பைபிள் பிரசங்க குறிப்புகள்: வேதாகமத்தை சரியாக அணுகியதன் மூலம், நான் கர்த்தருடைய வருகையை வரவேற்றிருக்கிறேன்

ஜூன் 13, 2021

பைபிள் பிரசங்க குறிப்புகள்சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக வேண்டியதிருக்கிறது. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யபட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). வேதாகமம் என்பது நியாயப்பிரமாண மற்றும் கிருபையின் காலங்களில் தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியையின் ஒரு பதிவு மாத்திரமே தவிர, கடைசி நாட்களில் அவருடைய வார்த்தைகளோ, கிரியையோ அல்ல என்பதை சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் எனக்குக் காண்பித்தன. நாம வேதாகமத்த பிடித்துக்கொண்டு, கடைசி நாட்களில் ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை தேடவில்லை என்றால், நம்மால் ஆட்டுக்குட்டியானவரோடு இணக்கமாக இருந்து, கர்த்தருடைய வருகையை வரவேற்க முடியாது. கர்த்தரை வரவேற்க இந்த சத்தியம் நமக்கு முக்கியமானது.

2018 ஜனவரியில் ஒரு நாள் நான் சகோதரி ஸீ மற்றும் சகோதரி சென் அவர்களை ஆன்லைனில் சந்தித்தேன், அவங்ககிட்ட வேதாகமத்த குறித்த தனித்துவமான நுண்ணறிவு இருந்தது. அவங்களோட ஐக்கியங்கள் ரொம்பவும் நடைமுறையானதாகவும் ஒளி நிறைந்ததாகவும் இருந்தன. திருச்சபைகளின் பாழடைதலுக்கான காரணங்களையும், எப்படி புத்தியுள்ள கன்னிகைகளாக இருந்து கர்த்தரை வரவேற்பது என்பதையும், பரிசேயர்கள் ஏன் கர்த்தராகிய இயேசுவை எதிர்த்தாங்க என்பதையும், வெளிப்படுத்துதலில் தீர்க்கதரிசனம் உரைத்தபடி கடைசி நாட்களில் தேவன் செய்யும் கிரியையையும் மற்றும் பலவற்றையும் பற்றி அவங்க என்னிடம் சொன்னாங்க. அவங்க என்னோடு பல நாட்கள் ஐக்கியம் கொண்டாங்க, 10 ஆண்டுகளுக்கும் மேலாக என் போதகர் சொன்னதை கேட்டதை விட எனக்கு அதிகம் புரிந்தது. இது எல்லாம் ரொம்ப புத்துணர்ச்சியாகவும் புதியதாகவும் இருந்துச்சு, அவங்களால எப்படி வேதாகமத்திலிருந்து இவ்வளவு வெளிச்சத்தைப் பெற முடிந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அதிகப்படியான சத்தியங்களையும் இரகசியங்களையும் அறிந்துகொள்ளவும், கர்த்தரை நன்கு தெரிந்துகொள்ளவும் அவங்களோட கூட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தேன்.

இந்த கூட்டங்களில் ஒன்றில், சகோதரி ஸீ என்னிடம் மகிழ்ச்சியுடன் சொன்னார், “எனக்கு சில சிறந்த செய்திகள் உள்ளன! கர்த்தர் திரும்பி வந்து சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், கடைசி நாட்களில் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்.” இதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன், ஆனா நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது, அதனால நான் கேட்டேன், “அது உண்மைதானா?” சகோதரி சென் சொன்னாங்க, “ஆமாம், அது உண்மைதான். கர்த்தர் சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்திருக்கிறார். அவர் வார்த்தைகளை பேசுகிறார் மற்றும் நியாயந்தீர்க்கும் கிரியையை செய்கிறார்.” கர்த்தர் பேசுவதற்கும் நியாத்தீர்ப்பின் கிரியையை செய்வதற்கும் திரும்பி வந்திருக்கிறார், அதனால அவங்க பிரசங்கம் வேதாகமத்துக்கு அப்பால் செல்கிறது என்பதை கிழக்கத்திய மின்னல் சாட்சியமளிப்பதாக முகநூலில் நான் பார்த்த ஒரு பதிவைப் பற்றி திடீரென நினைத்துப் பார்த்தேன் நான் திடீரென என் சுயத்திற்கு வந்து, சகோதரி சென்னிடம் விரைவாக கேட்டேன், “நீங்கள் கிழக்கத்திய மின்னலை நம்புகிறீர்களா?” “ஆம்” என்று அவர் வெளிப்படையாக சொன்னார். எனக்கு கொஞ்சம் குழப்பம் உண்டானது தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியை எல்லாம் வேதாகமத்தில் உள்ளன என்றும், கர்த்தரிடத்திலுள்ள விசுவாசம் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், வேதாகமத்திலிருந்து விலகுவது மதங்களுக்கு எதிரானது என்றும் போதகரும் மூப்பர்களும் எப்போதுமே சொல்வதை நினைத்துப் பார்த்தேன். இந்த சகோதரிகள் பிரசங்கிப்பது வேதாகமத்திற்கு அப்பால் சென்றது. அவங்க கர்த்தருடைய வழியிலிருந்து விலகியிருக்கவில்லையா? அதனால நான் கேட்டேன், “நீங்க பிரசங்கிப்பது எங்க போதகரும் மூப்பர்களும் பிரசங்கிப்பதில் இருந்து வேறுபட்டதாக இருக்கிறது. என்னால இனிமேல் உங்கள சந்திக்க முடியாதோன்னு பயப்படுகிறேன்.” அப்புறம் நான் உடனே துண்டித்துவிட்டேன். ஆனா கர்த்தருடைய வருகை குறித்த செய்தி பல காலங்களாக என் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சகோதரிகளோட ஐக்கியம் எவ்வளவு அறிவொளிவூட்டுவதாகவும் நடைமுறையானதாகவும் இருந்தது என்று நான் நினைத்தேன். வேதாகமத்திலுள்ள இரகசியங்களைப் பற்றியும் தேவனுடைய சித்தத்தைப் பற்றியும் நான் அதிகமாக புரிந்துகொண்டேன். நான் நினைத்தேன்: “கிழக்கத்திய மின்னல் தேவனிடமிருந்து வந்ததாக இருக்குமோ? நான் அதைக் கேட்காமல், கர்த்தரை வரவேற்கும் என் வாய்ப்பை தவறவிட்டால், அது வருத்தப்படுவதற்கு மிகவும் தாமதமாகிவிடும்.” ஆனால் மதகுருமார்கள் சொல்வதை நான் நினைத்தபோது, நான் தவறாக வழிநடத்தப்பட்டுவிடுவேனோ என்று கவலைப்பட்டேன். இரண்டு வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படுவதைப் போல என் இருதயம் உணர்ந்தது, அதனால், நான் கர்த்தரிடம் என்னை சரியான வழியில் வழிநடத்தும்படி அவரிடம் உருக்கமாக ஜெபித்தேன்.

நான் மறுநாள் காலையில் ஆன்லைனில் சகோதரிகளுடன் மற்றொரு கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அவங்க எப்போதும் எவ்வளவு அன்பாகவும் பொறுமையுடனும் இருந்தார்கள் என்பதைப் பற்றி நினைத்தவாறு, நான் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பண்பற்றதாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால நான் வழக்கம் போல ஆன்லைனிற்குச் சென்றேன், நாங்க இணைக்கப்பட்டதும், நான் சொன்னேன், “உங்க ஐக்கியம் ரொம்ப அறிவொளிவூட்டுவதாக இருக்கு, நீங்க என்னிடம் வாசிப்பது உண்மையிலே நடைமுறையானது. ஆனா கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துட்டார்ன்னும், புதிய கிரியைகளைச் செய்வதாகவும் புதிய வார்த்தைகளை வெளிப்படுத்துவதாகவும் சொல்லுறீங்க. இது வேதாகமத்திற்கு அப்பால் செல்கிறது, கர்த்தருடைய வழியிலிருந்து விலகிச் செல்கிறது. தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியை எல்லாம் வேதாகமத்திற்குள் இருப்பதாக போதகர்களும் மூப்பர்களும் சொல்றாங்க. வேதாகமத்திற்கு வெளியே எப்படி தேவனிடமிருந்து புதிய வார்த்தைகள் வர முடியும்?”

அப்போது சகோதரி ஸீ பொறுமையாக சொன்னாங்க, “போதகர்களும் மூப்பர்களும் எப்போதும் சொல்லுறாங்க, ‘தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியை எல்லாம் வேதாகமத்திற்குள்ளேயே இருக்குது மற்றும் அதை வேறு எங்கும் காணமுடியாது.’ ஆனா இந்த கருத்து உண்மைகளுடனும் தேவனுடைய வார்த்தைகளுடனும் ஒத்துப்போகிறதா? கர்த்தராகிய இயேசு இதை எப்போதாவது சொன்னாரா? பரிசுத்த ஆவியானவர் சொன்னாரா? இது தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் அல்லது உண்மையின் அடிப்படையில் இல்லை என்றால், இந்த கருத்து மனிதனின் கருத்துக்களில் ஒன்றாகும், அதில் அர்த்தம் இல்லை. பழைய ஏற்பாட்டை தொகுத்தவர்கள் பல காரியங்களை விட்டுவிட்டதனால், தீர்க்கதரிசிகளால் தெரிவிக்கப்பட்ட யேகோவா தேவனுடைய சில வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்பது வேதாகமத்தை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். உதாரணமாக, எஸ்றாவின் தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் சேர்க்கப்படவில்லை, இது நன்கு அறியப்பட்ட உண்மை. கர்த்தராகிய இயேசு கிரியை செய்தபோது, நான்கு சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட வார்த்தைகளை மட்டுமே அவர் பேசவில்லை. அது யோவானின் சுவிசேஷம் சொல்வதைப் போல உள்ளது, ‘இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்’ (யோவான் 21:25). போதகர்களும் மூப்பர்களும் கொண்டிருக்கும் அந்த கண்ணோட்டத்தில் நாம் சென்றால், தேவனுடைய அந்த வார்த்தைகளை வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று நாம அவற்றை மறுக்கவும் நிந்திக்கவும் மாட்டோமா? மேலும், கர்த்தராகிய இயேசு தெளிவாக முன்னறிவித்தார்: ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). இது வெளிப்படுத்துதலிலும் பலமுறை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருக்கு: ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்துதல் அத்தியாயங்கள் 2, 3) ஆட்டுக்குட்டியானவராலும் ஏழு இடிமுழக்கங்களாலும் திறக்கப்பட வேண்டிய புஸ்தகச்சுருள் உள்ளது. கடைசி நாட்களில் கர்த்தர் திரும்பி வரும்போது, அவர் அதிகமான வார்த்தைகளைப் பேசுவார் என்பதை இந்த வார்த்தைகள் நமக்கு சொல்லுகின்றன, இந்த வார்த்தைகளை முன்கூட்டியே வேதாகமத்தில் பதிவு செய்ய முடியாது. தேவனுடைய வார்த்தைகளை வேதாகமத்தில் மட்டுமே காண முடிந்தால், இந்த தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறும்? தேவன்தான் சிருஷ்டிகர், சதாகாலமும் பாயும் ஜீவ நீரூற்று, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வரையறுக்கப்பட்ட வார்த்தைகளை மட்டுமே அவரால் எப்படி பேசியிருக்க முடியும்? ‘தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகள் எல்லாம் வேதாகமத்தில் உள்ளன, அவற்றை வேறு எங்கும் காணமுடியாது,’ என்று மதகுருமார்கள் கூறுகின்றனர். ஆனால் இது திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுவின் கிரியையையும் வார்த்தைகளையும் மறுக்கவும் நிந்திக்கவுமில்லையா?”

அவருடைய ஐக்கியத்தை கேட்ட பிறகு, நான் நினைத்தேன், “ஆம், கர்த்தர் திரும்பி வந்து அதிக வார்த்தைகளைப் பேசுவார், அந்த வார்த்தைகள் வேதாகமத்தில் உள்ளதைத் தாண்டி இருக்க வேண்டும் என்று கர்த்தர் தீர்க்கத்தரிசனம் உரைத்தார்.” ஆனால் வேதாகமத்திற்கு வெளியே செல்வது குறித்து சிந்திப்பது என்னை தொந்தரவு செய்தது, நான் நினைத்தேன், “வேதாகமத்திற்கு வெளியே செல்வது மதங்களுக்கு எதிரானது என்று போதகர்களும் மூப்பர்களும் எப்போதும் சொல்லுறாங்க. என் விசுவாசத்திலிருந்து நான் விலகினால் என்ன நடக்கும்? நான் கர்த்தரை இவ்வளவு காலமாக விசுவாசித்து, எப்போதும் வேதாகமத்தை வாசிக்கிறேன். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை வேதாகமத்தின் அடிப்படையில்தான் கொண்டுள்ளனர். வேதாகமந்தான் நம் விசுவாசத்தின் தூண். யாராவது அதிலிருந்து விலகி கர்த்தரை விசுவாசிப்பது எப்படி?” இந்த எண்ணத்தில் நான் அமைதியாகிவிட்டேன்.

நான் ஒரு வார்த்தை கூட பேசாததைக் கண்ட சகோதரி சென் ஐக்கியத்த தொடரல. நாங்க சென்ற பிறகு, வேதாகமத்திலிருந்து வெளியே வாருங்கள் என்ற சுவிசேஷ திரைப்படத்திலிருந்து வேதாகமத்தின் படி தேவன் கிரியை செய்கிறாரா என்ற ஒரு கிளிப்பை அவர் எனக்கு அனுப்பி, என்னை அதைப் பார்க்கச் சொன்னார். நான் லிங்கை திறந்து முக்கிய கதாபாத்திரமான வாங் யூ ஒரு போதகருடன் ஐக்கியப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது என்னை உடனே ஈர்த்தது. அவர் சொன்னார், “தேவன் தமது இரட்சிப்பின் கிரியையை வேதாகமத்திற்கு வெளியே செய்ய மாட்டார் என்று நீங்க சொன்னீங்க, வேதாகமத்திற்கு அப்பால் செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானது. அதனால உங்ககிட்ட கேட்க என்னிடம் ஒரு கேள்வி உள்ளது: எது முதலில் வந்தது, வேதாகமமா அல்லது தேவனுடைய கிரியையா? தேவன் ஆதியிலே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். அவர் உலகத்தை ஜலப்பிரளயத்தில் மூழ்கடித்தார், சோதோம் மற்றும் கொமோராவை எரித்தார். தேவன் அந்த காரியங்களைச் செய்தபோது பழைய ஏற்பாடு இருந்ததா?” “கர்த்தராகிய இயேசு கிருபையின் காலத்தில் கிரியை செய்ய வந்தபோது புதிய ஏற்பாடு இருந்ததா?” மேலும் அவர் சொன்னார், “பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் தேவனால் செய்யப்பட்ட கிரியையைப் பற்றிய ஜனங்களின் பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டன. தேவன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய மாட்டார், அவர் அதனால் மட்டுப்படுத்தப்படவில்லை ஏனென்றால் அவர் தமது சொந்த நிர்வாகத் திட்டத்திற்கும் மனுக்குலத்தின் தேவைகளுக்கும் ஏற்ப கிரியை செய்கிறார்.” “அப்படியானால் நம்மால் தேவனுடைய கிரியையை வேதாகமத்திற்குள் மட்டுப்படுத்த முடியாது அல்லது தேவனுடைய கிரியையை வரையறுக்க வேதாகமத்தை பயன்படுத்த முடியாது, ஏனென்றால், தேவன் தமது சொந்த கிரியையைச் செய்ய உரிமை உள்ளது.” சகோதரி வாங்கின் ஐக்கியத்தில் என் இருதயம் பிரகாசித்தது. நான் நினைத்தேன், “கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தபோது புதிய ஏற்பாடு கிடையாது, தேவன் சலத்தையும் சிருஷ்டித்து நியாயப்பிரமாணங்களை வழங்கியபோது பழைய ஏற்பாடு இல்லை. இது மறுக்க முடியாதது!” “நான் ஏன் இதற்கு முன்பு இதைப் பற்றி யோசிக்கவில்லை?”

வீடியோவில் உள்ள ஐக்கியம் தொடர்ந்தது: “வேதாகமத்திற்கு அப்பால் செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானது என்று நாம் சொல்வோமேயானால், வரலாறு முழுவதுமுள்ள தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியை அனைத்தையும் நாம் நிந்திக்கவில்லையா? கர்த்தராகிய இயேசு கிரியை செய்தபோது, அதை பழைய ஏற்பாட்டின்படி செய்யவில்லை. அவர் மனந்திரும்புதலின் வழியைப் பிரசங்கித்தார், பிணியாளிகளைக் குணமாக்கினார், பேய்களைத் துரத்தினார், ஓய்வுநாளை கடைப்பிடிக்கவில்லை, ஏழெழுபது முறை ஜனங்களை மன்னித்தார்—இது எதுவும் பழைய ஏற்பாட்டில் இல்லை. பரிசேயர்களும், பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இந்த காரியங்களை கர்த்தருக்கு விரோதமாக பயன்படுத்தினர், அவருடைய கிரியையை மதங்களுக்கு எதிரானது என்று நிந்தித்தனர். அவர்கள் தேவனை நம்பினார்கள், ஆனாலும் அவரை எதிர்த்தார்கள்.”

அதன்பின் அந்த சகோதரி சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் இரண்டு பத்திகளை வாசித்தார். “வேதாகமத்தைக் குறித்த யதார்த்தம் ஒருவருக்கும் தெரியவில்லை. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஒரு ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்த புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)”). “இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதை கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாண காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாண காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதை பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்கு பழைய ஏற்பாட்டை பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றி பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். … அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அதன்படி நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”).

சகோதரி வாங் மேலும் சொன்னாங்க: “வேதாகமம் என்பது நியாயப்பிரமாண மற்றும் கிருபையின் காலங்களில் நடந்த தேவனுடைய இரண்டு கட்ட கிரியைகள் குறித்த ஒரு பதிவு மட்டுமேயாகும். அது தேவனுடைய இரண்டு கட்ட கிரியைகளின் ஒரு சாட்சியாகும், இதில் அவர் சகலத்தையும், மனுக்குலத்தையும் சிருஷ்டித்த பிறகு மனுக்குலத்தை வழிநடத்தினார், விடுவித்தார். மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தேவனுடைய முழு கிரியையையும் அது பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிச் செல்கிறது. தேவன் ஒரு புதிய காலத்தைத் துவங்கி, கடைசி நாட்களில் புதிய கிரியையை செய்கிறார். நம்மை என்றென்றைக்கும் பாவத்திலிருந்து விடுவிக்க அனுமதிக்கும் அதிக சத்தியங்கள அவர் மனிதனுக்கு கொடுக்கிறார், இதனால் நாம் சுத்திகரிக்கப்பட்டு, முழுமையாக இரட்சிக்கப்பட்டு, அவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். ஆகவே, வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய கிரியையின் அடிப்படையில் தேவன் மனிதனை வழிநடத்துவதில்லை, குறிப்பாக அவர் ஏற்கனவே செய்த கிரியையை மீண்டும் செய்ய மாட்டார். தேவன் சிருஷ்டிப்பு மற்றும் வேதாகமம் இரண்டிற்கும் கர்த்தராக இருக்கிறார். வேதாகமத்திற்கு அப்பால் செல்லவும் அவரது நிர்வாகத் திட்டத்தின்படி புதிய கிரியைகளைச் செய்யவும் அவருக்கு அதிகாரம் உள்ளது. அதனால்தான் ‘தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியை எல்லாம் வேதாகமத்தில் உள்ளன, வேதாகமத்திலிருந்து விலகுவது மதங்களுக்கு எதிரானது’ ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று, இது தேவனை வெறுமனே மட்டுப்படுத்துகிறது மற்றும் தூஷணம் செய்கிறது. இதைச் சொல்லும் எவரும் தேவனுடைய கிரியையை அறியாமல் தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் வேதாகமத்தின்படி அல்ல தமது திட்டத்தின்படியே கிரியை செய்கிறார். கர்த்தராகிய இயேசு மனந்திரும்புதலின் வழியைப் பிரசங்கித்தார், பேய்களைத் துரத்தினார், பிணியாளிகளை சொஸ்தமாக்கினார், அவர் ஓய்வுநாளை கடைப்பிடிக்கவில்லை, எப்போதும் மன்னிக்க வேண்டுமென்று ஜனங்களுக்கு கற்றுக்கொடுத்தார்—இது எல்லாம் பழைய ஏற்பாட்டிற்கு அப்பாற்பட்டவை அல்லவா? அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களை கூட மீறிவிட்டார், ஆனால் இது இன்னும் தேவனுடைய கிரியை அல்லவா?” நான் இவ்வளவு காலமாக கர்த்தரிடத்தில் விசுவாசம் கொண்டிருந்தேன், “தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியை எல்லாம் வேதாகமத்தில் இருக்கு, வேதாகமத்திற்கு வெளியே செல்வது மதங்களுக்கு எதிரானது” என்று மதகுருமார்கள் சொன்னதையே எப்போதும் நம்பி அவற்றை பிடித்துக் கொண்டிருந்தேன். நான் தேவனுடைய கிரியையை நிந்திக்கவில்லையா? இப்போ நான் எவ்வளவு முட்டாள்தனமாகவும் குழப்பமாகவும் இருந்தேன் என்பதை பார்க்கிறேன்!

அதற்குப் பிறகு எனக்கு நேரம் கிடைத்த போதெல்லாம், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தயாரித்த சுவிசேஷ திரைப்படங்களையும் வீடியோக்களையும் நான் யூடியூப்பில் பார்த்தேன். ஒரு நாள், நான் தேவனுக்கும் வேதாகமத்துக்கும் இடையிலான உறவு என்றால் என்ன என்ற திரைப்பட கிளிப்பை கிளிக் செய்தேன். அந்த கிளிப்பில் உள்ள தேவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாக ஏவின. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)”). “அவர்கள் நான் இருப்பதை வேதாகமத்தின் எல்லைக்குள் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்கள் என்னை வேதாகமத்துடன் ஒப்பிடுகிறார்கள்; வேதாகமம் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் வேதாகமம் இல்லை. அவர்கள் எனது பிரசன்னத்துக்கோ அல்லது கிரியைகளுக்கோ செவிசாய்ப்பதில்லை, மாறாக வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் தீவிரமான மற்றும் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். வேதத்தால் முன்னறிவிக்கப்பட்டிருந்தாலொழிய நான் செய்ய விரும்பும் எதையும் நான் செய்யக்கூடாது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அவர்கள் வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அளவிடுவதற்கும் என்னை நிந்திப்பதற்கும் அவர்கள் வேதாகமத்தின் வசனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு, வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்று கூறலாம். அவர்கள் தேடுவது என்னுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்லது சத்தியத்திற்கு இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்ல, ஆனால், வேதாகமத்தின் வார்த்தைகளுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள், மற்றும் அவர்கள் வேதாகமத்திற்கு இணங்காத எதையும் விதிவிலக்கு இல்லாமல், எனது கிரியை அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அத்தகையவர்கள் பரிசேயர்களின் கடமைப்பட்ட சந்ததியினர் அல்லவா? யூத பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்க மோசேயின் நியாயப்பிரமாணத்தை பயன்படுத்தினர். அவர்கள் அந்தக் கால இயேசுவோடு இணக்கத்தைத் தேடவில்லை, ஆனால் எழுத்துக்களுக்கான நியாயப்பிரமாணத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றினார்கள், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவில்லை என்றும் மேசியாவாக இல்லை என்றும் அவரைக் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்று, அவர்கள் இறுதியில் குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களின் சாராம்சம் என்ன? அவர்கள் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேடவில்லை அல்லவா? எனது சித்தத்திற்கு அல்லது எனது கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளுக்கு செவிசாய்க்கும்போது அவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பற்று வைத்திருந்தனர். அவர்கள் சத்தியத்தை நாடிய ஜனங்கள் அல்ல, மாறாக வார்த்தைகளை திடமாகப் பற்றிக்கொண்ட ஜனங்கள்; அவர்கள் தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் அல்ல, வேதத்தை விசுவாசிப்பவர்கள். அடிப்படையில், அவர்கள் வேதத்தின் கண்காணிப்பாளர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்”).

இந்த கிளிப்பைப் பார்த்த பிறகு, வேதாகமத்தை நன்கு அறிவது தேவனை உண்மையாக அறிவது அல்லது அவருக்குக் கீழ்ப்படிவது போன்றதல்ல என்பதை உணர்ந்தேன். யூத பரிசேயர்கள் வேதவசனங்களை விளக்குவதில் சிறந்து விளங்கினாங்க, ஆனாலும் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். வேதாகமத்த புரிந்துகொள்வது என்றால் தேவனைப் புரிந்துகொள்வது என்று அர்த்தமாகாது என்பதை இது காட்டுகிறது, ஏனென்றால் யாரோ ஒருவர் வேதாகமத்த கடைப்பிடிப்பதால், அவர்கள் கர்த்தருடைய வழியைப் பின்பற்றுகிறார்கள் என்று அர்த்தமல்ல. நான் பல ஆண்டுகளாக வேதாகமத்த படித்திருந்தாலும், அதைப் பற்றி கொஞ்சம் அறிந்திருந்தாலும், நான் உண்மையில் கர்த்தரை கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை. வேதாகமம் கர்த்தரைக் குறிக்கும் என்றும், வேதாகமத்தின் மீதான விசுவாசம் அவர் மீதான விசுவாசம் என்றும், வேதாகமத்த கடைப்பிடிப்பது கர்த்தருடைய வழியைக் கடைப்பிடிப்பது என்றும் நான் தவறாக நம்பியிருந்தேன். கடைசி நாட்களில் தேவன் தோன்றி கிரியை செய்கிறார்ன்னு சகோதரி ஸீ சாட்சியமளித்தபோது, நான் அதைப் பார்க்கத் துணியவில்லை. பின்னர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு, அவருடைய வார்த்தைகள் சத்தியமும் தேவனுடைய சத்தமுமாக இருக்கின்றன, ஏனென்றால் அவை வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை என் மனதில் அறிந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள எனக்கு இன்னும் கடினமாகவே இருந்தது. நான் வேதாகமத்தை தொழுதுகொண்டு அதையே பிடித்துக் கொண்டு, தேவனுடைய புதிய வார்த்தைகளையும் கிரியையையும் ஏற்க மறுத்துவிட்டேன். கர்த்தராகிய இயேசுவை எதிர்த்த பரிசேயர்களிடமிருந்து நான் எப்படி வித்தியாசப்பட்டேன்? இந்த எண்ணம் என்னை பயமுறுத்தியது. “நான் என் கருத்துக்களை விட்டுவிட வேண்டும்,” என்று நினைத்தேன். “சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை நான் அதிகம் படிக்க வேண்டும்.”

அடுத்த கூட்டத்தில், அந்த சுவிசேஷ திரைப்படங்களை பார்த்ததன் மூலமாக நான் பெற்றுக்கொண்டதையும் புரிந்துகொண்டதையும் பற்றி சகோதரிகளிடம் சொன்னேன். அவங்க மிகுந்த மகிழ்ச்சியடைந்து, தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்தியை எனக்கு வாசிச்சு காண்பித்தாங்க. “கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளும் ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்”).

பின்னர் சகோதரி ஸீ ஐக்கியத்த பகிர்ந்து கொண்டு சொன்னாங்க, “கடைசி நாட்களில், சர்வவல்லமையுள்ள தேவன் கிருபையின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, ராஜ்யத்தின் காலத்தைத் தொடங்குகிறார். அவர் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், மனுக்குலத்தை என்றென்றும் சுத்திகரித்து இரட்சிக்க தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கும் நியாயத்தீர்ப்பின் கிரியையை செய்கிறார்.” “சர்வவல்லமையுள்ள தேவன் மில்லியன் கணக்கான வார்த்தைகளைப் பேசியிருக்கிறார். பெரும்பாலானவற்றை ராஜ்யத்தின் கால வேதாகமமான மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதில் காணலாம். புத்தியுள்ள கன்னிகைகள் கர்த்தரை வரவேற்பது, எடுத்துக்கொள்ளப்படுவது என்றால் என்ன, பேரழிவுகளுக்கு முன் ஜெயங்கொள்ளுகிறவர்களை உருவாக்குவது, தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகக் கிரியை குறித்த இரகசியங்கள், அவருடைய மூன்று கட்ட கிரியைகளின் உள் கதை, மூன்று கட்ட கிரியைகளுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் இடையிலான உறவுகள், கடைசி நாட்களில் மாம்சமாதல் மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த இரகசிங்கள், வேதாகமத்தைக் குறித்த சத்தியம் போன்ற வேதாகமத்திலுள்ள முக்கியமான இரகசியங்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் எந்தக் குற்றத்தையும் சகித்துக்கொள்ளாத தமது நீதியுள்ள, மாட்சிமையான மனநிலையை வெளிப்படுத்துகிறார். சாத்தானால் மனுக்குலம் சீர்கெடுக்கப்பட்டது குறித்த உண்மையை அவர் அம்பலப்படுத்தி, நியாயந்தீர்க்கிறார், ஜனங்கள் ஏன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தேவனை எதிர்க்கின்றனர் என்பதற்கான மூல காரணத்தை நீக்குகிறார், மேலும் மனிதனுக்கான தமது சித்தம் மற்றும் தேவைகள் என்ன என்பதை நமக்குச் சொல்லுகிறார். தேவன் மீதான உண்மையான விசுவாசம் என்ன, தேவனுக்குக் கீழ்ப்படிதல், தேவனுக்குப் பயப்படுதல், தேவனுக்கு சாட்சி பகருதல் என்றால் என்ன, சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், நேர்மையாக இருப்பதும் எப்படி, ஒரு அர்த்தமுள்ள ஜீவியத்தை ஜீவிப்பது எப்படி மற்றும் பலவும் இவற்றில் அடங்கும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் ஏராளமாக உள்ளன, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றன. இந்த சத்தியங்களே கடைசி நாட்களில் தேவன் மனிதனுக்கு கொடுக்கும் நித்திய ஜீவனின் வழியாக இருக்கிறது. அவை நம்மை சுத்திகரித்து மாற்றும், பாவத்திலிருந்து விடுவிக்கும், நம்மை முழுமையாக இரட்சித்து, தேவனுடைய ராஜ்யத்திற்கு வழிநடத்தும்.”

சகோதரியோட ஐக்கியம் எல்லாவற்றையும் ரொம்ப தெளிவாக தெளிவுபடுத்தியது. சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்களை வெளிப்படுத்துகிறார், அவர் உண்மையிலேயே ஜீவத் தண்ணீரின் நித்திய ஊற்று! சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளே தேவனுடைய சத்தம் என்பதையும், அவரே திரும்பிவந்த கர்த்தராகிய இயேசு என்பதையும் நான் என் இருதயத்தில் அறிந்தேன். நான் அத்தனை ஆண்டுகளாக தேவனை விசுவாசித்தேன், ஆனால் உண்மையில் அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை, அதற்கு பதிலாக போதகரும் மூப்பர்களும் சொன்னதை நம்பினேன். நான் தேவனோட வார்த்தைகளையும் கிரியையையும் வேதாகமத்திற்குள் வரையறுத்து தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை ஏற்க மறுத்துவிட்டேன். தேவன் இன்னும் என்னைக் கைவிடல, ஆனா எனக்கு மீண்டும் மீண்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க சகோதரிகளைப் பயன்படுத்தினாரு. தேவனுடைய சத்தத்த கேட்கவும், கர்த்தருடைய வருகையை வரவேற்கவும் சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத் தண்ணீரின் ஜீவனை அனுபவிக்கவும் நான் ரொம்ப அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். இது எனக்கு தேவனுடைய கிருபையாக இருக்கு. சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மனந்திரும்புதல் என்றால் என்ன? பேரழிவுகளுக்கு நடுவே கிறிஸ்தவர்கள் எவ்வாறு மனந்திரும்ப வேண்டும்?

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 வைரஸானது உலகை உலுக்கி, உலகை பீதிக்குள் ஆழ்த்தியது. மேலும், ஆப்பிரிக்காவில் பரவிய பெரும் எண்ணிக்கையிலான...

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.

தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென...

கிறிஸ்தவர்கள் கூடுகைகளில் தவறாமல் கலந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

சாங் க்விங் அது வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர்...