கர்த்தரை நான் எப்படி வரவேற்க வேண்டும்

ஜனவரி 7, 2023

நான் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்துல பிறந்தேன், சின்ன வயசுல இருந்தே, நான் கத்தோலிக்க மதத்தின் நடைமுறைகளப் பின்பற்றி, கர்த்தரோட வருகைக்காக ஏங்குனேன். நான் வளர வளர, அதிகமா சத்தியங்களப் புரிஞ்சுக்கற முயற்சில திருவிவிலியத்த அடிக்கடி வாசிக்க ஆரம்பிச்சேன். திருவெளிப்பாடு 1:7 போன்ற விவிலிய வசனங்கள. எங்களோட குருவும் கூட எங்களுக்கு விளக்கிச் சொல்லுவாரு: “இதோ! அவர் மேகங்களின் மேல் வருகிறார். அனைவரும் அவரைக் காண்பார்கள், அவரைக் குத்தியவர்களும் காண்பார்கள். அவர்பொருட்டு மண்ணுலகக் குலத்தவர்கள் எல்லோரும் புலம்புவார்கள்.” கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் மேகத்தின் மேல இறங்கி வருவாருன்னும், எல்லாருமே அவரைப் பார்ப்பாங்கன்னும் எங்களோட குரு எங்ககிட்ட சொன்னாரு. ஆனா என்னோட 20 வயசுல நான் இந்த விவிலிய வசனத்த வாசிச்சேன்: “ஆனால் அந்த நாளையும் மணிநேரத்தையும் தந்தை ஒருவர் தவிர வேறு யாரும் அறியார், விண்ணகத் தூதர்களும் அறியார்கள்(மத்தேயு நற்செய்தி 24:36). கர்த்தர் திரும்பி வர்றப்போ அது யாருக்குமே அதப்பத்தித் தெரியாதுன்னு இந்த வசனம் சொல்லுது, ஆனா கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் மேகத்தின் மேல இறங்கி வந்து, எல்லாராலயும் பாக்கப்படுவாருன்னு குருவானவர் எங்ககிட்ட சொன்னாரு. இதுக்கு என்ன அர்த்தமா இருக்கும்? கர்த்தர் சரியா எப்படித் திரும்பி வருவாரு? நான் ரொம்ப குழப்பமடஞ்சேன். ஒரு கூடுகையில, நான் வேற ஒரு குருவத் தேடுனேன். ஆனா அவர் என்கிட்ட, “திருவிவிலியத்துல ரொம்பத் தெளிவா சொல்லப்பட்டிருக்குது: கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் ஒரு மேகத்தின் மேல இறங்கி வருவாரு. இத ரொம்ப விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்ல. நீங்க அத விசுவாசிச்சா மட்டும், போதுமானது” அப்படின்னு சொல்லிட்டாரு. குருவோட நடத்தையினால நான் ரொம்ப ஏமாந்து போனேன். தீர்க்கதரிசனத்தோட உண்மையான அர்த்தத்தப் புரிஞ்சுக்க ஆசப்பட்டேன். ஆனா கத்தோலிக்கத் திருச்சபையில, நாங்க ஜெபம் செய்வதுலயும், சடங்காச்சாரங்களக் கடைபிடிப்பதுலயும் தான் எங்களோட நாட்களக் கழிச்சோம். ஆனாலும், இந்த விஷயங்கள் எனக்கு எந்த போஷாக்கயும் கர்த்தரோட வார்த்தையப் புரிஞ்சுக்கற புரிதலயும் கொடுக்கல. கத்தோலிக்கத் திருச்சபையில எனக்கு மெல்ல மெல்ல ஆர்வம் குறைஞ்சுச்சு பழக்கத்துனால மட்டுந்தான் திருப்பலிக்குப் போய்க்கிட்டு இருந்தேன்.

2001 ஆம் வருஷத்துல வேலை நிமித்தமா நான் வெளி தேசத்துக்குப் போனேன். ஒரு நாள், என் கூட வேலை பார்க்குற ஒருத்தர் என்னைய ஒரு கிறிஸ்தவக் கூடுகைக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டாரு. ஒருவேள, அங்க சத்தியத்தக் கத்துக்க முடியும்ன்னு நான் நெனச்சேன், அதனால என்னோட குழப்பத்தத் தீர்க்கும்படி குருவிடத்துல கேட்டேன். குரு கொஞ்சம் கூட யோசிக்காம: “திருவிவிலியத்துல இதப் பத்தி ரொம்பத் தெளிவா சொல்லப்பட்டிருக்குது, அதனால தேவையில்லாத விளக்கங்கள் தேவையில்ல. கர்த்தர் திரும்பி வர்றப்போ, நிச்சயமா அவர் மேகத்தின் மேல இறங்கி வருவத நாம பாப்போம்” அப்படின்னு பதிலளிச்சாரு. குருவோட பதிலக் கேட்டு நான் ரொம்ப ஏமாந்துபோனேன் என்னோட பிரச்சனை தீர்க்கப்படாமலே இருந்துச்சு. காலப்போக்குல, இந்தப் மதப்பிரிவுலயும் என்னால எந்த போஷாக்கயும் பெற முடியலங்கறதப் பார்த்தேன் நான் உள்ளத்துக்குள்ள அதிகதிகமா வெறுமைய உணர ஆரம்பிச்சேன். பதில்களத் தேடுற என்னோட ஆசை இன்னும் அதிகமா வலுவடய தான் செஞ்சுச்சு. அதனால, நான் மத்த கிறிஸ்தவ அமைப்புகளுக்குப் போக ஆரம்பிச்சேன். ஆனா அவைகள்ல எதுவும் என்னோட குழப்பத்தத் தீர்த்து வைக்க முடியல. நான் அவசரமா: “கர்த்தாவே, நான் சத்தியத்தப் புரிஞ்சுக்கிட்டு என்னோட குழப்பத்தத் தீர்த்துக்கும்படியா, தயவுசெஞ்சு சரியான திருச்சபையயும் என்னைய வழிநடத்த சரியான நபரையும் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்க” அப்படின்னு கர்த்தரிடத்துல ஜெபிச்சேன்.

அதுக்கப்புறமா, 2019 ஆவது வருஷம் ஜனவரி மாசத்துல ஒரு நாள், எனக்கு உண்மையில சிறப்பு வாய்ந்த நாளா இருந்துச்சு, ஆஸ்திரேலியாவச் சேர்ந்த ஒரு சகோதரி என்னைய முகநூல்ல நண்பராகச் சேர்த்தாரு. அவர் தன்னோட பதிவுப் பக்கத்துல பகிர்ந்துக்கிட்டதான, “புத்தியுள்ள கன்னிகை என்றால் என்ன,” “உங்கள் ஜெபங்களை தேவனைக் கேட்கச்செய்வது எப்படி” போன்ற சில கட்டுரைகளையும் இன்னும் பலதையும் பார்த்தேன். அதன் உள்ளடக்கம் எல்லாமே எனக்கு ரொம்பப் புதுமையானதா இருந்துச்சு, அதுல சத்தியம் இருந்துச்சுன்னும் இந்தச் சகோதரியின் சபை என்னோட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்ன்னும் நான் நெனச்சேன். அதுக்கப்புறமா, ஒரு கூடுகையில கலந்துக்க விரும்புகிறீங்களான்னு அவர் என்கிட்ட கேட்டாரு, நான் அதுக்கு சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். அந்தக் கூடுகையில, சகோதரி கமிலா அவங்க, “கடைசி நாட்கள்ல கர்த்தர் எப்படி சரியா திரும்பி வருவாருங்கறதப் பத்தி இன்னைக்கு நாம ஐக்கியங்கொள்வோம்” அப்படின்னு சொன்னாங்க. அவர் இப்படிச் சொன்னதக் கேட்டு நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இந்தக் நாட்கள்ல இதப்பத்தி தானே நான் குழப்பமடஞ்சு இருந்தேன்? அவரோட ஐக்கியத்துக்காக என்னால காத்திருக்க முடியல. சகோதரி கமிலா சொன்னாரு: “வெளிப்படுத்துதல்ல இருக்குற தீர்க்கதரிசனத்த அவங்க வாசிச்சப்போ, ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7), கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் மேகத்தின் மேல இறங்கி வந்து, எல்லாராலும் பாக்கப்படுவார், உண்மையிலயே அற்புதமான காட்சியில, நட்சத்திரங்கள் வானத்துலருந்து விழும், வானமும் பூமியும் நடுங்கும்னு நிறைய பேர் நினைக்குறாங்க. ஆனா, இந்தக் கருத்து சரியானதா? உண்மையிலயே, வேதாகமத்துல கர்த்தர் திரும்பி வருவதப் பத்திய தீர்க்கதரிசனங்களச் சொல்லுற மத்த வசனங்கள் இருக்குது, ‘இதோ, திருடனைப்போல் வருகிறேன்(வெளிப்படுத்தல் 16:15), மற்றும் ‘அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்(மத்தேயு 24:36). போன்ற, இந்த வசனங்கள் கர்த்தர் திரும்பி வர்றப்போ, ‘திருடனப் போல’ வருவாருன்னும், எப்ப வருவாருன்னு யாருக்குமே தெரியாதுன்னும் சொல்லுது. கர்த்தர் அமைதியா, இரகசியமா வருவார்ன்னும், அவர் திரும்பி வருவது யாருக்கும் தெரியாதுன்னும் இந்த வசனங்கள் நமக்குச் சொல்லுது. அவர் திரும்பி வர்றப்போ, எல்லாரும் பாக்கும்படியா மேகத்தின் மேல கர்த்தர் மனுஷருக்கு முன்னாடி தோன்றணும்னா, இந்த மத்த தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும்?” அந்த சகோதரி சொன்னதக் கேட்டது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. கர்த்தர் அமைதியாவும் “திருடனைப்போல்” வருவதயும் நான் முதல் தடவையாக் கேள்விப்பட்டேன். குருக்களும் போதகர்களும் இத எப்படிக் குறிப்பிடாம இருந்திருப்பாங்க? ஆனா அவர் “திருடனைப்போல் வர வேண்டியிருந்தா” மேகத்தின் மேல இறங்கி அவர் திரும்பி வருவாருங்கற தீர்க்கதரிசனத்துக்கு இது முரணானதா இல்லையா? இதப் பத்தி நான் தெளிவா தெரிஞ்சுக்க விரும்புனேன். சகோதரி தன்னோட ஐக்கியத்துல தொடர்ந்து பேசி: “உண்மை என்னான்னா, கர்த்தர் திரும்பி வருவாருங்கற தீர்க்கதரிசனங்கள் எல்லாமே நிறைவேறும். இது செயல்முறையும் வரிசையா நடைபெறுவதுமான ஒரு விஷயந்தான். முதல்ல, அவர் இரகசியமா மனுவுருவாகி, மனிதகுலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் சத்தியங்கள வழங்குவாரு, அதுக்கப்புறமா, அவர் மேகங்களின் மேல இறங்கி வந்து, எல்லா ஜனங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் முன்பா வெளிப்படையாத் தோன்றுவாரு. அவர் திரும்பி வருவதப் பத்திய எல்லாத் தீர்க்கதரிசனங்களும் இப்படித்தான் நிறைவேறும்” அப்படின்னு சொன்னாரு. இந்தச் சகோதரியோட ஐக்கியம் என்னோட கண்களத் திறப்பதா இருந்துச்சு. கர்த்தர் ரெண்டு வழிகள்ல திரும்பி வர்றாருங்கறதத் தெரிஞ்சுக்கிட்டேன். அவரோட விளக்கத்த நான் முழு மனசோடு ஏத்துக்கிட்டேன். நான் உண்மையிலயே இன்னும் நிறைய தெரிஞ்சுக்க விரும்புனேன், அதனால நான் அவரிடத்துல, “கர்த்தர் மாம்சத்துல இரகசியமா திரும்பி வர்றாருன்னு தான சொன்னீங்க. அப்படின்னா இதுக்கான அர்த்தம் என்ன?” அப்படின்னு கேட்டேன். அந்த சகோதரி வேதாகமத்துலருந்து சில வசனங்கள எனக்கு வாசிச்சுக் காட்டினாரு: “அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்(லூக்கா 12:40). “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்(மத்தேயு 24:37). அதுக்கப்புறமா அந்த சகோதரி ஐக்கியங்கொண்டு, “இந்த எல்லா வசனங்களோட முக்கிய வார்த்தையா நீங்க எதப் பார்க்குறீங்க? இந்த வசனங்கள் எல்லாமே ‘மனுஷகுமாரனை’ குறிப்பிடுது. கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் மனுஷ குமாரனா இரகசியமா இறங்கி வருவாருன்னு அது காட்டுது. அப்படின்னா, ‘மனுஷகுமாரன்’ அப்படிங்கறதோட அர்த்தம் என்ன? இது தேவனோட மனுவுருவாதலக் குறிக்குது. யேகோவா தேவன் ஒரு ஆவியா இருந்ததால, அவர மனுஷகுமாரன்னு அழைக்க முடியாதுங்கற மாதிரி, அவர் ஆவியா இருந்திருந்தா, அவர மனுஷகுமாரன்னு அழைக்க முடியாது. கர்த்தராகிய இயேசு தேவனோட ஆவியின் மனுவுருவா இருந்ததால, அவர் மனுஷகுமாரன்னு குறிப்பிடப்படுறாரு. அவர் ஒரு சாதாரண மனுஷனப் போல காணப்பட்டாலும், ஒரு மனுஷனிடத்துல இருந்து பிறந்திருந்தாலும், இயல்பான மனிதத்தன்மை கொண்டவரா இருந்தாலும், அவருக்குள்ள தேவனோட ஆவியானவர் வாழ்ந்துக்கிட்டிருந்தாரு—அவர் தேவனோட மனுவுருவா இருந்தாரு. அதனாலதான், கர்த்தராகிய இயேசு தாம் திரும்பிவருவதப் பத்தி, ‘மனுஷகுமாரனுடைய வருகை,’ அப்படின்னு தீர்க்கதரிசனமா சொன்னாரு, அது அவர் திரும்பி வர்றப்போ, அவர் மாம்சத்துல தோன்றுவாருங்கறதயும், நேரடியா ஆவிக்குரிய சரீரத்துல தோன்றப்போவதில்லங்கறதயும் காட்டுது” அப்படின்னு சொன்னாரு. அந்த சகோதரியோட ஐக்கியத்தின் மூலமா, “மனுஷகுமாரன்” என்பதோட உண்மையான அர்த்தத்த நான் புரிஞ்சுக்கிட்டேன். கர்த்தர் இரகசியமா இறங்கி வர்றாருங்கறது தேவன் மனுவுருவாகித் தோன்றுவதக் குறிப்பிடுதுங்கறதயும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த ஐக்கியம் வேதாகமத்தோடு ஒத்துப்போச்சு. அந்த சகோதரி தன்னோட ஐக்கியத்துல தொடர்ந்து பேசி, “அதனால, கர்த்தர் திரும்பி வரும்போது, அவர் முதல்ல மனுவுருவாகி இரகசியமா இறங்கி வர்றாரு, அவரோட சிங்காசனத்துக்கு முன்பா எழுப்பப்படிருக்கிற எல்லாரையும் சுத்திகரிச்சு இரட்சிக்கவும், பேரழிவுக்கு முன்னாடியே ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள உருவாக்கவும் சத்தியங்கள வழங்கி, தேவனோட வீட்ல இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்யுறாரு. இந்த ஜெயங்கொள்பவர்களின் கூட்டம் உருவாக்கப்பட்டவுடனே, மிகப்பெரிய பேரழிவு வரும், தேவன் பொல்லாதவங்களத் தண்டிக்கவும், நல்லவங்களுக்கு பிரதிபலன்களக் கொடுக்கவும் தொடங்குவாரு. அதுக்கப்புறமா, தேவன் மேகத்தின் மேல இறங்கிவந்து, மனிதஇனத்துக்கு முன்பா வெளிப்படையாத் தோன்றுவாரு, இந்த நேரத்துலதான், எல்லா மனிதஇனமும் அழுது கூக்குரலிடுவாங்க. அவங்க ஏன் அப்படிச் செய்வாங்க? ஏன்னா, தேவன் மாம்சத்துல இரகசியமா இறங்கி வர்றப்போ, நிறைய பேர் அவர் தேவன்தான்னு கண்டுணர்வதில்ல. அவர் சாதாரணமா தோன்றுவதப் பார்க்குறாங்க, உயர்ந்தவரா இல்ல, அதனால அவங்க அவரை தேவனா நடத்தல. அவங்க அவரை ஏத்துக்கலங்கறது மட்டுமல்லாம, அவங்க அவரைக் கண்டனம் செஞ்சு, எதிர்க்குறாங்க, நிராகரிக்குறாங்க. பிறகு, நல்லவங்களுக்கு பிரதிபலன் அளிக்கவும் பொல்லாதவங்களத் தண்டிக்கவும் கர்த்தர் வெளிப்படையா மேகத்தின் மேல இறங்கி வர்றப்போ, திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுவை அவங்க உண்மையில்யே கண்டனம் செஞ்சு எதிர்த்துக்கிட்டு இருந்தாங்கங்கறதப் பார்ப்பாங்க, ஆனா அதுக்குள்ள அது ரொம்ப தாமதமாயிரும், அவங்களால செய்ய முடிவதெல்லாமே அழுவதும் பற்களக் கடிப்பதும்தான். இந்த நேரத்துல வெளிப்படுத்துதல் 1:7 ல, ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்,’ அப்படின்னு சொல்லப்பட்டிருக்குற தீர்க்கதரிசனம் முழுமையா நிறைவேறும்! அதனால, கர்த்தர் மாம்சத்துல கிரியை செய்ய வர்றப்போ, அவரை வரவேற்க்கறது நமக்கு ரொம்பவே முக்கியமானது. அவர் மேகத்தின் மேல இறங்கிவர்ற வரைக்கும் நாம காத்துக்கிட்டிருந்தா, அது ரொம்ப தாமதமாயிரும்” அப்படின்னு சொன்னாரு. அந்த சகோதரியோட ஐக்கியத்தக் கேட்டதுக்கப்புறமா, நான் ரொம்ப காலமா சிறைபிடிக்கப்பட்டிருந்த சிறையிலருந்து கடைசியா விடுவிக்கப்பட்டதப் போல உணர்ந்தேன். நான் வெளிச்சத்தப் பார்த்தேன், உண்மையிலயே விடுதலையப் பெற்றுக்கிட்டதா உணர்ந்தேன். அந்த சகோதரியோட ஐக்கியம் என்னோட குழப்பத்தத் தீர்த்துவச்சு, கர்த்தரோட வருகையப் பத்திய இரகசியங்களப் புரிஞ்சுக்க எனக்கு உதவுச்சு. அவரோட திருச்சபையில பரிசுத்த ஆவியானவரோட கிரியை இருந்ததா நான் உணர்ந்தேன் அடுத்த கூடுகைக்காக என்னால காத்திருக்க முடியல.

நான் எதிர்பார்க்காதது என்னான்னா, அடுத்த கூடுகையப்போ, அவர் என்கிட்ட ஒரு அதிர்ச்சியான தகவலச் சொன்னாரு. அவர், “கர்த்தர் ஏற்கனவே திரும்பிவந்து சர்வவல்லமையுள்ள தேவனா மனுவுருவாகியிருக்காரு. அவர் நிறைய சத்தியங்கள வழங்கி, தேவனோட வீட்லருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சுட்டு வர்றாரு” அப்படின்னு சொன்னாரு. இதக் கேட்டதும், நான் சந்தோஷத்தோடு ஆச்சரியமாவும், உற்சாகமாவும், ரொம்ப ஆர்வமாவும் இருந்தேன். கர்த்தர் திரும்பி வர்றத யாருமே தெரிஞ்சுக்க மாட்டாங்கன்னு வேதாகமம் சொன்னா, அவங்களுக்கு எப்படித் தெரிய வரும்? நான் இதப்பத்தி அந்த சகோதரிகிட்ட கேட்டேன். அவர் என்னோடு பொறுமையா ஐக்கியங்கொண்டு, “அவர் திரும்பி வர்றத யாரும் அறியலேன்னா, நாம அவரை எப்படி வரவேற்போம்? உண்மையில, வேதாகமம் சொல்லுது: ‘ஆனால் அந்த நாளையும் மணிநேரத்தையும் என்னுடைய பிதாவைத் தவிர எந்த மனுஷனும் அறியான், பரலோகத் தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்(மத்தேயு 24:36). இந்த வசனத்தோட அர்த்தம் என்னான்னா, கர்த்தர் திரும்பி வர்ற குறிப்பிட்ட காலம் யாருக்கும் தெரியாது, ஆனா அவர் பேசவும் கிரியை செய்யவும் தொடங்குறப்போ, ஜனங்கள் தேவனோட சத்தத்த அவரோட வார்த்தைகள்லருந்து அடையாளம் கண்டுக்க முடியும், அதுக்கப்புறம் கர்த்தர் திரும்பி வந்துட்டாருங்கறதத் தெரிஞ்சுக்குவாங்க, அதன் மூலமா கர்த்தரை வரவேற்பாங்க. இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள நிறைவேத்துது, ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27) மற்றும் ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்ததப் போலவே இதுவும் இருக்குது. பேதுரு, யோவான், யாக்கோபு, மத்தேயு, மற்றும் மத்தவங்களுக்கு கர்த்தராகிய இயேசுதான் மேசியாங்கறத ஆரம்பத்துல தெரியல. ஆனா அவங்க அவரோட தொடர்பு வச்சுக்கிட்ட பிறகு அவரோட வார்த்தைகள்ல இருந்து தேவனோட சத்தத்த அடையாளம் கண்டுக்கிட்டாங்க, அவங்க அவரை மேசியான்னு தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறமா, பேதுருவும், யோவானும் மத்தவங்களும் கர்த்தரோட சுவிசேஷத்த தூரம் தொலைவுல பரப்பத் தொடங்குனாங்க. இப்படித்தான் கர்த்தரோட இரட்சிப்பு அதிகதிகமான ஜனங்களுக்குத் தெரிய வந்துச்சு, படிப்படியா, விசுவாசிகள் உலகம் முழுவதுலயும் பரவுனாங்க. அதனால, நாம கர்த்தரோட வருகைய வரவேற்பதுங்கறது, அவர் எப்பத் திரும்பி வருவாருங்கறது நமக்குத் தெரியுமாங்கறத சார்ந்தது இல்ல, அதுக்குப் பதிலா, கர்த்தர் திரும்பி வந்திருப்பதப் பத்தி ஒருத்தர் சாட்சி கொடுக்குறப்போ, நம்மால அத ஆராய்ஞ்சு பாக்க முடியுதா இல்லையாங்கறதயும், கர்த்தர் பேசுறப்போ, அவரோட சத்தத்த நம்மால அடையாளம் காண முடியுதாங்கறதயும் சார்ந்ததா இருக்குது. இப்படி நாம கர்த்தரை வரவேற்கலாம்” அப்படின்னு சொன்னாரு. அந்த சகோதரியோட ஐக்கியம் எனக்குள்ள உண்மையிலயே எதிரொலிச்சுச்சு ஏன்னா, கர்த்தரோட வார்த்தையக் குறித்து ஐக்கியப்பட்டதன் மூலமா, என்னோட குழப்பம் தீர்க்கப்பட்டுச்சு. முன்பெல்லாம், நான் எப்பவுமே குழப்பமடஞ்சு, “நாம சரியா கர்த்தரை எப்படி வரவேற்கணும்? ஒருத்தர் தன்னோட நாட்கள வழக்கம்போல ஜெபிச்சு, விதிகளக் கடைப்பிடிப்பதுல செலவிடுறது மூலமா கர்த்தரை சந்தோஷப்படுத்தி வரவேற்பது சாத்தியம்தானா?” அப்படின்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா, தேவனோட சத்தத்துக்குச் செவிசாய்க்கறது மூலமா மட்டுமே கர்த்தரோட வருகைய நம்மால வரவேற்க முடியும்ங்கறது இப்போ எனக்குப் புரிஞ்சிருச்சு. அந்த ரெண்டு கூடுகைகள்லருந்தும் எனக்குக் கிடைச்ச பிரகாசம், ஒரு கத்தோலிக்கரா நான் என்னோட இத்தன வருஷங்கள்லயும் பெற்றுக்கிட்டத விட அதிகமா இருந்துதுங்கறத அப்போ உணர்ந்துக்கிட்டேன். நான் இன்னும் நிறைய சத்தியங்களத் தெரிஞ்சுக்க விரும்புனேன், சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தர்ங்கறத நான் உறுதியா நம்ப இது எனக்கு உதவும். அதனால நான் அந்த சகோதரியிடத்துல இன்னொரு கேள்வி கேட்டேன்: “கடைசி நாட்கள்ல, கர்த்தர் முதல்ல மாம்சத்துல இரகசியமா இறங்கி வர்றாரு, அதுக்கப்புறமா ஒரு மேகத்தின் மேல வெளிப்படையாத் தோன்றுறாரு. இது எனக்குப் புரியுது, ஆனா கர்த்தர் ஏன் முதல்ல மனுவுருவாகனும்? அவர் ஏன் நேரடியா ஆவி வடிவத்துலயே தோன்றுவதில்ல?”

அவர் ஐக்கியங்கொண்டு, “தேவன் கிரியை செய்ய மாம்சத்துல தோன்றுவது முற்றிலும் அவரோட கிரியைக்கு என்ன தேவைங்கறதயும், அதோடு கூட சீர்கேடு நெறஞ்ச மனிதகுலத்துக்கு என்ன தேவைங்கறதயும் அடிப்படையாகக் கொண்டதா இருக்குது” அப்படின்னு சொன்னாரு. அந்தச் சகோதரி சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தையின் இரண்டு பத்திகள எனக்கு வாசிச்சாரு. “மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள். … மாம்சமாவதன் மூலம் மட்டுமே தேவன் மனுஷனுடன் இணைந்து ஜீவிக்கவும், உலகின் துயரங்களை அனுபவிக்கவும், சாதாரண மாம்ச சரீரத்தில் ஜீவிக்கவும் முடியும். இவ்வாறாக மட்டுமே அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தேவையான நடைமுறைப் பாதையை வழங்க முடியும். மாம்சமாகிய தேவன் மூலம்தான் மனுஷன் தேவனிடமிருந்து முழு இரட்சிப்பைப் பெறுகிறான், அவனுடைய ஜெபங்களுக்கு பதில் பரலோகத்திலிருந்து நேரடியாக வருவதில்லை. ஏனென்றால், மனுஷன் மாம்சமாகவும் இரத்தமாகவும் இருப்பதால், அவனுக்கு தேவனுடைய ஆவியானவரைக் காணவும் வழி இல்லை, அவருடைய ஆவியானவரை அணுகவும் முடியாது. மனுஷன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே விஷயம் மாம்சமாகிய தேவன் மட்டும்தான், மேலும் இதன் மூலம் மட்டுமே மனுஷன் எல்லா வழிகளையும் எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்டு முழு இரட்சிப்பைப் பெற முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). “துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யான கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தையச் சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது”). அந்த சகோதரி தன்னோட ஐக்கியத்துல தொடர்ந்து பேசி: “வேதாகமம் தீர்க்கதரிசனமா சொல்லியிருக்குது, ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்(யோவான் 16:12-13). ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). இந்தத் தீர்க்கதரிசனங்கள் மூலமா, கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் அதிகமான வார்த்தைகள வழங்கி, தேவனோட வீட்லருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்வாரு அப்படிங்கறத நாம தெரிஞ்சுக்கறோம். இந்தக் கிரியை சிறந்த முடிவுகளப் பெற, தேவன் வந்து மாம்சத்துல கிரியை செய்யணும். ஏன்னா தேவனோட ஆவி நம்மளோட கண்ணுக்குத் தெரியாததும் புரிதலுக்கு எட்டாததுமாய் இருக்கறதாலயும், தேவனோட ஆவியிலருந்து வர்ற ஒரே ஒரு வார்த்த நம்மள பீதியிலயும் பயத்துலயும் தள்ளிவிட்டுரும்ங்கறதனாலயும், நாம அவரோட ஆவிய அணுகத் துணிய மாட்டோம், அவரோடு தொடர்புகொள்ள நமக்கு வேற வழி இல்ல. அப்புறம் எப்படி சத்தியத்த நாம புரிஞ்சுக்கறது? மனிதகுலத்த இரட்சிக்க தேவன் மாம்சத்துல வர்றதுதான் சிறந்த முடிவுகள அடையறதுக்கான வழி. மனுஷ குமாரனா நம் மத்தியில வாழ்றது, அவரோடு பழகுறத நமக்கு ரொம்பவே சுலபமாக்குது. அதோட, எந்த நேரத்துலயும் இடத்துலயும் சத்தியங்கள வழங்கவும், நம்மள வழிநடத்த துல்லியமான அறிக்கைகள வெளியிடவும், நம்மளோட கேள்விகளயும் குழப்பங்களயும் தீத்து வைக்கவும் தேவனால் மனுஷீக மொழியப் பயன்படுத்த முடியும். அப்ப, நாம கண்மூடித்தனமா தடுமாறவோ அல்லது தேவனோட சித்தத்த்தோட எது ஒத்துப்போகுதுன்னு யூகிக்கவோ தேவையில்ல. கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, பேதுரு இப்படி அவரிடத்துல கேட்டதப் போலவே: ‘ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ?’ (மத்தேயு 18:21). கர்த்தராகிய இயேசு நேரடியா பதிலளிச்சாரு: ‘ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்(மத்தேயு 18:22). பேதுரு எப்படி பயிற்சி செய்யணும்ங்கறத கர்த்தர் தெளிவா அவன்கிட்ட சொன்னாரு. இதன் மூலமா, ஜனங்கள் தேவனோட சித்தத்த சுலபமா புரிஞ்சுக்குவாங்க, அவங்க சத்தியத்த எப்படிக் கடைப்பிடிக்கணும்ங்கறதயும் தெரிஞ்சுக்குவாங்க. ஜனங்கள் தங்களோட அன்றாட வாழ்வுல பாக்குற தொடர்பு கொள்ளுற விஷயங்களயும் உவமைகளச் சொல்ல அவங்க சுலபமா புரிஞ்சுக்கக்கூடிய விஷயங்களயும் கர்த்தராகிய இயேசு பயன்படுத்தினாரு. உதாரணமா, புளித்தமாவின் உவமை, களை மற்றும் கோதுமையின் உவமை, விதைப்பவரின் உவமை, கடுகு விதையின் உவமை இன்னும் நிறையவற்ற பயன்படுத்தினாரு. இது ஜனங்களுக்கு சத்தியத்த நல்லாப் புரிஞ்சுக்கவும், மனிதகுலத்துகிட்ட அவர் விரும்பறது என்ன, கோரிக்கைகள் என்னங்கறதப் புரிஞ்சுக்கவும், அதோட, அவரோட தயவையும் அணுகக்கூடிய தன்மையையும் உண்மையாவே பெற்றுக்கவும் உதவுச்சு. இது எல்லாமே தேவன் மனுவுருவாகி இருந்தப்போ, அவரோட வார்த்தைகளின் முடிவுகளும் செயல்களின் முடிவுகளுமா இருக்குது. அதப்போலவே, மாம்சத்துல இருக்கிற சர்வவல்லமையுள்ள தேவன் மனுஷங்க மத்தியில பேசுறாரு, கிரியை செய்யுறாரு, அவங்களோடு ரொம்ப இயல்பா பழகுறாரு, அவங்களோடு நேருக்கு நேர் பேசுறாரு. அவர் தேவனோட 6,000 ஆண்டு கால நிர்வாகத் திட்டத்தின் இரகசியங்களயும், அவரோட மூன்று கட்ட கிரியைகளின் சத்தியத்தயும், அவரோட மனுவுருவாதலின் இரகசியங்களயும், சாத்தானால உண்டான மனிதகுலத்தோட சீர்கேட்டின் உண்மயையும், வெவ்வேறு வகையான நபர்களின் முடிவுகளயும் வெளிப்படுத்துறாரு…. இது தேவனோட மனநிலையயும் கிரியையயும் பத்திய மிகப் பெரிய, ஆழமான புரிதலப் பெற்றுக்க உதவுது. அதே நேரத்துல, மனுஷங்களோட தேவைகளுக்கு ஏற்ப தேவன் எந்த நேரத்துலயும் எந்த இடத்துலயும் சத்தியங்கள வழங்குறாரு. நம்மளோட சாத்தானிய மனநிலைகளயும், அவரப் பத்திய நம்மளோட பல்வேறு எண்ணங்களையும் கற்பனைகளயும் வெளிப்படுத்துது, நம்மளோட விசுவாசத்துல இருக்கிற சந்தேகங்கள சரிசெய்யுது. அதோடு, சர்வவல்லமையுள்ள தேவன் பொல்லாப்பத் தூக்கி எறிஞ்சிட்டு அவரோட இரட்சிப்பப் பெறுவதுக்கான பாதைகளயும் நமக்குத் தர்றாரு, உதாரணமா, அவரோட சித்தத்துக்கு ஏற்ப எப்படி ஊழியம் செய்யறது, நேர்மையான நபரா இருக்கறது எப்படி, எப்படி அவரை ஆராதிக்கறது, அவருக்குக் கீழ்ப்படியறது, அவரை நேசிக்கறது, இன்னும் நெறைய காரியங்கள். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் மூலமா நம்மளோட சீர்கெட்ட மனநிலைகளப் பத்தி நாம அதிகதிகமா தெரிஞ்சுக்கறோம், உள்ளத்துல இருந்து நம்மளயே வெறுத்து, உண்மையிலயே மனந்திரும்புறோம். தேவனோட சித்தத்தயும் கோரிக்கைகளயும் நாம புரிஞ்சுக்கறோம். அவரோட மனநிலையப் பத்தியும், அவர் யாரை இரட்சிக்குறாரு, யாரை புறம்பாக்கிப்போடுறாருங்கறதப் பத்தியும் ஓரளவு அறிவைப் பெற்றுக்கறோம். சத்தியத்தத் துல்லியமா கடைப்பிடிக்கவும், கடைசியா பொல்லாப்ப தூக்கிப் போட்டுட்டு தேவனோட இரட்சிப்ப அடையவும் ஒரே வழி இதுதான்.”

இதக் கேட்டதும், நான் சட்டுனு புரிஞ்சுக்கிட்டேன். நான் அந்த சகோதரியிடத்துல சொன்னேன்: “இப்ப எனக்குப் புரிஞ்சிருச்சு. தேவன் மாம்சத்துல தோன்றி கிரியை செய்யலேன்னா, சத்தியத்தப் புரிஞ்சுக்கறது நமக்குக் கடினமா இருக்கும், ஆனா தேவன் மனுவுருவாகி மனுஷீக மொழியில வார்த்தைகளப் பேசுறது, நாம புரிஞ்சுக்கறத சுலபமாக்குது. சத்தியத்தத் துல்லியமா கடைபிடிப்பதயும் தேவனோட சித்தத்துல நிலைச்சிருப்பதயும் நமக்கு சாத்தியமாக்குது.”

அந்த சகோதரி சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தையின் இன்னும் ரெண்டு பத்திகள எனக்காக வாசிச்சாரு. “இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுவுருவின் சரீரம் மட்டுமல்ல, இது தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. பரலோகத்தில் இருக்கும் தேவனைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்குச் சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத இரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”). “இன்று மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாக, அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களைக் கொண்ட தேவனாக, மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவனாக இருந்தாலும், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானமும் பூமியும் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே முழு மனுக்குலத்தையும் நரகத்தில் அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்குக் காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் தவிர்க்கமுடியாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் அதிகக் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தச் சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக, உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகை இல்லாமல் இருந்திருந்தால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுவுருவெடுத்தலை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்தச் சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளைப் பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்”). அதுக்கப்புறமா அந்த சகோதரி ஐக்கியங்கொண்டு “மனுவுருவான தேவன்தான் எல்லா சத்தியங்களின் ஊற்றாகவும் நாம ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்கறதுக்கான வாசலாகவும் இருக்காரு. கடைசி நாட்களின் கிறிஸ்துவான சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொள்றது மூலமா, எல்லா சத்தியங்களயும், தேவனோட நீதியான மனநிலையப் பத்திய புரிதலயும் அவரிடத்துல இருந்து பெற்றுக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடச்சிருக்குது. அப்பத்தான் நாம தேவனோட அங்கீகாரத்தப் பெற்று பரலோக ராஜ்யத்துல பிரவேசிக்க முடியும். மனிதகுலத்த இரட்சிக்கறதுக்கான நியாயத்தீர்ப்புப் கிரியையச் செய்ய தேவன் கடைசி நாட்கள்ல மனுவுருவாகாம இருந்தா, நம்மளோட சாத்தானிய மனநிலைகள சுத்திகரிக்கவோ மாத்தவோ நம்மால முடியாது, நாம தொடர்ந்து சாத்தானால சீர்கெடுக்கப்பட்டு, இன்னும் அதிகமா தேவனை எதிர்ப்போம், கடைசியில நாம பேரழிவுல அழிக்கப்படுவோம். அதனால, கர்த்தரோட வருகைய வரவேற்கறது, சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்க முடியறதுங்கறது வாழ்வா சாவாங்கற விஷயமா இருக்குது! நாம் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும், இந்த அரிய வாய்ப்பப் பற்றிப்புடிச்சுக்கணும்! கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏத்துக்காம கர்த்தரை மட்டும் ஏத்துக்கறவங்க கடைசியில இரட்சிப்ப அடையக் கூடாம போயிருவாங்க.”

சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள அந்த சகோதரி வாசிச்சதக் கேட்டதும், இந்த வார்த்தைகள் தேவனிடத்துல இருந்து வந்தவைன்னும், எந்த ஒரு சாதாரண மனுஷனும் அத உச்சரிக்க முடியாதுன்னும் நான் உணர்ந்தேன். தேவனோட வார்த்தையில இருந்து மனிதகுலத்தின் மீது அவருக்கு இருக்குற அக்கறையயும் நான் உணர்ந்துக்கிட்டேன். சாத்தானின் சீர்கேட்டுல இருந்து நம்மள இரட்சிக்க, தேவன் கடைசி நாட்கள்ல பூமியில மனுவுருவாகி, தனிப்பட்ட முறையில சத்தியங்கள வழங்குறாரு. தேவன் இப்படிக் கிரியை செய்றது எல்லாமே மனிதகுலத்த இரட்சிக்கணும்ங்கறதுக்காகத்தான். தேவன் நம்ம மேல வச்சிருக்கற அன்பு அவ்வளவு பெருசு! நான் ரொம்ப உற்சாகமா இருந்தேன், கடைசி நாட்கள்ல தேவனோட சுவிசேஷத்தக் கேட்டதால உண்மையிலயே ஆசீர்வதிக்கப்பட்டவளா உணர்ந்தேன். நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைய அதிகமா வாசிக்க விரும்புனேன், ஒரு கூடுகையக் கூட தவறவிட விரும்பல. நான் வேலையில மும்முரமா இருந்தப்பவும் உடல்நிலை சரியில்லாம இருந்தப்பவும் கூட, நான் அப்பவும் கூடுகைகள்ல கலந்துக்க விரும்புனேன் ஏன்னா இன்னும் அதிகமான சத்தியங்கள நான் புரிஞ்சுக்குவேன்னு நம்புனேன். அதுக்கப்புறமா, நான் மத்தவங்களோடு கூடி, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தையக் குறிச்சு நிறைய ஐக்கியங்கொண்டேன், மெய்யான கிறிஸ்துவுக்கும் பொய்யானவங்களுக்கும் இருக்குற வித்தியாசத்தயும், தேவனோட மனுவுருவாதலின் இரகசியங்களயும், தேவனுக்கும் வேதாகமத்துக்கும் இடையிலான உறவையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையிலருந்து நிறைய படங்களயும் காணொளிகளயும் நான் பாத்தேன், அதோடு, தேவன் ஏற்கனவே சீனாவுல ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்கள உருவாக்கியிருந்ததப் பார்த்தேன். வெளிப்படுத்துதலின் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருந்துச்சு. ஆராய்ஞ்சு பாத்ததன் மூலமா, கடைசி நாட்கள்ல நான் தேவனோட கிரியைய உறுதி செஞ்சுக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு அப்படிங்கறதத் தீர்மானிச்சுக்கிட்டு, கர்த்தரை வரவேற்றேன்! நான் சிலிர்த்துப் போனேன். என்னையப் பொறுத்தவரை, கர்த்தரோட வருகைய வரவேற்க முடிஞ்சது உண்மையிலயே விலையேறப்பெற்றது. நான் சத்தியத்தப் பின்தொடரவும், தேவனோட வார்த்தையப் பரப்புறதுக்கு ஒரு கடமையச் செய்யவும், தேவனோட கிரியைக்குச் சாட்சியளிக்கவும், அவரோட தோன்றுதலுக்காக ஏங்குற அதிகமான ஜனங்கள அவருக்கு முன்னாடி கொண்டு வரவும் விரும்புறேன். சர்வவல்லமையுள்ள தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 1)

தேவாலயங்கள் இன்னும் வெறிச்சோடி காணப்படுகின்றன மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் பலவீனமாக உள்ளனர். உண்மையான மற்றும் பொய்யான வழியை நாம் எவ்வாறு வேறுபடுத்தி கர்த்தரின் வருகையை வரவேற்க வேண்டும்? கற்றுக்கொள்ள இப்போது படிக்கவும்.

தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

By Danchun, the United States சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய...

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 2)

கர்த்தரின் வருகையை வரவேற்பதில், ஒருவர் தவறான வழியைத் தேர்ந்தெடுத்து உண்மையான வழியை நாடவில்லை என்றால், அவர்கள் உண்மையில் கர்த்தரின் வருகையை வரவேற்க முடியுமா?

Leave a Reply