துரதிர்ஷ்டத்தின் மூலம் ஆசீர்வாதம் பெறுதல்

மார்ச் 17, 2022

தூ ஜுவான், ஜப்பான்

சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தான் நடந்து சென்ற பாதையை ஒருவர் திரும்பிப் பார்க்கும் போது, அவருடைய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர் நினைவுபடுத்தும்போது, ஒவ்வொரு அடியிலும், ஒருவருடைய பயணம் கடினமானதாகவோ அல்லது சுமூகமாகவோ இருந்தாலும், தேவன் அவருடைய பாதையை வழிநடத்தி, அதைத் திட்டமிடுவதை அவர் காண்கிறார். தேவனுடைய உன்னிப்பான ஏற்பாடுகள், அவருடைய கவனமான திட்டமிடல், ஒருவரை அறியாமல், இன்று வரை வழிநடத்தியது. சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை ஏற்றுக்கொள்வதும், அவருடைய இரட்சிப்பைப் பெறுவதும் எவ்வளவு பெரிய செல்வம்! … ஒருவரிடம் தேவன் இல்லாத போது, அவர் தேவனைக் காணமுடியாத போது, தேவனுடைய சர்வவல்லமையை அவர் தெளிவாக அடையாளம் காணமுடியாத போது, ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும். ஒருவர் எங்கிருந்தாலும், அவருடைய வேலை எதுவாக இருந்தாலும், அவருடைய ஜீவித வழிமுறையும், அவர் இலக்குகளைப் பின்பற்றுவதும், முடிவில்லாத மனவருத்தம் மற்றும் விடுதலையற்ற துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டு வருவதில்லை, அதாவது அவரால் அவருடைய கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்கும். ஒருவர் சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை ஏற்றுக் கொண்டு, அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து, உண்மையான மனித ஜீவிதத்தைத் தேடினால் மட்டுமே, ஒருவர் படிப்படியாக எல்லா மனவருத்தம் மற்றும் துன்பத்திலிருந்து விடுபடத் தொடங்குவார் மற்றும் ஜீவிதத்தின் எல்லா வெறுமையிலிருந்தும் விடுபடுவார்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனின் இந்த வார்த்தைகள் என் சொந்த வாழ்க்கையின் துல்லியமான சித்தரிப்பாக இருப்பதால், அவை உண்மையில் என்னைத் நெகிழச் செய்கின்றன.

துரதிர்ஷ்டத்தின் மூலம் ஆசீர்வாதம் பெறுதல்

நான் ஒரு ஏழை கிராமப்புறக் குடும்பத்தில் பிறந்தேன், என் வாழ்நாள் முழுவதும் ஜனங்கள் என்னை இழிவாகப் பார்த்தனர். என் குடும்பம் வறுமையில் இருந்தது, சில வேளைகளில் அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் என்று எனக்குத் தெரியாது, நான் எப்போதும் என் சகோதரி அணிந்து அளிக்கும் பழைய உடைகளையே அணிந்திருந்தேன். அந்த உடைகள் என் மீதுதொங்கிக்கொண்டு, பெரியதாக இருக்கும். என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் என்னைக் கேலி செய்தனர், யாரும் என்னுடன் பழக விரும்பவில்லை. எனது குழந்தை பருவம் உண்மையில் வேதனை மிகுந்ததாக இருந்தது. அப்போதிருந்து, நான் முடிவு செய்தேன்: நான் வளர்ந்ததும், நான் நிச்சயமாக நிறைய பணம் சம்பாதிக்கப் போகிறேன், ஒரு நல்ல வாழ்க்கையை வாழப் போகிறேன், யாரும் என்னை ஏளனமாகப் பார்க்க மாட்டார்கள். என் குடும்பத்திடம் பணம் இல்லாததால், நான் இளையோர் உயர்நிலைப் பள்ளி முடிப்பதற்குள், ஊரிலுள்ள மருந்து தொழிற்சாலையில் வேலைக்குச் செல்ல பள்ளியை விட்டு வெளியேறி வேண்டியிருந்தது. நான் இரவு 10 மணி வரை அதிக நேரம் வேலை செய்வேன், அதனால் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க முடிந்தது. என் மூத்த சகோதரி ஐந்தே நாட்களில் காய்கறிகளை விற்பதன் மூலம் எனது ஒரு மாத ஊதியத்தைப் பெற்றார் எனப் பின்னர் அறிந்தேன். எனவே நான் உடனடியாக மருந்து தொழிற்சாலையில் வேலையை விட்டுவிட்டு காய்கறி விற்கும் வேலைக்குச் சென்றேன். திருமணமான பிறகு, நானும் என் கணவரும் ஒரு உணவகத்தைத் திறந்தோம். உணவகத்தை நடத்துவன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் எனவும், அதன் பின்னர் வசதியான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழலாம் என்றும், பிறர் பொறாமைப்படும் வகையிலும் பெருமையாக நினைக்கும் வகையிலும் வாழலாம் என்றும் நினைத்தேன். ஆனால் அந்த வியாபாரத்தில் போட்டி கடுமையாக இருந்தது. பணத்தை சேமிக்க வேண்டும் என்பதால் ஒரே ஒரு உதவியாளை மட்டுமே நாங்கள் வேலைக்கு அமர்த்தினோம். சமையலறைக்கும் சாப்பாட்டுப் பகுதிக்கும் இடையில் ஓடி ஓடி நானே எல்லா வேலைகளையும் செய்தேன். சில நேரங்களில் நான் நிற்கவும் கூட முடியாத அளவுக்கு மிகவும் சோர்வாக இருந்தேன். சில அரசு அதிகாரிகள் வருவார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் பணம் செலுத்தமாட்டார்கள், பின்னர் அனைத்து வகையான அபராதங்களும் வரிகளும் செலுத்த வேண்டியிருந்தன. சில நேரங்களில் அவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தை பயன்படுத்தி எங்களுக்கு அபராதம் விதித்து, ஒரு நாள் சம்பளம் முழுவதையும் வாங்கிச் செல்வார்கள். இது என்னை மிகவும் கோபப்படுத்தியது, ஆனால் சீனாவில் இது குறித்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் எப்போதும் அமைதியாகத்தான் இருக்க வேண்டியதாக இருந்தது. வைத்திருக்க வேண்டும். நாங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதிக பணம் சம்பாதிக்க முடியவில்லை. நாங்கள் வியாபாரம் தொடங்கிய சிறிது காலத்தில், “நான் எப்போது நிறைய பணத்துடன் நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்வேன்?” என வியாபாரத்தைத் தொடங்கிய சொற்ப நாள் கழித்து நான் வருந்தத் தொடங்கினேன்.

சீனாவில் பத்து நாள் வேலையில் கிடைக்கும் சம்பளத்தை ஜப்பானில் ஒரு நாள் வேலையில் மக்கள் சம்பாதிக்கலாம் என 2008 ஆம் ஆண்டில் ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். இதைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். இறுதியாக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பைக் கண்டுபிடித்ததாக நான் நினைத்தேன். ஜப்பானுக்கு செல்வதற்கு இடைத்தரகரின் கட்டணம் அதிகமாக இருந்தது, ஆனால் “முட்டைகளை உடைக்காமல் ஆம்லெட் தயாரிக்க முடியாது. ஜப்பானில் எங்களுக்கு வேலை கிடைத்த பின்னர், அந்த பணத்தை விரைவாக திரும்பப் பெற்றுவிடலாம்” என நான் நினைத்தேன். நானும் என் கணவரும் உடனே ஜப்பான் சென்று அந்தக் கனவை நனவாக்க உடனடியாக ஜப்பான் செல்ல முடிவு செய்தோம். அங்கு சென்றவுடன், நாங்கள் தினமும் 13-14 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் கடுமையாகச் சோர்வடைந்தோம். வேலைக்குப் பிறகு நாங்கள் அப்படியே படுத்து ஓய்வெடுக்கவே விரும்பினோம். நாங்கள் சாப்பிட விரும்பவில்லை. என் கீழ் முதுகு எப்போதும் வலித்துக் கொண்டே இருந்தது. ஒரு மருத்துவரைச் சென்று பார்ப்பதற்கு என்னிடம் வசதியில்லை, எனவே அதனை சமாளிப்பதற்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டேன். நான் வலியால் துன்புற்றது மட்டுமல்ல, என் முதலாளி என்னைத் திட்டினார், என் சக ஊழியர்கள் என்னைக் கொடுமைப்படுத்தினர். ஒரு முறை, நான் வேலையில் புதிதாக சேர்ந்திருந்த போது சிறிய தவறு ஒன்றைச் செய்துவிட்டேன். என் முதலாளி என்னைக் மிகக் கடுமையாகத் நடந்து கொண்டார், நான் மிகவும் வருந்தி அழுதேன். ஆனால் வேறு என்ன என்னால் செய்ய முடியும்? தொடர்ந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால், என் உணர்வுகளைக் கட்டுப்பத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது. “இப்போது கடினமாக இருக்கிறது, ஆனால் நான் இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதித்து விட்டால், அனைவரின் முன்பும் நிமிர்ந்து நிற்க முடியும். நான் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என மீண்டும் மீண்டும் என்னிடம் நானே கூறிக்கொண்டேன். அதனால், நான் தினமும் ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல வேலை செய்ய ஒவ்வொரு நாளும் என்னை நானே உந்தித் தள்ளிக் கொண்டே இருந்தேன். எதிர்பாராத விதமாக, 2015 இல், கடுமையான வேலைகளால் சோர்ந்து போய் காரணமாக நான் நோய்வாய்ப்பட்டேன். பரிசோதனைக்காக நான் ஒரு மருத்துவமனைக்குச் சென்ற போது, எனது இடுப்பு எலும்பு வட்டு நழுவியிருப்பதாகவும், ஒரு நரம்பின் மீது அழுத்தம் கொடுப்பதாகவும், நான் தொடர்ந்து வேலை செய்தால், படுத்த படுக்கை ஆகிவிடுவேன் எனவும் என்னால் என்னைக் கவனித்துக் கொள்ள முடியாது எனவும் மருத்துவர் தெரிவித்தார். இது இடி விழுந்தது போல என்னைத் தாக்கியது, உடனடியாக நான் மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். அப்போது தான் என் வாழ்க்கை முன்னேற்றமடைந்து கொண்டிருந்தது. நான் என் கனவை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு மாறாக, நான் காயமடைந்தேன். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, “நான் இன்னும் இளமையாக இருக்கிறேன். பற்களைக் கடித்துப் பொறுத்துக் கொண்டால், நான் இதனைச் கடந்து விட முடியும். இப்போது கொஞ்சம் பணம் சம்பாதிக்காமல், வெறுங்கைகளுடன் சீனாவுக்குத் திரும்பினால், அது அவமானமாக இருக்காதா?” என எண்ணினேன். அதனால், பற்களைக் கடித்துக் கொண்டு, காயமடைந்த என் உடலை வருத்தி வேலைக்குச் சென்று கொண்டே இருந்தேன். வலி மோசமாகும்போது, மருந்து பட்டியை ஒட்டிக்கொண்டு தொடர்ந்து போராடினேன். முழு நாளும் வேலை செய்த பிறகு, இரவில் வலி மிகவும் மோசமாக இருந்ததால் என்னால் உறங்க முடியவில்லை. என்னால் திரும்பிப் படுக்கக்கூட முடியவில்லை. வெகுசில நாட்களுக்குப் பின்னர், என் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு என்னால் படுக்கையில் இருந்து தவழ்ந்து எழவும் முடியவில்லை.

படுக்கையில் இருந்தபோது, நான் மிகவும் நம்பிக்கையற்றும் தனிமையாகவும் உணர்ந்தேன், “இந்தச் சிறிய வயதில் நான் எப்படிஇந்த நிலைக்கு உள்ளானேன்? என் காலம் இப்படி படுக்கையிலேயே முடிந்து விடுமா?” என வியப்படைந்தேன். என்னால் வெளிப்படுத்த முடியாத ஒரு வகையான துக்கத்தை நான் உணர்ந்தேன், “மனிதன் எதற்காக வாழ்கிறான்? உண்மையில் பணம் சம்பாதித்து மற்றவர்களை விட தலைநிமிர்ந்து உயர்வாக நிற்பதற்காகவா? உண்மையில் பணம் சந்தோஷத்தைத் தருகிறதா? நான் பணத்திற்காக உடல்நிலை மோசமாகும் அளவிற்கு உழைப்பது உண்மையில் மதிக்கத்தக்கதா?” என எண்ணினேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாகக் கடுமையாக வேலை செய்த நான், தொழிற்சாலையில் வேலை செய்தேன், காய்கறிகள் விற்றேன், உணவகம் நடத்தினேன், ஜப்பானுக்கு வேலை செய்ய வந்தேன். நான் இந்த காலத்தில் கொஞ்சம் பணம் சம்பாதித்தேன், ஆனால் நான் மிகவும் துன்பத்திற்கு உள்ளானேன். முதலில், ஜப்பானுக்கு வந்தால் என் கனவு நனவாகும், ஒரே இரவில் நான் ஐஸ்வரியவானாவேன் அனைவரும் பொறாமைப்படக்கூடிய வாழ்க்கையை வாழ்வேன் என முதலில் நான் எண்ணினேன். ஆனால் அதற்குப் பதிலாக, நான் படுத்தபடுக்கையாகி, என் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் செலவிடும்படி ஆகி விட்டது. அந்த எண்ணத்தில், குறிப்பாக கொஞ்சம் பணம் சம்பாதிப்பதற்காகவும் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கவும் என்னை நானே மிகவும் வருத்திக் கொண்டு ஓடியிருப்பதாக நினைத்து வருந்தினேன். வேதனையாகவும் துன்பமாகவும் சோகமாகவும் உணர்ந்தேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. “பரலோகங்களே, என்னைக் காப்பாற்றுங்கள்! என் வாழ்க்கை ஏன் மிகவும் சோர்வாக, கடினமாக இருக்கிறது?” என என் மனதுக்குள் சத்தமிட்டுக் கதறினேன்.

நான் உதவி அற்றவளாகவும் வேதனையுடனும் இருந்த அந்த நாட்களில் தான் தேவனின் கடைசி கால இரட்சிப்பு எனக்குக் கிடைத்தது. தற்செயலாக, தேவனின் மீது விசுவாசமுள்ள இரண்டு சகோதரிகளை நான் சந்தித்தேன். அவர்களுடன் சேர்ந்து தேவனின் வார்த்தைகளைப் படிப்பதன் மூலமும், சத்தியத்தின் மீதான அவர்களின் ஐக்கியத்தைக் கேட்பதன் மூலமும், அனைத்தும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை, தேவனே முழு பிரபஞ்சத்தையும் ஆளுகிறார், அனைவரின் எதிர்காலமும் தேவனின் கைகளில் உள்ளது, காலம் காலமாக தேவன் மனிதகுலத்தை வழிநடத்தி வருகிறார், நிலைக்கச் செய்து வருகிறார், எப்போதும் மனிதகுலத்தை கவனித்தும் பாதுகாத்தும் வருகிறார் எனப் புரிந்து கொண்டேன். ஆனாலும் இன்னும் நான் ஏதோ குழப்பத்தில் தான் இருந்தேன். நமது எதிர்காலம் தேவனால் கட்டுப்படுத்தப்படுகிறது, வழிநெடுகிலும் தேவன் நம்மை வழிநடத்தியும் பாதுகாத்தும் வருகிறார் என்றால், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பிறகு நாம் ஏன் இன்னும் நோயிலும் வலியிலும் அவதியுறுகிறோம்? வாழ்க்கை ஏன் மிகவும் கடினமாக உள்ளது? உண்மையில் இந்த துன்பம் அனைத்தும் எங்கிருந்து வருகிறது? இது குறித்து அந்தச் சகோதரிகளிடம் கேட்டேன்.

சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளில் சிலவற்றைச் சகோதரி கின் அவர்கள் எனக்காக வாசித்தார்: “மனிதர்கள் அனுபவிக்கும், பிறப்பு, மரணம், வியாதி மற்றும் முதுமை ஆகியவற்றால் வரும் ஜீவகாலம் முழுவதற்குமான துன்பத்தின் மூலக்காரணம் என்னவாக இருக்கிறது? இந்த விஷயங்களை ஜனங்கள் கொண்டிருக்கக் காரணம் என்னவாக இருந்தது? முதன்முதலில் சிருஷ்டிக்கப்பட்டபோது மனிதர்கள் அவற்றைக் கொண்டிருக்கவில்லை, அல்லவா? அப்படியானால், இவை எங்கிருந்து வந்தன? மனிதர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டு, அவர்களின் மாம்சம் சீர்கெட்டுப்போன பிறகு, அவை உருவாகின. மனித மாம்சத்தின் வேதனையும், அதன் துன்பங்களும், வெறுமையும், மனித உலகின் மிகவும் துயர் மிகுந்த விவகாரங்களும், சாத்தான் மனிதகுலத்தை சீர்கெட்டுப் போகச் செய்தவுடனேயே வந்துவிட்டன. மனிதர்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பிறகு, அது அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, அவர்கள் மேன்மேலும் சீரழிந்தனர். மனிதகுலத்தின் வியாதிகள் மேன்மேலும் தீவிரமாகின. அவர்களின் துன்பம் மேன்மேலும் கடுமையானது. மனித உலகின் வெறுமையையும் சோகத்தையும் ஜனங்கள் உணர்ந்தனர், ஜனங்களுக்கு உயிர்வாழ்வதற்கு வழி இல்லாமல் போனது, மேலும் அவர்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லாமல் போனது. இவ்வாறு, இந்தத் துன்பம் சாத்தானால் மனிதர்கள் மீது கொண்டுவரப்பட்டது(“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “உலகத் துன்பங்களை தேவனின் ருசிபார்த்தலின் முக்கியத்துவம்”). அவர் பின்னர் இந்த ஐக்கியத்தைப் பகிர்ந்தார்: “தேவன் மனிதனைப் படைத்தபோது, அவர்கள் தேவனால் துணை செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டனர். அங்கு பிறப்பு, முதுமை, பிணி அல்லது இறப்பு என்பது இல்லை, மேலும், கவலைகள் அல்லது தொந்தரவுகள் என்பதும் இல்லை. மனிதன் ஏதேன் தோட்டத்தில் கவலையின்றி வாழ்ந்தான், அனுபவிப்பதற்காகத் தேவனால் அருளப்பட்ட அனைத்தையும் அனுபவித்து வந்தான். தேவனின் வழிகாட்டுதலின் கீழ் அவர்கள் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். ஆனால் பின்னர் மனிதன் சாத்தானால் ஏமாற்றப்பட்டுச் சீர்கெடுக்கப்பட்டான். அவர்கள் அதன் பொய்களைநம்பி, பாவம் செய்து, தேவனுக்குத் துரோகம் செய்தனர், மேலும் அதனால் தேவனின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்தனர். அப்போதிருந்து சாத்தானின் ஆதிக்க வரம்பின் கீழ் நாம் ஜீவித்து வருகிறோம், மேலும் அந்தகாரத்தினுள் விழுந்துள்ளோம். உழைப்பு, கவலை, வேதனை மற்றும் துக்கத்தின் ஜீவியத்தை நாம் ஜீவித்து வருகிறோம். ஆயிரம் ஆண்டுககளாக, பொருள்முதல்வாதம், நாத்திகம் மற்றும் பரிணாமம் போன்ற மதத்துக்கு எதிரான கொள்கைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் மற்றும் பிரபலமான மற்றும் பெரிய நபர்கள் மூலம் பரப்பப்பட்ட ‘தேவன் என்று ஒருவரும் இல்லை,’ ‘உன் விதி உன் கையில் உள்ளது,’ ‘ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்,’ ‘மற்றவர்களை விட சிறந்தவனாய் இரு, உன் முன்னோர்களுக்கு மரியாதையை ஏற்படுத்து,’ மற்றும் ‘ஐசுவரியத்தை அடைய மனுஷன் எதையும் செய்வான்,’ ‘பணம் உலகைச் சுற்ற வைக்கிறது,’ மற்றும் பல முதுமொழிகளை, ஜனங்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களுக்குத் தீங்கு செய்வதற்காகப் சாத்தான் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளது. இந்தச் சாத்தானிய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்ட பின்னர், ஜனங்கள் தேவனின் இருப்பையும் ஆட்சியையும் மறுத்து, தேவனிடமிருந்து தங்களைத் தொலைவுபடுத்தி அவருக்குத் துரோகம் செய்கின்றனர். அவர்கள் மிகவும் அகந்தையுள்ளவர்களாகவும் இறுமாப்புள்ளவர்களாகவும், மிகவும் சுயநலமுடையவர்களாகவும், தந்திரமுள்ளவர்களாகவும், தீங்கிழைப்பவர்களாகவும் மாறியுள்ளனர். ஜனங்கள் புகழ், அந்தஸ்து மற்றும் செல்வத்திற்காகச் சூழ்ச்சியில், சண்டையில் ஈடுபட்டு மற்றும் கொலை செய்கின்றனர். கணவர்கள் மற்றும் மனைவிகள், நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றித் துரோகம் செய்கின்றனர், தந்தைகள் மற்றும் மகன்கள் கூட ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்புகின்றனர், மேலும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்கின்றனர். நாம் நமது இயல்பான மனிதத்தன்மையை முற்றிலுமாக இழந்து, மனிதர்களாக ஜீவிப்பதற்குப் பதிலாக மிருகங்களைப் போல் ஜீவிக்கிறோம். சாத்தானின் மூட நம்பிக்கைகள் ஜனங்கள் பலருக்குத் தீங்கு செய்துள்ளன. அவர்கள் தங்களின் சொந்தத் தலைவிதியைக் கட்டுப்படுத்த முடியும் அல்லது மாற்ற முடியும் என்று நினைத்து, அதை எதிர்த்துப் போராடுகின்றனர். அவர்களின் ஜீவியம் முழுவதும் அவர்கள் போராடுகிறார்கள், மேலும் அவர்கள் அவர்களின் தலைவிதியை மாற்றத் தவறுவதோடு மட்டுமல்லாமல், அந்த முயற்சியில் தங்களைத் தாங்களே நாசம் செய்துகொள்கிறார்கள். மனுக்குலமானது சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்டுச் சீர்கெடுக்கப்படுகிறது. நாம் நாள் முழுவதும் உழைக்கிறோம், உடல் மற்றும் உள்ளத்தில் வேதனைப்படுகிறோம். அனைத்து வகையான பிணிகளும் துன்பங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த உலகில் மனிதனின் ஜீவியம் மிகவும் கடினமானது மற்றும் சோர்வடையச்செய்வது என்று இந்தத் துன்பங்கள் மற்றும் பதற்றங்கள் நம்மை உணரச்செய்கின்றன. சாத்தான் மனிதனைச் சீர்கெடுத்த பின்னர் தான் இவை அனைத்தும் நிகழ்ந்தன, சாத்தான் தான் நமக்குத் தீங்கு செய்கிறான், மேலும் இது தான் மனுக்குலம் தேவனை மறுத்து, தேவனுக்குத் துரோகம் செய்கிற கசப்பு மிக்க கனியும் ஆகும்.”

சகோதரி கின் அவர்களின் ஐக்கியம், மனிதனின் பிணிகள் சாத்தானிடமிருந்து வந்தன என்பதை எனக்குக் காட்டியது. சாத்தான் மனிதனைச் சீர்கெடுத்த பின்னர், நாம் தேவனின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்தோம், அனைத்து வகையான பிணி மற்றும் வலி உருவாகியது. சகோதரி பின்னர் இதைக் கூறினார்: “மனுக்குலம் சாத்தானால் ஆட்டுவிக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதைப் பார்ப்பது தேவனால் தாங்க முடியவில்லை. மனுக்குலத்தை மீட்டு இரட்சிப்பதற்காக அவர் இருமுறை மனுவுருவானார். முதல் முறை, அவர் கர்த்தராகிய இயேசுவாக மனுவுருவெடுத்தார், பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காக மனுக்குலத்திற்கான ஒரு பாவப்பலியாக சிலுவையில் அறையப்பட்டார். கர்த்தராகிய இயேசுவை விசுவாசிப்பதன் மூலம், நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, ஆனால் நம் பாவமிக்க சுபாவம் அப்படியே உள்ளது மேலும் நாம் இன்னும் பாவத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை. சத்தியத்தை வெளிப்படுத்தி, நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பின் கிரியையைச் செய்வதற்காகக் கடைசி நாட்களில் மனிதனின் மத்தியில் தேவன் மீண்டும் மனுவுருவெடுத்துள்ளார், அதனால் இறுதியில் தேவனின் ராஜ்யத்திற்குள் நாம் அழைத்துச்செல்லப்படும் வரை, நாம் சாத்தானிடமிருந்து இரட்சிக்கப்பட்டு, பாவத்தைத் தூக்கி எறிந்து, சுத்திகரிக்கப்படுவோம். தேவனின் வார்த்தைகளை மேலும் வாசிப்பதன் மூலம், நம்மால் சத்தியத்தைப் புரிந்துகொண்டு பகுத்தறிவைப் பெற முடிகிறது. சாத்தான் மனிதனை எவ்வாறு சீர்கெடுக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்டு, அதன் பொல்லாப்பு சாராம்சத்தினால் வஞ்சிக்கப்படாதிருப்போம். நாம் பின்னர் சாத்தானை நிராகரித்து, அதன் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்கலாம், பின்னர் அது இனி நம்மை ஆட்டுவிக்கவோ அல்லது நமக்குத் தீங்கிழைக்கவோ முடியாது.” தேவன் நம்மை இரட்சிப்பதற்காகத் தனிப்பட்ட முறையில் வந்துள்ளார் என்பதைக் கேட்டு நான் சிலிர்ப்புற்றேன். சாத்தான் அவ்வாறு எனக்குத் தீங்கு செய்வதை நான் உண்மையில் விரும்பவில்லை, ஆனால் அது எனக்கு எவ்வாறு தீங்கு செய்கிறது என்பதை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, எனவே, “நான் மற்றவர்களை விடச் சிறந்து விளங்குவதற்காகக் கடினமாக உழைத்தேன், ஆனால் அது எனக்குத் தாங்க முடியாத வலியைத் தந்தது. இதை எனக்குச் செய்தது சாத்தானா?” என்று சகோதரிகளிடம் நான் கேட்டேன்.

பின்னர் சகோதரி ஜாங் அவர்கள் என் கேள்வியுடன் தொடர்புடைய சர்வவல்லமையுள்ள தேவனின் சில வார்த்தைகளை வாசித்தார். “சாத்தான் மிகவும் நுட்பமான ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. அது ஜனங்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகின்ற ஒரு முறையாகும். அது தீவிரமானதல்ல. இவ்வாறு சத்தானுடைய ஜீவித முறையையும், அதன் விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், சாத்தான் உருவாக்கும் ஜீவித இலக்குகளையும் நோக்கங்களையும், ஜனங்கள் அறியாமையில் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. அவ்வாறு செய்யும்போது அவர்கள் அறியாமலேயே ஜீவிதத்தில் லட்சியங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜீவித நோக்கங்கள் எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும், அவை ‘புகழ்’ மற்றும் ‘ஆதாயம்’ ஆகியவற்றுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பெரிய அல்லது பிரபலமான மனிதரும்—உண்மையில் எல்லா ஜனங்களும்—பின்பற்றும் அனைத்தும் ‘புகழ்’ மற்றும் ‘ஆதாயம்’ என்ற இந்த இரண்டு சொற்களுடன் மட்டுமே தொடர்புடையவை ஆகும். புகழ் மற்றும் ஆதாயம் கிடைத்தவுடன், அதைப் பயன்படுத்தி தங்களால் உயர் அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அனுபவிக்கவும், ஜீவிதத்தை அனுபவிக்கவும் முடியும் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயம் என்பது ஜனங்கள் சிற்றின்பத்தையும் மாம்சம் விரும்பும் இன்பத்தையும் பெற்றுக்கொள்ளும் ஜீவிதத்தைப் பெற பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலதனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனிதகுலம் அதிகமாக விரும்பும் இந்த புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, ஜனங்கள் விருப்பமின்றி, அறியாமலேயே, தங்கள் சரீரங்களையும், மனங்களையும், அவர்களிடம் உள்ள அனைத்தையும், அவர்களுடைய எதிர்காலங்களையும், தலைவிதிகளையும் சாத்தானிடம் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் ஒரு கணம் கூட தயங்காமல் அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் ஒப்படைத்த அனைத்தையும் மீட்டெடுப்பதன் அவசியத்தை ஒருபோதும் அறியாமல் இருக்கிறார்கள். இவ்வாறு சாத்தானில் தஞ்சமடைந்து, அதற்கு விசுவாசமாகி விட்டால், ஜனங்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டில் எதையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா? நிச்சயமாக இல்லை. அவை சாத்தானால் முழுமையாகவும் நிச்சயமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் முற்றிலுமாக மற்றும் நிச்சயமாக ஒரு புதைகுழியில் மூழ்கிவிட்டனர். அவர்களால் தங்களை விடுவிக்க முடியவில்லை. ஒருவர் புகழ் மற்றும் ஆதாயத்தில் மூழ்கியவுடன், பிரகாசமானதை, நீதியுள்ளதை அல்லது அழகானதையும் நலமானதையும் அவர்கள் இனி தேட மாட்டார்கள். ஏனென்றால், ஜனங்கள் மீது புகழ் மற்றும் ஆதாயம் வைத்திருக்கும் கவர்ச்சியின் வல்லமை மிக அதிகம். அவை, ஜனங்களை தங்கள் ஜீவகாலம் முழுவதும் பின்பற்றவும், முடிவில்லாமல் நித்தியமாக பின்பற்றவும் செய்கின்றன. இது உண்மையல்லவா?(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”). “எல்லா ஜனங்களும் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பற்றி நினைக்கும் வரையில், மனிதனுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பயன்படுத்துகிறது. அவர்கள் புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவர்கள் எந்தத் தீர்மானத்தையும் முடிவையும் எடுப்பார்கள். இவ்வாறு, சாத்தான் ஜனங்களைக் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குகளால் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றைத் தூக்கி எறியும் வல்லமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறியாமலேயே இந்தக் கைவிலங்குகளை சுமந்து கொண்டு, மிகுந்த சிரமத்துடன் எப்போதும் முன்னேறுகிறார்கள்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”).

தேவனின் வார்த்தைகளை வாசித்த பின்னர், மனிதனைச் சீர்கெடுப்பதற்காகப் புகழ் மற்றும் ஆதாயத்தைச் சாத்தான் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்ற சத்தியத்தை அவர் ஐக்கியப்படுத்தினார். அதன் பின்னர் தான் சாத்தான் எவ்வளவு வெறுக்கத்தக்கது என்பதை நான் உணர்ந்தேன்! “உழைப்பின்றி ஊதியம் இல்லை,” “ஜனங்கள் பார்க்கும்போது நீங்கள் கண்ணியமாகத் தோன்ற விரும்பினால், அவர்கள் இல்லாதபோது நீங்கள் கஷ்டப்பட வேண்டும்,” மற்றும் “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது” போன்ற, சாத்தானின் வாழ்க்கை விதிகளுடன் நமக்குப் போதனை செய்வதற்காக முறையான கல்வி மற்றும் சமூக ஆதிக்கத்தைச் சாத்தான் பயன்படுத்துகிறது. இந்த வாழ்க்கை விதிகளால் ஏமாற்றப்பட்டு, பணம் இல்லாம் ஜீவிக்க முடியாது என்று ஜனங்கள் நினைக்கிறார்கள், அதாவது அவர்கள் செல்வந்தரானதும், மற்றவர்கள் அவர்கள் உயர்வாகக் காண்பார்கள் மற்றும் அவர்கள் மரியாதையைப் பெறுவர் என்றும், ஏழையாக இருப்பதென்பது மதிப்பில்லாமல் இருப்பதென்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் ஜனங்கள் அவர்களின் ஜீவியம் முழுவதும் பணம், புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகின்றனர், மேலும், விளைவுகளைப் பொருட்படுத்தாமல், அவற்றை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். ஜனங்கள் மேலும் சீர்கெட்டவர்களாக மாறுகிறார்கள் மற்றும் அவர்களின் ஜீவியம் மிகவும் வலிமிக்கதாக மாறுகின்றன. இது நம்மைக் கட்டிப்போடுவதற்காகச் சாத்தான் பயன்படுத்தும் கைவிலங்கு ஆகும், மேலும் இது நம்மைச் சீர்கெடுப்பதற்கான சாத்தானின் தந்திரமும் ஆகும். மற்றவர்கள் என்னை உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக மற்றவர்களை விடச் சிறந்து விளங்க, அதிகப் பணம் சம்பாதிக்கப் பாடுபடுவதில், நான் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாறிவிட்டேன். எனது ஆசைகள் வளர்ந்தன, நான் திருப்தியடையவே இல்லை, மேலும் நான் எனது சொந்த ஆரோக்கியத்தைக் கெடுத்த பின்னர் மட்டும் தான் நான் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பணம், புகழ் மற்றும் ஆதாயத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன். புகழ் மற்றும் ஆதாயத்திற்கான எனது தேடல் உண்மையில் எனது ஜீவியத்தை மிகவும் கடினமான, மிகவும் சோர்வாகவும் ஆக்கியது! அத்தனை ஆண்டுகளாக அவற்றைத் தேடி, நான் மிகுதியான வலியுற்றேன் மற்றும் காயமடைந்தேன். சாத்தானால் தீங்கு செய்யப்பட்டுச் சீர்கெடுக்கப்பட்டதால் தான் அந்தத் துன்பங்கள் அனைத்தும் ஏற்பட்டன! தேவனின் வார்த்தைகளின் வெளிப்பாடு இல்லாமல், ஜனங்களைச் சீர்கெடுப்பதற்காக பணம், புகழ் மற்றும் ஆதாயத்தைச் சாத்தான் பயன்படுத்துகிறான் என்றும், புகழ் மற்றும் ஆதாயம் மனிதன் மீதான சாத்தானின் கைவிலங்கு என்றும் நான் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டேன்.

அதன் பின்னர் சகோதரி கின் என்னுடன் ஐக்கியப்படுவதற்காகப் பல முறை வந்தார். காலப்போக்கில், மனிதனைச் சீர்கெடுப்பதற்காக சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களை நான் காண ஆரம்பித்தேன். எது மிகவும் முக்கியமானது என்பதையும் நான் புரிந்துகொண்டேன்: தேவனின் வார்த்தைகளை வாசிப்பது, சத்தியத்தைப் பின்தொடர்வது, மற்றும் தேவனின் விதி மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவது. அதுவே ஜீவிப்பதற்கான மிகவும் அர்த்தமுள்ள, மகிழ்ச்சியான வழி, மற்றும் தேவன் பரிந்துரைக்கும் ஒரே வழி!

ஒரு நாள், என்னுடன் பணியாற்றுபவர் ஒருவர் அவருடைய கணவருடன் ஜப்பானிற்குப் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் வந்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்திருந்தாலும், பின்னர் அவரது கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அவர் சீனா திரும்பவேண்டி இருந்தது. அவருக்குப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவர்களின் குடும்பம் பயத்திலும் சோகத்திலும் ஜீவித்து வந்தது. அவரது துரதிர்ஷ்டம் மூலமாக, நம் பலவீனம் குறித்தும், ஜீவனின் விலைமதிப்பற்ற தன்மையையும் குறித்தும் நான் ஆழமாக உணர்ந்தேன். ஜீவனில்லாமல், அதிகமான பணத்தால் என்ன பயன்? பணத்தால் ஜீவனை வாங்க முடியுமா? அதன் பின்னர், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தையில் நான் இதை வாசித்தேன்: “ஜனங்கள் தங்களது ஜீவிதத்தைப் பணத்தையும் புகழையும் துரத்தச் செலவழிக்கிறார்கள்; அவர்கள் இந்த வைக்கோல்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றை தங்களின் ஒரே ஆதரவு என்று நினைத்து, அவற்றைக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் ஜீவிக்க முடியும், மரணத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இறக்கப் போகும் நேரத்தில் தான், இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன, மரணத்தை எதிர்கொள்ளும் போது அவை எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன, அவை எவ்வளவு எளிதில் சிதறுகின்றன, எங்கும் திரும்ப முடியாவண்ணம் எவ்வளவு தனிமையாகவும் உதவியற்றதாகவும் இருக்கின்றன என்று உணர்கிறார்கள். ஜீவிதத்தைப் பணத்தால் புகழால் வாங்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஒரு நபர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவர்களுடைய நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அனைவரும் மரணத்தை எதிர்கொள்ளும்போது சமமான ஏழைகள் மற்றும் அற்பமானவர்களே. பணத்தால் ஜீவிதத்தை வாங்க முடியாது, புகழ்ச்சி மரணத்தை அழிக்கமுடியாது, பணமோ புகழோ ஒரு நபருடைய ஜீவிதத்தை ஒரு நிமிடம் வரையிலோ, ஒரு நொடி வரையிலோ நீட்டிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). நாம் தேவனை விசுவாசிக்கவில்லை என்றால் அல்லது சத்தியத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், சாத்தானின் சூழ்ச்சிகளை நம்மால் காண முடியாது, மற்றும் ஜனங்களைச் சீர்கெடுப்பதற்காக பணம் மற்றும் புகழைச் சாத்தான் பயன்படுத்துகிறது என்பதை நன்றாகக் காணத் தேவனின் வார்த்தைகள் என்னை அனுமதித்தன. நம்மால் வெளிவர முடியாத அளவிற்கு இந்தச் சுழலுக்குள் நாம் விருப்பமின்றிச் சிக்கிக் கொண்டோம். நம்மை மீறி நாம் சாத்தானால் ஏமாற்றப்பட்டுத் தீங்கு செய்யப்பட்டோம், மற்றும் நம் சொந்த ஜீவியத்தைக் கெடுத்தும் கொண்டோம். இது மிகவும் துயரமானது. என் விசுவாசத்திற்கும், தேவனின் வார்த்தைகள் பலவற்றை வாசித்ததற்கும் நன்றி, இறுதியில் இந்த விஷயங்களை நான் புரிந்துகொண்டேன். எனக்கு விசுவாசம் இல்லாதிருந்தால் அல்லது தேவனின் வார்த்தைகளை வாசிக்கவில்லை என்றால், என்னால் சாத்தானின் சீர்கேட்டை ஒருபோதும் தூக்கி எறிந்திருக்க முடியாது. வெளியேற வழியின்றி அந்தகாரத்திலும் வலியிலும் நான் வெறுமனே போராடிக் கொண்டிருப்பேன்.

நான் காயமுற்றிருந்தபோது, திருச்சபையிலிருந்து சகோதரிகள் என்னை வந்து சந்தித்து, என் வலியைக் குறைக்க உதவினர். அவர்கள் வீட்டு வேலையையும் செய்து, அவர்களது சொந்தக் குடும்பம் போல் என்னைக் கவனித்துக்கொண்டனர். ஒரு வெளி தேசத்தில், சகோதரிகள் என்னை எவ்வளவு கவனமாகக் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதைக் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நான் இன்னும் நன்றியுள்ளவனாக உணர்ந்தேன். தேவனின் கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன், நான் விரைவில் சுகமடைந்தேன்.

பின்னர் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தையில் நான் இதை வாசித்தேன்: “தான் நடந்து சென்ற பாதையை ஒருவர் திரும்பிப் பார்க்கும் போது, அவருடைய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் அவர் நினைவுபடுத்தும்போது, ஒவ்வொரு அடியிலும், ஒருவருடைய பயணம் கடினமானதாகவோ அல்லது சுமூகமாகவோ இருந்தாலும், தேவன் அவருடைய பாதையை வழிநடத்தி, அதைத் திட்டமிடுவதை அவர் காண்கிறார். தேவனுடைய உன்னிப்பான ஏற்பாடுகள், அவருடைய கவனமான திட்டமிடல், ஒருவரை அறியாமல், இன்று வரை வழிநடத்தியது. சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை ஏற்றுக்கொள்வதும், அவருடைய இரட்சிப்பைப் பெறுவதும் எவ்வளவு பெரிய செல்வம்! ஒரு நபருக்கு மனித விதியைப் பற்றி எதிர்மறையான அணுகுமுறை இருந்தால், தேவன் அவர்களுக்கு ஏற்பாடு செய்த எல்லாவற்றையும் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை அது நிரூபிக்கிறது. அவர்களுக்குக் கீழ்ப்படியும் மனப்பான்மை இல்லை. மனித விதியின் மீதுள்ள தேவனுடைய சர்வவல்லமையைப் பற்றி ஒருவர் நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தால், அவர் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர் உண்மையிலேயே தேவனுடைய சர்வவல்லமையைப் பிடித்துக் கொள்கையில், தேவன் ஏற்பாடு செய்த எல்லாவற்றிற்கும் ஒப்புவிக்க அவர் அதிக ஆர்வத்துடன் விரும்புவார் மற்றும் அவருடைய தலைவிதியை தேவன் திட்டமிடவும், தேவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதை நிறுத்தவும் உறுதியுடனும் விசுவாசத்துடனும் இருப்பார். ஒருவர் தலைவிதியைப் புரிந்து கொள்ளாத போது, தேவனுடைய சர்வவல்லமையைப் புரிந்து கொள்ளாதபோது, ஒருவர் வேண்டுமென்றே கண்மூடித்தனமாக முன்னோக்கிச் செல்லும்போது, மூடுபனி வழியாகச் சென்று திகைப்படையும் போதும் தடுமாறும் போதும், பயணம் மிகவும் கடினமாகவும், மிகுந்த மன வருத்தமாகவும் இருக்கும். ஆகவே, மனித விதியின் மீதான தேவனுடைய சர்வவல்லமையை ஜனங்கள் உணரும்போது, தங்களது இரு கைகளாலும் ஒரு நல்ல ஜீவிதத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்த வேதனையான நாட்களிலிருந்து விடைபெறுவதற்கும், விதியை எதிர்த்துப் போராடுவதையும், ‘ஜீவித இலக்குகள்’ என்று பெயரளவில் அழைக்கப்படுபவற்றை தங்களது சொந்த வழியில் பின்பற்றுவதை நிறுத்தவும், புத்திசாலிகள் அதை அறிந்து ஏற்றுக்கொள்வதை தெரிந்து கொள்வார்கள். ஒருவரிடம் தேவன் இல்லாத போது, அவர் தேவனைக் காணமுடியாத போது, தேவனுடைய சர்வவல்லமையை அவர் தெளிவாக அடையாளம் காணமுடியாத போது, ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும். ஒருவர் எங்கிருந்தாலும், அவருடைய வேலை எதுவாக இருந்தாலும், அவருடைய ஜீவித வழிமுறையும், அவர் இலக்குகளைப் பின்பற்றுவதும், முடிவில்லாத மனவருத்தம் மற்றும் விடுதலையற்ற துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டு வருவதில்லை, அதாவது அவரால் அவருடைய கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்கும். ஒருவர் சிருஷ்டிகருடைய சர்வவல்லமையை ஏற்றுக் கொண்டு, அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து, உண்மையான மனித ஜீவிதத்தைத் தேடினால் மட்டுமே, ஒருவர் படிப்படியாக எல்லா மனவருத்தம் மற்றும் துன்பத்திலிருந்து விடுபடத் தொடங்குவார் மற்றும் ஜீவிதத்தின் எல்லா வெறுமையிலிருந்தும் விடுபடுவார்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனின் வார்த்தை மிகவும் நடைமுறை சார்ந்தது, ஒவ்வொரு வாக்கியமும் என் இருதயத்தின் ஆழம் வரை பேசுகிறது. தேவனே சிருஷ்டிகர் என்றும், நாம் அவரது சிருஷ்டிகள் என்றும் தேவனின் வார்த்தைகளிலிருந்து நான் புரிந்துகொண்டேன். ஒவ்வொரு நபரின் ஜீவியமும் தேவனின் கரங்களில், அவரது கட்டுப்பாடு மற்றும் ஏற்பாட்டின் கீழ் உள்ளன. நம் ஜீவியத்தில் நாம் பெறும் அனைத்தும் தேவனின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன மற்றும் அவை அவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை ஆகும். அங்குமிங்குமாக விரைவது நிச்சயமாகத் தீர்மானிக்கும் காரணியல்ல. எனினும் தேவன் நமக்கு எவ்வளவு அருளுகிறாரோ அவ்வளவு தான் நாம் பெறுகிறோம். தேவன் நமக்கு எதையாவது அருளவில்லை என்றால், நாம் எவ்வளவு வேலை செய்தாலும் அது வீண் ஆகும். அது “மனுஷன் விதை விதைக்கிறான், ஆனால் அறுவடையை பரலோகம் தீர்மானிக்கிறது” மற்றும் “தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்” என்ற வாசகங்களைப் போன்றதாகும். நம் ஜீவியத்தில் சிருஷ்டிகரின் விதி மற்றும் ஏற்பாடுகளுக்கு நாம் அடங்கியிருக்க வேண்டும். ஜீவியத்தில் மகிழ்ச்சிக்கான இரகசியம் இதுவே! பணம் மற்றும் பதவியானது உலகம் சார்ந்த உடைமைகள் என்பதையும் நான் புரிந்துகொண்டேன். புகழ் மற்றும் ஆதாயத்தின் பின்தொடரலில் நம்மை நாமே அர்ப்பணிப்பதன் மூலம், இறுதியில் நாம் பெறுவதெல்லாம் வெறுமையும் வலியும் தான். இறுதியில் நாம் சாத்தானால் விழுங்கப்படுவோம். “உழைப்பின்றி ஊதியம் இல்லை” என்பது போன்ற சாத்தானியத் தத்துவங்களின்படி நான் எப்படி வாழ்ந்தேன், மற்றும் பணம் மற்றும் புகழை எப்படிப் பின்தொடர்ந்தேன் என்பதைப் பற்றி நான் சிந்தித்துப் பார்த்தேன். நான் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற்று, உயர்வாக எண்ணப்பட்டு, மற்றவர்களால் பொறாமை கொள்ளப்படுவேன் என்று நான் நினைத்தேன், அதற்குப் பதிலாக வலி மற்றும் கசப்புத்தன்மையை பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை, என்னிடம் எந்த சமாதானமோ அல்லது மகிழ்ச்சியோ இல்லை. இப்போது நான் தேவனின் வார்த்தைகளை வாசித்திருப்பதால், தேவனின் சித்தத்தை நான் புரிந்துகொண்டுள்ளேன். இனி என் விதியை எதிர்த்துப் போராட நான் விரும்பவில்லை, மேலும், புகழ் மற்றும் ஆதாயத்தைப் பின்தொடர உண்மையில் நான் விரும்பவில்லை. இனி நான் விரும்பும் ஜீவியம் அதுவல்ல. ஜீவியத்தின் வேறொரு முறையைத் தொடங்க நான் தீர்மானித்தேன், மேலும், நான் விரும்பியதெல்லாம், தேவன் ஏற்பாடு செய்வதற்காக மீதமுள்ள என் ஜீவியத்தை அவரது கரங்களில் வைக்கவும், தேவனுக்குக் கீழ்ப்படிய கடுமுயற்சி செய்து என் கடமையைச் செய்வதும் தான்.

என் விசுவாசத்திற்காக அதிக நேரம் ஒதுக்கவும் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும், நான் எனது பழைய வேலையை விட்டுவிட்டு, புதிய, எளிதான வேலையில் சேர்ந்தேன். நான் பணியில் இல்லாதபோது அடிக்கடி தேவனின் வார்த்தைகளை வாசிப்பேன், மேலும், எந்த அளவு அதிகமாக வாசிக்கிறேனோ அந்த அளவு அதிகமாக என் இருதயம் பிரகாசமானது. மனிதனின் பாவத்தின் மூலக்காரணத்தையும் நான் தெரிந்துகொண்டேன், தேவன் மனுக்குலத்தைப் படிப்படியாக எப்படி இரட்சிக்கிறார் என்பதையும், மனிதன் எதற்காக ஜீவிக்க வேண்டும் என்பதையும், அவன் எப்படி அர்த்தமுள்ள ஜீவியத்தை வாழ வேண்டும் என்பதையும் நான் புரிந்துகொண்டேன். எங்களின் அனுபவங்களைப் பகிர்வதற்காகவும், தேவனின் வார்த்தைகளின் பாடல்களைப் பாடக் கற்றுக்கொள்வதற்காகவும் சகோதர சகோதரிகளுடன் நான் இணைந்தேன். என் ஜீவிதம் இப்போது மகிழ்ச்சியாக உள்ளது. முன்பை போல் நான் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை, ஆனால் முன்பு ஒருபோதும் கொண்டிராத சமாதானத்தையும் நிலைத்தன்மையையும் நான் உணர்கிறேன். இப்போது அதைத் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது, நான் துரதிர்ஷ்டம் மூலமாக ஆசீர்வாதம் பெற்றுள்ளேன்! இது உண்மையிலேயே எனக்கான அவரது இரட்சிப்பு ஆகும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருந்ததிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்

நான் ஒரு வீட்டுத் திருச்சபையில சக ஊழியரா இருந்தேன். 2000 ல ஒரு நாள், மேல்மட்டத் தலைவர்கள் ஒரு சக ஊழியர் கூட்டத்தக் கூட்டினாங்க. அவங்க,...

பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய...

மனம்திறந்து பேசப் பயப்படுவதற்குப் பின்னால் இருப்பது என்ன

2020 ஆம் வருஷம் மார்ச் மாதம் நான் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டு, சீக்கிரமா ஒரு கடமயச் செஞ்சேன். கொஞ்ச...

Leave a Reply