Christian Testimony | பரலோக ராஜ்யத்திற்கான பாதையை நான் கண்டுபிடித்தேன் (Tamil Subtitles)

டிசம்பர் 10, 2020

முக்கிய கதாபாத்திரமான அவள், தன் சிறு வயதிலிருந்தே, தன் பெற்றோரின் கிறிஸ்தவ விசுவாசத்தைப் பின்தொடர்ந்து வந்தாள். திருமணமான பிறகு, அவளும், அவளுடைய கணவரும் திருச்சபையில் தங்களின் பணியை ஒன்றாகத் தொடங்கினர். கடந்த சில ஆண்டுகளில், தான் எப்போதும் பாவஅறிக்கை செய்வதற்காகவே கர்த்தரிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறதையும், ஆனாலும் தன்னால் பாவம் செய்வதை நிறுத்த முடியாததையும், கர்த்தருடைய வார்த்தைகளின்படி தன்னால் நடக்க இயலாததையும் அவள் கண்டுபிடிக்கிறாள். மேலும் அவளால், அவளுடைய கணவனிடத்தில் சகிப்புத்தன்மையுடனோ, பொறுமையுடனோ நடந்துகொள்ள முடிவதில்லை. தேவனுடைய வார்த்தையாகிய: "நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக" (லேவியராகமம் 11:44). என்பதை நினைக்கிறாள். தேவன் பரிசுத்தராயிருக்கிறார், பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாது, ஆகவே அவள் தனக்குள்ளே கேள்வி கேட்கிறாள்: பாவத்தில் வாழ்கிற தன்னைப்போல் ஒருத்தியால் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியுமா? இது அவளுக்கு வேதனை அளிக்கிறது, அவள் கர்த்தரிடத்தில் எப்போதும் ஜெபிக்கிறாள். இறுதியில், இந்தக் மனக்குழப்பத்திலிருந்து அவள் எப்படி விடுவிக்கப்படுகிறாள், சுத்திகரிக்கப்பட்டு, பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்கான பாதையை அவள் எப்படிக் கண்டுபிடிக்கிறாள்? நாம் இணைந்து அவளுடைய கதையைக் கேட்போம்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க