பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 2)

செப்டம்பர் 22, 2021

டான் சுன், இந்தோனேஷியா

நான் மீண்டும் சோதனையில் விழுந்து, ஜனங்கள் ஏன் பணத்திற்காக கடினமாக உழைக்கின்றனர் என்பதற்கான மூலக் காரணத்தைக் கண்டுபிடிக்கிறேன்

காலம் பறந்தோடியது, வருடாந்திர பண்டிகைக் கொண்டாட்டமானது இந்தோனேசியாவில் விரைவில் நடைபெறும். இந்த மாதத்தில்தான் ஆடைகளுக்கான தேவை மிகவும் உச்சத்தில் இருக்கும், மேலும் பணம் சம்பாதிப்பதற்கான “பொன்னான மாதமும்” இதுதான். நான் எப்போதும் என்னுடைய முதலாளியிடமிருந்து நிறைய ஆடைகளைப் பெறுவேன், மேலும் நான் ஒரு மாதத்திற்கு கூடுதல் நேரம் வேலை செய்தால், இரண்டு மாத ஊதியத்திற்குச் சமமாக என்னால் சம்பாதிக்க முடியும். ஆனால் இந்த முறை, நான் கொஞ்சம் விரக்தியாக உணர்ந்தேன்: நான் இந்த வேலையை ஏற்றுக்கொண்டால், அது நிச்சயமாக திருச்சபையின் கூடுகைகளில் கலந்துகொள்வதற்கு இடையூறாக இருக்கும், மேலும் இரவு முழுவதும் மீண்டும் வேலை செய்வதற்கு என்னுடைய கண்கள் ஒத்துழைப்பதற்கு வழியே இல்லை. ஆனால் அதன்பிறகு இந்த வாய்ப்பு வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் வரும், இந்த மாதம் முடிந்துவிட்டால் வியாபாரம் மிகவும் குறைந்துவிடும் என்று நான் நினைத்தேன். இந்த வாய்ப்பை நான் நழுவ விட்டால், நான் நிறைய பணத்தை இழப்பேன் என்று நினைத்து வேலையை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் கொண்டேன். நான் அதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தேன், ஆனால் என்னால் பணத்தின் ஈர்ப்பை எதிர்க்க முடியவில்லை, ஆகையால் நான் அதைக் குறித்து என்னுடைய திருச்சபையைச் சேர்ந்த சகோதரியுடன் கலந்தாலோசித்து, வாரத்திற்கு ஒரு கூடுகையைத் தவிர்ப்பேன் என்று சொன்னேன், மேலும் திருச்சபையின் கூட்டங்களுக்குச் செல்ல நேரம் கிடைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று வாக்களித்தேன். ஆனால் நான் நினைத்ததை விட அதிகமாக வேலையில் மும்முரமாகிவிட்டேன். நான் ஒரு தொகுப்பு ஆடைகளை முடித்தவுடனேயே அடுத்ததை ஆரம்பிப்பேன், என்னால் நிறுத்தவே முடியவில்லை. இதனால், நான் அடிக்கடி திருச்சபைக் கூடுகைகளில் கலந்துகொள்ளவில்லை, மேலும் சில சமயங்களில் நான் ஆன்லைனில் ஒரு கூடுகையில் கலந்துகொண்டபோது கூட, நான் தயாரிப்பதற்கு எத்தனை ஆடைகள் எனக்காக காத்திருக்கும் என்பதைப் பற்றியே நினைத்துக்கொண்டு, புயலால் அசைக்கப்படும் மரக்கிளைகள் போலவே என்னுடைய மனது அமைதியில்லாமல் இருக்கும். படிப்படியாக, என்னுடைய இருதயம் தேவனிடமிருந்து விலகிச் சென்றது, மேலும் ஒவ்வொரு நாளின் முடிவிலும் சரீரம் மற்றும் மனம் இரண்டிலும் தாங்கமுடியாத சோர்வை உணர்வது மட்டுமின்றி, என்னுடைய இருதயம் வெறுமையாக இருப்பதாகவும் உணர்வேன், மேலும் நான் எப்போதும் ஒரு நிம்மதியற்ற உணர்வையே கொண்டிருந்தேன். இறுதியாக, ஜெபிப்பதற்காகவும் தேடுவதற்காகவும் நான் தேவனுக்கு முன்பாக வந்து, என்னை வழிநடத்துமாறு தேவனிடம் கேட்டுக்கொண்டேன்.

ஒரு கூடுகையில், நான் இருந்த நிலையைச் சகோதரியிடம் சொன்னேன், அவர் தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்தியை எனக்குக் காண்பித்தார்: “‘பணம் உலகைச் சுற்ற வைக்கிறது’ என்பது சாத்தானுடைய ஒரு தத்துவமாகும். மேலும் இது ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் ஒட்டுமொத்த மனிதகுலத்திலும் நிலவுகிறது. இது ஒரு போக்கு என்று நீங்கள் கூறலாம். ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் புகுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, ஜனங்கள் இந்தச் சொல்லை ஏற்கவில்லை. ஆனால் அதன் பின் அவர்கள் மெய்யான ஜீவிதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார்கள். மேலும், உண்மையில் இந்த வார்த்தைகள் சத்தியம் என்று உணரத் தொடங்கினர். இது சாத்தான் மனிதனை கெடுக்கும் செயல் அல்லவா? … இந்தச் சொல்லுடன் ஒருவர் எவ்வளவு அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், அது அவரின் இருதயத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை விளைவு என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் உட்பட, இந்த உலகில் உள்ள ஜனங்களின் மனித மனநிலையின் வழியாக ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. வெளிப்படுத்தப்பட்ட இந்த விஷயம் எவ்வாறு விளக்கப்படுகிறது? அது பண வழிபாடாகும். ஒருவரின் இருதயத்திலிருந்து அதை அகற்றுவது கடினமா? அது மிகவும் கடினம்! சாத்தானுடைய மனித கேடானது உண்மையில் ஆழமானதாகத் தெரிகிறது! ஆகவே, மனிதர்களைக் கெடுக்க சாத்தான் இந்த போக்கைப் பயன்படுத்திய பிறகு, அது அவர்களிடம் எவ்வாறு வெளிப்படுகிறது? பணம் இல்லாமல் ஒரு நாள் கூட சாத்தியமில்லை என்றும், நீங்கள் பணம் இல்லாமல் இந்த உலகில் ஜீவிக்க முடியாது என்றும் நினைக்கின்றீர்களா? ஜனங்களின் நிலையானது அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய மரியாதையும் அதனைப் போன்றது. ஏழைகளின் முதுகு அவமானத்தால் வளைந்திருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்து பெருமையாக நிற்கிறார்கள், சத்தமாகப் பேசுகிறார்கள், மற்றும் ஆணவத்துடன் ஜீவிக்கிறார்கள். இந்த வார்த்தை மற்றும் போக்கு ஜனங்களுக்கு எதைத் தருகிறது? பணத்தைத் தேடுவதில் பலர் எந்த தியாகத்தையும் செய்கிறார்கள் என்பது உண்மையல்லவா? … இந்த முறையையும் இந்தப் பழமொழியையும் பயன்படுத்தி மனிதனை இவ்வளவாகக் கெடுக்கும் சாத்தான் வஞ்சனையானதல்லவா? அது தீங்கிழைக்கும் தந்திரம் அல்லவா? இந்த பிரபலமான பழமொழியை எதிர்த்து இறுதியாக அதை சத்தியமாக ஏற்றுக்கொள்வதற்கு நீ முன்னேறும்போது, உனது இருதயம் முற்றிலும் சாத்தானுடைய பிடியில் விழுகிறது. எனவே, நீ கவனக்குறைவாக அந்தப் பழமொழியைப் போலவே ஜீவிக்க விழைகின்றாய். இந்த பழமொழி உன்னை எந்த அளவுக்கு பாதித்துள்ளது? நீ உண்மையான வழியை அறிந்திருக்கலாம், நீ சத்தியத்தை அறிந்திருக்கலாம், ஆனால் அதைத் தொடர நீ வல்லமையற்றவனாக இருக்கின்றாய். தேவனுடைய வார்த்தைகள் சத்தியமுள்ளவை என்பதை நீ தெளிவாக அறிந்திருக்கலாம். ஆனால், சத்தியத்தைப் பெறுவதற்காக நீ விலைக்கிரயம் செலுத்தவோ துன்பப்படவோ விரும்பவில்லை. மாறாக, தேவனை இறுதிவரை எதிர்ப்பதற்காக உனது சொந்த எதிர்காலத்தையும் தலைவிதியையும் தியாகம் செய்வாய். தேவன் என்ன சொன்னாலும், தேவன் என்ன செய்தாலும், தேவ அன்பு உன்னிடம் எவ்வளவு ஆழமாக, எவ்வளவு பெரியதாக இருக்கின்றது என்பதை நீ புரிந்துக்கொண்டாலும், உனது சொந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று பிடிவாதமாக வற்புறுத்துவாய். மேலும், இந்தப் பழமொழிக்கு உரிய விலையை செலுத்துவாய். அதாவது, இந்தப் பழமொழி ஏற்கனவே உனது நடத்தையையும் உனது எண்ணங்களையும் கட்டுப்படுத்துகிறது. அவை அனைதிற்கும் மேலாக உனது தலைவிதியை அது கட்டுப்படுத்துகிறது. ஜனங்கள் இவ்வாறு செயல்படுவதும், அவர்கள் இந்த பழமொழியால் கட்டுப்படுத்தப்படுவதும், அதனால் கையாளப்படுவதும் சாத்தானுடைய மனிதக் கேடு கடுமையானதாக இருக்கும் என்பதை விளக்குகிறது அல்லவா? இது, சாத்தானுடைய தத்துவமும் கேடான மனநிலையும் உனது இருதயத்தில் வேரூன்றுவது போன்றதல்லவா? நீங்கள் இதைச் செய்தால், சாத்தான் அதனுடைய இலக்கை அடையுமல்லவா?(“தேவனே தனித்துவமானவர் V”).

அதன்பிறகு சகோதரி ஐக்கியத்தைக் கொடுத்து, “பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக வேலை செய்வதால் ஏற்பட்ட வேதனையை நாங்கள் ஏற்கனவே ருசித்துப் பார்த்திருக்கிறோம், மேலும் மனுக்குலத்தின் தலைவிதி மீது தேவன் ஆளுகை செய்கிறார் என்பதை தேவனுடைய வார்த்தைகள் மூலமாக புரிந்துகொண்டிருக்கிறோம். ஆகையால் நம்மால் ஏன் செல்வத்தின் சோதனையிலிருந்து விடுபட முடியாது? நாம் இப்போது வாசித்த தேவனுடைய வார்த்தைகள் பிரச்சனைக்கான மூலக் காரணத்தை வெளிப்படுத்துகின்றன. அதற்கான காரணம் என்னவென்றால், ‘பணம்தான் முதலாவது,’ மற்றும் ‘பணம் உலகைச் சுற்ற வைக்கிறது’ போன்ற சாத்தானுடைய தத்துவ பழமொழிகள் மற்றும் தவறான மதக் கருத்துக்கள் ஆகியவற்றினால் நாம் ஆழமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். அவற்றின் தாக்கத்தனால், பணத்திற்குப் பின்னால் ஓடும் இந்த உலகத்தில், செல்வந்தர்களாக இருப்பதன் மூலம் மட்டுமே நம்மால் சந்தோஷமாக வாழ முடியும் மற்றும் அடுத்தவர்களின் மரியாதையைப் பெற முடியும் என்றும், நாம் செல்வந்தர்களாக இல்லையென்றால், நாம் அடுத்தவர்களால் இழிவுபடுத்தப்படுவோம், அவமதிக்கப்படுவோம் மற்றும் சமுதாயத்தில் நமக்கென்று எந்த மதிப்பும் இருக்காது என்று நம்புகிறோம். இந்த தவறான கருத்துக்களின் ஆதிக்கத்தினால், நமது சொந்த உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், அதிக பணம் சம்பாதிப்பதற்காக கடினமாக எலும்பு தேய உழைக்கிறோம். அதன் விளைவு என்னவென்றால், நாம் நோய்வாய்ப்படும் அளவுக்கு, நமது சரீரம் மற்றும் மனம் இரண்டும் துன்பத்தினாலும் வேதனையினாலும் பாதிக்கப்படுகின்றன. நாம் தேவனை விசுவாசிக்க ஆரம்பித்த பிறகு, செல்வத்தை நாடுவது அர்த்தமற்றது மற்றும் மதிப்பு இல்லாதது என்பதையும், நாம் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசித்து சத்தியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதைச் செய்வதன் மூலம் மட்டுமே நம்மால் சாத்தானுடைய பொல்லாப்பிலிருந்து விடுபட முடியும், ஆனாலும் செல்வத்தின் மீது நாம் வைத்திருக்கும் ஈர்ப்பை நம்மால் இன்னும் கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதை நாம் முற்றிலுமாக அறிந்துகொள்கிறோம். அதிக பணம் சம்பாதிப்பதற்காக, நாம் குறைவான திருச்சபைக் கூடுகைகளில்தான் கலந்துகொள்கிறோம், கூடுகைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கிறோம் மற்றும் நமது சொந்த வாழ்க்கையின் மீது சிறிதும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இறுதியில், நாம் மீண்டும் சாத்தானின் வலையில் விழுகிறோம், மேலும் தேவன் நமது பட்சமாக இல்லை என்ற வேதனையுடன் வாழ்கிறோம். இவை அனைத்தும் சாத்தானுடைய அப்பட்டமான பொய்களால் நாம் வஞ்சிக்கப்பட்டு சீர்கெடுக்கப்படுவதால் உண்டானதல்லவா? சகோதரி, பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் வாழ்க்கையையே செலவிட்டு கடுமையாக உழைக்கிற பலர் இந்த உலகில் இருக்கின்றனர் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது, ஆனால் இவை அனைத்தின் இறுதி முடிவு என்னவென்றால், அவர்கள் பணம் சம்பாதிக்க தங்கள் வாழ்வை செலவிட்டு தங்கள் வாழ்வின் முதல் பாதியையும், வாழ்க்கையை வாங்குவதற்காக தங்கள் பணத்தை செலவிட்டு தங்கள் வாழ்வின் இரண்டாவது பாதியையும் செலவழிக்கின்றனர். மேலும் சில பிரபலங்களும், சில செல்வந்தர்களும், பெரும் புள்ளிகளும் உள்ளனர், இவர்களுடைய செல்வச் செழிப்பான வாழ்க்கையானது அவர்களுக்குத் தற்காலிக சரீர ஆறுதலைத் தரக்கூடும் என்றாலும், அவர்களுடைய ஆவிகள் முற்றிலும் வெறுமையாகவும் வேதனையிலும் இருக்கின்றன, மேலும் சிலர் இந்த வேதனையிலிருந்து விடுபட தற்கொலை செய்துகொள்வதைத் தேர்வு செய்கின்றனர். செல்வம், புகழ் மற்றும் ஆதாயம் ஆகியவற்றால் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது என்பதை இது நமக்குக் காண்பிக்கிறது. நமக்கு மேலும் மேலும் துன்பத்தையும் சீர்கேட்டையும் எற்படுத்துவதை மட்டுமே அவற்றால் செய்ய முடியும். செல்வம், புகழ் மற்றும் ஆதாயம் ஆகியவற்றை நாடுவது சரியான பாதை அல்ல. செல்வத்தை நாடும் பொல்லாங்கான பாதையில் நம்மை வழிநடத்துவதற்கும், செல்வம் என்னும் சகலத்தையும் விழுங்கும் இரைப்பைக்குள் நம்மை விழ வைப்பதற்காகவும், பணத்தின் அடிமைகளாகவும், இறுதியாக சாத்தானால் கொல்லப்படுவதற்காகவும் ‘பணம்தான் முதலாவது’ மற்றும் ‘பணம் உலகைச் சுற்ற வைக்கிறது’ போன்ற தவறான மதக் கருத்துக்களையும் தத்துவ மொழிகளையும் சாத்தான் பயன்படுத்துகிறான். சாத்தான் மிகவும் நயவஞ்சகனாகவும் துஷ்டனாகவும் இல்லையா? சகோதரி, தேவனுடைய வார்த்தைகளைப் பெறுவதற்கும் சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும், சாத்தானின் தந்திரமான திட்டங்களை அறிந்துகொள்வதற்கும், சாத்தானின் பல்வேறு தவறான மதக் கருத்துக்கள் அனைத்தையும் புறந்தள்ளவும், தேவனுக்குப் பயந்து தீமையை விட்டுவிலகும் பாதையில் நடக்கவும், நன்மைக்காக சாத்தானுடைய பொல்லாங்கிலிருந்து விடுபடவும் இருதயம் மற்றும் ஆவி இரண்டையும் கொண்டவர்கள் தேவனுக்கு முன்பாக வருவார்கள் என்ற நம்பிக்கையில் சாத்தான் மனுக்குலத்தைச் சீர்கெடுக்கப் பயன்படுத்தும் நேர்மையற்ற வழிமுறைகளையும் அதன் தீய நோக்கத்தையும் அம்பலப்படுத்த தேவன் கடைசி நாட்களில் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். மனுஷராகிய எங்களைப் பொறுத்தவரையில், இது முற்றிலுமாக எல்லாவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்!”

தேவனுடைய வார்த்தைகளையும் சகோதரியினுடைய ஐக்கியத்தையும் கேட்ட பிறகு, நான் பெரிதும் ஏவப்பட்டேன், மேலும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். சாத்தானுடைய தவறான மதக் கருத்துக்களால் நான் எவ்வாறு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தேன் என்பதைப் பற்றியும் மற்றும் அதிகாலை முதல் இரவு வரை ஒவ்வொரு நாளும் பணம் சம்பாதிக்கும் இயந்திரத்தைப் போல வேலை செய்து, பணம் சம்பாதிக்க கடுமையாக வேலை செய்து நான் பணத்தைத் தொடர்ந்து நாடியதைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன், என்னுடைய கண்பார்வையை ஏறக்குறைய இழந்த போது தான் நான் இறுதியாக நிறுத்த வேண்டியிருந்தது. நான் தேவனை விசுவாசிக்க ஆரம்பித்த பிறகும், தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கவும், சத்தியத்தைப் புரிந்துகொள்வதை நாடவும் எனது பொன்னான நேரத்தை மதிக்க எனக்குத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, பணம் சம்பாதிப்பது திருச்சபைக் கூடுகைகளில் கலந்துகொள்வதை இடையூறு செய்யும் அளவிற்கும், என்னுடைய இருதயம் தேவனிடமிருந்து இன்னும் விலகிச் செல்லும் அளவிற்கும் நான் தொடர்ந்து செல்வத்தையே நாடினேன். பின்னர் தான் சாத்தானின் தவறான எண்ணங்கள் மற்றும் கருத்துக்களால் நான் எவ்வளவு ஆழமாக சீர்கெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதைப் பார்த்தேன். பணத்தை என்னுடைய சொந்த ஜீவனை விட மிகவும் முக்கியமானதாக கருதினேன், மேலும் நான் பணத்திற்கு அடிமையாகிவிட்டேன். அதன்பிறகு, செல்வச் செழிப்பாக உச்சத்தில் வாழ்க்கை வாழ்வதற்கு எப்படியெல்லாம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று தினமும் யோசித்து வாழ்நாளைக் கழித்து, தனது நாற்பதுகளில் இருக்கும் போதே மன உளைச்சலில் அவதிப்பட ஆரம்பித்திருந்த என்னுடைய அண்ணனைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். அவன் நிறைய பணம் கடன் வாங்கினான், ஆனாலும் அவனால் இன்னும் அவனுடைய மன உளைச்சலைக் குணப்படுத்த முடியவில்லை, முழுக் குடும்பமும் அதற்காக துன்பப்பட்டது. அதன்பிறகு என்னை விட இளைய உறவுக்கார பையன் ஒருவன் இருந்தான்; அவன் வெற்றிபெறுவதற்காக, பணம் சம்பாதிக்க கடுமையாக உழைத்தான், மேலும் அவன் நிறைய சம்பாதித்தான், ஆனால் இறுதியில் அவனுக்குப் புற்றுநோய் வந்து மரித்துப்போனான். தேவனுடைய வார்த்தைகளின் வெளிப்பாடுகள் மூலமாகவும், என்னைச் சுற்றியுள்ள உயிருள்ள உதாரணங்கள் மூலமாகவும், சாத்தானின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் நம்மை வஞ்சிப்பதற்காகவும், முட்டாளாக்குவதற்காகவும், நமக்கு பொல்லாங்கு செய்வதற்காகவும் இருந்தன என்பதைப் பார்த்தேன். பணம் நமக்கு தற்காலிகமாக பொருள் ரீதியான இன்பத்தையும் அடுத்தவர்களுடைய போற்றுதலையும் மரியாதையையும் தரலாம் என்றாலும், அது நாம் அனுபவிக்கும் துயரத்தையும் துன்பத்தையும் குணப்படுத்தவோ, அல்லது ஆவிக்குரிய சமாதானத்தையோ, சந்தோஷத்தையோ, சத்தியத்தையோ வாங்கவோ முடியாது, மேலும் அது ஜீவனையும் வாங்க முடியாது. செல்வத்தை நாடுவது உண்மையிலேயே வாழ்வின் சரியான பாதை அல்ல என்பதையும், பணத்திற்காக ஒவ்வொரு நாளும் வாழ்வது மிகவும் களைப்பானது மற்றும் வேதனையானது என்பதையும் நான் இறுதியாக புரிந்துகொண்டேன். நான் சத்தியத்திற்கு விழித்துக்கொள்ளவில்லை என்றால், நான் என்னுடைய அண்ணன் மற்றும் உறவுக்காரப் பையனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி முடிவை எட்டுவேன் என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் வருத்தப்படுவதற்கு ஏற்கனவே மிகவும் தாமதமாகியிருக்கும்!

quit-being-a-slave-to-money-2

நான் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கண்டடைகிறேன் மற்றும் நான் சமாதானமாகவும் நிம்மதியாகவும் உணர்கிறேன்

அதன்பிறகு நான் தேவனுடைய வார்த்தைகளின் மற்றொரு பத்தியை வாசித்தேன்: “ஆனால் இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மிகவும் எளிமையான வழி உள்ளது. இது ஒருவருடைய பழைய ஜீவித முறைக்கு விடை கொடுப்பது ஆகும்; ஜீவிதத்தில் ஒருவருடைய முந்தைய இலக்குகளுக்கு விடை கொடுப்பது ஆகும்; ஒருவருடைய முந்தைய ஜீவித முறை, ஜீவிதத்தைக் குறித்தக் கண்ணோட்டம், நாட்டங்கள், ஆசைகள் மற்றும் இலட்சியங்களை சுருக்கமாக்கி பகுப்பாய்வு செய்வதும்; பின்னர் தேவனுடைய விருப்பத்துடனும் மனிதனுக்கான கோரிக்கைகளுடனும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றில் ஏதேனும் தேவனுடைய விருப்பத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இசைவானதா என்பதைப் பார்ப்பதும், அவற்றில் ஏதேனும் ஒன்று ஜீவிதத்தின் சரியான மதிப்புகளை வழங்குகிறதா என்பதைப் பார்ப்பதும், ஒருவரை சத்தியத்தைப் பற்றிய பெரிய புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா என்பதைப் பார்ப்பதும், மேலும் ஒருவரை மனிதநேயத்துடனும் மனிதனாகவும் ஜீவிக்க அனுமதிப்பதும் ஆகும். ஜீவிதத்தில் ஜனங்கள் பின்பற்றும் பல்வேறு இலக்குகளையும் அவர்களுடைய எண்ணற்ற ஜீவித முறைகளையும் நீ மீண்டும் மீண்டும் ஆராய்ந்து, கவனமாகப் பிரிக்கும்போது, அவற்றில் ஒன்றுகூட சிருஷ்டிகருடைய உண்மையான மனிதநோக்கத்துடன் ஒத்துப்போவதாக காணமாட்டாய். அவை அனைத்தும் சிருஷ்டிகருடைய சர்வவல்லமை மற்றும் பராமரிப்பிலிருந்து ஜனங்களை விலகச் செய்கின்றன; அவை அனைத்தும் கண்ணிகளாக இருக்கின்றன, அவை ஜனங்களை ஒழுக்கத்திலிருந்து வழுவச் செய்கின்றன மற்றும் அவை நரகத்திற்கு இட்டுச்செல்கின்றன. இதை நீ உணர்ந்தபிறகு, உன் பணியானது ஜீவிதத்தைப் பற்றிய உன் பழைய பார்வையை ஒதுக்கிவைப்பது, பல்வேறு கண்ணிகளிலிருந்து விலகி இருப்பது, தேவன் உன் ஜீவிதத்தை பொறுப்பேற்று உனக்காக ஏற்பாடுகளைச் செய்ய வழிவிடுவது; தேவனுடைய திட்டங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் கீழ்ப்படிய முயற்சிப்பது, தனிப்பட்ட விருப்பமின்றி ஜீவிப்பது, மற்றும் தேவனை வணங்கும் நபராக மாறுவது மட்டுமேயாகும்(“தேவனே தனித்துவமானவர் III”).

தேவனுடைய வார்த்தைகள் எனக்கு பின்தொடர்வதற்கான சரியான திசையைக் காண்பித்ததற்காக தேவனுக்கு நன்றி. பணம் சம்பாதிப்பதற்காக கடந்த சில வருடங்களாக நான் எப்படி கடினமாக உழைத்தேன் என்பதையும், என்னுடைய பொருள் உல வாழ்க்கை எப்படி ஓரளவு மேம்பட்டது என்பதையும் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். ஆனால் பணத்துக்காக அலைவதனால் ஏற்படும் துயரமும் துன்பமும் பணத்தால் போக்க முடியாத காரியங்களாகும். நான் கண்மூடித்தனமாக செல்வத்தை நாடிச் சென்றேன் மற்றும் சாத்தானால் மிகவும் கடுமையாக தீங்குக்கு ஆளானேன், ஆனால் இப்போது கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொள்ள போதுமான அளவு அதிர்ஷ்டமுள்ளவனானேன். தேவனை வாஞ்சையோடு பின்பற்றுவது, சத்தியத்தை நாடும் பாதையில் நடப்பது, தேவனுடைய ராஜ்யபாரத்திற்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவது மற்றும் ஒரு சிருஷ்டியாக ஒருவருடைய கடமையைச் செய்வது ஆகியவை மட்டுமே வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய சரியான இலக்குகளாகும், இவை மட்டுமே ஒருவருடைய வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய காரியங்களாகும். திருச்சபையிலுள்ள பல சகோதர சகோதரிகளிடம் உயர்ந்த அந்தஸ்து இல்லாமல் இருந்தாலும், அவர்கள் செல்வச் செழிப்பான வாழ்க்கையை வாழாவிட்டாலும், அவர்களால் எப்படி சில சத்தியங்களைப் புரிந்துகொண்டு பணத்தை சரியாகக் கருத முடிகிறது என்பதைப் பற்றி நான் சிந்தித்துப் பார்த்தேன்; அவர்கள் செல்வத்தின் மீது இச்சை கொள்வதில்லை, அவர்கள் எல்லாவற்றிலும் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிகின்றனர், அவர்கள் சத்தியத்தை நாடுவதில் கவனம் செலுத்துகின்றனர், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்கின்றனர், அவர்கள் சமாதானமான, ஸ்திரமான வாழ்க்கை வாழ்கின்றனர், மேலும் அவர்களுடைய ஆவிகள் விடுதலையோடு இருக்கின்றன. இது எந்த அளவிலான பணத்தினாலும் வாங்க முடியாத ஒன்றாகும், மேலும் தேவனை விசுவாசிக்காத எவராலும் அனுபவிக்க முடியாத ஒன்றாகும். நான் மீண்டும் ஒருபோதும் பணத்தின் அடிமையாக இருக்கக்கூடாது என்றும், உணவு மற்றும் உடை என்னும் அடிப்படைத் தேவைகளுக்கு போதுமான பணத்தில் திருப்தியடைய வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்தேன். “நான் கூடுகைகளில் ஆர்வத்தோடு கலந்து கொள்வேன்,” மேலும் நான் “தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிப்பேன், இதன்மூலம் அதிகமான சத்தியங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். நான் தேவனுடைய ராஜ்யபாரத்திற்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து பணத்துக்காக கடினமாக உழைக்கும் இந்த வேதனையான வாழ்க்கையிலிருந்து விடுபடுவேன்.”

பின்னர், மிகவும் பரபரப்பாக இல்லாத ஒரு வேலை எனக்குக் கிடைத்தது, ஒரு நாளில் நான் எத்தனை ஆடைகளைத் தயாரிப்பேன் என்பதை எனது புதிய முதலாளியிடம் ஒத்துக்கொண்டேன். நான் திருச்சபையில் என்னுடைய சகோதர சகோதரிகளுடன் வழக்கமான கூடுகைகளில் கலந்து கொண்டேன், மேலும் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பேன் மற்றும் பாடல்களைக் கற்றுக்கொள்வேன். காலப்போக்கில், நான் சில சத்தியங்களைப் புரிந்துகொண்டேன், மேலும் நான் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் சந்திக்கும் போதெல்லாம், நான் தேவனிடம் ஜெபித்து தேவனுடைய வார்த்தைகளுக்குள் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பேன். என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் செழிப்பாகவும் சந்தோஷமாகவும் மாறியது, மேலும் தேவனுடைய வார்த்தைகளின் இந்த வரிகளை நான் உண்மையிலேயே புரிந்துகொண்டேன்: “மனிதன் வைத்திருக்க வேண்டிய சத்தியம் அது தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறது, அதுவே மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருக்கும் சத்தியம். உங்கள் உடலுக்குத் தேவைப்படும் சத்து மருந்து மற்றும் வாழ்வாதாரம், மனிதன் அவனது இயல்பான மனிதத் தன்மைக்கு திரும்ப வருவதற்கு உதவுகிறது. இந்த சத்தியத்தினால் ஒரு மனிதன் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்(“நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதை நடைமுறைபடுத்த வேண்டும்”).

நான் அதை அறிந்துகொள்வதற்கு முன், 2018 ஆம் ஆண்டின் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கான நேரமானது கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. என்னுடைய புதிய முதலாளி வழக்கத்தை விட அதிகமான ஆடைகளை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார், “இந்த வாய்ப்பை நழுவ விடாதே, ஏனென்றால் இந்த வாய்ப்பு மீண்டும் வராது. இந்த நேரத்தை இப்பொழுது பயன்படுத்தி, கொஞ்சம் பணம் சம்பாதிக்க உன் பெலத்தைப் பயன்படுத்திக்கொள், பின்னர் உனக்கு வயதாகும்போது உன்னால் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.” என்னுடைய முதலாளியின் வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் அலைக்கழித்தன, ஆனால் நான் பணம் சம்பாதிக்க மிகவும் கடினமாக உழைத்த போது என்னுடைய வாழ்க்கை முன்பு எவ்வளவு வேதனையாகவும் வருத்தமுள்ளதாகவும் இருந்தது என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல், நாம் விரும்பும் பொருட்களுக்காக நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் மனிதர்களாகிய நம்மால் அவற்றைப் பெற முடியாது என்றும் நான் யேசித்தேன். நான் ஏழையாக இருப்பதும் அல்லது செல்வந்தனாக இருப்பதும் தேவனுடைய கரங்களில் தான் உள்ளது. நான் செய்ய வேண்டியதெல்லாம், வழக்கமான மணிநேரங்களில் வேலை செய்வதாகும், இதனால் திருச்சபைக் கூடுகைகளில் நான் கலந்துகொள்வதையோ அல்லது எனது உடல்நலத்தையோ என்னுடைய வேலை பாதிக்கவில்லை, மேலும் நான் அதிக பணம் சம்பாதிக்கிறேனோ இல்லையோ, நான் தேவனுடைய ராஜ்யபாரத்திற்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவேன். நான் இனிமேல் சாத்தானால் தீங்கிற்குள்ளாக்கப்படவோ, சாத்தான் இனிமேல் என்னை வஞ்சிக்கவோ விரும்பவில்லை. ஆகையால், நான் என் முதலாளிக்கு மறுப்பு தெரிவித்தேன். ஆச்சரியம் என்னவென்றால், பண்டிகை முடிந்ததும், ஆடைகளுக்கு துணிகளை வெட்டிக் கொடுக்குமாறு கேட்டு தினமும் மக்கள் என்னிடம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர், முழு ஆடைகள் தொகுப்பையும் தயாரிக்கும் போது கிடைக்கும் அதே அளவிலான பணத்தை என்னால் அரை மணி நேரத்தில் சம்பாதிக்க முடிந்தது. தேவனுடைய கரங்களில் என்னுடைய வாழ்க்கையிலுள்ள சகலமும் எவ்வாறு உண்மையிலேயே ஆளுகை செய்யப்பட்டது மற்றும் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும், என்னால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நான் உண்மையிலேயே புரிந்துகொண்டேன். தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப நடப்பதன் மூலமாகவும், தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிவதன் மூலமாகவும் மட்டுமே என்னால் விடுதலையோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்.

இப்போதெல்லாம், என்னுடைய வேலையில் வழக்கமான நேரங்களில் வேலை செய்வதைத் தவிர, என்னால் முடிந்தவரை திருச்சபையில் எனது கடமையைச் செய்கிறேன் மற்றும் என்னுடைய சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புகிறேன். இவ்வகையான வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக நான் உணர்கிறேன். என்னுடைய வயிற்று வலி முன்பு போல அடிக்கடி ஏற்படுவதில்லை, மேலும் நான் இனிமேல் தினமும் கண்ணுக்கான சொட்டு மருந்தைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இந்த உண்மைகள் தேவனுடைய மெய்யான அன்பையும் அவருடைய அற்புதமான செயல்களையும் அறிந்துகொள்ளவும் எனக்கு உதவின, மேலும் தேவனை சதாகாலமும் பின்பற்ற நான் தீர்மானம் செய்துள்ளேன். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பணத்திற்கு அடிமைப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு

ஜிங்வூ, சீனா என்னுடைய இளம் வயதில், என்னுடைய குடும்பம் ஏழையாக இருந்தது, மேலும், என்னுடைய பெற்றோர்களால் என்னுடைய படிப்பிற்குப் பணம் செலுத்த...

ஒரு மருத்துவரின் தெரிவு

என்னோட சின்ன வயசுல என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு. என்னோட அம்மா முடக்குவாதத்துல கிடந்து, படுத்த படுக்கையாகி, வருஷம்...

என் மீதமுள்ள வருஷங்களுக்கான என் விருப்பத் தேர்வு

சின்ன வயசுலயிருந்தே, என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு, நாங்க மத்த கிராம மக்களால அடிக்கடி கொடுமைப்படுத்தப்படுவோம். என்னோட...

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 1)

டான் சுன், இந்தோனேஷியா “உங்களிடம் பணம் இல்லாதிருக்கும் போது உங்கள் பிள்ளையைக் கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்...