என் குடும்பத்தின் துன்புறுத்தலை நான் எப்படி எதிர்கொண்டேன்

செப்டம்பர் 28, 2023

நான் சின்னவளா இருந்தப்போ, என் அம்மா அடிக்கடி: “ஒரு பொண்ணுக்கு, ஒரு நல்ல கணவனும் ஒரு இணக்கமான குடும்பம் அமையறத விட சிறந்த வாழ்க்க எதுவும் இல்ல. இந்த விஷயங்களால மட்டும்தான் ஒரு பொண்ணு மகிழ்ச்சியா வாழ முடியும்”னு சொல்லுவாங்க. இந்தச் சிந்தனை முறை என் மனசுல ஆழமா பதிஞ்சுது, நான் வளந்ததும் என்ன நல்லா பாத்துக்குற ஒரு நல்ல கணவர கண்டுபிடிக்க நான் ஏங்குனேன். ஆனா நான் விரும்புன மாதிரி விஷயங்க நடக்கல. என்னோட முதல் கல்யாணம் மகிழ்ச்சிகரமா இல்ல. அது கர்த்தராகிய இயேசு மீதான என்னோட விசுவாசத்துக்கு என்னை வழிநடத்திச்சு. கர்த்தரோட கிருபை மூலமா, என் மனசு கொஞ்சம் ஆறுதலடைஞ்சுது, ஆனா என் விசுவாசம் காரணமா என் கணவர் என்னை அடிக்கடி அடிப்பாரு, என் விசுவாசத்த தொடர்ந்து பின்பற்றுறதுக்காக அவர விவாகரத்து செய்யுறத தவிர எனக்கு வேற வழியில்லாம இருந்துச்சு. அப்புறம், யாங் அப்படிங்கற திருச்சபை சக ஊழியர் அறிமுகம் செஞ்சு வச்சது மூலமா, சகோதரர் வாங் கூட எனக்கு ஒரு உறவு ஏற்பட்டுச்சு. அவங்க குடும்பம் முழுவதும் கர்த்தர விசுவாசிக்கறதையும், அவங்க என்ன நல்லா நடத்துறதையும் பாத்து நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். சகோதரர் வாங்கும் நானும் கர்த்தருக்காக கடுமையா உழைச்சு அவரோட வருகைக்காக ஒண்ணா காத்திருப்போம்னு தீர்மானிச்சோம்.

ஒரு வருஷத்துக்கப்புறம், ஒரு பிரசங்கத்த கேக்குறதுக்காக என்னை ஒரு சகோதரி அழைச்சாங்க. நாங்க கொஞ்ச நாள் ஐக்கியப்பட்ட்டோம் அதோட நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைய அதிகமா வாசிச்சேன். சர்வவல்லமையுள்ள தேவன் பல உண்மைகள வெளிப்படுத்தியிருக்காரு, தேவனோட ஆறாயிரம் வருஷ நிர்வாகத் திட்டத்தோட இரகசியங்கள வெளிப்படுத்தியிருக்காரு, அதோட கடைசி நாட்களோட நியாயத்தீர்ப்பு கிரியைய செஞ்சுகிட்டிருக்காரு. சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கறத நான் உறுதியா நம்புனேன். நான் ரொம்ப உற்சாகமடைஞ்சேன், நான் வீட்டுக்குத் திரும்பி போனப்போ, இந்த நற்செய்திய என் கணவர் கிட்ட சொல்றதுக்காக போனேன், அத அவரும் மகிழ்ச்சியா ஏத்துகிட்டாரு. இதுக்கப்புறம், எங்க திருச்சபையில இருக்க சகோதர சகோதரிகள் கிட்ட சுவிசேஷத்த நாங்க பகிர்ந்தோம், அவங்கள்ல பலர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைய வாசிச்சதும், இது தேவனோட குரல்னு தீர்மானிச்சு, கடைசி நாட்களோட தேவனின் கிரியைய ஏத்துகிட்டாங்க.

ஆனா நான் ஆச்சரியப்படும் வகையில, யாங்குக்கு இதப் பத்தி தெரிஞ்சதும், அன்னைக்கு ராத்திரி மத்த சில சக ஊழியர்களோட சேந்து பக்கத்துல இருக்கற பல திருச்சபைகளுக்கு போய், கடைசி நாட்களில் தேவனோட கிரியைய அப்பத்தான் ஏத்துகிட்டிருந்த பலர அவங்களோட விசுவாசத்துல இருந்து விலகும்படி பயமுறுத்துனாங்க. அடுத்த நாள் அதிகாலையில, இந்த விஷயத்தப் பத்திப் பேசுறதுக்காக என் வீட்டுக்கு வந்து, என் கிட்ட முரட்டுத்தனமா: “நீ கிழக்கத்திய மின்னல ஏத்துகிட்டது மட்டுமல்லாம, நீ மத்த சகோதர சகோதரிகளையும் அத விசுவாசிக்க வச்சிருக்க. நீ கர்த்தருக்குத் துரோகம் செய்யுற இல்லையா?”னு கேட்டாங்க. நான் அவங்க கிட்ட: “சர்வவல்லமையுள்ள தேவன் தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு. நான் சர்வவல்லமையுள்ள தேவன ஏத்துக்கறது கர்த்தருக்கான என் வரவேற்பு. கர்த்தர் திரும்பி வந்துட்டாருனு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவர ஏத்துக்காம இருக்குறதுதான் கர்த்தருக்கு செய்யுற துரோகம்”னு சொன்னேன். ஆனா அவங்க நான் சொல்றத கேக்கவே இல்ல, அதுக்குப் பதிலா: “நீ எங்க திருச்சபையோட ஆடுகள வேட்டையாடிட்ட. நீ உன் பாவங்கள கர்த்தர் கிட்ட உடனடியா அறிக்க செய்யணும், இல்லைனா, கர்த்தர் உன்ன சபிச்சு தண்டிப்பாரு”னு சொல்லி என்னைக் கண்டிச்சாங்க. எனக்கு ஆதரவா இருந்த என் நம்பிக்கையின் பெலத்தோட, நான்: “கர்த்தராகிய இயேசு சொன்னார்: ‘நானே நல்ல மேய்ப்பன், என் ஆடுகளை அறிந்திருக்கிறேன், என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்(யோவான் 10:14). ஆடுகள் தேவனுக்குச் சொந்தமானவை, எந்தவொரு நபருக்கும் இல்ல. சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கறவங்க தேவனோட குரல கேட்டு, கர்த்தர வரவேற்று, தேவனோட அடிச்சுவடுகள பின்தொடர்றவங்களா இருப்பாங்க”னு பதிலடி கொடுத்தேன். அவங்களால என் கூட வாக்குவாதம் செய்ய முடியாதுனு தெரிஞ்சதும், அவங்க எரிச்சலோட: “நாங்க இந்தத் திருச்சபைகள உருவாக்குனோம், கர்த்தர விசுவாசிக்கும்படி நாங்கதான் இவங்கள மாத்துனோம். இந்த ஆடுகள் எங்களோடது, உன்னோட சேந்து சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கற யாரையும் நான் தட செய்யுறேன்!”னு சொன்னாங்க. அவங்க என் கணவரையும் மாமியாரையும் அச்சுறுத்துனாங்க: “உங்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டப்போ எல்லாம் உங்க குடும்பத்துக்கு திருச்சபை உதவிச்சு, ஆனா ஜெங் லான் தொடர்ந்து கிழக்கத்திய மின்னல விசுவாசிச்சா, நாங்க தொடர்ப முறிச்சுகிட்டு, இனி எப்பவும் உங்களுக்கு உதவ மாட்டோம்”னு சொன்னங்க. இதக் கேட்டதும் என் மாமியார் பயந்துபோய், அதுக்கு சம்மதம் சொல்லுற மாதிரி தலையாட்டி: “கவலப்படாதீங்க! நான் கிழக்கத்திய மின்னல விசுவாசிக்கல, ஜென் லானையும் விசுவாசிக்க அனுமதிக்க மாட்டேன்”னு சொன்னாங்க. அப்புறம் அவங்க என் கிட்ட: “யாங் தான் முதல்ல என்னை கர்த்தர விசுவாசிக்கும்படி செஞ்சாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க நமக்கு உதவியிருக்காங்க. நாம அவங்க சொல்றத கேக்கணும். நாம அவங்கள ஏமாத்தக் கூடாது. என்னவானாலும் சரி, நீ சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கக் கூடாது. இந்தக் குடும்பத்துல, நான் சொல்றதுதான் நடக்கும், அதனால நீங்க எல்லாரும் என் விசுவாசத்த தான் பின்தொடரணும்!”னு சொன்னங்க. அவங்க சொன்னத கேட்டதுக்கப்புறம், அவரும் அடங்கிப்போய்: “உன் கூட சேந்து இனி என்னால சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்க முடியாது. யாங் நமக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க, அவங்க நம்மள அறிமுகம் செஞ்சு வெச்சதால தான் நமக்கு கல்யாணம் ஆச்சு. சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கறது மூலமா நான் அவங்கள ஏமாற்றமடைய செய்வேன், அதுமட்டுமில்லாம என் அம்மா அதுக்கு ரொம்ப எதிரா இருக்றாங்க, மேலும் ஒவ்வொரு நாளும் அதப் பத்தி சச்சரவு செய்யுறத என்னால தாங்க முடியாது”னு சொன்னாரு. நான் இதக் கேட்டதும் ரொம்பக் கோவப்பட்டு, அவர் கிட்ட: “சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள நீங்க அதிகமா வாசிச்சிருக்கீங்க, சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்குற கர்த்தராகிய இயேசுனு உங்களுக்குத் தெரியும், ஆனா வெறும் யாங்குடனான உங்க உறவ பாதுகாக்க, நீங்க தேவன பின்தொடர தயாரா இல்ல. நீங்க ஜனங்கள விசுவாசிக்கிறீங்களா இல்ல தேவனையா?”னு கேட்டேன். என் கணவர் கொஞ்சம் தயங்குனதுக்கப்புறம் என் கிட்ட: “இது தான் உண்மையான வழினு நான் ஒத்துக்குறேன், ஆனா யாங் நாம சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிச்சா, இனி அவங்க நமக்கு உதவ மாட்டாங்கனு சொல்றாங்க. என்னால இந்த விசுவாசத்துல தொடர முடியாது”னு சொன்னாரு.

இதுக்கப்புறம், என் மாமியார் என் வழியில அதிகமா குறுக்கிட்டாங்க. ஒரு தடவ, அவங்க என் கிட்ட: “கர்த்தர் மீதான நம்ம விசுவாசத்த நாம ஒண்ணா பின்பற்றுனா நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கும். நீ சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கிறத வலியுறுத்திகிட்டு, நானும் என் மகனும் கர்த்தராகிய இயேசுவ விசுவாசிச்சா, வெவ்வேறு லட்சியங்களையும் பாதைகளையும் வச்சுகிட்டு, காலம் ஆக ஆக உங்க ரெண்டு பேராலையும் ஒண்ணா இருக்க முடியுமா? ஒரு பொண்ணுங்கறவ ஒரு கட்டத்துல ஒரு குடும்பத்த நிறுவணும் இல்லையா? உனக்கு வயசானதும் யார் உன்னப் பாத்துக்குவா? உனக்கு தலைவலியோ காய்ச்சலோ வந்தா, யார் உன்னப் பாத்துக்குவா? என் மகன் உன்ன ரொம்ப நேசிக்குறான், ஆனா நீ சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கறத வலியுறுத்துனா, உங்க ரெண்டு பேத்துக்கும் விவாகரத்து ஆகிரும், அது நடக்குறப்போ, நீ வீட்ட விட்டு வெளிய போக வேண்டி இருக்கும். நான் இத எல்லாம் உன் நல்லதுக்காக தான் சொல்லுறேன். இதப் பத்தி நல்லா யோசிச்சு பாரு!”னு சொன்னாங்க. அந்த நேரத்துல, நான் கொஞ்சம் நிச்சயமில்லாத மாதிரி உணர்ந்தேன். சர்வவல்லமையுள்ள தேவன நான் தொடர்ந்து விசுவாசிச்சா குடும்பம் பிரிஞ்சுருமா? ஒரு நல்ல கணவன கண்டுபிடிச்சு ஒரு நிலையான குடும்பத்தோட இருக்குறது தான் ஒரு பொண்ணோட மிகப்பெரிய சந்தோஷம். நான் இந்தக் குடும்பத்த இழக்க விரும்பல, அதனால நான் என் மாமியார் சொல்றதக் கேட்டு, சர்வவல்லமையுள்ள தேவன் மேல நான் வெச்சிருக்க விசுவாசத்தக் கைவிடணுமா? நான் அப்படி நினைச்சப்போ ரொம்பவும் குற்றவுணர்ச்சிய உணர்ந்தேன். இத்தன வருஷமா கர்த்தர் மேல நான் வெச்சிருந்த விசுவாசத்துல கர்த்தரோட வருகைக்காக நான் ஏங்குனேன் இல்லையா? கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துட்டாரு, அதனால நான் அவரப் பின்தொடரலைனா, அப்பவும் நான் விசுவாசியா கருதப்படுவேனா? தேவனப் பின்தொடருறத என்னால விட முடியாது. அந்த நேரத்துல, எனக்கு இன்னும் என் கணவர் மேல கொஞ்சமா நம்பிக்க இருந்துது. நான் தினமும் தேவனோட வார்த்தைய அவருக்குத் தொடர்ந்து வாசிச்சு காட்டுற வரைக்கும், அவர் திரும்பவும் புரிஞ்சுகிட்டு, தொடர்ந்து என் கூட சேந்து விசுவாசிப்பார்னு நான் நினைச்சேன். அதுக்கப்புறம், எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் கணவருக்கு தேவனோட வார்த்தைய நான் வாசிப்பேன். குடும்பத்துக்காக நான் எப்பவும் நல்லா சமைச்சு கொடுப்பேன், முழு வீட்டயும் சுத்தமாவும் நேர்த்தியாவும் வெச்சுப்பேன். என்னைப் பத்தி என் மாமியார் என்ன சொன்னாலும் சரி, எப்பவும் போல நான் அவங்களுக்கு அதே பெற்றோருக்குரிய மரியாதய கொடுத்தேன், அது என் கணவரோட மனச மாத்தி, எங்களால ஒண்ணா சர்வவல்லமையுள்ள தேவன தொடர்ந்து விசுவாசிக்க முடியும்னு எதிர்பாத்தேன். ஆனா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செஞ்சாலும் சரி, சர்வவல்லமையுள்ள தேவன பத்தி நான் பேசும்போதெல்லாம் என் கணவர் எரிச்சலடைஞ்சாரு, நான் அவர் கிட்ட தேவனோட வார்த்தைய வாசிச்சபோதெல்லாம் அவர் தூங்கிருவாரு. என் கணவர் இப்படி இருக்கறத பாத்து என் மனசு கஷ்டப்பட்டுச்சு. அந்த நேரத்துல, தேவனோட ஆடுகள் அவரோட குரல கேக்கும்னும், என் கணவரோட விசுவாசம் உண்மையானதில்ல, அவர் சத்தியத்தப் பின்தொடருறவர் இல்லைனும், நான் அவரையும் கூட இழுத்துட்டு வர என் உணர்ச்சிகள சார்ந்திருக்கக் கூடாது, அது தேவனோட சித்தத்துக்கு ஏத்ததில்லைனும் நான் புரிஞ்சுகிட்டேன். ஒருத்தர் தேவனோட ஆடா இல்லாமலும், அவங்க சத்தியத்த நேசிக்காமலும் இருந்தா, நீங்க எவ்வளவு முயற்சி செஞ்சாலும் சரி, அதுனால பயனில்ல. முழு குடும்பமும் விசுவாசிக்கலாம், ஆனா அவங்க எல்லாரும் எடுத்துக்கொள்ளப்படுவாங்கனு உத்தரவாதமில்ல. இது கர்த்தராகிய இயேசுவோட தீர்க்கதரிசனத்தையும் நிறைவேத்துது: “அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்(லூக்கா 17:34). “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்(மத்தேயு 24:40).

கொஞ்ச நாள் கழிச்சு, என் கணவர் மற்றும் மாமியாரோட துன்புறுத்தல் ரொம்ப தீவிரமாச்சு. ஒரு நாள், தேவனோட வார்த்தையின் சில புத்தகங்கள என் கிட்ட தறதுக்காக ஒரு சகோதரி வந்தாங்க, என் மாமியார் வீட்டு வாசல்லையே நின்னு அவங்கள பாத்து கத்தினதுல, அந்தச் சலசலப்பால மத்தவங்க எல்லாரும் கவனிச்சாங்க நான் சகோதரிய போக சொல்றதுக்குள்ள என் மாமியார் என் கணவர் கிட்ட: “எனக்காக ஜெங் லான அடி!”னு கத்துனாங்க. என் கணவர் ஒரு கோழிய புடிச்சு, ஒரு பைத்தியக்காரன் மாதிரி ஆக்ரோஷ்மா என் மேல வீசுனாரு. நான் விலகிட்டதால அந்தக் கோழி பின்னாடி இருந்தா இரும்பு கேட் மேல மோதி கீழ விழுந்து இறந்துருச்சு. என் கணவர் என்னை அடிக்காததப் பாத்து, என் மாமியார் தன் தொண்ட கிழிய: “அவள அடி! அவள அடி!”னு கத்துனாங்க. என் கணவரோட கண்கள் சிவந்து போய், அவர் என்னைப் பாத்து: “உனக்கு அடி வேணும்னு நினைக்குறேன்! இன்னைக்கு அது உனக்கு கிடைக்கப் போகுது! நீ தொடர்ந்து சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிச்சுட்டு இருந்தா, வீட்ட விட்டு வெளிய போ!”னு கத்திகிட்டே வந்தாரு. என் கிட்ட எப்பவும் மென்மையா நடந்துக்கற என் கணவர், திடீர்னு ரொம்பக் கெட்டவாரவும் அரக்கனாவும் மாறுனதப் பாத்து நான் ரொம்ப பயந்தேன். அவரால எப்படி என்னை ஒரு எதிரி மாதிரி வெறுக்க முடியுது? அவருக்குள்ள இருக்கற வெறுப்ப வெளிக்காட்டுறதுக்காக அவர் என்னைக் கொல்லத் துடிச்சதப் பாத்து நான் ரொம்ப ஏமாற்றமடைஞ்சேன். அவர் எனக்கு எதிரா அவரோட கைய ஓங்குனதப் பாத்து, நான் விரைவா என் இதயத்துக்குள்ள தேவனோட பாதுகாப்ப கேட்டேன். நான் அமைதியா என் கணவர் கிட்ட: “நாம நம்ம எதிரிகளக் கூட நேசிக்கணும்னு கர்த்தராகிய இயேசு சொல்லிக் கொடுத்திருக்காரு. நான் உங்க எதிரி இல்ல, நான் உங்களுக்கு எந்த விதத்துலையும் அநியாயம் செய்யல, அப்புறம் ஏன் என்னை அடிக்குறீங்க? இப்படிச் செய்யுறதால, நீங்க இன்னும் கர்த்தரோட விசுவாசியா இருக்கீங்களா?” அப்படின்னு சொன்னேன். அத நான் சொன்னதும் அவர் என்னை அடிக்கறத நிறுத்திட்டாரு. இருந்தாலும் என் மாமியார், கொஞ்சமும் அசராம: “ஜெங் லான் சர்வவல்லமையுள்ள தேவன தொடர்ந்து விசுவாசிச்சுட்டு இருந்தா இந்தக் கோவமே என்னைக் கொன்னுரும். இந்தக் குடும்பத்துல ஒன்னு அவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும். உனக்கு உன் பொண்டாட்டி வேணுமா இல்ல நான் வேணுமா?”னு சொன்னாங்க. அப்புறம், என் கணவர் என் முன்னாடி மண்டிபோட்டு, அழுதுகிட்டே: “நான் உன்னக் கெஞ்சி கேட்டுக்குறேன், தயவு செஞ்சு சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கறத நிறுத்து. நான் கோவப்பட்டிருக்க கூடாது, நான் நிச்சயமா இனி எப்பவும் உன்ன அடிக்க மாட்டேன். இந்த ஒரு தடவ நான் சொல்றத கேளு, அந்தப் புத்தகங்கள திருப்பிக் கொடுத்துரு. நீ என் அம்மாவ ரொம்ப கோவப்படுத்தி சாகடிச்சா, அன்பில்லாத பிள்ளைங்கனு நமக்குக் பேரு வந்துரும், அப்புறம், வாழ்க்க முழுக்க நாம அவமானத்தோடையே வாழ வேண்டி இருக்கும். நீ என் அம்மாவ கோவப்படுத்தாத வரைக்கும், நகரத்துல வாழ்றதுக்காக உன்ன ஒரு நாள் நான் கூட்டிட்டுப் போவேன், அதுக்கப்புறம், நாம் ஒண்ணா சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கலாம்”னு சொன்னாரு. என் கணவர் ரொம்ப வருத்தப்படுறத பாத்து, எனக்கு என்ன செய்யுறதுனு தெரியல. மனிஷன இரட்சிக்க பல சத்தியங்கள சர்வவல்லமையுள்ள தேவன் வழங்கியிருக்கார்னும், நான் அவர விசுவாசிக்கணும்னும் எனக்குத் தெரியும். ஆனா நான் இந்தக் குடும்பத்த இழக்க விரும்பல. என்னால என் அழுகைய அடக்க முடியல. அவரால அவரோட மனச மாத்திகிட்டு, என்னோட சேந்து சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்க முடிஞ்சா, அது அற்புதமா இருக்கும். ஆனா நான் அவர் சொல்றதக் கேக்காம, விஷயங்கள அவர் ரொம்பவும் கடுமையா எடுத்துக்கிட்டு, எதாவது தப்பா நடந்துருச்சுனா நான் என்ன செய்வேன்? இன்னும் என்னன்னா, நான் என் மாமியார ரொம்பக் கோவப்படுத்தினா, நான் அன்பில்லாதவனு முத்திர குத்தப்படுறதோட மட்டுமல்லாம, என் கணவர் என்னை வீட்ட விட்டு வெளிய அனுப்பிருவாரு. இந்தப் பின்விளைவுகள பத்தின சிந்தனை என்னை முழுசா தளர்வாவும் பெலவீனமாவும் உணர செஞ்சுது. நான் உண்மையிலையே ஒரு கட்டுப்பாட்டுல இருக்கறதாவும், இந்தச் சூழ்நிலைய என்னால கடந்து வர முடியாதுங்குற மாதிரியும் உணர்ந்தேன். அப்புறம் நான் இந்த நாள் வரைக்கும் வருத்தப்படுற ஒரு முடிவ எடுத்தேன்.

கொஞ்ச நாள் கழிச்சு, என் கூட கூடுறதுக்காக ஒரு சகோதரி வந்தாங்க, வேற வழியில்லாம, நான் அவங்க கிட்ட: “என் மாமியார அமைதிப்படுத்துறதுக்காக இந்த தேவனுடைய வார்த்தையின் புத்தகங்கள நீங்க திருப்பி எடுத்துக்கணும். நானும் என் கணவரும் வீட்ட விட்டு வெளிய வந்துக்கு அப்புறம் திரும்பவும் எங்க விசுவாசத்த கடைப்பிடிப்போம்”னு சொன்னேன். இத மறுபரிசீலனை பண்ணும்படி சகோதரி வலியுறுத்துனாங்க, ஆனா குடும்பத்த பாதுகாக்கறதுக்காக, நிறைய தயக்கங்களுக்கப்புறம், தேவனோட வார்த்தையின் புத்தகங்கள அவங்கள எடுத்துட்டு போக செஞ்சேன். புத்தகங்கள எடுத்துட்டு போனதுக்கப்புறம், என் நாட்கள சங்கடமாவும் உற்சாகமில்லாமலும் கழிச்சேன், என் இதயத்துல ஒரு வெற்றிடம் ஏற்பட்ட மாதிரி இருந்துது. என்னால சாப்புடவோ தூங்கவோ முடியல என் இதயம் உண்மையில வலிச்சுது. நான் அதுக்குமேல சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைய வாசிக்காததையும் கூட்டங்கள்ல கலந்துக்காததையும் பாத்து என் மாமியார் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க, வீட்டு வாசல்ல நின்னு பாட்டு பாடுவாங்க, அவங்க என்னைப் பாத்தப்போ எல்லாம் இன்னும் சத்தமா பாடுவாங்க. இது சாத்தான் என்னைப் பாத்து கேலி செய்யுற மாதிரி நான் உணர்ந்தேன். தேவனோட வார்த்தையின் புத்தகங்கள திருப்பிக் கொடுத்ததுக்காக நான் ரொம்ப வருத்தப்பட்டேன், என்னை நானே வெறுத்தேன். ஒவ்வொரு நாளும் நான் எவ்வளவு மந்தமா இருக்கேன்னு பாத்து, கடைகளுக்கும், எங்க உறவினர்கள் வீட்டுக்கும் என் கணவர் என்னைக் கூட்டிட்டுப் போனாரு. அவிசுவாசிங்க மத்தியில என் கணவர், புகை பிடிச்சு, மது குடிச்சு, விளையாட்டுகள விளையாடி, போதையாகி, விசுவாசிக்கான எந்தச் சாயலும் இல்லாம இருந்ததப் பாத்து, நான் ரொம்ப ஏமாற்றமா உணர்ந்தேன். கடைசியில தான் எனக்குப் புரிஞ்சுது. சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கற கர்த்தராகிய இயேசுனு என் கணவருக்குத் தெளிவா தெரியும், ஆனாலும் அவரு யாங் சொல்றதையும் என் மாமியார் சொல்றதையும் கேட்டு நடக்க முடிவு செஞ்சுட்டாரு. அவர் சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்காததோட மட்டுமல்லாம, அவர் என்னைத் துன்புறுத்தி, விசுவாசிக்கறதுல இருந்து என்னையும் தடுத்தாரு. அவர் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளுக்கும் கிழ்ப்படியக்கூட இல்ல, அவர் கர்த்தர் கிட்ட ஜெபம் பண்ணவோ வேதாகமத்த வாசிக்கவோ இல்ல, ஆனா புகை பிடிச்சுட்டு மது குடிச்சுட்டு இருந்தாரு. அவரோட பேச்சும் நடத்தையும் முழுசா கிறிஸ்தவமில்லாததா இருந்துது. அவர் விசுவாசமில்லாதவரு, அதனால அவரால எப்படி என் கூட சேந்து சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்க முடியும்? எனக்கு திடீர்னு புரிஞ்சுது, என் கணவர் ஒரு நாள் என் கூட சேந்து சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிப்பார்னு என் கிட்ட சொன்னது, தேவனோட வார்த்தையின் புத்தகங்கள என்னைத் திருப்பிக் கொடுக்கச் செய்யுறதுக்கான, சர்வவல்லமையுள்ள தேவன நான் பின்பற்றுறதுல இருந்து தடுக்கறதுக்கான, அவரோட அம்மாவ சமாதானப்படுத்துறதுக்கான, முழு மனசோட அவங்க குடும்பத்துக்காக என்னைசேவை செய்ய வெக்கறதுக்கான ஒரு தந்திரமா மட்டுந்தான் இருந்துச்சு. இது தேவனிடமிருந்து என்னைப் பிரிச்சு, நான் அவருக்குத் துரோகம் செய்யும்படி செய்யுறதுக்கான சாத்தானோட தந்திரங்கள்ல ஒண்ணா இல்லையா? சாத்தானோட தந்திரங்க ஜெயிக்குற வகையில நான் ரொம்பக் குருடாவும் அறியாமையோடும் இருந்திருந்தேன். கூட்டங்கள்ல கலந்துகிட்டு, சகோதர சகோதரிகளோட சேந்து தேவனோட வார்த்தைய வாசிச்ச அந்த நாட்கள பத்தி நினைச்சு பாத்தேன், தேவனோட வார்த்தையின் துணையால் வந்த சந்தோஷத்த பத்தியும் நினைச்சு பாத்தேன். அப்புறம், நான் ஒரு சகோதரிய தேடிப் போனேன், அவங்களோடதான் நான் வழக்கமா கூடுவேன், ஆனா அவங்க ஏற்கனவே வேற இடத்துக்கு போயிட்டாங்க, மத்த சகோதர சகோதரிகள் எங்க இருக்காங்கனு எனக்குத் தெரியல. அழுதுட்டே, நான் தேவன்கிட்ட ஜெபம் செஞ்சேன், அவரோட வழிகாட்டுதல கேட்டேன். தேவனோட வார்த்தைகளின் பாடல்கள் அடங்கிய ஒரு டேப் இன்னும் வீட்டுல இருக்குறது எனக்கு நியாபகம் வந்துது. நான் ரொம்ப உற்சாகமடைஞ்சு, தேவனுக்குத் திரும்ப திரும்ப நன்றி சொன்னேன் “துன்பம் தேவன் இல்லாத நாட்களை நிரப்புகிறது” அப்படிங்கற பாட்டு தான் முதல்ல ஒலிச்சுது. “ஒருவரிடம் தேவன் இல்லாத போது, அவர் தேவனைக் காணமுடியாத போது, தேவனுடைய ராஜரீகத்தை அவர் தெளிவாக அடையாளம் காணமுடியாத போது, ஒவ்வொரு நாளும் அர்த்தமற்றதாகவும், பயனற்றதாகவும், பரிதாபமானதாகவும் இருக்கும். ஒருவர் எங்கிருந்தாலும், அவருடைய வேலை எதுவாக இருந்தாலும், அவருடைய ஜீவித வழிமுறையும், அவர் இலக்குகளைப் பின்பற்றுவதும், முடிவில்லாத மனவருத்தம் மற்றும் விடுதலையற்ற துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கொண்டு வருவதில்லை, அதாவது அவரால் அவருடைய கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு அது இருக்கும். ஒருவர் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொண்டு, அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிந்து, உண்மையான மனித ஜீவிதத்தைத் தேடினால் மட்டுமே, ஒருவர் படிப்படியாக எல்லா மனவருத்தம் மற்றும் துன்பத்திலிருந்து விடுபடத் தொடங்குவார் மற்றும் ஜீவிதத்தின் எல்லா வெறுமையிலிருந்தும் விடுபடுவார்(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்). நான் அதக் கேக்கும்போது என் அழுகைய என்னால கட்டுப்படுத்த முடியல. நான் மண்டியிட்டு, தேவனிடம் ஜெபம் செஞ்சேன்: “ஓ தேவனே! நீங்க இல்லாத நாட்கள் இருள் சூழ்ந்ததும் வலிமிக்கதுமா இருந்துச்சு. என் வாழ்க்கை முற்றிலும் நம்பிக்கையற்றதா இருந்துச்சு, நான் செத்துப்போறதே மேல்னு நெனச்சேன். நீர் என்னிடம் கிருபையுடன் இருந்தீர், அதனால் உம் முன்னிலையில என்னால வர முடிஞ்சுது, சகோதர சகோதரிகள் தொடர்ந்து எனக்கு நீர்ப்பாய்ச்சி ஆதரிக்கும்படி நீர் ஏவினீர். இது எல்லாம் உம் அன்பா இருக்குது. ஆனா இத எனக்குப் போற்றத் தெரியல, என் குடும்பத்தப் பாதுகாக்கறதுக்காக நான் உமக்குத் துரோகம் செய்தேன். நான் உண்மையில மனசாட்சி இல்லாதவளா இருந்தேன். தேவனே, நான் ரொம்பவும் கலகக்காரியா இருந்தேன், ஆனாலும் நீங்க எனக்குப் பிரகாசமளிச்சீங்க, உங்க வார்த்தைகளால என் இருதயத்தை மகிழ்வுறச் செஞ்சீங்க. நான் உங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கேன் நான் என் வழிகள சரி செய்ய விரும்புறேன். என் குடும்பம் என்னை எப்படித் துன்புறுத்தினாலும் சரி, என் முழு இருதயத்தோடு நான் உம்மைப் பின்தொடர்வேன்.” ஜெபம் செஞ்சதுக்கப்புறம், நான் ரொம்ப அமைதியாவும் நிம்மதியாவும் உணர்ந்தேன். நான் ஆச்சரியப்படும் வகையில, அடுத்த நாள் வீதியில ஒரு சகோதரிய நான் சந்திச்சேன். ரொம்ப நாள் பாக்காத ஒரு உறவினர பாத்த மாதிரி நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இது எல்லாம் எனக்கான தேவனோட அன்புனு எனக்குத் தெரியும், என் இதயத்தோட ஆழத்துல இருந்து தேவனுக்கு நான் நன்றி சொன்னேன்.

நான் திரும்பவும் கூட்டங்களுக்குப் போக ஆரம்பிச்சத என் கணவர் பாத்தப்போ, அவர் என் வண்டிய அடிச்சு நொறுக்க விரும்புனாரு, என்னை அடிச்சுருவேன்னு மிரட்டுனாரு. என் மாமியாரும் முன்ன மாதிரி என்னைத் துன்புறுத்த ஆரம்பிச்சாங்க, ஆனா அவங்க என்னை எப்படித் துன்புறுத்துனாலும் சரி, நான் அவங்களுக்கு அடிபணிய மாட்டேன். வழக்கமா கூட்டத்துல கலந்துக்கறதுக்காக, என் வீட்டு வேலைய எல்லாம் முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் முடிக்க ஒவ்வொரு நாளும் நான் சீக்கிரமாவே எந்திரிச்சு ராத்திரி தாமதமா தூங்கணும் அதனால கூட்டத்துல கலந்துகிட்டு தேவனோட வார்த்தைய வாசிக்க எனக்கு நேரம் கிடைக்கும். நான் வீட்டு வேலைங்க எல்லாத்தையும் செஞ்சு சில நேரங்கள்ல முழுசா சோர்வடைஞ்சாலும், என்னை பத்தின என் கணவர் மற்றும் மாமியாரோட அணுகுமுறையில கொஞ்சமும் முன்னேற்றம் இல்ல. உண்மையில துன்புறுத்தல் ரொம்ப மோசமடைஞ்சுது. நான் தேவனோட வார்த்தைய வாசிக்கறத அவங்க பாத்தப்போ: “சப்பாட்டுக்குப் பதிலா ஒரு புத்தகத்த படிச்சா போதுமா? நீ இப்படிச் சோம்பேறியா இருந்தா யார் வேலை எல்லாத்தையும் செய்வா?”னு கேலி செஞ்சாங்க. ஒரு தடவ, வயிறு வலி காரணமா என்னால வேலை செய்ய முடியாததால ஒரு நாள் ஓய்வெடுக்க நான் விரும்புனப்போ, என் கணவர் என் கிட்ட கோவமா: “அப்புறம் நான் உன் கிட்ட செய்ய சொன்னதெல்லாம் என்ன ஆச்சு? அதை எல்லாம் நீ செய்யலைனா வேற யாரு செய்வா?”னு சொன்னாரு. அப்புறம் என் மாமியார் எனக்கு ரெண்டு வலி நிவாரணிகள கொண்டுவந்து, என்னை அத சாப்பிட வெச்சு, வேலை செய்யச் சொன்னாங்க. அவங்க என்னை இப்படி நடத்துறத பாத்து நான் மனசொடைஞ்சு போயிட்டேன். நான் நாள் முழுக்க கஷ்டப்பட்டு இந்தக் குடும்பத்துக்காக நாய் மாதிரி உழைச்சேன், ஆனா கூட அவங்க என்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலப்படல, கொஞ்சமும் அக்கற காட்டுல. இந்த வீட்டுல என்னால தேவனுடைய வார்த்தைய வாசிக்க முடியல நான் நோய்வாய்ப்பட்டிருந்தப்போ ஓய்வெடுக்குற உரிமை கூட எனக்கு இல்ல. இதுதான் நான் வேணும்னு விரும்புன குடும்பமா? இதுதான் “மகிழ்ச்சியா”? இப்படி வாழ்றது பெருஞ்சுமையாவும் வலிமிக்கதாவும் இருந்துது. நான் தேவனோட வார்த்தைய வாசிச்சேன்: “ஆயிரக்கணக்கான ஆண்டுகால ‘தேசியவாதத்தின் உயர்ந்த ஆவியானது’ மனுஷ இருதயத்தில் ஆழமாக விட்டுச்சென்ற அபாயகரமான தாக்கங்கள்; அதே போல் சுதந்திரம் இல்லாமல், ஆசைப்படவோ அல்லது விடாமுயற்சியோ இல்லாமல், முன்னேற்றத்திற்கான விருப்பம் இல்லாமல், அதற்கு பதிலாக செயலற்றவர்களாக மற்றும் பிற்போக்குத்தனமானவர்களாக இருப்பது, அடிமை மனநிலையில் நிலைபெற்றிருப்பது, மற்றும் பல பழமையான சிந்தனையால் ஜனங்கள் கட்டப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது—இந்த நிஜ காரணங்கள், கருத்தியல் கண்ணோட்டம், இலட்சியங்கள், அறநெறி மற்றும் மனுஷகுலத்தின் மனநிலை ஆகியவற்றிற்கு அழியாத, இழிந்த மற்றும் அசிங்கமான பங்கை வழங்கியிருக்கின்றன. யாரும் மீற முற்படாத பயங்கரவாதம் கொண்ட ஓர் இருண்ட உலகில் மனுஷர் ஜீவித்திருப்பது போல தெரியும், அவர்களில் யாரும் ஒரு சிறந்த உலகத்திற்குச் செல்லவும் நினைப்பதில்லை; மாறாக, அவர்கள் தங்கள் ஜீவிதத்தில் நிறைய விஷயங்களில் திருப்தி கொள்கிறார்கள், குழந்தைகளைச் சுமந்து அவர்களை வளர்ப்பது, பாடுபடுவது, வியர்வை சிந்துவது, தங்கள் வேலைகளைச் செய்வது, ஒரு வசதியான மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கனவு காண்பது, மற்றும் கனிவான பாசம், கடமை தவறாத குழந்தைகள், தங்கள் ஜீவிதங்களை நிம்மதியாக ஜீவிக்கும்போது அவர்களின் அந்தி ஆண்டுகளில் இருக்கும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கனவு காண்பது…. பல தசாப்தங்களாக, ஆயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஜனங்கள் இவ்வாறாகவே தங்கள் நேரத்தை வீணடித்து வருகிறார்கள், யாரும் ஒரு முழுமையான ஜீவிதத்தை உருவாக்கவில்லை, அனைவருமே இந்த இருண்ட உலகில் பரஸ்பரப் படுகொலை செய்யவும், புகழ் மற்றும் அதிர்ஷ்டம் பெறுவதற்கான பந்தயத்தில் பங்கெடுக்கவும், மற்றும் ஒருவருக்கொருவர் சதி செய்வதை மட்டுமே நோக்கங்களாகக் கொண்டிருக்கிறார்கள். தேவனின் சித்தத்தைத் தேடியவன் யார்? தேவனின் கிரியையை யாராவது கவனித்திருக்கிறார்களா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (3)”). தேவனோட வார்த்தைய நான் வாசிச்சு முடிச்சப்பொ, என் கன்னங்கள்ல கண்ணீர் வழிஞ்சோடிச்சு. தேவனோட வார்த்தை என் நிலைய வெளிப்படுத்திச்சு. எனக்குச் சுதந்திரம் இல்லாம இருந்துதுங்கற இந்த ஆதிக்கமுறை சிந்தனையால நான் ரொம்பவும் கட்டுப்படுத்தப்பட்டேன். இளம் வயசுல இருந்தே நான் “வயசான காலத்துல ஒரு துணை இருக்கறதுக்காக இளம் வயசுல கல்யாணம் செஞ்சுக்கணும்” “கணவனே உனக்கான கன்மலை, குடும்பமே உனக்கான அடைக்கலம்,” மாதிரியான கருத்துகளால கட்டுப்படுத்தப்பட்டேன், அதனால நான் எப்பவும் ஒரு சந்தோஷமான வீடு, திருமண இன்பம், இணக்கமான குடும்பம், சந்தோஷம் நிறைஞ்ச வாழ்க்கைய பத்தி கனவு கண்டுகிட்டிருந்தேன். ஆனா எதார்த்தம் நான் விரும்புனதுல இருந்து முற்றிலும் வேறையா இருந்துது. என் முதல் கல்யானம் சந்தோஷமில்லாததா இருந்துது, என் கணவர் என்னை என் விசுவாசத்துல ஒடுக்குனாரு, என்னை அதிகமா அடிச்சாரு. என் அடுத்த கணவரோட ஒரு வீட்ட நான் உருவாக்குனதுக்கப்புறம், அந்தக் குடும்பத்த நான் ரொம்ப நேசிச்சேன், மகிச்சியான வாழ்க்கைய வாழ்றதுக்கு வீட்டு வேலைய நிர்வகிக்கறதுக்காக காலையில இருந்து ராத்திரி வரைக்கும் எந்தவொரு குறையும் சொல்லாம நான் வேலை செஞ்சு, எனக்கு முதுகு வலி வர அளவுக்கு என்னை நானே வருத்திக்கிட்டேன். ஆனா என் கணவரும் மாமியாரும் என்னைப் பத்தி கவலப்படாததோட மட்டுமல்லாம, அவங்க என்னைத் துன்புறுத்தவும் செஞ்சாங்க, என்னைத் தடுத்து, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைய வாசிக்க என்னை அனுமதிக்காம, நான் நோய்வாய்ப்பட்டிருந்தப்பவும் என்னைத் தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்துனாங்க. நான் ஒரு அடிமை மாதிரி இருந்தேன். இது குடும்பமே இல்ல! இந்தக் குடும்பம் இல்லைனா, என்னால சுதந்திரமா தேவன விசுவாசிச்சு, அவரோட வார்த்தைய வாசிச்சு, அடிக்கடி கூடி, சதோதர சகோதரிங்க கூட ஐக்கியப்படவாவது முடியும். இந்தக் குடும்பம் என் உயிர எடுக்குது, இது என்னோட கூண்டாவும் என் விலங்குகளாவும் மாறியிருந்துது. இது என் விசுவாசத்துக்கோ, என் கடமைய செய்யுறதுலையோ பயனுள்ளதா இல்ல. இந்தக் குடும்பம் என் வாழ்க்கைய நாசமாக்கிரும். நான் கடைசியில முழிச்சுகிட்டேன். ஒரு அழகான குடும்பத்த பத்தி நான் எப்பவும் கற்பன செஞ்சேன், ஆனா ஜனங்க எல்லாரும் சாத்தானால சீர்கெட்டிருக்காங்க, சீர்கெட்ட மனநிலைகளால நிரம்பியிருக்காங்க. ஜனங்க திமிர்பிடிச்சவங்களாவும், கர்வமுள்ளவங்களாவும், வக்கிரமானவங்களாவும், துரோகிகளாவும் சுயநலவாதிகளாவும் இருக்காங்க. ஒரு காலத்துல நான் ஏங்குன சந்தோஷமான கல்யாண வாழ்க்க இந்த உலகத்துல இருக்க வாய்ப்பில்ல. “வயசான காலத்துல ஒரு துணை இருக்கறதுக்காக இளம் வயசுல கல்யாணம் செஞ்சுக்கணும்,” “கணவனே உனக்கான கன்மலை, குடும்பமே உனக்கான அடைக்கலம்,” அப்படிங்கற கருத்துகள், சாத்தான் ஜனங்கள ஏமாத்த பயன்படுத்துற பொய்களும், ஜனங்கள காயப்படுத்த அது பயன்படுத்துற தந்திரங்களும்தான்! தேவனோட வார்த்தையின் வெளிப்பாட்டின் மூலமா, என் குடும்பத்தோட சாராம்சம் பத்தின கொஞ்சம் புரிதல் எனக்குக் கிடைச்சுது. முன்னாடி எல்லாம் நான் ரொம்பக் குருடாவும் அறியாமையுடனும் இருந்தேன்! தேவன விசுவாசிச்சது மூலமா, நான் சரியான வாழ்க்கை பாதையில நடக்குறேன், அவங்களால இனி நான் கட்டுப்படுத்தப்பட மாட்டேன். நான் எல்லா நேரத்துலையும் விடாப்பிடியாகூட்டங்கள்ல கலந்துகிட்டு என் கடமைய செய்ய வேண்டியிருந்துச்சு. அதனால நான் என் கணவர் கிட்ட: “தேவன் மேல இருக்கற விசுவாசத்தால மட்டும்தான் நான் உங்க கூட சேந்தேன். இப்போ நான் கர்த்தரோட வருகைய வரவேற்கிறேன், நீங்க விசுவாசிக்கலைனாலும் நான் விசுவாசிக்கணும். நாம விவாகரத்து செஞ்சுகிட்டா கூட, நான் தொடர்ந்து கூட்டங்கள்ல கலந்துகிட்டு சுவிசேஷத்தப் பரப்புவேன்”னு சொன்னேன். என் தீர்மானத்தப் பாத்து, அதுக்கப்புறம் என் வழியில குறுக்கிடாம இருக்க அவர் ஒத்துகிட்டாரு. ஆனா நல்ல விஷயங்க ரொம்ப நாள் நீடிக்கல, அவர் சீக்கிரமே என்னைத் திரும்பவும் துன்புறுத்த ஆரம்பிச்சாரு.

ஒரு தடவ, சில சகோதர சகோதரிங்க ஒரு கூட்டத்துக்காக என் வீட்டுக்கு வந்தாங்க. சகோதரிகள்ல ஒருத்தரோட வண்டி டயர்ல காத்து இல்லாம இருந்துச்சு, அதுனால அதுல கொஞ்சம் காத்தடிக்கறதுக்காக நான் பம்ப்ப எடுத்தேன். ஆனா இதப் பாத்ததும், என் மாமியார் ஓடி வந்து கொடூரமான முகத்தோட என் கிட்ட இருந்து பம்ப்ப பிடிங்குனாங்க. அந்தச் சகோதரி பயந்துட்டாங்க, என் மாமியார் பல்ல கடிச்சுகிட்டு என்னை: “சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்க நான் உன்ன அனுமதிக்கல, ஆனா நீ அத வலியுறுத்துற. நான் உனக்கு என்னனு காட்டுறேன். உன்ன சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்க விடுறத விட, இங்க இருந்து உன்ன வெளிய அனுப்புறது நல்லது…” அப்படின்னு திட்டுனாங்க. இதச் சொல்லிகிட்டே, என்னை ஒரே நேரத்துல திட்டவும் அடிக்கவும் ஆரம்பிச்சாங்க. என் தலை சுத்துற வரைக்கும் அவங்க என்னை அடிச்சாங்க. நான் அடி வாங்குறத பாத்ததும், சகோதர சகோதரிகள் வந்து என் மாமியாரத் தடுக்க முயற்சி செஞ்சாங்க, ஆனா அவங்க அவங்ககிட்ட: “நான் உங்க எல்லாத்தையும் பொது பாதுகாப்புப் பணியகத்துக்கு அனுப்பிருவேன், அப்புறம் பாக்கலாம் சர்வவல்லமையுள்ள தேவன உங்களால விசுவாசிக்க முடியுதானு!” அப்படின்னு கத்துனாங்க. இந்தக் கட்டத்துல, அந்தச் சலசலப்ப பாக்குறதுக்காக வீதியில இருந்த எல்லாரும் கூட்டமா கூடிட்டாங்க. அவங்கள பேசி சமாதானப்படுத்த என் கணவர் உதவுவார்னு நான் நினைச்சேன், ஆனா நான் ஆச்சரியப்படும் வகையில, அவர் அம்மாவோட தூண்டுதலால, அவர் என் தலைக்குப் பின்னால குத்தி, என்னை மயக்கமடைய செஞ்சாரு. என் கணவரோட அடி என் இதயத்த முழுசா உணர்ச்சியற்றதாக்கிச்சு, அப்புறம் நான் என்னைப் பத்தி சிந்திக்க ஆரம்பிச்சேன்: நான் இந்தக் குடும்பத்த பராமரிக்கறதுல என்ன பயன் இருக்கு?

அப்புறம், நான் தேவனோட வார்த்தைய நெனச்சுப் பாத்தேன்: “ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்தத் திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா? … இன்றைய மக்களிடையே ஒரு உடல் ரீதியான உறவு உள்ளது, இரத்த உறவும் உள்ளது, ஆனால் எதிர்காலத்தில், இவை எல்லாம் கலைந்து போகும். விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). தேவனோட வார்த்தையின் வெளிப்பாட்டின் மூலமா ஜனங்க எல்லாரும் சாத்தானால சீர்கெடுக்கப்பட்டிருக்காங்கனும், ஜனங்க எல்லாரும் சுயநலவாதிங்கனும் நான் புரிஞ்சுகிட்டேன். கணவன்மார்களும் மனைவிமார்களும் தங்களோட சொந்த சுயநலமான ஆசைகள பூர்த்தி செய்றதுக்கும், ஒருவர ஒருவர் பயன்படுத்துறதுக்கும் மட்டும்தான் ஒண்ணா இருக்காங்க. என் கணவர் இனிமையா பேசி என் மேல அக்கற காட்டுனது குழந்தைங்களையும் பெரியவங்களையும் பாத்துக்கவும், அவருக்காக வீட்டு வேலைங்கள செய்யவும் என்னைப் பயன்படுத்துறதுக்காகத்தான் இருந்துது, அவர் எனக்குப் பாதுகாப்பா இருப்பார்னு நான் அவர கல்யாணம் பண்ணிகிட்டேன். இத்தகைய உறவுல எப்படி உண்மையான அன்பு இருக்க முடியும்? இது உண்மையான அன்பு இல்ல. நான் தேவன விசுவாசிக்கறதுலையும், அவரோட வார்த்தைய வாசிக்கறதுலையும் என் கணவர் எப்பவும் குறுக்க நின்னுட்டிருந்தாரு, அவர் தேவன உண்மையா விசுவாசிக்கிற ஒருத்தர் இல்லைனு தேவனால அம்பலப்படுத்தப்பட்டு ரொம்ப காலம் ஆகிருச்சு. தேவனோட வார்த்தை வெளிப்படுத்துற மாதிரியே: “விசுவாசிகளும் அவிசுவாசிகளும் இணக்கமானவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மாறானவர்கள்.” ஆனா அவர என்னால விடவே முடியல, எப்பவும் இந்தக் குடும்பம் தொடரணும்னு நான் விரும்புனேன். நான் உண்மையிலையே முட்டாளா இருந்தேன். நான் தேவனோட வார்த்தைய அதிகமா வாசிச்சேன்: “தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஓர் எதிரி; அதாவது மாம்சமாகிய தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும்—இந்தப் பிரவாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே இருந்தாலும் இல்லாவிட்டாலும்—ஓர் அந்திக்கிறிஸ்துதான். சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்? தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அல்லவா அந்த மக்கள்? விசுவாசம் இருக்கிறது என்று கூறினாலும் சத்தியம் இல்லாமல் இருப்பவர்கள் அல்லவா அவர்கள்? தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியாமல் ஆசிர்வாதத்தை அடைவதற்கு நாடுபவர்கள் அல்லவா அவர்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதுக்கப்புறம், என்னால என் கணவரோட சாராம்சத்த ரொம்பத் தெளிவா பாக்க முடிஞ்சுது. என் கணவர் கர்த்தராகிய இயேசுவ பெயரளவுல தான் விசுவாசிச்சாரு, ஆனா சாராம்சத்துல, அவர் தேவனிடமிருந்து கிருபையயும் ஆசீர்வாதங்களயும் மட்டும்தான் விரும்புனாரு. எதாவது கிடைக்கும்னா மட்டும்தான் அவர் விசுவாசிப்பாரு, இல்லைனா, அவர் விசுவாசிக்க மாட்டாரு. கர்த்தர் திரும்பி வந்துட்டார்னு அவர் கேள்விப்பட்டதும், அவர் பரலோக ராஜ்யத்துக்குள்ள பிரவேசிச்சு ஜீவிக்க முடியும்னு நினைச்சாரு, அதுனால அவர் இத சந்தோஷமா ஏத்துகிட்டாரு. ஆனா அவர் மதம் சார்ந்த ஜனங்களால இடையூறு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டப்போ, அவர் விசுவாசிக்கறத நிறுத்துனதோட மட்டுமல்லாம, அவர் என்னைத் துன்புறுத்தி தடை உண்டாக்கவும் செஞ்சாரு. அவரோட சாராம்சம் தேவனோட எதிரியும் பிசாசுமான சாத்தானோடதா இருந்துது. ஜனங்களோட சாராம்சங்கள் வேறுபட்டதா இருக்குது, அதே மாதிரி தான் அவங்க தேர்ந்தெடுக்குற பாதைகளும் இருக்குது, குடும்பங்க கூட எதிரிங்க ஆகலாம். இது கர்த்தராகிய இயேசு சொன்னத உறுதிப்படுத்துது: “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே(மத்தேயு 10:36). நான் தேவனோட வார்த்தைய அதிகமா படிச்சேன். “தேவனுடைய இருதயத்தைப் பற்றி அவன் ஏன் மிகவும் அக்கறையற்றவனாக இருக்கிறான்? இந்த அடக்குமுறையையும் கஷ்டத்தையும் அவன் அமைதியாக பொறுத்துக்கொள்கிறானா? அவன் இருளை ஒளியாக மாற்றக் கூடிய நாளை அவன் விரும்புவதில்லையா? நீதிக்கும் சத்தியத்திற்கும் எதிரான அநீதிகளை மீண்டும் ஒருமுறை சரி செய்ய அவன் விரும்புவதில்லையா? ஜனங்கள் சத்தியத்தைக் கைவிட்டு, உண்மைகளைத் திரிப்பதைப் பார்த்தும் அவன் எதுவும் செய்யத் தயாராக இல்லையா? இந்தத் துன்புறுத்தலைத் தாங்கிக் கொள்வதில் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறானா? அவன் அடிமையாக இருக்க விரும்புகிறானா? இந்தத் தோல்வியுற்ற நிலையில் உள்ள அடிமைகளுடன் சேர்ந்து தேவனுடைய கரங்களால் அழிந்து போவதற்கு அவன் தயாராக இருக்கிறானா? உன் மனவுறுதி எங்கே? உன் லட்சியம் எங்கே? உன் கண்ணியம் எங்கே? உன் நேர்மை எங்கே? உன் சுதந்திரம் எங்கே? … அவன் தன் உயிரை தேவனுக்கு எவ்வளவு சீக்கிரமாகக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக ஏன் கொடுப்பதில்லை? அவன் ஏன் இன்னும் அலைந்து திரிகிறான்? தேவனுடைய கிரியையை அவனால் எப்போது முடிக்க முடியும்? இவ்வாறு நோக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டால், அவனது முழு வாழ்க்கையும் இறுதியில் வீணாகவே கழிந்திருக்கும்; அவன் ஏன் வருவதற்கு இவ்வளவு துரிதமாகவும், புறப்படுவதற்கு இவ்வளவு அவசரமாகவும் இருக்கிறான்? தேவனுக்குக் கொடுக்க அவன் ஏன் விலையேறப்பெற்ற ஒன்றை வைத்திருப்பதில்லை? மில்லியன்கணக்கான ஆண்டுகளின் வெறுப்பை அவன் மறந்திருக்கிறானா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (8)”). தேவனோட வார்த்தைகள் அவரோட அவசரமான நோக்கங்கள புரிஞ்சுக்க எனக்கு உதவிச்சு. தேவன் மனுக்குலத்துக்காகக் கவலப்படுறாரு, நாம நம்ம வாழ்க்கைய நித்தியமா சாத்தானோட கட்டுப்பாட்டுலையும் வேதனையிலையும் வாழுறத அவர் விரும்பல. அந்தகார வல்லமைகளோட கட்டுப்பாடுகள்ல இருந்து நாம தப்பிச்சு, அவர் கிட்ட நம்ம வாழ்க்கைகள கொடுத்து, நாம வெளிச்சத்துல ஜீவிக்கணும்னு அவர் விரும்புறாரு. ஆனா நான் ரொம்ப கோழையா இருந்தேன். என் கணவரும் மாமியாரும் பிசாச சேர்ந்தவங்க, அவங்க என் விசுவாசத்துக்கு குறுக்க நின்னு, என்னை அடிச்சு, திட்டி, துன்புறுத்திட்டிருந்தாங்க, ஆனா இந்தக் குடும்பத்த விட்டுப் பிரியுறத என்னால தாங்க முடியல. அதுனால நான் அநீதியையும் அவமானத்தையும் தாங்கிகிட்டு, ஒரு அடிமை மாதிரி இருந்தேன், என் வாழ்க்கை என் கணவரையும் குடும்பத்தையும் சுத்தியே இருந்துது, நான் அர்த்தமில்லாத விஷயங்கள பின்தொடர்ந்தேன். தேவன் என்னைச் சரியான பாதையில வழிநடத்திகிட்டிருந்தாரு, மனுஷ வாழ்க்கையோட அர்த்தத்தையும் மதிப்பையும் நான் புரிஞ்சுக்குறதுக்கான சத்தியங்கள அவர் வெளிப்படுத்துனாரு, ஆனா அதப் பின்தொடருற உறுதி என் கிட்ட இல்ல. நான் உண்மையிலையே ஒரு பயனற்ற துர்பாக்கியசாலியா இருந்தேன். கர்த்தராகிய இயேசு சொன்னார்: “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல(மத்தேயு 10:37). தேவன் என்னைத் தெரிந்துகொண்டு இரட்சித்தாரு-அவர் எனக்கு சத்தியத்தையும் ஜீவனையும் தந்தாரு. நான் தேவனப் பின்தொடர்ந்து நேசிக்கணும். என் கணவரும் மாமியாரும் தேவன எதுத்தாங்க, அவங்க என் அன்புக்கோ ஆற்றலுக்கோ தகுதியானவங்க இல்ல. நான் ரொம்ப அறியாமையுடனும் குருடாவும் இருந்தேன். நான் எப்பவும் திருமண இணக்கத்தையும் குடும்ப மகிழ்ச்சியையும் பின்தொடர்ந்தேன். என் வாழ்க்கையில பாதி வீணாகிருச்சு. நான் என் மீதி வாழ்க்கைய தேவனத் திருப்திப்படுத்துறதுக்காக பயன்படுத்தணும். நாம இப்போ ராஜ்யத்தின் சுவிசேஷத்த பரப்புற முக்கியமான நேரத்துல இருக்கோம், நிறைய ஜனங்க கடைசி நாட்களில் தேவனோட கிரியைக்கு சாட்சியா இருக்கணும் அதனால கடைசி நாட்கள்ல நிறைய ஜனங்களால தேவனோட இரட்சிப்ப பெற முடியும். நான் தேவனோட ஒத்துழைச்சு என்னால முடிஞ்ச அளவுக்கு என் கடமைய செய்யணும். அர்த்தமும் மதிப்பும் உள்ள வாழ்க்கைய வாழறதுக்கு இதுதான் ஒரே வழி.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள்லயே, சுவிசேஷத்தப் பரப்புறதுக்காக நான் என் வீட்ட விட்டு வெளியேறுனேன். நான் தினமும் சகோதர சகோதரிகளோட சேந்து தேவனோட வார்த்தைய ஐக்கியப்பட்டு, என் கடமைய செஞ்சேன், என் இதயம் நிம்மதியாவும் விடுதலையடைஞ்சதாவும் உணர்ந்துது. இப்போ சில நேரங்கள்ல என் கடமையில நான் கஷ்டங்கள எதிர்கொள்ளும்போதோ அல்லது நான் நோய்வாய்ப்படும்போதோ, சகோதரிகள் எப்பவும் எனக்கு உதவி செஞ்சு என்னை பாத்துகிறாங்க. அவங்க என்னை குடும்பம் மாதிரி நடத்துறாங்க. இது எல்லாம்தான் தேவனுடைய அன்பு. தேவன்தான் என்னோட உண்மையான கன்மலைனும், தேவனுடைய வீடு தான் என்னோட உண்மையான குடும்பம்னும் இப்போ நான் உணருறேன். நான் என் இதயத்தின் ஆழத்துல இருந்து தேவனுக்கு நன்றி சொல்லுறேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய...

Leave a Reply