என் குடும்பக் கூண்டிலிருந்து தப்பித்தல்

நவம்பர் 22, 2023

2005 ல கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட கிரியைய நான் ஏத்துக்கிட்டேன். அந்தக் காலகட்டத்துல, கூடுகைகள் மூலமாவும், தேவனோட வார்த்தைகள வாசிப்பதன் மூலமாவும், நான் இதுவரை கேள்விப்படாத பல சத்தியங்களயும் இரகசியங்களயும் கத்துக்கிட்டேன்: தேவன் எப்படி மனிதகுலத்த நிர்வகிக்கிறாரு, இரட்சிக்குறாருங்கறத நான் தெரிஞ்சுக்கிட்டேன், மனித வாழ்க்கையின் நோக்கம், மதிப்பு, அர்த்தம் பத்தியும், அதோடு கூட, மனுஷனோட முடிவு, சென்றடையும் இடம் பத்தியும் நான் கத்துக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள வாசிப்பதன் மூலமா, என்னோட வாழ்க்கையில இருந்த பல பிரச்சனைகளயும் சிரமங்களயும் என்னால தீர்த்துக்க முடிஞ்சுச்சு. தேவனை விசுவாசிப்பது மகத்தான விஷயமா இருந்துச்சு. ஆனா என்னோட கணவர் அதக் கண்டுபிடிச்சதும், என்னோட விசுவாசத்த எதிர்ப்பதுல அவர் உறுதியா இருந்தாரு. கர்த்தர் மேல வச்சுருந்த விசுவாசத்துனால ஒருதடவ என்னோட மாமா சிசிபி போலீசாரால கைது செய்யப்பட்டாரு. தேவன் மேல விசுவாசம் வைக்குற எல்லாரயும் சிசிபி தடை செய்யுதுங்கறது என்னோட கணவருக்குத் தெரியும், நானும் கைது செய்யப்பட்டுருவேன்னும், அது முழு குடும்பத்தயும் சிக்க வைக்கும்ன்னும் அவர் கவலப்பட்டாரு, அதனால அவர் என்னோட விசுவாசத்துக்கு ரொம்பவே எதிரா இருந்தாரு. அதோடு கூட, நான் அப்போது ஒரு மாற்று ஆசிரியரா இருந்தேன், பள்ளிக்கூடம் அதக் கண்டுபிடிச்சு என்னையப் பணிநீக்கம் செஞ்சுரும்ன்னு அவர் கவலப்பட்டாரு, அதனால அவர் எனக்கு அதிக நெருக்கடியக் கொடுத்து என்னையத் தடுத்தாரு.

தேவனோட வார்த்தைகள வாசிக்கவோ, பாடல்களக் கேட்கவோ அவர் என்னைய அனுமதிக்கல, கூடுகைகள்ல கலந்துக்கவோ அல்லது என்னோட கடமைய நிறைவேத்தவோ கூட அவர் என்னைய அனுமதிக்கல. ஒருதடவ, தேவனோட வார்த்தைகள நான் வாசிச்சிக்கிட்டிருக்கையில என்னையப் பாத்துட்டாரு, உண்மையிலயே பித்துப்பிடிச்சவரப் போல இருந்தது எனக்கு ஞாபகமிருக்குது. அவர் இப்படி சொன்னாரு: “எங்க அரசாங்கம் நீ விசுவாசிப்பதத் தடை செய்யுது, ஆனா நீ இன்னும் விசுவாசிக்குற! கல்விக் குழுவினர் ஒருத்தர்கிட்ட நீ பிடிபட்டுட்டீன்னா, நீ உன்னோட வேலைய மட்டும் இழக்க மாட்ட, உன்னைய சிறைச்சாலைக்கும் அனுப்பிருவாங்க. ஜாமீன்ல எடுக்க என்கிட்ட பணம் இல்ல, அதனால ரொம்ப தாமதமாகறதுக்கு முன்னாடியே நீ விசுவாசிப்பத நிறுத்துறது நல்லது!” அதுக்கப்புறமும், நான் தொடர்ந்து விசுவாசிச்சப்போ, அவர்: “எனக்கு மூச்சு இருக்கறவர வரை, நீ விசுவாசத்தப் பின்பற்றுறதக் கனவுல கூட நெனச்சுப் பாக்காத!” அப்படின்னு என்னைய மிரட்டினாரு. இதக் கேட்டதும் என்னோட மனவுறுதி தளர்ந்துபோச்சு. நான்: “எது எப்படின்னாலும், என்னோட கணவர் என்னைய விசுவாசத்தக் கடைப்பிடிக்க விடமாட்டாரு, ஆனாலும் நான் இன்னும் விசுவாசிப்பதுல உறுதியா இருக்குறேன். அதனால அவர் எனக்கு என்ன செய்யப் போறாரு?” அப்படின்னு நெனச்சேன். உடனே, தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் சிந்திச்சுப் பாத்தேன்: “நீ என் தைரியத்தை உனக்குள் கொண்டிருக்க வேண்டும், மேலும் விசுவாசிக்காத உறவினர்களை எதிர்கொள்ளும்போது உனக்குக் கொள்கைகள் இருக்க வேண்டும். என் பொருட்டு, நீ எந்த இருண்ட வல்லமைகளுக்கும் அடிபணியக்கூடாது. பரிபூரணமான வழியில் நடக்க என் ஞானத்தைச் சார்ந்து கொள்; சாத்தானின் எந்த சதித்திட்டங்களும் ஆட்கொள்ள அனுமதிக்காதே. உன் இருதயத்தை எனக்கு முன்பாக வைத்திருக்க, உன்னுடைய எல்லா முயற்சிகளையும் எடு, நான் உன்னை ஆறுதல்படுத்தி உனக்குச் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தருவேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 10”). தேவனோட வார்த்தைகள் என்னைய ரொம்ப உற்சாகப்படுத்துவதா இருந்துச்சு. என்னோட விசுவாசத்தக் கைவிடும்படி என்னைய வற்புறுத்துறதுக்காகவும், என்னைய பயமுறுத்துறதுக்காகவும் என்னோட கணவர் எப்படி சிசிபியால ஏமாத்தப்பட்டிருந்தாருங்கறத நான் நெனச்சுப் பாத்தேன். மேலோட்டமா பாத்தா, தேவனைப் பின்தொடரவிடாம என்னோட கணவர் என்னை வற்புறுத்தித் தடுக்கிறாருன்னு தோனுச்சு, ஆனா உண்மையில, தேவனுக்குத் துரோகம் செஞ்சு, தேவனோட இரட்சிப்ப இழக்கும்படி என்னைய வற்புறுத்துறதுக்காக சாத்தான் அவர் மூலமா கிரியை செஞ்சுக்கிட்டிருந்தான். சாத்தானோட சூழ்ச்சியில விழவோ அல்லது சாத்தானோடு சமரசம் செஞ்சுக்கவோ என்னால முடியல. நான் தேவனை சார்ந்துக்கிட்டு, அவரோட வார்த்தைகளின்படி நடக்குற வரை, என் கணவரோட வற்புறுத்தல மேற்கொள்ள அவர் என்னைய வழிநடத்துவாருன்னு நான் விசுவாசிச்சேன். அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகள் கொண்ட என்னோட புத்தகங்கள நான் மறச்சு வச்சுட்டேன், அவர் இல்லாதப்ப மட்டுமே அத வாசிச்சு, கூடுகைகள்ல கலந்துக்குவேன் அல்லது சுவிசேஷத்தப் பரப்புவேன். 2008 ஜூலை வரைக்கும் கூட அது நீடிக்கல, நான் இன்னும் விசுவாசத்தக் கடைப்பிடிச்சுக்கிட்டும் என்னோட கடமையச் செஞ்சுக்கிட்டும் இருக்கேன்னு என்னோட கணவர் கண்டுபிடிச்சிட்டாரு, அவர் என் மேல கடுமையா கோபப்பட்டாரு. தேவனுடைய வார்த்தைகளடங்கிய என்னோட புத்தகங்களயும், நான் கீர்த்தனைகளக் கேட்குற MP5 பிளேயரயும் தேடுறதுக்காக அவர் வீடு முழுசயும் அலங்கோலமாங்கிட்டாரு. அவர் பிளேயரை மிதிச்சு, அத சுக்குநூறா நொறுக்கிட்டாரு. விசுவாசத்தக் கடைப்பிடிப்பதுல இருந்து என்னையத் தடுக்க, நாள் முழுதும் வீட்ல என்னோட செயல்பாடுகள அவர் கண்காணிக்கறதுக்காக, அதிக சம்பளம் கிடைக்குற தன்னோட வேலையில விடுப்பு எடுத்தாரு. என்னால கூடுகைகள்ல கலந்துக்க முடியல, ரொம்ப வேதனைப்பட்டேன். அதனால, சந்தர்ப்பம் கிடைச்சப்போ, என்னோட சகோதர சகோதரிகளப் பாக்க நான் பதுங்கியிருந்தேன். ஆனா எனக்கு அதிர்ச்சி தரும்படி, அவர் எங்களப் பத்திப் புகாரளிக்க போலீசாரக் கூப்பிட்டாரு. அதிர்ஷ்டவசமா, தேவனோட வார்த்தைகளின் புத்தகங்களயோ அல்லது மத்த ஆதாரங்களயோ அவங்க கண்டுபிடிக்கல அதனால எங்கள அவங்க கைது செய்யல. அதுக்கப்புறமா, பக்கத்து வீட்டு என் சகோதரியோட வீடு கூடுகைக்கான ஒரு இடமா இருந்தத அவர் கண்டுபிடிச்சப்போ, சகோதர சகோதரிகள் கூடிவர்றதப் புகைப்படம் எடுத்து புகார் கொடுத்துருவேன்னு அவங்கள மிரட்டினாரு. அதன் விளைவா, சகோதர சகோதரிகள் தொடர்ந்து அங்க கூடுறதுக்குத் துணியல. என்னோட சகோதர சகோதரிகளத் தொடர்புகொள்கையில, நான் அவரிடத்துல பிடிபடும் போதெல்லாம், அவர் என்னைய அடிப்பாரு இல்லேன்னா திட்டுவாரு. அவர் என்னைய அடிச்சதுக்குக் கணக்கே இல்ல, என்னோட காதுகள்ல ஒரு ரீங்கார சத்தம் இருந்துக்கிட்டே இருந்துச்சு, அது பல மாசங்களா போகல.

அந்த நேரத்துல, நான் அடிக்கடி இந்த ஒரு பாட்டை மனசுக்குள்ளயே முணுமுணுத்துப் பாடுவேன்: “நான் தேவனுக்கு என் அன்பையும் உண்மையையும் அளிப்பேன், அவரை மகிமைப்படுத்த என் ஊழியத்தை நிறைவுசெய்வேன். தேவனுக்கான என் சாட்சியில் உறுதியாக நிற்க நான் தீர்மானமாக இருக்கிறேன், ஒருபோதும் சாத்தானுக்கு அடிபணிய மாட்டேன். நம்முடைய தலைகள் உடைந்து இரத்தம் வழிந்தாலும், தேவனுடைய மக்களின் முதுகெலும்பை வளைக்க முடியாது. தேவனுடைய புத்திமதிகள் என் இருதயத்தில் பிணைக்கப்பட்டுள்ளதால், நான் பிசாசாகிய சாத்தானை அவமானப்படுத்துவதில் தீர்மானமாக இருக்கிறேன். வலியும் கஷ்டங்களும் தேவனால் முன்தீர்மானிக்கப்பட்டுள்ளன. நான் மரணம் வரை அவருக்கு உண்மையாகவும் கீழ்ப்படிதலோடும் இருப்பேன். நான் மீண்டும் ஒருபோதும் தேவனை அழ வைக்கமாட்டேன், ஒருபோதும் அவரை வருத்தப்பட வைக்கமாட்டேன்(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள், “தேவனுடைய மகிமையின் நாளைக் காண நான் விரும்புகிறேன்”). தேவனோட மிகுதியான அன்பினால மட்டுமே ஒரு சிருஷ்டியா, தேவனைப் பின்பற்றி அவரால இரட்சிக்கப்படுறதுக்கு, நான் எப்படி இவ்வளவு அதிர்ஷ்டசாலியா இருந்தேன்னு நெனச்சுப் பார்த்தேன். சாத்தானுக்குக் கீழ்ப்படியறத விட, நான் மரிப்பதயும், தேவனுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாம இருப்பதயும் விரும்புனேன். எவ்வளவு அதிகமா என்னோட கணவர் என்னைய நெருக்குனாரோ, அவ்வளவு அதிகமா நான் தேவனைப் பின்பற்றி, உறுதியா நின்னு சாத்தானை வெட்கப்படுத்த விரும்புனேன். அதுக்கப்புறமா, நான் கூடுகைகள்ல தொடர்ந்து கலந்துக்கிட்டாலோ அல்லது என்னோட கடமைய செஞ்சாலோ, என்னோட கணவர் என்னைய அடிப்பார்ன்னும் மத்த சகோதர சகோதரிகளப் பத்தி அவர் புகாரளிச்சிருவாருன்னும் சொல்லி திருச்சபையில இருக்கறவங்க கவலப்பட்டாங்க, அதனால நான் கூடுகைகள்ல கலந்துக்கறத அவங்க தடுத்துட்டு, வீட்லருந்தே தேவனோட வார்த்தைய வாசிக்க வச்சாங்க.

அடுத்த மூணு வருஷமா, தேவனோட வார்த்தைகள ரகசியமாக வாசிக்கறதுக்கு, என்னோட கணவர் வெளியில போன நேரங்கள மட்டுமே என்னால பயன்படுத்திக்க முடிஞ்சுச்சு, எப்பவாவது, என்னோட பக்கத்து வீட்டு சகோதரிய ஐக்கியத்துக்காக சந்திச்சு நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சுவிசேஷத்தப் பரப்புனேன். கூண்டுல அடைபட்ட பறவையப் போல நான் கட்டுப்படுத்தப்பட்டேன். சத்தியத்த ஐக்கியங்கொள்றது, தேவனைத் துதிச்சுப் பாடல்களப் பாடுறதுன்னு, நான் மத்த சகோதர சகோதரிகளோட சேர்ந்து இருந்த என்னோட நேரத்த நெனச்சுப் பாத்தேன், எவ்வளவு சந்தோஷமான, அற்புதமான நேரங்கள் அது! கடைசி நாட்கள்ல மனிதகுலத்த இரட்சிக்குற தேவனோட கிரியை வாழ்நாள்ல ஒருதடவ மட்டுந்தான் நிகழக்கூடியதுங்கறதயும் நான் நெனச்சுப் பாத்தேன், வாய்ப்பு நொடிப்பொழுதுல போயிரும், அதனால என்னால தவறவிட முடியல. நான் ஒரு இயல்பான திருச்சபை வாழ்க்கைய வாழவும், சுவிசேஷத்தப் பரப்பவும், மத்தவங்களோட சேர்ந்து தேவனுக்குச் சாட்சி பகரவும் ஏங்குனேன், ஆனா இது எல்லாமே வெற்று நம்பிக்கையா மாறியிருந்துச்சு. நான் ரொம்ப மனச்சோர்வயும் வேதனையயும் உணர்ந்தேன், அடிக்கடி தனியாபோய் மறஞ்சிருந்து அழுவேன். நான் சத்தம்போட்டு கத்த விரும்புனேன்: “தேவனை விசுவாசிக்கறதுங்கறது சரியான பாதையில நடப்பதா இருக்குது, நான் சரியான முடிவ எடுத்துருக்கேன். இது ஏன் எனக்கு சாத்தியமாகல?” அதுக்கப்புறமா நான் தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய சிந்துச்சுப் பாத்தேன். “பல்லாயிரம் ஆண்டுகளாக இது அசுத்தமான நிலமாக இருந்து வருகிறது. இது தாங்க முடியாத அழுக்கும், மிகுந்த துன்பமும், எங்கும் தலைவிரித்தாடும் பிசாசுகளும், சூழ்ச்சி மற்றும் வஞ்சகமும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துதலும், இரக்கமற்றும் கொடூரமாகவும், இந்தப் பிசாசு நகரத்தை மிதித்தும், மரித்த உடல்களின் குப்பைகளால் நிரம்பியதுமாய் இருக்கிறது; அழுகியதனால் ஏற்படுகிற துர்நாற்றம் தேசத்தை மூடுகிறது மற்றும் காற்றில் பரவுகிறது, மேலும் அது பலத்தப் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வானங்களுக்கு அப்பால் உள்ள உலகத்தை யாரால் பார்க்க முடியும்? மனுஷனின் சரீரம் முழுவதையும் பிசாசு இறுக்கமாகப் பிடிக்கிறது, அது அவனது இரு கண்களையும் மறைக்கிறது, மேலும் அவனது உதடுகளை இறுக்கமாக மூடுகிறது. பிசாசுகளின் நகரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் போது, ஏதோ அது ஊடுருவ முடியாத பிசாசுகளின் அரண்மனையாக இருப்பதைப் போலப் பிசாசுகளின் ராஜா பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரை வெறித்தனமாய்ச் செயல்பட்டிருக்கிறான்; இதற்கிடையில், இந்தக் காவல் நாய்களின் கூட்டம், தாங்கள் அறியாத வேளையில் தேவன் தங்களைப் பிடித்து, தங்களுக்குச் சமாதானம் மற்றும் சந்தோஷத்திற்கான ஓர் இடத்தையும் விட்டுவைக்காமல், அனைவரையும் அழித்துவிடுவார் என்ற மிகுந்த பயத்துடன், ஒளிரும் கண்களால் கூர்ந்து நோக்குகின்றனர். இது போன்ற பிசாசின் நகரத்து ஜனங்கள் தேவனை எப்படிப் பார்த்திருக்க முடியும்? அவர்கள் எப்போதாவது தேவனுடைய அன்பையும் தயவையும் அனுபவித்திருக்கிறார்களா? மனுஷ உலக விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? அவர்களில் யாரால் தேவனுடைய ஆர்வமுள்ள சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்? அப்படியானால், மனுவுருவாகிய தேவன் முழுவதுமாக மறைந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்: இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற பிசாசுகள்இருக்கிற இதைப் போன்ற இருண்ட சமுதாயத்தில், எவ்வித இரக்கமும் இல்லாமல் ஜனங்களைக் கொல்லும் பிசாசுகளின் ராஜா, அன்பாகவும், தயவாகவும் மற்றும் பரிசுத்தமாகவும் இருக்கிற தேவன் இருப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்வான்? அது எப்படி தேவனுடைய வருகையைப் பாராட்டி உற்சாகமடைய முடியும்? இந்தக் கீழ்த்தரமானவர்கள்! அவர்கள் தயவுக்குப் பதிலாக வெறுப்பைத் திருப்பிச் செலுத்துகிறார்கள், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தேவனை ஒரு சத்துருவாகக் கருத ஆரம்பித்தனர், அவர்கள் தேவனைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அவர்கள் அளவுக்கதிகமான காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்கள், அவர்கள் தேவனைச் சிறிதும் கருத்தில்கொள்வதில்லை, அவர்கள் கொள்ளையடித்துக், கன்னமிட்டுத் திருடுகிறார்கள், அவர்கள் மனச்சாட்சியை முழுவதுமாக இழந்துவிட்டார்கள், அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாகச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் அப்பாவிகளை உணர்வற்ற நிலைக்குத் தள்ளுகிறார்கள். பண்டைய காலத்தின் முன்னோர்களா? அன்பான தலைவர்களா? அவர்கள் அனைவரும் தேவனை எதிர்க்கிறார்கள்! அவர்களின் தலையீடு வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் இருளிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது! மதச் சுதந்திரம்? குடிமக்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள்? இவையெல்லாம் பாவத்தை மறைப்பதற்கான தந்திரங்கள்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (8)”). தேவனோட வார்த்தைகளின் வெளிப்பாட்டின் மூலமா, தேவனை எதிர்க்குற சிசிபி பிசாசுகளோட உண்மைய நான் புரிஞ்சுக்கிட்டேன். சிசிபி ஆட்சிக்கு வந்ததுலருந்து, “எல்லாமே இயற்கையாக உருவாகியது”, “மனுஷன் குரங்கில் இருந்து உருவானான்”, “இரட்சகர் ஒருவர் எப்பவும் இருந்ததில்ல” அப்படின்னு பலத சொல்லி, அவங்க எப்படி நாத்திகத்த வேணும்ன்னே பிரச்சாரம் செஞ்சாங்கங்கறத நான் யோசிச்சுப் பாத்தேன். ஜனங்கள் தேவனை மறுதலிக்கவும், அவருக்குத் துரோகம் செய்யவும், அவங்களோட சேர்ந்து தேவனை எதிர்க்கவும், கடைசியில தேவனால் அழிக்கப்பட்டு அவங்களோட கல்லறைப் பொருட்களா மாறவும் குறிவச்சு, ஜனங்கள ஏமாத்த இந்த முட்டாள்தனமான கோட்பாடுகளப் பயன்படுத்தினாங்க. கடைசி நாட்கள்ல, இப்போ தேவன் மனிதகுலத்த இரட்சிக்க மாம்சத்துல மனுவுருவாகியிருக்கிறாரு, கடைசி நாட்கள்ல தேவனோட கிரியைய அடக்கி சீனாவுல நாத்திக ஆதிக்கத்த நிறுவும் நோக்கத்தோட சிசிபி கிறிஸ்துவை வெறித்தனமா வேட்டையாடி, கிறிஸ்தவங்கள வேணும்ன்னே கைது செஞ்சு துன்புறுத்துது. சிசிபிங்கறது தேவனை எதிரியாகக் கொண்டிருக்குற ஒரு பிசாசு படை. இது கொலை செய்கிறதாவும், தேவனை எதிர்க்கும் சாத்தானோட அவதாரமாவும் இருக்குது. என்னோட விசுவாசத்த கடைப்பிடிக்கவிடாம என்னோட கணவர் என்னைய வற்புறுத்துறதுக்கும் தடை செய்யறதுற்கும் காரணம், அவர் சிசிபியோட நாத்திகத் தத்துவத்தால மூளைச்சலவ செய்யப்பட்டிருந்தாரு. அவர் தேவனை விசுவாசிக்கல, சிசிபி என்னைய கைது செஞ்சுட்டா, அவர் பிடிபட்டுருவாருன்னு பயந்தாரு, அதனால நான் தேவனை விசுவாசத்தத அவர் கடுமையா எதிர்த்தாரு. நான் அனுபவிச்சுக்கிட்டு இருந்த துன்பங்கள் எல்லாமே சிசிபி பிசாசு—ராஜாவோட செயலா இருந்துச்சு. நான் முழு மனசா அந்த சாத்தானிய கூட்டத்த வெறுத்தேன். நான் தேவனை விசுவாசிக்கத் தொடங்கியதுலருந்து, என்னோட கணவர் என்னைய ஒடுக்குறதுல சிசிபியோட சேர்ந்துக்கிட்டு, தேவனோட வார்த்தைகள வாசிக்கவோ, கூடுகைகள்ல கலந்துக்கவோ, என்னோட கடமைகளச் செய்யவோ என்னைய அனுமதிக்கல, கணக்கில்லாம என்னைய அடிச்சாரு, என்னையும் என்னோட சகோதர சகோதரிகளயும் பத்தி போலீசுல புகாரளிக்கக்கூட செஞ்சாரு. என்னோட கணவரோட சுபாவமும், சாராம்சமும் சத்தியத்த வெறுத்து, தேவனை இகழ்வதா இருந்துச்சுங்கறதயும், நான் வீட்ல விசுவாசத்த கடைப்பிடிக்க முயற்சி செஞ்சா, நான் எப்பவுமே அவரால ஒடுக்கப்படுவேன்கறதயும் உணர்ந்து, அவரை விவாகரத்து செஞ்சுட்டு உண்மையிலயே விசுவாசத்தக் கடைப்பிடிக்கவும் என்னோட கடமைய செய்யவும் வீட்ட விட்டு வெளியேறுறதுக்கு நிறையதடவ யோசிச்சேன், ஆனா நான் வீட்ட விட்டு வெளியேற நினைக்கும்போதெல்லாம், என்னோட மகனை நெனச்சு நான் கவலப்படுவேன். அவன் ஒரு இளம் வாலிபனா இருந்தான்—அவனது தாயை இழப்பது அவனுக்கு ரொம்ப கடினமா இருக்கும்! வீட்ல, நான் அவனுக்கு வேதாகம சம்பவங்கள வாசிச்சுக் காட்டவும், தேவனோட வார்த்தைகவள அவனோடு ஐக்கியங்கொள்ளவும், அவனை தேவனுக்கு முன்பா கொண்டுவரவும் முடிஞ்சுச்சு. நான் வெளியே போயிட்டா, அவனோட விசுவாசத்துல யார் அவன வழிநடத்துவாங்க? குறிப்பா, இதப் பத்தி நான் நினைக்கும் போதெல்லாம், நான் பலவீனமா உணர்ந்தேன், என்னோட கணவரை விவாகரத்து செய்ய எனக்கு தைரியம் இல்ல, சிறையிருப்புல என்னோட வாழ்க்கைய அமைதியா சகிச்சுக்குவேன். துன்பத்தால் வாடும்போது, நான் ஜெபத்துல தேவனுக்கு முன்பா வந்து, தேவனோட வார்த்தைகள ரகசியமாக வாசிப்பேன். அப்பத்தான் நான் கொஞ்சம் ஆறுதல அடைவேன்.

2011 அக்டோபர்ல, சில கூடுகைகள்ல நான் ரகசியமாக கலந்துக்க பதுங்கியிருந்தேன். சகோதர சகோதரிகள் என்னைய நடத்துனாங்கன்னா, அடுத்த தடவ அவங்களோட அவ்வளவு கண்ணியமா இருக்க மாட்டேன்னு என்னோட கணவர் மிரட்டினாரு. அதோடு அவர் என்னைய மிரட்டி: “நீ இங்க இருக்குற வரை, உன்னை தேவனை விசுவாசிக்க விடமாட்டேன்! நீ விசுவாசிக்கணும்னா, நீ இந்த வீட்ட விட்டு வெளியேற வேண்டியிருக்கும்!” அப்படின்னு சொன்னாரு. அவர் இப்படிச் சொன்னதக் கேட்டதும் பெரும் ஏமாற்றமா இருந்துச்சு. இத்தன வருஷங்களா நாங்க ஒண்ணா இருந்ததக் கொஞ்சம் கூட யோசிக்காம, நான் தேவனை விசுவாசிச்சேங்கறதுக்காக மட்டும் அவர் என்னைய வெளியேத்துவாருங்கறது எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. அந்த நேரத்துல, தேவனோட வார்த்தைகளின் ஒரு பத்திய நான் சிந்துச்சுப் பாத்தேன்: “ஒரு கணவன் ஏன் மனைவியை நேசிக்கிறான்? ஒரு மனைவி ஏன் கணவனை நேசிக்கிறாள்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்? தங்கள் பிள்ளைகள் மேல் பெற்றோர் ஏன் மிகையாக அன்புசெலுத்துகிறார்கள்? மக்கள் உண்மையில் எந்த வகையான உள்நோக்கங்களை வைத்திருக்கிறார்கள்? தங்கள் சொந்தத் திட்டங்களையும் சுயநல விருப்பங்களையும் திருப்திபடுத்துவது அவர்களின் உள்நோக்கம் இல்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்”). தேவனோட வார்த்தைகள் மனுஷர்கள அப்படியே வெளிப்படுத்திக் காட்டுவதா இருந்துச்சு. ஜனங்களுக்கு இடையில உண்மையான அன்பு இல்ல. கணவன்-மனைவிக்கு இடையே இருக்குற அன்பு பரஸ்பர நன்மைய அடையறதன் அடிப்படையில அமைந்திருக்குது. நான் தேவனை விசுவாசிக்கறதுக்கு முன்னாடி, என்னோட கணவர் என்னைய அப்படி நடத்தினதில்ல. ஆனா தேவனை விசுவாசிச்சதுக்காக நான் கைது செய்யப்பட்டா, அவர் பிடிபடுவார்ன்னு அவர் கவலைப்பட ஆரம்பிச்சதுல இருந்து, திருமண வாழ்க்கையில நாங்க ஒண்ணா வாழ்ந்த அத்தனை வருஷங்களப் பத்தி அவர் கொஞ்சம் கூட யோசிச்சுப் பாக்கல, என்னை அடிச்சு, வீட்டை விட்டு துரத்தி விடுவதா மிரட்டினாரு. அவர் தன்னோட சொந்த நலன்களப் பாதுகாப்பதுக்காக இவ்வளவு இரக்கமற்றவரா இருந்தாரு, இல்லயா? அத உணர்ந்ததும்: “அவர் என்னையத் தள்ளிவிட முயற்சி செய்யறதால, நானும் கூட வெளியேறி, தேவனை விசுவாசிக்கறதுக்கும் என்னோட கடமையச் செய்றதுக்கும் சுதந்திரமா இருக்கலாம்” அப்படின்னு நான் எனக்குள்ள நெனச்சுக்கிட்டேன். அதுக்கப்புறமா, என்னோட மகன் அவனோட அத்தையோடு பயிற்சி வகுப்புல இருந்தப்போ, நான் 50 கிலோமீட்டர் தொலைவுல இருக்குற ஒரு திருச்சபைக்குப் புறப்பட்டுப் போனேன். கடைசியா திருச்சபை வாழ்க்கையில ஈடுபடவும் என்னோட கடமையச் செய்யவும் என்னால முடிஞ்சுச்சு. ஆனா, அந்த நேரத்துல, என்னோட மகனைப் பத்தி நான் இன்னும் கவலப்பட்டேன். எப்ப எல்லாம் எனக்கு ஓய்வு நேரம் அல்லது விடுமுறை நாட்கள் கிடைக்குதோ, பள்ளிக்கூடம் முடிஞ்சு குழந்தைகள் வீட்டுக்கு தங்களோட அம்மா அப்பாகிட்ட வர்றத நான் பாத்தப்போ, நான் வீட்ல இல்லாதது என்னோட குழந்தைக்கு எவ்வளவு வருத்தமா இருந்திருக்கும்ன்னு நான் நினைப்பேன், அவனைப் பாக்க வீட்டுக்குப் போக விரும்புவேன். ஆனா என்னோட கணவர் என்னை அடிப்பாரு, ஒடுக்குவாரு, திட்டுவாருன்னு நான் கவலப்பட்டேன், அதனால நான் திரும்பிப் போகத் துணியல. என்னால செய்ய முடிஞ்சதெல்லாம் மறைஞ்சுக்கிட்டு கண்ணீர் சிந்துறதுதான்.

அதுக்கப்புறம், 2012 செப்டம்பர்ல ஒரு நாள், என்னோட மைத்துனர நான் தெருவுல சந்திச்சேன், அவர் என்னைய வீட்டுக்குத் திரும்பி வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாரு. நான் வீட்டுக்குத் திரும்பிவந்ததுக்கப்புறமா, என்னோட கணவர் முழு குடும்பத்தயும் ஒரு பெரிய கூட்டமா வரவழச்சாரு. என்னைய இணங்க வைக்குறதுக்காக, அவர் தன்னோட அண்ணனயும் தம்பியயும் என்னோட சித்தப்பாவையும் என்னோட மைத்துரையும் கூப்பிட்டாரு. என்னோட மைத்துனர்: “நீங்க மட்டும் என்னோட மைத்துனியா இல்லாம இருந்தா, நான் ஒரேயொரு போன் பண்ணி உங்கள பொது பாதுகாப்புப் பணியகத்துக்கு அனுப்பியிருப்பேன்” அப்படின்னு என்னைய மிரட்டினாரு. என்னோட சித்தப்பா எரியுற நெருப்புல எண்ணெய ஊத்துற மாதிரி, என்னோட செயல்கள அடக்க என் கணவரை ஊக்கப்படுத்தினாரு. நடக்குற காரியங்களப் பாத்ததும், நான் தேவனை விசுவாசிக்கறதுக்கு எதிரா நிறைய பேர் இருந்ததால, எதிர்காலத்துல என்னோட கணவர் என்னைய இன்னும் அதிகமா கொடுமைப்படுத்துவாருன்னு நான் கவலப்பட்டேன், அதனால, நான் என்னோட வாழ்க்கைய வாழறதுக்குத்தான் நான் வீட்டுக்கு வந்தேன்னு புத்திசாலித்தனமா சொன்னேன். அதுக்குப் பிறகுதான் என்னோட உறவினர்கள் அமைதியானாங்க. நான் வீட்டுக்கு திரும்பி வந்த மூணாவது நாள்ல, என்னோட திருச்சபையின் தலைவர் பக்கத்து வீட்டு சகோதரிய சந்திக்க வந்திருந்தத நான் பாத்தேன், அதனால நான் ரொம்ப உற்சாகமா திருச்சபையின் கூடுகைகளப் பத்தி அவங்ககிட்ட கேட்கறதுக்காகப் போனேன். எனக்கு அதிர்ச்சி தரும் விதமா, என்னோட கணவர் என்னையப் பின்தொடர்ந்து, வந்து வீட்டுக்குத் திரும்பிப் போகச் சொல்லி ஆக்ரோஷமா என்னையத் திட்டினாரு. நான் என்னோட சகோதரிகள சிக்கல்ல மாட்டிவிட விரும்பல, அதனால நான் சீக்கிரமா வீட்டுக்குத் திரும்பிப் போயிட்டேன். திருச்சபைத் தலைவர் என்னோட சகோதரியின் வீட்லருந்து வெளிய வந்தப்போ, என்னோட கணவர் மண்வெட்டியக் காட்டி: “நீ மறுபடியும் இங்க வந்தா, அடுத்த முறை நான் இரக்கங்காட்ட மாட்டேன்!” அப்படின்னு அவரை மிரட்டினாரு. அதுக்கப்புறமா, அவர் சமையலறையில பயன்படுத்துற ஒரு கத்திய எடுத்துக்கிட்டு, என்னோட சகோதரியக் குத்தி கொல்லுற நோக்கத்துல, அவளோட வீட்டுக்குள்ள நுழஞ்சாரு, என்னோட சகோதரியின் கணவரும் நானும் அவசரமா அவரைத் தடுத்து நிறுத்த வேண்டியிருந்துச்சு. அதுக்கப்புறம், அவங்களுக்குத் தீங்கு விளைவிச்சிருவோமோங்குற பயத்துல என்னோட சகோதர சகோதரிகள சந்திக்கறத நான் நிறுத்திட்டேன்.

அந்த நேரத்துல, நான் நிறைய மன வேதனைகள அனுபவிச்சேன், அடிக்கடி நான் மறைஞ்சுக்கிட்டு அழுவேன். ஒரு தடவ, என்னோட கணவர் வெளியே போன பிறகு ஒரு சகோதரியோடு பேசறதுக்காக நான் வீட்ட விட்டு வெளிய வந்தேன். ஆனா நான் திரும்பிப் போய்க்கிட்டு இருந்தப்போ, என்னோட கணவர் வீட்டுக்குப் போற பாதையில என்னையப் பாத்துட்டாரு. அவர் என்னையப் பாத்து: “இந்தக் காரை உன் மேல ஏத்த என்னால முடியும்னு உனக்குத் தெரியுமா?” அப்படின்னு சொன்னாரு. இதக் கேட்டதும் என்னோட மனசு கல்லாயிருச்சு. நான் தேவனை விசுவாசிச்ச ஒரே காரணத்துக்காக, அவர் என் மேல தன்னோட காரை ஏத்த விரும்புனாரு. இது என்னோட கணவர் தேவனை வெறுக்குற பிசாசா இருந்தாருங்கறதயும், அதோடு அவர் என்னைய ஒடுக்குறத ஒருபோதும் நிறுத்தமாட்டாருங்கறதயும் இன்னும் தெளிவாப் பார்க்க உதவுச்சு. அந்த வீட்ல என்னோட விசுவாசத்த என்னால கடைபிடிக்க முடியாம இருந்தேன், அதனால வெளியேறுறதுதான் என்னோட ஒரே வழியா இருந்துச்சு. ஆனா நான் வெளியேறுறத நெனச்சப்போ, நான் ரொம்ப துக்கமடஞ்சேன். நான் இப்பத்தான் என் மகனோடு மறுபடியும் சேர்ந்திருந்தேன், நான் மறுபடியும் வெளியேறிட்டா, அவன் ரொம்ப கஷ்டப்படுவான்! நான் வெளியேறிட்டா, தேவனை விசுவாசிச்சு சரியான பாதையில நடக்க அவனுக்கு யார் வழிகாட்டுவாங்க? எவ்வளவு அதிகமாக யோசிச்சேனோ அவ்வளவு அதிகமா என்னோட மகனை விட்டுப் பிரிந்து போறத என்னால தாங்க முடியல. என்னால செய்ய முடிஞ்சதெல்லாம், தொடர்ந்து ஜெபத்துல தேவனுக்கு முன்பா வந்து: “அன்பான தேவனே! என்னோட கணவர் தொடர்ந்து என்னைய ஒடுக்கி, தடுக்கிறாரு. நான் என்னோட விசுவாசத்தக் கடைப்பிடிக்க இங்கருந்து வெளிய போக விரும்புறேன், ஆனா என்னோட மகனை என்னால விட்டுற முடியல. அன்பான தேவனே! என்ன செய்யணும்ங்கறத என்னால தீர்மானிக்க முடியல, நீங்க என்னையப் பிரகாசிப்பித்து வழிநடத்தணும்னு நான் ஜெபிக்கிறேன்” அப்படின்னு சொன்னேன். அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தைகளின் ஒரு பாடலக் கேட்டேன்: “இந்தக் குறுகிய காலத்திற்கு ஜனங்கள் தங்கள் மாம்சத்தை ஒதுக்கி வைக்க முடியாதவர்களாய் இருக்கிறார்களா? மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள அன்பை எத்தகைய விஷயங்களால் பிரிக்க முடியும்? மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான அன்பை யாரால் பிரிக்க முடியும்? அது பெற்றோர்களா, கணவர்களா, சகோதரிகளா, மனைவிகளா அல்லது வேதனை நிறைந்த சுத்திகரிப்பா? மனசாட்சியின் உணர்வுகளால் மனுஷனுக்குள் இருக்கும் தேவனுடைய சாயலை அழிக்க முடியுமா? ஒருவருக்கொருவர் மீதான ஜனங்களது கடன்பட்ட நிலையும் செயல்களும் அவர்களின் சொந்தச் செயலா? அவற்றை மனுஷனால் சரி செய்ய முடியுமா? யாரால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும்? ஜனங்கள் தங்களைத் தாங்களே போஷிக்க முடியுமா? வாழ்க்கையில் வலிமையானவர்கள் யார்? யாரால் என்னை விட்டுவிட்டுத் தனித்து வாழ முடியும்? எல்லா ஜனங்களும் தங்களைத் தாங்களே பரிசோதித்தறியும் கிரியையைச் செய்ய வேண்டும் என்று தேவன் ஏன் மீண்டும் மீண்டும் கேட்கிறார்? ‘யாருடைய கஷ்டங்கள் அவர்களது கைகளாலேயே ஏற்பாடு செய்யப்பட்டவை?’ என்று தேவன் ஏன் கூறுகிறார்(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள், “இந்தக் குறுகிய காலத்திற்கு மனுஷரால் தங்களுடைய மாம்சத்தைப் புறந்தள்ள முடியாதா?”). தேவனோட வார்த்தைகள் எனக்குள்ள ஆழமான தாக்கத்த ஏற்படுத்துச்சு, நான் ரொம்ப குற்ற உணர்வ உணர்ந்தேன். மனிதகுலத்த இரட்சிக்க தேவன் எப்படி மாம்சத்துல மனுவுருவானாருங்கறதயும், சத்தியத்த வெளிப்படுத்தி, மிகுந்த சகிப்புத்தன்மையோட மனுஷர்கள் மத்தியில தமது கிரியைய நடப்பிக்கிறாருங்கறதயும், அதிகமான அவமானத்தத் தாங்கிக்கிட்டு, தம்மோட இரட்சிப்பின் நோக்கமா இருக்குற மனிதகுலத்துக்கு அவரோட அன்பை வழங்குறாருங்கறதயும் நான் நெனச்சுப் பாத்தேன். மனுஷனை இரட்சிக்க தேவன் பட்ட துன்பங்கள நெனச்சுப் பாக்கையில, தேவனோட அன்பு எவ்வளவு அதிக நடைமுறையானதுங்கறத நான் உணர்ந்தேன். நாம எழுந்து நின்னு அவரோட சித்தத்துக்கு செவிகொடுப்போம்ன்னும் சுவிசேஷத்தப் பரப்புறதுக்கும் அவரைக் குறிச்சு சாட்சி கொடுக்கறதுக்கும் எல்லாத்தயும் ஒதுக்கித் தள்ளணும்னும் தேவன் எதிர்பாக்குறாரு. இதுதான் தேவன் நம்ம மேல வச்சிருக்கற அன்பு. ஆனா, நான் வெளியே போயிட்டா, என்னோட மகன கவனிச்சுக்கறதுக்கு யாருமில்லாம அவன் எப்படி இருப்பான்னு நெனச்சு சுயநலமா இருந்தேன், ஆனா தேவனோட சித்தத்துக்குச் செவிசாய்க்கத் தவறினேன். நான் பலவீனமானவளும், பயனற்றவளும், மனசாட்சி இல்லாதவளுமாய் இருந்ததுக்காகவும் தேவனைப் பின்பற்ற எல்லாத்தயும் ஒதுக்கி வைக்க முடியாதவளா இருந்ததுக்காகவும் என்னையே இகழ்ந்தேன். என்னோட மகனை என்னால விட்டுட்டுப் போக முடியாததால, நான் வீட்டுக்குள்ள சிக்கி, என்னோட கணவரால அடிக்கப்பட்டு, கூண்டுல அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படவும், தேவனோட வார்த்தைகள வாசிக்க வாய்ப்பு இல்லாம, ஒரு சிருஷ்டியா என்னோட கடமையச் செய்ய வாய்ப்பு கிடைக்காமலும் நான் இருக்க வேண்டியதா இருந்துச்சு. சத்தியத்தப் பின்தொடரவும், தேவனை நேசிக்கவும் எனக்குக் கொஞ்சம் கூட மனவுறுதி இல்லாம இருந்துச்சு. ஆபிரகாம் தன்னோட ஒரே மகனை தேவனுக்குக் காணிக்கையா கொடுக்க தயாரா இருந்தான். அப்படின்னா, என்னோட மகனிடத்துலருந்து கொஞ்ச காலத்துக்குப் பிரிஞ்சு போகவும், ஒரு சிருஷ்டியா என்னோட கடமையச் செய்யவும், சத்தியத்த நாடி, தேவனோட இரட்சிப்பப் பெறவும் என்னால ஏன் முடியல? அதுக்கப்புறமும் என்னோட மகனை விட்டுற முடியாதுங்கறதால என்னோட கடமைய என்னால ஒதுக்கி வைக்க முடியல. தேவனோட இரட்சிப்பின் கிரியை முடிவுக்கு வருதுங்கறதும், சீக்கிரத்துல பெரும் பேரழிவுகள் வெளிப்படும்ங்கறதும் எனக்குத் தெரியும். வீட்ல, தேவனோட வார்த்தைகள வாசிக்கவோ, கூடுகைகள்ல கலந்துக்கவோ, என்னோட கடமையச் செய்யவோ முடியல; இது இப்படியே தொடர்ந்தா, நான் சத்தியத்த பெற மாட்டேன், நற்கிரியைகளச் செய்ய முடியாது. வரப்போற பேரழிவுகள்ல நான் அழிந்துபோக வேண்டியிருக்கும். பிறகு எப்படி என்னோட மகனை சரியான பாதையில வழிநடத்துவேன்? என்னோட மகனின் தலைவிதியும் தேவனோட கரத்துல இல்லயா? அவன் எவ்வளவு கஷ்டப்படனும்கற தலவிதியோ அல்லது அவன் சரியான பாதையில கால் வைக்க முடியுமாங்கறதுலயோ நான் எதுவும் செய்ய முடியாது. இத உணர்ந்ததும் என்னோட கவலை கொஞ்சம் குறஞ்சுச்சு.

அதுக்கப்புறமா, நான் தேவனோட வார்த்தைகள் இன்னும் சிலவற்ற வாசிச்சேன், இன்னும் கொஞ்சம் சத்தியத்தக் கத்துக்கிட்டேன், கடைசியில என்னோட மகனைப் பத்தி நான் கவலப்படுறத நான் விட்டுட்டேன். நான் இந்தப் பத்திய வாசிச்சேன். “பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைத் தவிர, குழந்தைகளின் ஜீவிதத்தில் பெற்றோருடைய பொறுப்பு வெறுமனே அவர்கள் வளர்வதற்காக அவர்களுக்கு முறையான சூழலை வழங்குவதாகும். ஏனென்றால், சிருஷ்டிகருடைய முன்னறிவிப்பைத் தவிர வேறொன்றும் ஒரு நபருடைய தலைவிதியைப் பாதிக்காது. ஒரு நபருக்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்கும் என்பதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; இது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது மற்றும் ஒருவருடைய பெற்றோரால் கூட ஒருவருடைய தலைவிதியை மாற்ற முடியாது. விதியைப் பொறுத்தவரை, எல்லோரும் சுதந்திரமானவர்கள், ஒவ்வொருவருக்கும் அவரவர் விதி உண்டு. எனவே, எவருடைய பெற்றோரும் ஜீவிதத்தில் ஒருவருடைய தலைவிதியைத் தடுக்கவோ அல்லது ஜீவிதத்தில் ஒருவர் வகிக்கும் பாத்திரத்தில் சிறிதளவு செல்வாக்கை செலுத்தவோ முடியாது. ஒருவர் பிறக்க வேண்டிய குடும்பம் மற்றும் ஒருவர் வளரும் சூழல் ஜீவிதத்தில் ஒருவருடைய பணியை நிறைவேற்றுவதற்கான முன் நிபந்தனைகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறலாம். ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியையோ அல்லது அந்த நபர் தன் பணியை நிறைவேற்றும் விதத்தையோ அவை எந்த வகையிலும் தீர்மானிக்கவில்லை. எனவே, ஒருவரது ஜீவிதத்தில் அவரது பணியை நிறைவேற்ற எந்தப் பெற்றோரும் உதவ முடியாது. அதைப் போலவே, ஜீவிதத்தில் ஒருவருடைய பங்கை அவர் நிறைவேற்ற அவருடைய உறவினர்களும் உதவ முடியாது. ஒருவருடைய பணியை ஒருவர் எவ்வாறு நிறைவேற்றுகிறார், எந்த வகையான ஜீவிதச் சூழலில் ஒருவர் அவருடைய பங்கைச் செய்கிறார் என்பது அவருடைய ஜீவிதத்தில் ஏற்படும் தலைவிதியால் முழுமையாகத் தீர்மானிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நபருடைய பணியை வேறு எந்தப் புற நிலைமைகளும் பாதிக்காது. இது சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. எல்லா ஜனங்களும் தாங்கள் வளரும் குறிப்பிட்ட சூழலில் முதிர்ச்சியடைகிறார்கள்; பின்னர் படிப்படியாக, படிப்படியாக, அவர்கள் ஜீவிதத்தில் தங்களது சொந்தப் பாதைகளை அமைத்து, சிருஷ்டிகரால் அவர்களுக்காக திட்டமிடப்பட்ட விதிகளை நிறைவேற்றுகிறார்கள். இயற்கையாகவே, விருப்பமின்றி, மனிதகுலத்தின் பரந்த கடலுக்குள் அவர்கள் நுழைந்து ஜீவிதத்தில் தங்களது சொந்தப் பதவிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அங்கு சிருஷ்டிகருடைய முன்னறிவிப்புக்காகவும், அவருடைய ராஜரீகத்தின் பொருட்டும், சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களாக அவர்கள் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றத் தொடங்குகிறார்கள்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனோட வார்த்தைகள வாசிச்சதன் மூலமா, ஒரு குழந்தையோட தலைவிதி அவங்க பெற்றோர சார்ந்து இல்லங்கறதயும் தேவனோட ராஜரீகத்தின் மூலமா தீர்மானிக்கப்படுதுங்கறதயும் நான் உணர்ந்துக்கிட்டேன். என் மகனோட தலைவிதி தேவனோட கரத்துல இருந்துச்சு. என்னோட மகன் எவ்வளவு கஷ்டப்படுவான்ங்கறதயோ அல்லது அவன் சரியான பாதையில அடியெடுத்து வச்சிருந்தானாங்கறதயோ என்னால கட்டுப்படுத்த முடியல— இது எல்லாமே தேவனோட ஏற்பாட்டின் கட்டளைகளுக்கு உட்பட்டதா இருந்துச்சு. எனக்கு யோசேப்பின் ஞாபகம் வந்துச்சு: அவன் சின்ன வயசுலயே எகிப்துல அடிமையா விற்கப்பட்டிருந்தான், பெற்றவங்களோட கவனிப்பும் வழிகாட்டுதலும் இல்லாம இருந்தான், ஆனா யேகோவா தேவன் அவனோடு இருந்தாரு. பார்வோனோட காவலரின் தலைவன் எப்படி அவனை மயக்கினாலும், அவன் ஒருபோதும் ஏமாந்துபோகல. அதோடு, யோசேப்பு எகிப்துல பல துன்பங்கள அனுபவிச்சான். ஆனா இது உண்மையிலயே அவனோட தீர்மானத்த உறுதிப்படுத்தி, தேவனை சார்ந்திருக்கக் கத்துக் கொடுத்துச்சு. தங்களோட கடமைகளச் செய்ய தங்கள் வீட்ட விட்டு வெளியேறாத அந்த சகோதர சகோதரிகளப் பத்தி சிந்திச்சுப் பாக்கும்போது— அவங்க தங்களோட பிள்ளைகள விசுவாசத்தக் கடைப்பிடிக்கவும் சரியான பாதையில நடக்கவும் அடிக்கடி உற்சாகப்படுத்தினாங்க, இந்தக் குழந்தைகள்ல சிலர் விசுவாசத்தக் கடைப்பிடிச்சு, தேவனை சரியான பாதையில பின்பற்றினாங்க, ஆனா மத்தவங்க உலக தீய போக்குகள்ல சிக்கிக்கிட்டு இன்னும் அதிகதிகமா சீரழிஞ்சுபோனாங்க. ஒரு குழந்தைய சரியான பாதையில போக அனுமதிப்பது, அவங்களோட பெற்றோர்கள் அவங்களோட வர்றதுனால இல்லங்கறதயும், அதுக்கு பதிலா, சத்தியத்த நேசிப்பது அவங்களோட சுபாவத்துல இருந்துச்சாங்கறதும், அப்படி நேசிக்க தேவன் அவங்கள முன்குறிச்சிருக்குறாராங்கறதும்தான் அத அனுமதிக்குதுங்கறத நான் பாத்தேன். என்னோட மகனுக்கு மனித்தன்மை இருந்துச்சுன்னா, தேவனோட இரட்சிப்பின் நோக்கமா அவன் இருந்தான்னா, அப்ப, நான் அவன் பக்கத்துல இல்லேன்னாலும் கூட, அவன் அதிக ஆரோக்கியமா வளருவான், அதோடு, தேவனை விசுவாசிக்க வந்துவிடுவான். இது எல்லாமே தேவனோட கரங்கள்ல இருந்துச்சு—நான் அதப் பத்திக் கவலப்படத் தேவையில்ல. ஒரு விசுவாசியா என்னோட இத்தனை வருஷங்கள்ல, தேவனோட வார்த்தைகளின் தண்ணீர் பாய்ச்சுலையும் வழங்கலையும் நான் ரொம்ப அனுபவிச்சிருக்கிறேன், ஆனா, என்னோட மகன் மேல எனக்கு இருந்த என்னோட பற்றுதலால, ஒரு சிருஷ்டியா என்னால என்னோட கடமையைச் செய்ய முடியல. எவ்வளவு சுயநலம்! சுவிசேஷத்தப் பரப்புறதன் மூலமாவும் அவருக்கு சாட்சி பகருவதன் மூலமாவும், அதிகமான ஜனங்கள தேவனோட வீட்டுக்குள்ள கொண்டுவர்றதன் மூலமாகவும் தேவனோட அன்பை நான் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்துச்சு. 2013 பிப்ரவரில, நான் என்னோட குடும்பத்த விட்டுட்டு, தொலைதூர நகரத்துல இருக்குற ஒரு திருச்சபைக்குப் போக ரயில்ல ஏறினேன்.

ரயில் என்னோட மகனின் பள்ளிக்கூடத்தக் கடந்துபோனப்போ, என்னோட மகன் வகுப்புகளுக்குப் போன கட்டிடத்த நான் உத்துப் பாத்து, நான் எனக்குள்ள: “நான் அவனை மறுபடியும் எப்பப் பார்ப்பேன்னு யாருக்குத் தெரியும்” அப்படின்னு நெனச்சேன். என் கண்ணீரை என்னால அடக்க முடியல. இது பிசாசாகிய சாத்தானோட சர்வாதிகார ஆட்சிய என்னைய அதிகமா வெறுக்க வச்சுச்சு. அது என்னைய என்னோட குடும்பத்துலருந்து பிரிச்சிருச்சு, அதோடு, என்னைய சுதந்திரமா விசுவாசத்தக் கடைபிடிக்கவிடாமலும், என்னோட கடமையச் செய்யவிடாமலும் தடுத்துச்சு. அந்த நேரத்துல, கிறிஸ்து உன்னதமானவராக ஆளுகை செய்யக்கூடிய, சந்தோஷமும் விடுதலையும் வரவிருக்கும் நேரத்துக்காக நான் இன்னும் அதிகமா ஏங்கினேன், அதோடு அது சத்தியத்தப் பின்தொடரவும் வெளிச்சத்தப் பெற பெருமுயற்சி செய்யவும் என்னோட உந்துதலைத் தூண்டுச்சு. நான் என்னோட மனசுல தேவனோட வார்த்தைகளின் பாட்டைப் பாடினேன்: “நீ ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம். நீ நிச்சயமாக தேவனை ஆராதித்து அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடர வேண்டும். நீ ஒரு மனுஷன் என்பதால், நீ தேவனுக்காக உன்னையே பயன்படுத்தி எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இன்றைய நாளில் நீ உட்படுத்தப்பட்ட சிறிய துன்பங்களை மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் ஏற்றுக் கொண்டு, யோபு மற்றும் பேதுருவைப் போல அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். நீங்கள் சரியான பாதையைப் பின்பற்றுபவர்கள், முன்னேற்றத்தை நாடுபவர்கள். நீங்கள் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் தேசத்தில் எழும்பினவர்கள், நீதியுள்ளவர்கள் என்று தேவனால் அழைக்கப்படுபவர்கள். இதுவே மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை அல்லவா?(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள், “மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை”). தேவனோட வார்த்தைகள சிந்துச்சுப் பாக்கையில, இந்தப் பாதகமான சூழல்ல நான் அவரைப் பின்பற்றி என்னோட கடமையச் செய்யணும்ன்னு தேவன் முன்குறிச்சிருந்தாரு— இதுதான் தேவன் என்னைய வழிநடத்திக்கிட்டிருந்த பாதையா இருந்துச்சுங்கறத நான் உணர்ந்தேன். ஒரு சிருஷ்டியா, நான் தேவனோட ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியவும், சத்தியத்தத் தேடவும், தேவனைத் திருப்திப்படுத்த என்னோட வேலையக் நேர்த்தியா செய்யவும், பிசாசாகிய சாத்தான வெட்கப்படுத்தவும் தயாரா இருந்தேன். இத உணர்ந்து, நான் ரொம்ப சமாதானமாவும் நிம்மதியாவும் இருந்தேன். என்னோட கணவரின் சிறையிருப்புலருந்து விடுபடும்படி வழிநடத்தி, ஒரு சிருஷ்டியா என்னோட கடமைய செஞ்சு சரியான பாதையில நடக்க எனக்கு உதவுன தேவனுக்கு நான் நன்றி சொன்னேன்.

அதுக்கப்புறம், வீட்டுலருந்து தூரத்துல இருக்குற ஒரு திருச்சபையில என்னோட கடமைய செஞ்சு வந்தேன். இத்தன வருஷமா, நான் தேவனோட வார்த்தைகளயும் கிரியையயும் அனுபவிச்சிருக்கிறேன், ஓரளவு சத்தியங்களப் புரிஞ்சுக்கிட்டு, நான் கொஞ்சம் நிறையா கத்துக்கிட்டதப் போல உணருறேன். தேவனோட வழிநடத்துதலுக்காக அவருக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

வீட்டில் ஒரு ஆவிக்குரிய யுத்தம்

ஆகஸ்ட் 2018 ல, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்தாருன்னும், தேவனுடைய வீட்லருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்ய அவர் சத்தியங்கள...

பரலோக ராஜ்யத்திற்கான பாதையில் என் வழியில் குறுக்கே நிற்பது யார்?

2020 ஆம் வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் ஆன்லைன் கூடுகைக்கு ஒரு சகோதரி என்னையக் கூப்பிட்டாரு....

ஒரு “திருடப்பட்ட” ஆசீர்வாதம்

அது 2012 மார்ச் மாசமா இருந்துச்சு. எந்த நாள்ல அது ஆரம்பிச்சிச்சுன்னு எனக்குத் தெரியல. ஆனா நான் தினமும் ராத்திரி சாப்பாடுக்கப்புறமா, என்னோட...