சுவிசேஷத்தை நன்றாகப் பிரசங்கிப்பதற்கு பொறுப்பு முக்கியமானது
நான் எப்பவும் என் கடமைகள பெருசா எடுத்துக்காம அதிக முயற்சி செய்யாம இருந்தேன். நான் அடிக்கடி விஷயங்கள கவனமில்லாம செஞ்சேன். சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்கள நான் பிரசங்கங்கள கேக்கக் கூப்பிடுவேன், ஆனா அவங்களோட பேசவோ இல்ல அவங்க கேட்டத பத்தி அவங்க எப்படி உணர்ந்தாங்கன்னு கேட்கவோ தயாரா இல்லாம இருந்தேன். நெறைய பேர கேக்குறதுக்கு வரக் கூப்பிடுறது என் கடமைய சரியா செஞ்சேன்னு அர்த்தம்னு நான் நெனச்சேன். அதோட, இது எனக்கு எளிதா இருந்துது. அவங்களோட பேசறது எனக்கு கஷ்டமா தெரிஞ்சுது; அது நேரத்த எடுக்கறதுமில்லாம, அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்றதுக்கும் பிரயாசம் தேவைப்படும், அதனால நான் அவங்களோட பழக விரும்பல. சுவிசேஷ ஊழியர்கள் அவங்களோட பேசுவாங்க, அது போதும், அவங்களோட நிலைமை எனக்குத் தெரியலைன்னாலும் பரவாயில்லைன்னு நான் நெனச்சேன். ஒரு கூட்டத்துல, “நாம பிரசங்கங்கள கேக்குறதுக்கு ஜனங்கள கூப்பிடும்போது அதுக்கப்புறம் அவங்க கிட்ட என்ன நடக்குதுன்னு நாம தெரிஞ்சுக்கணும், அவங்க கூட்டங்களுக்கு வர்றாங்களா, சொன்னது அவங்களுக்குப் புரியுதான்னு பார்க்கணும், அதோட அவங்களோட கருத்துகள கேட்கணும். அன்போட அவங்களுக்கு உதவுறதுக்கு நம்மால முடிஞ்சது நாம செய்யணும், இது நம்மோட பொறுப்பும் கூட” அப்படின்னு தலைவர் சொன்னாரு. ஆனா நான் அத அப்போ உணரல. நான் அத ஒரு தொந்தரவுன்னு நினைச்சேன், அதனால அந்த அளவுக்கு நான் தியாகம் பண்ணல அல்லது அதிக கஷ்டங்கள தாங்கல. நான் சுலபமான பாதைய தெரிஞ்சுக்கிட்டேன், நான் முடிவுகள அடஞ்சேனாங்கறத பத்தி நான் சிந்திக்கவேயில்ல. தலைவர் சொன்னாரு, ஒரு தடவ, ஒரு சிலர் கேக்கறதுக்கு பல பேர கூப்பிட்டிருந்தாங்க, ஆனா அதுல கொஞ்சம் பேரு தான் உண்மையா தேடுனாங்க இல்ல ஆராஞ்சாங்க. நான் இவர்கள்ல ஒருத்தின்னு எனக்குத் தெரியும்; நான் மேலோட்டமான வேலையில மட்டுந்தான் கவனம் செலுத்துனேன், அதோட உண்மையான பலன்கள் எதுவும் கிடைக்கல. அதுக்கப்புறம் என்னோட வேலைய ஆராய தலைவர் வந்தாரு, “சுவிசேஷத்த ஏத்துக்கக்கூடிய இவங்க இப்ப எப்படி இருக்காங்க?” அப்படின்னு கேட்டாரு. நான் சங்கடப்பட்டேன், என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல. அவங்கள்ல நெறைய பேரோட நான் தொடர்புல இல்லாம இருந்தேன், பிரசங்கங்கள கேக்க வராத சில பேருக்கு நான் உதவி செய்யாம அவங்கள ஆதரிக்காம இருந்தேன். நான் அப்படியே அவங்கள கைவிட்டிருந்தேன்.
தலைவர்கிட்ட பேசினதுக்கப்புறம் சிந்திக்க ஆரம்பிச்சேன். தேவன் இப்படி சொல்றத நான் பார்த்தேன், “தேவன் ஜனங்களிடம் செய்யக் கேட்கும் அனைத்தும், மற்றும் தேவனுடைய வீட்டில் உள்ள பல்வேறு வகையான பணிகள் ஆகிய ஜனங்கள் செய்ய வேண்டிய இவை அனைத்தும் ஜனங்களின் கடமைகளாகக் கருதப்படுகின்றன. ஜனங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்கள் செய்ய வேண்டிய கடமை இதுதான். கடமைகள் ஒரு பரந்த வரையெல்லையை உள்ளடக்கியுள்ளன, மேலும் பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளன, ஆனால் நீ எந்த வேலையைச் செய்தாலும், தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இதுதான் உன் கடமையாகும், இதுதான் நீ செய்து கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகும். நீ எந்தக் கடமையைச் செய்தாலும், அதைச் சிறப்பாகச் செய்ய நீ கடும்முயற்சி செய்தால், தேவன் உன்னைப் பாராட்டுவார், மேலும் தேவனை உண்மையாக விசுவாசிக்கும் ஒருவனாக உன்னை அங்கீகரிப்பார். நீ யாராக இருந்தாலும் சரி, நீ எப்போதும் உன் கடமையைத் தவிர்க்கவோ அல்லது அதிலிருந்து மறைந்து கொள்ளவோ முயன்றால், அப்போது அங்கே ஒரு பிரச்சனை உள்ளது: மென்மையாகச் சொல்வதானால், நீ மிகவும் சோம்பேறி, மிகவும் வஞ்சகமுள்ளவன், வேலையற்றவன், நீ ஓய்வை விரும்பி வேலையை வெறுக்கிறாய்; இன்னும் கடுமையாகச் சொல்வதென்றால், நீ உன் கடமையைச் செய்யத் தயாராக இல்லை, உனக்கு எந்த அர்ப்பணிப்பும் இல்லை, எந்தக் கீழ்படிதலும் இல்லை. இந்தச் சிறு பணிக்கு உன்னால் முயற்சி செய்ய முடியாவிட்டால், உன்னால் எதைச் செய்ய முடியும்? உன்னால் எதைச் சரியாகச் செய்ய முடியும்? ஒரு நபர் உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் இருந்தால், மற்றும் தனது கடமையைக் குறித்து பொறுப்புணர்வைக் கொண்டிருந்தால், அது தேவனுக்குத் தேவைப்படும் வரையிலும், அது தேவனுடைய வீட்டிற்குத் தேவைப்படும் வரையிலும், அவர்களிடம் கேட்ட எதையும் தேர்வு இல்லாமல் அவர்கள் செய்வார்கள். ஒருவரால் இயன்ற மற்றும் செய்ய வேண்டிய எதையும் பொறுப்பெடுத்து செய்துமுடிப்பது ஒருவரின் கடமையைச் செய்வதற்கான கொள்கைகளில் ஒன்றல்லவா? (ஆம்.)” (வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி பத்து: அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள், கொள்கைகளை பகிரங்கமாக மீறுகிறார்கள், மற்றும் தேவனுடைய வீட்டின் ஏற்பாடுகளைப் புறக்கணிக்கிறார்கள் (பகுதி நான்கு)”). “நீ கீழ்ப்படிதலுடனும் நேர்மையுடனும் இருந்தால், அப்போது நீ ஒரு பணியைச் செய்யும்போது, நீ கவனக்குறைவாகவும் சிரத்தையற்றும் இருக்கமாட்டாய், மேலும் முன்பைவிட தளர்வாய் இருக்க வழிகளைத் தேட மாட்டாய், ஆனால் உன் சரீரம் மற்றும் ஆத்துமா முழுவதையும் அதில் ஈடுபடுத்துவாய். தவறான நிலையை உள்ளே வைத்திருப்பது, எதிர்மறையை உருவாக்குகிறது, அது ஜனங்களை தங்கள் உந்துதலை இழக்கச் செய்கிறது, அதனால் அவர்கள் கவனக்குறைவாகவும் மெத்தனமாகவும் மாறுகிறார்கள். தங்கள் இருதயங்களில் தங்கள் நிலை சரியில்லை என்று நன்றாகத் தெரிந்தாலும், இன்னும் சத்தியத்தைத் தேடி அதைச் சரி செய்ய முயற்சிக்காதவர்கள், சத்தியத்தின் மீது நேசத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள், மேலும் தங்கள் கடமையைச் செய்ய சிறிதளவு மட்டுமே தயாராக இருக்கிறார்கள்; அவர்கள் எந்த முயற்சியையும் செய்யவோ அல்லது கஷ்டங்களை அனுபவிக்கவோ விருப்பமில்லாதிருக்கிறார்கள், மேலும் முன்பைவிட தளர்வாய் இருப்பதற்கான வழிகளையே எப்போதும் தேடுகிறார்கள். உண்மையில் தேவன் இதையெல்லாம் ஏற்கனவே பார்த்திருக்கிறார், அப்படியானால் அவர் ஏன் இந்த ஜனங்களைக் குறித்துக் கவனம் செலுத்துவதில்லை? தேவன் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் விழித்தெழுந்து, அவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளங்கண்டு, அவர்களை அம்பலப்படுத்தி புறம்பாக்குவதற்காகவே காத்திருக்கிறார்” (வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி பத்து: அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள், கொள்கைகளை பகிரங்கமாக மீறுகிறார்கள், மற்றும் தேவனுடைய வீட்டின் ஏற்பாடுகளைப் புறக்கணிக்கிறார்கள் (பகுதி நான்கு)”). தேவனோட வார்த்தைகள்ல, தங்களோட கடமைல பொறுப்பா இருக்கறவங்களுக்கு வேலைகள முடிக்க மத்தவங்களோட மேற்பார்வ தேவயில்ல; அவங்க முழு ஈடுபட்டோடு தங்களோட கடமைகள செய்றாங்க. ஆனா தங்களோட கடமைய பத்தி தீவிரமா இல்லாதவங்க வேஷமிட்டுட்டு எந்த சிரத்தயும் இல்லாம தான் இருப்பாங்க. ஜனங்களுக்கு அவங்க நெறைய வேல செஞ்சவங்க மாதிரி தெரிஞ்சாலும், அது மேலோட்டமானதுதான் அதோட உண்மையான பலன்கள அடயல. அவங்க ஜனங்கள ஏமாத்துறாங்க. தேவனோட வார்த்தைகள் என்னோட நிலய வெளிப்படுத்துச்சு. பிரசங்கங்களுக்கு சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்கள நான் வரவேற்றப்போ சந்தோஷமா இருந்தேன் ஏன்னா நான் எத்தன பேர கூப்பிட்டிருந்தேன்னு எல்லாரும் பார்த்தப்போ, நான் ஒரு பொறுப்பான நபர்னு அவங்க நினைப்பாங்க. ஆனா உண்மைல, அதுக்கப்புறம் அவங்க எப்படி இருக்காங்கங்கறத நான் தெரிஞ்சுக்க வேண்டி இருந்தப்போ, நான் விலைக்கிரயம் செலுத்த விரும்பல இல்ல அதிக நேரத்தயும் முயற்சியயும் செலவழிக்க விரும்பல. நான் அந்த வேலைய சுவிசேஷ ஊழியர்கள் கிட்ட அப்படியே தள்ளிவிட விரும்புனேன். சுலபமான வழிய எடுத்துக்க நான் விரும்புனேன். எந்த வழியில சிரமம் குறைவா இருந்துதோ, வசதியா இருந்துதோ, அதத்தான் நான் எடுத்துக்கிட்டேன். விஷயங்கள் கடினமா மாறுனப்போ, நான் குறுக்கு வழிகள எடுத்துட்டேன். ஏதாவது கஷ்டமா தெரியறப்போ, இல்ல நான் நிறைய முயற்சி எடுக்க வேண்டி இருந்தப்போ, விட்டுவிட விரும்புனேன். நான் அவ்வளவு சோம்பேறியா இருந்தேன்! பிரசங்கங்கள கேட்டதுக்கப்புறம் சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்க என்ன கேள்விகள் கேட்பாங்க, அவங்க கூட்டங்களுக்கு தொடர்ந்து வந்துட்டு இருந்தாங்களா, அப்படி வரலைன்னா, ஏன் அவங்க வரல, இன்னும் இது போல பலதயும் தெரிஞ்சுக்கறதப் பத்தி நான் கவலப்படல. நான் உண்மையிலயே என் கடமையில பொறுப்பில்லாம இருந்தேன், அதோட என்னை நானே விட்டுக் கொடுக்கல, ஆனாலும் நான் என் கடமையில திறம்பட செயல்படறது போல தெரியணும்னு விரும்புனேன். நான் ரொம்ப தந்திரமானவளாவும் ஏமாத்தறவளாவும் இருந்தேன், நம்பறதுக்குத் தகுதி இல்லாதவளா இருந்தேன். என்னோட இன்னொரு கடந்த கால அனுபவம் நினைவுக்கு வந்துது. நான் பள்ளியில இருந்தப்போ மோசமான மதிப்பெண்கள வாங்குனப்போ, நான் மறுபடியும் அதே வகுப்புல படிக்க வேண்டியிருந்துது, ஆனா அதுக்கப்புறமும் நான் கடினமா படிக்கல. நான் எப்பவும் கடினமான வேலைக்குப் பதிலா சுலபமான வேலையத் தான் விரும்புனேன், அதோட சோம்பேறியாவும் இருந்தேன். அது என்னோட சுபாவத்தோட ஒரு பகுதியா இருந்துது. இத உணர்ந்ததுக்கப்புறம், நான் என்னோட வேலையில கவனமா இருப்பதப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன், என்னோட வழிகள மாத்திக்கிட்டேன், சுவிசேஷத்த ஏத்துக் கொள்ளக் கூடியவங்களோடு தொடர்பு கொண்டேன். நான் சுவிசேஷ ஊழியர்கள்கிட்டயும் பேசி அவங்களோட உதவியை நாடுனேன். இத செஞ்சப்போ, நான் கொஞ்சம் பயனுள்ளவளா மாறுனேன்.
அதுக்கப்புறம், மெய்யான வழிய ஏத்துக்கத் தயாரா இருந்தவங்கள நீர்ப்பாய்ச்சுறவங்க கிட்ட ஒப்படச்சேன், ஆனாலும் இன்னும் கூட்டங்களுக்குத் தொடர்ந்து வர்றவங்க அதிகமா இல்லாம இருந்துது. கூட்டங்களுக்கு வர முடியாத அளவுக்கு வேலையில் அலுவலா இருந்த ஒருத்தர் இருந்தாரு. அதோட, அவங்களோட அம்மா சமீபத்துலதான் இறந்துபோயிருந்தாங்க. அவங்க மனமுடஞ்சு போய், தனிமய நாடி ஒதுங்கி இருந்தாங்க. அவங்க கிட்ட பேசுறதுக்கு சில சாதாரணமான வார்த்தைகள கண்டுபிடிக்கிறதத் தவிர எப்படி ஐக்கப்படுறதுன்னு எனக்குத் தெரியல. அதோட சில ஜனங்க பிரச்சனைகள சந்துச்சப்போ, அவற்றத் தீர்க்க உதவுற தேவனோட சரியான வார்த்தைகள என்னால் கண்டுபிடிக்க முடியல. இது எனக்குக் கஷ்டமா இருந்துது. பிரசங்கங்கள கேக்க ஜனங்கள கூப்பிடுறத நான் விரும்புனேன், ஏன்னா அதுதான் சுலபமா இருந்தது. அவங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு உண்மைல பிடிக்கல; என்னால பதில் சொல்ல முடியாத கேள்விகள அவங்க கேட்பாங்கன்னு நான் பயந்தேன், அதனால நான் அவங்கள தவிர்க்க இல்லைன்னா விட்டுட நெனச்சேன். சுமார் ஆறு மாசத்துக்கப்புறம், நான் கூப்பிட்டதுல ஆறு பேர் மட்டுந்தான் கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டதயும், ஆனா மத்த சகோதர சகோதரிகள் பலரயும் மதம் மாத்தியிருந்ததயும் நான் பார்த்தேன். நான் வெக்கப்பட்டேன் அதோட ரொம்ப வருத்தப்பட்டேன். இந்த ஆறு மாசமா நான் என்னோட கடமைகள்ல அலட்சியமா இருந்திருந்தேன். நான் முன்னமே மாறி இருந்தேன்னா, நான் அலட்சியமா இருந்திருக்க மாட்டேன். மத்தவங்க இத்தன பேர தேவனோட வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்கங்கற உண்ம அது சாத்தியம் தான்னு காட்டுச்சு.
சர்வ வல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் இப்படி சொல்றத நான் பார்த்தேன், “சுவிசேஷத்தைப் பரப்புவதில், நீ உன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் மற்றும் யாருக்கு நீ அதைப் பரப்புகிறாயா அவர்கள் ஒவ்வொருவரையும் அக்கறையாய்க் கையாள வேண்டும். முடிந்த அளவுக்கு தேவன் மக்களை இரட்சிக்கிறார், மற்றும் நீ தேவனுடைய சித்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மெய்யான வழியைத் தேடி கருத்தில் கொள்ளும் யாரொருவரையும் நீ அலட்சியமாகக் கடந்துபோகக் கூடாது. மேலும் என்னவென்றால், சுவிசேஷத்தைப் பரப்புவதில், நீங்கள் கொள்கைகளைப் பற்றிக்கொள்ள வேண்டும். மெய்யான வழியைக் கருத்தில்கொள்ளும் ஒவ்வொரு நபரிடத்திலும், அவர்களது மதப் பின்னணி, அவர்களது திறமையின் அளவு மற்றும் அவர்களது மனிதத் தன்மையின் தரம் என்பவை போன்ற விஷயங்களை ஒருவர் கவனிக்கவும், புரிந்துகொள்ளவும் மற்றும் கிரகித்துக்கொள்ளவும் வேண்டும். சத்தியத்தின் மீது தாகம் கொண்டிருக்கிற, தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, மற்றும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நபரை நீங்கள் கண்டால், அப்போது, அந்த நபர் தேவனால் முன்குறிக்கப்பட்டிருப்பவர் ஆவார். அவர்கள் மனிதத் தன்மையற்றவர்களாகவும் மோசமான குணம் படைத்தவர்களாகவும், மற்றும் அவர்களின் தாகம் ஒரு பாசாங்குத்தனமாகவும், அவர்கள் தொடர்ந்து வாதிடுகிறவர்களாகவும் மற்றும் தங்களின் கருத்துகளைப் பற்றிக்கொண்டிருப்பவர்களாகவும் இல்லாத வரையில், சத்தியத்தைப் பற்றி அவர்களுடன் ஐக்கியங்கொள்ளவும் அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளவும் நீங்கள் உங்கள் முழு பலத்துடனும் முயற்சி செய்ய வேண்டும். அப்படியிருப்பார்களானால், நீங்கள் அவர்களை ஒதுக்கி வைத்து, அவர்களை விட்டுவிட வேண்டும். மெய்யான வழியைக் கருத்தில்கொள்ளும் சிலர் புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களும் சிறந்த திறமையுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள், ஆனால் அகந்தையுள்ளவர்களும் சுய நீதியுள்ளவர்களும், மதக் கருத்துகளைப் பிடிவாதமாகப் பின்பற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள், எனவே இதைத் சரிசெய்ய அவர்களுக்கு உதவும்படி, அவர்களுடன் சத்தியத்தைக் குறித்து ஐக்கியங்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் எப்படி ஐக்கியங்கொண்டிருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மட்டுமே, நீங்கள் கைவிட வேண்டும், ஏனெனில், உங்களால் செய்ய முடிந்தவை மற்றும் செய்ய வேண்டிய அனைத்தையும் நீங்கள் செய்திருப்பீர்கள். சுருக்கமாக, சத்தியத்தை ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய எவரையும் எளிதில் விட்டுவிடாதீர்கள். அவர்கள் மெய்யான வழியைக் கருத்தில் கொண்டு, சத்தியத்தைத் தேடக்கூடிய வரைக்கும், நீங்கள் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிக்கவும், மேலும் சத்தியத்தைக் குறித்து அதிகமாக அவர்களுடன் ஐக்கியங்கொள்ளவும், தேவனுடைய கிரியைக்குச் சாட்சியளிக்கவும், அவர்களது கருத்துகளைத் தீர்க்கவும் உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும், அதன்மூலமாக, நீங்கள் அவர்களை ஆதாயப்படுத்தி, தேவனுக்கு முன்பாக அவர்களை அழைத்துக்கொண்டு வரலாம். இதுவே சுவிசேஷத்தைப் பரப்பும் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதாய் இருக்கிறது. ஆக அவர்களை எப்படி ஆதயப்படுத்தலாம்? அவர்களோடு அறிமுகமாகிப் பழகும் செயல்முறையில், அந்த நபர் நல்ல செயல்திறனும் சிறந்த மனிதத்தன்மையும் கொண்ட நபர் என்று நீ அறிந்தால், உன்னுடைய பொறுப்பை நிறைவேற்ற உன்னால் முடிந்த எல்லாவற்றையும் நீ செய்ய வேண்டும்; அதற்கு ஒரு குறிப்பிட்ட விலைக் கிரயத்தை நீ கொடுக்க வேண்டும், சில வழி முறைகளைப் பயன்படுத்த வேண்டும், அவர்களை ஆதாயப்படுத்த எந்த வழிகளையும் முறைகளையும் நீ பயன்படுத்தினாலும் பரவாயில்லை, ஆனால் அவை அவர்களை ஆதாயப்படுத்துவதற்காக இருக்க வேண்டும். மொத்தத்தில் நீ அவர்களை ஆதாயப்படுத்த, உன் கடமைகளை நிறைவேற்றி, மற்றும் அன்பைப் பயன்படுத்தி, மேலும் உன் ஆற்றலுக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும். நீ புரிந்துகொள்ளும் எல்லா சத்தியங்களிலும் ஐக்கியப்பட்டு மற்றும் நீ செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த நபர் ஆதாயப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட, ஒரு தெளிவான மனச்சாட்சி இறுதியில் உனக்கிருக்கும். இது உன்னால் முடிந்த மற்றும் நீ செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்வதாகும். நீ சத்தியத்தைத் தெளிவாக ஐக்கியப்படுத்தி எடுத்துக்கூறவில்லை என்றால், அந்த நபர் தன் கருத்துகளையே பற்றிக்கொண்டிருந்தால், நீ உன் பொறுமையை இழந்து, உன் சொந்த விருப்பப்படி அந்த நபரை விட்டுவிட்டால், அப்போது நீ உன் கடமையைப் புறக்கணிப்பாய், மேலும் இது ஒரு கறையாக இருக்கும். சிலர் சொல்லுகிறார்கள், ‘இந்தக் கறை இருப்பதனால் நான் தேவனால் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவேன் என்று அர்த்தமா?’ இந்த விஷயங்கள் வேண்டுமென்றா அல்லது வழக்கமாகவே மக்கள் செய்கிறார்களா என்பதைப் பொறுத்ததாகும். எப்போதாவது செய்யும் மீறுதலுக்காக தேவன் மக்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை; அவர்கள் மனந்திரும்பவேண்டும் அவ்வளவுதான். ஆனால் தெரிந்து தவறு செய்து மனந்திரும்ப மறுத்தால், அவர்கள் தேவனால் ஆக்கினைக்குள்ளாக்கப்படுவார்கள். மெய்யான வழியைத் தெளிவாக அறிந்திருந்த பின்னும் வேண்டும் என்றே பாவம் செய்தால் அவர்கள் தேவனால் எப்படி ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாமல் இருப்பார்கள்? சத்தியத்தின் கொள்கைகளின்படி பார்த்தால் இது பொறுப்பின்மை, கவனமின்மை மற்றும் செயலின்மை; குறைந்தபட்சம், நீ உன் பொறுப்பை நிறைவேற்றவில்லை, மேலும் தேவன் உன் தவறுகளை நியாயந்தீர்க்கும் விதம் இதுதான்; நீ மனந்திரும்ப மறுத்தால், நீ ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கப்படுவாய். மேலும், இத்தகைய தவறுகளைக் குறைக்க அல்லது தடுக்க, ஜனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற தங்களால் முடிந்ததை எல்லாம் முயற்சி செய்ய வேண்டும், மெய்யான வழியைக் கருத்தில் கொள்ளும் மக்களுக்கு இருக்கும் எல்லா கேள்விகளையும் தீர்க்க ஊக்கமோடு முயற்சி செய்ய வேண்டும், மற்றும் நிச்சயமாக முக்கியமான கேள்விகளைத் தள்ளிப்போடவோ அல்லது தாமதப்படுத்தவோ கூடாது” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “சுவிசேஷத்தைப் பரப்புவது பொறுப்புள்ள எல்லா விசுவாசிகளுக்கான கடமையாகும்”). தேவனோட வார்த்தைகள் உண்மையில என்னைச் சிந்திக்க வெச்சுது, நான் ரொம்ப நெகழ்ந்து போனேன். தேவன் ஜனங்களுக்குக் கடமைகள கொடுத்தாரு, அதோட அவங்க முழு முயற்சியயும் அதுல பயன்படுத்தணும்னு எதிர்பார்த்தாரு, ஆனா ஜனங்கள தேவன்கிட்ட கொண்டு சேர்க்குற என் கடமையில தியாகங்கள செய்றதுக்கு நான் தயாரில்லாம இருந்தேன். நான் ரொம்ப சோம்பேறியா இருந்தேன், அதோட என் கடமைல ரொம்ப மெத்தனமாவும் இருந்தேன். தேவன் சொன்ன மாதிரி நான் செய்யல அதோட உண்மையான வழிய ஆராய்ற எல்லார் மேலும் தீவிரமான கவனம் செலுத்தல, இல்ல என்னோட பொறுப்புகளயும் நிறைவேத்தல. கேக்குறதுக்கு நெறைய பேர கூப்பிட்டா மட்டும் போதும், அதுக்கப்புறம் நடக்கிறது என்னோட வேல இல்லன்னு நான் நெனச்சேன். என் பார்வையில, அவை நீர்ப்பாய்ச்சறவங்களோட பொறுப்பா இருந்துது, அவங்க கூட்டங்களுக்கு வந்தாங்களா இல்லையாங்கறது என் பிரச்சினையாவோ இல்ல என்னோட பொறுப்பாவோ இல்லாம இருந்துது. அதனால அவங்க கூட்டங்களுக்கு வராதப்போ, அவங்களுக்கு உதவ தேவன் கிட்ட இருந்து வார்த்தைகள கண்டுபிடிக்க என்னால முடிஞ்ச வரைக்கும் நான் முயற்சி செய்யல. அவங்களோட பிரச்சினைகள் என்னால தீக்கமுடியாத அளவுக்கு கடினமா இருந்ததா நான் நெனச்சேன், அதனால அவங்கள விட்டுட விரும்புனேன். ஆனா உண்மையில, சுவிசேஷத்தப் பிரசங்கிக்க அவங்க கொள்கைகளுக்குப் பொருந்துற வரைக்கும், நான் அவங்கமேல தீவிர கவனம் செலுத்தணும், அதோட கேக்குறதுக்கு அவங்கள கூப்பிட்டதும் நான்தான். சாதாரண சூழ்நிலைகள்ல, அதுக்கப்புறமா நான் அவங்களோட தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டி இருந்துது, ஆனா நான் செய்யல. நான் அவற்ற நீர்ப்பாய்ச்சுறவங்களுக்குத் தள்ளி விட்டுட்டு அதோட அப்படியே விட்டுட்டேன். எனக்கு உண்மையிலேயே பொறுப்புணர்வோ தேவனோட சித்தத்தப் பத்துன அக்கறையோ இல்லாம இருந்துது. நான் என்னோட பிரச்சனைய உணர்ந்த உடனே, நான் என்னோட அணுகுமுறைய மாத்திக்கிறதுல உறுதியா இருந்தேன், ஆனா என்னால தனியா அதச் செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும். நான் ஜெபிச்சு தேவனோட உதவிய நாட வேண்டியிருந்துது. அதுக்கப்புறம் சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்கள நான் சந்திக்கிறப்போ, அவங்கள அவர்கிட்ட கொண்டுவர எனக்கு உதவவும், அதோட கடினமா உழைக்கவும் உண்மையான தியாகங்கள செய்யவும், முன்ன மாதிரி என் கடமையில தளர்வா இருக்கக் கூடாதுன்னு மனவுறுதி இருக்கணும்னு நான் அடிக்கடி தேவன்கிட்ட ஜெபிப்பேன். நான் என் தலைவர கடைசி நாட்களோட தேவனோட கிரியய ஜனங்கள ஏத்துக்க வெக்கறது எப்படின்னும் கேட்டேன். அவங்க கொஞ்சம் வழிகள என்னோட பகிர்ந்துகிட்டாங்க, நான் அப்போ வரைக்கும் எத செய்யாம இருந்தேன்னு பாக்க விரும்பி சிந்திக்க ஆரம்பிச்சேன். நான் என் வேலையில சத்தியத்த தேடல, என்னோட சகோதர சகோதரிக கிட்ட இருந்து கத்துக்காம இருந்தேன்னும் உணர்ந்தேன். சில பேரு கூட்டங்களுக்கு வராதப்போ, ஏன்னு தெரிஞ்சுக்க நான் விரும்பல, அதோட அவங்கள அப்படியே விட்டுட்டேன். என் கடமைய பத்தின என்னோட அணுகுமுற ரொம்ப தளர்வா இருந்துது.
தேவன் எப்படி சொல்றாருன்னு அது என்னை யோசிக்க வெச்சுது, “தேவனுடைய கட்டளைகளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள் என்பது மிகமிக முக்கியமானது மேலும் இது ஒரு மிகவும் தீவிரமான விஷயமாகும். தேவன் மக்களிடம் ஒப்படைத்ததை உன்னால் முடிக்க முடியாவிட்டால், பின் நீ அவருடைய சமூகத்தில் வாழத் தகுதியற்றவன், மேலும் நீ தண்டிக்கப்படவேண்டும். தேவன் மனிதர்களிடம் ஒப்படைக்கும் எந்த கட்டளையையும் அவர்கள் செய்து முடிக்க வேண்டும் என்பது பரலோகத்தால் நியமிக்கப்பட்டதும் மற்றும் பூலோகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டதுமாகும்; இதுவே அவர்களின் பிரதானமானப் பொறுப்பாகும், மேலும் அது அவர்களின் வாழ்க்கையைப் போலவே முக்கியமானதாகும். நீ தேவனுடைய கட்டளைகளை முக்கியமாகக் கருதாவிட்டால், நீ அவரை மிகவும் வருந்தத்தக்க வகையில் காட்டிக் கொடுக்கிறாய்; இதில் நீ யூதாஸை விட மிகவும் பரிதாபகரமானவனாகிறாய், மற்றும் நீ சபிக்கப்பட்ட வேண்டும். தேவன் தங்களிடத்தில் ஒப்படைப்பதை எப்படிக் கண்ணோக்க வேண்டும் என்பதைப் பற்றிய முழுமையானப் புரிதலை ஜனங்கள் அடைய வேண்டும், மேலும் அவர் மனுக்குலத்திடம் ஒப்படைக்கும் கட்டளைகளானது தேவனிடத்திலிருந்து வரும் உயர்வுகளும் மற்றும் சிறப்பான தயவுகளுமே என்பதையாவது குறைந்தபட்சம் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; அவை மிகவும் மகிமையான விஷயங்களாகும். மற்ற அனைத்தும் கைவிடப்படலாம்; ஒருவன் தன் ஜீவனையே தியாகம் செய்ய வேண்டியதாயிருந்தாலும், அவன் அப்போதும் தேவனுடைய கட்டளையை நிறைவேற்ற வேண்டும்” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி”). தேவனோட வார்த்தைகள படிச்சதுக்கப்புறம் நான் வெக்கப்பட்டேன். தேவனோட சிருஷ்டிகள்ல ஒண்ணா நான் என்னோட கடமைய நல்லா செய்யணும். இதுதான் என்னோட பணி அதோட நான் உயிரோட இருக்கறதுக்கான காரணம். என்னால இதச் செய்ய முடியலைன்னா, அப்போ நான் எதுக்காக சிருஷ்டிக்கப்பட்டனோ அந்த செயல்பாட்டயே இழந்துடுவேன், அதோட தேவனுக்கு முன்னாடி வாழத் தகுதி இல்லாதவளா இருப்பேன். நான் கடைசில தேவனால வெறுக்கப்பட்டு புறம்பாக்கப்படுவேன். ராஜ்யத்தோட சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறது தேவனோட ரொம்ப அவசரமான விருப்பமா இருக்கு, அதோட நான் என் கடமையில என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செய்யணும், அதோட அதுல அலட்சியமா இருக்கக் கூடாது. பேழயக் கட்ட தேவன் நோவாவ கூப்பிட்டத நான் நினைச்சுப் பாத்தேன். அது ரொம்பக் கடினமான வேலையா இருந்தாக்கூட, நோவா விட்டுடல. பேழைய செய்ற வேல எப்போ முடியும், இல்ல வெள்ளம் எப்போ வரும்னு அவரு தேவன கேக்கல. அவர் தேவனோட வழிமுறைகள அப்படியே பின்பற்றி பேழய கட்டினாரு. இதத் தெரிஞ்சுட்ட உடனே, என் கடமையை பத்தின என்னோட அணுகமுறய நான் மாத்திக்கணும், நோவாவோட முன்மாதிரிய பின்பற்றணும், என் கடமைய செய்யறப்போ என்னால முடிஞ்ச எல்லாத்தயும் செய்யணும்னு உணர்ந்துட்டேன். ஒருமுற ஒரு கூட்டத்தப்போ, மத்தவங்க அவங்களோட பிரசங்க அனுபவங்களயும் அதோட சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்களோட பிரச்சனைகளத் தீர்க்க தேவனோட வார்த்தைகள அவங்க எப்படி பயன்படுத்தினாங்கன்னும் பகிர்ந்துகிட்டிருந்தாங்க. அவங்க சொன்னதக் கேட்டதுக்கப்புறம் நான் ரொம்ப நெகிழ்ந்து போனேன். நான் அதுக்கு மேல சோம்பேறியா இருக்க விரும்பல. நான் பொறுப்பா இருக்க விரும்புனேன். என்னோட முழு ஆற்றலயும் என் கடமையில காட்ட விரும்புனேன்.
யாரெல்லாம் கூட்டங்களுக்கு வரலைங்கறத நான் அடிக்கடி கவனிப்பேன், யாரெல்லாம் அங்க இல்லாம இருந்தாங்களோ, அவங்கள உடனடியா தொடர்பு கொண்டு தேவனோட வார்த்தைகள பத்தி அவங்களோட ஐக்கியப்படுவேன். ஒவ்வொரு நபர கவனிக்கிறதலயும் ரொம்ப முயற்சி எடுத்தப்போ, அவங்கள்ல பெரும்பாலானவங்க தவறாம கூட்டங்களுக்கு வந்தாங்க. ரொம்ப நாளா வராத ஒருத்தரு இருந்ததா எனக்கு ஞாபகம் வந்துது. நான் அவங்களுக்கு ஒரு குறுஞ்செய்திய அனுப்புனேன், ஆனா கொஞ்ச நாட்களுக்கு அவங்க பதில் அனுப்பாததால, நான் கவலைப்பட ஆரம்பிச்சேன். நான் நீர்ப்பாய்ச்சுற சகோதரர் டெர்லிய என்ன நடக்குதுன்னு கேக்கறதுக்காகக் கூப்பிட்டேன். அவங்க வேலையில் சிரமங்கள சந்திச்சதாவும், அதனால அவங்களோடு அவரு தேவனோட வார்த்தைகள கொஞ்சம் பகிர்ந்துகிட்டதாவும் சொன்னாரு. இதக் கேட்டதுக்கப்புறம், அது போதாதுன்னு நான் உணர்ந்தேன். அதனால நான் சகோதரர் டெர்லியக் கூப்பிட்டு தொலைபேசியில ஐக்கியப்படச் சொன்னேன். நான் ஆச்சரியப்படுற மாதிரி, ஐக்கியத்துக்கப்புறம் அன்னைக்கே கூட்டத்துல கலந்துக்க அவங்க ஒத்துக்கிட்டாங்க, அதோட முன்னாடி வராததுக்காக மன்னிப்பு கேட்டாங்க. ரொம்ப சீக்கிரமாவே, அவங்க திருச்சபைல சேந்தாங்க. என்னோட மனசு ரொம்ப சந்தோஷப்பட்டுது. நான் தேவனுக்கு ரொம்ப நன்றி உள்ளவளா இருந்தேன்.
தேவன் இப்படி சொல்றதையும் நான் பாத்தேன், “உனக்கு மனசாட்சியும் அறிவும் உண்மையாகவே இருந்தால், அப்போது விஷயங்களைச் செய்யும்போது, நீ அவற்றில் இன்னும் கொஞ்சம் கடினமாக முயற்சிசெய்வாய், அதுமட்டுமல்லாமல் இன்னும் கொஞ்சம் பரிவையும், பொறுப்பையும், அக்கறையையும் செலுத்துவாய், மேலும் உன்னால் அதிக முயற்சியை செய்ய முடியும், நீ செய்யும் கடமையின் முடிவுகள் மேம்படும். நீ அடையும் முடிவுகள் சிறப்பாக இருக்கும், மேலும் இது பிற மக்களையும் தேவனையும் திருப்திப்படுத்தும்” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஜீவப்பிரவேசமானது கடமையைச் செய்வதில் இருந்து தொடங்குகிறது”). “நேர்மறையான பக்கமிருந்தே நீ நுழைய வேண்டும். செயல்பாடின்றி நீ காத்திருந்தால், பின்னர் நீ இன்னும் எதிர்மறையாகவே இருப்பாய். என்னுடன் ஒத்துழைக்கையில் நீ செயலூக்கத்துடன் இருத்தல் வேண்டும்; விடாமுயற்சி வேண்டும், சோம்பலாக இருத்தல் எப்போதும் கூடாது. என்னுடன் எப்போதும் ஐக்கியத்துடன் இருப்பதோடு, ஆழ்ந்த நெருக்கத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். நீ புரிந்து கொள்ளவில்லை எனில், விரைந்து முடிவுகளைப் பெற பொறுமையை இழக்காதே. நான் உனக்குக் கூற மாட்டேன் என்பதல்ல; நீ என் முன்னால் இருக்கும்போது, என்னைச் சார்ந்திருக்கிறாய், என்னைச் சார்ந்திருப்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறாயா என்பதே ஆகும். நீ எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும், அனைத்தையும் என் கைகளில் ஒப்புவிக்க வேண்டும். வீணாகத் திரும்பிச் செல்லாதே. அறியாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு நீ எனக்கு நெருக்கமாக இருந்ததன் பின்னர், உனக்கு என் சித்தங்கள் வெளிப்படுத்தப்படும். நீ அவற்றைப் புரிந்துகொண்டால், உண்மையாகவே எனக்கு நேருக்கு நேராக வந்து என் முகத்தை நீ காண்பாய். நீ மிகுந்த தெளிவும், உறுதியும் பெறுவாய், மேலும் சார்ந்திருக்க ஏதேனும் ஒன்றைப் பெறுவாய். பின்னர் ஆற்றலையும் நம்பிக்கையையும் கொள்வாய், மேலும், முன்னேறிச் செல்வதற்கான பாதையையும் நீ பெறுவாய். அனைத்தும் உன்னிடம் எளிதாக வந்து சேரும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 9”). முன்னாடி, நான் என் கடமையில செயலற்றவளா இருந்தேன் அதோட ஊக்கமில்லாம இருந்தேன். சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்கள நான் கவனக்குறைவா விட்டுடுவேன். தேவனோட வார்த்தயில இருந்த வழிகாட்டுதல் நம்ம இதயத்தில என்ன இருக்குதுங்கறது ரொம்ப முக்கியமானதுன்னு என்னைப் புரிஞ்சுக்க வெச்சது. நாம ஜனங்கள அன்போட நடத்தி, நேர்மையா அவங்களோட ஐக்கியப்படுறப்போ, நாம தேவனோட வழிகாட்டுதல பாப்போம். இதை நான் புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம், நான் தேவன் கிட்ட ஜெபிச்சேன், என்னோட கடமைய நல்லா செய்யறதுக்கும், அவரோட வார்த்தைகள உணர்வு பூர்வமா கடப்பிடிக்கவும் எனக்கு உதவக் கேட்டேன். அதுக்கப்புறம், சுவிசேஷத்த ஏத்துக்கக் கூடியவங்க கிட்ட பேசறதுல நான் முனைப்பா இருந்தேன். அவங்க பிரசங்கத்துக்கான கொள்கைகளுக்கு ஏத்த மாதிரி இருந்தாங்கன்னா, அவங்க தேவனோட கிரியய ஏத்துக்கிற வரைக்கும் நான் அவங்களோட நெலமையப் பத்தித் தொடர்ந்து தெரிஞ்சுக்குவேன். நான் இத செஞ்சப்போ, தேவன் என்னைக் கொஞ்ச கொஞ்சமா வழிநடத்துறதயும் என்னோட கடமைய எப்படி செய்யணும்னு புரிஞ்சுக்க எனக்கு உதவி செய்றதயும் உணர்ந்தேன், அதோட நான் என்னோட இதயத்துல ரொம்ப உறுதியா உணர்ந்தேன். தேவனுக்கே நன்றி!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?