ஒரு “திருடப்பட்ட” ஆசீர்வாதம்
அது 2012 மார்ச் மாசமா இருந்துச்சு. எந்த நாள்ல அது ஆரம்பிச்சிச்சுன்னு எனக்குத் தெரியல. ஆனா நான் தினமும் ராத்திரி சாப்பாடுக்கப்புறமா, என்னோட மனைவி தன்னோட வேலைகள அவசரமா செஞ்சாள்ங்கறதயும், அதுக்கப்புறமா புத்தகம் வாசிக்க படுக்கையறைக்குப் போனாள்ங்கறதயும் கவனிச்சேன். இது ஒரு நாள் நடந்துச்சு, அடுத்த நாளும் அப்படியே நடந்துச்சு… அது தொடர்ந்து நடந்துச்சு. நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அவள் என்ன புத்தகம் வாசிச்சுக்கிட்டிருந்தாள்? அது ஏன் அவளை ரொம்ப கவர்ந்திழுப்பதா இருந்துச்சு? ஒரு நாள் ராத்திரி, என்ன நடக்குதுன்னு பார்க்க என்னால கதவைத் தள்ளித் திறக்காம இருக்க முடியல. நான் உள்ள நுழைவதப் பார்த்ததும், அவள் புத்தகத்த தூரமா வச்சுற விரும்புனாள். புத்தகத்தைப் பிடிச்சிருந்த அவளோட கையப் பிடிச்சு என்ன புத்தகம் வாசிச்சன்னு கேட்டேன். அவள் சிரிச்சுக்கிட்டே, “இது ஆட்டுக்குட்டியானவரால் திறக்கப்பட்ட புஸ்தகம். இவை திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்தியிருக்கிற வார்த்தைகள். அவர் திரும்பி வரணும்னு நாம ஏங்கியிருக்கோம், இப்போ அவர் திரும்பி வந்திருக்கிறாரு” அப்படின்னு சொன்னாள். அதக் கேட்டதும் நான் அதிர்ச்சியடஞ்சு பயந்தேன். “நாம கர்த்தரை விசுவாசிக்கிறோம், அதனால நாம இரட்சிக்கப்பட்டிருக்கறோம், அவர் வரும்போது, அவர் நம்மள நேரடியா பரலோகராஜ்யத்துக்குள்ள எடுத்துக்குவாரு. அதனால கர்த்தருடைய வருகையப் பத்திய எந்தப் பிரசங்கமும் பொய்யானது” அப்படின்னு போதகர் சொன்னது எனக்கு ஞாபகம் வந்துச்சு. “நீ தப்பு பண்ணுறன்னு நினைக்குறேன், போதகர் சொன்னத நீ மறந்துட்டியா? கர்த்தரை விசுவாசிப்பதன் மூலமா நாம ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருக்கோம். கர்த்தர் திரும்பி வந்திருந்தா, நாம ஏற்கனவே பரலோகராஜ்யத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்போம். ஆனா நாம இன்னும் இங்கதான் இருக்கறோம், இல்லையா? கர்த்தரோட விசுவாசிகளான நாம வேதாகமத்த வாசிச்சு, கர்த்தரோட வழியக் கடைப்பிடிக்கணும். அப்பத்தான் கர்த்தர் வரும்போது நாம பரலோகராஜ்யத்துக்குள்ள எடுத்துக்கொள்ளப்பட முடியும்” அப்படின்னு நான் கோபமா சொன்னேன். “அப்படி ரொம்ப அவசரப்பட்டு முடிவு செஞ்சிடாதீங்க. முதல்ல இந்தப் புத்தகத்த வாசிங்க, அப்பத்தான் கர்த்தர் உண்மையிலே திரும்பி வந்திருக்காரா இல்லையாங்கறது உங்களுக்குத் தெரியும்” அப்படின்னு என்னோட மனைவி சொன்னாள். ஆனா அந்த நேரத்துல நான் அதுக்கு எதிரா ரொம்ப கவனமா இருந்தேன், அதனால என்னோட மனைவி சொன்னத என்னால ஏத்துக்க முடியல. அதனால, புத்தகத்த எடுத்துக்கிட்டுப் போறத தவிர வேற எதுவும் செய்ய முடியல.
அதுக்கப்புறமா, ஒருதடவ வேலையின் நடுவுல எதையோ எடுக்க நான் வீட்டுக்கு வந்தேன், என்னோட மனைவி மறுபடியும் அந்தப் புத்தகத்த வாசிப்பதப் பார்த்தபோது, எனக்கு வேண்டியதை எடுத்துக்கிட்டு கிளம்பியபோது நான் கடுப்பாகி அவளப் புறக்கணிச்சேன். திரும்பிப்போற வழியில, “ஏன் என்னோட மனைவி இதுல ரொம்ப ஆர்வமா இருக்கிறாள்? நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கறாள், சுவிசேஷத்தப் பிரசங்கிக்க வெளியே போறாள்” அப்படின்னு நான் நெனச்சேன். “‘கிழக்கத்திய மின்னல்’ அப்படிங்கறது கணக்குல எடுத்துக்க வேண்டிய ஒரு பலம். வேதாகமத்த நல்லா அறிஞ்ச சகோதர சகோதரிகள் கூட கடினமா பின்பற்றுறாங்க அவங்களோட புத்தகங்கள்ல மூழ்கிப் போயிருறாங்க, வெளிய வர்றதில்ல” அப்படின்னு என்னோட அம்மா முன்னாடி சொன்னது எனக்கு திடீர்ன்னு நினைவுக்கு வந்துச்சு. “என்னோட மனைவி கிழக்கத்திய மின்னலோட புத்தகத்ததான் வாசிக்குறாளா? அவள் அதப் பார்த்துக் குழம்பிப்போயிட்டாளா? அவள் உண்மையிலயே ஏமாத்தப்பட்டு கர்த்தரோட இரட்சிப்ப இழந்துட்டா என்ன செய்யறது? ஆனா நான் வாழ்க்கையில முதிர்ச்சியடையாதவன், வேதாகமத்தப் பத்தி எனக்கு அதிகமா தெரியாது. அவளை எப்படி மீட்டெடுப்பதுன்னு எனக்குத் தெரியலயே” அப்படின்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறமா, நான் போதகர் சென் அவங்க வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க உதவ அவரோட வீட்டுக்குப் போனேன். அவர் பல வருஷங்களா கர்த்தரை விசுவாசிக்குறார், வேதாகமத்த நல்லா அறிஞ்சவர், வாழ்க்கையில் முதிர்ச்சியடஞ்சவர்ன்னும், என்னோட மனைவிய அழிவின் விளிம்புல இருந்து மீட்டெடுக்க அவர் சில புத்திசாலித்தனமான வழிகளக் கொண்டிருப்பாருன்னும் நெனச்சேன். அதனால, நான் போதகர் சென் அவங்ககிட்ட, “கொஞ்ச நாளாவே என்னோட மனைவி ஒரு புத்தகத்த வாசிக்குறாள். கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாருன்னு அவள் சொல்லுறாள், சுவிசேஷத்த சுறுசுறுப்பா பிரசங்கிக்கிறாள். அவள் நிறைய மாறிட்டாள். கடந்த நாட்கள்ல, கர்த்தர் மீதான அவளோட விசுவாசம் பலவீனமா இருந்துச்சு, அவள் வேதாகமத்த அதிகமா வாசிக்கலங்கறது உங்களுக்குத் தெரியும். அவள் ஏன் இப்போ ரொம்ப உறுதியாப் பின்தொடருறாள்ன்னு எனக்குத் தெரியல” அப்படின்னு சொன்னேன். அதக் கேட்டதும், “அவங்க ஆபத்துல இருக்குறாங்க! இப்போ, முழு மத உலகத்துலயும், கிழக்கத்திய மின்னல் மட்டுந்தான் கர்த்தரோட வருகைக்கு சாட்சியளிக்குது. அவங்க மட்டுந்தான் வேதாகமத்த வாசிக்காதவங்க. ஒருவேளை உங்க மனைவி கிழக்கத்திய மின்னல ஏத்துக்கொண்டிருக்கலாம். அவங்க கிழக்கத்திய மின்னலை விசுவாசிச்சா, அவங்க கர்த்தரோட இரட்சிப்ப இழந்துபோவாங்க. பரலோகராஜ்யத்துல அவங்களுக்கு எந்த இடமும் இருக்காது. அவங்கள மீட்டு வர அவசரமா ஏதாவது செய்யணும்” அப்படின்னு அவர் ஆணித்தரமா சொன்னாரு. அதக் கேட்டது எனக்குப் பயத்த உண்டாக்குச்சு. என்னோட மனைவியின் தவறான விசுவாசத்தால, கர்த்தர் அவளக் கைவிட்டுருவாரோன்னும், அவள் பேரழிவுகள்ல விழுந்துவிடுவாளோன்னும் நான் கவலப்பட்டேன். நான் என்ன செய்யணும்னு போதகர் சென் அவர்கள்கிட்ட கேட்டேன். அவர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, “நான் ஒரு போதகர், உங்கள விட எனக்கு வேதாகமம் நல்லாத் தெரியும். இன்னைக்கு ராத்திரி, உங்க மனைவி வாசிக்குற புத்தகத்தக் களவாடிருங்க, அத ஆராய்ஞ்சு பார்க்க நான் உங்களுக்கு உதவுவேன். ஆனா அவங்கள அதக் கண்டுபிடிக்கவிடாதீங்க” அப்படின்னு சொன்னாரு. அந்த நேரத்துல, போதகர் அதப் பகுப்பாய்வு செய்ய எனக்கு உதவுறது நல்லதுதான். அதன் மூலமா, அதில் என்ன எழுதப்பட்டிருக்குங்கறத நான் தெரிஞ்சுக்குவேன், என்னால ஓரளவு பகுத்தறிவயும் பெற முடியும். என்னோட மனைவியின் விசுவாசம் தவறா இருந்தா, சரியான நேரத்துல மனந்திரும்பும்படி அவளை வற்புறுத்தலாம் அப்படின்னு நான் நெனச்சேன். அந்த ராத்திரியிலயே, போதகர் சென் அவங்க வீட்டுக்கு ஆட்டுக்குட்டியானவரால் திறக்கப்பட்ட புஸ்தகத்த ரகசியமா கொண்டுவந்தேன். போதகர் சென் அவங்க புத்தகத்த எடுத்து, சாதாரணமா புரட்டிப் பார்த்துட்டு, பிறகு அத மேசையின் மேல விட்டு எறிஞ்சாரு. புத்தகத்தின் அட்டைய உத்துப் பார்த்து, “ஆமா, இது கிழக்கத்திய மின்னலோட புத்தகம்தான். உங்க மனைவி கிழக்கத்திய மின்னலை விசுவாசிகிறாங்கன்னு நான் உறுதியா நம்புறேன். அவங்களோட பிரசங்கம் ரொம்ப உயர்ந்தது, பெரும்பாலான ஜனங்களால அத மறுக்க முடியாது. உறுதியாப் பின்தொடருறவங்க, வேதாகமத்த நல்லா அறிஞ்சவங்க சிலர் அவங்களோட புத்தகங்கள வாசிச்ச பிறகு வேதாகமத்த வாசிப்பத முழுவதுமா நிறுத்திடுறாங்க. அவங்க வேதாகமத்த வாசிக்கலேன்னா, அவங்க இன்னும் கர்த்தரை விசுவாசிக்கிறாங்களா? உங்க மனைவி கிழக்கத்திய மின்னலால ஏமாத்தப்பட்டிருக்காங்க. மனந்திரும்பலேன்னா, அவங்க பரலோகராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள இழந்துபோயிருவாங்க” அப்படின்னு வெறுப்பு நெறஞ்சவரா சொன்னாரு. இதக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு, “வேதாகமத்தப் பத்தித் தெரியாதவங்களுக்கு பகுத்தறிவு இருக்காது, அதனால அவங்க ஏமாற்றப்படுறது இயல்பானதுதான். ஆனா பல வருஷஙகளா தலைவர்களாக இருந்து வேதாகமத்த நல்லா அறிஞ்சவங்க கிழக்கத்திய மின்னலை விசுவாசிக்குறாங்கன்னா, இந்த புத்தகத்துல ஏதாவது மறைபொருள் இருக்குதா? இல்லேன்னா, வேதாகமத்தப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க ஏன் அதுல ஈர்க்கப்படுறாங்க, கிழக்கத்திய மின்னலை விசுவாசிக்கத் தொடங்குறாங்க? எனக்கு ஒன்னுமே புரியல.” அதனால, நான் போதகர்கிட்ட, “நீங்க வேதாகமத்தப் பத்தி நிறைய புரிஞ்சுவச்சிருக்கீங்க. புத்தகத்தோட உள்ளடக்கத்தப் பார்த்துட்டு, அது என்ன சொல்லுதுங்கறதப் பத்தி எனக்குச் சொல்லுங்க. என்னோட மனைவியத் திரும்பிவரச் சொல்லி வற்புறுத்த நான் என்ன செய்யணும்?” அப்படின்னு கேட்டேன். போதகர் சென் அவர்கள், “நான் ஒரு போதகர், நான் வாழ்க்கையில முதிர்ச்சியடஞ்சிருக்கேன், அதனால நான் இந்தப் புத்தகத்த வாசிக்க வேண்டிய அவசியமில்ல. நாம கர்த்தரை விசுவாசிப்பதன் மூலமா இரட்சிக்கப்பட்டிருக்கோம், அவர் நம்மள தேவனோட ராஜ்யத்துக்குக் கூட்டிட்டுப் போகறதுக்காக நாம காத்திருக்கணும். உங்க மனைவி கிழக்கத்திய மின்னலை உங்களுக்கு பிரசங்கிச்சா, அத விசுவாசிக்காதீங்க. கிழக்கத்திய மின்னல் ஒரு நிதி மோசடி தவிர வேறல்ல. இந்த விஷயத்துல, நீங்க செய்யக்கூடிய ஒரே விஷயம் என்னான்னா, நீங்க அவங்களுக்கு அதிக பணம் கொடுக்காம இருங்க. உங்களோட எல்லா பணத்தயும் டெபாசிட் செய்யுங்கள், அவங்களக் கையாள அனுமதிக்காதீங்க, அவங்களோட ஒவ்வொரு அசைவயும் கண்காணியுங்க” அப்படின்னு ஆணித்தரமா சொன்னப்போ நான் அதிர்ச்சியடஞ்சேன். அந்த நேரத்துல, போதகர் என்னை விட அதிகமா அறிஞ்சிருப்பதாவும், அது என்னையப் பாதுகாப்பதற்காகதான்னும் நெனச்சேன், அதனால அவர் சொன்னபடியே செய்ய முடிவு செஞ்சேன். நான் வீட்டுக்கு வந்ததும், என்னோட மனைவி திரும்பி வரலன்னு நெனச்சேன் அதனால புத்தகத்த கவனமா அந்த இடத்துல திரும்ப வச்சேன், ஆனா நான் அதை வைக்கறதுக்கு முன்னாடியே, என்னோட மனைவி வேறு ஒரு அறையில இருந்து வெளிய வந்தாள். நான் அதிர்ச்சியடைஞ்சுட்டேன், அவ கவலையா என்கிட்ட, “என்னோட புத்தகத்த எடுத்தீங்களா?” அப்படின்னு என்கிட்ட கேட்டாள். நான் அதத் திருடியத அவள் கண்டுபிடிச்சிருவாளோன்னு பயந்து, “நான் அத எடுக்கல. நீ எப்பவுமே பொருட்கள இங்கயும் அங்கயும் போடுற. நான் அதக் கண்டுபிடிக்க உதவுறேன்” அப்படின்னு நான் பொய் சொன்னேன். அப்புறமா, நான் அறையில சுத்தி முத்திப் பார்த்து, கடைசியா புத்தகத்த எடுத்து அவகிட்ட கொடுத்து, “அது இங்கே இருக்குது. நீ எப்பவுமே பொருட்கள இங்கயும் அங்கயும் போடுற. பொருட்கள அந்தந்த இடத்துல நீ சரியா வைக்கணும்” அப்படின்னு சொன்னேன். என்னோட மனைவி என்னைய முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தாள், குற்ற உணர்வு என்னோட இருதயத்தைப் பற்றிப் பிடித்ததால, என்னோட முகம் சிவந்து போறதை உணர்ந்தேன். நல்லவேளையா, என்னோட மனைவி அதுக்கு மேல எதுவும் கேட்கல. புத்தகத்த மட்டும் எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டாள். இந்த நேரத்துல, கர்த்தராகிய இயேசு நம்மள நேர்மையான மனுஷர்களா இருக்கச் சொல்லுறாருங்கறத நான் நெனச்சுப் பார்த்தேன். “உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்” (மத்தேயு 5:37). ஆனா நான் என்ன செஞ்சிருந்தேன்? நான் கர்த்தரோட போதனைகளுக்கு எதிராவும் என்னோட மனசாட்சிக்கு எதிராவும் நடந்திருந்தேன், நான் ஒரு திருடனைப் போல செயல்பட்டிருந்தேன், ஆனா அவளைப் பாதுக்காக்கவே அப்படிச் செஞ்சேன்னு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன்.
அடுத்த நாள், நான் வங்கிக்குப் போனேன், எங்களோட எல்லா வங்கி புத்தகங்களுக்கும் கார்டுகளுக்கும் பின் நம்பர்கள மாத்தினேன், எங்களோட கூடுதல் பணம் எல்லாத்தயும் டெபாசிட் செஞ்சோம், அதனால எங்ககிட்ட சாப்பாடுக்குப் போதுமானது மட்டுமே இருந்துச்சு. எதிர்பாராத விதமா, என்னோட மனைவி இதக் கண்டுபிடிச்ச பிறகும் கூட, எதுவுமே சொல்லல. அவள் புத்தகத்த வாசிப்பதத் தவிர, அவள் வழக்கமா செய்ததப் போலவே அவளோட எல்லா வேலைகளயும் செஞ்சாள். அவள் எப்பவும்போலவே என்னைய இனிமையா நடத்தினாள். ஆனா நான் வெட்கமாவும் சங்கடமாவும் உணர்ந்தேன். நான் பல வருஷங்களா கர்த்தரை விசுவாசிச்சு வந்தேன், ஆனா இன்னும் என்னோட மனைவிய இப்படி இழிவான முறையில நடத்தினேன். ஒரு கிறிஸ்தவனா இப்படி நடந்துக்கக் கூடாது. என்னோட மனைவி புத்தகம் வாசிக்க ஆரம்பிச்சதுல இருந்து நிறைய மாறியிருந்தத உணர்ந்தேன். நான் அவள இப்படி நடத்திக்கிட்டிருந்தேன், அவள் கொஞ்சம் கூட கோபப்படல. புத்தகத்துல இருக்கற வார்த்தைகள்தான் அவளை மாத்துச்சா? நான் தவறு செஞ்சுக்கிட்டு இருந்தேனா? என்னோட மனைவி விசுவாசிச்ச இந்த கிழக்கத்திய மின்னல் உண்மையிலயே கர்த்தராகிய இயேசுவின் வருகையா இருக்க முடியுமா? நான் எல்லாத்தயும் கண்டுபிடிக்கணும்னு எனக்குத் தெரியும்.
ஒரு நாள் ராத்திரி, சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது, புத்தகத்த வாசிக்கும்படி என்னோட மனைவி என்னைய மறுபடியும் உற்சாகப்படுத்தி, அவள் இப்படி சொன்னாள், “கர்த்தரிடத்துல உள்ள விசுவாசத்தினால நாம இரட்சிக்கப்பட்டிருக்கறோம்ன்னும், அவர் வரும்போது அவர் நம்மள பரலோகராஜ்யத்திற்குக் கூட்டிட்டுப் போவாருன்னும் நீங்க சொல்றீங்க, ஆனா நம்ம அம்மாவயும் அண்ணியயும் பாருங்க, நம்மளப் பாருங்க, நாம கர்த்தரை பல வருஷங்களா விசுவாசிச்சு வர்றோம், ஆனாலும் எப்பவுமே நாம பகல்ல பாவம் செஞ்சு ராத்திரியில அறிக்கையிடுறோம். பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து நம்மால தப்பிக்க முடியல. பரிசுத்தம் இல்லாம கர்த்தரைப் பார்க்க முடியாதுன்னு வேதம் சொல்லுது. தேவன் பரிசுத்தமானவர், நாம இன்னும் அடிக்கடி பாவம் செஞ்சா, பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க நாம எப்படி தகுதி பெறுவோம்? இப்போ, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறாரு. ஜனங்கள பாவத்துல இருந்து முழுவதுமா சுத்திகரிச்சு, அவரோட ராஜ்யத்துக்குள்ள நம்மளக் கொண்டுவரும்படி, அவர் சத்தியத்த வெளிப்படுத்துறாரு, தேவனுடைய வீட்ல இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யுறாரு. பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியைய நாம ஏத்துக்கணும்.” என்னோட மனைவி சொன்னது எனக்கு ஓரளவு புரிஞ்சுச்சு. நாங்க இன்னும் பகல்ல பாவம் செஞ்சு ராத்திரியில அறிக்கையிடுற நிலையில வாழ்ந்தோம், எங்களால இன்னும் பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து தப்பிக்க முடியல. கர்த்தர் பரிசுத்தமானவர், அதனால நம்மளப் போன்ற அசுத்தமான, சீர்கெட்ட ஜனங்க பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியுமான்னு சொல்வது கடினம். இத உணர்ந்ததும் தலைய ஆட்டினேன். நான் எதிர்க்கலங்கறத என்னோட மனைவி பார்த்தாள், அடுத்த நாள் கர்த்தரோட வருகையப் பத்தி என்கிட்ட பேச ரெண்டு சகோதரிகள் வரட்டுமான்னு சந்தோஷமா கேட்டாள். நான் அவங்க சொல்றதக் கேட்க ஒத்துக்கிட்டேன். ஆனா வேதாகமத்தப் பத்தி எனக்குக் கொஞ்சம்தான் புரிஞ்சுதுங்கறது எனக்குத் தெரியும், போதகர் சென் அவர்களும் வந்து சகோதரிகள் சொல்றதப் புரிஞ்சுக்கவும் அவங்களோடு விவாதிக்கவும் எனக்கு உதவணும்னும், அதன் மூலமா, நான் பகுத்தறிவப் பெற்று, யாரோட வார்த்தைகள் வேதாகமத்தோடு ரொம்ப பொருந்துதுங்கறதப் பார்க்கலாம்ன்னும் நான் விரும்புனேன். அதனால, இதப் பத்தி போதகர் சென் அவர்கள்கிட்ட சொன்னேன்.
அடுத்த நாள் ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகு, எல்லாருமே வந்திருந்தாங்க. சகோதரிகள்ல ஒருத்தர் ஐக்கியங்கொண்டு, “கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாரு, அவர் சத்தியத்த வெளிப்படுத்துறாரு, ஜனங்கள நியாயந்தீர்த்து சுத்திகரிக்கும் கிரியைய செய்யுறாரு—” அப்படின்னு சொன்னாங்க. அவங்க சொல்லி முடிக்கறதுக்கு முன்னாடியே, போதகர் சென் அவர்கள் சத்தம்போட்டு, “கர்த்தர் திரும்பி வந்திருக்கார்ன்னு எந்த அடிப்படையில சொல்லுறீங்க? கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதன் மூலமா எங்களோட பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்குது. நாங்க கிருபையால இரட்சிக்கப்பட்டுருக்கோம். எங்களுக்கு இந்த நியாயத்தீர்ப்பின் கிரியை தேவையில்லை. நீங்க வேதாகமத்தப் புரிஞ்சுக்கறதே இல்ல!” அப்படின்னு கத்தினாரு. இன்னொரு சகோதரி போதகரிடத்துல, “சகோதரரே, இதப் பத்தி நாம சண்டைபோடுறதால சத்தியத்தப் பெற்றுக்க முடியாது. கர்த்தர் உண்மையிலயே திரும்பி வந்திருக்கிறார், திரும்பி வந்திருக்கிற கர்த்தர் வெளிப்படுத்துற சத்தியத்த நீங்க வாசிச்சா, அவர் மெய்யானவரா இல்லையாங்கறது உங்களுக்குத் தெரியும்” அப்படின்னு சொன்னாங்க. போதகர் சென் அவர்கள் பொறுமையிழந்து, “நான் ஏன் வாசிக்கணும்? கர்த்தர் திரும்பி வரல. நீங்க வேதாகமத்தப் புரிஞ்சுக்கவே இல்ல, பிறகு ஏன் சுவிசேஷத்த பிரசங்கிக்கிறீங்க? வேதாகமத்தப் பத்தி உங்கள விட எனக்கு அதிகமா தெரியும், இத நான் கேட்கமாட்டேன்” அப்படின்னு சொன்னாரு. கடைசி நாட்களின் தேவனோட கிரியையப் பத்தி பேசுறதுக்கு ரெண்டு சகோதரிகளும் வேதாகமத்தப் பயன்படுத்தினாங்க. ஆனா போதகர் சென் அவர்கள் கேட்கவே இல்ல. ரெண்டு சகோதரிகளும் அங்கிருந்து வெளியேறுவதத் தவிர வேறு வழியில்லங்கற அளவுக்கு, அவங்களப் பேசவிடாம தொடர்ந்து குறுக்கிட்டுக்கிட்டே இருந்தாரு. அதுக்கப்புறமா அவர் என்னோட மனைவிகிட்ட, “அவங்க சொல்றதக் கேட்காதீங்க. நீங்க வேதாகமத்தப் புரிஞ்சுக்கல, அதனால ஏமாந்துபோகாதீங்க, எதிர்காலத்துல வேதாகமத்த அதிகமா வாசிங்க” அப்படின்னு சொன்னாரு. அதே மாதிரி, பதினைஞ்சு நிமிஷத்துக்குள்ளயே, அவங்க எல்லாருமே அங்க இருந்து போயிட்டாங்க. நான் ரொம்ப ஏமாற்றமடஞ்சேன். ஒரு திருச்சபையின் போதகரா, கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாருன்னு யாராவது சாட்சி கொடுத்தா, அவர் தேடி ஆராயணும், சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையின் ஜனங்களோடு விவாதம் செய்யணும். இது உண்மையிலயே கர்த்தரோட வருகைன்னா, நாம அத சேர்ந்து ஏத்துக்கணும். அது அப்படி இல்லேன்னா, நாம கொஞ்சம பகுத்தறிவப் பெறுவோம். அது எல்லோருக்கும் நல்லதாக இருக்கும். போதகர் சென் ஏன் இவ்வளவு அகந்தையுள்ளவரா இருந்தாரு? அவர் உண்மையிலயே வேதாகமத்தப் புரிஞ்சு வச்சிருந்தா, அவர் அவங்களோடு சரியா விவாதம் செஞ்சிருந்திருக்கணும். அன்னைக்கு சாயங்காலம் நான் ஏதாவது புரிஞ்சுக்குவேன்னு நெனச்சேன். நான் எவ்வளவு தவறு செஞ்சேன்ங்கறதப் பார்த்து நான் அதிர்ச்சியடஞ்சேன், போதகர் சென் அவர்கள் காரியங்களக் கையாண்ட விதத்தப் பார்த்து நான் கவலப்பட்டேன். ஆனா அவரோட ஐக்கியம் வேதாகமத்த அடிப்படையாகக் கொண்டிருந்துச்சு, அதோடு, ரெண்டு சகோதரிகளும் வேதாகமத்துக்கு வெளியில இருந்து எதையும் ஐக்கியங்கொள்ளல. ரெண்டு பேருமே வேதாகமத்தயே அடிப்படையா கொண்டிருந்தாங்க, அதனால அவங்களோட விளக்கங்களும் புரிதலும் ஏன் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு? எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு.
அதுக்கப்புறமா, நானும் என்னோட மனைவியும் சொந்த ஊருக்குப் போனோம், உள்ளூர் திருச்சபையச் சேர்ந்த போதகர் லியு அவர்களும் சக ஊழியர் லியாங் அவர்களும், கிழக்கத்திய மின்னலை விசுவாசிப்பத நிறுத்தச் சொல்லி என்னோட மனைவிய வற்புறுத்துவதுக்காக என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவள் கேட்கலங்கற பார்த்தப்போ, சக ஊழியர் லியாங் அவர்கள் கோபமா என்னோட மனைவிய சுட்டிக்காட்டி அவளத் திட்டினாரு, அவளை பயமுறுத்துறதுக்காக கிழக்கத்திய மின்னலை கண்டனம் செஞ்சு பல விஷயங்கள சொன்னாரு. “இவர் இன்னும் கர்த்தரை நம்புற ஒரு விசுவாசிதானா? என்னோட மனைவி செஞ்சதெல்லாம் கிழக்கத்திய மின்னலை விசுவாசிப்பதுதான். கர்த்தர் கற்பிப்பது போல நீங்க அன்பினால அவளுக்கு உதவி செஞ்சு ஆதரவளிக்கணும். அவள் முகத்துக்கு நேரா உங்க விரலை ஆட்டக் கூடாது” அப்படின்னு நான் நெனச்சேன். நான் கோபமா இருந்தேன், நான் அவரிடத்துல நியாயம் கேட்க விரும்புனேன், ஆனா அப்போ, போதகர் லியு அவங்க என்னை கதவுக்கு வெளிய இழுத்து, “நீங்க உங்க மனைவியை வற்புறுத்தணும். அவங்க ரொம்ப காலமா கிழக்கத்திய மின்னலை விசுவாசிக்கல. அதனால அவங்ககிட்ட தன்னோட பாவங்கள கர்த்தரிடத்துல அறிக்கையிட்டு மனந்திரும்பச் சொல்லுங்க. அவங்க கேட்கலேன்னா, தேவைப்பட்டா, நீங்க போலீசாரயயும் கூட கூப்பிடலாம்” அப்படின்னு என்கிட்ட சொன்னாரு. அந்த நேரத்துல, போதகர் லியு இப்படிச் சொன்னது தப்புங்கறத நான் உணர்ந்தேன், ஆனா, அவளத் தடுக்க வேறு வழியில்லன்னும் நான் உணர்ந்தேன். அவங்க போனதுக்கப்புறமா, என்னோட மனைவி என்கிட்ட, “நான் கர்த்தரை விசுவாசிச்சப்போ, நான் செயலற்றவளாவும் பலவீனமாவும் இருந்தேன், என்னோட விசுவாசம் குன்றிப்போனதா இருந்துச்சு, ஆனா போதகர்களோ மூப்பர்களோ யாரும் எனக்கு உதவவோ என்னைய ஆதரிக்கவோ வரல. இப்போ, நான் கர்த்தரை வரவேற்றிருக்கிறேன், அவங்க எவ்வளவு கடுமையா இருக்காங்க அப்படிங்கறத உங்களால பார்க்க முடியுது. அவங்க என்னோட வாழ்க்கையப் பத்தி கவலைப்படுறதே இல்லன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். அதனால நான் தொடர்ந்து அவங்களுக்கு காணிக்கைகளக் கொடுக்கும்படிக்கு, அவங்க என்னைய மறுபடியும் மதத்துக்குள்ள இழுக்க விரும்புறாங்க, அவங்களால முடியாதப்போ, அவங்களோட முழு தன்மையும் மாறுது. அவங்க என்னோட முகத்துக்கு நேரா விரல நீட்டி, என்னையத் திட்டி, அவதூறான வார்த்தைகளச் சொன்னாங்க. இது கர்த்தரோட போதனைகளுக்கு ஒத்துப்போகுதா? அவங்க கர்த்தரை விசுவாசிபவங்களப் போல நடந்துக்கறாங்களா? அவங்க சொல்றதக் கண்மூடித்தனமா கேட்காம, அவங்களப் பத்திய பகுத்தறிவ நீங்க பெற்றுக்கணும். யூத மதத்தின் விசுவாசிகள் கர்த்தராகிய இயேசுவைக் கண்டனம் செய்வதுல பரிசேயர்களக் கண்மூடித்தனமா பின்பற்றினாங்க. கடைசியில, அவங்க கர்த்தரை சிலுவையில அறைஞ்சு, தேவனோட மனநிலையப் புண்படுத்தினாங்க” அப்படின்னு சொன்னாள். என்னோட மனைவி சொன்னதக் கேட்டதுக்கப்புறமா, போதகர் லியூ அவர்கள் என்னோட மனைவியத் திரும்பி வர வைக்க வந்ததா சொன்னது எனக்கு நினைவுக்கு வந்துச்சு, ஆனா அவங்க அன்பான ஆதரவான ஒரு வார்த்த கூட சொல்லல. அவங்க சொன்னதெல்லாம் அச்சுறுத்தலும், மிரட்டலும், கண்டனம் செய்யறதுமாதான் இருந்துச்சு, அதோடு, என்னோட மனைவிய கைது செய்ய போலீசாரைக் கூப்பிடச் சொல்லியும் என்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. கர்த்தரை விசுவாசிப்பவங்க இதையெல்லாம் சொல்லுவாங்களா? இது என்னோட மனைவிய குழிக்குள்ள தள்ளி விடாதா? நான் கோபமடஞ்சேன், அதுக்கப்புறமா, போதகர்கள மறுபடியும் நம்பத் துணியல.
இந்த சம்பவத்துக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிக்க என்னோட மனைவி என்னை அடிக்கடி வற்புறுத்தினாள். நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன். இந்தப் புத்தகத்துல என்ன இருக்குதுன்னு பார்க்க விரும்புனேன் அது என் மனைவியோட விசுவாசத்த ரொம்ப உறுதியாக்குச்சு, அத வாசிக்க என்னை வற்புறுத்துவதுக்கு அவளை ரொம்ப உறுதியா இருக்க வச்சுச்து ஆனா என்னோட மனப்பான்மைய என்னோட மனைவி தெரிஞ்சுக்கறத நான் விரும்பல, அதனால அவகிட்ட சொல்ல நான் சங்கடப்பட்டேன். ஒரு நாள், என்னோட மனைவி வீட்ல இல்லாதப்போ, அவளோட புத்தகத்த எடுத்து வாசிச்சேன். முதல் அத்தியாயத்தத் திறந்து, “முகவுரை” அப்படிங்கற தலைப்ப வாசிச்சேன். புத்தகத்துல நான் வாசிச்சது இதோ: “அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், ‘தேவன்’ என்ற வார்த்தையையும் ‘தேவனின் கிரியை’ போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்’ என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்’ என்று அழைக்கலாம்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும்). நான் இந்த நிலைய அடஞ்சப்போ, இப்படிப்பட்ட வார்த்தைகள எந்த மனுஷனாலும் சொல்ல முடியாதுங்கறதப்போல நான் உணர்ந்தேன். தேவன் மீதான நம்மளோட விசுவாசத்துல, எல்லாமே தேவனால சிருஷ்டிக்கப்பட்டவைன்னு விசுவாசிப்பதத் தாண்டி, நாம தேவனோட வார்த்தைகளயும் கிரியைகளயும் அனுபவிக்கணும், நம்மளோட சீர்கெட்ட மனநிலைகளத் தூக்கி எறிஞ்சிட்டு, தேவனை அறிஞ்சுக்கணும். இந்த வார்த்தைகள் தேவன் மீது விசுவாசம் வைக்குறதுன்னா என்னங்கறதத் தெளிவாக்குச்சு. நான் கர்த்தரை விசுவாசிச்சு வந்த இத்தனை வருஷத்துல, வேதாகமத்த வாசிக்கணும், ஜெபிக்கணும், பிரசங்கங்களக் கேட்கணும் அப்படிங்கறது மட்டுந்தான் எனக்குத் தெரியும். போதகர்கள் என்ன சொன்னாலும் நான் நம்பினேன், எல்லாத்துலயும் போதகர்களின் பேச்சக் கேட்டேன். இத எப்படி தேவன் மீதான விசுவாசம்ன்னு சொல்ல முடியும்? இது போதகர்கள விசுவாசிப்பதா இருந்துச்சு! இந்த வார்த்தைகள நான் எவ்வளவு அதிகமா வாசிச்சேனோ, அவ்வளவு அதிகமா என்னோட இருதயம் பிரகாசமா மாறுச்சு, அவ்வளவு அதிகமா நான் அதை வாசிக்க விரும்புனேன். என்னோட மனைவி வீட்ல இல்லாதபோதெல்லாம், புத்தகத்த வாசிக்க ரகசியமாக எடுத்தேன்.
ஒரு நாள், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இந்த பத்திய நான் வாசிச்சேன்: “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). இந்த வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, நான் உடனடியா போதகர்களயும் மூப்பர்களயும் நெனச்சுப் பார்த்தேன். அவங்க வேதாகமத்த நல்லா அறிஞ்சவங்களாவும், வெளித்தோற்றத்துல தாழ்மையாவும், பொறுமையாவும், அன்பானவங்களாவும் இருந்தாங்க, கர்த்தருடைய வருகைக்காக விழித்திருக்கவும், காத்திருக்கவும் அடிக்கடி எங்களுக்குச் சொன்னாங்க, ஆனா ஒருத்தர் உண்மையிலயே கர்த்தரின் வருகைக்கு சாட்சியளிச்ச உடனே, தேடி ஆராயணும்ங்கற ஆசை அவங்களுக்குக் கொஞ்சம் கூட இல்ல. போதகர் சென் அவர்கள் புத்தகத்த சரிபார்க்க எனக்கு உதவ விரும்புவதா சொல்லி, அதக் களவாடச் சொன்னாரு, அப்படின்னா, அவர் அதன் உள்ளடக்கங்கள வாசிச்சிருக்கணும்ங்கறது தெளிவா தெரியுது, ஆனா அதப் பார்க்காம கூட, அவர் என்னோட மனைவிய தவறு செஞ்சதுக்காக உடனடியா கண்டனம் செஞ்சாரு. சக ஊழியர் லியாங் அவர்கள் என்னோட மனைவியத் திட்டினாரு, கண்டனம் செய்யுற வார்த்தைகளால அச்சுறுத்தி மிரட்டினாரு, போதகர் லியு அவர்கள் என்கிட்ட போலீசாரக் கூப்பிட்டு, என்னோட மனைவியக் காட்டிக்கொடுத்து, அவளை ஒப்படைக்கச் சொன்னாரு. தேவனை விசுவாசிக்கறவங்களால எப்படி இப்படிச் செய்ய முடியும்? சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலயே கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையா இருந்து, ஆனா போதகர்கள், தேடுவதுக்கும் ஆராய்ந்து பார்ப்பதுக்கும் எங்கள வழிநடத்துவதுக்குப் பதிலா, எங்கள தடுக்க தங்களால முடிஞ்சவரை முயற்சி செஞ்சாங்க, என்னோட மனைவியக் கைது செய்ய நான் போலீசாரக் கூப்பிடணும்னு கூட விரும்புனாங்க. இந்த வார்த்தைகள் விவரிக்கிறதப் போலவே, மெய்யான வழிய ஆராய்ந்து பார்ப்பதுல இருந்து நம்மளத் தடுத்த முட்டுக்கட்டைகளும் தடைகளுமாய் அவங்க இல்லையா? தேவன் மீதான விசுவாசம் அப்படிங்கற தலைப்பின் கீழ தேவனை எதிர்த்தவங்க இல்லையா? கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, எப்படி பரிசேயர்களும் தேடி ஆராய்ந்து பார்க்காம, அதுக்குப் பதிலா அவரை எதிர்க்கவும் கண்டனம் செய்யவும் தங்களால முடிஞ்ச அளவு முயற்சி செஞ்சாங்கங்கறதயும். கடைசியில, கர்த்தர் சிலுவையில அறையப்பட்டாருங்கறதயும் நான் நெனச்சுப் பார்த்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலயே கர்த்தராகிய இயேசுவின் வருகையா இருந்தா, பரிசேயர்கள் தங்களோட காலத்துல செஞ்சதயே போதகர்களும் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. போதகர்களும் மூப்பர்களும் கர்த்தரை எதிர்த்தவங்களா இருக்கலாம்ன்னு எனக்குத் தோனுச்சு. அந்த நேரத்துல, “இனிமேல் நான் போதகர்களோட பேச்சக் கேட்க முடியாது. அவர்தான் கர்த்தரின் வருகையான்னு பார்க்க, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் கவனமா ஆராயணும்” அப்படின்னு நான் நெனச்சேன்.
அதுக்கப்புறமா, என்னோட மனைவி, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில இருந்து என்னோடு ஐக்கியங்கொள்ள சகோதரர் சௌ சுவான்யாங் அவர்களை வரவழைத்தாள். நான் அவரிடத்துல, “வேதாகமம் சொல்லுது, ‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்’ (ரோமர் 10:10). நாம கர்த்தரை விசுவாசிச்சு, இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், நியாயத்தீர்ப்பு கிரியையின் ஒரு கட்டத்த செய்ய ஏன் இன்னும் தேவன் தேவை?” அப்படின்னு கேட்டேன். சுவான்யாங் அவங்க ஐக்கியங்கொண்டு, “கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்படுவதன் அர்த்தம் என்ன? உண்மையில, ‘இரட்சிப்பு’ அப்படிங்கறது ஜனங்கள் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதயும், கர்த்தரிடம் ஜெபிப்பதயும், தங்கள் பாவங்கள அறிக்கையிடுவதையும் குறிக்குது. அவங்களோட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, அவங்க நியாயப்பிரமாணத்தால கண்டனம் செய்யப்படுவதில்ல, கர்த்தரால அருளப்பட்ட சமாதானம், சந்தோஷம், அபரிவிதமான கிருபைய அவங்க அனுபவிக்கிறாங்க. கிருபையின் காலத்துல இரட்சிக்கப்படுவதுங்கறதுக்கான அர்த்தம் இதுதான். ஆனா நம்மளோட பாவ சுபாவம் இன்னும் நமக்குள்ளதான் இருக்குது, நாம இன்னும் நம்மளோட பாவத்தத் தூக்கிப் போடல. தேவன் பரிசுத்தமானவர், தேவனோட ராஜ்யம் பரிசுத்தமான இடம், இன்னும் பாவம் செஞ்சா அவரை எதிர்க்கக்கூடியவங்கள அவரோட ராஜ்யத்துக்குள்ள கூட்டிக்கிட்டு வர்றது தேவனால கூடாத காரியம். அதனால, கடைசி நாட்கள்ல, தேவன் ஜனங்கள முழுமையா சுத்திகரிப்பதுக்காக நியாயத்தீர்ப்பு கிரியையின் கட்டத்த செய்யுறாரு. இப்படி, ஜனங்கள் தேவனோட ராஜ்யத்துல பிரவேசிக்கத் தகுதியுடையவங்களாகறாங்க” அப்படின்னு சொன்னாரு. கடைசி நாட்களின் தேவனோட கிரியை ரொம்ப காலத்துக்கு முன்னாடியே வேதாகமத்துல தீர்க்கதரிசனமா சொல்லப்பட்டிருக்குதுன்னும் சுவான்யாங் சொன்னாரு. கர்த்தராகிய இயேசு சொன்னதப் போலவே, “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:12-13). “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்” (யோவான் 12:48). அதோடு 1 பேதுரு 4:17 சொல்லுது, “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” “இதுல இருந்து, கர்த்தர் கடைசி நாட்கள்ல திரும்பி வரும்போது இன்னும் சத்தியத்த வெளிப்படுத்துவாருங்கறதயும், அதோடு கூட, ஜனங்கள நியாயந்தீர்க்குறதும் சுத்திகரிக்கறதுமான கிரியைய செய்யுறாருங்கறதயும், நியாயத்தீர்ப்பு தேவனோட வீட்ல இருந்து தொடங்கும் அப்படிங்கறதயும் நாம பார்க்கலாம். சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியை இந்தத் தீர்க்கதரிசனங்கள நிறைவேத்துது” அப்படின்னு அவர் சொன்னாரு. அடுத்து, தேவனோட வார்த்தையின் ஒரு வாசிப்புக் காணொளியை சுவான்யாங் அவர்கள் எனக்குக் காட்டினாரு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “உங்களைப் போன்ற ஒரு பாவி, இப்போது மீட்கப்பட்டு, மாற்றப்படவில்லை அல்லது தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை என்றால், நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல முடியுமா? நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், இயேசுவால் இரட்சிக்கப்பட்டாய் என்பதும், தேவனின் இரட்சிப்பின் காரணமாக நீ பாவியாகக் கருதப்படுவதில்லை என்பதும் உண்மைதான், ஆனால் இது நீ பாவமற்றவன் மற்றும் தூய்மையுள்ளவன் என்பதை நிரூபிக்காது. நீ மாற்றப்பட்டிருக்காவிட்டால், நீ எவ்வாறு புனிதராக இருக்க முடியும்? நீ உள்ளுக்குள் தூய்மையற்றவனாகவும், சுயநலவாதியாவும், இழிவானவனாகவும் இருக்கிறாய், ஆனாலும் நீ இன்னும் இயேசுவோடு இறங்கி வர வேண்டும் என்று விரும்புகிறாய்; உன்னால் எப்படி மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்! தேவன் மீதான உன் விசுவாசத்தின் ஒரு படியை நீ தவறவிட்டாய். நீ வெறுமனே மீட்கப்பட்டிருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை. நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல, உன்னை மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் கிரியையை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். நீ மீட்கப்பட்டு மட்டும் இருந்தால், நீ புனிதத்தை அடைந்திட முடியாதவனாய் இருப்பாய். இந்த வழியில் நீ தேவனின் நன்மையான ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க தகுதியற்றவனாக இருப்பாய், ஏனென்றால் மனிதனை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் நீ ஒரு படி தவறவிட்டுவிட்டாய், இது மாற்றுவதற்கும் பரிபூரணாமாக்குவதற்கும் முக்கிய படியாகும். நீ இப்போதுதான் மீட்கப்பட்டிருக்கிற ஒரு பாவியாவாய், ஆகையால் தேவனின் சுதந்தரத்தை நேரடியாகச் சுதந்தரிக்க முடியாது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து”). “மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). சுவான்யாங் அவர்கள் ஐக்கியங்கொண்டு, “சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்பத் தெளிவா இருக்குது. கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய மட்டுந்தான் செஞ்சாரு. அவர் மனிதகுலத்தப் பாவத்துல இருந்து முழுமையா இரட்சிக்கல. நாம கர்த்தரை விசுவாசிச்சாலும், நம்மளோட பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், நம்மளோட பாவ சுபாவம் இன்னும் நமக்குள்ளதான் இருக்குது, நம்மால பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து தப்பிக்க முடியல. கர்த்தர் மேல இத்தனை வருஷமா விசுவாசம் வச்சிருந்தும், நாம அடிக்கடி பொய் சொல்லியிக்கோம், ஏமாத்தியிருக்கோம், நாம அகந்தையுள்ளவங்களாவும், சுயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவங்களாவும், பொறாமை கொண்டவங்களாவும், சண்டைபோடத் தயாரா இருப்பவங்களாவும் இருக்கறோம். நாம கர்த்தருக்காகக் கீழ்ப்படுத்துவதும் ஒப்புக்கொடுப்பதும் தேவனோட ஆசீர்வாதங்கள அதுக்கு ஈடா தேவனோடு பரிவர்த்தனை செய்யறதுக்காகத்தான், சோதனைகளயும் உபத்திரவங்களயும் சந்திக்கும்போது, நாம இன்னும் கர்த்தரை எதிர்க்கறோம், நியாயந்தீர்க்கறோம், அவருக்குத் துரோகம் செய்யுறோம், இன்னும் நிறைய காரியங்கள செய்யுறோம். அடிக்கடி பாவத்துல வாழுற, தேவனை எதிர்க்குற, நியாயந்தீர்க்குற நம்மளப் போன்ற ஜனங்களப் பொறுத்தவரையில, தேவனோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க நம்மால எப்படி தகுதிபெற முடியும்? கடைசி நாட்கள்ல, மனிதகுலத்த இரட்சிப்பதுக்கான தேவனோட நிர்வாகத் திட்டத்தின் அடிப்படையிலயும், சீர்கேடு நெறஞ்ச மனிதகுலத்தோட தேவைகள், மற்றும் கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணியின் அடிப்படையிலயும், ஜனங்கள முழுமையாக சுத்திகரிக்கவும் மாற்றவும், பாவத்துல இருந்து ஜனங்கள இரட்சித்து, பரலோக ராஜ்யத்துல சேர்க்கவும் சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்த வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யுறாரு. கர்த்தராகிய இயேசுவின் மீட்புப் பணிய மட்டுமே நாம ஏத்துக்கிட்டா, நம்மளோட சாத்தானிய மனநிலைகள மாத்துறது சாத்தியமில்ல, நாம என்றென்றைக்கும் பாவத்துலயும் பாவத்தின் அடிமைத்தனத்துலயும் வாழுறோம், நாம பரலோக ராஜ்யத்துல பிரவேசிக்க தகுதியற்றவங்களா இருக்கறோம். அதனாலதான் சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியையயும் சிட்சையயும் நாம ஏத்துக்கணும். மனநிலை மாற்றத்துக்கான பாதைய புரிஞ்சுக்கணும், நம்மளேட சீர்கெட்ட மனநிலைகளக் விட்டுட்டு, தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு பயப்படுறவங்களா மாறணும். அப்பத்தான் நாம உண்மையிலயே தேவனால இரட்சிக்கப்பட முடியும்” அப்படின்னு சொன்னாரு.
அவரோட ஐக்கியத்தக் கேட்ட பிறகு, என்னோட இருதயம் பிரகாசமடஞ்சுச்சு. மீட்கப்படுவதுங்கறது பாவ மன்னிப்பு மட்டுந்தான். நம்மால பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்ன்னு அர்த்தமல்ல. நான் பத்து வருஷங்களுக்கும் மேலா விசுவாசிச்சு வந்தேன், நான் அடிக்கடி ஜெபிச்சேன், என்னோட பாவங்கள அறிக்கையிட்டேன், தேவனிடத்துல மன்னிப்பு கேட்டேன், ஆனா என்னோட சீர்கெட்ட மனநிலைகள் மாறவே இல்ல. போதகர் சென், போதகர் லியு, மற்றும் மத்தவங்க எல்லாருமே, பல வருஷங்களா கர்த்தர் மீது விசுவாசம் வச்சிருந்தும் கூட, கர்த்தர் திரும்பி வந்திருப்பதப் பத்திய செய்திகளக் கேள்விப்பட்டபோது, தேடவோ ஆராய்ந்து பார்க்கவோ இல்ல, மத்த விசுவாசிகளயும் மெய்யான வழிய ஆராய்வதத் தடுத்தாங்க, அத எதிர்த்து கண்டனம் செஞ்சாங்க. போலீசாரக் கூப்பிட்டு என்னோட மனைவியக் கைது செய்யும்படி அவங்க என்னைய உற்சாகப்படுத்தினாங்க. இன்னும் பாவம் செஞ்சு தேவனை எதிர்க்கக் கூடியவங்களால எப்படி பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்? இத நெனச்சுக்கிட்டு, நான் சுவான்யாங் அவர்களிடத்துல, “நாம இன்னும் நம்மளோட பாவங்கள விட்டுவிடல, அதனால, சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியைய நாம உண்மையிலயே ஏத்துக்கணும்” அப்படின்னு சொன்னேன். அடுத்து, சர்வவல்லமையுள்ள தேவன் நியாயத்தீர்ப்பு கிரியைய எப்படிச் செய்யுறாருன்னு அவரிடத்துல கேட்டேன், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இன்னொரு பத்திய அவர் எனக்காக வாசிச்சாரு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). சுவான்யாங் அவர்கள் ஐக்கியங்கொண்டு, “சர்வவல்லமையுள்ள தேவன் விஷயங்கள ரொம்ப தெளிவா சொல்லுறாரு. தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியையானது உண்மையிலயே தேவன் தமது சத்தியத்தயும், வழியயும் ஜீவனையும் ஜனங்களுக்கு வெளிப்படுத்துவதா இருக்குது. கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்தின் எல்லா அம்சங்களயும், தேவனோட நீதியும் மகத்துவமுமான மனநிலையோடு கூட வெளிப்படுத்துறாரு, அவர் ஜனங்களோட சாத்தானிய சுபாவங்கள நியாயந்தீர்த்து அம்பலப்படுத்துறாரு, ஜனங்களோட வார்த்தைகளயும் செயல்களயும் பகுத்து அறிகிறாரு, அதோடு, தேவனை விசுவாசிப்பதுல நமக்கு இருக்கிற பல்வேறு கருத்துகளயும் தவறான நோக்கங்களயும் ஒவ்வொன்னா வெளிப்படுத்துறாரு, நம்மளோட அகந்தையும், வஞ்சகமும் பிடிவாதமுமான சாத்தானிய மனநிலைகளயும், நம்மளோட இருதயங்கள்ல ஆழமா மறைந்திருக்கும் எண்ணங்களயும் யோசனைகளயும் கூட அவர் வெளிப்படுத்துறாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நாம வாசிக்கும்போது, தேவன் நம்மள நேருக்கு நேர் நியாயந்தீர்த்து அம்பலப்படுத்துவதப் போல இருக்குது. நம்மளோட சாத்தானிய சுபாவத்த நாம உணருறோம், சாத்தானால ஏற்பட்ட நமது சீர்கேடுகளப் பத்திய உண்மையப் பார்க்கறோம், ஜனங்களால எந்தக் குற்றத்தயும் பொறுத்துக்கொள்ளாத தேவனோட நீதியுள்ள மனநிலையப் பத்திக் கொஞ்சம் புரிதலைப் பெற்றுக்கறோம், நம்மளோட இருதயங்கள்ல தேவனுக்கு பயப்படும் பயத்தைக் கொண்டிருக்கறோம், நம்மள நாமே வெறுக்கக் கூடியவங்களாகவும், இருதயத்திலயிருந்து மனந்திரும்பக் கூடியவங்களாவும் இருக்கறோம், உண்மையான மனந்திரும்புதலப் பெற்று, படிப்படியா நம்மளோட சீர்கெட்ட மனநிலைகள மாத்திக்கறோம்” அப்படின்னு சொன்னாரு. தேவனோட கிரியை ரொம்ப நடைமுறைக்குரியது! கடந்த காலத்துல, நான் தேவனோட கிரியைய ரொம்ப இயற்கைக்கு அப்பாற்பட்டதாகவும் அதரிசனமானதாகவும் கற்பனை செஞ்சேன். நான் கர்த்தரை விசுவாசிச்சவுடனே, நான் இரட்சிக்கப்பட்டேன்னும், என்னால பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்னும் நெனச்சேன். இது தேவனோட கிரியை பத்தின உண்மைகளோடு முற்றிலுமா முரண்பட்டதா இருக்குது. இத நான் உணர்ந்தப்போ, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கறத நான் உறுதியா நம்புனேன், கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன். நான் போதகர்களிடத்துல திரும்பிப் போகலங்கறத நெனச்சு சந்தோஷப்படுறேன். திரும்பிப் பார்க்குறப்போ, நான் எப்படி என்னோட சொந்த எண்ணங்களயும் கற்பனைகளயும் பிடிச்சுக்கிட்டு இருந்தேன்ங்கறதயும், கர்த்தரோட சத்தத்தக் கேட்கவும், கர்த்தரை வரவேற்கவும் மறுத்து, என்னோட மனைவியத் தடுத்தேன்ங்கறதயும் நான் யோசிக்குறேன். நான் ரொம்ப அறியாமையுள்ளவனாவும் குருடனாவும் இருந்தேன், அத நினைக்கும்போது நான் ஆழ்ந்த வருத்தம் அடையுறேன். ஆனா, என் மேல இரக்கமா இருந்து, என்னை அவருக்கு முன்பாக படிப்படியாகக் கொண்டுவந்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நான் இன்னும் அதிக நன்றியுள்ளவனா இருக்குறேன், அதனால, என்னால கடைசில தேவனோட சத்தத்தக் கேட்டு கர்த்தரை வரவேற்க முடிஞ்சுச்சு.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?