பரலோக ராஜ்யத்திற்கான பாதையில் என் வழியில் குறுக்கே நிற்பது யார்?

ஜனவரி 7, 2023

2020 ஆம் வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் ஆன்லைன் கூடுகைக்கு ஒரு சகோதரி என்னையக் கூப்பிட்டாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிப்பதன் மூலமாகவும், தேடி, ஆராய்வதன் மூலமாகவும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைதான் தேவனோட சத்தம்ங்கறதையும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு என்பதயும் நான் உறுதியா உணர்ந்தேன். நான் ரொம்பவே நெகிழ்ந்துபோனேன், ரொம்ப உற்சாகமாக இருந்தேன். என் சகோதரர்களும் கூட கர்த்தரோட வருகைய எதிர்பார்த்துக் கொண்டிருந்தாங்க. இந்த நற்செய்தியை நான் அவங்களுக்கு சீக்கிரமா சொல்லணும்னு எனக்குத் தெரியும், அதன் மூலமா அவங்களும் கூட கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்க முடியும். அதனால, நான் என்னோட மூன்றாவது சகோதரனுக்கு சுவிசேஷத்த அறிவிச்சேன். கர்த்தருடைய வருகையப் பத்திய செய்தியை திருச்சபைத் தலைவராய் இருந்த எங்களோட மூத்த சகோதரிடத்துல அவர் சொன்னாரு. எதிர்பாராத விதமா, என்னோட மூத்த சகோதரர் கண்டுபிடிச்சதுக்கப்புறமா, அன்றைக்கு ராத்திரியே அவர் அவசரமா என்னோட வீட்டுக்கு வந்தாரு… “ஓசியா, கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பி வந்து, ஒரு புதிய கட்ட கிரியைய செஞ்சுக்கிட்டிருக்கிறாருன்னு சொன்னீங்களா? அது எப்படி சாத்தியமாகும்? கர்த்தராகிய இயேசு நம்மளோட பாவங்கள மன்னிச்சிருக்கிறாரு. அவர் திரும்பி வரும்போது, அவர் நம்மள நேரடியா பரலோகராஜ்யத்துக்குள்ள எடுத்துக்குவாரு. அவர் எப்படி புதிய கிரியைய செய்ய முடியும்?” “அண்ணா, என் மேல கோபப்படாதீங்க. கர்த்தராகிய இயேசு நம்மளோட பாவங்கள மன்னிக்கிறாரு என்றாலும் கூட, நாம இன்னும் பாவம் செய்யலாம், நம்மளோட பாவ சுபாவம் இன்னும் இருக்குது. தேவன் சொல்லுகிறார்: ‘நான் பரிசுத்தர், ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:45). அண்ணா, நாம பரிசுத்தமா இல்லேன்னா கர்த்தரைப் பார்க்க முடியாது, நாம பாவத்துல இருந்து சுத்திகரிக்கப்படலேன்னா, பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியாது. நம்மளோட பாவ சுபாவத்தை நீக்குவதுக்கான நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்யவும் பாவம்ங்ற பிரச்சனைய வேரிலேயே சரிசெய்யவும் தேவன் நமக்கு இன்னும் தேவைப்படுறாரு—” “கர்த்தராகிய இயேசு நம்மளோட எல்லாப் பாவங்களயும் சுமக்க சிலுவையில் அறையப்பட்டார். கர்த்தர் இனி ஒருபோதும் நம்மளப் பாவிகளாக நினைப்பதில்ல. நாம சுத்திகரிக்கப்படலன்னு நீங்க சொல்லுறீங்க, ஆனா, அது உங்களோட சொந்த கருத்து. வேதாகமம் அப்படிச் சொல்லல. வேதாகமம் என்ன சொல்லுதுன்னு உங்களுக்குத் தெரியாதா? ‘நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்’ (ரோமர் 10:10). கர்த்தரை விசுவாசிப்பதன் மூலம் நாம ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருக்கோம் இல்லையா? கர்த்தர் ஏன் இன்னும் புதிய கிரியைய செய்ய வேண்டி இருக்கு?” “அண்ணா, நீங்க சொன்னது பவுலோட வார்த்தைகள், கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் அல்ல. விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறவங்களால பரலோகராஜ்யத்துல பிரவேசிக்க முடியும்ன்னு கர்த்தராகிய இயேசு ஒருபோதும் சொல்லல. பரலோகராஜ்யத்துக்குள்ள யார் பிரவேசிக்க முடியும்ன்னு கர்த்தராகிய இயேசு ரொம்பவே தெளிவா சொல்லுறாரு. ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை(மத்தேயு 7:21). அண்ணா, பரலோகராஜ்யத்துல பிரவேசிப்பதுக்கு நாம தேவனோட சித்தத்த செஞ்சு, தேவனோட வார்த்தைகளின்படி நடக்கணும். இந்த நிலைய நாம அடையறோமா? நாம இன்னும் அடிக்கடி பாவம் செய்யுறோம், கர்த்தருடைய வார்த்தைகள நம்மால நிறைவேற்ற முடியறதில்ல. கர்த்தராகிய இயேசு நம்மளப் போலவே நம்மளோட பக்கத்து வீட்டாரையும் நேசிக்கும்படி கேட்குறாரு. நம்மால முடிகிறதா? நாம அவங்கள நேசிக்க முடியாதுங்கறது மட்டுமல்ல, நாம பொறாமைப்படலாம், அவங்கள வெறுக்கலாம், நாம அடிக்கடி பாவத்துல வாழுறோம். பரலோகராஜ்யத்துல பிரவேசிப்பதுக்கு நாம தகுதியில்லாதவங்களா இருக்கோம். இதனாலதான் பேசவும் நியாயத்தீர்ப்பு கிரியைய செய்யவும் தேவன் கடைசி நாட்கள்ல திரும்பி வர்றாரு. ஜனங்கள் தங்களோட பாவ சுபாவங்கள்ல இருந்து விடுபடவும், நம்மளோட பாவ பிரச்சனைய வேர்ல இருந்து சரிசெய்யவும், ஜனங்கள முழுமையா சுத்திகரிச்சு இரட்சிக்கவும் அவர் அத செய்யுறாரு. கர்த்தராகிய இயேசுவே தீர்க்கதரிசனமா சொல்லியிருக்காரு, ‘என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:48). அதோடு வேதாகமம் சொல்லுது, ‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17).” “போதும்! கர்த்தர் திரும்பி வரும்போது இன்னொரு கட்ட கிரியை இருப்பதா நீ சொல்லுற. அது கர்த்தராகிய இயேசுவின் மீட்புப் பணி அர்த்தமற்றதுன்னு சொல்றதா இல்லையா? அது வீணாய்ப் போய்விடாதா?” என்னோட அண்ணன் சொன்னதக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் கோபம் வந்துச்சு. அவர் தேவனோட கிரியையப் புரிஞ்சுக்கிட்டு தன்னோட கருத்துக்கள்ல இருந்து விடுபடும்படிக்கு நான் எப்படி ஐக்கியங்கொள்வது? சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் அப்பத்தான் நெனச்சுப் பார்த்தேன். “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). தேவனோட வார்த்தைகள் என்னோட இருதயத்த தெளிவாகவும் பிரகாசமாகவும் ஆக்குச்சு. நான் என்னோட அண்ணன்கிட்ட, “தேவன் நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்ய கடைசி நாட்கள்ல திரும்பி வருவதனால, கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணி அர்த்தமற்றதுன்னு அர்த்தமல்ல. ஜனங்கள் இனி நியாயப்பிரமாணத்தால கண்டனம் செய்யப்படாமலும் தண்டனைக்கு உட்படாமலும் இருக்க, கர்த்தராகிய இயேசு அவங்களோட பாவங்கள மன்னிச்சாரு. ஆனா கர்த்தராகிய இயேசு செஞ்சது மீட்பின் பணி மட்டுமே, ஜனங்கள சுத்திகரிக்கிற இரட்சிக்கிற கிரியை அல்ல. நாம எல்லாரும் இன்னும் பாவத்துல வாழுறோம். கடைசி நாட்களின் தேவனோட நியாயத்தீர்ப்பு கிரியை இல்லாம, நாம பாவத்துல இருந்து தப்பிச்சு தேவனோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியாது” அப்படின்னு சொன்னேன். என்னை மறுத்துப் பேச முடியாததப் பார்த்ததும், அவர் ரொம்ப கோபப்பட்டு, “நீ கொஞ்ச காலமாகத்தான் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்குற, ஆனா நீ நிறைய கத்துக்கிட்ட. நான் என்ன சொன்னாலும், என்னை மறுத்துப் பேச உன்கிட்ட ஏதாவது விஷயம் இருக்குது. அதனால, நான் உன்கிட்ட எதுவும் சொல்ல முடியாது!” அபப்டின்னு சொன்னாரு. அதுக்கப்புறமா, ஆத்திரத்தோட அங்கிருந்து போய்ட்டாரு. “அவர் கர்த்தரை விசுவாசிக்குறாரு, தினமும் கர்த்தரோட வருகைக்காக ஏங்கியிருக்கிறாரு. அப்படியிருக்க, கர்த்தரோட வருகையக் கேள்விப்பட்ட பிறகு, ஏன் அவர் அதப் ஆராய்ந்து பார்க்கலங்கறது மட்டுமல்லாம, அதுக்குப் பதிலா ரொம்ப கோபப்பட்டாரு?” அப்படின்னு நான் நெனச்சேன். “ஒரு வேளை, அவருக்கு மதக் கருத்துக்கள் நிறைய இருப்பதால, அவரால உடனே ஏத்துக்க முடியல. அவரோடு ஐக்கியங்கொள்ள நான் இன்னொரு வாய்ப்பக் கண்டுபிடிக்கணும்.”

நான் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்குறேன்ங்கறத தெரிஞ்சுக்கிட்ட உடனே என்னோட ரெண்டு அண்ணிகளும் சீக்கிரமா என்னோட வீட்டுக்கு வந்தாங்க… “ஓசியா, நீங்க சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்குறீங்க, நீங்க அந்த நாமத்துல ஜெபிக்குறீங்க, கர்த்தரோட நாமத்துல இல்லை. இது கர்த்தருக்கு துரோகம் செஞ்சு, துரோகியாக மாறுவதா இருக்குது.” “சரி, நீங்க இன்னும் புரிஞ்சுக்காததால அப்படிச் சொல்லுறீங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நீங்க வாசிச்சிருக்கல, அவர்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுன்னு உங்களுக்குத் தெரியாது. சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே ஆவியும் ஒரே தேவனுமாய் இருக்காங்க. தேவன் வெவ்வேறு காலங்கள்ல வெவ்வேறு நாமங்களப் பயன்படுத்துறாரு. நியாயப்பிரமாணத்தின் காலத்துல, தேவனோட நாமம் யேகோவா என்பதா இருந்துச்சு, ஆனா, கிருபையின் காலத்துல, தேவனோட நாமம் இயேசு என்பதா இருந்துச்சு. தேவனோட நாமம் மாறிருச்சு, ஆனா, கர்த்தராகிய இயேசுவும் யேகோவாவும் ஒரே தேவன் இல்லன்னு உங்களால சொல்ல முடியுமா? கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பது யேகோவா தேவனுக்கு துரோகம் செய்வதுன்னு உங்களால சொல்ல முடியுமா? சர்வவல்லமையுள்ள தேவனும், கர்த்தராகிய இயேசுவும் யேகோவாவும் ஒரே தேவன்தான். இதோ, நான் உங்களுக்கு ஒரு காணொளியக் காட்டுறேன், நீங்க புரிஞ்சுக்குவீங்க.” சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பால் எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான்தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான்தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானங்கள் மற்றும் பூமி மற்றும் சமுத்திரங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து சிருஷ்டிகளுக்கும் நான்தான் தேவன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறமா, நான் என்னோட அண்ணிகளோடு ஐக்கியங்கொண்டு, “தேவனோட நாமம் சகாப்தத்தாலும் தேவனோட கிரியையின் கட்டத்தாலும் மாறுது. தேவன் வெவ்வேறு காலங்கள்ல வெவ்வேறு நாமங்கள்ல அறியப்படுறாரு, ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு நாமம், ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு காலத்துலயும் தேவனோட கிரியையக் குறிக்குது. நியாயப்பிரமாணத்தின் காலத்துல, ‘யேகோவா’ என்ற நாமத்தின் கீழ நியாயப்பிரமாணங்கள ஆணயிட்டு பூமியில வாழ மனுக்குலத்துக்குக் கற்றுக்கொடுத்தாரு. கிருபையின் காலத்துல, தேவனோட ஆவி கர்த்தராகிய இயேசுவாக மனுவுருவாகி, மனித குலத்தை மீட்கும் பணியச் செய்தாரு. சத்தியத்த வெளிப்படுத்தவும், ஜனங்கள நியாயந்தீர்த்து சுத்திகரிக்கும் கிரியையச் செய்யவும் கடைசி நாட்கள்ல தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாக மனுவுருவாகி வர்றாரு. வெளிப்புறமா, தேவனோட நாமமும் கிரியையும் மாறிருச்சு, ஆனா, தேவனோட சாராம்சம் மாறாததாய் இருக்குது. மனிதகுலத்த இரட்சிக்க எப்போதும் ஒரே தேவன்தான் கிரியை செஞ்சு வர்றாரு” அப்படின்னு சொன்னேன். அவங்களுக்கு ஒரு உதாரணம் கூட கொடுத்தேன். ஒருவர் ஒரு மருத்துவமனையில வேலை செய்யலாம், எல்லோரும் அவரை “டாக்டர்” அப்படின்னு அழைக்குறாங்க, ஆனா, ஒரு நாள், அவர் கற்பிக்க முடிவு செய்யுறாரு, எல்லோரும் அவரை “ஆசிரியர்” அப்படின்னு அழைக்குறாங்க, அதுக்கப்புறம், அவர் ஒரு திருச்சபையில பிரசங்கிக்கப் போறாரு, மத்தவங்க அவரை “பாஸ்டர்” அப்படின்னு அழைச்சாங்க. உனக்குத் தெரியுதா? அவரோட வேலை மாறிருச்சு, மத்தவங்க அவரை அழைப்பதும் மாறிருச்சு, ஆனா, அவர் இன்னும் அதே நபர்தான். இன்னும் அவர்தான். அதைப் போலத்தான், தேவன் வெவ்வேறு காலங்கள்ல வெவ்வேறு நாமங்கள பயன்படுத்துறாரு. ஆனா, தேவனோட சாராம்சமும் அடையாளமும் மாறியிருக்கல, அவர் இன்னும் அதே தேவன்தான். சர்வவல்லமையுள்ள தேவனோட நாமத்துல நாம ஜெபிக்கும்போது, நாம தேவனுக்குத் துரோகம் செய்வதில்ல, விசுவாச துரோகிகளா இருப்பதில்ல, நாம கர்த்தரை வரவேற்று அவரோட அடிச்சுவடுகளப் பின்பற்றுறோம். நான் பேசிக்கிட்டு இருக்கும்போது, என்னோட மூத்த அண்ணனும் மூன்றாவது அண்ணனும் திடீர்ன்னு வந்தாங்க. என்னோட மூத்த அண்ணன் கோபமா என்னைத் தடுத்தாரு. “இனிமேல் அவன்கிட்ட பேசாதீங்க. அவனோடு பேசி ஜெயிக்க முடியாது. நீங்க என்ன சொன்னாலும், அவன்கிட்ட பதில் இருக்குது, ஏன் கவலைப்படணும்?” “ஓசியா, நீ தவறான விஷயத்த விசுவாசிக்குற. நிறுத்திக்க வேண்டிய நேரம் இது.” “சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்குற கர்த்தராகிய இயேசுன்னு நீ சொல்லுற. போதகர்கிட்ட போய் நீ உபதேசம் பண்ணு. இதுதான் மெய்யான வழின்னு போதகர் சொன்னால், அப்ப, நாம அத ஒன்றுசேர்ந்து விசுவாசிப்போம். ஆனா, இல்லைன்னு சொன்னா, மறுபடியும் திருச்சபைக்கு வந்து எங்களோடு சேர்ந்து விசுவாசி. நீங்க எல்லாரும் இரத்த சம்பந்த உறவு சகோதரர்கள். நீங்க ஒவ்வொருவரும் உங்களோட சொந்த வழியில போக முடியாது.” என்னோட சகோதரர்களும் அண்ணிமார்களும் போதகரை எப்படி ஆராதிக்குறாங்கங்கறத நான் பார்த்தப்போ, “விசுவாசிகளான நாம எல்லாத்துக்கும் மேலா தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு அவரை கனம் பண்ணணும். ஜனங்கள் சொல்றதுக்கு நாம கண்மூடித்தனமா கீழ்ப்படியக் கூடாது. குறிப்பா, கர்த்தரை வரவேற்கும் விஷயத்துல, போதகரை முடிவெடுக்க அனுமதிக்கக் கூடாது. தேவனோட ஆடுகள் அவரோட சத்தத்தக் கேட்கும்ன்னு கர்த்தராகிய இயேசு சொன்னாரு. நாம கர்த்தரை வரவேற்கும்படி தேவனோட சத்தத்தக் கேட்பதுல கவனம் செலுத்தணும்” அப்படின்னு அவங்ககிட்ட சொன்னேன். அதோடு கூட, “கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, யூத மதத்துல நம்பிக்கை கொண்டவங்க தேவனோட சத்தத்தக் கேட்க நாடல. கர்த்தராகிய இயேசுவை எதிர்ப்பதுலயும் கண்டனம் செய்வதுலயும் அவங்க பரிசேயர்களக் கண்மூடித்தனமா பின்பற்றினாங்க. இதன் விளைவா, அவங்க கர்த்தரோட இரட்சிப்ப இழந்துபோனாங்க. இது நமக்கு ஒரு பாடமா இருக்குது” அப்படின்னு நான் அவங்ககிட்ட சொன்னேன். ஆனா, நான் என்ன சொன்னாலும் என் அண்ணன்களும் அண்ணிமார்களும் கேட்கவே இல்ல, போதகர் தவறு செய்ய முடியாதுன்னு அவங்க உறுதியா சொன்னாங்க. அவங்களோட மனநிலையக் கண்டு, நான், “அவங்க போதகரை ரொம்ப ஆராதிக்குறாங்கன்னும் போதகர் அத எத்துக்கிட்டா அவங்களும் அத ஏத்துக்கக் கூடும்ன்னும் நெனச்சேன்.”

2021 ஆவது வருஷம் ஜனவரி மாசத்துல ஒரு நாள், போதகரும் தலைவர்களும் என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவங்களுக்கு சுவிசேஷத்த அறிவிக்கும் வாய்ப்ப நான் பயன்படுத்திக்கிட்டேன். “மத்தேயு 24:37 சொல்லுது, ‘நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.’ மத்தேயு 24:44 சொல்லுது, ‘நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.’ லூக்கா 17:24-25 சொல்லுது, ‘மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ ‘மனுஷகுமாரன் வரும் காலம்’, ‘மனுஷகுமாரன் வருவார்’ அப்படின்னு தீர்க்கதரிசனம் குறிப்பிடுது. அப்படின்னா, மனுஷகுமாரன் என்பவர் யார்? மனுஷகுமாரன் என்பது தேவனோட மனுவுருவாதலக் குறிக்குது. கர்த்தராகிய இயேசு மனுஷ குமாரனாக இருந்தார், ஏன்னா, அவர் தேவ ஆவியானவரின் மனுவுருவானவரா இருந்தாரு. ஒரு ஆவி மனுஷகுமாரன்னு அழைக்கப்பட முடியாது. அப்படின்னா, கர்த்தர் கடைசி நாட்கள்ல மனுஷ குமாரனா திரும்பி வர்றாருங்கற தீர்க்கதரிசனம், அவர் மனுவுருவாகி வருவாருங்கறதக் குறிக்குது. கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரமானது, உயிர்த்தெழுந்து மேகங்கள்மேல ஏறிப் போன பிறகு, எல்லாருக்கும் மிகுந்த மகிமையோடு தோன்றின பிறகு, அவரை எதிர்க்கவோ அல்லது கண்டனம் செய்யவோ யார் துணிவாங்க? ஆனாலும் கூட கர்த்தராகிய இயேசு சொன்னாரு, ‘அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறுச்சு? தேவன் மனுஷ குமாரனா மனுவுருவாகி, சாதாரண மனுஷனாக, ஜனங்களால அடையாளம் காண முடியாத வடிவத்துல தோன்றினால் மட்டுந்தான், அவர் கண்டனம் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட முடியும். அதனால, கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தின்படி, கடைசி நாட்கள்ல கர்த்தர் மனுவுருவானவரா திரும்பி வர்றாரு, இது முற்றிலும் நிச்சயம். இந்த வேதாகம வசனங்கள் ‘மனுஷகுமாரன்’ அப்படின்னு குறிப்பிடுது, அது கர்த்தராகிய இயேசுவைக் குறிக்குது. சகோதரர் எலியான், கர்த்தராகிய இயேசு மிகத் தெளிவாக பேசுகிறாரு. இவை கர்த்தர் திரும்பி வருவதப் பத்திய தீர்க்கதரிசனங்கள், கர்த்தராகிய இயேசுவைப் பத்தியது அல்ல.” “வேதாகமம் தெளிவா சொல்லுது, ‘அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்(மத்தேயு 24:30). கர்த்தர் ஒரு மேகத்தின் மீது திரும்பி வருவாரு, ஆனா, அவர் மனுவுருவாகி வருவார்னு நீங்க சொல்லுறீங்க. இந்த விஷயங்கள் முரண்படலயா? மேகத்தின் மேல வரும் கர்த்தராகிய இயேசுவுக்காக நாங்க காத்திருக்கிறோம். இப்போது, காலம் சமீபமாக இருக்குது, எல்லா வகையான பேரழிவுகளும் தோன்றியிருக்குது, கர்த்தர் நம்மள பரலோகராஜ்யத்துக்குக் கூட்டிட்டுப் போக மேகத்தின் மேல வரப்போறாரு. இத்தனை வருஷங்களாக கர்த்தரை விசுவாசிச்ச பிறகு, நீங்க கிட்டத்தட்ட நெருங்கி வந்துட்டீங்க. ஆனா நீங்க, நீங்க எல்லாத்தயும் விட்டுடுறீங்க.” “பாஸ்டர் ஜேக்சன், நீங்க சொன்ன தீர்க்கதரிசனமும் உண்மதான் ஆனா, தேவனோட மனுவுருவாதல் அவர் மேகங்கள் மேல வருவதுக்கு முரணாக இல்ல. முதல்ல இந்தக் கேள்வி எனக்குப் புரியல. அதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்ச பிறகுதான், கர்த்தரோட வருகை இரண்டு படிகளா நடக்கும்ங்கறத நான் உணர்ந்துக்கிட்டேன். முதலாவதா, அவர் சத்தியத்த வெளிப்படுத்தவும் நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்யவும் மனுஷ குமாரனா இரகசியமா வர்றாரு. அதுக்கப்புறமா, ஒரு கூட்ட ஜெயங்கொள்பவங்க உருவாக்கப்பட்ட பிறகு, தேவன் நல்லவங்களுக்கு பிரதிபலன் அளிக்கவும் பொல்லாதவங்கள தண்டிக்கவும் பேரழிவுகள அனுப்புகிறாரு. பேரழிவுகளுக்குப் பிறகு, தேவன் ஒரு மேகத்தின் மேல இறங்கி வந்து எல்லாருக்கும் வெளிப்படையாத் தோன்றுறாரு. அந்த நேரத்துல, சர்வவல்லமையுள்ள தேவனை எதிர்த்துக் கண்டனம் செய்யுற எல்லாருமே அழுது, பற்களைக் கடிப்பாங்க. இது கர்த்தர் மேகங்கள் மேல வருவாருங்கற தீர்க்கதரிசனத்த முழுமையா நிறைவேற்றுது. ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7).” அந்த நேரத்துல, போதகரும் மத்தவங்களும் ஆச்சரியமடஞ்சு மௌனமாயிட்டாங்க. நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய அவங்களுக்காக வாசிச்சேன். “இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசு திரும்பி வருவது ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, அகந்தையுள்ள நபராக நீங்கள் இருக்கக்கூடாது, மாறாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்திற்காக ஏங்குகிற மற்றும் அதைத் தேடுகிற ஒருவராக இருக்க வேண்டும்; இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). தேவனோட அதிகாரபூர்வமான வார்த்தைகளக் கேட்டதும் அங்கிருந்த எல்லாருமே திகைச்சுப் போனாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு, போதகர் பேசினாரு. “நீங்க இதெல்லாம் தேவனோட புதிய வார்த்தைகள்ன்னு சொன்னீங்க தானே? அது சரி இல்ல. தேவனோட வார்த்தைகள் எல்லாமே வேதாகமத்துல இருக்குது, வேதாகமத்துக்கு அப்பாற்பட்ட தேவனோட வார்த்தைகள்ன்னு எதுவுமே இல்லை. அப்படி ஏதாவது இருந்தால், அது வேதாகமத்துல சேர்க்கப்பட்டதா இருக்கும். வெளிப்படுத்தின விசேஷம் தெளிவாக சொல்லுது, ‘இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்(வெளிப்படுத்தல் 22:18-19).” “பாஸ்டர் ஜேக்சன், எதையும் கூட்டவோ கழிக்கவோ கூடாதுன்னு அது சொல்லும்போது, வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்துல தீர்க்கதரிசனங்களத் தன்னிச்சையா சேர்க்கவோ அல்லது நீக்கவோ கூடாதுன்னு இது ஜனங்கள எச்சரிக்குது, தேவன் இனிமேல் புதிய வார்த்தைகளப் பேசமாட்டாருன்னு அர்த்தம் இல்ல. கர்த்தராகிய இயேசுவே சொன்னாரு, ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). கர்த்தராகிய இயேசு, கடைசி நாட்கள்ல அவர் திரும்பி வரும்போது, எல்லா சத்தியங்களுக்குள்ளும் நம்மள வழிநடத்த பல வார்த்தைகள அவர் வெளிப்படுத்துவாருன்னு மிகத் தெளிவா சொன்னாரு. உங்களோட புரிதலின் படி, கடைசி நாட்கள்ல தேவன் திரும்பி வரும்போது, அவர் ஒருபோதும் பேசவும் கிரியை செய்யவும் மாட்டார். அப்படின்னா, கர்த்தராகிய இயேசுவின் இந்த வார்த்தைகள் எப்படி நிறைவேறும் மற்றும் நிறைவேற்றப்படும்? தேவன் சத்தியமாகவும், வாழ்க்கையின் ஆதாரமாகவும், எப்பொழுதும் பாய்ந்துகொண்டிருக்கும் ஜீவத் தண்ணீரின் ஊற்றாகவும் இருக்கிறார். நீங்க தேவனோட வார்த்தைகளயும் கிரியைகளயும் வேதாகமத்துல உள்ளவைகளோடு ஒப்பிட்டு மட்டுப்படுத்துறீங்க. தேவனால் இந்த வார்த்தைகளை மட்டுமே வேதாகமத்துல சொல்ல முடியும் என்பதப் போல. இது தேவனை மட்டுப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதுமாக இல்லையா?” என்னோட வார்த்தைகளக் கேட்டவுடன் போதகர் ஜேக்சன் பேசுவத நிறுத்திட்டாரு. “நான் போதகர்கள ஆராதிச்சிக்கிட்டு இருந்திருக்கேன். அவங்க வேதாகமத்தப் பத்தி நல்லா தெரிஞ்சுவச்சிருக்காங்கன்னும் தேவனைப் பத்திய அறிவைப் பெற்றிருந்தாங்கன்னும் நான் நெனச்சேன். எனக்கு அதிர்ச்சியளிக்கும் விதமா, அவங்க வேதாகமத்தப் புரிஞ்சுக்கல, அதோடு அவங்க தேவனோட கிரியைய மட்டுப்படுத்துறாங்க” அப்படின்னு நான் நெனச்சேன். நான் ஏமாற்றமடஞ்சேன்.

பல வாக்குவாதங்களுக்கு அப்புறமும், நான் என்னோட விசுவாசத்துல உறுதியா இருப்பதப் போதகர் பார்த்தாரு, அதுக்கப்புறம் என்னைக் குழப்புவதுக்குப் பல தவறான உபதேசங்களப் பயன்படுத்தினாரு, அத நான் தேவனோட வார்த்தைகளக் கொண்டு மறுத்துட்டேன், அதோடு, கடைசி நாட்களின் தேவனோட கிரியைக்கு நான் சாட்சியளிச்சேன். ஆனா, அவங்க கேட்கவே இல்லை. வாக்குவாதத்தின் முடிவுல, போதகர் ஜேக்சன் அவர்கள் என்னை மறுத்துப் பேச முடியலங்கறதப் பார்த்தபோது, அவர் எதுவுமே சொல்லல. அவரோடு கூட வந்திருந்த எலியான் அவர்கள், “ஓசியா, நீங்க சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பத நிறுத்தணும்னு நாங்க விரும்புறோம், ஏன்னா, உங்களோட ஜீவனுக்கு நாங்க பொறுப்பாளியா இருக்கிறோம். நாங்க இத அன்பினால செய்யுறோம். நீங்க தவறான பாதையில போயிடுவீங்கன்னு நாங்க பயப்படுறோம். உங்களப் போல வேதாகமத்தப் புரிஞ்சுக்கறவங்க திருச்சபையில தலைவர்களாக இருந்து எங்களோட பணிக்கு ஒத்துழைக்கணும். அது அற்புதமாக இருக்கும்” அப்படின்னு என்கிட்ட சொன்னாரு. அவர் சொன்னதக் கேட்டதும், வேதாகமத்துல கர்த்தராகிய இயேசுவைச் சோதிச்ச பிசாசின் வார்த்தைகள நான் நெனச்சுப் பார்த்தேன். “மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்” (மத்தேயு 4:8-9). திருச்சபையில ஒரு தலைவராக இருக்கும்படி அவங்க என்னையக் கேட்பது பிசாசின் சோதனையா இருந்துச்சு. கௌரவத்தாலும், அந்தஸ்தாலும் என்னைய மயக்கிட்டா நானும் அவங்களோட சேர்ந்துவிடுவேன்னு நெனச்சாங்க. கௌரவமும் அந்தஸ்தும் அவங்களுக்கு மிக முக்கியமானதா இருந்துச்சு! கர்த்தருடைய வருகையைப் பத்திய செய்திய அவங்க கேள்விப்பட்டாங்க. ஆனா, தேடுவதுக்கும் ஆராய்வதுக்கும் பதிலா, அவங்க என்னை மெய்யான வழியில இருந்து விலக்க முயற்சித்தாங்க. அது ரொம்பவே நயவஞ்சகமா இருந்துச்சு! அதனால, நான் அவங்கள நிராகரிச்சேன். “நான் திருச்சபைக்குத் திரும்பப் போவதில்லை. இப்போது, கர்த்தராகிய இயேசு புதிய கிரியையச் செய்யத் திரும்பி வந்திருக்குறாரு. அவர் இனி கிருபையின் காலத்துத் திருச்சபைகள்ல கிரியை செய்வதில்ல. நான் திருச்சபைக்குச் செல்வதால எனக்கு என்ன பயன் இருக்கும்? நாம தேவனோட புதிய கிரியைய ஏத்துக்கிட்டு தேவனைப் பின்பற்றணும் இல்லேன்னா, நாம கர்த்தரால் கைவிடப்பட்டு புறம்பாக்கப்படுவோம். இது கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்ததைப் போலவே இருக்குது. சீஷர்கள் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளக் கேட்டாங்க, கர்த்தருடைய சத்தத்த உணர்ந்து, கர்த்தரைப் பின்பற்றி, கர்த்தருடைய இரட்சிப்பைப் பெற்றாங்க, தேவாலயத்துல நியாயப்பிரமாணங்களக் கடைப்பிடிச்சவங்க எல்லாருமே, கர்த்தரால கைவிடப்பட்டு புறம்பாக்கப்பட்டாங்க. எல்லாத்துக்கும் மேலா இந்த சத்தியத்த நீங்க அறிஞ்சிருக்கணும். கடைசி நாட்கள்ல கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாரு. அவரோட சத்தத்துக்கு நாம செவிசாய்க்காலேன்னா, அவரை எப்படி வரவேற்பது? கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). வெளிப்படுத்தின விசேஷத்துல கூட தீர்க்கதரிசனமா சொல்லப்பட்டிருக்குது, ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்கள்). ‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்(வெளிப்படுத்தல் 3:20). போதகர் ஜேக்சன், கர்த்தரை வரவேற்பதுல ரொம்ப முக்கியமான விஷயம் கர்த்தரோட சத்தத்துக்கு செவிசாய்ப்பதுதான். அவர் திரும்பி வந்துவிட்டார்ன்னு யாராவது சாட்சியளிச்சா, நாம நம்மளோட கருத்துக்கள ஒதுக்கி வச்சுட்டு, தேடணும், ஆராயணும். இல்லேன்னா, நம்மால கர்த்தரை வரவேற்று பரலோகராஜ்யத்துல பிரவேசிக்க முடியாது.” “தேவனோட சத்தத்துக்கு நாம செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் தம்முடைய ராஜ்யத்திற்குள்ள நம்மள கூட்டிட்டுப் போக மேகத்தின் மீது வர்ற வரை நாம காத்திருக்கணும். கர்த்தராகிய இயேசு மேகத்தின்மேல் வரும் அந்த நாள் வந்தால், நாம அழுது, பற்களக் கடிப்பவங்களா இருப்போம். அதுக்கப்புறமா, நாம பொறுப்பேத்துக்குவோம். ஆனா, நான் உங்களுக்கு விஷயங்கள தெளிவுபடுத்தணும். நீங்க தப்பா விசுவாசிச்சு தப்பான பாதையில போனா எங்களக் குறை சொல்லாதீங்க. இப்பவும் காரியங்கள மாத்திக்க விரும்புனா, நீங்க இன்னும் திருச்சபைக்குத் திரும்பி வரலாம். அதப் பத்தி சிந்திக்க நான் இன்னும் சில நாட்கள் அவகாசம் தர்றேன். ஏழு நாட்கள் கழிச்சு, திருச்சபைக்கு வந்து எனக்கு பதில் சொல்லுங்க. திருச்சபையில உங்களோட சுவிசேஷத்த நீங்க பிரசங்கிக்கக் கூடாதுன்னு நான் உங்கள எச்சரிக்கிறேன். உங்க நிமித்தமா எங்களோட திருச்சபையில யாராவது சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்க ஆரம்பிச்சா, நான் உங்கள தண்டிப்பேன்!” போதகர் பேசி முடிச்சதும், என்னோட குடும்பத்தாரிடத்துல, “எவ்வளவோ சொன்னோம், ஆனா அவர் கேட்கல. நீங்க அவரோட குடும்பத்தினரா இருக்கீங்க, அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்க” அப்படின்னு சொல்லிட்டாரு. அதுக்கப்புறம், போதகர் கடுப்பாகி பெருமூச்சுவிட்டபடி போயிட்டாரு.

நான் போதகரின் பேச்ச கேட்காததப் பார்த்ததும், என்னோட குடும்பத்தினர் ரொம்ப கோபப்பட்டாங்க. அதனால அவங்க எல்லாருமே என்னையத் திட்டுறதுக்காக வந்தாங்க. அதோடு, என்னோட ரெண்டாவது சகோதரர் கொலை செஞ்சிருவேன்னு பயமுறுத்தினாரு. “நாங்க போதகரக் கூட்டிட்டு வந்தோம், நீ எங்கள சங்கடப்படுத்திட்ட. போதகர் இவ்வளவு சொல்லியும் நீ கேட்க மாட்டீங்குற. நீ இன்னும் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பதுல பிடிவாதமா இருக்குற. அப்படின்னா, உன்னைய அடிச்சுக் கொன்னு போடுவேன்!” “தயவு செஞ்சு, நீங்க என்னைய அடிக்க நெனக்குற அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்? கர்த்தர் வந்திருக்கிறாரு. நான் அவரோட சத்தத்தக் கேட்டு அவரை வரவேற்றிருக்கேன். என்னைய ஏன் இப்படி நடத்துறீங்க? நீங்க இன்னும் தேவனை விசுவாசிப்பவங்க தானா?” “நீ போதகர் சொல்வதக் கூட கேட்க மாட்டீங்குற. உனக்கு என்னதான் பிரச்சனை?” “நீங்க தேவனை விசுவாசிக்குறீங்களா போதகரை விசுவாசிக்குறீங்களா? கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டதுக்காக, போதகர் என்னைய இப்படித் தடுக்குறாரு, தொந்தரவு செய்யுறாரு. போதகரும் அந்தத் தலைவர்களும் மாயக்காரர்களும் பரிசேயர்களுமாய் இருக்காங்கன்னு நான் நெனக்குறேன். இப்போ தேவன் திரும்பி வந்திருக்கிறாரு, அவர் புதிய கிரியையச் செஞ்சுக்கிட்டிருக்காரு, அவர் பல சத்தியங்களை வெளிப்படுத்தியிருக்காரு, ஆனா, அவங்க தாங்களே தேடி, ஆராய்ந்து பார்க்காதது மட்டுமல்லாம, கர்த்தரை வரவேற்பதுல இருந்து மத்தவங்களயும் தடுக்குறாங்க. மெய்யான வழியிலிருந்து என்னையக் கவர்ந்து இழுக்கறதுக்கு அவங்க அந்தஸ்தைக் கூட பயன்படுத்துறாங்க, அது என்னோட ஜீவனின் நலனுக்காகன்னு சொல்லுறாங்க. இது வெறும் பொய் இல்லையா? அவங்க என்னைய கண்ணியில சிக்க வச்சு அழிக்க விரும்புறாங்க! கர்த்தராகிய இயேசு இப்படிச் சொல்லி பரிசேயர்கள அம்பலப்படுத்தினாரு, ‘மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை. … ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்(மத்தேயு 23:13, 15). போதகருக்கும் தலைவர்களுக்கும் பரிசேயர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்குது? அவங்க பக்கமா எப்படி நிற்க முடியும்?” “போதகர் உன்னைய வெளியேத்திட்டா, நாம இனி சகோதரர்கள் இல்ல. நீ வாழ்ந்தாலும் சரி செத்தாலும் சரி, எங்களுக்குக் கவல இல்ல. நீ எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தத் திருப்பிக் கொடு. ரெண்டு வாரத்துக்குள்ள அது எங்களுக்கு வேணும்.”

அவங்க ரொம்ப இரக்கமில்லாதவங்களா இருப்பதப் பார்க்கும்போது, எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்துச்சு. அவங்க கஷ்டத்துல இருந்தப்போ, அவங்களுக்கு உதவ என்னால முடிஞ்சவரைக்கும் முயற்சி செஞ்சேன். ஆனா, இப்போ அவங்க என்-ன இப்படி நடத்துறாங்க. எப்படி கடந்த நாட்கள்ல நல்லவங்களா எனக்குத் தெரிஞ்ச சகோதரர்கள் இப்படி மாறினாங்க? என்னோட குடும்பத்தினர் எப்படி இப்படி இருந்தாங்க? அன்னைக்கு ராத்திரி, நான் படுக்கையில படுத்திருந்தேன், தூங்க முடியல. அதை நெனச்சப்போ, கண்ணீரை அடக்க முடியாதபடி ரொம்பவே வேதனையா இருந்துச்சு. நான் தேவனிடத்துல ஜெபிச்சு, இந்த சூழலை எப்படி எதிர்கொள்றதுன்னு நான் தெரிஞ்சுக்கும்படி, எனக்கு விசுவாசத்தக் கொடுத்து, அவரோட சித்தத்தப் புரிஞ்சுக்க என்னைய வழிநடத்தும்படி தேவனிடத்துல மன்றாடினேன். கர்த்தராகிய இயேசு சொன்னது எனக்கு நினைவுக்கு வந்துச்சு, “பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே(மத்தேயு 10:34-36). “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்(யோவான் 15:18). கர்த்தரோட வார்த்தைகள் உண்மை, கர்த்தரோட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்குது. கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டேன்ங்கற ஒரே காரணத்தால, என்னோட போதகரும் சகோதரர்களும் என்னைத் தடுக்கவும் துன்புறுத்தவும் முயற்சித்தாங்க. அவங்க என்னைய வெறுக்கல, தேவனை வெறுத்தாங்க. கொஞ்ச நாட்களா நடந்தத நெனச்சுப் பார்த்த பிறகு, நான் தேவனுக்கு நன்றி சொன்னேன். என்னோட போதகர், குடும்பத்தினரின் இடையூறுகளயும் தடைகளயும் சமாளிக்க தேவனோட வார்த்தை எனக்கு உதவுச்சு, அதோடு, அவங்களப் பத்திய சில பகுத்தறிவையும் எனக்குக் கொடுத்துச்சு.

ஒரு நாள், ஒரு சகோதரி என்னோட நிலைமையப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட பிறகு, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய எனக்கு அனுப்பி வச்சாரு. “சோர்வடைய வேண்டாம், பலவீனமாக இருக்க வேண்டாம், நான் உனக்கு விஷயங்களைத் தெளிவுபடுத்துவேன். ராஜ்யத்திற்குரிய பாதை அவ்வளவு சமமாக இல்லை; எதுவும் அவ்வளவு எளிதானதல்ல! உனக்கு ஆசீர்வாதங்கள் எளிதில் வரவேண்டுமென்று விரும்புகிறாய், இல்லையா? இன்று, எதிர்கொள்ளும்படி கசப்பான உபத்திரவங்கள் அனைவருக்கும் இருக்கும். இத்தகைய உபத்திரவங்கள் இல்லாமல் நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பான இருதயம் வலுவடையாது, மேலும் நீங்கள் என்மீது உண்மையான அன்பைக் கொண்டிருக்க மாட்டீர்கள். இந்த உபத்திரவங்கள் வெறுமனே சாதாரண சூழ்நிலைகளைக் கொண்டிருந்தாலும், எல்லோரும் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்; உபத்திரவங்களின் துன்பம் மட்டுமே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடும். உபத்திரவங்கள் என்னிடமிருந்து வரும் ஒரு ஆசீர்வாதமே, உங்களில் எத்தனை பேர் எனக்கு முன்பாக அடிக்கடி வந்து, என்னுடைய ஆசீர்வாதங்களுக்காக உங்கள் முழங்காலில் நின்று கெஞ்சுகிறீர்கள்? முட்டாள்தனமான பிள்ளைகளே! ஒரு சில அநுகூலமான வார்த்தைகளை என் ஆசீர்வாதம் என்று நீங்கள் எப்போதும் நினைக்கிறீர்கள், ஆனால் கசப்பும் என் ஆசீர்வாதங்களில் ஒன்று என்று நீங்கள் கண்டுணர்ந்து கொள்வதில்லை. என் கசப்பில் பங்கெடுப்பவர்கள் நிச்சயமாக என் இனிமையிலும் பங்கு கொள்வார்கள். அதுவே என் வாக்குத்தத்தமும் உங்களுக்கான என் ஆசீர்வாதமும் ஆகும். என் வார்த்தைகளைப் போஜனபானம்பண்ணி அனுபவிக்கத் தயங்காதீர்கள். இருள் கடந்து செல்லும்போது, ஒளி ஒன்றாய்ச் சேர்கிறது. விடியலுக்கு முன் இருளாக இருக்கிறது; இந்த நேரத்திற்குப் பின் வானம் படிப்படியாக வெளிச்சமடைந்து, அதன்பின் சூரியன் உதிக்கிறது. பயப்படவோ அதைரியப்படவோ வேண்டாம்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 41”). அவர் என்னோடு ஐக்கியங்கொண்டு, “நாம சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கிறோம், கர்த்தரை வரவேற்கிறோம், ஆனா, நாம இரட்சிக்கப்படுவதயோ தேவனால் ஆதாயப்படுவதயோ சாத்தான் விரும்புவதில்ல. அதனால, நம்மளத் தடுக்கவும் தொந்தரவு செய்யவும் அது பல்வேறு வழிகளப் பயன்படுத்துது, ஆனா, தேவன் இதை அனுமதிக்கிறாரு. ஏன்? தேவன் ஜனங்களோட விசுவாசம் உண்மையானதா பொய்யானதான்னு வெளிப்படுத்த விரும்புறாரு. உண்மையான விசுவாசம் உள்ள ஒருத்தரால, தேவனோட ஆடாக இருப்பவரால, சோதனைய எதிர்கொள்ள முடியும். சாத்தான் அவங்கள எப்படி தொந்தரவு செஞ்சாலும், தேவனைப் பின்பற்றுவதுல அவங்களால உறுதியா இருக்க முடியும். தேவனுக்கு சொந்தமில்லாதவங்க, பொய்யா விசுவாசிப்பாங்க, சாத்தான் தொந்தரவு செய்யும்போது விலகிவிடுவாங்க. இது சாத்தானோட சூழ்ச்சிகளின் அடிப்படையில பயன்படுத்தப்படும் தேவனுடைய ஞானமா இருக்குது. இப்போ, நீங்க உங்களோட போதகராலும் குடும்பத்தினராலும் தொந்தரவு செய்யப்பட்டு தடை செய்யப்படுறீங்க. இது ஒரு சோதனை. இதை அனுபவிச்ச பிறகு, நீங்க சில சத்தியங்களப் புரிஞ்சுக்குவீங்க, சில விஷயங்களத் தெளிவா பார்ப்பீங்க. யார் உண்மையான விசுவாசி, யார் பொய்யான விசுவாசிங்கறத எப்படிப் பகுத்தறிவதுங்கறதயும் நீங்க தெரிஞ்சுக்குவீங்க, அதோடு, தேவன் மீதான விசுவாசத்தயும் வளர்த்துக்குவீங்க, இது வசதியான சூழல்ல நம்மால பெற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள். இந்தத் துன்பம் மதிப்புக்குரியது” அப்படின்னு சொன்னாரு. சகோதரியின் ஐக்கியத்தக் கேட்டதும், போதகர் மற்றும் என்னோட குடும்பத்தினரோட தடைகளும் இடையூறுகளும் மனுஷர்களால செய்யப்பட்டதப் போல காணப்பட்டுச்சு, ஆனா, உண்மையில, இது எல்லாமே, தேவனோட இரட்சிப்பை என்னை இழக்கச் செய்யும் முயற்சியாக சாத்தானோட இடையூறாகவே இருந்துச்சுங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். சாத்தான் உண்மையிலயே வெறுப்பினால நெறஞ்சிருக்கிறான். இந்தச் சம்பவத்தின் மூலமா, நான் போதகரைப் பத்திய பகுத்தறிவை ஓரளவு பெற்றுக்கிட்டேன், அதோடு, தேவனைப் பின்பற்றணும்ங்கற என்னோட ஆசை இன்னும் அதிகமா வலுவடஞ்சுச்சு. கொஞ்ச நாளுக்குப் பிறகு, நான் இன்னும் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பதப் பார்த்து, என்னோட மாமாவும் என்னைத் தடுக்க வந்தாரு. “ஓசியா, நான் சொல்வத மட்டும் கேளு. திரும்பி வா. போதகர் உன்னை வெளியேத்திட்டா நீ என்ன செய்வ? எதிர்காலத்துல உனக்கு ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, உனக்கு யார் உதவுவாங்க?” “நான் கடைசியா கர்த்தரை வரவேற்றிருக்கிறேன், அதனால, எதுவா இருந்தாலும் சரி, நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவேன். நான் மறுபடியும் திருச்சபைக்குப் போக மாட்டேன்.” “போதகருக்குத் தெரிஞ்சிருக்கற அளவு உனக்குத் தெரியாது. தேவன் மீதான விசுவாசம் பத்திய விஷயங்கள்ல போதகர் சொல்வதைக் கேட்கணும்.” “கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, யூத மதத்தில் உள்ள விசுவாசிகள் பரிசேயர்களுக்கு நல்லா தெரியும்ன்னுதான் நெனச்சாங்க கர்த்தரை எதிர்த்து, கண்டனம் செஞ்சு அவங்களப் பின்பற்றுனாங்க. இதன் விளைவா, அவங்க சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாங்க. தேவனிடத்துல விசுவாசிகளாய் இருக்கிற நாம தேவனோட வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கணும். போதகரோட வார்த்தைகளும் செயல்களும் தேவனோட வார்த்தைகளோடு ஒத்துப்போகலேன்னா, நாம அவற்றைக் கேட்கக் கூடாது. பல சத்தியங்கள வெளிப்படுத்த தேவன் கடைசி நாட்கள்ல திரும்பி வர்றாருன்னு நான் போதகரிடத்துல சொன்னேன், இது வேதாகமத்துலயும் கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனங்கள்லயும் நிரூபிக்கப்பட்டிருக்குது, அவங்க அதை மறுக்க வழியே இல்ல, ஆனா, அவங்க அத ஆராய்ந்து பார்க்கறதுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லாம இருக்காங்க, கர்த்தரை வரவேற்பதுல இருந்து என்னையத் தடுக்க முயற்சி செஞ்சாங்க. அதோடு, என்னோட சகோதர சகோதரிகள் யாரோடயும் அதைப் பகிர்ந்துக்க அனுமதிக்கல. அவங்க செஞ்சது தேவனோட வார்த்தைகளோடு ஒத்துப்போகுதுன்னு நினைக்குறீங்களா? மாமா, கடைசி நாட்களின் தேவனோட கிரியைய நீங்க தேடுவதோ ஆராய்ந்து பார்ப்பதோ இல்ல. நீங்க போதகர் என்ன சொன்னாலும் கேட்குறீங்க. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நீங்க ஒருபோதும் படிச்சதில்ல, அப்படியிருக்க, அவைகள் உண்மையா பொய்யாங்கறது உங்களுக்கு எப்படித் தெரியும்? இது ஒரு ஆற்றைக் கடப்பதப் போலானது. தண்ணீரோட ஆழம் அதிகமானதுன்னு ஒருவர் சொல்லும்போது, அது ஆழமற்றதுன்னு வேறு யாராவது சொன்னால், நீங்க யாரை நம்புவீங்க? நீங்களே உள்ள போய் உண்மையத் தெரிஞ்சுக்க மாட்டீங்களா? நீங்க கர்த்தரை விசுவாசிச்சுக்கிட்டு, அவருக்குச் செவிசாய்க்காமல், போதகர் சொல்வதக் கேட்கணும்னு வலியுறுத்தினால், கடைசியா, போதகர் நரகத்துக்குப் போனா, நீங்களும் நரகத்துக்குப் போக மாட்டீங்களா? இது குருடன் குருடனுக்கு வழிகாட்டி குழிக்குள் வழிநடத்துவது இல்லையா?” “போதகர் உங்கள அரசாங்கத்திடம் புகார் கொடுத்து, உங்களக் கைது செய்ய வைப்பாருன்னு நீங்க பயப்படலயா?” “அவங்க என்னை அரசாங்கத்திடம் புகாரளிச்சாலும் பரவாயில்லை, அரசாங்கம் எனக்கு என்ன செஞ்சாலும் பரவாயில்ல, நான் துன்புறுத்தப்பட்டாலும் கூட, நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றணும்.” அன்றைக்கு, என்னோட மாமா தொடர்ந்து என்னை வற்புறுத்த முயற்சி செஞ்சாரு, ஆனா, நான் அவர் பேச்சைக் கேட்கல. ஒரு வாரத்துக்கு அப்புறமா, போதகர் என்னைய மறுபடியும் தொந்தரவு செய்யறதத் தடுக்க, நான் போதகரிடத்துலயும் தலைவர்களிடத்துலயும் போய், நான் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பதுல உறுதியா இருக்கிறேன்னும் மறுபடியும் திருச்சபைக்குப் போகமாட்டேன்னும் அவங்ககிட்ட சொன்னேன், அதோடு என்கிட்ட மறுபடியும் பேச வேண்டாம்ன்னு கேட்டுக்கிட்டேன். எதிர்பாராத விதமா, போதகர் விட்டுவிட மறுத்துட்டாரு, அதோடு கூட, “நீங்க விசுவாசிக்கும் இந்தக் கிழக்கத்திய மின்னல் கர்த்தரோட வருகை அல்ல. நீங்க தொடர்ந்து விசுவாசிச்சா கர்த்தருக்குத் துரோகம் செய்யுறீங்க” அப்படின்னு என்கிட்ட சொன்னாரு. நான் அவரிடத்துல, “கர்த்தராகிய இயேசு தாம் திரும்பி வருவத இப்படியாக முன்னறிவிச்சாரு, ‘மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). கிழக்கத்திய மின்னலின் தோன்றுதல் அவரது தீர்க்கதரிசனத்த நிறைவேற்றலயா?” அப்படின்னு சொன்னேன். போதகர் ஜேக்சன் அவர்கள் என்னை மறுத்துப் பேச முடியாதுங்கறதப் பார்த்ததும், அவர் கோபமடஞ்சு, தேவனோட கிரியைய நியாயந்தீர்க்கவும் கண்டனம் செய்யவும் தொடங்கினாரு. அவரோட வார்த்தைகள் என்னை ரொம்பவே கோபப்படுத்துச்சு. கர்த்தராகிய இயேசு சொன்னது எனக்கு நினைவுக்கு வந்துச்சு. “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). தேவனோட ஆடு அவரோட சத்தத்துக்குச் செவிகொடுக்குது. போதகரும் தலைவர்களும் தேவனோட சத்தத்தப் புரிஞ்சுக்கல, அவங்க தேவனை நியாயந்தீர்க்குறாங்க. அவங்க தேவனோட ஆடுகள் அல்ல. அவங்க பிசாசைச் சேர்ந்தவங்க. நான் அவங்ககிட்ட, “கடந்த காலத்துல, பரிசேயர்கள் கர்த்தராகிய இயேசுவை நியாயந்தீர்த்து கண்டனம் செஞ்சாங்க. இப்ப, கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாருன்னு கேள்விப்பட்ட பிறகும், நீங்க தேடுவதோ, விசாரிப்பதோ இல்ல. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் ரொம்பவே நல்லா உரைக்கப்பட்டிருப்பதப் பார்த்தாலும் கூட, நீங்க இன்னும் கண்டனம் செஞ்சு எதிர்க்குறீங்க. நீங்க நவீன கால பரிசேயர்கள் இல்லையா?” அப்படின்னு சொன்னேன். நான் இதச் சொன்னதும், போதகரும் தலைவர்களும் ரொம்ப கோபப்பட்டாங்க, அதனால, அவங்க என்னைய வற்புறுத்த வேறு வழிய முயற்சித்தாங்க. “நீங்க சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்க விரும்புறீங்க அப்படிங்கறதுல உறுதியா இருப்பதால, அப்ப, நீங்க கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கலன்னு கையெழுத்திடும்படிக்கு ஒரு அறிக்கைய எழுதுவோம்.” “நான் ஏன் அதுல கையெழுத்திடணும்? சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தராகிய இயேசுவின் வருகை, சர்வவல்லமையுள்ள தேவனை நான் விசுவாசிக்குறேன், அது கர்த்தரை வரவேற்பதா இருக்குது. கர்த்தராகிய இயேசுவை நான் விசுவாசிக்கலன்னு நீங்க எப்படிச் சொல்ல முடியும்? இது உண்மைகளத் திரிப்பதா இருக்குது இல்லையா? உங்களப் பொருத்தவரையில, கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்போ, கர்த்தருடைய சீஷர்களான பேதுரு, யோவான் போன்ற இவங்க எல்லாரும் தேவாலயத்தை விட்டு வெளியேறி கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றினாங்க. அவங்க யேகோவா தேவனுக்குத் துரோகம் செஞ்சாங்கன்னு உங்களால சொல்ல முடியுமா? நிச்சயமா இல்ல. அவங்க தேவனோட புதிய கிரியையப் பின்பற்றிப் போனாங்க. அதைப்போலத்தான், இப்போ, கர்த்தராகிய இயேசு புதிய கிரியையச் செய்யத் திரும்பி வந்திருக்கிறாரு. நான் சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பது ஆட்டுக்குட்டியானவரோட அடிச்சுவடுகளப் பின்பற்றுவதா இருக்குது. இது எப்படி கர்த்தராகிய இயேசுவுக்குத் துரோகம் செய்வதாகும்? அப்படியெல்லாம் நான் கையெழுத்துப் போட மாட்டேன்!” “நாங்க உங்களை வெளியேற்றல, நீங்களாக திருச்சபைய விட்டு வெளிய போயிட்டீங்கன்னு நிரூபிக்கும்படி, இந்த அறிக்கையில நீங்க கையெழுத்துப்போடணும், உங்களோட சகோதரர்களும் பெற்றோரும் கூட கையெழுத்துப்போடணும்.” அந்த நேரத்துல, நான் போதகரோட நோக்கத்தப் பார்த்தேன். நான் கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கலன்னும் அதுக்குப் பதிலா, சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கிறேன்னும் நான் அறிக்கையிட்டால், சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்ங்கறத நான் மறுதலிக்கிறேன்னு அர்த்தம் இல்லையா? நான் கையெழுத்துப்போட்டால், சர்வவல்லமையுள்ள தேவனை மறுதலிப்பதுக்கும் கண்டனம் செய்வதுக்கும் அது அவங்களுக்கு ஆதாரமா இருக்கும். அவங்க ரொம்ப கெட்டவர்களாவும் தீயவர்களாவும் இருந்தாங்க! அவங்க இந்த அறிக்கைய வியட்நாம் அரசாங்கத்திடம் கொண்டுட்டுப்போனா, நான் துன்புறுத்தப்படுவேன். இதுதான் அவங்களோட இழிவான நோக்கமா இருந்துச்சு. அன்றைக்கு ராத்திரி பத்து மணி தாண்டியும் வாக்குவாதம் பண்ணினோம். ஆனா, நான் என்ன சொன்னாலும் சரி, போதகரால புரிஞ்சுக்க முடியாதுங்கறதப் போல இருந்துச்சு, அவர் முரட்டுத்தனமாவும் பகுத்தறிவில்லாதவராவும் இருந்தாரு, அதனால, அவங்ககிட்ட சொல்லறதுக்கு என்னிடத்துல எதுவும் இல்லை. அடுத்த நாள், என்னோட குடும்பத்தார்கள் இந்தச் செய்தியக் கேட்டதும், குற்றச்சாட்டுகளைச் சுமத்த என்னோட வீட்டுக்கு வந்தாங்க. “நானும் உன் அப்பாவும் உன்னை வளர்த்தெடுக்க ரொம்ப கடினமா உழச்சோம், இப்போ, நீ எங்கள விட்டுட்டுப் போறியா? உனக்கு மனசாட்சியே இல்லை!” “அம்மா, நான் உங்களக் கைவிட்டுறல. நான் உங்களுக்கு பலமுறை சுவிசேஷத்தப் பிரசங்கிச்சேன், ஆனா, நீங்க அதை விசுவாசிக்கல. நீங்க தேவனோட வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதில்ல, போதகரோட வார்த்தைகளுக்கு மட்டுமே செவிகொடுக்குறீங்க. இது உங்களோட சொந்த விருப்பம்.” “இனிமேல் நீ என்னோட மகனே இல்ல!” “இனிமேல் நம்மளோட தனி வழியில நாம போகலாம். இனிமேல் நாம சகோதரர்கள் இல்ல. எதிர்காலத்துல உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும், நாங்க உனக்கு உதவ மாட்டோம்.” “அப்படின்னா, அது உங்களோட இஷ்டம். நான் தேவனைத்தான் விசுவாசிக்கிறேன், நீங்க என்னை இப்படித் துன்புறுத்துறீங்க, உங்களுக்கும் தேவனுக்கும் இடையே என்னையத் தேர்வு செய்ய சொல்றீங்க, அதனால, நிச்சயமா நான் தேவனைத் தெரிஞ்சுக்குவேன். ஆனா, நீங்க என்னோட பெற்றோர் இல்லன்னோ சகோதரர்கள் இல்லன்னோ நான் சொல்லல. அவை உங்களோட வார்த்தைகள்தான்.”

அதுக்கப்புறமா, நான் திருச்சபைக்குப் போவதை நிறுத்திட்டேன். போதகரும் தலைவர்களும் என்னை மறுபடியும் தொந்தரவு செய்ய மாட்டாங்கன்னு நெனச்சேன். எதிர்பாராத விதமா, ஏப்ரல் மாசத்துல ஒரு நாள் நிதியை நிர்வகிச்ச திருச்சபை சக ஊழியர் ஒருவர் என்னிடத்துல வந்து, கர்த்தராகிய இயேசுவை விசுவாசிக்கலங்கற அறிக்கையில கையெழுத்திட நான் திருச்சபைக்குப் போகணும்னு வற்புறுத்தினாரு. நான் ஆத்திரப்பட்டேன். இவங்க என்னை சும்மா விடமாட்டாங்க. அவங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? அவரை அனுப்பிவிட்ட பிறகு, நான் என்னை அமைதிப்படுத்திக்கிட்டு தேவனிடத்துல ஜெபிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் சிந்திச்சேன். “தேவன்ஒரு நபருக்காக கிரியை செய்து, அக்கறைகொண்டு, இந்த நபரை கருத்தில் கொண்டு பார்த்து, மற்றும் இந்த நபரைப் பாராட்டி அங்கீகரிக்கும்போது, சாத்தானும் அந்த நபரை நெருக்கமாகப் பின் தொடர்ந்து, அவரை ஏமாற்றி, அவருக்குத் தீங்கு செய்ய முயற்சிக்கிறது. தேவன் இந்த நபரை ஆதாயப்படுத்த விரும்பினால், தேவனைத் தடுக்க சாத்தான் தன் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்யும், தனது மறைவான நோக்கத்தை அடைவதற்காக, தேவனுடைய கிரியையை மோசம்போக்கி, சீர்குலைத்து சேதப்படுத்த பல்வேறு தீய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தும். இது என்ன நோக்கம்? தேவன் யாரையும் ஆதாயப்படுத்துவதை அவன் விரும்பவில்லை; தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆட்கொள்ள விரும்புகிறது, அது அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, அவர்களை தன் பொறுப்பிலேற்க விரும்புகிறது. இதனால் அவர்கள் அதனை ஆராதிப்பார்கள், அதனால் அவர்கள் பொல்லாத செயல்களைச் செய்வதில் அதனுடன் இணைந்து, தேவனை எதிர்ப்பார்கள். இது சாத்தானின் கெட்ட நோக்கம் அல்லவா? சாத்தான் மிகவும் தீயவன், மிகவும் மோசமானவன் என்று நீங்கள் அடிக்கடி கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? மனுக்குலம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். உண்மையான சாத்தான் எவ்வளவு மோசமானவன் என்பதை நீங்கள் பார்த்ததில்லை. ஆயினும், யோபு விஷயத்தில், சாத்தான் எவ்வளவு பொல்லாதவன் என்பதை நீங்கள் தெளிவாகக் கவனித்திருக்கிறீர்கள். இந்த விஷயம் சாத்தானின் அருவருப்பான முகத்தையும் சாராம்சத்தையும் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளது. தேவனுடன் போரிடுவதிலும், அவருக்குப் பின்னாலே செல்வதிலும், தேவன் செய்ய விரும்பும் எல்லா கிரியைகளையும் தரைமட்டமாக்குவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆக்கிரமித்து கட்டுப்படுத்துவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பது தான் சாத்தானின் நோக்கம். அவை அப்படி அழிக்கப்படாவிட்டால், அவர்கள் சாத்தானால் பயன்படுத்தப்படுவதற்கு அதன் வசமாகிறார்கள்—இது தான் அதன் நோக்கம்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV”). தேவனோட வார்த்தைகள சிந்திச்சுப் பார்த்த பிறகு, சாத்தானோட தந்திரங்கள இன்னும் தெளிவா பார்த்தேன். இந்தப் போதகர்களும் மூப்பர்களும் சாத்தானுக்குச் சொந்தமானவர்கள்ங்கறத நான் பார்த்தேன். அவங்க சாத்தானோட கூட்டாளிகளா இருந்தாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் மீதான என்னோட விசுவாசத்தத் தடுக்கவும் தொந்தரவு செய்யவும், தேவனிடத்துல இருந்து என்னை பிரித்துவிடவும் அவங்க எல்லா வழிகளையும் முயற்சி செஞ்சாங்க. என்னைக் கண்டனம் செய்வதுக்கு அவங்களுக்கு ஒரு சாக்குப்போக்கு கொடுக்கும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவை மறுதலிக்கும் கடிதத்துல அவங்க என்னைய கையெழுத்துப் போடச் சொன்னாங்க. அவங்களோட இருதயங்கள் ரொம்பவே தீயதாக இருந்துச்சு! ஆரம்பத்துல இருந்து கடைசிவரை சாத்தானோட பங்கை ஆற்றினாங்க. அதுக்கப்புறமா, என்னோட குடும்பத்தினரும் போதகரோட நோக்கங்களப் புரிஞ்சுக்கிட்டு, போதகர் என்னை அரசாங்கத்திடம் புகாரளிக்கும்படி கடிதத்துல நான் கையெழுத்திடணும்னு விரும்புறாருங்கறத உணர்ந்துட்டாங்க, என்னோட அம்மா என்கிட்ட, “ஓசியா, அந்தக் கடிதத்துல கையெழுத்துப் போடாதே, போதகர் பயங்கரமானவரா இருக்காரு. நீ தேவனை விசுவாசிப்பதன் மூலமா எந்தத் தவறும் செய்யல, ஆனாலும், அவர் உன்னை இப்படி நடத்துறாரு. நீ ஏதாவது துன்புறுத்தலுக்கு ஆளானா, நான் அவரை அதுல இருந்து தப்பிக்க விடமாட்டேன்.” நான் போதகர்கள ஆராதிச்சு வந்தேன். அவங்க கர்த்தருக்கு ஊழியம் செஞ்சாங்கன்னும் அவங்களுக்கு உதவுவது கர்த்தரை நேசிப்பதுன்னும் நான் நெனச்சேன். அதனால, நான் அடிக்கடி பணத்தையும் பொருட்களயும் கொடுத்தேன். அவங்களோட கார்கள் பழுதடையும் போதெல்லாம், அதுக்கு எவ்வளவு செலவானாலும் சரி, நான் எப்போதுமே அவற்றைப் பழுது பார்த்தேன். இந்த அனுபவத்தின் மூலமா, போதகர்களின் உண்மையான முகத்த இப்ப என்னால பார்க்க முடியுது. மந்தையைப் பாதுகாப்பதுங்கற பெயருல, ஜனங்களை மெய்யான வழியை ஆராயவிடாமல் தடுக்குறாங்க, கர்த்தரை வரவேற்பதுல இருந்தும் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பதுல இருந்தும் மத்தவங்களத் தடுத்து நிறுத்துறாங்க. நாம அவங்களுக்கு அதிக பணம் கொடுத்து அவங்கள ஆதரிக்கும் படிக்கு, அவங்க நம்ம எல்லாரையும் தங்களோட கட்டுப்பாட்டுல வச்சிருக்க விரும்புறாங்க. ஜனங்கள் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பதத் தடுக்கும் முட்டுக்கட்டைகளா அவங்க இருக்காங்க அப்படின்னு சொன்னாரு.

இது சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சொல்வதப் போலவே இருக்குது. “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). தேவனோட பாதுகாப்புக்காக நான் நன்றியுள்ளவனாக இருக்குறேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைதான் என்னைப் படிப்படியா வழிநடத்தி வழிகாட்டி, சாத்தானோட தந்திரங்களப் புரிஞ்சுக்கவும், போதகர்கள் எப்படி சத்தியத்த வெறுத்து தேவனை எதிர்க்குறாங்கங்கறதத் தெளிவாக பார்க்கவும், பொல்லாத வேலையாட்கள் மற்றும் அந்திக்கிறிஸ்துக்களோட அடிமைத்தனத்துல இருந்து என்னைய முழுசா விடுவிச்சுக்கவும், தேவனோட வீட்டுக்குத் திரும்பி வரவும் எனக்கு உதவி செஞ்சுச்சு. என்னோட இருதயம் தேவனிடத்துல நன்றியால நிரம்பியிருந்துச்சு! இப்போ, நான் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் ஆதரவை அனுபவிச்சு மகிழுறேன், நான் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு, என்னோட சகோதர சகோதரிகளிடத்துல தேவனுக்குச் சாட்சி பகருறேன். நான் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணருறேன்! தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

என் போதகர் எனக்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கும் இடையில் நின்றார்

2020, நவம்பர் மாசத்துல, ஒரு சகோதரர் இணையதள கூடுகையில சேர என்னை அழைச்சாரு. நான் என்னோட திருச்சபையில ஆவிக்குரிய வாழ்வாதாரத்தக் கொடுக்காத அதே...

ஒரு “திருடப்பட்ட” ஆசீர்வாதம்

அது 2012 மார்ச் மாசமா இருந்துச்சு. எந்த நாள்ல அது ஆரம்பிச்சிச்சுன்னு எனக்குத் தெரியல. ஆனா நான் தினமும் ராத்திரி சாப்பாடுக்கப்புறமா, என்னோட...