தேவனின் தோன்றலை நான் கண்டேன்

ஜனவரி 7, 2023

நான் கொரிய பிரஸ்பிட்டீரியன் சபயச் சார்ந்தவனா இருந்தேன். என் மகளுக்கு வியாதி வந்தப்ப என் குடுமப்த்தில எல்லாரும் விசுவாசிங்க ஆனோம். அதுக்குப் பிறகு, அவ நாளுக்கு நாள் சுகமடஞ்சிக்கிட்டு வந்தா. நான் கர்த்தராகிய இயேசுவின் இரக்கத்துக்காக நம்பமுடியாத அளவுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன். அப்போதில இருந்து நான் உண்மையா கர்த்தரப் பின்பற்றி, அவருக்குத் தேவயான, அவருக்கு மகிழ்ச்சிய கொடுக்கிற வகயான நபரா இருக்க கடுமய பாடுபடணும்னு உறுதி எடுத்தேன். வேலையில எவ்வளவு தூரத்துக்கு ஈடுபட்டிருந்தாலும் நான் சப ஆராதனய ஒருபோதும் தவறவிட்டதே இல்ல, நான் எப்பவும் தர்மமும் காணிக்கயும் செலுத்தி சப செயல்பாடுகள்ல தீவிரமா பங்கெடுப்பேன். பெரும்பாலும் வேதத்த வாசிக்கிறதிலயும் சப செயல்பாடுகள்ல ஈடுபடுறதிலயும் என் நேரம் செலவாச்சி, குடும்பத்தார், நண்பர்கள், கூட வேல பாப்பவங்க போன்றவங்க ஏற்பாடுற செய்ற இரவு உணவுக்கோ விருந்துங்களுக்கோ போறதே இல்ல. அதுக்காக அவங்க என் மேல வெறுப்படஞ்சாங்க. ஒரு விசுவாசி ஆன பிறகு மது குடிக்கறதயும் புக பிடிக்கிறதயும் நிறுத்தி அவங்களோட விருந்துகளுக்குப் போகாததனால் என்னுடய சில நண்பர்கள் கிண்டல் பண்ணி, “நீ சபைக்கு போறத அதிகம விரும்புற, ‘ஒவ்வொரு நாளும் சபைக்குப் போறதனால உனக்கு என்ன கிடைக்குது? உன்னுடய இந்த விசுவாசத்தின் நோக்கம் என்ன?’ அப்படின்னு எங்கிட்ட சொல்லச் சொன்னாங்க.” உண்மயச் சொல்லப் போனா, சரமாரியா கேளிவிக்கு மேல் கேள்வியா கேட்டப்போ, எனக்கு என்ன சொல்றதுன்னு உண்மயிலேயே புரியல. ஆனா அவங்களுடய கேள்விகள்னாலதான் நான் உண்மயிலேயே சிந்திக்க ஆரம்பிச்சேன்: உண்மயிலேயே என்னுடய விசுவாசத்தின் நோக்கம் என்ன? என்னுடய மகள குணமாக்க, அல்லது என்னுடய குடும்பத்த நல்லா வைக்க தேவன்கிட்ட கேக்கவா? வெறுமனே வேதத்த படிக்கிறதும் சபைக்கு போறதுமா விசுவாசம்? எனக்கு உண்மையிலே தெரியல. இந்தக் கேள்விகள நான் போதகர்கள்கிட்ட கேட்டேன். அவங்க சொன்ன பதில் எல்லாம் ஒரே மாதிரிதான் இருந்திச்சி: கர்த்தருடய ரட்சிப்பின் கிருபைக்காகத்தான் நம்முடய விசுவாசம், அவர் வரும்போது நாம்மள நித்திய ஜீவனுக்காக பரலோகத்துக்குக் கொண்டு போவாரு. அந்த மாதிரியான பதில் என் குழப்பத்த தீக்குற மாதிரி தோணுச்சி, ஆனா அது இன்னொரு கேள்விய கொண்டு வந்திச்சி: அப்ப நான் எப்படி பரலோகத்துக்குப் போவேன்? அவங்க சொன்னாங்க, “ரோமர் 10:10 சொல்லுது, ‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.’ நம்முடைய பாவங்கள் கர்த்தரால மன்னிக்கப்பட்டுள்ளன, அதனால் விசுவாசத்தின் மூலமா நாம ரட்சிக்கப்பட்டோங்கறது இதுக்கு அர்த்தம், கர்த்தர் திரும்பி வரும்போது நம்மள நேரா ராஜ்யத்துக்குள்ள எடுத்துக்குவாரு. அதனால, உங்களுக்கு விசுவாசம் இருக்கிற வர பரலோகத்துக்குப் போறது பத்தி நீங்க கவலப்பட வேண்டாம்.” நான் நினச்சேன் தேவன் பரிசுத்தமானவரு, மேலும் வேதாகமம் சொல்லுது “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே(எபிரெயர் 12:14). நாம பரிசுத்தம் ஆகணுங்கறது கர்த்தருக்குத் தேவ, ஆனா நான் பாவத்தில வாழ்ந்துக்கிட்டிருக்கேன், மேலும் அவருடய வார்த்தைகள என்னால கடைப்பிடிக்க முடியல. ராஜ்யத்துக்கு நான் எப்படி தகுதி உள்ளவனாவேன்? கர்த்தராகிய இயேசு நம்மக்கிட்ட சொன்னாரு: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே(மத்தேயு 22:37-39). ஆனா அன்றாட வாழ்க்கையில, அன்புகூரனுங்கிற சுலபமான தேவகூட எவ்வளவு கடுமயா முயற்சி செஞ்சாலும் என்னால பண்ண முடியாத ஒண்ணா இருக்கு. கர்த்தரவிட நான் என் குடும்பத்த அதிகமா நேசிச்சேன், மேலும் என்னால என்னப்போல மத்தவங்கள உண்மயிலயே நேசிக்க முடியல. என்னுடய நண்பர்களும் குடும்பமும் என்ன கிண்டல் செய்தப்ப, சகிச்சிக்கிட்டு பொறுமயா இருக்கிறதுக்குப் பதிலா நான் அதுக்காக அவங்கள வெறுத்தேன். எபிரேயர் 10:26 ஐ நான் நினச்சிப் பாத்தேன், அது சொல்லுது “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்.” கர்த்தருக்கு தேவப்படுது, ஆனா என்னால செய்ய முடியலங்கறத நான் அறிஞ்சேன். நான் பாவத்திலேயே வாழ்ந்திக்கிட்டிருந்தேன், மேலும் பாவத்தின் சம்பளம் மரணம். அதுதான் உண்மயின்னா, என்னுடய முடிவு அவிசுவாசிகளவிட எப்படி வேறா இருக்க முடியுங்கிறத நான் பார்க்கல. இது என்ன யோசிக்க வச்சிது போதகருங்க சொன்ன மாதிரி ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கிறது அவ்வளவு சுலபமா இருக்காது, ஆனா இன்னும் எனக்கு எப்படி பராலோகத்துக்குள்ள பிரவேசிச்சி நித்திய ஜீவன அடய முடியுங்கறது தெரியல. எனக்கு இன்னும் ஒரு பாத கிடைக்கல. நான் போதகர்கிட்டயும் சப நண்பர்கள்கிட்டயும் கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தேன், ஆனா அவங்க ஒருத்தர்கிட்டயும் தெளிவான பதில் இல்ல. நான் ஏன் திடீர்னு இப்படிப்பட்ட விசித்திரமான கேள்விகளக் கேக்குறேன்னு அவங்க எங்கிட்ட கேட்டாங்க, இப்படித்தான் காலாகாலமா ஜனங்க விசுவாசத்த கடபிடிச்சிட்டு வாறாங்கன்னு அவங்க சொன்னாங்க. எனக்கு எப்போதும் போலவே குழப்பமா இருந்திச்சி. அதனால நாலு சுவிசேஷங்களயும் திருப்பி படிக்க முடிவு செஞ்சேன், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள்ல பதில் இருக்கும்னு நினச்சேன்.

2008ல ஒருநாள் இந்த வசனங்கள வாசிச்சேன்: “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்(யோவான் 11:25-26). அதப் படிச்சப்போ அது புதிரா இருந்திச்சி. கர்த்தர் ஏன் உயிரோடிருந்து அவர விசுவாசிக்கணும்னு சொல்றாரு? விசுவாசிகளான நாமெல்லாம் உயிரோடிருந்துதானே அவர விசுவாசிக்கிறோம்? ஏதோ ஒரு காரணத்துக்காக நாம மரிச்சிட்டதா கர்த்தர் பாக்குறாரா? இது எனக்கு நிறய கேள்விகள எழுப்பிச்சி. கொஞ்ச காலமா நான் சும்மா இருக்கும் ஒவ்வொரு நொடியும் இதபத்தி சிந்திச்சேன், ஆனா உண்மயான அர்த்தத்த என்னால கண்டுபிடிக்க முடியல. என் கேள்விகளோடு நான் போதகர்கிட்டயும் மத்த சப உறுப்பினர்கள்கிட்டயும் திரும்பவும் போனேன், அவங்ககிட்ட பதில் இல்லங்கறது மாத்திரமல்ல அவங்க என்ன பாத்து சிரிச்சாங்க. ஆனா நான் கர்த்தர் சொன்னதில ஏதோ ஆழமான அர்த்தம் இருக்கிறதா தொடர்ந்து உணர்ந்தேன்.

அப்புறமா நான் மத்தேயு சுவிசேஷத்தில இதப் படிச்சேன்: “அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார் (மத்தேயு 8:21-22). “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்ற இந்த வாசகங்களப் பாத்ததும் நான் கொஞ்சம் குழம்பிட்டேன். அந்தச் சமயத்தில உயிரோடிருந்த மக்கள கர்த்தர் ஏன் மரித்தவங்கன்னு சொல்லணும்? கர்த்தர் நம்மள உயிரோடிருக்கிறவங்களா பாக்குறாரா அல்லது மரித்தவங்களா பாக்குறாரா? வேதாகமம் பாவத்தின் சம்பளம் மரணம்னு சொல்றத நான் நினச்சிப் பாத்தேன், நான் பாவத்தில வாழ்ந்துக்கிட்டிருந்தேன் அதத்தான் கர்த்தர் “மரித்தோர்னு” சொல்லியிருப்பாரோ? அப்படின்னா, நான் எப்படி பிழைக்க முடியும், நான் எப்படி ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்? என் இருதயத்தில தல வால் புரியாத நிறய கேள்விகள் இருந்தன. ஆனா ஆழமா ஒரு விஷயத்தில நான் தெளிவா இருந்தேன்: கர்த்தர் இந்த விஷயங்கள சொன்னதினால, பதிலும் வேதாகமத்தில வேற எங்கயாவது இருக்கணும். அதனால நான் விசுவாசத்த இழக்காம, பதிலத் தேடினேன்.

கர்த்தருடய வழிகாட்டலுக்கு நன்றி. சில மாசம் கழிச்சி நான் வேறொரு விஷயத்த வாசிச்சேன்னு அவர் சொன்னாரு: “மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்(யோவான் 5:25). இத வாசிச்ச உடன எனக்கு தெளிவாயிருச்சி அதாவது தேவனுடய சத்தத்தக் கேட்ட உடன மரித்தோர் உயிரோட வருவாங்க. இதுதான் நான் தேடுற பதில்ங்றது எனக்கு உறுதியாயிடிச்சி! இருந்தாலும் எனக்கு கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்திச்சி, நான் நினச்சேன் கர்த்தரின் சத்தத்த வெகு காலத்துக்கு முன்னாலேயே கேட்டேனே, ஆனா இன்னும் நான் பாவக் கட்டுகள்ல இருந்து விடுதல ஆகலியே. நான் உயிருள்ளவனா கருதப்படுவேனா? “அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள்” என்கிறது உண்மயில எதக் குறிக்குது? ஜனங்க எப்படி பிழைப்பாங்க? அவர் திரும்பி வரும்போது நாம கேக்க வேண்டியது அவர்கிட்ட இருக்குமோ? அப்படின்னா தேவனுடய சத்தத்த நாம எப்படி கேக்க முடியும்? எங்க நம்மால அதக் கேக்க முடியும்? எனக்குத் தெரியல, அதனால நான் கர்த்தருக்கிட்ட ஜெபிச்சேன், “கர்த்தாவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா உம்முடைய சத்தத்தக் கேக்கப்பண்ணும். நான் மரிச்சவனா இருக்க விரும்பல. தயவு செஞ்சி நான் பிழச்சிருக்க உதவுங்க.”

அதுக்குப் பிறகு, நான் சப ஆராதனைகளுக்கு போனப்ப, போதகருங்க எப்போதாவது தங்களுடய பிரசங்கத்தில கர்த்தருடய வருகயப்பத்தி அல்லது கர்த்தருடய சத்தத்தப்பத்தி எதயாவது சொல்றாங்களான்னு நான் கவனமா கவனிக்கத் தொடங்கினேன். எனக்கு என்ன ஏமாத்தம இருந்துச்சின்னா அவங்க சொன்னதெல்லாம் வதந்திய பத்தி கவனமா இருங்க, விழிப்போட காத்திருங்கன்றதுதான், ஆனா கர்த்தருடய வருகயப் பத்தி எதுவும் சொல்லல. இந்த விஷயங்களப் பத்தி சபயில சில முக்கியமான ஆளுங்கக்கிட்ட கேட்டேன், ஆனா நான் தொடர்ந்து இந்த கேள்விகளக் கேக்குறது விசுவாசக் குறச்சலானதுன்னு அவங்க சொன்னாங்க, அதாவது நான் தோமாவப் போல இருக்கிறேனாம். அவங்க என்ன புறக்கணிக்க ஆரம்பிச்சாங்க. நான் எப்பவும் கூடப் போற மத்த சப உறுப்பினருங்க எங்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சாங்க மேலும் என்ன விலக்கிவச்சாங்க. 18 வருஷமா உறுப்பினராக இருந்த அந்த சபய விட்டு போறதில வந்து அது முடிஞ்சிது. நாள் பூரா சிபிஎஸ்ல் இருந்தும் சிடிஎஸ்ல நெட்வொர்க்குகள்ல வரும் நிகழ்ச்சிகளப் பாத்தேன், பேர் பெற்ற போதகர்களின் பிரசங்கத்தில இருந்து தேவனுடய சத்தத்தக் கேக்க நம்பிக்கயா இருந்தேன். இத ஏறக்குறய ஆறு மாசம் செஞ்சேன், ஒவ்வொரு நாளும் 10 மணி நேரத்துக்கு மேல பாத்தேன். ஏராளமான பிரசங்கங்கள உண்மயிலேயே கேட்டேன், ஆனா எனக்கு வேண்டிய பதில் இன்னும் கிடைக்கல. சீக்கிரமா கர்த்தர் திரும்பி வரப் போறார் மேலும் நாம விழிப்போட காத்திருக்கணும்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டே இருந்தேன். ஆனா எனக்கு கேள்வி மேல கேள்வியா தோணிச்சி, போதகர்கள் எல்லாருமே கர்த்தர் திரும்பி வரப்போறார்னு சொல்றாங்க, ஆனா எப்ப? மேலும் நாம ஏன் அவர இன்னும் வரவேற்கல? அந்த நாட்கள்ல நான் கர்த்தரிடத்தில தொடர்ந்து ஜெபிப்பேன், “கர்த்தாவே! இவ்வளவு நாளாக நீங்க வர்றதுக்காக நான் காத்துக்கிட்டே இருக்கேன், என்னுடய வாழ்நாள்லயே உங்கள வரவேற்கவும், உங்க சத்தத்தக் கேக்கவும் ரொம்ப நம்பிக்கையா இருக்கேன். ஓ கர்த்தாவே, நீங்க எப்ப வர்றீங்க? தயவுசெஞ்சு, உங்க சத்தத்த எனக்கு கேக்க வையுங்க” அப்படின்னு சொல்லுவேன்.

2013 மார்ச்சில் ஒரு நாள், எங்க கட்டிடத்தின் வாசல்ல, 70 வயசு மதிக்கத்தக்க ஒரு வயசான மனுஷன் என்ன நோக்கி நடந்து வந்தாரு, சோசன் இல்போ செய்தித்தாளுக்கு சந்தா கட்ட விரும்புறீங்களான்னு கேட்டாரு. நான் யோசிச்சேன் இப்ப எல்லாருகிட்டயும் செல்போனும் கம்ப்யூட்டரும் இருக்கு, செய்தித்தாள யாரு வாசிக்கப் போறாங்க? நான் உடனடியா மறுத்திட்டேன். ஆன பல நாளா என்ன அவர் பாக்கும் போதெல்லாம் சந்தாவுக்காக என்னிடம் கேப்பாரு. நான் நிராகரிச்சிக்கிட்டே வந்தேன். ஆன ஆச்சரியம் என்னன்னா, ஒரு மாசம் கழிச்சி எலிவேட்டர்ல போனப்ப நேர அவர சந்திச்சேன். அவரு எனக்காக காத்துக்கிட்டு இருந்தது போல இருந்திச்சி. என்ன பாத்ததும் அவர் சிரிச்சிக்கிட்டே ஹலோ சொன்னரு, அப்புறமா சந்தா கேட்டாரு. நான் ஆச்சரியப்பட்டேன், ரொம்ப நாளா ஏன் இந்த மனுஷன் ஒரு செய்தித்தாள எனக்கு விக்க முயற்சி செய்துக்கிட்டே இருக்காரு. நல்ல படியா நடந்துக்க நினச்சி கடைசியில ஒரு சந்தாவ வாங்கினேன், ஆனா பல காரணங்களால கொஞ்ச நாளா எனக்கு அதப் படிக்க நேரம் கிடைக்கல. அப்புறமா மே மாச ஆரம்பத்தில பேப்பரு வந்த பிறகு, நான் எப்பவும் செய்ற மாதிரி அத எடுத்து தலைப்புச் செய்திய மேலோட்டமா பாத்தேன். அதில இருந்த ஒண்ணு உண்மையிலேயே என்ன நோக்கித் தாவி வந்திச்சி. அது என்ன சொன்னதுன்னா “கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறார்—சர்வவல்லமையுள்ள தேவன் ராஜ்யத்தின் காலத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்.” எனக்கு அதிர்ச்சியா இருந்திச்சி—என்ன? கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாரா? சர்வவல்லமையுள்ள தேவனா? ராஜ்யத்தின் காலமா? அது உண்மையா இருக்குமா? என் உணர்ச்சிகள் குழப்பமா இருந்திச்சி—உண்மயில நான் உணர்ச்சிவசப்பட்ட நிலயில இருந்தேன். கடைசியா கர்த்தருடய வருகயப் பத்திய செய்திய நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்க. ஆனா அப்புறமா நான் இது ஒரு பொய் செய்தியா இருக்குமோன்னு சந்தேகப்பட்டேன். பக்கத்தின் அடியில சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் விலாசத்தயும் ஒரு எண்ணயும், சபையின் சில புத்தகங்களின் பெயர்களயும் பாத்தேன். அது முக்கியம்னு எனக்குப் பட்டிச்சி அத கவனமா பாத்தேன், ஏன்னா கர்த்தருடய வருக உண்மயிலேயே பெரிய விஷயம். அந்த செய்தித்தாள்ல இருந்த எண்ல உடனடியா கூப்பிட்டேன். ஒரு சகோதரியின் குரல் கேட்டிச்சி நான் அவங்ககிட்ட கேட்டேன், “அந்த செய்தித்தாள்ல அச்சிடப்பட்டிருந்தது உண்மயா? கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாரா? இந்த வார்த்தைங்க எல்லாம் தேவனுடயதா?” அவங்க சொன்னாங்க, “அது உண்மதான்.” சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய சேர்ந்த சகோதரி கேத்தியும் ஜீனாவும் என்ன சந்திக்க ஒரு நேரத்த குறிச்சாங்க அவங்க தேவனுடய மூன்று கட்ட கிரியயப் பத்தி ஐக்கியப்பட்டாங்க. கேத்தி சொன்னாங்க, “ஆதாமும் ஏவாளும் சாத்தானால சீர்கெடுக்கப்பட்டதில இருந்து, மனுஷன் பாவத்திலயும், சாத்தானின் வல்லமைகளின் கீழும், சாத்தானால் விளையாடப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வாழ்ந்துக்கிட்டு வாறான். சாத்தானின் பிடியில் இருந்து மனுக்குலத்த முழுசா ரட்சிக்க தேவன் மூணு கட்ட கிரியைகள செஞ்சிட்டாரு, நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம், ராஜ்யத்தின் காலம் என்கிறதுதான் அது. இவை கிரியயின் மூணு வெவ்வேறு கட்டங்க, ஆனா எல்லாம் ஒரே தேவனால செய்யப்படுது. தேவனுடய கிரியயின் ஒவ்வொரு கட்டமும் சீர்கெட்ட மனுக்குலத்துக்கு என்ன தேவைங்கறத அடிப்படையா கொண்டு இருக்கு, ஒவ்வொண்ணும் முந்தினதுக்கு மேல, இன்னும் ஆழமான உயரிய கிரியய செய்றதுக்காகக் கட்டப்பட்டிருக்கு.” அப்புறம் அவங்க சர்வவல்லமையுள்ள தேவனின் ஒரு வாசகத்த வாசிச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டத்தாலும் தனியாக மூன்று யுகங்களின் கிரியைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் ஒட்டுமொத்தத்திலிருந்து ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா என்ற நாமத்தால் தேவனின் முழு மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் தமது கிரியையைச் செய்தார் என்பது தேவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவில்லை. யேகோவா மனுஷனுக்காக நியாயப்பிரமாணங்களை வகுத்து, அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, ஆலயத்தையும் பலிபீடங்களையும் கட்டியெழுப்பும்படி மனுஷனிடம் கேட்டார்; அவர் செய்த கிரியை நியாயப்பிரமாணத்தின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் செய்த இந்தக் கிரியை, மனுஷனை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றச் சொல்லும் தேவன் மட்டுமே தேவன் என்பதை, அல்லது அவர் ஆலயத்தில் இருக்கும் தேவன் என்பதை, அல்லது பலிபீடத்தின் முன் இருக்கும் தேவன் என்று நிரூபிக்கவில்லை. இப்படிச் சொல்வது உண்மைக்குப் புறம்பாக இருக்கும். நியாயப்பிரமாணத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் ஒரு யுகத்தை மட்டுமே குறிக்கும். ஆகையால், தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மட்டுமே கிரியையைச் செய்திருந்தால், மனுஷன், ‘ஆலயத்தில் இருக்கும் தேவனே தேவன், மேலும், தேவனுக்கு ஊழியம் செய்ய நாம் ஆசாரிய உடைகளை அணிந்து ஆலயத்தினுள் நுழைய வேண்டும்,’ என்ற வரையறைக்குள் தேவனைக் கட்டுப்படுத்தியிருந்திருப்பான். கிருபையின் யுகத்தில் கிரியைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிருக்காமலும், நியாயப்பிரமாணத்தின் யுகம் இன்றுவரை தொடர்ந்திருந்தால், தேவன் இரக்கமுள்ளவர், அன்பானவர் என்பதையும் மனுஷன் அறிந்திருக்க மாட்டான். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் கிரியை செய்யப்பட்டிருக்காவிட்டால், அதற்குப் பதிலாகக் கிருபையின் யுகத்தில் மட்டுமே கிரியை செய்யப்பட்டிருந்தால், தேவனால் மனுஷனை மீட்டு மனுஷனின் பாவங்களையும் மன்னிக்க முடியும் என எல்லா மனுஷரும் அறிந்திருப்பர். அவரே பரிசுத்தமானவர், பாவமறியாதவர் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருப்பான், மேலும் மனுஷனுக்காகவே அவர் தம்மைப் பலியாகக் கொடுத்து சிலுவையில் அறைந்துகொள்ள முடியும் என்பதையும் மனுஷன் அறிந்திருப்பான். மனுஷனுக்கு இந்த விஷயங்கள் மட்டுமே தெரியும், ஆனால் வேறு எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொரு யுகமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில், கிருபையின் யுகத்தில், மற்றும் தற்போதைய கட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய மனநிலையின் அம்சங்களைப் பொறுத்தவரை: மூன்று கட்டங்களும் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கப்பட்டால்தான் அவற்றால் தேவனின் மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். மூன்று கட்டங்களையும் மனுஷன் அறிந்தால் மட்டுமே அவனால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மூன்று கட்டங்களில் எதையும் தவிர்க்க முடியாது. கிரியையின் இந்த மூன்று கட்டங்களையும் அறிந்த பிறகு மட்டுமே உன்னால் தேவனின் மனநிலையை முழுமையாகக் காண முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவன் தமது கிரியையை நிறைவு செய்தார் என்பது அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் தேவன் மட்டுமே என்பதை நிரூபிக்கவில்லை, மேலும் அவர் மீட்பின் கிரியையை நிறைவுசெய்தார் என்பதற்குத் தேவன் மனுஷகுலத்தை என்றென்றும் மீட்பார் என்று அர்த்தமல்ல. இவை அனைத்தும் மனுஷனால் உருவாக்கப்பட்ட முடிவுகள். கிருபையின் யுகம் முடிவுக்கு வந்துவிட்டதால், தேவன் சிலுவையைச் சேர்ந்தவர் என்றும் சிலுவை மட்டுமே தேவனின் இரட்சிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் உன்னால் சொல்ல முடியாது. அவ்வாறு செய்வது தேவனை வரையறுப்பதாகும். தற்போதைய கட்டத்தில், தேவன் முக்கியமாக வார்த்தையின் கிரியையை மட்டுமே செய்கிறார், ஆனால் தேவன் ஒருபோதும் மனுஷனிடம் இரக்கம் காட்டவில்லை என்றும் அவர் கொண்டு வந்ததெல்லாம் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் மட்டும்தான் என்றும் உன்னால் சொல்ல முடியாது. கடைசிக் காலத்தில் செய்யப்பட்ட கிரியைகள் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளையும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன, இதனால் மனுஷகுலம் சென்றுசேரும் இடத்தையும் முடிவையும் வெளிப்படுத்தவும், மனுஷரிடையே இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளையும் முடிக்கவும் முடியும். கடைசிக் காலத்தினுடைய கிரியையின் இந்தக் கட்டம், சகலத்தையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது. மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும், அவனை அவற்றின் ஆழத்திற்குள் தள்ளவும், அவனது இருதயத்தில் முற்றிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷ இனத்தை வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியும். ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் முடிந்தபிறகுதான், தேவனின் மனநிலையை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்வான், ஏனென்றால் அவருடைய ஆளுகை அப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). அப்புறமா கேத்தி இன்னும் அதிகமா என்னோட ஐக்கியப்பட்டாங்க தேவனுடய 6000-வருஷ நிர்வாகத் திட்டம் மூணு காலங்களா, மூணு கட்டங்களா பிரிக்கப்பட்டிருப்பத நான் அறிஞ்சிக்கிட்டேன்—நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம், ராஜ்யத்தின் காலம். நியாயப்பிரமாணத்தின் காலத்தில ஜனங்களோட வாழ்க்கைய பூமியில வழிநடத்தவும் பாவம்னா என்னன்னு அவங்க தெரிஞ்சிக்கவும் யேகோவா முக்கியமா நியாயப்பிரமாணங்கள கொடுத்தாரு. கிருபையின் காலத்தில கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய முடிச்சாரு. மனுக்குலத்துக்காக அவரு சிலுவயில அறயப்பட்டாரு, பாவத்தில இருந்து அவங்கள மீட்டாரு. ஜனங்க கர்த்தர விசுவாசித்து, தங்களோட பாவத்த அறிக்கயிட்டு மனந்திரும்புற வர, அவங்க பாவங்க மன்னிக்கப்படும், அதுக்கப்புறமா அவங்க நியாய பிரமாணத்தின்படி ஆக்கினைக்குள்ளா தீர்க்கப்பட்டு தண்டிக்கப்பட மாட்டாங்க. ராஜ்யத்தின் காலத்தில, சர்வவல்லமையுள்ள தேவன், சத்தியத்த வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பு கிரியய செய்றாரு மனுஷனோட சீர்கெட்ட மனநிலய சுத்திகரிச்சி, அவங்கள பாவத்திலயும் சாத்தானின் செல்வாக்குலயும் இருந்து ரட்சிக்க அதனால அவங்க தேவனுக்கு கீழ்ப்படிந்து, தேவன ஆராதித்து, அதுக்கு மேலும் பாவத்தில வாழாம, தேவனுடய ராஜ்யத்துக்குள்ள கொண்டுபோகப்படலாம். இந்த மூன்று கட்ட கிரிய வெவ்வேறு காலங்கள்ல நிகழுது மேலும் வெவ்வேறு விஷயங்கள உள்ளடக்கி இருக்கு, ஆனா எல்லாம் ஒரே தேவனால செய்யப்படுது. ஒரே தேவன் வெவ்வேறு கிரியய வெவ்வேறு காலங்கள்ல செய்றது ஆகும் இது. இதப் புரிஞ்சிக்கிறது என்ன பிரகாசிப்பதாக இருந்திச்சி.

அப்புறமா ஜீனா எனக்கு அளித்த ஐக்கியத்தில தம்முடய நியாயத்தீர்ப்பின் கிரியை மூலம் சர்வவல்லமையுள்ள தேவன் எப்படி ஜனங்கள சுத்திகரிக்கிறார்னு சொன்னாங்க. அவரு எனக்கிட்ட பகிர்ந்துக்கிட்ட தேவனுடய வார்த்தைகள வாசிக்க விரும்புறேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). அப்புறமா ஜீனா எங்கிட்ட சொன்னாங்க, “சர்வவல்லமையுள்ள தேவன் ஜனங்கள நியாயந்தீர்த்து சுத்திகரிக்க சத்தியத்தப் பயன்படுத்துறாரு. அவர் பல லட்சக்கணக்கான வார்த்தைகள வெளிப்படுத்தி இருக்காரு அதெல்லாம் வேதாகமத்தின் ரகசியங்கள வெளிப்படுத்தி தேவனுடய கிரியைக்கு சாட்சி அளிக்குது, மேலும் மனுஷனின் பாவத்தின் வேரயும் நம்முடய சீர்கேட்டப் பத்திய உண்மயையும் வெளிப்படுத்துது. சில இயல்பான மாற்றத்தயும் ஜீவப் பிரவேசத்தயும் பத்தியது, சில ஜனங்களுடைய பலாபலனை தீர்மானிப்பது போன்றவற்ற பத்தியது. அது எல்லா சத்தியமும் தேவனிடத்தில இருந்து வர்றதுமாம். இது நமக்கு தேவனுடய நீதியான பரிசுத்த மனநிலையையும் அவருடய ஞானத்தயும் காட்டுது. அவருடய வார்த்தைகள படிக்கிற யாரும் அவைகளின் அதிகாரத்தயும் வல்லமையையும் உணரலாம். தேவன் எல்லாத்தையும் பார்க்கிறாரு, மேலும் தேவன் மட்டுமே சீர்கேடான மனுக்குலத்த பின்னோக்கியும் முன்னோக்கியும் அறிஞ்சவரு. தேவன் நம்முடய ஒவ்வொரு சிந்தனையையும், கருத்துக்களயும், எண்ணங்களயும், சீர்கெட்ட நிலயயும் ரொம்ப தெளிவாவும், நடைமுறைக்கு ஏத்தவாறும் வெளிப்படுத்துறாரு. மேலும் அவரு இந்த சீர்கேட்டின் சாராம்சத்த வெளிப்படுத்தி பகுத்தாராய்ந்து, மனுக்குலத்தின் பாவத்தயும் தேவன எதிர்க்கிறதயும் அதன் வேரோட களையுறாரு.” அவங்க மேலும் சொன்னாங்க, “தேவனுடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, வெளிப்படுத்தல்கள், சுத்திகரிப்பின் மூலமா, நம்முடைய சாத்தானுக்குரிய சீர்கேட்ட குறித்த உண்மயப் பத்திய கொஞ்சம் புரிதல நாம அடயுறோம். அப்படின்னா நாம எவ்வளவு ஆணவமா, வஞ்சகமா, சுயநலமா, வெறுக்கத்தக்க விதமா இருக்கோம், நாம சொல்றதும், செய்றதும் சீர்கேட்ட அடிப்படயாக் கொண்டதா இருக்கு கொஞ்சம் கூடா நாம மனுஷ சாயலா வாழல. புகழுக்காகவும் அந்தஸ்துக்காகவும் சண்டபோடுறோம், சூழ்ச்சியிலும் பொய்யிலும், மோசடியிலும் ஈடுபடுறோம், பொறாமையோடும் வெறுக்கிறவங்களாவும் இருக்கோம், தேவனுக்குக் கீழ்ப்படியாம விசுவாசிக்கிறோம், ஊதாரித்தனமான ஆசைகளால நிறஞ்சிருக்கோம், உபத்திரவங்கள் அல்லது கஷ்டங்கள் வரும்போது தேவன குறசொல்லி எதிர்க்கிறாம்கிறது எல்லாம் உதாரணங்கள்தான். தேவனுடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மூலமா கொஞ்சம் சத்தியங்கள நாம புரிஞ்சிக்கிறோம் நேர்மறயான மற்றும் எதிர்மறயான விஷயங்களுக்கு இடயில பகுத்தறிவ அடயுறோம். மேலும் எந்த இடறலயும் சகித்துக்கொள்ளாத தேவனின் நீதியுள்ள மனநிலையப் பத்தி அதிகமா அறியுறோம் படிப்படியா தேவனுக்கு பயபக்தியுடன் கீழ்ப்படியத் தொடங்குறோம். நம்மால மனந்திரும்பி, அவருடய நியாய்த்தீர்ப்பயும் சிட்சயயும் ஏத்துக்கிட்டு அவருடய வார்த்தைகள் நிறைவேத்த முடியுது.” அவங்க மேலும் சொன்னாங்க, “தேவனுடய வார்த்தைகள் நம்மள வெளிப்படுத்தாம, நாம வெறும் ஜெபத்தயும் பாவ அறிக்கையயும் சார்ந்த்திருந்தா, சிந்திக்கிறது மூலமா அந்தப் புரிதல நம்மால ஒருபோதும் அடையவோ இல்லாட்டி நம்மோட பாவத்தின் வேரக் களையவோ முடியாது. அனுபவத்தின் மூலமா தேவனுடய நியாயத்தீர்ப்பு மனுஷனுக்கான அவருடய மெய்யான அன்பும் ஆகச் சிறந்த ரட்சிப்பும்னு நாம பாக்குறோம், அந்த நடைமுறையான கிரிய இல்லாம, நம்முடய சீர்கெட்ட மனநிலைகள ஒருபோதும் சுத்திகரிக்க முடியாது. அதனாலதான் தேவனுடய கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியய ஏத்துக்கிறதுதான் ராஜ்யத்துக்குள் செல்வதற்கான ஒரே வழி.” அப்புறமா தேவனுடய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்ப அனுபவிச்சதன் மூலமா எப்படி அவங்க உண்மையிலேயே மனந்திரும்பினாங்கங்கறத பற்றிய சாட்சிய அவங்க எங்கிட்ட சொன்னாங்க. எல்லாம் ரொம்ப நடைமுறையானதா இருந்திச்சி. ஆவிக்குரிய பிரகாரமா எனக்கு என்ன தேவையோ அது சரியாக சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியயாக இருந்திச்சின்னு என்னால சொல்ல முடியும், அதாவது கடைசி நாட்களின் தேவனுடய கிரியயால உண்மையிலே ஜனங்கள மாத்தி சுத்திகரிக்க முடியும், தேவனுடய நியாயத்தீர்ப்ப ஏத்துக்கறதுதான் ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கிறதுக்கான ஒரே வழி.

அடுத்த சில நாட்களா, மத உலகம் ஏன் இப்ப பாழடஞ்சி கிடக்கு, போதகர்களோட பிரசங்கங்கள் ஏன் வறண்டு போயிருக்குன்னு அந்த சகோதரிங்க எங்கிட்ட சொன்னாங்க. வேதாகமத்துக்குப் பின்னால உண்மயான கதயும், தேவனுடய மனுவுருவெடுத்தல்களின் ரகசியங்களும் அர்த்தமும் இருந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள்ல ஏராளமா இருக்குன்னும் அதுமட்டுமில்லாம ஏராளமான ரகசியங்களப் பாக்க என் கண்ண திறந்திச்சின்னும் உணர்ந்தேன். அதப் பாத்த பிறகு நான் மகிழ்ச்சியோட சர்வவல்லமையுள்ள தேவனுடய கடைசி நாட்களின் இரட்சிப்ப ஏத்துக்கிட்டேன்.

இந்த சகோதரிங்க தேவனுடய வார்த்தைகளின் ரெண்டு புத்தகங்கள கொடுத்தாங்க. வீட்டுக்குப் போனதும் அதுல ஒண்ண நான் திறந்தேன், ஆட்டுக்குட்டியானவரால் திறக்கப்பட்ட புஸ்தகம். நான் பாத்த முதல் விஷயம் என்னன்னா முன்னுரையில் இருந்த சில தேவனுடய வார்த்தைங்க: “அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், ‘தேவன்’ என்ற வார்த்தையையும் ‘தேவனின் கிரியை’ போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்’ என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே ‘தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்’ என்று அழைக்கலாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும்). தேவனுடய வார்த்தைங்க விவரமாவும் நடைமுறையானதாவும் இருக்கு, தேவனிடத்தில வைக்கும் விசுவாசத்தின் மெய்யான அர்த்தத்தக் காட்டுது. தேவனுடய வார்த்தைகளயும் கிரியயயும் அனுபவிக்கிறது விசுவாசத்துக்கு தேவைங்கிறதயும், அதனால் சீர்கேட்ட நாம விட்டுட்டு, சத்தியத்த அடஞ்சி தேவன அறிய முடியும்ணும் நான் அறிஞ்சிக்கிட்டேன். அதுதான் மெய்யான விசுவாசம். தினமும் ஜெபிச்சி அதிகமா ஆலயத்துக்குப் போறதுதான் விசுவாசம்னு நான் வழக்கமா நினச்சிக்கிட்டிருந்தேன். வருத்தப்படுற விதமா, நான் விசுவாசத்தின் சரியான பாதயில இருக்கிறேனா இல்லயாங்கறத என்னால அறிஞ்சிக்க முடியல, நான் அதுவர சும்மா தடுமாறிக்கிட்டே இருந்தேன். சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைகள படிச்ச பிறகு, என்னுடய விசுவாசப் பாதயில@நான் முன்பு நடந்த பாத முழுசா தவறானதுன்னு எனக்கு தோணிச்சி. அப்புறமா பொருளடக்கத்தில நான் “ஜீவனிற்குள் வந்திருக்கிற ஒருவரா நீர்?” ங்குற தலைப்பப் பாத்தேன். அது என்ன ஈர்த்துது, நான் அதுக்குள்ள போனேன். அதில தேவனுடைய இந்த வார்த்தைங்க இருந்துது: “தேவன் மனிதனைப் படைத்தார், ஆனால் பின்னர் மனிதன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான், அப்படியாக மக்கள் ‘மரித்தவர்களாக’ மாறிப்போனார்கள். ஆகவே, நீ மாற்றமடைந்த பிறகு, இனி ஒருபோதும் இப்படி ‘மரித்தவர்களைப்’ போல இருக்க மாட்டீர். தேவனுடைய வார்த்தைகள்தான் மக்களின் ஆவிகளைப் புத்துயிர் பெறச்செய்து அவர்களை மறுபடியும் பிறக்கச் செய்கின்றன, மேலும் மக்களின் ஆவிகள் மறுபடியும் பிறக்கும்போது, அவர்கள் ஜீவனிற்குள் வருகின்றனர். நான் ‘மரித்தவர்களைப்’ பற்றி பேசும்போது, ஆவி இல்லாத மரித்தச் சடலங்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன், அவர்களுக்குள் ஆவிகள் இறந்துவிட்டன. ஜீவனின் புத்துயிர் மக்களின் ஆவிகளில் வரும்போது, மக்கள் ஜீவனிற்குள் வருவார்கள். முன்பு பேசப்பட்ட பரிசுத்தவான்கள், சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழிருந்து, பின்னர் சாத்தானைத் தோற்கடித்து, ஜீவனிற்குள் வந்தவர்களைக் குறிக்கிறது. …

… ‘மரித்தவர்கள்’ தேவனை எதிர்க்கிறவர்களும் கலகக்காரர்களுமாவார்கள்; அவர்கள் ஆவியில் உணர்வற்றவர்களும் தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்களுமாவார்கள்; அவர்கள் சத்தியத்தைத் தங்களுடைய வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவராதவர்களாகவும், தேவனுக்குச் சிறிதேனும் விசுவாசமாக இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் சாத்தானுடைய அதிகார ஆதிக்கத்தின் கீழாக வாழ்ந்து அவனுக்கேற்றபடி செயல்படுவார்கள். மரித்தவர்கள் சத்தியத்திற்கு எதிராக நிற்பதன் மூலமும், தேவனுக்கு எதிராகக் கலகம் செய்வதன் மூலமும், இழிவானவர்களாகவும், அற்பமானவர்களாகவும், துர்க்குணமுள்ளவர்களாகவும், மிருகத்தனமானவர்களாகவும், வஞ்சகமானவர்களாகவும், மற்றும் நயவஞ்சகமானவர்களாகவும் வெளிப்படுவார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடித்தாலும், அவர்களால் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ முடியாது; அவர்கள் உயிருடன் இருந்தாலும், அவர்கள் வெறுமனே நடக்கிற, சுவாசிக்கிற சடலங்களே. மரித்தவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த முற்றிலும் இயலாதவர்களாக இருக்கிறார்கள், அவருக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருப்பது என்பதும் மிகக் குறைவே. அவர்கள் அவரை ஏமாற்றவும், அவருக்கு எதிராக தேவதூஷணம் சொல்லவும், அவரைக் காட்டிக் கொடுக்கவும் மட்டுமே முடியும், மேலும் அவர்கள் வாழும் வாழ்க்கை கொண்டு வரும் அனைத்தும் சாத்தானின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன. மக்கள் ஜீவனுள்ளவர்களாக மாறவும், தேவனுக்குச் சாட்சியம் அளிக்கவும், தேவனால் அங்கீகரிக்கப்படவும் விரும்பினால், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுக்க வேண்டும், மேலும் தேவனுடைய சுத்திகரிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அவரால் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவன் எதிர்பார்க்கிற அனைத்து சத்தியங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும், அப்போதுதான் அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்று உண்மையில் ஜீவனுள்ளவர்களாக மாறுவார்கள். ஜீவனுள்ளவர்கள் தேவனாலே இரட்சிக்கப்பட்டவர்கள்; அவர்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறார்கள், மற்றும் தேவனுக்காகத் தங்கள் உயிரைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடன் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். ஜீவனுள்ளவர்கள் தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்போதுதான் சாத்தானை வெட்கப்படுத்த முடியும்; ஜீவனுள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய நற்செய்திப் பணியைப் பரப்ப முடியும், ஜீவனுள்ளவர்கள் மட்டுமே தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள், ஜீவனுள்ளவர்கள் மட்டுமே மெய்யான மனிதர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும்). இந்த வாசகத்த படிச்ச பிறகு, இத்தன வருஷமா நான் தேடிக்கிட்டு வந்ததுக்கான பதில் இதுதான்னு என் இருதயத்தில அறிஞ்சேன். “மரிக்கிறது” அல்லது “ஜீவிக்கிறது” என்பவற்றுக்கு என்ன அர்த்தம்னு நான் கடைசியா அறிஞ்சேன். தேவன் ஆதாமையும் ஏவாளயும் படச்சப்போ, அவங்களால தேவன் சொல்றத கேட்டு, நடந்து, அவர மகிமப்படுத்த முடிஞ்சிது. அவங்க ஆவியோடு வாழ்ந்த மனுஷங்க. அப்புறமா தேவனுக்குத் துரோகம் பண்ண சாத்தான் அவங்களத் தூண்டினான் அவங்க சாத்தானுடய வல்லமயின் கீழ வாழ்த் தொடங்கினாங்க, இப்படித்தான் மனுக்குலம் மேலும் மேலும் சீர்கெட்டுப் போச்சிது, சாத்தானின் எல்லா வகயான விஷங்களும் நமக்குள்ள புகுந்துது. நாம ஆழமா பாவத்துக்குள்ள மூழ்கிட்டோம், தேவன மறுத்து, நிராகரிச்சி, எதிர்த்து, சாத்தானின் மனநிலயில வாழ்றோம். ஆதியில தேவன் நம்மள படச்சப்ப இருந்த மாதிரி நாம கொஞ்சம் கூட இல்ல. எல்லாரும் பாவத்திலயும் சாத்தானின் வல்லமையின் கீழா மரிச்சவங்களா வாழ்றதயும் தேவன் பாக்குறாரு, மரித்தோர் சாத்தானுக்கு உரியவங்க, அவங்க தேவன எதுக்கிறாங்க. அவருடய ராஜ்யத்துக்கு அவங்க தகுதியானவங்க இல்ல. ஜீவிக்கிறவங்க தேவனால ரட்சிக்கப்பட்டவங்க. தேவனுடய நியாயத்தீர்ப்புனாலும் சிட்சயாலும் அவங்களுடய சீர்கேடு சுத்திகரிக்கப்பட்டிருச்சி. அவங்க பாவத்தில இருந்தும் சாத்தானின் வல்லமயில இருந்தும் விடுபட்டு தேவனுக்கு எதிரா கலகம் செய்றதயும் எதிர்க்கிறதயும் விடுறாங்க. தேவன் எப்படி பேசி கிரிய செஞ்சாலும் அவங்களால கேட்டுக் கீழ்ப்படிய முடியுது. ஜீவிக்கிறவங்களால தேவனுக்கு சாட்சியா நின்னு அவர மகிமப்படுத்த முடியும், அவங்களால மட்டுமே தேவனுடய அங்கீகாரத்தப் பெற்று அவருடய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். ஜீவிக்கிறவங்களா மாற, சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்துற சத்தியத்த ஏத்துக்கிட்டு நாம அவருடய நியாயத்தீர்ப்ப அனுபவிக்கணும், முடிவா சுத்திகரிக்கப்பட்டு நம்முடய மனசாட்சியயும் பகுத்தறிவயும் திரும்பப் பெறலாம், சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிஞ்சி தேவனுடய வார்த்தைகள கடபிடிக்கலாம், தேவன்கிட்ட பயபக்தியா இருந்து சாட்சி கொடுக்கலாம். ஜீவனுக்குள்ள மெய்யாகவே திரும்பி வந்த ஒருவர் இவருதான், இவரால ராஜ்யத்துக்குள்ள பிரவேசித்து நித்திய ஜீவன அடயலாம். அந்தக் கட்டத்தில கர்த்தர் சொன்னத உண்மயிலே புரிஞ்சிக்கிட்டேன் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோவான் 11:25-26). அதுதான் அதுக்கு அர்த்தம். இது எல்லாத்தயும் புரிஞ்சிக்கிட்டப் பிறகு என் இருதயம் பிரகாசமானதா நான் உணர்ந்தேன்.

அதுக்குப் பிறகு, நான் இன்னொரு கட்டுரயப் படிச்சேன், அதோட தலைப்பு என்னன்னா “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்.” அது என் மனசில ஆழமா பதிஞ்சிருச்சி. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும்). இது எனக்குள் பெரிய பாதிப்ப ஏற்படுத்திச்சி. இத ரொம்ப அதிகாரமாவும் வல்லமையாவும், இந்த வார்த்தைகள் தேவன் கிட்ட இருந்துதான் வந்திருக்க முடியும்னும் நான் உணர்ந்தேன். கர்த்தராகிய இயேசு சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்(யோவான் 14:6). இதுதான் அது. தேவனே அல்லாம ராஜ்யத்தின் வாசல யாரால ஆட்சி செய்ய முடியும்? நமக்கு நித்திய ஜீவன் வேணும்னா, கடைசி நாட்களின் கிறிஸ்து கொண்டுவந்த நித்திய ஜீவனின் வழிய நாம ஏத்துக்கணும். அதாவது மறுபடியும் வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு வெளிப்படுத்திய சத்தியங்கள, ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கும் நம்ம நம்பிக்கைகள அடய இது ஒண்ணுதான் ஒரே வழி. ராஜ்யத்துக்குள்ள போகும் வழிய கண்டு பிடிச்சதினால நான் ரொம்ப பாக்கியசாலியா உணர்ந்தேன். நான் ரொம்ப உற்சாகமடைந்தேன். பசியோடு இருக்கிற ஒருவனுக்கான ஆகாரமா கர்த்தருடய வார்த்தைகள் இருபதாக நான் அவற்றை வாசிச்சேன், அதெல்லாம் என்ன ஆழமா பாதிச்சிது. அதிகமா வாசிக்க வாசிக்க அதெல்லாம் சத்தியம்னு அதிக அதிகமா அறிஞ்சேன், இதெல்லாம் ஒரு போதகர்கிட்ட இருந்தோ அல்லது வேத ஆராய்ச்சியாளர்கிட்ட இருந்தோ வந்திருக்க முடியாது. சர்வவல்லமையுள்ள தேவனுடய வார்த்தைங்க என்னுடய அலஞ்சு திரியும் பசியுள்ள ஆத்துமாவை போஷிச்சுது, மேலும் நான் செய்தித்தாள விக்கிற அந்த வயசானவர நினச்சிப் பாத்தேன். அவரு ஒரு சந்தாவுக்காக கேட்டதுனாலதான் கடைசியா என்னால தேவனுடய சத்தத்த கேக்க முடிஞ்சிது. நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்பினேன், ஆனால் அவர என்னால திரும்பவும் பாக்க முடியல. தேவனுடய அதிசயமான கிரியைகள்தான் அதுக்கு அனுமதிச்சிதுன்னு அறிஞ்சேன். அந்த மனுஷர் சந்தா அளிக்க கேட்டாரு, அது தேவனுடய சத்தத்தக் கேக்கவும் கர்த்தருடய வருகய வரவேற்கவும் உதவிச்சி. அது தேவனுடய வழிகாட்டலும் என் மேல அவருக்கு இருக்கிற அன்புந்தான். நான் உண்மயிலேயே தேவனுக்கு நன்றியுள்ளவனா இருக்கேன். என்னுடய வாழ்நாள்ல தேவனுடய சத்தத்தக் கேட்கவும் அவருடய தோன்றலுக்கு சாட்சி பகரவும் முடிஞ்சதுக்கு நான் நம்பமுடியாத அளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டதா உணர்றேன். இதுவே தேவனுடய இரக்கம், கிருப அதவிட எனக்கான அவருடய ரட்சிப்பு. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 2)

கர்த்தரின் வருகையை வரவேற்பதில், ஒருவர் தவறான வழியைத் தேர்ந்தெடுத்து உண்மையான வழியை நாடவில்லை என்றால், அவர்கள் உண்மையில் கர்த்தரின் வருகையை வரவேற்க முடியுமா?

தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

By Danchun, the United States சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய...

பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தேவன் மீதான நம்பிக்கை பைபிளில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், பைபிளிலிருந்து கூறப்படுவது மதங்களுக்கு எதிரானது என்றும் பல சகோதர சகோதரிகள் நம்புகிறார்கள். சகோதரி சுன்கியு இந்த கருத்தையும் வைத்திருந்தார். பின்னர், ஒரு காலகட்டத்தில், அவள் பைபிளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றாள், இதனால் கர்த்தரை வரவேற்றாள்.

வானத்தைநோக்கி அண்ணாந்து பார்ப்பதனால் உண்மையில் உங்களால் கர்த்தரை வரவேற்க முடியுமா?

By Jin Cheng, South Korea பேரழிவுகளுக்கு முன்னாடி தேவனுடைய ராஜ்யத்துக்குள்ல எடுத்து கொள்ளப்பட்ரனும்னு கர்த்தராகிய இயேசு மேகத்துல வருவதற்காக...

Leave a Reply