ஒரு மதகுருவின் வீட்டிற்கான பாதை

செப்டம்பர் 28, 2023

என்னோட குடும்பத்தினர் பல தலைமுறைகளா கத்தோலிக்கர்களா இருந்து வந்திருக்காங்க. எனக்கு 20 வயசா இருந்தப்ப, கர்த்தருக்கு என்னை அர்ப்பணிச்சு, அவருக்கு ஊழியம் செய்வதுல என் வாழ்க்கைய செலவிட முடிவு செஞ்சேன். அதுக்கப்புறமா, வேதபாடசாலையில ஏழு வருஷம் முறையான இறையியல் பயிற்சிக்குப் பிறகு, 27 வயசுல நான் போதகரா பிரதிஷ்டை செய்யப்பட்டேன், 30 வயசுல, நான் ஒரு மடாலயத்தின் தலைமை குருவாக பதவி உயர்வு பெற்றேன். அந்த நேரத்துல, நான் ரொம்பவே கர்வமுள்ளவனாய் இருந்தேன். ஒருபுறம், நான் ரொம்ப இளம் வயசுலயே ஒரு மடாலயத்தின் தலைமை குருவாகிட்டேன்னு நெனச்சேன், ஆனா அதோடு கூட, என்னோட பிரசங்கங்களக் கேட்ட பிறகு, எல்லா குருமார்களும் கத்தோலிக்கத் துறவிகளும் அவை ரொம்பவே பயனுள்ளவையா இருந்துச்சுன்னு சொன்னாங்க, அதனால, நான் வேதாகமத்தைப் புரிஞ்சுக்கிட்டதாகவும், கர்த்தரைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்ததாகவும், கர்த்தர் வரும்போது, நான் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்று, பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பேன்னும் நெனச்சேன்.

அது ஜூன் 2001 ஆவது வருஷத்துல, ஒரு சாயங்கால வேளையில, உதவி குரு வாங் அவர்கள் அவசரமா என்கிட்ட வந்து, ரெண்டு கிறிஸ்தவங்க வந்திருக்காங்க, அவங்க விசுவாசத்தைப் பத்தி ரொம்பவே ஆழமாக பேசினாங்கன்னு சொன்னாரு. அவங்க கிறிஸ்தவங்கன்னு கேள்விப்பட்டவுடனே, நான் அவங்களப் பெரிசா எடுத்துக்கல. கத்தோலிக்க திருச்சபைதான் உண்மையான திருச்சபைன்னும் இயேசுவின் இரட்சிப்புக்கான முழுமையான சத்தியத்தைக் கொண்டிருக்குதுன்னும் நான் நெனச்சேன். நான் பல வருஷங்களா இறையியல் பயிற்சி பெற்றிருந்தேன், வேதாகமத்துல ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொரு வரியாக படிச்சிருந்தேன். அவங்க வந்திருந்ததால, விசுவாசத்தப் பத்திய கேள்விய அவங்களோடு விவாதிக்கலாம்னும், அவங்கள கத்தோலிக்க மதத்திற்கு மாற்ற முடியுமான்னு பார்க்கலாம்னும் நான் நெனச்சேன். அதுக்கப்புறம், உதவிகுரு வாங் அவர்கள் அவங்களச் சந்திக்க என்னைய கூட்டிட்டுப் போனாரு. ஒருத்தர் சகோதரர் செங் ஷி, மற்றொருவர் சகோதரர் சியாங் குவாங். நான் அவங்கள சந்திச்ச பிறகு, அவங்க ஆறு, ஏழு வருஷங்களாதான் தேவனை விசுவாசிச்சிருக்காங்கங்கறத தெரிஞ்சுக்கிட்ட பிறகு, நான் அவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கல, ஆனாலும், அவங்கள கத்தோலிக்க திருச்சபையில சேர்ப்பதுக்காக, நான் கத்தோலிக்க வரலாற்றைப் பத்தி அவங்ககிட்ட பொறுமையாப் பேசினேன். நான் இன்னும் அவங்ககிட்ட, “நீங்க பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிப்பதுக்கான நிச்சமுள்ளவங்களா இருக்க விரும்புனா, நீங்க உண்மையான திருச்சபையான கத்தோலிக்க திருச்சபையில சேரணும்” அப்படின்னு சொன்னேன். ஆனா, அதைக் கேட்டதுக்கப்புறமா ரெண்டு சகோதரர்களும், அவங்க மதம் மாற விரும்பலங்கறது மட்டுமல்லாம, அவங்க திருச்சபையின் நிலையைப் பத்தி என்னோடு ஐக்கியங்கொண்டாங்க. சியாங் குவாங் சொன்னார், “கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள் ரெண்டு பேருக்குமே, திருச்சபையின் நிலை இப்போ பாழடஞ்சு இருக்குது. பிரசங்கியார்கள் வெளிச்சமே இல்லாமல் வேதத்தை வாசிச்சுப் பிரசங்கம் செய்யுறாங்க, புதியதும் ஆழமுமான பிரசங்கங்கள அவங்களால வழங்க முடியாது. அதோடு, சில பிரசங்கியார்கள் உலகக் காரியங்களப் பின்தொடர ஆரம்பிச்சு ஊழியத்தின் பாதைய விட்டு வெளியேறிட்டாங்க. விசுவாசிகள் எதிர்மறையானவங்களாவும் பலவீனமானவங்களாவும் உணருறாங்க, அவங்களோட விசுவாசம் குன்றிப் போயிருச்சு, கூடுகைகளின் போது, அவங்க தங்களோட அன்றாட வாழ்க்கையப் பத்தியோ எப்படி பணம் சம்பாதிப்பதுங்கறதப் பத்தியோ விவாதிக்குறாங்க, உத்தியோகத்தையும், தோழர்களையும் தோழியரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்துறாங்க. அநேக விசுவாசிகள் உலகப் போக்குகளப் பின்பற்றுறாங்க, சிலர் உலகத்துக்குத் திரும்பிப் போயிருக்காங்க. திருச்சபையின் தற்போதைய நிலை எப்படி இருக்குது நியாயப்பிரமாண காலத்தின் பிற்பகுதியில இருந்த தேவாலயத்தின் நிலையிலிருந்து அது எந்த வகையில் வேறுபட்டது? நியாயப்பிரமாண காலத்தின் கடைசியில, தேவாலயம் ரொம்பவே பாழடஞ்சு இருந்துச்சு. ஜனங்கள் தேவாலயத்துல வெளிப்படையா பணத்தை பரிமாறி, மாடு, ஆடு, புறா போன்றவற்ற வாங்கி வித்தாங்க, தேவாலயம் கள்ளர்களின் குகையாக மாறுச்சு. பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்துல கிரியை செஞ்சுக்கிட்டிருக்கலங்கறதுதான். பரிசுத்த ஆவியானவர் எங்கே கிரியை செஞ்சாரு? அந்த நேரத்துல, கர்த்தராகிய இயேசு தேவாலயத்துக்கு வெளியே புதிய கிரியையத் தொடங்கினாரு. பரிசுத்த ஆவியானவரோட கிரியை கர்த்தராகிய இயேசுவின் கிரியைக்கு மாற்றப்பட்டுச்சு” அப்படின்னு சொன்னாரு. “அது குளிர்காலத்துல ஒரு அறையில அடுப்பை வைத்திருப்பது போலானது. அந்த அறையில் அது இளஞ் சூட்டைத் தருது, ஆனா, அடுப்பை அகற்றிவிட்டால், அந்த அறை குளிர்ச்சியாகிடும். சபையைப் பொருத்தவரையும் அதுதான் உண்மை. பரிசுத்த ஆவியானவர் திருச்சபையில கிரியை செய்யும் போது, சகோதர சகோதரிகள் விசுவாசத்தைக் கொண்டிருக்காங்க, ஆர்வத்தோடு பின்தொடருறாங்க, ஆனா, பரிசுத்த ஆவியானவரோட கிரியைய இழந்தவுடனே, திருச்சபை பாழாகிடுது. எல்லா இடங்கள்லயும் உள்ள திருச்சபைகள் நியாயப்பிரமாண காலத்தின் பிற்பகுதியில் தேவாலயம் இருந்த அதே நிலையில்தான் இருக்குது. எல்லாமே பாழாகிப்போயிருக்குது. பரிசுத்த ஆவியானவரோட கிரியை மாற்றப்பட்டிருக்குதான்னு நீங்க சிந்தித்திருக்கீங்களா? பரிசுத்த ஆவியானவர் இன்னைக்கு எங்கே கிரியை செய்யுறாரு?” சகோதரர் சொன்னதக் கேட்டதும் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அவங்க திருச்சபை பாழடைந்ததை கர்த்தராகிய இயேசுவின் கிரியையோடு இணைப்பாங்கன்னு நான் நெனச்சுப் பார்க்கல. இந்தப் புரிதல் எனக்குப் புதுசா இருந்துச்சு. எங்களோட திருச்சபையில காரியங்களை நாங்க ஒருபோதும் இதுபோல புரிஞ்சுக்கிட்டதில்ல. திருச்சபையின் நிலை குறித்த அவங்களோட மதிப்பீட்டை நான் ஏத்துக்கிட்டேன். வேதத்தை வாசிப்பதையும் கர்த்தருடைய நாளைக் கொண்டாடுவதையும் மட்டுமே கவனத்துல வைக்குறாங்க, அநேக திருச்சபை உறுப்பினர்கள் அதையும் கவனத்துல வைத்திருப்பதில்ல. அவங்க அவிசுவாசிகளப் போலவே பணத்தையும் உலக இன்பங்களையும் தேடிப் போனாங்க, திருச்சபையில ஜனங்க குறைந்துகொண்டே இருந்தாங்க. இதுதான் உண்மை. திருச்சபை உண்மையிலயே பாழடஞ்சு இருந்துச்சு. அவங்களோட ஐக்கியம் வேதாகமத்துக்கும் உண்மைகளுக்கும் ஒத்துப்போவதையும், அவங்களோட புரிதல்ல சில ஆழமான அறிவு இருந்துச்சுங்கறதையும் நான் பார்த்தேன், அதனால, “இத்தனை வருஷங்களா நான் இந்த புரிதல் இல்லாமல் வேதாகமத்தை படிச்சிருக்கேன். ஆனா, விசுவாசிச்சு கொஞ்ச வருஷத்துக்குள்ளயே அவங்க இதைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. நான் அவங்கள குறைவா மதிப்பிட்டதப் போல தெரியுது” அப்படின்னு நான் நெனச்சேன். என்னால அவங்கள சம்மதிக்க வைக்க முடியலன்னும், அவங்களோட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியலன்னும் எனக்குத் தெரிஞ்சபோது, எனக்கு ஏற்படும் சங்கடத்தைத் தவிர்க்க, நான் சில வார்த்தைகளப் பேசிவிட்டு, சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்ட்டேன்.

ஆனா, பரிசுத்த ஆவியானவர் திருச்சபையின் ஆத்துமாவாய் இருக்காரு, அதனால, பரிசுத்த ஆவியானவர் திருச்சபையில கிரியை செய்யலேன்னா, அவரால வேறு எங்கு கிரியை செய்ய முடியும்? அப்படின்னு நான் நெனச்சேன் அந்த நேரத்துல எனக்கு அது புரியல, அதனால நான் அதைப் பத்தி அதிகமா யோசிக்கல. அதுக்கப்புறமா, அந்த ரெண்டு சகோதரர்களும் சில தடவ என்னைப் பார்க்க வந்தாங்க. கடைசியா பேசின தலைப்பைத் தொடர்ந்து, அவங்க, “புதிய வார்த்தைகளை வெளிப்படுத்தவும், ஜனங்களை நியாயந்தீர்க்கும் மற்றும் சுத்திகரிக்கும் கிரியையச் செய்யவும், பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து நம்மள விடுவிச்சு, பரலோகராஜ்யத்துக்குள்ள நம்மளக் கூட்டிட்டுப் போகவும், கர்த்தர் மனுவுருவானவரா திரும்பி வந்திருக்கிறாரு” அப்படின்னு சொன்னாங்க. அதைக் கேட்டதும் நான் ரொம்பவே எதிர்த்தேன். “நீ உண்மையிலயே வேதாகமத்தப் புரிஞ்சுக்கிறயா? கர்த்தராகிய இயேசு மீட்பின் கிரியைய முடிச்சிருக்குறாரு, அதோடு, அவர் ஜனங்களோட முடிவைத் தீர்மானிக்க மேகத்தின் மீது ஆவிக்குரிய சரீரத்தில் திரும்பி வருவாரு. புதிய கிரியைகளச் செய்ய அவர் மறுபடியும் மனுவுருவாகுவார்ங்கறது எப்படி சாத்தியமாகும்?” அப்படின்னு நான் நெனச்சேன். இந்த நேரத்துல, கொஞ்ச காலத்துக்கு முன்னாடிதான் கிழக்கத்திய மின்னலைப் பிரசங்கிக்கும் ஜனங்களைப் பத்தி ஒருத்தர் என்கிட்ட சொன்னது எனக்கு திடீர்ன்னு நினைவுக்கு வந்துச்சு. புதிய கிரியையச் செய்ய கர்த்தர் மனுவுருவானவராத் திரும்பி வந்திருப்பதா அவங்க சொன்னாங்க, அவங்களோட பிரசங்கங்கள் ரொம்பவே ஆழமானதா இருந்துச்சு. அவங்க ஒருவேளை கிழக்கத்திய மின்னலை நம்புவாங்களோன்னு நான் நெனச்சேன். கத்தோலிக்கத் திருச்சபைதான் பாரம்பரிய திருச்சபைன்னும், கிழக்கத்திய மின்னல் பத்தி இதற்கு முன்பு யாரும் கேள்விப்படாததால, அது ஒரு பாரம்பரிய திருச்சபையாக இருக்க முடியாது. அது ஒரு பாரம்பரிய திருச்சபை இல்லங்கறதுனால, அவங்களோட பிரசங்கங்கள் நிச்சயமா தப்பா இருந்துச்சுன்னும் நான் நெனச்சேன். அதனால, நான் குறுக்கிட்டு அவங்களிடம், “நீங்க கிழக்கத்திய மின்னலை நம்புறீங்களா? கர்த்தர் மனுவுருவாகி திரும்பி வந்து புதிய கிரியையச் செய்யுறாருன்னு சொல்றீங்க. இதுக்கு சாத்தியமே இல்லை. நான் அதை நம்புவதில்ல. நீங்க இந்த சுவிசேஷத்த எனக்குப் பிரசங்கிக்க விரும்புனால், உங்களோட முயற்சிய வீணடிக்காம பார்த்துக்கொள்ளுங்க!” அப்படின்னு சொன்னேன். ரெண்டு சகோதரர்களும் என்னோடு ஐக்கியங்கொள்வதுல ரொம்பவே பொறுமையா இருந்தாங்க, ஆனா, என்னோட கருத்துக்கள் ரொம்பவே வலுவா இருந்ததால, நான் அவங்களுக்குச் செவி கொடுக்கவே இல்ல. நான் கோபமா அவங்ககிட்ட, “நீங்க பிரசங்கிப்பது பாரம்பரிய நம்பிக்கைகளுடன் முரண்படுது, நான் அத இதுக்கப்புறமும் கேட்க விரும்பல!” அப்படின்னு சொன்னேன். ரெண்டு சகோதரர்களும் என்னோட நடத்தையப் பார்த்ததும், அவங்க என்னோடு ஐக்கியப்படுறத நிறுத்திக்கிட்டாங்க. அதுக்கப்புறமா, அவங்க இன்னும் ரெண்டு தடவ வந்தாங்க. ஆனா, என் உள்ளத்துல அவங்களுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமா, அவங்க எப்படி ஐக்கியங்கொண்டாலும், அவங்க சொன்னது எல்லாமே ஒரு காதுல போய் மறு காதுல வெளியேறுச்சு. கடைசியாக, மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்கிற புத்தகத்தின் ஒரு பிரதியை என்கிட்ட கொடுத்துட்டுப் போனாங்க. அதோடு, அதை ஆராய்ந்து பார்க்கும்படி என்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அவங்களோட நேர்மையான நடத்தையை பார்த்தபோது, மறுப்பு தெரிவிக்க நான் ரொம்பவே சங்கடப்பட்டேன், அதனால, நான் புத்தகத்தை வச்சிட்டுப் போக அனுமதிச்சேன்.

நான் முதல்ல புத்தகத்தப் பெற்றபோது கொஞ்சம் ஆர்வமா இருந்தேன், அதுல உண்மையிலயே என்ன இருக்குதுன்னு பார்க்க விரும்புனேன். அதனால, நான் புத்தகத்தத் திறந்தேன், பொருளடக்கத்தை வாசிச்சேன், அதுக்கப்புறம், சில பக்கங்களப் புரட்டி, திரித்துவம் இருக்கிறதா இல்லையா மனிதகுலத்தின் முடிவும் சென்றடையும் இடமும் என்பது போன்ற எழுதப்பட்ட சிலவற்றை நான் பார்த்தேன். இது எங்களோட பாரம்பரிய போதனைகள்ல இருந்து வேறுபட்டதா இருந்துச்சு. அதனால, புத்தகத்த மூடிவச்சிட்டு அதை மறுபடியும் பார்க்கல. மடாலயத்தின்குருவாக, மந்தையைப் பாதுகாப்பது எனது கடமையா இருந்துச்சு, குருமார்களும் கத்தோலிக்கத் துறவிகளும் ஏமாந்துவிடாமல் இருக்க, அவங்ககிட்ட சொல்லணும்னு, நான் நெனச்சேன். அதனால, புதியவன் ஒருவனது பின்வாங்குதலின் போது, “நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், பல கள்ள கிறிஸ்துகள் தோன்றுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, நான் கிழக்கத்திய மின்னலைச் சேர்ந்த ஜனங்கள சந்திச்சேன். தேவன் மனுவுருவாகி திரும்பி வந்து, புதிய கிரியைய செய்யுறார்னு சொன்னாங்க. இது எப்படி சாத்தியமாகும்? நான் அவங்களோட புத்தகத்தின் சில பக்கங்களைத் தேடிப் பார்த்தேன், அது கற்பிப்பது நமது பாரம்பரிய நம்பிக்கைகள்ல இருந்து வேறுபட்டதாய் இருக்குது. கிழக்கத்திய மின்னல் தேவனிடமிருந்து வரலன்னு நான் உறுதியா நம்புறேன்!” அப்படின்னு நான் சொன்னேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள எடுக்கவும், அவர்களத் தொடர்புகொள்ள வேண்டாம்னும், அவங்களோட புத்தகங்கள வாசிக்கவோ அவங்களோட வார்த்தைகளக் கேட்கவோ கூடாதுன்னும், அதோடு, திருச்சபை உறுப்பினர்கள் அவங்களால ஏமாற்றப்படாம பாதுகாப்பதுக்கு உறுதியா இருக்கணும்னும் நான் அவங்களுக்கு அறிவுறுத்தினேன். அந்த நேரத்துல, நான் சொன்னதைக் கேட்டதுக்கு பிறகு, குருமார்களும் துறவிகளும், இது ஆத்துமாக்கள இரட்சிக்கும் முக்கியமான விஷயம், திருச்சபை உறுப்பினர்கள் பாதுகாக்கப்படணும்னு சொன்னாங்க. அந்த நேரத்துல, நான் சொன்னதைக் கேட்டதுக்குப் பிறகு, எல்லோருமே ரொம்ப கீழ்ப்படிதலா இருந்ததைப் பார்த்தேன். நான் ரொம்பவே நீதியான காரியத்தைச் செய்தேன்னும், குறைந்த பட்சம் மந்தையைப் பாதுகாக்கும் குருமடத் தலைவரின் பொறுப்பையாவது நிறைவேற்றினேன்னும் நெனச்சேன். அதனால, நான் தேவனை எதிர்த்துக்கொண்டிருந்தேன்ங்கறத உணரல.

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் அப்புறம், சியாங் குவாங் என்னையப் பார்க்க வந்தாரு சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள நான் வாசிச்சேனான்னு என்கிட்ட கேட்டாரு. “சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் எங்களோட பாரம்பரிய போதனைகள்ல இருந்து வேறுபடுது, அதனால, நான் அவற்றை ஆராய மாட்டேன், வேறு யாரையும் ஆராய்ந்து பார்க்க அனுமதிக்கவும் மாட்டேன். ஏன்னா, இது விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயம். உங்களோட பிரசங்கத்தக் கேட்டு நாங்க ஒருபோதும் கர்தத்ருக்குத் துரோகம் செய்ய மாட்டோம்” அப்படின்னு நான் சொன்னேன். சியாங் குவாங் இதைக் கேட்டதுக்கப்புறமா, பொறுமையா என்னோடு ஐக்கியங்கொண்டு, “நீங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள வாசிக்கல. உங்களோட திருச்சபையின் பாரம்பரிய போதனையிலிருந்து வேறுபட்ட சில விஷயங்களை மட்டுமே நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்க, அதனால, இது கர்த்தரோட வார்த்தையும் கிரியையும் இல்லன்னு முடிவு செஞ்சு, ஆராய மறுத்துட்டீங்க. இது ரொம்பவே பொறுப்பில்லாததுன்னு உங்களுக்குத் தோணலையா? சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: ‘தேவன் மீதான விசுவாசத்தின் பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உடனடியாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம்; மேலும் என்னவென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தில் பொறுப்பற்றும் சிந்தனையின்றியும் இருக்காதீர்கள். குறைந்தபட்சம், தேவனை விசுவாசிப்பவர்கள் தாழ்மையும் பயபக்தியும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முட்டாள்தனமானவர்கள் மற்றும் அறிவற்றவர்கள். சத்தியத்தைக் கேட்டும், கவனக்குறைவாக முடிவுகளுக்குச் செல்பவர்களும் அதைக் கண்டனம் செய்பவர்களும் ஆணவத்தால் சூழப்படுகிறார்கள். இயேசுவை விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களைச் சபிக்கவோ கண்டிக்கவோ தகுதி பெறவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). கர்த்தரை விசுவாசிக்க, தேவனுக்குப் பயப்படுற இருதயத்த நாம பெற்றிருக்கணும் என்பதை நாம் பார்க்கலாம். தேவனுடைய வார்த்தைகளும் கிரியையும் நம்மளோட கருத்துக்களுக்கோ கற்பனைகளுக்கோ ஒத்துப் போகலங்கறதப் பார்க்கும்போது, கண்மூடித்தனமாக நம்மால கண்டனம் செய்ய முடியாது. தாழ்மையும் தேவனுக்கு முன்பாக தேடும் மனப்பான்மையும் நம்மிடத்துல இல்லேன்னா, நாம எப்போதுமே தேவனுடைய புதிய வார்த்தைகளையும் புதிய கிரியையயும் நம்மளோட கற்பனைகளால மதிப்பிட்டால், தேவனை எதிர்ப்பது, கண்டனம் செய்வது ஆகிய பெரிய பாவத்தைச் செய்வது ரொம்பவே சுலபமானது. இது அப்படியே, கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்ததைப் போலவும் அவருடைய வார்த்தைகளும் கிரியைகளும் நியாயப்பிரமாணத்துக்கு அப்பாற்பட்டவையாய் இருக்குதுன்னு பரிசேயர்கள் கண்டதைப் போலவும் இதுவும் இருக்குது. அவங்க வேண்டுமென்றே கர்த்தராகிய இயேசுவுக்கு எதிராக எதையாவது கண்டுபிடிச்சு, அவரைக் கண்டனம் செஞ்சாங்க, கடைசியா, கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறையுமாறு கூட்டத்தை வஞ்சித்தாங்க. இது தேவனுடைய மனநிலையை கடுமையாக புண்படுத்துச்சு. அவங்க கடைசியா சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாங்க. இது இரத்தத்துலயே ஊறிப்போன மறக்க முடியாத பாடம். இன்று, கர்த்தர் திரும்பிவரும் விஷயத்துல, நாம் அதை எச்சரிக்கையுடன் கருதணும், ஏன்னா, நாம் அதைத் தவறாக் கண்டனம் செஞ்சா, நாம பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கலாம். கர்த்தராகிய இயேசு ரொம்ப காலத்துக்கு முன்பாகவே சொன்னாரு, ‘மக்களுடைய ஒவ்வொரு பாவங்களும், பழிப்புரைகளும் மன்னிக்கப்படும், ஆனால் தூய ஆவிக்கு எதிராகப் பேசுபவர்கள் மன்னிப்புப் பெற மாட்டார்கள்(மத்தேயு நற்செய்தி 12:31). இந்த பாவத்தை செய்வது பயங்கரமான காரியமா இருக்கும்!” அப்படின்னு சொன்னாரு. “சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றி கிரியை செய்திருப்பதால, பல்வேறு மதப் பிரிவுகளின் தலைவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைய கண்மூடித்தனமா கண்டனம் செஞ்சிருக்காங்க. சிலர் சர்வவல்லமையுள்ள தேவனை அவதூறாகவும் தூஷணமாகவும் கூட பேசியிருக்காங்க. கடுமையாக எதிர்த்தவர்கள்ல பலர் தண்டிக்கப்பட்டாங்க. நாம கவனமா இல்லேனா, நம்மளோட இலக்கை சுலபமா இழக்க நேரிடும்” அப்படின்னு சொன்னாரு.

அந்த நேரத்துல, “நான் என் திருச்சபை உறுப்பினர்களைப் பத்தி நினைக்குறேன், அவங்க வஞ்சிக்கப்படாம பாதுகாக்கிறேன். இது எப்படி கர்த்தருக்கு இடறல் உண்டாக்கும்?” அப்படின்னு நான் நெனச்சேன். ஆனா, நான் அதைப் பத்தி கவனமாக யோசிச்சப்ப, அந்த சகோதரன் சொன்னது நியாயமானதுதான்னு உணர்ந்தேன். கிழக்கத்திய மின்னலைப் பத்தி உண்மையிலயே எனக்கு அதிகமா தெரியாது, ஆனாலும் கூட, நான் அதைக் கண்டனம் செய்ய ரொம்ப வேகமா செயல்பட்டேன், நான் போதகர்களுக்கும் துறவி களுக்கும் இதையே பிரசங்கிச்சேன். அவர் சொன்னதப் போல, நான் தவறுதலாக கண்டனம் செஞ்சிருந்தால் அது தேவனுக்கு இடறல் உண்டாக்கும். அதனால ஏற்படும் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை. அதனால, நான் சியாங் குவாங் கிட்ட, “நீங்க சொன்னதை நான் சிந்திச்சுப் பார்க்கவே இல்ல. ஆனா, எதிர்காலத்துல நான் எச்சரிக்கையாக இருப்பேன்” அப்படின்னு சொன்னேன். ஆனா, எங்களோட திருச்சபையில் நடந்த ஒரு காரியம் என்னைய சிந்திக்க வச்சுச்சு. ஆனா, எங்களோட திருச்சபையில் நடந்த ஒரு காரியம் என்னைய சிந்திக்க வச்சுச்சு. ஒருமுறை, நான் எங்களோட பேராயரை பார்த்தேன், அவர் என்கிட்ட, எங்கள் மறைமாவட்டத்தில் உள்ள பல குருமார்கள் காணிக்கைகளை ஒப்படைக்காம இருக்க சாக்குப்போக்குச் சொல்லுறாங்க, அதோடு, சில குருமார்கள் ஒழுக்கக்கேடான காரியங்கள்ல ஈடுபட்டு மனந்திரும்ப மறுத்தாங்க. ஒரு வயதான போதகர் தனிப்பட்ட முறையில, ஒரு தொழிற்சாலையை நிறுவிய வேறு ஒருவருக்குக் கொடுக்க அவர் மறைமுகமா காணிக்கைகளத் தவறாப் பயன்படுத்தினதா வெளிப்படுத்தினாரு. நான் இதைக் கேட்டப்ப, “ஒரு குருவா, காணிக்கைகளை வீணாக்குவதும் மோசடி செய்வதும், ஒழுக்கக்கேடான செயல்கள்ல ஈடுபடுவதும் கர்த்தருக்கு எதிரான மிகப் பெரிய பாவங்கள். கர்த்தர் சொல்லியிருக்கிறார், ‘நீங்கள் மனம் மாறாவிட்டால் எல்லோரும் அவ்வாறே அழிந்து போவீர்கள்(லூக்கா 13:3). குருமார்கள் பாவத்துல வாழ்ந்து ஒருபோதும் மனந்திரும்பாம இருந்தால், அவங்க பரலோகராஜ்யத்துக்குள்ள எப்படி பிரவேசிப்பாங்க? முன்பெல்லாம், வெகு சில குருமார்கள் மட்டுமே இப்படிச் செஞ்சாங்க. ஆனா, இப்போ, நிறைய குருமார்கள் சீரழிஞ்சுபோயிட்டாங்க” அப்படின்னு நெனச்சேன். சியாங் குவாங் என்கிட்ட பேசியதான, திருச்சபையின் பாழடைதலப் பத்தி என்னால் நினைக்காம இருக்க முடியல. “கடந்த காலத்துல, பரிசுத்த ஆவியானவர் திருச்சபையில கிரியை செஞ்சப்ப, நாம பாவம் செஞ்சப்ப, பரிசுத்த ஆவியானவரால தண்டித்துத் திருத்தப்பட்டோம். ஆனா, இப்ப, நிறைய குருமார்கள் தேவனுக்கு எதிராக பாவம் செய்யுறாங்க. பரிசுத்த ஆவியானவரிடமிருந்து ஏன் எந்த தண்டித்துத் திருத்தலும் இல்லை? பரிசுத்த ஆவியானவர் நிஜமாவே திருச்சபையில கிரியை செய்வதில்லையா?” அப்படின்னு நான் நெனச்சேன். என்னால அதை புரிஞ்சுக்க முடியல.

அதுக்கப்புறம், கொஞ்ச நாட்கள் கழிச்சு, சியாங் குவாங்கும் மத்தவங்களும் மறுபடியும் என்கிட்ட வந்தாங்க. அந்த நேரத்துலயும் நான் அவங்கள எதிர்த்துக்கிட்டுதான் இருந்தேன். “புதிய கிரியையச் செய்யறுதுக்காக கர்த்தர் மனுவுருவானவரா திரும்பி வந்திருக்கிறாருன்னு நீங்க எப்போதும் சாட்சியளிக்குறீங்க. இப்படிச் சொல்றதுக்கு வேதாகமத்துல ஏதாவது ஆதாரம் இருக்குதா? இன்னைக்கு உங்ககிட்ட நேரடியா சில கேள்விகளக் கேட்கலாம்னு நினைக்குறேன். அவைகளுக்கு உங்களால பதில் சொல்ல முடியலேன்னா, இதுக்கப்புறமா நாம் பேசாம இருப்போம்” அப்படின்னு நான் நெனச்சேன். அதனால, நான் அவங்ககிட்ட, “கடைசி நாட்கள்ல கர்த்தர் மேகத்தின் மேல் ஆவிக்குரிய சரீரத்துல திரும்புவார்னு வேதாகமம் சொல்லுது. ஆனா, அவர் புதிய கிரியையச் செய்ய மனுவுருவானவரா திரும்பி வந்திருக்கிறாருன்னு நீங்க சாட்சி சொல்றீங்க. நீங்க இதைச் சொல்வதுக்கான அடிப்படை என்ன?” அப்படின்னு கேட்டேன். சியாங் குவாங் பதிலளிச்சாரு, “கடைசி நாட்கள்ல, மனுவுருவான தேவனுடைய வருகை ரொம்ப காலத்துக்கு முன்பே தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டது, கர்த்தராகிய இயேசுவின் சொந்த தீர்க்கதரிசனங்கள்ல ஆதாரம் இருக்குது. உதாரணமா, லூக்கா 17:24-25 சொல்லுது, ‘மின்னல் ஆகாயத்தில் ஒரு திசையில் இருந்து இன்னொரு திசை வரை மின்னுவது போல மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் நிராகரிக்கப்பட வேண்டும்.’ ‘ஆகையால் நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில் நீங்கள் நினைக்காத நேரத்தில் மானிட மகன் வருவார்(மத்தேயு நற்செய்தி 24:44). ‘மானிட மகன் வரும் காலத்திலும் நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அதுபோலவே நடக்கும்(மத்தேயு நற்செய்தி 24:37). உங்களால பார்க்க முடியுது, இந்த வசனங்கள் எல்லாமே ‘மானிட மகன்’ அப்படின்னு குறிப்பிடுது. ‘மானிட மகன்’ அப்படின்னு இங்கே எதைக் குறிப்பிடுகிறார்? கர்த்தராகிய இயேசு மனுஷ குமாரனாகவும் மனுவுருவான தேவனாகவும் இருக்காருன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இதுல எந்த சந்தேகமும் இல்ல. மனுஷ குமாரன் என்பது ஒரு சாதாரண மனுஷனா ஆவதுக்கு மாம்சத்தை அணிந்திருக்கும் தேவனுடைய ஆவியைக் குறிக்குது. அதாவது தேவனுடைய மனுவுருவாதலைக் குறிக்குது. அதனாலதான், ‘மானிட மகன் வரும்’ அப்படின்னு கர்த்தர் தீர்க்கதரிசனமா சொல்லுவது அவர் திரும்பி வரும்போது, அது மனுவுருவான மாம்சமாக இருக்கும்ங்கறதக் காட்டுது. அதோடு கூட, வேதம் இன்னும் சொல்லுது: ‘ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் நிராகரிக்கப்பட வேண்டும்.’ இதுக்கு அர்த்தம் என்ன? கர்த்தர் திரும்பி வரும்போது, ஜனங்கள் அவரை அறியவோ, அடையாளம் காணவோ மாட்டாங்க முழு தலைமுறையும் அவரைக் கண்டனம் செஞ்சு நிராகரிப்பாங்கங்கறதுதான் இதோட அர்த்தம். கர்த்தர் மனுஷகுமாரனாகும்போதுதான், அவர் இந்தத் துன்பங்களை அனுபவிச்சு, இந்தத் தலைமுறையால நிராகரிக்கப்பட முடியும்ங்கறத இது காட்டுது. ஒரு யூதரின் உருவ அடையாளத்துடன், மாட்சிமையானவராகவும், மகத்தான மகிமையில் எல்லாருக்கும் தோன்றுபவராகவும் அவர் ஆவிக்குரிய சரீரத்துல திரும்பி வருவாரானால், அவரைப் பார்த்ததும் யார் பணிந்து குனிந்து ஆராதிக்காம இருப்பாங்க? அப்படின்னா, அவரால் எப்படிப் பெரிய பாடுகளை அனுபவிக்க முடியும்? இந்தத் தலைமுறையால அவர் எப்படி நிராகரிக்கப்படுவாரு? அதனால, கடைசி நாட்கள்ல கர்த்தர் மனுவுருவான மனுஷ குமாரனா திரும்பி வருவாருங்கறது உறுதி” அப்படின்னு பதிலளிச்சாரு.

அவர் சொன்ன இந்த ஐக்கியத்தைக் கேட்டதும், நான் அதிர்ச்சியடஞ்சேன். அவரோட ஐக்கியம் முழுவதுமே நியாயமானதும் சிந்திக்க வைப்பதுமா இருந்துச்சு! மத உலகத்துல உள்ள இறையியலாளர்களும் ஆவிக்குரிய பிரமுகர்களுமான யாராலும் கர்த்தராகிய இயேசுவின் இந்த தீர்க்கதரிசனத்த தெளிவாக விளக்க முடியல. மனுஷர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத கர்த்தரின் மறைபொருள்தான் அதுன்னு அவங்க எல்லாருமே சொன்னாங்க. நான் பல வருடங்களாக வேதாகமத்த படிச்சேன். ஆனாலும் இந்த வசனத்த பார்க்கும்போதெல்லாம் எனக்குப் புரியல. கர்த்தர் ஆவி வடிவில் வந்ததால், ஏன் துன்பப்படணும் என்பது எனக்குத் தெரியல. கிழக்கத்திய மின்னலைச் சேர்ந்த ஜனங்களால இந்த தீர்க்கதரிசனத்தின் மறைபொருள விளக்க முடியும்ங்கறது எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு. அவங்களால விஷயங்கள மிகத் தெளிவாகப் பார்க்க முடியுதுங்கறது அவங்களப் பத்திய எனது எண்ணத்த முழுவதுமா மாற்றுச்சு! “கர்த்தர் உண்மையிலயே மனுவுருவானவரா திரும்பி வர்ராறா?” அப்படின்னு நான் ஆச்சரியப்பட்டேன். எப்படியிருந்தாலும், கர்த்தர் மேகத்தின் மீது வருவார்ன்னு வேதாகமத்துல உள்ள பல தீர்க்கதரிசனங்கள நான் நெனச்சப்போ, என்னால இன்னும் அதை ஆழமா அறிஞ்சிக்க முடியல. அதனால நான், “கடைசி நாட்கள்ல, எல்லா ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்க்க கர்த்தர் ஆவி வடிவில் இறங்கி வருவார்னு வேதாகமத்துல உள்ள பல தீர்க்கதரிசனங்கள் சொல்லுது. உதாரணமாக, கர்த்தர் சொன்னாரு, ‘அப்பொழுது, மானிடமகனின் அடையாளம் வானத்தில் காணப்படும். பின், மானிடமகன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதை மண்ணுலகிலுள்ள எல்லா குலத்து மக்களும் கண்டு புலம்புவார்கள்(மத்தேயு நற்செய்தி 24:30). ‘இதோ! அவர் மேகங்களின் மேல் வருகிறார். அனைவரும் அவரைக் காண்பார்கள், அவரைக் குத்தியவர்களும் காண்பார்கள். அவர்பொருட்டு மண்ணுலகக் குலத்தவர்கள் எல்லோரும் புலம்புவார்கள்(திருவெளிப்பாடு 1:7). கர்த்தருடைய வருகை உண்மையிலயே மனுவுருவான மாம்சத்துல இருந்தால், இந்த தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும்?” அப்படின்னு அவர்கிட்ட கேட்டேன்.

சியாங் குவாங் ஐக்கியப்பட்டார், “கடைசி நாட்கள்ல அவர் திரும்பி வரும்போது, அவர் ஆவிக்குரிய வடிவத்தில் மேகத்தின் மீது இறங்கி, எல்லா தேசங்களையும் ஜனங்களையும் பகிரங்கமாக நியாயந்தீர்ப்பார்ன்னு கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனம் உரைக்கிறாரு. இந்த தீர்க்கதரிசனங்கள் நிச்சயம் நிறைவேறும். ஆனா, முதல்ல தேவன் இரகசியமா மனுவுருவானவரா வர்றாரு, அதுக்கப்புறம், மேகத்தின் மீது எல்லாருக்கும் பகிரங்கமாகத் தோன்றுவாரு. வேறு வார்த்தைகள்ல சொல்லனும்னா, கர்த்தர் ரெண்டு வழிகள்ல திரும்பி வர்றாரு. முதலாவதா, அவர் சத்தியத்த வெளிப்படுத்தவும் அதோடு கூட ஜனங்களை நியாயந்தீர்க்கவும் சுத்திகரிக்கவும் ஒரு கூட்ட ஜெயங்கொள்பவர்களை உருவாக்கவும் மாம்சத்துல வர்றாரு. பிறகு, பெரும் பேரழிவு இறங்கி வருது, இரகசியமாக தேவனுடைய மனுவுருவானவரின் கிரியை நிறைவேறுது. பேரழிவுக்குப் பிறகு, தேவன் மகிமையில் எல்லாருக்கும் பகிரங்கமாகத் தோன்றுறாரு, நல்லவர்களுக்கு வெகுமதி அளிக்கிறாரு, பொல்லாதவர்களைத் தண்டிக்கிறாரு. அதனால, தேவனுடைய மனுவுருவாதல் காலத்துலயும் இரகசிய கிரியை காலத்துலயும், தேவனை எதிர்த்து, கண்டனம் செஞ்சு, அதுக்கப்புறம் மனந்திரும்ப மறுப்பவங்க, தங்களுக்கான இரட்சிப்பின் வாய்ப்பை முழுவதுமா இழக்குறாங்க கடைசியா, பேரழிவுல அழுது தங்களோட பற்களைக் கடிக்குறாங்க. இது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுது: ‘இதோ! அவர் மேகங்களின் மேல் வருகிறார். அனைவரும் அவரைக் காண்பார்கள், அவரைக் குத்தியவர்களும் காண்பார்கள். அவர்பொருட்டு மண்ணுலகக் குலத்தவர்கள் எல்லோரும் புலம்புவார்கள்(திருவெளிப்பாடு 1:7).”

அவருடைய ஐக்கியத்தக் கேட்டதுக்கு அப்புறமா, என்னோட இருதயம் பிரகாசமா இருப்பதப் போல் உணர்ந்தேன். கர்த்தருடைய இரண்டாம் வருகையானது மேகத்தின் மீது பகிரங்கமாக இறங்குவதாக மட்டும் இருப்பதில்ல. பகிரங்கமாக வருவதற்கு முன்பே, அவர் முதல்ல இரகசியமாக மனுவுருவானவராக வர்றாரு. கர்த்தர் தோன்றுகிற ரெண்டு வழிகள் இவைதான். கடந்த காலத்துல, கர்த்தர் தோன்றுகிற வழியில ஒன்று மட்டுந்தான் எனக்குத் தெரிந்திருந்துச்சு. எனக்கு ஒருதலைப்பட்சமான புரிதல் இருப்பதை உணர்ந்தேன். வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தின் மறைபொருளை கிழக்கத்திய மின்னல் வெளிப்படுத்தியதை, அப்போதுதான் நான் பார்த்தேன், அவங்களோட விளக்கம் நியாயமானதாகவும் தர்க்க ரீதியானதாகவும் இருந்துச்சு, அதனால, அது தேவனிடமிருந்து வந்திருக்கலாம்ன்னும் அது விசாரிப்பதுக்கு தகுந்ததுதான்னும் உணர்ந்தேன். அதுக்கப்புறம், அவங்களோடு ஐக்கியங்கொள்ள நான் தயாராக இருந்தேன், அதோட, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள எதிர்க்காம வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைக் கொஞ்ச காலமா வாசிச்ச பிறகு, என்னோட உள்ளத்தின் ஆழத்துல இருந்து, கர்த்தர் மனுவுருவான மாம்சமாக திரும்பி வருவார்னு நான் உறுதியாக நம்புனேன். ஆனா, நான் இன்னும் குழப்பத்தில் இருந்தேன். மனுவுருவாகும் விஷயத்தைப் பத்தி நான் உறுதியாக இருந்தேன், ஆனா, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுன்னு என்னால எப்படி உறுதியா சொல்ல முடியும்? கத்தோலிக்க திருச்சபைதான் உண்மையான திருச்சபைன்னும், இயேசுவின் இரட்சிப்பின் முழு சத்தியத்தையும் கொண்டிருக்குதுன்னும் நான் மறுபடியும் நெனச்சுப் பாத்தேன். கத்தோலிக்க மதத்தின் முலமாக மட்டுமே நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும்னு எனக்குத் தெரிஞ்சிருந்துச்சு. நான் சர்வவல்லமையுள்ள தேவனை ஏத்துக்கிட்டு, என் விசுவாசத்துல வழிதவறிப் போனால், நான் கர்த்தருக்குத் துரோகம் செய்வேன். தேவனுடைய ராஜ்யத்துக்குள்ள நான் எப்படி பிரவேசிப்பேன்? இந்தக் கேள்வி எனக்குப் புரியல, அதனால நான் இன்னும் கொஞ்சம் சங்கடமா உணர்ந்தேன். யுவான் யோங்ஜின் குருவும் கூட கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைய ஏத்துக்கிட்டார்னு நான் கேள்விப்பட்டேன். அதனால, நான் அவரைப் பார்க்கப் போக விரும்புனேன். அவர் முன்பு ஒரு கத்தோலிக்கரா இருந்தாரு. எங்களோட போதனைகளும் கருத்துக்களும் ஒரே மாதிரியாக இருந்துச்சு. அதனால அவர் பிரச்சினையை எப்படிக் கையாண்டாருன்னு நான் கேட்க விரும்புனேன். கொஞ்ச நாட்களுக்கப்புறம், யோங்ஜின்னைப் பார்த்தேன் என்னோட கவலைகள் எல்லாத்தையும் அவர்கிட்ட சொன்னேன்.

அதைக் கேட்டதுக்குப் பிறகு, அவர் என்னோடு ஐக்கியங்கொண்டு, “உன்னைப் போலவே எனக்கும் அதே கவலைதான் இருந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பது கர்த்தராகிய இயேசுவுக்குத் துரோகம் செய்வதா இருக்கும்னு நான் கவலைப்பட்டேன். ஆனா, இந்தக் கேள்வியப் பொருத்தவரை, சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே ஆவியாய் இருக்கிறார்களா இல்லையான்னும் கிரியை செய்வதில் அவர்கள் ஒரே தேவன்தானா இல்லையான்னும் தெரிஞ்சுக்கறதுதான் முக்கியம். நியாயப்பிரமாணத்தின் காலத்துல, யேகோவா கிரியை செஞ்சாரு, கிருபையின் காலத்துல, கர்த்தராகிய இயேசு கிரியை செஞ்சாரு. தேவனுடைய நாமம் மாறினாலும், அவர் செய்த கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், இயேசுவும் யேகோவாவும் ஒரே தேவன் இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா? கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பது யேகோவாவுக்குத் துரோகம் செய்வதுன்னு உங்களால சொல்ல முடியுமா? நிச்சயமா சொல்ல முடியாது. அதனால, அவங்க ஒரே தேவன்தானா இல்லையாங்கறதத தீர்மானிப்பது அவங்களோட நாமத்தின் அடிப்படையில இல்லை. சர்வவல்லமையுள்ள தேவனால சத்தியத்த வெளிப்படுத்த முடியுதா இல்லையாங்கறதையும் மனித குலத்தை இரட்சிக்கும் கிரியைய செய்ய முடியுதா இல்லையாங்கறதையும் பார்ப்பதுதான் ரொம்பவே முக்கியமான விஷயம். அவர் சத்தியத்தையும் தேவனுடைய சத்தத்தையும் வெளிப்படுத்தி, ஜனங்கள இரட்சிக்கும் கிரியையச் செய்வாரானால், அப்போ, அவர்தான் தேவன். நாம எல்லாருக்கும் தெரியும் பூமியில் வாழும் ஜனங்களை வழிநடத்த நியாயப்பிரமாண காலத்துல, யேகோவா நியாயப்பிரமாணங்களையும் கட்டளைகளையும் அறிவிச்சாரு, அதன் மூலமா, பாவம்ன்னா என்னங்கறதையும், பாவங்களை நிவர்த்தி செய்ய எப்படி பலிகளைச் செலுத்துவது, எப்படி தேவனை ஆராதிப்பதுங்கறதையும் அவங்களால தெரிச்சுக்க முடிஞ்சுது. ஆனா, நியாயப்பிரமாண காலத்தின் இறுதியில, ஜனங்கள் அதிகமதிகமா பாவங்கள செஞ்சாங்க, எவ்வளவு காணிக்கைகள செலுத்தினாலும், அது அவங்களுக்குப் பரிகாரம் செய்ய முடியல. எல்லாருமே நியாயப்பிரமாணத்தால ஆக்கினைக்குள்ளாகி கொலைசெய்யப்படும் ஆபத்துல இருந்தாங்க. அதனால், தீர்க்கதரிசிகள் மூலம் யேகோவா தீர்க்கதரிசனம் உரைச்சாரு, ‘இதோ, ஒரு கன்னி கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார்கள்(மத்தேயு நற்செய்தி 1:23). ‘ஏனென்றால் ஒரு பாலகன் நமக்குப் பிறந்திருக்கிறார்; ஒரு மகன் நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆளுகை அவர் தோள்மேல் இருக்கும்(ஏசாயா 9:6). மனிதகுலத்தை மீட்கும் பாவநிவாரண பலியாக மேசியா வருவார்னு யேகோவா இஸ்ரவேலர்களுக்கு தீர்க்கதரிசனத்தின் மூலமா சொன்னாரு, அதுக்கப்புறம், வாக்குத்தத்தத்தின்படியே தேவன் கர்த்தராகிய இயேசுவாக மனுவுருவாகி வந்தாரு, நியாயப்பிரமாண கிரியையின் அடிப்படையில், மனிதகுலத்தை மீட்கும் பணியைச் செஞ்சாரு. கர்த்தராகிய இயேசு அநேக சத்தியங்கள வெளிப்படுத்தி, ஜனங்களுக்கு மனந்திரும்புவதற்கான வழியைக் கொடுத்தாரு. அதுக்கப்புறம் நித்திய பாவநிவாரண பலியாக மனிதகுலத்துக்காக சிலுவையில் அறையப்பட்டாரு. அதன் மூலமா, முழு மனித இனத்தையும் மீட்கும் பணியை நிறைவு செய்யுறாரு. அதுக்கப்புறமா, ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை மட்டுமே தங்களோட இரட்சகரா ஏத்துக்கணும். அவங்க பாவம் செய்தால், கர்த்தராகிய இயேசுவினிடத்துல மனந்திரும்பணும். அப்போது, கர்த்தர் அவங்களோட பாவங்கள மன்னிப்பாரு. நியாயப்பிரமாணத்த மீறியதுக்காக அவங்க கொல்லப்பட மாட்டாங்க, அதோடு, ஜெபிக்கவும், தேவனுடைய கிருபையையும் ஆசீர்வாதத்தையும் பெறவும் ஜனங்கள் தேவனுக்கு முன்பாக வருவதுக்கு தகுதி பெற்றவங்களா ஆனார்கள். இப்படி, கர்த்தராகிய இயேசுவின் கிரியை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள நிறைவேற்றுச்சு. அது நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்துல இருந்து ஜனங்கள விடுவிச்சு, நியாயப்பிரமாண காலத்த முடிவுக்கு கொண்டுவந்து, மனிதகுலத்தை கிருபையின் காலத்துக்குள்ள கொண்டு வந்துச்சு. கர்த்தராகிய இயேசுவே இரட்சகராய் இருந்தாரு, மேசியா வந்தாரு, இயேசுவும் யேகோவாவும் ஒரே ஆவியாகவும் ஒரே தேவனாகவும் இருந்தார்கள்ங்கறத இது நிரூபிக்குது. இது கர்த்தராகிய இயேசு சொன்னதப் போல இருக்குது, ‘நான் பிதாவுக்குள் இருக்கிறேன்; பிதா எனக்குள் இருக்கிறார்(யோவான் நற்செய்தி 14:11). ‘நானும் பிதாவும் ஒன்றே(யோவான் நற்செய்தி 10:30). கர்த்தராகிய இயேசு மீட்பின் பணியை முடிச்சதுக்கப்புறமா, கர்த்தரை விசுவாசிப்பவங்களோட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ஆனா, ஜனங்களோட பாவ சுபாவம் சரிசெய்யப்படல. அவங்க இன்னும் தொடர்ந்து பாவம் செஞ்சு தேவனை எதிர்க்கக் கூடும். அதோடு, பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து முற்றிலும் விடுபடல. தனிப்பட்ட லாபத்துக்காக நாம இன்னும் பொய் சொல்லி ஏமாத்தலாம்னு நினைக்கிறோம். நம்மால் இன்னும் பொறாமைப்படவும், மத்தவங்கள வெறுக்கவும், அதிகாரத்துக்காகப் போராடவும் முடியும். வியாதியோ அல்லது பேரிடரோ வரும்போது, நம்மால் தேவனைக் குறை கூறவும், தேவனை மறுதலிக்கவும், தேவனுக்குத் துரோகம் செய்யவும் கூட முடியும். வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கு, ‘பாவம் செய்யும் ஒவ்வொருவரும் பாவத்துக்கு அடிமை. வீட்டில் அடிமைக்கு நிரந்தர இடம் இல்லை; மகனுக்கு அங்கு நிரந்தரமாய் இடம் உண்டு(யோவான் நற்செய்தி 8:34-35). ‘தூய்மையாக இருங்கள், ஏனெனில், நான் தூயவராக இருக்கிறேன்(லேவியர் 11:44). தேவன் பரிசுத்தமானவர், தம்முடைய வார்த்தைகள முழுமையா கேட்டு பரிசுத்தத்தை அடையக்கூடிய ஒருவரைத்தான் அவர் விரும்புறாரு, ஆனா, பெரும்பாலும் நாம் இன்னும் பாவத்தால நெறஞ்சவங்களாவும், அசுத்தமுள்ளவங்களாவும் சீர்கெட்டவங்களாவும் இருக்கிறோம், பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து விடுபடல, பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க தகுதியற்றவங்களா இருக்கோம். அதனால, சத்தியத்தை வெளிப்படுத்தவும், கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்யவும். பாவத்திலிருந்தும் சாத்தானோட ஆதிக்கத்துல இருந்தும் நம்மள இரட்சிக்கவும் தேவனுடைய ராஜ்யத்துக்கு நம்மள அழைத்துச் செல்லவும் தாம் மீண்டும் வருவதா கர்த்தராகிய இயேசு பலமுறை தீர்க்கதரிசனம் சொன்னாரு. அது கர்த்தராகிய இயேசு சொன்னதப் போல இருக்குது, ‘நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன: ஆனால் இப்போது உங்களால் அவற்றை தாங்க முடியாது. ஆனால் உண்மையின் ஆவியாகிய அவர் வரும்போது அவர் எல்லா உண்மையையும் உங்களுக்கு போதிப்பார்(யோவான் நற்செய்தி 16:12-13). ‘என் சொற்களைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடிக்காதவர்களுக்குத் தண்டனையைத் தீர்ப்பாக நான் அளிப்பதில்லை, ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு அளிக்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன். என்னைப் வெறுத்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவர்களை நியாயம் தீர்க்கும் ஒன்று உண்டென்றால் அது என் வார்த்தையே ஆகும். இறுதி நாளில் அவர்களை அது நியாயம் தீர்க்கும்(யோவான் நற்செய்தி 12:47-48). அதோடு 1 பேதுரு 4:17ல் சொல்லப்பட்டிருக்குது, ‘ஏனென்றால், தீர்ப்புக்கான காலம் கடவுளுடைய வீட்டாரிடத்தில் தொடங்க வேண்டும்’ மனிதகுலத்தை சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் தேவையான எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்தவும் கடைசி நாட்கள்ல, வாக்களித்தபடி, கர்த்தராகிய இயேசு, சர்வவல்லமையுள்ள தேவனாக, மாம்சத்தில் திரும்புறாரு, ஜனங்களோட பாவ சுபாவத்த சரிசெய்யவும், மனிதகுலத்தை எல்லா சத்தியத்துக்குள்ளும் வழிநடத்தவும் கர்த்தராகிய இயேசுவின் கிரியையின் அடிப்படையில, அவர் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்யுறாரு. இது கர்த்தராகிய இயேசுவின் தீர்க்கதரிசனத்த முழுமையா நிறைவேற்றுது” அப்படின்னு சொன்னாரு.

பிறகு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்தியை அவர் எனக்காக வாசிச்சாரு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). தேவனுடைய வார்த்தைய வாசிச்ச பிறகு, யோங்ஜின் ஐக்கியங்கொண்டு, “கிருபையின் காலத்துல, கர்த்தராகிய இயேசு மீட்பின் பணிய செஞ்சு, ஜனங்களோட பாவங்கள மன்னிச்சாரு, ஆனா, அது இரட்சிப்பின் கிரியையில பாதி மட்டுமே. சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதகுலத்த முழுமையா இரட்சிக்கும் கிரியையா இருக்குது. கடைசி நாட்கள்ல தேவனுடைய நியாயத்தீர்ப்ப ஏற்றுக்கொண்டு, நம்மளோட சீர்கேட்டுல இருந்து சுத்திகரிக்கப்பட்டு, பாவத்துல இருந்து நம்மள விடுவிச்சுக்கிட்டு, அதோடு, ஒருபோதும் பிசாசுகளால் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதன் மூலமும் மட்டுமே, நாம உண்மையிலயே இரட்சிக்கப்பட்டு, தேவனால் பரலோக ராஜ்யத்துக்குள்ள கொண்டுவரப்படுவதற்குத் தகுதிபெற முடியும். அதனால, சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பணி கர்த்தராகிய இயேசுவின் மீட்புப் பணியைத் தொடருது, அதோடு காலத்தை நிறைவு செய்யும் பணியாகவும் இருக்குது. சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தராகிய இயேசுவின் வருகையாய் இருக்கிறார், சர்வவல்லமையுள்ள தேவனும் இயேசுவும் ஒரே ஆவியும் ஒரே தேவனுமாய் இருக்காங்க” அப்படின்னு சொன்னாரு.

மூன்று கட்ட கிரியையப் பத்திய அவரது ஐக்கியம், வேதாகமத்தோடும் உண்மைகளோடும் ஒத்துப்போச்சு, என்னோட இருதயம் ரொம்பவே பிரகாசமடஞ்சத உணர்ந்தேன். கர்த்தருடைய வருகை நியாயத்தீர்ப்பின் கிரியையச் செய்றதுக்கும் நம்மளோட பாவ சுபாவங்கள சரி செய்றதுக்கும் பாவத்தின் அடிமைத்தனத்துல இருந்து நம்மள இரட்சிப்பதுக்கும்தான்ங்கறத நான் இப்போ தெரிஞ்சுக்கிட்டேன். நாம உண்மையிலயே பாவத்துல வாழுறோம், நம்மை நாமே விடுவிச்சுக்க வல்லமை இல்லாதவங்களா இருக்கிறோம்கறத உணர்ந்தேன். நாம பாவஞ்செய்யுறோம், அப்புறம் அறிக்கையிடுறோம், நாம அறிக்கையிட்ட பிறகு, மறுபடியும் பாவம் செய்யுறோம். இந்த முடிவில்லாத சுழற்சியில சிக்கிக்கிட்டு நம் வாழ்வைக் கழிச்சுக்கிட்டிருக்கோம். சாதாரண விசுவாசிகள ஒதுக்கித் தள்ளுங்க, குருமார்களால கூட பாவத்தின் அடிமைத்தனத்துக்குத் தப்ப முடியாது. இது மறுக்க முடியாத உண்மை. கடந்த காலத்துல, இதுக்கான காரணத்தை என்னால ஒருபோதும் புரிஞ்சுக்க முடில. ஆனா, இப்போ நான் புரிஞ்சுக்கிட்டேன். கடைசி நாட்கள்ல ஜனங்கள முழுமையா சுத்திகரிக்க கர்த்தரின் இறுதிக்கட்ட கிரியை நமக்கு உண்மையிலயே தேவையாய் இருக்குது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை தேவனிடமிருந்து தொடங்குதுங்கறது முற்றிலும் உண்மையா இருப்பதுக்கான வாய்ப்பு இருக்குதுன்னு தோன்றுச்சு. அதுக்கப்புறம், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் மற்றொரு பத்தியை யோங்ஜின் எனக்கு வாசிச்சாரு, சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இன்றையக் கிரியை கிருபையின் கால கிரியையை முன்னோக்கித் தள்ளியுள்ளது; அதாவது, முழுமையான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கிரியை முன்னோக்கி நகர்ந்துள்ளது. கிருபையின் காலம் முடிந்துவிட்டாலும், தேவனின் கிரியையில் முன்னேற்றம் இருந்துவருகிறது. கிரியையின் இந்தக் கட்டம் கிருபையின் காலம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் காலத்தின் மேல் கட்டமைகிறது என்று ஏன் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்? ஏனெனில் இந்த நாளின் கிரியை கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தொடர்ச்சியாக இருக்கிறது, மேலும் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்யப்பட்டவற்றின் ஒரு முன்னேற்றமாகவும் உள்ளது. இந்த மூன்று கட்டச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் அடுத்ததோடு நெருக்கமாகக் கட்டப்பட்டு ஒன்றுக்கொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயேசு செய்தவற்றின் மேல் இந்தக் கட்டத்தின் கிரியை கட்டமைகிறது என்று ஏன் நான் கூறுகிறேன்? இந்தக் கட்டம் இயேசு செய்த கிரியையின் மேல் கட்டமையவில்லை என்று வைத்துக்கொண்டால், இந்தக் கட்டத்தில் இன்னொரு சிலுவைமரணம் ஏற்பட வேண்டும், மேலும் முந்திய கட்டத்தின் இரட்சிப்பின் கிரியை மீண்டும் முழுவதுமாகச் செய்யப்பட வேண்டும். இது அர்த்தமற்றதாக இருக்கும். ஆகவே கிரியை முற்றிலுமாக முடிக்கப்படவில்லை, ஆனால் காலம் முன்னோக்கி நகர்ந்துள்ளது மற்றும் கிரியையின் நிலை முன்னை விட கூடுதல் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கிரியை நியாயப்பிரமாண காலம் என்னும் அடித்தளத்தின் மீதும் இயேசுவின் கிரியை என்ற பாறையின் மீதும் கட்டப்படுகிறது என்று கூறலாம். தேவனுடைய கிரியை கட்டம் கட்டமாகக் கட்டமைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கட்டம் ஒரு புதிய தொடக்கம் அல்ல. மூன்று கட்டக் கிரியை மட்டுமே ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் எனக் கருதப்படலாம். கிருபையின் கால கிரியையின் அடித்தளத்தின் மீது இந்தக் கட்டத்தின் கிரியை செய்யப்படுகிறது. இந்த இரு கட்டங்களின் கிரியை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாக இருந்தால், பின்னர் ஏன் இந்தக் கட்டத்தில் சிலுவைமரணம் திரும்பவும் நடைபெறவில்லை? நான் ஏன் மனிதனின் பாவத்தைச் சுமக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் நேரடியாக வந்திருக்கிறேன்? மனிதனை நியாயந்தீர்ப்பதும் சிட்சிப்பதுமான என் கிரியை சிலுவை மரணத்தைப் பின்பற்றவில்லை என்றால், இப்போதைய என் வருகை பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படவில்லை என்றால், பின்னர் மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் எனக்குத் தகுதி இல்லாமல் போயிருக்கும். நான் இயேசுவோடு முற்றிலும் ஒன்றாக இருப்பதால் மனிதனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் நான் நேரடியாக வந்திருக்கிறேன். இந்தக் கட்டத்தின் கிரியை முந்தைய கட்ட கிரியையின் மேல் கட்டமைக்கப்படுகிறது. ஆகவேதான், இந்த வகையான கிரியை மட்டுமே மனிதனைப் படிப்படியாக இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும். இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன. அவர்கள் பாலினத்திலும் தங்கள் மாம்சத்தின் வடிவத்திலும் வேறாக இருந்தாலும், அவர்கள் ஒரே குடும்பத்தில் பிறக்கவில்லை எனினும், ஒரே கால கட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவர்களது ஆவி ஒன்றே. … யேகோவாவின் ஆவி இயேசுவினுடைய ஆவியின் பிதா அல்ல, மற்றும் இயேசுவின் ஆவி யேகோவாவினுடைய ஆவியின் குமாரனும் அல்ல: அவை ஒரே ஆவியாகும். அதுபோலவே, இன்றைய தேவ அவதாரமும் இயேசுவும் இரத்தத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒன்றே, இது ஏனெனில் அவர்களது ஆவி ஒன்றே. இரக்கம் மற்றும் அன்பான கருணையின் கிரியையும், மனிதனை நீதியாக நீயாயந்தீர்த்து கடிந்துகொள்ளுதலையும் மற்றும் மனிதன் மேல் சாபங்களை வரவழைப்பதையும் தேவனால் செய்ய முடியும்; முடிவில் உலகத்தை அழித்துத் துன்மார்க்கரை தண்டிக்கும் கிரியையும் அவரால் செய்ய முடியும். இவற்றை எல்லாம் அவர்தாமே செய்வதில்லையா? இது தேவனின் சர்வவல்லமை அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன”). யோங்ஜின் தொடர்ந்து பேசி, “தேவன் செய்த மூன்று கட்டங்களின் கிரியையிலும் ஒவ்வொன்றின் உள்ளடக்கமும் வேறுபட்டதாய் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்துலயும் தேவனுடைய நாமம் வேறுபட்டதா இருந்தாலும், அவை எல்லாமே ஒரே ஆவியினாலும் ஒரே தேவனாலும் செய்யப்படுகின்றன. மூன்று கட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கு, அதோடு, ஒவ்வொரு கட்டமும் முந்தைய கட்ட கிரியையின் மீது உருவாக்கப்படுது, முந்தினதை விட ஆழமானதும் மற்றும் உயர்ந்ததுமா இருக்குது, ஜனங்கள் கடைசியா சாத்தானோட ஆதிக்கத்துல இருந்து இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்துக்குள்ள கொண்டுவரப்படும் வரைக்கும் நடைபெறுது. அதனால, கர்த்தருடைய புதிய கிரியைய ஏத்துக்கறதன் மூலமா, நாம அவருக்கு துரோகம் செய்வதில்ல. அதுக்குப் பதிலா, நாம அவரோட கிரியையின் வேகத்துல போறோம்” அப்படின்னு சொன்னாரு.

அவரோட ஐக்கியத்தைக் கேட்டதும், என்னோட இருதயம் இன்னும் பிரகாசமாக இருந்துச்சு. மூன்று கட்ட கிரியைகளும் நெருக்கமா இணைக்கப்பட்டிருக்கு, ஒவ்வொன்றும் முந்தின கட்டத்தைத் தொடர்ந்து முன்னேறுது, எந்த கட்ட கிரியையும் மற்றவற்றிலிருந்து தனியா இல்ல. இது துல்லியமா ஒரே தேவனால செய்யப்பட்ட மூன்று கட்ட கிரியைகள் இல்லையா? யேகோவாவும், கர்த்தராகிய இயேசுவும் சர்வவல்லமையுள்ள தேவனும் உண்மையிலயே ஒரே தேவனாகத் தெரிகிறார்கள். கத்தோலிக்கத் திருச்சபைதான் உண்மையான திருச்சபைன்னும், கத்தோலிக்க மதத்தால மட்டுமே ஆத்துமாக்கள இரட்சித்து, அவங்கள பரலோக ராஜ்யத்துக்குக்குள்ள கொண்டுவர முடியும்ன்னும், கத்தோலிக்க மதத்தை விட்டு வெளியேறுவதுங்கறது கர்த்தருக்குத் துரோகம் செஞ்சு, உங்களோட இரட்சிப்பின் வாய்ப்பை இழப்பதுன்னும், நான் எப்பவுமே நெனச்சிருந்திருக்கேன். நான் பின்பற்றுனது கர்த்தராகிய இயேசு செஞ்ச மீட்பின் பணி மட்டுந்தான்ங்கறத இப்போ புரிஞ்சுக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியைய நான் ஏத்துக்கிட்டா, நான் ஆட்டுக்குட்டியானவரோட அடிச்சுவடுகளப் பின்பற்றிக்கிட்டு இருப்பேன், நான் கர்த்தருக்குத் துரோகம் செய்யல. எப்படியிருந்தாலும், நான் கத்தோலிக்க மதத்துல தொடர்ந்து இருந்து, கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பைப் பற்றிக்கொண்டே இருந்தால், அப்போ, நான் கடைசி நாட்களின் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளமாட்டேன், அதோடு, பரலோக ராஜ்யத்துக்குள்ளயும் பிரவேசிக்க மாட்டேன். இந்த கட்டத்துல, சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியைதான் கடைசி நாட்களில் தேவனுடைய புதிய கிரியைங்கறத என் உள்ளத்தின் ஆழத்துல, நான் உறுதியாக நம்பினேன். அதுக்கப்புறம், யோங்ஜின், தேவனுடைய நாமங்கள், வேதாகமத்தின் உள் சம்பவங்கள், மனிதகுலத்தின் முடிவையும் சென்றடையும் இடத்தையும் தேவன் எவ்வாறு தீர்மானிக்கிறார், அதோடு இன்னும் நிறைய காரியங்களப் பத்திய சத்தியங்கள என்னோடு ஐக்கியங்கொண்டாரு. அவரோட ஐக்கியத்தக் கேட்டதும், நான் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டேன். நான் பல வருஷங்களா கர்த்தரை விசுவாசிச்சிருந்தேன், ஆனாலும் இவ்வளவு நல்ல பிரசங்கத்தை நான் ஒருபோதும் கேட்டிருந்ததில்ல. அந்த நாள்ல நான் பெற்றுக்கிட்டது மிகப் பெரிய விஷயம்ன்னு நெனச்சேன். தேவனை விசுவாசிச்ச இத்தனை வருஷங்கள்ல நான் புரிஞ்சுக்கிட்டத விட, அன்றைக்கு நான் நிறையா புரிஞ்சுக்கிட்டேன்!

அன்றைக்கு, யோங்ஜின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய அநேக வார்த்தைகள எனக்காக வாசிச்சு காண்பிச்சாரு. சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்களயும் மறைபொருட்களயும் வெளிப்படுத்தியிருப்பத நான் பாத்தேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள்தான் தேவனுடைய சத்தம்ங்கறத நான் ஆழமா உணர்ந்தேன். அன்றைக்கு நான் வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்திய வாசிச்சேன். “அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தரின் தோன்றுதலாய் இருக்கிறாரா இல்லையா என்பதத் தீர்மானிக்க, முதலாவது அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளயும் அவர் செஞ்ச கிரியையயும் நான் ஆராய வேண்டியிருந்துச்சு. அவரால சத்தியத்தை வெளிப்படுத்தி, ஜனங்களை இரட்சித்து சுத்திகரிக்கும் கிரியையச் செய்ய முடிஞ்சா, அப்போது அவர் கர்த்தரின் தோன்றுதலாக இருக்கணும் அப்படிங்கறத இந்தப் பத்தியில இருந்து நான் புரிஞ்சுக்கிட்டேன். கர்த்தராகிய இயேசு ஒருமுறை சொன்னாரு, “பாதையும் சத்தியமும் வாழ்வும் நானே. என் வழியாய் அல்லாமல் எவரும் பிதாவிடம் வருவதில்லை(யோவான் நற்செய்தி 14:6). அதனால, ஜனங்கள இரட்சிக்க தேவனைத் தவிர வேறு யாராலும் சத்தியத்தை வெளிப்படுத்த முடியாது. அதுக்கப்புறம், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள வாசிக்க ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்குனேன். ரெண்டு மாசங்களுக்குப் பிறகு, மனுவுருவாதல் மற்றும் தேவனுடைய நாமம், தேவனுடைய கிரியைக்கும் மனுஷனுடைய கிரியைக்கும் உள்ள வித்தியாசம், மெய்யான கிறிஸ்துவை கள்ளக் கிறிஸ்துக்களிடமிருந்து எப்படிப் பிரித்தறிவது என்பன போன்ற இன்னும் நிறைய மறைபொருட்கள நான் புரிஞ்சுக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் செழுமையானதாகவும் வித்தியாசமானதாகவும் இருப்பத நான் பார்த்தேன், அது என் கண்களத் திறந்துச்சு. அந்த நேரத்துல, நான், “திரும்பி வந்திருக்கிற கர்த்தரை அல்லாமல், அநேக சத்தியங்களத் தெரிவிக்கவும், அநேக மறைபொருட்கள வெளிப்படுத்தவும் யாரால் முடியும்? கர்த்தர் உண்மையிலயே திரும்பி வந்து, ஜனங்கள நியாயந்தீர்க்கும் கிரியையும் சுத்திகரிக்கும் கிரியையுமான புதிய கிரியைய செஞ்சுக்கிட்டு இருக்காரு” அப்படின்னு நெனச்சேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை கர்த்தரின் புதிய கிரியைன்னும், சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தர்ன்னும் நான் இப்போ முற்றிலும் உறுதியாக நம்பினேன்!

ரொம்ப வருஷங்களா நான் காண்பேன்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தவரான, கர்த்தராகிய இயேசு உண்மையிலயே திரும்பி வந்திருந்தாரு, கடைசி நாட்கள்ல தேவனுடைய கிரியைய ஏத்துக்க முடிஞ்சதால நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலியா உணர்ந்தேன். குறிப்பாகச் சொல்லணும்னா, இந்த சகோதர சகோதரிகள் கிட்டத்தட்ட ஒரு வருஷமா எனக்கு சுவிசேஷத்த அறிவிச்சு வந்தாங்க. இந்த காலகட்டத்துல, நான் எதிர்த்தும், நிராகரிச்சும் வந்தேன், தேவனுடைய இரக்கமும் இரட்சிப்பும் இல்லேன்னா, சகோதர சகோதரிகள் மறுபடியும் மறுபடியும் எனக்கு சுவிசேஷத்த அறிவிச்சிருக்கலேன்னா, நான் தேவனுக்கு முன்பா வந்திருக்கவே மாட்டேன். அதனால, நான் தேவனுக்கு ரொம்பவே நன்றியுள்ளவனா உணர்ந்தேன். ஆனா, கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையை நான் ஆராய்ந்து பார்க்கலங்கறது எனக்கு நினைவுக்கு வந்துச்சு. நான் அத கண்மூடித்தனமா நியாயந்தீர்த்து கண்டனம் செஞ்சேன், திருச்சபை உறுப்பினர்கள் அதை ஆராய்ந்து பார்ப்பதத் தடுக்க திருச்சபையில அதைத் தடையும் செஞ்சேன். இதை நெனச்சுப் பார்த்தபோது எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்துச்சு, தேவனை அறிய முடியாத அளவுக்கு ரொம்பவே குருடனா இருந்ததுக்காகவும், தேவனுக்கு பயப்படும் பயம் இல்லாதிருந்ததுக்காகவும், தேவனை எதிர்த்ததுக்காகவும் நான் என்னையே வெறுத்தேன். கர்த்தராகிய இயேசுவை எதிர்த்த பரிசேயர்களப் போலவே நானும் இருந்தேன் இல்லையா? முதல்ல, நான் பல வருஷங்களாக இறையியலைப் படிச்சு, கர்த்தருக்கு ஊழியம் செஞ்சிருந்ததால, கர்த்தரப் பத்திய சில விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆனா, நான் கர்த்தர இப்படி “வரவேற்பேன்” அப்படின்னு உண்மையிலயே எதிர்பார்க்கல. அந்த நேரத்துல நான் ரொம்பவே சங்கடமா உணர்ந்தேன். நான் கர்த்தரை எதிர்த்து இவ்வளவு பெரிய பாவத்தச் செஞ்சேன், அப்படியிருக்க கர்த்தர் என்னை எப்படி நடத்துவாரு? நான் தேவனுக்கு முன்பாக முழங்காலில் நின்னு என் பாவங்கள அறிக்கையிடும்படிக்கு ஜெபிச்சேன். “சர்வவல்லமையுள்ள தேவனே, நான் ரொம்பவே அகந்தையுள்ளவனா இருந்தேன். நான் உம்மை அறியல, அதனால நான் உம்மை எதிர்த்து, உமது கிரியைய நியாயந்தீர்த்தேன். நான் திருச்சபைய மூடி முத்திரை வச்சு, தேடுவதுக்கும் ஆராய்வதுக்கும் திருச்சபை உறுப்பினர்களத் தடை செஞ்சேன். நான் செஞ்சது பரிசேயர்கள் செஞ்சதப் போலவே இருந்துச்சு, நான் உங்களால தண்டிக்கப்பட வேண்டியவன். உமது இரட்சிப்புக்கு நான் உண்மையிலயே தகுதியற்றவன்!” அப்படின்னு நான் சொன்னேன். அந்த நாட்கள்ல, நான் தொடர்ந்து வருத்தத்தோடும் கவலையோடும் இருந்தேன். தேவனுக்கு எதிரான ஜனங்களுடய எதிர்ப்ப வெளிப்படுத்தும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள வாசிச்ச ஒவ்வொரு முறையும், நான் ரொம்பவே கலக்கமடஞ்சேன். நான் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருந்ததாவும், தேவன் என்னை இரட்சிக்க மாட்டார்ன்னும் நெனச்சேன். அதுக்கப்புறம், நான் எனது நிலயப் பத்தி என் சகோதர சகோதரிகள்கிட்ட தெரிவிச்சேன். அவங்க தேவனுடைய வார்த்தையின் ஒரு பத்தியை எனக்கு வாசிச்சு காண்பிச்சாங்க, அது எனக்கு ரொம்ப ஆறுதலக் கொடுத்துச்சு. தேவன் சொல்லுகிறார்: “தேவனுடைய வார்த்தைகளால் ஜெயங்கொள்ளப்பட்டு கீழ்ப்படியும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்; இந்த ஜனங்கள் ஒவ்வொருவருக்குமான தேவனின் இரட்சிப்பு அவரது மிகுந்த இரக்கத்தைக் காட்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களிடத்தில் மிகவும் பொறுமை காட்டப்படும். ஜனங்கள் தங்கள் தவறான பாதைகளில் இருந்து திரும்பினால், மேலும் அவர்கள் மனந்திரும்ப முடியுமானால், அவரது இரட்சிப்பைப் பெற தேவன் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பார். மனிதர்கள் தேவனுக்கு விரோதமாய் முதன்முதலில் கலகம் செய்யும்போது, அவர்களைக் கொன்றுபோட அவருக்கு விருப்பம் இல்லாதிருக்கிறது; மாறாக அவர்களை இரட்சிக்க அவரால் முடிந்ததை எல்லாம் அவர் செய்கிறார். யாருக்காவது இரட்சிப்புக்கான இடம் இல்லாத போது, தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடுகிறார். சில ஜனங்களைத் தண்டிப்பதில் தேவன் நெடிய சாந்தமுள்ளவராக இருப்பதற்கான காரணம் அவர் இரட்சிக்கப்படக்கூடிய எல்லோரையும் இரட்சிக்க விரும்புவதே ஆகும். வார்த்தைகளை மட்டும் கொண்டு அவர் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார், அவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கிறார், மற்றும் வார்த்தைகள் மூலம் வழிகாட்டுகிறார் மேலும் அவர் ஒரு கோலைப் பயன்படுத்தி அவர்களைக் கொல்வதில்லை. வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவதே இறுதிக்கட்ட கிரியையின் நோக்கமும் முக்கியத்துவமும் ஆகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்”). அவங்க தேவனுடைய வார்த்தைகள வாசிச்ச பிறகு, “நாம சாத்தானால சீர்கெடுக்கப்பட்டிருக்கோம், நாம எல்லாருமே சீர்கெட்ட மனநிலைகளக் கொண்டிருக்கோம், அதோடு, நமக்கு தெய்வ பயம் இல்லை. தேவனுடைய வார்த்தைகளும் கிரியையும் நம் எண்ணங்களுக்கு ஒத்துப்போகலங்கறதப் பார்க்கும்போது, நாம கலகஞ் செய்து, எதிர்ப்போம் அதோடு, சுலபமா மறுத்து கண்டனம் செய்வோம். ஆனா, நாம் சத்தியத்தைப் புரிஞ்சுக்கும்போது, தவறான பாதையில இருந்து மனந்திரும்பி, தேவனிடத்துக்கு உண்மையா மனந்திரும்ப முடியும், இரட்சிக்கப்படுவதற்கான வாய்ப்பை தேவன் இன்னும் நமக்குத் தர்றாரு. ஆனா, கடினமா இருந்து, மனந்திரும்பாம, பிடிவாதமா தேவனை எதிர்ப்பவங்க தேவனால் ஆக்கினைத்தீர்ப்புக்கு உள்ளாகுறாங்க, கடைசியில, அவங்க எல்லாருமே தண்டனைக்கு உட்பட்டுவாங்க” அப்படின்னு ஒரு சகோதரர் சொன்னாரு. இதைக் கேட்டதும் நான் ரொம்பவே நெகிழ்ந்துபோனேன். “நான் தேவனை எதிர்த்து இவ்வளவு பெரிய பொல்லாப்ப செஞ்சேன். ஆனாலும் கூட தேவன் என் மீது இரக்கம் வச்சு என்ன இரட்சிக்கிறாரு. தேவன் என்மீது வைச்சிருக்க அன்பு பெரிது! எதிர்காலத்துல, நான் சுவிசேஷத்த அதிகமாகப் பிரசங்கிச்சு தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்தணும் கர்த்தர் திரும்பி வந்திருக்கும் சுவிசேஷத்த விசுவாசிகளுக்குச் சொல்லணும். அதன் மூலமா, அவங்க தேவனுடைய சத்தத்தக் கேட்கவும், கர்த்தர வரவேற்கவும் முடியும்” அப்படின்னு நான் நெனச்சேன். அதனால, அதுக்கப்புறம், நான் சுவிசேஷத்த பரப்ப ஆரம்பிச்சேன். ஒரு தடவ, திருச்சபை உறுப்பினர் ஒருவர்கிட்ட சர்வவல்லமையுள்ள தேவனுடைய புதிய கிரியையப் பத்தி சாட்சியளிச்சேன். பேராயர் அதைக் கண்டுபிடிச்சதும் நான் அதிர்ச்சியடஞ்சேன். அவரை வந்து பார்க்கச் சொல்லி என்னைக் கூப்பிட்டுவிட்டாரு.

எனக்கு ஞாபகம் இருக்குது, நான் திருச்சபைக்கு வந்தபோது, எண்பது வயசுல இருந்த தலைமை குருவை வாசல்ல சந்திச்சேன். அவர் என்கிட்ட, கிழக்கத்திய மின்னல் மீதான என்னோட விசுவாசத்தை பேராயர் ரொம்பவே எதிர்த்தாருன்னு யாரும் பார்க்காத வண்ணம் ரகசியமா சொன்னாரு, என் தவறுகள பேராயர்கிட்ட ஒப்புக்கொள்ளவும், மனந்திரும்பவும், என்னிடத்துல தயவாக இருக்கும்படி கெஞ்சவும் என்னை வற்புறுத்தினாரு. அவர் சொன்னதக் கேட்டதும் எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்துச்சு. அதனால, நான் சீக்கிரமா தேவனிடத்துல ஜெபிச்சேன். “சர்வவல்லமையுள்ள தேவனே! இன்றைக்கு நான் இந்தச் சூழலின் மத்தியில் இருக்கேன், அதை எப்படி எதிர்கொள்வதுன்னு எனக்குத் தெரியல. தயவுசெஞ்சு என்னைப் பாதுகாத்து, எனக்கு விசுவாசத்தையும் மனவுறுதியையும் தாரும். அடுத்து என்ன நடந்தாலும் பரவாயில்ல, நான் மெய்யான வழியில நிலைச்சிருக்க, நீர் எனக்கு வழிகாட்ட வேண்டும்னு மன்றாடுறேன்” அப்படின்னு நான் சொன்னேன். ஜெபிச்ச பிறகு, என்னால என்ன கொஞ்சம் அமைதிப்படுத்த முடிஞ்சுதுன்னு உணர்ந்தேன். நான் பேராயரைப் பார்த்தபோது, நான் கிழக்கத்திய மின்னலை விசுவாசிக்கிறேனான்னு முதல்ல என்கிட்ட கேட்டாரு, நான் ஆமான்னு சொன்னேன். அவர் ரொம்பவே கோபப்பட்டு: “நீ கிழக்கத்திய மின்னலைச் சேர்ந்தவர்களோட தொடர்புல இருந்ததாக நான் ரொம்ப நாட்களுக்கு முன்னாடியே கேள்விப்பட்டேன். ஆனா, நான் அதைப் பத்தி எதையும் நினைக்கல. நீ ஒரு குருவாகவும் இறையியல் அறிஞராகவும் இருப்பதால, கிழக்கத்திய மின்னலை நீ ஒருபோதும் ஏத்துக்க மாட்டன்னு நான் நெனச்சேன். நீ அதை உண்மையிலயே ஏத்துக்கிட்டீன்னு என்னால நம்ப முடியல!” அப்படின்னு சொன்னாரு. நான் பொறுமையா அவருக்கு விஷயங்கள விளக்கி, “நான் கிழக்கத்திய மின்னலை கண்மூடித்தனமா ஏத்துக்கல. நான் ஆறு மாசத்துக்கும் மேலா ஆராய்ந்து பார்த்திருக்கேன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைய நிறைய வாசிச்சிருக்கேன். இந்த வார்த்தைகள் சத்தியம், எந்த மனுஷனாலும் சொல்ல முடியாதவை, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தர்—” அப்படின்னு சொன்னேன். ஆனாலும் கூட, நான் பேசி முடிப்பதற்கு முன்பே, பேராயர் ரொம்பவே பொறுமையில்லாதவராய் இருந்தாரு. “கிழக்கத்திய மின்னல் திரும்பி வந்திருக்கிற கர்த்தராங்கறத போப் அவர்கள்தான் தீர்மானிக்கணும். விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல போப் தவறாக இருக்க முடியாது. போப் அதை அங்கீகரிச்சா, நாமும் அங்கீகரிப்போம். அவர் அங்கீகரிக்கலேன்னா, கிழக்கத்திய மின்னல் தவறான உபதேசம்னு சொன்னால், நம்மால அதை விசுவாசிக்க முடியாது!” அப்படின்னு அவர் சொன்னாரு. அவர் சொன்னதக் கேட்டதும், “போப்பும் ஒரு சீர்கெட்ட மனுஷன்தான். அவர் தேடலேன்னா, அவர் பரிசுத்த ஆவியானவரால் பிரகாசிக்கப்படவோ அறிவொளியடையவோ மாட்டாரு, அதோடு, கர்த்தருடைய புதிய கிரியைய அவர் புரிஞ்சுக்க மாட்டாரு. நீங்க கர்த்தரை விசுவாசிக்குறீங்க, ஆனா, அவரோட வார்த்தைகளுக்குப் பதிலா, ஒரு மனிதரான போப்புக்கு நீங்க கண்மூடித்தனமா செவிகொடுக்குறீங்க. இது எப்படி கர்த்தர் மீதான விசுவாசமாகும்? இது ஒரு மனுஷன் மீதான விசுவாசம் அல்லவா?” அப்படின்னு நான் நெனச்சேன். இதை மனசுல வச்சுக்கிட்டு, நான் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைக்குத் தொடர்ந்து சாட்சியளிச்சேன், ஆனா, அவர் செவிகொடுக்கவே இல்லை. “கிழக்கத்திய மின்னல் கடைசி நாட்களின் கர்த்தருடைய கிரியைன்னு போப் சொல்லல. அதனால் நாம அதை விசுவாசிக்க முடியாது. அது மெய்யான வழியா இல்லையாங்கறது போப்பின் முடிவைப் பொறுத்தது!” அப்படின்னு அவர் சொன்னாரு.

அது உண்மைதான். ஆரம்பத்துல, நானும் கூட போப்பை ஆராதிச்சேன், அதோடு, போப் கர்த்தரை பிரதிநிதித்துவப்படுத்துறார்ன்னும், அதனால, நாம எல்லாத்துலையுமே போப்புக்கு செவி கொடுக்கணும்னு நான் நெனச்சேன். ஆனா, அதுக்கப்புறமா, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சிலவற்ற வாசிச்சேன், அது, அந்த விஷயத்தைப் பத்திய என் பார்வைய மாத்துச்சு. பின்வர்றதச் சொன்ன ஒரு பத்தி எனக்கு ஞாபகம் வருது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “உலகில் பல முக்கியமான மதங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் அதன் சொந்தத் தலைவரைக் கொண்டுள்ளன. மேலும், பின்பற்றுபவர்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவிக்கிடக்கிறார்கள். பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா நாடும் தனக்குள் வெவ்வேறு மதங்களைக் கொண்டுள்ளன. ஆனாலும், உலகம் முழுவதும் எத்தனை மதங்கள் இருந்தாலும், பிரபஞ்சத்திற்குள் உள்ள எல்லா ஜனங்களும் இறுதியில் ஒரே தேவனுடைய வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மதத் தலைவர்களால் வழிநடத்தப்படுவதில்லை. அதாவது, மனுக்குலம் ஒரு குறிப்பிட்ட மதத் தலைவரால் வழிநடத்தப்படுவதில்லை. மாறாக, வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்த, மனுக்குலத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகராலேயே மனுக்குலம் வழிநடத்தப்படுகிறது, இதுதான் உண்மை. உலகில் பல பெரிய மதங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், அவை அனைத்தும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ்தான் உள்ளன, அவை எதுவுமே இந்த ஆளுகையின் எல்லையை மீற முடியாது. மனுக்குலத்தின் வளர்ச்சி, சமுதாயத்தின் மாற்றம், இயற்கை அறிவியலின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் சிருஷ்டிகரின் ஏற்பாடுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. இக்கிரியை குறிப்பிட்ட எந்தவொரு மதத் தலைவராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல. மதத் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, வானத்தையும் பூமியையும் சகலத்தையும் சிருஷ்டித்தவரை பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாது. மதத் தலைவரால் முழு மதத்திற்குள்ளும் உள்ள எல்லோரையும் வழிநடத்த முடியும், ஆனால் அவர்களால் வானத்திற்குக் கீழுள்ள எல்லா சிருஷ்டிகளுக்கும் கட்டளையிட முடியாது. இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். மதத் தலைவர் தலைவராக மட்டுமே இருக்கிறார், அவர்களால் தேவனுக்கு (சிருஷ்டிகருக்கு) சமமாக நிற்க முடியாது. சகலமும் சிருஷ்டிகரின் கைகளில் உள்ளன, இறுதியில் அவை அனைத்தும் சிருஷ்டிகரின் கைகளுக்குத் திரும்பும். மனுக்குலம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது. மதத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நபரும் தேவனுடைய ஆளுகையின் கீழ் திரும்புவார். இது தவிர்க்க முடியாதது. தேவன் மட்டுமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும், சகல சிருஷ்டிகளுக்கு மத்தியிலும் அவரே மிகவும் உயர்ந்த ஆட்சியாளராகவும் இருக்கிறார், சகல சிருஷ்டிகளும் அவருடைய ஆளுகையின் கீழ் திரும்ப வேண்டும். ஒரு மனுஷனுடைய அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அந்த மனுஷனால் மனுக்குலத்தை ஒரு பொருத்தமான சென்றுசேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது. யாராலும் சகலத்தையும் அதனதன் வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்”). இந்தப் பத்தியிலிருந்து, போப் ஒரு தலைவராக, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக மட்டுமே இருக்காரு, தேவனுடைய பிரதிநிதி அல்ல. தேவன் சிருஷ்டிகராய் இருக்கிறாரு. அவர் உலகத்துல இருக்கிற எல்லாத்தையும் சிருஷ்டித்தாரு, அதோடு கூட மனுஷர்களையும் சிருஷ்டித்தாரு, மனிதகுலத்த இந்நாள் வரைக்கும் வழிநடத்தியிருக்கிறாரு. மனிதகுலத்தின் இலக்கின் மீது தேவனுக்கு மட்டுமே ராஜரீகம் இருக்குது, ஜனங்களை இரட்சிக்க தேவனால் மட்டுமே சத்தியத்த வெளிப்படுத்த முடியும், அதோடு, நம்மள ஒரு அழகான இடத்துக்கு வழிநடத்திச் செல்ல முடியும். இந்தக் கிரியைய எந்த சிருஷ்டியாலும் செய்ய முடியாது, எந்த ஒரு போப் அல்லது தலைவராலும் செய்ய முடியாது அப்படிங்கறத நான் புரிஞ்சுக்கறேன். போப் ஆண்டவர்கள் உயர்ந்த அந்தஸ்துல இருந்தாலும், அவங்களும் சீர்கெட்ட மனுஷர்கள்தான். அவங்களால சத்தியத்த வெளிப்படுத்த முடியாது, மனிதகுலத்த இரட்சிக்கும் பணியை அவர்களால மட்டுமே செய்ய முடியாது. அதனால, அவங்க எவ்வளவு உயர்ந்த அந்தஸ்துல இருந்தாலும், அவங்களால தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவன் வந்து புதிய கிரியை செய்யும்போது, அவங்க தேடலேன்னா, பரிசுத்த ஆவியானவரால அவங்க பிரகாசிக்கப்படவோ அறிவொளியடையவோ மாட்டாங்க, கடைசியா, அவங்க தேவனால் கைவிடப்பட்டு நீக்கப்படுவாங்க. பூர்வ காலங்கள்ல பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் கூட, உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தாங்க, ஆனா, கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தபோது, அவங்க தேடுவதுல ஆர்வமில்லாம இருந்தாங்க, அவங்க கர்த்தராகிய இயேசுவ எதிர்த்து, கண்டனம் செஞ்சாங்க. கடைசியா, அவங்க தேவனால் சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாங்க.

அதுக்கப்புறம், கிழக்கத்திய மின்னல் ஜனங்களோடு இனி எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாதுன்னு பேராயர் எனக்குக் கட்டளையிட்டாரு. நான் ஒப்புக்கொள்ளல, அதனால அவர் ரொம்ப கோபப்பட்டு, “அப்படின்னா, தலைமை குருங்கற உன் கடமையிலிருந்து நீ இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாய்னு நினச்சிக்க. குருமடத்தின் கணக்கு விவரங்கள ஒப்படை அதுக்கப்புறம், கீழ்த்தளத்துக்குப் போய் நீ என்ன செஞ்சிருக்குறங்கறதப் பத்தி சிந்திச்சுப் பாரு” அப்படின்னு சொன்னாரு. அவர் சொன்னதக் கேட்டதும் எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு. அவர் என்ன இவ்வளவு சீக்கிரமா பதவியில இருந்து இடை நீக்கம் செய்வார்ன்னு நான் எதிர்பார்க்கல. எனக்கு என்ன செய்வதுன்னே தெரியல. நான் தலைமை குருவாக இருந்த பல வருடங்கள்ல, எங்க போனாலும், குருக்களும் கத்தோலிக்கத் துறவிகளும் என்னைச் சுற்றி சுற்றி வந்துக்கிட்டிருந்தாங்க. என்னோட வார்த்தைகளக் கேட்டு, நான் சொல்வதச் செஞ்சுக்கிட்டிருத்தாங்க, ஆனா, பேராயர் என்னைப் பணிநீக்கம் செஞ்சதுக்கப்புறமா, இனி ஒருபோதும் இதைப்போல இருக்காதுன்னு எனக்குத் தெரியும். குருவாகவும், தலைமை குருவாகவும் ஆவதற்கு நான் எவ்வளவு வேலை செஞ்சிருந்தேன்னு நெனச்சுப் பாத்தேன். நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்ற ஆரம்பிச்சு, தீர்மானம் எடுத்த பிறகு. அதுக்கப்புறம் என்னால் குருவாகவும், தலைமை குருவாகவும் இருக்க முடியல. கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையப் பத்தி நான் ஏற்கனவே உறுதியா நம்பினபோதிலும், கத்தோலிக்க மதத்துல இருந்து என்ன முழுவதுமாக விலக்கிக்க எனக்கு இன்னும் தைரியம் இல்லை. “இந்த தேர்வு சாதாரணமான விஷயம் அல்ல. நான் என் தீர்மானத்த எடுப்பதற்கு முன்பு கவனமாக சிந்திக்கணும்” அப்படின்னு நான் நெனச்சேன். அதுக்கப்புறம், பேராயர் சொன்னபடியே கீழ்த்தளத்துக்குப் போனேன். அங்க நான் குருவானவர்ஜாவோ அவங்கள சந்திச்சேன், அவர் தன்னோட விபச்சார‌ பாவத்தப் பத்தி சிந்தித்துப் பார்க்க அங்கு நிறுத்தி வைக்கப்பட்டவரா இருந்தாரு. கடைசி நாட்கள்ல சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைய நான் ஏத்துக்கிட்டதால அங்கு அனுப்பி வைக்கப்பட்டேன்னு நான் அவரிடத்துல சொன்னேன். இதைக் கேட்டதும் அவர் ரொம்பவே ஆச்சரியப்பட்டாரு. பலவீனமான தருணத்துல அவர் விபச்சார பாவத்த செஞ்சதாவும், ஆனா, தன்னோட பாவத்த கர்த்தரிடத்துல அறிக்கையிட்டால், அவர் இன்னும் இரட்சிக்கப்பட முடியும்னும் அவர் சொன்னாரு. என் பிரச்சனை இன்னும் தீவிரமானதுன்னு அவர் நெனச்சாரு, அதோடு, இது விசுவாசத்தை பற்றிய கேள்வின்னும், நம்முடைய விசுவாசம் தவறாகிவிட்டால், நம்மால் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியாதுன்னு சொன்னாரு.

ரெண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, குருவானவர் வாங் அவர்கள் என்னோடு கணக்குகள சரிபார்க்க கணக்காளர கீழ்த்தளத்துக்குக் கூட்டிட்டு வந்தாரு. குருவானவர் வாங் என்னப் பார்த்தபோது, அவரது கண்கள்ல அவமதிக்கும் பார்வையப் பார்த்தேன். அவர் கணக்குகளப் பத்திக் கேட்டபோது, ஒரு சிறைக் கைதிய விசாரிப்பதுபோல் இருந்துச்சு. இது எல்லாமே ரொம்ப சங்கடமா இருந்துச்சு. அவங்க போனதுக்கப்புறமா, நான் குறிப்பா அவமானமாகவும் பரிதாபமாகவும் உணர்ந்தேன். படுக்கையில படுத்திருந்த நான், குருமடத்தை நடத்தினபோது எப்படி எல்லாருமே எப்போதும் என்னிடத்துல ரொம்பவே மரியாதையாக நடந்துக்கிட்டாங்கன்னு நான் நெனச்சுப் பார்த்தேன். நான் எந்த தலைவரின் குடும்பத்துக்குப் போனாலும், குருக்களும் கத்தோலிக்கத் துறவிகளும் கேட்காமலேயே என்னை வரவேற்க வெளியே வந்தாங்க, தலைவர் என்னோடு நேரம் செலவிட ஆர்வத்தோட பழங்களை ஆயத்தப்படுத்தினாரு. நான் பிரசங்கிப்பதக் கேட்க குருக்களும் கத்தோலிக்கத் துறவிகளும் எப்போதும் ஆவலோடு காத்திருந்தாங்க. அதோடு, எந்த ஒரு வேலையப் பத்தியும் விவாதிக்கும்போது நான் முடிவெடுப்பதுக்காக அவங்க காத்திருப்பாங்க. நான் அடிக்கடி அவங்களோட வேலைய ஏற்பாடு செஞ்சேன், அவங்க எல்லாருமே எனக்குச் செவிசாய்த்து கீழ்ப்படிஞ்சாங்க. ஆனா, இப்போ, நான் பணிநீக்கம் செய்யப்பட்ட உடனேயே, அவங்க என்னை இழிவாகப் பார்த்தாங்க, என்னை மதிக்கல. என்னோடு பேசறதுக்கு கீழ்த்தளத்துல யாருமே இல்லை. நான் தலைமை குருவாக இருந்தபோது இருந்ததிலிருந்து விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருந்துச்சு? நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்ற விரும்பினால், ஒரு தலைமை குருவின் வாழ்க்கைய இனி ஒருபோதும் என்னால் அனுபவிக்க முடியாதுன்னும், அதிலிருந்து நான் பெற்றுக்கிட்ட எல்லா அந்தஸ்தும் சந்தோஷமும் போயிருச்சுன்னும் நான் நெனச்சேன். அந்த எண்ணம் எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தக் கொடுத்துச்சு. ஆனா, அதுக்கப்புறம், “சர்வவல்லமையுள்ள தேவன் உண்மையிலயே திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு. எனது அந்தஸ்துக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றலேன்னா, நான் இன்னும் தேவனை விசுவாசிப்பவனாய் இருக்கிறேனா? நான் இன்னும் தேவனால் இரட்சிக்கப்பட முடியுமா?” அப்படின்னு நான் நெனச்சேன். எந்த பாதையைத் தேர்ந்தெடுக்கணும்னு உண்மையிலயே எனக்குத் தெரியல, என் இருதயம் ரொம்பவே வேதனையாயிருந்துச்சு. நான் இனிமேலும் அந்தஸ்தினாலும் நற்பெயரினாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கவும், தேவனுடைய அடிச்சுவடுகளப் பின்பற்றக் கூடியவனாய் இருக்கவும் என்னை வழிநடத்தும்படி நான் முழங்கால்படியிட்டு தேவனிடத்துல ஜெபிச்சேன். ஜெபிச்ச பிறகு, என் சகோதர சகோதரிகள் எனக்கு வாசிச்சு காண்பிச்ச தேவனுடைய வார்த்தையின் ஒரு பத்திய நான் நினைவுகூர்ந்தேன். “இந்த அருவருப்பான மற்றும் சீர்கேடான ஜனங்களுக்குள் தமது கிரியையைச் செய்யும் அளவிற்கு தேவன் தம்மையே தாழ்த்தியுள்ளார், மேலும் அவர் இந்த ஜனக்குழுவை பரிபூரணப்படுத்துகிறார். தேவன் மனிதர்களிடையே வாழவும், போஜனம்பண்ணவும், ஜனங்களை மேய்க்கவும், ஜனங்களுக்குத் தேவையானதை வழங்கவும் மட்டுமே மாம்சமாகவில்லை. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் தமது வல்லமையான இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார் மற்றும் சகித்துக் கொள்ள முடியாத சீர்கேடான ஜனங்களை ஜெயங்கொள்ளுகிறார். ஜனங்களில் இந்த மிகச் சீர்கேடானவர்களை இரட்சிக்கவும், இதனால் அனைத்து ஜனங்களும் மாற்றப்பட்டு, புதியவர்களாக மாறவும் அவர் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் இதயத்திற்கு வந்தார். தேவன் சகிக்கும் பெரிதான கஷ்டம் தேவனுடைய மனுவுரு சகிக்கும் கஷ்டம் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுடைய ஆவியானவர் மிகுந்த அவமானத்தை அனுபவிக்கிறார், அவர் ஒரு சாதாரண நபராக மாறும் அளவிற்கு தம்மையே தாழ்த்தி மறைத்துக் கொள்கிறார். அவர் சாதாரண மனித வாழ்க்கையையும் சாதாரண மனிதனின் தேவைகளையும் கொண்டிருப்பதை ஜனங்கள் பார்க்கும்படி, தேவன் மனுவுருவெடுத்து மாம்ச ரூபத்தை எடுத்தார். தேவன் மிகப் பெரிய அளவிற்குத் தம்மையே தாழ்த்தினார் என்பதை நிரூபிக்க இது போதுமானதாகும். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் உணரப்படுகிறார். அவரது ஆவியானவர் மிக உயர்ந்தவரும் பெரியவரும் ஆவார், ஆனாலும் அவருடைய ஆவியானவரின் கிரியையைச் செய்வதற்காக அவர் ஒரு சாதாரண மனித ரூபத்தை, ஓர் அற்பமான மனித ரூபத்தை எடுத்துக் கொள்கிறார். உங்கள் ஒவ்வொருவரின் தகுதிப்பாடும், உள்ளுணர்வும், உணர்வும், மனிதத்தன்மையும் மற்றும் வாழ்க்கையும் இவ்வகையான தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்ள நீங்கள் உண்மையில் தகுதியற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது. உனக்காக இத்தகைய கஷ்டங்களை தேவனைச் சகிக்க அனுமதிப்பதற்கு நீங்கள் உண்மையில் தகுதியற்றவர்கள். தேவன் மிகவும் பெரியவர். அவர் மிகவும் உயர்ந்தவர், ஜனங்கள் மிகவும் தாழ்ந்தவர்கள், ஆனாலும் அவர் இன்னும் அவர்களிடம் கிரியை செய்கிறார். அவர் ஜனங்களுக்கு வழங்குவதற்காக, ஜனங்களிடம் பேசுவதற்காக மாத்திரம் மனுவுரு எடுக்காமல், அவர் ஜனங்களுடனும் ஒன்றாக வாழ்கிறார். தேவன் மிகவும் தாழ்மையானவர், மிகவும் அன்பானவர்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “செயல்படுத்தலில் கவனம் செலுத்துபவர்களை மட்டுமே பரிபூரணப்படுத்த முடியும்”). உண்மைதான், எந்த நாடும் சீனாவை விட கடுமையாக தேவனை எதிர்ப்பதில்ல. தேவன் பேசவும் கிரியை செய்யவும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் நாட்டிற்கு மனுவுருவாகி வந்தார், ஆனா, கம்யூனிஸ்ட் கட்சியால் துன்புறுத்தப்பட்டு அவதூறு செய்யப்பட்டார், அதோடு மத வட்டாரங்களால கண்டனம் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டார். தேவன் மிகவும் உயர்ந்தவரும், மிகவும் உன்னதமானவருமாய் இருக்கிறார், ஆனாலும் அவர் மிகப் பெரிய அவமானத்தைத் தாங்கிக்கிட்டு பூமிக்கு வந்தாரு, தேவன் செய்யும் எல்லாமே நம்மள இரட்சிப்பதுக்காத்தான். தேவன் உண்மையிலயே தாழ்மையானவர், அழகானவர் என்பதை நான் அப்போது பார்த்தேன்! நான் எப்படி அந்தஸ்தின் பலனை மட்டும் அனுபவிக்க விரும்பினேன் என்பதையும், மத்தவங்க என்னைப் போற்றுவதையும் உயர்வாகப் பார்ப்பதையும் நான் எப்படி அனுபவிச்சேன்கறதையும், தேவனுடைய கிரியையக் கண்டுபிடிச்சிருந்தேன்னு எனக்குத் தெரிந்தபோதும் கூட, எப்படி நான் இன்னும் என் அந்தஸ்தை விட்டுவிட்டு தேவனைப் பின்பற்ற விரும்பலங்கறதையும் அப்போது நான் நெனச்சுப் பார்த்தேன். இது மெய்யான வழியைத் தெரிஞ்சுக்கிட்டு, வேண்டுமென்றே எதிர்ப்பது இல்லையா? இது வெறும் மனசாட்சியற்ற செயல் அல்லவா? இதை நான் உணர்ந்தபோது, நான் ரொம்பவே குற்ற உணர்வும் வெட்கமும் அடஞ்சேன். அதே நேரத்துல, நான் என் பதவியை விட்டுவிட என்னை ஆயத்தப்படுத்திக்கிட்டேன்.

சில நாட்களுக்கு அப்புறம், என் உறவினர் என்னை வற்புறுத்தவும், என்னை சிந்தித்துப் பார்க்கச் சொல்லவும் கீழ்த்தளத்துக்கு வந்தாரு. நான் மனந்திரும்பலேன்னா, பேராயர் என்னை திருச்சபையில இருந்து வெளியேற்றிவிடுவார்ன்னு சொன்னாரு. அதைக் கேட்டதும் நான், அதிர்ந்து போனேன். இந்தத் திருச்சபையில வெளியேற்றிவிடப்படுவதுங்கறதப்போல எதையுமே நான் கேள்விப்பட்டதே இல்லை. அந்த நேரத்துல, “நான் வெளியேற்றப்பட்டால், எனக்குத் தெரிஞ்ச திருச்சபை உறுப்பினர்களும் முழு மறைமாவட்டமும் என்னை நிராகரிக்கும்” அப்படின்னு நெனச்சேன். என்னோட உறவினர் போனபிறகு, எனக்குள்ளான போராட்டத்தை என்னால நிறுத்த முடியல. கர்த்தரை விசுவாசிச்ச தருணத்திலிருந்து, நான் வெளியேற்றிவிடப்படக் கூடும்ன்னு ஒருபோதும் நெனச்சதில்ல. அந்த நாட்கள்ல நான் இந்த விஷயங்களப் பத்தி மறுபடியும் மறுபடியும் சிந்திச்சேன். கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையப் பத்தி வேதாகமத்துல உள்ள தீர்க்கதரிசனங்கள நான் ஒவ்வொரு முறையும் பார்த்தபோது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையப் பத்தி எனக்கு சாட்சியளித்த சகோதர சகோதரிகளையும் நான் வாசிச்ச தேவனுடைய வார்த்தையின் பத்திகளையும் நான் நெனச்சேன். இந்தக் காட்சிகள் ஒரு திரைப்படத்துல வருவது போல என் மனசுல பளிச்சிட்டது. சர்வவல்லமையுள்ள தேவன் திரும்பி வந்திருக்கிற கர்த்தர், அவரைப் பின்தொடர்றத என்னால விட்டுவிட முடியல! ஆனா, திருச்சபைய விட்டு வெளியேறுதல் அல்லது வெளியேற்றப்படுதல் என்ற நினைவுகளினால், என்னால தீர்மானம் எடுக்க முடியல.

அதுக்கப்புறம், பேராயர் கீழ்த்தளத்துக்கு வந்து நான் சிந்திச்சி என்ன முடிவெடுத்தேன்னு கேட்டாரு. நான் சர்வவல்லமையுள்ள தேவனை தொடர்ந்து விசுவாசிப்பத பார்த்து, மிக கோபப்பட்டாரு. அதோடு, “கிழக்கத்திய மின்னல் மீதான உன்னோட விசுவாசம் ஒரு சாதாரண விஷயம் இல்ல. நீ உண்மையிலயே உன்னப் பத்தி ஆராய்ஞ்சி பாக்கணும். உன்ன உண்மையா அறிஞ்சுக்கிட்டு, மனந்திரும்பி, கிழக்கத்திய மின்னலை நிராகரிக்க முடிஞ்சா, உன்னோட தப்ப எங்களால மறக்க முடியும் நீ தலைமை குருவாக உன்னோட பதவியில இருக்க முடியும்” அப்படின்னு சொன்னாரு. பேராயர் போனதுக்கு அப்புறமா, அங்கிருந்த குரு ஜாவோ அவர்களும் என்னை வற்புறுத்த வந்தாரு. அவர், “உங்க சிந்தனையின் முடிவுகள நீங்க எழுதணும். நல்லபடியா எழுதினா, நீங்க தலைமை குருவாக தொடர்ந்து இருக்கலாம். நீங்க அதை எழுதலேன்னா, பேராயர் உங்கள அப்படியே விட்டுவிடமாட்டார்!” அப்படின்னு சொன்னாரு. அதைக் கேட்டதும், பேராயர் எனக்கு ஒரு இறுதி எச்சரிக்கை கொடுத்திருந்தார்னும், என் சிந்தனையின் முடிவுகள நான் எழுதலேன்னா, என் தலைமை குரு பதவி போய்விடும்ன்னும், நான் திருச்சபையில இருந்து வெளியேற்றப்படுவேன்னும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இதை நெனச்சபோது எனக்குக் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு. நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றணும்ங்கறது எனக்குத் தெரிஞ்சாலும் கூட, நான் இன்னும் என் பதவிய விட்டுவிட கொஞ்சம் விருப்பமில்லாமல்தான் இருந்தேன். அது ஒரு வேதனையான நேரமாக இருந்துச்சு, அதனால, நான், “சர்வவல்லமையுள்ள தேவனே, என்னோட இறுதி முடிவை இன்றைக்கு எதிர்கொள்ளுறேன். தயவுசெய்து எனக்கு வழிகாட்டி, சரியான முடிவெடுக்க என்னை வழிநடத்துவீராக” அப்படின்னு சொல்லி, தேவனை நோக்கிக் கருத்தாய் கூப்பிட்டேன். நான் ஜெபித்த பிறகு, என்னோட சகோதர சகோதரிகள் எனக்கு வாசிச்சு காண்பிச்ச தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்திய நான் சிந்தித்துப் பார்த்தேன். தேவன் சொல்லுகிறார்: “தேவன் நிச்சயமாக வேறு எங்கும் தொடங்க மாட்டார். தேவன் இந்த உண்மையை நிறைவேற்றுவார்: உலகம் முழுவதிலும் உள்ள எல்லா ஜனங்களையும் தனக்கு முன்பாக வரச் செய்து, பூமியிலுள்ள தேவனை வணங்கச் செய்வார், மற்றும் மற்ற இடங்களில் அவருடைய கிரியை நிறுத்தப்படும், மற்றும் ஜனங்கள் மெய்யான வழியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அது யோசேப்பைப் போலவே இருக்கும்: எல்லோரும் ஆகாரத்துக்காக அவனிடம் வந்து, அவனை தலை வணங்கினார்கள் ஏனென்றால், உண்பதற்கு ஆகாரம் அவனிடம் இருந்தது. பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, ஜனங்கள் மெய்யான வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மத சமூகமும் கடுமையான பஞ்சத்தை அனுபவிக்கும். இன்றைய தேவன் மட்டுமே ஜீவத்தண்ணீரின் ஊற்றாவார், தேவன் மட்டுமே மனிதனுடைய இன்பத்திற்காக எப்போதும் சுரக்கும் ஊற்றைக் கொண்டவர், மேலும் ஜனங்கள் வந்து அவரைச் சார்ந்து இருப்பார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது”). அது உண்மைதான். இப்போது, எல்லா இடங்கள்லயும் உள்ள திருச்சபைகள் பாழாகியிருச்சு, பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்லை. பேராயர்களும் குருக்களும் வெளிச்சம் இல்லாமல் பிரசங்கிக்குறாங்க, இறையியல் கொள்கைகளயும் மத கோட்பாடுகளயும் பத்தி மட்டுமே பேச முடியுது இல்லேன்னா மத சடங்காச்சாரங்களயும் ஜனங்களால உருவாக்கப்பட்ட விதிகளயும் கடைபிடிக்கும்படி ஜனங்களைக் கேக்குறாங்க. ஆனா, இவைகளப் பற்றிக் கொண்டிருப்பது ஜனங்களுடைய வாழ்வுல சிறிதளவும் பயனையும் பக்திவிருத்தியையும் கொடுக்காது, ஒவ்வொருவரும் பாவம் செய்தல், பாவத்த அறிக்கையிடுதல், மறுபடியும் பாவம் செய்தல்ங்ற ஒரு சுழற்சியில வாழுறாங்க. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் பாவம் செய்யும் பிரச்சனைய உங்களால சரிசெய்ய முடியாது. மதகுருமார்களும், காணிக்கைகளத் திருடுதல் மற்றும் விபச்சாரம் போன்ற வெளிப்படையான பாவங்கள்ல இருந்து விலகி இருக்க முடியாது, என்னோடு கீழ்த்தளத்தில் இருக்கும் குருவானவர் ஜாவோ அவர்களப் போல, இவ்வளவு பெரிய பாவத்தை செய்ததற்காக அவர் வெட்கப்படல. அந்த அளவுக்கு சீரழியுறது ரொம்பவே பரிதாபமானது. கத்தோலிக்க மார்க்கம் இன்று ஒரு தேங்கி நிற்கும் குளமே அல்லாமல் வேறல்ல! சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை வித்தியாசமாக இருந்துச்சு. ஒவ்வொரு கூடுகையிலும் நாங்க சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிக்கிறோம். இது எங்களுக்கு சத்தியத்தைப் புரிஞ்சுக்க உதவுச்சு, அதோடு எங்கள் வாழ்க்கைக்கு வேண்டியத வழங்கி பயனளிச்சுச்சு. நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையப் பின்தொடராமல் கடைசி நாட்கள்ல தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தப் பெற்றுக்கொள்ளலேன்னா, நான் ஒருபோதும் பாவத்துக்குத் தப்ப மாட்டேன். நான் ஒவ்வொரு நாளும் விடுபட முடியாமல் பாவத்துல சிக்கியிருப்பேன். மதத்துல எல்லாரோட ஆதரவும் இருந்து என்ன பயன்?

அப்போ, நான் தேவனுடைய வார்த்தைகள் சிலவற்றை நெனச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளை உன் சார்பாகத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு பலவீனமான நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படிச் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைக் காட்ட வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”). சர்வவல்லமையுள்ள தேவன் நமக்கு சத்தியத்தயும், வழியையும், ஜீவனையும் தர்றாரு. இந்த சத்தியங்கள் மட்டுமே நாம் சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்படுவதுக்கான ஒரே வழி. இன்றைக்கு சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய சத்தியத்த என்னால ஏத்துக்க முடிஞ்சு என்னோட சீர்கெட்ட மனநிலைய மாத்த ஒரு வழியைப் பெற்றிருப்பது, உண்மையிலயே தேவனுடைய மேன்மையும் கிருபையுமா இருந்துச்சு. நான் கத்தோலிக்க மதத்துலயே இருப்பத தெரிஞ்செடுத்திருந்தா, அந்தஸ்த அனுபவிக்க ஆசப்பட்டு, கடைசி நாட்கள்ல தேவனுடைய இரட்சிப்ப நிராகரிச்சிருந்தா, நான் என்றென்றும் தேவனால்ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, எனக்கான இரட்சிப்பின் வாய்ப்பை முற்றிலுமா இழந்துபோயிருப்பேன்! நான் முற்காலத்து பிரதான ஆசாரியர்களப் போலவும் பரிசேயர்களப் போலவும் இருந்திருப்பேன். அவங்க யூதர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்தப் பெற்றிருந்தாங்க, எல்லோருடைய உயர்ந்த கருத்து மதிப்பையும் ஆதரவையும் அனுபவிச்சாங்க, ஆனா, கர்த்தராகிய இயேசு வந்தபோது, கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளுக்கு அதிகாரமும் வல்லமையும் உண்டுங்கறத அவங்க தெளிவா அறிஞ்சிருந்தாங்க, ஆனா, தங்களோட அந்தஸ்தயும் வருமானத்தையும் பாதுகாப்பதுக்காக, அவங்க கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பை ஏற்க மறுத்து, அவரைச் சிலுவையில அறைஞ்சாங்க. கடைசியில, அவங்க தேவனால் என்றென்றும் சபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாங்க. இந்தக் கட்டத்துல, பரிசேயர்களின் அடிச்சுவடுகள என்னால பின்பற்ற முடியாதுங்கறது எனக்குத் தெரியும்! நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய புதிய கிரியைய ஏத்துக்கிட்டேன், தேவனுடைய வார்த்தையின் நீர்ப்பாய்ச்சுதலையும் வழங்கலையும் அனுபவிச்சேன். நான் தேவனுடைய வார்த்தையில் என்னைப் பத்தி சிந்தித்துப் பாத்து, என் பாவத்துக்கான மூல காரணத்தக் கண்டுபிடிக்க முடிஞ்சுது, சீர்கேட்டுல இருந்து சுத்திகரிக்கப்படுவது எப்படிங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் பாதையப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே என்னால் இரட்சிப்பை அடயவும் தேவனுடைய அங்கீகாரத்தப் பெறவும் முடிஞ்சுது. உயர்ந்த அந்தஸ்தப் பெற்றிருப்பதக் காட்டிலும் அது மதிப்புமிக்கதாவும் அர்த்தமுள்ளதாவும் இருந்ததல்லவா? இதை நெனச்சபோது, என்னோட இருதயம் ரொம்பவே பிரகாசமடஞ்சுது. மதத்துல பற்றிக்கொள்ளத் தகுதியான எதுவுமே இல்லங்கறதயும், அதனால அங்கு தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லங்கறதையும் நான் தெளிவா பார்த்தேன். அதனால, குரு, தலைமை குரு ஆகிய என் பதவிகளை நான் விட்டுவிட்டேன் அதோடு, அங்கிருந்து வெளியேற உறுதியா தீர்மானிச்சேன்.

கீழ்த்தளத்துல இருந்த அந்த சில நாட்களா நான் சில கஷ்டங்கள அனுபவிச்சிருந்தாலும் கூட, தேவனுடைய வார்த்தையின் வழிகாட்டலும் வழிநடத்துதலும், நான் பின்தொடர வேண்டியது அந்தஸ்து இல்ல, தேவன் அதை அங்கீகரிக்கவும் இல்லைங்கறதை எனக்குப் புரிய வச்சுச்சு. முன்னால் உள்ள பாதை தெளிவாக இருப்பதை நான் உணர்ந்தேன். கடந்த காலத்துல, வேத அறிவையும் இறையியலையும் புரிஞ்சுக்குவதுதான் தேவனை அறிவதுன்னு நெனச்சேன். நான் புரிஞ்சுக்கிட்ட இறையியல் கோட்பாடுகள் எல்லாமே தேவனைப் பத்திய கருத்துக்களும் கற்பனைகளும்தான்ங்கறத நான் உணரல. அவைகள் ஒருபோதும் சத்தியத்தோடு ஒத்துப்போவதில்ல. தேவனை மட்டுப்படுத்த செய்ததும் தேவனுடைய கிரியைய என்னை எதிர்க்கச் செய்ததுமான கடக்கக் கூடாத தடையாக அவை இருந்துச்சு, அதோடு, தேவனைத் தேடுவதுக்கான எந்த மனத்தாழ்மையோ அல்லது தெய்வ பயமோ இல்லாமல்போய் என்னை இன்னும் அதிக அகந்தயுள்ளவனாவும் சுயநீதியுள்ளவனாவும் ஆக்குச்சு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய இரக்கம் இல்லேன்னா, அவரோட இரட்சிப்பைப் பெறுவது எனக்குக் கூடாத காரியமாய் இருந்திருக்கும்! அதோடு, நான் அந்தஸ்தையும் சந்தோஷத்தையும் விரும்பினபோதும் எதைத் தேர்வு செய்வதுன்னு எனக்குத் தெரியாமல் இருந்தபோதும், என்னைப் பிரகாசிப்பிக்கவும் வழிநடத்தவும் தேவன் தம்முடைய வார்த்தைகள அநேக முறை பயன்படுத்தினாரு, என் பதவியை விட்டுவிடவும், அவரோட கிரியையைத் தொடர்ந்து செய்யவும் என்னை வழிநடத்தினாரு. தேவனுடைய அக்கறையும் ஆதரவும் இல்லேன்னா, என்னால ஒருபோதும் தேவனிடத்துக்குத் திரும்பி வந்திருக்க முடியாது அதனாலதான், தேவனுடைய அன்பு நடைமுறையானதும் உண்மையானதுமாய் இருக்குதுன்னு நான் உணருறேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கத்தோலிக்க சாட்சியம்: நான் தேவனின் வருகையை வரவேற்றேன் (பகுதி 1)

தேவாலயங்கள் இன்னும் வெறிச்சோடி காணப்படுகின்றன மற்றும் விசுவாசிகள் விசுவாசத்தில் பலவீனமாக உள்ளனர். உண்மையான மற்றும் பொய்யான வழியை நாம் எவ்வாறு வேறுபடுத்தி கர்த்தரின் வருகையை வரவேற்க வேண்டும்? கற்றுக்கொள்ள இப்போது படிக்கவும்.

கர்த்தருடைய வருகையைப் பொறுத்தவரை ஒருவர் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?

கர்த்தரோட வருகைய வரவேற்கறதுக்கு முக்கியமானது என்னது? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது” (யோவான்...

பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், தேவன் மீதான நம்பிக்கை பைபிளில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும், பைபிளிலிருந்து கூறப்படுவது மதங்களுக்கு எதிரானது என்றும் பல சகோதர சகோதரிகள் நம்புகிறார்கள். சகோதரி சுன்கியு இந்த கருத்தையும் வைத்திருந்தார். பின்னர், ஒரு காலகட்டத்தில், அவள் பைபிளைப் பற்றிய சரியான அறிவைப் பெற்றாள், இதனால் கர்த்தரை வரவேற்றாள்.

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம்...