நான் எனது போதகரின் உண்மையான சுபாவத்தைப் பார்த்தேன்

ஏப்ரல் 24, 2021

By Nora, Philippines

நான் முதன்முதல்ல ஒரு கிறிஸ்தவனா ஆனது எனக்கு நினைவிருக்கு, எங்க திருச்சபையோட போதகர் சென்னும் அவரோட மனைவியும் என்னைப்பத்தி ரொம்ப உயர்வா நினைச்சாங்க. அவங்க என்னை துதியின் குழுவோட தலைவராவும், ஞாயிறுப்பள்ளி ஆசிரியராவும் ஆக்கினாங்க, எப்பவும் என்மேல அக்கறை வச்சிருந்தாங்க. எனக்கு ஏதாச்சும் சிக்கல் ஏற்பட்டா, இல்லைனா சில பலவீனங்களை உணரும்போதெல்லாம், அவங்க எனக்காக ஜெபிப்பாங்க. திருச்சபையோட மத்த உறுப்பினர்கள் மேலேயும் அவங்க அக்கறை வச்சிருந்தாங்க. யாராவது சோகமா அல்லது பலவீனமா உணரும்போதெல்லாம் அவங்களுக்கு உதவ அவங்க வேதாகமத்தை படிச்சுக் காட்டுவாங்க. அவங்க இரண்டுபேரும் உண்மையிலேயே அன்பானவங்கனும், அவங்கள பெற்றிருப்பது எங்க அதிர்ஷ்டம்னு நான் நெனச்சேன். என்னோட ஆழ்மனசுல, விசுவாசத்துல அவங்க எனக்கு ஆவிக்குரிய பெற்றோர்னு நான் எப்பவும் நெனச்சேன்.

அப்புறம் 2018ல, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த சில சகோதர சகோதரிகளை ஆன்லைனில் சந்திச்சேன். அவங்க சாட்சிய கேட்ட பிறகு, கர்த்தராகிய இயேசு, சர்வவல்லமையுள்ள தேவனா மனுவுருவெடுத்து திரும்பி வந்தருக்கிறார்னு கண்டுபுடிச்சேன். கடைசிக் காலத்துல மனுக்குலத்த நியாயந்தீர்க்கவும் சுத்தப்படுத்தவும் அவர் சத்தியங்கள வெளிப்படுத்தி, 1 பேதுரு 4:17ல இருக்கும் தீர்க்கதரிசனத்தை நிறைவேத்துறார். அது சொல்லுது: “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” எனக்கு சிலிர்த்துடுச்சு, நானும் என் குடும்பமும் கடைசிக் காலத்துக்கான சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய ஆராய முயற்சி செஞ்சோம். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் படிச்சதனால அவையெல்லாமே தேவனுடைய குரல் தான்னும், திரும்பிவந்திருக்கிற கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவன் தான்னும் நாங்க உறுதியாகிட்டோம். கடைசிக் காலத்தோட சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை நாங்க எல்லோரும் ஏத்துகிட்டோம். ஆமா, தேவனுக்கு நன்றி! அப்புறமா, போதகர் சென் என் நினைவுக்கு வந்தார். கர்த்தருடைய வருகைக்காக விழிப்பாய் காத்திருக்கும்படி அவர் எப்பவும் சொல்வாரு. அதனால, கர்த்தர் திரும்பி வந்ததைக் கேட்டு அவர் மகிழ்ச்சியடைவார்னு நான் நினைச்சேன். அவர்கிட்ட அந்த நற்செய்தியைச் சொல்ல முடிவுசெஞ்சேன்.

ஒருமுறை ஒரு கூட்டம் நடக்கும்போது, பாஸ்டர் சென், “நாம கடைசிக் காலத்துல இருக்கோம், தேவன் எந்த நேரத்திலும் திரும்ப வருவார். நாம ஜெபிச்சுகிட்டே விழிப்போட இருக்கணும்,” அப்படின்னு சொன்னார். அவர் இதை சொல்றதக் கேட்டு நான் மிகவும் உற்சாகமடஞ்சேன், நான் உடனே, “கர்த்தர் திரும்பி வந்துவிட்டார் என்பதற்கு சாட்சியா இருக்கிற சில சகோதர சகோதரிகளை சமீபத்துல நான் ஆன்லைன்ல சந்திச்சேன். நான் அவங்ககூட கூட்டங்களில கலந்துகிட்டு இருக்கேன், அவையெல்லாமே உண்மையிலேயே தெளிவூட்டுறதா இருந்திருக்கு,” அப்படினு சொன்னேன். அதுக்கு அவர், “ஆன்லைன் கூட்டங்கள் மிகச் சிறந்தவை, அதெல்லாம் தேவனுடைய வார்த்தைகளை நல்லா புரிஞ்சுக்க நமக்கு உதவும்,” அப்படின்னு பதிலளிச்சார். அப்புறம் அவர் அவரோட பிரசங்கத்தை தொடர்ந்தார். நான் மகிழ்ச்சியடைஞ்சேன், “பாஸ்டர் சென் உண்மையிலேயே சத்தியத்தைத் தேடுபவர்தான். கடைசிக் காலத்தோட தேவனுடைய சுவிசேஷத்தை நான் இப்பவே அவர்கிட்ட பகிர்ந்துக்கணும்,” னு நினைச்சேன். ஆச்சரியம் என்னன்னா, போதகர் சென்னும் அவரோட மனைவியும் சில நாட்களுக்கு அப்புறம் என் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க உள்ளே நுழைஞ்சதும், போதகர் சென் என்கிட்ட முகத்த கடுமையா வச்சுகிட்டு, “நீ ஆன்லைன் கூட்டங்கள் பத்திச் சொன்ன. நீ வேறு திருச்சபைல சேர்ந்துட்டியா?” அப்படினு கேட்டார். அவர் அவ்வளவு வெறுப்பா பேசினத பார்த்து நான் வாயடைச்சுப்போயிட்டேன். நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி, என் அம்மா மகிழ்ச்சியா, “ஆமா, மேய்ப்பரே. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை நாங்க பின்பற்றிகிட்டுவர்றோம். அப்படித்தான் கர்த்தர் திரும்பிவந்துட்டார்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம். அவர் நிறைய சத்தியங்கள வெளிப்படுத்திட்டிருக்காரு, தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பளிக்கும் கிரியையைச் செஞ்சிட்டிருக்காரு,” னு சொன்னாங்க. அதுக்கு போதகர் சென் கடுமையா, “தேவன் திரும்பிவந்துட்டாரா? சாத்தியமே இல்லை! வேதாகமம் தெளிவா தீர்க்கதரிசனம் சொல்லுது: ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). எல்லோரும் பார்க்கும்படியாக கடைசிக் காலத்துல கர்த்தர் ஒரு மேகத்தின் மீது திரும்ப வருவார். அவர் ஏற்கனவே திரும்பி வந்திருந்தா, நாம ஏன் அவரைப் பார்க்கலை?” அப்படினு கேட்டார். என் அம்மா, “கர்த்தருடைய வருகையைப் பத்தின வேதாகம தீர்க்கதரிசனங்கள் நிறைய இருக்கு. அவர் ஒரு மேகத்தின் மீது வெளிப்படையா வருவதோடு கூட, அவர் இரகசியமா வருவது பத்தின வசனங்களும் இருக்கு, வெளிப்படுத்தல் விசேஷம் 16:15, ‘இதோ, திருடனைப்போல் வருகிறேன்,’ வெளிப்படுத்தல் விசேஷம் 3:3, ‘நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்,’ மற்றும் மத்தேயு 25:6, ‘நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.’ அவர் ஒரு திருடன் போல வர்றார் அப்படினா, அவர் யாருக்கும் தெரியாம அமைதியா திரும்பி வர்றார்னு அர்த்தம். கர்த்தர் ஒரு மேகத்தின் மேல வெளிப்படையா வந்தா, எல்லோரும் அவரைப் பார்ப்பாங்க. அது எப்படி ஒரு திருடனைப் போல இருக்கும், மணவாளன் வந்துட்டார்ன்னு யார் உரக்க சொல்லுவாங்க?” ஆத்திரமடைந்த போதகர் சென், “கர்த்தர் இரகசியமாக வர்றார் அப்படிங்கிற உங்க கூற்று மேகத்தின் மீது வருவதற்கான அவரோட தீர்க்கதரிசனங்களுக்கு முரணா இல்லயா? இது வேதாகமத்தோட ஒத்துப்போகலை. கர்த்தர் ஒரு மேகத்தின் மீது வருவதை நாம பார்க்கல, அது அவர் திரும்ப வரலன்னு நிரூபிக்குது. நாங்க இத நம்பமாட்டோம்!”

அவர் உண்மையில் அதை சரியா புரிஞ்சுக்கலனு தோனுச்சு, அதனால நான், “போதகர் சென், இரகசியமா மாம்சத்தில் வரும் அவரைப் பத்தின தீர்க்கதரிசனங்களும், மேகத்தின் மீது பகிரங்கமா வர்றது பத்தின தீர்க்கதரிசனங்களும் உண்மையில முரண்பாடு இல்லை. அவர் திரும்புவது இரண்டு கட்டங்களில நடக்குது. முதல்ல, அவர் இரகசியமா மாம்சத்தில வந்து, மனுக்குலத்தை நியாயந்தீர்ப்பதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் சத்தியங்கள வெளிப்படுத்துறார், மேலும் பேரழிவுகளுக்கு முன்னாடி ஒரு ஜெயம்கொள்ற குழுவை உருவாக்குறார். அது முடிஞ்சதும், அவரோட இரகசிய கிரியை முடியுது அப்புறம் அவர் பேரழிவுகளை அனுப்பி, நல்லவர்களுக்கு பலன் தந்து, பொல்லாதவர்கள தண்டிப்பார். தேவனுடைய எல்லா எதிரிகளையும், சாத்தானுக்கு சொந்தமான அனைவரையும் அவர் அழிப்பார். பெரும் பேரழிவுகள் முடிஞ்சபிறகு தான் அவர் எல்லா தேசங்களுக்கும் ஜனங்களுக்கும் வெளிப்படையா தோன்றுவார்,” அப்படினு சொன்னேன். “தேவன் இங்கே இரகசியமா கிரியை செய்யும் போது அவருடைய குரலைக் கேட்டு, அவருடைய கிரியையைப் ஆராஞ்சு பார்க்கிறவங்க எல்லோரும் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்னாடி வந்து, கடைசிக் காலத்துல அவருடைய நியாயத்தீர்ப்பை ஏத்துக்குவாங்க, அவங்களோட சீர்கேடு சுத்தப்படுத்தப்படுது. இறுதியில அவங்க தேவனுடைய ராஜ்யத்திற்குள்ள கொண்டுவரப்படுறாங்க. அவங்க தான் வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைத்த புத்தியுள்ள கன்னிகைகள். தேவன் இங்கே இரகசியமா கிரியை செய்யும்போது அவரோட சத்தத்துக்குக் கீழ்ப்படியாதவங்களும் சர்வவல்லமையுள்ள தேவனைக் தூஷிச்சு நிராகரிக்கக் கூட செய்யறவங்க புத்தியில்லாத கன்னிகைகளா இருக்காங்க. அவங்க கடைசிக் காலத்தின் தேவனுடைய கிரியை மூலமா வெளிப்படுத்தப்பட்ட அவிசுவாசிகள், அந்திக்கிறிஸ்துக்கள், பொல்லாங்கு செய்பவர்கள். தேவன் ஒரு மேகத்தின் மீது வெளிப்படையா வரும்போது, அவங்க எதிர்த்த சர்வவல்லமையுள்ள தேவன், உண்மையிலேயே திரும்பி வந்த கர்த்தராகிய இயேசு தான் என்பதை அவங்க பார்ப்பாங்க, ஆனா அவங்களோட வருத்தம் ரொம்ப தாமதமா வரும். அவங்க அழுதுகிட்டு இருக்கும்போதே பேரழிவுகளால கொண்டு போகப்பட்டு, தண்டிக்கப்படுவாங்க. இது கர்த்தர் சொன்னதை நிறைவேத்தும்: ‘இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள்(வெளிப்படுத்தல் 1:7). கர்த்தர் இரகசியமா மற்றும் வெளிப்படையா வர்றது பத்தின தீர்க்கதரிசனங்கள் இப்படித்தான் நிறைவேறும்.” என் அம்மா அப்போ ஆர்வத்தோட, “போதகரே, அவன் சொல்வது சரிதான். மனுஷகுமாரன் பல முறை வருவதை வேதாகமம் குறிப்பிடுது. உதாரணத்திற்கு: ‘மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). ‘மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). கர்த்தராகிய இயேசு மனுஷகுமாரனா இருந்தது போல, மனுஷகுமாரன்-ங்கறது மனுவுருவான தேவனக் குறிக்குது. அவர் மனுஷனிடத்தில பிறந்து, சாதாரண மனுஷத்தன்மைய கொண்டிருந்தார். கர்த்தர் தம்முடைய ஆவியானவர் தோற்றத்தில திரும்பியிருந்தா, அவர் மனுஷகுமாரன்னு அழைக்கப்பட்டிருக்கமாட்டார்.” “கர்த்தர், ஆவியில தேவனா திரும்ப வந்திருந்தா, அவரை நிராகரிக்கவோ எதிர்க்கவோ யார் துணிவாங்க? எப்படி அவர் ‘அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது’? கர்த்தராகிய இயேசு, சர்வவல்லமையுள்ள மனுவுருவான தேவனா ஏற்கனவே திரும்பி வந்துட்டார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை நீங்க கவனிக்கணும்.” என் அம்மா பேசியபோது, மேய்ப்பருக்காக சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் பிரதி ஒண்ண எடுத்தாங்க. அவர் அதைப் பார்க்க மறுத்தது மட்டுமல்லாம, கோபமா அடிச்சு நொறுக்கிட்டு, “இது நிச்சயமா தேவனுடைய வார்த்தையே இல்ல. தேவனுடைய வார்த்தைகள் எல்லாமே வேதாகமத்துல இருக்கு. அதுக்கு வெளியே எதுவும் இல்லை!” அப்படினு கத்தினார்.

போதகர் சென் அவரோட சுபாவத்துக்கு மாறா செயல்படுறத கண்டு நான் அதிர்ச்சியடைஞ்சேன், அவர் முகம் கூட கோவத்துல சிவந்திருந்துச்சு. அவர் எப்போதுமே ரொம்ப கனிவா இருப்பார்—அவர் திடீர்னு முற்றிலும் மாறுபட்ட நபராக தோன்றினார். நான் கொஞ்சம் பயப்பட ஆரம்பிச்சேன், அதனால நான் விரைவாக தேவன் கிட்ட மௌனமா ஜெபம் பண்ணினேன், எனக்கு விசுவாசத்த கொடுத்து, ஐக்கியத்த தொடர என்ன வழிநடத்தனும்னு அவர்கிட்ட கேட்டுக்கிட்டேன். அது என்னை கொஞ்சம் அமைதிப்படுத்துச்சு. நான் அவர்கிட்ட ரொம்ப மெதுவாக சொன்னேன், “போதகர் சென், தேவனுடைய வார்த்தைகள் எல்லாமே வேதாகமத்துல தான் இருக்கு வேறு எங்கும் இல்லைங்கிற உங்க கூற்றுக்கு வேதாகம அடிப்படை எதுவுமில்லை. அது உண்மைகளுக்கு ஏற்ப இல்லை. யோவானுடைய சுவிசேஷத்துல, ‘இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்’ (யோவான் 21:25). கர்த்தராகிய இயேசு பூமியில கிரியை செஞ்சு பிரசங்கித்த மூன்றரை ஆண்டுகளில நிறைய சொன்னார், ஆனா நான்கு சுவிசேஷங்களில பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள சொல்ல சில மணி நேரங்கள் தான் எடுக்கும். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் எல்லாமே வேதாகமத்துல பதிவு செஞ்சிருக்க வழியே இல்லைனு இது காட்டுது. தவிர, வேதாகமத்தை தொகுத்தவங்க நிறைய விஷயங்கள விட்டிருக்காங்க, அதனால சில தீர்க்கதரிசிகளோட தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்துல சேர்க்கப்படல. அதுல வேதாகமத்துல சேர்க்கப்படாத தீர்க்கதரிசி எஸ்றா தெரிவிச்ச தேவனுடைய சில வார்த்தைகளும் அடங்கும். அதாவது வேதாகமத்துக்கு வெளியே தேவனுடைய வார்த்தைகள் இல்லைங்கிற கூற்று உண்மையில்லை!”

என் அம்மாவும் ஆர்வத்தோட, “தேவனுடைய சில வார்த்தைகள் வேதாகமத்திலிருந்து விடப்பட்டது மட்டுமில்லை, ஆனால் கடைசிக் காலத்துல தேவனுடைய வார்த்தைகளும் இருக்கு! கர்த்தராகிய இயேசு இப்படி தீர்க்கதரிசனம் சொன்னார்: ‘இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). வெளிப்படுத்துதல்ல பலமுறை இப்படி தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருக்கு: ‘ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்(வெளிப்படுத்தல் அத்தியாயம் 2, 3). ஆட்டுக்குட்டியானவர் ஒரு சுருளைத் திறக்கிறதையும் இது குறிப்பிடுது. இவை எல்லாமே கர்த்தர் திரும்பி வரும்போது அதிக வார்த்தைகள பேசும் அவரோட தீர்க்கதரிசனங்கள். வேதாகமத்துக்கு வெளியே தேவனுடைய வார்த்தைகள் எதுவும் இல்லைனா, இந்த தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும்? சர்வவல்லமையுள்ள தேவன் நியாயத்தீர்ப்பின் கிரியைகள செய்றார், மனுக்குலத்தை சுத்தப்படுத்தி முழுசா இரட்சிக்கும் எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்துறார். தேவனுடைய நிர்வாக திட்டத்தோட எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார், மனுஷனோட சீர்கேட்டின் சத்தியத்தையும், தேவனை எதிர்க்கிற மனுஷனோட வேரையும் வெளிப்படுத்தி நியாயந்தீர்த்திருக்கார். உண்மையான மனந்திரும்புதலின், ராஜ்யத்திற்குள்ள நுழைவதின் பாதையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளோட பேசுவதையும், ஆட்டுக்குட்டியானவர் சுருளைத் திறக்கிறதையும் பத்தி வெளிப்படுத்துதல்ல தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறது சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைக் குறிக்குது. இந்த புதிய வார்த்தைகளை முன்கூட்டியே வேதாகமத்துல எப்படிப் பதிவு செஞ்சிருக்க முடியும்? தேவனுடைய வார்த்தைகள் எதுவும் வேதாகமத்துக்கு வெளியே இல்லைங்கிற கூற்று நியாயமற்றதில்லையா? தேவன் தான் சிருஷ்டிப்பின் கர்த்தர், எப்போதும் பாயும் ஜீவத்தண்ணீர்களுள்ள நீரூற்று. ஆனா வேதாகமத்துல பதிவு செய்யப்பட்டிருக்கிற தேவனுடைய கிரியையும் வார்த்தைகளும் உண்மையில வரையறுக்கப்பட்டவை தான். நம்மோட கருத்துகளோட அடிப்படையில தேவனை வேதாகமத்தோட எல்லைக்குள்ள வரையறுக்க முடியாது. அது சத்தியத்தையும், தேவனுடைய சொந்த கிரியையையும் வார்த்தைகளையும் மறுப்பதா இருக்கும்!”

இது போதகர் சென்னை ரொம்ப கோபப்படுத்திருச்சு, ஆனா அவரால அதை மறுக்க முடியல. அவர், “உன் சொந்த நலனுக்காகத்தான் இதை ஆராய நான் உங்களை அனுமதிக்கல. நீங்க வாழ்க்கையில முதிர்ச்சியற்று இருக்கீங்க, தவறா வழிநடத்தப்பட்டுடுவீங்க. உடனே அறிக்க பண்ணி தேவன்கிட்ட மனந்திரும்புங்க!” னு சொன்னார். நான் விரைவா சொன்னேன், “போதகர் சென், சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுங்கிறத சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள ஆராஞ்சனாலும் அதிகமா படிச்சதனாலும் மட்டுமே நாங்க முடிவு செஞ்சோம். அவருடைய வார்த்தைகளை நீங்க படிச்சதில்ல, அதனால சில சந்தேகங்களும் கருத்துக்களும் இருப்பது இயல்பு. கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்(மத்தேயு 7:7). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை நீங்க தேடவும், படிக்கவும் விரும்புற வரை, உங்க குழப்பங்கள் எல்லாம் மறையாது.” நான் பேசி முடிச்ச உடனேயே திருச்சபையை சேர்ந்த சகோதர சகோதரிகளோட தொடர்புத் தகவலை அவரோட மனைவி என்னிடம் கேட்டாங்க, அவங்க அப்புறமா அதைப் பார்த்துக்கிறதா சொன்னாங்க. அவங்களோட வார்த்தையை நம்பி, நான் அதை அவங்களுக்குக் கொடுத்தேன். அவங்க அதை எடுத்துகிட்டு உடனே வெளியேறிட்டாங்க.

அவங்க இருவரும் வெளியேபோன அப்புறம் நான் கொஞ்ச நேரம் அமைதியற்றவனா உணர்ந்தேன். நான் எப்போதும் அவங்களை நல்ல, தாழ்மையான மனுஷங்களாத்தான் நெனச்சேன். கர்த்தருடைய வருகையை கவனிச்சு பாக்க அவங்க அடிக்கடி எங்ககிட்ட சொல்லுவாங்க, ஆனா கர்த்தருடைய வருகையைப் பத்தின செய்தியைக் கேட்டப்போ அவங்க அதுல அக்கறையே காட்டல. அவங்க பிடிவாதமா வேதாகமத்தோட வார்த்தைகளையே பிடிச்சிட்டிருந்தாங்க. அவங்க பிரசங்கித்ததையே ஏன் அவங்க கடைப்பிடிக்கல? நான் ரொம்ப ஏமாற்றமடைஞ்சேன், வருத்தப்பட்டேன், ஆனா கடைசிக் காலத்தோட தேவனுடைய கிரியையை அவங்க ஆராய்வாங்கன்னு நம்பி, அவங்களுக்காக மௌனமா ஜெபம் பண்ணினேன். வேதாகமத்தைப் பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்து அப்படிங்கிற சுவிசேஷ திரைப்படத்திற்கான இணைப்பை அவங்களுக்கு அனுப்பினேன், இது அவங்களோட கருத்துக்களை விட்டு, சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையைப் பார்த்து, சீக்கிரமா தேவனை வரவேற்க வைக்கும்னு நம்பினேன். நான் எதிர்பார்ப்பால நிறைஞ்சிருந்தேன், ஆனா உண்மையில் எதிர்பாராத ஒன்னு நடந்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை பத்தி அவதூறு பரப்பும் எல்லா வகையான வதந்திகளையும் அவங்க எனக்கு அனுப்பினாங்க, என்னை அதிலிருந்து விலக்கி வைக்க. நான் பாதிக்கப்படலனு தெரிஞ்சதும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உறுப்பினர்களை துன்புறுத்தும் செய்திகளை அவங்க அனுப்பினாங்க. அவங்க முகநூல்லயும் நுழஞ்சு சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை அவதூறாவும் தாக்கியும் ஏராளமான வதந்திகளை வெளியிட்டு, சத்திய வழி பத்தி விசாரிப்பதில இருந்து மத்தவங்களை தவறா வழிநடத்தி, தடுத்தாங்க. அவங்க அதோட மட்டும் நிறுத்திக்கல. மத்தவங்க என்கூட தொடர்பு வச்சுக்கக் கூடாதுனு வீடு வீடா போய் சகோதர சகோதரிகள எச்சரிச்சாங்க, என்னை நியாயந்தீர்த்து, என்னைப்பத்தி தவறா பேசினாங்க. நிறைய பேர் அந்த தவறான எண்ணத்தை நம்பி, என்ன விட்டு விலகுனாங்க. சிலர் எனக்கு குற்றம்சாட்டுகிற செய்திகளை அனுப்பினாங்க, சிலரை நான் வழியில சந்திச்சப்ப கூட என்கூட பேச மறுத்துட்டாங்க. நான் சிலரைப் பார்க்கச் சென்றபோது அவங்க கதவ கூட திறக்குல. இது எனக்கு ரொம்ப வருத்தத்த கொடுத்துச்சு. நான் கடந்த காலத்தில இந்த சகோதர சகோதரிகளோட நெருக்கமா இருந்தேன், ஆனா இப்போ போதகரோட பொய்களை நம்பி அவங்க என்னைத் தவிர்த்தாங்க, புறக்கணிச்சாங்க. இது எல்லாமே நான் முன்னாடி ரொம்ப உயர்வா நினைச்ச போதகரால செய்யப்பட்டதுனு என்னால நம்ப முடியல. நான் கஷ்டப்பட்டேன், உள்ளுக்குள்ள ரொம்ப பலவீனமா உணர்ந்தேன். என்னால அதை கண்டுபிடிக்க முடியல. நான் எந்த தப்பும் செய்யல. கடைசிக் காலத்தோட தேவனுடைய கிரியையை ஏத்துக்கிட்டேன் அவ்வளவுதான். போதகர் ஏன் என்னை அப்படி நடத்தணும்?

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைச் சேர்ந்த ஒரு சகோதரி அதைப் பத்தி அறிஞ்சப்ப, அவங்க எனக்கு உதவியையும் ஆதரவையும் வழங்கினாங்க, எனக்காக தேவனுடைய வார்த்தைகளின் பத்தியை வாசிச்சாங்க. “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு அடியும் வெளிப் பார்வைக்கு ஜனங்களுக்கிடையேயான செயல்பாடுகளாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால், மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால், ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்கும் நடக்கும் யுத்தம் இருக்கும்; ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான். யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் கிரியையினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவை. தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் சாத்தானுக்கும் தேவனுக்குமான யுத்தம் இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). அப்போ எனக்கு புரிஞ்சுச்சு, போதகரோட மோசமான நடத்தையும், திருச்சபையோட மத்த உறுப்பினர்கள் என்னை தனிமைப்படுத்தினது எல்லாம் சாத்தானோட சோதனைகளில் ஒன்றுனு. நான் சத்திய வழியை விட்டுட்டு தேவனுக்கு துரோகம் செஞ்சு, தேவனோட கடைசிக் காலத்தின் இரட்சிப்ப இழக்கணும்னு சாத்தான் விரும்பறான். சாத்தான் ரொம்ப இழிவானவன்! நான் நினைச்சேன், “சர்வவல்லமையுள்ள தேவன்தான் கர்த்தராகிய இயேசுனு நான் ஏற்கனவே உறுதியாக விசுவாசிப்பதால, நான் என்ன சிரமங்களை சந்திச்சாலும் சரி நான் கடைசி வரை அவரை வழுவாமல் பின்பற்றணும்,” அப்படினு.

அப்புறம் அந்த சகோதரி இந்த வசனத்தைப் பகிர்ந்தாங்க: “நாம மத்தவங்களைப் பகுத்தறிய தேவன் இந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்துவார். தேவனுடைய வருகைய ஜனங்க விரும்ப ஆரம்பிக்கும் அணுகுமுறை, சத்தியத்தையும் தேவனையும் குறிச்ச அவங்க மனப்பான்மைய காட்டுது, அவங்க சாராம்சத்த வெளிப்படுத்துது.” அப்புறம் அவங்க தேவனுடைய வார்த்தைகளோட இன்னொரு பத்தியை வாசிச்சாங்க. சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார், “பரிசேயர்கள் இயேசுவை, ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிய விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், மாறாக ஜீவிதத்தின் சத்தியத்தைத் தேடவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவிதத்தின் வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்கள் தேவனின் ஆசீர்வாதத்தை எவ்வாறு பெற முடியும்? அவர்கள் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் செயல்பாட்டை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை வீணாகப் போற்றும் தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் திமிர் பிடித்தவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உங்கள் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுள்ளதாக இருந்தாலும், உங்கள் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீங்கள் கிறிஸ்து அல்ல என்பதே. இந்தப் பார்வைகள் போலித்தனமானவை மற்றும் கேலிக்குரியவை அல்லவா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”). அதுக்கப்புறம், தேவனிடமிருந்து வந்த இந்த வார்த்தைளோட வெளிச்சத்தில அவங்க அதிக வசனங்களைப் பகிர்ந்துகிட்டாங்க, மேலும் மதகுருக்களோட நடத்தை குறித்தும் கொஞ்சம் சொன்னாங்க. அவங்க எப்போதுமே வேதாகமத்தை நல்லா அறிந்திருக்கிறதாலயும், பல ஆண்டுகளா தேவனுக்கு ஊழியஞ்செய்ய கடுமையா உழைத்ததாலேயும், சபை கூடுகையை நேசித்ததாலும், கர்த்தருடைய வருகையை பத்தி கவனமாக இருக்கும்படி எப்பவும் சொல்லுறதாலேயும், அவங்க சத்தியத்தை நேசித்தாங்கனும், கர்த்தருடைய வருகைக்காக ஏங்கினாங்கனும் நான் எப்பவும் நினைச்சேன். ஆனா நான் நினைச்சதைப் போல அது கொஞ்சங்கூட இல்லைனு உண்மை எனக்குக் காட்டிடுச்சு. அவங்களோட தாழ்மையான, அன்பான தோற்றம் ஜனங்களை முட்டாளாக்கவும் ஏமாத்தவும் ஒரு முகப்பா மட்டுமே இருந்துச்சு, அவங்க மாயக்கார பரிசேயர்களவிட எந்த விதத்துலயும் வேறுபட்டவங்க இல்ல. பரிசேயர்களும் உண்மையிலேயே பக்தியுள்ளவர்களாகத் தோன்றினாங்க. அவங்க ஒவ்வொரு நாளும் ஜெப ஆலயங்களில வேதவசனங்களை விளக்கினாங்க, மத்தவங்க தாங்க செய்றதப் பாக்கணும்னு தெருவில ஜெபம் பண்ணாங்க. மேசியா வர்றதுக்காக அவங்க எப்போரும் காத்திருந்தாங்க, ஆனா கர்த்தராகிய இயேசு தோன்றி, தெளிவா தேவனிடமிருந்து வந்த சத்தியங்கள வெளிப்படுத்தி, பல அடையாளங்களையும் அதிசயங்களையும் காட்டின போது, இவை எல்லாமே தெளிவா தேவனிடமிருந்து வந்தவை, பரிசேயர்கள் அதைப் பத்தி அறிய விரும்பல. அவங்க பிடிவாதமா வேத நியாயப்பிரமாணங்கள தூக்கி நிறுத்தி, தேவனுடைய கிரியையைக் கண்டிக்க வேத வார்த்தைகளைப் பயன்படுத்தினாங்க. கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைய அவங்க உதவினாங்க, தேவனால் தண்டிக்கப்பட்டாங்க. என்னோட போதகரும் அப்படிப்பட்டவர் தான். அவர் தாழ்மையோட தேவனுக்கு ஊழியம் செய்வதாவும், தேவன் வரதுக்குக் காத்திருப்பது போலவும் தெரிஞ்சாரு, ஆனா சர்வவல்லமையுள்ள தேவன் சத்தியத்தை வெளிப்படுத்துறார், நியாயத்தீர்ப்பின் கிரியைய செய்றார்னு நல்லா தெரிஞ்சும், அவர் இன்னும் அத கவனிச்சுப் பார்க்கல. அவர் தன்னோட சொந்த கருத்துக்களையும், வேதாகம வார்த்தைகளையும் நல்லா பிடிச்சுகிட்டு, தேவனுடைய புதிய கிரியையை எதிர்த்து கண்டனம் செய்றார். தேவன் ஒரு மேகத்தின் மீது வரலைனா, அவர் கர்த்தராகிய இயேசு இல்லைனு சொன்னார், வேதாகமத்துல எழுதப்படாத எதுவும் தேவனுடைய கிரியையா இருக்க முடியாதுன்னும், இன்னும் பலவற்றையும் சொன்னார். சத்திய வழியை மத்தவங்க ஆராஞ்சு பாப்பத தடுக்க அவர் தன்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்தார். அவரும் அவருடைய மனைவியும் கர்த்தருடைய வருகைக்காக உண்மையிலேயே ஏங்கல, ஆனா சத்தியத்தை இகழ்ற, தேவனுடைய தோன்றுதலையும் கிரியையையும் இகழ்ற நவீனகால பரிசேயர்களா இருந்தாங்க. கர்த்தராகிய இயேசு பரிசேயர்களைக் கண்டனம் செய்ததை இது எனக்கு நினைவூட்டுச்சு, அவர் சொன்னார், “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்(மத்தேயு 23:27-28). இவை எல்லாத்தையும் புரிஞ்சுக்கிறது, மதகுருமார் நடந்துகிட்ட விதம் குறித்து எனக்கு சில பகுத்தறிவ கொடுத்துச்சு. ஆனால் அடுத்து நடந்த விஷயம் அவங்களோட உண்மையான சுபாவங்கள எனக்கு தெளிவா காட்டுச்சு.

ஒரு நாள் பிற்பகல்ல, மூப்பர் வாங்கும் என்னோட முன்னாள் திருச்சபையைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளும் என் வீட்டிற்கு வந்து, ஒரு வார்த்தை கூட பேசாம என்னை கடுமையா முறைச்சுப் பார்த்தாங்க. அப்புறம் மூப்பர் வாங் தன்னோட தொலைபேசியை வெளியே எடுத்து, ஒரு எண்ணை டயல் செஞ்சு என்கிட்ட கொடுத்தார். நான் அதை வாங்கி காதுல வச்சதும், போதகர் சென் கோவமா எல்லா வகையான கெட்ட விஷயங்களையும் சொல்லி, அப்புறம், “எங்க திருச்சபை உறுப்பினர்களோட தொடர்பு கொள்ளவும், எங்க திருச்சபையில சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவிசேஷத்தை பரப்புறதுக்கும் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கு, என்னோட ஆடுகளைத் திருடாதே!” அப்படினு எச்சரிச்சார். நான் கோபத்தோட அவர்கிட்ட, “கர்த்தருடைய வருகையின் அற்புதமான செய்தியை நான் ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது? சத்திய வழியைத் தேடுவதிலிருந்து ஜனங்களை ஏன் தடுக்க முயற்சிக்கிறீங்க? அவங்க தேவனுடைய ஆடுகள். தேவனுடைய குரலைக் கேட்க அவர்களை ஏன் அனுமதிக்க மாட்டீங்கிறீங்க?” அப்படினு கேட்டேன். தொலைபேசியை வச்சப்புறம், மூப்பர் வாங்கும் மத்தவங்களும் என்கிட்ட கொஞ்சம் பேசிட்டு புறப்பட்டாங்க. அதுக்கப்புறம் போதகர் என் குடும்பத்தினரை தொந்தரவு செஞ்சிட்டே இருந்தார். திருச்சபையில எங்க பெயர்கள கூட வெளிப்படையா கறைபடுத்தினார். என் குடும்பம் துன்புறுத்தலைத் தாங்க முடியாம பலவீனமாவும் எதிர்மறையாவும் மாறுச்சு. போதகரோட பொல்லாத செயல்கள் என்னை ரொம்ப கோபப்படுத்திச்சு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை நான் அதிகம் படிச்சேன். “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்கு சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துகளே தவிர வேறு யாருமல்ல என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள், மதகுருக்களோட உண்மையான சுபாவங்களயும் தேவனுக்கு எதிரான அவங்களோட எதிர்ப்பு குறித்தும் எனக்கு அதிக தெளிவு கொடுத்துச்சு. தேவனோட மந்தைய காப்பாத்தற மாறி நடிக்கிறாங்க. எங்கள தேவனுடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள விடாம ஆனா உண்மையில, எல்லோரும் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவாங்கனும், இனி யாரும் சொல்றதைக் கேட்க மாட்டாங்கனும் பயப்படுறாங்க. அப்புறம் அவங்க தங்களோட அந்தஸ்தை இழக்க நேரிடும். அதனாலதான் விசுவாசிகள சத்திய வழியை ஆராஞ்சு பாக்கறத தடுக்க அவங்க தங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்றாங்க. இது கர்த்தராகிய இயேசுவினுடைய வார்த்தைகளைப் பத்தி என்னை சிந்திக்க வச்சுது: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை(மத்தேயு 23:13). “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்” (மத்தேயு 23:15). மதகுருமார்கள் தாங்க சத்திய வழியைத் தேட மறுக்கறது மட்டுமல்லாம, சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசிக் கால கிரியையைக் அவதூறாவும், இழிவாவும் பேசவும், விசுவாசிகளை தவறா வழிநடத்தவும் தங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சாங்க. உண்மைகளை அறியாத நிறைய பேர் சர்வவல்லமையுள்ள தேவனைக் இழிபடுத்தரதுல அவங்களோட சேர்ந்துட்டாங்க. அவங்க ஒன்றா தண்டிக்கப்பட, தங்களைப் போலவே அந்த ஜனங்களையும் நரகத்தோட குமாரன்களா மாத்தறாங்க இல்லையா? அவங்க உண்மையிலேயே பயங்கரமா தீங்கிழைகிறவங்க. மத உலகில் மதகுருமார்கள் சத்தியத்தை வெறுக்கிறாங்க. அவங்க கடைசிக் காலத்தோட தேவனுடைய கிரியையை எதிர்க்கிறாங்க, இழிவு படுத்துறாங்க. மத உலகில் மதகுருமார்கள் சத்தியத்தை வெறுக்கிறாங்க. அவங்க கடைசிக் காலத்தோட தேவனுடைய கிரியையை எதிர்க்கிறாங்க, இழிவு படுத்துறாங்க. தேவனுடன் சண்டையிடுறாங்க. கர்த்தராகிய இயேசு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சபித்த பரிசேயர்களைப் போலவே அவங்க இருக்கிறாங்க. அவங்க தேவன் தன்னோட கடைசிக் காலத்துல வெளிப்படுத்தின பொல்லாத ஊழியக்காரங்களாவும், அந்திக்கிறிஸ்துக்களாவும் இருக்காங்க! அவங்களோட சாத்தானிய, தேவன எதிர்க்கிற சுபாவத்தையும் மற்றும் சத்தியத்தின் மீதான வெறுப்பு எல்லாத்தையும் நான் முழுமையாவும் தெளிவாவும் பார்த்தேன். அவங்க என் வழியில குறுக்க நிற்க எவ்வளவு முயற்சித்தாலும் சர்வவல்லமையுள்ள தேவன நம்பிக்கையோட பின்பற்ற நான் தீர்மானித்தேன்! என் குடும்பத்தில் உள்ள மத்த அனைவருக்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பதன் மூலம் பகுத்தறிவு கிடைச்சுது, மேலும் இனி அவங்கனால தங்கள கட்டுப்படுத்த முடியாதுன்னும் உணர்ந்தாங்க.

அவங்க என்னைத் துன்புறுத்துவதும் என்னைப் பத்தி தப்பா பேசிட்டு இருந்த அந்த காலத்த நாட்கள நினைச்சுப் பார்த்தா, அவங்க என்னைத் துன்புறுத்துவதும் என்னைப் பத்தி தப்பா பேசிட்டு இருந்த அந்த காலத்த நாட்கள நினைச்சுப் பார்த்தா, அவங்களோட உண்மையான சுபாவங்கள நான் பார்த்தேன்—அவங்க சத்தியத்தை வெறுக்கிறாங்க, தேவனை எதிர்க்கிறாங்க. அவங்களால நான் ஒருபோதும் தவறா வழிநடத்தப்படவோ கட்டுப்படுத்தப்படவோ மாட்டேன். பரிசேயர்களுடனும் அந்திக்கிறிஸ்துகளுடனுமான ஒரு ஆவிக்குரிய யுத்தத்துல, நாம ஜெபித்து தேவன் மீது சார்ந்து கொண்டா சத்தியத்தைப் புரிஞ்சுக்கிறதுக்கும் சாத்தானோட சோதனையை ஜெயிக்கறதுக்கும் நமக்கு வழிகாட்ட அவர் தன்னோட வார்த்தைகளைப் பயன்படுத்துவார்னு நான் தெரிஞ்சுகிட்டேன். என்னோட விசுவாசம் வளர்ந்துச்சு. அந்த அனுபவத்துக்கு நன்றி! சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சுவிசேஷ சாட்சிகள் | தேவனிடத்தில் திரும்பும்படி பொய்களை உடைத்து முன்னேறுதல்

முக்கிய கதாபாத்திரமான நிங் சியாவோ, சிசிபி-யின் பொய்களால் ஏமாற்றப்பட்டு சர்வவல்லமையுள்ள தேவன் மீதான தன் மனைவியின் விசுவாசத்தை எதிர்க்கிறார்....

பரலோக ராஜ்யத்திற்கான பாதையை நான் கண்டுபிடித்தேன்

முக்கிய கதாபாத்திரமான அவள், தன் சிறு வயதிலிருந்தே, தன் பெற்றோரின் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பின்தொடர்ந்து வந்தாள். திருமணமான பிறகு, அவளும்,...

Leave a Reply