்து, கண்டனம் செய்றாங்க. அவங்க இறுதியா அவர சிலுவையில அறைஞ்சாங்க. அப்படின்னா இந்த தீர்க்கதரிசனங்கள் சொல்லுது, மனுஷகுமாரனின் வருகை, ‘திருடனைப்போல்’, ‘இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது,’ இதெல்லாம் கர்த்தர் இரகசியமா ‘மனுஷகுமாரனா’ மாம்சத்தில் திரும்பி வர்றதயே குறிக்கிது.” இந்த ஐக்கியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. நா எப்பவும் கர்த்தர் மனுஷகுமாரனா கிரிய செய்ய திரும்புகிறதப் பத்தி பல வேதாகம தீர்க்கதரிசனங்கள் இருந்துச்சுங்கறத கற்பனை செஞ்சதே இல்ல. நா ஆச்சரியப்பட்டேன், “வேதாகமத்த பலதடவை வாசிச்ச பிறகும் நா எப்படி இத பாக்காம விட்டேன்? போதகர் அல்லது மூப்பர்கள் தங்களோட எந்த வேதாகம பேச்சுக்கள்லயும் இத ஏன் குறிப்பிடல?” சகோ.ஜாங்கோட போதனை உயர்ந்ததுனும், மறுக்கமுடியாத வேதாகமத்தப் பத்திய தனித்துவமான புரிதல் அவருக்கு இருந்ததுனும், நா ஏத்துக்க வேண்டியிருந்தது. கர்த்தர் ஒரு மேகத்துல வரதப் பத்தி வேதாகமம் உண்மயில என்ன சொல்லுதுனும், போதகரும் மூப்பர்களும் எப்பவுமே மத்த எதுவுமே பொய்னு எப்படி சொல்றாங்க. அவங்க வேதாகமத்த நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க, அதனால அநேகமா அவங்களால அத தப்பா புரிஞ்சுக்க முடியலனு நான் நினைக்கறேன். ஆனாலும், சகோ.ஜாங்கோட ஐக்கியம் வேதாகமத்துக்கு ஏத்த மாதிரி இருந்தது. என்ன நெனக்கனு எனக்கு உண்மயில தெரியல. என்னால அதப் புரிஞ்சுக்க முடியல, நா அதப் பத்தி அதிகமா நினைக்க நினைக்க அதிக நிலையில்லாதவனா உணர்ந்தேன். நா உண்மயில அவரோட ஐக்கியத்த கவனிக்கறத நிறுத்துனேன். அப்புறம் அங்கயிருந்து வெளியேற ஒரு சாக்குபோக்கையும் கண்டுபிடிச்சேன்.

நா வீட்டிற்கு திரும்பிபோனேன், ஆனா என் உணர்வுகள நிலைப்படுத்த முடியல. சகோ.ஜாங்கோட ஐக்கியம் என் மனதில திரும்ப திரும்ப எதிரொலிச்சது. நா கவலைப்பட்டேன்: “கர்த்தர் உண்மயிலே திரும்பி வந்து, நா கவனிக்கலேனா, அவர வரவேற்கற வாய்ப்ப நா இழந்துருவேன்ல?” ஆனா அப்புறம் அவர் ஒரு மேகத்துல வருவாருனு வேதாகமம் சொல்றதப் பத்தி நெனச்சேன், மதகுருமார்களும் அததான் சொல்றாங்க. என் விசுவாசத்துல குறைஞ்சு போயிருவேனோனு நா பயந்தேன். இது சின்ன விஷயமில்லனு எனக்குத் தெரியும். அதுக்கப்பறம் பல தடவ அவரோட திருச்சபைக்கு வானு சகோ.ஜாங்க் என்னை கூப்டார். நான் முரண்பாடா உணர்தேன், என்னால முடிவெடுக்க முடியல. கடைசீல வீட்டில வேலனு காரணம் சொல்லி தப்பிச்சேன். ஆனா அது கர்த்தருடைய சித்தத்திற்கு ஏத்ததா இல்லனு நா உணர்ந்தேன், நான் சமாதானமா இல்ல. எனக்கு பகுத்தறிவ தாங்க, எனக்கு வழிகாட்டுங்கனு நா தேவனிடம் ஜெபிச்சேன். நா ஆச்சர்யப்படற மாதிரி, சில நாட்களுக்குப் பிறகு சகோ.ஜாங்க் என்னப் பாக்க என்னோட வீட்டுக்கு வந்தார். சகோதரர் ஜாங்கை பல முறை நிராகரிச்சதுக்காக நான் வருந்தினேன் அதனால நா என் பிரச்சினைய அவர்ட்ட சொன்னேன். நா சொன்னேன், “சகோ.ஜாங்க், நீங்க போன தடவ மனுஷகுமாரனா இரகசியமாக மாம்சத்தில் கர்த்தர் திரும்புகிறத பத்தி வேதத்தோட ஒத்து போகிற மாறி இருந்துச்சு, ஆனா அதுல எனக்கு ஒன்னு புரியல. கர்த்தர் ஒரு மேகத்து மேல திரும்பி வருவார்னு வேதாகமம் தெளிவாக் கூறுது. வெளிப்படுத்துதல் சொல்லுது, ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்பறம் அவர் ஒரு மேகத்துல வருவார்னும், அவர எல்லாரும் பாப்பாங்கனும் அவரப் பத்தி சொல்ற இந்த தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்? இது முரண்பட்டிருக்கே?”

சகோ.ஜாங்க் சிரிச்சுட்டே பதில் சொன்னார், “கர்த்தருடைய வருகையப் பத்திய எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும். எந்த முரண்பாடும் இல்ல. அங்க நிகழ்வுகளோட வரிசதா இருக்கு. தேவன் முதல்ல மனுஷகுமாரனா ரகசியமாக மனுஉரு கொள்றார் பின்னாடி வெளிப்படையா ஒரு மேகத்துல தோன்றுவாரு. தேவன் இரகசியமா மாம்சத்தில கிரியை செய்றப்ப, தேவனோட வீட்லேருந்து தொடங்கி நியாயந்தீர்க்கிற கிரியைக்கான சத்தியங்கள அவர் வெளிப்படுத்துறார். அவரோட சத்தத்த கேட்டு, கடைசி நாட்கள்ல அவரோட கிரியைய ஏத்துகிட்டவங்க, அவரோட சிங்காசனத்துக்கு முன்பா உயர்த்தப்பட்ட புத்தியுள்ள கன்னிகைகள். தேவ வார்த்தைகளோட நியாயத்தீர்ப்ப அவங்க ஏத்துக்கிறாங்க, பேரழிவுகளுக்கு முன்னாடி ஜெயம்கொள்றவங்களா தேவன்அவங்கள உருவாக்குறார். பிறகு அவர் பேரழிவுகள பொழிஞ்சு, நல்லவங்களுக்கு வெகுமதி அளிச்சு, துன்மார்க்கர தண்டிக்கறார். பேரழிவுகள் ஒரு முடிவுக்கு வந்ததும், அவர் வெளிப்படையா ஒரு மேகத்துல தோன்றுவாரு, கடைசி நாட்களின் கிறிஸ்துவ எதிர்த்து கண்டனம் செய்தவங்க எல்லாரும் அவங்க கண்டனம் செய்த சர்வவல்லமையுள்ள தேவன் வேற யாரும் இல்ல, திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு தான்னு பாப்பாங்க, அவங்க தங்களோட மார்கள்ல அடிச்சுகிடு, அழுது, தங்களோட பற்கள கடிப்பாங்க.” “இது வெளிப்படுத்துதலில உள்ள தீர்க்கதரிசனத்த நிறைவேற்றும்: ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7).” அதுக்கப்பறம், அவர் எனக்காக சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சிலத வாசிச்சார். நா இப்ப அத வாசிக்க விரும்புறேன். “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லவருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் காலத்தில் இந்த முடிவு இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார். அவர்கள், அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத கர்வமும் கொண்டவர்கள். இத்தகைய சீரழிவுகளுக்கு இயேசுவால் எவ்வாறு பலனளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசுவின் வருகை ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, திமிரான நபராக நீங்கள் இருக்கக்கூடாது. மாறாக பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருக்கவேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). தேவ வார்த்தைகள வாசிச்ச பின்னாடி, சகோ.ஜாங்க் சொன்னாரு: “கர்த்தரோட வருகைக்காக காத்திருக்கறப்ப, நாம ஞானமுள்ள கன்னிகைகளா இருந்து, தேவ சத்தத்த கவனிச்சு கேட்கணும். சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்களின் நியாயந்தீர்க்கும் கிரியைய செய்து, மனுஷகுலத்த சுத்திகரித்து இரட்சிக்கிற எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்துறார். நாம இத தேடி ஆராஞ்சு பாத்து, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சு, அது சத்தியமா, அது தேவனுடைய சத்தமான்னு பாக்கணும். இதுல நம்மோட கருத்துக்கள மட்டுமே நம்ப முடியாது.” மேலும் அவர், “யூத பரிசேயர்கள் தங்களோட கருத்துக்களையே நம்பியிருந்தாங்கனும், மேசியாவுக்காக கண்மூடித்தனமா காத்திருந்து கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய சத்தியங்கள நாடலனும் சொன்னார். அவங்க அவர எதிர்த்து, கண்டனம் செய்து, அவர சிலுவையில் அறைஞ்சாங்க. அவங்க தேவனோட மனநிலைய அவமதிச்சு அவரால சபிக்கப்பட்டாங்க. கர்த்தரோட வருகைய ஆராய்ரப்ப நாமும் அவர் ஒரு மேகத்துல தான் வரணும், மத்த எதுவுமே பொய்யானதுங்கற நம்ம கருத்துக்களோடும் ஒத்துபோனா, மதகுருக்களோட சேர்ந்து தேவனோட கடைசி நாட்களின் கிரியைய எதிர்க்கவும் கண்டிக்கவும் செஞ்சோம்னா, நாம பரிசேயர்கள் செஞ்ச அதே தவறச் செஞ்சு மிக கொடூரமான பாவத்தச் செய்றவங்களா இருப்போம். அதுக்கப்பறம் நாம அழுது நம்ம பற்கள கடிக்கலாம், ஆனா அது ரொம்ப தாமதமாகிடும்.”

அவரோட ஐக்கியத்துக்கு பிறகு கர்த்தரோட வருக படிப்படியா நிகழுதுனு நா புரிஞ்சுகிட்டேன். அவர் தன்னோட நியாயத்தீர்ப்பின் கிரியைகள முதல்ல மாம்சத்தில செய்றார், அப்பறம் ஜெயம்கொள்றவங்க குழுவ உருவாக்குறார், அப்புறம் அவர் ஒரு மேகத்துல வெளிப்படையா வர்றார். கர்த்தரோட வருகையப் பத்தின தீர்க்கதரிசனங்கள் எல்லாம் ஒன்னு பின்னாடி ஒன்னா நிறைவேறும். அந்த நேரத்தில நா ரொம்ப முட்டாளாவும் குருடனாவும் இருப்பேன்னு உணர்ந்தேன். வருஷகணக்கான விசுவாசத்துக்குப் பிறகும் எனக்கு வேதாகமம் புரியாம மதகுருமார்களையும் என்னோட சொந்த கருத்துக்களையும் பின்பற்றி இருந்திருக்கேன். கர்த்தரோட குரலக் கேட்டு அவர வரவேற்க நா முயற்சிக்கல, ஆனா அதிர்ஷ்டவசமா தேவன் சகோ.ஜாங்கை என்ட்ட சுவிசேஷத்த அதிகதிகமா பகிர்ந்துக்க தூண்டினார். இல்லனா என்னோட கற்பனைகள பிடிச்சுக்கிட்டு கர்த்தர் திரும்ப வர்றத பாக்க நா தவறிருப்பேன். கடைசியா நா வெளியேற்றப்பட்டிருப்பேன். நா சகோ.ஜாங்கிட்ட, “தேவனோட கிரியை எவ்வளவு ஞானமானதுனும் நடைமுறைக்குரியதுனும் உங்கள் ஐக்கியம் எனக்குக் காட்டியிருக்குனு சொன்னேன். தேவனோட மனுஉரு ரகசியமாக கிரியை செய்ய வருவது உண்மயில நம்மோட இரட்சிப்பு தான். ஆனா அதுல இன்னும் சிலது எனக்கு புரியல. கர்த்தர் மனுஉருவில் திரும்பி வந்தார்னு நீங்கள் சாட்சியம் சொல்றீங்க. மனுஉருன்னா உண்மயில என்ன? சர்வவல்லமையுள்ள தேவன் உண்மயில மாம்சத்தில் தேவனா இருக்கிறார்னு நீங்க எப்படி உறுதியாஇருக்கீங்க?”

சகோ.ஜாங்க் எனக்கு தேவ வார்த்தைகள்ல இரண்டு பத்திகள வாசிச்சார். “‘மனுஷரூபமெடுத்தல்’ என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன்நிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்” “சாதாரண மனிதத்தன்மையுள்ள கிறிஸ்து ஆவியானவரால் உணரப்பட்ட ஒரு மாம்சமாவார், மேலும் சாதாரண மனிதத்தன்மை, இயல்பான உணர்வு மற்றும் மனித சிந்தனை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். ‘உணரப்படுவது’ என்பது தேவன் மனிதனாக மாறுதல், ஆவியானவர் மாம்சமாக மாறுதல் ஆகும்; இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவன் தாமே சாதாரண மனிதத்தன்மையுடன் ஒரு மாம்சத்தில் வசிக்கிறார், அதன் மூலம் அவருடைய தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்துகிறார்—இதுதான் உணரப்பட வேண்டும் அல்லது மனுஷனாக அவதரிக்க வேண்டும் என்பதாகும்” “மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்து செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது. அவருடைய மனிதத்தன்மையாக இருந்தாலும் அல்லது தெய்வீகத்தன்மையாக இருந்தாலும், இரண்டுமே பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகின்றன. கிறிஸ்துவின் சாராம்சம் ஆவியானவர் ஆவார், அதாவது தெய்வீகத்தன்மையுள்ளவர் ஆவார். ஆகையால், அவருடைய சாராம்சம் தேவனாகவே இருக்கிறது; இந்த சாராம்சம் அவரது சொந்த கிரியைக்கு இடையூறு விளைவிக்காது, மேலும் அவரால் தனது சொந்த கிரியையை அழிக்கும் எதையும் செய்ய முடியாது, மேலும் அவர் தனது சொந்த சித்தத்திற்கு எதிரான எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கவும் மாட்டார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”).

பிறகு சகோ.ஜாங்க் சொன்னார், “விசுவாசிகளான நாம எல்லாரும் தேவனோட மனுஉரு கர்த்தராகிய இயேசுனு அறிவோம், ஆனா மனுஉரு தொடர்பான சத்தியத்த யாருமே உண்மயில புரிஞ்சுக்கல. இப்ப கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் நமக்கு மனுஉருவோட சத்தியத்தையும் மறைபொருளையும் வெளிப்படுத்தியிருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளிலிருந்து நாம, மனுஉருன்றது மனுக்குலத்தின் மத்தியில கிரியை செய்ய வருகிற, ஒரு சாதாரண மனுஷ உடல்ல இருக்கிற தேவனோட ஆவியானவர். தேவனோட மனுஉரு ஒரு சாதாரண மனிதனப் போல தோன்றுறார். அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவராதெரியாம, அவர் மத்த எல்லோரயும் போல சாப்படறாரு, வாழறாரு. அவர் ஒரு சாதாரண மனிதனப் போலவே உணர்ச்சிகளோட இருக்கார், ஜனங்கள் அவர அணுகலாம், ஆனா தேவனோட மனுஉருவின் சாரம் தெய்வீகமானது. அதனாலதான் கிறிஸ்துவால எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சத்தியத்த வெளிப்படுத்த முடியும். அவர் தேவனோட மனநிலையையும், ஞானத்தையும், அவர்கிட்ட இருக்கறதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துறார். அவர் தேவனோட சொந்த கிரியையச் செய்றார். இது எந்த மனிதனாலும் அடைய முடியாத ஒன்னு. அது வெளியில இருந்து பாக்கறப்ப, கர்த்தராகிய இயேசு இயல்பான மனுஷனா தெரியறது போன்றது, அவர் மனிதகுலத்தின் மத்தியில ஒரு உண்மயான வாழ்க்கைய வாழ்ந்தார். ஆனா கர்த்தராகிய இயேசு பல சத்தியங்கள வெளிப்படுத்தினார், மேலும் மனுஷகுலத்துக்கு மனந்திரும்புதலுக்கான வழியைக் கொடுத்தார். அவர் ஜனங்களோட பாவங்கள மன்னிச்சு, கிருபையையும் இரக்கத்தையும் கொண்ட தேவனோட மனநிலைய வெளிப்படுத்தினார். அவர் பல அடையாளங்களையும் அதிசயங்களையும், அதாவது, ஐந்து அப்பங்கள இரண்டு மீன்கள வச்சு 5,000 பேருக்கு போஷிச்சது போலவும், காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தியது போலவும், இறந்தவங்கள உயிர்த்தெழுப்பியது போலவும், பலவற்ற காட்டினார். இது தேவனோட அதிகாரத்தயும் ஆற்றலயும் முழுமையா வெளிப்படுத்துச்சு. இறுதியில, மனிதகுலத்தின் மீட்பின் கிரியைய நிறைவேற்ற கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டார். கர்த்தராகிய இயேசுவோட கிரியையும் வார்த்தைகளும் தேவனோட சொந்த கிரியைனும் வார்த்தைகள்னும் இது காட்டுது, அவர் மாம்சத்தில தேவனா இருக்கிறார்.” சகோதரர் தொடர்ந்து சொன்னார், “அதனால நாம தேவனோட மனுஉருவை அடையாளம் காண, தோற்றத்தப் பாக்காம தேவனோடசத்தத்த கேக்கணும். கிறிஸ்துவின் கிரியையும் வார்த்தைகளும் நமக்கு சத்தியத்தயும், தேவனோட மனநிலையயும், தேவனோட ஞானத்தயும் சர்வவல்லமையயும், மேலும் அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் என்பதயும் காட்டுது. அப்படி தான், இது மாம்சத்தில தேவனோட கிரியை மற்றும் வார்த்தைகள் என்பதில உறுதியாக முடியும்.”

அவரோட ஐக்கியம் எனக்கு காரியங்கள கொஞ்சம் தெளிவுபடுத்துச்சு. கிறிஸ்து, பெரியவராவோ, இயற்கைக்கு அப்பாற்பட்டவராவோ இல்லாம ஒரு இயல்பான மனுஷன போல இருக்கிறார், ஆனா அவர் தேவனோட சாராம்சத்தக் கொண்டிருக்கிறார். அவர் சாதாரண மாம்சத்தில இருக்கிற தேவனோட ஆவியானவர்னு நா உணர்ந்தேன். வருஷகணக்கான விசுவாசத்துக்கு பிறகும் இந்த சத்தியங்களையும் இரகசியங்களையும் நா புரிஞ்சுக்கல.

சகோ.ஜாங்க் தன்னோட ஐக்கியத்தை தொடர்ந்தார்: “சர்வவல்லமையுள்ள தேவன் மனுஉருவோட எல்லா சத்தியங்களையும் இரகசியங்களையும் நமக்கு வெளிப்படுத்துறார். சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல இந்த வார்த்தைகள பேசலன்னா, மனுஉரு பின்னாடி உள்ள சத்தியத்த உண்மயா புரிஞ்சுக்காம, இந்த சீர்கெட்ட மனுஷகுலம் கர்த்தரை எப்பவும் நம்பியிருக்கும், மனுஉரு பின்னால உள்ள சத்தியத்த உண்மயா புரிஞ்சுக்காம நம்பியிருக்கும் அத யாராலேயும் கண்டுபிடிக்கவும் முடிஞ்சிருக்காது.” “சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒருவர் தான். வெளியில இருந்து பாத்தா, அவங்க ரெண்டுபேரும் ரொம்ப இயல்பா இருக்காங்க, இயல்பை தவிர வேறொன்றுமில்ல, ஆனா சர்வவல்லமையுள்ள தேவன் மனிதகுலத்த சுத்திகரிக்கிற, இரட்சிக்கிற எல்லா சத்தியங்களயும் வெளிப்படுத்துறார் அவர் தேவனோட வீட்லயிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பைச் செஞ்சிட்டிருக்கார்.” அப்பறம் அவர் சொன்னார், “தேவனோட 6,000 வருஷ நிர்வாக திட்டத்தின் இரகசியங்களயும், அவருடைய கிரியையின் நோக்கத்தயும், மனிதன இரட்சிக்கும் தேவனோட மூன்று கட்ட கிரியைகளின் குறிக்கோள்களையும் முக்கியத்துவத்தையும், அப்புறம் மனுஉருவோட மறைபொருள்களயும் தேவனோட நாமங்களயும், வேதாகமத்தின் பின்னாடி உள்ள கதையயும், சாத்தான் மனிதகுலத்தை எப்படி கெடுக்கிறான்னும், சாத்தானால சீர்கெட்ட மனிதகுலத்தோட சத்தியத்தையும் சாராம்சத்தையும் தேவனை எதிர்க்கும் மற்றும் பாவம் செய்யும் ஜனங்களின் அடிப்படையயும், மனிதகுலத்த முழுமையா சுத்திகரிக்கவும், இரட்சிக்கவும் தேவன் எப்படி நியாயத்தீர்ப்பின் கிரியையை செய்றார்னும், தேவன் ஜனங்கள அவங்க இயல்பின்படி எப்படி வகைப்படுத்தறார்னும், எல்லாரோட இலக்கையும் முடிவையும் அவர் எப்படி தீர்மானிக்கிறார்னும், மேலும் பலவற்றயும் அவர் வெளிப்படுத்தினார். கடைசி நாட்கள்ல தேவன் நியாயத்தீர்ப்பின் கிரியையின் போது எந்த அவமதிப்பையும் ஏற்றுக்கொள்ளாத தன்னோட நீதியான மனநிலையை அவர் முழுமையா வெளிப்படுத்துறார்.” இந்த நிலயில, சகோ.ஜாங்க் என்ட்ட கேட்டார், “தேவனை தவிர வேற யாரால அவரோட திட்டத்தின் இரகசியங்கள வெளிப்படுத்த முடியும்? யாரால சத்தியத்தையும் தேவனோட நீதியான மனநிலையையும் வெளிப்படுத்த முடியும்? யாரால நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சு மனிதன முழுமையா சுத்திகரித்து இரட்சிக்க முடியும்?” நா சொன்னேன், “தேவனால் மட்டுமே முடியும்.” அதுக்கு அவர், “ஆமா. னு ஏத்துக்கிட்டார். மாம்சத்தில உள்ள தேவனால மட்டுமே இத்தகைய நடைமுறை வழியில் மனிதனக் இரட்சிக்கும்படி கிரியை செய்யவும் பேசவும் முடியும்! இது மனுஷகுமாரனா மாம்ச வடிவத்தில தேவனால செய்யப்பட்ட கிரியை.” அப்பறம் அவர் என்ட்ட, ஜனங்க எவ்ளோ அதிகமா சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிக்கிறாங்ளோ, அவரோட கிரியைய உணர்றாங்களோ, அவ்ளோ அதிகமா, சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்படும் எல்லா வார்த்தைகளும் சத்தியமும், தேவனோட குரல் என்பதிலும் உறுதியாவாங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளே, கடைசி நாட்களின் கிறிஸ்து அவரே, ஒரே சத்தியமான தேவனோட தோன்றல்! என்பதற்கான போதுமான ஆதாரம் ஆகும்!

இந்த நிலயில நா ரொம்ப உற்சாகமா உணர்ந்தேன். நா சொன்னேன், “சகோதரரே, இப்ப எனக்கு தேவனோட மனுஉரு, சத்தியத்தின் மிகப்பெரிய இரகசியமுனு புரியுது!” “மாம்சத்தில உள்ள தேவன் முக்கியமா எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்துறார், தேவனோட கிரியையைச் செய்றார், அதனால கர்த்தர வரவேற்க தேவனோட சத்தத்தக் கேக்கறது ரொம்ப முக்கியமானது. யாரால சத்தியத்தை வெளிப்படுத்தவும் தேவனோட கிரியையைச் செய்யவும் முடியுமோ அவர் மாம்சத்தில தேவனாக இருக்கிறார். தேவனோட குரலக் கேட்டு, அவரோட புது கிரியையை ஏத்துகிறது மூலமா, நாம கர்த்தர வரவேற்கிறோம், கர்த்தருக்கு முன்னாடி எடுத்துக் கொள்ளப்படுகிறோம்.” அவர், “நீங்க உணரது முழுசா பரிசுத்த ஆவியானவரோட ஞானத்தால தானு!” சொன்னார். சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியையை நா புறக்கணித்த எல்லா நேரங்களையும் நா திரும்ப நெனச்சேன் நா ரொம்ப குருடனாவும் முட்டாளாவும் இருந்ததுக்காக என்னையே வெறுத்தேன். நா பல வருஷமா விசுவாசித்தேன், ஆனாலும் இன்னும் கர்த்தர தெரிஞ்சுக்கல. அதுக்கு பதிலாக நா என் கருத்துக்கள பிடிச்சுக்கிட்டு, அவர வரவேற்கும்படியா கர்த்தரோட குரலக் கேக்க முயற்சிக்காம, கர்த்தர் ஒரு மேகத்துல வர்றதுகாக முட்டாள்தனமா காத்துட்டிருந்தேன். நா அவர் திரும்ப வந்துட்டாருனும் கடைசி நாட்களின் சத்தியங்களை வெளிப்படுத்திகிட்டிருக்காருனும், நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்கின்றாருனும் யாரோ சாட்சியமளிக்கிறத கேட்டப்ப, நா அத கவனிக்கல. நா கிட்டத்தட்ட கர்த்தருக்கான கதவை மூடினேன். அப்புறம் நா, இந்த சத்தியங்களையும் இரகசியங்களையும் வெளிப்படுத்திய சர்வவல்லமையுள்ள தேவன், திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுதான்னு முழுசா நம்பினேன்—அவர் மாம்சத்தில இருக்கிற தேவன். நா உண்மயில தேவனுக்கு நன்றி சொல்றேன். என்னுடைய கலகத்தினால தேவன் என்னைக் கைவிடல, ஆனா என்ட்ட சுவிசேஷத்தை திரும்ப திரும்ப பகிர்ந்துக்க சகோ.ஜாங்கை தூண்டினார், அதனால நா தேவனோட குரலக் கேக்கவும், ஆட்டுக்குட்டியின் பாதச்சுவடுகளோட இணைஞ்சு பயணஞ்செய்ய முடியும். இது உண்மயில தேவன் எனக்கு எல்லையற்ற அன்பைக் காட்டுவதாகும்! சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

திருச்சபைத் திரைப்படம் | மனுஷகுமாரனின் வருகையின் இரகசியம் (சிறப்பம்சம்)

கர்த்தருடைய வருகையைப் பற்றி பேசுகையில், கர்த்தராகிய இயேசு சொன்னார், "அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால்...

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

Leave a Reply