புதிதாக வந்தவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது நான் வெளிப்படுத்தப்பட்டேன்

ஜனவரி 21, 2024

சுவிசேஷம் பரவுறப்போ, கடைசி நாட்கள்ல அதிகமான ஜனங்கள் தேவனோட கிரியைய ஆராயுறாங்க. அதனால அதிகமான ஜனங்கள் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு புதுசா வந்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சணும். நல்ல திறமையிருக்கிற புதியவங்களுக்கு பயிற்சி கொடுக்கறது முக்கியம் அதனால அவங்களால ஒரு கடமைய செய்ய முடியும். கொஞ்ச நாளுக்கப்புறமா, புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி அளிக்கறது நான் நெனச்சதப் போல சுலபமானது இல்லங்கறதக் கண்டுபிடிச்சேன். அவங்க எதுவுமே தெரியாத புதுசா பிறந்த குழந்தைகளப் போல இருந்தாங்க. அவங்க கைகளப் பிடிக்க வேண்டியிருந்துச்சு. அவங்களோட கூடுகைகளோட உள்ளடக்கத்தப் பத்தி நான் விவாதிக்கவும், கூடுகைகள எப்படி நடத்துறதுன்னு அவங்களுக்குக் கத்துக்கொடுக்கவும் வேண்டியிதிருந்துச்சு. அவங்க கூடுகைகள நடத்துனப்போ, நான் விஷயங்கள கவனிக்க வேண்டியிருந்துச்சு. அவங்க ரொம்ப வேகமா பேசுனாங்கன்னா, எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி மெதுவா பேசச் சொல்லி நான் அவங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிதிருந்துச்சு. அவங்க மெதுவா பேசுனாங்கன்னா, அவங்களக் கொஞ்சம் வேகமா பேசச் சொன்னேன். அதுக்கும் மேல, திருச்சபையில அவங்க மூலமா தண்ணீர் பாய்ச்சப்பட்டவங்க கூடிவரவும், தேவனோட வார்த்தைய வழக்கம்போல வாசிக்கவும், மெய்யான வழியில அடித்தளம் போடவும் முடியும்படி அவங்க சந்திச்ச பிரச்சனைகள எப்படித் தீர்க்கணும்ங்கறதயும் நான் அவங்களுக்குக் கத்துக் கொடுத்தேன். புதுசா வந்த இவங்களுக்குப் பிரச்சனைகள் இருந்தப்ப, அவங்களோட நிலை பாதிக்கப்படாம இருக்கவும் அவங்க வழக்கம்போல ஒரு கடமைய செய்யவும் நான் அவங்களோட நிலையக் கண்காணிக்கவும், சிரமங்கள எப்படி அனுபவிக்கறதுங்கறதப் பத்தி அவங்களோடு ஐக்கியங்கொள்ளவும் வேண்டியிருந்துச்சு.

கொஞ்ச நாளுக்கப்புறமா, புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்கறது சலிப்பா இருந்தத நான் உணர்ந்தேன். நான் குழுத் தலைவரா இருந்ததால, குழுவோட வேலைக்கும் மத்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுக்கும் நான்தான் பொறுப்பாளியா இருந்தேன். இந்தப் பணிகளுக்கு நிறைய நேரமும் முயற்சியும் தேவைப்பட்டுச்சு. ஆனா நான் பெரும்பாலான என்னோட நேரத்தயும் பலத்தயும், புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்கறதுல செலவழிச்சேன், காலப்போக்குல, நான் தண்ணீர் பாய்சுனவங்கள்ல சிலர் கூடுகைகளுக்கு வரல. நான் தனியா அவங்களத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்துச்சு. இது என்னையக் கவலைப்பட வச்சுச்சு, புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி அளிக்க ரொம்ப நேரம் எடுக்குதுன்னும், இது தண்ணீர் பாய்ச்சுற என்னோட பணியை பாதிக்குதுன்னும் நான் குறை சொன்னேன். ஒரு மாசத்துக்கப்புறமா, என்னோட குழுவுலயே நான்தான் ரொம்ப மோசமானவனா இருந்தேன். இது சங்கடமா இருந்துச்சு. ஒருதடவ, ஒரு கூடுகையில, என்னோட தலைவர் என்னோட தண்ணீர் பாய்ச்சுதல் வேலை பயனுள்ளதா இல்லைன்னு சொன்னாரு. நான் ரொம்ப சங்கடப்பட்டேன், நான் அங்கருந்து ஓடிப்போயிற விரும்புனேன். குழுத் தலைவரா, என்னோட தண்ணீர் பாய்ச்சுதல் பயனுள்ளதா இல்லேன்னா, ஜனங்க என்னையப் பத்தி என்ன நெனப்பாங்க? என்னால இத ஏத்துக்க முடியல, ரொம்ப வருத்தமா இருந்தேன். புதுசா வந்தவங்களப் பண்படுத்தறதுல சோர்ந்து போயிருந்தேன். சகோதர சகோதரிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுக்கு நான் என்னோட ஆற்றல செலவழிச்சிருந்தா, நான் குழுவுலயே மோசமானவனா இருந்திருக்க மாட்டேன்னு நெனச்சேன். புதுசா வந்தவங்களப் பண்படுத்தினதோட முடிவுகள உடனடியா எங்களால பாக்க முடியல, திருச்சபையில இருந்த மத்தவங்க நான் கொடுத்த விலைக்கிரயத்தப் பாக்கல. இத நெனச்சப்ப, நான் முடங்கிப்போனவனா உணர்ந்தேன், எனக்கிருந்த உற்சாகம் போயிருச்சு. புதுசா வந்தவங்களுக்கு பயிற்சி கொடுப்பத ஒரு பாரமா உணர்ந்தேன். அந்த நேரத்துல, நான் பயிற்சி கொடுத்த புதுசா வந்தவங்க சிலரால மத்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடிஞ்சுச்சு. அப்பத்தான் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்ட சிலருக்கு அவங்க தண்ணீர் பாய்ச்சுனாங்கன்னா, அவங்களோட வேலையக் கண்காணிக்கறதத் தாண்டி நான் அவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச உதவணும். நான் இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கும், வேலையோட பலன்களுக்கான பாராட்டு எனக்குக் கிடைக்காமப் போயிரும். “அவங்க மத்தவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச நான் அனுமதிக்க மாட்டேன். நான் பொறுப்பாளியா இருக்குறவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுறதுக்கு அவங்க என்கூட கூட்டு சேருவாங்க. இது என்னோட பணிய மேம்படுத்துவதோட, என்னைய சிறப்பா காட்டும்” அப்படின்னு நான் நினைக்க ஆரம்பிச்சேன். நான் என்னோட நற்பெயரப் பத்தி மட்டுந்தான் நெனச்சேன் இது தப்புன்னு உணரல. என்னோட நிலையப் பத்தின அறிவக் கொடுத்த தேவனோட வார்த்தையின் பத்திகள வாசிக்குற வரைக்கும் நான் அப்படித்தான் இருந்தேன். தேவனின் வார்த்தை கூறுகிறது: “ஒரு நபரின் செய்கைகள் நல்லவை அல்லது தீயவை என்று நியாயந்தீர்க்கப் படுவதற்கான அளவுகோல் என்ன? அவர்கள் தங்கள் சிந்தனைகள், வெளிப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளில் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சாட்சியை கொண்டிருக்கிறார்களா மற்றும் சத்தியத்தின் யதார்த்தத்தின் படி ஜீவிக்கிறார்களா என்பதைப் பொறுத்து அது இருக்கிறது. உனக்கு இந்த யதார்த்தம் இல்லை என்றால் அல்லது இதன்படி வாழாவிட்டால், சந்தேகம் இல்லாமல், நீ ஓர் அக்கிரமச் செய்கைக்காரன்தான். தேவன் அக்கிரமச் செய்கைக்காரர்களை எவ்விதம் பார்க்கிறார்? உன் சிந்தனைகளும் வெளிப்புற நடவடிக்கைகளும் தேவனுக்கு சாட்சி பகர்வதில்லை, அல்லது சாத்தானை வெட்கப்படுத்தி அதைத் தோற்கடிக்காது; அதற்குப் பதிலாக, அவை தேவனை வெட்கப்படுத்தும், அவை தேவனை வெட்கப்படுத்தும் அடையாளங்களால் நிறைந்திருக்கும். நீ தேவனுக்குச் சாட்சி பகரவில்லை, தேவனுக்காக உன்னை ஒப்புக்கொடுக்கவுமில்லை, நீ தேவனுக்கான உன் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றவுமில்லை; அதற்குப் பதிலாக நீ உனக்காகவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறாய். ‘உனக்காகவே’ என்பதன் அர்த்தம் என்ன? சரியாகச் சொன்னால், சாத்தானுக்காக என்பது அதன் அர்த்தமாகும். ஆகவே முடிவில் தேவன் கூறுவார், ‘அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.’ தேவனுடைய பார்வையில் நீ நல்ல செயல்களைச் செய்யவில்லை, மாறாக உன் நடத்தைத் தீயதாக மாறியிருக்கிறது. அது தேவனுடைய ஒப்புதலைப் பெறாது என்பதோடு மட்டுமல்லாமல்—அது ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும். தேவனிடத்தில் இத்தகைய நம்பிக்கை கொண்ட ஒருவன் எதைத் தேடி ஆதாயம் செய்வான்? அத்தகைய நம்பிக்கை முடிவில் ஒன்றும் இல்லாமல் போய்விடாதா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவருடைய சீர்கேடான மனநிலையை விட்டொழிப்பதன் மூலம் மட்டுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடைய முடியும்”). “தங்கள் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும், சத்தியத்தைப் பற்றிய அவர்களது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் மேலோட்டமானதாக இருந்தாலும், சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான எளிய பயிற்சிக்கான வழி என்னவென்றால் எல்லாவற்றிலும் தேவனுடைய வீட்டின் நலன்களைப் பற்றி சிந்திப்பதும், சுயநல ஆசைகள், தனிப்பட்ட நோக்கங்கள், எண்ணங்கள், கர்வம் மற்றும் அந்தஸ்து ஆகிய அனைத்தையும் விட்டுவிடுவதும் ஆகும். தேவனுடைய வீட்டின் நலன்களுக்கு முதலிடம் கொடுங்கள்—இதுவே மிகக் குறைந்தபட்சமாக ஒருவர் செய்ய வேண்டிய ஒன்றாகும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவருடைய சீர்கேடான மனநிலையை விட்டொழிப்பதன் மூலம் மட்டுமே சுதந்திரத்தையும் விடுதலையையும் அடைய முடியும்”). இத வாசிச்சதும், மனுஷங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கங்கறத வச்சோ, அல்லது அவங்களோட கடமை பயனுள்ளதா இருந்துச்சாங்கறத வச்சோ தேவன் அவங்கள மதிப்பிடுறதில்ல. ஜனங்க தங்களோட கடமைகள்ல சத்தியத்தப் பின்பற்றுறாங்களா, அவங்களோட குறிக்கோளும் துவக்கமும் திருச்சபையோட நலன்களப் பாதுகாக்குதா, அவங்க தேவன திருப்திப்படுத்த முயற்சிக்குறாங்களா அப்படின்னுதான் தேவன் பாக்குறாருங்கறதப் பார்த்தேன். உங்கள நல்லவனாவும், சிறந்தவனாவும் காட்டிக்கற நோக்கமுள்ளவங்களா நீங்க இருந்தா, தேவன் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாரு, உங்கள ஒரு பொல்லாதவன்னு அவர் கண்டனம் செய்வாரு. புதுசா வந்தவங்களப் பண்படுத்துறது முக்கியம்ன்னு எனக்குத் தெரியும். அது தண்ணீர் பாய்ச்சுற பணியாளர்களுக்கான பற்றாக்குறையத் தீர்க்கும், அதோடு புதுசா வந்தவங்க தங்களோட கடமைகளச் செய்யவும், அவங்க வேகமாக வளரும்படி, சத்தியத்த அறிஞ்சுக்கவும், தேவனோட கிரியைய அனுபவிக்கக் கத்துக்கவும் உதவுது. ஆனா நான் தேவனோட சித்தத்தயோ, புதுசா வந்தவங்களோட வாழ்க்கையயோ கருத்துல கொள்ளல. நான் என்னோட வேலையயும், என்னோட சொந்த பிம்பத்தயும், அந்தஸ்தயும் மட்டுந்தான் நெனச்சேன், புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்க கடினமா உழைக்க விரும்பல. நான் இழிவானவனா இருந்தேன். நான் என்னோட கடமையச் செய்யாம இருந்தேன். நான் வெறும் பெயரையும் அந்தஸ்தையும் பின்தொடர்ந்துகிட்டு, தீமை செஞ்சிட்டிருந்தேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் இன்னொரு பத்திய நான் வாசிச்சேன். “சத்தியத்தின் கொள்கைகளை, தேவனுடைய ஆணைகளை, மற்றும் தேவனுடைய வீட்டின் பணிகளை எவ்வாறு கையாளுவது அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் காரியங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து அந்திக்கிறிஸ்துகள் தீவிரமான கவனம் செலுத்துகின்றனர். தேவனுடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றுவது, தேவனுடைய வீட்டின் நன்மைகளைச் சேதப்படுத்தாமல் இருப்பது, தேவனை எப்படித் திருப்திப்படுத்துவது, அல்லது சகோதர சகோதரிகளுக்கு எவ்வாறு நன்மை உண்டாக்குவது என்பது பற்றி எல்லாம் அவர்கள் சிந்தித்துப்பார்க்க மாட்டார்கள்; இவை எல்லாம் அவர்கள் சிந்திக்கும் விஷயங்கள் அல்ல. அந்திக்கிறிஸ்துகள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்? தங்கள் சொந்த அந்தஸ்தும் புகழும் பாதிக்கப்படுமோ, மேலும் தங்கள் கௌரவம் குறைந்துபோகுமோ என்பதைத் தான். சத்தியத்தின் கொள்கைகளின்படி எதையாவது செய்வது திருச்சபைக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நன்மைசெய்யும், ஆனால் அவர்களின் சொந்த நற்பெயர் பாதிக்கப்பட்டு, தங்களுடைய சொந்த வளர்ச்சியும், தங்களுடைய சுபாவமும் சாராம்சமும் எத்தகையது என்று பலருக்கும் தெரியச் செய்துவிடும் என்றால், அவர்கள் நிச்சயமாகச் சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட மாட்டார்கள். நடைமுறைப் பணியைச் செய்வது அவர்களைப் பற்றி பலரையும் உயர்வாக நினைக்கவும், அவர்களை உயர்வாகப் பார்த்து பாராட்டவும், அல்லது தங்கள் வார்த்தைகள் அதிகாரம் பெற்று பலரையும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் வைக்கும் என்றால் அவர்கள் அந்த வகையிலேயே அதைச் செய்வதைத் தேர்ந்தெடுப்பார்கள்; இல்லாவிட்டால், தேவனுடைய வீட்டினுடைய அல்லது சகோதர சகோதரிகளுடைய நலன்களைக் கருத்தில் கொள்வதற்காக அவர்கள் தங்கள் சொந்த நலன்களை புறக்கணிப்பதைத் தேர்ந்துகொள்ள மாட்டார்கள். இதுவே அந்திக்கிறிஸ்துகளின் சுபாவமும் சாராம்சமும் ஆகும். இது சுயநலமானதும் வஞ்சகமானதும் அல்லவா?(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி மூன்று)”). இது அந்திகிறிஸ்துகளோட சுயநல வழிகள வெளிப்படுத்துது. அவங்க திருச்சபையோட பணியயோ அல்லது மத்தவங்களோட வாழ்க்கையயோ கருத்துல கொள்ளாம எல்லாத்துலயும் தங்கள முன்னிறுத்துறாங்க. அவங்க தங்களப் பத்தி மட்டுமே நினைக்குறாங்க. நான் ஒரு அந்திக்கிறிஸ்துவப் போல இருந்தத உணர்ந்தேன். புதுசா வந்தவங்கள பண்படுத்துறது முக்கியம்ங்கறது எனக்குத் தெரியும், ஆனா புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்கறதுக்கு ரொம்ப நேரமெடுக்குதுங்கறத நான் பாத்தப்ப, நான் நெனச்சதெல்லாமே என்னோட சொந்த நலன்கள மட்டுந்தான். புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்குறது ரொம்ப நேரமெடுத்துச்சு, மத்த வேலைகளத் தாமதப்படுத்துச்சு, என்னைய குறைந்த செயல்திறனுள்ளவனாக்குச்சு, அது என்னோட புகழ சேதப்படுத்துச்சு அப்படின்னு நான் நெனச்சேன். இது அநியாயம்ன்னு நான் உணர்ந்தேன், புதுசா வந்தவங்களப் பண்படுத்துறத பத்தி நான் எதிர்மறைய வெளிப்படுத்துனேன், என்னோட பணி முடிவுகள மேம்படுத்தி, என்னைய சிறப்பானவனா காட்டிக்க புதுசா வந்தவங்களக் கூட எனக்கு உதவி செய்ய வச்சேன். தேவனோட வார்த்தையோட வெளிப்பாட்டின் மூலமா, நான் சுயநலவாதிங்கறதப் பாத்தேன். புதுசா வந்தவங்கள திருச்சபையோட பணிய நிலைநிறுத்தறதுக்காகப் பண்படுத்தாம, என்னோட நிலையத் தக்கவச்சுக்க பண்படுத்தினேன். இது தேவனை எதிர்ப்பதா இருந்துச்சு. தேவனோட வார்த்தை, இதப் பாக்க எனக்கு உதவுச்சு. அதுக்கப்புறமா, நான் தேவனிடத்துல ஜெபிச்சு மனந்திரும்புனேன். புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்க நான் தயாரா இருக்குறதா சொன்னேன். அதுக்கப்புறமா, புதுசா வந்தவங்க சிலர அவங்களாவே தண்ணீர் பாய்ச்சுறதத் தொடங்கச் சொன்னேன். அவங்க தேவனுக்கு நன்றியுள்ளவங்களா இருந்தாங்க. இந்தக் கடமையில சிரமங்கள் இருப்பது அவங்களுக்குத் தெரியும்னும், ஆனா, அவங்க தங்களோட கடமையில தேவனை சார்ந்திருப்பாங்கன்னும், அவங்களோட சிரமங்கள்ல அவர் உதவுவாருன்னும் சொன்னாங்க. புதுசா வந்தவங்களோட ஆர்வத்தப் பாத்து நான் உற்சாகமடஞ்சேன், அவங்களுக்கு நிறையா கத்துக்கொடுக்க விரும்புனேன். அவங்களோட தண்ணீர் பாய்ச்சுற பணியைச் சிறப்பா செய்ய அவங்களுக்கு உதவ விரும்புனேன். தேவனோட கிரியைய அப்பதான் ஏத்துக்கிட்டவங்களுக்கு எப்படித் தண்ணீர் பாய்ச்சுறதுங்கறதக் காட்ட நான் தண்ணீர் பாய்ச்சுறதுக்கான சில நல்ல யோசனைகள எழுதி, அவற்றப் பகிர்ந்துக்கிட்டேன். ஒவ்வொரு கூடுகைக்கப்புறமும், நான் கவனிச்ச பிரச்சனைகளப் பத்தி நான் ஐக்கியங்கொண்டேன் மற்றும் தெளிவா விளக்கிப் பேசினேன். சில நேரங்கள்ல தண்ணீர் பாய்ச்சுற பணியில அவங்களுக்கு சிரமங்க ஏற்பட்டப்போ, பிரச்சனைகளத் தீர்க்க நானும் அவங்களுக்கு உதவுனேன். புதுசா வந்தவங்களப் பண்படுத்துறத நான் அதுக்குமேல எதிர்க்கல, அதோடு அத ஒரு பாரமாவும் நினைக்கல. அதுக்குப் பதிலா, இது என்னோட பொறுப்புங்கறத உணர்ந்தேன்.

ஆனா, இந்த புதுசா வந்தவங்கள்ல, அன்னா அப்படின்னு ஒரு சகோதரி இருந்தாங்க, அவங்க பாரமே இல்லாம ருந்தாங்க. அவங்க கடமைகள்ல போதுமான விலைக்கிரயம் கொடுக்கல. வாரங்கள் கடந்துபோச்சு, அவங்ககிட்ட இருந்த புதுசா வந்தவங்களுக்கு தேவனோட மனுவுருவாதல், மூன்று கட்ட கிரியைகள் போன்ற அடிப்படை சத்தியங்கள் அப்பவும் புரியல, சிலர் கூடுகைகளுக்குக் கூட போகாம இருந்தாங்க, அதனால அவங்கள ஆதரிக்கச் சொல்லி நான் அவங்களக் கட்டாயப்படுத்தினேன். ஆனா சில நேரங்கள்ல என்னால அவங்களத் தொடர்புகொள்ள முடியல, காரியங்கள நானே செய்ய வேண்டியிருந்துச்சு. அன்னா மேல நான் எரிச்சலடஞ்சேன். அவங்க வேலைய சரியா செய்யலன்னும் என்னைத் தடுக்குறாங்கன்னும் நான் உணர்ந்தேன். நான் ஏற்கனவே ரொம்ப அலுவலா இருந்தப்ப, அவங்களோட பிரச்சனைகள நான் தீர்த்து வைக்க வேண்டியிருந்துச்சு. அது ரெண்டு கடமைகளச் செய்யறதப் போல இருந்துச்சு. அது ரொம்ப கவலையாவும் முயற்சி செய்ய வேண்டியதாவும் இருந்துச்சு. நான் அவங்களுக்குப் பயிற்சி கொடுக்காம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அது என்னைய மன அழுத்தத்துலயிருந்து காப்பாத்தியிருக்கும். சகோதரி அன்னாவ விட்டுறலாம்ன்னு நான் நெனச்சுக்கிட்டிருந்தப்ப, தேவனோட வார்த்தையோட ஒரு பத்தி எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு, “சுயநலமும் சந்தர்ப்பவாதமும் உன்னில் தோன்றும்போது, அதை நீ உணர்ந்து கொண்டால், இதைச் சரிசெய்ய நீ தேவனிடம் ஜெபம் செய்து சத்தியத்தைத் தேட வேண்டும். நீ தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், சாராம்சத்தில், இவ்விதமாக செயல்படுவது சத்தியத்தின் கொள்கைகளை மீறுவதாகும், இது திருச்சபையின் பணிக்குத் தீங்கு விளைவிக்கும், இது சுயநலமான மற்றும் இழிவான நடத்தையாகும், இது சாதாரண ஜனங்கள் செய்து கொண்டிருக்க வேண்டிய காரியம் அல்ல. நீ உன் சொந்த நலன்களையும் சுயநலத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, திருச்சபையின் பணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், இதுவே தேவன் விரும்புகிற காரியம் ஆகும். ஜெபத்தின் மூலம் உன்னைப் பற்றிச் சிந்தித்த பிறகு, அவ்வாறு செயல்படுவது சுயநலமானது மற்றும் இழிவானது என்பதை நீ உண்மையிலேயே உணர்ந்து கொண்டால், உன் சுயநலத்தை ஒதுக்கி வைப்பது எளிதாகிவிடும். நீ உன் சுயநலத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் ஒதுக்கி வைக்கும்போது, நீ உறுதியுள்ளவனாக உணர்வாய், நீ சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பாய், மேலும் உன்னை நீ எப்படி நடத்துகிறாய் என்பதில் மனசாட்சியும் உணர்வும் இருக்க வேண்டும் என்றும், நீ திருச்சபையின் பணியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றும், மிகவும் சுயநலமான இழிவான மற்றும் மனசாட்சியற்ற மற்றும் உணர்வற்ற உன் சொந்த நலன்களை நீ நிலைநிறுத்தக் கூடாது என்றும் நீ உணர்வாய். சுயநலமின்றி செயல்படுவது, திருச்சபையின் பணியை நினைப்பது, தேவனைத் திருப்திப்படுத்துவதை மட்டுமே செய்வது நீதியானதும் கனத்துக்குரியதும் ஆகும், மேலும் அது உன் வாழ்விற்கு மதிப்பைக் கொண்டு வரும். இவ்வாறு பூமியில் வாழ்வதில், நீ வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கிறாய், நீ இயல்பான மனிதத்தன்மையின்படியும், உண்மையான மனித சாயலின்படியும் வாழ்கிறாய், மேலும் நீ தெளிவான மனசாட்சியைக் கொண்டிருப்பது மட்டுமன்றி, தேவனால் உனக்கு அருளப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் தகுதியானவனாகவும் இருக்கிறாய். நீ எவ்வளவு அதிகமாக இப்படி வாழ்கிறாயோ, அவ்வளவு நிலையாக நீ உணர்வாய், நீ அவ்வளவு சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாய், மேலும் நீ அவ்வளவு பிரகாசமாக உணர்வாய். இப்படியே, தேவன் மீதான விசுவாசத்தின் சரியான பாதையில் நீ கால் பதித்திருக்க மாட்டாயா?(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தன் இருதயத்தைத் தேவனுக்குத் தருவதன் மூலம் ஒருவரால் சத்தியத்தை அடையமுடியும்”). தேவனோட வார்த்தை தெளிவான பாதைய சுட்டிக்காட்டுச்சு. திருச்சபையோட நலன்கள நாம பாதுகாக்கணும், அதோடு நம்மளோட மனசாட்சிப்படி நடந்துக்கணும். சகோதரி அன்னா தேவனோட கிரியைய அப்பத்தான் ஏத்துக்கிட்டிருந்தாங்க. அவங்க சத்தியத்தப் புரிஞ்சுக்கல அதோடு அவங்க கடமையில ஒரு பாரம் இல்லாம இருந்தாங்க, அதனால நான் அவங்களுக்கு அன்போட அதிக ஐக்கியத்தக் கொடுக்கணும். இது என்னோட பொறுப்பா இருந்துச்சு. ஆனா அவங்களோட குறைகளப் பாத்ததும், நான் அவங்கள ஒரு தொந்தரவளிப்பவங்களாப் பாத்தேன், அவங்கள விட்டுட விரும்புனேன். என்னிடத்துல மனிதத்தன்மையே இல்லாம இருந்துச்சு. அதுக்கப்புறம் நான் தேவனோட வார்த்தைய பயன்படுத்தி அவங்களோட ஐக்கியப்பட்டேன். அவங்க இதப் பத்தி பிற்பாடு எழுதுனப்போ நான் ரொம்பவும் நெகிழ்ந்துபோனேன். அவங்க, “கடந்த காலத்துல நான் பாரமில்லாம என்னோட கடமைய செஞ்சேன். தேவனோட புதிய கிரியைய புதுசா ஏத்துக்கிட்டவங்கள என்னோட நண்பர்களா நான் பாக்கணும், தேவனோட கடைசி நாட்களின் கிரியையால மட்டுந்தான் நம்மள இரட்சிக்க முடியும்ங்கறத அவங்க அறிஞ்சுக்குறமாதிரி, தேவனோட வார்த்தைய அவங்களுக்கு தெளிவாவும் அன்பாவும் பிரசங்கிக்கணும். அவங்களோட போராட்டங்கள அறிஞ்சுக்க நான் அவங்க இடத்துல என்னைய வச்சுப் பாக்கணும். நான் செய்யுற கடமைய நான் நேசிக்கணும்” அப்படின்னு சொன்னாங்க. அதுக்கப்புறமா, அவங்க தன்னோட கடமையில அதிக பாரத்தக் கொண்டிருந்தாங்க. ஒரு நாள் ராத்திரி, நடுச்சாமத்துக்குப் பிறகும், அவங்க ஏன் தூங்கலன்னு கேட்டேன். கூடுகைக்கு வராதவங்களோடு பிறகு பேசுறதுக்காக யார் யாரு கூடுகைக்கு வரலன்னு பாத்துக்கிட்டு இருந்ததா அவங்க சொன்னாங்க. மத்தவங்களோட நிலைமையப் பத்தி அவங்க என்கிட்ட சொன்னாங்க. அவங்க பேசுறப்ப இருமல் சத்தம் கேட்டுச்சு, அதனால, அவங்களுக்கு சளி பிடிச்சிருக்கான்னு நான் கேட்டேன். அவங்களுக்கும் அவங்க குடும்பத்தாருக்கும் கொரோனா வைரஸ் இருந்ததா அவங்க என்கிட்ட சொன்னாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லன்னாலும், அவங்க தன்னோட கடமைய ஒதுக்கி வைக்க மாட்டாங்க. அழுதுக்கிட்டே அவங்க, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் இல்லேன்னா, அவங்க விழுந்துபோயிருப்பாங்க. இந்தக் கடமை அவங்கள உற்சாகப்படுத்தலேன்ன, அவங்க வேதனையில மரிச்சுப்போயிருப்பாங்க அப்படின்னு சொன்னாங்க. தேவன் அவங்கள இரட்சித்தாரு. அவங்களோட ஐக்கியத்தக் கேட்டு நான் அழுதுட்டேன், நான் ரொம்ப நெகிழ்ந்துபோனேன். புதுசா வந்தவங்களப் பண்படுத்துறது அர்த்தமுள்ளதா இருந்தத நான் பாத்தேன். சகோதரி அன்னா ரொம்ப உடல்நிலை சரியில்லாம இருந்தப்பவும், அவங்க கைவிட்டுறல. தேவனைச் சார்ந்திருக்க அவங்களுக்கு அதிக நம்பிக்கை இருந்துச்சு. இது தேவனோட வார்த்தைகளால அடையப்பட்ட விளைவுங்கறது எனக்குத் தெரியும். ஒரு வாரம் கழிச்சு, அவங்க குணமடைஞ்சாங்க. இதக் கேட்டவுடனே நான் தேவனுக்கு நன்றியுள்ளவனா இருந்தேன். ஆனா, என்னோட சுயநலத்தால நான் வெட்கப்படவும் செஞ்சேன். என்னோட சுயநலத்தால, சகோதரி அன்னா தன்னோட கடமைய செய்யுற வாய்ப்ப கிட்டத்தட்ட இழந்துட்டாங்க.

சீக்கிரத்துலயே, திருச்சபை என்னைய புதுசா வந்த ரெண்டு பேருக்குப் பயிற்சி கொடுக்க வச்சுச்சு. முதல்ல நான் அவங்களுக்கு கவனமா உதவி செஞ்சேன். ஆனா சீக்கிரத்துல, என்னோட வேலைய மேம்படுத்த முடியலங்கறதப் பாத்தேன். அதோட, புதுசா வந்த இந்த ரெண்டு பேருக்கும் நல்லா பயிற்சி கொடுக்கணும்னா நிறைய வேலையும், நேரமும் முயற்சியும் தேவைப்படும்னு நான் நெனச்சேன். “நான் புதுசா வந்தவங்க சிலர பண்படுத்தியிருக்கேன், நான் வழிநடத்துறவங்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச நான் கடினமா உழைக்கணும். என்னோட வேலை பலனளிக்கலேன்னா, மத்தவங்க என்னையப் பத்தி என்ன நெனப்பாங்க?” அப்படின்னு என்னால யோசிக்காம இருக்க முடியல. அதனால, புதுசா வந்த இந்த ரெண்டு பேரையும் பயிற்சிக்காக மத்தவங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன். சில காரணங்களால, மூணு நாளுக்குள்ள, அவங்களால தங்களோட கடமைகளச் செய்ய முடியல. இன்னமும் வருத்தமான விஷயம் என்னன்னா, நான் பண்படுத்திட்டிருந்த சகோதரி ஜெனி, தானே தண்ணீர் பாய்ச்சிருக்கக் கூடும், குழுவுலருந்து வெளியேறி என்னைய பிளாக் பண்ணீட்டாங்க. வீட்ல இருந்த பிரச்சனைகளாலதான் அவங்க குழுவுலருந்து வெளியேறினாங்கங்கறத நான் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களோட மகனுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததால, மருத்துவர் தேவைப்பட்டாரு. அந்த நேரத்துல, அவங்க பலவீனமா இருந்தாங்க, ஆனா நான் அவங்களோட கஷ்டங்கள அறியவோ அல்லது அவங்களுக்கு உதவி செய்யவோ இல்ல. அவங்க என்னேடு பேச விரும்புனப்பவும், நான் அலுவலா இருந்தேன்னு அவங்களப் புறக்கணிச்சேன். அவங்களோட சிரமங்கள் தீர்க்கப்படல, அதனால அவங்க செயலற்றவங்களாகி விலகிட்டாங்க. இந்த நிகழ்வுகள எதிர்கொண்டப்போ, என்னோட மனசு வெறுமையா இருந்துச்சு, என்னோட இருதயம் வேதனையில இருந்துச்சு. நான் என்னைய அமைதிப்படுத்திக்க முயற்சி செஞ்சு, அவரோட சித்தத்தப் புரிஞ்சுக்கறதுல எனக்கு வழிகாட்டும்படி கேட்டு தேவனிடத்துல ஜெபிச்சேன்.

அதுக்கப்புறம், என்னோட தலைவர் தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய எனக்கு அனுப்புனாரு. “யாராவது ஒருவர் அவர்கள் சத்தியத்தை நேசிப்பதாகவும், சத்தியத்தைப் பின்தொடர்வதாகவும் கூறி, ஆனால் சாராம்சத்தில், அவர்கள் பின்பற்றும் இலக்கானது தங்களை வேறுபடுத்திக் காட்டுவதும், பகட்டாகக் காட்டுவதும், ஜனங்கள் அவர்களைப் பற்றி உயர்வாக நினைக்க வைப்பதும், தங்கள் சொந்த நலன்களை அடைவதும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காகவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லாமல், மாறாக கௌரவத்தையும் அந்தஸ்தையும் அடைவதற்காக கடமையைச் செய்வதுமாக இருந்தால், அப்போது அவர்களின் பின்தொடர்தல் முறைகேடானதாகும். அப்படியிருக்க, திருச்சபையின் பணி என்று வரும்போது, அவர்களின் செயல்கள் தடையாக இருக்கின்றனவா அல்லது அதை முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றனவா? அவை தெளிவாக ஒரு தடையாக இருக்கின்றன; அவை அதை முன்னோக்கி நகர்த்துவதில்லை. சிலர் திருச்சபையின் பணியைச் செய்கிறேன் என்று பகட்டாகக்காட்டுகிறார்கள், ஆனாலும் தங்கள் சொந்த கவுரவத்தையும் அந்தஸ்தையும் பின்தொடர்ந்து, தங்கள் சொந்த செயல்பாட்டை நடத்தி, தங்கள் சொந்த சிறிய குழுவை உருவாக்கி, தங்கள் சொந்த ராஜ்யத்தை உருவாக்குகிற இந்த வகையான நபர் தங்கள் கடமையைச் செய்கிறார்களா? அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் முக்கியமாக திருச்சபையின் வேலையை சீர்குலைக்கின்றன, இடையூறு செய்கின்றன மற்றும் பலவீனப்படுத்துகின்றன. அவர்கள் அந்தஸ்து மற்றும் கௌரவத்தைப் பின்தொடர்வதன் விளைவு என்ன? முதலாவதாக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைப் புசித்து குடிப்பது மற்றும் சத்தியத்தைப் புரிந்து கொள்வதை இது பாதிக்கிறது, இது அவர்களின் ஜீவப்பிரவேசத்தைத் தடுக்கிறது, அவர்கள் தேவன் மீதான விசுவாசத்தில் சரியான பாதையில் நுழைவதைத் தடுக்கிறது, மற்றும் தவறான பாதையில் அவர்களை வழிநடத்துகிறது, இது தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது, மேலும் அவர்களை அழிவுக்குக் கொண்டு வருகிறது. இறுதியில் அது திருச்சபையின் பணிக்கு என்ன செய்கிறது? இடையூறு, பலவீனப்படுத்துதல் மற்றும் சிதைவு. ஜனங்கள் புகழையும் அந்தஸ்தையும் தேடுவதால் ஏற்பட்ட விளைவு இது. இவ்வாறு அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது, இதை ஒரு அந்திக்கிறிஸ்துவின் பாதையில் நடப்பது என்பதாக வரையறுக்க முடியாதா? ஜனங்கள் அந்தஸ்தையும் கௌரவத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தேவன் கேட்கும்போது, அவர் ஜனங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிக்கிறார் என்பதல்ல, மாறாக, இது ஏனென்றால், கௌரவத்தையும் அந்தஸ்தையும் பின்தொடரும்போது, ஜனங்கள் திருச்சபையின் பணியையும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஜீவப்பிரவேசத்தையும் சீர்குலைத்து இடையூறு செய்கிறார்கள், மேலும் மற்றவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடித்து, சத்தியத்தைப் புரிந்துகொண்டு, இதனால் தேவனுடைய இரட்சிப்பை அடைகிறதிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு மறுக்கமுடியாத உண்மை. மக்கள் தங்கள் சொந்த கௌரவத்தையும் அந்தஸ்தையும் தேடும்போது, அவர்கள் நிச்சயமாகச் சத்தியத்தைத் தேடமாட்டார்கள், மற்றும் அவர்கள் உண்மையாகத் தங்கள் கடமையைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் கௌரவத்துக்காகவும் அந்தஸ்துக்காகவுமே பேசுவதோடு, எந்த ஒரு சிறிய விதிவிலக்கும் இல்லாமல் அவர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் அந்த விஷயங்களுக்காகவே செய்வார்கள். சந்தேகமில்லாமல் இந்த வழியில் நடப்பதும் செயல்படுவதும் அந்திக்கிறிஸ்துகளின் பாதையில் நடப்பதாகும்; இது தேவனுடைய கிரியைக்குத் தடையும் இடையூறும் ஆகும், மேலும் அதன் பல்வேறு விளைவுகள் ராஜ்யத்தின் சுவிசேஷம் பரவுவதையும் திருச்சபைக்குள் தேவனுடைய சித்தம் சுதந்திரமாகப் பாய்வதையும் தடுக்கிறது. ஆகவே, கௌரவத்தையும் அந்தஸ்தையும் பின்தொடர்ந்து போகிறவர்கள் செல்லும் பாதை தேவனை எதிர்க்கும் பாதை என்று ஒருவர் நிச்சயத்தோடு கூறலாம். இது அவரை வேண்டும் என்றே எதிர்ப்பது, அவரை மறுத்துரைத்தல் ஆகும்—இது தேவனை எதிர்ப்பதில் சாத்தானோடு ஒத்துழைப்பதும் அவருக்கு விரோதமாக நிற்பதும் ஆகும். அந்தஸ்து மற்றும் கௌரவத்தை ஜனங்கள் பின்தொடர்வதன் சுபாவம் இதுதான். தங்கள் சொந்த நலன்களைப் பின்தொடர்பவர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால், அவர்கள் பின்தொடரும் இலக்குகள் சாத்தானின் இலக்குகளாகும், அவை துன்மார்க்கமான மற்றும் அநீதியான இலக்குகளாகும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி ஒன்று)”). நாம பெயரையும் அந்தஸ்தையும் நாடுனா, நம்மளோட நோக்கங்களும் துவக்கங்களும் தேவனுக்கு எதிரானவையாவும் சாத்தானிடத்துலருந்து வர்றதுமா இருக்குது, நாம திருச்சபையோட பணியத் தடுக்கிறோம், தொந்தரவு செய்யுறோம். இது தீமையா இருக்குது. புதுசா வந்தவங்களப் பண்படுத்துறதுல நான் நிறைய தடவ தந்திரங்களப் பயன்படுத்தினதப் பார்த்தேன். காரியங்க அதிக நேரமும் முயற்சியும் எடுக்குறப்ப எல்லாம், என்னைய சிறப்பா காட்டிக்கக்கூடிய வேலைய நான் தேர்ந்தெடுத்தேன், நான் பயிற்சி கொடுத்த புதுசா வந்தவங்களக் கூட, சுமைகளா நெனச்சு மத்தவங்களிடத்துல ஒப்படச்சேன். இதுல தீமைகள் இருந்தது எனக்குத் தெரியும். அவங்கள ஒப்படைக்கறதுங்கறது இன்னொரு பயிற்சியாளர் அவங்களப் பத்தியும் அவங்களோட நிலைகளப் பத்தியும் தெரிஞ்சுக்கணும், அதோட அவங்களுக்குப் புதிய பயிற்சியாளர் இருந்தா, அவங்களால மாற்றங்களத் தொடர முடியாம போகலாம். ஆனா அவங்களோட உண்மையான சூழ்நிலைகளயோ அவங்களோட உணர்வுகளயோ நான் கருத்துல கொள்ளல. என்னோட பணியின் செயல்திறன மேம்படுத்த நேரத்த ஒதுக்கறதுக்காக புதுசா வந்தவங்கள நான் ஒதுக்கித் தள்ளினேன். என்னோட இருதயம் உணர்வில்லாம இருந்துச்சு. குறிப்பா சகோதரி ஜெனிகிட்ட அப்படி இருந்தேன், என்னோட சகோதரி சிக்கல்ல இருந்தப்பவும் உதவி கேக்க நெனச்சப்பவும், நான் அவங்களப் பத்திக் கவலப்படல. என்னோட நடத்தை அவங்க மனச வேதனப்படுத்துறதா இருந்துச்சு. நான் அதப் பத்தி எவ்வளவு அதிகமா நெனச்சேனோ, அவ்வளவு அதிகமா நான் என்னையே வெறுத்தேன். உண்மைகள் மூலமா, நான் எல்லா இடங்கள்லயும் பெயரையும் அந்தஸ்தையும் பின்தொடர்ந்தேன்ங்கறதப் பாத்தேன். புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி அளிக்குற பணிய தாமதப்படுத்தினேன், ஒரு புதுசா வந்தவங்க விலகிப் போகக் காரணமானேன். நான் தீமை செஞ்சுக்கிட்டிருந்தேன். இது ஒரு மீறுதலா இருந்துச்சு! எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டுச்சு. பல நாட்களா, பல தடவ புதுசா வந்த அவங்களுக்குப் போன் செஞ்சு செய்தி அனுப்புனேன். நான் அவங்களக் கண்டுபிடிச்சு அவங்ககிட்ட மன்னிப்புக் கேக்க விரும்புனேன், ஆனா சேதம் செய்யப்பட்டாச்சு. நான் மனம் வருந்தினேன், என்னோட நாட்டம் அருவருப்பானதுங்கறதப் பாத்தேன்.

என்னோட சீர்கெட்ட மனநிலைய சரிசெய்ய, நான் பொருத்தமான தேவனோட வார்த்தைகளத் தேடினேன். தேவனோட வார்த்தை சொல்லுது, “பெரும்பாலான ஜனங்கள் தாங்கள் சத்தியத்தை விருப்பத்தோடு பின்பற்றுவதாகக் கூறினாலும், அதைக் கடைப்பிடிப்பது அல்லது அதற்காக ஒரு விலை கொடுப்பது என்று வரும்போது, சிலர் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இது சாராம்சத்தில் துரோகம் ஆகும். ஒரு கணப்பொழுது மிகவும் முக்கியமானதாக இருக்கும்போது, மாம்சபிரகாரமான நலன்களை விட்டுவிட்டு வீண் தற்பெருமையையும் கர்வத்தையும் புறம்பே தள்ளிவிட வேண்டும் என்பது இன்னும் அதிக முக்கியமாக இருக்கிறது; உன்னால் அப்படிச் செய்ய முடியாவிட்டால், உன்னால் சத்தியத்தை அடைய முடியாது, மேலும் அது நீ தேவனிடம் கீழ்ப்படிதலுடையவனாக இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு தருணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் பொழுதுதான், ஜனங்கள் இன்னும் அதிகமாகத் தங்கள் சுயநலன்கள், செருக்கு மற்றும் பெருமை ஆகியவற்றை விட்டுவிட்டு, தங்கள் கடமைகளை சரியாகச் செய்ய முடிகிறது, அப்போதுதான் அவர்கள் தேவனால் நினைவுகூரப்படுவார்கள். அவை அனைத்தும் நற்கிரியைகள்! ஜனங்கள் என்ன கடமையைச் செய்கிறார்கள் அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், மிகவும் முக்கியமானது எதுவாய் இருக்கிறது—அவர்களின் செருக்கு மற்றும் பெருமையா அல்லது தேவனுடைய மகிமையா? (தேவனுடைய மகிமை.) எவை மிக முக்கியமானவை—உங்கள் பொறுப்புகளா அல்லது உங்கள் சுய நலன்களா? உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானது, நீங்கள் அவற்றுக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். … சத்தியத்தின் கொள்கைகளின்படி நீ பயிற்சி செய்யும்போது, ஒரு நேர்மறையான விளைவு கிடைக்கும், மேலும் நீ தேவனுக்குச் சாட்சியாக இருப்பாய், அது சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டுவந்து தேவனுக்குச் சாட்சிபகரும் ஒரு வழி ஆகும். தேவனுக்குச் சாட்சியாக நிற்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்துவதும் மற்றும் சாத்தானைக் கைவிட்டு நிராகரிப்பதில் உனக்கிருக்கும் தீர்மானத்தைச் சாத்தானைப் பார்க்க வைப்பதும் சாத்தானை வெட்கப்படுத்தி தேவனுக்குச் சாட்சியாக இருப்பது ஆகும்—இது நேர்மறையானதும் மேலும் தேவனுடைய சித்தத்துக்கு ஏற்ற்றதாகவும் இருக்கிறது” (தேவனுடைய ஐக்கியம்). “யாராவது ஒருவர் சத்தியத்தைப் பின்தொடரும்போது, அவர்கள் தேவனுடைய சித்தத்தில் அக்கறையுள்ளவார்களாயும் தேவனுடைய பாரத்தைக் கருதுபவர்களாயும் இருக்க முடிகிறது. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது, ஒவ்வொரு விதத்திலும் திருச்சபையின் பணிகளை ஆதரிக்கின்றனர். அவர்களால் தேவனை உயர்த்தி தேவனுக்காகச் சாட்சி அளிக்க முடிகிறது, அவர்கள் சகோதர சகோதரிகளுக்கு நன்மையைக் கொண்டுவருகிறார்கள், மேலும் அவர்களைத் தாங்கி ஆதரிக்கிறார்கள், மேலும் தேவன் மகிமையையும் சாட்சியையும் பெறுகிறார், இது சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டு வருகிறது. அவர்களின் தேடலின் விளைவாக, தேவனுக்குப் பயப்படக் கூடிய, தீமையை விலக்குகிற, தேவனை ஆராதிக்கக் கூடிய ஒரு சிருஷ்டியை தேவன் அடைகிறார். அவர்கள் தேடலின் விளைவாக, தேவனுடைய சித்தமும் நிறைவேற்றப்படுகிறது, மேலும் தேவனுடைய கிரியையும் முன்னேற முடிகிறது. தேவனுடைய கண்களில் இத்தகைய தேடல் நேர்மறையானதாகும், அது நேர்மையானதாகும். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய தேடல் மிக அதிக நன்மைகளைக் கொடுப்பதாகும். அது மட்டுமல்லாமல் திருச்சபையின் பணிகளுக்கு முழுவதுமாகப் பயனுள்ளதாகும், அது விஷயங்களை முன்னோக்கித் தள்ள உதவுகிறது, மேலும் அது தேவனால் புகழப்படுகிறது(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “வகை எண் ஒன்பது (பகுதி ஒன்று)”). தேவனோட வார்த்தை, என்னோட இருதயத்த அசச்சுது. நான் கௌரவத்தயும் அந்தஸ்தயும் பின்தொடரக்கூடாது, என்னோட சொந்த கடமைய நான் செய்யணும். தருணம் எவ்வளவு அதிக முக்கியமா இருக்குதோ, அவ்வளவு அதிகமா நான் என்னோட சொந்த நலன்களயும் ஆசைகளயும் விட்டுட்டு என்னோட கடமைய சிறப்பா செய்யணும். அது ஒரு நல்ல செயல். இப்போ சுவிசேஷம் பரவிக்கிட்டிருக்குது, அந்தகாரத்துல வாழுறவங்க தேவனோட சத்தத்தக் கேட்டு, தேவனுக்கு முன்பா வந்து, இரட்சிப்ப ஏத்துக்கும்படி அதிகமான ஜனங்கள் அதப் பிரசங்கிக்கவும் சாட்சியளிக்கவும் எழும்புவாங்கன்னு தேவன் எதிர்பாக்குறாரு. சுவிசேஷத்தப் பரப்புறப்போ புதுசா வந்தவங்களும் தங்களோட கடமைகளச் செய்யலாம்னும் அவர் எதிர்பாக்குறாரு. புதுசா வந்தவங்களப் பண்படுத்துறது முக்கியமான வேலையா இருந்துச்சு. அதுக்கப்புறம் என்னால அவ்வளவு சுயநலமா வாழ முடியல. நான் என்னோட நாட்டங்கள மாத்திக்க வேண்டியதாவும் நேர்மையான இருதயத்தோடு தேவனுக்கு முன்பா வாழ வேண்டியதாவும் இருந்துச்சு. என்னையப் பத்தி யார் என்ன நெனச்சாலும் பரவாயில்ல, புதுசா வர்றவங்களுக்குப் பயிற்சி கொடுத்து என்னோட கடமைய சிறப்பா செய்யணும்னு மட்டுந்தான் நான் விரும்புனேன்.

அதுக்கப்புறம், நான் சகோதர சகோதரிகளோடு ஐக்கியங்கொண்டேன், புதுசா வந்தவங்கள பண்படுத்துறதுல நான் வெளிப்படுத்துன தவறான கருத்துகளப் பகுப்பாய்வு செஞ்சேன், அதோடு புதுசா வந்தவங்களுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்கள்ல, ஒரு சகோதரர் வேலையில அலுவலா இருந்ததால ஒவ்வொரு கூடுகையயும் நடத்த முடியல. அவரப் பண்படுத்துறதுக்கு அதிக நேரம் எடுக்கும்ன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் எதிர்க்கல. இப்போ, நான் பண்படுத்தின புதுசா வந்தவங்களிடத்துல ரொம்ப பொறுமையா இருந்தேன். அவங்களுக்கு என்ன சிரமங்க இருந்தாலும், நான் உதவி செய்ய முயற்சி செஞ்சேன். சீக்கிரத்துலயே, அவங்களோட தண்ணீர் பாய்ச்சுற முடிவுகள் என்னோடத விட சிறப்பா இருந்துச்சு, நான் சந்தோஷமா இருந்தேன். இதப் பாத்ததும், நான் பாதுகாப்பாவும் நிம்மதியாவும் உணர்ந்தேன். என்னோட வேலையில நான் எவ்வளவு சாதிக்குறேன்ங்கறத மட்டும் தேவன் விரும்புறதில்லங்கறத நான் பாத்தேன். அவரோட சித்தத்த நான் கருத்துலகொண்டு என்னோட கடமைய நிறைவேத்த முடியுமான்னும், என்னோட தனிப்பட்ட நலன்களுக்காகத் திட்டம்போடாம, புதுசா வந்தவங்க தங்களோட கடமைகள செய்யும்படி அவங்களுக்கு பயிற்சி கொடுக்க முடியுமான்னும் அவர் எதிர்பாக்குறாரு. அந்த மாசத்துல என்னோட தண்ணீர் பாய்ச்சின முடிவுகள் சிறந்ததா இல்லேன்னாலும், நான் கவலப்படல, நான் கௌரவத்துக்காகவும் அந்தஸ்துக்காகவும் ரொம்பவும் ஆசைப்படல, புதுசா வந்தவங்களப் பண்படுத்த கடுமையா உழைச்சேன். இது தேவனோட கிரியையோட பலனா இருந்துச்சுங்கறதுஎனக்குத் தெரியும். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நீங்கள் வாதிடுவதற்குப் பின்னால் என்ன மனநிலை இருக்கிறது?

தேவன விசுவாசிச்சு பல வருஷங்கள் கழிச்சு, சத்தியத்த ஏத்துக்குறவங்கள தேவன் விரும்புறாருன்னு நான் கொள்க அளவுல தெரிஞ்சிட்டேன். ஜனங்க சத்தியத்த...

தேவனின் இரட்சிப்பு

யிச்சென், சீனா சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடுமையான வார்த்தைகள் அல்லது நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சை என எதுவாக இருந்தாலும்,...