எனது தெரிந்தெடுப்பு

ஜூலை 3, 2021

மார்ச் 2012 இல், என் அம்மா கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் சுவிசேஷத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். நான் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கத் தொடங்கினேன் மற்றவர்களுடன் அடிக்கடி கூடிவந்து தேவனுடைய வார்த்தைகளை நான் ஐக்கியப்பட்டேன். ஒரு நாள் என் அனுதின தியானத்தில் நான் படித்த சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் பத்தியை நினைவில் கொள்கிறேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நமது முழுச் சரீரமும் தேவனிடமிருந்து வந்துள்ளதாலும் மற்றும் அது தேவனுடைய ஆளுகையின் காரணமாகவே ஜீவிப்பதாலும், மனித இனத்தின் அங்கத்தினர்களாகிய, பக்தியுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக நமது மனதையும் சரீரத்தையும் ஒப்புக்கொடுப்பது நமது பொறுப்பும் கடமையுமாகும். நமது மனதும் சரீரமும் தேவனுடைய கட்டளைக்காகவும், மனுக்குலத்தின் நீதியான காரணத்திற்காகவும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்றால், தேவனுடைய கட்டளைக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நமது ஆத்துமாக்கள் தகுதியற்றவையாகவும், சகலத்தையும் நமக்குத் தந்தருளிய தேவனுக்கு மிகவும் தகுதியற்றவையாகவும் இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்”). தேவன் மனிதகுலத்தை சிருஷ்டித்தார் என்றும் அவரிலிருந்து சகலமும் வந்தது என்றம் தேவனின் வார்த்தைகளிலிருந்து நான் கண்டேன். நான் அவருடைய அன்பைத் திருப்பிச் செலுத்த வேண்டும், மேலும் ஒரு சிருஷ்டிக்கான கடமையைச் செய்ய வேண்டும். எனவே, எனக்குத் தெரிந்தவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.

2012 டிசம்பரில் ஒரு நாள், நான் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக சட்டவிரோதமாக காவல்துறையினரால் தடுக்கப்பட்டு, “சமூக ஒழுங்கை சீர்குலைத்ததற்காக” 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டேன். தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட ஏழாம் நாளில் என்னைப் பார்க்க என் பெற்றோரும் கணவரும் வந்தார்கள். நான் பார்வை அறைக்குள் நுழைந்தபோது, என் அம்மாவும் அப்பாவும் அங்கே காத்திருப்பதைக் கண்டேன், என் கணவர் எங்கள் 1-வயது மகனைப் பிடித்துக் கொண்டிருந்தார். அவர்கள் அனைவரையும் அங்கே பார்த்த என் கண்களில் கண்ணீர் வழிந்தது. நான் என் பெற்றோரை அமைதியாக வரவேற்றேன், என் கணவரிடம் விரைந்து சென்று குழந்தையை அவரிடமிருந்து எடுத்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக ஒன்றாக இருந்தோம், பிறகு எவ்வித காரணமுமில்லாமல் நான் விசுவாசம் மற்றும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியால் (சி.சி.பி) சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டேன். இப்போது நான் எனது குடும்பத்தை ஒரு சிறையில் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவர் சொன்னார், “உன் கைது குறித்து நான் கண்டறிந்த பிறகு என்ன நடந்தது என்பதை நான் எனது இராணுவக்குழுத் தலைவரிடம் சொன்னேன், அவங்க நீ உன் விசுவாசத்தை கைவிட வேண்டும் என்று சொல்றாங்க. நீ ஒரு கல்லூரி பட்டதாரி, உனக்கு படிப்பு இருக்கிறது. நீ தொடர்ந்து தேவனை நம்பினால் உன் எதிர்காலம் பாழாகிவிடும்! நீ விசுவாசத்த விட்டுவிடாவிட்டால், என்னை கட்சியிலிருந்தும் இராணுவத்திலிருந்தும் வெளியேற்றி விடுவதாகவும் அவங்க சொன்னாங்க. அடுத்த ஆண்டு எனது வேலை மாற்ற போனஸைக் கூட இழப்பேன்! அதையெல்லாம் என்னால் புறக்கணிக்க முடியும், ஆனால் அதற்கு நீ உன் மகன் மற்றும் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். நீ மீண்டும் கைது செய்யப்பட்டால் அது இப்படி இருக்காது. உனக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும், பின்னர் நம்ம மகனுக்கு என்ன நடக்கும்? அவன் ஒருபோதும் பல்கலைக்கழகத்தில் சேரமாட்டான், அரசு ஊழியனாக மாட்டான், அல்லது இராணுவத்திலும் சேர மாட்டான். சமுதாயத்தில் அவன் தனக்கென்று ஒரு இடத்தை எப்படிக் கண்டுபிடிப்பான்? அவன் வெட்கத்துடன் வாழ வேண்டுமா?” அவர் சொல்வதைக் கேட்டதும் எனக்கு இன்னும் வருத்தம் அதிகமானது. நான் என் மகனைப் பிடித்துக்கொண்டபோது என் இதயம் வலித்தது, “நான் எதிர்காலத்தில் சிறையிலேயே என் நாட்களை கழிக்க வேண்டியிருந்தால், என் மகன் இவ்வளவு இளம் வயதில் அம்மா இல்லாமல் ஆரோக்கியமாக வளர முடியுமா? அவன் ஏளனமாக பார்க்கப்பட்டு மற்றும் பாகுபாடு காட்டப்படுவானா? எனது கணவர் கட்சியிலிருந்தும் இராணுவத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டால், அவருடைய எதிர்காலம் ஒன்றுமில்லாமற்போகுமா.” இனி இதை குறித்து நினைப்பதை என்னால் தாங்க முடியவில்லை. நான் ஒரு வார்த்தையைக் கூட சொல்லாமல் மௌனமாக இருந்தேன். நான் எதுவும் சொல்லாததைப் பார்த்து, என் கணவர் கோபமாக சொன்னார், “எங்க தலைவர் உன் விசுவாசத்தை கைவிடுவதாக நீ உறுதியளிக்கவில்லை என்றால், நான் உன்னிடமிருந்து விவாகரத்து பெற வேண்டும் என்று சொன்னார். நீதான் தேர்வு செய்யணும்!” நான் இன்னும் ஒரு வார்த்தை கூட சொல்லாதபோது, அவர் எங்க மகனைத் திரும்ப அழைத்துக் கொண்டு வெளியேறினார். ஒரு கத்தி என் இதயத்தின் வழியாகப் பாய்ச்சப்பட்டதைப் போல உணர்ந்தேன், இனியும் என்னால் என் கண்ணீரைத் தாங்க முடியவில்லை. எனது சிறை அறைக்குத் திரும்பும் வழியில், நான் குழப்பமடைந்தேன். எனது கைது குறித்து எனது கணவர் ஏன் தனது தலைவரிடம் இப்போதே சொல்லியிருக்க வேண்டும்? அது எனக்கோ அல்லது அவருக்கோ எந்த வகையிலும் உதவாது என்று அவருக்குத் தெரியும். அவர் ஏன் எல்லாவற்றையும் இவ்வளவு சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்? நான் கொஞ்சம் யோசித்தேன், அவர் தனது சொந்த ஆதாரங்களைமறைக்க வேண்டும் என்று உணர்ந்தேன். இது எனக்கு ஏற்பட்டபோது, நான் அதை ஏற்க விரும்பவில்லை. நான் உண்மையில் கஷ்டப்பட்டேன். எனக்கு எதுவும் செய்யமுடியல ஆனா நினச்சேன் அதாவது தேவன் மீதான விசுவாசம் சரியானது மற்றும் இயற்கையானது, அதில் எந்த குற்றமும் இல்லை. விசுவாசிகள் ஒன்று சேரும்போது, நாம் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, நம் கடமையைச் செய்கிறோம், சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், சத்தியத்தைப் பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி, தேசிய அரசியலமைப்பும் நம்பிக்கை சுதந்திரத்தை தெளிவாக அனுமதிக்கவில்லையா? பிறகு ஏன் கம்யூனிஸ்ட் கட்சி எங்களை இவ்வளவு ஒடுக்குகிறது, என்னை விவாகரத்து செய்யும்படி என் கணவரை நிர்பந்திக்கிறது? என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் மீண்டும் என் சிறையறைக்கு வந்ததும், சபையிலுள்ள ஒரு சகோதரியுடன் எனது குழப்பத்தைப் பகிர்ந்து கொண்டேன். சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் ஓரிரு பத்திகளை அவர் ஞாபகத்திலிருந்து எனக்காக அமைதியாக சொன்னார். “அது அப்படிப்பட்டதொரு பிசாசுகளின் ராஜா! அதன் இருப்பை எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும்? அது தேவனுடைய கிரியையை குழப்பமடையச் செய்து, அனைத்தையும் ஒரு முழுமையான குழப்பத்தில்[1]விட்டு, கசப்பான முடிவுக்காக தேவனை எதிர்க்க விரும்புவது போல, மீன் இறக்கும் வரை அல்லது வலை கிழியும் வரை, வேண்டுமென்றே தேவனுக்கு எதிராக தன்னை அமைத்துக் கொள்ளும் வரை மற்றும் எப்போதும் நெருக்கமாக அழுத்தம் கொடுக்கும் வரை அது ஓயாது. அதன் அருவருப்பான முகம் நீண்ட காலமாக முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டு, அது இப்போது காயப்பட்டுள்ளது மற்றும் நொறுக்கப்பட்டுள்ளது[2]மற்றும் ஒரு வருத்தமான நிலையில் உள்ளது, ஆனாலும் தேவனை ஒரே வாயில் விழுங்குவதன் மூலம் மட்டுமே தனது இருதயத்திலுள்ள வெறுப்பைத் தணிக்க முடியும் என்பது போல அது தேவனை வெறுப்பதில் மனந்திரும்பாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (7)”). “மதச் சுதந்திரம்? குடிமக்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள்? இவையெல்லாம் பாவத்தை மறைப்பதற்கான தந்திரங்கள்! … தேவனுடைய கிரியைக்கு இப்படிப்பட்டதொரு அசாத்தியமான தடையை ஏன் வைக்க வேண்டும்? தேவனுடைய ஜனங்களை வஞ்சிக்க ஏன் பல்வேறு தந்திரங்களை பயன்படுத்த வேண்டும்? உண்மையான சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள் எங்கே உள்ளன? நேர்மை எங்கே? ஆறுதல் எங்கே? அன்பு எங்கே? தேவனுடைய ஜனங்களை ஏமாற்ற ஏன் வஞ்சக திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும்? தேவனுடைய வருகையை ஒடுக்குவதற்கு ஏன் சக்தியைப் பயன்படுத்த வேண்டும்? தேவனை ஏன் தாம் சிருஷ்டித்த பூமியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதை அனுமதிக்கக்கூடாது? தேவனுக்கு தலை சாய்க்க இடமில்லாத வரை ஏன் அவரை வேட்டையாட வேண்டும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (8)”). பிறகு அவர் இந்த ஐக்கியத்தைப் பகிர்ந்து கொண்டார்: “கடைசி நாட்களில், தேவன் மாம்சமாகி, பேசவும் கிரியை செய்யவும் பூமிக்கு வந்துள்ளார். மனிதகுலத்தை சுத்திகரித்து இரட்சிக்கும் சத்தியங்களை அவர் வெளிப்படுத்துகிறார், இருதயமும் ஆவியும் உள்ளவர்கள் தேவனின் சத்தத்தைக் கேட்டு சர்வவல்லமையுள்ள தேவனிடத்திற்கு திரும்புகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாத்திகக் கட்சி. இது தேவனையும் சத்தியத்தையும் தீவிரமாக வெறுக்கிறது, சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளிலிருந்து எல்லோரும் சத்தியத்தைக் கற்றுக்கொள்வார்கள் என்றும், பின்னர் அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றி சாட்சி கூறுவார்கள் என்றும், அதை கைவிட்டு நிராகரிப்பார்கள் என்றும் பயப்படுகிறது. பின்னர் யாரும் அதை ஆதரிக்க மாட்டார்கள், சீன மக்களை எப்போதும் கூண்டில் வைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்கிற அதன் முரட்டு லட்சியம் அழிக்கப்படும்.” “அதனால்தான் இது சர்வவல்லமையுள்ள தேவனை அவதூறு செய்வதற்கும் கண்டனம் செய்வதற்கும் அனைத்து வகையான வதந்திகளையும் பொய்களையும் ஜோடிக்கிறது, மேலும் இது முழு தேசத்தின் சக்தியையும் கிறிஸ்துவை வேட்டையாடுவதற்கும் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்கும் பயன்படுத்துகிறது.” “அதன் சொந்த நாத்திக சர்வாதிகாரத்தை பாதுகாக்க பூமியில் தேவனுடைய கிரியையை முற்றிலுமாக அழிக்க விரும்புகிறது. உலக மக்களை முட்டாளாக்குவதற்கான ஒரு தந்திரோபாயமாக மத நம்பிக்கைகள் மீதான கொடிய துன்புறுத்தல்களை மறைக்க நம்பிக்கை சுதந்திரத்தை அனுமதிப்பதாக சி.சி.பி கூறுகிறது என்றும் கூறினார். உண்மையான நம்பிக்கை சுதந்திரம் இல்லை, சீனாவில் மனித உரிமைகள் இல்லை. சீனாவில் நம்பிக்கை வைத்திருப்பது என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் சாத்தானிய ஆட்சியிலிருந்து துன்புறுத்தலை எதிர்கொள்வதாகும். அது உண்மைதான்.” அவரோட ஐக்கியத்திற்குப் பிறகு, தேவனையும் சத்தியத்தையும் வெறுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தீய சுபாவத்தை நான் இன்னும் தெளிவாகக் காண முடிந்தது, அது எவ்வளவு நம்பமுடியாத தீமை என்பதையும் உணர்ந்தேன். நான் சிறு வயதிலிருந்தே அதன் நாத்திகக் கல்வியால் ஆழ்ந்த விஷமடைந்தேன். கட்சியை ஜனங்களின் “பெரிய இரட்சகர்” என்று நான் எப்போதும் பார்த்தேன், நான் அதை மிகவும் புகழ்ந்தேன். எந்த மறுப்பும் இல்லாமல் அது சொன்னதை நான் நம்பினேன், அப்படியே செய்தேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போது என்னால் பார்க்க முடிந்தது! நான் என் கணவருடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டபோது அவர் சொன்ன ஒன்றைப் பற்றியும் நினைத்தேன். “சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை அழிக்கப்பட வேண்டும் என்று மத்திய குழு உத்தரவிட்டுள்ளது, மேலும் எங்கள் குழுவில் போரின் தயார்நிலை மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கிற எவரும் எதிரியாகவே பார்க்கப்படுகிறார். எங்கள் கட்சி வகுப்புகளில் எங்கள் வாராந்திர அரசியல் படிப்பினைகள் இப்போது சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைப் பற்றியது ஆகும். உங்க விசுவாசம் ஒரு நல்ல விஷயம் என்று எனக்குத் தெரிந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது, பலவீனமானவர்கள் பலமானவர்களை தோற்கடிக்க முடியாது. அதைக் கடைப்பிடிப்பதைத் தவிர நீங்கள் வேற என்ன செய்ய முடியும்?” அவர் சொன்ன இந்த விஷயங்களைப் பற்றி யோசிப்பது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது! கம்யூனிஸ்ட் கட்சி பரலோகத்திற்கு எதிராக செல்கிறது. அதன் அனைத்து சக்திகளையும் தேவனுக்கு எதிராக திரட்டி வைக்க விரும்புகிறது, விசுவாசிகளை தேசிய குற்றவாளிகளைப் போல நடத்துவதும், அவர்களைக் கண்டனம் செய்வதும், ஒடுக்குவதும் மட்டுமல்லாமல், மக்களை அச்சுறுத்துவதும், மக்களை அதன் பக்கத்தில் நிற்கத் தூண்டுவதும் ஆகும். என் கணவர் கூட மிரட்டப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டார். அவருக்கு தவறிலிருந்து சரியானது எதுவென்று தெரியவில்லை, ஆகவே என் நம்பிக்கையை ஒடுக்கினார். கம்யூனிஸ்ட் கட்சி யாரும் தேவனைப் பின்பற்றி சரியான பாதையில் செல்ல விரும்பவில்லை, மாறாக அது அவர்களை நம்பி அதைப் பின்பற்ற வேண்டும் என்றே விரும்பினது. அது துன்மார்க்கமானது, வெறுக்கத்தக்கது, மற்றும் வெட்ககேடானது! அந்த கம்யூனிஸ்ட் பேய்களை நான் எனது இருதயத்திலிருந்து வெறுத்தேன், சபித்தேன்! தேவனைக் காட்டிக் கொடுத்து மறுதலிப்பதற்காக, என் மகன் மற்றும் என் கணவரின் எதிர்காலத்தை முன்வைத்து அவர்கள் என்னை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்களின் தந்திரங்களுக்கு என்னால் அடிபணிய முடியாது என்று எனக்குத் தெரியும். என் கணவர் எனக்கு எப்படி அழுத்தம் கொடுத்தாலும், சிறைக்குச் செல்ல வேண்டி வந்தாலும், நான் தேவனைப் பின்பற்றுவேன்!

இரவில் நான் படுக்கையில் படுத்துக்கொண்டு என் மகனுடன் இருந்த எல்லா மகிழ்ச்சியான நேரங்களையும் நினைத்து கொண்டிருந்தேன். அவன் இன்னும் சிறியவனாக இருந்தான், அவனுக்கு முன்னால் ஒரு நீண்ட பாதை இருந்தது. எனது விசுவாசம் அவனுடைய எதிர்காலத்தை பாதிக்குமா என்று யோசித்தேன். இந்த சிந்தனையால் நான் பலவீனமடைய ஆரம்பித்தேன், எனவே நான் மௌனமாக தேவனிடம் ஜெபம் செய்தேன், என் இருதயத்தை கவனிக்கும்படி அவரிடம் கேட்டேன். என் ஜெபத்திற்குப் பிறகு தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க நினைத்தேன். “பிரபஞ்சத்தில் நிகழும் எல்லாவற்றிலும், இறுதிச் சொல் என என்னிடம் எதுவும் இல்லை. என் கையில் இல்லாதது என்று ஏதேனும் இருக்கிறதா? நான் என்ன சொன்னாலும் அது நடத்திக்காட்டப்படுகிறது, மனுஷரிடையே யாரால் என் மனதை மாற்ற முடியும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 1”). நான் நினைத்தேன், “அது சரி. தேவன் சகலத்தையும் ஆளுகிறார், என் மகனின் எதிர்காலமும் அவருடைய கரங்களில் உள்ளது. அவர் ஒருவருக்கே இறுதிக் கருத்து உள்ளது, எந்த மனிதனுக்கும் இல்லை.” “கவலைப்படுவது என்ன நல்லதைக் கொண்டுவரும்?” ஆகவே, என் குழந்தையை தேவனிடம் ஒப்படைத்து ஒரு ஜெபத்தைச் சொன்னேன். அதற்குப் பிறகு நான் மிகவும் நன்றாக உணர்ந்தேன், பிறகு நான் கவலைப்படவில்லை. எனக்கு விசுவாசமும் பெலனும் கொடுத்த தேவனுக்கு நன்றி, இப்படியாக நான் எனது 14 நாட்கள் காவலில் கடந்து சென்றேன். நான் விடுவிக்கப்பட்டபோது, என் அப்பா என்னை வீட்டிற்கு கொண்டுச் சென்றார், என் கணவர் பின்னால் அமர்ந்தார். “தலைவர் இந்த நேரத்தில் முழுக்க முழுக்க சித்தாந்த வேலைகளைச் செய்து வருகிறார்.” என்று என் கணவர் என்னிடம் சொன்னார், அழுவதிலிருந்து கண்கள் சிவந்து போனது, “மேலும், நான் உன்னைப் பற்றி புகாரளிக்க வேண்டும் என்றார். நீ தொடர்ந்து தேவனை நம்பினால், நான் உன்னை விவாகரத்து செய்யாத பட்சத்தில், நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன் என்று அவர்கள் சொன்னார்கள். இது என்ன பைத்தியம் பிடிக்கச் செய்கிறது! நான் உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் இதை விட்டுவிடு. நீ பிடிபட்டால் நீ சிறைக்குச் செல்வாய், நம் குடும்பம் சிதைந்து போகும்!” அவர் பேசும்போது அவர் அழுவதை நான் கண்டேன், எனக்கு மனவேதனை அதிகரித்தது. என்னை பலப்படுத்தி உறுதியாக வைத்திருக்கும்படி தேவனிடத்தில் கேட்டு, என் இருதயத்தில் அவரிடம் விரைவாக ஜெபம் செய்தேன். தேவனின் வார்த்தைகளின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு அடியும் வெளிப் பார்வைக்கு ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால், மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால், ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் யுத்தம் இருக்கும்; ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). இது சாத்தானின் தந்திரங்களில் ஒன்று என்பதை நான் உணர்ந்தேன். தேவனை மறுதலித்து காட்டிக்கொடுப்பதில் என்னைத் தள்ளிவிட என் கணவரின் விவாகரத்து அச்சுறுத்தலைப் பயன்படுத்த சாத்தான் விரும்பினான். என்னால் அதன் வலையில் விழ முடியவில்லை! எனவே நான் இதை என் கணவரிடம் சொன்னேன்: “நான் இந்த குடும்பத்தை சீதைக்க விரும்பவில்லை. ஒரு விசுவாசியானதிலிருந்து நான் மாறிவிட்டதை நீங்க கவனித்திருக்கீங்க. நாம இனி சண்டையிட மாட்டோம், நம் குடும்பம் சிறப்பாக நன்றாகி வருகிறது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளையும் சகோதர சகோதரிகளின் சாட்சியங்களையும் நீங்க கேள்விப்பட்டிருக்கீங்க. விசுவாசம் வைத்திருப்பது நல்லது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது சி.சி.பி என்னைக் கண்டித்து கைது செய்ய வேண்டும் என விரும்புகிறது, உங்கள நீக்கிவிட வேண்டும், உங்கள இராணுவத்திலிருந்து வெளியேற்ற வேண்டும், என்ன நீங்க விவாகரத்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. உண்மையில் யார் இந்த குடும்பத்தை பிரிக்க முயற்சி செய்கிறது? சி.சி.பி. ஐ வெறுப்பதற்கு பதிலாக, அதனோடு சேர்ந்துகொண்டு, என் விசுவாசத்தை துன்புறுத்துவதில் நீங்க ஆர்வம் காட்டுறீங்க. நீங்க சரியான மற்றும் தவறான அனைத்தையும் கலக்கவில்லையா? கம்யூனிஸ்ட் கட்சி எந்த வகையான கட்சி என்பது உங்களுக்குத் தெரியும். இது தேவனையும் சத்தியத்தையும் வெறுக்கிறது, அது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட தேவனின் சத்துரு. இது பல கிறிஸ்தவர்களை கைது செய்து துன்புறுத்துகிறது, இது மாபெரும் தீமையை செய்துள்ளது. இது உண்மையில் தேவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியுமா? நீண்ட காலத்திற்கு முன்பே தேவன் கூறினார், ‘மாம்சமாதல் தோன்றும் இடமெல்லாம் சத்துரு அடியோடு அழிக்கப்படும் ஒரு இடமாக இருக்கிறது. நிர்மூலமாக்கப்படுவதில் சீனாவே முதலாவதாக இருக்கும்; அது தேவனுடைய கரத்தால் பாழாக்கப்படும். தேவன் நிச்சயமாக அதற்கு இரக்கம் காட்டமாட்டார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மறைபொருட்களைப் பற்றிய விளக்கங்கள், அத்தியாயம் 10”). எல்லா நேரத்திலும் பேரழிவுகள் வளர்ந்து வருகின்றன. பெரும் பேரழிவுகள் வரும்போது, கம்யூனிஸ்ட் கட்சி தான் தேவனால் முதலில் அழிக்கப்படும், அது நிகழும்போது, அதைப் பின்பற்றி தேவனை எதிர்த்த அனைவருமே அழிந்து போவார்கள். அவர்களுக்கு ஒரு சமாதானத்தின் நாளை தெரியாது. என் நம்பிக்கையை மீண்டும் கைவிடச் சொல்ல வேண்டாம். நான் ஒருபோதும் தேவனை நம்புவதை நிறுத்த மாட்டேன்!” நான் என் நம்பிக்கைய விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று அவர் கண்டபோது, அவர் என்னை ஆத்திரத்தில் முகத்தில் அறைந்தார். கம்யூனிஸ்ட் கட்சிதான் அவர் என்னை அப்படி நடத்த தூண்டியது என்பதை என்னால் காண முடிந்தது. இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது, கட்சியை என் இதயத்தில் ஆழமாக வெறுத்தேன். நான் நினைச்சேன், “நீங்க என்ன எவ்வளவு அதிகமாக ஒடுக்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக என் விசுவாசமமும் வளர்கிறது!”

வீட்டிற்கு திரும்ப, என் கணவர் விடமாட்டார். “நீ செய்ய வேண்டியதெல்லாம், உன்னோட விசுவாசத்தை வீட்டிலேயே கடைப்பிடி. நான் உன்ன பற்றி என் தலைவரிடம் புகாரளிக்க மாட்டேன், சரியா?” நான் நினைச்சேன், “நான் தேவனின் கிருபையையும் ஆசீர்வாதங்களையும், சத்தியத்தின் வாழ்வாதாரத்தையும் அனுபவித்திருக்கிறேன். சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளாமலோ அல்லது என் கடமையைச் செய்யாமலோ இருப்பது, விசுவாசமா? மேலும், தேவனின் வார்த்தைகளை கேட்காமலோ அல்லது ஐக்கியம் கொள்ளாமலோ வீட்டில் தங்குவதினால், நான் என் வாழ்க்கையில் மெதுவாகவே வளருவேன்.” என் கணவரின் பேச்சை என்னால் கேட்க முடியாது என்று எனக்குத் தெரியும். பின்னர் அவர் என்னிடம் இனிமையாக பேச முயற்சிக்கத் தொடங்கினார்: “நான் உன்னை நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை, நான் உனக்கு அநீதி இழைத்தேன். நான் சிறிது காலம் வேலைக்கு போகாமல் இருக்கேன். நான் உன்னுடனும் நம் மகனுடனும் வீட்டில் தங்குவேன். நான் உன்னுடன் எங்கு வேண்டுமானாலும் சென்று உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்குவேன். நீ மகிழ்ச்சியாக இருக்கணும் அதுதான் என் விருப்பம்!” அவர் என்னிடம் இப்படி மிகவும் இனிமையாக பேசுவதைக் கேட்டபோது நான் சற்று தடுமாறினேன், ஆனால் அது சாத்தானின் தந்திரங்களில் இன்னொன்று என்பதை நான் விரைவாக உணர்ந்தேன். நான் மௌனமா ஒரு ஜெபத்தை சொன்னேன், அதாவது என்ன நடந்தாலும், நான் என் விசுவாசத்தைக் கைக்கொண்டு தொடர்ந்து என் கடமையை செய்வேன். ஆனால் அதற்குப் பிறகு, நான் எங்கு சென்றாலும் என் கணவர் என்னைப் பின்தொடரத் தொடங்கினார். அவர் என்னைப் பற்றி புகாரளித்தால் மற்றவர்கள் ஆபத்தில் சிக்கிவிடுவார்கள் என்று நான் பயந்தேன், எனவே நான் சகோதர சகோதரிகளை சந்திக்கத் துணியவில்லை. நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு என் உயிருக்காக ஏங்கினேன். அப்போது நான் எப்படி கூடி வந்து சகோதர சகோதரிகளுடன் ஐக்கியங் கொள்ளலாம், எப்படி என் கடமையைச் செய்ய முடியும் என்று யோசித்தேன். ஆனா இப்போ, என்னால் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை, ஒவ்வொரு திருப்பத்திலும் தடைசெய்யப்பட்டேன். என்னால் என் விசுவாசத்தைக் கடைபிடிக்கவோ சாதாரணமாக வாழவோ முடியவில்லை. என் கணவர், அரசாங்கத்துக்கு பயந்து, என் நம்பிக்கையை கைவிட என்னை நிர்பந்தித்தார், அல்லது அவர் என்னை விவாகரத்து செய்துவிடுவதாக கூறினார். நான் எதிர்கொள்ளும் தெரிந்தெடுப்பு பற்றிய சிந்தனையால் நான் மிகவும் வேதனைப்பட்டேன். உண்மை என்னவென்றால், நாங்க பிரிந்து செல்ல வேண்டியதில்லை என் கணவர் என்னோட விசுவாசத்தில் என்னுடன் சேருவார் என்று நான் நம்பியிருந்தேன். அந்த நேரத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு வருடம் போல உணர்ந்தேன். கண்ணீருடன், நான் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக வந்தேன்: “ஓ தேவனே, இந்த தெரிந்தெடுப்பில் நான் மிகவும் புண்பட்டதாகவும் பலவீனமாகவும் உணர்கிறேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. தயவுசெய்து எனக்கு வழிகாட்டியருளும்!” அதன்பிறகு, இதை தேவனுடைய வார்த்தைகளில் படித்தேன்: “விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). “மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காத எவரும் பேய்த்தனம் கொண்டவர்கள், மற்றும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். … தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஓர் எதிரி; அதாவது மாம்சமாகிய தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும்—இந்த பிரவாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே இருந்தாலும் இல்லாவிட்டாலும்—ஓர் அந்திக்கிறிஸ்துதான். சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). இதை வாசித்தபிறகு, நான் கைது செய்யப்பட்டதிலிருந்து என் கணவர் எவ்வாறு செயல்பட்டார் என்று நான் மீண்டும் நினைச்சு பார்த்தேன். என் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க அவர் என்னை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார், அவர் என்னை கவர்ந்திழுக்க பாசத்தைப் பயன்படுத்தினார், அவர் என்னை விவாகரத்து செய்வேன் எனக்கூறி அழுத்தம் கொடுத்தார், மேலும் அவர் என்னை அடிக்கவும் செய்தார். இவை யாவும் நான் தேவனை மறுதலித்துக் காட்டிக்கொடுப்பதற்கு அல்லவா? “தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள்” என்று தேவன் விவரிக்கிறவரில் ஒருவர் அல்லவா? எனது கைது குறித்து அவர் அறிந்த பிறகு அவர் செய்த முதல் காரியம் அவரது குழுத் தலைவரிடம் சொன்னது. என்னைப் பொருட்படுத்தாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் அவ்வாறு செய்யவில்லையா? அவரது எதிர்காலம் என்னை விட அவரது இருதயத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. எல்லா நேரங்களிலும் அவர் என்னிடம் சொன்ன நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒரு நடிப்பாக இருந்தது! அவர் சி.சி.பியைத் தேர்ந்தெடுத்தார், நான் தேவனைத் தேர்ந்தெடுத்தேன். நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பாதைகளில் இருந்தோம். எங்களால் உண்மையான மகிழ்ச்சியைக் காண முடியவில்லை. இப்படி நான் சிந்தித்தது மூலம் எனது விசுவாசத்திற்கும் எனது குடும்பத்திற்கும் இடையில் ஒரு தேர்வை எதிர்கொள்ள வேண்டியது நிச்சயம் என்பதை உணர எனக்கு உதவியது. ஆனால் என் கணவருடனான எனது பல ஆண்டுகளை நான் திரும்பிப் பார்த்தபோது, மிகவும் வருத்தமாக இருந்தது. நான் மீண்டும் ஜெபத்தில் தேவனின் முன்பாக வந்து அவருடைய பாதுகாப்பிறகாக மன்றாடினேன். அதன்பிறகு நான் இதை தேவனின் வார்த்தைகளில் வாசித்தேன்: “நீ சத்தியத்திற்காக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக உன்னையே கொடுக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக அவமானத்தை தாங்கிக் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்தை அதிகமாக ஆதாயம் செய்ய நீங்கள் அதிக துன்பங்களுக்குள்ளாக செல்ல வேண்டும். இதையே நீ செய்ய வேண்டும். அமைதியான குடும்ப ஜீவியத்தின் பொருட்டு நீ யதார்த்தத்தைத் தூக்கி எறியக்கூடாது, மேலும் உன் வாழ்க்கையின் கண்ணியத்தையும் நேர்மையையும் சிற்றின்பத்திற்காக இழந்துவிடக்கூடாது. நீ அழகானவை மற்றும் நன்மையானவை அனைத்தையும் பின்தொடர வேண்டும், மேலும் வாழ்க்கையில் ஒரு அர்த்தமுள்ள பாதையை நீ பின்தொடர வேண்டும். நீ அத்தகைய இழிவான ஜீவனம் நடத்தினால் மற்றும் எந்த நோக்கங்களையும் பின்பற்றவில்லை என்றால், நீ உன் ஜீவனை வீணாக்குகிறாயல்லவா? அத்தகைய ஜீவனிலிருந்து நீ என்ன ஆதாயம் செய்ய முடியும்? நீ ஒரு சத்தியத்திற்காக மாம்சத்தின் அனைத்து இன்பங்களையும் கைவிட வேண்டும், மேலும் ஒரு சிறிய இன்பத்திற்காக எல்லா சத்தியங்களையும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. இது போன்றவர்களுக்கு நேர்மையோ அல்லது கண்ணியமோ இருப்பதில்லை. அவர்கள் இருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”). தேவனின் வார்த்தைகள் எனக்கு நடைமுறையில் ஒரு பாதையை அளித்தன, என் நம்பிக்கையை மீட்டெடுத்தன. நான் ஜெபிக்க தேவனுக்கு முன்பாக வந்தேன். “ஓ தேவனே! விவாகரத்து செய்யப்பட்டாலும், நான் உம்மைப் பின்பற்றுவேன்! தயவாய் என்னை பலமாக வைத்து, உமக்கு சாட்சியாக நிற்க எனக்கு விசுவாசத்தைத் தாரும்.”

ஒரு நாள் நான் என் கணவருக்கு சீட்டு கொடுத்தேன், பின்பு நான் சில சகோதர சகோதரிகளை சந்தித்தேன். நான் வீட்டிற்கு வந்ததும், என் கணவர் சில குடும்ப உறுப்பினர்களுடன் அங்கே நிற்பதைக் கண்டேன். அவரது கண்கள் சிவந்திருந்தன, அவர் மிகவும் வருத்தமாகக் காணப்பட்டார். எங்கள் உறவினர்களில் சிலர் சோகமாகவும், சோர்வாகவும் இருந்தாங்க, மற்றவங்க மிகவும் பைத்தியமாகத் தெரிந்தனர். இந்த முறை என் குடும்பத்தைப் பயன்படுத்தி சாத்தான் என்னை மீண்டும் முற்றுகையிடுகிறான் என்பதை நான் உணர்ந்தேன். நான் விரைவாக தேவனிடத்தில் ஒரு மௌன ஜெபத்தை சொன்னேன். அவருடைய வார்த்தைகளிலிருந்து இதை நான் நினைவு கூர்ந்தேன்: “‘ஜெயங்கொள்ளுகிறவர்கள்’ என்று தேவன் குறிப்பிடுகிறவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போதும், சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும்போதும், அதாவது அவர்கள் தங்களைத் தாங்களே அந்தகாரத்தின் வல்லமைகளுக்கு மத்தியில் இருப்பதாக காணும்போது, அவர்களால் சாட்சியாக நிற்கவும், தேவன் மீதான தங்கள் நம்பிக்கையையும் பக்தியையும் பராமரிக்கவும் முடிகிறது. தேவனுக்கு முன்பாக உன்னால் இன்னும் ஒரு சுத்த இருதயத்தைக் கொண்டிருக்கவும், என்னவானாலும் தேவன்மீதுள்ள உன் மெய்யான அன்பை உன்னால் பராமரிக்கவும் முடியுமானால், நீ தேவனுக்கு முன்பாக சாட்சியாக நிற்கிறாய், இதைத்தான் தேவன் ‘ஜெயங்கொள்ளுகிறவனாக’ இருப்பது என்று குறிப்பிடுகிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்”). தேவனின் வார்த்தைகள் எனக்கு விசுவாசத்தையும் பெலத்தையும் கொடுத்தன, நான் என் இதயத்தில் தீர்வைக் கண்டேன் அதாவது என் குடும்பம் எனக்கு என்ன செய்தாலும், நான் ஒருபோதும் தேவனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். நான் அவருக்கு சாட்சியாக நிற்பேன்!

என் அத்தை அவங்க முகத்தில் உக்கிரமான தோற்றத்துடன், என்னிடம் கேட்டார், “நீ ஒரு கூட்டத்திற்குச் சென்றாய், இல்லையா? உனக்கு இந்த குடும்பம் வேணும்னு விரும்புறீயா?” அப்போது என் மாமா என்னை நோக்கிக் கத்தினார், “தேவனா? தேவன் இல்லை! சீனா ஒரு நாத்திக நாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருக்கிறது. நீ நம்ப விரும்பினால், கட்சியை நம்பு!” பின்னர் அவர் தனது தொலைபேசியில் சில கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்களைக் கொண்டு வந்து, “இதோ! நீ நம்புகிற சர்வ வல்லமையுள்ள தேவன் இதுவா. இது ஒரு முக்கியமான தேசிய இலக்கு. விசுவாசிகள் தங்கள் முழு குடும்பத்தையும் அவர்களுடன் அழைத்துச் செல்கிறார்கள்! உனக்காக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் உன் குழந்தையைப் பற்றி யோசித்துப் பாரு!” பின்னர் மற்றொரு அத்தை, “நீங்க இருவரும் திருமணம் செய்து நீண்ட காலமாகவில்லை, காரியங்கள் உங்களுக்கு எளிதாக இல்லை. இதுபோன்ற ஏதாவது ஒரு விஷயத்திற்காக உங்க குடும்பத்த வீழ்த்த அனுமதிக்க முடியாது! நீ மட்டும் தேவனை நம்பவில்லை என்றால், உன் குடும்பம் இப்போ இந்த குழப்பத்தில் இருக்குமா?” எல்லோரும் அவருடன் ஒருமனதாய் உடன்பட ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவரும் அந்த விஷயங்களைச் சொல்வதைக் கேட்டு நான் மிகவும் கோபமடைந்தேன். நான் அவர்களிடம் நியாயமாகவும் கடுமையாகவும் சொன்னேன், “இந்த குடும்பத்தை தகர்க்க விரும்புகிறது யார்? சரியான பாதையில் செல்வதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசிகளைக் கண்டித்து கைது செய்கிறது என்னையும் சிறையில் அடைக்க விரும்புகிறது. இது உங்க அனைவரையும் அச்சுறுத்தியதுடன், என்னை விவாகரத்து செய்ய என் கணவரையும் வற்புறுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி தான் இதையெல்லாம் செய்துள்ளது!” “நீங்க சி.சி.பி-யை வெறுக்கவில்லை, மாறாக தேவனை மறுதலிக்கும்படி என்னை கட்டாயப்படுத்த எனக்கு எதிராக அதன் பக்கத்தில் நிற்கிறீங்க. அதுதான் எனக்கும் என் குடும்பத்துக்கும் சிறந்ததா?” நான் இதைச் சொன்ன பிறகு, மற்றொரு மாமா சொன்னார், “இது உண்மை, கட்சியை நம்ப முடியாது, ஆனால் அது இப்போ அதிகாரத்தில் இருக்கு. நீ தேவனை நம்பினால், அது உனக்கு எந்த கருணையும் காட்டாது. நீ நேரத்தை வீணடிப்பாய். நாம சாதாரண நபர்கள். கட்சிக்கு எதிராக நாம் எவ்வாறு நிற்க முடியும்? என் ஆலோசனையை எடுத்துக்கோ. உன் விசுவாசத்தை கைவிடு. மிக முக்கியமானது என்னான்னா உன் குடும்பத்தை ஒன்றாக வைத்திருப்பதுதான்!” நான் பிறகு அவர்களிடம் சொன்னேன், “பேரழிவுகள் இப்போது பெரிதாகி வருகின்றன. பெரிய பேரழிவுகள் வரும்போது, தேவனை எதிர்க்கும் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். தேவனிடத்தில் மனந்திரும்பி விசுவாசமுள்ளவர்கள் மட்டுமே அவருடைய பாதுகாப்பைப் பெறுவார்கள். உண்மையான விசுவாசிகளுக்கு மட்டுமே நல்ல எதிர்காலமும் விதியும் இருக்கும். விசுவாசம் இல்லாமல் என்ன வகையான எதிர்காலம் இருக்க முடியும்? நீங்கள் அனைவரும் என் அன்புக்குரியவர்கள். நீங்க தேவனால் இரட்சிக்கப்படுவீர்கள், பேரழிவுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியும் என்று நான் நம்புறேன், அதனால்தான் நான் உங்களுடன் சுவிசேஷத்தை மீண்டும் மீண்டும் பகிர்ந்து கொண்டேன். ஆனால் இது உண்மையான வழி என்று உங்களுக்குத் தெரிந்தாலும், கைது செய்யப்படுவீர்கள் என்ற பயத்தில் நீங்கள் நம்பத் துணியவில்லை. இப்போ நீங்க என் வழியில் நிற்கிறீங்க, தேவனை மறுதலிக்க என்னை கட்டாயப்படுத்துறீங்க. பேரழிவுகள் வரும்போது, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள் என்று நீங்க பயப்படவில்லையா?” நான் சொன்ன பிறகு, முதல் மாமாவின் முகம் கோபத்துடன் சிவந்து போனது, அவர் என்னை ஆவேசமாக மிரட்டினார்: “நீ உன் விசுவாசத்தைப் பின்பற்றினால் நான் உன்னை தண்டிப்பேன்! நான் உன்னைக் குறித்து போலீசில் புகாரளிப்பேன், நீ சிறையிலடைக்கப்படுவாய்!” இதைச் சொன்னவுடன் அவர் தனது தொலைபேசியை வெளியே எடுத்து டயல் செய்யத் தொடங்கினார். என் அத்தை விரைந்து வந்து அதை அவரிடமிருந்து தடுத்தாங்க. அதைச் செய்த என் மாமாவைப் பார்த்தது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. எப்படி ஒரு குடும்பம் இப்படியும் இருக்கமுடியும்? அது நிச்சயமா ஒரு பிசாசின் கிரியைதான்! நான் அவர்களிடம், “நீங்க எனக்கு பெரியவங்க, நான் உங்கள மதிக்கிறேன், ஆனால் என் விசுவாச பாதையைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தவரை, நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரையும் என்னிடம் சொல்ல அனுமதிக்கமாட்டேன்! நான் என் விசுவாசத்தை கைவிட்டு, தேவனை மறுதலிப்பேன் என்பதும், நீங்க விரும்புவது போல் சி.சி.பி. ஐப் பின்பற்றுவேன் என்பதும் நடக்காத செயல்" என்று கூறினேன். என் கணவர் என்னை மிகவும் கடினமாக தாக்கி அடித்தார், நான் நிலைகுலைந்து தரையில் விழுந்தேன். என் கண்ணாடிகள் பறந்து அறை முழுவதும் சிதறின. அவர் என்னைச் சுட்டிக்காட்டி, “உனக்கு தேவன் வேண்டுமா, அல்லது இந்த குடும்பம் வேண்டுமா? நீ உன் நம்பிகையில் தொடர்ந்தால் உடனே விவாகரத்து செய்வேன்!” என் கணவர் தனது எதிர்காலத்தை பாதுகாக்க என்னை விவாகரத்து செய்ய தயாராக இருப்பதை நான் கண்டேன். கம்யூனிஸ்ட் கட்சி மீது எனக்கு இன்னும் வெறுப்பு ஏற்பட்டது. நான் அமைதியாக தேவனிடம் ஜெபம் செய்தேன், “நான் நேசிப்பதை இழந்தாலும் தேவனை திருப்திப்படுத்துவேன்!” இரண்டு மாதங்களுக்குப் பிறகு, என் விவாகரத்து நாள் வந்தது. என் கணவர் என்னை அழைத்து, “படைத் தலைவர் விவாகரத்து நடவடிக்கைகளை கையாள நாளை எங்களுடன் சிவில் விவகார பணியகத்திற்கு செல்கிறார்” என்று சொன்னார். அவர் சொல்வதைக் கேட்டதும், சி.சி.பியால் எங்க நல்ல குடும்பம் எவ்வாறு சிதைந்தது என்பதைப் பற்றி சிந்திக்க வைத்தது. சி.சி.பி மிகவும் துன்மார்க்கமானது, மிகவும் இழிவானது! அடுத்த நாள், எங்க விவாகரத்து படைத் தலைவரின் கண்காணிப்பின் கீழ் இறுதி செய்யப்பட்டது. நானும் என் கணவரும் எங்க தனி வழிகளில் சென்றோம். நான் தேவனைப் பின்பற்றி, சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டேன், என் கடமையைச் செய்தேன். இது எனது தெரிந்தெடுப்பு, நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன்! தேவனுக்கு நன்றி!

அடிக்குறிப்புகள்:

1. “ஒரு முழுமையான குழப்பம்” என்பது பிசாசின் வன்முறையான நடத்தையானது எப்படிப் பார்ப்பதற்கு பொறுத்துக்கொள்ள முடியாதாக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

2. “காயப்பட்டது மற்றும் நொறுக்கப்பட்டது” என்பது பிசாசுகளின் ராஜாவின் அருவருப்பான முகத்தைக் குறிக்கிறது.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இன்று கத்தோலிக்க திருப்பலி: எனக்கும் பரலோக ராஜ்யத்திற்கும் இடையில் யார் நிற்கிறார்கள்?

நான் ஒரு கத்தோலிக்க திருச்சபைய சேர்ந்தவளாக இருந்தேன். நான் சிறு வயதில் ஒரு கத்தோலிக்க பள்ளிக்குச் சென்றேன், ஆலய காரியங்கள்ல நான் எப்போதும்...