என் போதகர் எனக்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கும் இடையில் நின்றார்
2020, நவம்பர் மாசத்துல, ஒரு சகோதரர் இணையதள கூடுகையில சேர என்னை அழைச்சாரு. நான் என்னோட திருச்சபையில ஆவிக்குரிய வாழ்வாதாரத்தக் கொடுக்காத அதே பழைய பிரசங்கங்கள நான் எப்போதும் கேட்டேன், அதனால, ஒரு வெளிநாட்டுப் போதகர் இணையதளம் வழியா ஆராதனைய நடத்துறது சிறப்பா இருக்கும்னு நெனச்சேன். நான் ரொம்ப மகிழ்ச்சியா ஒத்துக்கிட்டேன். கொஞ்ச நாட்களின் ஐக்கியத்தின் மூலமா, இதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டிராத விஷயங்களோடும், உண்மையிலயே என்னைய போஷிச்ச நிறைய புதிய வெளிச்சத்தோடும் பிரசங்கங்கள் அற்புதமா இருந்ததா நான் உணர்ந்தேன். கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறார்னும். அவர் சத்தியங்கள வெளிப்படுத்துறாருன்னும் கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்யுறாருன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். நாம பாவத்தின் கட்டுகள்ல இருந்து தப்பிக்கும்படி அவர் மனிதகுலத்த சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும், தேவனுக்கு உண்மையா கீழ்ப்படிஞ்சு அவர ஆராதிக்குற ஜனங்களா நம்மள உருவாக்கி, தேவனோட ராஜ்யத்துல நம்மளக் கொண்டு சேர்க்கவும் வந்திருக்கிறாரு. நான் ரொம்ப உற்சாகமா இருந்தேன். எனக்கு தூரத்து உறவான ஒரு சகோதரரிடத்துல நான் இதையெல்லாம் பகிர்ந்துக்கிட்டேன், ஆனா ஆச்சரியப்படுற மாதிரி, அவர் அதக் கேக்க மறுத்தது மட்டுமல்லாம, இதப் பத்திய எல்லாத்தையும் என்னோட போதகரிடத்துல சொல்லிட்டாரு.
என்னோட இணையதள கூட்டங்களப் பத்தியும், அவங்க எந்தச் சபைப்பிரிவச் சேந்தவங்க, பிரசங்கியார் எங்கிருந்து வந்தாருங்கறதப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கவும், திருச்சபைத் தலைவர்கள் மூணு பேர போதகர் என் வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க. நான் அவங்ககிட்ட சொன்னேன், “இது எந்தச் சபைப்பிரிவும் இல்லை. கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறாரு, தேவனோட வீட்ல இருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையச் செஞ்சுக்கிட்டு வர்றாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நான் நிறைய வாசிச்சிருக்கேன். மனுஷனோட பாவத்தின் வேர் என்ன, பாவத்திலிருந்து தப்பிச்சு, சுத்திகரிக்கப்படுறது எப்படிங்கறது பத்தி அவர் ரொம்பத் தெளிவாச் சொல்றாரு, சகோதர சகோதரிகளோட ஐக்கியமும்கூட உண்மையிலயே பிரகாசமாக்குவதா இருக்குது.” ஆனா, தலைவர்கள் சொன்னாங்க, “பிரசங்கங்கள் எவ்வளவு நன்றா இருந்தாலும் பரவாயில்ல. கர்த்தர் திரும்பி வந்திருக்கிறார்ங்கற எந்தச் செய்தியும் தவறானது. ஏன்னா, வேதம் சொல்லுது, ‘அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்’ (மத்தேயு 24:23-24). கடைசி நாட்கள்ல கள்ளக்கிறிஸ்துகள் தோன்றுவாங்கன்னு கர்த்தராகிய இயேசு நமக்குத் தெளிவாச் சொன்னாரு. அதனால, கர்த்தர் திரும்பி வந்திருக்கிறார்னு சொல்ற எந்த விசுவாசமும் பொய்யாத் தான் இருக்கணும். உங்களால எப்படி அவங்க சொல்றதக் கேக்க முடிஞ்சுது?” அவங்க இதச் சொன்னதும், கர்த்தராகிய இயேசு, கள்ளக்கிறிஸ்துகளப் பத்தி நாம பகுத்தறிவு பெற்றிருக்கணும்ங்கறதுக்காகஅதச் சொன்னாரு, கர்த்தரோட வருகைய நாம வரவேற்காம போற அளவுக்கு நம்மளக் காத்துக்கொள்றதுக்காக அல்லன்னு நான் நெனச்சேன். இணையதளக் கூட்டங்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையச் சேர்ந்த சகோதரர் ஐசக் அவர்கள் கள்ளக்கிறிஸ்துகளப் பகுத்தறியறதப் பத்திய சத்தியங்களயும் சர்வவல்லமையுள்ள தேவனோட சில வார்த்தைகளயும் பகிர்ந்துக்கிட்டாரு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் கிரியையின் ஒரு கட்டத்தை முடித்ததும், அது தீய ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்”). அவரோட ஐக்கியம் இதப் பாக்க எனக்கு உதவுச்சு. கர்த்தராகிய இயேசு, “கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி…பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” என்று சொன்னப்ப, கள்ளக் கிறிஸ்துகள் அடையாளங்களையும் அற்புதங்களையும் பயன்படுத்தி ஜனங்கள தவறா வழிநடத்துறாங்கன்னு அவர் நம்ம கிட்ட சொன்னாரு. அதனால, அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்டி தங்கள தேவன்னு அழைக்கும்ற எவரும் ஒரு கள்ளக்கிறிஸ்துவா, பொல்லாத ஆவியாத்தான் இருக்கணும். ஏன்னா, தேவன் எப்போதும் புதிதானவர், ஒருபோதும் பழைமையானவர் அல்ல, அவர் தம்மோட கிரியைய ஒருபோதும் மறுபடியும் செய்யறதில்ல. கர்த்தர் திரும்பி வர்றப்போ, அவர் கிருபயின் காலத்துல செஞ்ச அதே கிரியையச் செய்யப் போறதில்ல. சர்வவல்லமையுள்ள தேவன் கடைசி நாட்கள்ல அடையாளங்களையும் அற்புதங்களையும் காட்ட மாட்டாரு, ஆனா, தேவனோட வீட்ல தொடங்கி நியாயத்தீர்ப்புக் கிரியையச் செய்யவும் மனுஷன சுத்திகரிச்சு இரட்சிக்கவும் அவர் சத்தியங்கள வெளிப்படுத்துறாரு. சர்வவல்லமையுள்ள தேவன் பல சத்தியங்கள வெளிப்படுத்தியிருக்காரு—அவர்தான் திரும்பி வந்திருக்கிற, கர்த்தராகிய இயேசுவாகிய கிறிஸ்து. அதனால நான் எதிர்த்து, “கள்ளக்கிறிஸ்துகள நம்மால பகுத்தறிய முடியணுங்கறதுக்காக கர்த்தராகிய இயேசு அதச் சொன்னாரு. கிறிஸ்துவே சத்தியத்த வெளிப்படுத்தவும் இரட்சிப்பின் கிரியையச் செய்யவும் வல்லவர், ஆனா, கள்ளக்கிறிஸ்துகள் பொல்லாத ஆவிகளா இருக்காங்க, அவங்களால சத்தியத்த வெளிப்படுத்த முடியாது. அவங்க தேவனோட கடந்தகால கிரியையப் பின்பற்றுறாங்க மற்றும் ஜனங்கள முட்டாளாக்க சில எளிய அடையாளங்கயும் அற்புதங்களையும் காட்டுறாங்க. கர்த்தராகிய இயேசு தாம் திரும்பிவருவதாச் சொன்னாரு, அப்புறம், எச்சரிக்கையா இருந்து காத்திருக்கணும்னு சொன்னாரு. அவர் திரும்பி வருவத அறிவிக்கிற ஜனங்க நிச்சயமாக இருக்காங்க, அதனால, அவை எல்லாமே பொய்யின்னு நீங்க சொன்னா, கர்த்தரோட வருகைய நீங்க கண்டனம் செய்றதா இருக்காதா?” அப்படின்னு சொன்னேன். அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, நான் அந்த இணையதளக் கூட்டங்கள்ல தொடர்ந்து கலந்துக்கிட்டா, என் குடும்பத்துக்கு அவங்ககிட்டருந்து எந்த உதவியும் கிடைக்காதுன்னு சொல்லி அவங்க என்னைய மிரட்டுனாங்க. வியட்நாம்ல, பெரியதோ சிறியதோ எல்லாத்துக்கும் எங்களோட போதகர்களோட ஜெபங்களக் கேக்கறோம். யாராவது மரிச்சுட்டா அல்லது வேறு ஏதாவது வாழ்க்கை நிகழ்வுகள் நடந்தா, போதகர்கள் எப்போதும் உதவுவாங்க. அவங்க வரலன்னா, வேறு யாரும் உதவ வரமாட்டாங்க. அதனால, அவங்க இனி உதவ மாட்டாங்கன்னு சொன்னப்ப நான் ரொம்ப கவலப்பட்டேன். நம்ம குடும்ப விவகாரங்கள எப்படிச் சமாளிக்கறது? அந்த நேரத்துல, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியையப் பத்தி எனக்கு முழுசா தெரியல. திருச்சபை குருமார்கள் சொல்றது தவறுன்னு எனக்குத் தெரியும், ஆனா, எனக்கு சத்தியம் ரொம்பத் தெரியாததால அவங்க இன்னும் என் மேல தாக்கத்த ஏற்படுத்தியிருந்தாங்க. போதகரோட உதவியில்லாம வாழ்க்கையில ஏற்படுற பிரச்சினைகள சமாளிக்கறதப் பத்தியும் நான் கவலப்பட்டேன். ஆனா அதுக்கப்புறம், அந்தக் கூடுகைகள் மூலமா, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் எல்லாமே சத்தியம்னும், அவை எல்லாமே தேவனிடத்துல இருந்து வந்தவைனும் நான் கண்டிருந்தேங்கறத நான் நெனச்சுப் பாத்தேன். அவர் திரும்பி வந்திருக்கற கர்த்தராகிய இயேசுவாகத்தான் இருக்கணும்னு நான் நெனச்சேன். நான் தலைவர்கள் சொல்றதக் கேட்டு கடைசி நாட்களின் கர்த்தரோட இரட்சிப்ப தவறவிட்டா என்ன ஆகும்? நான் ரொம்பவே குழப்பமா உணர்ந்தேன், இணையதளக் கூட்டங்கள்ல கலந்து கொள்றத நிறுத்த ஒப்புக்கொள்ளணுமாங்கறது எனக்குத் தெரியல.
அவங்க எப்படிக் கோவமா இருந்தாங்க அப்படிங்கறத என்னால பாக்க முடிஞ்சுச்சு. நான் தொடர்ந்து கூட்டங்கள்ல கலந்துக்கிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனோட பிரசங்கங்களக் கேட்டுக்கிட்டு இருந்தா, அவங்க என்னைய விட்டுற மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். நான் ஒத்துக்கிட்டது போல நடிக்கலாம், அப்புறம், அவங்க போன பிறகு ரகசியமா கலந்துக்கலாம்னு நெனச்சேன், அதனால, நான் அந்தக் கூட்டங்கள்ல கலந்துக்கறத நிறுத்திவிடறேன்னு அவங்ககிட்ட சொன்னேன். ஆனா, அவங்க அத அப்படியே விட்டுற மாட்டாங்க. சர்வவல்லமையுள்ள தேவன விசுவாசிக்கிற நபர்களத் தொடர்புகொள்றதுக்கான தகவல நான் அழிக்கனும்ன்னு அவங்க என்னைய வலியுறுத்தினாங்க. நான் அழிக்க விரும்பல, அதனால நான் வேணும்னே தாமதப்படுத்துனேன், நான் தொடர்ந்து கைபேசியக் கொடுக்காம இருந்தா அவங்க போயிருவாங்கன்னு நெனச்சேன். ஆனா, அவங்க அத அன்பினால செய்யுறதனால அவங்க சொல்றதக் கேக்கச் சொல்லி, என்னோட மனைவி என்னை வற்புறுத்தினாள். நான் யோசிச்சுப் பாத்தேன், அவங்க என்னை உண்மையா நேசிச்சா, கடைசி நாட்கள்ல தேவனோட கிரியைய ஆராய்ந்தறிய அவங்க எனக்கு வழிகாட்டணும். அதுக்குப் பதிலா, அவங்க தேவனோட புதிய கிரியைய நியாயந்தீர்த்துக் கண்டனம் செய்றாங்க, மேலும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிக்கவிடாம என்னையத் தடுக்கறாங்க. கர்த்தர வரவேற்கும் என்னோட வாய்ப்ப அழிச்சிருவாங்க அப்படிங்கற பயம் அவங்களுக்கு இல்லையா? அது அன்பா? தாமதமாயிட்டே இருந்துது, அவங்க அப்பவும் கிளம்புல, என்னோட கைபேசிய ஒப்படைக்கும்படி வற்புறுத்திக்கிட்டே இருந்தாங்க. கடைசியா, வேற வழியில்லாம, நான் அத அவங்ககிட்ட கொடுத்தேன், அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையச் சேர்ந்த சகோதர சகோதரிகளோட மொத்த குழுவையும் அழிச்சுட்டு அவங்க யாரும் கூப்பிட முடியாதபடி தொடர்ப துண்டிச்சுட்டாங்க. நான் அவங்களுக்கு எதிராப் போய் அவங்களோட பிரசங்கங்கள தொடர்ந்து கேட்டா, அவங்க என்னைய திருச்சபையில இருந்து வெளியேத்திருவாங்கன்னு என்னைய எச்சரிச்சாங்க. அதக் கேக்கறதுக்கு எனக்குப் பயமா இருந்துச்சு. நான் அந்தக் கூட்டங்கள்ல தொடர்ந்து கலந்துக்குட்டு, என் குடும்பத்தில ஏதாவது நடந்துச்சுன்னா, அவங்களோட உதவியும் ஆதரவும் இல்லாம நாங்க என்ன செய்வோம்? இந்த விஷயத்துல என்னோட மனைவி என் மேல கோபப்பட்டா, நாங்க ஒத்துப்போகலைனா எங்களோட குழந்தைகள் என்ன செய்வாங்க? அத நெனச்சு நான் பரிதாபமா உணர்ந்தேன், அதனால, “நான் கலந்து கொள்றத நிறுத்திக்கறேன்னு” சொல்ல என்னைய நானே கட்டாயப்படுத்துனேன். ஒரு தலைவர் புன்னகச்சுகிட்டே, “நீ இதத்தான் செய்யணும், நம்ம திருச்சபை ஆராதனைகள்ல தொடர்ந்து கலந்துக்கோ” அப்படின்னு சொன்னாரு.
இணையதள கூட்டத்துல இருந்து வெளியேறுனதுக்கப்புறம், பழைய திருச்சபைக்குப் போறதத் தவிர எனக்கு வேற வழியில்லாம இருந்துச்சு. திருச்சபையில திரும்பவும், போதகர் எப்பவும் கிருபையப் பத்தி அல்லது காணிக்கையப் பத்தி பேசிக்கிட்டிருந்தார், அல்லது அவர் பேசுறதுக்கு சில வசனங்களத் தோராயமாத் தேர்ந்தெடுப்பாரு. புதுசா பிரகாசம் எதுவும் இல்லாம எப்பவும் பழைய விஷயங்களையே சொல்லிக்கிட்டிருந்தாரு. சில சமயங்கள்ல என்ன பேசுறதுன்னு தெரியலேனா வெறுமனே ஒரு நகைச்சுவைய சொல்வாரு. இது என்னோட வாழ்க்கைக்கு கொஞ்சங்கூடப் பயனளிக்கல, சில விசுவாசிகள் ஆராதனையில தூங்கக் கூட செய்வாங்க. அதிகமா காணிக்க கொடுத்த திருச்சபையினருக்காக மட்டுமே போதகர் ஜெபம் செஞ்சாரு. கொடுக்கறதுக்கு நிறையா இல்லாதவங்கள புறக்கணிச்சு, அவங்களுக்காக ஜெபிக்காம இருந்தாரு. இதப் பாத்ததும் இணையதளத்துல கூடுற சகோதர சகோதரிககளோட ஐக்கியத்த நான் நெனச்சுப் பாத்தேன். மத உலகம் பாழாயிருச்சு தேவன் புதிய கிரியை செய்றதால, பரிசுத்த ஆவியானவர் கிருபையின் காலத்துல இருந்து திருச்சபைகள்ல கிரியை செய்யறதில்ல. பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்லாம, போதகர்களோட பிரசங்கங்கள் வறண்டதாவும், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லக்கூடியதாகவும் இருக்குது, ஜனங்களுக்கு வழங்க முடிவதில்ல. இதப் பத்தி யோசிச்சப்போ, திருச்சபையில உண்மையிலேயே பரிசுத்த ஆவியானவரோட கிரியை இல்லங்கறத நான் என் இருதயத்துல தெரிஞ்சுக்கிட்டேன். எங்களோட திருச்சபையில எப்போதும் அத்தகைய உற்சாகம் இருந்துச்சு, ஆனா, இப்போ நாங்க அரிதாவே ஆராதனைகளுக்குப் போக விரும்புறோம். சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபை உறுப்பினர்களோட ஐக்கியம் எவ்வளோ வெளிச்சத்தக் கொண்டிருக்காங்க, அது எனக்கு எவ்வளவு போஷாக்கா இருந்துச்சுங்கறத நான் மறுபடியும் யோசிச்சேன். நான் அத்தன வருஷங்களா போதகரோட பிரசங்கங்களக் கேட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா, இரட்சிப்புக்கான தேவனோட திட்டத்தப் பத்தியும், அவர் நியாயப்பிரமாண காலத்துலயும் கிருபையின் காலத்துலயும் எப்படி கிரியை செஞ்சாரு, அவரோட கிரியையின் பலன்கள் என்னவா இருந்துது, அல்லது கடைசி நாட்கள்ல தேவன் ஜனங்கள எப்படி நியாயந்தீர்க்கிறாரு என்பதப் பத்தியும் எனக்கு அப்பவும் தெளிவாத் தெரியல. எனக்கு விசுவாசம் தேவைங்கறது மட்டுமே எனக்குத் தெரிஞ்சுச்சு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளக் கேட்டதிலிருந்து, தேவனோட கிரியையின் எல்லா இரகசியங்களயும் நான் கத்துக்கிட்டேன், மத்தவங்களுடனான என்னோட ஐக்கியம், தேவனோட கிரியைய இன்னும் அதிகதிமா புரிஞ்சுக்க எனக்கு உதவுச்சு. சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபை உண்மையிலயே பரிசுத்த ஆவியானவரோட கிரியையக் கொண்டிருப்பதயும், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள் எல்லாம் சத்தியம்கறதயும் நான் பாத்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் தான் அநேகமா திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசுங்கறதயும் என்னால பாக்க முடிஞ்சிச்சு. இணையதள கூட்டங்கள் மூலம் நான் பெற்ற எல்லாத்தையும் மறுபடியும் நெனச்சுப் பாக்கறது, உண்மையிலயே என்னோட இதயத்துக்கு இதமா இருந்துச்சு. தேவன் புதிய கிரியையச் செய்யத் திரும்பி வந்திருந்தார்னு எனக்குத் தெரியும். அத ஆராய நான் அந்தக் கூட்டங்கள்ல கலந்துக்கலைனா, இரட்சிப்பின் வாய்ப்ப நான் இழக்க நேரிடும் அப்படின்னு நான் எனக்குள்ளயே நெனச்சுக்கிட்டேன். அந்த சகோதர சகோதரிகளோட கூட்டங்கள்ல அதிகமா கலந்துக்க நான் ரொம்பவே ஆசப்பட்டேன். ஆனா என்னால முடியல, ஏன்னா தலைவர்கள் அவங்களோட தொடர்பு எண்கள் எல்லாத்தயும் அழிச்சிட்டாங்க. என் ஆவி ஏங்குச்சு, பூமியில ரொம்பவே மதிப்புமிக்க பொருள நான் இழந்துட்டதா உணர்ந்தேன். நான் பரிதாபமா, வெறுமையா, வேதனையா உணர்ந்தேன். நான் ஒவ்வொரு நாளும் ஜெபிச்சு, எனக்கு ஒரு வழியக் காட்டும்படி தேவனிடத்துல கேட்டேன். தேவனுக்கு நன்றி, அவர் என் ஜெபங்களக் கேட்டார். கொஞ்ச நாட்களுக்குள்ளயே, லாவோஸைச் சேர்ந்த ஒரு சகோதரியும், முகநூலில் மற்றொரு சகோதரனும் என்னோடு தொடர்பு கொண்டாங்க. நாங்க தொடர்பில் இல்லாம இருந்த அந்த சில நாட்கள்ல, அவங்க என்னப் பத்தி ரொம்ப கவலைப்பட்டு, என்னைக் கண்டுபிடிக்க முயற்சித்ததா அவங்க என்கிட்ட சொன்னாங்க. நான் உண்மையிலயே தொடப்பட்டு தேவனுக்கு நன்றியுள்ளவனா இருந்தேன். தேவனோட அன்ப என்னால உணர முடிஞ்சுச்சு, அவர் நம்மள ஒருபோதும் கைவிடாம, நம்மள இரட்சிக்க தம்முடைய முழு பெலத்தையும் செலுத்துறாரு! நான் எதிர்மறையாவும் பலவீனமாவும் உணர்வேன்னு கவலைப்பட்டு, சர்வவல்லமையுள்ள தேவனோட சில வார்த்தைகள எனக்கு அனுப்புனாங்க. ஒரு பகுதி என்னை மிகவும் பாதிச்சுது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவன்ஒரு நபருக்காக கிரியை செய்து, அக்கறைகொண்டு, இந்த நபரை கருத்தில் கொண்டு பார்த்து, மற்றும் இந்த நபரைப் பாராட்டி அங்கீகரிக்கும்போது, சாத்தானும் அந்த நபரை நெருக்கமாகப் பின் தொடர்ந்து, அவரை ஏமாற்றி, அவருக்குத் தீங்கு செய்ய முயற்சிக்கிறது. தேவன் இந்த நபரை ஆதாயப்படுத்த விரும்பினால், தேவனைத் தடுக்க சாத்தான் தன் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்யும், தனது மறைவான நோக்கத்தை அடைவதற்காக, தேவனுடைய கிரியையை மோசம்போக்கி, சீர்குலைத்து சேதப்படுத்த பல்வேறு தீய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தும். இது என்ன நோக்கம்? தேவன் யாரையும் ஆதாயப்படுத்துவதை அவன் விரும்பவில்லை; தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆட்கொள்ள விரும்புகிறது, அது அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, அவர்களை தன் பொறுப்பிலேற்க விரும்புகிறது. இதனால் அவர்கள் அதனை ஆராதிப்பார்கள், அதனால் அவர்கள் பொல்லாத செயல்களைச் செய்வதில் அதனுடன் இணைந்து, தேவனை எதிர்ப்பார்கள். இது சாத்தானின் கெட்ட நோக்கம் அல்லவா? … தேவனுடன் போரிடுவதிலும், அவருக்குப் பின்னாலே செல்வதிலும், தேவன் செய்ய விரும்பும் எல்லா கிரியைகளையும் தரைமட்டமாக்குவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆக்கிரமித்து கட்டுப்படுத்துவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பது தான் சாத்தானின் நோக்கம். அவை அப்படி அழிக்கப்படாவிட்டால், அவர்கள் சாத்தானால் பயன்படுத்தப்படுவதற்கு அதன் வசமாகிறார்கள்—இது தான் அதன் நோக்கம்” (வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் IV”). தேவனுடைய வார்த்தைகள்ல இருந்து நாம இதப் பாக்கலாம்னு ஒரு சகோதரி ஐக்கியப்பட்டாங்க தேவன் நம்மள இரட்சிக்க கிரியை செய்யுறாரு, அதே சமயத்துல, நாம தேவன மறுதலிச்சு, காட்டிக் கொடுத்து, கடைசி நாட்ககளோட தேவனோட இரட்சிப்ப இழந்து போகும்படியா, சாத்தான் நம்மள ஒடுக்குவதுக்கும் தடுப்பதுக்கும் எல்லா வகையான ஜனங்களயும் பயன்படுத்துறான். இது சாத்தானோட தீய நோக்கம். இந்த நேரத்துலதான் நாம எழுந்து, இந்த ஜனங்களயும் விஷயங்களையும் பகுத்தறிஞ்சு, நம்மோட சொந்த விசுவாசத்தின் பாதையத் தேர்ந்தெடுக்கணும். நாம தேவனோட சத்தத்தக் கேட்டிருப்பதால, நாம அவரோட அடிச்சுவடுகள நெருக்கமாப் பின்பற்றனும். மெய்யான வழியில உறுதியா நிக்க இதுதான் ஒரே வழி. அவங்களோட ஐக்கியம் என்னையப் பிரகாசிப்பிச்சுச்சு. நான் இணையதளக் கூட்டங்கள்ல கலந்து கொள்றதத் தலைவர்கள் விரும்பல நான் தவறா வழிநடத்தப்படாம இருக்கணும்னு நெனச்சு, அவங்க எல்லாரோட தொடர்பு எண்களையும் அழிச்சிட்டாங்க, இது அன்பிலிருந்தும் உதவி செய்யுற இடத்துல இருந்தும் வந்ததப் போல தோன்றுச்சு. ஆனா உண்மையில, அவங்க என்னோட வழியில குறுக்க நின்னு, கர்த்தர வரவேக்காதபடி என்னைத் தடுத்து, நான் கடைசி நாட்களின் தேவனோட இரட்சிப்பை இழந்து போகும்படியா, என்னை மறுபடியும் மத உலகிற்கு இழுக்க முயற்சித்தாங்க. குருமார்களோட இடையூறுகள் என்னோட விசுவாசம் எவ்வளோ அற்பமானது, நான் எவ்வளோ பலவீனமா இருந்தேன் என்பத வெளிப்படுத்துச்சு. நான் என்னோட கைபேசிய குருமார்களிடத்துல ஒப்படச்சேன், மற்றவர்களுடனான தொடர்பை துண்டிக்க அனுமதிச்சேன். நான் பழைய திருச்சபைக்குத் திரும்பினேன். நான் கொஞ்சங் கூட வாழ்வாதாரத்தப் பெற முடியாம இருள்ல வாழ்ந்துக்கிட்டிருந்தேன். நான் கிட்டத்தட்ட போதகரப் பின்தொடர்ந்து உண்மையான வழிய விட்டுட்டேன்—எவ்வளவு பயங்கரமானது! என்னால மறுபடியும் சாத்தானுக்கு அடிபணிய முடியாது. குருமார்கள் என்ன செஞ்சாலும் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளத் தொடர்ந்து படிக்கணும்னு தீர்மானிச்சேன். அதுக்கப்புறம், சீன அரசாங்கத்தால சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுதல் போன்ற விஷயங்களப் பத்தியும் அவங்க எப்படி கொடூரமான சித்திரவதைகளுக்கு மத்தியில சாட்சியா இருந்தாங்க என்பதப் பத்தியும் ஒரு சகோதரர் எனக்கு ஒரு சில காணொளி சாட்சிகள அனுப்பினாரு. அதுதான் உண்மையான விசுவாசம். ஒப்பிட்டுப் பாக்கும் போது, நான் குருமார்களிடத்துல இருந்து வந்த கொஞ்சம் இடையூறுக்கே இணங்கிப் போனேன். நான் நீண்ட தூரம் போக வேண்டியிருந்துச்சு! அதையெல்லாம் கடந்து போக நான் தேவன் மீது சார்ந்திருக்கணும்னு எனக்குத் தெரியும், என்னோட குடும்பம் என்னை எப்படி நிராகரிச்சாலும், அல்லது குருமார்கள் என்னை எப்படி ஒடுக்கினாலும் நான் உறுதியா நிக்க வேண்டியிருந்துச்சு. பிரசங்கங்களக் கேக்கவும் கூட்டங்கள்ல கலந்துக்கவும் தொடர்ந்து இணையதளத்துக்குப் போக நான் தீர்மானிச்சேன்.
நான் இணையதளக் கூட்டங்கள்ல கலந்துக்கறதத் தடுக்க குருமார்கள் நிறைய விஷயங்களச் செஞ்சாங்க. அவங்க என்கிட்ட, “அவரோட ஆடுகளக் கண்காணிக்க, நாங்க தேவனால ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம், நாங்கதான் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில பொறுப்பு. அதனால்தான் உங்களோட இணையதளக் கூட்டங்கள நாங்க முறையா கவனிச்சு, அந்தத் தொடர்புகள நீக்குனது உங்களோட சொந்த நலனுக்காகத்தான். தேவனோட ஆடுகள நாங்க கண்காணிக்கலைனா, கர்த்தர் திரும்பி வரும்போது எங்கள நியாயந்தீர்ப்பார்” அப்படின்னு பொய் கூடச் சொன்னாங்க. மதகுருமார்கள் தேவனால நியமிக்கப்பட்டவர்களா என்பதப் பத்தி ஒரு சகோதரர் இணையதளக் கூட்டத்துல சொன்னது எனக்கு ஞாபகம் வந்துச்சு. அவர் சொன்னாரு, “அவரால ஏற்படுத்தப்படுற யாருக்கும் ஊழியம் செய்ய அடிப்படையா தேவனிடத்துல இருந்து வரும் வார்த்தைகள் இருக்கு. நியாயப்பிரமாண காலத்துல, யேகோவா தேவன் இஸ்ரவேலர்களுக்காக மோசேய ஏற்படுத்தினப்போ, அவர் தனிப்பட்ட முறையில் மோசேயிடத்துல சொன்னாரு, ‘நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்’ (யாத்திராகமம் 3:12). கிருபையின் காலத்துல, திருச்சபைகள மேய்க்குற பணிய பேதுருவுக்கு கொடுத்ததுக்கான ஆதாரமா கர்த்தராகிய இயேசு பேசினாரு: ‘மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்’ (மத்தேயு 16:18-19). ‘என் ஆடுகளை மேய்ப்பாயாக’ (யோவான் 21:16). தேவன் தம்மால ஏற்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுறவங்களுக்கு தனிப்பட்ட முறையில சாட்சி கொடுக்கிறாருங்கறத நம்மால பாக்க முடியுது. தேவனோட வார்த்தைகள அவங்க ஆதாரமா வச்சிருக்காங்க. அது இல்லாம, குறஞ்ச பட்சம் பரிசுத்த ஆவியானவரோட கிரியைக்கான ஆதாரம் இருக்கணும். மதகுருமார்கள் தேவனால ஏற்படுத்தப்பட்டாங்கன்னு, அவரோட வார்த்தைகள்ல இருந்து ஏதாவது ஆதாரத்தக் கொண்டிருக்காங்களா? பரிசுத்த ஆவியானவரோட கிரியைய கொண்டிருக்காங்களா?” இது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கைய தந்துச்சு. எனக்குத் தெரியும், குருமார்களை ஏற்ப்படுத்தியதா தேவன் ஒருபோதும் சொல்லல. “பரிசுத்த ஆவி உங்களக் கண்காணிகளாக ஆக்கினார்” அப்படின்னு பவுல் சொன்னாலும், பவுலோட வார்த்தைகள் தேவனோட வார்த்தைகள் இல்ல, அதனால அவற்ற அடிப்படையாப் பயன்படுத்த முடியாது. அவங்க உரிமை கொண்டாடறது நியாயமேயில்ல! அப்புறம், குருமார்கள் தங்களோட பிரசங்கங்கள்ல பரிசுத்த ஆவியானவரோட வெளிச்சத்தப் பெற்றிருக்கலங்கறத நான் சமீபத்துலதான் உணர்ந்தேன். அவங்க தேவனோட சித்தத்தப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது கர்த்தரேட வார்த்தைகளக் கைக்கொள்ள எங்கள வழிநடத்தவோ இல்லை. அவங்களிடத்துல பரிசுத்த ஆவியானவரோட கிரியை சுத்தமா இல்ல. அவங்க தேவனால நியமிக்கப்படலன்னும், மனுஷனால நியமிக்கப்பட்டிருந்தாங்கன்னும் இது காட்டுது. என்னோட விசுவாசத்துல, நான் தேவனோட வார்த்தைகளக் கேட்டு அவரப் பின்பற்றணும், எந்த மனுஷனுக்கும் செவி கொடுக்கவோ அவங்களப் பின்பற்றவோ கூடாது. நான் பதில் சொல்லாம இருந்ததப் பாத்து, போதகர் கோபப்பட்டு என்னையத் திட்டி: “சுவிசேஷத்தப் பகிர்ந்து கொள்ள விரும்புற யாரா இருந்தாலும் முதல்ல எங்க மூலமாத்தான் போகணும். எங்களோட ஒப்புதல் இல்லாம, அது ஒரு தப்பான வழியா இருக்கும். நீ அது சொல்றத கேட்கக் கூடாது!” அப்படின்னு சொன்னாரு. நான் அதுக்கு, “தேவன் சிருஷ்டிகரா இருக்காரு, அவர் தம்மோட சொந்தக் கிரியையச் செய்யுறாரு, அவருக்கு எந்த மனுஷனோட அங்கீகாரமும் தேவையில்ல. கர்த்தர் திரும்பி வந்திருக்கிறாரு. நாங்க தேவனோட சத்தத்த கவனிச்சு அவரப் பின்பற்றுறோம்—எங்களுக்கு ஏன் உங்களோட அங்கீகாரம் தேவை?” அப்படின்னு பதிலடி கொடுத்தேன். அவங்க உண்மையிலயே அகந்தையுள்ளவங்களா இருக்கற அளவுக்கு, அவங்க நிஜமாவே தங்களப் பத்தி அதிகமா நெனச்சுட்டாங்களோன்னு நான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்! சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளக் கேக்க மறுத்து, அவரோட கிரியைய விசாரிக்க மறுத்து, நியாயத்தீர்ப்ப மட்டுமே வழங்குறது, கர்த்தராகிய இயேசுவின் கிரியைக்கு எதிரான பரிசேயர்களோட அணுகுமுறையப் போலவே இருந்துச்சு. அவங்க தேவன் மீது எந்தப் பயபக்தியும் கொண்டிருக்கல, சத்தியத்தின் மீது எந்த அன்பும் கொண்டிருக்கல.
அதுக்கப்புறம், என்னோட மனைவியிடத்துல, நான் தவறான வழியில வழிநடத்தப்பட்டேன்னு பொய் சொன்னாங்க. அவளுக்கு அவங்களப் பத்திய எந்தப் பகுத்தறிவும் இல்ல, அதனால ஒவ்வொரு முறையும் நான் இணையதள கூட்டத்துல இணையறப்பவும், அவள் உண்மையிலயே கோபப்பட்டு நாங்க இரண்டு வேற வேற பாதைகள்ல இருந்தோம்னும், நான் தொடர்ந்து அந்தக் கூட்டங்களுக்குப் போனா அவள் என்னை விவாகரத்து செஞ்சுருவான்னும் சொன்னாள். அந்த நேரத்துல நான் ரொம்பவே பலவீனமாவும் பரிதாபமாவும் உணர்ந்தேன். நான் சமரசம் செஞ்சுக்கிட்டு, கூட்டங்கள்ல கலந்துக்கறத நிறுத்திட்டா, நான் தேவனோட இரட்சிப்ப இழந்து போயிருவேனோன்னு நெனச்சேன். ஆனா, நான் தொடர்ந்து கலந்துக்கிட்டா, அவள் என்னைய விவாகரத்து செஞ்சிருவாள். அப்புறம் எங்களோட சின்னக் குழந்தைகள் என்ன ஆவாங்க? நான் என்னோட உதவியற்ற நிலையில தேவனிடத்துல, “தேவனே, என் விசுவாசத்த பெலப்படுத்துங்க. இந்த உபத்திரவங்கள மேற்கொள்ள உதவி செய்யுங்க, எனக்கு முன்னால உள்ள பாதையில என்னைய வழிநடத்துங்க” அப்படின்னு ஜெபம் செஞ்சேன். அப்ப, கர்த்தராகிய இயேசு சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வந்துச்சு: “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத்தேயு 10:37). என்னோட மனைவி, குழந்தைகள் மீதான என்னோட அன்பு தேவன் மீதான என்னோட அன்ப விட அதிகமாக இருந்ததாவும், நான் அவருக்குத் தகுதியானவன் இல்லைன்னும் நெனச்சு, என்னோட மனைவி என்னைய விவாகரத்து செஞ்சாலும், நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவேன்னு, நான் மனசுக்குள்ளயே தீர்மானிச்சேன். அதுக்கப்புறம் என்னோட மனைவி என் வழியில நிற்க முயற்சி செஞ்சப்ப, நான் அவளால பாதிக்கப்படல.
பின்னர் போதகர், கூட்டங்கள்ல இருந்து என்னைத் தடுக்கும் முயற்சியில என்னோட மாமனார ஈடுபடுத்தினாரு. என்னோட மாமனார் ஒரு பெரிய குடிகாரர், அவர் அடிக்கடி திருச்சபைக்குப் போவதில்ல. ஆனா, போதகர் அவர ஒரு ஆராதனைக்குக் கூப்பிட்டு, சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிச்ச பிறகு, நீங்க திருச்சபைய விட்டு வெளியேற முயற்சித்தா, அவங்க உங்களோட கால்கள உடைச்சிருவாங்கன்னு அவரிடத்துல பொய் சொன்னாரு. தன்னோட அப்பா சொன்னதக் கேட்டு என் மனைவி வீட்டுக்கு வந்து என்கிட்ட கத்த ஆரம்பிச்சாள். நான் அவகிட்ட சொன்னேன் குருமார்கள் சொன்னதுக்கு எந்த ஆதாரமும் இல்லை. கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏற்றுக்கொள்ளாததுக்காக, உலகம் முழுவதிலும் யாரோட கால்களும் இதுவர உடைக்கப்பட்டிருக்கல. இது சீன கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால ஆரம்பிக்கப்பட்ட வதந்தி, அவங்க தேவனை எதிர்க்குற, அடக்குமுறையான அரசாங்கம். ஒரு போதகர் என்கிட்ட ஒருமுறை சொன்னாரு வேறொரு போதகர் அமெரிக்காவில இருந்து சில வேதாகமங்களக் கொண்டு வந்தாரு, சீன எல்லையில காவல் துறையினர் அவற்ற பறிமுதல் செஞ்சாங்க. தேவன் மீதான விசுவாசத்த சிசிபி அனுமதிக்கறது இல்ல. இப்ப கர்த்தர் திரும்பி வந்து, சீனாவுல தோன்றியிருக்கிறாரு. அவங்க சர்வவல்லமையுள்ள தேவனோட விசுவாசிகள வேட்டையாடி துன்புறுத்துறாங்க. இப்படிப்பட்ட தேவன எதிர்க்கற, நாத்திக அரசாங்கம் சொல்ற எதயும் எப்படி நம்புறது? நான் இணையதளக் கூட்டங்கள்ல சேர்ந்து, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிச்சு வர்றேன், அவை செழுமையும் ஏராளமுமானவை, அவை தேவனோட கிரியையின் இரகசியங்களயும், அதோடு, மனுஷனோட சீர்கேடு மற்றும் பாவ சுபாவம், இன்னும் நிறைய விஷயங்கள வெளிப்படுத்துதுங்க, அதனால நாம நம்மலயே அறிஞ்சுக்கலாம். இந்த விஷயங்கள நான் எவ்வளவு அதிகமாக வாசிக்கிறேனோ, அவ்வளவு அதிக பிரகாசத்த நான் உணர்றேன், இது தேவனோட சத்தம்கறதயும் அதிகமா உணர்றேன். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்பதுல நான் உறுதியா இருக்கேன்னு அவகிட்ட சொன்னேன். கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருக்கிறாரு, நாம தேவனோட அடிச்சுவடுகளப் பின்தொடரனும். நான் ஏன் பழைய திருச்சபைக்குப் போகணும்? அதுக்கு மேல என்னோட மனைவி எதுவும் சொல்லல. ஆனா, அவள் ஆராதனைகள்ல கலந்துகிட்டு போதகரோட வதந்திகளக் கேட்டவுடனே, அவள் வீட்ட்டுக்குத் திரும்பி வந்ததும் என்கிட்ட சண்டை போடுவாள். இதுக்கு முன்னாடி, குருமார்கள நான் எப்போதும் தேவனை நேசிப்பவங்களாவும், என்மீதும் அன்புள்ளவங்களாவும் நெனப்பேன், ஆனா, நான் தேவனோட புதிய கிரியையத் தேடுவத அவங்க கண்டுபிடிச்சதால, அவங்க என் வழியில குறுக்க நிக்கத் தங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க, என்னைய மறுபடியும் தங்களோட மதத்திற்குள்ள இழுக்க முயற்சிச்சாங்க. இறுதியா அவங்களோட உண்மையான முகங்களப் பாத்தேன். பரிசேயர்கள சபிக்கும் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வந்துச்சு: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை” (மத்தேயு 23:13). “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்” (மத்தேயு 23:15). பரிசேயர்கள் ஜனங்களத் தங்களோட பிடியில கட்டுப்படுத்தி வைக்க மதத்திற்குள்ள மயக்கி வச்சாங்க, கர்த்தராகிய இயேசு வந்தப்ப, அவரோட கிரியையும் வார்த்தைகளும் எவ்வளவு வல்லமையுள்ளவைன்னும் அதிகாரம் வாய்ந்தவைனும் அவங்க பாத்தாங்க. ஆனா, அவங்க வேதத்தோட நேரடியான அர்த்தத்தப் பிடிச்சிக்கிட்டு சத்தியத்தைத் தேடல. ஜனங்க இயேசுவப் பின்பற்றினா தங்களோட வாழ்க்கைக்கு ஆபத்து நேரிடுன்னு பயப்படுறாங்க. அதனால, ஆண்டவர் இயேசுவக் கொச்சைப்படுத்தியும், கண்டனம் செஞ்சும் வதந்திகளப் பரப்புனாங்க இறுதியில அவர சிலுவையில அறைஞ்சாங்க. இன்றைய போதகர்களும் அந்தப் பரிசேயர்களப் போலவே இருக்காங்க இல்லையா? அவங்க தங்களோட திருச்சபைகள்ல விசுவாசிகள சிக்க வச்சு, அவங்கள தங்களோட கட்டுப்பாட்டில வச்சிருக்காங்க, தேவனோட சத்தத்தக் கேக்கவும் கர்த்தர வரவேற்கவும் அவங்கள அனுமதிக்கறதில்ல. இது ரொம்ப பொல்லாப்பானது! ஒரு கூட்டத்துல நான் பார்த்த சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் ஒரு பகுதிய இது எனக்கு நினைவூட்டுச்சு. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?” (வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). தேவனோட வார்த்தைகள் குருமார்களோட உண்மையான, தேவன எதிர்க்கற முகங்களக் காட்டுது. மனிதகுலத்த இரட்சிக்க தேவன் கடைசி நாட்கள்ல வந்திருக்காரு. குருமார்கள் தேடுறதுக்கும் ஆராயறதுக்கும் மறுக்கறது மட்டுமல்லாம, அவங்க சண்டையிட்டு அவரக் கண்டனம் செஞ்சி, வதந்திகளையும் பொய்களையும் பரப்பி, திருச்சபைகளை அடச்சு நிரந்தரமா மூடி, மெய்யான வழியத் தேடுறதிலிருந்து விசுவாசிகளத் தடுக்குறாங்க. அவங்க கர்த்தர வரவேற்பதுமில்ல தேவனோட ராஜ்யத்துக்குள்ள நுழையறதுமில்ல. அவங்க தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கறதுலருந்து நம்மளத் தடுத்து, ராஜ்யத்துக்குள்ள நுழையறதுக்கான வாய்ப்புகள அழிக்குறாங்க. அவங்க தேவனோட வார்த்தைகள்ல குறிப்பிடப்பட்ட, மனுஷனோட மாம்சத்தத் திண்ணு மனுஷனோட இரத்தத்தக் குடிக்கும் பிசாசுகள், ஜனங்கள மெய்யான வழியிலிருந்து விலக்குற இராட்சதர்கள்.
நான் அவங்களப் பின்பற்றாததால அவங்க என்னைய திருச்சபையிலருந்து வெளியேத்தீட்டாங்க. நான் ஏதாவது பிரச்சனையில சிக்கினா அவங்க எனக்கு உதவ மாட்டாங்கன்னு, தலைவர்கள் என்கிட்ட சொன்னாங்க. அதுக்கப்புறம், அந்த குருமார்கள் சத்தியத்த நேசிக்கலங்கறதையும் தேவனோட சத்தத்தக் கேக்கறதில்லங்கறதையும் உண்மையிலேயே நான் பாத்தேன். அவங்க தேவனோட ஆடுகள் அல்ல. என்னோட விசுவாசத்துல அவங்களப் பின்பற்றுறது, குருடங்க குருடங்கள வழிநடத்துறதப் போல இருக்கும், நாம எல்லாரும் அழிஞ்சுபோயிருவோம். அந்தக் கள்ள மேய்ப்பர்களிடத்திலிருந்து நான் விடுவிக்கப்பட்டு, தேவனோட அடிச்சுவடுகளக் கண்டுபிடிக்க முடிஞ்சதால மிகவும் அதிர்ஷ்டசாலியா உணர்றேன்.
அடுத்து வந்த நாட்கள்ல, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நான் அதிகம் வாசிச்சேன், சகோதர சகோதரிகளிடத்துல இருந்து அதிக சாட்சிகளக் கேட்டேன். எனது 10 வருட விசுவாசத்துல முன்னெப்போதையும் விட, நான் ரொம்பவே ஆவிக்குரிய ரீதியில் வளர்ந்திருப்பதாவும், பக்திவிருத்தி அடைஞ்சிருப்பதாவும் உணர்ந்தேன். கடைசி நாட்கள்ல பிறந்து, கர்த்தர் திரும்பி வர்றத வரவேற்பது அப்படிப்பட்டதொரு மிகப் பெரிய ஆசீர்வாதம்ன்னு உணர்ந்தேன்! இந்த அற்புதமான செய்திய இன்னும் பலர்கிட்ட பகிர்ந்துக்க விரும்புனேன். ஆனா, திருச்சபையில மத்த உறுப்பினர்களோடு சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கக் கூடாது, இல்லேனா, அதிகாரிகள் கிட்ட புகார் செஞ்சு என்னைய கைது செய்ய வைக்குறதா மதகுருமார்கள் என்னைய எச்சரிச்சாங்க. “தேவனுக்கு விரோதமாப் போகிறோங்கற பயம் உங்களுக்கு இல்லையா?” அப்படின்னு நான் சொன்னேன். அவங்கள்ல ஒருவரான ஆஷர் ரொம்ப சாதாரணமா, “இது உண்மையிலேயே தேவனோட கிரியையா இருந்தா, நாங்க இந்தக் காலத்து பரிசேயர்களாக இருப்போம், தேவன் எங்களத் தலைமுறை தலைமுறையா தண்டிக்கட்டும்” அப்படின்னு பதில் சொன்னாரு. இப்படிச் சொல்றதனால, அவங்க தெரிஞ்சே தேவனுக்கு விரோதமா போய் அவரோட மனநிலையப் புண்படுத்துறாங்க இல்லையா? அவங்களோட அகந்தையும் தேவன் மீது கொஞ்சங்கூட பயமில்லாத தன்மையும் அவங்க எப்படி சத்தியத்த வெறுக்குறாங்க, தேவனுக்கு சத்துருக்களா இருக்காங்க அப்படிங்கறத எனக்கு இன்னும் தெளிவா காட்டுச்சு. அப்படி, தேவனுக்கு விரோதமா செயல்படுவதால, இறுதியில அவங்க பரிசேயர்களப் போலவே தேவனால தண்டிக்கப்படுவாங்க!
அதுக்கப்புறம், அவங்களப் பத்தி எனக்கு ரொம்பத் தெளிவான பகுத்தறிவு கிடச்சுச்சு. அவங்களால அதுக்கப்புறம் என் வழியில நிக்கவே முடியல, நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றுவதுல அதிக உறுதியா இருந்தேன். இப்ப நான் சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையில ஒரு கடமைய ஏத்துக்கிட்டேன். என்னோட விசுவாசத்துல நான் எவ்வளவு உறுதியா இருந்தேங்கறதப் பாத்து என்னோட மனைவிக்கு ஆர்வம் ஏற்பட்டுச்சு. அப்புறம் அவளே அதை ஆராய ஆரம்பிச்சாள். அவரோட வார்த்தைகள வாசிச்ச பிறகு, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய அவளும் ஏத்துக்கிட்டாள். இப்ப அவள் சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கறா. சர்வவல்லமையுள்ள தேவனோட இரட்சிப்புக்கு நான் நன்றியுள்ளவனா இருக்கேன் என் கடமையச் செய்வதுலயும் தேவனோட அன்பத் திருப்பிச் செலுத்துவதுலயும் என்னை முழுமையா ஒப்புக்கொடுக்க விரும்புறேன்.
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?