ஆவிக்குரிய போராட்டம்

ஜனவரி 29, 2022

யாங் ஜி, அமெரிக்கா

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “ஜனங்கள் தேவனில் விசுவாசம் வைக்க ஆரம்பித்ததிலிருந்து பல தவறான நோக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள். நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதபோது, உன்னுடைய நோக்கங்கள் அனைத்தும் சரியானவை என்றே நீ நினைப்பாய், ஆனால் ஏதாவது ஒன்று உனக்கு நிகழும்போது, உனக்குள் பல தவறான நோக்கங்கள் இருப்பதை நீ காண்பாய். இப்படியாக, தேவன் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துகிறபோது, தேவனைக் குறித்த அறிவை தடைசெய்யும் பல எண்ணங்கள் அவர்களுக்குள் இருப்பதை அவர்கள் உணரும்படி செய்கிறார். உன் நோக்கங்கள் தவறானவை என்று நீ அறிந்துகொள்ளும்போது, உன்னால் நீ கொண்டிருக்கும் கருத்துகள் மற்றும் நோக்கங்களின்படி பயிற்சி செய்வதை நிறுத்த முடிந்தால், தேவனுக்கு சாட்சியமளித்து, உனக்கு நேரிடும் எல்லாவற்றின் மத்தியிலும் உன் நிலையில் நிலைத்திருக்கவும் கூடுமானால், மாம்சத்திற்கு விரோதமாக கலகம் செய்துள்ளாய் என்பதை இது நிரூபிக்கிறது. நீ மாம்சத்திற்கு எதிர்த்து நிற்கும்போது, கண்டிப்பாக உனக்குள் ஒரு யுத்தம் எழுவது தவிர்க்க முடியாதது. சாத்தான், ஜனங்களை அதைப் பின்பற்ற வைக்க முயற்சிப்பான், அவர்களை மாம்சத்தின் கருத்துகளைப் பின்பற்றப் பண்ணவும் மற்றும் மாம்சத்தின் நலன்களை நிலைநிறுத்தச் செய்யவும் முயற்சிப்பான்—ஆனால் தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களை உள்ளாக பிரகாசிப்பித்து ஒளியூட்டும், இந்த நேரத்தில் தேவனையா, அல்லது சாத்தானையா யாரைப் பின்பற்றுவது என்பது உன்னைப் பொறுத்ததாகும். தேவன், ஜனங்களுக்கு உள்ளிருக்கும் காரியங்களைக் கையாள, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதாக இல்லாத எண்ணங்கள் மற்றும் கருத்துகள் ஆகியவற்றை கையாள சத்தியத்தை முதன்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அவர்களைக் கேட்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் இருதயங்களைத் தொட்டு அவர்களைப் பிரகாசிப்பித்து ஒளியூட்டுகிறார். ஆகவே சம்பவிக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னாக ஒரு யுத்தம் இருக்கிறது: ஜனங்கள் ஒவ்வொருமுறையும் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போதும், அல்லது தேவனுக்கான அன்பை நடைமுறைப்படுத்தும்போதும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. மாம்சத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களுடைய இருதயங்களின் ஆழங்களில் உண்மையில், ஒரு வாழ்வா-சாவா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்—இந்தத் தீவிர யுத்தத்திற்கு பிறகுதான், மிகப் பெரிய அளவிலான தீவிர சிந்தனைக்குப் பிறகே வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படும். ஒருவருக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியாது. ஏனென்றால் ஜனங்களுக்குள் இருக்கும் பெரும்பாலான நோக்கங்கள் தவறானவை, இல்லையென்றால் தேவனுடைய அநேக செயல்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளிலிருந்து மாறுபட்டவை, ஜனங்கள் சத்தியத்தை நடைமுறைப்படுத்தும்போது, சம்பவங்களுக்குப் பின்னாக ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது. இந்த சத்தியத்தை நடைமுறைப்படுத்திய பிறகு, இக்காட்சிகளுக்குப் பின்னால் முடிவாக, தேவனைத் திருப்திப்படுத்தும் வகையில் ஜனங்கள் தங்கள் மனதை மாற்றுவதற்கு முன்பு அளவிடமுடியாத அளவிற்கு கவலையின் கண்ணீரை வடித்திருப்பார்கள். இந்தப் யுத்தத்தின் காரணமாக ஜனங்கள் வருத்தங்களையும் புடமிடப்படுதலையும் சகிக்கின்றனர்; இது உண்மையான பாடு. உன்மீது யுத்தம் வரும்போது, உண்மையில் உன்னால் தேவன் பட்சமாக நிற்க முடிந்தால், உன்னால் தேவனைத் திருப்திப்படுத்த இயலும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). தேவனின் வார்த்தைகளை வாசித்ததற்குப் பின்னர், சத்தியத்தைக் கடைபிடிப்பதென்பது சாதாரண விஷயம் இல்லை என்றும், ஒரு ஆவிக்குரிய போராட்டம் உண்மையிலேயே தேவை என்றும் நான் ஆழமாக உணர்ந்தேன். பல ஆண்டுகளுக்கு முன், என் மைத்துனி பொல்லாப்பான செயல்களைச் செய்யும் ஒரு நபர் என்று அம்பலப்படுத்தப்பட்டாள். திருச்சபை அவளை வெளியேற்ற எண்ணியது, ஆனால் நான் எனது உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டேன், என்னால் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியவில்லை. எனது இருதயத்தில், நான் ஒரு நிலையில் இல்லாமல் போராடினேன், மிகவும் பரிதாபகரமாக இருந்தேன். இறுதியில், தேவனின் வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் வெளிப்பாடுகள் மூலம், என் உணர்ச்சிகளின் படி நடப்பதனால் ஏற்படும் ஆபத்து மற்றும் விளைவுகளை நான் தெளிவாகக் கண்டேன். அதன் பின்னர் தான் என்னால் என் மாம்சத்தை அடக்கி வைத்து, எனது உணர்ச்சிகளை விட்டுவிட்டு, பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்களை அம்பலப்படுத்தி நிராகரித்து, இறுதியில் சத்தியத்தைக் கடைபிடிப்பதனால் கிடைக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பை அனுபவிக்க முடிந்தது.

2017ஆம் ஆண்டு எனது உள்ளூர் திருச்சபையில் தலைமைப் பொறுப்புகளை ஏற்பதற்காக நான் திரும்பி வந்தேன். ஒரு கூட்டத்தில், எனது மைத்துனி ஹான் பிங், திருச்சபையின் தலைவியாக அவளது கடமைகளைச் செய்துகொண்டிருந்த காலத்தில், கூட்டங்களில் ஐக்கியப்படும்போது, மேலோட்டமான வார்த்தைகள் மற்றும் கோட்பாடுகளைப் பேசுவதன் மூலம் தன்னைச் சிறந்தவளாகக் காட்டிக்கொள்ள முயன்றாள் என்று எனது சகோதர சகோதரிகள் கூறினார்கள். அவள் சென்ற இடமெல்லாம், அவள் என்ன கடமைகளைச் செய்தாள் மற்றும் அவள் எப்படிக் கஷ்டப்பட்டாள் என்பது குறித்து அவள் பேசினாள், இது மற்றவர்கள் அவளை வழிபாடு செய்து, அவள் சொல்வதற்கு செவி சாய்க்கும்படி செய்தது. சகோதர சகோதரிகள், அவர்களின் கடமைகளில் உள்ள சில பிரச்சனைகளைப் பற்றி அவளிடம் பேசிய பின்னர், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் சத்தியம் குறித்து அவள் ஐக்கியப்படவில்லை, ஆனால் மற்றவர்களிடம் தயாள நோக்கத்துடன் விரிவுரை செய்தாள். அவளது விரிவுரைகள், சில சகோதர சகோதரிகளை எதிர்மறை நிலையில் வாழும்படியும், அவர்களின் கடமைகள் மீதான ஆர்வம் அனைத்தையும் இழக்கும்படியும் செய்தன. பின்னர், ஹான் பிங் மாற்றப்பட்டாள். அதன் பின்னர், சிந்தித்துப் பார்க்கவும், தன்னைப் புரிந்துகொள்ளவும் அவள் மறுத்தாள், மேலும் இன்னும் அவள் சகோதர சகோதரிகளின் இடையே ஆத்திரமூட்டல்களையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தி, திருச்சபை வாழ்க்கையில் இடையூறு செய்தாள். திருச்சபைத் தலைவர்கள் அவளுடன் பல முறை ஐக்கியப்பட்டார்கள், மேலும் அவளைக் கையாண்டு விமர்சித்தார்கள், ஆனால் அவள் எதையும் ஏற்க மறுத்துவிட்டாள். அவள் கீழ்ப்படியாதவளாகவும் திருப்தியற்றவளாகவும் இருந்து, தொடர்ந்து பாதகமானவற்றைப் பரப்பி, திருச்சபை வாழ்க்கையில் கடுமையான இடையூறை ஏற்படுத்தினாள்… ஹான் பிங் இப்படி நடந்துகொள்வதை நான் கேள்விப்பட்டதும், நான் சீற்றமடைந்தேன். “திருச்சபைக்குள் தங்கள் நச்சுமிக்க, தீங்கிழைக்கும் பேச்சை வெளிப்படுத்துபவர்கள், வதந்திகளைப் பரப்புகிறவர்கள், விரோதத்தைத் தூண்டுகிறவர்கள், மற்றும் சகோதர சகோதரிகளிடையே தனித்தனி குழுக்களை உருவாக்குகிறவர்கள்—அவர்கள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆயினும் இப்போது தேவனின் கிரியையின் வேறுபட்ட யுகமாக இருப்பதால், இந்த ஜனங்கள் தடைசெய்யப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் சில அகற்றுதல்களை எதிர்கொள்கிறார்கள். சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட அனைவருக்கும் சீர்கெட்ட மனநிலைகள் உள்ளன. சிலருக்கு சீர்கெட்ட மனநிலையைத் தவிர வேறொன்றும் இல்லை, மற்றவர்கள் வேறுபட்டவர்கள்: அவர்கள் சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அவர்களின் இயல்பும் மிகவும் பொல்லாதது. அவர்களின் சொற்களும் செயல்களும் அவர்களின் சீர்கெட்ட, சாத்தானிய மனநிலையை வெளிப்படுத்துகின்றன என்பது மட்டுமல்ல; மேலும், இந்த ஜனங்கள் உண்மையான தீய சாத்தான்களாக இருக்கின்றனர். அவர்களின் நடத்தை தேவனின் கிரியையில் இடையூறு செய்கிறது மற்றும் தொந்தரவு செய்கிறது, இது சகோதர சகோதரிகள் ஜீவனுக்குள் நுழைவதை பாதிக்கிறது, மேலும் இது திருச்சபையின் சாதாரண வாழ்க்கையை சேதப்படுத்துகிறது. விரைவில், ஆட்டுத்தோல் போர்த்திய இந்த ஓநாய்கள் அகற்றப்பட வேண்டும்; சாத்தானின் இந்த சேவகர்களை நோக்கி ஒரு இரக்கமற்ற மனப்பான்மை, நிராகரிக்கும் மனப்பான்மை ஆகியவை பின்பற்றப்பட வேண்டும். இது மட்டுமே தேவனின் பக்கம் நிற்பதாகும், மற்றும் அவ்வாறு செய்யத் தவறியவர்கள் சாத்தானுடன் சேற்றில் புரள்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை”). என்ற தேவனின் வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்தேன். தேவனின் வார்த்தைகளின் இந்தப் பத்தியை நான் நினைவுகூர்ந்தபோது, தேவனின் வார்த்தைகளால் அளவிடப்படும்போது, ஹான் பிங்-இன் சுபாவம் மற்றும் சாராம்சமானது, பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்களுடையது என்பதை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன். தேவனின் வார்த்தைகளுக்கு எதிரான அவளின் நடத்தையைத் திருச்சபைத் தலைவர்களும், உடன் ஊழியம் செய்பவர்களும் பகுப்பாய்வு செய்து, அவள் தியாகங்கள் செய்து, தன்னை ஒப்புக்கொடுத்து, அவளின் கடமைகளை நிறைவேற்றும்போது வேதனைக்கும், விலைக்கிரயம் கொடுப்பதற்கும் திறனுள்ளவளாய் இருந்தாலும் கூட, அவள் கர்வமுள்ளவளாகவும் சுய முக்கியத்துவம் கொடுப்பவளாகவும் இருந்து, சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல், தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும் இருந்து, திருச்சபை வாழ்க்கையைத் தொந்தரவு செய்தாள் என்றும், தவறுகளைச் சரி செய்யும்படி கூறிய பின்னரும் அவற்றைச் சரி செய்யவில்லை என்றும் கூறினார்கள். இது அவளைப் பொல்லாப்பு செய்யும் நபராக்கியது. தேவனுடைய திருச்சபையின் பணி ஏற்பாடுகளின் விதிகளின்படி, அத்தகைய ஜனங்கள் வெளியேற்றப்பட வேண்டும். அவள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பல சகோதர சகோதரிகள் சொல்வதைக் கேட்ட பின்னர், நான் மிகவும் கலக்கமாக உணர்ந்தேன்: அவளின் நடவடிக்கைகளைப் பார்த்ததில் அவள் உண்மையிலேயே பொல்லாப்பான செயல்களைச் செய்பவள் என்பதை என்னால் காண முடிந்தது, மேலும் அவள் வெளியேற்றப்பட வேண்டும், ஆனால் அவள் என் மனைவியின் இளைய சகோதரி, மேலும் எனது மாமனார் மற்றும் மாமியார் என்னை நன்றாக நடத்தி, என் குடும்பத்தை நன்றாகக் கவனித்தார்கள். ஹான் பிங்-கை வெளியேற்ற நான் வாக்களித்தேன் என்று அவர்களுக்குத் தெரியவந்தால், பின்னர் நான் இறக்கமற்றவன், நன்றி இல்லாதவன் மற்றும் குடும்பத்தை மதிக்காதவன் என்று அவர்கள் நினைப்பார்கள் அல்லவா? அத்தகைய காரியத்தைச் செய்த பிறகு என் மாமனார் மற்றும் மாமியார் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? ஆனால் ஒரு திருச்சபைத் தலைவராக, நான் கோட்பாடுகளின்படி செயல்படவில்லை என்றால், திருச்சபையில் பொல்லாப்பான செயல்களைச் செய்யும் நபர் ஒருவர் இருக்கிறார் என்பதை நன்கு அறிந்தும் நான் அவரை வெளியேற்றவில்லை என்றால், மேலும், திருச்சபை வாழ்க்கையில் இடையூறு செய்து, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்குத் தீங்கு செய்ய நான் தொடர்ந்து அனுமதித்தால், அது என்னைப் பொல்லாப்பு செய்யும் நபரின் கூட்டாளியாகவும், தேவனின் எதிரியாகவும் ஆக்கும் அல்லவா? அதைப் பற்றி மேலும் சிந்திக்க நான் அஞ்சினேன். அந்த நேரத்தில், ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியது போல் நான் உணர்ந்தேன். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. சகோதரி ஜோகு அவர்கள், நான் மனக்கலக்கத்தில் இருப்பதைப் பார்த்து, “சகோதரர் யாங், ஹான் பிங் திருச்சபை வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் இடையூறு செய்கிறாள், மேலும் அவள் மனந்திரும்புவதற்கான அறிகுறியைச் சிறிதளவும் காட்டவில்லை. கோட்பாட்டின் அடிப்படையில், அவள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது திருச்சபையின் பணியைப் பாதுகாக்கிறது. அது தான் மிகவும் முக்கியமான விஷயமாகும்! நாம் தேவனின் சித்தத்தைக் கருத்தில் கொண்டு, நம் சொந்த உணர்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் செயல்படக்கூடாது” என்று என்னிடம் கூறினார். அவர் கூறியதைக் கேட்ட பின்னர், நான் இன்னும் கலக்கமாக உணர்ந்தேன்.

அதன் பின்னர், சில சகோதர சகோதரிகள், “ஹான் பிங் தேவனைப் பல ஆண்டுகளாக விசுவசித்து வருகிறார், அவர் தனது கடமையைச் செய்வதற்காக அவரின் குடும்பம் மற்றும் வேலையை விட்டுவிட்டு, அவர் அதிகம் வேதனையை அனுபவித்துள்ளார். அவர் மனந்திரும்புவதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று அறிவுறுத்தினார்கள். நான் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, நல்ல செயல்களைச் செய்யும் ஹான் பிங்-இன் வெளித்தோற்றத்தால் ஏமாற்றப்பட்டதால் தான் அந்தச் சகோதர சகோதரிகள் இதைக் கூறினார்கள் என்றும், ஹான் பிங்-இன் சுபாவம் மற்றும் சாராம்சத்தை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவளின் நடத்தையைப் பகுப்பாய்வு செய்ய நான் சத்தியத்தை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் பின்னர், ஹான் பிங் என் மாமியார் மற்றும் மாமனாருக்கு விருப்பமான மகள் என்பதையும், எனது மாமியார் தேவனை விசுவசிப்பதில் குழப்பமான மனநிலையைக் கொண்டவர், மற்றும் பகுத்தறிவு இல்லாதவர் என்பதையும், என் மனைவி அதிகமாக உணர்ச்சிவசப்படுபவள் என்பதையும் நான் சிந்தித்தேன். நான் ஹான் பிங்-ஐ வெளியேற்றி, எனது சகோதர சகோதரிகளிடம் அவளின் பொல்லாப்பான நடவடிக்கை குறித்து அம்பலப்படுத்திப் பகுப்பாய்வு செய்தால், பின்னர் அது என் மனைவியின் குடும்பம் முழுவதையும் அப்பட்டமாக அவமானப்படுத்துவது போல் இருக்கும் அல்லவா? சகோதர சகோதரிகளுக்கு முன் ஹான் பிங்-ஐ பற்றி நல்லதாகச் சில வார்த்தைகளை நான் கூறி, பின்னர் மனந்திரும்பும்படியும் மேலும் எந்தவொரு தொந்தரவுகளையும் செய்யாமல் இருக்கும்படியும் அவளிடம் கேட்பதற்காக அவளிடம் ஐக்கியப்பட்டால், பின்னர் அவள் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது, மேலும் அந்த வழியில், என் மனைவியின் குடும்பத்தை நான் அவமானப்படுத்த வேண்டி இருக்காது. இந்த யோசனையானது நான் உணர்ந்த கவலையை ஓரளவு தணித்தது, எனவே, “ஹான் பிங் உண்மையிலேயே பொல்லாப்பான செயல்களைச் செய்து, மீறுதலில் ஈடுபட்டிருக்கிறாள், ஆனால் ஜனங்களை முடிந்த அளவு இரட்சிப்பது தேவனின் சித்தமாகும், எனவே அவள் மனந்திரும்புவதற்காக அவளுக்கு நாம் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும். அவள் மீண்டும் பொல்லாப்பான செயல்களைச் செய்தால், அப்போது அவளை வெளியேற்றுவதில் தாமதம் இருக்காது, மேலும் அவள் இதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்படி நாம் செய்யலாம்” என்று நான் எனது சகோதர சகோதரிகளிடம் கூறினேன். நான் இந்த விசேஷமான வார்த்தைகளைக் கூறுவதைச் சகோதரி ஜோகு கேட்டபோது, அவர் ஏதோ சொல்ல விரும்பியது போல் தோன்றியது, ஆனால் இறுதியில் அவர் அமைதியாக இருந்தார். அதற்கு மேல் வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை, மேலும் என் இருதயத்தில் ஒருவிதப் பதற்றம் குறைந்ததை நான் உணர்ந்தேன். இறுதியில் நான் எனது மாமனார் மற்றும் மாமியாரை அவமானப்படுத்துவதைக் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை என்று எனக்கு நானே நினைத்துக்கொண்டேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின், எனக்குத் திடீரென மூன்று வாய்ப்புண்கள் வந்தன. எனது வாய் நெருப்பில் இருப்பது போல் நான் உணர்ந்தேன்; அது மோசமாக எரிந்தது. சில நேரங்களில் என்னால் பேசவோ சாப்பிடவோ முடியாத அளவிற்கு அது வலி மிகுந்ததாக இருந்தது, மேலும் இரவில் என்னை எழுப்பும் அளவிற்கு வலி மிகவும் மோசமடைந்தது. எனது வேதனையின் நடுவே, “தேவனே, எனது வாய் மற்றும் எனது நாக்கில் உள்ள மிகவும் துன்புறுத்துகின்ற இந்தப் புண்கள் வெறுமனே தற்செயலாக உருவாகியவை அல்ல; இது எனக்கான உமது சிட்சை மற்றும் தண்டித்துத் திருத்துதல் ஆகும். ஓ தேவனே! நான் உம்மிடம் மனந்திரும்ப விரும்புகிறேன்.” என்று தேவனிடம் நான் ஜெபித்தேன்.

பின்னர், என்னுடைய தியானங்களின்போது, தேவனின் இந்த வார்த்தைகளை நான் பார்த்தேன்: “தேவனை உண்மையாக விசுவாசிக்கிற ஜனங்கள் எப்பொழுதும் அவரை தங்கள் இருதயங்களில் வைத்திருக்கிறார்கள், மற்றும் அவர்கள் எப்போதும் தேவன் மீது பயபக்தி கொண்டிருக்கும் இருதயத்தை, தேவனை நேசிக்கும் இருதயத்தை அவர்களுக்குள் சுமக்கிறார்கள். தேவனை விசுவாசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் காரியங்களைச் செய்ய வேண்டும், மற்றும் அவர்கள் செய்யும் அனைத்தும் தேவனின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் மற்றும் அவருடைய இருதயத்தைத் திருப்திப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தலைக்கனமிக்கவர்களாக, அவர்கள் விரும்பியதைச் செய்பவர்களாக இருக்கக்கூடாது; அது பரிசுத்த குணத்திற்குப் பொருந்தாது. ஜனங்கள் பித்துப்பிடித்து ஓடக்கூடாது, எல்லா இடங்களிலும் ஏமாற்றும்போது மற்றும் வஞ்சிக்கும்போது தேவனின் கொடியை எல்லா இடங்களிலும் அசைக்கக்கூடாது; இது மிகவும் கலகத்தனமான நடத்தையாகும். குடும்பங்களுக்கு அவர்களுக்கான விதிகள் உள்ளன, மற்றும் நாடுகளுக்கு அவற்றுக்கான சட்டங்கள் உள்ளன—மேலும் இது தேவனுடைய வீட்டில் மிக அதிகமாக இல்லையா? தரநிலைகள் இன்னும் கடுமையானவையாக இல்லையா? இன்னும் அதிகமான நிர்வாக ஆணைகள் இல்லையா? ஜனங்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தேவனின் நிர்வாக ஆணைகளை விருப்பப்படி மாற்ற முடியாது. தேவன் என்பவர் மனுஷர்கள் செய்யும் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவன்; அவர் ஜனங்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் தேவன். இது ஏற்கனவே ஜனங்களுக்குத் தெரியாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை”). தேவனின் வார்த்தைகள் என்னை அச்சத்தால் நடுங்க வைத்தன. நான் இந்த மனநிலையைப் பரிசுத்தமானதாகவும், நீதியுள்ளதாகவும், எந்தவொரு இடறலையும் ஏற்றுக்கொள்ளாததாகவும் இருப்பதை நான் கண்டேன். தேவனுடைய வீட்டில், கிறிஸ்துவுக்கும் சத்தியத்திற்கும் வல்லமை உள்ளது. திருச்சபையின் கிரியையை இடையூறு மற்றும் தொந்தரவு செய்யும் பொல்லாப்பு செயல்களைச் செய்பவர்களை நோக்கித் தேவனின் அணுகுமுறையானது வெறுக்கத்தக்கதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது. மேலும், பகுத்தறியும் திறன் இருந்தும், பொல்லாப்பு செயல்களைச் செய்பவர்களின் பக்கம் தொடர்ந்து நின்று, அவர்களின் சார்பாகப் பேசுபவர்களுக்கு, தேவனின் அணுகுமுறை மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கும். ஹான் பிங், சத்தியத்தைக் கடைபிடிக்க மறுக்கும் ஒருத்தியாக, மற்றும் ஆத்திரமூட்டல்களையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தி, திருச்சபைக் கிரியைகளுக்கு இடையூறு மற்றும் தொந்தரவு செய்யும் ஒருத்தியாக, அவள் தேவனின் கிரியையால் வெளிப்படுத்தப்பட்ட துல்லியமான ஒரு வகை பொல்லாப்பு செய்யும் நபராகவும், மேலும் வெளியேற்றப்படவேண்டிய ஒருத்தியாகவும் இருந்தாள். என் மனைவியின் குடும்பத்துடனான என் உறவைப் பாதுகாப்பதற்காக, சத்தியத்தின் கோட்பாடுகளை விற்பதன் மூலம் நான் அப்பட்டமாக எனது மனசாட்சிக்கு எதிராகச் சென்றேன். பொல்லாப்பு செய்யும் நபர் ஒருத்தியை நான் பாதுகாத்து அவளுக்காகச் சாக்கு போக்குகளைக் கூறினேன். நான் பொல்லாப்பான செயல்களைச் செய்யும் ஒருவரின் பக்கம் நின்று அவளைப் பாதுகாக்கச் செயல்பட்டேன். பொல்லாப்பான செயல்களைச் செய்பவரின் உதவியாளராகவும் கூட்டாளியாகவும் இது என்னை ஆக்காதா? தலைமைத்துவக் கடமையை எனக்கு வழங்கி தேவன் என்னைக் கௌரவித்தார், ஆனால் எனக்கு அவர் மீது எந்த மரியாதையும் இல்லாமலிருந்தது. நான் சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்திருந்தேன், இருந்தாலும் அதை நான் கடைபிடிக்கவில்லை, அதற்குப் பதிலாகப் பொல்லாப்பு செயல்களைச் செய்யும் நபரைத் திருச்சபையில் வைத்திருப்பதற்காக வேண்டுமென்றே ஒரு ஏமாற்று வேலையில் ஈடுபட்டேன், அதில் அவள் திருச்சபை வாழ்க்கைக்கு இடையூறு செய்து, சகோதர சகோதரிகளுக்குத் தீங்கு விளைவித்திருந்தாள். தெரிந்தும், வேண்டுமென்றே நான் தேவனின் மனநிலையை அவமதித்து வந்தேன்! எனது செயல்கள் மற்ற ஜனங்களை ஏமாற்றலாம், ஆனால் தேவனை அவற்றால் ஏமாற்ற முடியாது. நமது இருதயங்களில் இருப்பதைத் தேவன் பார்க்கிறார். அப்படித் தன்னிச்சையாகக் கண்மூடித்தனமாகச் செயல்பட்ட என்னைப் போன்ற ஒருவரை அவரால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? நான் ஏற்கனவே ஒரு மீறுதலைச் செய்துவிட்டேன், மேலும் நான் மனந்திரும்பவில்லை என்றால் தேவன் என்னை அகற்றுவார் என்பதை நான் அறிந்திருந்தேன். எனவே நான் மனந்திரும்புவதற்காக அவசரமாகத் தேவனிடம் ஜெபித்தேன். என்னுடன் ஊழியம் செய்யும் பலருடன் கலந்தாலோசித்த பின்னர், ஹான் பிங்-இன் பொல்லாப்பான செயல்களைப் பற்றி ஒரு பட்டியலை நாங்கள் தயார் செய்து, அவளைத் திருச்சபையிலிருந்து வெளியேற்றுவதற்காக விண்ணப்பித்தோம். தேவனின் வழிநடத்துதலில் மீண்டும் திரும்புவதற்காக எனது விருப்பத்தை நான் கண்டறிந்த பின்னர், எனது வாயில் இருந்த புண்கள் மர்மமான முறையில் குணமடைந்தன.

இரண்டு நாட்களுக்குப் பின், நான் ஏதோ செய்வதற்காக எனது மாமியார் வீட்டிற்குச் சென்றேன், அங்கு ஹான் பிங் இருந்தாள். அவள் என்னைப் பார்த்ததும், என்னை நோக்கிக் கடுமையான பார்வை ஒன்றை வீசிவிட்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டாள். “உங்களின் மைத்துனி பல ஆண்டுகளாகத் தேவனை விசுவசித்து வருகிறாள், மேலும் சுவிசேஷத்தைப் பரப்புவதற்காக அதிகம் பாடுபட்டிருக்கிறாள். யாருக்குத் தான் சீர்கெட்ட மனநிலை இல்லை? திருச்சபை அவளை வெளியேற்றினால், தேவனின் இரட்சிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பை அவள் இழப்பாள் அல்லவா? நீங்கள் அவளிடம் இவ்வளவு இருதயமற்றவராக இருக்கக்கூடாது!” என்று எனது மாமியார் என்னிடம் கோபமாகக் கூறினார். என் மனைவியும் ஹான் பிங் சார்பாகப் பேசினாள். அவர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், ஹான் பிங் பற்றி சிறிதளவும் அவர்களிடம் புரிதல் இல்லை என்பதையும் கண்டு, அவளது பொல்லாத நடத்தையைப் பற்றி அவர்களுடன் ஐக்கியப்பட்டேன். ஆனால் எனது மாமியார் அவற்றைக் கேட்கவே இல்லை. அதற்குப் பதிலாக, கண்களில் கண்ணீர் வழிய அவர் என்னை ஆவேசமாகத் திட்டினார். அவர் கோபமாக இருப்பதைப் பார்த்து எனது மனைவியும், என்னைக் கண்டித்தபடி அங்கு நின்றாள். இவை அனைத்தையும் பார்த்து, நான் மிகவும் பலவீனமாகவும் பரிதாபகரமாகவும் உணர்ந்தேன், என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை. அந்த இரவு நான் படுக்கையில் படுத்திருந்தபோது, எவ்வளவு முயற்சி செய்தாலும் தூக்கம் வராமல் அங்குமிங்குமாகப் புரண்டுகொண்டிருந்தேன். ஒரு பக்கம் திருச்சபையின் பணியைப் பாதுகாப்பதற்காகப் பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்களை நான் வெளியேற்ற வேண்டியிருந்தது, ஆனால் மறுபக்கத்தில் என் மனைவி மற்றும் மாமியாரின் குற்றச்சாட்டுகள் இருந்தன. நான் என்ன செய்வது? நான் எனது மைத்துனியை வெளியேற்றினால், நான் எனது மாமியாரின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அவமதிக்கக்கூடும், அது என் மனைவியுடனான என் உறவைப் பாதித்து எனது சொந்தக் குடும்பம் உடைவதற்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. ஆனால் பொல்லாப்பான செயல்களைச் செய்யும் இந்த நபரைத் திருச்சபையில் இருக்க விடுவது, திருச்சபை வாழ்க்கைக்கு ஆபத்தாக அமைந்து, என் சகோதர சகோதரிகளின் உயிருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். இவை அனைத்தையும் பற்றி சிந்திப்பது என்னை மிகவும் பரிதாபகரமாகவும் கலக்கமாகவும் உணரச் செய்தது. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் தீவிரமாக ஜெபிப்பது தான்: “தேவனே, நான் மிகவும் பலவீனமாக உணர்கிறேன். ஹான் பிங்-ஐ வெளியேற்றுவது தொடர்பாக நான் உம்மை அவமதிக்க விரும்பவில்லை, ஆனால் நான் எனது உணர்ச்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டு, சத்தியத்தைக் கடைபிடிக்கக் கஷ்டப்படுகிறேன். நான் உறுதியாக நின்று, உமக்குச் சாட்சியாக இருக்க, எனக்குப் பெலத்தைத் தருமாறும், அந்தகார வல்லமைகளை வெற்றிபெற எனக்கு வழிகாட்டுமாறும் உம்மிடம் வேண்டுகிறேன்.”

நான் ஜெபம் செய்த பின்னர், தேவனின் மேலும் சில வார்த்தைகளை நான் வாசித்தேன்: “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). “நீங்கள் அனைவரும் தேவனின் சுமையை கருத்தில் கொண்டுள்ளீர்கள் என்றும் திருச்சபையின் சாட்சியங்களை பாதுகாப்பீர்கள் என்றும் கூறுகிறீர்கள். ஆனால் உண்மையில் உன்னில் தேவனின் பாரத்தில் அக்கறை காட்டுபவர் யார்? உன்னை நீயே கேட்டுக்கொள்: நீ அவருடைய பாரத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவனா? அவருக்காக நீதியைக் கடைப்பிடிக்க முடியுமா? எனக்காக நின்று பேச முடியுமா? சத்தியத்தை உறுதியுடன் கடைபிடிக்க முடியுமா? சாத்தானின் எல்லா செயல்களுக்கும் எதிராக போராட நீ தைரியமாக இருக்கிறாயா? என் சத்தியத்தின் பொருட்டு உன் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சாத்தானை அம்பலப்படுத்த முடியுமா? உன்னில் என் நோக்கங்கள் நிறைவேற அனுமதிக்க முடியுமா? மிக முக்கியமான தருணங்களில் உன் இருதயத்தை நீ ஒப்புக்கொடுத்திருக்கிறாயா? நீ என் விருப்பத்தைச் செய்கிற ஒருவனா? இந்த கேள்விகளை நீயே கேட்டுக்கொள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 13”). தேவனின் வார்த்தைகளின் கடிந்துகொள்ளும் கேள்விகள் ஒவ்வொன்றும் என் இருதயத்தைக் குத்திக் கிழித்தன. அவரது அவசரச் சித்தத்தையும் தேவைகளையும் அவற்றில் நான் உணர்ந்தேன். நான் எனது உணர்ச்சிகள் அல்லது சொந்த உணர்வுகளைச் சார்ந்து இல்லாமல், பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்களை வெளியேற்றும் காரியத்தை நான் கையாளுவேன் என்றும், நான் உறுதியாகத் தேவனின் பக்கம் நின்று அவரது சித்தத்தை நிறைவேற்றுவதற்காகச் சத்தியத்தைக் கடைபிடிப்பேன் என்றும் தேவன் நம்பினார். நான் யோபுவை அவரின் சோதனைகளின்போது, மேற்பரப்பில் அவனது செல்வம் பரிக்கப்பட்டபோது, அவனது குழந்தைகள் இறந்தபோது, அவனது பணியாட்கள் கொல்லப்பட்டபோது, அவனது மனைவியும் மூன்று நண்பர்களும் அவனைத் தாக்கியபோது, எப்படி இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் பின்னால் தேவனுக்கு எதிராகச் சாத்தானின் பந்தயம் இருந்ததைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அவை யோபுவுக்கான சாத்தானின் சோதனைகளாகும். இறுதியில் யோபுவால் தனது விசுவாசம் மற்றும் தேவன் மீதான மரியாதை காரணமாகத் தேவனின் பக்கம் நிற்க முடிந்தது. அவன் முழு அவமானத்தையும் தோல்வியையும் சாத்தானை அனுபவிக்கச் செய்தான், மேலும், அவன் தேவனுக்கு உறுதியான மற்றும் பெரும் சாட்சியை வழங்கினான். வெளிப்புறத்தில், எனது மாமியாரால் என் மேல் வைக்கப்பட்ட அழுத்தமாகத் தோன்றுவது, உண்மையில் ஆவிக்குரிய பகுதியில் நடக்கும் போராட்டமாக இருந்தது. அது சாத்தானின் தந்திரமாக இருந்தது. இது என் உணர்ச்சி சார்ந்த தொடர்புகளைப் பயன்படுத்தி, நான் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதைத் தடுப்பதற்கான முயற்சியாக இருந்தது, இதன் மூலம், பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்கள் திருச்சபையில் தொடர்ந்து இருந்து, திருச்சபையின் பணிக்குத் தொடர்ந்து இடையூறு செய்து அழிக்கலாம். ஆனால், என் மனைவி மற்றும் மாமியாரின் கட்டுப்பாடுகளால் நான் சாத்தானுக்கு அடங்கியிருப்பேனா அல்லது அதற்குப் பதிலாக நீதியை நிலைநாட்டி, சத்தியத்தைக் கடைபிடித்து, கோட்பாடுகளின்படி நடப்பேனா என்று, தேவன் இந்த விஷயத்தை என்னைச் சோதிப்பதற்காகவும் பயன்படுத்தினார். நான் எனது மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதைத் தேர்வு செய்து சாத்தானின் பக்கம் நின்றால், அது நான் சாத்தானின் தந்திரத்தில் விழுந்துபோய்விட்டதாக ஆகிவிடாதா? நான் அதைச் செய்தால், நான் தேவனின் சமூகத்தில் சாட்சியாக இருப்பதை இழப்பேன்.

அவை அனைத்தையும் குறித்து நான் சிந்தித்தபோது, நான் என்னைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்: இந்தக் காலம் முழுவதும், இந்தச் சோதனையை எதிர்கொண்டபோது, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதுபோல் நான் ஏன் உணர்ந்தேன், மேலும் இதைப் பரிதாபகரமானதாக ஏன் நான் கண்டறிந்தேன்? திருச்சபையின் கிரியையைப் பாதுகாப்பதற்கான தேவையை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன், ஆனால் நான் ஏன் தொடர்ந்து எனது உணர்ச்சிகளின்படி செயல்படுகிறேன், மேலும் சத்தியத்தைக் கடைபிடித்துக் கோட்பாடுகளின் படி செயல்படுவதை நான் ஏன் கடினமாகக் காண்கிறேன்? அதன் பின்னர், தேவனின் வார்த்தைகளின் இந்தப் பத்தியை நான் வாசித்தேன், “இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் ‘உயர் கல்வி நிறுவனங்களில்’ கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய பிரசன்னத்தைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் இராஜ்யத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்ச கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைத் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்”). தேவனின் வார்த்தைகளிலிருந்து, நான் எனது உணர்ச்சிகளுக்குள் வாழ்ந்து, சத்தியத்தைக் கடைபிடிக்க முடியாமல், கலகமூட்டும் நிலையில் தேவனை எதிர்ப்பவனாக நான் வாழ்வது அனைத்திற்கும் சாத்தானால் நான் சீர்கெடுக்கப்பட்டது தான் காரணம் என்று நான் புரிந்துகொண்டேன். பிசாசுகளின் ராஜாவான சாத்தான், மற்ற ஜனங்கள் மீதான எனது உணர்ச்சிகள் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் என்று என்னைப் பார்க்க வைப்பதற்காகவும், உறவுகளைப் பாதுகாத்து, ஜனங்களின் உணர்வுகளை உணரும்படிதான் ஜனங்கள் இருக்கிறார்கள் என என்னை நினைக்க வைக்கவும், மேலும், அவ்வாறு செய்யவில்லை என்றால் இருதயமற்றவனாகவும் மற்றும் விசுவாசமற்றவனாகவும், அதற்காக நான் மற்றவர்களால் குறைகூறப்படுவேன் என்று என்னை நம்பச்செய்யவும் “ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்,” “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்,” மற்றும் “மனுஷன் உயிரற்றவன் அல்ல; அவனால் எப்படி உணர்ச்சிகள் இல்லாமல் இருக்க முடியும்?” போன்ற சாத்தானின் தத்துவங்களை எனக்குள் பதிப்பதற்காக நான் பள்ளியில் பெற்ற சமூகப் போதனைகள் மற்றும் கல்வியைப் பயன்படுத்தியது. சாத்தானின் இந்தத் தத்துவங்களை நான் நேர்மறையான விஷயங்களாக கருதினேன், மேலும், வாழ்வதற்கான கோட்பாடுகளாக அவற்றை நான் கருதி, சாத்தானின் அந்தத் தத்துவங்கள் மற்றும் விதிகளின்படி எனது வாழ்க்கையை நான் வாழ்ந்தேன், நான் சரி மற்றும் தவறு குறித்துக் கொள்கையற்று, குழப்பமும் அடைந்தேன், மிகவும் சுயநலவாதியாகவும், இழிவானவனாகவும், தந்திரமானவனாகவும், வஞ்சகமானவனாகவும் மாறினேன். ஹான் பிங்-ஐ வெளியேற்றும் காரியத்தில், நன்றிகெட்டவனாகவும், இருதயமற்றவனாகவும் இருப்பதாக உறவினர்கள் கூறுவார்கள் என்றும், அது எனது குடும்பத்தை உடைக்கக்கூடும் என்றும் நான் அஞ்சினேன்; இது திருச்சபையின் கிரியையையும், என் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையையும் நான் அலட்சியப்படுத்தும்படி செய்தது. நான் உண்மையில், சுயநலவாதியாகவும் இழிவானவனாகவும் இருந்தேன். இப்படி நடந்துகொள்வதன் மூலம், நான் உண்மையிலேயே நன்றிகெட்டவனாகவும் இருதயமற்றவனாகவும் இருந்தேன். நம் சமூகம் அந்தகாரத்திலும் பொல்லாப்பிலும் இருப்பதற்கான மற்றும் அங்கு நியாயமும் நீதியும் இல்லாததற்கான காரணம் என்னவென்றால், ஜனங்கள் அவர்களின் வாழ்க்கை முழுவதையும் சாத்தானின் இந்தத் தத்துவங்கள் மற்றும் விதிகளின்படி வாழ்வதனாலேயாகும். ஜனங்கள் மாம்சம் சார்ந்த உணர்ச்சிப்பூர்வமான உறவுகளைப் பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறார்கள். அவர்கள் யாருக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் தான் பேசுகிறார்கள். இந்த ஜனங்கள் ஏதாவது சட்டவிரோதமானதைச் செய்தால் அல்லது குற்றம் புரிந்தால், அவர்களைப் பாதுகாத்து உதவுவதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள், மேலும், அவர்களின் சார்பாகப் பேச முயற்சித்து சரியையும் தவறையும் குழப்பிக்கொள்கின்றனர். அதன் பின்னர் தான் சாத்தானின் இந்தத் தத்துவங்கள் மற்றும் விதிகள் நியாயமானவையாகவும் நீதிநெறியானவையாகவும், மனிதக் கருத்துகளுக்கு இணங்க இருப்பதையும், ஆனால் அவை உண்மையில் ஜனங்களை ஏமாற்றி சீர்கெடுப்பதற்காகச் சாத்தான் பயன்படுத்தும் பொய்கள் என்பதை நான் தெளிவாகக் கண்டேன். அவை சத்தியத்துடனும், தேவனுடனும் பகைமையில் உள்ளன. நாம் இவற்றின்படி வாழ்ந்தால், நாம் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தும் அவரை எதிர்க்கிறோம், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கிறோம் மற்றும் பிசாசுகளின் சுபாவத்தில் வாழ்கிறோம். கடந்த காலத்தில், சாத்தானின் அத்தகைய தத்துவங்கள் மற்றும் விதிகளின்படி நான் வாழ்ந்து, பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்களைப் பாதுகாத்தேன், மேலும் அவளது தவறுகளில் எனக்கும் பங்குள்ளது. ஆனால் தேவன் எனது கடந்தகால மீறுதல்களை எனக்கு எதிராக வைத்திருக்காமல், மனந்திரும்புவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கினார், இதற்காக நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனவே, நான் தேவனிடம் அமைதியாக ஜெபித்து, ஒரு சத்தியம் செய்தேன்: தேவனே, நான் இனியும் எனது சொந்த உணர்ச்சிகளின்படி வாழ விரும்பவில்லை. சத்தியத்தின் கோட்பாடுகளை நிலைநிறுத்தவும், பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்களை உடனடியாகத் திருச்சபையிலிருந்து வெளியேற்றவும், உமது வார்த்தைகளின்படி, நீர் நேசிப்பதை மட்டும் நேசிப்பதற்கும், நீர் வெறுப்பதை வெறுப்பதற்கும் நான் விரும்புகிறேன்.

அடுத்த நாள், உடன் ஊழியர்களின் கூட்டத்தில், ஹான் பிங் தன்னைத் தானே இன்னும் புரிந்துகொள்ளவில்லை அல்லது எந்தவொரு மனந்திரும்புதலையும் வெளிப்படுத்தவில்லை என்றும், அவள் இன்னும் ஆத்திரமூட்டல்கள், கருத்து வேறுபாடுகளைத் தூண்டும் செயல்களைச் செய்கிறாள், தனிக்குழுக்களை உருவாக்க முயற்சிக்கிறாள் என்றும் உடன் ஊழியம் செய்பவர்களிடமிருந்து நான் கேட்டறிந்தேன். நான் இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக என்னை நானே குறை கூறிக்கொண்டேன். எனது உணர்ச்சிகளின்படி செயல்பட்டதற்காகவும், அவளை சரியான நேரத்தில் வெளியேற்றாமல், திருச்சபை வாழ்க்கையில் இடையூறு செய்ய அவளை அனுமதித்ததற்காகவும் என்னை நானே வெறுத்தேன். பின்னர், அடுத்த கூட்டத்தின்போது, ஹான் பிங்-இன் பொல்லாப்பு மிக்க நடத்தைகள் ஒவ்வொன்றையும் பகுப்பாய்வு செய்து பகுத்தறிவதற்காகத் தேவனின் வார்த்தைகளை நான் கவனமாகப் பயன்படுத்தத் தொடங்கினேன், மேலும், ஐக்கியத்தின் மூலம், அவளால் ஏமாற்றப்பட்ட சகோதர சகோதரிகளும் பகுத்தறிந்து அவளை நிராகரிக்கத் தொடங்கினர். எனது மனைவி, உண்மையைப் புரிந்துகொண்ட பின்னர், ஹான் பிங்-இன் சுபாவம் மற்றும் சாராம்சம் குறித்த பகுத்தறிவைப் பெற்று, அதன் பின்னர் அவள் அநியாயமாக நடத்தப்பட்டாள் என்று வாக்குவாதம் செய்யவில்லை. திருச்சபையிலிருந்து ஹான் பிங் வெளியேற்றப்பட்ட பின்னர், பொல்லாத செயல்களைச் செய்பவர்களால் அதற்குப் பிறகு எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை, அதனால் சகோதர சகோதரிகளால் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் கடமைகளை மீண்டும் இயல்பாகச் செய்ய முடிந்தது. தேவனை அவரின் நீதிக்காக நாங்கள் அனைவரும் போற்றினோம்! இந்தச் சம்பவமானது, தேவனின் சபையில், அவரது வார்த்தைகளும், சத்தியமும் தான் வல்லமை கொண்டவை என்றும், சத்தியத்தின் கோட்பாடுகளின்படி தான் அனைத்தும் கையாளப்படும் என்றும், அவிசுவாசிகள், பொல்லாப்பான செயல்களைச் செய்பவர்கள் மற்றும் அந்திக்கிறிஸ்துகளால் தேவனின் சபையில் தங்களை நிலைநிறுத்த முடியாது என்றும் என்னைக் காண வைத்தது. சாத்தானின் தத்துவங்கள் மற்றும் விதிகளின்படி வாழ்வது வேதனையைத் தான் கொண்டுவரும் என்று நான் தனிப்பட்ட முறையிலும் அனுபவித்தேன். அது நமக்கோ அல்லது வேறு யாருக்கோ பலனைக் கொண்டுவருவதில்லை. தேவனின் வார்த்தைகளின்படி வாழ்வதன் மூலம் மட்டும் தான் நாம் பாதுகாப்பாகவும் சமாதானமாகவும் உணர முடியும். இன்று நான் சாத்தானின் தத்துவங்கள் மற்றும் விதிகளின்படி வாழ்வதில்லை, மேலும், உணர்ச்சிகளின் கட்டுப்பாடுகளை நான் உடைத்து என்னால் கொஞ்சம் சத்தியத்தைக் கடைபிடிக்க முடிந்தது, சிறிது நீதியுடன் வாழ முடிந்தது—இவை அனைத்திற்காகவும் தேவனின் இரட்சிப்புக்காகவும் நன்றி, மேலும் இவை முழுவதும் தேவனின் வார்த்தைகளில் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை மூலம் அடைந்த ஒரு விளைவாகும். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நீங்கள் வாதிடுவதற்குப் பின்னால் என்ன மனநிலை இருக்கிறது?

தேவன விசுவாசிச்சு பல வருஷங்கள் கழிச்சு, சத்தியத்த ஏத்துக்குறவங்கள தேவன் விரும்புறாருன்னு நான் கொள்க அளவுல தெரிஞ்சிட்டேன். ஜனங்க சத்தியத்த...

மனம்திறந்து பேசப் பயப்படுவதற்குப் பின்னால் இருப்பது என்ன

2020 ஆம் வருஷம் மார்ச் மாதம் நான் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டு, சீக்கிரமா ஒரு கடமயச் செஞ்சேன். கொஞ்ச...

நான் கிட்டத்தட்ட ஒரு அந்திக்கிறிஸ்துவின் பக்கமாக நின்றேன்

2021 ஆவது வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டேன். மூணு மாசங்களுக்கு அப்புறமா, நானும்...

Leave a Reply