பூமியதிர்ச்சிக்குப் பின்
நான் 2019 இல் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டேன். அப்புறமா பின்னால நான் சர்வவல்லமையுள்ள தேவனின் பல வார்த்தைகள வாசிச்சேன். அது ரொம்பவும் போஷிப்பதா இருந்திச்சி, நான் உண்மயிலேயே அத அனுபவிச்சேன். அது மாதிரி அதுக்கு முன்னால நான் உணர்ந்தது கிடையாது. ஐக்கியத்தின் மூலமா நாம உயிரோடு இருக்கும்போதே, விசிவாசிச்சி தேவனுடய வார்த்தைகள வாசிக்கணும்னும். ஒரு சிரிஷ்டியின் கடமயச் செய்யணும்னும் கத்துக்கிட்டேன். என் அப்பா என் விசுவாசத்த எதிர்த்து நிதானத்த இழந்தாலும், நான் கூடுகைகளுக்குப் போயிக்கிட்டேதான் இருந்தேன், ஏன்னா தேவனுடய வாஎத்தைகளப் பத்திய ஒரு புரிதலப் பெற அது ஒண்ணுதான் வழின்னு எனக்குத் தெரிஞ்சிருந்தது. தேவனுடய வார்த்தைகள வாசிக்க முடிஞ்சதுக்கு முன்னால, என் வாழ்க்க மிக வெறுமையா இருந்துது. தேவனுடய வார்த்தைகள் என்ன நிறைவாக்கி வாழ்க்கையின் திசய கொடுத்திது. இது முக்கியம். கூடி தேவனுடய வார்த்தைகள சேர்ந்து வாசிக்கிறது.
ஆனா சீக்கிரத்தில் நான் இச்சைய எதிர்கொண்டேன். என் பக்கத்து வீட்ல இருந்தவரு அவங்க வேல செய்ற கடையில விற்பன எழுத்தராக வேல செய்ய கூப்பிட்டாரு. ஒரு நாளைக்கு 500 பெசாஸுக்கு மேல கிடைக்கும்னு சொன்னாரு. என்ன அவங்க வேலைக்கு எடுத்துக்குவாங்கன்னு நம்பறதாவும் சொன்னாரு. அது ஒரு நல்லவருமானமா எனக்கு தோணுச்சி. அந்தப் பணத்துல எனக்கு வேண்டியத வாங்கிக்கலாம், என் பெற்றோருக்கும்கூட உதவி செய்ய முடியும். ஆனா அந்த வேலயில சேர்ந்துட்டா எனக்கு நேரம் பத்தாது. வழக்கம் போல என்னால கூடுகைகள்ல சேர முடியாது. இருந்தாலும் நான் அந்தப் பணத்த விரும்பினேன், அந்த வாய்ப்ப இழக்க மனசில்லாம இருந்தேன். கடைசியில. என்னால இச்சைய மேற்கொள்ள முடியல. அதில சேர்ந்திட்டேன். ஒரு மாச ஒப்பந்தத்திலதான் கையொப்பம் போட்டேன். அந்த ஒரு மாசம் கழிச்சி என்னால கூடுகைகளுக்கு வழக்கம்போல போக முடியும், அதே நேரத்தில நான் கலந்துக்க முடிந்த அளவுக்கு முயற்சி செய்வேன். ஆனா துரதிர்ஷ்டவசமா நினச்சதுமாதிரி அது நடக்கல. நான் எதிர்பாத்த மாதிரி என்னால கூடுகைகள்ல கலந்துக்க முடியல. வேல நேரத்தில என்னால செல்போன பயன்படுத்த முடியல ஆறுமணி வர என்னால வெளிய வர முடியல. போக்கு வரத்துக்கு ரொம்ப நேரம் ஆனதால வீட்டுக்கு வந்தப்ப ரொம்ப களைப்பாயிட்டேன். எனக்கு சக்தி இல்லாம போயிருச்சி. தாமதமா வீட்டுக்கு வந்தா, கூடுகைகள்ல கலந்துக்க முடியாது. நான் தேவன விட்டு தள்ளிப்போறதா உணர்ந்தேன். அறியாத பயத்தயும் நிம்மதி இல்லாமலும் உணர்ந்தேன். ஏன்னு தெரியல, ஆனா ஏறக்குறைய எப்பவும் வருத்தமா இருந்தேன். போலியா சிரிச்சேன், உண்மயில எனக்கு வேதனயா இருந்திச்சி. என் வாழ்க்கையின் எல்லா வெளிச்சமும் மறஞ்சி போனதா உணர்ந்தேன். சிலநேரங்கள்ல மிகவும் இருட்டா உணர்ந்து சும்மா அழ ஆரம்பிச்சிடுவேன். கூடுகைகளுக்கு போகாதது உண்மயிலேயே கஷ்டமா இருந்திச்சி. வாடிக்கையாளருங்க இல்லாதப்ப, தேவனுடய வார்த்தைகள்ல ஞாபகத்தில இருக்கிறத எழுத முயற்சி செய்வேன், அத வாசிச்சி சிந்திக்க முடியும்ல. தேவனுடய உதவியயும் வழிகாட்டுதலயும் என்னால உணர முடியலாம். நான் எப்பவும் நாள்காட்டிய பாத்துக்கிட்டிருந்தேன், என் ஒப்பந்தத்தில மீதி இருக்கிற நாட்கள எண்ணிக்கிட்டிருந்தேன். வேலைய முடிச்சிட்டு கூடுகைகளுக்குப் போக விரும்பினேன்.
ஒரு நாள் முகநூல்ல இருந்தேன் ஒரு சகோதரர் தேவனுடய வார்த்தைகளின் ரெண்டு பகுதிகள அனுப்பி இருந்தாரு. “எல்லாவிதமான பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்; எல்லா நாடுகளும், எல்லா இடங்களும் பேரிடர்களை அனுபவிக்கும்: கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் நடப்பதில்லை, அவை ஓரிரு நாட்களுக்குள் முடிவடைவதுமில்லை; மாறாக அவை இன்னும் அதிகதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்து, மேலும் மேலும் கடுமையானதாகிவிடும். இந்த நேரத்தில் எல்லா விதமான பூச்சிகளால் உண்டாகும் கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பும், நரமாமிசத்தை உண்ணும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நிகழும். இதுவே எல்லா தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 65”). “தன்னைத்தான் வெறுத்து என்னை நேசிப்பவர்களை நோக்கி என் இரக்கம் செல்லுகிறது, இதற்கிடையில், துன்மார்க்கர் மீது விதிக்கப்படும் தண்டனையானது என்னுடைய நீதியான மனநிலைக்குத் துல்லியமான ஆதாரமாகவும், அதற்கும் மேலே என் உக்கிரத்திற்குச் சாட்சியமாகவும் இருக்கிறது. பேரழிவு வரும்போது எனக்கு விரோதமாக இருப்பவர்கள் பஞ்சத்திற்கும், கொள்ளை நோய்க்கும் இலக்காகிப் புலம்புவார்கள். பலவருடங்களாக என்னைப் பின்தொடர்ந்து வந்திருந்தும் எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் செய்தவர்களும் தங்கள் பாவத்தின் பலன்களிலிருந்து தப்ப முடியாது; அவர்களும் கூடப் பேரழிவில் விழுவார்கள், இதைப் போன்ற ஒன்றை ஆயிரம் வருடங்களில் சில தடவைகள் காணமுடிந்திருக்கிறது, அவர்கள் தொடர்ந்து பயத்திலும், பீதியிலும் வாழ்வார்கள். எனக்கு உண்மையும் உத்தமுமாக இருந்தவர்கள் என்னுடைய வல்லமையை மெச்சிக் களிகூறுவார்கள். அவர்கள் சொல்லவொண்ணா திருப்தியை அனுபவித்து நான் ஒருபோதும் மனிதகுலத்திற்குத் தந்திடாத மகிழ்ச்சியின் மத்தியில் வாழ்வார்கள். ஏனெனில் நான் மனிதர்களின் நற்கிரியைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து துர்க்கிரியைகளை அருவருக்கின்றேன். நான் முதன் முதலில் மனுகுலத்தை வழிநடத்த தொடங்கியதிலிருந்து என்னைப் போன்ற ஒத்த மனதுள்ள ஒரு கூட்ட ஜனங்களை ஆதாயப்படுத்தும்படி வாஞ்சையுடன் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில், என்னைப் போன்ற ஒத்த மனது இல்லாத ஜனங்களை நான் மறப்பதில்லை. என் இருதயத்தில் நான் அவர்களை எப்போதும் வெறுக்கிறேன். அவர்களை ஆக்கினைக்கு உள்ளாக்கித் தீர்ப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறேன், அதனைக் கண்டு நான் நிச்சயமாகவே மகிழுவேன். இப்பொழுதோ என்னுடைய நாள் வந்துவிட்டது, நான் இதற்குமேல் காத்திருக்க வேண்டியதில்லை!” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து”). தேவனுடய வார்த்தைகள் ரொம்ப உண்மன்னு உணர்ந்தேன், உண்மயிலேயே பயந்தேன். அவர் சொன்னதெல்லாம் நிறைவேறி வர்றத என்னால பாக்க முடிஞ்சிது. உலமுழுதும் பயங்கர பேரிடர்கள் நடந்துக்கிட்டிருந்துது. எரிமல, சூறாவளி, பூமியதிர்ச்சி, பெருந்தொற்று … உலக முழுதும் இது இப்படியே இருந்திச்சி. ஆனா பணம் சம்பாதிக்க விரும்புனதால நான் தேவன்கிட்ட இருந்து விலகினேன். ஒரு பேரிடர் நிகழ்ந்து தேவன் என்ன காப்பாதலனா நான் உயிர இழந்து போயிருக்கலாம். அதனால ஜெபிச்சேன். “தேவனே நான் உம்மவிட பணத்த நாடினேன். தயவுசெஞ்சி என்ன மன்னிச்சிருங்க. உம்முடய சித்தத்துக்கு எதிரா போனேன்னு எனக்குத் தெரியும், ஆனா மனந்திரும்ப விரும்புறேன்.” மனந்திரும்ப தாமதமாகலனு நான் எனக்குள்ள சொன்னேன், மேலும் கூடுகைகளுக்குப் போக இன்னும் எனக்கு வாய்ப்பு இருந்திச்சி. என் ஒப்பந்தம் முடியுறதுக்காக எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். அதுக்கப்புறமா நான் ஒரு கடமய எடுத்துக்குவேன்.
ஆனா அதே ஆண்டு டிசம்பர் பதினஞ்சில நான் பயத்த உணர்ந்தேன். ஏன்னு எனக்குத் தெரியல, ஆனா எனக்கு ஒரு முன்னுணர்வு ஏற்பட்டிச்சி. வணிக வளாக வேலயில இருந்து விலகி நான் வீட்டுக்குப் போக விரும்புனேன். வேலயில நீடிக்க நான் விரும்பல. அப்ப, நானும் சக ஊழியரும் ஓய்வறைக்குப் போனோம். கொஞ்ச நேரம் கழிச்சி வணிக வளாகத்துக்குள்ள திரும்பவும் நடந்து வந்துக்கிட்டிருந்தப்ப, நிலம் திடீரென அசய ஆரம்பிச்சிது. ஏராளமான ஜனங்க வளாகத்த விட்டு ஓடுறத நான் பாத்தேன். சிலர் அச்சத்தால உறஞ்சி நின்னாங்க. எல்லா இடத்திலயும் அலமாரிகள்ல இருந்து சாமானங்க விழுந்துக்கிட்டு இருந்திச்சி. நல்ல வேளையா நாங்க வாசல்ல நின்னுக்கிட்டிருந்தோம், அதனால நாங்க துரிதமா கட்டடத்த விட்டு வெளிய போனோம். கடுமையா அதிர்ந்ததால நான் ஒரு தொட்டிலுக்குள்ள இருப்பது போல உணர்ந்தேன். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போறது கஷ்டமா இருந்துது. இப்ப அத திரும்ப நெனச்சிப் பாத்தா, அது தொடங்குறதுக்குக் கொஞ்ச முன்னால்தான் நான் வளாகத்த விட்டு ஓய்வறைக்குப் போனேன். அங்க ஏராளமான ஜனங்க இருந்தாங்க, அதனால வெளியில நாங்க கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதா இருந்தது. நான் திரும்பவும் உள்ள போன நொடியில நிலநடுக்கம் தொடங்கிச்சி. நேரம் சரியா இருந்திச்சி. அதனால தேவனுடய பாதுகாப்புதான் என்ன ஆபத்தில் இருந்து காப்பாத்தியிருக்கு. அதுக்கப்பறம் நான் ரொம்ப நெகிழ்ச்சியடஞ்சேன். நான் உயிர் பிழச்சதுக்காக இல்ல, ஆனா தேவன் என்னோடு இருந்ததுக்காக. அவருடய அன்ப நான் பாத்தேன். அந்த பூமி அதிர்ச்சியில இருந்து அவர் என்ன காப்பாத்தினாரு. இருதயத்தில் இருந்து நான் தேவன நோக்கிக் கூப்டுக்கிட்டே இருந்தேன். “சர்வவல்லமையுள்ள தேவனே என்ன காப்பாத்துனதுக்காக நன்றி.” நான் வெளிய நின்னுக்கிட்டிருந்தப்ப, எனக்கு பல நினைவுகள் வந்துது. இந்த வேலையில நான் பணம் சம்பாதித்தேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும், சோகமாவும் வருத்தமாவும் இருந்துது. பணம் முக்கியமில்ல. ஒரு பூமி அதிர்ச்சி வந்தா, அது உங்களுக்கு உதவாது. தேவனுக்கு முன்பா வந்து அவருடய ரட்சிப்ப பெறுறதுதான் விஷயம். நான் வீட்டுக்குப் போயி கூடுகையில கலந்துக்க ஏங்கினேன். நான் எல்லார்ட்டயும் சொல்ல விரும்புனேன் தேவன் என்ன எப்படி பேரிடர்ல இருந்து காப்பாத்துனார்னு. அவருடய அன்பயும் செயலயும் நான் எப்படி பாத்தேன்னு அவங்கக்கிட்ட சொல்ல.
அன்னைக்கி வீட்டுக்குத் திரும்பி வர்ரப்ப, நான் ஆச்சரியப்பட்டுக்கிட்டே வந்தேன்: தேவனிடம் இருந்து நான் விலகிப்போனப்பவும் அவர் ஏன் என்ன இன்னும் பாதுகாக்கிறாரு? நான் திருச்சபை செயலிய திறந்து சில சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளப் பாத்தேன். “தேவனுடைய அன்பு நடைமுறைக்குரியது: தேவனுடைய கிருபையின் மூலம், மனிதன் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பேரழிவையும் தவிர்க்கிறான். எல்லா நேரங்களிலும் தேவன் சகிப்புத் தன்மையினை மனிதனுடைய பலவீனங்களுக்காக மீண்டும் மீண்டும் காட்டுகிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மனிதகுலத்தின் கேடு மற்றும் சாத்தானிய சாராம்சத்தைப் படிப்படியாக அறிந்து கொள்ள ஜனங்களை அனுமதிக்கிறது. தேவன் அளிக்கும் விஷயங்கள், மனிதனைப் பற்றிய அவரது வெளிச்சம் மற்றும் அவரது வழிகாட்டுதல் அனைத்தும் மனிதகுலத்தை சத்தியத்தின் சாராம்சத்தை மேலும் மேலும் அறிய அனுமதிக்கிறது. ஜனங்களுக்கு என்ன தேவை, எந்தப் பாதையில் செல்ல வேண்டும், அவர்கள் எதற்காக ஜீவிக்கிறார்கள், அவர்களின் மதிப்பு மற்றும் ஜீவிதத்தின் அர்த்தம், மற்றும் முன்னோக்கி பாதையில் எப்படி நடப்பது என்பவற்றை அறிய அனுமதிக்கிறது. தேவன் செய்யும் இந்த விஷயங்கள் அனைத்தும் அவருடைய ஒரு உண்மையான நோக்கத்திலிருந்து பிரிக்க முடியாதவை. அப்படியானால், இந்த நோக்கம் என்ன? மனிதனைப் பற்றிய தனது கிரியையைச் செய்ய தேவன் ஏன் இந்த முறைகளைப் பயன்படுத்துகிறார்? அவர் என்ன முடிவை அடைய விரும்புகிறார்? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் மனிதனில் எதைப் பார்க்க விரும்புகிறார்? மனிதனிடமிருந்து அவர் எதைப் பெற விரும்புகிறார்? தேவன் பார்க்க விரும்புவது என்னவென்றால், மனிதனுடைய இருதயம் புத்துயிர் பெற முடியும் என்பதே. மனிதன் மீது கிரியை செய்ய அவர் பயன்படுத்தும் இந்த முறைகள், மனிதனுடைய இருதயத்தை எழுப்பவும், மனிதனுடைய ஆவியை எழுப்பவும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், யார் வழிகாட்டுகிறார், ஆதரிக்கிறார், அவர்களுக்கு வழங்குகிறார், மனிதனை இன்று வரை ஜீவிக்க அனுமதித்தார் என்பதைப் புரிந்து கொள்ளவும் செய்கிறது. சிருஷ்கர் யார், அவர்கள் யாரை வணங்க வேண்டும், அவர்கள் எந்த மாதிரியான பாதையில் நடக்க வேண்டும், எந்த விதத்தில் மனிதன் தேவனுக்கு முன்பாக வர வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள மனிதனுக்கு உதவும் ஒரு வழிமுறையாகும். அவை மனிதனுடைய இருதயத்தைப் படிப்படியாக புதுப்பிப்பதற்கான ஒரு வழியாகும். இதனால் மனிதன் தேவனுடைய இருதயத்தை அறிந்து கொள்கிறான். தேவனுடைய இருதயத்தைப் புரிந்து கொள்கிறான். மனிதனை இரட்சிக்க அவர் செய்த கிரியையின் பின்னணியில் உள்ள மிகுந்த அக்கறையையும் சிந்தனையையும் புரிந்து கொள்கிறான். மனிதனுடைய இருதயம் புத்துயிர் பெறும்போது, மனிதன் இனி ஒரு சீரழிந்த, கேடு நிறைந்த மனநிலையுடன் ஜீவிக்க விரும்புவதில்லை. மாறாக தேவனைத் திருப்திப்படுத்துவதற்காக சத்தியத்தைப் பின்தொடர விரும்புகிறான். மனிதனுடைய இருதயம் விழித்துக் கொள்ளும்போது, மனிதர் தங்களை சாத்தானிடமிருந்து முழுமையாகக் கிழிக்க முடியும். இனி அவர்கள் சாத்தானால் பாதிக்கப்படமாட்டார்கள். இனி சாத்தானால் கட்டுப்படுத்தப்பட அல்லது ஏமாற்றப்பட மாட்டான். அதற்கு பதிலாக, தேவனுடைய இருதயத்தைத் திருப்திப்படுத்த தேவனுடைய கிரியையிலும் அவருடைய வார்த்தைகளிலும் மனிதன் முன்கூட்டியே ஒத்துழைக்க முடியும். இதனால் தேவ பயம் கொண்டு தீமையைத் தவிர்க்கலாம். இது தேவனுடைய கிரியையின் மூலமுதலான நோக்கமாகும்” (வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”). இதக் கேட்டபோது ரொம்ப நெகிழ்ச்சி அடஞ்சேன். தேவனின் அன்பயும் இரக்கத்தயும் என்னால பாக்க்க முடிஞ்சிது. வெறும் பணத்த தேடுறதுக்காக கூடுகைகள விடுறதுக்கு முடிவு செஞ்சேன் அதனால் தேவன் என்ன பாதுகாக்க மாட்டார்னு நெனச்சேன். ஆனா பூமியதிர்ச்சி வந்தப்ப, அவர் அதிசயமா என்ன காப்பாத்தினாரு, புறம்பாக்கல. நான் பணம் சம்பாதிக்கிறத விட்டுட்டு இறுதியா விழிச்செழ தேவன் விரும்பினாரு. நான் அவருக்கு முன்பாக வந்து, சத்தியத்தப் பின்தொடர்ந்து, ஒரு கடமயச் செய்ய விரும்பினாரு. நம்பமுடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலியா நான் உணர்ந்தேன். நான் இந்த வாய்ப்ப போற்றணும். நான் மனந்திரும்பணும். மாம்ச அனுபவங்கள விட்டு திருச்சபையில என் கடமயச் செய்யத் திரும்பிப் போகணும்.
டிசம்பர்ல என் ஒப்பந்தம் முடிஞ்சதும், நான் என் கடமயில கிட்டத்தட்ட என நேரத்தயும் சக்தியயும் செலுத்தினேன். பிரச்சினைகள் வந்தப்ப கொஞ்சம் பலவீனமா உணர்ந்தேன், சில சமயம் உண்மையிலயே களைப்படஞ்சேன். அப்ப, பூமியதிர்ச்சியில இருந்து தேவன் எப்படி காப்பாத்தினார்னு நான் நினச்சிப் பாப்பேன். அத நினச்சதும், கஷ்டங்கள் ஒண்ணுமில்லாம போயிடும். தேவனின் அன்புக்கு ஈடு செய்ய நான் கடுமயா உழைக்கணும்னு எனக்குத் தெரியும். இந்த வகயில நான் இதச் செஞ்சா, எனக்கு ஒரு நல்ல சென்று சேரும் இடமும் பேரிடரில இருந்து தப்பிக்கவும் முடியும்னு நினச்சேன். அப்புறமா ஒரு நாள், “நோய்களின் மூலம் ஆசீர்வாதத்துக்கான என் நோக்கம் அம்பலப்படுத்தப்பட்டது” என்ற காணொளியப் பாத்தேன். அது, ஒரு விசுவாசியான சகோதரர், ரொம்ப நோய்வாய்ப் படும்வர திருச்சபைப் பணியில நிறையக் கொடுத்து கடுமயா உழைச்சத காட்டிச்சி. அவர் துயரத்துக்குள்ளாகி தேவன கூட குற சொன்னாரு. தான் நிறைய கொடுத்திருக்கதனால தனக்கு நோய் வரக்கூடாதுன்னு அவர் உணர்ந்தாரு, மேலும் தேவன் ஏன் அவர பாதுகாக்கலன்னு அவர் புரிஞ்சிக்கல. ஆனா தேவனுடய வார்த்தைகள் வாசிச்ச பிறகு அவர் என்ன உணர்ந்தாருன்னா சத்தியத்த தேடவும் தேவனுக்குக் கீழ்ப்படியவும் அவர் தன் கடமயச் செய்யல. வெறுமனே ஆசீர்வதிக்கப்பட்டு தேவனுடய ராஜ்யத்துக்குப் போகவே அவர் விரும்பி இருக்காரு. அவருடய அனுபவத்த பாத்த பிறகு, என் கடமயில என் நோக்கமும் அது போல கற பட்டிருந்தத நான் உணர்ந்தேன். தேவன் ஒரு பேரிடரில இருந்து காப்பாத்துவாருன்னு நான் எப்பவும் நம்ம்பினேன். அந்த சகோதரர போலவே நானும் தேவனோடு ஒப்பந்தம் போடுறதா பயந்தேன். அந்த ராத்திரி என்னை நானே கேட்டுக்கிட்டேன், என் கடமை தேவனத் திருப்திப்படுத்தவா? அல்லது தேவனுடய கிருபய பெறவா? நான் பூமியதிர்ச்சியப் பத்தியும் எப்படி காப்பத்தப் பட்டேங்கறதயும் அந்த உண்மைக்கு அப்புறமா எனக்கு உண்டான பயத்தயும் யோசிச்சேன். ஒரு நாள் பேரிடர்ல விழுந்திருவேனோன்னு பயந்தேன். அதனால் ஒரு கடமைக்கு திரும்ப நான் ஏங்கினப்ப, தேவன் என்ன பேரிடர்கள்ல இருந்து காப்பார்னு மட்டுமே நம்பினேன். காணொளியின் சகோதரர் போலவேதான் என் நோக்கமும் பார்வயும் இருந்துது. அவர் நோய்வாய்ப்பட்டார், நான் பூமியதிச்சியக் கடந்து போனேன். தேவன திருப்திப்படுத்த நான் தியாகம் செய்யல. அவர் என்ன பேரிடர்கள்ல இருந்து காப்பாத்தணுங்கறுதுக்கு மட்டுமே. ஒரு நல்ல பிரதிபலனுக்கும் அவருடய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவுமே விரும்புனேன். அந்த ராத்திரி முழுதும் வருத்தமா இருந்தேன். தேவனுடய ஆசீர்வாதத்த பெறுவதற்குதான் நான் என் கடமயச் செய்றேங்கறத என்னால ஏத்துக்க முடியல. நான் அதில ரொம்ப உண்மையா இருக்க விரும்புனேன். ஆனா என் விசுவாசம் என் சொந்த ஆதாயத்துக்காகவே இருந்துது எனக்கு பயபக்தி இல்ல அல்லது தேவன ஆராதிக்கல அல்லது நம்முடய சிருஷ்டிகரா அவருக்கு நான் கீழ்ப்படியல.
பின்னால, இது தொடர்பான சத்தியங்கள நான் தேடி, தேவனுடய இந்த வார்த்தைகள கண்டுபிடிச்சேன். “என்னுடைய கிரியைகள் கடற்கரை மணலத்தனையாய் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன, என்னுடைய ஞானம் சாலோமனின் குமாரர்கள் எல்லோரையும் விட மிஞ்சியிருக்கிறது, எனினும் மக்கள் என்னை ஒரு சாதாரண வைத்தியர் என்றும் அறியப்படாத மக்களின் போதகர் என்றும் மட்டுமே நினைக்கிறார்கள். நான் அவர்களைக் குணப்படுத்தக் கூடும் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள். தங்கள் உடல்களில் இருந்து அசுத்த ஆவிகளை விரட்ட நான் என் வல்லமையைப் பயன்படுத்துவேன் என்று மட்டுமே பலர் என்னில் விசுவாசம் வைக்கிறார்கள், மேலும் என்னிடம் இருந்து தாங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றே மிகப் பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பெரும் பொருட்செல்வங்களை என்னிடம் இருந்து நாடிப் பெறவே பலரும் என்னை விசுவாசிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை சமாதானத்துடன் கழிக்கவும் இனிவரும் உலகில் பாதுகாப்பாகவும் நல்லவிதமாக இருக்கவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். நரகத்தின் வேதனைகளைத் தவிர்க்கவும் பரலோகத்தின் ஆசிர்வாதங்களைப் பெறவுமே பலர் என்னை விசுவாசிக்கிறார்கள். பலரும் தற்காலிகமான ஆறுதலுக்காகவே என்னை விசுவாசிக்கிறார்களே தவிர இனி வரும் உலகத்தில் எதையும் நாடிப்பெறத் தேடவில்லை. நான் என் கோபத்தை மனிதன் மேல் காட்டி அவன் முன்னர் பெற்றிருந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துக்கொண்ட போது, மனிதன் சந்தேகம் கொண்டவனானான். நரகத்தின் வேதனைகளை அளித்து பரலோகத்தின் ஆசிர்வாதங்களைத் திரும்ப எடுத்துக்கொண்ட போது, மனிதனின் வெட்கம் கோபமாக மாறியது. மனிதன் தன்னைக் குணப்படுத்தும்படி என்னைக் கேட்டபோது, நான் அவனுக்குச் செவிகொடுக்காததோடு அவனிடத்தில் வெறுப்புடையவனானேன்; பதிலாக மனிதன் என்னைவிட்டு விலகி தீய மருந்துகள் மற்றும் சூனிய வழிகளைத் தேடினான். என்னிடத்தில் இருந்து மனிதன் கோரிய அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட போது, ஒரு தடயமும் இன்றி ஒவ்வொருவரும் மறைந்து போயினர். இவ்வாறு, நான் அதிக அளவில் கிருபையை அளிப்பதால் மனிதனுக்கு என்னிடம் விசுவாசம் இருக்கிறது, மேலும் பெற வேண்டியதோ இன்னும் அதிகமாக உள்ளது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”). இந்த தேவனுடைய வார்த்தைகள் என் நிலைய வெளிப்படுத்திச்சி. அவருடைய கிருபையில மகிழவும், பேரிடரில இருந்து அவர் என்ன காப்பத்தவுமே எனக்கு விசுவாசம் இருந்துது. பூமி அதிர்ச்சிக்குப் பிறகு, பணத்தின் மேலும் இன்பத்தின் மேலும் இருந்த என் ஆசைகள நான் விட்டுட்டு கடமைக்குத் திரும்புனேன், ஆனா எவ்வளவு தூரத்துக்கு நான் கஷ்டப்பட்டு உழச்சாலும், தேவன் என்ன பேரிடர்ல இருந்து காப்பாத்தணும்னே நான் விரும்புனேன். தேவனிடம் இருந்து ஆசீர்வாதங்கள பெற நான் என் கடமய பயன்படுத்த விரும்புனேன். நான் என் தனிப்பட்ட ஆதாயத்துக்காக என் கடமயச் செய்தேன். தேவனுடன் ஓர் ஒப்பந்தம் செஞ்சிக்கிட்டிருந்தேன். என் சுயநல நோக்கங்கங்கள கண்டப்ப நான் வெக்கப்பட்டேன். என் கண்ணோட்டம் தவறு. நான் தேவனிடம் ஜெபிச்சேன். “ஓ தேவனே, நான் ரொம்ப சீர்கேடா இருந்து வர்றேன். என்னுடய எல்லா முயற்சிகளும் பரிமாற்றம் சார்ந்தவயாகவே இருந்து வருது. நான் உங்கள ஏமாத்துறேன். ஓ தேவனே, நீர் என் சீர்கேட்ட அம்பலப்படுத்துனதுக்காக நன்றியுடயவளா இருக்கேன், நான் என்னையே அறிய உதவும். இனிமேலும் ஆசீர்வாதங்களுக்காக நான் என் கடமய செய்ய விரும்பல. நான் உங்கள மகிழ்விக்கவே விரும்புறேன்.”
பின்னால, ஒரு சகோதரி சில தேவனுடய வார்த்தைகள எனக்கு அனுப்புனாரு. என் தேடலில் எங்கு நான் தவறு செஞ்சேங்கறத புரிஞ்சிக்க அது உதவிச்சி. தேவனின் வார்த்தை கூறுகிறது: “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தில் நீங்கள் இப்போது எந்தப் பாதையில் செல்கிறீர்கள்? நீங்கள் பேதுருவைப் போல ஜீவனையும், உங்களைப் பற்றிய புரிதலையும், தேவனைப் பற்றிய அறிவையும் தேடவில்லை என்றால், அப்போது நீங்கள் பேதுருவின் பாதையில் நடக்கவில்லை. இந்நாட்களில், பெரும்பாலான ஜனங்கள் இவ்வகையான நிலையிலேயே இருக்கின்றனர்: ‘ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக, நான் தேவனுக்கு என்னைச் செலவழிக்க வேண்டும், அவருக்காக ஒரு விலைக்கிரயத்தைக் கொடுக்க வேண்டும். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, நான் தேவனுக்காக எல்லாவற்றையும் கைவிட வேண்டும்; அவர் என்னிடம் ஒப்புவித்ததை நான் செய்து முடிக்க வேண்டும், என் கடமையை நன்றாகச் செய்ய வேண்டும்.’ ஆசீர்வாதங்களைப் பெறும் நோக்கில் இது ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, இது தேவனிடமிருந்து வெகுமதிகளைப் பெறும் மற்றும் கிரீடத்தைப் பெறும் நோக்கத்திற்காக ஒருவரை முற்றிலும் செலவழிப்பதற்கு ஒரு உதாரணமாகும். இத்தகையவர்கள் தங்கள் இருதயங்களில் உண்மையைக் கொண்டிருப்பதில்லை, அவர்களுடைய புரிதலில் நிச்சயமாக அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் காண்பித்துக் கொள்ளும் விதத்தினால் ஆன ஒரு சில கோட்பாட்டு வார்த்தைகளே உள்ளன. அவர்களுடையது பவுலின் பாதையாகும். அப்படிப்பட்டவர்களின் விசுவாசம் ஒரு நிலையான கடின உழைப்பின் செயலாகும், மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அது தேவனிடத்திலான தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கும் என்றும், எவ்வளவு அதிகமாக உழைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர் நிச்சயமாகத் திருப்தியடைவார் என்றும், மேலும் எவ்வளவு அதிகமாக அவர்கள் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுக்கு முன்பாக ஒரு கிரீடம் வழங்கப்படுவதற்குத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் பெறும் ஆசீர்வாதங்கள் மிகவும் பெரிதானவயாக இருக்கும் என்றும், அவர்கள் தங்கள் மனதின் ஆழத்தில் நினைக்கிறார்கள்; துன்பங்களைச் சகித்துக் கொண்டு, பிரசங்கித்து, கிறிஸ்துவுக்காக அவர்களால் மரிக்க முடிந்தால், அவர்களால் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய முடிந்தால், தேவன் அவர்களிடத்தில் ஒப்புவித்த கடமைகள் அனைத்தையும் அவர்களால் நிறைவேற்ற முடிந்தால், அப்போது அவர்கள் மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுபவர்களாக இருப்பார்கள் என்றும், நிச்சயமாகக் கிரீடங்கள் வழங்கப்படுபவர்களாய் இருப்பார்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதுவே துல்லியமாகப் பவுல் கற்பனை செய்ததும் அவர் தேடியதுமாகும்; அவன் நடந்த பாதை சரியாக இதுவாகும், அத்தகைய எண்ணங்களின் வழிகாட்டுதலின்கீழ் தான் அவன் தேவனுக்கு ஊழியஞ்செய்ய உழைத்தான். அந்த எண்ணங்களும் நோக்கங்களும் சாத்தானிய சுபாவத்திலிருந்து தோன்றவில்லையா?” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி”). “எல்லா சீர்கெட்ட மனிதர்களும் தங்களுக்காகவே வாழ்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தன் நலனில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும்—இது மனித இயல்பின் சுருக்கமான வரையறையாகும். ஜனங்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவே தேவனை விசுவாசிக்கிறார்கள்; அவர்கள் காரியங்களை விட்டுவிட்டு தங்களை தேவனுக்கு என்று ஒப்புக்கொடுப்பது, ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே, மேலும் அவர்கள் அவருக்கு உண்மை உள்ளவர்களாக இருப்பது, பிரதிபலன் பெறுவதற்காகவே. மொத்தத்தில், இது எல்லாமே ஆசீர்வதிக்கப்பட்டு, பிரதிபலன் பெற்று, பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்காகவே செய்யப்படுகின்றன. சமூகத்தில், மக்கள் தங்கள் சொந்த நலனுக்காகவே வேலை செய்கிறார்கள், மற்றும் தேவனுடைய வீட்டில், ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே ஜனங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு அதிகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறார்கள்: மனிதரின் சாத்தானிய சுபாவத்துக்கு இதைவிடச் சிறந்த சான்று எதுவும் இல்லை” (வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனுடய வார்த்தைகள்ல இருந்து நான் நிறய கத்துக்கிட்டேன். அவருக்கு ஒரு விலய கொடுக்க ஏராளமானவங்க எல்லாத்தயும் கொடுக்கலாம், ஆனா அவங்க இருதயம் தேவன திருப்திபடுத்துவதில இல்ல, ஆசீர்வாதங்கள பெறுவதற்கு மட்டுமே. அவங்க பவுல மாதிரியானவங்க. பவுல் ஏராளமா கஷ்டப்பட்டு, அதிகமா பயணம் செஞ்சி, சுவிசேஷத்தப் பரப்பினாரு, ஆனா அவர் தேவனுடய ஆசீர்வாதங்களுக்கு தன் வேலயயும் முயற்சிகளயும் பரிமாற்றம் செய்ய விரும்பினாரு. அவர் ஏராளமான பணிகள செஞ்சபிறகு சொன்னாரு, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” (2 தீமோத்தேயு 4:7-8). பவுல் செஞ்ச ஒவ்வொரு விஷயமும் பரிமாற்றம் சார்ந்ததே. அதெல்லாம் கிரீடத்துக்காக, எல்லாம் ஆசீர்வாதங்களுக்கும் வெகுமானங்களுக்கும். தேவனுடய வார்த்தைகளின் எதார்த்தத்துக்குள் பிரவேசிப்பதற்குப் பதிலாக அவர் பணிய பத்தி மட்டுமே கவலைப்பட்டாரு. அதனாலதான் பவுலின் மனநில மாறவே இல்ல. அதனாலதான் அவர் சுவிசேஷத்த பரப்பி ஏராளமான ஜனங்கள ஆதாயப்படுத்தியிருந்தாலும் தேவன் அவருக்கு தம் ஒப்புதல ஒருபோதும் கொடுக்கல. என்னைக் குறித்து சிந்தித்தபோது நானும் பவுலப்போலவே இருந்ததக் கண்டேன். என் வேலய நான் விட்ட போது, என் கடமயச் செய்ய ஏறக்குறய என் எல்லா நேரத்தயும் சக்தியயும் கொடுத்தேன். எனக்கு அதிக வேலைப்பளு இருக்கும்போது, நான் ஒரே முறதான் சாப்பிடுவேன். ஆனா அது சத்தியத்த தேடவோ தேவன திருப்திப்படுத்தவோ இல்ல, அவருடய ஆசீர்வாதங்கள பெற மட்டுந்தான். நான் என்ன அறியவோ அல்லது என் சீர்கேட்ட களயவோ முயலல, நான் எவ்வளவு செய்றென்னு தேவன் பாத்து, என்ன பாதுகாக்க மட்டுமே விரும்புனேன், இதனால எனக்கு நல்ல பிரதிபலன் கிடைக்கும், நான் அவருடய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பேன். சாத்தானால் நான் எவ்வளவு தூரம் சீர்கெடுக்கப் பட்டிருக்கேன்னும், எவ்வளவு சுயநலமா இருக்கேன்னும், எவ்வளாவு தூரத்துக்கு நான் செஞ்சதெல்லாம் எனக்காகவேன்னும் பாத்தேன். எனக்கு பயபக்தியோ அல்லது தேவனிடம் உண்மை அன்போ இல்ல. அன்பு என் மேல் மட்டுந்தான். இதப் பாத்தப்போ நான் உண்மயிலேயே வருத்தப்பட்டேன். நான் தேவனிடம் ஜெபித்தேன், “ஓ தேவனே, நான் மாற எனக்கு உதவும். எனக்கு என் கடமயில தவறான கண்ணோட்டம் இருக்கு. என் கடமய எனக்காக அல்ல, நீர் செய்ய விரும்புகிற விதமா நான் செய்ய விரும்புறேன்.”
கொஞ்சம் கழிச்சி, நான் இன்னொரு தேவனுடய வார்த்தைகளின் பகுதிய படிச்சேன், அது என்ன மிகவும் நெகிழ வச்சிது. தேவனுடய வார்த்தைகள் சொல்லுது. “எனக்கு வேறு வழியில்லாமல் முழு மனதுடன் உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனாலும் நீங்கள் பொல்லாத நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள், என்னை நோக்கி அரை மனதுடன் இருக்கிறீர்கள். அதுவே உங்கள் கடமையின் அளவு, உங்கள் ஒரே செயல்பாடு. அப்படித்தானே? ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையைச் செய்ய நீங்கள் முற்றிலும் தவறிவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக எப்படிக் கருதுவது? நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்கள் மற்றும் எவ்வாறு ஜீவிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள், ஆனால் நீங்கள் தேவனின் சகிப்புத்தன்மையையும் ஏராளமான கிருபையையும் பெற முற்படுகிறீர்கள். அத்தகைய கிருபை உங்களைப் போன்ற பயனற்றவர்களுக்காகவும், கீழ்த்தரமானவர்களுக்காகவும் தயாரிக்கப்படவில்லை, ஆனால் எதையும் கேட்காமல் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யாதவர்களுக்காக தயாரிக்கப்பட்டவை. உங்களைப் போன்றவர்கள், உங்களைப்போன்ற பிரயோஜனமில்லாதவர்கள், பரலோகத்தின் கிருபையை அனுபவிக்க முற்றிலும் தகுதியற்றவர்கள். உங்கள் நாட்களில் கஷ்டங்களும் இடைவிடாத தண்டனையும் மட்டுமே இருக்கும்! உங்களால் என்னிடம் உண்மையாக இருக்க முடியாவிட்டால், உங்கள் விதி துன்பங்களில் ஒன்றாக இருக்கும். எனது வார்த்தைகளுக்கும், எனது கிரியைகளுக்கும் உங்களால் பொறுப்பேற்க முடியாவிட்டால், உங்கள் முடிவு தண்டனைகளில் ஒன்றாக இருக்கும். எல்லா கிருபை, ஆசீர்வாதங்கள் மற்றும் ராஜ்யத்தின் அற்புதமான ஜீவிதம் ஆகியவற்றிற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இதுதான் நீங்கள் சந்திக்கத் தக்க முடிவு மற்றும் உங்கள் சொந்த செய்கையின் விளைவும் ஆகும்! அறியாமை மற்றும் ஆணவம் உள்ளவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்யமாட்டார்கள், அல்லது தங்கள் கடமையையும் செய்யமாட்டார்கள், ஆனாலும் அவர்கள் கேட்பதற்குத் தகுதியானவர்கள் போலக் கிருபைக்காகத் தங்கள் கைகளை நீட்டுகிறார்கள். அவர்கள் கேட்பதைப் பெறத் தவறினால், அவர்கள் எப்போதும் உண்மையில்லாதவர்களாக மாறுகிறார்கள். அத்தகையவர்களை எவ்வாறு நியாயமானவர்களாகக் கருத முடியும்? நீங்கள் மோசமான திறமை வாய்ந்தவர்கள் மற்றும் காரணமில்லாதவர்கள், நிர்வாகக் கிரியையின் போது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை உங்களால் முற்றிலும் நிறைவேற்ற இயலாது. உங்கள் மதிப்பு ஏற்கனவே சரிந்துவிட்டது. உங்களுக்குக் கிருபை காட்டியதற்காக நீங்கள் எனக்குத் திருப்பிச் செலுத்தத் தவறியது ஏற்கனவே தீவிரமான கலகத்தின் செயலாக இருக்கிறது, இதுவே உங்களை கண்டிக்கவும், உங்கள் கோழைத்தனம், திறமையின்மை, கீழ்த்தரம் மற்றும் தகுதியற்ற தன்மையை நிரூபிக்கப் போதுமானது. உங்கள் கைகளை நீட்டிக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு”). அதப் படிச்சதும், நான் எவ்வளவு பேராசயுடன் இருந்திருக்கேன்னு உணர்ந்தேன். என் கடமையைச் செய்ய நான் ஏராளமான நேரத்த ஒதுக்குவேன், ஆனா ஒப்பந்தம் போட்டு தேவனிடம் இருந்து எப்பவும் ஆசீர்வாதங்கள வலிந்து பெற்றுக்கொண்டிருந்தேன். உண்மயில நான் என் கடமய செய்துக்கிட்டிருக்கல, நான் உண்மயில ஒரு சிருஷ்டியும் இல்ல. தேவனுடய கிருபய கோரவும், பேரிடரில இருந்து பாதுகாப்ப பெறவும் அல்லது அவருடய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவும் எந்த உரிமயும் எனக்கு எவ்வாறு இருக்க முடியும்? தேவனுடய வார்த்தைகளின் வெளிப்பாடு இல்லாம, நான் எவ்வளவு கலகக்காரியாவும் சீர்கேடானவளாகவும் இருந்தேன்னும், அல்லது ஆசீர்வாதங்களுக்காக எனக்கிருந்த வெறுகத்தக்க நோக்கங்கள தேவன் எவ்வளவு தூரம் வெறுத்தாருங்கறதும் ஒருபோதும் எனக்கு தெரிஞ்சிருந்திருக்காது, நான் என்னப்பத்தி மட்டுமே நினச்சேன், தேவனுடய சித்தத்த அல்ல. என்னப் போல ஒருத்தி தேவனுடய ரட்சிப்புக்கு அருகதயானவள் இல்ல. தேவன் நீதியும் பரிசுத்தமும் ஆனவர். தன்னிடம் பயபக்தியா இருக்கிறவங்களயே அவர் விரும்புறார். சுத்த இருதயத்தோடு ஒரு கடமய செய்யக் கூடியவங்கள. ஆனா எனக்கு சுத்த இருதயம் எப்போதாவது இருந்துதா? இல்லை. என் வெறுக்கத்தக்க நோக்கங்களுக்காகவும் எல்லைமீறிய ஆசைகளுக்காகவும் நான் ரொம்ப வெக்கப்பட்டேன். தேவ கிருபைக்கு நான் தகுதியானவள் இல்ல. எனக்குள்ள எல்லாத்தயும் என் கடமையில போட்டு தேவன திருப்திப்படுத்துறதுக்காக, என்னையும் என் தவறான நோக்கங்களயும் நான் மாத்த விரும்புனேன்.
அப்புறமா, நான் ஒரு கூடுகயில இருக்கும்போது, தேவனுடய வார்த்தைகள் சிலத படிச்சேன், அது எனக்கு உதவிச்சி. தேவனின் வார்த்தை கூறுகிறது: “மனுஷனின் கடமைக்கும், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா அல்லது சபிக்கப்பட்டவனா என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடமை என்பது மனுஷன் நிறைவேற்ற வேண்டியது; அது அவனுக்குப் பரலோகம் கொடுத்த கிரியை, மேலும் அது பிரதியுபகாரம், நிபந்தனைகள் அல்லது காரணங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. அப்போதுதான் அவன் தனது கடமையைச் செய்கிறான். ஆசீர்வதிக்கப்படுவது என்பது, யாரோ ஒருவன் பரிபூரணனாகி, நியாயத்தீர்ப்பை அனுபவித்தபின் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறான் என்பதாகும். சபிக்கப்படுவது என்பது, ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்தபின்பும் ஒருவனின் மனநிலை மாறாதபோதும், அவன் பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிக்காமல் தண்டிக்கப்படும்போதும் வழங்கப்படுவது என்பதாகும். ஆனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது சபிக்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும், அவர்களால் செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டும்; தேவனைப் பின்தொடரும் ஒருவன் செய்ய வேண்டிய குறைந்தபட்ச விஷயம் இது. நீ ஆசீர்வதிக்கப்படுவதற்காக மட்டுமே உன் கடமையைச் செய்யக்கூடாது, மேலும் சபிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் நீ செயல்பட மறுக்கவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: மனுஷனுடைய கடமையின் செயல்திறன்தான் அவனது கடமையின் முக்கிய விஷயமாகும், அவனால் தனது கடமையைச் செய்ய இயலாது என்றால், இதுவே அவனது கலகத்தன்மையாகும். தனது கடமையைச் செய்யும் செயல்முறையின் மூலம்தான் மனுஷன் படிப்படியாக மாற்றப்படுகிறான், மேலும் இந்த செயல்முறையின் மூலம்தான் அவன் தன் விசுவாசத்தை நிரூபிக்கிறான். எனவே, நீ எவ்வளவு அதிகமாக உன் கடமையை செய்கிறாயோ, அவ்வளவு சத்தியத்தை நீ பெறுவாய், மேலும் உன் வெளிப்பாடும் மிகவும் உண்மையானதாகிவிடும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு”). அதப் படிச்ச பிறகு, நான் ஒரு சிருஷ்டியா இருப்பதால, நான் என் கடமயச் செய்யணும்—அது என் பொறுப்புன்னு என்னால பாக்க முடிஞ்சிது, நான் தேவனிடம் இருந்து ஆசீர்வாதங்கள கேட்டுக்கிட்டிருக்கக் கூடாது. நான் ரட்சிக்கப்படுவேனா அல்லது தண்டிக்கப்படுவேனான்னு நினச்சிக்கிட்டு இருக்கக் கூடாது. என் கடமய எப்படி நல்லா செய்றதுன்னு மட்டுந்தான் நான் சிந்திக்கணும். நான் பொதுவா ஒரு கடமயச் செய்தா, தேவன் என்ன தண்டிக்க மாட்டாருன்னு நினைப்பேன். மேலும் நான் பேரிடரில விழ மாட்டேன். அவர பின்பற்றாதவங்க அல்லது ஒரு கடமயச் செய்யாதவங்களதான் அவர் தண்டிப்பார்னு நினச்சேன், அதனால தேவ பாதுகாப்புக்கு என் கடமய ஒரு பேரம் பேசுற சலுகையாதான் நினச்சேன். அப்புறமா கடமயச் செய்றது சிருஷ்டிகளான நாம் செய்யவேண்டியதுன்னு உணர்ந்தேன். அதுக்கும் ஆசீர்வதிக்கப்படுறதுக்கும் சம்பந்தமே இல்ல. முடிவுல நான் ரட்சிக்கப்பட்டாலும் தண்டிக்கப்பட்டாலும், நான் சத்தியத்த அடஞ்சேனா, நான் மாறி இருக்கிறேனான்னுதான் தேவன் பாக்குறார். அதுதான் தேவனுடய நீதி. பேரிடர்கள்ல நான் காயம்பட்டாலும் செத்தாலும்கூட, நான் தேவனுடய ஆளுகைக்கு கீழ்ப்படியணுமே தவிர ஒருபோதும் அவர குற்றம் சொல்லக் கூடாது. பேரிடரில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக ஒருபோதும் கடம செய்வத நான் பயன்படுத்தக் கூடாது. அது ஒரு சிருஷ்டியின் கடமயச் செய்வது இல்ல. நான் என்ன தேவனுக்கு ஒப்புக்கொடுத்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் ஒரு கடமயச் செய்ய வேண்டும். ஏன்னா அவர் என்ன சிருஷ்டித்தார். அதுக்குப் பிறகு என் கடமயில, என்னால முடிந்த போதெல்லாம் நான் என்ன எப்போதும் ஞாபகப்படுத்திக் கொள்வேன். அத என்னால் சுயநலமாகச் செய்ய முடியாது. நான் தேவனைத் திருப்திப்படுத்தி அவருக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவேன்.
தேவனுக்கு நன்றி. என் சீர்கேட்டையும், என் தவறான தேடல்களையும் வெளிப்படுத்த தேவன் இந்தச் சூழல்கள பயன்படுத்தினாரு, அதனால ஆசீர்வாதங்களுக்கான என் வெறுக்கத்தக்க நோக்கங்கள என்னால பாக்கவும், என் விசுவாசத் தேடல்ல சில மாற்றங்கள் உருவாக்கவும் முடிஞ்சிது. இப்ப, அதிக கிருபை பெற அல்லது பேரிடரில இருந்து தப்பிக்க நான் என் கடமய செய்றதில்ல. சத்தியத்த தேடி என் கடமயச் செய்து தேவனுடய அன்புக்கு ஈடு செய்வத மட்டுந்தான் நான் விரும்புறேன்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?