ஆவணப்படம் | சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றல் மற்றும் கிரியை (பகுதி ஒன்று)

அக்டோபர் 30, 2020

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு கூறினார், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17). (© BSI) மற்றும் வாக்குத்தத்தம் செய்தார், "சீக்கிரமாய் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 22:7). (© BSI) இரண்டாயிரம் ஆண்டுகள் நம்பிக்கையின் மூலமாகவும், மற்றும் இரண்டாயிரம் ஆண்டுகள் காத்திருப்பின் மூலமாகவும்… கிறிஸ்தவர்களின் தலைமுறைகள் கர்த்தராகிய இயேசுவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அனைத்து மனிதகுலமும் இரட்சகர் வருவதற்காகவும் மற்றும் மனிதகுலத்திற்கு முழுமையான இரட்சிப்பைக் கொண்டு வரவும் ஏங்கின. உலகம் அதன் இருண்ட நிலையில் இருந்த பொழுதும், தேவனுக்கு விரோதமாய் எதிர்த்து நிற்பதில் சாத்தானின் தீய சக்திகள் மிகவும் கொடூரமாகவும், மூர்க்கமாகவும் இருந்தபோது, சீனாவின் கிழக்கில் விடியல் வந்தது. 1991இல், அந்த அசாதாரண ஆண்டு, மனுவுருவான மனுஷகுமாரன், சர்வவல்லமையுள்ள தேவன், சத்தியத்தை வெளிப்படுத்தவும் கிரியை புரியவும் வீட்டுத் திருச்சபைகளில் தோன்றினார். அங்கே அவர் தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்புப் பணியை நிறைவேற்றத் தொடங்கினார்.

இந்த ஆவணப்படம் முதன்மையாக சர்வவல்லமையுள்ள தேவன் எவ்வாறு இல்லத் திருச்சபைகளின் நடுவில் தோன்றினார் என்றும் அவரது கிரியையைச் செய்யத் தொடங்கினார் என்றும் அவருடைய வார்த்தைகளை உச்சரித்தார் என்றும் உண்மையான வரலாற்றைச் சித்தரிக்கிறது. சர்வவல்லமையுள்ள தேவனின் இந்த இன்றைய வார்த்தைகளில் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் பகிர்ந்துள்ளதைப் போல, அவர்கள் படிப்படியாக சத்தியத்தைப் புரிந்துக் கொள்வதற்கும், கடைப்பிடிப்பதற்கான வழியைப் அடைவதற்கும், பரிசுத்த ஆவியானவரால் மனிதகுலத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஆனந்தத்தையும் சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்கள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க