மனுவுருவான தேவன் ஏன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையைக் கடைசி நாட்களில் செய்ய வேண்டும்?

ஜனவரி 7, 2023

நாம ஏற்கெனவே சில தடவ கடைசி நாட்கள்ல செய்யப்படும் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரியயப் பத்திப் பேசி இருக்கோம். நாம இன்னைக்கு யார் இந்த நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாருன்னு பாக்க விரும்புறோம். கடைசி நாட்கள்ல மனுக்குலத்தின் மத்தியில தேவன் நியாயத்தீர்ப்புக் கிரியய செய்வார்னு எல்லா விசுவாசிங்களுக்கும் தெரியும், அதாவது சிருஷ்டிகர் மனுக்குலத்துக்குத் தோன்றி தாமே தம் உரைகள வெளிப்படுத்துவாரு. ஆகவே தேவன் இந்த நியாயத்தீர்ப்ப எப்படிச் செய்வாரு? அவருடய ஆவியானவர் வானத்தில தோன்றி நம்மோட பேசுவாரா? அதுக்கு சாத்தியமில்ல. கர்த்தராகிய இயேசுவே நமக்குச் சொல்லியிருக்காரு: “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22). “அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்(யோவான் 5:27). இதில இருந்து நாம பாக்குறது என்னன்னா நியாயத்தீர்ப்புக் கிரிய “குமாரனால” செய்யப்படுது. “மனுஷகுமாரன்” அப்படிங்கிற எந்த குறிப்பு மூலமாவும் இதுதான் மனுவுருவான தேவன்னு நாம அறிஞ்சுக்கணும், அப்படின்னா இதுக்கு அவரு கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்புக் கிரியயச் செய்ய மாம்சத்தில வருவாருன்னு அர்த்தம். இது மிக முக்கியமானது! அப்படின்னா கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரிய எதப்பத்தியத்துன்னு உங்களுக்குத் தெரியுமா? தேவன் ஏன் அதைச் செய்ய மாம்சமாகணும்? எளிமையாச் சொன்னா, இதுதான் மனுக்குலத்த இரட்சிக்க இரட்சகர் வர்றதுங்கறது. தேவன் மாம்சமாகி பூமிக்கு வர்றதுதான் இரட்சகர் இறங்கி வர்றது. பாவத்தில இருந்து மனுக்குலத்த இரட்சிக்க ஒரே முறை எல்லாருக்காகவும் அவர் தாமே நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாரு. அவருடய நியாயத்தீர்ப்ப ஏற்பதினால நீங்க பாவத்தில இருந்து விடுபட்டு பரிசுத்தமாகி இரட்சிக்கப்படலாம். அதன்பின் நீங்க பேரழிவில இருந்து தப்பி முடிவுல பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கலாம். ஆகவே, இரட்சகரின் நியாயத்தீர்ப்புக் கிரியய ஏத்துக்கிறதுங்கறது ஒரு நபரின் பலாபலனுடனும் சென்றடையும் இடத்துடனும் சம்பந்தப்பட்டது—அது ரொம்ப முக்கியமானதுன்னு சொல்ல மாட்டிங்களா? பல விசுவாசிங்க கேக்கலாம் கடைசி நாட்கள்ல தமது நியாயத்தீர்ப்புக்காக தேவன் ஏன் முழுசா மாம்சமாகணும். கர்த்தராகிய இயேசு ஆவியானவர் ரூபத்தில ஒரு மேகத்தின் மேல வர்றாருன்னு அவங்க நினைக்கிறாங்க, அதாவது தேவன் கைய நீட்டி எல்லாரயும் வாரி மேல, நேரா ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்குவார்னு—அது ரொம்ப அற்புதமா இருக்குமில்ல? இந்த மாதிரி சிந்தனைங்க ரொம்ப தெளிவா இல்லாதது மட்டுமல்லாம யதார்த்தமில்லாமலும் இருக்கு. தேவனுக்கு ஒரு பரிசுத்தமான, நீதியான மனநிலை இருக்குங்கறத நீங்க தெரிஞ்சிக்கணும். அவர் பாவிகள தமது ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்குவாரா? நமக்கெல்லாம் இந்த வேத வசனம் நல்லா தெரியும், “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே(எபிரெயர் 12:14). எல்லாரும் பாவிங்கதான், தொடர்ந்து பாவம் செய்றோம். தேவன் ராஜ்யத்துக்குள்ள மனுஷன நேரடியா எடுத்துக்க மாட்டாரு—அவரு நம்மள ரட்சிக்கிற விதம் அது இல்ல. தேவன் பாவிகள வெறுக்குறாரு, மேலும் அவங்க தேவன பாக்குறதுக்கு தகுதியுள்ளவங்க இல்ல. இதப் பத்தி சந்தேகமே இல்ல. அப்ப கடைசி நாட்கள்ல மனுக்குலத்த ரட்சிக்க இரட்சகர் எப்படி வர்றாரு? முதல்ல, சீர்கேட்டில இருந்து நம்ம சுத்துகரிக்க அவருடைய நியாயத்தீர்ப்ப செய்றாரு, பாவத்திலயும் சாத்தானின் வல்லமைகள்லயும் இருந்தும் நம்ம ரட்சிக்கிறாரு, அதுக்குப் பிறகு அவரு நம்ம ராஜ்யத்துக்குள்ள கொண்டு போவாரு. உங்க பாவத்தன்மை தீர்க்கப்படலேன்னா தேவன் உங்கள பேரழிவுகள்ல இருந்து ரட்சிக்கவும் மாட்டாரு, அத விட ராஜ்யத்துக்குள்ள கொண்டு போகவும் மாட்டாரு. பேரழிவுகள் ஏற்கெனவே தொடங்கிருச்சி, எல்லாரும் உலகம் முடியப் போறது போலவும், மரணம் நெருங்கி வர்றதபோலவும் உணர்றாங்க. ரட்சகர் வந்து மனுக்குலத்த ரட்சிக்கணும்னு எல்லாரும் காத்திருக்காங்க, ஆகவே அவரையும் அவருடைய கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையும் ஏத்துக்கிறது மிகவும் முக்கியமானது! விசுவாசிங்க இரட்சிக்கப்பட்டு, பரலோக ராஜ்யத்துக்குள்ள போவாங்களா என்பதுக்கான முக்கியத்துவம் இங்கதான் இருக்கு.

ஆனா முதல்ல கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியைன்னா என்னன்னு பேசுவோம். மதம் சார்ந்தவங்க கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு ரொம்ப சுலபமான விஷயம்னு நினைக்கிறாங்க, நியாயத்தீர்ப்பு பற்றிய எந்த ஒரு குறிப்பும் ஆவி ரூபத்தில இருக்கிற கர்த்தராகிய இயேசுவால செய்யப்படுறத குறிக்குதுன்னு அவங்க நிச்சயமா உணர்றாங்க, அதாவது கர்த்தர் வந்து நம்ம சந்திச்சி ராஜ்யத்துக்குள்ள கொண்டு போவாரு, அப்புறமா அவிசுவாசிங்க ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டு அழிக்கப்படுவாங்க. உண்மையில அது முற்றிலுமா தவாறா புரிஞ்சிகொள்ளப்பட்டிருக்கு. இந்தத் தவறு எங்க இருக்கு? மனுக்குலத்த ரட்சிக்கும் கிரியய செய்ய தேவன் ஒவ்வொருமுறை வரும்போதும், அது உண்மையில ரொம்ப நடைமுறையானதாவும், ரொம்ப எதார்த்தமானதாவும், அரிதாகவே இயற்கைக்கு மாறானதாவும் இருக்கு. மேலும் அவங்க கர்த்தருடய வருகயப் பத்திய மிக முக்கியமான வேத தீர்க்கதரிசனங்கள கவனிக்கல—நியாயத்தீர்ப்புக் கிரியயச் செய்ய மனுஷகுமாரனா தேவன் மாம்சமாதல் பற்றிய தீர்க்கதரிசனங்கள கவனிக்கல. கர்த்தராகிய இயேசு தெளிவா சொல்லியிருக்காரு: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்(யோவான் 5:22). “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:48). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). மேலும் 1 பேதுரு 4:17 சொல்லுது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” இந்த தீர்க்கதரிசனங்கள் தெளிவா இல்லையா? கடைசி நாட்கள்ல கர்த்தர் மனுஷகுமாரனா மாம்சமாகி சத்தியங்கள வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றாரு. இதப் பத்தி எந்த சந்தேகமும் இல்ல. நியாயத்தீர்ப்புக் கிரிய ஜனங்கள் கற்பனை செய்ற மாதிரியானது இல்ல, தேவன் விசுவாசிகள நேரடியா வானத்துக்கு எடுத்து, அவிசுவாசிகள ஆக்கினைக்குள்ளா தீர்த்து அழிக்கிறது போல இல்ல. அது அவ்வளவு எளிதானது இல்ல. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில இருந்து ஆரம்பிக்குது, அது முதல்ல தேவனுடய கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்ப ஏத்துக்கிறவங்க மத்தியில செய்யப்படுது. அதாவது, மாம்சமான மனுஷகுமாரன் பூமிக்கு வர்றாரு, மனுக்குலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் பல சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, எல்லா சத்தியங்களுக்குள்ளும் பிரவேசிக்க தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள வழிநடத்துறாரு. இதுதான் கடைசி நாட்களில் இரட்சகருடய கிரிய, மேலும் தேவன் இத ரொம்ப நாளைக்கு முன்னாலேயே திட்டமிட்டாரு. அவிசுவாசிகளப் பொறுத்தவரயில, அவங்க நேரடியா ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டு பேரழிவுகளின் மூலம் நீக்கப்படுவாங்க. இப்போ, இரட்சகர் ஏற்கெனவே மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாக வந்திருக்கிறார், மனுக்குலத்த சுத்திகரிச்சி ரட்சிக்க எல்லா சத்தியஙகளயும் வெளிப்படுத்துறாரு, நியாயத்தீர்ப்புக் கிரியய செய்றது தேவனுடய வீட்டில இருந்து ஆரம்பிக்குது. சர்வவல்லமையுள்ள தேவனால வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் முழு உலகத்தயும் அசைச்சிருக்கு. கர்த்தருடய வருகயக் குறித்த வேதாகமத்தோட தீர்க்கதரிசனங்கள் எல்லாம் முழுமையா நிறவேறியத நம்மால பாக்க முடியுது. துரதிர்ஷ்டவசமாகக் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியய இன்னும் பலரும் புரிஞ்சிக்கல இயற்கைக்கு மீறிய எதையாவது பார்க்கலாம்னு நம்பிக்கிட்டிருக்காங்க: தேவன் வானத்தில தோன்றி பேசுறததான். இது ரொம்ப தெளிவற்றதா இருக்கு. தேவன் எப்படி தமது நியாயத்தீர்ப்ப செய்றாருங்கறத நல்லா புரிஞ்சிக்கிறதுக்கு சர்வவல்லமையுள்ள தேவன் என்ன சொல்றாருன்னு பாப்போம்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனுடைய சொந்தக் கிரியையாயிருக்கிறது, எனவே அது இயற்கையாகவே தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும்; தேவனுக்குப் பதிலாக மனிதனால் அதைச் செய்ய முடியாது. நியாயத்தீர்ப்பானது மனிதகுலத்தை வெல்வதற்கு சத்தியத்தைப் பயன்படுத்துவது என்பதால், மனிதர்களிடையே இந்த கிரியையைச் செய்ய தேவன் இன்னும் மனித ரூபத்தில் தோன்றுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, உலகெங்கிலும் உள்ள ஜனங்களுக்கு போதிக்கவும், சகல சத்தியங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கடைசி நாட்களின் கிறிஸ்து சத்தியத்தைப் பயன்படுத்துவார். இதுவே தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

தேவன் தமது கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்ப எப்படி செய்றாருன்னு இப்ப நாம புரிஞ்சிக்கணும். முக்கியமா சத்தியங்கள வெளிப்படுத்தியும், இவற்ற பயன்படுத்தியும் மனுக்குலத்த நியாந்தீர்த்து, சுத்திகரிச்சி இரட்சிக்கிறாரு. அதாவது, கடைசி நாட்கள்ல தேவன் இந்த நியாயத்தீர்ப்பு கிரியய மனுஷனுடய சீர்கேட்ட சுத்திகரிக்கவும், ஒரு கூட்ட ஜனங்கள ரட்சித்து பரிபூரணப்படுத்தவும், ஒரு கூட்ட ஜனங்கள தேவனோடு ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டவர்களாக முழுமையாக்கவும் பயன்படுத்துறாரு. தேவனுடய 6000-வருஷ நிர்வாகத் திட்டத்தின் பலன் இதுதான், மேலும் இதுதான் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையின் முக்கியத்துவம் ஆகும். அதனால்தான் ரட்சகரான சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்துறாரு, மனுஷனுடய எல்லா சீர்கேடான மனநிலயயும் வெளியரங்கமாக்கி நியாயந்தீர்க்கிறாரு, கையாளுதல், கிளைநறுக்குதல், சோதனைகள் மற்றும் புடமிடுதல் மூலம் ஜனங்கள சுத்திகரிச்சி மாத்துறாரு, மனுஷனுடைய பாவத்தின் வேரை நீக்குறாரு, இது பாவத்திலிருந்தும் சாத்தானின் வல்லமைகளில இருந்தும் முழுசா தப்பிக்க வழிவகுக்குது, தேவனிடத்தில கீழ்ப்படிதலயும் பயபக்தியயும் உண்டாக்குது. இது கொஞ்சம் சிலர குழப்புறதா இருக்கலாம். கர்த்தராகிய இயேசு மனுக்குலத்த மீட்டிட்டாரு, ஆகவே கடைசி நாட்கள்ல மனுக்குலத்த நியாயந்தீர்க்க தேவன் ஏன் சத்தியங்கள வெளிப்படுத்தணும்? சாத்தான் மனுஷன எவ்வளவு ஆழமா சீர்கெடுத்திருக்கிறாங்கறத அவங்களால் பாக்க முடியல. நம்முடய சீர்கேடான மனநிலைகள நீக்கி கடைசி நாட்கள்ல மனுஷன தேவன் ரட்சிக்கிறாரு. இது சாதாரண விஷயம் இல்ல. கர்த்தரிடத்தில நம்ம பாவங்கள ஒத்துக்கிட்டு, அறிக்கையிட்டு, மனந்திரும்புறது என்பதல்ல அது. பாவத்துக்கும் சீர்கேடான மனநிலைக்கும் வித்தியாசம் இருக்கு. அவைகள் பாவ நடத்தைகளப் பத்தியது அல்ல, ஆனா அவை நம்முடய மனசிலயும் ஆத்துமாவுலயும் வாழுற ஒண்ணு. அவை நமக்குள் ஆழமா வேரூன்றபட்டிருக்கிற மனநிலைகள் என்பவை ஆணவம், சூழ்ச்சி, தீமை, சத்தியத்த வெறுப்பது போன்றவையாகும். இந்த சீர்கெட்ட மனநிலைகள் ஜனங்களோட இருதயத்துக்குள்ள ஆழமா மறஞ்சிருக்கும், அவற்றை கண்டுபிடிக்கிறது நமக்கு ரொம்ப கஷ்டம். சில வேளைகள்ல வெளிப்படயான பாவம் எதுவும் இருக்காது, சிலர் அருமையான விஷயங்களப் பேசுவாங்க, ஆனா அவங்க இருதயத்துக்குள்ள வஞ்சகமும் வெறுக்கத்தக்க நோக்கங்களும் இருக்கும், பிறர ஏமாத்தி தவறா வழிநடத்துவாங்க. அவங்க மனநிலையில் இருக்கும் பிரச்சின இதுதான். தேவனுடய நீண்ட கால நியாயத்தீர்ப்பு மற்றும் வெளிப்பாடுகள் இல்லாம, கையாளுதல், கிளைநறுக்குதல் மற்றும் உபத்திரவங்கள் மூலமா ஜனங்க இதப் பாக்கக்கூட மாட்டாங்கன்னா மாற்றத்தப் பத்தி என்ன சொல்றது. கர்த்தருடய விசுவாசிகளின் மத்தியில ஒரு ஜீவித காலம் முழுதும் தங்கள் பாவத்த அறிக்கையிட்ட பிறகும் யாரு பாவத்தில இருந்து தப்பிச்சிருக்காங்க? ஒருத்தர் கூட இல்ல. அதனால, கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு இல்லாம கர்த்தருடய மீட்ப மட்டுமே அனுபவிப்பது ஒருத்தர் தன்னுடய பாவ நடத்தைகள அறிஞ்சிக்கதான் உதவுது, ஆனா அவங்களுடய பாவ சுபாவம், அவங்களுடய பாவத்தின் வேர்—அதாவது, உள்ளுக்குள் ஆழமா வேரூன்றப்பட்டிருக்கிற சீர்கெட்ட மனநில—மக்களால பாக்க முடியாத ஒண்ணு, அத விட சரிசெய்ய முடியாதது. இத ஒருத்தராலும் மறுக்க முடியாது! ஆகவே, தேவன் தாமே மனுவுருவெடுத்து கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பச் செய்து, எராளமான சத்தியங்கள வெளிப்படுத்துவதன் மூலமும், தமது நீண்ட கால வெளிப்படுத்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலமும் மட்டுமே, மக்கள் தங்கள் சீர்கேட்டின் உண்மைநிலையைத் தெளிவா பாத்து, தங்கள் சாராம்சத்தை அறிந்து, இந்த நியாயத்தீர்ப்பு மூலம் தேவனின் நீதியையும் பரிசுத்தத்தையும் அறிஞ்சி, தேவனிடத்தில் பயபக்தியுள்ள இருதயத்தை உருவாக்க முடியும். இது மட்டுமே சீர்கேட்டை ஒழித்து உண்மையான மனுஷ சாயலோடு வாழ ஒரே வழி. ஆகவே, தேவன் மனுவுருவெடுத்து கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பை செய்ய சத்தியங்கள வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்தப் பலன்களை அடய முடியும். சிலர் கேக்கலாம்: ஏன் தேவன் தாமே மாம்சத்தில் இதச் செய்ய வேண்டும்? அவரால் ஏன் ஆவியின் ரூபத்தில செய்ய முடியாது? நாம தேவனுடய வார்த்தைகளின் ஒரு வீடியோ வாசிப்ப பாப்போம் அதனால இதப்பத்தி எல்லாருக்கும் ஒரு நல்ல புரிதல் கிடைக்கும்.

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”).

மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது பரந்ததாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய இடறலடைய இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள். இந்தக் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும். மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது”).

இப்ப நாம எல்லாரும் ஏன் தேவன் தாமே நியாயத்தீர்ப்புக் கிரியய மாமசத்தில் செய்ய வேண்டுங்கறதப் பத்தி கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டிருக்கோம்னு நான் நம்புறேன். இது ஏனெனில் தேவன் மாம்சமாவது மட்டுமே அவர் நடைமுறையில் மக்களோடு தொடர்பு கொள்வதற்கான ஒரே வழி, எங்கும் எப்போதும் நம்மோடு சத்தியத்தப் பத்தி பேசவும் ஐக்கியப்படவும், நாம வெளிப்படுத்துற சீர்கேட்டுக்கு ஏத்தாப்படி நம்ம வெளிப்படுத்தி நியாயந்தீர்க்கவும், தண்ணீர் அளித்து, மேய்த்து நம்மள தேவைக்கு ஏற்ப ஆதரிக்கவும் ஒரே வழி. தேவனுடைய சித்தத்தயும் தேவைகளயும் தெளிவா நமக்கு கூறவும் அதுதான் ஒரே வழி. தனிப்பட்ட முறையில தேவனுடய வழியக் கேட்டு அவர் வெளிப்படுத்துற சத்தியங்கள் புரிஞ்சிக்கிறது சத்தியத்தயும் ரட்சிப்பயும் அடயறத்துக்கு மிகவும் பயனுள்ளதல்லவா? மேலும், ஒரு வழக்கமான, அன்றாடம் சந்திக்கிற நபராக தேவன் மாம்சமாகிறபோது, மக்களுக்கு கருத்துக்கள் இருக்கும், அவர்கள் கலகக்காரர்களாக இருக்கலாம்னு நீங்கள் சொல்லுவீங்களா? நிச்சயமா. கிறிஸ்துவின் மிக சாதாரணமான வெளித்தோற்றத்த ஜனங்கள் பாத்த உடனே, அவங்களுடய கருத்துக்கள், கலகத்தன்ம, எதிர்ப்பு எழுந்துச்சி, மேலும் அவங்க எதயும் சொல்லல, வெளிக்காட்டலன்னாலும், அவங்க எவ்வளவு தூரத்துக்கு நடிச்சாலும், தேவன் பாத்துக்கிட்டிருக்காரு, இத மறைக்கிற எந்த முயற்சியும் வெற்றிபெறாது. சரியா ஆணியின் தலையில அடிக்கிற மாதிரி மக்களுக்குள்ள மறஞ்சிகிடக்கிறத தேவன் வெளிப்படுத்துறாரு. ஆகவே, மாம்சத்தில இருக்கிற தேவனால மட்டுமே மக்கள வெளிப்படுத்தி அவங்க கலகத்தன்மையையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட முடியும். இது நியாயத்தீர்ப்புக் கிரியைக்கு ரொம்ப பயனுள்ளது. ஆவியானவர் மூலமா தேவன் வார்த்தைகள நேரடியா சொன்னா என்ன? ஜனங்களால் அவருடய ஆவியானவர பாக்கவோ, தொடவோ அல்லது நெருங்கவோ முடியாது, மேலும் அவரோட ஆவியானவர் பேசுறது பயங்கரமா இருக்கும். அப்புறம் அவங்களால எப்படி தங்களுடய இருதயங்கள தேவனிடம் திறக்க முடியும், அல்லது சத்தியங்கள தெரிஞ்சுக்க முடியும்? ஆவியானவர எதிர்கொள்ளும்போது கருத்துக்களக் கொண்டிருக்க யார் துணிவாங்க? யார் சீர்கேட்ட வெளிப்படுத்த, அல்லது கலகம் செய்ய எதிர்க்கத் துணிவாங்க? ஒருத்தரும் மாட்டங்க. எல்லாரும் பயத்தால நடுங்கிக்கிட்டு இருப்பாங்க, முகம் வெளுத்து, சாஷ்டாங்கமா விழுந்து கிடப்பாங்க. ஜனங்கள் இப்படிப்பட்ட அச்சத்தில இருக்கும்போது, அவங்களப் பத்திய உண்மைங்க எப்படி வெளிப்படுத்தப்படும்? அவங்களுடய ஒரு கருத்தும் அல்லது கலகத்தன்மையும் அம்பலமாகாது, அப்ப நியாயத்தீர்ப்ப எப்படி நடத்த முடியும்? என்ன ஆதாரம் இருக்கும்? அதனாலதான் தேவனுடைய ஆவியானவரின் கிரிய ஜனங்களோட மிக உண்மையான நடத்தைகள வெளிக்கொண்டுவந்து அவற்ற அம்பலப்படுத்த முடியாது, மேலும் தேவனுடய நியாயத்தீர்ப்புக் கிரியய முடிக்க முடியாது. மேலும் தேவனுடய ஆவியானவரை விட அவருடய மனுவுருவாதல்தான் நியாயத்தீர்ப்புக் கிரியைக்கு அதிக பலன் தருவதாக இருக்கும். காலயில இருந்து இரவு வரை மனுக்குலத்துக்கு மத்தியில சர்வவல்லமையுள்ள தேவன் வாழ்றத நம்மால பாக்க முடியுது. நம்முடய ஒவ்வொரு அசைவும், நம்முடய ஒவ்வொரு சிந்தனயும், நாம வெளிப்படுத்துற ஒவ்வொரு வகையான சீர்கேடு எல்லாம் தேவனால பாக்கப்பட்டு முழுசா புரிஞ்சிக்கப்படுது. எந்த நேரத்திலும் இடத்திலும் சத்தியங்கள வெளிப்படுத்தி நம்மள நியாயந்தீர்க்க, நம்ம சீர்கேடுகள, தேவனப் பத்திய நம்முடய கருத்துக்கள, கற்பனைங்கள, அது மட்டுமல்லாம தேவன எதிர்த்து துரோகம் பண்ணும் நம்முடய உள்ளார்ந்த சுபாவங்கள அம்பலப்படுத்த அவரால முடியும். நாம தேவனுடய வார்த்தைங்களப் படிக்கும்போது அவருக்கு முன்னால நியாயந்தீர்க்கப்படுவது போல இருக்கு. அது அவ்வளவு கடுமையாவும் வெட்கப்படுத்துறதாவும் இருக்கு, அவருடய வார்த்தைங்களுக்குள்ள அப்பட்டமாக இருக்கும் நம்முடய சீர்கேட்ட பற்றிய உண்மைய நம்மால பாக்க முடியுது. நாம உள்ளத்தில நம்மளயே வெறுத்து வருத்தப்படுறோம் தேவனுக்கு முன்பாக வாழ தகுதியற்றவங்களா உணர்றோம். தேவனுடய நியாயத்தீர்ப்பு மூலமா, எவ்வளவு நம்பமுடியாத அளவுக்கு அவர் நீதியாவும் பரிசுத்தமாவும் இருக்கிறார்ங்கறதயும், மேலும் அவர் உண்மையிலேயே நம்முடய இருதயத்துக்குள்ளும் மனசுக்குள்ளும் பாக்குறார்ங்கறதயும் நாம பாக்குறோம். நம்ம இருதயங்களுக்குள்ள ஆழமா புதஞ்சிருக்கிற சீர்கேடான சிந்தனைகளும் கருத்துக்களும், நமமளாலேயே கூட அறிஞ்சிக்கமுடியாததா இருக்கிறப்போ, தேவன் அத வெளிப்படுத்தி ஒவ்வொண்ணா நியாயந்தீர்க்கிறாரு. சிலசமயங்கள்ல அது கடுமையான கண்டனத்தாலும் சாபத்தாலும் நடக்குது, அதனால தேவனுடய இடறலுண்டாக்க இயலாத மனநிலைய நம்மால பாக்க முடியுது, கடைசியா, நாம தேவனுக்கு பயப்பட ஆரம்பிக்கிறோம். தேவனுடைய நியாத்தீர்ப்புக்கு உட்படாம, நம்மில ஒருத்தர் கூட தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் அறிய முடியாது, ஜனங்கள் சாத்தானின் சுபாவங்களோடு வாழுறப்போ அவங்க தேவன எதிர்க்கிற வகையானவங்க என்பதயும், அவங்க தேவனுடைய சாபத்துக்கும் தண்டனைக்கும் பாத்திரவான்கள் என்கிறதையும் ஒருத்தராலும் பாக்க முடியாது. தேவனுடய நியாயத்தீர்ப்பு, சிட்சை, உபத்திரவங்களால மட்டுமேதான் நம்மால உண்மையிலேயே மனந்திரும்பமுடியும், கடைசியா சீர்கேட்ட விட்டு சுத்திகரிக்கப்பட்டு மாற்றமடையலாம். இன்னைக்கு வரை கிறித்துவ பின்பத்தி வந்து, மனுவுருவான தேவன் நம் மத்தியில தாழ்மையா மறஞ்சி வாழறதையும், வாஞ்சையோடும், பொறுமையோடும் பல சத்தியங்கள, சீர்கெட்ட மனுக்குலமான நம்ம முற்றிலுமா ரட்சிப்பதற்காக மட்டுமே வெளிப்படுத்துறதையும் நம்மால பாக்க முடியுது. மனுவுருவான தேவன் தாமே நம்மள நியாயந்தீர்த்து சுத்திகரிச்சி, எல்லா சத்தியங்கலயும் நமக்கு எடுத்துச்சொல்லலேன்னா, நம்மள மாதிரியான கலகமும் சீர்கேடும் கொண்ட ஜனங்கள் நீச்சயமா நீக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்போம். அப்பறம் நாம எப்படி ரட்சிக்கப்பட முடியும்? மனுக்குலத்தின் மேல தேவனுடய அன்பு ரொம்பப் பெரிசு, தேவன் மிக அன்பானவர். சர்வவல்லமையுள்ள தேவன் நம்ம மத்தியில சத்தியங்கள வெளிப்படுத்தி, நடைமுறையான வழிகளிலே மனுக்குலத்த வழிகாட்டி, தாங்கி, கூடவே இருக்கிறார். தேவனுடய குரலக் கேக்கவும், அவருடய முகத்தப் பாக்கவும், நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டு தேவனால் சுத்திகரிக்கப்படவும், பல சத்தியங்கள அறியவும் அடயவும் ஓர் உண்மையான மனித சாயலோடு வாழவும் இதுவே நமக்கு ஒரே வாய்ப்பு. கடைசி நாட்கள்ல மனுவுருவான தேவனின் கிரியயில இருந்து அதிகமா பெற்றுக்கொள்றவங்கதான் கிறிஸ்துவ பின்பத்துற இந்தக் கூட்டத்தினரான நாம். நாம தேவனிடத்தில இருந்து பெற்றுக்கொள்றதுக்கு அளவே இல்ல. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் சொல்றதுபோல, “மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைப் பற்றிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அவரால் துல்லியமான வார்த்தைகளையும் அறிவுரைகளையும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு மனுக்குலத்திற்கான அவருடைய குறிப்பிட்ட சித்தத்தையும் விட்டுச்செல்ல இயலும். இதனால், அதன்பிறகு அவரைப் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தில் செய்யும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், மனுக்குலம் முழுவதிற்குமான அவருடைய சித்தத்தையும் இதை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் மிகவும் துல்லியமாகவும், உறுதியாகவும் பரப்ப இயலும். மனுஷர்கள் நடுவே மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாத்திரமே தேவன் மனுஷனுடன் ஒன்றாக இருக்கிறார் மற்றும் ஒன்றாக சேர்ந்து ஜீவிக்கிறார் என்கிற உண்மையை மெய்யாகவே நிறைவேற்றுகிறது. தேவனுடைய முகத்தைக் காணவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், தேவனுடைய தனிப்பட்ட வார்த்தையைக் கேட்கவும் மனுஷனுடைய விருப்பத்தை இந்தக் கிரியை மாத்திரமே நிறைவேற்றுகிறது. யேகோவாவின் பின்புறம் மாத்திரமே மனுக்குலத்திற்குத் தோன்றிய போது மாம்சமான தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேலும், தெளிவற்ற தேவன் மீதான மனுக்குலத்தின் நம்பிக்கையின் காலத்தையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். குறிப்பாக, கடைசியாக மாம்சமான தேவனுடைய கிரியையானது முழு மனுக்குலத்தையும் மிகவும் யதார்த்தமான, மிகவும் நடைமுறையான மற்றும் அழகான ஒரு காலத்திற்குக் கொண்டுவருகிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் மற்றும் கோட்பாட்டின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, உண்மையான மற்றும் சாதாரணமான, நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான, நிர்வாகத் திட்டத்தின் கிரியைகளைத் திறக்கும் மற்றும் மனுக்குலத்தின் மறைபொருட்களையும், போய்ச்சேருமிடத்தையும் விவரிக்கும், மனுக்குலத்தைச் சிருஷ்டித்து, நிர்வாகக் கிரியைகளை முடிவுக்குக் கொண்டுவரும், ஆயிரக்கணக்கான வருடங்களாக மறைந்திருக்கும் ஒரு தேவனை அவர் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். அவர் தெளிவற்ற காலத்தை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் தேவனுடைய முகத்தைத் தேட விரும்பியும் காண முடியாத காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் சாத்தானுக்கு ஊழியம் செய்த காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்து, மனுக்குலம் முழுவதையும் ஒரு புதிய காலத்திற்குள் வழிநடத்துகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஆவியானவருக்குப் பதிலாக மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்படும் கிரியையின் பலனாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது”).

சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியங்கள வெளிப்படுத்தி அவருடய கடைசிநாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியைய இப்ப முப்பது ஆண்டுகளா செய்துக்கிட்டு வர்றாரு. அவருடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பின் மூலமா தேவனுடைய ஜனங்களின் சீர்கேடான மனநில சுத்திகரிக்கப்பட்டிருக்கு, மேலும் பேரழிவுகளுக்கு முன்னால தேவன் ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள முழுமையாக்கி இருக்காரு—அவங்கதான் முதற்பலனானவங்க. அவங்க பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் வெறிகொண்ட எதிர்ப்புக்கு மத்தியிலும் கிறிஸ்துவ பின்பற்றி சாட்சி பகர்றதில நிலச்சி நின்னுருக்காங்க. அவங்க சாத்தான தோக்கடிச்சி தேவனுக்காக மாபெரும் சாட்சியா இருக்காங்க. இது வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனத்த நிறைவேத்துது: “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்(வெளிப்படுத்தல் 7:14). மனுவுருவான தேவன் சத்தியங்கள வெளிப்படுத்தி வரும்போது, எல்லா சபைப் பிரிவுகளைச் சேர்ந்த பெரிய சிறிய தலைவர்களும் அந்திக்கிறிஸ்த்துக்களும் முழுசா அம்பலப்படுத்தப்பட்டிருக்காங்க. சர்வவல்லமையுள்ள தேவன் ஒரு சாதாரண மனிதனா தோண்றுறாரு, அவரு ஆவியானவர் இல்லன்னு அவங்க பாத்து, அதனால அவங்க அவர வேணும்னே எதுத்து கண்டனம் பண்ணுறாங்க. அவங்களுடய சொந்த அந்தஸ்தயும் வாழ்வையும் காப்பாத்துறதுக்காக, விசுவாசிங்க தேவனுடய குரலக் கேட்டு மெய்யான வழிய ஆராயுறத வெறியோடு தடுத்தாங்க. சத்தியத்த வெறுக்கும் இந்த ஜனங்களோட உண்மயான முகம் அம்பலமாயிருக்கு, அவங்க ஆக்கினைக்குள்ளா தீக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்காங்க. தேவன் மாம்சமாகாம இருந்திருந்தா, அவங்க சபைகளுக்குள்ள மறஞ்சிருந்து, இன்னும் விசுவாசிகளோட ரத்தத்த உறிஞ்சி, தேவனுடைய காணிக்கைகள விழுங்கி, பலர தவறா வழிநடத்தி பாழாக்கிக்கிட்டிருந்திருப்பாங்க. தேவன் தமது நியாயத்தீர்ப்ப மாம்சத்தில செய்றதினால, அந்திக்கிறிஸ்துக்களும் அவிசுவாசிகளும், சத்தியத்த நேசிக்கிறவங்களும் நேசிக்காதவங்களும், சத்தியத்த வெறுக்கிறவங்களும் நிந்திக்கிறவங்களுமாகிய, எல்லாரும் அம்பலப்படுத்தப்பட்டிருக்காங்க. சத்தியத்த நேசித்து புரிஞ்சிக்கிறவங்க சாத்தானின் அசிங்கமான முகத்தயும் சாத்தான் எப்படி தேவனுக்கு எதிரா கிரிய செஞ்சி மனுக்குலத்த தவறா வழிநடத்துறான்னும் தெளிவா பாத்திருக்காங்க. அவங்க முழுசா சாத்தான நிராகரிச்சிட்டு, முழுசா தேவன நோக்கித் திரும்பிட்டாங்க. தேவன் முடிவா நன்மைக்கு பிரதிபலன் தந்து தீமைய தண்டிக்கிறாரு, பெரிய பேரழிவுகளப் பயன்படுத்தி தேவனுக்கு எதிராக் கிரிய செய்ற எல்லா பொல்லாத வல்லமைகளயும் அழிக்கிறாரு, இறுதியா சாத்தான் அதிகாரம் செலுத்தும் இந்தப் பழைய காலத்த முடிவுக்குக் கொண்டு வந்து, அதன்பின் அவருடய நியாயத்தீர்ப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்டவங்கள ஒரு அழகான சென்றடையும் இடத்துக்குக் கொண்டு வர்றாறு. இது வெளிப்படுத்தலின் தீர்க்கதரிசனங்கள நிறைவேத்துது: “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்(வெளிப்படுத்தல் 22:11). “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது(வெளிப்படுத்தல் 22:12).

நாம சர்வவல்லமையுள்ள தேவனின் இன்னொரு வாசகத்தப் பாப்போம். “தேவனுடைய இரண்டாவது மனித அவதரிப்பைப் பற்றி பலருக்கும் ஒரு மோசமான உணர்வு இருக்கிறது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பை கொடுக்கும்படிக்கு தேவன் மாம்சமாவார் என்று மக்கள் நம்புவது கடினம். ஆயினும்கூட, தேவனுடைய கிரியையானது பெரும்பாலும் மனிதனின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது, மனித மனம் இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்பதை நான் உனக்குச் சொல்லியாக வேண்டும். தேவன் பிரபஞ்சத்தை நிரப்புகிற உன்னதமானவராக இருக்கிறார், அதே சமயம், ஜனங்கள் பூமியில் வெறும் புழுக்களாக இருக்கிறார்கள்; மனிதனின் மனதானது புழுக்களை மட்டுமே வளர்க்கும் ஒரு தவறான நீரின் குழி போன்றது, அதேசமயம் தேவனுடைய நினைவுகளால் செயல்படுத்தப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் தேவனுடைய ஞானத்தின் பலன் ஆகும். ஜனங்கள் எப்பொழுதும் தேவனோடு சண்டையிட முயற்சிக்கிறார்கள், இறுதியில் யார் தோற்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்களையே நீங்கள் தங்கத்தை விட அதிகம் மதிப்புமிக்கவர்களாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் நான் அறிவுறுத்துகிறேன். தேவனுடைய நியாயத்தீர்ப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், நீ ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நீ மற்றவர்களைக் காட்டிலும் எவ்வளவு உயர்வாக நிற்கிறாய்? மற்றவர்கள் சத்தியத்திற்கு முன்பாக தங்கள் தலைகளைத் தாழ்த்த முடிந்தால், உன்னால் ஏன் முடியாது? தேவனுடைய கிரியையானது யாராலும் தடுத்து நிறுத்த முடியாத ஓர் உத்வேகத்தைக் கொண்டுள்ளது. நீ செய்திருக்கிற ‘பங்களிப்பு’ காரணமாகவே அவர் மீண்டும் நியாயத்தீர்ப்பை வழங்க மாட்டார், மேலும் இதுபோன்ற ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருத்தத்தால் நீ வெல்லப்படுவாய். நீ என்னுடைய வார்த்தைகளை நம்பவில்லை என்றால், வானத்தில் இருக்கும் அந்தப் பெரிய வெள்ளை சிங்காசனம் உன் மீது தீர்ப்பளிப்பதற்காகக் காத்திரு! இஸ்ரவேலர் அனைவரும் இயேசுவை நிராகரித்தார்கள் மற்றும் மறுதலித்தார்கள் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், ஆனாலும் மனிதகுலத்திற்கான இயேசுவின் மீட்பைக் குறித்த உண்மை இன்னும் பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் முடிவுபரியந்தம் விரிவடைந்துள்ளது. இது தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கிய ஒரு யதார்த்தம் அல்லவா? இயேசு உன்னைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நீ இன்னும் காத்திருந்தால், நீ ஒரு செத்துப்போன மரக்கட்டை என்று நான் சொல்கிறேன். சத்தியத்திற்கு விசுவாசமற்ற மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிற உன்னைப் போன்ற ஒரு போலியான விசுவாசியை இயேசு ஏற்றுக்கொள்ள மாட்டார். மாறாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உன்னை அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளுவதில் அவர் இரக்கம் காட்ட மாட்டார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனுஷரூபமெடுத்தல் என்றால் என்ன?

நம்ம எல்லாருக்கும் தெரிந்தபடி இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, மனுக்குலத்த மீட்க கர்த்தராகிய இயேசு என்ற மனிதனா தேவன் இந்த பூமியில மாம்சமா...

தேவனோட எல்லா கிரியைகளும் வார்த்தைகளும் வேதாகமத்துல இருக்குதுங்கறது மெய்தானா?

இரட்சகராகிய சர்வவல்லமையுள்ள தேவன், கடைசி நாட்கள்ல தோன்றி, கிரியை செஞ்சுக்கிட்டிருக்காரு, மில்லியன்கணக்கான வார்த்தைகள அவர்...

கர்த்தர் மெய்யாகவே ஒரு மேகத்துல திரும்பி வர்றாரா?

நாம ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவை பாத்துக்கிட்டிருக்கோம், தொற்றுநோய்களும் உலகம் முழுவது பரவிக்கிட்டிருக்கு. கர்த்தர் இந்த இருண்ட உலகத்துல...

நம்மால் ஏன் தேவனின் குரலைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மட்டுமே கர்த்தரை வரவேற்க முடியும்?

இப்போது, ஒரு மேகத்தின் மேல் கர்த்தராகிய இயேசு வருவாருன்னு எல்லா விசுவாசிங்களும் ஏங்கிக்கிட்டிருக்காங்க, ஏன்னா, பேரழிவுகள் தீவிரமா...