எப்படி நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் புகாரளித்தேன்

நவம்பர் 22, 2023

சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னோட கடமையச் செய்ய வெளியூர்ல இருந்து என்னோட உள்ளூர் திருச்சபைக்குத் திரும்பி வந்தேன். தண்ணீர் பாய்ச்சும் உதவிப் போதகரா சியாவோ லியூ இருத்தாங்கன்னு தலைவர் ஜாங் சின் சொன்னத நான் கேட்டேன். நான் அதிர்ந்து போனேன். சியாவோ லியு கருத்து வேறுபாடுகள விதைப்பவங்கன்னும், ஜனங்கள அடக்கி, தண்டிப்பவங்கன்னும், திருச்சபையில அதிகாரத்தப் பெற விரும்புறவங்கன்னும் எனக்குத் தெரியும், அவங்களும் ஒரு சில பொல்லாதவங்களும் தலைவர்களயும் ஊழியர்களயும் பொய்யானவங்கன்னு சொல்லித் தாக்கி, திருச்சபையில குழப்பத்த ஏற்படுத்தினாங்க. அந்த நேரத்துல, சகோதர சகோதரிகள் அவங்களோட நடத்தையின் அடிப்படையில அவங்கள ஒரு பொல்லாதவங்கன்னு அடையாளங்கண்டு அவங்கள வெளியேற்றுவதுக்கான ஆவணங்கள தயார் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்க ஏன் தண்ணீர் பாய்ச்சும் உதவிப் போதகரா அப்ப இருந்தாங்க? சியாவோ லியு இப்ப மாறியிருந்ததாவும், தன்னோட கடமையில ஒரு பாரமுள்ளவங்களா இருந்ததாவும் யார் சொன்னாங்க, வளர்ச்சிக்கான கண்ணோட்டத்துல அவங்கள அன்போடு நான் பாக்கணும் அப்படின்னு நான் ஜாங் சின்கிட்ட கேட்டேன். எனக்கு சந்தேகம் இருந்தாலும் கூட, நான் அப்பத்தான் திரும்பி வந்திருந்தேன், அதனால என்ன நடந்துச்சுங்கறது எனக்குத் தெரியல, ஒரு தலைவியா, ஜாங் சின் ஜனங்களத் தேர்ந்தெடுப்பதுல கொள்கைகளுக்கு எதிரா போக மாட்டாங்கன்னு நான் நெனச்சேன், அதனால நான் அதுக்கும் மேல கேட்கல. இதுக்கு முன்னாடி அவங்களோட கூட்டாளியா இருந்தத சகோதரி பாங் லிங் பணிநீக்கம் செய்யப்பட்டதுலருந்து ஒரு கடமையச் செஞ்சதோ அல்லது கூடுகைகள்ல கலந்துக்கிட்டதோ இல்லன்னும், அதனால் அவங்க வெளியேற்றப்படணும்னும் ஜாங் சின் குறிப்பிட்டாங்க, அதோடு பாங் லிங்கோட பொல்லாத நடத்தைக்கான உதாரணங்களக் கொடுக்கச் சொல்லி ஜாங் சின் என்கிட்ட கேட்டாரு. இது எனக்கு சந்தேகத்த ஏற்படுத்துச்சு. பாங் லிங் தன்னோட கடமையில எந்த பாரத்தையும் கொண்டிருக்கல. அவங்க நடைமுறைப் பணிகளச் செய்யாத ஒரு தவறான தலைவியா இருந்தாங்க. ஆனா பணிநீக்கம் செய்யப்பட்டதுக்கப்புறமா, அவங்க அதுக்கப்புறமும் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சாங்க, பொது விவகாரங்கள்ல கலந்துக்கிட்டாங்க, அதோடு எந்தப் பொல்லாங்கும் செய்யல. அவங்க ஏன் வெளியேற்றப்படணும்? அதப் பத்தி நான் எவ்வளவு அதிகமா நெனச்சேனோ, அவ்வளவு அதிகமாக அது தவறா தெரிஞ்சுச்சு. கடந்த காலத்துல நான் ஜாங் சின்னோடு பழகுனப்போ, பழிவாங்கும் ஆசை அவங்களுக்கு ரொம்ப வலுவா இருந்துச்சுங்கறது எனக்கு ஞாபகம் இருக்குது. பாங் லிங் ஒருதடவ மேலிடத் தலைவர்கள்கிட்ட ஜாங் சின் தன்னோட கடமைய ஒரு பாரமில்லாம செஞ்சதா புகாரளிச்சாங்க. இந்தச் சம்பவத்தால அவங்க வன்மம் வச்சுக்கிட்டு, பாங் லிங்கப் பழிவாங்க விரும்பியிருக்கக் கூடுமோ? அப்படின்னா ஜாங் சின் பாங் லிங்கை தண்டிச்சுக்கிட்டிருந்தாங்க. அது பொல்லாப்பு செய்வதா இருந்துச்சு! ஆனா பாங் லிங்கோட சமீபத்திய நடத்தையப் பத்தி எனக்கு இன்னும் தெரியாதுங்கறதயும் நான் உணர்ந்தேன். அதனால ஜாங் சின்னுக்குப் பிரச்சனை இருந்துச்சுன்னு என்னால உறுதியா சொல்ல முடியல. நான் அத உறுதியாத் தெரிஞ்சுக்கற வரை காத்திருக்க முடிவு செஞ்சேன்.

அதுக்கப்புறமா, ஒரு கூடுகையப்போ ஜாங் சின் உண்மைகளத் திரிச்சு பாங் லிங்கை நியாயந்தீர்த்தாருன்னு கேள்விப்பட்டேன், ஒரு சகோதரி அவங்கள மறுத்துப் பேசினப்போ, அந்த சகோதரியும் பாங் லிங்கும் தலைமைத்துவத்தத் தாக்க கூட்டு சேர்வதா அவங்க கண்டனம் செஞ்சு, அந்த சகோதரியத் தனிமைப்படுத்த ஏற்பாடு செஞ்சாங்க. பாங் லிங் மத்தவங்கள அன்பாக நடத்தினார்ன்னு வேற ஒரு சகோதரி சொன்னாங்க. சகோதரியோட பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதா சொல்லி, அப்போது ஜாங் சின் பொய் சொல்லி, அதோடு அவங்கள மூணு மாசங்களா வீட்ல தனிமைப்படுத்திட்டாங்க. பொது விவகாரங்களுக்குப் பொறுப்பாளியா இருந்த ஒரு சகோதரியும் இருந்தாங்க, ஜாங் சின்னுக்கு அவங்க அறிவுரை சொன்னதால, ஜாங் சின் அவங்களோட கடமையச் செய்யவிடாம அவங்கள நிறுத்திட்டாங்க. நானும் அதிர்ச்சியடைஞ்சேன். எப்படி ஜாங் சின்னால கொஞ்சம் கூட தேவனுக்குப் பயப்படாம இருக்க முடிஞ்சுச்சு? ஜனங்கள அடக்குறதுக்காக அவங்க நிறைய பொல்லாத செயல்கள செஞ்சாங்க. அவங்க அடக்கி வச்சவங்க எல்லாருமே திருச்சபையில சத்தியத்தப் பின்தொடர்ந்தவங்களா இருந்தாங்க. ஜாங் சின்கிட்ட நிச்சயமா ஒரு பிரச்சனை இருந்துச்சு. ஐக்கியங்கொண்டு பிரச்சனையப் பகுத்தறியறதுக்கா, புதுசா வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுன சகோதரி லி சின்ருயிகிட்ட போனேன். சின்ருயி என்கிட்ட, “சியாவோ லியு எந்த மனந்திரும்புதலயும் வெளிப்படுத்துறதில்ல. அவங்க இன்னும் தனக்காக வாக்குவாதம் செஞ்சு, தன்னைப் பாதுகாத்துக்கறாங்க அவங்க கலந்துக்கற ஒவ்வொரு கூடுகையிலயும், திருச்சபை வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்குறாங்க. பாங் லிங் தலைவியா இருந்தப்போ, சியாவோ லியுவோட பொல்லாத நடத்தையக் கண்டுபிடிச்சாங்க. அதனால, பாங் லிங்கைப் பழிவாங்க விரும்புறதா சியாவோ லியு சொல்லுறாங்க” அப்படின்னு சொன்னாங்க. நான் ஆத்திரமடைஞ்சேன். ஜாங் ஜின் உண்மையிலயே சியாவோ லியு மனந்திரும்பியிருத்தார்ன்னு சொன்னாங்க. திருச்சபைக்கு இடையூறு விளைவிச்ச பொல்லாத ஒருத்தர அவங்க நிச்சயமா மன்னிச்சுக்கிட்டு இருந்தாங்க‌. இது தவறான தலைமைத்துவத்துக்கான ஒரு வெளிப்பாடு இல்லையா? ஆனா நான் நெனச்சேன், ஜாங் சின் ரொம்ப காலமா ஒரு தலைவியா இருந்து வரல, நான் அவங்களுக்கு எந்த ஐக்கியத்தயும் கொடுத்து உதவல. முதல்ல இந்தப் பிரச்சனைகள அவங்ககிட்ட சுட்டிக்காட்ட நான் முடிவு செஞ்சேன். ஜாங் சின்னை சந்திச்சதுக்கப்புறமா, அவங்களோட கடமைகளச் செய்யுறதுலருந்து அந்தச் சகோதரிகளத் தடுத்ததுல அவங்க கொள்கைகள மீறியதா நான் அவங்ககிட்ட சொன்னேன். எதிர்பாராதவிதமா அவங்க என்னிடத்துல சத்தம்போட்டு, “சிலர் எனக்குக் கீழ்ப்படிய மறுக்குறாங்க, என்னோட முதுகுக்குப் பின்னாடி என்னையப் பத்தி தவறா பேசுறாங்க! என்னையப் பத்தி யார் கருத்துக்களக் கொண்டிருக்காங்கங்கறது எனக்குத் தெரியும். அவங்க எனக்குக் கீழ்ப்படியலேன்னா, மேலிடத் தலைவர்கள்கிட்டதான் புகார் செய்யணும்! நான் செய்யுற எல்லாமே நீதியாவும் நேர்மையாவும் இருந்துச்சு. என்னையப் பத்தி யார் சொன்னாலும் நான் பயப்படமாட்டேன்” அப்படின்னு சொன்னாங்க. ஆனா அவங்களோட மோசமான பதில் என்னைய பயமுறுத்துச்சு. அப்போது, திருச்சபையில அவங்க மட்டுந்தான் இறுதி முடிவ எடுத்துக்கிட்டு இருந்தாங்க, அவங்க சொல்றத யாரெல்லாம் கேட்காம இருந்தாங்களோ, அவங்கள அடக்கி அவங்க தண்டிச்சாங்க. அவங்க கொடுமைக்காரியேயல்லாம வேற யாருமில்ல. நான் ஒரு பிரச்சனைய சுட்டிக்காட்டினேன், நான் தொடர்ந்து விஷயங்களச் சுட்டிக்காட்டி அவங்கள அம்பலப்படுத்தினா, என்னோட கடமையச் செய்வதுலருந்து என்னைய அவங்க தடுத்துருவாங்கன்னு நான் பயப்படுற அளவுக்கு அவங்க ரொம்ப கெட்டவங்களா இருந்தாங்க. அப்படி நடந்தா என்னோட வாழ்க்கை பாதிக்கப்படாதா? அப்படி நெனச்சவுடனே, அவங்க பிரச்சனைகளச் சுட்டிக் காட்டுறத நிறுத்திட்டேன். நான் வீட்டுக்கு வந்ததுக்கப்புறமா, ரொம்ப குற்ற உணர்ச்சிய உணர்ந்தேன். பொல்லாப்பு செய்யுற ஒருத்தவங்க திருச்சபையத் தொந்தரவு செஞ்சுக்கிட்டிருந்தாங்க, சகோதர சகோதரிகள் அடக்கப்பட்டாங்க. விஷயத்தக் கையாளுறதுக்குப் பதிலாக, ஜாங் சின் ஜனங்கள அடக்கிக்கொண்டிருந்தாங்க, அவங்களோட பிரச்சனைய நான் சுட்டிக்காட்டினப்போ, அவங்க அத ஏத்துக்கல. இந்த நிலைமைய மேலிடத் தலைவர்கள்கிட்ட தெரிவிக்கணும்ன்னு எனக்குத் தெரியும். அதுக்கப்புறமா, நான் சின்ருயியப் பாக்கப் போனேன். புகார் கடிதம் எழுதுறதுக்கான கொள்கைகள நாங்க கலந்துபேசினோம் ஜாங் சின்னைப் பத்திப் புகாரளிக்கத் தயாரானோம். ஆனா நாங்க ஜாங் சின்னோட பொல்லாத நடத்தைகள எழுதி முடிச்சு, அத ஒப்படைக்கத் தயாரானப்போ, நான் மறுபடியும் தயங்குனேன். எங்களோட புகார் கடிதத்தப் பத்தி ஜாங் சின் கண்டுபிடிச்சுட்டா, அவள் ஒரு குற்றச்சாட்ட ஏற்படுத்தி, நம்ம மேல பழிசுமத்தி, நம்மள வெளியேற்றினா நாம என்ன செய்யறது? நான் வெளியேற்றப்பட்டுட்டா என்னால எப்படி இரட்சிக்கப்பட முடியும்? இத நினைச்சுக்கிட்டு ரொம்ப நாளா கடிதத்தக் கொடுக்கல. ஆனா திருச்சபையில நடந்த குழப்பத்த நான் பாத்தப்ப, அதப் பத்தி புகாரளிக்காததப் பத்தி நான் வருத்தப்பட்டேன்.

ஒருநாள் ராத்திரி, நான் சின்ருயி வீட்டுக்குப் போனப்ப, திடீர்ன்னு ஜாங் சின் வந்தாங்க. அதோடு சின்ருயி திருச்சபையில தன்னைய அம்பலப்படுத்தினதுக்காக ஆக்ரோஷமா குற்றஞ்சாட்டினாங்க. அவங்களோட மோசமான நடத்தையப் பாத்து எனக்கு ரொம்ப கோபம் வந்துச்சு. அவங்க உண்மையிலயே ரொம்ப கொடூரமானவங்களா இருந்தாங்க. அவங்க திருச்சபையில காட்டுமிராண்டித்தனமா இருந்தாங்க, ஆனாலும் மத்தவங்க அவங்கள அம்பலப்படுத்துறதத் தடைசெஞ்சாங்க. ஜனங்களுக்கு பேசுறதுக்குக் கூட உரிமை இல்லாம இருந்துச்சு, முழு திருச்சபையும் அவங்களோட கட்டுப்பாட்டுல இருந்துச்சு. திருச்சபையோட பணியப் பாதுகாக்க நான் நீதிக்காக எழுந்திருச்சு நின்னு, ஜாங் சின்னை அம்பலப்படுத்த வேண்டியிருந்துச்சு. ஆனா அவங்க எவ்வளவு அகந்தையானவங்கங்கறதயும், அவங்க எப்படி யாரோட பேச்சையும் கேட்காம, பழிவாங்குற எண்ணத்தக் கொண்டிருந்தாங்கங்கறதயும் நெனச்சுப் பாத்தப்போ, நான் அவங்களத் தூண்டிவிட்டா, அவங்க தண்டிக்குற அடுத்த ஆள் நானாக இருக்கலாம்ன்னு நெனச்சேன். என்னைய வெளியேத்துறதுக்கு அவங்க ஏதாவது குற்றச்சாட்டக் கண்டுபிடிச்சிருக்கக் கூடும். நான் ரொம்ப முரண்பட்டதா உணர்ந்தேன், அதனால் எனக்கு தைரியத்தயும் நம்பிக்கையயும் தரும்படி நான் அமைதியா தேவனை நோக்கிக் கூப்பிட்டேன். நான் தேவனோட வார்த்தைய நெனச்சுப் பாத்தேன், “ஒவ்வொரு திருச்சபையிலும் திருச்சபைக்குச் சிக்கலை ஏற்படுத்தும் அல்லது தேவனின் கிரியையில் தலையிடும் நபர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மாறுவேடத்தில் தேவனின் வீட்டிற்குள் ஊடுருவிய சாத்தான்கள். … இந்த ஜனங்கள் திருச்சபையின் வழியாகச் செல்கிறார்கள், தங்கள் எதிர்மறை எண்ணங்களைப் பரப்புகிறார்கள், மரணத்தைத் தூண்டுகிறார்கள், அவர்கள் விரும்பியபடி செயல்படுகிறார்கள், அவர்கள் விரும்புவதைச் சொல்கிறார்கள், அவர்களைத் தடுக்க யாரும் துணிவதில்லை. அவர்கள் சாத்தானின் மனநிலையினால் நிரம்பியிருக்கிறார்கள். மரணத்தின் காற்று திருச்சபைக்குள் நுழைந்ததும் அவர்கள் தொந்தரவை ஏற்படுத்துகின்றனர். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் திருச்சபைக்குள் உள்ளவர்கள், தங்களை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாமல் கைவிடப்படுகிறார்கள், அதே நேரத்தில் திருச்சபையைத் தொந்தரவு செய்து மரணத்தைப் பரப்புபவர்கள் உள்ளுக்குள் கொந்தளிக்கிறார்கள், மேலும் என்னவென்றால், பெரும்பாலான ஜனங்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய திருச்சபைகள் சந்தேகமின்றி, சாத்தானால் ஆளப்படுகின்றன; பிசாசு அவர்களின் ராஜா. திருச்சபையார்கள் எழுந்து தலைமைப் பிசாசுகளை நிராகரிக்காவிட்டால், அவர்களும் இறுதியில் அழிந்து போவார்கள். இனிமேல், இதுபோன்ற திருச்சபைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொஞ்சம் சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடியவர்கள் அதற்காக முயற்சிக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை அகற்றப்படும். ஒரு திருச்சபையானது சத்தியத்தைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லாதவர்கள் எவரையும், தேவனுக்காகச் சாட்சியாக நிற்கக்கூடிய எவரையும் கொண்டிருக்கவில்லை என்றால், அந்தத் திருச்சபை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மற்றும் மற்ற திருச்சபைகளுடனான அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும். இது ‘புதைக்கும் மரணம்’ என்று அழைக்கப்படுகிறது; சாத்தானைக் கைவிட்டதன் அர்த்தம் இதுதான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை”). தேவனோட வார்த்தை எனக்கு தைரியத்தயும் பலத்தயும் கொடுத்துச்சு, நான் அதுக்கப்புறமா பயப்படல. தேவனோட நீதியான மனநிலை குற்றத்தப் பொறுத்துக்காது, பொல்லாதவங்களயும் அந்திக்கிறிஸ்துக்களயும் பொருத்தவரையில, தேவன் அவங்கள வெறுத்து அருவருக்க மட்டுமே செய்யுறாரு! அவங்க அதிகாரத்த வச்சுக்கிட்டு, கொஞ்ச காலம் சபையில வெறித்தனமா நடந்துக்கிட்டாலும், கடைசியில அவங்க அம்பலப்படுத்தப்பட்டு வெளியேத்தப்படுறாங்க. தேவனோட வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்குது. துன்மார்க்கரும் அந்திக்கிறிஸ்துகளும் திருச்சபையில அதிகாரத்த வச்சிருக்குறப்போ, யாரும் சத்தியத்தக் கடைப்பிடிக்கலேன்னா, அப்போ, இந்த ஜனங்க திருச்சபையில வெறித்தனமா நடந்துக்கற பொல்லாத சேனைகள மன்னிச்சுவிடுறாங்க. அப்படிப்பட்ட திருச்சபை சாத்தானால ஆளப்படுது, அதோடு உறுப்பினர்கள் மனந்திரும்பலேன்னா, அவங்க தேவனால கைவிடப்பட்டு புறம்பாக்கப்படுவாங்க. நான் அதிர்ந்து போனேன். ஜாங் சின் திருச்சபையில ஒரு கொடுமைக்காரியா இருந்தாங்க, சகோதர சகோதரிகளைத் தாக்கி தண்டிச்சுக்கிட்டு இருந்தாங்க, ஆனாலும் நான் என்னையப் பாதுகாத்துக்கறதுக்காக, அத அம்பலப்படுத்தவும் நிறுத்தவும் நான் எழும்பி நிக்கல, அதோடு அவங்களயும் சியாவோ லியுவையும் பொல்லாப்பு செய்யவும் திருச்சபைப் பணிகளத் தொந்தரவு செய்யவும் நான் அனுமதிச்சேன். நானும் சாத்தானோட பக்கமா நின்னுக்கிட்டு தேவனை எதிர்த்துக்கிட்டு இருந்தேன். அவங்களோட பொல்லாப்புல எனக்கும் பங்கு இருந்துச்சு. இத உணர்ந்ததும், பொல்லாப்பு செய்யுறவங்களப் பாதுகாத்ததுக்கிட்டும் மத்தவங்களத் தண்டிக்க தன்னோட பதவியப் பயன்படுத்திக்கிட்டும், அந்திக்கிறிஸ்துவோட பாதையில நடந்துக்கிட்டும் இருந்ததுக்காக ஜாங் சின்னை அம்பலப்படுத்த எனக்கு தைரியம் கிடைச்சுச்சு. இதக் கேட்டதுக்கப்புறமா, ஜாங் சின் வாயடச்சுப் போனாங்க. உடனே அவங்க பேச்சை மாற்றி, பாங் லிங்கை மறுபடியும் திருச்சபைக்குள்ள அனுமதிக்க ஒத்துக்கிட்டு, அதுக்கப்புறமா அவங்க அங்கயிருந்து கிளம்பிட்டாங்க.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளின் ரெண்டு பத்திகள் எனக்கு ஓரளவு பகுத்தறிவக் கொடுத்துச்சு, அதோடு, நான் ஜாங் சின்னோட சாராம்சத்த அதிகத் தெளிவா பாக்க முடிஞ்சுச்சு. தேவனோட வார்த்தை சொல்லுது, “ஓர் அந்திக்கிறிஸ்துவினுடைய சாராம்சத்தின் மிகவும் வெளிப்படையான தன்மைகளில் ஒன்று என்னவென்றால் அவர்கள் தங்கள் சொந்த சர்வாதிகாரத்தை நடத்தும் கொடுங்கோலர்களைப் போன்றவர்கள் என்பதே: அவர்கள் யார் சொல்வதையும் கேட்கமாட்டார்கள், அவர்கள் எல்லோரையும் கீழானவர்களாகப் பார்ப்பார்கள், மேலும் மக்களின் வலிமைகளையும், அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் மற்றும் செய்கிறார்கள், அல்லது அவர்களுக்கு என்ன நுண்ணறிவுகளும் கருத்துகளும் இருக்கின்றன என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், அவர்கள் அவர்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்; அவர்களோடு பணிபுரியவும் அவர்கள் செய்யும் எதிலும் பங்கேற்கவும் யாருக்கும் தகுதி இல்லை என்பது போன்றது இது. இதுதான் அந்திக்கிறிஸ்துகள் கொண்டிருக்கும் மனநிலையின் வகை. சிலர் இதை மோசமான மனிதத்தன்மையோடு இருப்பது என்று கூறுகிறார்கள்—ஆனால் இது எப்படி வெறும் பொதுவாகக் காணப்படும் மோசமான மனிதத்தன்மையாக இருக்க முடியும்? இது முற்றிலுமாகச் சாத்தானின் மனநிலை, மேலும் இத்தகைய மனநிலை மிகமிகக் கொடூரமானது. அவர்களுடைய மனநிலை மிகமிகக் கொடூரமானது என்று ஏன் நான் கூறுகிறேன்? அந்திக்கிறிஸ்துகள் தேவனுடைய வீடு மற்றும் திருச்சபையின் எல்லா நலன்களையும் அபகரித்து, வேறு யாரும் தலையிடாமல், தங்களால் நிர்வாகிக்கப்பட வேண்டிய தங்களின் தனிப்பட்ட சொத்தாகவும் கருதுகிறார்கள். திருச்சபையின் வேலையைச் செய்யும்போது அவர்கள் நினைக்கும் விஷயங்கள் அவர்கள் சொந்த நலன்கள், அவர்களின் சொந்த அந்தஸ்து மற்றும் சொந்த பிம்பம் மட்டுமே ஆகும். அவர்கள் யாரையும் தங்கள் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்க அனுமதிக்க மாட்டார்கள், திறமையான மற்றும் தங்கள் அனுபவங்கள் மற்றும் அனுபவ சாட்சியங்களைப் பற்றிப் பேசக்கூடிய எவரையும், அவர்களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் அச்சுறுத்த அனுமதிக்க மாட்டார்கள். மேலும் அதனால், அனுபவ சாட்சியைக் கொடுக்கக்கூடியவர்களையும், சத்தியத்தை ஐக்கியப்படுத்தவும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு வழங்கவும் கூடியவர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், போட்டியாளர்களைப் போன்று விலக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள், மேலும் அவர்கள் அனைவரையும் மற்றவர்களிடமிருந்து முற்றிலுமாகத் தனிமைப்படுத்தவும், அவர்களின் பெயரை முற்றிலுமாகக் கெடுக்கவும், அவர்களைத் தாழ்வு நிலைக்குக் கொண்டு வரவும் தீவிரமாக முயற்சிக்கிறார்கள். அப்போதுதான் அந்திக்கிறிஸ்துகள் நிம்மதியாக இருப்பார்கள். … அவர்கள் தேவனுடைய வீட்டின் நலன்களைக் கருத்தில் கொள்கிறார்களா? இல்லை. எதைப்பற்றி அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் அந்தஸ்தை எப்படிப் பிடித்துக் கொள்வது என்பது பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். உண்மையான பணியைத் தங்களால் செய்யமுடியாது என்று அவர்களுக்குத் தெரிந்தாலும்கூட, அவர்கள் நல்ல திறமைகொண்ட சத்தியத்தைப் பின்தொடர்கிற மக்களை பண்படுத்தவோ ஊக்குவிக்கவோ மாட்டார்கள்; தங்களை முகஸ்துதி செய்பவர்களையும், பிறரைப் போற்றி வணங்கப் பொருத்தமானவர்களையும், அவர்கள் இருதயங்களில் தங்களைப் புகழ்ந்து பாராட்டுபவர்களையும், இணங்கி நடப்பவர்களையும், சத்தியத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் வேறுபடுத்தி அறிய முடியாதவர்களையும் மட்டுமே அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். அந்திக்கிறிஸ்துகள் தங்களை சேவிக்க, தங்களுக்காக ஓட, ஒவ்வொரு நாளையும் தாங்கள் சொல்வதைச் செய்வதில் நேரத்தைச் செலவழிக்க இந்த ஜனங்களைத் தங்கள் பக்கமாகக் கொண்டு வருகிறார்கள். இது திருச்சபையில் அந்திக்கிறிஸ்துகளுக்கு அதிகாரத்தை அளிக்கிறது, அதாவது அநேகர் அவர்களிடம் நெருங்கி வருகிறார்கள், அவர்களைப் பின்பற்றுகிறார்கள், மேலும் யாரும் அவர்களைஅவமதிக்கத் துணிவதில்லை. அந்திக்கிறிஸ்து பண்படுத்தும் இந்த ஜனங்கள் எல்லாரும் சத்தியத்தைப் பின்தொடராதவர்களாவர். அவர்களில் பெரும்பாலானோர் ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்வதில்லை, மற்றும் விதிகளைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எதையும் அறியார்கள். அவர்கள் அப்போது இருக்கிற போக்குகளையும் அதிகாரங்களையும் பின்பற்ற விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு வல்லமைவாய்ந்த எஜமானனைக் கொண்டிருப்பதால் அசட்டுத் தைரியமுள்ளவர்களாய்—மூடர்களின் ஒரு கும்பலாய் இருக்கிறார்கள். அந்திகிறிஸ்துகள் இந்த ஜனங்களின் ஞானத்தந்தையாக தங்களை அமைத்துக் கொள்கிறார்கள், குறிப்பாகத் தங்ககளுக்குத் தேவயானவற்றைச் செய்யும்படி அவர்களை சீர்படுத்துகிறார்கள். ஒரு திருச்சபையில் அந்திக்கிறிஸ்து அதிகாரத்தில் இருக்கும்போதெல்லாம், அவர்கள் எப்பொழுதும் தங்களது உதவியாளர்களாக மூடர்களையும் ஒழுங்கீனமானவர்களையும் நியமிப்பார்கள், அதே நேரத்தில் சத்தியத்தைப் புரிந்துகொண்டு கைக்கொள்ளக்கூடிய திறமையுள்ளவர்களையும் வேலை செய்யக்கூடிய ஜனங்களையும்—மற்றும் குறிப்பாக நடைமுறைப் பணி செய்யும் திறன் கொண்டவர்களாய் இருக்கும் தலைவர்களையும் பணியாளர்களையும் ஒதுக்கியும் அடக்கியும் வைப்பார்கள்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் எட்டு (பகுதி ஒன்று)”). “ஓர் அந்திக்கிறிஸ்துவால் எதிர்ப்பாளர்களாகக் கருதப்படுவோர் யார்? குறைந்த பட்சம், அவர்கள் அந்திக்கிறிஸ்துவை ஒரு தலைவர் எனத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்கள்; அவர்களை பெருமையாக நோக்கிப் பார்க்காதவர்கள் அல்லது அவர்களை ஆராதிக்காதவர்கள், அவர்களைச் சாதாரண மனிதர்களாக நடத்துபவர்கள். அது ஒருவகை. மேலும் சத்தியத்தை நேசிப்பவர்களும், சத்தியத்தைப் பின்தொடர்பவர்களும், தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தேடுபவர்களும், தேவன் மீதான அன்பைப் பின்தொடர்பவர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் அந்திக்கிறிஸ்துவின் பாதையில் இருந்து வேறுபட்ட பாதையில் செல்கிறார்கள், இவர்கள் அந்திக்கிறிஸ்துவின் பார்வையில் எதிர்ப்பாளர்கள். அதற்கும் அப்பால், அந்திக்கிறிஸ்துவுக்கு தங்கள் ஆலோசனைகளை வழங்கி அவர்களை அம்பலப்படுத்தத் துணிபவர்கள், அல்லது அவர்களின் பார்வையில் இருந்து வேறுபட்ட பார்வையை உடையவர்கள், அவர்களால் எதிர்ப்பாளர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். மற்றொரு வகையும் உள்ளனர்: அந்திக்கிறிஸ்துவுக்கு சமமான செயல்திறனும் திறமையும் கொண்டவர்கள். அந்திக்கிறிஸ்துவைப் போலவே பேச்சு மற்றும் செயலுக்கான திறன் கொண்டவர்கள், அல்லது தங்களை விட மேலானவர்களாகப் அந்திக்கிறிஸ்துவால் பார்க்கப்பட்டுகிறவர்கள், மற்றும் அவர்களால் அடையாளம் காணக்கூடியவர்கள். ஓர் அந்திக்கிறிஸ்துவுக்கு, இது ஏற்றுக்கொள்ள முடியாதது, அவர்களின் அந்தஸ்துக்குஅச்சுறுத்தலானது. இத்தகையவர்கள் அந்திக்கிறிஸ்துவின் மிகப்பெரிய எதிர்ப்பாளர்கள். அந்திக்கிறிஸ்து அத்தகையவர்களைப் புறக்கணிக்கவோ அல்லது சிறிதும் தளரவோ துணிவதில்லை. அந்திக்கிறிஸ்துகள் அவர்களைத் தங்கள் பக்கத்தில் இருக்கும் முட்களாகக் கருதுகிறார்கள். அவர்கள் எப்போதும் அவர்களுக்கு எதிராக விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவர்களைத் தவிர்க்கிறார்கள். ஓர் எதிர்ப்பாளர் அவர்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்தப் போகிறார் என்பதை அந்திக்கிறிஸ்து பார்க்கும் போது, தனியொரு அச்சம் அவர்களைப் பிடிக்கிறது; அவர்கள் அத்தகைய எதிர்ப்பாளரை விலக்கிவைத்து தாக்க விரும்புகிறார்கள், அதாவது அந்த எதிர்ப்பாளரை திருச்சபையில் இருந்து அகற்றும் வரை அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். இத்தகைய மனப்போக்குடனும், இந்த விஷயங்கள் நிரம்பி இருக்கும் இருதயத்துடனும், அவர்கள் எந்த வகையான செயல்களைத்தான் செய்ய முடியும்? அவர்கள் இந்தச் சகோதர சகோதரிகளை எதிரிகளாகக் கருதுவார்களா, அவர்களை வீழ்த்தி விடுவிப்பதற்கான வழிகளைப் பற்றிச் சிந்திப்பார்களா? அவர்கள் நிச்சயமாகச் செய்வார்கள். அவர்களால் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடிவது செயல்களிலேயே மிகவும் கொடிய செயல் அல்லவா? அது தேவனின் மனநிலைக்கு எதிரான ஒரு குற்றமல்லவா?(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் இரண்டு”). அந்திக்கிறிஸ்துகளோட சுபாவம் குறிப்பா கேடானதும் மோசமானதுமா இருக்குது. அதிகாரத்த ஏகாதிபத்தியமாக்கி, தனி ராஜ்யத்த உருவாக்க, தங்களுக்கு வலக் கை மனுஷங்கள இருக்க விரும்புறவங்கள அவங்க உயர்த்துறாங்க, யாராவது அவங்களோட குறைபாடுகளச் சுட்டிக் காட்டினா, அம்பலப்படுத்தினா அல்லது அவங்களோட அந்தஸ்த அச்சுறுத்தினா, அப்படிப்பட்டவங்கள தங்கள் பக்கத்துலயே இருக்குற முள்ளா அவங்க நெனச்சுக்கிட்டு, எப்படியாவது அவங்களத் தாக்கி விலக்குறாங்க அதோடு அவங்களத் திருச்சபையில இருந்து கூட வெளியேத்துறாங்க. அந்திக்கிறிஸ்துகளோட சாராம்சம் பொல்லாப்பு செய்யுறவங்களோட சாராம்சமா இருக்குது. அவங்க சத்தியத்தால் சோர்வடைஞ்சு, மனசாட்சியோ பகுத்தறிவோ இல்லாதவங்களா இருக்காங்க. அவங்க மத்தவங்கள எவ்வளவு தண்டிச்சாலும், ஒருபோதும் அவங்க கடிந்துகொள்ளுதல உணர்வதில்ல. ஜாங் சின்னோட நடத்தையப் பாத்தப்போ, ஒரு தலைவியா, அவங்க திருச்சபையோட பணிய ஆதரிக்கவே இல்ல, அதோடு, திருச்சபையக் கட்டுப்படுத்தறதுக்கு கூட்டாளிகளப் பண்படுத்தவும், எதிர்ப்பாளர்களத் தாக்கவும் விலக்கவும் அவங்க தன்னோட பலத்தப் பயன்படுத்தினாங்க. சியாவோ லியூ பொல்லாப்பு செய்யறவங்களாவும், வெளியேத்தப்பட வேண்டியவங்களாவும் இருந்தாங்க. ஆனா அவங்க ஜாங் சின்னைப் பாதுகாத்ததால, ஜாங் சின் அவங்களுக்குப் பதவி உயர்வு கொடுத்தாங்க அதோடு, அவங்களோட குற்றத்துலருந்து அவங்களத் தப்புவிச்சுக்க பலவகையான காரணங்களக் கண்டுபிடிச்சாங்க. ஆனாலும், பாங் லிங் அவங்களோட பிரச்சனைகளச் சுட்டிக்காட்டினப்போ, அவங்க வன்மம் வச்சிருந்தாங்க. பாங் லிங் பணி நீக்கம் செய்யப்பட்டப்போ, ஜாங் சின் பழிவாங்குறதுக்கான வாய்ப்பத் தேடுனாங்க, அதனால திருச்சபையிலயிருந்து பாங் லிங்கை வெளியேத்த தன்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சாங்க. பாங் லிங்கைக் கண்டனம் செய்யறதுக்கு மத்த சகோதரிகள் நிறைய பேர் அவங்களப் பின்பற்றாதப்போ, இவங்க அவங்கள அடக்கி தண்டிச்சாங்க. ஜாங் சின் கெட்டவங்களும் மோசமானவங்களுமா இருந்தாங்க. தன்னோட அந்தஸ்துக்கு அச்சுறுத்தலா இருப்பவங்கள அல்லது தனக்குக் கீழ்ப்படியாத எவரையும் அவங்க தண்டிச்சாங்க, அவங்க திருச்சபையில, எந்தவித மனவருத்தத்தையும் உணராத, வெறித்தனமா நடந்துக்கற ஒரு கொடுமைக்காரியா இருந்தாங்க. அவங்க அதிகாரப்பூர்வமான ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாங்க. ஜாங் சின்னைப் பகுத்தறிஞ்சதுக்கப்புறமா, புகார் கடிதத்த நாங்க ஒப்படைச்சோம்.

ஜாங் சின் எங்களப் பழிவாங்க ரொம்ப நேரம் ஆகல. நான் ஆபத்துல இருந்தேன்னு சொல்லி ஜாங் சின் என்னைய வீட்ல தனிமைப்படுத்தினாங்க, சின்ருயியும் சகோதரி யுவான் சியுவும் ஜாங் சின்னைப் பத்திய பகுத்தறிவக் கொண்டிருந்ததால, அவங்க ரெண்டு பேரயும் வீட்ல தனிமைப்படுத்தி இருக்க வச்சாங்க. கொஞ்ச நாளுக்கப்புறமா, ஜாங் சின் என்னையும் சின்ருயியையும் தலைமைத்துவத்துவத்துக்காக போட்டியிட்டதாவும் திருச்சபையில குழப்பத்த உண்டாக்கி, பொல்லாப்பு செய்பவர்களா இருந்ததாவும் பொய் குற்றச்சாட்டுகள சாட்டி, அதுக்கப்புறமா எங்கள நிராகரிக்கச் சொல்லி சகோதர சகோதரிகள்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. சில சகோதர சகோதரிகள் பகுத்தறிவு இல்லாம, ஜாங் சின்னோட வார்த்தைகளக் கேட்டாங்க. அவங்க என்னைய ரோட்ல பார்த்தப்போ, இரக்கமில்லாம என்னையப் புறக்கணிச்சாங்க. இது நடந்தப்போ, நான் புண்படுத்தப்பட்டதாவும் தீங்கிழைக்கப்பட்டதாவும் உணர்ந்தேன். சத்தியத்தப் பயிற்சி செஞ்சதுக்கப்புறமாவும், நாம ஏன் பொல்லாத சக்திகளால அடக்கப்பட்டும், தண்டிக்கப்படும், பொய் குற்றஞ்சாட்டப்பட்டும் இருந்து வந்தோம், பொல்லாப்பு செஞ்சாலும் கூட ஜாங் சின்னால திருச்சபையில ஏன் வளமா இருக்க முடிஞ்சுச்சு? சகோதர சகோதரிகள் ஏன் எங்களத் தவறாப் புரிஞ்சுக்கிட்டு நிராகரிச்சாங்க? நான் ரொம்ப வேதனைப்பட்டேன், எதிர்காலத்துல நான் எப்படி என்னோட பாதையில நடப்பேன்னு எனக்குத் தெரியவில்லை, நான் எதிர்மறையில சிக்கிக்கியிருந்தேன். அந்த நாட்களின் கூடுகைகள்ல, சகோதரிகள் ஜாங் சின்னோட நடத்தையப் பகுத்தறிந்தப்போ, நான் பேச விரும்பல. “நான் ஜாங் சின்னை அம்பலப்படுத்த எழுந்திருச்சு நின்னேன், ஆனா நான் அடக்கப்பட்டு வந்திருக்குறத ஒருபோதும் பொருட்படுத்தல, நான் ஒரு தலைவியா இருக்க விரும்புறதா என்னோட சகோதர சகோதரிகளால தவறா புரிந்துகொள்ளப்பட்டிருக்கறேன். இப்போ, நான் தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கறேன். எனக்காக யார் பேசுவாங்க? அத விட்டுறலாம், நான் திருச்சபை விவகாரங்களப் பத்திக் கவலைப்பட விரும்பல” அப்படின்னு நான் நெனச்சேன். குறிப்பா, நான் பலவீனமா உணர்ந்தேன், நான் ஆழ்ந்த ஆவிக்குரிய இருள்ல இருந்தேன். என்னோட வேதனையில, நான் கண்ணீரோடு தேவனுக்கு முன்னாடி பலதடவ முழங்கால் போட்டு, “தேவனே! இந்தச் சூழ்நிலையில நான் வேதனைப்படுறேன். திருச்சபையின் நலன்களப் பாதுகாக்கறதுக்காக சத்தியத்தக் கடைப்பிடிக்கறதால நான் ஏன் அடக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு இருக்குறேன்? தேவனே, நான் உங்களோட சித்தத்தப் புரிஞ்சுக்கும்படியா தயவுசெஞ்சு எனக்கு வழிகாட்டுங்க” அப்படின்னு தேவனிடத்துல சொன்னேன்.

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தையில வாசிச்சேன், “அன்றாட ஜீவித சிக்கல்களை எதிர்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரத்தையும் அவருடைய ராஜரீகத்தையும் நீ எவ்வாறு அறிந்து புரிந்து கொள்ள வேண்டும்? இந்த சிக்கல்களை நீ எதிர்கொள்ளும் போது, அவற்றைப் புரிந்துகொள்வது, கையாள்வது மற்றும் அனுபவிப்பது எப்படி என்று தெரியாத போது, தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்கு நீ கீழ்ப்படிவதற்கான உன் நோக்கத்தை, விருப்பத்தை மற்றும் கீழ்ப்படிவதன் யதார்த்தத்தை நிரூபிக்க நீ என்ன மனப்பான்மையைப் பின்பற்றவேண்டும்? முதலில் நீ காத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நீ தேட கற்றுக் கொள்ள வேண்டும்; அதன் பின் நீ கீழ்ப்படிய கற்றுக் கொள்ள வேண்டும். ‘காத்திருத்தல்’ என்பது தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருத்தல், அவர் உனக்காக ஏற்பாடு செய்துள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களுக்காகக் காத்திருத்தல், அவருடைய விருப்பம் படிப்படியாக உனக்கு வெளிப்படும்வரை காத்திருத்தல் என்பதாகும். ‘தேடுவது’ என்பது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர் வகுத்துள்ள விஷயங்கள் ஆகியவற்றின் மூலம் உனக்காக தேவனுடைய சிந்தனை மிகுந்த நோக்கங்களைக் கவனித்து புரிந்து கொள்வது, அவற்றின் மூலம் சத்தியத்தைப் புரிந்து கொள்வது, மனிதர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகளையும் புரிந்து கொள்வது, தேவன் மனிதர்களில் எத்தகைய முடிவுகளை அடைய மற்றும் அவர்களில் எத்தகைய சாதனைகளை அடைய எண்ணுகிறார் என்பதையும் புரிந்து கொள்வதாகும். ‘கீழ்ப்படிதல்’ என்பது, தேவன் திட்டமிட்டுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை ஏற்றுக் கொள்வது, அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் அதன் மூலம், சிருஷ்டிகர் மனிதனின் தலைவிதியை எவ்வாறு ஆணையிடுகிறார், அவர் தன் ஜீவினைக் கொண்டு மனிதனுக்கு எவ்வாறு வழங்குகிறார், அவர் மனிதனுக்குள் எவ்வாறு சத்தியத்தைச் செயல்படுத்துகிறார் ஆகியவற்றை அறிந்து கொள்வதைக் குறிக்கிறது(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனோட வார்த்தைய சிந்திச்சுப் பாத்ததுக்கப்புறமா, என்னால தெளிவா பாக்க முடியாதபடி விஷயங்கள் நடக்குறப்போ, நான் கீழ்ப்படியும் மனப்பான்மையக் கொண்டிருக்கணும்ங்கறதயும், தேவனோட சித்தத்தத் தேட கத்துக்கணும்ங்கறதயும், தேவனோட நேரத்துல காரியங்கள் நடக்குற வரை காத்திருக்கணும்ங்கறதயும் நான் உடனே புரிஞ்சுச்சுக்கிட்டேன். நாங்க புகார் கடிதத்த சமர்ப்பிச்சதுக்கப்புறமா, அதக் கையாளுறதுக்கு மேலிடத் தலைவர்களுக்கு ஒரு செயல்முறை இருந்துச்சுங்கறத நான் உணர்ந்தேன். அவங்க அதக் கையாளுறதுக்கு முன்னாடி, ஜாங் சின் நிச்சயமா தொடர்ந்து பொல்லாப்பு செஞ்சுக்கிட்டே இருப்பாங்க, எதிர்க்கறவங்களத் தாக்கி ஒதுக்கி வைப்பாங்க, அது அவங்களோட பொல்லாத சுபாவத்த அவங்க வெளிப்படுத்துவதா இருந்துச்சு. இந்தக் காலகட்டத்துல, நாங்க பொறுமையா இருந்து, காத்திருக்க வேண்டியதா இருந்துச்சு. இது செயல்முறைக்கான அவசியமான பகுதியா இருந்துச்சு. ஆனா கீழ்ப்படிஞ்சு காத்திருக்க எனக்கு மனசு இல்ல, இந்த சூழ்நிலையில நான் பாடம் கத்துக்க முயற்சி செய்யல. ஜாங் சின் கையாளப்படலங்கறதயும், அதுக்குப் பதிலா நான் அடக்கப்பட்டு கண்டனம் செய்யப்பட்டேன்ங்கறதயும் நான் பாத்தப்போ, நான் தவறா புரிஞ்சுக்கிட்டு, தேவனுக்கு எதிரா குற்றஞ்சாட்டினேன், தேவன் அநீதி செஞ்சாருன்னு நெனச்சேன், அதோடு தேவனிடத்துல ஏமாற்றமடைஞ்சும் இருந்தேன். நான் ரொம்ப பகுத்தறிவில்லாதவளா இருந்தேன்!

அதுக்கப்புறமா, நான் என்னோட நிலையப் பத்தி தேவனிடத்துல சொல்லி, அவரோட நீதியான மனநிலையத் தெரிஞ்சுக்க எனக்கு வழிகாட்டும்படி நான் தேவனிடத்துல கேட்டு, ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் இந்தப் பத்திய நான் வாசிச்சேன். “தேவனின் நீதியான மனநிலையை ஜனங்கள் எப்படி அறிந்து கொள்கிறார்கள் மற்றும் புரிந்துகொள்கிறார்கள்? நீதிமான்கள் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறும்போதும், துன்மார்க்கர்கள் அவரால் சபிக்கப்படும்போதும்—இவை தேவனுடைய நீதியுள்ள தன்மையின் உதாரணங்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். தேவன் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறார் மற்றும் பொல்லாதவர்களைத் தண்டிக்கிறார், மேலும் அவர் ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத் தக்கதாக பலனளிக்கிறார். இது சரியானது, ஆனால் தற்போது மனுஷனின் கருத்துகளோடு ஒத்துப்போகாத சில நிகழ்வுகள் இருக்கின்றன, அதாவது, தேவனை விசுவாசித்து அவரை ஆராதிப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அவருடைய சாபங்களை அடைகிறார்கள், அல்லது அவரால் ஒருபோதும் ஆசீர்வதிக்கப்படவோ அல்லது ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை; அவர்கள் எவ்வளவுதான் அவரை ஆராதித்தாலும், அவர் அவர்களைப் புறக்கணிக்கிறார். தேவன் துன்மார்க்கரை ஆசீர்வதிப்பதுமில்லை, அவர்களைத் தண்டிப்பதுமில்லை, ஆனாலும் அவர்கள் செழிப்பானவர்களாகவும், பல சந்ததிகளைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கிறது; அவர்கள் எல்லாவற்றிலும் ஜெயம் பெற்றவர்களாய் இருக்கிறார்கள். இது தேவனுடைய நீதியா? ‘நாங்கள் தேவனை ஆராதிக்கிறோம், ஆனாலும் அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவில்லை, அதே சமயத்தில் தேவனை ஆராதிக்காதவர்களும் அவரை எதிர்க்கவும்கூடச் செய்கிற துன்மார்க்கர்கள் நாங்கள் வாழ்வதை விட நன்றாகவும் அதிக செழிப்பாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தேவன் நீதியுள்ளவர் அல்ல!’ என்று சிலர் சொல்கிறார்கள். இது உங்களுக்கு எதைக் காட்டுகிறது? இப்பொழுது நான் உங்களுக்கு இரண்டு உதாரணங்களைத் தந்திருக்கிறேன். எது தேவனுடைய நீதியைப் பற்றி பேசுகிறது? ‘அவை இரண்டுமே தேவனுடைய நீதியின் வெளிப்பாடுகள்!’ என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? தேவனுடைய செயல்களுக்குக் கொள்கைகள் உள்ளன—மனுஷர்களால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியாது, அவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியாதவர்களாய் இருப்பதால், தேவன் நீதியுள்ளவர் அல்ல என்று அவர்களால் சொல்ல முடியாது என்பதுதான் காரியம். மனுஷனால் மேற்பரப்பில் இருப்பதை மட்டுமே பார்க்க முடியும்; அவர்களால் விஷயங்களை அவை இருக்கிறபடியே புரிந்துகொள்ள முடியாது. ஆகவே, தேவன் செய்வது மனுஷனின் கருத்துகளுடனும் கற்பனைகளுடனும் சிறிதளவே ஒத்துப்போகிறதாய் இருந்தாலும், அது நீதியாய் இருக்கிறதுதேவன் நீதியுள்ளவர் அல்ல என்று தொடர்ந்து புலம்புபவர்கள் அநேகர் இருக்கிறார்கள். சூழ்நிலை என்னவாக இருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொள்ளாததே இதற்குக் காரணமாகும். ஒருவர் எப்போதும் தங்களது கருத்துகள் மற்றும் கற்பனைகளின் வெளிச்சத்தில் விஷயங்களைப் பார்க்கும்போது, தவறு செய்வது அவர்களுக்கு மிக எளிது. ஜனங்களின் அறிவு அவர்களின் சொந்த எண்ணங்கள் மற்றும் கருத்துகளுக்கு மத்தியிலோ அல்லது நன்மை தீமை பற்றிய அவர்களின் கண்ணோட்டங்களுக்குள்ளோ, சரி மற்றும் தவறு என்பதிலோ அல்லது பகுத்தறிவிலோ இருக்கிறது. ஒருவர் அத்தகைய கண்ணோட்டங்களிலிருந்து விஷயங்களைப் பார்க்கும்போது, தேவனை தவறாகப் புரிந்துகொள்வதும் கருத்துகளை உருவாக்குவதும் அவர்களுக்கு எளிது, மேலும் அந்த நபர் அவரை எதிர்ப்பான் மற்றும் அவரைக் குறை கூறுவான்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). “நீங்கள் என்ன சொல்வீர்கள்? தேவன் சாத்தானை அழித்தது அவருடைய நீதியின் வெளிப்பாடா? (ஆம்.) அவர் சாத்தானை இருக்க அனுமதித்தால் என்ன செய்வது? ஆம் என்று நீங்கள் சொல்லத் துணியவில்லை தானே? தேவனுடைய சராம்சமே நீதியாகும். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது எளிதானதல்ல என்றாலும், அவர் செய்வதெல்லாம் நீதியானதாகும்; இது ஜனங்களுக்குப் புரிவதில்லை. தேவன் பேதுருவை சாத்தானிடம் கொடுத்தபோது, பேதுரு எப்படிப் பதிலளித்தான்? ‘நீர் என்ன செய்கிறீர் என்பதை மனுக்குலத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் நீர் செய்வதெல்லாவற்றிலும் உமது நல்லெண்ணம் உள்ளது; அவை எல்லாவற்றிலும் நீதி உள்ளது. உமது ஞானமான கிரியைகளுக்காக என்னால் எப்படிப் புகழ்ந்து பேசாமல் இருக்க முடியும்?’ தேவன் மனிதனை இரட்சிக்கும் காலத்தில் சாத்தானை அழிக்காததற்குக் காரணம், சாத்தான் தங்களை எப்படிக் சீர்கெடுத்துவிட்டான் என்பதையும் அவன் எந்த அளவுக்கு தங்களைச் சீர்கெடுத்துவிட்டான் என்பதையும், மேலும் தேவன் தங்களை எப்படிச் சுத்திகரித்து இரட்சிக்கிறார் என்பதையும் மனிதர்கள் தெளிவாகக் காணலாம் என்பதை நீங்கள் இப்போது பார்க்க வேண்டும். இறுதியில், ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு சாத்தானின் வெறுக்கத்தக்க முகத்தைத் தெளிவாகக் கண்டு, சாத்தான் அவர்களைச் சீர்கெடுக்கும் கொடூரமான பாவத்தைக் கண்டால், தேவன் சாத்தானை அழித்து, அவருடைய நீதியை அவர்களுக்குக் காட்டுவார். தேவன் சாத்தானை அழிக்கும் போதெல்லாம் தேவனுடைய மனநிலையும் ஞானமும் அதில் இருக்கும். தேவன் செய்வதெல்லாம் நீதியானதாகும். அது மனிதர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம் என்றாலும், அவர்கள் விருப்பப்படி நீயாயத்தீர்ப்புகளைச் செய்யக்கூடாது. அவர் செய்யும் ஏதேனும் மனிதர்களுக்கு நியாயமற்றதாகத் தோன்றினால், அல்லது அது குறித்து அவர்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருந்தால், அவர் நீதியுள்ளவர் அல்ல என்று சொல்ல அவர்களை வழிநடத்தினால், அவர்கள் மிகவும் நியாயமற்றவர்களாக இருக்கிறார்கள். பேதுரு சில காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாதவனாக இருப்பதை அவன் காண்கிறதை நீ பார்க்கிறாய், ஆனால் தேவனுடைய ஞானம் இருந்தது என்பதிலும் அவருடைய நல்லெண்ணம் அந்த காரியங்களில் இருந்தது என்பதிலும் அவன் உறுதியாக இருந்தான். மனுஷரால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது; அவர்களால் புரிந்துகொள்ள முடியாத பல காரியங்கள் உள்ளன(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). நான் தேவனோட வார்த்தைய சிந்திச்சுப் பாத்தப்போ, என்னோட எண்ணங்கள்ல, நீதிங்கறது நியாயமும் பகுத்தறியும் தன்மையுமா இருக்குதுன்னு அப்படின்னு நான் விசுவாசிச்சேன்ங்கறத உணர்ந்தேன். பொல்லாப்பு செய்யும் ஒருத்தரும் அந்திக்கிறிஸ்துவும் திருச்சபையின் பணிய சீர்குலைச்சாங்க, அத அம்பலப்படுத்தவும் புகாரளிக்கவும் எழுந்திரிச்சு நிற்பதன் மூலமா, நாங்க திருச்சபையோட நலன்களைப் பாதுகாத்ததால, தேவன் எங்களக் கண்காணிச்சிருக்கணும், எங்களப் பாதுகாத்திருக்கணும், நாங்க அடக்கப்பட விட்டிருக்கக்கூடாது, அதோடு, பொல்லாப்பு செய்யுறவளும் அந்திக்கிறிஸ்துவும் உடனடியா வெளியேற்றப்பட்டிருக்கணும். இது தேவனோட நீதின்னு நான் நெனச்சேன். நாங்க புகார் கடிதம் எழுதியதுக்கப்புறமா, பொல்லாப்பு செஞ்சவங்களும் அந்திக்கிறிஸ்துவும் கையாளப்படலங்கறதயும், அப்பவும் திருச்சபையில உயர் பதவிகள வகிச்சாங்கங்கறதயும், எங்களத் தனிமைப்படுத்தி கண்டனம் செஞ்சாங்கங்கறதயும் நான் பாத்தப்போ, தேவனோட நீதியப் பத்தி எனக்கு சந்தேகம் வர ஆரம்பிச்சுச்சு, அதோடு, தேவனோட நீதி எங்க போயிருச்சுன்னு கூட பகுத்தறிவில்லாம கேட்டேன். நான் ரொம்ப அகந்தையானவளா இருந்தேன்! பேதுரு சோதனைக்கு உட்பட்டப்போ, அவன் எப்படி வலிமிகுந்த சுத்திகரிப்புக்கு உட்பட்டான்னு நான் யோசிச்சுப் பாத்தேன். தேவன் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாருங்கறத அவனால புரிஞ்சுக்க முடியலேன்னாலும் கூட, அவர் என்ன செய்தாலும், தேவன் நீதியுள்ளவரா இருந்தாருங்கறதயும், அதுல தேவனோட ஞானம் இருந்துச்சுங்கறதயும் அவன் நம்பினான். அதனாலதான் அவனால தேவனுக்குக் கீழ்ப்படிய முடிஞ்சுச்சு, கடைசியில, அவன் தேவன் மேல மிகுதியான அன்பு கொண்டிருந்தான், மரணம் வரை கீழ்ப்படிஞ்சு, அழகான சாட்சிய கொடுத்தான். நான் சத்தியத்தை புரிஞ்சுக்கல, ஆனா எனக்கு முன்னாடி நான் பாக்கக்கூடியதா இருந்த கொஞ்சத்த மட்டுமே அடிப்படையா வச்சுக்கிட்டு, பரிவர்த்தனை கண்ணோட்டத்துல தேவனோட நீதிய நான் மதிப்பீடு செஞ்சேன். நான் விரும்பியபடி தேவன் காரியங்களச் செஞ்சப்போ, அது எனக்குப் பலனளிச்சுச்சு தேவன் நீதியுள்ளவர்ன்னு நான் நெனச்சேன், என்னால தேவனைத் துதிக்க முடிஞ்சுச்சு. நான் ஒரு அந்திக்கிறிஸ்துவால அடக்கப்பட்டு, என்னோட எதிர்காலமும் விதியும் சம்பந்தப்பட்டிருந்தப்போ, தேவன் மேல இருந்த விசுவாசத்த நான் இழந்துட்டேன், தேவனோட நீதியக் கூட சந்தேகிச்சேன், அதோடு தேவனோட வீட்ல சத்தியமும் நீதியும் ஆளுகை செய்யுதுங்கறத நான் மறுதலிச்சேன். எனக்கு நன்மை கிடைக்குமாங்கறத வச்சு, தேவனோட நீதிய நான் முழுமையா மதிப்பீடு செஞ்சேன். இது முற்றிலும் முட்டாள்தனமானது. தேவன் சிருஷ்டிகரா இருக்காரு, தேவனோட சாராம்சம் நீதியா இருக்குது, அதோடு, தேவன் பொல்லப்ப வெறுக்குறாரு, இது அவரோட சாராம்சத்தால தீர்மானிக்கப்படுது. திருச்சபை அப்போதைக்கு பொல்லாப்பு செய்யுறவங்களயும் அந்திக்கிறிஸ்துவயும் வெளியேத்தலேன்னாலும் கூட, நிச்சயமா தேவன் அவங்களோட செயல்கள வெறுக்கலங்கறது அதுக்கான அர்த்தம் இல்ல, தேவன் பொல்லாப்ப வெறுக்கலங்கறது அதுக்கான அர்த்தம் இல்ல, சத்தியம் திருச்சபையில ஆளுகை செய்யலங்கறதும் அதுக்கான அர்த்தம் அல்ல. நடந்துகொண்டிருந்தவைகள்ல தேவனோட ஞானமும் நல்ல நோக்கங்களும் இருந்துச்சு. நான் மட்டுந்தான் அதப் புரிஞ்சுக்கல. நான் பகுத்தறிவுள்ளவளா இருந்திருக்கணும், ஒரு சிருஷ்டியோட ஸ்தானத்துல நின்றிருந்திருக்கணும், தேவனோட ராஜரீக ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கணும், தேவனைத் தேடும்படி ஜெபித்திருக்கணும், அவரோட பிரகாசத்துக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருந்திருக்கணும். இத நான் உணர்ந்துக்கிடவுடனே, என்னோட இதயம் பிரகாசமடைஞ்சுச்சு, தேவனைப் பத்திய என்னோட தவறான புரிதல்கள் மறைஞ்சு போயிருச்சு. அதோடு கூட, திருச்சபையில இருந்த சில சகோதர சகோதரிகள் அப்பவும் ஜாங் சின்னைப் புரிஞ்சுக்கலங்கறத நான் உணர்ந்தேன். இந்தச் சூழ்நிலைகள் மூலமா, அவங்க எல்லாருமே ஜாங் சின்னோட சாராம்சத்தக் கொஞ்சம் கொஞ்சமா பாத்திருப்பாங்க. அவங்க அவளை நிராகரிக்கறதுக்கு முன்னாடி, அவளைப் புரிஞ்சுக்க வேண்டியிருந்துச்சு. பகுத்தறிவ ஏற்படுத்த இந்தச் சூழல் ரொம்ப பயனுள்ளதா இருந்துச்சு. இதப் புரிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா, நான் தேவனோட ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிய விரும்பினேன்னும், இந்த சூழ்நிலையில பாடங்களக் கத்துக்க விரும்புறேன்னும் சொல்ல நான் தேவனிடத்துல ஜெபிச்சேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையில, நான் வாசிச்சேன், “நீ இரட்சிக்கப்பட விரும்பினால், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தடையை நீ தாண்டி வர வேண்டும் என்பதும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை நீ பகுத்தறியக் கூடியவனாய் இருக்க வேண்டும் என்பதும் மட்டுமல்லாமல், அதன் அருவருப்பான முகத் தோற்றத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை முற்றிலுமாக அடக்குவதற்கும், நீ கடந்து வருவதற்கு அந்திக்கிறிஸ்துகளின் தடையும் இருக்கிறது. திருச்சபையில், ஒரு அந்திக்கிறிஸ்து தேவனுடைய எதிரியாக மட்டுமல்ல, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களின் எதிரியாகவும் இருக்கிறான். உன்னால் ஓர் அந்திக்கிறிஸ்துவை அடையாளம் காண முடியாவிட்டால், நீ வஞ்சிக்கப்பட்டு தோற்கடிக்கப்படவும், அந்திக்கிறிஸ்துவின் பாதையில் நடக்கவும், தேவனால் சபிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அது நடந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது. இரட்சிப்பு வழங்கப்பட ஜனங்கள் என்ன கொண்டிருக்க வேண்டும்? முதலாவதாக, அவர்கள் நிறைய சத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் ஒரு அந்திக்கிறிஸ்துவின் சாராம்சத்தையும், மனநிலையையும் மற்றும் பாதையையும் அடையாளம் காணக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தேவனை விசுவாசிக்கும்போது ஜனங்களை ஆராதிக்காமலும் பின்பற்றாமலும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இதுதான், மேலும் தேவனை இறுதிவரை பின்பற்றுவதற்கான ஒரே வழியும் இதுதான். அந்திக்கிறிஸ்துவை அடையாளம் காணக்கூடியவர்கள் மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிக்கவும், பின்பற்றவும், அவருக்காகச் சாட்சி பகரவும் முடியும். ஒரு அந்திக்கிறிஸ்துவை அடையாளம் காண்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, மேலும் அவர்களின் சாராம்சத்தைத் தெளிவாகப் பார்க்கவும், அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் பின்னணியில் உள்ள சதிகள், தந்திரங்கள் மற்றும் உள்நோக்கம் கொண்ட இலக்குகளைப் புரிந்துகொள்ளவும் திறமை தேவைப்படுகிறது. அதன் மூலம், நீ அவர்களால் வஞ்சிக்கப்படவோ அல்லது கட்டுப்படுத்தப்படவோ மாட்டாய், மேலும் உன்னால் உறுதியாக நிற்கவும், பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் சத்தியத்தைப் பின்தொடரவும், மேலும் சத்தியத்தைப் பின்தொடர்ந்து இரட்சிப்பை அடையும் பாதையில் ஸ்திரமாக இருக்கவும் முடியும். உன்னால் ஒரு அந்திக்கிறிஸ்துவை அடையாளம் காண முடியாவிட்டால், அப்போது நீ பெரும் ஆபத்தில் இருக்கிறாய் என்று சொல்லலாம், மேலும் நீ ஒரு அந்திக்கிறிஸ்துவால் வஞ்சிக்கப்பட்டு கைப்பற்றப்படக் கூடியவனாவாய், மேலும் சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ் வாழ்வாய். … ஆகவே, நீ இரட்சிப்பு வழங்கப்படக்கூடிய இடத்திற்குச் செல்ல விரும்பினால், நீ கடக்க வேண்டிய முதல் சோதனையானது, சாத்தானைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவனாய் இருக்க வேண்டும் என்பதும், நீ எழுந்து நின்று சாத்தானை அம்பலப்படுத்தவும் அடக்கவும் தைரியத்தைக் கொண்டவனாய் இருக்க வேண்டும் என்பதும்தான். அப்படியானால், சாத்தான் எங்கே இருக்கிறது? சாத்தான் உன் பக்கத்திலும் உன்னைச் சுற்றிலும் இருக்கிறது; அது உன்னுடைய இருதயத்தில் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். நீ சாத்தானுடைய மனநிலைக்குள் வாழ்ந்துகொண்டிருந்தால், நீ சாத்தானுக்குச் சொந்தமானவன் என்று சொல்லலாம். ஆவிக்குரிய மண்டலத்தின் சாத்தானையும் பொல்லாத ஆவிகளையும் உன்னால் பார்க்கவோ அல்லது தொடவோ முடியாது, ஆனால் நிஜ வாழ்க்கையில் இருக்கிற சாத்தானும் வாழ்ந்துகொண்டிருக்கிற பிசாசுகளும் எல்லா இடங்களிலும் உள்ளன. சத்தியத்தைக் குறித்துச் சலிப்படைகிற எந்தவொரு நபரும் பொல்லாதவனாய் இருக்கிறான், மற்றும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தலைவனோ அல்லது ஊழியனோ ஒரு அந்திக்கிறிஸ்துவாக அல்லது தவறான தலைவனாக இருக்கிறான். அப்படிப்பட்டவர்கள் சாத்தான்களும், வாழ்ந்துகொண்டிருக்கிற பிசாசுகளுமாய் இருக்கிறார்கள் அல்லவா? இந்த ஜனங்கள் நீ ஆராதிக்கும் மற்றும் உயர்வாகக் கருதும் ஒரு நபராகக் கூட இருக்கலாம்; அவர்கள் உன்னை வழிநடத்தும் நபர்களாக இருக்கலாம் அல்லது உன் இருதயத்தில் நீ நீண்டகாலமாக போற்றினவர்களாக, நம்பினவர்களாக, சார்ந்திருந்தவர்களாக மற்றும் நம்பிக்கை கொண்ட நபர்களாக இருக்கலாம். இருப்பினும், உண்மையில் அவர்கள் உன் வழியில் குறுக்கே நின்றுகொண்டு, சத்தியத்தைப் பின்தொடர்வதிலிருந்தும் இரட்சிப்பைப் பெறுவதிலிருந்தும் உன்னைத் தடுத்துக்கொண்டிருக்கும் தடைகளாய் இருக்கிறார்கள்; அவர்கள் தவறான தலைவர்களும் அந்திக்கிறிஸ்துகளுமாய் இருக்கிறார்கள். அவர்கள் உன்னுடைய வாழ்க்கையின் மீதும் நீ நடந்து செல்லும் பாதையின் மீதும் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளக் கூடும், மேலும் இரட்சிப்பு வழங்கப்படுவதற்கான உன் வாய்ப்பை அவர்கள் அழித்துவிடக் கூடும். நீ அவர்களை அடையாளம் காணவும், அவர்களைப் புரிந்துகொள்ளவும் தவறினால், பிறகு எந்த நேரத்திலும், நீ அவர்களால் வஞ்சிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டு, கொண்டு செல்லப்படலாம். இவ்வாறு, நீ பெரும் ஆபத்தில் இருக்கிறாய். உன்னால் இந்த ஆபத்திலிருந்து உன்னையே விடுவித்துக்கொள்ள முடியாவிட்டால், நீ சாத்தானுடைய பலிகடாவாய் இருக்கிறாய். எப்படியிருந்தாலும், வஞ்சிக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும், அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக மாறுபவர்களால் ஒருபோதும் இரட்சிப்பை அடைய முடியாது. அவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை மற்றும் பின்தொடர்வதில்லை என்பதால், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு ஒரு அந்திக்கிறிஸ்துவைப் பின்பற்றக் கூடும். அது தவிர்க்க முடியாத முடிவாகும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் மூன்று”). தேவனோட வார்த்தைகள ஆழ்ந்து சிந்திச்சதுக்கப்புறமா, தேவனோட சித்தத்த நான் புரிஞ்சுக்கிட்டேன். பொல்லாப்பு செய்யுறவங்களயும் அந்திக்கிறிஸ்துகளயும் திருச்சபையில தோன்ற தேவன் அனுமதிக்குறாரு, அவரோட ஞானம் இதுக்குப் பின்னாடி இருக்குது. ஜனங்களுக்குப் பகுத்தறிவக் கொடுக்க தேவன் அவங்களோட சீர்குலைவயும் வஞ்சகத்தயும் பயன்படுத்திக்கிட்டு இருக்காரு அதன் மூலமா, ஜனங்களால சாத்தானோட அந்தகார ஆதிக்கத்துலயிருந்து தங்கள விடுவிச்சுக்கிட்டு இரட்சிப்ப அடைய முடியும். ஜாங் சின் என்னைய அடக்கி தண்டிச்சாங்க, சகோதர சகோதரிகள் என்னையத் தவறா புரிஞ்சுக்கிட்டு நிராகரிச்சாங்க. அது எனக்கு சில துன்பங்கள ஏற்படுத்தினாலும் கூட, இந்தச் செயல்முறையின் போது, அந்திக்கிறிஸ்துகள் எப்படி ஜனங்கள ஏமாத்தி தீங்கு செய்யுறாங்கங்கறத நான் நடைமுறையில பாத்தேன், நான் அறிவயும் பகுத்தறிவயும் பெற்றுக்கிட்டேன், ஜாங் சின் சத்தியத்த வெறுக்குறவளும் தேவனுக்கு எதிரானவளுமா இருந்த ஒரு அந்திக்கிறிஸ்துங்கறத நான் தெளிவா பாத்தேன் அதனால நான் அவங்களால கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அடக்கப்பட்டதாகவும் உணரல. அவங்களோட தோல்விகள்லயிருந்து நான் கத்துக்கிட்டேன், அதோடு தவறான பாதையில போறத என்னால தவிர்க்க முடிஞ்சுச்சு. இவை எல்லாமே தேவனோட அன்பும் இரட்சிப்பும் இல்லையா? நான் எவ்வளவு அதிகமா அதப் பத்தி சிந்திச்சேனோ, அவ்வளவு அதிகமா தேவன் நீதியுள்ளவர்ங்கறதயும், ஞானமுள்ளவர்ங்கறதயும் நான் உணர்ந்தேன், அதோடு, நான் தேவனோட நீதிய தெரிஞ்சுக்கலயேன்னு அவ்வளவு அதிகமா வருத்தப்பட்டேன். நான் அந்திக்கிறிஸ்துவால ஒடுக்கப்பட்டேன், அதனால எல்லா அநீதிக்கும் தேவன் மேல பழி சுமத்தினேன். நான் தேவனைப் பத்தித் தவறா புரிஞ்சுக்கிட்டு குறை சொன்னேன். நான் ரொம்ப கலகக்காரியா இருந்தேன். இத நான் உணர்ந்துக்கிட்டவுடனே, நான் தேவனுக்கு அதிகமா கடமைப்பட்டிருக்கறத உணர்ந்து, நான் மனந்திரும்ப விரும்பினேன். தவறான தலைவர்களயும் அந்திக்கிறிஸ்துகளயும் அம்பலப்படுத்துறது நல்ல நீதியான ஒரு செயல், அது என்னோட பொறுப்பும் கடமையுமா இருந்துச்சு. பொல்லாப்பு செய்யுறவங்க அம்பலப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட முடிஞ்சா, சகோதர சகோதரிகள் ஒரு நல்ல திருச்சபை வாழ்க்கையப் பெற்றிருக்க முடிஞ்சா என்னோட சகோதர சகோதரிகள் என்னையத் தவறா புரிஞ்சுக்கிட்டாலும், அல்லது நான் அந்திக்கிறிஸ்துவால வெளியேற்றப்பட்டாலும் கூட, அதுல வருத்தப்பட எதுவும் இல்ல. தேவனோட வார்த்தையின் வேற ஒரு பத்திய நான் சிந்துச்சுப் பாத்தேன், “துன்மார்க்கர்கள் எப்போதும் துன்மார்க்கர்களாகவே இருப்பார்கள், அவர்கள் ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்பு நாளிலிருந்து தப்பிக்க மாட்டார்கள். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள், தேவனுடைய கிரியை முடிவுக்கு வரும்போது அவர்கள் வெளிப்படுவார்கள். துன்மார்க்கர்களில் ஒருவனும் நீதிமானாக கருதப்படமாட்டான், நீதிமான்களில் ஒருவரும் துன்மார்க்கராகக் கருதப்படமாட்டார்கள். நான் எந்தவொரு மனுஷனையும் தவறாகக் குற்றஞ்சாட்டலாமா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்”). தேவனோட வார்த்தைகள் எல்லாமே ரொம்பத் தெளிவா இருக்குது. தேவன் நீதியுள்ளவரா இருக்காரு, தம்மை உண்மையா நேசிக்கறவங்க மேல இரக்கமும் இரட்சிப்பும் கொண்டிருக்காரு. அதோடு, அவர் பொல்லாதவங்களயும் அந்திக்கிறிஸ்துகளயும் சபிச்சு தண்டிக்கிறாரு, இது தேவனோட நீதியான மனநிலையால தீர்மானிக்கப்படுது. நான் இரட்சிக்கப்படுவேனா இல்லையாங்கறது தேவனைச் சார்ந்தது, அந்திக்கிறிஸ்துவ சார்ந்தது இல்ல. திருச்சபை அந்திக்கிறிஸ்துவால கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நாங்க அடக்கப்பட்டிருந்தாலும் கூட, இது தற்காலிகமானது மட்டுந்தான். தேவன் எல்லாத்தையும் பாக்குறாரு, பரிசுத்த ஆவியானவர் எல்லாத்தயும் வெளிப்படுத்துறாரு, சீக்கிரத்துல, அந்திக்கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டு புறம்பாக்கப்படுவான். அந்த நாட்கள்ல, நான் அடிக்கடி தேவனோட வார்த்தைய சிந்திச்சேன், மெதுவா, நான் என்னோட இதயத்துல விடுதலைய உணர்ந்தேன், அதோடு நான் தேவனோட கிரியையில விசுவாசத்தப் பெற்றேன்.

ஒரு நாள், எங்களோட திருச்சபையில ஏற்பட்ட குழப்பத்தத் தீர்க்க மேலிடத் தலைவர்கள் ரெண்டு சகோதரிகள ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நாங்க ரொம்ப உற்சாகமா இருந்தோம், மீண்டும் மீண்டும் தேவனுக்கு நன்றி சொன்னோம். எதிர்பாராத விதமா, ஜாங் சின்னோட பொல்லாத நடத்தையப் பத்தி உண்மையா புகாரளிச்சதுக்கப்புறமா, அவங்க ஒரு தவறான தலைவர்ன்னு மட்டுந்தான் பணி நீக்கம் செய்யப்பட்டாங்க. நாங்க எல்லாருமே மறுபடியும் திருச்சபை வாழ்க்கையத் தொடங்கினாலும், என்னால் அசௌகரியத்தத் தவிர்க்க முடியல. ஜாங் சின்னோட மனிதத்தன்மை பொல்லாததா இருந்துச்சு. அந்தஸ்துக்காக, அவங்க வழக்கமா ஜனங்களத் தண்டிக்கவும் அடக்கவும் செஞ்சாங்க, பொல்லாதவங்கள ஏமாத்தி பாதுகாத்தாங்க. அவங்க சத்தியத்த ஏத்துக்கவே இல்ல, அவங்க மனந்திரும்ப மறுத்தாங்க. அவங்க ஒரு தவறான தலைவரா அல்ல, அவங்க அதிகாரப்பூர்வமான ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாங்க. ஆனாலும், “நான் அத வெளிய கொண்டுவந்தா, அவளோட பிரச்சினைகள விட்டுவிட நான் விடாப்பிடியா மறுக்கிறேன்னு சகோதர சகோதரிகள் சொல்லுவாங்களா? அத மறந்துடு, எனக்குக் கவலயில்லை. எப்படியிருந்தாலும், அவளால் இப்ப என்னைய ஒன்னும் செய்ய முடியாது” அப்படின்னு நான் நெனச்சேன். இத நெனச்சுக்கிட்டு, அதுக்கப்புறம் இவற்ற குறிப்பிட வேண்டாம்ன்னு நான் முடிவு செஞ்சேன். என்னோட வேத தியானங்களின்போது, அந்திக்கிறிஸ்துகள் ஒருபோதும் மனந்திரும்ப மாட்டாங்கன்னு தேவனோட வார்த்தையில வாசிச்சேன். ஜாங் சின் ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாங்கன்னு எனக்குத் தெரியும், அவங்க வெளியேற்றப்படாம இருந்தா, அவங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கயில, அவங்க நிச்சயமா திருச்சபை வாழ்க்கையத் தொந்தரவு செஞ்சு குழப்பத்த ஏற்படுத்துவாங்க, அந்த நேரத்துல, சகோதர சகோதரிகள் மறுபடியும் துன்பப்படுவாங்க. நான் எழுந்திருச்சு நின்னு ஜாங் சின்னை அம்பலப்படுத்த வேண்டியிருந்துச்சு. என்னால அதுக்கப்புறமும் என்னையப் பாதுகாக்க முடியல. தேவனோட வார்த்தையில, நான் வாசிச்சேன், “சத்தியம் உன்னில் ஜீவனாக மாறியவுடன், தேவனை தூஷிக்கிறவனாகவும், தேவனுக்குப் பயப்படாதவனாகவும், தன் கடமையைச் செய்யும்போது கவனக்குறைவானவனாகவும், செயலற்றவனாகவும் இருக்கிற ஒருவனையோ, அல்லது திருச்சபைப் பணிகளில் குறுக்கிட்டு, தலையிடும் ஒருவனையோ நீ கவனித்துப்பார்க்கும் போது, நீ சத்தியத்தின் கொள்கைகளின்படி இயங்குவாய், அவர்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவனாகவும், தேவைக்கு ஏற்ப அம்பலப்படுத்தக்கூடியவனாகவும் இருப்பாய். சத்தியம் உன் ஜீவனாய் மாறியிராமல், நீ இன்னும் உன் சாத்தானிய மனநிலைக்குள் வாழ்வாயானால், அப்போது திருச்சபையின் பணிக்கு இடையூறுகளையும் தொந்தரவுகளையும் ஏற்படுத்தும் துன்மார்க்கர்களையும் பிசாசுகளையும் நீ கண்டுபிடிக்கும்போது, நீ கண்டும் காணாதவனைப் போலவும், கேட்டும் கேளாதவனைப் போலவும் இருப்பாய்; உன் மனசாட்சியிலிருந்து கண்டித்து உணர்த்தாமல், அவர்களை ஒதுக்கித் தள்ளுவாய். திருச்சபையின் பணிக்கு இடையூறு விளைவிப்பவருக்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட நீ நினைப்பாய். திருச்சபையின் பணி மற்றும் தேவனுடைய வீட்டின் நலன்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் சரி, நீ கவலைப்படுவதோ, தலையிடுவதோ அல்லது குற்ற உணர்ச்சியை உணர்வதோ இல்லை—இது உன்னை மனசாட்சியோ அல்லது பகுத்தறிவோ இல்லாத ஒருவனாகவும், ஒரு அவிசுவாசியாகவும், ஒரு சேவை செய்பவனாகவும் ஆக்குகிறது. நீ தேவனுடையதைப் புசித்து, தேவனுடையதைப் பானம்பண்ணுகிறாய், மேலும் தேவனிடமிருந்து வரும் எல்லாவற்றையும் அனுபவித்து மகிழ்கிறாய், ஆனாலும் தேவனுடைய வீட்டின் நலன்களுக்கு ஏற்படும் எந்தத் தீங்குக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என்பதாக உணர்கிறாய்—இது உனக்கு உணவளிக்கும் கையைக் கடிக்கும் ஒரு நம்பிக்கைத் துரோகியாக உன்னை மாற்றுகிறது. நீ தேவனுடைய வீட்டின் நலன்களைப் பாதுகாக்கவில்லை என்றால், நீ ஒரு மனுஷனா? இது திருச்சபைக்குள் தன்னை நுழைத்துக்கொண்ட ஒரு பிசாசாக இருக்கிறது. நீ தேவன் மீதான விசுவாசத்தைப் போலியாகக் காட்டி, தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவனாக நடிக்கிறாய், மேலும் நீ தேவனுடைய வீட்டில் மற்றவர்களின் தாராள மனப்பான்மையை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறாய். நீ ஒரு மனுஷ வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கவில்லை, மேலும் தெள்ளத் தெளிவாக அவிசுவாசிகளில் ஒருவனாய் இருக்கிறாய். நீ உண்மையிலேயே தேவனை விசுவாசிக்கும் ஒருவனாக இருந்தால், அப்போது நீ சத்தியத்தையும் ஜீவனையும் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும், குறைந்தபட்சம் நீ தேவனுடைய தரப்பிலிருந்து பேசுவாய் மற்றும் செயல்படுவாய்; மிகக் குறைந்தபட்சம், தேவனுடைய வீட்டின் நலன்கள் சமரசம் செய்யப்படுவதைக் கண்டு நீ சும்மா இருக்க மாட்டாய். கண்டும் காணாமல் இருக்க வேண்டிய உந்துதல் உனக்கு இருக்கும்போது, நீ குற்ற உணர்வடைந்து, நிம்மதியின்றி, ‘எதுவும் செய்யாமல் என்னால் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது, நான் எழுந்து நின்று ஏதாவது சொல்ல வேண்டும், நான் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனுடைய வீட்டின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கப்படாமலும், திருச்சபை வாழ்க்கை தொந்தரவு செய்யப்படாமலும் இருக்கும்படி, நான் இந்தப் பொல்லாத நடத்தையை வெளிப்படுத்த வேண்டும், நான் அதை நிறுத்த வேண்டும்’ என்று உனக்கு நீயே சொல்லிக்கொள்ளுவாய். சத்தியம் உன் ஜீவனாக மாறியிருந்தால், நீ இந்தத் தைரியத்தையும் மனவுறுதியையும் பெற்றிருந்து, விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடியவனாய் இருப்பது மட்டுமல்லாமல், தேவனுடைய கிரியைக்காகவும், அவருடைய வீட்டின் நலன்களுக்காகவும் நீ சுமக்க வேண்டிய உன்னுடைய பொறுப்பையும் நிறைவேற்றுவாய், மேலும் உன்னுடைய கடமை அதன் மூலம் நிறைவேற்றப்படும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, தேவனோட வழிகாட்டுதலின் மூலமா ஜாங் சின் மற்றும் சியாவோ லியுவோட பொல்லாத செயல்களப் பத்தி ஓரளவு எனக்குப் பகுத்தறிவு ஏற்பட்டத நான் உணர்ந்தேன். நான் எழுந்திருச்சு நின்னு அவங்கள அம்பலப்படுத்தலேன்னா, எனக்கு மனசாட்சியே இருக்காது, திருச்சபைப் பணிகளப் பாதுகாக்க நான் தவறிடுவேன். ஜாங் ஜின்னை அம்பலப்படுத்தத் தவறியதால என்னால அதுக்கப்புறம் சுயநலமாவும் கேவலமாவும் இருக்க முடியல. நான் ஒரு ஆட்சிமுறை ஆணையப் பத்தி சிந்திச்சேன், “தேவனின் கிரியைக்கு நன்மையாக இருக்கும் எல்லாவற்றையும் செய்வாயாக மற்றும் தேவனுடைய கிரியையின் நலன்களுக்குப் பாதகமான எதையும் செய்யாதே. தேவனுடைய நாமம், தேவனின் சாட்சி, மற்றும் தேவனின் கிரியை ஆகியவற்றைப் பாதுகாப்பாயாக(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் காலத்தில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய பத்து நிர்வாகக் கட்டளைகள்”). தேவனோட கோரிக்கைகள நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். திருச்சபையோட ஒரு உறுப்பினரா, திருச்சபையின் வேலை சம்பந்தப்பட்ட இடத்துல, எழுந்திருச்சு நின்னு பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்துச்சு. அதுக்கப்புறமா, நிலைமைய ஆய்வு செய்ய மேலிடத் தலைவர்கள் வந்தாங்க. ஜாங் சின் மற்றும் சியாவோ லியுவோட பொல்லாத நடத்தைகளப் பத்தி நான் புகாரளிச்சேன், அதோடு மேலிடத் தலைவர்கள் விஷயங்களச் சரிபார்க்க மறுபடியும் விசாரிச்சாங்க. அந்திக்கிறிஸ்துகளைப் பகுத்தறிவதப் பத்திய சத்தியத்தக் குறிச்சு ஒரு கூடுகையில ஐக்கியங்கொண்டதன் மூலமா, சகோதர சகோதரிகள் எல்லாரும் பகுத்தறிவடைஞ்சாங்க. ஜாங் சின் மற்றும் சியாவோ லியுவின் பொல்லாத செயல்கள ஒவ்வொருத்தரா அம்பலப்படுத்தினாங்க. ஜாங் சின் அதிகாரப்பூர்வமா ஒரு அந்திக்கிறிஸ்துவா இருந்தாருங்கறது தீர்மானிக்கப்பட்டுச்சு, அதோடு அவங்க திருச்சபையிலருந்து வெளியேற்றப்பட்டாங்க. சியாவோ லியூ, தன்னோட அதிகப்படியான பொல்லாப்புக்காக மனந்திரும்ப மறுத்ததுக்கப்புறமா, அந்திக்கிறிஸ்துவுக்குத் துணையா இருந்ததுக்காக வெளியேற்றப்பட்டாங்க. ஜாங் சின்னால ஏமாத்தப்பட்ட சில சகோதர சகோதரிகள் பகுத்தறிவப் பெற்றுக்கிட்டாங்க, அவங்க எல்லாரும் ஜாங் சின்னை நிராகரிச்சு, அதுக்கப்புறம் அவங்களப் பின்தொடரல. அதுக்கப்புறமா, திருச்சபை வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புச்சு. இந்த அந்திக்கிறிஸ்துவப் பத்திய என்னோட புகார்ல திருப்பங்களும் மாற்றங்களும் இருந்தாலும் கூட, இந்த அந்திக்கிறிஸ்துவோட அடக்குமுறையால, நான் அந்திக்கிறிஸ்துகளப் பத்திய ஓரளவு பகுத்தறிவப் பெற்றுக்கிட்டேன், ஓரளவு நுண்ணறிவப் பெற்றேன், நான் ஓரளவு நடைமுறை அனுபவத்தையும் தேவனோட நீதியான மனநிலையப் பத்திய அறிவையும் பெற்றுக்கிட்டேன், அதோடு, தேவன் மீதான என்னோட விசுவாசம் இன்னும் அதிகரிச்சுச்சு.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுகபோகத்திற்கான பேராசை உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்

கடந்த ஜூலை மாதத்துல, என்னை காணொளிப் பணிக்குப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினாங்க. ஆரம்பத்துல, நான் அடிக்கடி என் சகோதர சகோதரிகளின் பணியை...