தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றல்

ஜூன் 14, 2021

i-welcomed-the-return-of-the-Lord

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லோருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது அது இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், மேலும் இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். ‘ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து’ எனக் கருதும் விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான தீர்ப்பையும், மெய்யான ஜீவிதத்தின் வழியையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களுக்கு நியாயம் செய்வார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). கர்த்தரை வரவேற்பதில் விசுவாசிகளால் பகிர்ந்து கொள்ளப்படும் மிகப்பெரிய தவறு என்னன்னா அவங்க நேரடியான வேதவசனத்த பிடிச்சிக்கிட்டு, அவங்க கற்பனை செய்கிற மாதிரி அவர் ஒரு மேகத்தின் மீது வருவார்னு காத்திருக்காங்கன்னு தேவனுடைய வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. அவர் திரும்பி வந்து, சத்தியங்கள வெளிப்படுத்துகிறார், கடைசி நாட்கள்ல நியாயந்தீர்க்கும் கிரியையை செய்கிறார்னு அவங்க கேட்கும்போது கூட, அவங்க தேவனோட சத்தத்த நாடவோ கேட்கவோ முயற்சிக்கல. கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மீது இறங்கி வர்றத ஜனங்கள் பார்க்கிறப்ப, மனுக்குலத்த சுத்திகரிச்சு இரட்சிக்கும் தேவனோட கிரியை ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் என்பதை யாரும் கற்பனை செய்து பார்க்கிறதில்ல. அவங்க தண்டிக்கப்படுவாங்க, அழுவாங்க, பற்களைக் கடிப்பாங்க. சத்தியத்த தேடாமல் கருத்துக்களை பிடித்துக் கொண்டிருப்பது ரொம்ப ஆபத்தானது! என் கருத்துக்களிலும் கற்பனைகளிலும் சிக்கிக்கொண்ட நான் கர்த்தரை வரவேற்கும் வாய்ப்பை ஏறக்குறைய தவறவிட்டேன்.

நான் ஒரு வீட்டு திருச்சபையில போதகரா இருந்தேன். 1996 ஆம் ஆண்டில, நான் ஆவிக்குரிய ரீதியா வறட்சியாகவும், வெறுமையாகவும் உணர்ந்தேன், அதனால நான் வேற பிரசங்கங்கள கேட்க போய்க்கிட்டிருந்தேன். ஒரு முறை, கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் திரும்பி வந்து அவர் சத்தியங்கள வெளிப்படுத்துகிறார் மற்றும் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பின் கிரியைகளைச் செய்கிறார்ங்கிறத கிழக்கத்திய மின்னல் சாட்சி பகர்வதையும், சில சகோதர சகோதரிகள் ஏற்கனவே கிழக்கத்திய மின்னலில் சேர்ந்துள்ளனர் என்பதையும் யாரோ ஒருவர் சொல்வதை நான் கேள்விப்பட்டேன். நான் ரொம்ப அதிர்ச்சியடைந்து, “கர்த்தர் திரும்பிவிட்டாரா? என்று நினைத்தேன். அது எப்படி சாத்தியமாகும்? வோதாகமம் சொல்லுது, ‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்’ (அப்போஸ்தலர் 1:11). கர்த்தர் ஒரு மேகத்தின் மீது உயிர்த்தெழுந்த ஆவிக்குரிய சரீரமாக திரும்பி வந்து, நம்மிடம் வெளியரங்கமாக தோன்ற வேண்டும். நாம அப்படி எதையும் பார்க்கலங்கிறதனால, அவர் திரும்பி வந்துவிட்டார்னு எப்படி யாராவது சொல்ல முடியும்? மாம்சத்தில் தேவனோட நியாயத்தீர்ப்பின் கிரியையைப் பற்றிய பகுதி இன்னும் நம்பத்தகாததா இருக்கு.” அதனால, நான் கிழக்கத்திய மின்னலின் பிரசங்கங்களை ஒருபோதும் கேட்டதில்ல.

ஒரு நாள், எங்க திருச்சபைய சேர்ந்த சகோதரர் வாங் வேறு சில பிரசங்கியார்களை அழைத்தார். அவங்களோட பிரசங்கங்களில் பரிசுத்த ஆவியானவரோட அறிவூட்டுதல் இருப்பதாகவும், நாமெல்லாம் ஏதாவது கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். நான் எழுச்சியடைந்து, பிற சகோதர சகோதரிகளையும் கலந்துகொள்ள அழைத்தேன். கூட்டத்தில, அந்த இரண்டு சகோதரிகளும் வேதாகமத்த நியாயப்பிரமாண மற்றும் கிருபையின் காலங்கள்ல தேவனோட கிரியையின் அர்த்தம் மற்றும் தேவனோட நாமங்களின் இரகசியம் குறித்து தங்களோட ஐக்கியத்துக்குள்ள ஒருங்கிணைச்சாங்க. பாவத்தின் தீய சுழற்சியிலும் பாவத்தை அறிக்கையிடுதலிலும் நாம எப்படி வாழ்ந்துகிட்டிருக்கோம்ங்கிறத பற்றியும், நாம எப்படி இழிவானவர்களாகவும், சீர்கெட்டவர்களாகவும், கர்த்தர பார்க்க தகுதியற்றவர்களாகவும் இருக்கிறோம்ங்கிறத பற்றியும் அவங்க பேசினாங்க. நம்மோட பாவ சுபாவத்தைப் போக்க கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது மனுக்குலத்த நியாயந்தீர்த்து, சுத்திகரிப்பார்னு வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைத்ததாகவும் அவங்க சொன்னாங்க. அதுதான் நாம பாவத்திலிருந்து முற்றிலுமா விடுபட்டு, பரலோகராஜ்யத்திற்கு தகுதியானவர்களாக இருப்பதற்கான ஒரே வழி. கர்த்தராகிய இயேசு சொன்னது போல, “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). இதுவும் உள்ளது: “நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:47-48). சகோதரிகளோட ஐக்கியம் ஒளி நிறைந்ததா காணப்பட்டது. என்னோட பத்து வருஷ விசுவாசத்தில நான் இதுபோன்ற எதையும் கேட்டதில்ல. நான் அதிகமாக கேட்க வேண்டியதிருந்தது, அதனால, அதிகமான ஐக்கியத்த கேட்க அந்த சகோதரிகளை என்னோட வீட்டுக்கு அழைத்தேன். ஒரு மாலை வேளையில, ஒரு சகோதரி தேவனோட வார்த்தைகளை பேசினாங்க, “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’.” கர்த்தராகிய இயேசு கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனாக திரும்பி வந்திருக்கார்னு அவங்க சாட்சியமளிச்சாங்க. குறிப்பா தேவனோட வார்த்தைகள குறிப்பிடுறத கேட்டப்போ “மின்னல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஒளிர்கிறது.” இது கிழக்கத்திய மின்னல் என்பதை நான் உணர்ந்தேன். நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். அது எப்படி இருக்க முடியும்? நான் பல வருடங்களா இதுபோன்ற அறிவூட்டும் பிரசங்கங்கள கேட்டதில்ல. நான் மகிழ்ச்சியடைந்தேன், நான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை கண்டு இறுதியாக ஜீவத் தண்ணீரின் ஜீவியத்தைப் பெற முடியும் என்று நினைத்தேன். ஆனா அது கிழக்கத்திய மின்னலாக மாறியது! கர்த்தர் தமது ஆவிக்குரிய ரூபத்தில் திரும்பி வந்து நம்மை நேராக பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார்ன்னு வேதத்தில எழுதப்பட்டிருக்கு. கர்த்தர் மாம்சத்தில் திரும்பி வந்துட்டார்ன்னு அவங்களால எப்படி சொல்ல முடியும்? நான் வேறொரு வார்த்தைய கேட்க விரும்பல. என்னை தவறா வழிநடத்த நான் அவங்கள அனுமதித்தேன் என்றால், என்னோட பல வருட விசுவாசம் வீணாக இருந்திருக்கும்ன்னு நான் கண்டறிஞ்சேன். நான் அவங்கள வெளியேற்ற விரும்பினேன். ஆனா மீண்டும், அவங்களோட சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக, அவங்க நல்ல மனிதத்தன்மையோட ஜீவித்ததை நான் பார்த்தேன். அது குளிர்காலத்தின் உச்சமாக இருந்துச்சு, ரொம்ப குளிரா இருந்துச்சு, நள்ளிரவை கடந்திருந்தது. நான் அவங்கள வெளியேற்றுவது ரொம்ப மனிதாபிமானமற்றதா இருக்கும்ன்னு உணர்ந்தேன். நான் உண்மையிலேயே ஒரு கணம் முரண்பட்டேன். அது ஒரு மனப் போராட்டம் மாதிரி இருந்துச்சு—தேவனோட சித்தம் என்னன்னு எனக்குத் தெரியல. நான் என் படுக்கையறைக்குள்ள திரும்பிச் செல்ல சில சாக்குப்போக்குகள சொன்னேன், அங்கு நான் ஜெபத்தில் கர்த்தருக்கு முன்பாக முழங்காற்படியிட்டேன்: “ஓ கர்த்தாவே, இந்த சகோதரிகளோட ஐக்கியத்தில் உண்மையிலே ஒளி இருக்கு, ஆனா நான் தவறாக வழிநடத்தப்படுகிறேனோ என்று பயப்படுகிறேன்.” நான் ரொம்ப இழந்துவிட்டேன். நான் என்ன செய்யனும்னு எனக்கு தெரியல. கர்த்தாவே, தயவுசெஞ்சு என்னை வழிநடத்துங்க. ஜனங்கள அன்போடு நடத்துறதுக்கு கர்த்தராகிய இயேசு எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்ன்னு ஜெபித்த பிறகு நான் நினைவுகூர்ந்தேன். அவங்கள வெளியேற்றுவது கர்த்தரோட சித்தத்துக்கு ஏற்ப இருக்காது. அதனால, நான் அவங்கள தங்க அனுமதித்தேன்.

அந்த இரண்டு சகோதரிகளையும் எதிர்கொண்ட என்னால் என்னையே அமைதிப்படுத்த முடியல. நான் அதிக கிளர்ச்சியடைந்தேன். அவங்களோட ஐக்கியம் அறிவூட்டுவதாகவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து வந்ததையும் அறிந்தேன், ஆனா, தேவன் மாம்சத்தில் திரும்பி வந்துட்டார்ங்கிற அவங்களோட ஐக்கியம் என் சொந்த கருத்துக்களோட முரண்பட்டதா இருந்துச்சு. அவங்ககிட்ட என்னோட கேள்வியை கேட்கலாமான்னு எனக்கு தோன்றியது. அதனால நான் அவங்கிட்ட கேட்டேன்: “கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் திரும்பி வந்துட்டார்ன்னு நீங்கள் சாட்சியமளிக்கிறீங்க. இதை உண்மையிலே என்னால ஏற்றுக்கொள்ள முடியாது. அது வேதாகமத்தில தெளிவா எழுதப்பட்டிருக்கு, ‘கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்’ (அப்போஸ்தலர் 1:11). கர்த்தராகிய இயேசுவின் ஆவிக்குரிய சரீரம்தான் அவரோட உயிர்த்தெழுதலுக்கப்புறம் எடுத்துக்கொள்ளப்பட்டது, அதனால, அவர் திரும்பி வரும்போது ஒரு மேகத்தின் மீது திரும்பி வரும் அவரோட ஆவிக்குரிய சரீரமாகத்தான் அது இருக்க வேண்டும். அவர் மாம்சத்தில் திரும்பி வருந்திருக்கார்ன்னு உங்களால எப்படி சொல்ல முடியும்?”

சகோதரி லி பொறுமையாக பதிலளித்தார், “கர்த்தர் மாம்சத்தில் திரும்பி வருவது குறித்த பல வேதாககம தீர்க்கதரிசனங்கள் உள்ளன. கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). ‘அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்(லூக்கா 12:40). ‘மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). ‘மனுஷகுமாரன்’ மற்றும் ‘மனுஷகுமாரனுடைய வருகை’ ஆகியவற்றை கர்த்தருடைய வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. ‘மனுஷகுமாரன்’ என்றால் மனிதனிடமிருந்து பிறந்து சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டவர் என்று அர்த்தம். அவர் ஆவிக்குரிய ரூபத்தில் இருந்தால், அவர் ‘மனுஷகுமாரன்’ என்று அழைக்கப்பட மாட்டார். யேகோவா தேவன் ஆவிக்குரிய ரூபத்தில் இருந்தார், அதனால் அவரை ‘மனுஷகுமாரன்’ என்று அழைக்க முடியாது. தேவதூதர்கள் ஆவிகள், அதனால அவங்கள ‘மனுஷகுமாரன்’ என்று அழைக்க முடியாது. கர்த்தராகிய இயேசு மனுஷகுமாரனாகிய கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார், ஏனென்றால் அவர் தேவனுடைய ஆவி மாம்சமாகியிருந்தார், அவர் சாதாரண மனிதத்தன்மையைக் கொண்டிருந்த மனுஷகுமாரனாக இருந்தார். அதனால, கர்த்தராகிய இயேசு ‘மனுஷகுமாரனுடைய வருகை’ பற்றியும், ‘மனுஷகுமாரன் வருகிறார்’ என்றும் சொன்னபோது அது கர்த்தர் கடைசி நாட்களில் மாம்சத்தில் திரும்பி வருவதன் ஒரு குறிப்பாக இருந்தது.”

அப்புறம் சகோதரி சூ சொன்னாங்க, “கர்த்தராகிய இயேசு தமது வருகையை தீர்க்கதரிசனம் உரைத்தார்: ‘அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ தேவன் கடைசி நாட்களில் மனுஷகுமாரனாக மாம்சத்தில் தோன்றி தமது கிரியையை செய்திருக்கிறார். ஜனங்கள் அவரை கிறிஸ்துவாக அங்கீகரிக்காம, அவரை ஒரு சாதாரண மனிதனாக கருதுறாங்க. சத்தியத்தை நேசிக்காதவர்கள் அல்லது தேவனுடைய சத்தத்தைக் கேட்க முற்படாதவர்கள் உண்மையிலே கிறிஸ்துவை எதிர்க்கவும் மறுக்கவும் செய்றாங்க. கிறிஸ்துவை நிந்திக்கவும், அவதூறு செய்யவும், புறக்கணிக்கவும் சாத்தானின் ஆட்சியும் மத உலகமும் ஒன்றிணைகின்றன. இது கர்த்தருடைய தீர்க்கதரிசனத்தை முழுமையா நிறைவேற்றுது: ‘அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.’ கர்த்தர் கடைசி நாட்களில் தமது ஆவிக்குரிய ரூபத்தில வந்து, சகல மகிமையுடனும் ஒரு மேகத்தின் மீது தோன்றினால், எல்லோரும் அவருக்கு முன்பாக விழுவார்கள், ஒருவரும் அவரை எதிர்க்க மாட்டார்கள். இந்த தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறும்?”

கர்த்தர் கடைசி நாட்களில் தமது ஆவிக்குரிய ரூபத்தில் நேரடியாக தோன்றியிருந்தால், அவரைக் கண்ட எல்லோரும் தரையில் விழுவாங்க, ஒருவரும் அவருக்கு எதிராகப் போகமாட்டாங்க என்பதை புரிந்துகொள்ள ஆரம்பிக்க இது எனக்கு உதவியது. அப்புறம் இந்த தீர்க்கதரிசனம், “அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது,” நிறைவேறியிருக்க முடியாது. கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துவிட்டார்ங்கிறத கிழக்கத்திய மின்னல் எவ்வாறு சாட்சியமளிக்கிறது என்பதைப் பற்றி நான் நினைத்தேன் மத உலகமும் சி.சி.பி அரசும் அதை எதிர்க்கவும் நிந்திக்கவும் எல்லாவற்றையும் பயன்படுத்துகின்றன. இந்த தலைமுறை புறக்கணிக்கப்படுகிறது என்ற கர்த்தருடைய தீர்க்கதரிசனத்தை அது நிறைவேற்றவில்லையா? சர்வவல்லமையுள்ள தேவனால் உண்மையிலே திரும்பி வந்த கர்த்தராகிய இயேசுவாக இருக்க முடியுமா? ஆனால் எனக்குப் புரியாத இன்னும் சில காரியங்கள் இருந்தன. வேதாகமம் உண்மையிலேயே மனுஷகுமாரனுடைய வருகையை தீர்க்கதரிசனம் உரைக்கிறது, ஆனால் கர்த்தரும் சொன்னார்: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). “அது ஒரு முரண்பாடு அல்லவா?” என்று நான் வியந்தேன். என்னோட குழப்பத்தைப் பற்றி அவங்ககிட்ட சொன்னேன்.

சகோதரி லி இந்த ஐக்கியத்த பகிர்ந்து கொண்டாங்க: “கர்த்தர் உண்மையுள்ளவர். அவரோட ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும். இது காலம் சார்ந்த ஒரு விஷயம். கர்த்தருடைய வருகையைப் பற்றி வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைய உள்ளன. அவர் ஒரு மேகத்தில் வருகிறார் என்பதைத் தவிர, அவர் மாம்சமாக மாறி இரகசியமாக வருகிறார் என்பது பற்றிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன. உதாரணமாக, கர்த்தர் சொன்னார், ‘இதோ, திருடனைப்போல் வருகிறேன்(வெளிப்படுத்தல் 16:15). ‘நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று(மத்தேயு 25:6). ‘அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்(மத்தேயு 24:36). கர்த்தர் சொன்னபோது கர்த்தர் சொன்னபோது 'திருடனைப்போல்.' 'நடுராத்திரியிலே சத்தம் உண்டாயிற்று,' மற்றும் 'மற்றொருவனும் அறியான்.' அவர் இரகசியமாக திரும்புவது பற்றி பேசிக் கொண்டிருந்தார். கர்த்தர் கடைசி நாட்களில் இரண்டு வெவ்வேறு வழிகளில் வருகிறார். அவர் மனுஷகுமாரனாக இரகசியமாக அவதரிக்கிறார், அவர் ஒரு மேகத்தின் மீது வெளியரங்கமாகவும் வருகிறார். அதாவது, சத்தியத்தை வெளிப்படுத்தவும், மனுக்குலத்தை நியாயந்தீர்க்கவும், சுத்திகரிக்கவும், பேரழிவுகளுக்கு முன் ஜெயங்கொள்ளுகிறவர்களின் குழு ஒன்றை உருவாக்கவும் அவர் முதலில் மாம்சத்தில் இரகசியமாக வருகிறார் அவர் மனுக்குலத்தை இரகசியமாகக் இரட்சிக்கும் கிரியையை முடித்ததும், பேரழிவுகள் உண்டாகும், அவர் நன்மைக்கு வெகுமதி அளிப்பார், தீமையைத் தண்டிப்பார். அப்போதுதான் தேவன் ஒரு மேகத்தின் மீது வெளியரங்கமாக வந்து, சகல தேசங்களுக்கும் ஜனங்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவார். அப்போதுதான் கர்த்தர் வெளியரங்கமாக வருவார் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறும்.” சர்வவல்லமையுள்ள தேவனுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தங்கள் சீர்கேடான மனநிலைகளை சுத்திகரித்துக்கொள்கிற எல்லோரும் தேவனால் பாதுகாக்கப்பட்டு, பேரழிவுகளிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள். அவங்க தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பாங்க. ஆனால் கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை புறக்கணிப்பவர்களும், அதை எதிர்ப்பதற்கும் நிந்திப்பதற்கும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறவர்களும், பேரழிவுகளில் தண்டிக்கப்படுவார்கள், அழுவார்கள், பற்களைக் கடிப்பார்கள். இது வெளிப்படுத்துதலில் உள்ள இந்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்: ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை அவர் எனக்கு வாசித்துக் காண்பித்தார். “நான் சொல்வதை பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் புனிதரென அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன். இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நாழிகையாக இருக்கும். ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீங்கள் காணும் நேரம், நீங்கள் தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும். மேலும், நல்லோருக்கு, தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் போது அது இருக்கும். சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

என் கண்கள் திடீரென திறந்தன. கர்த்தருடைய வருகை மேடைகளில் நடப்பதை நான் பார்த்தேன். முதலில், அவர் மாம்சமாகி பேசுகிறார், இரகசியமாக கிரியை செய்கிறார், அதன்பின் அவர் ஒரு மேகத்தின் மீது வெளியரங்கமாக வந்து, சகல ஜனங்களுக்கும் தோன்றுகிறார். என் கருத்துக்கள் மற்றும் கற்பனைகளின் காரணமாக நான் கர்த்தருடைய வருகையை கடைசி வழிக்குள் மட்டும் வரையறுத்திருக்கிறேன் என்பதை பார்த்தேன். அது தவறு. என்னால் அதை தொடர்ந்து வலியுறுத்த முடியவில்லை. இந்த வார்த்தைகள் கர்த்தராகிய இயேசுவிடமிருந்து வருவதாக நான் நினைத்தேன்: “ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” (மத்தேயு 7:8). இப்போது கர்த்தருடைய வருகையை எதிர்கொண்ட நான் தேவனுக்குப் பயந்த இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டியதாகவும், நான் தீவிரமாக தேட வேண்டியதாகவும் இருந்தது, இதன்மூலம் என்னால் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும். இல்லையென்றால், நான் அநேகமாக கர்த்தரால் நீக்கப்படுவேன்! அதன்பின் நான் அவங்ககிட்ட கேட்டேன், “கர்த்தர் திரும்பி வரும்போது அவர் இரகசியமாக கிரியை செய்ய முதலில் மாம்சமாக மாறுவதால், சர்வவல்லமையுள்ள தேவன் எப்படி கடைசி நாட்களின் கிறிஸ்துவாக மாம்சத்தில் தேவனாக இருப்பார்னு எங்களால் எப்படி உறுதியாக நம்ப முடியும்?”

சகோதரி லி ரொம்ப சந்தோஷமா பதிலளிச்சாங்க, “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்த இரகசியத்தை, மாம்சமாதல் என்றால் என்ன என்பது குறித்த இந்த சத்தியத்தை மாம்சத்திலுள்ள தேவனை நாம எப்படி அறிந்துகொள்ள முடியும் என்பதை யாரும் புரிஞ்சுக்கல. இப்போ சர்வவல்லமையுள்ள தேவன் இந்த இரகசியங்களையும் சத்தியங்களையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.” சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் சில பத்திகளை அவர் எனக்கு வாசித்துக் காண்பித்தார். “‘மனுஷரூபமெடுத்தல்’ என்பது மாம்சத்தில் தேவனுடைய தோற்றமாகும்; மாம்ச சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார். ஆகவே, தேவன் மனுஷரூபம் எடுக்கவேண்டுமாயின், அவர் முதலில் மாம்சமாக இருக்கவேண்டும், அதாவது சாதாரண மனிதத்தன்மையுடன் மாம்சமாக இருக்க வேண்டும்; இது மிகவும் அடிப்படையான முன்னிபந்தனையாகும். உண்மையில், தேவன் மாம்சமாகியதன் உட்பொருள் என்னவென்றால், தேவன் மாம்சத்தில் வாழ்கிறார், கிரியை செய்கிறார் என்பதாகும், தேவன் அவருடைய சாராம்சத்தில் மாம்சமாகி ஒரு மனிதனாகிறார்.” “மாம்சமாகுதல் என்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு மாம்சமாகிறார், அதாவது தேவன் மாம்சமாகிறார் என்று அர்த்தமாகும்; மாம்சம் செய்கிற கிரியையானது ஆவியானவரின் கிரியையாகும், இது மாம்சத்தில் உணரப்பட்டு, மாம்சத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. தேவனுடைய மாம்சத்தைத் தவிர வேறு எவரும் மாம்சமாகிய தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற முடியாது; அதாவது, இந்த இயல்பான மனிதத்தன்மையைக் கொண்ட மாம்சமாகிய தேவன் மட்டுமே வேறு எவராலும் வெளிப்படுத்த இயலாத—தெய்வீகத்தன்மையின் கிரியையை வெளிப்படுத்தக்கூடியவராக இருக்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்”). “மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது”). “தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை அவர் வெளிப்படுத்துவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தை கவனிக்கத் தவறுகிறான் என்றால், இது மனுஷன் இருளில் மூழ்கியுள்ளதையும், அவனது அறியாமையையும் காட்டுகிறது(மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரை).

சகோதரி லி தன்னோட ஐக்கியத்த தொடர்ந்தாங்க. “கிறிஸ்து மாம்சத்திலுள்ள தேவனாக இருக்கிறார். அவர் மாம்சத்தை தரித்த தேவனுடைய ஆவியானவர், அவர் சாதாரண மனிதராக மாறி, மனுஷரின் நடுவே தோன்றி, கிரியை செய்து, பேசுகிறார். மாம்சமான தேவன் ஒரு சாதாரண நபர் போலவே தோற்றமளிக்கிறார், மேம்பட்டவராகவோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவோ அல்ல. ஒரு சாதாரண மனிதனுக்குரிய சகல பகுத்தறிவையும், சிந்தனையும், உணர்ச்சிகளையும் அவர் கொண்டிருக்கிறார், அவர் ஜனங்களுடன் உண்மையான வழியில் தொடர்பு கொள்கிறார். வித்தியாசம் என்னவென்றால், சாதாரண மனிதத்தன்மையை தவிர, ஜனங்களிடம் இல்லாத ஒரு தெய்வீக சாராம்சத்தையும் அவர் கொண்டிருக்கிறார். கிறிஸ்துவால் தேவனுடைய சொந்த கிரியையை செய்ய முடியும். அவரால் ஒரு பழைய காலத்துக்கு முடிவைக் கொண்டுவந்து புதிய காலத்தை ஆரம்பிக்க முடியும். அவருடைய சாராம்சமே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறது. அவரால் எங்கேயும், எந்த நேரத்திலும் சத்தியத்தை வெளிப்படுத்த முடியும். அவரால் ஜனங்களை வழிநடத்தவும் பேணி காக்கவும், நமது பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியும். அவரால் நமக்கு ஒரு நடைமுறையின் பாதையை கொடுக்க முடியும். கிறிஸ்துவால் இரகசியங்களை வெளிப்படுத்தவும், தேவனுடைய மனநிலையையும், அவர் என்ன கொண்டிருக்கிறார், என்னவாக இருக்கிறார் என்பதையும், அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்தவும் முடியும். கிறிஸ்துவின் வார்த்தைகளால் சகலத்தையும் நிறைவேற்ற முடியும். இதைச் செய்யக்கூடிய எந்த மனிதரும் இல்லை. கர்த்தராகிய இயேசு ஒரு சாதாரண மனிதனைப் போல தோற்றமளித்தார், ஆனால் அவரிடம் ஒரு தெய்வீக சாராம்சம் இருந்தது. அவர் தோன்றுவதும் அவருடைய கிரியையும் கிருபையின் காலத்தைத் துவக்கி நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. அவர் சத்தியத்தை வெளிப்படுத்தினார், மனந்திரும்புதலுக்கான வழியைக் கொடுத்தார், நமது பாவங்களை மன்னித்தார். அவர் சகிப்புத்தன்மையுள்ளவராகவும் பொறுமையுள்ளவராகவும் இருந்தார், ஏழெழுபது முறை மன்னிக்கும்படி நம்மிடம் சொன்னார். தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் அவர் காட்டினார். அவர் கிரியை செய்த போது, குருடர்களைக் குணப்படுத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, ஒரு வார்த்தையால் கடல்களை அமைதிப்படுத்துவது, மரித்தவர்களை எழுப்புவது, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் 5,000 பேருக்கு போஷிப்பது போன்ற பல அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்தார். இது தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் முழுமையாக வெளிப்படுத்தியது. கர்த்தராகிய இயேசுவின் கிரியை, வார்த்தைகள் மற்றும் அவர் வெளிப்படுத்திய மனநிலை ஆகியவை அவர் மாம்சத்திலிருந்த தேவனாக இருந்தார் என்பதற்கு போதுமான ஆதாரமாகும். தேவனால் மட்டுமே சத்தியத்தை வெளிப்படுத்தவும், ஒரு பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய காலத்தைத் தொடங்கவும், தேவனுடைய மனநிலை மற்றும் அவருடைய கிரியையின் ஞானம் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் முடியும். தேவனைத் தவிர, சத்தியத்தை யாராலும் வெளிப்படுத்தவோ, தேவன் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தவோ அல்லது தேவனுடைய சொந்த கிரியையை செய்யவோ முடியாது. இப்படித்தான் நம்மால் அவரை கடைசி நாட்களின் கிறிஸ்துவான மாம்சத்திலுள்ள தேவனாக தீர்மானிக்க முடியும். மிகவும் முக்கியமானது என்னவென்றால் கிறிஸ்துவின் கிரியையையும் வார்த்தைகளையும் தேடுவதும் ஆராய்வதுமாகும். அவர் சத்தியத்தையும் தேவனுடைய மனநிலையையும் வெளிப்படுத்தினால், அவர் தேவனுடைய கிரியையைச் செய்தால், பின்னர் அவர் மாம்சத்திலுள்ள தேவனாக இருக்கிறார். அவர்தான் கிறிஸ்து.”

அவரோட ஐக்கியத்தின் மூலமாக, மாம்சத்திலுள்ள தேவனால் சத்தியத்தை வெளிப்படுத்தவும் தேவனுடைய கிரியையைச் செய்யவும் முடியும் என்பதை நான் நன்றாக புரிந்துகொண்டேன். அதுதான் இது குறித்த உண்மையாகும்.

சகோதரி சூ ஐக்கியத்தைத் தொடர்ந்தார்: “சர்வவல்லமையுள்ள தேவனே மாம்சத்திலுள்ள தேவனாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதில், நாம் தோற்றங்களை மட்டும் பார்க்க முடியாது. அவருடைய வார்த்தைகள், அவருடைய கிரியை, அவர் வெளிப்படுத்தும் மனநிலை ஆகியவற்றின் மூலமாகவும் நாம் உறுதியாக அறிந்துகொள்ள வேண்டும். கடைசி நாட்களில், சர்வவல்லமையுள்ள தேவன் கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியையின் அஸ்திபாரத்தில் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார். அவர் கிருபையின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, ராஜ்யத்தின் காலத்தைத் தொடங்கினார். சர்வவல்லமையுள்ள தேவன் மில்லியன் கணக்கான வார்த்தைகளை பேசியிருக்கிறார். தேவனுடைய 6,000 ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் இரகசியத்தையும், தேவனுடைய மாம்சமாதலின் இரகசியத்தையும், வேதாகமத்தின் உள் கதையையும் அவர் வெளிப்படுத்தினார். சாத்தான் மனுக்குலத்தை எவ்வாறு சீர்கெட்டுப் போகச் செய்கிறது, தேவன் மனுக்குலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார், கடைசி நாட்களில் ஜனங்களை நியாயந்தீர்த்து சுத்திகரிக்கும் கிரியையை தேவன் எவ்வாறு செய்கிறார், அவர் எவ்வாறு ஜனங்களை அவர்களுடைய வகைக்கு ஏற்ப வகைப்படுத்துகிறார் மற்றும் ஜனங்களின் முடிவு மற்றும் போய்ச் சேருமிடம் மற்றும் பலவற்றை எவ்வாறு தீர்மானிக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் முக்கியமாக நீதியுள்ள தனது மனநிலையை வெளிப்படுத்தி, தேவனை எதிர்ப்பதற்கான நமது சாத்தானிய சுபாவத்தையும் நமது சீர்கேடான மனநிலைகளையும் நியாயந்தீர்க்கிறார் மற்றும் அம்பலப்படுத்துகிறார். தீமையை விட்டு விலகி சுத்திகரிக்கப்படுவதற்கான பாதையையும் அவர் நமக்குக் காண்பிக்கிறார்.” சகோதரி சூவும் தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக நியாயந்தீர்க்கப்பட்டு சிட்சிக்கப்பட்ட தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னார், “நான் நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, கையாளப்பட்டு, தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக கிளைநறுக்கப்படும் வரை நான் எவ்வளவு திமிர்பிடித்தவளாகவும், சுயநலமுள்ளவளாகவும், தந்திரமானவளாகவும் இருந்தேன் என்பதை நான் பார்க்கவில்லை. எனக்கு விசுவாசம் இருந்தது, தேவனுக்காக என்னை செலவழித்தேன், ஆனால் எனது சீர்கெட்ட சாத்தானிய சுபாவத்தின் காரணமாக நான் இன்னும் பாவம் செய்தேன், தேவனை எப்போதும் எதிர்த்தேன். உதாரணமாக, நான் எப்போதும் என்னை பகட்டாக காண்பிக்கவும், ஜனங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினேன். நான் பெருமையுடன் மற்றவர்களைத் திட்டுவேன், நான் சொன்னதை அவர்களை செய்ய வைப்பேன். என் சொந்த நலன்களைப் பாதுகாக்க நான் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டும் ஏமாற்றிக் கொண்டும் இருந்தேன். பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாக, அவருடைய நீதியான மனநிலையான எந்தவொரு குற்றத்தையும் சகித்துக்கொள்ளாது என்பதை நான் உணர்ந்தேன், நான் என் இருதயத்தில் அவருக்கு பயப்பட ஆரம்பித்தேன். நான் என்னையே வெறுக்கவும் ஆரம்பித்தேன், என் சாத்தானிய சுபாவத்தைப் போக்க சத்தியத்தை கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தினேன். எனது சீர்கேடான மனநிலையில் படிப்படியாக சில மாற்றம் ஏற்பட்டது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் சாதனைகள் அவர் மாம்சமான தேவன் என்பதையும், அவர் கடைசி நாட்களின் கிறிஸ்து என்பதையும் குறித்து உறுதியாக இருக்க போதுமானவையாக இல்லையா?”

சகோதரிகளின் ஐக்கியம் என் இருதயத்தை பிரகாசமாக்கியது. மனுஷகுமாரனின் தோற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும், அவர் மாம்சத்திலுள்ள கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியமானது தேவனுடைய வார்த்தைகளையும் மனநிலையையும் அவரால் வெளிப்படுத்த முடியுமா, அவரால் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய காலத்தைத் துவங்கும் கிரியையை செய்ய முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும் என்பதை நான் பார்த்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், மனுக்குலத்தை நியாயந்தீர்ப்பதற்கும் சுத்திகரிப்பதற்கும் கிரியை செய்துகொண்டிருக்கிறார். அவர் ராஜ்யத்தின் காலத்தைத் தொடங்கி, கிருபையின் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். நிச்சயமாகவே அவர்தான் கிறிஸ்து, கர்த்தருடைய வருகை என்று அர்த்தம்! நான் இதற்கு முன்பு சத்தியத்தைப் புரிந்துகொள்ளவில்லை. கர்த்தர் தமது ஆவிக்குரிய ரூபத்தில் ஒரு மேகத்தின் மீது வருவார்னு கண்மூடித்தனமாக காத்திருந்தேன். அவர் ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார்ன்னு கேள்விப்பட்டபோது நான் அவரைத் தேடுவதையோ ஆராய்வதையோ குறித்து கவலைப்படவில்லை. கர்த்தரோடு மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை நான் கிட்டத்தட்ட இழந்துவிட்டேன். நான் என்ன ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன்!

அதன்பிறகு, நான் பட்டினி கிடப்பது போல் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை விழுங்கினேன். இதற்கு முன்பு என் விசுவாசத்தில் நான் புரிந்துகொள்ளாத அநேக சத்தியங்களையும் இரகசியங்களையும் அறிந்துகொண்டேன், மேலும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு என்பதில் முற்றிலும் உறுதியானேன்! நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை எனது நட்பு வட்டத்திலுள்ள 100 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் அவருடைய வார்த்தைகளை வாசித்து அவருடைய சத்தத்தைக் கேட்டபோது, அவர்கள் கண்ணீர் வடித்தனர். அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனிடம் திரும்பி, கடைசி நாட்களில் அவருடைய கிரியையை ஏற்றுக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவரின் விருந்தில் கலந்துகொண்டனர்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாவத்தின் கட்டுகளிலிருந்து விடுபட்டு சுத்திகரிக்கப்படுவார்கள்?

பல கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கர்த்தருக்கு முன்பாக ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறார்கள், ஆனாலும் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள், இதன் விளைவாக அவர்கள் குழப்பமடைகிறார்கள். கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாவத்திலிருந்து விடுபட வேண்டும்? பாவத்தின் கட்டுகளிலிருந்து உங்களை எவ்வாறு முற்றிலும் விடுவித்துக் கொள்வது என்பதை இந்த உரை உங்களுக்குக் கூறுகிறது.

புத்தியுள்ள கன்னிகைகள் எப்படிக் கர்த்தரை வரவேற்றார்கள்

கர்த்தர் மேகங்களுடன் வருவார் என்ற நாளை எதிர்பார்த்து தேவனின் விசுவாசிகள் வானத்தைப் பார்க்கிறார்கள், ஆனால் கர்த்தர் மேகங்களுடன் வருவார் என்ற தீர்க்கதரிசனத்தை ஒட்டிக்கொள்வதன் மூலம் மட்டுமே, தேவனின் வருகையை ஒருவர் உண்மையில் வரவேற்க முடியுமா? சகோதரி அனிக் தனது நிஜ வாழ்க்கை அனுபவங்களைப் பயன்படுத்தி பதிலைச் சொல்கிறார்.

கிறிஸ்தவ பிரசங்கம்: பேரழிவுகள் நம்மீது உள்ளன—தேவனின் பாதுகாப்பைப் பெற அவரிடத்தில் மெய்யான மனந்திரும்புதலைக் கொண்டிருப்பது எப்படி?

பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன, எனவே தேவனின் சித்தம் என்ன? பேரழிவுகளிலிருந்து தப்பிக்க நாம் தேவனிடம் உண்மையான மனந்திரும்புதலை எவ்வாறு கொண்டிருக்க வேண்டும்? கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

Leave a Reply