தேவனிடத்தில் திரும்பும்படி பொய்களை உடைத்து முன்னேறுதல்
2017 ஆரம்பத்தில என் மனைவியும், மகளும் தென் கொரியாவில என்னோட ஒண்ணா இருக்க வந்தாங்க. நான் ரொம்ப உற்சாகம் அடைஞ்சாலும், இங்க இருக்கிற வித்தியாசமான வாழ்க்கை முறையினாலும் மொழி காரணமாவும், இந்த சூழலோட என் மனைவி ஒத்துப் போகல. குறிப்பா, அவ அவளோட வயசான பெத்தவங்களயும், அவ நேசிச்ச வேலையயும் விட்டுட்டு, எந்த நண்பர்களும் இல்லாத ஒரு புது இடத்துக்கு வந்திருந்தா. எல்லாமே அவளுக்கு அறிமுகம் இல்லாமயே இருந்துச்சு. அவ எப்போதும் சோகமாவும், அதிகமா பேசாமயும் இருந்தா. அவ கஷ்டப்படுவத என்னால பாக்க முடிஞ்சது, ஆனா அவள எப்படி ஆறுதல்படுத்தறதுன்னு எனக்கு தெரியல. மார்ச் மாசம் ஒரு நாள் அவ தேவனை விசுவாசிக்கிறதாவும், கூடுகைகள்ல கலந்து கொள்ள ஆரம்பிச்சிருக்கறதாவும் சொன்னா. அத பெரிய விஷயம்னு நான் நினைச்சேன். என் பாட்டி கூட ஒரு விசுவாசியா தான் இருந்தாங்க. அதனால இதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. கொஞ்ச நாளுக்கப்பறம் அவ எப்போதும் நல்ல மனநிலையில இருக்கிறதயும், அவளோட முழு நடத்தையும் முதல்ல இருந்தத விட வித்தியாசமா இருந்தத நான் கவனிச்சேன், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. கொஞ்ச நாள்ல, நான் அவளோட திருச்சபைய பத்தி ரொம்ப ஆர்வமானேன். இவ்ளோ பெரிய மாற்றத்தை ஒருத்தருக்குள்ள அது எப்படி கொண்டு வந்துச்சுன்னும் ஆச்சரியப்பட்டேன்.
ஒருநாள் நான் அவ கிட்ட கேட்டேன் அவ எந்த திருச்சபைக்கு போறான்னு அவ சொன்னா, அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை ன்னு. அது உடனே ஷான்டாங்கில் நடந்த 2014 ஜாயுவான் சம்பவத்த பத்தி என்ன நினைக்க வைச்சுது. எனக்கு உண்மையாவே ரொம்ப கோவம் வந்துச்சு நான் அவகிட்ட ரொம்ப கடுமையா சொன்னேன், “இனிமே உனக்கும் அந்த விசுவாசிகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது. நீ மறுபடியும் அவங்களோட தொடர்பில இருப்பத நான் பார்த்தேன்னா உன் ஃபோனை ஒடச்சி நொறுக்கிடுவேன்!” அவ குழப்பத்தோட, நான் ஏன் அவ வழியில குறுக்கிடறன்னு கேட்டா. நான் கோபமா, “ஏன்? இது உன்னோட நல்லதுக்காகவும், நம்ம குடும்பத்தோட நல்லதுக்குக்காகவும் சொல்றேன். உனக்குத் தெரியாதா சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கு எதிரா சிசிபி நிறையத் தீவிரமான நடவடிக்கைகள எடுத்து அத அடக்குதுன்னு? 2014 ல நடந்த மே 28 ஜாயுவான் வழக்க பத்தி உனக்கு தெரியாதா? இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜாங் லிடாங் இந்த திருச்சபையோட உறுப்பினரா இருந்தாருன்னு ஆன்லைன் சொல்லுது. நீ அந்த ஜனங்களோட நேரத்த செலவழிச்சேன்னா சிங்கத்தின் வாய்க்குள்ள உன்ன நீயே விட்டுக்கிட்ட மாதிரியாகிடும் இல்லையா?” அவ உறுதியா “ஜாங் லிடாங்கும் மத்தவங்களும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய சேர்ந்தவங்க இல்லயா—ஆன்லைன்ல சொல்ற விஷயங்கள எல்லாம் நீங்க நம்ப முடியாது. நான் இரண்டு மாசங்களுக்கு மேல, அந்த திருச்சபைல இருக்கிற சகோதர சகோதரிகளோட தொடர்பு வச்சிருக்கேன். அவங்க எல்லாரும் ஒழுங்குள்ள ஜனங்க மத்தவங்க கிட்ட அன்பாவும் நேர்மையாவும் இருக்கிறவங்க. யாருக்கு கஷ்டங்கள் வந்தாலும் அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவராங்க. ஆன்லைன்ல சொல்வது போல எல்லாம் எதுவும் இல்ல” ன்னு சொன்னா. ஆனா அவ அதயெல்லாம் சொல்வத கேட்ட உடனே நான், “நீயே ஆன்லைன்ல போயி பாரு, அப்போ நான் சொல்றது உண்மையா இல்லையான்னு உனக்கே தெரியும்” ன்னு சொன்னேன்.
அப்பறம் என் மனைவி என்ன ஒரு இடத்துல உட்கார வெச்சு, “நீங்க காரியங்கள நல்லா யோசிக்கிற ஒருத்தர். நீங்க இத நியாயமா அணுகி, உண்மைகளின்படி பேசணும்—நீங்க கதையோட ஒரு பக்கத்த மட்டும் கேக்க கூடாது!” அவ இன்னும் சொன்னா, “1989 ல நடந்த தியனென்மென் சதுக்க கண்டன ஆர்ப்பாட்டங்கள் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? மாணவர்கள் ஊழலுக்கு எதிரா, தேசபக்தியோட எதிர்ப்பு தெரிவிச்சு, ஜனநாயக சுதந்திரங்களுக்காக போராடினாங்க, ஆனா சிசிபி சில தெரியாத ஆட்கள மாணவர்களா நடிக்க வைச்சு, அவங்கள பொருட்கள அடிச்சு நொறுக்க வைச்சு, கொள்ளையடிச்சு, எரிக்க வைச்சு, ராணுவ வாகனங்கள கவிழ்க்க வெச்சாங்க. நிறைய குழப்பங்கள உருவாக்கி, அப்புறமா சிசிபி அந்த குற்றங்களுக்காக மாணவர்கள பொய்யா குற்றஞ்சாட்டுச்சு. அதுக்கப்புறம் சிசிடிவி, ரேடியோ போன்ற ஊடகங்கள சிசிபி பயன்படுத்தி அவங்களோட அறிக்கைய அதிகமா ஒலிபரப்புனாங்க, அந்த மாணவர்கள பத்தி அவங்க எதிர்ப்புரட்சி கலகக்காரர்கள்-ன்னு அவதூறு பரப்பினாங்க. அப்புறம் ஆயிரக்கணக்கான உயிருள்ள மாணவர்கள அவங்களோட பீரங்கிய கொண்டு கொடுமையாத் தாக்குனாங்க.” அதுக்கப்புறம் அவ சொன்னா, “சிசிபி-யோட வரலாறு தெரிஞ்சவங்க யாருக்குமே அது நீதிக்கு எதிரான வரலாறு கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சின்னு தெரியும். யாராவது வேற வேற அரசியல் கருத்துக்களோட அல்லது கண்ணோட்டத்தோட இருந்தாங்கன்னா அந்த குழுக்கள இல்ல ஜனங்கள அவங்க எப்பவும் தாக்கி, கண்டனம் பண்ணுவாங்க, அவங்கள அடக்கி, முழுசா அழிக்க கூட செய்வாங்க. ஒவ்வொரு தடவையும் சிசிபி ஒரு மதநம்பிக்கைய, ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கத்த, இல்ல சிறுபான்மை இன எதிர்ப்புகள கடுமையா அடக்கும்போதும், அவங்க முதல்ல பொய்யான வழக்குகள தயாரிச்சு அத தொடங்குவாங்க, ஒரு பெரிய பொது ஆர்ப்பாட்டத்த உருவாக்குவாங்க, ஜனங்களை தூண்டி விட்டு, அப்பறம் கடுமையான அடக்குமுறைய பயன்படுத்துவாங்க. அது உண்ம.” “மே 28 ஜாயுவான் வழக்குகூட சிசிபி வெறுமனே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை குற்றப்படுத்துனது தான்—இன்னொரு பொய்யான வழக்க ஜாக்கிரதையா ஜோடிச்சுட்டாங்க.” ஆனா நான் அவ பேச்சக் கேக்கமாட்டேன். நான் கோவமா சொன்னேன், “எனக்குக் கவல இல்ல, நீ சர்வ வல்லமையுள்ள தேவனை இனி நம்பக் கூடாது. எனக்கு நம்ம குடும்பத்தோட பாதுகாப்பு முக்கியம் நான் உன்னயும், நம்ம மகளயும் எந்த ஆபத்தில இருந்தும் பாதுகாக்கணும். வேற எதுவும் எனக்கு முக்கியமில்ல. நான் கடைசியா உனக்கு சொல்றேன்: இனி உனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. பேசாம வீட்ல ஒரு நல்ல மனைவியா, அம்மாவா இரு, இல்லனா உன்ன வீட்ல அடைச்சு வெக்க வேண்டியிருக்கும், அப்பறம் என்ன குறை சொல்லாத.” அப்புறம் நான் கதவ அடிச்சு சாத்திட்டு கோபத்துல சீக்கிரமா வெளிய போனேன்.
நான் ரோட்டில நடந்து போகும்போது ரொம்ப கஷ்டமா உணர்ந்தேன். பத்து வருஷ திருமண வாழ்க்கயில, ஒரு நாள் கூட அவகிட்ட நான் அந்த மாதிரி கோபப்பட்டது இல்ல. அவள சந்திச்சதில இருந்து, நாங்க காதலிச்சு, திருமணம் பண்ணின வரைக்கும், நாங்க எங்க பெத்தவங்களோட எதிர்ப்பு, கலாச்சார வேறுபாடுகள், வயசு வித்தியாசம், அப்பறம் தூரமான உறவு இப்படி நிறைய காரியங்கள சந்திச்சிருக்கோம்: எல்லா கஷ்டமான காலங்களயும் நாங்க தாண்டினோம் அவ எங்க குடும்பத்துக்காக பல ஆண்டுகளா நிறைய கஷ்டப்பட்டுருக்கா. உண்மையில அத பாக்கறதுக்கே எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனா தேவனை நம்புவதுக்காக மட்டுந்தான் அவளிடத்துல நான் கோபப்பட்டேன். நான் அத செஞ்சிருக்கக் கூடாதுன்னு எனக்குத் தெரியும ஆனா அது எங்க குடும்பத்துக்கு நல்லதில்லன்னு நான் கண்டுபிடிச்சேன். அவ ஏன் என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறா? நான் என் ஃபோன பார்த்தேன் எங்க பொண்ணு அழகா சிரிக்கிற, நாங்க மூணு பேரும் இருக்குற சந்தோஷமான புகைப்படத்த பார்த்தேன். எனக்கு நானே சொல்லிகிட்டேன், “நான் இந்த குடும்பத்தோட பாதுகாவலன், நான் அவங்கள பாதுகாக்கணும். ஒருத்தரும் அவங்கள கஷ்டப்படுத்த முடியாது.”
கொஞ்ச நாள்ல, என் மேல இருக்குற என் மனைவியோட உணர்வுகள நான் அழிச்சுருவனோன்னு பயந்தேன், அதனால தேவன் சம்பந்தமா எதயும் என்கிட்ட பேச வேண்டாம்னு அவ கிட்ட சொன்னேன். வெளிப்புறத்தில் நாங்க நல்லா இருக்கிற மாதிரி இருந்தாலும், எங்களுக்குள்ள ஏற்கனவே ஒரு இடைவெளி ஆரம்பிச்சிருந்தது.
ஒரு நாள் நான் என் வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்த போது, ரொம்ப சந்தோஷமான இசையோட சத்தமும் என் மனைவியும் என் மகளும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சிட்டு இருந்த சத்தமும் அறையில இருந்து கேட்டுச்சு, நான் ரொம்ப ஆர்வத்தோட நினைச்சேன், “இவ்ளோ நாளா வீட்ல இப்படிப்பட்ட சந்தோஷமான சத்தத்த நான் கேக்கவே இல்லயே. இப்ப எந்த மாதிரியான பாட்டு அவங்கள இப்படி சந்தோஷப்படுத்தி இருக்கும்?” நான் ரொம்ப மெதுவா கதவத் திறந்தேன். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை தயாரித்த ‘தேவனுடைய உண்மையான அன்பு’ என்ற ஒரு பாட்டும் நடனமுமுள்ள வீடியோவ கணினித் திரையில பார்த்தேன். ஆறு வாலிப பெண்கள் சந்தோஷமா நடனமாடி, அவ்வளவு உணர்வோட பாடிட்டிருந்தாங்க, குறிப்பா அவங்களோட முகங்கள் அவ்ளோ சந்தோஷப் புன்னகைகளால நிறைஞ்சிருந்தது என்ன உடனடியா உள்ள இழுத்துச்சு. எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்துச்சு, நான் நினைச்சேன், “என்ன மாதிரியான திருச்சபை இது, எந்த மாதிரியான ஜனங்க இவங்க? இந்த பாட்டும் நடனமும் ஏன் இவ்வளவு ஈர்க்கறதாயும் பரவரதாயும் ரொம்ப ஆறுதலாவும் இருக்கு? அவங்க உண்மையிலேயே மோசமானவங்களா இருந்தா, அவங்களுக்கு எப்படி இவ்ளோ அன்பான, உண்மையான புன்னகைகள் இருக்கும்?” நான் உள்ள வர்றத என் மகள் பார்த்துட்டு, எனக்காக என் மனைவிய வேற ஒரு பாட்டு நடன வீடியோவ போட சொன்னா. அதுக்கு பேரு, தேவன் அவரது மகிமையை கிழக்கிற்கு கொண்டு வந்துள்ளார். என்னால அவள தடுக்க முடியல—அதுக்கு முன்னாடி எங்க வீட்ல அவ்ளோ சந்தோஷமான சூழ்நிலைய அடையறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என் மகள பிடிச்சுக்கிட்டு, என் மனைவி பக்கத்துல உட்காந்து நானும் பாக்க ஆரம்பிச்சேன். தட்டு நடனம் போல ஒரு பாணியில இருந்த அந்த வீடியோ என்ன உண்மையிலேயே ஈர்த்துச்சு அதுல நடனமாடுறவங்க பறக்குற கழுக போல அழகா ஆடுனாங்க. அது கம்பீரமாவும், ரொம்பா கவர்றதாவும் இருந்துச்சு.
நான் ரொம்ப ஈடுபாடா இருக்கிறத பார்த்த என் மனைவி என்கிட்ட சொன்னா “இது எல்லாமே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் பண்ணுனது. இவங்க யாருமே வல்லுநர்கள் இல்ல.” நான் ரொம்ப ஆச்சரியப்பட்டு, வியப்படஞ்சேன் “இது எப்படி சாத்தியம்? சரியான பயிற்சி இல்லாதவங்களால எப்படி இவ்ளோ நம்பமுடியாத அளவுக்கு நல்லா ஆட முடியும்? அதோட இந்த வீடியோக்கள்ல இவ்ளோ நேர்மறையான உணர்வு இருக்கே. அவை நம்பிக்கையூட்டுது, மனச தொடுது, உற்சாகப்படுத்துது. பொல்லாத ஜனங்களுக்கு எப்படி இவ்வளோ நேர்மறையான சக்தி இருக்கும்?” “இது ஏன் நான் ஆன்லைன்ல பாத்ததுல இருந்து சுத்தமா வேற மாதிரி இருக்கு? உண்மையா என்ன நடக்குது?” சிரிச்சுகிட்டே, என் மனைவி சொன்னா, “இது ஆச்சரியமானது! தேவனோட சொந்த கிரியையும், வழிகாட்டுதலும் இல்லாம எப்படி பயிற்சி இல்லாதவங்களால அந்த மாதிரி நடனமாட முடியும்? அவங்க தயாரித்த திரைப்படங்கள நீங்க பாத்தா இன்னும் ஆச்சரியப்படுவீங்க. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை பரிசுத்த ஆவியானவரோட கிரியைய கொண்டிருக்கு—தேவனுடைய ஆசீர்வாதம் அதுக்கிருக்கு. அதனால தான் அவங்களோட நடனங்களும் திரைப்படங்களும் ரொம்ப சிறப்பா தயாரிக்கப்படுது, அவங்க திரைப்படங்கள்ல ஐக்கியப்படற சத்தியங்களும் ஜனங்களுக்கு ரொம்ப ஆசீர்வாதமா இருக்குது.” அவ அப்புறம், “ஆன்லைன்ல இருக்குற எல்லா எதிரான பிரச்சாரமும் சிசிபி திருச்சபைய பத்தி பொய்கள பரப்பறதுதான். அது எதுவுமே உண்ம இல்ல. ஜனங்கள தவறா வழிநடத்தவும், அவங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை நிராகரிச்சு, எதிரியா பாக்க வைக்கறதுக்காக சிசிபி அந்த திருச்சபைய பற்றி அவதூறு பரப்புது. அப்புறம் அவங்க தேவனுடைய கிரியைகள ஆராய்ந்து தேவனுடைய இரட்சிப்ப இழக்க துணிய மாட்டாங்க” ன்னு சொன்னா.
அவ சொன்னத கேட்டது என்னோட ஆர்வத்த உண்மையாவே தூண்டுச்சு. அது எப்படிப்பட்ட திருச்சபைனும் ஆன்லைன்ல சொன்னது உண்மையா இல்லையானும் எனக்கு நானே கேள்வி கேட்டேன். அவளோட விசுவாசத்த தொடர்ந்து கடைப்பிடிக்க அனுமதிக்கணுமான்னு எனக்கு தெரியல. திரும்பவும் அதே போராட்டம் என் உள்ளத்தில பொங்கி எழும்புச்சு. இந்த உள்ளான போராட்டத்துக்கப்பறம், நானே போய் அத பாக்கணும்னு முடிவெடுத்தேன். என்னால வாயிற்காவலன் மாதிரிதான் செயல்பட முடிஞ்சது. திருச்சபையில இருக்கிறவங்க சரியா நடந்துக்காதயோ இல்ல தேவையில்லாத ஏதாவத செய்யறதயோ பார்த்தேன்னா, அப்பவே அவள அங்கிருந்து கூட்டிட்டு வந்துருவேன் திரும்ப போகவே விடமாட்டேன். ஆன்லைன்ல சொல்லப்பட்டத போல அங்க இல்லன்னா, அவ வழியில இனி நான் குறுக்கிட மாட்டேன்னு முடிவெடுத்தேன். அந்த வார இறுதியில, நா என் மனைவிகிட்ட போய் நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைப் பார்க்கணும்னு சொன்னேன்—அவ ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடஞ்சா.
நாங்க அங்க போனவுடனே, சகோதர சகோதரிகள் எங்கள அன்போட வரவேற்றாங்க, அவங்க நடந்துகிட்டத வெச்சு அவங்க அன்பானவங்கனும் நேர்மையானவங்கனும் நெனச்சேன். என்னோட பதட்டமும் கவலயும் படிப்படியா குறஞ்சது. அப்பறம் ஒரு சகோதரி சியாஜெனின் கதை அப்படிங்கற ஒரு காணொளி இசைய வாசிச்சாங்க. நான் ஆர்வத்தோட அத கவனிச்சேன். சியாஜென்ல இருந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் என் மனச ஆழமா தொட்டுச்சு, அது என்னோட சொந்த வாழ்க்கைய பத்தி என்ன யோசிக்க வைச்சுது நான் சின்னபையனா இருந்தபோது என் குடும்பத்தில நடந்த காரியங்களால இடத்துக்கு இடம் அலஞ்சு, எல்லா வகையான கொடுமையையும் அவமானத்தயும் அனுபவிச்சு, எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் ஏதோ வாழணும்னு வாழ்ந்தேன். இப்போ, நான் சம்பாதிக்கறதுக்காக கடுமையா உழைச்சு, எல்லா வகையான காரியங்களயும், நிறைய ஏற்றத்தாழ்வுகளையும் கடந்த வருஷங்கள்ல கடந்து வந்து, சோர்வாவும் சோகமாவும் உணர்ந்தேன், ஆனா என் மனைவி, நண்பர்கள் முன்னால ரொம்ப தைரியமானவனா நடிச்சேன். என் மனசுல இருக்குற வலிய உண்மையா யார் தெரிஞ்சுக்க முடியும்? அந்த இசை நிகழ்வோட கடைசியில இந்த பாட்டு பாடப்பட்டுச்சு: “பெருந்துன்பத்திற்குள்ளான இந்த ஜனங்களின்மேல் சர்வவல்லவர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார். அதே நேரத்தில், வெகுகாலமாய் மனிதகுலத்திடமிருந்து பதில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்ததினால், உணர்வில்லாமல் இருக்கும் இந்த ஜனங்களின்மேல் அவர் சலிப்படைந்திருக்கின்றார். நீ இனிமேலும் பசியோடும், தாகத்தோடும் இருக்காதபடி, உன்னை உணர்வடையச்செய்ய, உனக்குத் தண்ணீரையும், ஆகாரத்தையும் கொண்டுவர, உன் இருதயத்தையும், உன் ஆவியையும் தேட அவர் விரும்புகின்றார். நீ தளர்வடைந்திருக்கும்போது, இந்த உலகத்தின் நம்பிக்கையின்மையை நீ உணர ஆரம்பிக்கும்போது, நீ நம்பிக்கையை இழக்கவோ அழவோ வேண்டாம். கண்காணிப்பாளரான சர்வவல்லவர் நீ வரும்போது உன்னை அணைத்துக்கொள்வார்” (ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்). பாடப்பட்ட ஒவ்வொரு அடியும் ஒரு தாய் ரொம்ப காலத்துக்கு முன்னாடி தொலைஞ்சு போன தன் குழந்தைக்கு நேரா கைய நீட்டுறதப் போல உணர வெச்சது. நான் ஒரு அன்பின் அழைப்ப உணர்ந்தேன்—நான் உண்மையிலேயே நம்பமுடியாத அளவுக்கு அசைக்கப்பட்டேன். அது முடிஞ்சவுடனே, நான் உண்மையிலேயே மனமார சொன்னேன், “அது ஒரு அற்புதமான இசை!” என் மனைவி என்ன பார்த்து உணர்ச்சி பொங்க சொன்னா, “சியாஜென் கதையால நீங்க தொடபட்டிருக்கிறது என்னன்னா, தேவன் உங்க மனச தொட்டிருக்காரு!” “மே 28 ஜாயுவான் வழக்கு உங்கள்ல தாக்கத்த ஏற்படுத்துச்சுனும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை பத்தி உங்களுக்கு நிறைய தவறான புரிதல்கள் இருந்துட்டு இருக்குன்னும் எனக்குத் தெரியும். எங்க பாதுகாப்ப பத்தி நீங்க அக்கறப்படறீங்கன்னும் எனக்குத் தெரியும், அதனால இன்னிக்கு அந்த வழக்குல உண்மையில என்ன நடந்துச்சுன்னு நாம பார்க்கலாம்.”
அதுக்கப்புறம் சகோதர சகோதரிகள் எனக்காக, மே 28 ஜாயுவான் வழக்கின் பின்னால இருக்கிற உண்மை வெளிப்படுத்தப்பட்டது என்ற காணொளிய காண்பிச்சாங்க. அது வழக்கோட பல முக்கிய சந்தேகத்துக்குரிய அம்சங்கள வெளிப்படுத்துச்சு, அதுக்கப்புறம் அடுக்கடுக்கா பிரிச்சு காண்பிச்சுது. அது சிசிபியோட பொய்கள தோலுரிச்சு, உண்மைகள வெளிப்படுத்துச்சு. குற்றஞ்சாட்டப்பட்ட ஜாங் லிடாங்கும், ஜாங் ஃபேனும், நீதிமன்றத்தில தெளிவா சொன்னத நான் பார்த்தேன், “எனக்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கும் எந்த தொடர்பும் எப்போதும் இருந்ததில்ல. ஜாவோ வெய்சனின் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எதிரா தீவிர நடவடிக்கைகள அரசு எடுக்குது, நாம் விசுவாசிக்கிற சர்வவல்லமையுள்ள தேவனுக்கு விரோதமா இல்ல.” அவங்க சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் அங்கத்தினர்கள் இல்லைங்கறத அவங்க சொந்த வாயாலேயே மறுத்தாங்க. அவங்க திருச்சபையுடன் சுத்தமா இணைக்கப்படலன்னும் சொன்னாங்க. ஆனால் சிசிபி சந்தேகப்படற நபர்களோட சாட்சியங்கள புறக்கணிச்சு, உண்மைக்கு எதிராக போயி, உண்மைய அப்படியே தலைகீழா மாத்திடுச்சு, இந்த குற்றம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில இருக்கிற ஜனங்களால தான் செய்யப்பட்டதுன்னு வலியுறுத்துச்சு. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை துணிஞ்சு அவதூறு செய்யறதுக்காக சொல்லப்பட்ட வெக்கமில்லாத பொய் இல்லையா அது?
ஒரு சகோதரி இந்த ஐக்கியத்த என்னோட பகிர்ந்துட்டாங்க: “சிசிபி பல வருஷமா அதோட மோசடிக்காக பேர் போனது அதுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒரு பயங்கரமான பொது மதிப்பு இருக்கு. உலகமெங்கிலும் அதிகமான ஜனங்க அதோட உண்மையான தன்மையைப் பார்திருக்காங்க, இனி யாரும் இத நம்ப மாட்டாங்க.” அவங்க இன்னும் சொன்னாங்க, “கம்யூனிச கட்சியினால சீனா சர்வாதிகார முறையில ஆட்சி செய்யப்படுதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். நீதித்துறை சுயாட்சியோ இல்ல பத்திரிக்கை சுதந்திரமோ இல்ல. சீன ஊடகங்களும், நீதிமன்றங்களும் சிசிபியின் அரசாங்கத்தால முழுசா கட்டுப்படுத்தப்பட்டிருக்கு அவை அதோட சர்வாதிகாரத்துக்கு வெறும் ஊதுகுழலாவும், கருவியாகவும் தான் இருக்குது. இது பரவலா அறியப்பட்ட உண்ம. ஜாயுவான் சம்பவத்துக்கு மூணு நாளைக்கப்பறம், எந்த நீதிமன்ற விசாரணையோ, தீர்ப்போ இல்லாம, தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஊடகங்கள பயன்படுத்தி சிசிபி ஒரு பொது கண்டனத்த வெளியிட்டுச்சு. ஜூன் மாச மத்தியில, அவங்களோட ‘நூறு நாள் போர்’ தொடங்குனாங்க, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கு எதிரா அவங்கள ஒடுக்கவும் தாக்கவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள வெளிப்படையா அணிதிரட்டினாங்க. அவங்க திருச்சபைய குறிவைச்சு விரிவான, நாடு தழுவிய தேடல்கள மேற்கொண்டாங்க கிறிஸ்தவர்கள கைது செஞ்சாங்க. ஷான்டாங்குல மே 28 ஜாயுவான் வழக்கானது, மதநம்பிக்கைய ஒடுக்கறதுக்காகவும் மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய முழுசா அழிக்கவும் சிசிபியால ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யான வழக்கு என்பது தெளிவாகுது.”
இத கேட்ட போது நான் நினைச்சேன்: “சிசிபி ரொம்ப வெறுக்கத்தக்கது. அது உண்மைய அப்படியே தலைகீழா திருப்புது, எதார்த்தத்த சிதைக்குது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை குற்றப்படுத்துது. இதனால உண்மைய தெரியாத ஜனங்க அதோட பொய்களை நம்பி திருச்சபைய தவறா புரிஞ்சுக்கறாங்க. நானும் கூட சிசிபியோட பொய்கள நம்பிட்டேன். ஆனா எனக்கு இன்னும் புரியாத ஒன்னு என்னென்ன, சிசிபி ஏன் திருச்சபைய வெறித்தனமா துன்பப்படுத்துது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை மேல அந்த கொலை வழக்க சுமத்த அவ்வளவு மெனக்கெடுது, அதோட உறுப்பினர்களை கைது செய்யுது. உண்மையிலேயே என்ன நடக்குது?” இந்த எண்ணத்துல நான் என் குழப்பத்த பகிர்ந்துட்டேன்
ஒரு சகோதரி பதிலளிச்சாங்க, “சிசிபி சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை அதிக வெறித்தனமா ஒடுக்குது, அது ஒரு நாத்திகக் கட்சியா இருக்கிறதால, சபை மேல பொய்யான கொலை வழக்க போடப் பாத்துச்சு. அதோட நிறுவனர் கார்ல் மார்க்ஸ் ஒரு சாத்தானியவாதி அதோட, ஜனங்க சிசிபிய நம்பி, அதுக்கு கீழ்ப்படியறதுக்காகவும், அத இரட்சகரா நம்பறதுக்காகவும், எல்லா மதநம்பிக்கைகளையும் அழிக்க விரும்புது. மார்க்ஸ் தேவனை எதிர்த்த நிஜ-உலகப் பிசாசு.” அவ இன்னும் சொன்னா, “சிசிபி ஆட்சிக்கு வந்ததில இருந்து அது தேவன வெளிப்படையா, மறுத்து, கண்டிச்சு, தூஷணம் செஞ்சிருக்கு அது கிறிஸ்தவத்த பொய்யானதுன்னு சொல்லுது. அது வேதாகமங்கள பறிமுதல் செஞ்சு அழிக்குது, அவைகள பொய்யான இலக்கியம்னு சொல்லுது. மதக்கூடுகைகள ஒடுக்குவதற்காக அவங்கள பொய்யானதுன்னு சொல்லுது. இப்போ, இந்த கடைசி நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்றார் மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை மூலமா நிறைய சத்தியங்கள வெளிப்படுத்துறார். இந்த புத்தகம் எல்லா மதங்களையும், மதப்பிரிவுகளயும் உலுக்கியிருக்கு. சத்தியத்தை நேசிக்கிற ஏராளமான உண்மையான விசுவாசிகள், சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள படிச்சிருக்காங்க அவை சத்தியம்-னும் தேவவனோட குரல்-னும், சர்வவல்லமையுள்ள தேவன் திரும்ப வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு-னும் உணர்ந்திருக்காங்க. ஒருத்தர் பின் ஒருத்தரா, அவங்க சர்வ வல்லமையுள்ள தேவன ஏத்துக்கிட்டு, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக வந்துருக்காங்க. வெறும் 20 வருஷங்ற குறுகிய காலத்துக்குள்ள, சீனாவோட முக்கிய இடங்கள்ல இருக்கிற லட்சக்கணக்கான ஜனங்க கடைசி காலத்தோட சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைகள ஏத்துக்கிட்டாங்க. அநேக ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கிறதயும், தன்னை ஒருத்தரும் நம்பாம, பின்பற்றாம இருக்கிறத பார்த்தபோது, சிசிபி கொதிச்சு போய்ட்டாங்க. கடைசி காலத்தோட சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைகள வேணும்னே கண்டனம் பண்ணாங்க, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைய குற்றப்படுத்த பொய்கள ஜோடிச்சாங்க. அது நிறைய ரகசிய ஆவணங்கள வெளியிட்டுச்சு, ஆயுதமேந்திய காவலர் கூட்டங்கள திரட்டிச்சு. கடைசி நாட்களோட தேவனோட சுவிசேஷத்த தடுக்கிறத வீணான முயற்சியில சீனா முழுசும் இருந்த திருச்சபைகள்ல இருக்கிற கிறிஸ்தவங்கள கைது செஞ்சு ஒடுக்கறதில ரொம்ப உறுதியா இருந்தாங்க அது தேவனுடைய கிரியையயும், சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையையும் அழிக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கு. இது சத்தியத்தயும், தேவனயும் வெறுக்கிற சிசிபியோட சாத்தானிய, பேய்த்தனமான தன்மைய தெளிவா அம்பலப்படுத்துது. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் சொல்வது போல, ‘தேவனைப் பற்றிய எல்லாவற்றையும் சடுதியில் அழித்துவிடவும், மறுபடியும் அவரைத் தீட்டுப்படுத்தவும், படுகொலை செய்யவும் அவன் விரும்புகிறான். அவருடைய கிரியையை கிழித்தெறிந்து, சீர்குலைக்கும் நோக்கத்தை அவன் கொண்டுள்ளான். அவனால் எப்படி தேவனை சம அந்தஸ்தில் இருக்க அனுமதிக்க முடியும்? பூமியில் உள்ள மனிதர்களிடையே தான் செய்யும் கிரியைகளில் தேவன் தலையிடுவதை அவனால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அவனுடைய கோரமான முகத்தை வேஷங்கலைக்க அவனால் எப்படி தேவனை அனுமதிக்க முடியும்? தனது கிரியையை சீர்குலைக்க அவனால் எப்படி தேவனை அனுமதிக்க முடியும்? மிகுந்த கோபத்துடன் இருக்கும் இந்தப் பிசாசு எப்படி பூமியிலுள்ள அவனுடைய ஏகாதிபத்திய நீதிமன்றத்தைத் தேவன் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியும்? அவருடைய உயர்வான வல்லமைக்கு அவன் எப்படி மனதார தலைவணங்க முடியும்? அவனுடைய கோரமான முகம் அவனுடைய உண்மையான தன்மையின்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் ஒருவர் சிரிக்க வேண்டுமா அல்லது அழ வேண்டுமா என்று தெரியவில்லை, அதைப்பற்றி பேசுவது உண்மையாகவே கடினமானதாகும். இதுவே அவனுடைய சாராம்சம் அல்லவா?’ (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (7)”).”
அதுக்கப்புறம் அந்த சகோதரி, கம்யூனிசத்தின் பொய்கள் அப்படிங்கிற ஒரு திரைப்படத்த காண்பிச்சாங்க. அதுல இருந்த தேவனுடைய வார்த்தைகள்ல ஒரு பத்தி, உண்மையாவே என்ன அசைச்சுது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன் அடைய வேண்டுமென்று பிரயாசப்படுகிற வழியில் எந்த நாடோ அல்லது எந்த அதிகாரமோ நிற்க முடியாது என்று நாம் நம்புகிறோம். தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்து, தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, தேவனுடைய திட்டத்திற்கு இடறலுண்டாக்கி, பலவீனப்படுத்துபவர்கள் இறுதியில் தேவனால் தண்டிக்கப்படுவார்கள். தேவனுடைய கிரியைக்கு எதிராக நிற்பவன் நரகத்திற்கு அனுப்பப்படுவான்; தேவனுடைய கிரியையை எதிர்க்கும் எந்த நாடும் அழிக்கப்படும்; தேவனுடைய கிரியையை எதிர்க்க எழுந்த எந்த தேசமும் இந்த பூமியில் இல்லாமல் நிர்மூலமாக்கப்படும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்”). அவரோட வார்த்தைகள்ல இருந்து என்னால தேவனோட அதிகாரத்தையும், மகத்துவத்தையும் உணர முடிஞ்சுது. எந்த மனுஷனாலயும், எந்த விதத்திலயும் தேவனோட கிரியைகள தடுக்க முடியாது. சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையை அவமதிக்கவும், கண்டனம்பண்ணவும் சிசிபி தன்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சாலும், திருச்சபையிலிருக்கிற கிறிஸ்தவர்கள காட்டுத்தனமா கைது செஞ்சு, துன்புறுத்தினாலும், அப்பவும் அவங்க தேவன பின்பற்றுவதலயும், சுவிசேஷத்த அறிவிக்கிறதலயும் விடாப்பிடியா இருக்காங்க. அவங்க நிறைய நிறைய சுவிசேஷ திரைப்படங்களையும், பாடல் பாடுற, நடனமாடுற காணொளிகளயும் உருவாக்கறாங்க, அநேக ஜனங்கள் சர்வ வல்லமையுள்ள தேவன விசுவாசிக்கிறாங்க. மனுஷனிடத்துல இருந்து வர்ற எதனாலயுமே இப்படிப்பட்ட தீவிரமான உபத்திரவத்தின்கீழ, இவ்வளவு சீக்கிரமா வளந்திருக்க முடியாது. இது நிச்சயமா தேவனிடத்திலிருந்து வந்ததுன்னும், உண்மையான வழின்னும், ஆராஞ்சு பாக்குறதுக்கு தகுதியானதுன்னும் எனக்கு தெரியும். இது எல்லாத்தயும் புரிஞ்சுகிட்டது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைப் பத்தின என்னோட குழப்பங்களயும் தவறான புரிதல்களயும் தீத்து வைச்சது. என் இருதயத்தில இருந்து ஒரு பெரிய பாரத்த இறக்கி வெச்ச மாதிரி நான் உணர்ந்தேன்.
நான் என் மனைவிய பார்த்து சொன்னேன், “நீ சர்வ வல்லமையுள்ள தேவன விசுவாசிக்கிறது சரிதான். நா புரிஞ்சுக்காம, பகுத்தறிவு இல்லாம இருந்தேன் குருட்டுத்தனமா சிசிபியோட பொய்கள நம்பி, உன் வழியில குறுக்கிட்டேன். நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு.” அவ கண்கள் கண்ணீரால நிறஞ்சு, அவ உணர்ச்சி பொங்க, “சிசிபியோட பொய்களால நீங்க ஏமாறாம, குழப்பத்தில இருந்து வெளியே வர முடிஞ்சதுக்காக தேவனுக்குத் தான் நன்றி! இது தேவனோட வழிநடத்தலும், தலைமைப் பண்புமாகும்.”
அதுக்கப்புறம் என்னைக்காச்சும் சர்வவல்லவமையுள்ள தேவனுடைய திருச்சபையால உருவாக்கப்பட்ட காணொளிகள என் மனைவியோட சேர்ந்து பாத்தேன், அவ தன்னோட விசுவாசத்த பத்தி பேசறத கேட்கக் ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம், என்னோட உடல்நில ரொம்ப மோசமாச்சு, சபையிலிருந்து சகோதர சகோதரிகள் எங்களப் பார்க்க வந்து, எங்களுக்கு ரொம்ப உதவி செஞ்சாங்க. இப்படிப்பட்ட அன்பில்லாத, அக்கறை இல்லாத சமூகத்தில, சகோதர சகோதரிகளோட உண்மையான உதவுற குணம் நாங்கள்லாம் ஒரே சந்தோஷமான குடும்பம்னு உண்மையா என்னை நினைக்க வைச்சுது. அவங்கள பத்தி தெரிஞ்ச கொஞ்ச நாளுக்கப்பறம், அவங்க ஆழமான அன்புள்ள ஜனங்களா இருந்ததயும், அவங்களோட பரஸ்பர காரியங்கள்ல தேவனோட வார்த்தைகள சார்ந்தவங்களாவும், நேர்மையானவங்களாவும், நீதியுள்ளவர்களாவும், அவங்க பேச்சிலயும் செயல்லயும் கண்ணியமானவங்களாவும் இருந்ததயும் நான் பார்த்தேன். என்னோட வேல செய்தவங்கள காட்டிலும் அவங்க வித்தியாசமா இருந்தாங்க. இந்த உலகத்தில அவங்கள மாதிரி ஜனங்கள் இல்லன்னு தான் சொல்லணும். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள், உண்மையாவே ஜனங்கள மாற்ற முடியும், சரியான பாதையில் நம்மள நடத்தும்னு நான் உணர்ந்தேன். மேலும் இந்த திருச்சபை அன்பால நிறைஞ்சது, ஜனங்கள உள்மனசுல கனிவா உணர வைச்சுது. நான் சந்தோஷமா கடைசி நாட்களோட சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியைகள ஏத்துகிட்டேன். நான் கடந்த காலத்தில சிசிபியோட பொய்களால குருடாக்கப்பட்டு, என் மனைவியோட விசுவாசப் பாதையில குறுக்க நின்னத நெனச்சு பார்த்தேன், ஆனா என்ன இரட்சிக்கறதுல இருக்கிற நம்பிக்கைய தேவன் விடவே இல்லை. சகோதர சகோதரிகளால எங்கிட்ட பகிரப்பட்ட தேவனோட வார்த்தைகள் மூலமா, சிசிபியோட பொய்களால நான் ஏமாறாம, அவங்களுக்குப் பின்னாடி இருந்த கபடமான உண்மை நிலைய தெளிவாக பாக்க தேவன் என்ன அனுமதிச்சாரு. அவருக்கு முன்னாடி அவர் என்னை நடத்துனாரு. எனக்கான தேவனோட இரட்சிப்புக்காக நான் நன்றி செலுத்தறேன்!
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?