கடைசியா நான் தேவனோட சத்தத்தக் கேட்டேன்

ஜனவரி 7, 2023

நான் வாலிபனா இருந்தப்போ பலவிதமான வேலைகள்ல இருந்தேன். நான் வெனிசுலாவின் சுக்ரே நகரத்துல மாநில அரசாங்கத்தின் ஊதிய மேற்பார்வையாளரா இருந்தேன். நான் தினமும் சம்பளப் பிரச்சனைகளயும் ஜனங்களோட பல கோரிக்கைகளயும் கையாள வேண்டியிருந்துச்சு. நான் சட்ட சபையில மனித வள மேம்பாட்டு அதிகாரியாவும் இருந்தேன், அதோட, கொஞ்ச காலம், பெரியவர்களுக்கான இரவுப் பள்ளியில கணினி பத்திய வகுப்பை நான் கற்பிச்சேன். என்னோட எல்லா பதவிகள்லயும் பொதுவான ஒன்னு இருந்துச்சு—அது என்னான்னா, நிறைய ஜனங்கள நேரடியாத் தொடர்புகொள்றதுதான். தினமும் என்னோட கவனம் வேலையிலதான் இருந்துச்சு, நான் ரொம்ப மும்முரமா இருந்தாலும், என்னோட வாழ்க்கை எப்பவுமே ரொம்ப அமைதி நிறஞ்சதா இருந்துச்சு. எதிர்பாராதவிதமா தொற்றுநோய் தாக்கியப்போ, என்னால மத்தவங்களோட பழக முடியல என்னோட வருமானம் என்னோட சாப்பாட்டுக்கான செலவுல பாதியக் கூட ஈடுகட்ட முடியல. என்னோட வாழ்க்க நெருக்கடிக்குள்ள தள்ளப்பட்டுச்சு. நான் சாப்பாடு வாங்க வரிசையில நிக்க வேண்டியிருந்துச்சு, எரிவாயு வாங்க 3 நாள் வரிசையில நிக்க வேண்டியிருந்துச்சு. அந்த நேரத்துல, நான் ஆறுதலைத் தேட கர்த்தரோட வார்த்தைகளத் தேடினேன். என்னோட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களும் ஒரு விசுவாசியா இருந்தாங்க, எப்பெல்லாம் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சந்துச்சுக்கிட்டோமோ, இந்தப் பேரழிவுகள் எல்லாமே வேதாகமத்துல எப்படித் தீர்க்கதரிசனமா சொல்லப்பட்டிருக்குதுங்கறதப் பத்தியும், மனித குலத்தின் பொல்லாப்பும் சீர்கேடுந்தான் இந்தப் பேரழிவுகள் எல்லாத்துக்கும் காரணமா இருந்துச்சுங்கறத பத்தியும் நாங்க பேசுவோம். நாங்க கடைசி நாட்கள்ல இருந்தோம், இந்த நேரத்துல நம்மள நியாயந்தீர்க்க கர்த்தராகிய இயேசு திரும்பி வருவார்ன்னு வேதாகமம் தீர்க்கதரிசனமா சொல்லியிருக்குது, அதனால, நாம தேவனோட பாதுகாப்பயும் இரட்சிப்பயும் பெற அவர் பக்கமா திரும்ப வேண்டியிருந்துச்சு. தினமும், ஞானத்துக்காகவும் என்னைய வழிநடத்துவதுக்காகவும் நான் தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் தேவனை அறிஞ்சுக்க விரும்புனேன், நான் அவரைக் கண்டுபிடிக்கணும், ஏன்னா, நான் ஆறுதலப் பெற்றுக்கவும், பாவம் செய்யுறத நிறுத்தவும், அதோட, தேவனுக்கு சந்தோஷத்தக் கொண்டுவரும் ஒருத்தரா மாறவும் தேவனோட வார்த்ததான் ஒரே வழியா இருந்துச்சு. அதனால நான் ஒரு வேதாகமத்தத் திறந்து, என்னைப் பிரகாசிப்பிக்கும்படி தேவனிடத்துல கேட்டேன். நான் சங்கீதப் புத்தகத்தயும் நீதிமொழிகள் புத்தகத்தயும் அதோடு கூட, கர்த்தராகிய இயேசுவின் மலைப்பிரசங்கத்தயும் வாசிச்சேன், ஆனாலும், நான் போக வேண்டிய பாதைய நான் இன்னும் கண்டுபிடிக்கல. நான் உண்மையிலயே மனமுடஞ்சு போனேன், என்னோட நிதி பிரச்சனைகள் இன்னும் அதிகமா மோசமாகிக்கிட்டு இருந்துச்சு. என்னோட வாழ்க்கயில நெருக்கடி வந்துக்கிட்டே இருந்துச்சு, என்னோட குடும்பத்துக்கு என்னால கொடுக்க முடியல. என்னோட மகளுக்குத் தேவை ஏற்பட்டப்போ, என்னால அவளுக்கு உதவ முடியல. நான் ரொம்ப சோகமா இருந்தேன், இந்தக் கஷ்டங்கள் தற்காலிகமானவைதான்னு சொல்லி அவள ஆறுதல்படுத்த மட்டுந்தான் என்னால் முடிஞ்சுச்சு. ஆனாலும் கூட நான் அத நம்பல. துக்கம் என்னோட உள்ளத்தப் பற்றிப் பிடிச்சுச்சு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. நான் அந்த இடத்த விட்டுப்போயி, இந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு ஏதாவது தீர்வு தேட விரும்புனேன், ஆனா தொற்றுநோய் காரணமா எனக்குத் தேவையான எல்லா ஆவணங்களையோ அல்லது ஒரு பாஸ்போர்ட்டையோ என்னால பெற்றுக்க முடியல. எனக்கு எல்லாமே கடினமாகிக்கிட்டே இருந்துச்சு. அப்பத்தான், என்னோட மனைவி இனிமேல் என் கூட இருக்க விரும்பலன்னு சொன்னாள். அது எனக்குக் கடைசி இடியா இருந்துச்சு. நான் நொறுக்கிப்போவதப் போலவும், அதுக்குமேல வாழுறதுல எந்த அர்த்தமும் இல்லைங்கறதப் போலவும் உணர்ந்தேன். எனக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுற அளவுக்கு நான் மனச்சோர்வடஞ்சேன்—நான் அதிக வேதனையில இருந்தேன். நான் ரொம்ப அழுதேன், நிறைய நாள் ராத்திரியில தூங்க முடியாம இருந்தேன். எனக்குக் கொஞ்சம் சமாதானம் கிடைக்க ஒரே வழி, தேவனிடத்துல ஜெபிக்கறதுதான்.

அதுக்கப்புறம் ஒரு நாள் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்தி வந்துச்சு. தேவனோட வார்த்தையக் கேட்க ஒரு கிறிஸ்தவ வகுப்பில சேரும்படி ஒரு சகோதரி என்னையக் கூப்பிட்டாரு, அதப் படிக்க விரும்புகிறீங்களான்னு அவர் என்கிட்ட கேட்டாரு. நான் விரும்புறேன்னு சொன்னேன், அவர் என்னை ஒரு படிக்கும் குழுவுல சேர்த்தாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளக் கேட்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சப்போ, என்னோட ஜெபங்களுக்கு தேவன் அளித்த பதில்தான் இது அப்படின்னு உணர்ந்தேன். சர்வவல்லமையுள்ள தேவனோட அதிகாரபூர்வமான பேச்சுகளால நான் ஈர்க்கப்பட்டேன், இந்த வார்த்தைகள் எனக்கு இருந்த பல சந்தேகங்களயும் எண்ணங்களயும் தீர்த்துச்சு. தேவன் ஏற்கனவே திரும்பி வந்து புதிய கிரியைய செஞ்சுக்கிட்டு இருக்குறாருங்கறதத் தெரிஞ்சுக்கிட்டேன். இது எனக்குள்ள பெரிய தாக்கத்த ஏற்படுத்துச்சு. என்னோட ஆச்சரியத்துக்கும், சந்தோஷத்துக்கும் ஆர்வத்துக்கும் மத்தியில, தேவனோட 6,000 ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தப் பத்தியும், மனிதகுலத்த இரட்சிப்பதுக்கான அவரோட மூன்று கட்ட கிரியைகளப் பத்தியும், அவர் ஒவ்வொரு காலத்துலயும் வெவ்வேறு நாமத்தப் எடுத்துக்கிறாருங்கறதப் பத்தியும், (யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லமையுள்ள தேவன்) ஒவ்வொரு காலத்துலயும் அவர் செய்யும் கிரியையின் அர்த்தம் பத்தியும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் என்னைக் கவர்ந்தன—நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். நான் இன்னும் பல சத்தியங்களக் கத்துக்கவும், அவற்ற மத்தவங்களோடு பகிர்ந்துக்கவும் விரும்புனேன், அதனால, நான் சந்தோஷமா என்னோட பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டேன், கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்காறாருன்னு அவங்ககிட்ட சொன்னேன். கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்தக் கேக்குற எந்த விசுவாசியும் சந்தோஷப்பட்டு, சத்தியத்தத் தேடி, சுவிசேஷத்த சந்தோஷமா ஏத்துக்குவாங்கன்னும் நெனச்சேன். ஆனா, அது நேர் எதிர்மாறா இருந்துச்சு. “இதுல எதுவுமே வேதாகமத்துல இல்ல, இது எங்கிருந்து உங்களுக்குக் கிடைச்சுச்சு?” அப்படின்னு அவங்க என்கிட்ட கேட்டாங்க. “ஒரு ஆன்லைன் படிப்புக் குழுவுலருந்து நான் அதப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன், நான் இப்பதான் அதப் படிக்கத் தொடங்கியிருக்கேன், அதனால என்னோட அறிவு குறைவா இருக்கு, ஆனா சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் உண்மையில் என்னையக் கவர்ந்திழுத்திருக்குது” அப்படின்னு நான் அவங்ககிட்ட சொன்னேன். கடைசி நாட்கள்ல நிறைய கள்ளக் கிறிஸ்துகள் எழும்புவாங்கன்னு அவங்க சொல்லி, என்னைய கவனமா இருக்கச் சொன்னாங்க. அதுக்கப்புறம், அவங்க எனக்கு ரெண்டு வேதாகம வசனங்கள அனுப்பி வச்சாங்க: “அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்(மாற்கு 13:21-23). நான் ஒரு தவறான மதத்த ஆராயுறேன்ன்னும் அதோட, 21 ஆவது நூற்றாண்டில் தொழில்நுட்ப ரீதியா முன்னேறியிருக்குற உலகத்துல, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்தா, அவர் நிச்சயமா ஒரு பெரிய அதிசயத்தக் காட்டுவாரு, அது உலகம் முழுவதயும் உலுக்கும்ன்னும், ஆனா இதுவரை அப்படி எதுவுமே நடக்கலன்னும், அதோட, கர்த்தராகிய இயேசு தோன்றி வியாதியஸ்தர்கள குணமாக்கல, மரித்தோரை உயிர்த்தெழச் செய்யல, இப்படிப்பட்ட எதையுமே செய்யல, அப்படின்னா, கர்த்தர் இன்னும் திரும்பி வரலன்னுதான் அர்த்தம் அப்படின்னும் அவங்க சொன்னாங்க. அவங்க அதச் சொல்றதக் கேட்டப்போ, என்னோட உள்ளம் சந்தேகங்களால நெறஞ்சுச்சு. கர்த்தராகிய இயேசுவுக்குத் துரோகம் செய்ய நான் பயந்தேன். ஏமாத்தப்பட்டு ஒரு கள்ளக் கிறிஸ்துவப் பின்பற்றிவிடுவனோ அப்படின்னு நான் கவலப்பட்டேன். கர்த்தராகிய இயேசு மேகங்கள் மீது திரும்பி வருவார்ன்னும், ஒரு பெரிய வெள்ளை சிங்காசனத்துல உட்கார்ந்து, ஒவ்வொரு நபரையும் அவரவர் பாவங்களுக்கு ஏற்ப நியாயந்தீர்ப்பாருன்னும், அந்த நேரத்துல நான் இன்னும் உறுதியா நம்பிக்கிட்டு இருந்தேன், ஆனா சுவிசேஷத்தப் பகிர்றவங்க தேவன் மாம்சமாகியிருந்தாருன்னும், நம்மளோட பாவங்கள நியாயந்தீர்க்க வார்த்தைகளப் பேசுறாருன்னும் சொன்னாங்க. இது எல்லாமே எனக்குள் உள்ளான முரண்பாட்ட உருவாக்கி, என்னைய இன்னும் அதிகமா சங்கடப்பட வெச்சுது. எங்களோட மாலைப் பிரசங்கத்த நான் ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டிருந்தாலும் கூட, நான் இதத் தொடர்ந்து ஆராயணும்னுங்கறதப் போல உணர்ந்தேன், ஆனா என்னோட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னது என்னோட இருதயத்த ஊடுருவிருச்சு, அதனால நான் தற்காப்பதா உணர்ந்தேன். பிரசங்கம் தொடங்குனவுடனே, நான் குழுவுலருந்து வெளியேறிவிட முடிவு செஞ்சேன்.

நான் குழுவுலருந்து வெளியேறியதுக்கான காரணத்தப் பத்தி வாட்ஸ்அப்பில் ஒரு செய்திய எழுதினேன். ஒரு கள்ளக் கிறிஸ்துவால நான் ஏமாத்தப்படுறதப் பத்திக் கவலப்பட்டேன்னு என்னோட கவலைகள விளக்கிச் சொன்னேன், அதோட, என்னோட பக்கத்து வீட்டுக்காரங்க எனக்கு அனுப்பிவச்ச வேதாகம வசனங்களயும் சேத்து அனுப்பினேன். நான் அந்தச் செய்திய அனுப்பிட்டு குழுவுலருந்து வெளியேறுறப்போ, திடீர்ன்னு என்னோட கைபேசியில சார்ஜ் இல்லன்னும் அணையப் போவதாவும் அறிவிப்பு வந்துச்சு. நான் ஆச்சரியப்பட்டேன், ஏன்னா, நான் எப்பவுமே கூடுகைகளுக்கு முன்னாடி என்னோட கைபேசிய சார்ஜ் செஞ்சேன், அப்படின்னா, ஏன் பேட்டரி திடீர்ன்னு செயலிழந்துச்சு? ஆனா என்னோட மனசு இன்னும் உறுதியா இருந்துச்சு. எனக்கு நானே சொல்லிக்கிட்டேன், கிறிஸ்து திரும்பி வந்திருந்தா எப்படி பெரிய அதிசயங்கள் நடக்காமப் போகும்? நான் மறுபடியும் என்னோட கைபேசிய சார்ஜ் போடச் சொருகுனேன். என்னோட கைபேசியில கொஞ்சம் சார்ஜ் வந்திருந்தப்பவே செய்திய அனுப்பிவிட முடிவு செஞ்சேன். பேட்டரி 5% ஆனதும், என்னோட கைபேசிய ஆன் பண்ணி குழுவுக்கு அனுப்பப்பட்ட சில வேதாகம வசனங்களப் பார்த்தேன். நான் ஆர்வமா அவற்ற வாசிச்சேன்: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). சகோதர சகோதரிகள் ஐக்கியங்கொண்டு, “தேவனோட வார்த்தையிலருந்து கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் கதவத் தட்டி, தம்மோட வார்த்தைகளால தம்முடைய ஆடுகளக் கூப்பிடுவாரு. நாம கர்த்தரை வரவேற்க முடியுமாங்கறது, பெரும்பாலும் நாம அவரோட சத்தத்தக் கேட்குறமா இல்லையாங்கறதப் பொறுத்துதான் இருக்குது. கதவத் திறந்து அவரை வரவேற்கவும், அவரோடு போஜனம் பண்ணவும் நாம கர்த்தரோட சத்தத்தக் கேக்கக்கூடியவங்களா இருக்கணும் அப்படிங்கறத நம்மால பார்க்க முடியுது. அதனால, கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாருன்னு யாராவது சாட்சி சொல்றத நீங்க கேட்டா, கதவ மூடாதீங்க, இல்லேன்னா நாம ஏமாத்தப்பட்டுருவோமோன்னு பயப்படாதீங்க, அதுக்குப் பதிலா, புத்தியுள்ள கன்னியா இருங்க—கர்த்தரோட சத்தத்தக் கேக்கறதுல கவனம் செலுத்துறது ரொம்பவே முக்கியம்” அப்படின்னு பேசினாங்க. அதுக்கப்புறமா, ஒரு சகோதரி சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள குழுவுக்கு அனுப்பியிருந்ததப் பார்த்தேன். “இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். … மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்”). சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளும் மத்தவங்களோட ஐக்கியமும் என்னை வியப்பில ஆழ்த்துச்சு. எனக்குத் தேவையான எல்லா பதில்களும் அதுல இருந்துச்சு. இது நிச்சயமா உண்மதான்னு நானே எனக்குள்ள சொல்லிக்கிட்டேன். தேவன் எப்பவுமே புதுமையானவர், ஒருபோதும் பழைமையானவர் அல்ல, அவர் எப்பவுமே புதிய கிரியையச் செய்யுறாரு. அவர் தம்மோட பழைய கிரியைய மறுபடியும் செய்ய மாட்டாரு. கர்த்தராகிய இயேசு நியாயப்பிரமாண காலத்தின் கிரியைய மறுபடியும் செய்யல, அப்படியிருக்க, தேவன் திரும்பி வர்றப்போ கிருபையின் காலத்து அதே கிரியைய ஏன் செய்யணும்? சர்வவல்லமையுள்ள தேவன் இப்ப வந்திருக்கிறாரு ஒரு புதிய காலத்தத் தொடங்கியிருக்கிறாரு, அவர் ராஜ்யத்தின் காலத்து புதிய கிரியையச் செய்யுறாரு. இந்தக் கிரியை இதுக்கு முன்னாடி செஞ்சதில்ல. சர்வவல்லமையுள்ள தேவன் நம்மள எச்சரித்திருக்கிறாரு. “இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள்.” பொல்லாத ஆவிகள் மட்டுமே தேவனோட கடந்தகால கிரியையப் பின்பற்றுது, ஜனங்கள வழிதவறச் செய்ய தேவன்தான் அற்புதங்கள நிகழ்த்துறதப் போல நடிக்குது. இது உண்மையிலயே என்னைப் பிரகாசிப்பிக்கிறதா இருந்துச்சு. கள்ளக் கிறிஸ்துக்கள எப்படிப் பகுத்தறிவதுங்கறதயும், ராஜ்யத்தின் காலத்துல தேவன் அடையாளங்களயும் அற்புதங்களயும் காட்டாததுக்கு உண்மையான காரணத்தையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். கடைசி நாட்கள்ல, சத்தியங்கள வெளிப்படுத்துவதன் மூலமா நியாயந்தீர்க்குற, சுத்திகரிக்குற, மனிதகுலத்த இரட்சிக்குற, மனுஷனத் தமது ராஜ்யத்துக்குக் வழிநடத்துற கிரியைகள தேவன் செய்யுறாரு. அதப் புரிஞ்சுக்கிட்ட பிறகு, நான் கூடுகைகள்ல தொடர்ந்து கலந்துக்கிட்டேன்.

அதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் வேற ஒரு பத்திய வாசிச்சேன். “இயேசுவை விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களைச் சபிக்கவோ கண்டிக்கவோ தகுதி பெறவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உனது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீ நம்பினால், பின்னர் இந்த வார்த்தைகளின் 10,000வது வார்த்தையில் நீ தொடர்ந்து தேட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உன்னை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் இன்னும் உனக்கு அறிவுறுத்துகிறேன். தேவனிடம் இத்தகைய அற்ப பயபக்தியை உனது இருதயம் கொண்டிருப்பதால், நீ மாபெரும் வெளிச்சத்தைப் பெறுவாய். இந்த வார்த்தைகளை நீ கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், அவை ஜீவனா இல்லையா என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஒருவேளை, சில வாக்கியங்களை மட்டுமே வாசித்த சிலர், இந்த வார்த்தைகளைக் கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள், ‘இது பரிசுத்த ஆவியானவரின் கொஞ்ச வெளிச்சமே அன்றி வேறொன்றுமில்லை’ அல்லது ‘இவர் ஜனங்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்! தேவனின் கிரியை மற்றும் ஞானத்தை மிகக் குறைவாகவே நீ புரிந்துகொள்கிறாய், மேலும், நீ மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டுமென நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்! கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது, மேலும் நீங்கள் வஞ்சகத்திற்குப் பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக தூஷணம் செய்யும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீ இன்னும் நம்பினால், நீ இறுதியில் தண்டிக்கப்படுவாய் மற்றும் நீ ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பாய். இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் பேசப்படும் இத்தகைய சத்தியத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனின் இரட்சிப்புக்கு நீ தகுதியற்றவனாக இருக்கிறாய் அல்லவா? நீ தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்கு போதுமான பாக்கியம் இல்லாத ஒருவன் அல்லவா? அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாகக் கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் வாழ்வின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). தேவனோட வார்த்தைகள்ல கடைசி நாட்கள்ல தேவன் திரும்பி வருவதப் பத்திய விஷயத்துல, நாமும் ஞானமுள்ள கன்னிகைகளப் போலவே இருக்கணும், கிறிஸ்துவின் தோன்றுதல அவசரமா மறுதலிக்கக் கூடாது. கள்ளக் கிறிஸ்துகள் கடைசி நாட்கள்ல தோன்றுவாங்கங்கறதுனால, தேவனோட புதிய கிரியையயும் அவர் பேசுற வார்த்தைகளயும் நாம கண்மூடித்தனமா நிராகரிச்சு கண்டனம் செய்யலாம்ன்னு அர்த்தமில்ல அப்படின்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். தேவனோட சத்தத்தக் கேக்கவும், தேவனோட கிரியைய தாழ்மையோடு தேடுற மனப்பான்மையோடு விசாரிக்கவும் நாம கத்துக்கணும். அதுதான் தேவனோட சத்தத்தக் கேட்டு கர்த்தர வரவேற்குற ஒரே வழி. இல்லேன்னா, நாம தேவனோட இரட்சிப்ப இழந்துபோயிருவோம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றதப் போல, “கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாகக் கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் வாழ்வின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?” சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் என்னோட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க பகிர்ந்துக்கிட்ட தவறான கருத்துகள் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஆராய்ஞ்சு பாக்கவிடாம என்னயத் தடுத்தப்போ, நான் த்துக் கொள்றதுல அவசரமா இருந்தேன்னு எனக்குக் காட்டுச்சு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைப் பத்திய ஆழமான புரிதலப் பெற நான் முயற்சிக்கல அல்லது என்னோட கேள்விகளுக்குப் பதிலளிக்க சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையில இருக்கிற மத்தவங்கள நாடல. நான் உணர்ச்சி வசப்பட்டு குழுவுலருந்து வெளிய வந்து, மெய்யான வழியப் ஆராய்றத நிறுத்த முடிவு செஞ்சேன். என்னோட உணர்ச்சி வசப்படுதல், கடைசி நாட்களின் தேவனோட இரட்சிப்ப கிட்டத்தட்ட இழக்க வெச்சுச்சு. அதுக்கப்புறமா, குழப்பங்களுக்கும் சந்தேகங்களுக்கும் மத்தியில என்னால உணர்ச்சிவசப்படுதலுக்கு அடிபணிய முடியாது, அல்லது அவசரமா நியாயத்தீர்ப்பு செய்ய முடியாதுங்கறதயும், நான் எச்சரிக்கையா இருக்கணும்ங்கறதயும், எல்லா நேரங்கள்லயும் தேவனிடத்துல ஜெபிச்சு, சத்தியத்தத் தேடணும்ங்கறதயும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் தேவனோட வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்து பணிவோடு தேடணும் அதன் மூலமா, நான் அவரோட வழிகாட்டுதலினால தேவனோட சத்தத்த அடையாளம் கண்டு, கர்த்தரோட வருகைய வரவேற்க முடியும். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள தினமும் புசிச்சுப் பானம்பண்ணுறது வேதாகமத்தப் பத்திய ஆழமான புரிதல எனக்குக் கொடுத்துச்சு, அதனால, இதுவே கடைசி நாட்களின் தேவனோட தோன்றுதலும் கிரியையும்ங்கறத நான் உறுதியா நம்புனேன். அதோட, நான் தயக்கமில்லாம சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துக்கிட்டேன்.

ஒரு நாள், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் வேற ரெண்டு பத்திகள வாசிச்சேன். “அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). “மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். தேவனின் சாராம்சத்தையும், மனிதனால் அடைய முடியாத தேவனின் மனநிலையையும், அவருடைய கிரியையில் இருக்கும் ஞானத்தையும் அவர் கொண்டிருப்பதால் எதுவும் கூடுதலாக இல்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை ஒரு மனிதனால் பதிலீடுசெய்ய முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்துவின் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன். இவ்விதமாக, நீ உண்மையிலேயே ஜீவனுக்கான வழியைத் தேட விருப்பப்பட்டால், தேவன் பூமிக்கு வந்தே மனுஷனுக்கு ஜீவனுக்கான வழியைக் கொடுக்கும் கிரியையைச் செய்கிறார் என்பதை நீ முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் கடைசி நாட்களில்தான் அவர் பூமிக்கு வந்து மனுஷனுக்கு ஜீவனின் வழியைக் கொடுக்கிறார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கடந்த காலத்தில் அல்ல; இது இன்று தான் நடக்கிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). தேவனோட வார்த்தைகள்லருந்து பொய்யான கிறிஸ்துகளிடத்துலருந்து மெய்யான கிறிஸ்துவக் கண்டுபிடிச்சுச் சொல்ல வெளித்தோற்றத்த வச்சு மதிப்பிட முடியாது, அவங்களோட சாராம்சத்த நாம பாக்கணும், அதாவது, அவங்களால தேவனோட கிரியையச் செய்ய முடியுதாங்கறதயும் அதோட, தேவனோட வார்த்தைகளயும் மனநிலையயும் வெளிப்படுத்த முடியுதாங்கறதயும் பார்த்துத் தீர்மானிக்கணும் அப்படிங்கறத கத்துக்கிட்டேன். தேவன் மாம்சமாகியிருக்கிறாரு, அவர் சத்தியங்கள வெளிப்படுத்திக்கிட்டு இருக்குறாரு, அவரோட கிரியைய செஞ்சுக்கிட்டு இருக்குறாரு. அவர் வெளிப்படுத்துற எல்லாமே தேவன் என்ன கொண்டிருக்காரு, அவர் என்னவா இருக்காரு அப்படிங்கறதா இருக்குது-அது முழுக்க முழுக்க தேவனோட மனநிலை, அதோட, அவர் செய்யுற கிரியை ஜனங்கள இரட்சிக்கும். இது எல்லாமே எந்த மனுஷனும் கொண்டிருக்க முடியாத அல்லது அடைய முடியாத விஷயங்கள். அதனால, ஒருவர் கிறிஸ்துதானாங்கறதத் தீர்மானிக்கறதுக்கான மிகச் சரியான வழி, அவங்களால தேவனோட கிரியையச் செய்ய முடியுதா இல்லையாங்கறதயும் தேவனோட வார்த்தைகளயும் மனநிலையயும் வெளிப்படுத்துறாங்களாங்கறதயும் பாக்கறதுதான். சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஆராய்ஞ்சு அவரோட வார்த்தைய வாசிக்கும் அந்த நேரங்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் மூலமா வெளிப்படுத்தப்பட்ட மனுஷனுக்கான அன்பப் பாக்குறதுக்கும் மேலா, நான் தேவனோட நீதியயும், உக்கிரத்தயும், மகத்துவத்தயும் பார்த்தேன். அவரோட வார்த்தைகள் கருக்கான பட்டயத்தப்போல, நம்மளோட இருதயத்துல இருக்கற சீர்கேட்ட பிளந்து வெளிப்படுத்துது, நம்மளோட தேவனை எதிர்க்கும் சாத்தானிய சுபாவத்த வெளிப்படுத்துது. அவரோட வார்த்தைகளின் மூலமா நம்மளோட இருதயத்தின்உள்ளான சீர்கேட்டயும் நம்மளோட விசுவாசத்துல நாம போக வேண்டிய பாதையயும் நாம நேரடியா பாக்கலாம். அவரோட வார்த்தைகளக் கைக்கொள்றது மூலமா, நாம படிப்படியா நம்மளோட சீர்கெட்ட மனநிலைகள சரிசெஞ்சுக்கிட்டு சாதாரண மனிதத்தன்மையோடு வாழ முடியும். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சத்தியத்தின் பல இரகசியங்கள வெளிப்படுத்துது, மனித குலத்த இரட்சிப்பதுக்கான அவரது 6,000 வருஷ நிர்வாகத் திட்டத்தப் பத்தித் தெரிஞ்சுக்க உதவுது. இந்த விஷயங்கள வேதாகமத்துல அல்லது எந்த மதத்துலயும் பாக்க முடியாது. இது எல்லாமே கடைசி நாட்கள்ல தேவன் மனிதகுலத்துக்காக வெளிப்படுத்துற சத்தியத்தின் இரகசியங்களும், ஜனங்கள் இதுக்கு முன்னாடி கேள்விப்படாத அல்லது பாக்காத விஷயங்களுமா இருக்குது. தேவனைத் தவிர, வேறு எந்த நபரோ அல்லது பிரபலமான ஒருவரோ சத்தியத்த வெளிப்படுத்தி மனிதகுலத்த இரட்சிக்க முடியாது. மனுவுருவான தேவனால மட்டுமே சத்தியத்த வெளிப்படுத்தவும் நியாயந்தீர்க்குற, மனுஷன சுத்திகரிக்குற கிரியைய செய்யவும், நமக்கு வழியயும், சத்தியத்தயும், ஜீவனயும் கொடுக்கவும் முடியும். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல இருந்து, அவர்தான் கடைசி நாட்களின் கிறிஸ்து, வானங்களயும், பூமியயும் எல்லாப் பொருட்களையும் சிருஷ்டிச்ச தேவனும், பூமியில மனுஷனோட வாழ்க்கைய வழிநடத்த நியாயப்பிரமாணத்த வழங்கிய தேவனும், மனிதகுலம் முழுவதயும் மீட்க சிலுவையில அறையப்பட்ட தேவனும், மேலும், கடைசி நாட்கள்ல நம்மளோட பாவங்கள்ல இருந்து நம்மள இரட்சிக்கத் திரும்பி வந்திருக்கிற தேவனுமா இருக்காருங்கறத நான் உறுதி செஞ்சுக்கிட்டேன். சந்தேகமே இல்லாம, தேவனே ஆதியும் அந்தமுமா இருக்காரு, சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தராகிய இயேசுவோட வருகையா இருக்காரு. அந்தக் கள்ளக் கிறிஸ்துகள் ஏமாத்துக்காரங்களா இருக்காங்க, அவங்க சீக்கிரத்துல விழுந்து போவாங்க, ஏன்னா, அவங்களால சத்தியத்த வெளிப்படுத்த முடியாது, அவங்களால தேவனோட புதிய கிரியையச் செய்ய முடியாது, அதோட, சீர்கேட்ட ஒழிச்சு, இரட்சிக்கப்பட ஜனங்களுக்கு அவங்களால வழிகாட்ட முடியாது. அவங்களால செய்ய முடிஞ்சதெல்லாமே, ஜனங்கள தவறா வழிநடத்தி, சீர்கெடுக்க தேவனோட கடந்தகால கிரியையப் பின்பற்றுறதுதான். இப்போ, சர்வவல்லமையுள்ள தேவனாகிய, கடைசி நாட்களின் கிறிஸ்து சத்தியத்த வெளிப்படுத்துறாரு தேவனோட வீட்ல தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியை செஞ்சுக்கிட்டு இருக்காரு. அவர் ஜனங்களோட சீர்கேட்ட சுத்திகரிச்சு, மாற்றியமச்சு, பாவத்துலருந்து மனிதகுலத்த இரட்சிக்கிறாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைகளும் வார்த்தைகளும் அவர்தான் மெய்யான தேவனோட தோன்றுதலாய் இருக்காருங்கறத முழுசா நிரூபிக்குது. அதுல சந்தேகத்துக்கே இடமில்ல.

முன்னாடி, நான் என்னோட எண்ணங்களப் பற்றிப்பிடிச்சுக்கிட்டு இருந்தேன். கடைசி நாட்கள்ல வானத்துல ஒரு பெரிய வெள்ளை சிங்காசனத்துல உட்கார்ந்து தேவன் மனுஷனோட பாவங்கள நியாயந்தீர்ப்பாருன்னு நெனச்சேன். ஆனா தேவனோட வார்த்தைகள சேகரிச்சு வாசிச்சது மூலமா, என்னோட இந்த எண்ணம் சரி செய்யப்பட்டுச்சு. ஏன்னா, கடைசி நாட்கள்ல தேவன் தமது நியாயத்தீர்ப்புக் கிரியையின் மூலமா ஜனங்கள எப்படி சுத்திகரிக்குறாருங்கறத நான் கத்துக்கிட்டேன். கர்த்தராகிய இயேசு இப்படிச் சொல்லியிருப்பத நான் பார்த்தேன்: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்(யோவான் 17:17). “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). ஒரு நாள், நான் இத சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள்ல வாசிச்சேன். “மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). “மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கடைசி நாட்களின் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற வெவ்வேறான இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனைப் பற்றி நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை எதைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்”). தேவன் மனுவுருவாவதன் மூலம் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியைய செய்யுறாருன்னும் மனிதகுலத்த மாத்துறதுக்கும் இரட்சிக்கறதுக்கும் சத்தியங்கள வெளிப்படுத்துறாருன்னும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவன் ஏற்கனவே மனுஷனோட சாத்தானிய சுபாவத்த வெளிப்படுத்திப் பேசியிருக்கிறாரு அதுல அகந்தையும், தந்திரமும் பொல்லாப்பும் அடங்கியிருக்குது. அதோடு, மனுஷனோட சுயநலத்தயும் பேராசையயும் வெளிப்படுத்தியிருக்கிறாரு, அவரோட வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மூலமா ஜனங்கள் தங்களோட சீர்கேட்டின் உண்மையப் பாக்கவும், தங்களயே வெறுக்கவும், தேவனிடத்துல மனந்திரும்பவும், தேவனைக் கனம் பண்ணவும் அவருக்குக் கீழ்ப்படியவும் உதவியிருக்கறாரு. மனுஷனோட சாத்தானிய சுபாவத்த சரிசெய்வதுக்கான ஒரே வழி, கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியைதான். எந்த மனுஷனாலயும் அதச் செய்ய முடியாது. அந்த நேரத்துல, தேவன் ஒவ்வொரு நபரையும் வானத்துல ஒரு பெரிய வெள்ளை சிங்காசனத்துல இருந்து நியாயந்தீர்த்தா, சாத்தானால சீர்கெட்டுப்போன மனிதகுலத்துல யாருக்கும் இரட்சிப்புக்கான வாய்ப்பு இருக்காது அப்படிங்கறத நான் உணர்ந்தேன். ஏன்னா, முழு மனிதஇனமும் சாத்தானோட சீர்கேட்டால சூழப்பட்டிருக்குது. கர்த்தராகிய இயேசுவின் சிலுவையின் இரட்சிப்பின் மூலமா, நாம மீட்கப்பட்டு, நம்மளோட பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், நாம இன்னும் பாவிகளாத்தான் இருக்கறோம். நாம திரும்பத் திரும்ப பாவம் செய்தல் அறிக்கையிடுதல்ன்னு சுழன்றுக்கிட்டே இருக்குறோம். நாம நியாயத்தீர்ப்ப அனுபவிக்கலேன்னா, நம்மளோட சீர்கேடு சுத்திகரிக்கப்பட முடியாது, கடைசியா, நாம தேவனால் கண்டிக்கப்பட்டு புறம்பாக்கப்படுவோம். தேவனோட வார்த்தைகளால நேரடியா நியாயந்தீர்க்கப்பட்டு அம்பலப்படுத்தப்படுறது மூலமா மட்டுந்தான், நம்மள சரியாத் தெரிஞ்சுக்கிட்டு நம்மளோட சீர்கேட்டுல இருந்து நம்மால சுத்திகரிக்கப்பட முடியும். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்றதப் போல, “இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும்.”

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள ஒருதடவ ஒரு கூடுகையில வாசிச்சேன் அது உண்மையிலயே எனக்குள் உணர்வுகளத் தூண்டி எழுப்புச்சு. “சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பின்பற்றுகிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று ஜனங்கள் சொன்னால், நீயும்கூட இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறுகிறாய்; இது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று ஜனங்கள் சொன்னால், நீயும் கூட சந்தேகப்படுகிறாய், அல்லது அது ஒரு பொல்லாத ஆவியின் வேலை என்று நீயும் சொல்கிறாய். நீங்கள் எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைக் கிளிபோல் திரும்பச் சொல்கிறீர்கள், எதையும் உங்களால் வேறுபடுத்திப் பார்க்கவும் இயலவில்லை, உங்களுக்காக உங்களால் சுயமாக சிந்திக்கவும் முடியவில்லை. ஒரு நிலைப்பாடில்லாத, வேறுபடுத்திப் பார்க்க முடியாத அத்தகைய நபர் ஒன்றுக்கும் உதவாத ஒரு சிறுமைப்பட்டவர்! நீ எப்போதும் மற்றவர்களின் வார்த்தைகளைத் திருப்பிக் கூறுகிறாய்: இன்று இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று கூறப்படுகிறது, ஆனால் ஒரு நாள் யாராவது ஒருவர் இது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அல்ல என்று சொல்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது, அது உண்மையில் மனிதனின் செயல்களைத் தவிர வேறொன்றுமில்லை—ஆனாலும் உன்னால் இதை உணர இயலாது, மற்றவர்களால் சொல்லப்படுவதை நீ காணும்போது, நீயும் அதையே சொல்கிறாய். இது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, ஆனால் நீ இது மனிதனின் வேலை என்று கூறுகிறாய்; பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு எதிராகத் தூஷிக்கிறவர்களில் ஒருவனாக நீ மாறவில்லையா? இதில், நீங்கள் வேறுபடுத்த முடியாததால் தேவனை எதிர்க்கவில்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்”). மெய்யான வழிய ஆராயுறப்போ மத்தவங்களோட வழிகாட்டுதல கண்மூடித்தனமா கேக்கறதுக்கும், மனித எண்ணங்களின் அடிப்படையிலயும் கற்பனைகளின் அடிப்படையிலயும் தேவனோட கிரியைய மதிப்பீடு செய்யறதுக்கும் எதிரா தேவனோட வார்த்தைகள் நம்மள எச்சரிச்சுது. இது கர்த்தரோட வழியில இருந்து நம்மள விலக்கி வைக்கும். கடைசியா நாம நிராகரிக்கப்பட்டு, தேவனால் புறம்பாக்கப்பட்டு, இரட்சிப்புக்கான வாய்ப்ப இழந்து போறோம். இந்தச் சோகமான உண்ம நம்மள்ல எவருக்கும் நடக்கக்கூடிய ஒன்னுதான். நான் எவ்வளவு முட்டாள்தனமாவும் உணர்ச்சிவசப்பட்டும் இருந்து வந்தேன்னு வெட்கப்பட்டேன். தேவனோட சத்தத்தக் கேட்டு இந்த வார்த்தைகள்ல அதிகாரமும் சத்தியமும் அடங்கியிருப்பதா உணர்ந்த பிறகும் கூட, எப்படி நான் அப்பவும் என்னோட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களால தூண்டப்பட்டு, அவங்க சொன்ன விஷயங்களால வழிதவறிப்போனேன்? என்னோட முட்டாள்தனம் என்னைய கிட்டத்தட்ட சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபைய விட்டு வெளியேற செஞ்சுச்சு, கர்த்தராகிய இயேசுவின் வருகைய வரவேற்பதத் தவறவிட்டுட செஞ்சுச்சு, இரட்சிப்புக்கான என்னோட வாய்ப்ப அழிச்சிருச்சு! என்னோட கண்மூடித்தனமும் அறியாமையும் எனக்கு இவ்வளவு பயங்கரமான விளைவுகள ஏற்படுத்தியிருந்திருக்கலாம்! எல்லா நேரங்கள்லயும் புத்தியுள்ள கன்னிகையா இருக்கணும்ங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். தேவனோட சத்தத்த நாம கேட்டோம்னா, நாம அதப் பத்திச் சந்தேகப்பட முடியாது. நாம இருதயத்துல இருந்து ஜெபிக்கணும், நம்மள பிரகாசிப்பிக்கவும் வழிநடத்தவும் தேவனிடத்துல கேக்கணும், கண்மூடித்தனமா மத்தவங்களுக்குச் செவிகொடுக்கக் கூடாது, ஏன்னா நாம எல்லாருமே சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களா இருக்கோம், நாம சத்தியத்தக் உடையவர்களா இல்ல. பேதுரு கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளக் கேட்டு, கர்த்தரைப் பின்பற்றியதப் போல, தேவனோட வார்த்தைகள நாம எல்லா நேரங்கள்லயும் பின்பற்றணும். என்னோட முந்தைய முட்டாள்தனத்தயும் அறியாமையயும் நெனச்சு, சர்வவல்லமையுள்ள தேவனிடத்துல ஜெபிச்சு, என்னோட தவறுகள மன்னிக்கும்படி அவரிடத்துல கேட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனையும், அவரோட வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் இரட்சிப்பயும் ஏத்துக்க நான் ஆயத்தமா உணர்ந்தேன்.

அன்னையிலருந்து, நான் தினமும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சு வர்றேன். நான் பலவீனமா இருக்குறப்போ, தடுமாறி விழாம இருக்க, நான் தேவனிடத்துல விசுவாசத்தயும் வலிமையயும் தரும்படி கேக்குறேன். தேவனோட வழிகாட்டுதலோடும் உதவியோடும், நான் இப்ப என்னோட மனச்சோர்வ மேற்கொண்டு நேர்மறையான நபரா மாறிட்டேன். எனக்குப் புது வேலையும் இருக்குது. இது எல்லாமே தேவனோட அற்புதமான ஏற்பாடுகளினாலதான்னு நான் நினைக்குறேன். படிப்படியா, என்னோட வாழ்க்க ரொம்பவே மேம்பட்டுச்சு. ரொம்ப முக்கியமா, என்னால தினமும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் புசிச்சுப் பானம்பண்ணவும், மத்தவங்களோடு கூடி ஐக்கியங்கொள்ளவும் முடிஞ்சுச்சு. இப்போ, நான் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கவும், தேவனோட வார்த்தைகளுக்குச் சாட்சி கொடுக்கவும் ஆரம்பிச்சுட்டேன், மெய்யான வழிக்காக தாகமாயிருக்கற உண்மையான விசுவாசிகள் தேவனோட சத்தத்தைக் கேட்கவும், கடைசி நாட்கள்ல அவரோட இரட்சிப்ப ஏத்துக்கவும் உதவி செஞ்சுக்கிட்டிருக்குறேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனின் தோன்றலை நான் கண்டேன்

நான் கொரிய பிரஸ்பிட்டீரியன் சபயச் சார்ந்தவனா இருந்தேன். என் மகளுக்கு வியாதி வந்தப்ப என் குடுமப்த்தில எல்லாரும் விசுவாசிங்க ஆனோம். அதுக்குப்...

இன்றைய நாளுக்கான கத்தோலிக்க சிந்தனை: கத்தோலிக்க வழிபாட்டு முறையைக் கடைப்பிடிப்பது கர்த்தருக்கு ஏற்புடையதா?

ஜெங்சின், ஆஸ்திரேலியா ஆசிரியரின் குறிப்பு: இரண்டாயிரம் ஆண்டுகளாக, தேவனை விசுவாசிக்கும் அனைவரும் வழிபாட்டு முறைமை, பாவசங்கீர்த்தனம்,...

வேதாகமத்தைத் தவிர வேறெதிலாவது தேவன் பேசியிருக்கிறாரா?

2018 ஜனவரியில ஒரு நாள் நான் சகோதரி சியேயையும் சகோதரி சென்னையும் ஆன்லைன்ல சந்திச்சேன், அவங்களுக்கு வேதாகமத்த பத்திய ஒரு பிரத்தியேகமான...

தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

By Danchun, the United States சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய...