நான் எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை விட்டு விட்டேன்?

ஜனவரி 7, 2023

நான் ஒரு ஏழ்மயான பின்தங்கின கிராமப்புற குடும்பத்தில பிறந்தேன். சிறு குழந்தையா இருந்தப்பவே, என்னோட அப்பா நான் கடினமா படிக்கணும், அப்பதான் எதிர்காலத்தில என்னால ஒரு நல்ல பள்ளியில சேந்து வளமான வாழ்க்கைய பெற முடியும்னு கண்டிப்போட சொல்வாரு. ஆனா நான் எதிர்பாத்த மாதிரி விஷயங்கள் நடக்கல. நான் தொடந்து மூணு வருஷம் உயர்நிலைப் பள்ளி நுழைவுத் தேர்வில தோல்வியடைஞ்சேன். இது என்னோட எதிர்கால பாதைய பத்தி குழப்பமடைய செஞ்சுது அதோட நான் என் நம்பிக்கைய இழந்து போனேன். அந்த நேரத்துல, நான் ரொம்ப மன அழுத்தத்துல இருந்தேன், அதோட அதிகமான வேதனைய உணர்ந்தேன். அது நான் கடைசியா ரயில்வே பொறியியல் பள்ளியில சேர்க்கப்பட்ட நான்காம் வருஷம் வரைக்கும் இருந்துது, பட்டப்படிப்பு முடிஞ்சதும் எனக்கு ரயில்வே அலுவலகத்துல பாதுகாப்பான வேல கிடைச்சது.

1999ம் வருஷம் மார்ச் மாசத்துல, நானும் என் மனைவியும் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டோம். அதுக்கப்புறமா, நான் என்னோட கடமைய சுறுசுறுப்பா செஞ்சேன், அதோட திருச்சபை வாழ்க்கையில பங்கேற்றேன், ஆறு மாசத்துக்கப்புறம், நான் திருச்சபைய வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனா தலைவரா ஆன பிறகு, நான் கூட்டங்கள்லயும் என் கடமையிலயும் அதிக நேரத்த செலவிட்டதால, வேலையில முரண்பாடுகள் எழும்புச்சு. கூட்டங்களுக்குப் போகாம இருக்கறதத் தவிர்ப்பதற்காக, நான் ஒரு மாசத்துல பலமுற விடுப்பு எடுக்க வேண்டியிருந்துது. சம்பள பிடித்தம்போக, மாசக் கடைசியில போனஸயும் நான் இழந்தேன். என்னோட முதலாளி மகிழ்ச்சியில்லாம, “நீங்க இப்பதான் இந்த வேலையில சேர்ந்து இருக்கீங்க, அதனால நீங்க நல்லா வேல செய்யணும். நீங்க எப்பவும் விடுப்பு கேட்டுட்டே இருந்தா உங்க சம்பளத்துல பெரும்பகுதிய இழப்பீங்க, அதோட உங்க போனஸயும் இழப்பீங்க, இது முட்டாள்தனம் இல்லயா? நான் உங்களை நல்லா பாத்துக்கிட்டேன், ஆனா நீங்க எப்பவும் விடுப்பு கேட்டுட்டே இருந்தா, பதவி உயர்வு கொடுக்கறது கஷ்டமா போயிரும்” அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறமா, நான் திரும்பவும் விடுப்பு கேட்டப்போ நான் ரொம்பவும் குழப்பமடஞ்சேன். “இங்க என்னோட முதலாளி எங்கிட்ட நல்லா நடந்துக்கிறாரு. நான் எப்பவும் விடுப்பு எடுத்துட்டு, என்னைப் பத்தின ஒரு மோசமான அபிப்பிராயத்த அவருக்கு ஏற்படுத்தினா, பதவி உயர்வு பெறுவது கடினமா இருக்கும். என்னால இதுக்கு மேல விடுப்பு எடுக்க முடியாது, இல்லைனா என்னோட முதலாளி என்னைப் பத்தி நல்லவிதமா நினைக்க மாட்டாரு” அப்படின்னு நான் நினைச்சேன். ஆனா அதுக்கப்புறம், ஒரு திருச்சபைத் தலைவரா நான் கூட்டங்களுக்குப் போகலன்னா, எனக்குத் திருச்சபையோட வேலையப் பத்தியும் என்னோட சகோதர சகோதரிகளோட நிலைய பத்தியும் தெரியாம போயிடும், அதோட என்னால திருச்சபையோட வேலைய நல்லா செய்ய முடியாது. அதனால நான் ரொம்பவும் குழப்பமடஞ்சேன். அதுக்கப்புறமா, வேலையில தொடர்றதுதான் சரின்னு பலமுற முடிவு செஞ்சேன், ஆனா இதப் பத்தி எனக்குஆழமான குற்ற உணர்ச்சி ஏற்பட்டிச்சி.

ஒருமுற, என்னோட உயர்மட்டத் தலைவர் சக ஊழியர்களுக்கான கூடுகையப் பத்தி எனக்குத் தெரிவிச்சாரு, மறுபடியும் எனக்கு மனசுக்குள்ள போராட்டம் ஆரம்பமாயிடிச்சி, அதனால நான் தேவனோட சித்தத்தத் தேடுறதுக்கு அவர்கிட்ட ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தையின் ஒரு பகுதிய படிச்சேன். “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும். தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு கிரியையின் பின்னணியிலும் தேவனுடன் சாத்தானின் பந்தயம் இருக்கிறது, அதன் பின்னால் அனைத்தும் ஒரு யுத்தம்தான். … ஜனங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் தங்கள் முயற்சிகளில் குறிப்பிட்ட கிரயத்தை செலுத்தவேண்டும். உண்மையான துன்பம் இல்லாமல் அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது; அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்தும் இடத்தை நெருங்கக்கூட இயலாது. வெற்றுக் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்! இந்த வெற்றுக் கோஷங்களால் தேவனைத் திருப்தியாக்க இயலுமா? தேவனும் சாத்தானும் ஆவிக்குரிய மண்டலத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, நீ எப்படி தேவனைத் திருப்திபடுத்த வேண்டும், எப்படி அவருக்கு உனது சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும்? உனக்கு நேரிடும் ஒவ்வொன்றும் ஒரு பெரிய உபத்திரவம் என்றும் நீ சாட்சியாக நிற்கவேண்டும் என்று தேவன் விரும்புகிற நேரம் என்றும் நீ அறிந்திட வேண்டும். வெளிப்பார்வைக்கு இவை முக்கியத்துவம் இல்லாதவையாகத் தோன்றினாலும், இந்தக் காரியங்கள் நடக்கும்போது நீ தேவனை நேசிக்கிறாயா இல்லையா என்பதைக் காண்பித்துவிடும். நீ உண்மையாக நேசித்தால், தேவனுக்கான உன் சாட்சியில் உறுதியாக நிற்க இயலும், அவர் மீதான அன்பை நீ நடைமுறைப்படுத்தவில்லையென்றால், நீ சத்தியத்தை நடைமுறைப்படுத்தாதவன் என்றும், சத்தியம் இல்லாதவன் என்றும், ஜீவன் இல்லாதவன் என்றும், பதர் போன்றவன் என்பதையும் காட்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). தேவனோட வார்த்தையில இருந்து, மேலோட்டமா நாம ஒவ்வொரு நாளும் ஜனங்களோட தொடர்பு கொள்றோம், ஆனா இதுக்குப் பின்னாடி தேவனுடனான சாத்தானுடய பந்தயம் இருக்கு, நாம நம்மளோட சாட்சியில உறுதியா நிக்கணும் அப்படிங்கறத நான் பாத்தேன். யோபுவுக்கு சோதனைகள் வந்தப்போ, ஒரே ராத்திரில தன்னோட செல்வம் எல்லாத்தயும் இழந்துட்டான், வெளிப்புறமா இது கொள்ளக்காரங்க அவனோட சொத்துக்களத் திருடுனதா இருந்தது, ஆனா சாத்தானோட சோதன அதுக்குப் பின்னாடி இருந்துது, யோபு தன்னோட சாட்சியில உறுதியா நின்னப்போ, சாத்தான் வெட்கத்தால பின்வாங்கிப் போனான். என்னோட கூட்ட நேரம் என்னோட வேலையோட முரண்படுறது உண்மையில ஒரு ஆவிக்குரிய யுத்தமா இருந்துது. வெளிப்புறமா, என்னோட முதலாளி என் மேல அக்கற காட்டுனாரு, எனக்குப் பதவி உயர்வு கொடுக்கணும்னு விரும்புனாரு, ஆனா உண்மையில, சாத்தானோட தொந்தரவு இதுக்குப் பின்னாடி இருந்துது. சாத்தான் புகழயும் செல்வத்தையும் பயன்படுத்தி வேல செய்றதிலும் பணம் சம்பாதிக்கிறதுலயும் மட்டும் கவனம் செலுத்தும்படி என்னைத் தூண்டினான். அது தேவனுடனான என்னோட இயல்பான உறவ அழிக்க விரும்புச்சு, அதோட தேவன் கிட்ட இருந்து என்னைத் தூரப்படுத்திச்சு, அதனால கூட்டத்துல கலந்துக்கவும் என் கடமையச் செய்யவும் எனக்கு நேரமில்லாம இருந்துது. இதுல, சாத்தானோட தீய நோக்கங்கள் இருந்துது. இத நெனச்சு, நான் தேவன்கிட்ட, “நான் சாத்தானோட தந்திரங்கள்ல சிக்க மாட்டேன், நான் கூட்டத்துல கலந்துக்குவேன், உங்க வார்த்தைகளப் பத்தி ஐக்கியப்படுவேன், உங்க கூட ஒரு இயல்பான உறவ வெச்சுக்குவேன், அதோட எப்பவும் சாத்தானோட சூழ்ச்சிகள வெற்றியடைய அனுமதிக்க மாட்டேன்” அப்படின்னு ஜெபம் பண்ணேன். அதுக்கப்புறமா, எங்க முதலாளி கிட்ட தைரியமா விடுப்பு கேட்டுட்டு சக ஊழியர்களுக்கான கூட்டத்துல கலந்துக்கிட்டேன்.

ஆனா திருச்சபையோட வேலை ரொம்பவும் பரபரப்பா மாறுனப்போ, நெறைய விஷயங்கள சரியான நேரத்துல ஏற்பாடு செஞ்சு செயல்படுத்த வேண்டியிருந்துச்சு, அதோட நான் என் கடமைய சிறப்பா செய்ய விரும்புனதால, விடுப்பு எடுக்க வேண்டியிருந்துது. அந்த நேரத்துல, நான் ரொம்ப வேதனைப்பட்டேன், பல நேரங்கள்ல என்னால் அத மேற்கொள்ள முடியல, இதனால திருச்சபைப் பணிகள் பாதிக்கப்பட்டுச்சு. சில நேரங்கள்ல நான் என் வேலைய அப்படியே விட்டுடலாம்னு நெனச்சேன், அப்போ என்னால திருச்சபையோட வேல தாமதமாகாது, ஆனா அப்படி நான் செஞ்சா, எனக்கு நல்ல எதிர்காலம் இருக்காதுன்னு நான் கவலப்பட்டேன். அது அவ்ளோ நல்ல வேலையா இருந்ததால, நான் விட்டுடத் தயங்கினேன், அதோட என் இதயத்துல தொடர்ந்து இழு பறியா இருந்துது. நான் வீட்டுக்குப் போனதும், என் வேலைய விட்டுட விரும்புறதா என் மனைவிகிட்ட சொன்னேன் அதோட என்னோட எண்ணங்களயும் பகிர்ந்துட்டேன். “இந்த வேலய விட்டுடுறத என்னால தாங்க முடியாது. இந்த வேல கெடைக்க பல வருஷமா நான் கஷ்டப்பட்டுப் படிச்சேன், அதோட சம்பளமும் அதிகம். நான் விட்டுட்டா, என்னோட சொந்தக்காரங்க, நண்பர்கள், அதோட வகுப்புத்தோழர்கள் எல்லாம் என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? என்னைப் பெத்தவங்களுக்குத் தெரிஞ்சா கோபப்படுவாங்க. அதோட, நான் என் வேலைய விட்டுட்டா, எதிர்காலத்தில நம்மால ஒரு வீட்ட வாங்க முடியாது, அதோட நம்ம வாழ்நாள் முழுசும் ஏழையாவே இருப்போம். ஆனா இப்போ, சர்வவல்லமையுள்ள தேவனோட பல வார்த்தைகள நான் படிச்சிருக்கேன், அதோட தேவனோட சித்தத்தப் புரிஞ்சுக்குறேன். சகோதர சகோதரிகள் என்னைத் திருச்சபைத் தலைவரா தேர்ந்தெடுத்துருக்காங்க. நான் என் வேலையின் காரணமா திருச்சபையோட வேலைகளத் தாமதப்படுத்துனா, நான் என்னோட கடமைய புறக்கணிக்கறதா இருக்குமில்லையா?” அப்படின்னு சொன்னேன். நான் சொன்னதக் கேட்டதுக்கப்புறம், என் மனைவி தேவன்கிட்ட அதிகமா ஜெபம் பண்ணி, என்னோட சொந்த முடிவ எடுக்கச் சொன்னாங்க. அன்னைக்கு ராத்திரி, நான் புரண்டு புரண்டு படுத்தேன், என்னால தூங்க முடியல, அதனால நான் தேவன்கிட்ட ஜெபம் பண்ணி என்னை வழிநடத்தும்படி கேட்டேன். ஒரு நாளு, நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள படிச்சேன்: “யார் எனக்காக உண்மையாகவும் முழுமையாகவும் தங்களையே பயன்படுத்தவும் அவர்களுடைய எல்லாவற்றையும் எனக்காகக் கொடுக்க முடியும்? நீங்கள் அனைவரும் அரை மனதுடையவர்கள்; வீடு, வெளி உலகம், உணவு மற்றும் உடைகளைப் பற்றியே உங்கள் எண்ணங்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. நீ இங்கே என் முன் இருக்கிறாய் மற்றும் எனக்காகக் காரியங்களைச் செய்கிறாய் என்ற போதிலும், வீட்டிலிருக்கும் உன் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரைப் பற்றியே உள்ளான நினைவுகளில் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறாய். இவை அனைத்தும் உன்னுடைய உடைமையா? நீ ஏன் அவற்றை என் கரங்களில் ஒப்படைக்கவில்லை? உனக்கு என் மீது போதுமான விசுவாசம் இல்லையா? அல்லது நான் உனக்காகப் பொருத்தமற்ற ஏற்பாடுகளைச் செய்து விடுவேன் என்று நீ பயப்படுகிறதினாலேயா? உன் மாம்சத்தின் குடும்பத்தைப் பற்றி ஏன் எப்போதும் கவலைப்படுகிறாய்? உன் அன்புக்குரியவர்களுக்காக நீ எப்போதும் ஏங்குகிறாய்! உன் இருதயத்தில் எனக்கு ஒரு நிலையான இடம் இருக்கிறதா? நான் உனக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கும் மற்றும் உன்னை முழுவதும் ஆக்கிரமிப்பதற்கும் என்னை அனுமதிப்பதைப் பற்றி நீ இன்னும் பேசுகிறாய், இவை அனைத்தும் ஏமாற்றும் பொய்களாகும்! உங்களில் எத்தனை பேர் முழுமனதுடன் திருச்சபைக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள்? உங்களில் யார் உங்களைப் பற்றி நினைக்காமல், இன்றைய ராஜ்யத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றி மிகவும் கவனமாகச் சிந்தியுங்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 59”). தேவன் மேல ஜனங்களுக்கு உண்மையான விசுவாசம் இல்லாதப்போ, அவங்க தங்களுடைய எதிர்காலத்தையும் தலவிதியயும் தேவனுடைய கரங்கள்ல வைக்கிறதுக்குத் துணியறதில்ல. அவங்க எப்பவும் தங்களோட சொந்த மாம்சத்துக்காகவே கவலப்பட்டுத் திட்டமிடுறாங்க, தேவன் காரியங்கள சரியா ஏற்பாடு செய்ய மாட்டாருன்னு பயப்படுறாங்க. அப்படிப்பட்டவங்களோட இதயத்துல தேவனுக்கு இடமில்லன்னு தேவனோட வார்த்த வெளிப்படுத்துது. நானும் தேவன் மேல விசுவாசம் இல்லாமலா இருந்தேன்? நான் என் வேலைய விட்டுட்டா பொருளாதார நெருக்கடி நான் வாழறதுக்கு வழியில்லாம செஞ்சுரும்னு எப்பவும் கவலப்பட்டேன். எனக்கு தேவன் மேல ரொம்ப கம்மியா விசுவாசம் இருந்துது. எல்லா காரியங்கள் மேலயும் தேவனுக்கு இருந்த ராஜரீகம் பத்தின உண்மையான புரிதல் கொஞ்சம்கூட எனக்கு இல்லாம இருந்துது. கர்த்தராகிய இயேசு சொன்னதப் பத்தி நான் நெனச்சுப் பார்த்தேன், “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?(மத்தேயு 6:26). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்(மத்தேயு 6:33). நான் அடிக்கடி இந்த வசனங்கள மனப்பாடமா சொன்னேன், மத்தவங்களுக்கு உபதேசம் பண்ண அடிக்கடி இந்த வார்த்தைகள பயன்படுத்துனேன், ஆனா விஷயங்கள் உண்மையிலே எனக்கு நடந்தப்போ, எனக்கு தேவன் மேல எந்த உண்மையான விசுவாசமும் இல்லாம இருந்துது. தேவனோட வார்த்தைகள சிந்திச்சப்போ, எல்லாரோட எதிர்காலமும் தலவிதிம் தேவனோட கரங்கள்ல இருக்குன்னும், தேவன் எப்பவும் பொருத்தமான ஏற்பாடுகளச் செய்வாருன்னும் நான் உணர்ந்தேன். தேவனுக்காக உண்மையா ஒப்புக்கொடுத்தவங்கள அவர் தப்பா நடத்த மாட்டாருன்னு அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்காரு. எனக்கு ஏன் அந்த நம்பிக்க தேவன் மேல இல்லாம இருந்துது? இந்தக் கட்டத்துல, நான் உடனடியா என்னோட வேலைய விட்டுட்டு என்னோட கடமையை சரியா செய்ய விரும்புனேன். ஆனா நான் அலுவலகத்துக்குப் போனப்ப, என் கூட வேலை செய்றவங்க அவங்களோட சம்பள உயர்வு பத்தியும் போனஸ்கள் பத்தியும் பேசிட்டிருந்தாங்க, நா என் வேலைய விட்டுட விருப்பமில்லாம, தயங்க ஆரம்பிச்சேன். சத்தியத்தக் கடைப்பிடிக்கறதுக்கு ஒரு விலைக்கிரயம் செலுத்தணும்னு எனக்குத் தெரியும், அதனால நான், என் வேலைய விட்டுட்டு என் கடமைய செய்றதுக்காக, மாம்சத்த மேற்கொள்றதுல என்னை வழிநடத்தும்படிக் கேட்டு தேவன்கிட்ட ஜெபிச்சேன்.

சீக்கிரமாவே, என்னோட எதிர்கால வாழ்க்கைப் பாதயப் பத்தி சிந்திக்க வெச்ச ஒரு பயமுறுத்துற காரியத்த நான் அனுபவிச்சேன். ஒரு ராத்திரி, நடத்துனர், யார்ட் மாஸ்டர் இன்னும் மத்தவங்களோட ரயில் கார்கள இணைக்க நான் வேல செஞ்சுட்டு இருந்தேன். நான் ஓடுற ரயிலோட ஏணியில நின்னுட்டு, வாக்கிடாக்கியப் பயன்படுத்தி வாகனத்த இணைக்கிறதுல நடத்துனர அறிவுறுத்திட்டு இருந்தேன். ரயில் ரொம்ப வேகமா போயிட்டிருந்துது. வேலை நடைமுறையப் பின்பற்றி, நாங்க இணையப் போற ரயில்ல இருந்து பத்து கார் தொலைவில இருக்குறப்போ வேகத்தக் குறைக்கும்படிக்கான கட்டளைய கொடுத்தேன். ஆனா நடத்துனர் வேகத்தக் குறைக்கல, ஒண்ணுமே செய்ய முடியாம, தண்டவாளத்துல நிறுத்தப்பட்டிருந்த வண்டி மேல ரயில் மோதப் போறத நான் பாத்தேன். வண்டியில இருந்து குதிக்க முடியாத அளவுக்கு அது வேகமா நகுந்தது. என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் ஏணியில இருந்து நான் இருந்த கார்ல குதிக்கறது தான். நான் என் கண்கள மூடிட்டு, நான் வெளிய எறியப்படுறதத் தடுக்க காரோட ஓரத்துல ஒட்டிக்கிட்டேன், நான் என் இதயத்தில சர்வவல்லமையுள்ள தேவன மீண்டும் மீண்டும் கூப்டேன். பலத்த சத்தத்தோட, ரயிலும் காரும் மோதிச்சு. சக நடத்துனரோட கை முறிஞ்சு போச்சு, ராத்திரியோட ராத்திரியா சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாரு. நான் பயந்துபோனேன், ஆனா நான் காயப்படல. நான் அதப் பத்தி எவ்ளோ அதிகமா யோசிச்சனோ, அன்னைக்கு ராத்திரி அவ்ளோ பயமா இருந்துது. ரயில்வே தடத்த மாத்துற வேலையில இருந்த பலருக்கும் விபத்துகள் ஏற்பட்டது எனக்குத் தெரியும். சிலருக்கு அவங்களோட கைகள் நசுக்கப்பட்டுருந்துச்சு, சிலருக்கு கால்கள் நசுக்கப்பட்டுருந்துச்சு…. ஆபத்த சந்திக்கிறப்போ, ஒரு பாதுகாப்பான வேலையா இருந்தாலும் என்னைப் பாதுகாக்கவோ அல்லது என்னோட உயிரப் பாதுகாக்கவோ முடியாதுங்கறத நான் பாத்தேன். இந்த விபத்துக்கப்புறம், பணத்தப் பின்தொடர்றது தற்காலிகமான மாம்ச இன்பத்த மட்டுந்தான் கொண்டு வரும்னு நான் உணர்ந்தேன். தேவனோட பராமரிப்பயும் பாதுகாப்பயும் இழக்கிறதயும் அதுக்கப்புறம் உங்களோட வாழ்க்கைய இழக்கறதயும் விட வேற எதுவும் சோகமா இருக்க முடியாது. பணம் சம்பாதிக்கிறதுக்காக என் உயிரே போயிடுச்சுன்னா, நல்ல வேலை இருந்து என்ன பயன்? இதுக்கு மேல என்னோட வேலை என் கடமைக்கு இடையூறா வர்றதுக்கு என்னால விட முடியாது. நான் தேவனோட வார்த்தையின்படி வாழவும் என்கிட்ட இருந்த எல்லாத்தயும் தேவன் கிட்ட ஒப்புக்கொடுத்துட்டு, தேவனோட ராஜரீகத்துக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும் முடிவெடுத்தேன். நான் தேவனோட வார்த்தைகள நெனச்சுப் பாத்தேன். “இயல்பானவராகவும், தேவனுக்கான அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிக பாக்கியவான்கள் யாரும் இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள், ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்த ஜனக்கூட்டத்தால் மட்டுமே, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதத்தை ஜீவிக்க முடிகிறது: பூமியில் வேறு எவராலும் அத்தகைய மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முடியவில்லை(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்”). தேவனோட வார்த்த எனக்கு ரொம்பவும் தூண்டுதலா இருந்துச்சு. அது உண்மதான். தேவன உண்மையா நேசிக்கிறவங்க புகழுக்காகவோ, செல்வத்துக்காகவோ, இல்லைன்னா மாம்ச இன்பத்துக்காகவோ வாழ மாட்டாங்க, அவங்க தேவனுக்காக வாழ்றாங்க. தேவனுக்காக வாழ்றது மட்டுந்தான் பயனுள்ளதும் அர்த்தமுள்ளதுமான வாழ்க்கையா இருக்கு. தேவனோட முன்குறித்தல் மற்றும் தெரிந்துகொள்ளப்படுதல் காரணமா, நான் சிருஷ்டிகரோட சத்தத்தக் கேக்குறதுக்கும், சில சத்தியங்களப் புரிஞ்சுக்கறதுக்கும், அதோட ஒரு கடமைய செய்றதுக்கும் வாய்ப்பப் பெற்ற பாக்கியசாலியா இருந்தேன். இது ஒரு அற்புதமான காரியமா இருந்துது. நான் எனக்குச் சொந்தமான சின்ன உலகத்துல வாழ்றதயும், பணத்தயும் பொருளின்பத்தயும் தேடுறதயும் நிறுத்த வேண்டியிருந்துது. நான் தேவனோட திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிஞ்சு ஒரு சிருஷ்டியா என்னோட கடமைய செய்யணும்.

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தையின் இன்னொரு பகுதிய படிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நீதிக்கான பசியும் தாகமும் கொண்டிருந்து, உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று காத்திருக்கும் பரிதாபகரமான, ஏழ்மையான, பக்தியுள்ள மத விசுவாசிகளுக்கு நீ கண்ட மற்றும் அனுபவித்த விஷயங்களை எவ்வாறு தெரிவிப்பாய்? உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று எந்த வகையான ஜனங்கள் காத்திருக்கிறார்கள்? உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஓர் எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானரை நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு விண்கல் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்தப் பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷமாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா? ஒட்டுமொத்தமாக, உன் அசாதாரண வாழ்க்கையை வாழ நீ தேவனால் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு விளக்குவாய்? ஒரு பக்தியுள்ள, தேவனைச் சேவிக்கும் நபரின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான உறுதியும் நம்பிக்கையும் உனக்கு உண்மையாகவே இருக்கிறதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?”). தேவனோட வார்த்தையில இருந்து, மனுக்குலத்தின் மீதான தேவனோட அன்பயும் அக்கறையயும் அதோட ஜனங்கள இரட்சிக்கறதுக்கான தேவனோட அவசர விருப்பத்தயும் நான் உணர்ந்தேன். இப்போ, நாம கடைசி நாட்கள்ல இருக்கோம், பேரழிவுகள் அதிகரிச்சுட்டு வருது. ஜனங்கள சாத்தானோட ஆதிக்கத்துல இருந்து இரட்சிக்கறதுக்காக தேவன் சத்தியத்த வெளிப்படுத்துறாரு, அதோட நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் கிரியைய செய்யறாரு. தேவனோட சத்தத்த கேக்கறதுக்கும், தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கறதுக்கும் நான் பாக்கியசாலியா இருந்தேன், இது தேவனோட கிருபையா இருந்துச்சு. ஆனா தேவனோட தோற்றத்துக்காக ஏங்கற பலரும் தேவன வரவேற்கல, மத உலகத்தில அந்திக்கிறிஸ்துவா இருக்குற போதகர்களாலயும் மூப்பர்களாலயும் இன்னும் வஞ்சிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுறாங்க, அதோட தேவனோட சத்தத்தக் கேட்காததுக்கும் கர்த்தர வரவேக்கறதுக்கும் வழியே இல்லாம இருக்காங்க. எல்லாரும் என்னை மாதிரியே சுயநலமா இருந்தா, அவங்க மாம்ச சுகத்தப் பத்தி மட்டும் கவலப்பட்டுட்டு, சுவிசேஷத்தப் பிரசங்கிக்காம தேவனுக்கு சாட்சி கொடுக்காம இருந்தா, பெரிய பேரழிவு வர்றப்போ, அவங்க எல்லாரும் அதுல விழுந்து தண்டிக்கப்படுவாங்க. அதவிட வேற எதுவும் தேவனுக்கு வருத்தமா இருக்க முடியாது. தேவனோட சித்தத்த சிந்திச்சதுக்கப்புறம், நான் எதத் தேர்வு செஞ்சு பின்தொடரணும்னு புரிஞ்சுகிட்டேன். அதனால, என் வேலைய விட்டுட்டு, என் கடமைய சரியா செஞ்சு, தேவனுக்காக ஒப்புக் கொடுக்கணும்னு என் மனசுல தீர்மானுச்சேன். நான் ராஜினாமா செய்ய நெனச்ச நேரத்துல, எப்படிப் பரிசுகள கொடுக்கறது அதோட பதவி உயர்வு பெறுவதுக்கு எனக்கு யாரு உதவி செய்ய முடியுங்கறத எனக்கு சொல்லிக் கொடுக்கறதுக்காக உதவி நிலை இயக்குனர் திடீர்னு என்னைப் பாக்க வந்தாரு. எல்லாத்தயும் எனக்கு விளக்கறதுல ரொம்ப அக்கற காட்டுனாரு. எல்லாருக்கும் பதவி உயர்வு கிடைக்கிறதுக்கு வாய்ப்பில்ல, அதோட என்னோட ஊதியம் அதிகமா உயரும். கொஞ்சம் விவாதங்களுக்கப்புறம், வேலைய விட்டுடணுங்கற என்னோட தீர்மானம் மீண்டும் அலை பாய ஆரம்பிச்சுது. சீக்கிரமாவே, என்னோட சிந்தனைய முழுசா மாத்தின பயங்கரமான ஒரு காரியத்த நான் அனுபவிச்சேன். ஒரு நாள், பகல்நேர வேலையில, ஒரு சரக்குரயில், ரயில் நிலையத்துக்குள்ள நுழைஞ்சதுக்கப்புறம், அது துண்டிக்கப்பட்டு மறுபடியும் இணைக்கப்பட வேண்டியிருந்துது. அது செய்யப்பட்டதுக்கப்புறம், சக்கரங்களுக்கு அடியில பிரேக் ஷூக்கள வெக்கறதுக்கு நான் பொறுப்பா இருந்தேன். மதிய உணவு இடைவேளைக்கப்புறம், ரயில் நகரத் தொடங்குறதுக்கு முன்னாடி பிரேக் ஷூக்கள எடுக்கறதுக்கு நான் மறந்துட்டேன். நடத்துனர் ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு, அதோட பிரேக் ஷூக்களும் சக்கரங்களோட பாதையில இழுத்துச் செல்லப்பட்டுது. சுவிட்ச போட வேண்டிய நேரத்துல, அவர் கவனிச்சு சரியான நேரத்தில ரயில நிறுத்துனாரு, அது தடம்புரள்றதயும் அல்லது கவிழ்ந்து போறதயும் கூட தவிர்த்துது. அன்னைக்கு, தேவனோட பாதுகாப்பு இல்லாம, ரயில் தடம் புரண்டிருந்தாலோ அல்லது கவிழ்ந்திருந்தாலோ, அதனுடைய விளைவுகள் கற்பனை செய்ய முடியாததா இருந்திருக்கும். நான் பயந்து போயிட்டேன், என்னைப் பத்தி யோசிக்காமலும், ஏன் இது நடந்ததுன்னு கேக்காமலும் என்னால இருக்க முடியல. ஒரு திருச்சபைத் தலைவரா, என்னோட வேலை என்னோட கடமைக்கு இடையூறா ஆயிருச்சுங்கறது எனக்குத் தெரியும், அது திருச்சபையோட பணிய கடுமையா பாதிச்சது, ஆனா நான் பணத்துக்காகவும் மாம்ச இன்பத்துக்காகவும் பேராசயோடு இருந்தேன், அவற்ற விட்டுட நான் தயாரா இருந்ததேயில்ல, அதோட நான் அடிக்கடி தேவன்கிட்ட சத்தியங்கள செஞ்சேன், அதுக்கப்புறமா அவற்ற மீறி தேவன ஏமாத்துனேன். நான் தேவனோட வார்த்தைய நெனச்சுப் பார்த்தேன், “நீங்கள் என்னிடமிருந்து அளவற்ற கிருபையைப் பெற்றிருக்கிறீர்கள், பரலோகத்திலிருந்து எண்ணற்ற இரகசியங்களைக் கண்டீர்கள். பரலோகத்தின் அக்கினிப் பிழம்புகளைக் கூட நான் உங்களுக்குக் காண்பித்துள்ளேன், ஆனால் உன்னை எரித்துப் போடுவதற்கு எனக்கு இதயம் இல்லை. ஆயினும்கூட, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு என்ன திருப்பிக் கொடுத்தீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வளவு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “குணத்தில் நீங்கள் அனைவரும் மிகவும் கீழ்த்தரமானவர்கள்!”). வெளிப்புறத்துல, நடந்தது ஒரு நல்ல விஷயமா இருக்கல, ஆனா இது எனக்கான தேவனோட அன்பாவும், நினைவூட்டலாவும் எச்சரிக்கையாவும் இருந்துதுங்கறத நான் தெளிவா புரிஞ்சுட்டேன். தேவன் அதிகமா சத்தியத்த வெளிப்படுத்தி இருக்காரு, அதோட ஜனங்களோட முடிவையும் சென்றடையுற இடத்தயும் பகல் மாதிரி தெளிவா விளக்கி இருக்காரு. அவரோட தீவிரமான விருப்பத்த நாம புரிஞ்சுட்டு, சத்தியத்த சரியா பின்பற்றி சிருஷ்டியோட கடமைகள செஞ்சு, அவரோட இரட்சிப்ப அடையணுங்கறத மட்டுந்தான் அவர் விரும்புறார். ஆனா நான் பிடிவாதமா இருந்தேன். நான் எப்பவும் என்னோட வேலைய நம்பி பிழைச்சுக்கலாம் நல்ல வாழ்க்கைய வாழலாம்னு நெனச்சேன், அதனால நான் அத விட்டுடவும், தேவன பின்பற்றவும், என்னோட கடமைய செய்யவும் விரும்பல. இந்த ரெண்டு திகிலூட்டுற சம்பவங்களும் என்னை முழுவதுமா விழிப்படயச் செஞ்சிது. பேரழிவ சந்திக்கிறப்போ, எவ்வளவு பணம் இருந்தாலும் அது என்னோட உயிர காப்பாத்த முடியாது. கர்த்தராகிய இயேசு சொன்னத நான் திரும்பியும் நெனச்சுப் பாத்தேன். “உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்(லூக்கா 14:33). இப்ப தான் கர்த்தராகிய இயேசுவோட வார்த்தைகளின் அர்த்தம் எனக்கு உண்மையா புரிஞ்சுது. நாம பணத்தயும் பொருள் இன்பத்தயும் சந்தோஷமா நெனைக்கிறப்போ, இந்த விஷயங்கள் நம்முடைய இதயங்கள ஆக்கிரமிக்குது, அதோட தேவன உண்மையா நேசிப்பதும் பின்பற்றுறதும், தேவனுக்காக ஒப்புக்கொடுக்கறதும், சிருஷ்டியாக நம்மோட கடமைகள செய்யறதும் நம்மால முடியாமப் போகுது, அப்படிப்பட்ட ஜனங்கள் இன்னும் மாம்சத்துக்காகவும் உலகத்துக்காகவும் ஏங்கறாங்க, அதோட தேவனப் பின்பற்றுபவங்களா இருக்கத் தகுதியில்லாதவங்களா இருக்காங்க. நான் அதுக்கு மேலயும் தேவனுக்குக் கீழ்ப்படியாம இருக்கவோ அல்லது ஏமாத்தவோ விரும்பல. காரியங்களப் பத்தின என்னோட பார்வைய மாத்திக்கவும், தேவனோட ராஜரீகத்துக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியவும், முழு மனசோட தேவனப் பின்பற்றவும், அவருக்காக ஒப்புக்கொடுக்கவும், அவரோட அன்பத் திருப்பிச் செலுத்தவும் வேண்டியிருந்துது. அதனால, நான் ராஜினாமா செய்ய விரும்புவதா என்னோட முதலாளி கிட்ட சொன்னேன் அதோட தொழிலாளர் ஒப்பந்தத்த முடிச்சுக்கறதுக்கான நடைமுறைகள் எல்லாத்தயும் செஞ்சு முடிச்சேன். அந்த நேரத்தில, நான் ரொம்ப நிம்மதியா இருந்தேன். கூண்டுல இருந்து வெளிய பறக்கிற பறவையப் போல உணர்ந்தேன். அதுக்கு மேல விடுப்பு கேப்பதப் பத்தி நான் கவலப்பட வேண்டியதில்ல, என்னோட வேலை காரணமா திருச்சபைப் பணிகள் பாதிக்கப்பட்டதால நான் கஷ்டப்பட வேண்டியதில்ல. அப்படி ஒரு தேர்வ செஞ்சதுல நான் ரொம்ப மகிழ்ச்சி அடஞ்சேன்.

நான் வேலைய விட்டுட்டத என் அப்பா கேள்விப்பட்டப்போ, ரொம்பக் கோபப்பட்டாரு. அவர் என்னை வந்து பாத்து, “உன்னை வளக்க நான் கடினமா உழைச்சேன். உன்னோட பள்ளி படிப்புக்காகக் கடன் வாங்குனேன். கடைசியா உனக்கு ஒரு நல்ல வேலை கெடச்சுது, இப்போ அது உனக்கு வேண்டாமா? நீ என்ன நெனச்சிட்டு இருக்க? ரயில்வேத் துறையில வேலைங்கறது ஒரு பெரிய விஷயம். நீ விரும்புனா தேவன விசுவாசி, ஆனா உன் வேலைய எப்படி நீ விடலாம்? உன்னோட வேலை இல்லாம, எதிர்காலத்துல நீ எப்படி பிழைப்ப?” அப்படின்னு சொன்னாரு. அப்பாவோட கோபமான வெளிப்பாடப் பாத்து நான் சோகமானேன். எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும், வறுமையில இருந்து தப்பிச்சு, ஒரு சிறந்த வாழ்க்கைய வாழ்வேன்ங்கற நம்பிக்கையில, நான் படிக்கறதுக்காக என்னைப் பெத்தவங்க எப்படிப் பணத்த சேமிச்சாங்கங்கறத நான் நெனச்சுப் பாத்தேன். நல்ல உயர்ந்த அந்தஸ்தில வாழவும் நல்ல பொருளாதார வாழ்க்கையப் பெறவும் நானும் என் பெற்றோர்கள கிராமப்புறத்துல இருந்து நகரத்துக்குக் கூட்டிட்டு வரவும் விரும்புனேன். ஆனா நான் தேவன் மேல இருந்த விசுவாச பாதைய தேர்ந்தெடுத்தேன் அதோட அதுக்கு மேல பணத்தயும் பொருள் இன்பத்தயும் பின்தொடரல, அதனால நான் அவங்களுக்குக் கடன்பட்டதா உணர்ந்தேன். என்னோட அப்பாவோட வார்த்தைகள எதிர்கொண்டப்போ, எனக்கு எப்படி பதில் சொல்றதுன்னு தெரியல. என் கண்கள் கண்ணீரால நெறஞ்சுது, எனக்கு அவரப் பாக்கறதுக்கே தைரியமில்லாம இருந்துது. ஆனா என்னோட இதயத்துல, நான் சரியானத தேர்வு செஞ்சுருந்தேன்னு எனக்குத் தெரியும், ஏன்னா கடைசி நாட்களோட இரட்சகர் தோன்றி அவரோட கிரியைய செஞ்சுட்டிருக்காரு. இந்த இருண்ட பொல்லாத உலகத்துல இருந்து நம்மள இரட்சிக்க அவர் சத்தியத்த வெளிப்படுத்துறாரு, இரட்சிக்கப்படுவதுக்கும் தேவனோட ராஜ்யத்தில பிரவேசிக்கிறதுக்கும் இதுதான் ஒரே வழி. இது வாழ்நாள்ல ஒரு தடவ மட்டுந்தான் கெடைக்குற வாய்ப்பு. நான் மாம்ச இன்பத்துக்காக ஏங்குறதால அத எப்படி விட்டுட முடியும்? சத்தியத்தப் பின்தொடர்றதுல இருந்தும் சிருஷ்டியின் கடமைய நிறைவேத்துறதுல இருந்தும் வேலை சிக்கல்கள் என்னைத் தடுக்கறத என்னால எப்படி அனுமதிக்க முடியும்? நான் வேதனையில அமைதியா தேவன் கிட்ட ஜெபிச்சேன், அதோட என் இதயம் அலைக்கழிக்கப்படாமப் பாதுகாக்கும்படியா அவரிடம் கேட்டுக்கிட்டேன். நான் தேவனோட வார்த்தைகளப் பத்தி நெனச்சுப் பாத்தேன். “தேவன் இந்த உலகை சிருஷ்டித்து, அதில் மனிதனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஜீவனைக் கொடுத்தார். பின்பு, மனிதனுக்கு பெற்றோரும் உறவினர்களும் வந்தார்கள். அதன் பின், அவன் தனிமையாக இருக்கவில்லை. மனிதனுடைய கண்கள் இந்தப் பொருள் உலகத்தை முதன்முதலில் கவனித்ததிலிருந்தே, அவன் தேவனுடைய முன்குறித்தலுக்குள் இருக்க விதிக்கப்பட்டான். தேவனிடமிருந்து வரும் ஜீவ சுவாசம் அனைத்து ஜீவராசிகளையும் வளர்ந்து முதிர்ச்சியடையும் வரையிலும் ஆதரிக்கிறது. இந்த செயல்முறையின் போது, மனிதர்கள் தேவனுடைய பராமரிப்பில் வளர்ந்து வருவதை ஒருவரும் உணர்வதில்லை; மாறாக, தம் பெற்றோரின் அன்பான பராமரிப்பும் தம் ஜீவித உள்ளுணர்வும்தான் தம் வளர்ச்சியை வழிநடத்துகிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், மனிதனுக்கு அவனுடைய ஜீவனை வழங்கியது யார் என்றும் அது எங்கிருந்து வந்தது என்றும் தெரிவதில்லை. ஜீவனின் உள்ளுணர்வு எவ்வாறு அற்புதங்களை உருவாக்குகிறது என்பதும் தெரிவதில்லை. மனிதன் அறிந்ததெல்லாம்: அவனது ஜீவன் தொடர அடிப்படையாக இருக்கும் உணவும், அவனது இருப்புக்கான ஆதாரமான விடாமுயற்சியும், அவனது பிழைப்புக்கு மூலதனமான அவனது மனதில் உள்ள நம்பிக்கைகளுமே ஆகும். மனிதன் தேவனுடைய கிருபையையும் ஏற்பாட்டையும் முற்றிலுமாக மறந்துவிட்டான். அவனுக்கு தேவன் கொடுத்த ஜீவிதத்தை சுக்குநூறாக உடைக்கின்றான்…. தேவன் இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும் இந்த மனிதகுலத்திலுள்ள ஒருவர் கூட அவரை ஆராதிக்க தாங்களை ஈடுபடுத்துவதில்லை. தேவன் தாம் திட்டமிட்டபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ந்து மனிதன் மீது மட்டுமே கிரியை செய்கிறார். ஒரு நாள், மனிதன் தன் சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்து, வாழ்க்கையின் மதிப்பையும் அர்த்தத்தையும், மனிதனுக்காக தேவன் விலைக்கிரயம் செலுத்தி பெற்றுக் கொடுத்த எல்லாவற்றிற்கும், மனிதன் தன்னிடம் திரும்புவான் என்று காத்திருக்கும் அக்கறையையும் உணர்ந்து அவரிடம் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தேவன் இவ்வாறு செய்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). “நீ சத்தியத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக உன்னையே கொடுக்க வேண்டும், நீ சத்தியத்திற்காக அவமானத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்தை அதிகமாக ஆதாயம் செய்ய நீ அதிகத் துன்பங்களுக்குள்ளாக செல்ல வேண்டும். இதையே நீ செய்ய வேண்டும். அமைதியான குடும்ப ஜீவியத்தின் பொருட்டு நீ சத்தியத்தைத் தூக்கி எறியக்கூடாது, மேலும் உன் வாழ்க்கையின் கண்ணியத்தையும் நேர்மையையும் தற்காலிக இன்பங்களுக்காக இழந்துவிடக்கூடாது. நீ அழகானவை மற்றும் நன்மையானவை அனைத்தையும் பின்தொடர வேண்டும், மேலும் வாழ்க்கையில் அதிக அர்த்தமுள்ள ஒரு பாதையை நீ பின்தொடர வேண்டும். நீ அத்தகைய இழிவான ஜீவியம் நடத்தினால் மற்றும் எந்த நோக்கங்களையும் பின்பற்றவில்லை என்றால், நீ உன் வாழ்க்கையை வீணாக்குகிறாயல்லவா? அத்தகைய ஜீவிதத்திலிருந்து நீ என்ன ஆதாயம் செய்ய முடியும்? நீ ஒரு சத்தியத்திற்காக மாம்சத்தின் அனைத்து இன்பங்களையும் கைவிட வேண்டும், மேலும் ஒரு சிறிய இன்பத்திற்காக எல்லா சத்தியங்களையும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. இது போன்றவர்களுக்கு நேர்மையோ அல்லது கண்ணியமோ இருப்பதில்லை. அவர்கள் இருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”). தேவனோட வார்த்தைகள் என்னைப் பிரகாசிப்பிச்சுது. என்னோட பெத்தவங்க தான் என்னை வளர்த்தவங்க, நான் படிச்ச முடிக்கணுங்குறதுக்காக கஷ்டப்பட்டு சேமிச்சாங்க, அதனால நான் அவங்க சொல்றத கேக்காம, என்னோட கடமைக்காக என்னோட வேலைய விட்டுட்டா, நான் அவங்களுக்கு கடன்பட்டிருப்பேன், ஆனா என்னோட கருத்து முட்டாள்தனமானதாவும் கேலிக்குரியதாவும் இருந்துது. தேவன் ஒருவரே மனுஷ வாழ்க்கையோட ஆதாரம், நம்மோட எல்லாரோட வாழ்க்கையும் தேவன்கிட்ட இருந்துதான் வருது. நம்மகிட்ட இருக்கிறது எல்லாமே தேவனோட வழங்கள்ல இருந்தும் ஆசீர்வாதத்துல இருந்தும் வருது. தேவன் இல்லாம, நமக்கு எதுவும் இருக்காது. என்னோட பெற்றோர் என்னைப் பெரியவனா வளத்தது தேவனோட ராஜரீக ஏற்பாடா இருந்துது. நான் தேவனுக்கு நன்றி உள்ளவனா இருந்து தேவனோட அன்ப திருப்பி செலுத்த வேண்டியிருந்துது. தேவனத் திருப்திப்படுத்த ஒரு சிருஷ்டியா என்னோட கடமைய என்னால நிறைவேத்த முடியலைன்னா, எனக்கு ஒரு நிலையான வேலை இருந்தாலும் என் குடும்பத்தோட நல்ல பொருள் வாழ்க்கைய அனுபவிச்சாலும், அதுக்கு எந்த மதிப்போ அல்லது அர்த்தமோ இருக்காது. இந்தத் தற்காலிக இன்பங்களால சத்தியத்தப் புரிஞ்சுகிட்டு ஜீவன அடையறுதுக்கு எனக்கு உதவ முடியாது. அதோட, தேவனைப் பொறுத்தவரை, நான் அவருக்கு எதிரா கலகம் பண்றவனா இருப்பேன், அதோட அவரோட அங்கீகாரத்தயும் பெற மாட்டேன். சத்தியத்த அடைய நான் கஷ்டப்படவும் வேதனைக்குட்படவும் வேண்டியிருந்தது. இந்த மாதிரி மட்டுந்தான் என்னால ஒழுக்கத்தோடயும் கண்ணியத்தோடயும் வாழ முடியும், அப்பதான் என்னால தேவனோட அங்கீகாரத்தப் பெற முடியும். இந்த நேரத்துல நான் அதப் பத்தி எவ்ளோ அதிகமா நெனச்சனோ, அவ்ளோ பெலனா உணர்ந்தேன். அதனால தேவனோட தோற்றத்தயும் கிரியயயும் பத்தி நான் மறுபடியும் என்னோட அப்பா கிட்ட சாட்சி சொன்னேன், அதோட தேவன் மேல விசுவாசமில்லாம எல்லா நாட்டங்களும் வெறுமையானது, அதுக்கு எந்த மதிப்போ அல்லது அர்த்தமோ இல்லன்னு அவர்கிட்ட சொன்னேன். இப்போ, சத்தியத்த வெளிப்படுத்துவும் ஜனங்கள இரட்சிக்கவும் இரட்சகர் வந்திருக்காரு, தேவன விசுவாசிச்சு, சத்தியத்தப் பின்தொடர்ந்து, பாவத்த விட்டுட்டு, உண்மையா தேவன்கிட்ட மனந்திரும்பறது மூலமா மட்டுந்தான் ஜனங்களால பேரழிவுகள்ல இருந்து தப்பிச்சு தேவனோட ராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்க முடியும். உலகத்தப் பின்தொடர்ற எல்லாரும், அவங்களோட பொருளாதார வாழ்க்க எவ்ளோ வளமானதா இருந்தாலும், கடைசியில பேரழிவுகள்ல அழிஞ்சுபோய் தண்டிக்கப்படுவாங்கன்னு அவர்கிட்ட சொன்னேன். ஆனா நான் என்ன சொன்னாலும், நான் ராஜினாமா பண்றத என் அப்பா ஏத்துக்கல, கடைசில அவர் கோபத்தோட அங்கிருந்து போயிட்டாரு.

அதுக்கப்பறமா, என்னை சம்மதிக்க வைக்க வருமாறு என்னோட சொந்தக்காரங்கள என்னோட அப்பா கேட்டுக்கிட்டாரு. ரயில்வே அலுவலகத்தில ஒரு வேலைங்கறது பரிசாலயும் பணத்தாலயும் நேர்மையற்ற முறையில வாங்க முடியாத ஒண்ணுன்னும், அதோட என்னைப் பெத்தவங்க என்ன வீணா வளத்திருந்தாங்கன்னும் அவங்க எல்லாரும் சொன்னாங்க. என்னோட குடும்பத்தாரோட குற்றச்சாட்டுகள கேட்டப்போ, சாத்தான் என்னைத் தாக்கவும் தேவனுக்காகக் கீழ்ப்படுத்துறதுல இருந்தும் ஒப்புக்கொடுக்கறதுல இருந்தும் என்னைத் தடுக்கவும் என்னோட சொந்தக்காரங்களப் பயன்படுத்திட்டு இருந்தான்ங்கறது எனக்குத் தெரியும். நான் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நெனச்சுப் பாத்தேன், “நீ என் தைரியத்தை உனக்குள் கொண்டிருக்க வேண்டும், மேலும் விசுவாசிக்காத உறவினர்களை எதிர்கொள்ளும்போது உனக்குக் கொள்கைகள் இருக்க வேண்டும். என் பொருட்டு, நீ எந்த இருண்ட வல்லமைகளுக்கும் அடிபணியக்கூடாது. பரிபூரணமான வழியில் நடக்க என் ஞானத்தைச் சார்ந்து கொள்; சாத்தானின் எந்த சதித்திட்டங்களும் ஆட்கொள்ள அனுமதிக்காதே. உன் இருதயத்தை எனக்கு முன்பாக வைத்திருக்க, உன்னுடைய எல்லா முயற்சிகளையும் எடு, நான் உன்னை ஆறுதல்படுத்தி உனக்குச் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தருவேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 10”). தேவனோட வார்த்தைகள ஆழ்ந்து சிந்திச்சதுக்கப்புறம், நான் நம்பிக்கையா உணர்ந்தேன், என்னோட குடும்பத்தார்கிட்ட, “இன்னைக்கு, ஜனங்க குறிப்பா பணத்தயும் புகழயும் அந்தஸ்தயும் ஆராதிக்கிறாங்க. இந்த விஷயங்களுக்காக ஜனங்க போராடுறாங்க, சூழ்ச்சி செய்யறாங்க, ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக்கிறாங்க, அதோட கணவன்மார்களும் மனைவிமார்களும் ஒருத்தருக்கொருத்தர் ஏமாத்தி துரோகம் கூட செஞ்சுக்குறாங்க. எல்லாரும் இப்படித்தான் வாழ்றாங்க, அதனால நல்ல பாதுகாப்பான வேலைகள் கிடைச்சாக்கூட, நல்ல பொருள் வாழ்க்கை இருந்தாக்கூட, மகிழ்ச்சியா இருக்கறது உண்மையாவே சாத்தியமா?” அப்படின்னு சொல்றதுக்கு எனக்கு தைரியம் வந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “எல்லாவிதமான பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்; எல்லா நாடுகளும், எல்லா இடங்களும் பேரிடர்களை அனுபவிக்கும்: கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் நடப்பதில்லை, அவை ஓரிரு நாட்களுக்குள் முடிவடைவதுமில்லை; மாறாக அவை இன்னும் அதிகதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்து, மேலும் மேலும் கடுமையானதாகிவிடும். இந்த நேரத்தில் எல்லா விதமான பூச்சிகளால் உண்டாகும் கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பும், நரமாமிசத்தை உண்ணும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நிகழும். இதுவே எல்லா தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 65”). தேவனோட வார்த்தைகள பயன்படுத்தி, நான் என் ஐக்கியத்தத் தொடர்ந்தேன், “இப்போ, பேரழிவுகள் அதிகரிச்சுட்டு வருது. சர்வவல்லமையுள்ள தேவன பின்பற்றுறது மட்டுந்தான் நம்மள பேரழிவுகள்ல இருந்து காப்பாத்த முடியும். தேவன் மேல இருந்த என் விசுவாசம், சுவிசேஷத்தப் பரப்பறது, என் கடமைய செய்யறதுங்கறது என்னோட வேலைய விட ஆயிரம் அல்லது பத்தாயிரம் மடங்கு ரொம்ப முக்கியமானது. நீங்க நெனைக்குற மாதிரி, தேவன் மேல இருக்குற என்னோட விசுவாசம் முட்டாள்தனமானது இல்ல. நோவா சுவிசேஷத்தப் பிரசங்கிச்சப்போ, ஜனங்க அவன் ஒரு பைத்தியக்காரன்னு சொன்னாங்க, ஆனா வெள்ளம் வந்ததும், முழு மனுஷ இனத்திலும், எட்டு பேரிருந்த நோவாவோட குடும்பம் மட்டுமே தப்பிப் பிழச்சுது. நோவா பைத்தியமாவோ அல்லது முட்டாளாவோ இருக்கல. அவன் ரொம்ப ஞானமுள்ளவனாவும் தேவனால ரொம்பவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாவும் இருந்தான். இன்னைக்கு, மனுஷகுலத்தோட பொல்லாப்பும் சீர்கேடும் தேவன் இந்த துன்மார்க்கமான சீர்கேடான இனத்த அழிச்சுருவாருங்குற அளவ எட்டியிருக்கு, சர்வவல்லமையுள்ள தேவன ஆராதிக்கிறது மூலமா மட்டுந்தான் நம்மால பிழைக்க முடியும். நீங்களும் சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிப்பீங்கங்கற நம்பிக்கையில இந்த அற்புதமான செய்திய இன்னைக்கு நான் உங்களுக்குச் சொல்றேன். என்னை வற்புறுத்த முயற்சிக்காதீங்க, ஏன்னா நான் ஏற்கனவே முடிவு செஞ்சுட்டேன். நான் என் வாழ்நாள் முழுவதும் சர்வவல்லமையுள்ள தேவனயே பின்பற்றுவேன்.” நான் இதச் சொன்னதும் கர்த்தர விசுவாசிக்கிற என்னோட அத்தை, “தேவனுக்கு நன்றி! நீ தேவன விசுவாசிக்கிறது நல்லது, தேவனோட சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறதத் தேர்ந்தெடுக்கறது தேவனுக்குப் பிரியமானது” அப்படின்னு சொன்னாங்க. அவங்க மத்தவங்க கிட்ட, “இன்னிக்கு அவன் தேர்ந்தெடுக்குற பாதை சரியான பாதை. பணக்காரனா இருக்கறது முக்கியமில்ல, வாழ்க்க தான் முக்கியம். அவனோட விருப்பத்துக்கு நாம மதிப்பளிக்கணும்” அப்படின்னு சொன்னாங்க. அதுக்கப்புறம், மத்தவங்க எதுவும் பேசல. இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சிய கொடுத்துது. நான் என் நிலைப்பாட்டுல நின்னு, தேவனத் திருப்திப்படுத்துறத தேர்ந்தெடுத்தப்போ, என்னோட குடும்பம் வெக்கப்பட்டு என்னை வற்புறுத்துறத நிறுத்துனாங்க. அப்ப இருந்து, என்னைச் சுத்தியிருந்த ஜனங்களாலயும் விஷயங்களாலயும் நான் அதுக்கு மேல கட்டுப்படுத்தப்படல, என்னோட கடமையயும் முழு நேரமா என்னால செய்ய முடியுது.

அதுக்கப்புறமா, கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நெறைய பேர் ஏத்துக்கறதப் பாத்து, என்னோட இதயத்தில விவரிக்க முடியாத மகிழ்ச்சிய உணர்றேன். தேவனுக்காக உண்மையா ஏங்குறவங்கள மறுபடியும் அவரோட வீட்டுக்குள்ள கொண்டு வர்றது ரொம்ப அர்த்தமுள்ள ஒரு விஷயம், அதோட தேவனுக்கு ரொம்ப ஆறுதலான விஷயம். எனது வேலைய விட்டுட்டு தேவன் மேல இருக்குற விசுவாசப் பாதையில நடக்கறத நெனச்சுப் பாத்தப்போ, நான் என் வாழ்க்கையில செஞ்ச புத்திசாலித்தனமான தேர்வு இதுவாத்தான் இருந்துதுன்னு எனக்குத் தெரியும். சுவிசேஷத்தப் பிரசங்கிக்கறதுக்கும் தேவனுக்கு சாட்சி கொடுக்கறதுக்கும் என் வாழ்க்கைய ஒப்புக்கொடுக்கவும் அர்ப்பணிக்கவும் முடிஞ்சது என்னால செய்ய முடிஞ்ச எல்லாத்தையும் விட ரொம்ப மதிப்புமிக்கதாவும் அர்த்தமுள்ளதாவும் இருக்கு.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

என் குடும்பத்தின் துன்புறுத்தலை நான் எப்படி எதிர்கொண்டேன்

நான் சின்னவளா இருந்தப்போ, என் அம்மா அடிக்கடி: “ஒரு பொண்ணுக்கு, ஒரு நல்ல கணவனும் ஒரு இணக்கமான குடும்பம் அமையறத விட சிறந்த வாழ்க்க எதுவும்...

மனம்திறந்து பேசப் பயப்படுவதற்குப் பின்னால் இருப்பது என்ன

2020 ஆம் வருஷம் மார்ச் மாதம் நான் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டு, சீக்கிரமா ஒரு கடமயச் செஞ்சேன். கொஞ்ச...

Leave a Reply