நீங்கள் வாதிடுவதற்குப் பின்னால் என்ன மனநிலை இருக்கிறது?

ஜனவரி 7, 2023

தேவன விசுவாசிச்சு பல வருஷங்கள் கழிச்சு, சத்தியத்த ஏத்துக்குறவங்கள தேவன் விரும்புறாருன்னு நான் கொள்க அளவுல தெரிஞ்சிட்டேன். ஜனங்க சத்தியத்த ஏத்துக்காம தேவன விசுவாசிச்சா, அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டாலும் அவங்களோட வாழ்க்க மனநில மாறவே மாறாது. நான் சத்தியத்த ஏத்துக்கிற ஒருத்தியா இருக்க விரும்பினேன், ஆனா நான் கிளை நறுக்கப்பட்டு கையாளப்பட்ட போது, என்னையும் அறியாம நான் வாதாடி என்னைப் பாதுகாத்துக்கிட்டேன், அதோட சில நேரம் நான் மத்தவங்கள மறுத்தேன். கொஞ்ச காலம் கழிச்சு நான் அதுக்காக வருத்தப்பட்டேன், நான் யோசிச்சேன்: நான் ஏன் வாதாடினேன்? அவ்ளோ பேசணும்னு எனக்கு ஏன் தோணுச்சு? ஆனா இவ்ளோ காலமும் வருத்தம் மட்டுந்தான் இருந்துச்சு, நான் பிரச்சனையோட சாராம்சத்த தெளிவாவே பாக்காததுனால, நான் எப்பவுமே உண்மையான பிரவேசத்த அடையவே இல்ல. சமீபத்துல, கொஞ்சம் அனுபவங்களுக்கு அப்புறம், நான் கடைசியா என்ன பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன், சத்தியத்த தேடுனேன், எப்பவும் வாதாடுவது உண்மையிலே சத்தியத்த பத்தி சோர்வா இருக்கற சாத்தானிய மனநிலங்கறத உணர்ந்தேன், அதோட நான் மனந்திரும்பி மாறலைனா நான் ஆபத்துல இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

நான் என் திருச்சபைல சுவிசேஷ பணிய மேற்பார்வ செய்றேன். ஒருதடவ, ஒரு பணி விளக்கக் கூட்டத்துல, நீர்ப்பாய்ச்சுதல் மேற்பார்வையாளரான ஜுலியானா சுவிசேஷ பணியில உள்ள ஒரு பிரச்சனைய இப்படியா புகாரளிச்சாங்க, “சமீபத்துல, நீர்ப்பாய்ச்சுதல் தேவைப்படுற புதியவங்களோட நிலைகள சுவிசேஷ பணியாளர்கள் சரியான நேரத்தில எங்ககிட்ட சொல்றதில்ல, அதுக்கு அர்த்தம் புதியவங்களோட கருத்துகளயும் பிரச்சினைகளயும் இலக்கா கொண்ட நீர்ப்பாய்ச்சுதல எங்களால கொடுக்க முடியாது.” என் வேலையில இருக்குற பிரச்சினைய ஜுலியானா பல பேர் முன்னாடி சொன்னத கேட்டப்போ, என் உள்ளத்துல அவமானமா உணர்ந்தேன். “நான் நடைமுறை வேலை செய்யலைன்னு நீங்க சொல்ல வர்றீங்களா? இந்தப் பிரச்சனைகள பத்தி நான் சகோதர சகோதரிகள் கிட்ட ஐக்கியம் கொள்ளலங்கறது இல்ல. ரொம்ப நாளைக்கு முன்னாடியே நான் அவங்ககிட்ட சொன்னேன், ஆனா விஷயங்கள் மாற்றதுக்கு நேரம் எடுக்கும், அப்படித்தான? அவர்கள்ல நிறைய பேரு சுவிசேஷ பணிகள செய்ய இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க கிட்ட இருந்து நீங்க ஏன் இவ்ளோ எதிர்பார்க்கறிங்க?” அவங்க சொன்னத என்னால ஏத்துக்கவே முடியல, அவங்க ஜனங்களோட கஷ்டங்கள பொருட்படுத்தாம இருக்காங்கன்னு நான் நினைச்சேன். அந்த நேரத்துல, என் எண்ணங்கள் எல்லாத்தயும் அப்பவே வெளிப்படுத்த விரும்புனேன், ஆனா நான் பரிந்துரைகள ஏற்றுக் கொள்றதில்லன்னு எல்லாரும் சொல்லுவாங்கன்னு நான் கவலப்பட்டேன், அது என்ன மோசமா காட்டும், அதனால நான் தயக்கத்தோட அவங்களோட ஆலோசனைய ஏத்துக்கிட்டு கீழ்ப்படிஞ்சேன். அதுக்கப்புறம், நீர்ப்பாய்ச்சுதல் தேவப்படுற புதியவங்களுக்கு சரியான நேரத்தில பின்னூட்டம் குடுக்க அவங்க நேரம் எடுக்கணும்னு நான் என் சகோதர சகோதரிகள்கிட்ட வலியுறுத்தினேன். கொஞ்ச காலத்துக்கப்புறம், விஷயங்கள் கொஞ்சம் நல்லா மாறுச்சு, அதுக்கு மேல நான் அத பத்தி அதிகமா யோசிக்கல. சுவிசேஷ ஊழியர்களோடு சில நீர்ப்பாய்ச்சுதல் செய்றவங்க சரியா வேல செய்யலன்னு எனக்குத் தெரியவந்து, சுவிசேஷ ஊழியர்களுக்கு எதிரா சில தப்பெண்ணங்கள் வர்ற வரைக்கும் நான் யோசிக்கல. “சுவிசேஷ ஊழியர்களோட பிரச்சினைகளப் பத்தி ஜுலியானா எப்பவும் பேசுறதுதான் இதுக்குக் காரணமா இருக்கணும்னு” என்னால யூகிக்காம இருக்க முடியல. நான் என் மனசுக்குள்ள அவங்களப் பத்தி குறை சொல்ல ஆரம்பிச்சேன், “அவங்க ரொம்ப எரிச்சலூட்டறாங்க. எந்த சூழ்நிலையில என்ன பேசணும்னு அவங்க எப்பவுமே யோசிக்கிறதில்ல. ஒவ்வொரு தடவயும் நாங்க வேலைக்குப் போகும் போதும், புதியவங்களப் பத்தி சுவிசேஷ ஊழியர்கள் சரியான நேரத்தில பின்னூட்டம் கொடுக்கிறதில்லைன்னு அவங்க எப்பவும் சொல்லியே ஆகணும். எல்லாரும் அதக் கேட்டுட்டு நம்மள பத்தி தப்பா நினைக்கிறாங்க. இது தொடர்ந்தா, எதிர்காலத்தில நம்ம எப்படி நம்ம கடமையில ஒத்துழைச்சுப் போக முடியும்?” இத நினைக்கும் போது, விவரிக்க முடியாத ஒரு கோபம் எனக்கு வந்துச்சு. இந்த நிலமைய நான் எங்க தலைவர்கிட்ட புகாரளிச்சேன், ஜுலியானா சுவிசேஷ ஊழியர்கள பத்தி தொடர்ந்து தனது குழுவில அதிருப்திய பரப்புறாங்க, அதனால எங்களால ஒத்துழைக்க முடியாம போனதுன்னு சொன்னேன். நான் செய்திய டைப் பண்ணும்போது அதப் பத்தி கொஞ்சம் கவலைப்பட்டேன். “இத ஒரு பிரச்சினயா புகாரளிக்கிறது சரியானதா? ‘பரப்புறாங்க’ அப்படிங்கறது உண்மையில இங்க பயன்படுத்துவதற்கு சரியான வார்த்தையா?” ஆனா அதுக்கப்புறம் நான் நினைச்சேன், “நான் சொல்றது ஒரு உண்மை. ஒவ்வொரு தடவயும் ஜுலியானா சுவிசேஷ ஊழியர்களோட பிரச்சனைகள பத்தி பேசறப்போ, பெருமூச்சு விடுறாங்க. அவங்க பெருமூச்சே நிலமை மோசமானதுங்கறது போல காட்டுது. அவங்க தன்னோட அதிருப்திய மட்டும் பரப்புறாங்க இல்லயா? நான் அவங்களப் பத்தி சொல்றது நியாயமானதுதான்.” அப்படியே, அதப் பத்தி மேல யோசிக்காம நான் செய்திய அனுப்பினேன். அடுத்த நாள், ஜுலியானா எனக்கு ஒரு செய்தி அனுப்புனாங்க: “நான் சொன்னது சரியில்லாம இருந்தா, நீங்க தாராளமா என்கிட்ட சொல்லலாம். என் வார்த்தைகள் எப்படி ‘அதிருப்திய பரப்புது’?” நான் அவங்க செய்திய பார்த்தபோது, தலைவர் அவங்ககிட்ட ஐக்கியம் கொண்டிருந்தாங்கன்னு எனக்குத் தெரிஞ்சுது. ஏத்துக்கவோ அல்லது தன்னப் பத்தி சிந்திக்கவோ மறுத்த அவங்களோட மனப்பான்மைய பார்த்தபோது, நான் கோபப்பட்டேன். “நீங்க எவ்வளவு தூரத்துக்கு உணர்வற்றுப்போய் இருக்கீங்க? நீங்க என்ன நினைக்கிறீங்க, என்ன சொல்றீங்கன்னு கூட நீங்க உணரல, நீங்க உணர்ந்தீங்களா? நீங்க சுவிசேஷ ஊழியர்களோட எவ்ளோ அதிருப்தியில இருக்கீங்கங்கறத உங்க பெருமூச்சுகள் தெளிவா காட்டுது. உங்க ஏளனமான மனப்பான்ம மத்தவங்கள பாதிக்குது. இது எப்படி அதிருப்திய பரப்பறது ஆகாது?” நான் அவங்கள கூப்பிட்டு அவங்க கிட்ட வாதாடணும்னு விரும்புனேன், ஆனா அப்புறம் நான் நினைச்சேன், “நான் இப்பவே அவங்கள கூப்பிட்டா, நாங்க ரெண்டு பேரும் சண்ட போட ஆரம்பிக்க மாட்டோமா? எல்லாரும் எங்க சண்டையப் பத்திக் கேள்விப்பட்டா, அது ரொம்ப சங்கடமா இருக்கும். அது உறவ சங்கடமாக்கிடும், அதுக்கப்புறம் நாங்க எப்படி ஒத்துழச்சுப் போவோம்? இது திருச்சபை வேலைகள பாதுகாக்கிறது கிடையாது. நான் இவ்வளவு காலமா தேவன விசுவாசிச்சிருக்கேன், அப்படியிருக்கும்போது இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும்போது இன்னும் நான் ஏன் ரொம்ப உணர்ச்சிவசப்படுறேன்?” இந்த நேரத்துல, நான் தேவனோட வார்த்தைய ஞாபகப்படுத்திப் பார்த்தேன். “தங்கள் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும், சத்தியத்தைப் பற்றிய அவர்களது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் மேலோட்டமானதாக இருந்தாலும், சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான எளிய பயிற்சிக்கான வழி என்னவென்றால் எல்லாவற்றிலும் தேவனுடைய வீட்டின் நலன்களைப் பற்றி சிந்திப்பதும், சுயநல ஆசைகள், தனிப்பட்ட நோக்கங்கள், எண்ணங்கள், நற்பெயர் மற்றும் அந்தஸ்து ஆகிய அனைத்தையும் விட்டுவிடுவதும் ஆகும். தேவனுடைய வீட்டின் நலன்களுக்கு முதலிடம் கொடுங்கள்—இதுவே மிகக் குறைந்தபட்சமாக ஒருவர் செய்ய வேண்டிய ஒன்றாகும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தன் இருதயத்தைத் தேவனுக்குத் தருவதன் மூலம் ஒருவரால் சத்தியத்தை அடையமுடியும்”). “தேவனுடைய வீட்டின் நலன்கள்” அப்படிங்கற வார்த்தைகள் கடைசியா என் மனச அமைதிப்படுத்துச்சு, அதோட என்னப் பத்தி சிந்திக்க வச்சுது. தேவனோட வீட்டின் நலன்கள்தான் ரொம்ப முக்கியம். யார் தவறுங்கற சண்டையாத்தான் என் சகோதரியோடு எனக்கிருந்த சண்ட இருந்துச்சு, அப்படித்தானே? நாங்க ரெண்டு பேருமே மேற்பார்வையாளர்களா இருந்தோம். இதப் பத்தி நாங்க சண்ட போட ஆரம்பிச்சு, பிரிஞ்சு போய், தப்பெண்ணம் கொண்டோம்னா, அது வேலைய பாதிக்கும். இது பெரிய நோக்கத்த கெடுத்துரும். அதோட, பிரச்சினைய பத்தி ஜுலியானா புகாரளிச்சத, நான் அதிருப்திய பரப்புவதா வகைப்படுத்தினேன், ஆனா இந்த வகைப்படுத்துறது ஒருவேள துல்லியமா இருக்காது. அதிருப்திய பரப்பறதுங்கறது, காரியத்தை அப்படியே மாத்துறது, சரியையும் தப்பயும் குழப்பறது, அப்புறம் நேர்மறையான விஷயத்த எதிர்மறைன்னு சொல்றது. அதாவது தப்பான நோக்கங்கள கொண்டிருக்கிறது உங்களோட சொந்த லட்சியங்கள அடையறதுக்கு, மத்தவங்கள தாக்கிக் கண்டனம் பண்ண எதயாவது சொல்றதுன்னு அர்த்தம். எப்படியோ, ஜுலியானா எங்க வேலைல விவரிச்ச பிரச்சின துல்லியமா இருந்துச்சு. அவங்க உண்மையா பிரச்சினைய சொல்லிட்டிருந்தாங்க. சுவிசேஷ ஊழியர்கள் அவங்களோட கடமைய எப்படி செஞ்சாங்கங்கறதுல, முயற்சி இல்லாத, பொறுப்பில்லாத வெளிப்பாடுகள் இருந்துச்சு, அதனால எங்க வேலையில இருந்த விலகல்கள், ஓட்டைகள மேம்படுத்த அவங்க இத சொன்னாங்க. இது சுவிசேஷ பணிக்கு பயனுள்ளதா இருந்துச்சு, அதுல முறையில்லாத தனிப்பட்ட நோக்கங்கள் எதுவும் இல்லை. அவங்க தொனி தவறா இருந்தாகூட, அது வேலைய சிறப்பாக்கத்தான். ஆனா நான் அவங்களோட செயல சுவிசேஷ ஊழியர்களப் பத்தி அதிருப்திய பரப்பறதா வகைப்படுத்தினேன். நான் அவங்கள தாக்கி முத்திரை குத்திட்டிருந்தேன். இத நெனச்சு, நான் கொஞ்சம் குற்ற உணர்ச்சிய அடைந்தேன், அதனால நான் அவங்களுக்கு, “நான் தகாத முறையில பேசிட்டேன். நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்னு” பதில் அனுப்புனேன். அவங்க என் மன்னிப்ப ஏத்துக்கிட்டாங்க, அதோட நாம தொடர்பு கொண்டு அதிகமா ஒத்துழைக்கணும், நம்ம கடமைகள சிறப்பா செய்ய சேர்ந்து வேலை செய்யணும்னு சொன்னாங்க. அவங்க பதில நான் பார்த்ததும், எனக்கு வெக்கமா இருந்துச்சு. ஆனா நான் அமைதியானதனால எனக்கு சந்தோஷமாவும் இருந்துச்சு. இல்லைனா, எங்களுக்கிடையில ஒரு விரிசல் ஏற்பட்டு வேலை நிச்சயமா பாதிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்துல, நான் விஷயத்த அப்படியே விட்டுட்டேன், ஆனா என்னோட சீர்கேட்டப் பத்தி அதிகமா சுய அறிவ அடையலைன்னு நான் உணர்ந்தேன், அதனால நான் தேவன்கிட்ட என்னை நான் தெரிஞ்சிக்கிறதுக்கு என்னை பிரகாசிப்பிக்கக் கேட்டு ஜெபம் பண்ணேன்.

அப்புறம் ஒரு நாள், ஒரு கட்டுரை எழுதிட்டிருந்தபோது, தேவனுடைய வார்த்தைகள் சிலத நான் பார்த்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கையாள அல்லது கிளைநறுக்கப்படுவது குறித்து இருக்க வேண்டிய மிக முக்கிய அணுகுமுறை என்ன? முதலில், நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், உன்னை யார், எந்தக் காரணத்துக்காகக் கையாண்டாலும் சரி, அது கடினமானதாக அல்லது தொனி அல்லது சொற்கள் எப்படி இருந்தாலும் சரி, நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின், நீ என்ன தவறு செய்திருக்கிறாய், நீ எந்தச் சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறாய், மேலும் நீ சத்தியத்தின் கோட்பாடுகளுக்கு இணங்க செயல்பட்டாயா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும். நீ கிளைநறுக்கப்பட்டு கையாளப்படும்போது, முதலும் முக்கியமானதாக, உனக்கு இருக்க வேண்டிய அணுகுமுறை இதுதான். மேலும் அந்திக்கிறிஸ்துகளுக்கு இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை இருக்கிறதா? அவர்களுக்கு இல்லை; தொடக்கம் முதல் இறுதிவரை, அவர்கள் வெளிப்படுத்தும் அணுகுமுறை எதிர்ப்பும் வெறுப்பும்தான். அப்படிப்பட்ட ஒரு மனநிலையோடு அவர்களால் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்து தாழ்மையாகக் கிளைநறுக்குதலையும் கையாளப்படுதலையும் ஏற்கமுடியுமா? அது முடியாது. ஆகவே, பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள்? முதலாவதாக, அவர்கள் கடுமையாக வாதம்செய்வார்கள் மற்றும் நியாயப்படுத்துவார்கள், தற்காத்துக் கொள்வார்கள் மற்றும் மக்களின் புரிதலையும் மன்னிப்பையும் பெறும் நம்பிக்கையுடன், அவர்கள் செய்த தவறுகளுக்கும் அவர்கள் வெளிப்படுத்திய சீர்கேடான மனநிலைக்கும் எதிராக வாதம் செய்வார்கள். இதனால் அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்கவேண்டியதில்லை அல்லது அவர்களைக் கையாண்டு கிளைநறுக்கும் வார்த்தைகளை ஏற்கவேண்டியதில்லை. … எவ்வளவு அப்பட்டமாகத் தெரிந்தாலும் மற்றும் எவ்வளவு பெரிய இழப்பை உண்டாக்கி இருந்தாலும் அவர்கள் தங்கள் தவறுகளைப் பார்க்காதது போல நடிக்கிறார்கள். அவர்கள் சிறிதளவும் வருத்தமோ குற்ற உணர்வோ அடைவதில்லை, மேலும் அவர்களுடைய மனச்சாட்சி அவர்களைக் கண்டிப்பதே இல்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய எல்லா வலிமையோடும் தங்களை நியாயப்படுத்தி வார்த்தைப் போரை நடத்தி, ‘இது எல்லோருக்கும் இலவசமானது. எல்லோருக்கும் அவரவர்களுடைய காரணங்கள் இருக்கின்றன; நன்றாகப் பேசுபவருக்கு கடைசியில் அது வந்து சேருகிறது. பெரும்பான்மையின் மத்தியில் நான் நியாயப்படுத்தி, விளக்கி வெற்றிபெற்றுவிட்டால், அதன் பின் நான் வெற்றி அடைகிறேன், மேலும் நீ பேசும் சத்தியங்கள் சத்தியங்கள் அல்ல, மற்றும் உன் உண்மைகள்ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல. நீ என்னைக் கண்டனம் செய்ய விரும்புகிறாயா? வழியே இல்லை!’ என்று சிந்திக்கிறார்கள். ஓர் அந்திக்கிறிஸ்து கிளைநறுக்கப்பட்டு கையாளப்படும்போது, அவர்களுடைய இருதயம் மற்றும் ஆத்துமாவின் ஆழத்தில், அவர்கள் முற்றிலுமாக, உறுதியாக எதிர்த்து வெறுத்து அதை நிராகரிக்கிறார்கள். ‘நீ என்ன சொல்ல வேண்டியிருந்தாலும், நீ எவ்வளவுதான் சரியானவனாக இருந்தாலும், நான் அதை ஏற்க மாட்டேன், மேலும் அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நான் தவறு செய்யவில்லை’ என்பதே அவர்களுடைய மனப்பாங்காகும். உண்மைகள் அவர்களுடைய சீர்கேடான மனநிலையை எவ்வளவு தூரம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தாலும், அவர்கள் அதை அங்கீகரிக்கவோ அல்லது ஏற்கவோ மாட்டார்கள், ஆனால் தங்கள் பிடிவாதத்தையும் எதிர்ப்பையும் தொடர்வார்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும், அவர்கள் அதை ஏற்கவோ அல்லது அங்கீகரிக்கவோ மாட்டார்கள், ஆனால், ‘யார் யாரை விட அதிகமாகப் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்; யாருடைய வாய் வேகமானது என்று பார்ப்போம்’ என்று நினைப்பார்கள். கையாளப்பட்டு கிளிநறுக்கப்படுவதைக் குறித்து அந்திக்கிறிஸ்துகள் கருதும் ஒரு வகையான அணுகுமுறை இதுவாகும்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி ஒன்பது: அவர்கள் தங்களைத் தாங்களே வேறுபடுத்திக்கொள்ளவும், தங்கள் சொந்த நலன்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொள்ளவும் மட்டுமே தங்கள் கடமையைச் செய்கிறார்கள்; தேவனுடைய வீட்டின் நலன்களை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை, மேலும் தனிப்பட்ட மகிமைக்கு மாற்றாக அந்த நலன்களை விற்றுப்போடுகிறார்கள் (பகுதி எட்டு)”). “ஓர் அந்திக்கிறிஸ்து கையாளப்பட்டு கிளைநறுக்கப்படும்போது: அவர்கள் தங்கள் தீய செய்கைகளை அறிக்கையிடுவார்களா? என்று முதலில் கேட்கவும். இரண்டாவதாக: தங்களைக் குறித்துச் சிந்தித்து தங்களை அறிந்துகொள்வார்களா? என்று கேட்கவும். மூன்றாவதாக: கையாளுவதையும் கிளைநறுக்கப்படுதலையும் எதிர்கொள்ளும்போது அவர்களால் தேவனிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? என்று கேட்கவும். இந்த மூன்று அளவுகோல்களின் மூலம், ஓர் அந்திக்கிறிஸ்துவின் சுபாவத்தையும் சாராம்சத்தையும் ஒருவரால் அறிந்துகொள்ள முடியும். கையாளப்பட்டு கிளைநறுக்கப்படும்போது ஒரு நபரால் கீழ்ப்படிந்து, தங்களைக் குறித்துச் சிந்தித்து, மற்றும் அதன் மூலம் தங்களுடைய சீர்கேட்டின் வெளிப்பாட்டையும் சாராம்சத்தையும் அறிந்துகொள்ள முடியுமானால், அந்த நபரே சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவராவார். அவர்கள் ஓர் அந்திக்கிறிஸ்து அல்ல. இந்த மூன்று அளவுகோல்களே துல்லியமாக ஓர் அந்திக்கிறிஸ்துவிடம் இல்லாமல் இருப்பவை ஆகும். ஓர் அந்திக்கிறிஸ்து கையாளப்பட்டு கிளைநறுக்கப்படும்போது அவர்கள் பதிலாக வேறொன்றைச் செய்வார்கள், யாரும் எதிர்பார்க்காத ஒன்று—அதாவது, அவர்கள் கையாளப்பட்டு கிளைநறுக்கபப்டும்போது, அவர்கள் ஆதாரமற்ற எதிர் குற்றச்சாட்டுகளைக் கூறுவார்கள். தங்கள் தவறான செய்கைகளை அறிக்கையிட்டு தங்கள் சீர்கேடான மனநிலையை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அவர்களைக் கையாண்டு கிளைநறுக்கும் நபரை அவர்கள் கண்டனம் செய்வார்கள். அதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள்? அவர்கள், ‘எல்லா கையாளப்படுதலும் கிளைநறுக்கப்படுதலும் அவசியம் சரியானதாக இருப்பதில்லை. கையாளப்படுதலும் கிளைநறுக்கப்படுதலும் முழுவதும் மனிதரின் கண்டனத்தையும் நியாயத்தீர்ப்பையும் பற்றியவையே; அது தேவனின் சார்பாகச் செய்யப்படுவதில்லை. தேவன் மட்டுமே நீதியுள்ளவர். பிறரைக் கண்டனம் செய்யும் யாராக இருந்தாலும் கண்டனம் செய்யப்பட வேண்டியவர்கள்’ என்று கூறுகிறார்கள். இது ஓர் அடிப்படையற்ற எதிர்க் குற்றச்சாட்டு அல்லவா? இப்படிப்பட்ட எதிர்க் குற்றச்சாட்டுகளைக் கூறுபவர் எப்படிப்பட்ட நபர்? பகுத்தறிவுக்கு உட்படாமல் அசைந்து கொடுக்காத ஒரு பூச்சி மட்டுமே அப்படிச் செய்யும் மற்றும் பிசாசாகிய சாத்தானைப் போன்ற ஒருவன் மட்டுமே அப்படிச் செய்வான். மனச்சாட்சியும் அறிவும் உள்ள ஒருவர் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டார்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி ஒன்பது: அவர்கள் தங்களைத் தாங்களே வேறுபடுத்திக்கொள்ளவும், தங்கள் சொந்த நலன்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொள்ளவும் மட்டுமே தங்கள் கடமையைச் செய்கிறார்கள்; தேவனுடைய வீட்டின் நலன்களை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை, மேலும் தனிப்பட்ட மகிமைக்கு மாற்றாக அந்த நலன்களை விற்றுப்போடுகிறார்கள் (பகுதி எட்டு)”). கிளை நறுக்குதல் அப்புறம் கையாள்வது பத்தி அந்திக்கிறிஸ்துவோட மனப்பான்மை சோர்வும் எதிர்ப்பும்ங்கறத தேவனோட வார்த்த வெளிப்படுத்துச்சு. அவங்க முன்னாடி உண்மைகள் வைக்கப்பட்டாலும் அவங்க தங்களோட தவறுகள ஒப்புக்கொள்றதில்ல. தங்களோட கண்ணியத்தயும் அந்தஸ்தயும் தக்க வெச்சுக்கிறதுக்கு, மொத்தமா காரியத்த மாத்துற அளவுக்கு அவங்க தங்கள நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும், மத்தவங்களோட வாதாடவும், அவங்கள கையாள்றவங்கள கண்டனம் பண்ணவும் முயற்சிக்கிறாங்க. என்னோட நடத்தயும் தேவனோட வார்த்தையில வெளிப்படுத்தப்பட்ட அந்திக்கிறிஸ்துகளோட நடத்தைய போலவே இருப்பத நான் உணர்ந்தேன். நான் சுவிசேஷ பணியோட மேற்பார்வையாளர். ஜுலியானா சுவிசேஷ ஊழியர்கள் தங்களோட கடமைகள எப்படி செஞ்சாங்கன்னு குறிப்பிட்ட பிரச்சினையானது என் சொந்த வேலைல இருந்த ஒரு ஓட்டை, ஆனா நான் அத ஏத்துக்க மறுத்தது மட்டுமில்லாம நான் வாதாடி என் இருதயத்தில என்னையே பாதுகாத்தேன். என் மேல எந்த தவறும் இல்ல, என் சகோதரி வேணும்னே சங்கடப்படுத்த முயற்சிக்கிறாங்கன்னு நான் நினைச்சேன், அதனால அவங்களுக்கு எதிரா ஒரு தப்பெண்ணத்த உருவாக்குனேன். அதுக்கப்புறம், அவங்களுக்கு எதிரா எதையோ ஒன்ன கண்டுபிடிச்சு, அவங்கள நியாயந்தீர்க்க மொத்தமா காரியத்த மாத்துனேன், பழிய திருப்பிவிட்டு, தலைவர்கிட்ட பொய்யா புகார் கொடுத்தேன். எனக்கு உண்மையிலேயே மனிதத்தன்மையே இல்ல. சுவிசேஷ ஊழியர்களோட கஷ்டங்கள பத்தி அக்கறப்படற சாக்குப்போக்க மத்தவங்கள பிரச்சினைகள சுட்டிக்காட்டுவத தடுப்பதற்காக நான் பயன்படுத்தினேன். மேலோட்டமா, நான் என் சகோதர சகோதரிகள் கிட்ட அனுதாபம் வெச்சிருந்தேன், ஆனா உண்மையில, நான் வாதாடிட்டு என்னைப் பாதுகாத்துக்கிட்டிருந்தேன். உண்மையாவே நான் என்னோட சகோதர சகோதரிகளோட வாழ்க்கைக்குப் பொறுப்பேற்று இருந்தேன்னா, பிரச்சினைகள தீர்க்கவும், விலகல்கள மாற்றுவதற்கும், நான் கூடுதலான குறிப்புகளயும் உதவிகளயும் கொடுத்திருப்பேன். அது உண்மையில அவங்களுக்கு பயனளிச்சிருக்கும். அதுக்குப் பதிலா, நான் நேர்மாறா செஞ்சேன். அவங்க வேலையில பிரச்சினைகள் இருந்த இடத்துல, நான் அவங்களுக்கு உதவல, சத்தியத்தப் பத்தின ஐக்கியத்தின் மூலமா தீர்க்கவும் இல்லங்கிறது மட்டுமில்லாம நான் மறுபடியும் மறுபடியும் அவற்ற மூடி மறைச்சேன். என்னோட சகோதர சகோதரிகளோட வாழ்க்கைக்கு நான் எப்படி பொறுப்பேற்றுக் கொண்டேன்? நான் தெளிவா என் சொந்த பிம்பத்தயும் அந்தஸ்தயும் பராமரிச்சிட்டு வந்தேன். அந்தக் கஷ்டங்கள் நான் சத்தியத்தயோ இல்ல கிளை நறுக்குதலயோ அல்லது கையாள்வதயோ ஏத்துக்காததுக்கு எனக்குக் காரணமாவும் சாக்குப்போக்காவும் மாறுச்சு. நான் ரொம்ப வஞ்சிக்கிறவளாவும் துன்மார்க்கமாவும் இருந்தேன்.

அதுக்கப்புறம், நான் நினைச்சேன், என்னோட கடமைய நான் எப்படி செஞ்சேன்ங்கிறதுல தெளிவா பிரச்சினைகள் இருந்துது, அப்படி இருந்தும் என் பிரச்சினைகளுக்காக மத்தவங்கள குறை சொல்றதுல நான் ஏன் அவ்வளவு உறுதியா இருந்தேன்? நான் ஏன் வெட்கமாவோ அல்லது சங்கடமாவோ உணரல? இந்தப் பிரச்சினையோட மூல காரணம் என்னவா இருந்துது? நான் தொடர்ந்து தேடுனேன், தேவனோட வார்த்தையோட இன்னொரு பகுதிய படிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஓர் அந்திக்கிறிஸ்து கிளைநறுக்கப்பட்டு கையாளப்படும்போது, அவர்கள் செய்யும் முதல் காரியம் தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அதை எதிர்த்து நிராகரிப்பதுதான். அவர்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள்? ஏன் அப்படி? இது ஏனென்றால், அந்திக்கிறிஸ்துகளின் சுபாவமும் சாராம்சமும் சத்தியத்தைப் பிடிக்காமல் அதை வெறுப்பதுதான், மேலும் அவர்கள் சத்தியத்தை ஏற்கவே மாட்டார்கள். இயல்பாகவே, ஓர் அந்திக்கிறிஸ்துவின் சாராம்சமும் மனநிலையும் தங்கள் தவறுகளை அவர்கள் அங்கீகரிப்பதை அல்லது தங்கள் சொந்தச் சீர்கேடான மனநிலையை அங்கீகரிப்பதைத் தடுக்கின்றன. இந்த இரு உண்மைகளின் அடிப்படையில், கிளைநறுக்கிக் கையாளப்படுதலைப் பொறுத்தவரையில், ஓர் அந்திக்கிறிஸ்துவின் அணுகுமுறையானது அதை முழுதும் முற்றிலுமாக நிராகரித்து எதிர்ப்பதுதான். தங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவர்கள் அதை வெறுத்து எதிர்க்கிறார்கள், மற்றும் அதைச் சிறிதளவும் ஏற்கவோ அல்லது அதற்குக் கீழ்ப்படியவோ மாட்டார்கள், அதைவிட உண்மையான சிந்தனையோ அல்லது மனந்திரும்புதலோ அவர்களுக்கு இருப்பதில்லை. ஓர் அந்திக்கிறிஸ்துவை யார் கிளைநறுக்கிக் கையாண்டாலும், அது எதைப் பற்றியதாக இருந்தாலும், அந்த விஷயம் குறித்து எந்த அளவுக்கு அவர்களைக் குறைகூறப்பட வேண்டுமானாலும், அந்தத் தவறு எவ்வளவு அப்பட்டமாக இருந்தாலும், எவ்வளவு பொல்லாங்கை அவர்கள் செய்தாலும் அல்லது திருச்சபைக்கு அவர்களது பொல்லாப்பு எந்த விளைவுகளை ஏற்படுத்தினாலும்—அந்திக்கிறிஸ்து இவை எதைப் பற்றியும் கருதிப் பார்ப்பதில்லை. ஓர் அந்திக்கிறிஸ்துவைப் பொறுத்தவரையில், அவர்களைக் கிளைநறுக்கி கையாள்பவர் அவர்களைத் தனிமைப்படுத்துகிறார் அல்லது அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடிக்கிறார். அவர்கள் பலவந்தமாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், இழிவுபடுத்ப்பதப்படுகிறார்கள், மனிதாபிமானத்தோடு அவர்கள் நடத்தப்படவில்லை, மற்றும் அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டு தூற்றப்பட்டார்கள் என்று கூட சொல்லும் அளவுக்கு அந்திக்கிறிஸ்துகள் செல்வார்கள். அந்திக்கிறிஸ்துகள் கிளைநறுக்கப்பட்டு கையாளப்பட்ட பின், அவர்கள் என்ன தவறு செய்தார்கள், என்ன விதமான சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்தினார்கள், விஷயத்தில் கோட்பாடுகளைத் தேடினார்களா, சத்தியத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப செயல்பட்டார்களா அல்லது தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்களா என்பது பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை. அவர்கள் தங்களைச் சோதித்துப்பார்ப்பதில்லை அல்லது இவை எவற்றைப் பற்றியும் சிந்தித்துப்பார்ப்பதில்லை, அல்லது இந்தப் பிரச்சினைகளைக் குறித்து ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, கிளைநறுக்கிக் கையாளப்படுதலை தங்கள் சொந்த விருப்பத்தின்படியும் முன்கோபத்தோடும் அணுகுகிறார்கள்(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி பன்னிரெண்டு: பதவி இல்லாதபோதும், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நம்பிக்கை இல்லாதபோதும் அவர்கள் பின்வாங்க விரும்புகிறார்கள்”). தேவனோட வார்த்தையில இருந்து சத்தியத்தப் பத்தி சோர்ந்து போயிருக்கிற, சத்தியத்த வெறுக்குற அவங்களோட சுபாவத்துனால கிளை நறுக்குதலயும் கையாள்வதயும் அந்திக்கிறிஸ்துக்களால ஏத்துக்க முடியாதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன். தேவன்கிட்ட இருந்து வர்ற நேர்மறையான எல்லா விஷயங்களயும் அவங்களால ஏத்துக்க முடியல, அதோட அவங்க சத்தியத்தோட ஒத்துப்போற அறிவுரைகள வெறுக்கிறாங்க. நான் என்னைப் பத்தி யோசிச்சேன் ஆரம்பத்தில இருந்து முடிவு வரைக்கும், என் சகோதரியோட அறிவுரையை பத்தின என்னோட மனப்பான்மை ஏத்துக்க மறுக்கறதாவே இருந்துச்சு, ஏன்னா என் மனசுல நான் ஏற்கனவே, “உங்கள்ல யாரும் எங்களோட நேரடியா வேலை செய்றதில்ல, ஆனா நீங்க நிலமைய புரிஞ்சுக்காம அறிவுரை சொல்றீங்க, அப்படின்னா நீங்க நியாயம் இல்லாதவங்களாவும் விஷயங்கள கடினமாகவும் ஆக்குறீங்கன்னு அர்த்தம்னு” முடிவு செஞ்சிருந்தேன். நான் எதயும் சத்தமா சொல்லாம, கீழ்ப்படிகிற மாதிரி ஒரு தோற்றத்த கொடுத்தாலுங்கூட, மத்தவங்களோட கருத்துகள மறுக்கவும் அறிவுரயை ஏத்துக்க மறுக்கவும் பயன்படுத்தறதுக்குத் தயாரா என் மனசுல, நான் எல்லா காரணங்களயும் வரிசப்படுத்தி வைச்சிருந்தேன். நான் சொல்ல வேண்டியத சொல்லிருந்தேன், கேட்டத நான் செஞ்சிருந்தேன்னு மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்தினேன், அது மூலமா நான், “என்கிட்ட இருந்து வேற என்ன உங்களுக்கு இன்னும் வேணும்? என்ன செய்யணுமோ அத நான் செஞ்சுட்டேன், அதனால நான் சத்தியத்ததான் கடைப்பிடிச்சிட்டிருந்தேன். நீங்க என் மேல குற்றஞ்சுமத்த முடியாது, நீங்க மீண்டும் குற்றஞ்சுமத்துனீங்கன்னா, நீங்க தப்பு செய்றீங்கன்னு” சுட்டிக்காட்டினேன். அவங்களோட குறிப்புகளயும் உதவியயும் ஏத்துக்க நான் மறுத்ததால, சத்தியத்தக் குறிச்சு சோர்ந்துபோற சாத்தானிய மனநிலயத்தான் நான் வெளிப்படுத்தினேன். இந்த நேரத்தில, தேவனோட வார்த்தையில என்னைத் தூண்டிய ஒரு பகுதியை நான் நினைச்சேன். தேவன் சொல்லுகிறார்: “அநேகர், அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது அவர்கள் கடைப்பிடிக்க முடியாத சத்தியங்களைச் சத்தியங்களே அல்ல என நம்புகின்றார்கள். அத்தகைய ஜனங்களிடம், என் சத்தியங்கள் மறுக்கப்பட்டு, ஒதுக்கிவிடப்படுபவையாக ஆகின்றன(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்”). தேவனோட வார்த்தைதான் சத்தியம், கிளை நறுக்குதலும் கையாள்தலும் ஜனங்களோட ஜீவப்பிரவேசத்துக்கு நன்மை பயக்கும், அதோட அது ஜனங்கள் அவங்களப் பத்தி சிந்திக்க உதவும் என்பத ஒப்புக்கொள்றதா நான் சொன்னேன், ஆனா உண்மையில, கிளை நறுக்குதலயும் கையாள்தலயும் நான் உண்மையா சந்திச்சப்போ, இல்ல மத்தவங்க என்ன விமர்சிச்ச போதும், நான் எதிர்ப்பயும் வெறுப்பயும் உணர்ந்தேன். யாராவது என் மேல குற்றஞ்சாட்டினாலோ இல்ல அறிவுரை சொன்னாலோ நான் அத ஏத்துக்கல, என் காரியத்த வாதாடவும் என்னைக் காப்பாத்திக்கவும் நான் சாக்குப்போக்குகள முன்வெச்சேன், அதோட நான் சத்தியத்தின் கொள்கைகள தேடவேயில்ல. நான் விரும்பியத வெறுமனே நான் செஞ்சு, எனக்குப் பிடிச்ச மாதிரி நடந்துகிட்டேன். விரிவான பகுப்பாய்வுக்கு அப்புறம், எந்த அளவுக்கு நான் வாதாடுறேனோ, அந்த அளவுக்கு என்னோட சகோதர சகோதரிகள்கிட்ட இருந்து எனக்கு அதிகமான புரிதலும் அனுதாபமும் கிடைக்குங்குற மாதிரி, என்னோட வாதம் வெளிப்புறமா சுவிசேஷ ஊழியர்கள பாதுகாப்பதா இருந்துது, ஆனா அது உண்மையில என்னோட சொந்த பிம்பத்தயும் அந்தஸ்தயும் பாதுகாக்கறதுக்காக இருந்துதுன்னு பார்த்தேன். இப்படியா, சுவிசேஷ பணியில எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும், நான் ஒருபோதும் பழிய ஏத்துக்க வேண்டியதில்லாம இருந்துது, யாரும் என்னைக் குற்றஞ்சாட்ட முடியல, அதோட என்னோட பிம்பமும் எப்பவும் சேதமடைல. நான் ரொம்ப வஞ்சகமானவளா இருந்தேன்! வெளிப்புறமா, இந்த வாதம் என்னோட சொந்த பிம்பத்த பாதுகாத்துது, ஆனா நான் சத்தியத்த தேடவோ அல்லது ஏத்துக்கவோ இல்லாததால, நான் வெளிப்படுத்தியதெல்லாம் சாத்தானிய மனநிலையா இருந்துது, அதோட நான் என்னோட குணத்தயும் கண்ணியத்தயும் இழந்துட்டேன். இத உணர்ந்தவுடனே, சத்தியத்த சரியா பின்பற்றாம இத்தன வருஷங்களா தேவன விசுவாசிச்சதற்காக நான் வருத்தப்பட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு முறை நான் கிளை நறுக்கப்பட்டு கையாளப்பட்ட போதும், நான் எதுவும் பேசலைன்னாலும், என்னோட மனசு முழுவதும் வாக்குவாதங்களால நெறஞ்சிருந்தது, அதோட என்னால அமைதியாக முடியல, என்னைப் பத்தி சரியா யோசிச்சுப் பாக்க முடியல. இதனோட விளைவா நான் எதயும் அடையாம, விஷயங்கள அனுபவச்சறிஞ்சேன். இதை நினைச்சு, என்னோட கருத்துக்களோட ஒத்துப்போகாத விஷயங்கள் நடந்துச்சுன்னா நான் இனிமே வாதாட மாட்டேன், அதுக்குப் பதிலா நான் என்ன அமைதிபடுத்திட்டு, தேவன்கிட்ட ஜெபித்து, சரியா பாடங்கள கத்துக்குவேன்னு எனக்கு நானே சொல்லிட்டேன். இதுதான் ரொம்ப முக்கியமான விஷயமா இருந்துது.

சீக்கிரமாவே நான் சில பகுதி நேர திரைப்பட வேலைகள பொறுப்பெடுத்தேன். ஒரு நாள், ஒரு புதியவர் சில வதந்திகள நம்பி, குழுவுல சில தவறான கருத்துகள பரப்பியதா எனக்கு ஒரு செய்தி வந்துச்சு. இன்னும் புதுசா வர்றவங்க ஏமாற்றப்படுவத தடுக்க, நாங்க அவங்களோட சீக்கிரமா சத்தியத்த பத்தி ஐக்கியம் கொள்ள வேண்டியிருந்துது. ஆனா அந்த நேரத்துல, திரைப்பட வேலைகள்ல ஒரு பிரச்சினைய நான் கவனிக்க வேண்டியிருந்துது. நான் உடைஞ்சு போயிட்டேன், ஏன்னா ரெண்டு விஷயங்களுமே அவசரமானது, ஆனா நான் ஏற்கனவே புதுசா வர்றவங்களோட விஷயத்த வேற ஒருத்தர்கிட்ட ஒப்படச்சிருந்தேன், அதனால முதல்ல படப்பிடிப்பிற்குப் போகலாம்னு முடிவு பண்ணேன். நான் படப்பிடிப்புக்கு வந்தப்போ, ஒரு காரியம் என்னை ரொம்ப நேரமா அங்க இருக்க வெச்சது. அப்போ, என் தலைவர் என்னைக் கூப்பிட்டு, “விஷயங்களுக்கு எப்படி முன்னுரிமை கொடுக்கணும்னு ஏன் உங்களுக்குத் தெரியல? புதுசா வர்றவங்க வஞ்சிக்கப்படறாங்க, இது வேற எதயும் விட முக்கியமானது. அதவிட முக்கியமான விஷயம் வேறென்ன இருக்க முடியும்? நீங்க ஒரு பகுதி நேர திரைப்பட வேல செய்யலாம், ஆனா அது உங்களோட முதன்மையான வேலையில தலையிட நீங்க அனுமதிக்க முடியாது, அப்படித்தானே? உங்கள நீங்களே ஆராஞ்சு பாத்து உங்க வேலைய இப்படி நீங்க கையாள்றதுக்கு உங்களுக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கான்னு பாக்கணும். ஒருவேள கேமரால உங்க முகத்த காட்டணும்ங்கிற வாய்ப்ப நீங்க அதிகமா மதிக்கறீங்களோன்னு” சொன்னாரு. இப்படிப்பட்ட கிளைநறுக்குதலயும் கையாள்தலயும் எதிர்கொண்டப்போ, என்னால மறுபடியும் வாதாடாம இருக்க முடியல. “புதுசா வர்றவங்க வஞ்சிக்கப்படுவத கையாள நான் ஏற்கனவே வேற ஒருத்தர கையாள சொல்லிருந்தேன் இல்ல? மோசமா சொல்லணும்னா, பிரச்சினைய தீர்க்க நான் கொஞ்சம் தாமதப்படுத்தினேன் அவ்ளோதான், இல்லயா? முக்கியமானதுக்கு எப்படி முன்னுரிம கொடுப்பதுன்னு எனக்குத் தெரியலன்னு நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியும்னு நான் நினைக்கிறேன், ஆனா நான் பகட்டா என்னைக் காட்ட விரும்புறேன்னு சொல்றது முற்றிலும் ஏத்துக்க முடியாதது! முதல்ல நான் ஒரு நடிகரா பகுதி நேர பட வேலைகள செய்யல, ரெண்டாவதா, கேமரால என் முகத்த காட்ட நான் விரும்பவேயில்ல, அப்படி இருக்கும்போது என்னைப் பத்தி நீங்க ஏன் இத சொல்றீங்க? நான் கவனம் சிதறப்பட்டு என் வேலையில குறைஞ்ச செயல் திறனா இருப்பேன், அதனால உங்க வேலையோட முடிவுகள் மோசமா தெரியும்னு நீங்க கவலைப்படுறதுனாலயா?” இதயெல்லாம் நான் நெனச்ச போது, நான் தப்பு செய்றேன்னு திடீர்னு உணர்ந்தேன். இத எப்படி வேற ஒருத்தரோட தவறா என் மனசுல நான் மாத்துனேன்? நான் ஏன் இன்னொருவர மறுபடியும் தாக்க நினைச்சேன்? நான் மறுபடியும் வாதாடறவளா இருக்க ஆரம்பிச்சேனில்லயா? இந்த நேரத்துல, நான் தேவனோட வார்த்தையோட ஒரு பகுதிய நினைச்சேன். “காரணம் எதுவாக இருந்தாலும்—உனக்கு ஒரு மாபெரும் வருத்தம் இருந்தால்கூட—நீ சத்தியத்தை ஏற்காவிட்டால், உனக்கு அழிவுதான். குறிப்பாக சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் விஷயங்களைப் பொறுத்த வரையில் தேவன் உன் அணுகுமுறையைப் பார்க்கிறார். குறைகூறுதல் உனக்குப் பயனுள்ளதாக இருக்குமோ? சீர்கேடான மனநிலையின் பிரச்சினைகளை உன்னுடைய குறைகூறுதல் தீர்க்க முடியுமா? உன் குறை கூறல் நியாயமாக இருந்தாலும், அதனால் என்ன? நீ சத்தியத்தை அடைந்திருப்பாயா? தேவன் தமக்கு முன்பாக உன்னை அங்கீகரிப்பாரோ? ‘நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவனல்ல. ஒரு புறமாகச் செல்; உன்னால் நான் நொந்துபோனேன்’ என்று தேவன் கூறும்போது, நீ அழிந்துபோக மாட்டாயா? ‘உன்னால் நான் நொந்துபோனேன்’—என்ற ஒற்றைச் சொற்றொடரால், தேவன் ஒரு நபராக உன்னை வெளிப்படுத்தி வரையறுத்திருப்பார்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனுக்கு அடங்கியிருத்தலே சத்தியத்தைப் பெறுவதற்கான ஒரு அடிப்படைப் பாடம்”). நான் தேவனோட வார்த்தையில இருந்து நான் கிளை நறுக்கப்பட்டு கையாளப்பட்ட போது, தேவன் என் மனப்பான்மைய பாக்க விரும்புனாருன்னு புரிஞ்சுகிட்டேன். நான் எப்போ வாதாடிட்டு, மத்தவங்களோட தப்புகள கண்டுபிடிச்சு, சத்தியத்த தேடாம, பிரச்சினைல சிக்கிட்டிருந்தேன்னா, அப்போ நான் என்னோட பாடத்த கத்துக்கவே இல்ல. என்னோட விவாதம் எவ்வளவு சரியானதா, மிகைப்படுத்தப்பட்டதா இருந்தாலும், எல்லாரும் புரிஞ்சுட்டு ஏத்துக்கிட்டாலும், என்ன பிரயோஜனம்? நான் சத்தியத்த ஏத்துக்காம, என் வாழ்க்கையோட மனநில மாறவே மாறாது. இதை நினைச்சு, நான் தேவன் முன்னாடி ஜெபிக்க வந்து, என்னை நானே தெரிஞ்சுக்க என்னைப் பிரகாசமாக்க அவர்கிட்ட கேட்டேன். அடுத்து கொஞ்ச நாட்கள்ல, நான் அடிக்கடி, “என்கிட்ட என்ன தவறான நோக்கங்கள் இருக்குன்னு” என்னையே அடிக்கடி கேட்டுகிட்டேன். யோசிச்சப்போ, திடீர்னு நான் ஒரு காரியத்த நெனச்சு பார்த்தேன். என் பகுதி நேர திரைப்பட வேலைல, உயர் மட்ட தலைவர்கள் என்கிட்ட அந்த வேலய செய்ய கேட்டாங்கங்கறது எனக்குத் தெரியும், அதனால நான் உடனடியா உயிர்ப்பா செயல்பட்டேன். மேல்மட்டத் தலைவர்களுக்கு திரைப்படம் ரொம்ப முக்கியமானது, அதனால என்னால முடிஞ்ச சிறந்தத செய்யணும்னு எனக்குத் தெரியும். அது பகுதி நேர வேலையா இருந்தாலும், எல்லாத்தயும் முழுமையா பரிசீலன பண்ணி என்னோட ஆலோசனைல விரிவா இருக்கணும்னு விரும்புனேன். எந்தப் பிரச்சனையும் தோன்றுவத நான் விரும்பல. ஏதாவது தவறு நடந்தா, தலைவர்கள் என்னை எப்படி பாப்பாங்க? அதனால, இந்த நேரத்துல, நான் ரொம்ப உற்சாகமாவும் ஊக்கமாகவும் இருந்தேன். நான் கேமராவில தோன்ற விரும்பலங்கறது எனக்கு தனிப்பட்ட நோக்கங்கள் இல்லன்னு அர்த்தமில்ல. உண்மைல, நான் தலைவர்களோட உயர் மதிப்ப பெறுவதற்கும் மத்தவங்கள கவருவதுக்கும்தான் இத செஞ்சிட்டிருந்தேன். நான் என்னோட பிம்பத்தயும் அந்தஸ்தயும் தக்க வச்சிக்கதான் அதை செஞ்சிட்டிருந்தேன். புதுசா வர்றவங்க வஞ்சிக்கப்படுற மாதிரியான முக்கியமான விஷயத்தில, நான் என்னோட திட்டங்கள கலந்துரையாடி திரைப்பட வேலைகள செய்யற சகோதர சகோதரிகளோட ஒருங்கிணஞ்சிருக்கணும். புதுசா வர்றவங்க பிரச்சனைய நான் முதல்லயே எளிதா கையாண்டிருக்கலாம். ஆனா மேல்மட்டத் தலைவர்கள் படத்துக்கு எவ்ளோ கவனம் செலுத்துறாங்கன்னு நான் யோசிச்சப்போ, முக்கியமான விஷயத்துக்கு முன்னுரிம கொடுக்கத் தவறி, புதுசா வர்றவங்கள ஒதுக்கிட்டு, நான் முதல்ல படப்பிடிப்புக்குப் போனேன். நான் என்னோட கடமைல தேவனோட சித்தத்தப் பத்தி அக்கறப்படல, நான் என்னோட அந்தஸ்தயும் நற்பெயரயும் தக்க வெச்சுட்டிருந்தேன். நான் ரொம்ப சுயநலமானவளாவும் இழிவானவளாவும் இருந்தேன்! என் சகோதரி என்னைக் கிளை நறுக்கிக் கையாளாம இருந்திருந்தா, நான் என்னைப் பத்தி யோசிச்சிருக்க மாட்டேன், அதோட என் கடமைய கெடுக்குற என்னோட தனிப்பட்ட நோக்கங்கள நான் கண்டுபிடிச்சிருக்க மாட்டேன். இத நான் உணர்ந்த உடனே, என் இருதயத்தில இருந்த குறைகள் மறஞ்சு போச்சு. நான் சீர்கெட்டவள்னும் என்னோட நோக்கங்கள் ரொம்ப அசிங்கமானதுன்னும் நான் உணர்ந்தேன். தேவன் என்னை அவமானப்படுத்தவோ சங்கடப்படுத்துவதுக்காகவோ கிளைநறுக்கவும் கையாளவும் மனுஷங்களயும் விஷயங்களயும் பயன்படுத்தல, என்னைச் சுத்திகரிக்கவும் கொள்கைகளுக்கு ஏற்ப என்னோட கடமைய செய்றதுக்கு எனக்கு வழிகாட்டவும் சத்தியத்தோட யதார்த்தங்களுக்குள்ள நான் பிரவேசிக்க எனக்கு உதவறதுக்குந்தான் அப்படி செஞ்சாரு. நான் எனக்காக வாதாடாம, கீழ்ப்படியவும் தேடவும் முடியும்போது, என்னோட குறைகளயும் குறைபாடுகளயும் என்னை உணரச் செய்ய தேவன் என்ன பிரகாசமாக்குவாரு அதனால என்னோட யோசனைகள்படி காரியங்கள செய்யறதயும், திருச்சபையின் வேலைக்குத் தீங்கிழைப்பதயும் என்னால தவிர்க்க முடியும்னும் நான் புரிஞ்சிட்டேன். இந்த உணர்தல் மற்றும் ஆதாயங்கள் மூலமா, நான் என் மனசுல எந்த வேதனையயும் உணரல, அதோட உண்மையில நான் ரொம்ப நிறைவா உணர்ந்தேன். இதெல்லாம் ரொம்ப அற்புதமான அனுபவங்களா இருந்துது.

அதுக்கப்புறம், நான் தேவனோட வார்த்தையில இருந்து பயிற்சிக்கான சில பாதைகள கண்டுபிடிச்சேன். தேவன் சொல்லுகிறார்: “கீழ்ப்படிதல் என்னும் பாடத்தைப் படிக்க எந்தச் சீர்கேடான மனநிலையைச் சீர்ப்படுத்த வேண்டும்? அது உண்மையில், சத்தியத்தைக் கடைப்பிடித்து தேவனுக்குக் கீழ்ப்படிவதில் மக்களுக்கு இருக்கும் மாபெரும் தடையான அகந்தையும் சுயநீதியும் கொண்ட மனநிலையையே ஆகும். அகந்தையான மற்றும் சுயநீதியான மனநிலையை உடைய மக்கள் பகுத்தறிதலிலும் கீழ்ப்படியாமையிலும் நோக்கங்கொண்டவர்களாக இருப்பார்கள், எப்போதும் தாங்களே சரியாக இருப்பதாக எண்ணுவார்கள், ஆகையினால் ஒருவரின் அகந்தையான சுயநீதியான மனநிலையை சரிசெய்து கையாளுவதை விட அதிக அவசரமான காரியம் வேறொன்றும் இல்லை. மக்கள் கீழ்ப்படிபவர்களாகி, தங்கள் சொந்த பகுத்தறிவைக் கொண்டு முடிவெடுப்பதை நிறுத்தியவுடன் கலகத்தன்மையின் பிரச்சினை தீர்ந்துவிடும், மேலும் அவர்கள் கீழ்ப்படியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். மக்கள் கீழ்ப்படிதலை அடையக் கூடியவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்குக் ஒரு குறிப்பிட்ட அளவு பகுத்தறிவு இருக்க வேண்டுமா? அவர்களுக்கு ஒரு சாதாரண நபரின் அறிவு இருக்க வேண்டும். சில விஷயங்களில், உதாரணத்துக்கு: நாம் சரியானதைச் செய்தோமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் திருப்தி அடையவில்லை என்றால், தேவன் சொல்வது போல் நாம் செய்ய வேண்டும், எல்லாவற்றிற்கும் தேவனுடைய வார்த்தைகள்தாம் தரநிலை ஆகும். இது பகுத்தறிவா? எல்லாவற்றுக்கும் முன் மக்களிடம் காணப்பட வேண்டிய அறிவு இத்தகையதுதான். நாம் எவ்வளவு தூரத்துக்குத் துன்பப்பட்டாலும், நம்முடைய எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் காரணங்கள் எதுவாக இருந்தாலும், தேவன் திருப்தி அடையாவிட்டால்—தேவனுடைய தேவைகள் சந்திக்கப்படாவிட்டால்—அதன்பின் நம்முடைய செயல்கள் கேள்விக்கு இடமில்லாமல் சத்தியத்துக்கு இணங்கியதாக இல்லை, ஆகவே நாம் கவனித்துக் கேட்டு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் தேவனிடம் காரணகாரியம் பார்க்கவோ பகுத்தறிவைப் பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது. உனக்கு அப்படிப்பட்ட பகுத்தறிவு இருக்கும்போது, உனக்கு ஒரு சாதாரண நபரின் அறிவு இருக்கும்போது, உன்னுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது எளிது, மற்றும் நீ உண்மையிலேயே கீழ்ப்படிகிறவனாய் இருப்பாய். நீ எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நீ கீழ்ப்படியாதவனாய் இருக்க மாட்டாய், மேலும் தேவனுடைய தேவைகளுக்கு எதிர்த்துநிற்க மாட்டாய், தேவன் கேட்பது சரியா தவறா, நல்லதா கெட்டதா என்று பகுத்தறிந்து பார்க்க மாட்டாய், உன்னால் கீழ்ப்படிய முடியும்—இவ்வாறு உன் காரணகாரிய நிலைக்கு, உறுதியற்ற தன்மைக்கு, கலகத்தன்மைக்கு தீர்வு காண்பாய். எல்லோருக்கும் இந்தக் கலகத்தன்மை அவரவர்களுக்குள் இருக்கிறதா? இந்த நிலை அடிக்கடி மக்களிடம் தோன்றுகிறது, மேலும் அவர்கள் தங்களுக்குள் எண்ணுகிறார்கள், ‘என் அணுகுமுறை, முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் அறிவுபூர்வமானதாக இருக்கும் வரை, நான் சத்தியத்தின் கோட்பாடுகளை மீறினாலும், நான் கிளைநறுக்கப்படவோ அல்லது கையாளப்படவோ கூடாது, ஏனெனில் நான் தீமை செய்யவில்லை.’ இது மக்களிடத்தில் இருக்கும் ஒரு பொதுவான நிலையாகும். அவர்கள் தீமை செய்யவில்லை என்றால், கிளைநறுக்கப்படவோ கையாளப்படவோ கூடாது; தீமை செய்தவர்கள் மட்டுமே கிளைநறுக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பது அவர்களுடைய கருத்து. இந்தக் கருத்து சரியானதா? நிச்சயமாக இல்லை. கிளைநறுக்குதலும் கையாளப்படுதலும் மக்களின் சீர்கேடான மனநிலையை இலக்காகக் கொண்டவை. மக்களுக்குச் சீர்கேடான மனநிலை இருந்தால், அவர்கள் கிளைநறுக்கப்பட்டுக் கையாளப்பட வேண்டும். தீமை செய்த பின்னர்தான் அவர்கள் கிளை நறுக்கப்பட்டுக் கையாளப்பட வேண்டுமானால், அது ஏற்கெனவே மிகவும் தாமதம் ஆகிவிடும், ஏனெனில் பிரச்சினை ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும். தேவனுடைய மனநிலைக்கு இடறலுண்டாக்கப்பட்டால், உனக்குப் பிரச்சினைதான், தேவன் உனக்குள் கிரியைசெய்வதை நிறுத்திவிடலாம்—அப்படியெனில், உன்னைக் கையாளுவதனால் என்ன பயன்? உன்னை அம்பலப்படுத்தி புறம்பாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. தேவனுக்குக் கீழ்ப்படியவிடாமல் மக்களைத் தடுக்கும் முக்கியச் சிக்கல் அவர்களின் அகந்தையான மன்நிலைதான். மக்களால் உண்மையிலேயே நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்க முடிந்தால், அவர்களால் தங்கள் சொந்த அகந்தையான மனநிலையை திறம்பட தீர்த்துவிட முடியும். அவர்கள் எந்த அளவிற்கு அதைத் தீர்க்க முடிந்தாலும், இது சத்தியத்தைக் கடைப்பிடித்து தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு பயனுள்ளதாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “தேவனை விசுவாசிப்பதற்கான சரியான பாதையில் செல்ல நிறைவேற்றப்பட வேண்டிய ஐந்து நிபந்தனைகள்”). தேவனுடைய வார்த்தைய தியானிச்சதுக்கப்புறம், வாதாடற, கலக மனநிலைய சரிசெய்ய கீழ்ப்படிகிற மனப்பான்மைய கொண்டிருக்கிறது ரொம்ப முக்கியம்னு நான் புரிஞ்சுகிட்டேன். உங்க வாதங்கள் எவ்ளோ நல்லா இருந்தாலும், அவை சத்தியத்தோட இணங்கலைன்னா, இல்ல யாராவது எதிர்ப்ப கிளப்புனா, அப்போ நீங்க முதல்ல ஏத்துக்கிட்டு, சத்தியத்த தேடி, உங்கள பத்தி யோசிச்சு, உங்கள நீங்களே புரிஞ்சுக்கணும். இந்தப் பகுத்தறிவு தான் உங்களுக்கு இருக்கணும், அதோட பயிற்சிக்கான பாதையயும் கொண்டிருக்கணும். வாதாடற ஜனங்க சத்தியத்த தேடவோ ஏத்துக்கவோ மாட்டாங்க அதோட கீழ்ப்படிகிற மனப்பான்ம இருக்காது, அதனால அவங்க எத்தன காரியங்கள அனுபவிச்சறிஞ்சாலும், அவங்க வாழ்க்கையில எப்பவுமே வளர மாட்டாங்க. தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு, சத்தியத்த ஏத்துக்கிட்டு, தேவனோட வார்த்தைகள பயன்படுத்தி, நம்மள பத்தி யோசிக்கிறதுனால மட்டுந்தான் நம்மோட சீர்கெட்ட மனநிலைகள் மாற முடியும். நாம் தேவன விசுவாசிச்ச எல்லா வருடங்களிலும், நான் எப்பெல்லாம் கிளை நறுக்கப்பட்டு கையாளப்பட்டனோ, நான் எப்பவும் என் இருதயத்தில ஒரு எதிர்ப்ப உணர்வேன், அதோட எப்பவும் வாதாட விரும்புனேன். சத்தியத்த அடையறுதுக்கான பல வாய்ப்புகள நான் தவற விட்டுட்டேன். இப்படி விசுவாசிச்சு, நான் இன்னும் இருபது வருஷம் விசுவாசிச்சா கூட, எனக்கு என்ன லாபம்? இத உணர்ந்தவளா, இப்ப இருந்து, நான் கிளை நறுக்கப்பட்டு கையாளப்படும் போது, அது எவ்ளோ மோசமா இருந்தாலும், நான் கீழ்ப்படிஞ்சு பாடங்கள கத்துக்குவேனு எனக்கு நானே சொல்லிட்டேன். இதெல்லாம் சத்தியத்த அடையறதுக்கும் மாறதுக்குமான வாய்ப்புகள், அதனால நான் அவற்ற மதிக்கணும் அதோட சத்தியத்த ஏத்துக்கிற, தேவனுக்குக் கீழ்ப்படியிற ஒருத்தியா இருக்க முயற்சி செய்யணும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கஷ்டமான சூழலின் சோதனை

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன்....

எப்படி நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் புகாரளித்தேன்

சில வருஷங்களுக்கு முன்னாடி, என்னோட கடமையச் செய்ய வெளியூர்ல இருந்து என்னோட உள்ளூர் திருச்சபைக்குத் திரும்பி வந்தேன். தண்ணீர் பாய்ச்சும்...

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும்,...

Leave a Reply