பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 1)

செப்டம்பர் 22, 2021

டான் சுன், இந்தோனேஷியா

“உங்களிடம் பணம் இல்லாதிருக்கும் போது உங்கள் பிள்ளையைக் கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உண்மையிலேயே உங்களைத் அளவுக்கு மீறி தவறாக எடைபோடுகிறீர்கள்!”

“அதுதான் மிகச் சரியானது. அது விருதாவாக உங்கள் செல்வத்தைத் தாண்டிச் செல்ல முயற்சி செய்வதாகும். உங்களிடம் பணம் இல்லையென்றால், அப்போது உங்கள் பிள்ளையை வெளியே போய் ஒரு வேலையைத் தேடச் செய்ய வேண்டும். கல்லூரியை மறந்துவிட வேண்டும்!”

…………

என்னுடைய பிள்ளைக்கு கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட என்னால் கடன் வாங்க முடியுமா என்று நான் என்னுடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் கேட்ட போது, அவர்களுடைய காயப்படுத்தும் கருத்துக்கள் என்னுடைய இருதயத்திற்குள் ஒரு கத்தி மீண்டும் மீண்டும் குத்துவது போல உணர்ந்தேன். நான் வருத்தமாகவும் உதவியற்றவனாகவும் உணர்ந்தேன், பெருமூச்சு விடுவதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை: “இதுதான் உண்மை: பணம் இல்லாமல், என்னால் துன்பம் என்னும் பெரும் பாதாளத்தில் மட்டுமே இருக்க முடியும், மேலும் நண்பர்களும் உறவினர்களும் கூட என்னை இழிவாகப் பார்க்கின்றனர்!”

quit-being-a-slave-to-money-1

கேலி செய்யப்படுவதைத் தவிர்க்க, நான் பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறேன்

என்னுடைய கணவர் இறந்த பிறகு, எந்தவொரு தேவையற்ற கவலையும் இல்லாமல் அடிப்படை தேவைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற என்னுடைய வாழ்க்கை கடந்து போய்விட்டது. வங்கியில் கொஞ்சம் பணம் மீதமிருந்தது, என்னுடைய மகன் இன்னும் ஆரம்பப்பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு பணம் கட்ட வேண்டிய பல காரியங்கள் இருந்தன: என்னுடைய மகள் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தாள், செலவுகள் அதிகமாக இருந்தன, மூன்று தலைமுறைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தைப் பராமரிக்கும் சுமையானது முழுமையாக என்னுடைய தோள்களில் விழுந்தது. நான் ஏழையாக இருக்க விரும்பவில்லை, மற்றவர்களுடைய இழிவான பார்வைகளையும் ஏளனமான பார்வைகளையும் சகித்துக்கொள்ள விரும்பவில்லை, அதனால் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னுடைய கை முட்டிகளை இறுக்கமாக மடக்கிக் கொண்டு எனக்கு நானே இவ்வாறு சொல்லிக் கொள்வேன்: “இந்த சமுதாயத்தில் பணமே பிரதானமாக ஆளுகை செய்யும் போது, எல்லோரும் பணம் சம்பாதிப்பதையே நாடுகின்றனர், மேலும் பணம் உள்ளவர்களால் மட்டுமே காரியங்களைச் செய்ய முடிகிறது. நான் கடினமாக உழைக்கத் தயாராக இருந்தால், நான் நிச்சயமாக நிறைய பணம் சம்பாதித்து, நல்ல வாழ்க்கை வாழ்வேன், இனிமேல் மற்றவர்களால் இழிவாக பார்க்கப்பட மாட்டேன்!” அதனால் என்னுடைய வாழ்வில் பணம் சம்பாதிக்க தீவிரமாக முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

நான் முன்பு ஒரு ஆடை தயாரிப்பாளராக இருந்தேன், ஆகையால் எனக்கு ஆடை தயாரிக்கும் ஒரு வேலை கிடைத்தது. நான் மிகவும் நீண்ட காலமாக அதைச் செய்யவில்லை என்பதனால், நான் மிகவும் பழக்கமற்றுப் போயிருந்தேன், ஒரு வாரத்தில் இரண்டு தொகுப்பு ஆடைகளைக் கூட என்னால் முடிக்க முடியவில்லை. இந்த நிலையிலும், ஒரு சிக்கலான பாணியைக் கொண்டிருந்த, பல்வேறு வடிவங்களில் வந்த, வேறு யாரும் செய்யத் தயாராக இல்லாத சில ஆடைகளை முதலாளி என்னிடம் கொடுத்தார். அதாவது, ஒரு ஆடையைத் தயாரிக்க எனக்கு இன்னும் அதிக நேரம் எடுத்தது, மேலும் என்னவென்றால், எனக்கு ஒரு ஆடையின் எண்ணிக்கைக்கே சம்பளம் கொடுக்கப்பட்டது. இவ்விதமாக வேலையை ஒதுக்குவதில் முதலாளி மிகவும் நியாயமற்றவராக இருந்தார், மேலும் நான் அதில் சந்தோஷமில்லாமல் இருந்தேன். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக, என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அமைதியாக இருந்து இந்த நியாயமற்ற நடத்தையை சகித்துக்கொள்வதேயாகும். நான் சம்பாதிக்கும் பணம் அடிப்படை செலவுகளைச் சந்திக்கவே போதுமானதாக இல்லாதிருந்ததால், வீட்டுப் பராமரிப்பு பணத் தேவைக்காக எங்கள் வீட்டிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை விற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும், நான் மனச்சோர்வடையவில்லை, மாறாக இந்த இக்கட்டான நிலையை மாற்ற கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தேன். படிப்படியாக காலப்போக்கில், என்னால் ஒரு நாளைக்கு ஒரு தொகுப்பு ஆடைகளைத் தயாரிக்க முடிந்தது, மேலும் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தேன். ஆனால் போதிய பணம் கொடுக்காத முதலாளிக்கு ஆடைகளைத் தயாரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை, ஆகையால் ஆடைகளைத் தயாரிக்க இன்னொரு முதலாளியிடம் சென்றேன். அதனால் என்னால் அதிகமான ஆடைகளைத் தயாரிக்க முடிந்தது, நான் தினமும் காலையில் ஐந்து மணிக்கே எழுந்திருப்பேன், என் மகனை பள்ளியில் விட்டுவிட்டு வந்த உடனேயே, நான் வேலைக்குப் போய், மறுநாள் அதிகாலை ஒன்று அல்லது இரண்டு மணி வரை வேலை செய்வேன். சில நேரங்களில், நிறைய வேலை செய்ய வேண்டியதிருக்கும் போது, அடுத்த நாள் காலையில் மூன்று அல்லது நான்கு மணி வரை வேலை செய்வேன். அந்த காலக்கட்டத்தில், நான் பெரும்பாலும் மிகவும் பரபரப்பாக இருந்தேன், அதனால் நான் சாப்பாடு சாப்பிடாமல் புறக்கணித்தேன், மேலும் எனக்கு பசிக்கும் போது, என்னுடைய வயிற்றை நிரப்ப கொஞ்சம் தண்ணீர் குடிப்பேன். நான் வழக்கமாக சாப்பிடாததனால், எனக்கு நீண்ட நேரம் போதுமான தூக்கம் வராததனால், எனக்கு வயிற்று வலியும் தலைவலியும் உண்டானது. சில நேரங்களில் என்னுடைய வயிறு மிகவும் வலிக்கும், அதனால் என்னுடைய உடலை நேராக வைத்திருக்க முடியாது, மேலும் என் தலை மிகவும் வலிக்கும், அதனால் வலியைத் தணிக்க சுவரில் என்னுடைய தலையை முட்ட விரும்புவேன். இவை எல்லாம் நடந்தாலும், நான் இன்னும் ஓய்வெடுக்க தயாராக இருக்கவில்லை. வலி மிகவும் அதிகரிக்கும் போது, நான் ஒரு சில வலி நிவாரண மருந்துகளை எடுத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்வேன். காலம் செல்லச் செல்ல, வலி நிவாரணி மருந்துகளுக்கு பழகிக் கொண்டேன், அதனால் அவை அதற்குமேல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என்னுடைய வயிறு இன்னும் அடிக்கடி வலியால் துடிக்கும், மேலும் சில சமயங்களில் என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாகும் போது, அது மிகவும் வலிக்கும், அதனால் நான் என் படுக்கையில் சுருண்டு படுத்து அழுவேன். ஆனாலும் என்னை நானே ஆறுதலும் உற்சாகமும் படுத்திக்கொண்டு, எனக்குள்ளே இப்படி சொல்லிக்கொள்வேன்: “இந்த வலி நீடிக்காது. நான் நிச்சயமாக தொடர்ந்து வேலை செய்வேன். நிறைய பணம் சம்பாதிப்பதன் மூலமாக மட்டுமே ஜனங்கள் இனிமேல் என்னை இழிவாக பார்க்க மாட்டார்கள்!”

பணத்திற்காக என்னை வேலையில் மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டதனால், கிட்டத்தட்ட என்னுடைய பார்வையை இழக்கும் அளவிற்கு திடீரென என்னுடைய கண் மோசமான நிலையை அடைந்தது

ஒரு வருடத்திற்குப் பிறகு, என்னால் கொஞ்சம் பணம் சம்பாதிக்க முடிந்தது, அதனால் நான் எங்கள் வீட்டைப் புதுப்பிக்க முடிவு செய்து, புதிய வீட்டு உபகரணங்கள் அனைத்தையும் வாங்கினேன். என்னுடைய உறவினர்களும், நண்பர்களும் அக்கம்பக்கத்தினரும் என்னைப் பார்த்த போது என்னை விட்டு விட்டு விலகிச் செல்லவில்லை, மாறாக அவர்கள் என்னை வாழ்த்தவும் என்னுடைய வீட்டிற்கு வருகைத் தரவும் ஆரம்பித்தனர், மேலும் அவர்கள் என்னைப் பற்றி போற்றிப் பேசினர் மற்றும் முகஸ்துதி செய்தனர். அவர்கள் இந்த காரியங்களைச் சொல்வதைக் கேட்பதற்கு அருமையாக இருந்தது, மேலும் ஒருவரிடம் பணம் இருக்கும் போது காரியங்கள் வித்தியாசமாக இருக்கின்ற என்ற உண்மையை நான் புரிந்துகொண்டேன்! அதன்பிறகு, அதிக பணம் சம்பாதிப்பதற்காக, நான் ஒரு சுழலும் கடிகாரம் போல மாறி, சதாகாலமும் வேலை செய்தேன்.

பல வருடங்களாக, நான் கொஞ்சம் கிட்டப்பார்வைக் கோளாறில் இருந்தேன், மேலும் என்னுடைய கண்பார்வையானது கொஞ்சம் மங்கலாக இருந்தது. சில சமயங்களில் நான் என்னுடைய கண்களில் குத்துவதைப் போன்ற வலியை உணர்வேன், மேலும் இரவில் வலியானது ஏறக்குறைய தாங்கமுடியாததாக இருக்கும். நான் என்னுடைய கண்களைப் பரிசோதிக்க மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினேன், ஆனால் அது எனக்குப் பணச் செலவை உண்டாக்குவது மட்டுமின்றி, அது கால விரயமாகவும் இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன், அதனால் நான் என்னுடைய பல்லைக் கடித்துக்கொண்டு வேலையைச் செய்தேன். என்னுடைய கண்கள் முழுவதுமாக சிவந்திருந்ததை ஒரு நாள் என்னுடைய அண்ணன் பார்த்துவிட்டு, “உனக்கு குருடாகிவிட்டால் உன்னால் எதுவும் செய்ய முடியாது, அதன்பிறகு நீ சேமித்த பணம் எதுவும் பயனற்றதாகவே இருக்கும். கூடுமானமட்டும் சீக்கிரம் போய் மருத்துவரைப் பார்!” என்று சொல்லி என்னைக் கடிந்துகொண்டான். நான் உண்மையிலேயே குருடாகிவிடுவேனோ என்று நானும் பயந்துபோனேன், அதன்பிறகு பணம் சம்பாதிக்க எனக்கு வழியே இல்லை, ஆகையால் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். என்னுடைய கண்களைப் பரிசோதனை செய்த பிறகு, அவை கடுமையாக வீங்கியிருப்பதாக மருத்துவர் என்னிடம் சொன்னார், மேலும் இனிமேல் என்னுடைய வேலையைச் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்தார், இல்லையென்றால் எனது இரண்டு கண்களும் குருடாகிவிடும் என்றார். இந்தச் செய்தி சூரியனைக் கார்மேகங்கள் மூடுவது போல வந்தது, மேலும் அது என்னைப் பெரிதும் அச்சுறுத்தியது, அதனால் என்னுடைய கால்கள் நடுங்கின. என்னால் கவலைப்படுவதையும், விரக்தியாக உணர்வதையும் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை, மேலும் நான் இவ்வாறு நினைத்தேன்: “அது என்னுடைய குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த அத்தகையதொரு போராட்டமாக இருந்தது, இந்த நோய் எப்படி எனக்கு திடீரென்று வந்தது? நான் உண்மையிலேயே குருடாகிவிட்டால், என்னுடைய குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வார்கள்? மேலும் என்னால் அதன்பின் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால், மக்கள் என்னை இன்னும் இழிவாக பார்க்க மாட்டார்களா?” இதை நினைவில் வைத்துக்கொண்டே, வேலையில் இருந்து ஓய்வு எடுத்து சிகிச்சைக்குச் செல்வதை மட்டுமே என்னால் செய்ய முடியும் என்று முடிவு செய்தேன்.

ஆனாலும், வெறும் இரண்டு வார சிகிச்சைக்கு ஆறு மாதச் சேமிப்புக்குச் சமமாக செலவாகும் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். மேலும், என்னுடைய கண் நோயை முழுமையாகவும் குணப்படுத்த முடியவில்லை, மாறாக நோய் அறிகுறிகளைப் போக்க நான் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை எடுக்க வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை எதிர்கொண்ட என்னால் அதற்குமேல் அதைத் தாங்க முடியவில்லை. என்னுடைய தையல் இயந்திரத்திற்கு முன்பாக அமர்ந்திருந்தேன், கடந்த காலம் அலை போல என்னுடைய மனதில் பாய்ந்தோடியது: என்னுடைய கணவரின் மரணம், என்னைச் சுற்றியுள்ள ஜனங்களின் இழிவான பார்வைகள் மற்றும் கேலி, பணம் சம்பாதிப்பதற்காக பல வருடங்களாக இரவும் பகலும் வேலை செய்தது, மேலும் என்னுடைய தலைவலி, என்னுடைய வயிற்று வலி மற்றும் என்னுடைய கண்களில் ஏற்பட்ட வலி ஆகியவை ஏற்படுத்திய மன உளைச்சல்…. உடனடியாக, நான் ஒரு கடுமையான தனிமை மற்றும் உதவியற்ற உணர்வை உணர்ந்தேன், மேலும் என்னால் இவ்வாறு சிந்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை: “நான் இத்தனை வருடங்களாக எலும்பு தேய வேலை செய்ததனால் எனக்குக் உண்மையிலே கிடைத்தது என்ன? நான் அந்தளவுக்கு அதிகமாக சம்பாதித்திருக்கவில்லை, எனக்குப் பல நோய்கள்தான் வந்திருக்கின்றன. நான் எப்படி இதுபோல வாழ்வேன்…?”

மன உளைச்சலுக்குள்ளாகி, திகைத்துப்போயிருந்த என் மீது தேவனுடைய இரட்சிப்பு வருகிறது

ஒரு நாள், நான் முகநூலில் ஒரு கிறிஸ்தவரைச் சந்தித்தேன். அவர் உண்மையானவராகவும், என்னைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டவராகவும் இருந்தார். தேவன் மீதான விசுவாசம் குறித்த காரியங்களைப் பற்றி அவர் என்னிடம் அடிக்கடி பேசினார். மேலும் அவர் அப்படி பேசும் போது, நான் உள்ளத்தில் ஆறுதலாக உணர்ந்தேன். இந்தச் சகோதரியுடன் சேட்டிங் செய்வதன் மூலம், மனுக்குலம் உட்பட வானத்திலும் பூமியிலுமுள்ள சகலமும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டன என்பதையும், மனுக்குலமானது சாத்தானால் சீர்கெடுக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் தேவன் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கீழ்ப்படிந்தனர் என்பதையும், தேவனுடைய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் அவர்கள் எந்த கவலையோ அல்லது விரக்தியோ இல்லாத மற்றும் முதுமையின் வேதனை, நோய் மற்றும் மரணம் ஆகியவை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதையும் நான் கண்டறிந்தேன். மனுக்குலமானது சாத்தானால் தவறான வழியில் நடக்க தூண்டப்பட்டு சீர்கெடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் அதற்குமேல் தேவன் சொல்வதைக் கேட்காமல், தேவனிடமிருந்து மேலும் மேலும் விலகிச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் இழந்தனர், நோய்களும் பிரச்சனைகளும் அவர்களை மேலும் மேலும் துன்புறுத்தின், மேலும் அவர்களுடைய வாழ்க்கை இன்னும் அதிக வேதனை நிறைந்ததாக மாறியது. சாத்தானுடைய பொல்லாப்பிலிருந்து மனுக்குலத்தை விடுவிப்பதற்காக, மனுக்குலத்தை இரட்சிக்க தேவன் தொடர்ந்து தமது கிரியையைச் செய்துவருகிறார். ஆதியில், தேவன் நியாயப்பிரமாணத்தை அறிவித்து, வளர்ச்சியடைந்து கொண்டிருந்த மனுக்குலத்தின் ஜீவிதத்தை பூமியில் வழிநடத்தினார், மேலும் பாவம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார். அதன்பிறகு, தேவனே மாம்சமாகி, மனுக்குலத்திற்காக சிலுவையில் அறையப்பட்டார், இதன்மூலம் சாத்தானின் பிடியிலிருந்து மனுக்குலத்தை மீட்டு, அவர்களுடைய பாவங்களை அறிக்கையிடவும், அவற்றுக்காக மனந்திரும்பவும் உதவினார். கடைசி நாட்களில், சத்தியத்தை வெளிப்படுத்தி, நியாயந்தீர்ப்பின் கிரியையைச் செய்து, மனுக்குலத்தைச் சுத்திகரித்து, இதன்மூலம் மனுஷனை பாவத்தின் பிடியிலிருந்து என்றென்றைக்கும் விடுவிக்கவும், தேவனுடைய இரட்சிப்பைப் பெறவும், ஏதேன் தோட்டத்தில் அனுபவித்த அற்புதமான ஆதி வாழ்க்கையை மீட்டெடுக்கவும் தேவன் மீண்டும் ஒரு முறை மாம்சமாகி உலகிற்கு வந்திருக்கிறார். இப்போது, கடைசி நாட்களில் தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமும், தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, சத்தியத்தை அதிகமாக புரிந்துகொள்வதன் மூலமும், சாத்தான் மனுக்குலத்தை சீர்கெடுக்கும் முறைகளையும், வழிமுறைகளையும் தெளிவாக பார்ப்பதன் மூலமும், சரியான இலக்குகளைப் பின்தொடர்வதன் மூலமும் மட்டுமே, நம்மால் சாத்தான் உண்டாக்கும் பொல்லாப்பிலிருந்து விடுபட்டு, சமாதானமான மற்றும் விடுதலையான வாழ்வை வாழ முடியும். சகோதரியின் ஐக்கியத்தின் மூலமாக, நம் வாழ்வில் வேதனைக்கான மூலக் காரணம் சாத்தானின் சீர்கேடுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான தேவனுடைய கிரியையைப் பற்றியும், தேவனுடைய சித்தத்தைப் பற்றியும் நான் கொஞ்சம் புரிந்துகொண்டேன், மேலும் கடைசி நாட்களில் தேவன் செய்யும் கிரியையை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். அதன்பிறகு, நான் கூடுகைகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன், மேலும் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து, நாங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படித்தோம், எங்கள் அனுபவங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய புரிதல் பற்றி ஐக்கியப்பட்டோம் மற்றும் தேவனைத் துதித்து பாடல்களைப் பாடினோம். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் மூலமாக கொண்டுவரப்பட்ட சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நான் அனுபவிக்க ஆரம்பித்தேன், நான் அதற்குமேல் மிகவும் மன உளைச்சலாக உணரவே இல்லை.

நமது தலைவிதி உண்மையிலேயே தேவனுடைய கரங்களில் தான் உள்ளது

ஒரு நாள், நான் சகோதரியிடம் கடந்த சில வருடங்களாக கடுமையாக வேலை செய்தது குறித்த வேதனையான அனுபவங்களைப் பற்றிச் சொன்னேன். சகோதரி நான் சொன்னதைக் கேட்டு, அதன்பிறகு தேவனுடைய வார்த்தைகளின் பத்தி ஒன்றைக் காண்பித்தார்: “மனிதனின் தலைவிதி தேவனின் கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னைக் கட்டுப்படுத்த உன்னாலேயே இயலாது. மனிதன் எப்போதுமே தன் சார்பாக விரைந்து வந்து தன்னை மும்முரமாகப் பயன்படுத்தினாலும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது. நீ உன் சொந்த வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடிந்தால், உன் சொந்த விதியை உன்னால் கட்டுப்படுத்த முடிந்தால், நீ அப்போதும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவராசியாக இருப்பாயா?(“மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்”).

அதன்பின் சகோதரி ஐக்கியத்தைக் கொடுத்துச் சொன்னார்: “தேவனே சிருஷ்டிகர், தேவனே சகலத்தையும் ஆளுகை செய்து, கட்டுப்படுத்துகிறார். நம்முடைய தலைவிதி என்னவாக இருந்தாலும் மற்றும் வாழ்வில் நாம் எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தாலும், அவைகளும் தேவனுடைய கரங்களில் கட்டுப்படுத்தப்படுகின்றன, மேலும் அவைகள் நம்முடைய சொந்த திட்டங்களாலோ அல்லது கடின உழைப்பாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. ‘மனுஷனுடைய தலைவிதி தெய்வத்தால் தீர்மானிக்கப்படுகிறது,’ ‘மனுஷன் ஒன்றை நினைக்க, தெய்வம் ஒன்றை நினைக்கிறது,’ மற்றும் ‘பரலோகத்தின் திட்டங்கள் நம்முடைய திட்டங்களை அபத்தமாக்குகின்றன’ என்று கூறும் சில பழமொழிகள் உள்ளன, இவை இந்தக் கருத்தையே மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் நாம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டிருப்பதனாலும், சாத்தானால் போதிக்கப்பட்டு வழிநடத்தப்பட்டிருப்பதனாலும், ‘தேவனே கிடையாது,’ ‘இரட்சகர் என்று யாருமே கிடையாது,’ ‘ஒருவனுடைய தலைவிதி அவனுடைய கைகளில்தான் உள்ளது,’ மற்றும் ‘உன்னுடைய சந்தோஷத்தை நீயே பெற்றுக்கொள்ள வேண்டும்’ போன்ற சாத்தானுடைய தவறான மதக் கருத்துக்களை உண்மையான பழமொழிகளாக நாம் கருதுகிறோம், மேலும் தேவன் இருக்கிறார் என்பதையும், தேவனுடைய ராஜ்யபாரத்தையும் மறுக்க ஆரம்பிக்கிறோம், நமது கடின உழைப்பு மூலமாக நமது சொந்த வாழ்விற்கு திட்டமிட்டு நமக்கான சந்தோஷமான வாழ்வை உருவாக்குவதாக வீணாக நம்புகிறோம். நம்முடைய இலட்சியங்களை அடைவதற்காக, நம்முடைய சொந்த உடல்நலத்தையும் கூட பணயம் வைத்து நம்முடைய நேரம் மற்றும் சக்தி முழுவதையும் செலவழித்து நாம் கடினமாக உழைக்க முயற்சி செய்கிறோம், போராடுகிறோம். ஆனால் இவை அனைத்தினாலும் கிடைக்கும் பலன் என்ன? நாம் விரும்பும் சந்தோஷமான வாழ்வை நாம் பெறுகிறோமா? பலர் தங்கள் சொந்த கைகளின் பெலனையும், பணத்தை விரைவாக சம்பாதிப்பதற்காக வருடக்கணக்கில் தங்கள் கடின உழைப்பையுமே நம்பியிருக்கின்றனர். ஆனாலும், இறுதியில், அவர்களால் தங்கள் தலைவிதியை மாற்ற முடியாமல் போவது மட்டுமின்றி, அவர்களுடைய சொந்த தலைவிதிக்கு எதிரான அவர்களுடைய போராட்டம் அவர்களுக்கு பெரும் சரீர மற்றும் மன உபாதைகளை உண்டாக்குகிறது. தேவன் முழு மனுக்குலத்தின் தலைவிதியையும் ஆளுகை செய்கிறார் மற்றும் ஏற்பாடு செய்கிறார் என்பதை இந்த உண்மைகளின் வாயிலாக நாம் காணலாம். நாம் நம்முடைய சொந்த தலைவிதிகளைக் கட்டுப்படுத்த திராணியில்லாத சிருஷ்டிக்கப்பட்ட அற்ப ஜீவிகளாகவே இருக்கிறோம். மேலும் என்னவென்றால், சாத்தானின் தவறான மதக் கருத்துக்களில் வாழ்வதன் மூலம், நாம் தேவனிடமிருந்து மேலும் மேலும் விலகிச் செல்கிறோம், மேலும் சாத்தானால் அலைக்கழிக்கப்படுவதற்கும் பொல்லாங்கு செய்யப்படுவதற்கும் நாம் வேதனை என்னும் பாதாளத்தில் விழுந்து மடிகிறோம். தேவனுக்கு முன்பாக வந்து, தேவனை ஆராதித்து, தேவனுடைய ராஜ்யபாரத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு கீழ்ப்படிவதன் மூலமாகவும், தேவனுடைய வார்த்தைகளை அதிகமாகப் வாசித்து, சத்தியத்தைப் புரிந்துகொண்டு, அடைவதற்கு சரியான இலக்குகளைக் கொண்டிருப்பதன் மூலமாகவும் மட்டுமே, நம்முடைய வேதனை நிறைந்த வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவித்து சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியும்.”

தேவனுடைய வார்த்தைகளையும் சகோதரியினுடைய ஐக்கியத்தையும் கேட்ட பிறகு, கடந்த சில வருடங்களாக அனுபவித்த என்னுடைய கடினமான அனுபவங்களை மீண்டும் நினைத்துப் பார்த்து, நான் உண்மையிலே சாத்தானுடைய தவறான மதக் கருத்துக்களினால் வழிநடத்தப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். நான் தேவனுடைய ராஜ்யபாரத்தை உணரவும் இல்லை, நம்முடைய தலைவிதிகள் தேவனுடைய கரங்களில் உள்ளன என்பதை அறியவுமில்லை. என்னுடைய கடின உழைப்பு மற்றும் போராட்டத்தின் மூலமாக என்னுடைய தலைவிதியை மாற்றவும் மற்றவர்கள் என்னை மேன்மையாக பார்க்க வைக்கும் ஒரு வாழ்க்கையை வாழவும் முயற்சித்து எனக்குரிய சகலத்தையும் கொடுத்திருந்தேன், ஆனால் என்னுடைய சரீரமோ நோயினால் உருக்குலைந்து போயிருந்தது, மேலும் என்னுடைய வாழ்க்கை துன்பங்களில் ஒன்றாக மாறியிருந்தது. நம்முடைய தலைவிதிகள் தேவனுடைய கரங்களில்தான் உன்ளன என்பதையும், அவற்றின் மீது நமக்கு முற்றிலுமாக எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள தேவனுடைய வார்த்தைகள் எனக்கு உதவின! நான் இந்தக் காரியங்களைப் புரிந்துகொண்டதும், நான் தேவனை வாஞ்சையோடு விசுவாசிக்கவும், நம்பிக்கையற்ற வேலை வாழ்க்கையை விட்டுவிடவும் விரும்பினேன், மேலும் நான் அதக சத்தியங்களைப் புரிந்துகொள்ளவும் விரும்பினேன், ஆகையால் நான் என்னுடைய சகோதரியை சந்தித்து தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஏற்பாடு செய்தேன். அப்போது என்னுடைய வேலையையும் செய்தேன், தேவனுடைய வார்த்தைகளைத் தியானிக்கவும் செய்தேன், மேலும் நான் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய பாடல்களைப் பாடுவதற்குக் கற்றுக்கொண்டேன். இவ்விதமாக வாழ்வது நான் முன்பு உணர்ந்ததை விட என்னை மிகவும் நிம்மதியாகவும் சமாதனமாகவும் உணர வைத்தது.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

என் மீதமுள்ள வருஷங்களுக்கான என் விருப்பத் தேர்வு

சின்ன வயசுலயிருந்தே, என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு, நாங்க மத்த கிராம மக்களால அடிக்கடி கொடுமைப்படுத்தப்படுவோம். என்னோட...

சரியான தெரிவு

நான் ஒரு தொலைதூர மலைப்பகுதியில இருக்குற கிராமத்துல, பல தலைமுறைகளா விவசாயிகளா இருக்குற குடும்பத்துல பிறந்தேன். நான் பள்ளிக்கூடத்துல...

அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி?

நான் ஒரு நெரிசலான தெருவில்நிற்கிறேன், கார்களின் கடுமையான சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருக்கேன், பாதசாரிகள் விரைந்து செல்வதைப் பார்க்கிறேன்,...

பணத்திற்கு அடிமைப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு

ஜிங்வூ, சீனா என்னுடைய இளம் வயதில், என்னுடைய குடும்பம் ஏழையாக இருந்தது, மேலும், என்னுடைய பெற்றோர்களால் என்னுடைய படிப்பிற்குப் பணம் செலுத்த...