நேர்மையான ஒரு அறிக்கையின் பலன்
ஏப்ரல் 2011 இல், நாட்டின் மற்றொரு பகுதியில் ஒரு திருச்சபையில் யாவோ லான் என்ற தலைவரின் இடத்தை எடுக்க வேண்டியிருந்தது. பொறுப்பை என்னிடம் கொடுக்கும் போது, யாவோ லான் திருச்சபையின் நிலைமை குறித்து எனக்கு முடிவு அறிக்கை கொடுத்தபோது, அவளுடைய மகள் சியாமின் நீர் பாய்ச்சும் ஒரு உதவியாளர் என்றும், திருச்சபையின் சேவையில் நான் பரிச்சயமாக அவள் எனக்கு உதவுவாள் என்றும் குறிப்பிட்டார். அவள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கான வழியில் விளக்குவதை கேட்டபோது, என்னால் சற்று வியப்படையாமல் இருக்க முடியவில்லை. யாவோ லான் திருச்சபை வேலைகளை நன்றாகக் கையாள்வது போலவும், மிகவும் திறமையானவர் போலவும் தோன்றியது, எனவே அவரால் இப்போது இவ்வளவு பெரிய அளவிலான ஒரு வேலையைப் பொறுப்பேற்க முடிந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான் அமைதியாக தேவனின் சித்தத்தைக் கருத்தில் கொள்ளவும்மேலும் திருச்சபையின் வேலையை செய்யவும் என்னுடைய சிறந்ததைச் செய்ய தீர்மானித்தேன்.
அடுத்த நாள், சியாமின் என்னை ஒரு குழுத் தலைவர் கூடுகைக்கு அழைத்துச் சென்றாள். நாங்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசித்தப் பிறகு, தொடர்புடைய என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் புரிந்துகொள்ளுதலை நான் கொஞ்சம் பகிர்ந்து கொண்டேன். “எங்களுடைய பழைய தலைவர் யாவோ லான் தேவனுடைய வார்த்தைகளை இது போன்று ஐக்கியப்படுவது இல்லை. ‘இது ஊக்கமளிப்பது,’ மேலும் ‘இது ஒரு எச்சரிக்கை’ போன்ற விஷயங்களைக் கூறி, அவர் அவற்றை வரி வரியாக எங்களுக்கு அவற்றை விளக்குவார்.” என்று சகோதரி சியா அதிருப்தி தெரிவித்தார். மற்ற சகோதர சகோதரிகளும் சேர்ந்து கொண்டு, யாவோ லான் சத்தியத்தை எவ்வளவு தெளிவாக ஐக்கியம் செய்தார் என்று தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். நான் முற்றிலும் ஆச்சரியப்பட்டு “தேவனுடைய வார்த்தைகளை ஐக்கியம் கொள்வது என்பது அவருடைய வார்த்தைகளின் அடிப்படையில் நமது சொந்த அனுபவங்களையும் புரிந்து கொள்ளுதலையும் பற்றி பேசுவதில்லையா? எப்படி தேவனுடைய வார்த்தைகளை தான் நடைமுறையில் கொண்டுவந்து, அவற்றை தானே எவ்வாறு அனுபவிக்கிறார் என்பதைப் பற்றி யாவோ லான் பேசாதிருப்பது எப்படி? அவர் ஏன் தேவனுடைய வார்த்தைகளை சகோதர சகோதரிகளுக்கு வரி வரியாக விளக்க வேண்டும்? அந்த வழியில் ஐக்கியம் கொள்வது அவர்கள் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவும், தங்களை தாங்களே அறிந்து கொள்ளவும் உதவுமா?” என்று நான் நினைத்தேன். கூடுகைகளில் தேவனுடைய வார்த்தைகளை ஐக்கியம் கொள்வதற்கான கோட்பாடுகளைப் பற்றி அவர்களுடன் கலந்துபேச நான் விரும்பினேன், ஆனால் பின்னர் “நான் இந்த திருச்சபைக்குப் புதியவன், என்னுடைய வேலைக்கு யாவோ லான் பொறுப்பாக இருக்கிறார், அவரது மகள் சியாமியனும் இங்கே இருக்கிறார் என்று நான் நினைத்தேன்: தேவனுடைய வார்த்தைகளை யாவோ லான் ஐக்கியம் செய்யும் முறை எழுத்தியல்புகளை விளக்குவதாக இருக்கிறது என்று நான் கூறி, அது அவர்களுக்குத் தெரிய வந்தால், நான் வந்த உடனேயே அவருடைய தவறுகளைத் தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் என்று அவர் கூறலாம், என்னைப் பற்றி தவறாக நினைக்கலாம். நான் அவளைக் குற்றப்படுத்தினால் விஷயங்களை மிகவும் சங்கடமாக மாற்றிவிடுவேன்.” எனவே நான் என் வாயை மூடிக்கொண்டேன், அவ்வளவு தான்.
ஒரு நாள், சகோதரி சியாவோ சியாமினின்-க்குத் தெரியாமல் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அவர் முன்பு யாவோ லானுக்கு சில ஆலோசனைகளை அளித்ததாகவும், ஆனால் யாவோ லான் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, ஆனால் யாவோ லான் அவளை தடுத்து நிறுத்தத் தொடங்கி, மேலும் இனி அவளது உபசரிப்பு கடமையை செய்ய அனுமதிக்கவில்லை. நான் உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். நான் நினைத்தேன்: “சகோதரி சியாவோ தவறாக இருக்க வேண்டும். யாவோ லான் எப்படி யாரையும் ஒடுக்க முடியும்?” நான் சூழ்நிலைமையைக் குறித்த ஒரு யோசனையைப் பெற சியாமியனைத் தேடினேன். சகோதரி சியாவோ மிகவும் உற்சாகமாக இருந்தததாகவும், ஆனால் பெரும்பாலும் காரியங்களைத் தவறாகப் புரிந்து கொண்டார் என்று சியோமின் கூறினார். சகோதரி சியாவோ உள்ளூரில் ஒரு விசுவாசியாக நன்கு அறியப்பட்டவர் என்றும், அவரது வீடு பாதுகாப்பாக இல்லை என்றும், வீட்டில் ஒரு பாதுகாப்பான சூழலைப் பராமரிப்பதற்கான ஞானம் அவளுக்கு இல்லை என்றும் அவள் கூறினாள். சகோதரி சியாவோ குறித்து சில எதிர்மறையான காரியங்களைக் கூறினார். “இது எல்லாம் உண்மையாக இருந்தால், சகோதரி சியாவோ உண்மையில் உபசரிப்பு கடமைக்குப் பொருத்தமானவர் அல்ல. ஆனால் யாவோ லான் தன்னை ஒடுக்குகிறார் என்று அவள் ஏன் சொல்ல வேண்டும்? ஒருவேளை அவளுக்கு யாவோ லான் மீது ஒருவகையான மனக்குறை இருக்கலாம்” என்று நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன். நான் இன்னும் அசௌகரியமாக உணர்ந்தேன், இருப்பினும், நான் சகோதரி சியாவோவை வீட்டில் சந்திக்கச் சென்றேன். அவரது வீடு உபசரிப்பு செய்வதற்கு ஒப்பீட்டளவில் பொருத்தமானது என்றும், அவள் ஞானத்தில் குறைவுபடவே இல்லை என்றும் நான் கண்டுபிடித்தேன் எனவே, நான் குழப்பமாக உணர ஆரம்பித்தேன். நான் ஆச்சரியப்பட்டேன்: “சியோமின் சொன்னதிலிருந்து விஷயங்கள் எப்படி மிகவும் வித்தியாசமாக இருக்க முடியும்? யாவோ லான் உண்மையில் சகோதரி சியாவோவை ஒடுக்குகிறாரா?” சகோதரி சியாவோவிடம் மேலும் விவரங்களைக் கேட்டபோது, யாவோ லான் ஒரு பாதுகாப்பான சூழலுக்கான தேவையை ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்துகிறார் என்பதையும், மேலும் பல மூப்பர்களை தங்கள் கடமைகளைச் செய்வதிலிருந்து நிறுத்தியிருப்பதாகவும், இதன் விளைவாக சகோதர சகோதரிகளுக்கு நீர்ப்பாச்ச யாரும் இல்லை என்பதையும் அறிந்தேன். அவர்கள் ஒரு இயல்பான திருச்சபை வாழ்க்கையை வாழவில்லை. இந்த ஏற்பாடுகள் பொருத்தமானவை அல்ல என்று சகோதரி சியாவோ இந்த பிரச்சினையை யாவோ லானிடம் எழுப்பியபோது, யாவோ லான் அதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல், சகோதரி சியாவோவினிடமிருந்து அவளுடைய கடமையையும் எடுத்தும் கொண்டார். அவருடைய குறைகளைக் குறித்த சகோதரி சியாவோவின் கடிதத்தையும் அவர் மூடி மறைத்தார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அது எப்படி இருக்க முடியும்? யாவோ லான் தெளிவாகத் தவறு செய்துள்ளார். ஆனாலும் சகோதரி சியாவோ சொன்னதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவளை நசுக்கவும் கூட செய்து, அவளுடைய கடிதத்தை வெளியே தெரியாமல் ஆக்கிவிட்டாள். அவள் நிச்சயமாக சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நபர் அல்ல! தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த அவளுடைய ஐக்கியத்தின் போது தனது சொந்த அனுபவங்களையும் புரிந்துகொள்ளுதல்களையும் பற்றி அவள் ஒருபோதும் பேசாமல், ஆனால் அதற்குப் பதிலாக தேவனுடைய வார்த்தைகளை சூழலுக்கு வெளியே எடுத்து சகோதர சகோதரிகளை தவறாக வழிநடத்தினார் என்பதை இது மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. தேவனுடைய வார்த்தைகளை ஐக்கியம் கொள்ளும் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக அவர் சென்றார். அவருக்கு ஒரு உண்மையான பிரச்சனை இருக்கலாம் மேலும் எங்களுடைய மேலதிகாரிகளுக்கு இதை தெரிவிப்பதினால் தேவனுடைய வீட்டின் வேலை தாமதப்படாது என்று நான் உணர்ந்தேன். ஆனால் பின்னர் “சகோதரி சியாவோ மோசமான மனிதத்தன்மையைக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் என்னுடைய வேலைக்கு அவள் பொறுப்பாக இருக்கிறார், எனவே நான் தான் அவரைக் குறித்து புகார் கூறினேன் என்று தெரிந்தால், அவர் என்னை ஒடுக்கலாம் மற்றும் என் கடமையிலிருந்து என்னை நீக்கலாம்” என்று நான் நினைத்தேன். ஒரு பெருமூச்சுடன், எதுவும் சொல்லாமல் இருப்பது சிறந்தது என்று முடிவு செய்தேன், ஆனால் சகோதரி சியாவோ உபசரிப்பு கடமையை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன்.
எதிர்பாராத விதமாக, சில நாட்களுக்குப் பிறகு, சகோதரி சென் யாவோ லானின் சில பொல்லாத செயல்களை என்னிடம் தெரிவித்தார். சகோரர் வாங் மற்றும் அவரது மனைவியும் புதிதாக மனமாற்றம் அடைந்தவர்கள் மேலும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் கைதுகள் மற்றும் துன்புறுத்துதல்களினால் சற்று பயப்படுவதினால், உபசரிப்பு கடமையை செய்ய துணியவில்லை அவள் கூறினாள். அவர்களுக்கு உதவுவதற்காக யாவோ லான் சத்தியத்தைக் குறித்து ஐக்கியம் கொள்ளாதது மட்டுமல்லாமல், அவர்களை கண்டித்ததோடு, மேலும் வேறு யாரையும் அவர்களுக்கு உதவ அனுமதி மறுத்துவிட்டார். இறுதியில், சகோதரர் வாங்கும் அவரது மனைவியும் எதிர்மறையான நிலைக்குள் மூழ்கினர், இனிமேலும் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்பவில்லை. சகோதரி சென் யாவோ லானிடம் இது சகோதர சகோதரிகளை நடத்ததுவதற்கான வழி அல்ல என்று கூறியபோது, அவர் தன்னைப் பற்றி சற்றும் சிந்திக்கவில்லை, ஆனால் சகோதரி சென்னின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாக சில கதையை உருவாக்கினார். பின்னர் அவர் பல மாதங்கள் சபையிலிருந்து சகோதரி சென்னை தனிமைப்படுத்தினார், திருச்சபை வாழ்க்கையில் பங்கேற்க அவளை அனுமதிக்கவில்லை. நீர்ப்பாய்ச்சும் கடமை செய்யும் மற்றொரு சகோதரியும் இருந்தாள். கூடுகைகளில், அவள் தேவனுடைய வார்த்தைகளை தனது ஐக்கியத்தில் ஒருங்கிணைத்து மற்றும் அவள் வெளிப்படுத்தும் சீர்கெட்ட மனப்பாங்குகளைக் குறித்து முற்றிலும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பாள். யாவோ லான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளை அவளுடைய கடமையிலிருந்து நீக்கினார். பின்னர் அவர் தனது சொந்த மகள், சியாமினை நீர்பாய்ச்சும் கடமைக்கு பணி உயர்வு செய்தார், எதிர்காலத்தில் தேவனுடைய வீட்டில் முக்கியமான பணிகளை அவள் எடுத்துக் கொள்ளப்போவதால் தனது மகளுக்கு நன்கு பயிற்சியளிக்குமாறு சகோதர சகோதரிகளிடம் கூறினார். உண்மையான விசுவாசியாக இல்லாமல் இருந்தும் கூட, கூடுகைகளில் பயனுள்ள எதையும் ஐக்கியங்கொள்ள இயலாத தனது கணவரை யாவோ லான் குழுத்தலைவராக பணி உயர்வு செய்தார். யாவோ லான் உணர்ச்சியினால் செயல்பட்டு, தன் கணவரை திருச்சபைக்குள் இழுத்தார், பின்னர் அவரை ஒரு குழுத் தலைவராக நியமித்தார்—இது நிர்வாக ஆணைகளைக் கடுமையாக மீறுவதாகும். அவளுடைய பொல்லாத செயல் அத்துடன் நிற்கவில்லை. யாவோ லானும் அவரது மகளும் திருச்சபையை மன்னர்களைப் போல ஆட்சி செய்தனர், அவளைப் பார்ப்பதே பயமுறுத்தும் அளவுக்கு சகோதர சகோதரிகளை தங்கள் விருப்பத்தின் பேரில் ஒடுக்கினார் மேலும் கட்டளையிட்டார், யாரும் ஒரு கருத்தைக் கூறத் துணியவில்லை. சகோதரி சென் சொல்வதைக் கவனித்தபோது, நான் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். யாவோ லான் ஆரம்பத்தில் தனது வேலையை என்னிடம் ஒப்படைத்தபோது, அனைத்து வேலைகளும் நன்றாக நடக்கிறது என்று அவள் சொன்னபோது நான் அவளை பாராட்ட வேண்டும் என்பதாக உணர்ந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய்களாக இருந்தன. ஐக்கியத்தில் அவள் தேவனுடைய வார்த்தைகளைச் சூழலுக்கு பொருந்தாமல் மேற்கோள் காட்டியது மட்டுமல்லாமல், எழுத்துக்கள் மற்றும் உபதேசங்களைப் பிரசங்கிப்பதன் மூலம் சில சகோதர சகோதரிகளைத் தவறாக வழிநடத்தினார், அவர் தனது பதவியின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மற்றும் சகோதர சகோதரிகளைக் கொடுமைப்படுத்தினாள். திருச்சபையை சர்வாதிகாரமாக ஆட்சி செய்து, தன் விருப்பப்படி மற்றவர்களை ஒடுக்கி, மக்களை அவர்களின் கடமைகளில் இருந்து நீக்கும் அளவுக்குக் கூட அவர் சென்றார். தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் பணி உயர்வு கொடுத்து ஊக்குவித்தாள், மேலும் உறவுகளுக்குச்சலுகை வழங்கி அதிகார முறைகேட்டில் ஈடுபட்டார். அவரது தேவையில்லாத மற்றும் பொறுப்பற்ற நடத்தை மற்றும் அவரது பல பொல்லாத செயல்கள் அவளை ஒரு ஆட்டுத்தோல் போர்த்திய அந்திக்கிறிஸ்துவாக காட்டியன! இப்போது அவருடைய கடமையின் வரம்பு இன்னும் பெரியதாக இருந்தது, எனவே அதிக சகோதர சகோதரிகள் நிச்சயமாக சேதப்படுத்தப்படுவார்கள். நான் முடிந்த அளவிற்கு விரைவாக ஒரு மேலதிகாரியிடம் அவரைப் பற்றி தெரிவிக்க வேண்டும் மற்றும் திருச்சபையின் வேலையைத் தாங்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும். அவரைப் பற்றி புகார் கூறுவதைப் பற்றி நான் சிந்தித்த போது, நான் கவலைப்படத் தொடங்கினேன்: “என் வேலைக்கு யாவோ லான் பொறுப்பாக இருக்கிறார். அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பது தெரிந்திருந்ததினால், நான் அவளைப் புகார் தெரிவித்ததை அவள் கண்டுபிடித்தால், அவள் பெரும்பாலும் திருச்சபைத் தலைவர் என்ற என் பதவியிலிருந்து என்னை பணிநீக்கி, வீட்டிற்கு அனுப்பி விடுவார். என்னை ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்கும் கூட அவள் சில சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிக்கலாம். என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக மாறிவிடும். நான் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டால் என்ன செய்வது? அப்படியானால், தேவனில் கொண்ட என்னுடைய விசுவாசப் பயணம் முடிந்துவிடும். நான் யதார்த்தமாக இருக்க வேண்டும். நான் முதலாவது திருச்சபை வேலையை ஒழுங்குபடுத்துவேன், அப்புறம் பார்க்கிறேன்.” அதனால், என்னைப் பாதுகாக்கும் பொருட்டு, நான் புகார்கூறி அவளை அம்பலப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் அடுத்த கூடுகையில் அந்த ஒடுக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் முகங்களில் எதையோ எதிர்பார்க்கும் தோற்றத்தை நான் பார்த்தேன், நான் உண்மையில் மன உளைச்சலாக உணர்ந்தேன், என் மனசாட்சி குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சத்தியத்தை பற்றி ஐக்கியப்படும் யாவோ லானின் திறனை உயர்த்தி சியாமின் திருச்சபையில் எவ்வாறு பேசி வருகிறார் என்பதைப் பற்றியும், அவர் சகோதர சகோதரிகளை ஒரு நெருக்கும் முறையில் கட்டுப்படுத்தி விரிவுரையாற்றுகிறார் என்பதையும் அவர்கள் பேசக் கேட்டபோதும், நான் இன்னும் கோபமடைந்தேன். “யாவோ லான் மற்றும் சியாமினின் பொல்லாத செயல்களை ஒரு மேலதிகாரிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். எப்படியெல்லாம் அவர்கள் விரும்புகிறார்களோ, அப்படி துன்மார்க்கமாக நடந்துகொள்வதையும் சகோதர சகோதரிகளை அவர்கள் ஒடுக்குவதையும் நான் அனுமதிக்க முடியாது” என்று எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன். எனவே, அவர்களைக் குறித்து சகோதர, சகோதரிகள் கூறிய எல்லாவற்றையும் நான் எழுதிக் கொண்டேன். கூடுகைக்குப் பிறகு, எனக்குள் முரண்பாடாக நான் உணர்ந்தேன். கண்டுபிடித்து விட்டால் என்னைத் தண்டிக்க யாவோ லான் என்ன செய்வார்? ஆனால் அந்த இரண்டு பேரையும் அம்பலப்படுத்தாமல், நான் என்னைப் பாதுகாப்பதைத் தேர்வு செய்தால் நான் பொல்லாப்பு செய்துவிடமாட்டேனா? நான் ஒரு பாறைக்கும் கடினமான இடத்திற்கும் இடையில் இருந்தேன், என்னால் சுவாசிக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக எல்லாம் முடிச்சு போடப்பட்டிருப்பதாக நான் உணர்ந்தேன். கண்ணீருடன், நான் முழங்கால்படியிட்டு தேவனிடம் ஜெபித்தேன், “அன்பு தேவனே, நான் யாவோ லான் மற்றும் அவரது மகளைக் குறித்து என் தலைவர்களிடம் புகாரளிக்க விரும்புகிறேன், ஆனால் அவர்கள் என்னை பழிவாங்குவார்கள் என்று நான் பயப்படுகிறேன். ஓ தேவனே, அந்தகார வல்லமைகளின் அடக்குதலை உடைத்து வழியுண்டாக்கி, சத்தியத்தை நடைமுறைப்படுத்தி திருச்சபையின் வேலையை நிலைநிறுத்த தயவுசெய்து எனக்கு வழிகாட்டும்” என்று சொன்னேன்.
என் ஜெபத்திற்குப் பிறகு, நான் தேவனுடைய வார்த்தைகளில் இதைவாசித்தேன்: “நீங்கள் அனைவரும் தேவனின் சுமையை கருத்தில் கொண்டுள்ளீர்கள் என்றும் திருச்சபையின் சாட்சியங்களை பாதுகாப்பீர்கள் என்றும் கூறுகிறீர்கள். ஆனால் உண்மையில் உன்னில் தேவனின் பாரத்தில் அக்கறை காட்டுபவர் யார்? உன்னை நீயே கேட்டுக்கொள்: நீ அவருடைய பாரத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவனா? அவருக்காக நீதியைக் கடைப்பிடிக்க முடியுமா? எனக்காக நின்று பேச முடியுமா? சத்தியத்தை உறுதியுடன் கடைபிடிக்க முடியுமா? சாத்தானின் எல்லா செயல்களுக்கும் எதிராக போராட நீ தைரியமாக இருக்கிறாயா? என் சத்தியத்தின் பொருட்டு உன் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சாத்தானை அம்பலப்படுத்த முடியுமா? உன்னில் என் நோக்கங்கள் நிறைவேற அனுமதிக்க முடியுமா? மிக முக்கியமான தருணங்களில் உன் இருதயத்தை நீ ஒப்புக்கொடுத்திருக்கிறாயா? நீ என் விருப்பத்தைச் செய்கிற ஒருவனா? இந்த கேள்விகளை நீயே கேட்டுக்கொள். அவற்றைப் பற்றி அடிக்கடி சிந்தித்துப்பார்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 13”). தேவனுடைய வார்த்தைகளில் இந்த வெளிப்பாடுகளைப் வாசித்த போது நான் என்னைப் பற்றி மிகவும் வெட்கப்பட்டேன். நான் தேவனை விசுவாசித்தேன், ஆனால் தேவனுக்கு என் இதயத்தில் எந்த இடமும் இல்லை. நான் தேவனுடைய கட்டளையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நான் நினைத்ததெல்லாம் என் சொந்த நலன்களைத் தான். நான் தேவனுடைய வீட்டின் வேலையைப் பாதுகாக்கவே இல்லை. யாவோ லான் தேவனுடைய வார்த்தைகளைச் சூழ்நிலைக்கு பொருந்தாமல் மேற்கோள் காட்டி விளக்குவதையும், அவர் திருச்சபையில் ஆதிக்கம் செய்வதையும், அவர் சகோதர சகோதரிகளைத் தண்டிக்கிறார் மற்றும் ஒடுக்குகிறாள் என்பதை நான் தெளிவாகக் கண்டுபிடித்தேன். தனக்கு நெருக்கமானவர்களுக்கு பணி உயர்வு கொடுக்கவும், தன்னைப் பலப்படுத்தவும், திருச்சபை வாழ்க்கையில் கடுமையாக இடையூறு செய்தும் தலையிட்டும், சகோதர சகோதரிகளுக்குத் தீங்கு செய்தும், மக்களை தன்னிச்சையாக அவர்களின் கடமைகளில் இருந்து பணிநீக்கம் செய்து கொண்டிருந்தார். விஷேசமாக இப்போது அவரது வேலையின் எல்லை அதிகரித்ததால், அவர் இன்னும் அதிகமான சகோதர சகோதரிகளுக்கு தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்தார். ஆனால் யாவோ லானின் அந்தஸ்தையும் செல்வாக்கையும் கண்டு நான் பயந்தேன், அவரால் ஒடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுவேன் என்றும், என் சொந்த நிலையையும் எதிர்கால வாய்ப்புகளையும் இழந்துவிடுவேன் என்றும், அவரும் அவருடைய மகளும் என்னைப் பழிவாங்கி, எனக்கு தீங்கு விளைவிப்பார்கள் என்றும் பயந்தேன், எனவே நான் கோட்பாடுகளைப் பற்றிக் கொள்ளவும் அவர்களை அம்பலப்படுத்தி, புகார் தெரிவிக்கவும் நான் துணியவில்லை. அதனால், நன்றாகத் தெரிந்து கொண்டே, நான் அந்திகிறிஸ்துகளும் மற்றும் பொல்லாத மக்களும் திருச்சபையில் வெறிகொண்டு இங்குமங்கும் ஓடுவதைப் பார்த்தேன். சகோதர சகோதரிகள் ஒடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கை சேதப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது, ஆயினும் எழுந்து நின்று சாத்தானை நான் தைரியமாக அம்பலப்படுத்தவில்லை. என்ன ஒரு அற்பத்தனமான, சுயநல, வெறுக்கத்தக்க நபர் நான்! பின்னர் இவ்வாறு கூறும் தேவனுடைய வார்த்தைகளை வாசித்தேன்: “மனுக்குலம் சாத்தானால் ஆழமாகச் சீர்கெடுக்கப்பட்டுள்ளது. சாத்தானின் விஷம் ஒவ்வொரு நபரின் இரத்தத்தின் வழியாகவும் பாய்கிறது, மேலும் மனிதனின் இயல்பு சீர்கேடானது, தீயது, மற்றும் பிற்போக்குத்தனமானது, சாத்தானின் தத்துவங்களால் நிரப்பப்பட்டு அதில் மூழ்கியுள்ளது என்பதைக் காண முடிகிறது, இது முழுக்க முழுக்கத் தேவனுக்குத் துரோகம்பண்ணும் சுபாவமாகும். இதனால்தான் ஜனங்கள் தேவனைத் தடுக்க முயன்று, தேவனுக்கு எதிராய் நிற்கிறார்கள்” (“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி”). “சாத்தானின் விஷம் என்ன என்பதைப் பொறுத்தவரை, அதை முழுமையாக வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியும். உதாரணமாக, பொல்லாதவைகளைச் செய்கிற சிலரிடம் ஏன் பொல்லாததை செய்தீர்கள் என்ற நீங்கள் கேட்டால், அவர்கள் சொல்வார்கள், ‘ஏனென்றால் அது “ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்.”’ இந்த ஒற்றைச் சொற்றொடரானது பிரச்சனையின் மூலக் காரணத்தை வெளிப்படுத்துகிறது. சாத்தானின் பகுத்தறிவுக்கேதுவான எண்ணப்போக்குஜனங்களுடைய ஜீவனாக மாறியிருக்கிறது. அவர்கள் இந்த அல்லது அந்த நோக்கத்திற்காக காரியங்களைச் செய்யலாம், ஆனால் அவர்கள் அதைத் தங்களுக்காக மட்டுமே செய்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிப்பதால், ஜனங்கள் தங்கள் சொந்த நலனுக்காகவே ஜீவிக்க வேண்டும் என்றும், மேலும் உணவுக்காகவும் நல்ல ஆடைகளுக்காகவும் ஒரு நல்ல நிலையை அடைய தங்கள் அதிகாரத்தால் சகலத்தையும் செய்ய வேண்டும் என்றும் எல்லோரும் நினைக்கின்றனர். ‘ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்’—இதுதான் மனுஷனுடைய ஜீவனும் தத்துவமுமாகவும் இருக்கிறது, மேலும் இது மனித சுபாவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சாத்தானின் இந்த வார்த்தைகள் முற்றிலும் உண்மையாக சாத்தானின் விஷமாக இருக்கிறது, மேலும் ஜனங்கள் அதை உள்வாங்கும் போது, அது அவர்களுடைய சுபாவமாகிவிடுகிறது. இந்த வார்த்தைகள் மூலம் சாத்தானின் சுபாவம் வெளிப்படுகிறது; அவர்கள் அதை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த விஷம் ஜனங்களுடைய ஜீவனாகவும் அவர்களுடைய ஜீவனின் அஸ்திபாரமாகவும் மாறுகிறது, மேலும் சீர்கெட்ட மனுக்குலமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த விஷத்தால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப்படுகிறது” (“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி”). நான் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு மிதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை தேவனுடைய வார்த்தைகள் எனக்குக் காட்டின, மேலும் நான் மேலும் மேலும் தீயவனாகவும், சுயநலமாகவும் மாறும் அளவுக்கு என்னுடைய எலும்புகள் மற்றும் இரத்தம் ஆகியவை சாத்தானிய விஷம், தத்துவம் மற்றும் குறியீடுகளால் மூழ்கப்பட்டு உட்புகுத்தப்பட்டுள்ளன. நான் சாத்தானிய விஷங்களான “ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்,” “ஏதாவது தவறு என்று உனக்குத் தெரிந்தால், அதிகம் பேசாதிருப்பதே நல்லது,” மற்றும் “விவேகமானவர்கள் தற்காப்பில் சிறந்தவர்கள், தவறுகள் செய்வதைத் தவிர்க்க மட்டுமே முயல்கின்றனர்.” ஆகியவற்றின்படி வாழ்ந்து கொண்டிருந்தேன். என் எண்ணங்கள் அனைத்தும் முறுக்கப்பட்டன, மேலும் நான் வாழ்க்கை மீது பயங்கரமான மதிப்பீடுகள் மற்றும் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தேன். நான் என் சொந்த நலன்கள், என் எதிர்கால வாய்ப்புகள், மற்றும் என் விதி ஆகியவற்றை வேறு எதையும் விட முக்கியமானதாகக் கருதினேன். யாவோ லான் மற்றும் அவரது குழுக்களான தீய அந்திக்கறிஸ்துக்களின் வல்லமைகள் திருச்சபையில் சகோதர சகோதரிகளைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தன, நான் அவர்களை அம்பலப்படுத்தவும், புகார் கூறவும் வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் ஒடுக்கப்பட்டு, என் நிலையையும் எதிர்கால வாய்ப்புகளையும் இழந்துவிடுவேனோ என்று பயந்ததால், நான் எவ்வளவு போராடினாலும் அதை செய்யத் துணியவில்லை. எனவே திருச்சபையை சீர்குலைக்க அந்திகிறிஸ்துக்களை நான் அனுமதித்தேன், ஒரு பாரபட்சமற்ற வார்த்தையை சொல்ல தைரியம் இல்லாமல், இரக்கமற்று செயல்பட்டேன். நான் சாத்தான் விஷங்களால் மிகவும் இறுக்கமாக கட்டப்பட்டு, விலங்கிடப்பட்டிருப்பதை உணர்ந்தேன், அதன் உடந்தையாக, அதன் வேலையாளாக மாறினேன்; இது தேவனுக்கு அருவருப்பாக இருந்தது, மேலும் நான் அவருக்கு முன்பாக வாழத் தகுதியற்றவன். நான் தேவனுடைய கிரியை மற்றும் வழிகாட்டுதலை ஆண்டுகளாக அனுபவித்தேன், நான் ஒரு திருச்சபைத் தலைவராக என் கடமையைச் செய்யும்படி அவர் என்னை உயர்த்தினார். எனினும், அதை போற்றி வளர்க்க எனக்குத் தெரியவில்லை மேலும் சகோதர சகோதரிகளுக்காக எவ்வாறு அக்கறைப்படுவது அல்லது தேவனுடைய வீட்டின் வேலையை எப்படி நிலைநிறுத்துவது என்பதைப் பற்றி எந்த சிந்தனையும் செய்யவில்லை. நான் என் சொந்த சுயநல ஆசைகளில் முழுமையாக போர்த்தப்பட்டு, சிறிதளவும் கண்ணியம் அல்லது நேர்மை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தேன். என் மீது வைக்கப்பட்ட சகோதர சகோதரிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப நான் வாழத் தவறிவிட்டேன், கூடுதலாக, தேவன் எனக்கு அளித்த கட்டளைக்கு ஏற்ப வாழ நான் தவறிவிட்டேன். இந்த எண்ணத்தால், மிகவும் சுயநலமாகவும், அருவருக்கத்தக்கவனாகவும் இருப்பதற்காக என்னை நானே வெறுத்தேன். மனந்திரும்ப விரும்பி நான் தேவனிடம் ஒரு ஜெபத்தை ஏறெடுத்தேன். இந்த இருண்ட தாக்கங்களை தகர்த்து வழி உண்டாக்க மேலும் சத்தியத்தை நடைமுறைப்படுத்த எனக்கு பெலனைக் கொடுக்கவும் வழிகாட்டவும் நான் தேவனிடம் கேட்டேன்.
அதன் பிறகு, நான் தேவனுடைய வார்த்தைகளில் இதை வாசித்தேன்: “தேவனின் மனநிலை என்பது எல்லாவற்றையும் எல்லா ஜீவன்களையும் ஆள்பவருக்கும், எல்லா சிருஷ்டிப்புகளின் கர்த்தருக்கும் உரியது. அவரது மனநிலையானது கணம், வல்லமை, பெருந்தன்மை, மகத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மேலாதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவருடைய மனநிலையானது அதிகாரத்தின் அடையாளமாகும், நீதியான அனைத்திற்குமான அடையாளமாகும், அழகான மற்றும் நன்மையான அனைத்திற்குமான அடையாளமாகும். அதற்கும் மேலாக, இது இருளினாலும் மற்றும் எந்தவொரு எதிரியின் வல்லமையினாலும் ஆட்கொள்ளப்படவோ அல்லது கைப்பற்றப்படவோ முடியாத ஒரு அடையாளமாகும், அதேபோல் எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாலும் புண்படுத்தப்பட முடியாத அவரின் அடையாளமாகவும் உள்ளது (புண்படுத்தப்படுவதை அவர் சகித்துக் கொள்ள மாட்டார்). அவரது மனநிலை மிக உயர்ந்த வல்லமையின் அடையாளமாகும். அவருடைய கிரியையையோ அல்லது அவரது மனநிலையையோ எந்தவொரு நபராலும் அல்லது நபர்களாலும் தொந்தரவு செய்ய முடியாது அல்லது தொந்தரவு செய்யலாகாது” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது”). தேவன் எல்லாவற்றையும் ஆளுகிறார் என்றும், அவருடைய மனநிலை உயர்ந்த அதிகாரத்தின் அடையாளமாக இருக்கிறது என்றும், எதிரியின் எந்த வல்லமையோ அல்லது அந்தகார வல்லமையோ அதைக் குற்றப்படுத்தாது என்றும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நான் புரிந்துகொண்டேன். சாத்தானின் இடையூறு செய்யும் எல்லா பொல்லாத வல்லமைகளையும் தேவன் திருச்சபையிலிருந்து சுத்திகரித்து, அவற்றை முற்றிலும் ஒழித்துக்கட்டுவார். இதுவே தேவனுடைய கிரியையின் நோக்கமாகும், நிஜத்தில், மேலும் இது தேவன் நிச்சயமாக செய்து முடிக்கும் உண்மையாகும். யாவோ லான் ஒரு கொடுங்கோலன் போல திருச்சபையை ஆட்சி செய்து, சகோதர சகோதரிகளைக் கட்டுப்படுத்தி, ஒடுக்கி, அவருக்கு நெருக்கமானவர்களை வளர்த்து, தனது சொந்த ராஜ்யத்தை அமைத்துக் கொண்டிருந்தார். அவர் தேவனுடைய வேலையைச் சீர்குலைத்து, குறுக்கிட்டார், எல்லா விதமான பொல்லாப்பையும் செய்தார், தேவனுடைய மனநிலையை அதிகமாகப் புண்படுத்தினார். திருச்சபையில் இருந்து விரைவிலோ அல்லது தாமதமாகவோ வெளியேற்றப்படப்போகிற ஒரு அந்திக்கிறிஸ்து பிசாசு அவர். பல பொல்லாத மக்களையும், அந்திக்கிறிஸ்துக்களையும் தேவனுடைய வீடு எவ்வாறு வெளியேற்றியது என்பதைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்: அவர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்தாலும், அவர்கள் சிறிது காலத்திற்கு மட்டுமே வெற்றி பெற முடியும், இறுதியில் அவர்கள் தேவனுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இது தேவனுடைய நீதி இல்லையா? இருப்பினும், நான் தேவனுடைய நீதியைப் புரிந்து கொள்ளவில்லை, மேலும் தேவனுடைய வீட்டில் தேவன் அரசாளுகிறார், சத்தியமும் நீதியும் ஆதிக்கம் செய்கிறது என்ற உண்மையை நான் நம்பவில்லை. தேவனுடைய வீட்டை அது உலகத்தைப் போலவே இருப்பதாகவும், அந்தஸ்து மற்றும் அதிகாரம் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் என் விதியைக் கட்டுப்படுத்த முடியும் என்பது போல் பார்த்தேன், நான் யாவோ லான் மற்றும் அவரது மகளைக் கோபப்படுத்தினால், நான் என் எதிர்கால வாய்ப்புகளையும் இலக்கையும் இழப்பேன் என்று நினைத்தேன். அவர்கள் என்னைப் பழிவாங்குவார்கள் என்று கூட நான் பயந்தேன்—எல்லாவற்றையும் விட தேவனுடைய ஆளுகையை நான் நம்பவில்லை. இந்த வகையான விசுவாசம் தேவனுக்கு ஒரு அவமானமாக இருந்தது! அதன் பிறகு தேவனுடைய வார்த்தைகளில் இதை நான் வாசித்தேன்: “அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து மனுஷன் தப்பிப்பதற்கான அடிப்படையே எனது வார்த்தைகள், என் வார்த்தைகளுக்கு ஏற்றபடி நடக்க முடியாதவர்கள் அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்ப முடியாது. தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்தல், தேவனுக்கு உண்மையுள்ள நிலையில் வாழ்தல், சத்தியத்தைத் தேடும் நிலையில் வாழ்தல், தேவனின் நிமித்தம் தன்னை உண்மையாக அர்ப்பணிக்கும் யதார்த்தத்தில் வாழ்தல், மற்றும் தேவனை உண்மையாக நேசிக்கும் நிலையில் வாழ்தல் ஆகியவற்றை சரியான நிலையில் வாழ்தல் எனலாம். இந்த நிலைகளிலும் இந்த யதார்த்தத்திற்குள்ளும் வாழ்பவர்கள் சத்தியத்தின் ஆழத்திற்குள் பிரவேசிக்கும்போது மெதுவாக மறுரூபமடைவார்கள், மேலும் கிரியை ஆழமாகச் செல்லும்போது அவர்கள் மாற்றமடைவார்கள்; இறுதியில், அவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும், தேவனை உண்மையாக நேசிப்பவர்களாகவும் மாறுவார்கள்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து தப்பிச்செல், அப்பொழுது நீ தேவனால் ஆதாயப்படுத்தப்படுவாய்”). தேவனுடைய வார்த்தைகள் எனக்குப் பாதையைக் காட்டின. சாத்தானின் இருண்ட ஆதிக்கத்தின் கட்டுகளை உடைக்க நான் விரும்பினால், தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப நான் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. நான் என் சொந்த நலன்களையும் எதிர்காலத்தைப் பற்றிய என் எண்ணங்களையும் விட்டுவிட்டு, சத்தியத்தை நடைமுறைப்படுத்தி, அந்த அந்திகிறிஸ்துக்களை அம்பலப்படுத்தி புகார் செய்து, மேலும் தேவனுடைய வீட்டின் வேலையை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. நான் என் கடமையிலிருந்து நீக்கப்பட்டாலும், என் பதவியையும் வாய்ப்புகளையும் இழந்தாலும், நான் சத்தியத்தின் கோட்பாடுகளில் உறுதியாக இருக்க வேண்டியிருந்தது. இதை நான் புரிந்து கொண்டவுடன், நான் என் பெலனைக் கண்டுபிடித்தேன், நான் யாவோ லான் மற்றும் சியோமின் பற்றிப் புகாரளித்து என் தலைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, யாவோ லான் மற்றும் சியோமின் செய்த தீய செயல்களின் உண்மைகளை வெளிக்கொணர தலைவர்கள் அனைத்து சகோதர சகோதரிகளையும் கூட்டினர். கோட்பாடுகளின்படி, யாவோ லான், அவரது கணவர் மற்றும் சியாமின் ஆகியோர் தங்கள் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டனர். யாவோ லானும் அவருடைய மகளும் தங்களைப் பற்றி சிந்திக்கவோ அல்லது அறிந்து கொள்ள முயற்சிக்கவோ இல்லை, மாறாக சகோதர சகோதரிகளை அவர்கள் வீடுகளில் சந்தித்து, செய்த தவறுக்கு வருத்தப்படுவதாக பாசாங்கு செய்து, சகோதர சகோதரிகளை வஞ்சிக்கும் முயற்சியில், தாங்கள் எவ்வளவு தவறாக நடத்தப்பட்டார்கள் என்று புலம்பினர். அவர்கள் முற்றிலும் மனந்திரும்பாதவர்களாக இருந்தனர், இறுதியில் தங்கள் தீய செயல்களின் காரணமாக, அவர்கள் அனைத்து வகையான துன்மார்க்கத்தையும் செய்த அந்திகிறிஸ்துக்கள் என்றும் பொல்லாதவர்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டனர், மற்றும் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். திருச்சபை வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியது, சகோதர சகோதரிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர், ஒவ்வொருவரும் தேவனின் நீதியையும் பரிசுத்தத்தையும் துதித்தனர். இது தேவனுடைய வீட்டில் நீதியும் சத்தியமும் ஆதிக்கம் செய்கின்றன, கிறிஸ்து அங்கு ஆளுகை செய்கிறார், மற்றும் அந்த அந்திகிறிஸ்துவின் பொல்லாத வல்லமைகள் எவ்வளவு பொல்லாததாய் மற்றும் பரவலாக இருந்தாலும் அல்லது அவை எவ்வளவு வல்லமையாக இருந்தாலும், அவை ஒருபோதும் தேவனுடைய அதிகாரத்தை மிஞ்சவோ அல்லது தேனுடைய வேலையை சீர்குலைக்கவோ முடியாது, யாருடைய விதியையும் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தவும் முடியாது என்பதை இன்னும் தெளிவாகப் பார்க்க எனக்கு உதவியது. அவை தேவனுடைய கரங்களில் சதுரங்க துண்டுகள் போன்றவையே, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பகுத்துணர்வை உருவாக்க உதவும் கருவிககளே. அவர்கள் வழிதவறிச் செல்லாதவாறு, மற்றவர்க ளை அந்திக்கிறிஸ்துகளையும், தீயவர்களையும் அவர்கள் யாரென்று பார்க்க அவற்றின் செயல்பாடுகள் அனுமதிக்கின்றன. இந்த அந்திக்கிறிஸ்துக்களைப் புகாரளித்த இந்த அனுபவத்தின் மூலம், தேவனுடைய வார்த்தைகளின் பிரகாசம், வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவம் இருளின் வல்லமைகளை உடைத்து சத்தியத்தைப் பின்பற்ற எனக்கு உதவின. நான் நிம்மதியாகவும் என் இதயத்தில் சமாதானமாகவும் உணர்ந்தேன், இந்த வழியில் என்னை நடத்துவது மட்டுமே கண்ணியத்துடனும் நேர்மையுடனும் வாழ ஒரே வழி என்பதை உணர்ந்தேன்; நான் விடுவிக்கப்பட்டதாகவும் சுதந்திரமாகவும் உணர்ந்தேன். இது ஒரு நேர்மையான அறிக்கையை எழுதியதன் பலனாகும்.
சகல மகிமையும் சர்வ்வல்லமையுள்ள தேவனுக்கே! ஆமென்!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?