சரியான தெரிவு

ஜனவரி 21, 2024

நான் ஒரு தொலைதூர மலைப்பகுதியில இருக்குற கிராமத்துல, பல தலைமுறைகளா விவசாயிகளா இருக்குற குடும்பத்துல பிறந்தேன். நான் பள்ளிக்கூடத்துல படிக்குறப்போ, என்னோட அம்மா, “நம்ம குடும்பத்த சார்ந்த இருக்க எதுவுமே இல்ல, உன்னோட தலைவிதிய மாத்திக்க விரும்புனா, நீ மட்டுத்தான் இருக்குற. பள்ளிக்கூடத்துல நல்லாப் படிக்கறதுதான் உன்னோட ஒரே நம்பிக்கை” அப்படின்னு அடிக்கடி என்னைய ஊக்குவிச்சாங்க. அவங்களோட இந்த வார்த்தைகள நான் மனசுல வச்சுக்கிட்டேன், ஒரு நாள் “மற்றவர்களை விட சிறந்தவனாய் இருந்து, என் முன்னோர்களுக்கு மரியாதையை ஏற்படுத்த” உண்மையிலயே நம்பிக்கிட்டு இருந்தேன். ஆனா படிப்பை முடிச்சதுக்கப்புறமா, எனக்கு ஒரு நிலையான வேலை கிடைக்காம போனது மட்டுமல்லாம, என்னோட பெற்றோருக்கு மோசமான நோய் ஏற்பட்டுச்சு. நாங்க எங்க குடும்ப சேமிப்புகள் எல்லாத்தயும் செலவழிச்சிட்டோம், அதுக்கப்புறம் உறவினர்கள்கிட்டயிருந்து கடன் வாங்கினோம். நான் அவங்களுக்கு சரியான நேரத்துல திருப்பிக் கொடுக்காததால, என்னோட சொந்த அத்தை என்னோட முதுகுக்குப் பின்னாடி என்னைய காட்டேரின்னு சொன்னாங்க. அவங்க என்னைய இழிவா பாக்கக் கூடாதுங்கறதுக்காக நான் பணம் சம்பாதிக்கறதுல முழுவீச்சுல ஈடுபட்டேன். ஆனா எங்க உறவினர்களோட அவமதிப்போடான எங்க ஆதரவற்ற குடும்ப நிலைமைகள் என்னைய ரொம்ப மனச்சோர்வடைய செஞ்சுச்சு, நான் தனிமையில ரொம்ப அழுதேன். நான் பரிதாபமாவும் உதவியற்றவனாவும் இருந்தப்போ, ஜூன் 2013ல, நண்பர் ஒருத்தர் சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் சுவிசேஷத்த என்னோடு பகிர்ந்துக்கிட்டாரு. தேவனோட வார்த்தைகள வாசிச்சதன் மூலமும், சகோதர சகோதரிகளோடு கூடுகையில கலந்துக்கிட்டதன் மூலமும், மனுஷன் தேவனால சிருஷ்டிக்கப்பட்டான்ங்கறதயும், நம்மளோட ஜீவன் அவரோட கரங்கள்ல இருக்குதுங்கறதயும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். மனுஷர்கள் சாத்தானால சீர்கெடுக்கப்பட்டதுக்கப்புறமா தேவனோட பாதுகாப்ப இழந்துபோனதால வாழ்க்கை ரொம்ப வேதனையானதுங்கறதயும், சாத்தானோட சீர்கேட்டுலயிருந்தும் தீங்குலருந்தும் மனுக்குலத்த இரட்சிக்க தேவன் மாம்சமாகி, கடைசி நாட்கள்ல சத்தியங்கள வெளிப்படுத்துறாருங்கறதயும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். மனுக்குலத்த இரட்சிக்கறதுக்கான தேவனோட சித்தத்தப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறமா, நான் உண்மையிலயே கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு தேவனோட வார்த்தைகள அதிகமா வாசிச்சேன். நானும் கூட திருச்சபையில ஒரு கடமையை ரொம்ப வேகமா செய்ய ஆரம்பிச்சேன்.

சில மாசங்களுக்கப்புறமா, நான் உற்சாகமா இருந்ததயும், சத்தியத்தப் பின்தொடர விரும்பினதயும் பாத்து, சகோதர சகோதரிகள் என்னை ஒரு குழு தலைவரா பயிற்சி செய்ய பரிந்துரை செஞ்சாங்க. நான் சகோதரர் லி ஜெங் அவங்களோடு சேர்ந்து, கூடுகைகள்ல சில குழுக்களுக்கு தலைமை தாங்கினேன். அந்த நேரத்துல எனக்கு ஒரு வேலை இருந்துச்சு, அதனால லி ஜெங் அவங்க கொஞ்சம் தொலைவுல இருந்த பகல் நேரக் கூடுகைகளுக்குப் போனாரு, நான் மாலை நேரக் கூடுகைகளுக்குப் போனேன். அப்படியா, எங்களோட அட்டவணைய எங்களால நல்லா ஏற்பாடு செய்ய முடிஞ்சுச்சு. வருஷக் கடைசியில, பொது விவகாரங்களக் கையாளுறதுக்கான ஊழியர்கள்ல நாங்க கொஞ்சம் பேர்தான் இருந்தோம், அதனால் லி ஜெங் அந்த வேலையச் செய்ய நியமிக்கப்பட்டாங்க நான் தற்காலிகமா அந்தக் குழுக்களுக்குப் பொறுப்பாளரா நியமிக்கப்பட்டேன். அதுக்காக நான் உண்மையிலயே தேவனை சார்ந்துக்கணும்னு எனக்குத் தெரியும். ஆனா அதே நேரத்துல, நான் ஒரு கடினமான இடத்துல இருந்ததப் போல உணர்ந்தேன். என்னோட முழு நேரத்தயும் ஆற்றலையும் என்னோட கடமையில செலவளிச்சா, எனக்கு வேலை செய்ய போதுமான நேரம் இருக்காது. என்னோட நிறுவனம் எனக்கு ஆண்டு இறுதி விற்பனை இலக்காக ஒரு மில்லியன் யுவானை நிர்ணயிச்சிருந்துச்சு. நான் அதத் தாண்டிட்டா, என்னால ஒரு பெரிய ஆண்டு இறுதி போனஸைப் பெற முடியும். நான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன், நான் அந்த இலக்கை அடைஞ்சா, நான் என்னோட கடனைத் திருப்பிச் செலுத்துறது மட்டுமல்லாம, கொஞ்ச பணத்தயும் சேமிச்சு வச்சுக்கவும் முடியும். அதுக்கப்புறம் என்னோட நண்பர்களும் உறவினர்களும் என்னையக் கேவலமாப் பாக்க மாட்டாங்க. முதல்ல அந்தப் பணத்த என்னோட கைகள்ல பெறுவேன், அதுக்கப்புறம் என்னோட கடமையில கடினமா உழைப்பேன்னு நான் நெனச்சேன். வேலையில என்னோட மேற்பார்வையாளரா இருந்தவரு, அந்த இலக்கை அடைய நான் மாலை நேரங்கள்ல கூடுதல் நேரம் வேலை செய்யணும்ன்னு விரும்பினாரு. அதனால நான் கூடுதல் மணிநேரம் வேலை செய்வேன், கூடுகைகளுக்கு போறதுக்காக விடுப்பு எடுத்துக்குவேன். ஆனா என்னோட மேற்பார்வையாளர் என்னோட ஓய்வு நேரத்த அங்கீகரிக்குறத நிறுத்திட்டாரு, அதோடு, நான் அதிக நேரம் வேலை செய்யணும்ன்னு விரும்பினாரு. இது கூடுகைகளுக்கு ரொம்ப தாமதமா போக எனக்கு வழிவகுத்துச்சு. மத்தவங்க நான் முன்னாடியே வந்திருக்கணும்ன்னு எனக்கு நினைவூட்டினாங்க, நான் தயக்கத்தோடு அவங்களப் பாத்துத் தலைய ஆட்டுனேன். சீக்கிரத்துலயே, கையொப்பமிடப்பட்ட 500,000 யுவானுக்கான ஆர்டரைப் பெற்றேன் அந்த மாசம் எனக்கு 7,000 யுவான் சம்பளம் கிடைச்சுச்சு, அது இன்னும் பணம் வேணுங்கற ஆசைய எனக்குள் தூண்டி விட்டுச்சி. அந்த பணம் ரொம்ப சீக்கிரமா வந்துருச்சுன்னும், என்னோட இலக்குல பாதிக்கு மேல நான் ஏற்கனவே அடைஞ்சுட்டேன்ன்னும் நெனச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட பத்து வாடிக்கையாளர்கள்ல அஞ்சு பேர் ஒரு ஆர்டர்ல்ல கையெழுத்து போட்டுட்டா, அது எனக்கு அதிகமான லாபமா இருக்கும். அதோடு, இன்னும் சில பெரிய வாடிக்கையாளர்களப் பெற்றுக்கிட்டா, சில வருஷங்கள்லயே என்னால ஒரு வீட்டையும் காரையும் வாங்க முடியும். அதுக்கப்புறம் நான் பெருமையோடு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும், அதோடு கிராம ஜனங்கள் என்னைய உயர்வா பாப்பாங்க. அதனால, நிறைய பணம் சம்பாதிக்கணும்ங்கற என்னோட கனவுல நான் அவசரப்பட்டு மூழ்கிட்டேன். நான் அடிக்கடி மாலை நேரங்கள்ல கூடுதல் நேரம் வேலை செஞ்சேன். கூடுகைகள்ல எனக்காகக் காத்திருக்கும் சகோதர சகோதரிகளப் பத்தி சில நேரங்கள்ல நான் நெனச்சேன் நான் கொஞ்ச குற்ற உணர்வ உணர்ந்தேன், ஆனா நான் வேலைய விட்டு வர்றதுக்குள்ள ரொம்ப தாமதமாயிருச்சு—நான் வீட்டுக்குப் போக வேண்டியிருந்துச்சு. நான் வீடுக்கு வர்ற நேரத்துல, நான் முழுவதும் களைப்படைஞ்சிருத்தேன், அதோடு தேவனோட வார்த்தைகள வாசிக்குற ஆற்றல் எனக்கு இல்ல, அதனால நான் நேரா தூங்கப் போனேன். சில நேரங்கள் காலையில நான் ரொம்ப தாமதமா எழுந்திருச்சேன், அதனால் நான் தேவனோட வார்த்தைகள கொஞ்சம் வேகமா புரட்டிப் பாத்துட்டு, பிறகு வேலைக்குப் போவேன். நான் ஜெபிச்சப்போ, என்ன சொல்றதுன்னு தெரியல. அப்படிப்பட்ட நிலையில வாழ்ந்துக்கிட்டு, என்னோட கடமையில நான் மெத்தனமாவும், நிர்விசாரமாவும் இருந்தேன். என்னோட பொறுப்புக்குள்ள இருந்த புதுசா வந்தவங்க சிலருக்கு அவசரமா நீர்ப் பாய்ச்சுதல் தேவைப்பட்டுச்சு, அதோடு, எனக்குப் பதிலா மத்த சகோதர சகோதரிகள புதுசா வந்தவங்களோட கூடுகைகளுக்குப் போக வச்சேன். ஆனாலும், அவங்க எல்லாருக்கும் அவங்களோட சொந்த கடமைகள் இருந்துச்சு, சில நேரங்கள்ல அவங்களாலயும் அத ஏத்துக்க முடியல, அது நீர்ப் பாய்ச்சுற செயல்திறனை பாதிச்சுக்கிட்டு இருந்துச்சு. அதுக்கப்புறம், நான் கடமைய முதன்மைப்படுத்தணும்ன்னு தலைவரும் மத்தவங்களும் என்னோடு ஐக்கியங்கொண்டாங்க, அதோடு, நான் கூடுகைகள்ல சிரத்தையில்லாமலும் என்னோட கடமையில பொறுப்பில்லாமலும் இருந்தது, புதுசா வந்தவங்களோட வாழ்க்கை முன்னேற்றத்துக்கு தடையா இருக்கும்னு எனக்கு ஞாபகப்படுத்தினாங்க. அவங்க அதச் சொன்னதக் கேட்டப்போ, எனக்கு ஒருவித பயம் வந்துச்சு. புதுசா வந்த விசுவாசிகள் சரியான நேரத்துல நீர்ப் பாய்ச்சப்படலேன்னா, அவங்க பொய்களால தவறா வழிநடத்தப்பட்டு வெளியேறக் கூடும், அப்போ, நான் பொல்லாப்பு செஞ்சிருப்பேன். என்னால அப்படியே தொடர்ந்து செய்ய முடியாதுன்னும், ஆனா, நான் உடனடியா ஜெபிச்சு மனந்திரும்ப வேண்டியிருந்துச்சுன்னும் எனக்குத் தெரியும்.

அதுக்கப்புறம், நான் அந்தக் குழுக்கள சரிபாக்கப் போனப்போ, நான் நடைமுறைப் பணிகளச் செய்யாததன் விளைவாக, புதுசா வந்தவங்களோட பிரச்சனைகளும் சிரமங்களும் சரியான நேரத்துல தீர்க்கப்படாதது, அவங்கள மோசமான நிலைக்குத் தள்ளினதயும், அவங்கள்ல சிலர் கூடுகைகள்ல கூட தொடர்ந்து கலந்துக்கலங்கறதயும் என்னால பாக்க முடிஞ்சுச்சு. அந்த நிலையில காரியங்களப் பாத்தப்போ நான் உண்மையிலயே குற்ற உணர்ச்சிய உணர்ந்தேன். அதிகதிகமான புதிய விசுவாசிகள் விசுவாசத்துல சேர்ந்தாங்க அவங்களுக்கு அவசரமா நீர்ப் பாய்ச்சுதலும் ஆதரவும், அதோடு மெய்யான வழியில ஒரு அடித்தளத்த நிறுவ உதவ வேண்டியும் தேவைப்பட்டுச்சு. என்னோட வேலைய விட்டுட்டு என்னோட முழு நேரத்தயும் என் கடமைக்கு அர்ப்பணிக்கணும்ன்னு நான் நெனச்சேன். ஆனா வேலையில இருக்குற என்னோட முதலாளி எனக்கு சில நல்ல திட்டங்கள ஒதுக்கினாரு, அதோடு சில வாடிக்கையாளர்களக் கண்டுபிடிக்க எனக்கு உதவ விரும்புவதா என்னோட மேற்பார்வையாளர் என்கிட்ட சொன்னாரு. நான் விலகுவது பத்தி யோசிப்பதா சக ஊழியர்களிடத்துல சொன்னப்போ, “உங்க விற்பனை இலக்கை நோக்கி நீங்க பாதிக்கும் மேல கடந்துட்டீங்க, அதனால வருஷக் கடைசியில அத நீங்க தாண்டிடலாம். இப்ப விட்டுடறது அவமானமா இருக்கும்” அப்படின்னு அவங்க சொன்னாங்க. அவங்க சொன்னதக் கேட்டு, அவமானமா இருக்கும்ன்னு எனக்கும் தோனுச்சு நான் அந்த வருஷக் கடைசிவரை நீடிச்சிட்டு, அதுக்கப்புறமா ராஜினாமா செய்ய விரும்பினேன். ஆனா திருச்சபைப் பணிய செய்ய அவசரமா ஜனங்கள் தேவப்பட்டாங்க, அதனால நான் என்னோட வேலையிலயும் பணம் சம்பாதிக்கறதுலயும் மட்டுமே கவனம் செலுத்திக்கிட்டு, திருச்சபைப் பணியில என்னோட கவனத்த செலுத்தலேன்னா, அது ரொம்ப சுயநலமா இருக்கும். அது எனக்கு உண்மையிலயே ஒரு தடுமாற்றமான நிலையா இருந்துச்சு. அந்த நேரத்துல நான் உண்மையிலயே ரொம்ப முரண்பட்டேன். என்னைப் பிரகாசிப்பித்து வழிநடத்தும்படி தேவனிடத்துல கேட்டு நான் அவரிடத்துல ஜெபிச்சேன்.

ஒரு நாள் நான் தேவனோட வார்த்தைகளின் பாட்டைக் கேட்டுக்கிட்டிருந்தப்போ, இதக் கேட்டேன்: “இப்போது நீங்கள் உயிர்வாழும் ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியமானதாகும், இது உங்கள் இலக்குக்கும் உங்கள் விதிக்கும் மிகவும் முக்கியமானதாகும், எனவே இன்று உங்களிடம் உள்ள அனைத்தையும் நீங்கள் பேணி பாதுகாக்க வேண்டும், மற்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்தையும் பொக்கிஷமாக சேர்த்துவைக்கவேண்டும். நீங்கள் இந்த வாழ்க்கையை வீணாக வாழ்ந்திருக்காத விதத்தில், உங்களால் முடிந்தவரை அதிக ஆதாயங்களைப் பெறும் விதத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு நேரம் செலவழித்து உங்களை செதுக்கவேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?”). “சகோதரர்களே, விழித்திருங்கள்! சகோதரிகளே விழித்திருங்கள்! எனது நாள் தாமதமாகப்போவதில்லை; நேரம் தான் ஜீவனாயிருக்கிறது, மேலும் நேரத்தைத் திரும்பப் பெறுவது என்பது ஜீவனை இரட்சிப்பதாகும்! நேரம் வெகு தொலைவில் இல்லை! நீங்கள் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றால், நீங்கள் எத்தனை முறை விரும்புகிறீர்களோ அத்தனை முறை அதைப் படித்து மீண்டும் எழுதலாம். இருப்பினும், எனது நாள் மேலும் தாமதமடையப் போவதில்லை. நினைவில் கொள்ளுங்கள்! நினைவில் கொள்ளுங்கள்! இந்த நல்ல வார்த்தைகளால் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உலகின் முடிவு உங்கள் கண்களுக்கு முன்பாக வெளிப்படுகிறது, மேலும் பெரியப் பேரழிவுகள் விரைவாக நெருங்கி வருகின்றன. எது மிக முக்கியமானது: உங்கள் ஜீவனா, அல்லது உங்கள் நித்திரையும், போஜனமும், பானமும், ஆடையுமா? இவற்றை நீங்கள் எடைபோட வேண்டிய நேரம் வந்துவிட்டது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 30”). தேவனோட வார்த்தைகளின் இந்தப் பாடல்கள் உண்மையிலயே என்னோட மனசுல ஒரு தாக்கத்த ஏற்படுத்துச்சு. கடைசி நாட்களின் தேவனோட கிரியையானது காலத்த முடிவுக்குக் கொண்டுவரும் கிரியையா இருக்குது. ஒவ்வொரு நபரோட முடிவையும் தேவன் தீர்மானிக்கிறாரு, எல்லாருமே தம்தம் வகையப் பின்பற்றுறாங்க. அதுக்கப்புறம், எல்லாரும் ஒண்ணு இரட்சிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவாங்க, அல்லது அழிவுல மூழ்குவாங்க. இப்போ நாம எப்படி சத்தியத்தப் பின்பற்றுறோம்ங்கறதன் மூலமா அது தீர்மானிக்கப்படுது. நமது முடிவையும் தலைவிதியையும் தீர்மானிக்கும் முக்கியமான நேரம் அது. தற்போது ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணா பேரழிவு ஏற்பட்டு வருது. நிலநடுக்கங்களும், வெள்ளங்களும், வறட்சிகளும் அதிகமா இருக்குது. தேவனோட கிரியை எப்ப இறுதி முடிவுக்கு வரும்ன்னு நமக்குத் தெரியல. சத்தியத்த நல்லா பின்தொடர என்னோட நேரத்த நான் உண்மையிலயே பயன்படுத்திக்காம, ஆனா அவிசுவாசிகளப் போல பணத்தயும் சுலபமான வாழ்க்கையயும் பின்தெடர்ந்துக்கிட்டு இருந்தா, அது சத்தியத்த அடஞ்சி இரட்சிக்கப்படுவதுக்கான என்னோட வாய்ப்ப அழிச்சிரும்ன்னு எனக்குத் தெரியும். நான் லோத்தோட மனைவிய நெனச்சுப் பாத்தேன். அவள் குடும்ப உடைமைகள இச்சித்தாள். தேவதூதர்கள் அவங்கள நகரத்துக்கு வெளியே போகும்படி வழிநடத்தி, திரும்பிப் பாக்க வேண்டாம்ன்னு சொன்னாங்க, ஆனா அவள் திரும்பிப் பாத்துட்டாள், அதுக்கப்புறம் அவள், அவமானத்தின் சின்னமா, உப்புத்தூணா மாறினாள். நான் லோத்தின் மனைவியப் போலவே இருந்தேன். நான் செல்வத்துக்கு ஆசைப்பட்டு உலக இன்பங்கள நாடினேன், கலப்பையில கைய வச்சிட்டு திரும்பிப் பாத்தேன். நான் ரொம்ப முட்டாளாவும் குருடனாவும் இருந்தேன்! நான் முன்னாடி எப்படி உலகத்துல உழன்றுக்கிட்டு இருந்தேன்னும், எந்த வழியும் இல்லாம மிகுந்த கடன்ல மூழ்கியிருந்தேன்னும் நெனச்சுப் பாத்தேன். தேவனோட இரட்சிப்பு எனக்குக் கிடைச்சு, என்னோட துன்பத்துலயிருந்து என்னைய வெளியே தூக்கிவிட்டு, சத்தியத்தயும் இரட்சிப்பயும் பின்தொடருறதுக்கான வாய்ப்ப எனக்குக் கொடுத்துச்சு. நான் தேவனோட அன்புல சந்தோஷப்பட்டேன், ஆனா அதைத் திருப்பிச் செலுத்தறதுக்கான விருப்பம் எனக்கு இல்ல. நான் என்னோட கடமையில தவறிட்டேன், அதக் குறிச்சுப் பொறுப்பில்லாம இருந்துட்டேன். எனக்கு உண்மையிலயே மனச்சாட்சி இல்ல, அது தேவனுக்கு அருவருப்பா இருந்துச்சு. தவறான பாதையில என்னால பிடிவாதமா இருக்க முடியல. ஆனா நான் என்னோட தனிப்பட்ட நலன்கள விட்டுட்டு, சத்தியத்தப் பின்தொடர்ந்து, என்னோட கடமைய நல்லா செய்ய வேண்டியிருந்துச்சு.

அதுக்கப்புறம், ஏன் என்னால வேலையயும் பணத்தயும் விட்டுடமுடியல-அதன் மூலக்காரணம் என்ன? அப்படின்னு நான் யோசிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் ஒரு நாள், நான் தேவனோட வார்த்தைகள் சிலவற்ற வாசிச்சேன். “எல்லா ஜனங்களும் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பற்றி நினைக்கும் வரையில், மனிதனுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பயன்படுத்துகிறது. அவர்கள் புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவர்கள் எந்தத் தீர்மானத்தையும் முடிவையும் எடுப்பார்கள். இவ்வாறு, சாத்தான் ஜனங்களைக் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குகளால் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றைத் தூக்கி எறியும் வல்லமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறியாமலேயே இந்தக் கைவிலங்குகளை சுமந்து கொண்டு, மிகுந்த சிரமத்துடன் எப்போதும் முன்னேறுகிறார்கள். இந்தப் புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, மனிதகுலம் தேவனைத் தவிர்த்து, அவரைக் காட்டிக் கொடுத்து, பொல்லாதவர்களாக மாறுகிறது. எனவே, இவ்வாறு, சாத்தானுடைய புகழ் மற்றும் ஆதாயத்தின் மத்தியில் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையும் அழிக்கப்படுகிறது(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”). “‘பணம் உலகைச் சுற்ற வைக்கிறது’ என்பது சாத்தானுடைய ஒரு தத்துவமாகும். இது ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் ஒட்டு மொத்த மனிதகுலத்திலும் நிலவுகிறது. இது ஒரு போக்கு என்று நீங்கள் கூறலாம். ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் புகுத்தப்பட்டுள்ளது, முதலில் இவர்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் அதன் பின் மெய்யான ஜீவிதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும், உண்மையில் இந்த வார்த்தைகள் சத்தியம் என்று உணரத் தொடங்கினர். இது சாத்தான் மனிதனைக் கெடுக்கும் செயல் அல்லவா? ஒருவேளை இந்த சொல்லை ஜனங்கள் ஒரே அளவில் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் மற்றும் அவர்களின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த சொல்லுக்கு வெவ்வேறு அளவில் விளக்கங்கள் மற்றும் ஒப்புதல்களைக் கொண்டுள்ளனர். அது அப்படித் தானே அல்லவா? இந்தச் சொல்லுடன் ஒருவர் எவ்வளவு அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், அது அவரின் இருதயத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவு என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் உட்பட, இந்த உலகில் உள்ள ஜனங்களின் மனித மனநிலையின் வழியாக ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. அது என்ன? அது பண வழிபாடாகும். ஒருவரின் இருதயத்திலிருந்து அதை அகற்றுவது கடினமா? அது மிகவும் கடினம்! சாத்தானுடைய மனித கேடானது உண்மையில் ஆழமானதாகத் தெரிகிறது! ஜனங்களைச் சோதிக்க சாத்தான் பணத்தைப் பயன்படுத்துகிறான், மேலும் பணத்தைத் தொழுதுகொள்ளவும், பொருள்சார்ந்த காரியங்களை வணங்கவும் செய்யும் அளவிற்கு அவர்களை சீர்கெடுக்கிறான். இந்தப் பணத்தைத் தொழுதுகொள்ளுதல் ஜனங்களிடம் எவ்வாறு வெளிப்படுகிறது? பணம் இல்லாமல் ஒரு நாள் கூட சாத்தியமில்லை என்றும், நீங்கள் பணம் இல்லாமல் இந்த உலகில் ஜீவிக்க முடியாது என்றும் நினைக்கின்றீர்களா? ஜனங்களின் நிலையானது அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய மரியாதையும் அதனைப் போன்றது. ஏழைகளின் முதுகு அவமானத்தால் வளைந்திருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்து பெருமையாக நிற்கிறார்கள், சத்தமாகப் பேசுகிறார்கள், மற்றும் ஆணவத்துடன் ஜீவிக்கிறார்கள். இந்த வார்த்தை மற்றும் போக்கு ஜனங்களுக்கு எதைத் தருகிறது? பணத்தைத் தேடுவதில் பலர் எந்த தியாகத்தையும் செய்கிறார்கள் என்பது உண்மையல்லவா? அதிகமான பணம் தேடுவதில் பலர் தங்கள் கண்ணியத்தையும் நேர்மையையும் இழக்கவில்லையா? பணத்திற்காக தங்கள் கடமையைச் செய்வதற்கும் தேவனைப் பின்பற்றுவதற்குமான வாய்ப்பைப் பலரும் இழக்கவில்லையா? சத்தியத்தைப் பெற்று இரட்சிக்கப்படும் வாய்ப்பை இழப்பது ஜனங்களுக்கு இழப்புகளிலேயே மிகப்பெரிய இழப்பு அல்லவா? இந்த முறையையும் இந்தப் பழமொழியையும் பயன்படுத்தி மனிதனை இவ்வளவாகக் கெடுக்கும் சாத்தான் வஞ்சனையானதல்லவா? அது தீங்கிழைக்கும் தந்திரம் அல்லவா?(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V”). தேவனோட வார்த்தைகள் பணத்தயும் புகழயும் பின்தொடர்வதன் மூலக் காரணத்த வெளிப்படுத்துகின்றன. என்னோட சின்ன வயசுலயிருந்தே, “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது” மற்றும் “மற்றவர்களை விட சிறந்தவனாய் இரு, உன் முன்னோர்களுக்கு மரியாதையை ஏற்படுத்து” என்பன போன்ற சாத்தானிய தத்துவங்கள் வாழ்வதுக்கான வார்த்தைகள்ன்னு நான் நெனச்சேன். பணத்தைக் கொண்டு ஜனங்களால நம்பிக்கையோடும் கண்ணியத்தோடும் பேச முடியும்ன்னும், அவங்களால சிறந்தவங்களா நிற்கவும், உயர்ந்த தரத்தப் பெற்றிருக்கவும், மதிக்கப்படுறவங்களா இருக்கவும் முடியும்ன்னு நான் நெனச்சேன். அர்த்தமுள்ள, கௌரவமான வாழ்க்கைக்கு அதுதான் ஒரே வழின்னு நான் நெனச்சேன். குறிப்பா, என்னோட குடும்பம் என்னை அலட்சியப்படுத்தினப்போ, ஒரு நாள் அவங்கள விட மேலா இருந்து ஆளுகை செய்யணும்னுங்கற நம்பிக்கையில, அதிகமா பணம் சம்பாதிக்கறதுக்காக நான் அதிக நேரம் வேலை செஞ்சேன், என்னோட விசுவாசத்தப் பெற்றதுக்கப்புறமா, சத்தியத்தைக் கத்துக்கிட்டு வாழ்க்கையில முன்னேற நான் அதிகமான கூடுகைகள்ல கலந்துக்கிட்டு என்னோட கடமையச் செய்யணும்ன்னு எனக்குத் தெரியும். ஆனா, பணத்துக்காகவும், அந்தஸ்துக்காகவுமான என்னோட பின்தொடர்தல என்னால விட்டுட முடியல. என்னோட கடமைக்கும் என்னோட பணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டப்போ, நான் சம்பாதிக்கறத முதலிடத்துல வச்சு, என்னோட கடமைய அற்பமா நெனச்சேன். குறிப்பா, என்னோட வேலை நல்லா நடந்துக்கிட்டு இருந்தப்போ, கொஞ்சம் பணம் சம்பாதிச்சுக்கிட்டு இருந்தேன், அந்த ஆசை அதிகமதிகமா பெருகுச்சு. அதிகப் பணம் சம்பாதிக்கறதுக்காக அதிக வாடிக்கையாளர்களப் பெறுவதும் அதிக ஆர்டர்கள கையொப்பமிடுவதும் எப்படிங்கறதுல நான் முழுசா கவனம் செலுத்தினேன், திருச்சபையின் பணிய முற்றிலும் புறக்கணிச்சுக்கிட்டு இருந்தேன். அதனால, புதுசா வந்தவங்க சிலர் சரியான நேரத்துல நீர்ப் பாய்ச்சப்படாம, கிட்டத்தட்ட கைவிடப்பட்டாங்க, அதோடு நீர்ப் பாய்ச்சும் பணி கடுமையா தாமதமாச்சு. அந்த நேரத்துல, இந்த சாத்தானியத் தத்துவங்களின்படி வாழுறது என்னைய அதிகதிகமா சுயநலமானவனாவும் பேராசையுள்ளவனாவும் ஆக்குதுங்கறதயும் என்னோட சொந்த நலன்கள மட்டுமே நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்ங்கறதயும் பாத்தேன். நான் தேவனோட நீர்ப் பாய்ச்சுதலயும் வாழ்வாதாரத்தயும் அதிகமா அனுபவிச்சுக்கிட்டு இருந்தேன், ஆனா என்னோட கடமையின் மூலமா அத அவருக்குத் திருப்பிச் செலுத்தாம இருந்தேன். எனக்குப் பகுத்தறிவோ மனச்சாட்சியோ இல்ல! பெயரும் அந்தஸ்தும் ஜனங்கள நரகத்துக்குள்ள இழுக்கறதுக்கான சாத்தானோட வழிமுறைகள், அவை அதோட தந்திரமா இருக்குது. அது என்னோட இருதயத்த தேவனிடத்துலயிருந்து அதிகமதிகமான தூரத்துக்கு இழுத்துட்டுப் போச்சு, நான் ஜெபிக்கறதுலயும் தேவனோட வார்த்தைகள வாசிக்கறதுலயும் கூட சிரத்தையில்லாமப் போய்க்கிட்டு இருந்தேன். அப்படியே அது போய்க்கிட்டு இருந்தா, என்னால சத்தியத்தப் பெற முடியாது, அதோடு தேவனால இரட்சிக்கப்படுவதுக்கான வாய்ப்பையும் இழக்க நேரிடும்.

அதுக்கப்புறம் தேவனோட வார்த்தைகளின் வேற ஒரு பாட்டை நான் கேட்டேன்: “வாய்ப்பை இழந்தால் அதற்காக நீ என்றென்றும் வருந்தவேண்டி இருக்கும்.” “நீ இங்கே இப்பொழுதே தேவனுடைய பாரத்தைக் குறித்து கவனமுள்ளவனாக மாறவேண்டும்; தேவனுடைய பாரத்தின் மீது கவனம்கொள்வதற்கு முன்பு, தேவன் தம்முடைய நீதியான மனநிலையை எல்லா மனிதர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டுமென்று நீ காத்திருக்கக் கூடாது. அதற்குள் மிகுந்த தாமதமாகிவிடாதா? தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் நீ நழுவ விட்டாயானால், மோசே நல்ல கானான் தேசத்திற்குள் நுழைய முடியாமல் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டு, மிகுந்த வருத்தத்துடன் மரித்ததைப் போல, உன் வாழ்நாள் முழுவதும் நீ வருத்தப்படுவாய். தேவன் தம்முடைய நீதியான மனநிலையை எல்லா ஜனங்களுக்கும் வெளிப்படுத்தியவுடன், நீ வருத்தத்தால் நிரப்பப்படுவாய். தேவன் உன்னைத் தண்டிக்காவிட்டாலும், உன் சொந்த வருத்தத்தால் உன்னை நீயே தண்டித்துக் கொள்வாய். பரிபூரணத்தை அடைய சிறந்த வாய்ப்பு நிகழ்காலமே; இப்போதே மிகவும் நல்ல நேரம். நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை வாஞ்சையுடன் தேடவில்லையெனில், அவருடைய கிரியை முடிந்தவுடன் அது மிகவும் தாமதமாகிவிடும், நீ அந்த வாய்ப்பை இழந்திருப்பாய். உன் அபிலாஷைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் கிரியை செய்யாமல் இருப்பார் எனில், நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், உன்னால் ஒருபோதும் பரிபூரணத்தை அடைய முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணத்தை அடைவதற்கு தேவனுடைய சித்தத்தைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருங்கள்”). நம்மிடத்துல தேவன் எதிர்பார்பாக்குறத அவரோட வார்த்தைகள் மூலமா என்னால உணர முடிஞ்சுச்சு. சத்தியத்தப் பின்தொடரவும், நம்மளோட கடமையச் செய்யவும், அவரோட இரட்சிப்பப் பெறவும் இந்தப் பொன்னான நேரத்த நம்மால பொக்கிஷமா பயன்படுத்த முடியும்ன்னு அவர் நம்புறாரு. தேவனால பரிபூரணப்படுத்தப்படுறதப் பின்தொடருறதுக்கு இது ஒரு விலையேறப்பெற்ற வாய்ப்பும், ஒரு கடமையச் செய்வதுக்கான ஒரு முக்கியமான நேரமுமா இருக்குது. கடமையச் செய்யுறதுல, பல்வேறு பிரச்சனைகளத் தீர்க்க சத்தியத்தத் தேடுதலக் கடைப்பிடிக்கறதன் மூலமா, நம்மால் இன்னும் நிறைய சத்தியங்களக் கத்துக்கிட்டு, வாழ்க்கையில வேகமா முன்னேற முடியும். நல்லாப் பயிற்றுவிக்க நான் அந்த வாய்ப்பப் பயன்படுத்திக்காம, அதுக்குப் பதிலா, பணத்துக்குப் பின்னாடி ஓடிக்கிட்டே இருந்தா, தேவனோட கிரியை முடிவடையுறப்போ, எனக்கு ஒன்னுமில்லாம போயிடும், எவ்வளவு வருத்தப்பட்டாலும் பயனில்ல. உண்மையில, நீங்க உணவு உறைவிடத்தோடு வாழ்க்கையில திருப்தியா இருந்திருக்கணும். நிறைய பணம் சம்பாதிக்கறதுக்காக உங்க கடமைய நீங்க புறக்கணிச்சா, கடைசியில, அது உங்க வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும், சத்தியத்தப் பெறுவதுக்கும் தேவனால பரிபூரணப்படுத்தப்படுவதுக்கும் உங்களோட மிகப் பெரிய வாய்ப்ப இழக்க நேரிடும். அது முட்டாள்தனமா இருக்கும்!

அப்படிங்கறதுலயிருந்து தேவனோட வார்த்தைகளின் வேற ஒரு பத்திய நான் வாசிச்சேன். “இயல்பானவராகவும், தேவனுக்கான அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிக பாக்கியவான்கள் யாரும் இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள், ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்த ஜனக்கூட்டத்தால் மட்டுமே, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதத்தை ஜீவிக்க முடிகிறது: பூமியில் வேறு எவராலும் அத்தகைய மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முடியவில்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்”). தேவனிடத்துலயிருந்து வந்த இந்த வார்த்தைகள வாசிச்சது எனக்கு உற்சாகமா இருந்துச்சு. சத்தியத்தப் பின்தொடருறதும் தேவனை அறிஞ்சுக்கறதும் மட்டுந்தான் உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கையப் பெறுவதுக்கான ஒரே வழி. முன்னாடி, பணமும் அந்தஸ்தும் இருந்தா எல்லாரும் என்னையப் போற்றுவாங்கன்னும் அதுதான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையா இருக்கும்னும் நெனச்சுக்கிட்டு, நான் எப்பவுமே சாத்தானிய தத்துவங்கள்படிதான் வாழுவேன். ஆனா அது எல்லாமே தவறு. விசுவாசம் இல்லாமலும், சத்தியத்தயும் ஜீவனையும் பெற்றுக்காமலும், ஜனங்களால எதையும் உண்மையா புரிஞ்சுக்க முடியாது. அவங்க எங்கயிருந்து வந்தாங்கங்கறது கூட அவங்களுக்குத் தெரியாது, மனுஷர்களோட தலைவிதிய தேவன்தான் ஆட்சி செய்யுறார்ங்கறதும் அவங்களுக்கு உண்மையிலயே தெரியாது. அவங்க அந்தஸ்துக்காகவும் பணத்துக்காகவும் சூழ்ச்சி செய்யுறாங்க, அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அத விட்டுத் திரும்புறதப் பத்தி நினைக்குறதே இல்ல, பேரழிவுகள் வர்றப்போ, அதுல அவங்க மரிக்க நேரிடும்—அப்போ அவங்களோட பணம் பயனற்றதா போயிரும்! உங்க வாழ்க்கை முழுவதும் சாத்தானால சூழ்ச்சி செய்யப்படுறதும் காயப்படுத்தப்படுறதும் ரொம்ப வருத்தமடையச் செய்யுறதா இருக்குது. ஆனா விசுவாசத்தப் பெற்றிருப்பதும் சத்தியத்தப் பின்தொடர்வதும் வெவ்வேறு காரியமா இருக்குது. நம்மகிட்ட அவ்வளவா பொருள் திருப்தி இல்ல, ஆனா சத்தியங்களக் அறிஞ்சுக்கறதன் மூலமாவும், சில விஷயங்களப் பத்திய நுண்ணறிவப் பெறுவதன் மூலமாவும், அதோடு அதுக்கப்புறமும் பண ஆசைக்கு உள்ளாகாமலும் கட்டுப்படாமலும் இருந்தா, நம்மால கொஞ்சம் சமாதானத்தயும் ஞானத்தயும் பெற முடியும். யோபுக்கு குடும்ப உடைமைகள் நிறைய இருந்துச்சு, ஆனா அவன் அதுல மகிழ்ச்சியடையல. எல்லாத்துலயும் தேவனோட விதியை அறிஞ்சுக்கறதுலயும், தேவனுக்கு பயப்பட்டு பொல்லாப்புக்கு விலகுறதுலயும் அவன் கவனம் செலுத்தினான். அவனுக்கு உபத்திரவங்கள் வந்தப்போ, அவனால குறை சொல்லாம இருக்கவும், சாட்சியில உறுதியா நிக்கவும் முடிஞ்சுச்சு. அவன் தேவனோட அங்கீகாரத்தப் பெற்றான், கடைசியில தேவன் அவனுக்குத் தோன்றினாரு. யோபோட வாழ்க்கைக்கு அர்த்தமும் மதிப்பும் இருந்துச்சு. அப்படி அதப் பத்தி யோசிச்சுக்கிட்டு, நான் ராஜினாமா கடிதம் எழுதினேன். நான் முடிவெடுத்துட்டேன்ங்கறதப் பாத்ததும், முதலாளி என்னைய இருக்க வைக்கறதுக்கு முயற்சி செய்யல. என்னோட ராஜினாமா செயல்முறை சுமூகமா இருந்துச்சு. அந்த நேரத்துல, நான் நிறுவனத்த விட்டு வெளியேறினேன், நான் ரொம்ப நிம்மதியாவும் விடுதலையோடும் உணர்ந்தேன்.

அதுக்கப்புறம் நான் உண்மையிலயே என்னோட கடமைய முழுவீச்சுல செய்ய ஆரம்பிச்சு, புதுசா வந்தவங்களுக்கு நீர்ப் பாய்ச்சுறதுல மத்த சகோதர சகோதரிகளோடு இணக்கமா பணியாற்றினேன். கொஞ்ச காலம் கழிச்சு, புதிய விசுவாசிகள் கூடுகைகளுக்கு ஆர்வத்தோடு வந்துக்கிட்டிருந்தாங்க, திருச்சபை வாழ்க்கை முன்னேறுச்சு. எனக்கு அப்படி ஒரு சமாதான உணர்வு இருந்துச்சு! தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

என் மீதமுள்ள வருஷங்களுக்கான என் விருப்பத் தேர்வு

சின்ன வயசுலயிருந்தே, என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு, நாங்க மத்த கிராம மக்களால அடிக்கடி கொடுமைப்படுத்தப்படுவோம். என்னோட...

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 2)

டான் சுன், இந்தோனேஷியா நான் மீண்டும் சோதனையில் விழுந்து, ஜனங்கள் ஏன் பணத்திற்காக கடினமாக உழைக்கின்றனர் என்பதற்கான மூலக் காரணத்தைக்...

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 1)

டான் சுன், இந்தோனேஷியா “உங்களிடம் பணம் இல்லாதிருக்கும் போது உங்கள் பிள்ளையைக் கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்...

ஒரு மருத்துவரின் தெரிவு

என்னோட சின்ன வயசுல என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு. என்னோட அம்மா முடக்குவாதத்துல கிடந்து, படுத்த படுக்கையாகி, வருஷம்...