சாலையில் ஒரு முட்கரண்டி

ஜனவரி 21, 2024

நான் கிராமப்புறத்துல பிறந்து ஏழ்மையான குடும்பத்துல வளர்ந்தேன். என்னோட பெற்றோர் பாமர விவசாயிகளா இருந்தாங்க, அவங்க ரொம்ப கொடுமைய அனுபவிச்சவங்களா இருந்தாங்க. ஒரு குழந்தையா நான் பக்கத்து கிராம ஜனங்கள எங்களப் புதிய வெளிச்சத்துல பார்க்க வைக்கவும், எங்களக் இழிவா பாக்குறதையும், கொடுமப்படுத்துறதையும் நிறுத்தவும், நான் வளர்ந்து பெரிய ஆளாவேன்னு ஒரு தீர்மானம் பண்ணுனேன். நான் என்னோட 11வது வயசுல தற்காப்புக் கலைய கத்துக்க ஆரம்பிச்சேன், களைப்பா இருந்தாலும் காயங்கள் ஏற்பட்டாலும், எவ்வளவு மோசமான வானிலை இருந்தாலும் கூட, நான் பயிற்சியிலருந்து ஒருபோதும் பின்வாங்குனதேயில்லை. கொஞ்ச நாள் கழிச்சு, ஒரு தொழிலத் தொடங்கி, நான் தனிச்சு பெரியவனா காட்டிக்க விரும்புனேன், நான் எல்லா இடத்துலயும் கடனை வாங்கி, பரிசுகளக் கொடுத்து, உறவுகளை பண்படுத்திக்கிட்டேன். கடைசியா, 1999 ல நான் ஒரு தற்காப்புக் கலைப் பள்ளிய வெற்றிகரமாக பதிவு செஞ்சேன்.

பள்ளிக்கூடம் கட்டப்பட்ட பிறகு, என்னோட விடாமுயற்சியினால என்னோட நிர்வாகத்துனால அது அதிகதிகமா வளர்ந்துச்சு, எங்களோட லாபமும் அதிகரிச்சுச்சு. இது உள்ளூர் ஜனங்களோட அங்கீகாரத்தப் பெற்றுத்தந்துச்சு, என்னோட பெற்றோர் நான் குடும்பத்துக்கு பெருமை சேத்ததா உணர்ந்தாங்க, என்னைய நெனச்சு பெருமிதம் அடைஞ்சாங்க. மாணவர்களுக்கும் அவங்களோட பெற்றோர்கள் எல்லாருக்கும் என் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு, நகர விளையாட்டுப் பணியகமும் நகர மேயரும் உண்மையிலயே என் மேல மதிப்பு வச்சு, எல்லாரும் என்னிடத்துல அன்பா புன்முறுவல் செஞ்சாங்க. எல்லாரோட பாராட்டையும் பாத்தது, என்னைய ஒரு முக்கியமான ஆளாவும், நன்மதிப்புமிக்க ஆளாவும் உணர வச்சுச்சு, அந்தஸ்துக்கான என்னோட ஆசை முழுமையா திருப்தி அடைஞ்சுச்சு. நான் முன்னேறி கடைசியில மேல்நோக்கிப் போறதப் போல உணர்ந்தேன், நான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். பள்ளிக்கூடம் நிலையா ஸதாபிக்கப்படுறதுக்கு நான் நிறைய சமூக நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்தேன், அவங்க எனக்கு தகுதிச் சான்றிதழ்கள வழங்கி பள்ளிக்கூடத்தின் தரத்த மேம்படுத்துறதும்படியா, பல துறைகளுக்கு லஞ்சம் கொடுத்து பண்டிகை நாட்கள்ல தலைவர்களுக்கு பரிசுகள அனுப்பினேன். நான் ஒரு அதிகாரியக் கண்டுக்காம இருந்தா, என்னோட தொழிலையும், அந்தஸ்தையும் நற்பெயரையும் நிலைநிறுத்த நான் செஞ்ச கடின உழைப்பு எல்லாம் வீணாய்ப் போயிரும்னு பயந்து, முகஸ்துதி செஞ்சு அவங்களோட ஆதரவப் பெற, நான் நிறைய ஏமாத்து வேலைகள சொல்லியும், செஞ்சும் வந்தேன். நான் தொடர்ந்து பதட்டத்துல இருந்தேன், என்னால ஓய்வெடுக்க முடியல. இது உடலளவுலயும் மனதளவுலயும் சோர்வடையச் செய்வதா இருந்துச்சு, வாழுறதுக்கு கடினமாயும், சோர்வடையச் செய்யும் வழியாவும் இருந்துச்சு. நான் குழப்பத்துல இருந்தேன்: என்னோட தொழில் வெற்றிகரமா இருந்துச்சு, நான் பெயர் மற்றும் ஆதாயம் ரெண்டயும் அடைஞ்சுட்டேன், அப்படியிருக்க, ஏன் என்னோட வாழ்க்க ரொம்ப கடினமாவும் களைப்படையச் செய்வதாவும் இருக்குது?

அதுக்கப்பறம், 2012 வந்து வருஷம் மே மாசத்துல நான் சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் சுவிசேஷத்த ஏத்துக்கிட்டேன். சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையச் சேர்ந்த சகோதர சகோதரிகளோடு கூடிவந்து கலந்து பேசும்போது, அந்த இடத்த அதிகாரமும் பணமும், வஞ்சகமும், சூழ்ச்சிகளும் இல்லாத ஒரு இடமா என்னால பாக்க முடிஞ்சுச்சு. எல்லாருமே சத்தியத்தப் பின்தொடர்வதுல மட்டும் கவனமாயிருந்தாங்க, அவங்களோட சீர்கேட்ட வெளிப்படுத்துறப்ப, ஐக்கியத்துல மனந்திறந்து பேசவும், தங்களைப் பத்தி அறிஞ்சுக்கவும், அத சரிசெய்யறதுக்கு சத்தியத்தத் தேடவும் அவங்களால முடிஞ்சுச்சு. இது நான் வெளியில் இருக்குற சமுதாயத்துல பாக்காத ஒண்ணா இருந்துச்சு. விசுவாசத்தின் பாதைதான் வாழ்க்கையில நடக்க வேண்டிய சரியான பாதைன்னு நான் உணர்ந்துகிட்டேன். தேவனோட வார்த்தைகள வாசிப்பதன் மூலமா, கத்துக்கிட்டேன் கடைசி நாட்கள்ல, தேவன் நல்லவங்களுக்கு பிரதிபலனை அளிச்சும் பொல்லாதவங்களுக்கு தண்டனை அளிச்சும் கிரியை செய்யுறாரு, தேவனை உண்மையா விசுவாசிச்சு, சத்தியத்தப் பின்பற்றுறவங்க மட்டுந்தான் தேவனோட பாதுகாப்பையும் பராமரிப்பயும் பெற்றுக்குவாங்க, கடைசியில, பெரும் பேரழிவுகள்ல இருந்து இரட்சிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவாங்க. விசுவாசம் இல்லாதவங்களையும், சத்தியதப் பின்பற்றாதவங்களையும் பொறுத்தவரையில, அவங்க எவ்வளவு நல்லா தொழில் செஞ்சாலும் அல்லது எவ்வளவு பணம் சம்பாதிச்சாலும், அது எல்லாமே கடைசியில ஒண்ணுமில்லாமப் போகும், அவங்களால தங்களோட சொந்த ஜீவனைக் கூட இரட்சிச்சுக்க முடியாது. இப்படி எல்லாத்தயும் புரிஞ்சுகிட்டதுக்கப்புறம் நான் பள்ளிக்கூடத்தின் வளர்ச்சியில அதிக கவனம் செலுத்தல, ஆனா நிறைய ஜனங்கள் தேவனுக்கு முன்பா வந்து அவரோட இரட்சிப்ப ஏத்துக்கும்படி என்னோட ஓய்வு நேரத்துல சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க நான் வெளிய போனேன்.

ஆரம்பத்துல அவங்க அதுக்கு ஆதரவாதான் இருந்தாங்க. கொஞ்ச நாளுக்கப்புறம், என்னோட மூத்த மகன் விசுவாசிகள அரசாங்கம் ஒடுக்கி கைது செஞ்சத செய்தியில பாத்தான். அது பள்ளிக்கூடத்தப் பாதிக்கும்ங்கற பயத்துல, அவன் என்னோட விசுவாசத்த எதிர்க்கத் தொடங்குனான், காவல்துறையில புகார் கொடுக்கப்போறதாவும் மிரட்டினான். என்னோடு நல்ல பழக்கத்துல இருந்த அரசாங்க அதிகாரி ஒருத்தர் எனக்கு, “இந்த நாட்டுல விசுவாசத்துக்கு அனுமதியில்ல, உங்க நம்பிக்கைய நீங்க கைவிட்டுறணும். உங்களக் கைது பண்ணிட்டாங்கன்னா, உங்களுக்கு தண்டனை கிடைக்கிறதோட இல்லாம உங்க பள்ளிக்கூடமும் மூடப்படலாம். அது உங்க குடும்பத்த அழிச்சு விட்டுறாதா?” அப்படின்னு அறிவுரை சொன்னாரு. இதுதான் மெய்யான வழின்னும், கடைசி வரைக்கும் என்னோட விசுவாசத்தக் கடைப்பிடிப்பதுல உறுதியா இருந்தேன்னும் நான் அவருக்கு சொன்னேன். அவரால என்னைய இணங்கவைக்க முடியலன்ன உடனே, சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையப் பத்தி கம்யூனிஸ்ட் கட்சி அவதூறா சொல்லும் சில பொய்கள அவர் என்னோட மனைவிகிட்ட சொன்னாரு. கிழக்கத்திய மின்னல்ல விசுவாசிகளா இருப்பவங்கதான் கைது செய்யப்படுறதுக்கு அரசாங்கத்தோட முதன்மையான இலக்கா இருக்காங்கன்னும், அவங்களோட குடும்பத்துல இருக்குற வருங்கால சந்ததி பாதிக்கப்படும்ன்னும், அவங்களோட குழந்தைங்கள கல்லூரியில சேத்துக்க மாட்டாங்க, இராணுவத்துல சேர அனுமதிக்க மாட்டாங்க அல்லது அரசாங்க அதிகாரியா வர முடியாதுன்னும் அவர் சொன்னாரு. இதக் கேட்ட என்னோட மனைவி, என்னோட விசுவாசம் எங்க குழந்தைகள சிக்கவச்சிரும்னு பயந்து, என்னோடு ஒரு பெரிய சண்ட போட ஆரம்பிச்சுட்டா, என்னைய விவாகரத்து செஞ்சுருவேன்னு மிரட்டினாள். அது எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. எங்க ரெண்டாவது மகன் ஏற்கனவே பட்டப்படிப்பு படிச்சு நல்ல வேலையில இருந்தான். என்னோட விசுவாசத்துனால அவன் வேலைய இழந்துட்டா, அவன் நிச்சயமா என்னோடு நேருக்கு நேர் மோதுவான். அதோடு கூட, நான் கடினமா உழைச்சு நிறுவுன பள்ளிக்கூடம் இப்பத்தான் நல்ல நிலைக்கு எழும்பி வருது. தேவன் மேல இருக்குற என்னோட விசுவாசத்துனால என்னைக்காவது ஒரு நாள் அது மூடப்பட்டா, என்னோட பல வருட உழைப்பு வீணாப்போயிரும். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க என்னையப் பத்தி என்ன நெனப்பாங்க? கொஞ்ச நாளா எனக்கு பசியும் இல்ல, தூக்கமும் வரல. நான் ரொம்ப பலவீனமாவும் பரிதாபமாவும் உணர்ந்தேன் என்னோட விசுவாசத்த விட்டுவிடுறதுக்கான எண்ணம் கூட வந்துருச்சு. ஆனா அதுதான் இரட்சிக்கப்படுறதுக்கான ஒரே வழின்னு தெரிஞ்சதுக்கப்ப்புறம் என்னால விசுவாசிக்காம இருக்க முடியல.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு கூடுகையில என்னோட நிலையப் பத்தி மனந்திறந்து பேசினேன். தேவனோட வார்த்தைகளை தலைவி என்னோடு நிறையா ஐக்கியங்கொண்டாரு, இந்தப் பத்தியயும் கூட ஐக்கியங்கொண்டாரு: “இந்த உலகில் நீ அழுதுகொண்டே பிறந்த கணம் முதல் நீ உனது கடமையை நிறைவேற்றத் தொடங்குகிறாய். தேவனுடைய திட்டத்திற்காகவும், அவருடைய முன்குறித்தலுக்காகவும், உனது கடைமையைச் செய்கிறாய் மற்றும் உன்னுடைய ஜீவிதப் பயணத்தை நீ தொடங்குகின்றாய். உனது பின்னணி எதுவாக இருந்தாலும், உனக்கு முன் எத்தகைய பயணம் இருந்தாலும், ஒருவராலும் பரலோகத்தின் திட்டங்களிலிருந்தும் ஏற்பாடுகளிலிருந்தும் தப்ப முடியாது. ஒருவராலும் தங்கள் தலைவிதியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், சர்வத்தையும் ஆளுகிறவராகிய தேவன் மட்டுமே இத்தகைய கிரியையைச் செய்ய வல்லவராயிருக்கிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). அவர் ஐக்கியங்கொண்டு: “நம்ம தலைவிதி எல்லாமே தேவனோட கையிலதான் இருக்கு நாம ஒவ்வொருத்தரும் பிறந்த தருணத்துலருந்து, இந்த வாழ்க்கையில என்ன அனுபவிக்கப் போறோம், என்னென்ன பின்னடைவுகளயும், கஷ்டங்களையும் சந்திக்கப் போறோம்னு தேவனால் முன்னாடியே தீர்மானிக்கப்பட்டிருக்கு. இப்ப நாம விசுவாசிச்சு, தேவனோட இரட்சிப்ப ஏத்துக்க முடியும்ங்கறதும் அவரால முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதுதான். நாம சீனாவுல விசுவாசிகளா இருந்து இந்த அடக்குமுறையயும் கஷ்டங்களயும் கடந்துபோறதுக்கு தேவன் நம்மள அனுமதிச்சிருக்காரு, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களோட விசுவாசத்தயும் பக்தியயும் பூரணப்படுத்துறதுக்காக அவர் இவைகளப் பயன்படுத்துறாரு. நீங்க கைது செய்யப்படுவீங்களா, உங்க பள்ளிக்கூடம் மூடப்படுமா, உங்க குழந்தைகளோட எதிர்கால வாய்ப்புகள் எப்படி இருக்கும், அப்படிங்கற எல்லாமே தேவனோட கரத்துல இருக்குது. எந்த மனுஷனாலும் அதத் தீர்மானிக்க முடியாது, அரசாங்கமும் அதப் பத்தி எந்த முடிவையும் சொல்ல முடியாது” அப்படின்னு சொன்னாரு. தேவனோட வார்த்தைகளும், தலைவரோட ஐக்கியமும் எனக்கு பிரகாசத்தக் கொடுத்துச்சு. உண்மதான். நான் ஏற்கனவே என் வாழ்க்கையோட பெரும்பகுதிய வாழ்ந்துட்டேன், நிறைய அனுபவங்களும் எனக்கு இருக்குது, நான் கற்பன செஞ்சமாறி நான் கடந்து வந்த பாதையில நடக்கல. நான் ராணுவத்துல இருந்தப்ப, கடினமா பயிற்சி செஞ்சு சிறப்பா செயல்பட்டேன், தரவரிசையில் நான் உயரணும்னு நெனச்சேன், ஆனா எனக்கு அதிர்ச்சி தரும் விதமா, வேற ஒருத்தருக்கு பதவி உயர்வு கிடைச்சுச்சு. பிறகு பள்ளிக்கூடத்த நிறுவுறப்போ எல்லா வகையான சிரமங்களயும் நான் அனுபவிச்சேன், ஆனா கடைசியில நான் அத எழுப்பி சீரா இயங்க வச்சேன், இப்ப அது நல்லா போயிக்கிட்டிருக்குது. இந்த எல்லா வெற்றிகளயும் தோல்விகளயும் நான் முடிவு செய்யல. இதைப் பார்த்ததும், வாழ்க்கையில நாம அனுபவிக்கிற எல்லாமே தேவனோட ஆளுகையால தீர்மானிக்கப்படுதுங்கறதயும், நமக்கு அதுல சொல்லுறதுக்கு எதுவும் இல்லங்கறதயும் நான் உணர்ந்துக்கிட்டேன். நான் கைது செய்யப்படுவேனா இல்லையான்னு கவலைப்படுறதுல எந்தப் பயனும் இல்ல. தேவன் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே அதத் தீர்மானிச்சுட்டாரு, அதனால நான் எல்லாத்தயும் தேவனோட கரத்துல விட்டுட்டு அவரோட ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியணும்.

தலைவரும் கூட என்னோட ஐக்கியம் கொண்டு, பண்டைய காலத்துலருந்தே மெய்யான வழி ஒடுக்கப்பட்டு வந்திருக்கு. அது எவ்வளவு மெய்யான வழியோ, அவ்வளவு அதிகமா சாத்தானோட சேனைகள் அதக் கொடூரமா உபத்திரவப்படுத்துது. தேவன் இரட்சிக்கிற ஜனங்களவிட்டு சாத்தானால எப்படி விலகியிருக்க முடியும்? கர்த்தராகிய இயேசு கிரியை செய்ய வந்தப்ப, ரோம அரசாங்கத்தின் மூலமாவும் மத உலகத்தின் முலமாவும் அவர் வெறித்தனமா எதிர்க்கப்பட்டு ஒடுக்கப்பட்டாரு, அவரோட சீஷர்களும் கூட உபத்திரவப்படுத்தப்பட்டாங்க. இன்னைக்கு நாம மெய்யான தேவனை விசுவாசிக்கறோம், அப்படின்னா, கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமா ஆளுகை செய்யுற சாத்தானிய ஆட்சியால நாம உபத்திரவப்படுத்தப்படுவத தவிர்க்க முடியாது, கட்சியோட சாத்தானிய, தேவன்-எதிர்ப்பு சாராம்சத்த நம்மால தெளிவா பாக்கும்படி, நாம பகுத்தறிவப் பெற்றுக்க உதவுறதுக்காக தேவன் இந்த உபத்திரவங்களப் பயன்படுத்துறாரு. அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளின் இந்த பத்திய நான் வாசிச்சேன்: “பல்லாயிரம் ஆண்டுகளாக இது அசுத்தமான நிலமாக இருந்து வருகிறது. இது தாங்க முடியாத அழுக்கும், மிகுந்த துன்பமும், எங்கும் தலைவிரித்தாடும் பிசாசுகளும், சூழ்ச்சி மற்றும் வஞ்சகமும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துதலும், இரக்கமற்றும் கொடூரமாகவும், இந்தப் பிசாசு நகரத்தை மிதித்தும், மரித்த உடல்களின் குப்பைகளால் நிரம்பியதுமாய் இருக்கிறது; அழுகியதனால் ஏற்படுகிற துர்நாற்றம் தேசத்தை மூடுகிறது மற்றும் காற்றில் பரவுகிறது, மேலும் அது பலத்தப் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. வானங்களுக்கு அப்பால் உள்ள உலகத்தை யாரால் பார்க்க முடியும்? மனுஷனின் சரீரம் முழுவதையும் பிசாசு இறுக்கமாகப் பிடிக்கிறது, அது அவனது இரு கண்களையும் மறைக்கிறது, மேலும் அவனது உதடுகளை இறுக்கமாக மூடுகிறது. பிசாசுகளின் நகரத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் போது, ஏதோ அது ஊடுருவ முடியாத பிசாசுகளின் அரண்மனையாக இருப்பதைப் போலப் பிசாசுகளின் ராஜா பல ஆயிரம் ஆண்டுகளாக, இன்று வரை வெறித்தனமாய்ச் செயல்பட்டிருக்கிறான்; இதற்கிடையில், இந்தக் காவல் நாய்களின் கூட்டம், தாங்கள் அறியாத வேளையில் தேவன் தங்களைப் பிடித்து, தங்களுக்குச் சமாதானம் மற்றும் சந்தோஷத்திற்கான ஓர் இடத்தையும் விட்டுவைக்காமல், அனைவரையும் அழித்துவிடுவார் என்ற மிகுந்த பயத்துடன், ஒளிரும் கண்களால் கூர்ந்து நோக்குகின்றனர். இது போன்ற பிசாசின் நகரத்து ஜனங்கள் தேவனை எப்படிப் பார்த்திருக்க முடியும்? அவர்கள் எப்போதாவது தேவனுடைய அன்பையும் தயவையும் அனுபவித்திருக்கிறார்களா? மனுஷ உலக விஷயங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது? அவர்களில் யாரால் தேவனுடைய ஆர்வமுள்ள சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியும்? அப்படியானால், மனுவுருவாகிய தேவன் முழுவதுமாக மறைந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்: இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற பிசாசுகள்இருக்கிற இதைப் போன்ற இருண்ட சமுதாயத்தில், எவ்வித இரக்கமும் இல்லாமல் ஜனங்களைக் கொல்லும் பிசாசுகளின் ராஜா, அன்பாகவும், தயவாகவும் மற்றும் பரிசுத்தமாகவும் இருக்கிற தேவன் இருப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்வான்? அது எப்படி தேவனுடைய வருகையைப் பாராட்டி உற்சாகமடைய முடியும்? இந்தக் கீழ்த்தரமானவர்கள்! அவர்கள் தயவுக்குப் பதிலாக வெறுப்பைத் திருப்பிச் செலுத்துகிறார்கள், நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தேவனை ஒரு சத்துருவாகக் கருத ஆரம்பித்தனர், அவர்கள் தேவனைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், அவர்கள் அளவுக்கதிகமான காட்டுமிராண்டிகளாய் இருக்கிறார்கள், அவர்கள் தேவனைச் சிறிதும் கருத்தில்கொள்வதில்லை, அவர்கள் கொள்ளையடித்துக், கன்னமிட்டுத் திருடுகிறார்கள், அவர்கள் மனச்சாட்சியை முழுவதுமாக இழந்துவிட்டார்கள், அவர்கள் மனச்சாட்சிக்கு விரோதமாகச் செல்கிறார்கள். மேலும் அவர்கள் அப்பாவிகளை உணர்வற்ற நிலைக்குத் தள்ளுகிறார்கள். பண்டைய காலத்தின் முன்னோர்களா? அன்பான தலைவர்களா? அவர்கள் அனைவரும் தேவனை எதிர்க்கிறார்கள்! அவர்களின் தலையீடு வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் இருளிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது! மதச் சுதந்திரம்? குடிமக்களின் சட்ட உரிமைகள் மற்றும் நலன்கள்? இவையெல்லாம் பாவத்தை மறைப்பதற்கான தந்திரங்கள்!(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (8)”). தேவனோட வார்த்தைகள் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாத்திகக் கட்சிங்கறதயும், தேவனோட எதிரிங்கறதயும் தேவன் இருப்பத அது விரும்புறதில்லங்கறதயும் எனக்குக் காட்டுச்சு. இது மத சுதந்திரத்த அனுமதிப்பதா சொல்லுது, ஆனா அது பொய் சொல்லி ஜனங்களத் தவறா வழிநடத்துவதா இருக்குது. ஜனங்கள் விசுவாசத்தப் பெற்று, தேவனோட வார்த்தைகள வாசிச்சு, சத்தியத்தத் தெரிஞ்சுக்கிட்டா, ஜனங்கள காயப்படுத்துற பிசாசான சாத்தான் அதுதான்ங்கறத அவங்க கண்டுபிடிச்சுருவாங்கன்னும், பிறகு அதக் கைவிட்டுருவாங்க, நிராகரிச்சுருவாங்கன்னும் அது பயப்படுது. பிறகு ஜனங்கள என்றென்றைக்கும் கட்டுப்படுத்தணும்ங்கற அதன் லட்சியமும் குறிக்கோளும் சிதைஞ்சுபோயிரும். அதனால ஜனங்க தேவனை விசுவாசிக்கறதயும் பின்பற்றுறததயும் தடுக்க, அது தேவனால தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள வெறித்தனமா கைது செஞ்சு உபத்திரவப்படுத்துது, ஜனங்கள் மெய்யான வழியக் கைவிட்டுட்டு, தேவனோட இரட்சிப்பை இழந்து, அதனோடு சேர்ந்து நரகத்துல அழிக்கப்படும்படி, சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையப் பத்தி தூற்றித்திரியவும், அவதூறு செய்யவும் ஊடகங்களப் பயன்படுத்துது, விசுவாசிகளோட குடும்பங்களப் பயமுறுத்தி, அவங்கள ஒடுக்கி அவங்களுக்கு எதிராக செயல்படுது. கம்யூனிஸ்ட் கட்சி அந்த அளவுக்கு மோசமானதும் துன்மார்க்கமுமாயிருக்குது! என்னோட குடும்பம் அதனால தவறா நடத்தப்பட்டு என்னைய ஒடுக்கத் தொடங்குச்சு. நான் அவங்களோட சேர்ந்துக்கிட்டா, சாத்தானோட தந்திரங்கள்ல நானும் விழுந்துருவேன். அதனால ஏமாந்துபோக என்னால முடியல. என்னோட குடும்பம் எப்படி என் வழியில குறுக்க நின்னாலும், நான் என்னோட விசுவாசத்தக் கடைபிடிச்சு, என்னோட கடமையச் செய்யணும்னு எனக்குத் தெரியும்.

தேவனைப் பின்பற்றுறதுல நான் எவ்வளவு உறுதியா இருந்தேன்னு பார்த்து, என்னோட மூத்த மகன் உபத்திரவத்த எனக்கு அதிகப்படுத்தினான். ஒரு நாள், அவன் என்னையப் பள்ளிக்கூடத்துலருந்து மாணவர்கள் முன்னாடி ஓடவிட்டான். கோபத்துல அவன் என்னையப் பாத்து கத்தி, “அரசாங்கம் மதத்த அனுமதிக்கறதில்ல, ஆனா நீங்க விசுவாசிப்பத வலியுறுத்துறீங்க! உங்கள கைது பண்ணிட்டாங்கண்ணா, ஒட்டுமொத்த குடும்பமும் சிக்க வைக்கப்படும், என்னோட குழந்தைகளும் சிக்கிருவாங்க. அத எப்படி ஏத்துக்க முடியும்? உங்க விசுவாசத்த நீங்க கடைபிடிக்க விரும்புனா, நீங்க பள்ளிக்கூடத்த விட்டு வெளிய போகணும், எங்களையும் அதுக்குள்ள இழுக்காதிங்க!” அப்படின்னு சொன்னான். என்னோட சொந்த மகனே என்கிட்ட இரக்கமற்ற ஒரு காரியத்தச் சொல்லவும், தேவனை விசுவாசிச்சதுக்காக என்னையத் துரத்திவிடவும் முடியும்ங்கறதக் கேட்டப்போ, என்னால என் காதுகளையே நம்ப முடியல. நான் ரொம்ப காயப்பட்டிருந்தேன். நான் பள்ளிக்கூடத்துலருந்து வெளியேற்றப்பட்டேன்னா, என் வாழ்நாள் முழுவதும் நான் சிந்துன இரத்தம், வியர்வை, கண்ணீர் எல்லாமே வீணாப் போயிருச்சுன்னுதானே அர்த்தம்? யார் என்னைய “தலைமை ஆசிரியர்” அப்படின்னு கூப்புடுவாங்க, யார் என்னைய உயர்வா பார்ப்பாங்க? நான் அதுக்கப்புறம் அந்த விஷயங்கள அனுபவிக்க முடியாது, அதோடு, நான் மறுபடியும் ஒரு சாதாரண விவசாயியா மாறுவேன். என்னோட நண்பர்களயும் அறிமுகமானவர்களயும் நான் எப்படி எதிர்கொள்ளுவேன்? இந்த எண்ணங்கள் எனக்கு தாங்க முடியாத வேதனையா இருந்துச்சு. என்னோட மகன் என்னைய வெளிய துரத்திட்டா நான் எங்க போவேன்? நான் அவன் சொல்றதயும் கொஞ்சம் கேட்கணும்னு நெனச்சேன். அப்படி என் மனசுல தோனுனப்ப, நான் தேவனோட வார்த்தைகள நெனச்சேன். “ஜனங்களுக்கு கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லை என்றால், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வது அவர்களுக்கு எளிதானது அல்ல. தேவனின் கிரியை சிறிதளவும் ஜனங்களின் எண்ணங்களோடும் கற்பனைகளோடும் இணங்காது என்பதை ஒவ்வொருவரும் இப்போது பார்க்கலாம். தேவன் மிக அதிகமான கிரியைகளைச் செய்திருக்கிறார் மற்றும் பல வார்த்தைகளைப் பேசியிருக்கிறார், மேலும் அவைதான் சத்தியம் என்று ஜனங்கள் ஒப்புக்கொண்டாலும், தேவனைப் பற்றிய கருத்துகள் அவர்களிடம் தோன்ற இன்னும் வாய்ப்புள்ளது. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதை அடைய விரும்பினால், அவர்கள் தாங்கள் ஏற்கெனவே பார்த்தவைகளிலும் தங்கள் அனுபவத்தின் மூலம் அடைந்தவைகளிலும் நிலைநிற்கும் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொண்டிருக்கவேண்டும். ஜனங்களிடத்தில் தேவன் எதைச் செய்தாலும், தங்களிடம் இருப்பவற்றை அவர்கள் நிலைநிறுத்த வேண்டும், தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும், மற்றும் கடைசிவரை அவரிடம் பக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதுவே மனுக்குலத்தின் கடமை. ஜனங்கள் தாங்கள் செய்யவேண்டியதை நிலைநிறுத்த வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்”). “சோர்வடைய வேண்டாம், பலவீனமாக இருக்க வேண்டாம், நான் உனக்கு விஷயங்களைத் தெளிவுபடுத்துவேன். ராஜ்யத்திற்குரிய பாதை அவ்வளவு சமமாக இல்லை; எதுவும் அவ்வளவு எளிதானதல்ல! உனக்கு ஆசீர்வாதங்கள் எளிதில் வரவேண்டுமென்று விரும்புகிறாய், இல்லையா? இன்று, எதிர்கொள்ளும்படி கசப்பான உபத்திரவங்கள் அனைவருக்கும் இருக்கும். இத்தகைய உபத்திரவங்கள் இல்லாமல் நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பான இருதயம் வலுவடையாது, மேலும் நீங்கள் என்மீது உண்மையான அன்பைக் கொண்டிருக்க மாட்டீர்கள். இந்த உபத்திரவங்கள் வெறுமனே சாதாரண சூழ்நிலைகளைக் கொண்டிருந்தாலும், எல்லோரும் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்; உபத்திரவங்களின் துன்பம் மட்டுமே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபடும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 41”). தேவனோட வார்த்தைகள் என்னைய அமைதிப்படுத்திக்க உதவுச்சு. உண்மதான். விசுவாசப்பாதைங்கறது முழுவதும் சுமூகமான பயணமா இருப்பதில்ல. சில கஷ்டங்கள நாம தாங்கித்தான் ஆகணும். நம்பிக்கையில்லாம அந்தப் பாதையில நிலைச்சிருப்பது கடினம். இந்த அடக்குமுறையால நான் எதிர்மறையானவனாகி பின்வாங்கினா, என்னோட நம்பிக்கை எங்க இருந்துச்சு? நான் தேவனை விசுவாசிக்கறதுக்கு முன்னாடி, நான் உலகத்துக்குள்ள இருந்தப்போ, நான் முன்னேறுறதுக்காக அத்தனை வருஷங்களா போராடிக்கிட்டிருந்தேன், எதையும் எதிர்பார்க்காம வாழனும்ங்கறது கடினமானதாவும் களைப்படையச் செய்யும் வழியாவும் இருந்துச்சு. வாழ்நாள்ல ஒரேதடவ மட்டுமே கிடைக்கறதான—தேவன் மனிதகுலத்தை இரட்சிக்க வர்ற இந்த வாய்ப்ப சந்திக்கிற அதிர்ஷ்டம் எனக்கு கிடச்சுச்சு. என்னால எப்படி அத சாதாரணமா விட்டுற முடியும்? பிறகு எப்படி தேவனால என்னைய இரட்சிக்க முடியும்? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?(மத்தேயு 6:26). விதைக்கவோ அறுவடை செய்யவோ தெரியாத பறவைகள தேவன் சிருஷ்டிக்குறாரு, ஆனாலும் அவைகள் உயிர்வாழ அவர் உதவி செய்யுறாரு. தேவன் எனக்கு ஒரு வழியத் திறப்பாரு. என் மகன் என்னைய வீட்ட விட்டு வெளியேத்திட்டாலும், தேவன் என்னைய வழிநடத்துவாருன்னும், நான் எதுக்காகவும் கவலைப்பட தேவையில்லன்னும் நான் விசுவாசிச்சேன். இந்த எண்ணம் என்னோட விசுவாசத்தப் புதுப்பிச்சுச்சு அதுக்கப்புறமா நான் அவனால கட்டுப்படுத்தப்பட்டதா உணரல. நான் என்னோட நம்பிக்கையில உறுதியா இருப்பதப் பாத்து, அவன் கோபமா பள்ளிக்கூடத்து வாசலுக்கு வெளிய என்னைய துரத்திவிட்டான். பள்ளிக்கூடத்த விட்டுட்டு கொஞ்ச நாள் என்னோட பெற்றோர் வீட்டுல தங்குறதத் தவிர எனக்கு வேற வழியில்ல.

அன்னைக்கு சாயங்காலம், என்னோட அவல நிலைய நெனச்சுப் பார்க்கறது எனக்கே ரொம்ப பரிதாபமா இருந்துச்சு. நான் தேவனிடத்துல, “தேவனே, இதுல உங்க சித்தம் என்னன்னு எனக்குத் தெரியல. நான் உங்கள விசுவாசிக்குறேன், நான் சரியான பாதையில இருக்குறேன், அப்பறம் ஏன் என் மகன் என்னைய இப்படி நடத்துறான்? உமது சித்தத்தப் புரிஞ்சுக்க எனக்கு வழிகாட்டுங்க” அப்படின்னு ஜெபிச்சேன். பிறகு, சகோதர சகோதரிகள் சிலர் என்னோடு பகிர்ந்துக்கிட்ட ஒரு பத்திய நான் நெனச்சுப் பாத்தேன்: “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கு இடையிலான இடைபடுதல்களாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும். தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு கிரியையின் பின்னணியிலும் தேவனுடன் சாத்தானின் பந்தயம் இருக்கிறது, அதன் பின்னால் அனைத்தும் ஒரு யுத்தம்தான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). தேவனோட வார்த்தைகள ஆழ்ந்து சிந்திப்பதனால நான் சந்திச்சுக்கிட்டிருந்த இந்த‌ப் பிரச்சனை, வெளிப்புறமா, கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்களால என்னோட மகன் தவறா வழிநடத்தப்பட்டிருந்ததப் போலவும், அதனாலதான் அவன் என்னோட விசுவாசத்த ஒடுக்கி, தடை செஞ்சு, என்னைய பள்ளிக்கூடத்த விட்டு வெளிய துரத்தீட்டான் அப்படிங்கறதப் போலவும் காணப்பட்டுச்சு. ஆனா அதுக்குப் பின்னால, என் குடும்ப உறவுகளப் பராமரிக்கறதுக்காவும், என்னோட பெயரையும் அந்தஸ்தையும் பாதுகாக்கவும், தேவனுக்கு துரோகம் செய்வேனா, அல்லது என்னோட தனிப்பட்ட நலன்கள விட்டுட்டு தொடர்ந்து தேவனைப் பின்பற்றுவதத் தேர்வுசெய்வேனா, நான் எதத் தேர்வு செய்வேன்னு பார்க்க, சாத்தான்தான் இடையூறு விளைவிச்சுக்கிட்டும் காரியங்களக் கையாண்டுக்கிட்டும் இருந்தான். என் நிலைமையப் பத்தி நான் கவலைப்பட்டு, வருத்தப்பட்டேன் ஏன்னா, எனக்கு தேவன் மேல உண்மையான விசுவாசம் இல்லாம இருந்துச்சு, எல்லாத்தையும் விட்டுவிடுற மனவுறுதியும் என்கிட்ட இல்ல. நான் தேவனைப் புறந்தள்ளி விட்டுட்டு, என்னைய அவருக்கு துரோகம் செய்ய வைக்கவும், கடைசியில, அது என்னய அழிச்சு விழுங்கிப்போடவும் சாத்தான் என்னோட பலவீனமான விஷயங்களான—என்னோட பாசம், நற்பெயர், அந்தஸ்து—இவைகளப் பயன்படுத்திக்கிட்டிருந்தான். அது ரொம்ப தீயதாவும் பொல்லாததாவும் இருந்துச்சு! இதப் புரிஞ்சுகிட்டது எனக்கு கொஞ்சம் நல்லாயிருந்துச்சு. என்னோட குடும்பத்தினர் என்னையத் தடுக்க என்ன செஞ்சாலும் பரவாயில்ல, என்ன கஷ்டங்களை பிற்காலத்துல நான் சந்திச்சாலும் பரவாயில்ல, நான் என்னோட விசுவாசத்துல உறுதியா இருந்து, சாத்தானை வெட்கப்படுத்தி, கடைசிவரை தேவனைப் பின்பற்றுவேன், அப்படின்னு நான் தீர்மானம் பண்ணினேன்!

நான் என் பெற்றோரோட வீட்டுல என்னால ரொம்ப காலத்துக்கு இருக்க முடியல, அதனால நான் மறுபடியும் பள்ளிக்கூடத்துக்குத் திரும்பிப்போக வேண்டியிருந்துச்சு. நான் திரும்பிப்போன பிறகும் கூடுகைகள்ல கலந்துகிட்டு சுவிசேஷத்தைப் பகிர்ந்துகிட்டேன். என் விசுவாசத்த நான் தொடர்ந்து கடைப்பிடிச்சதப் பார்த்த என்னோட மூத்த மகனும் அவனோட மனைவியும் தங்களோட அடக்குமுறைய அதிகப்படுத்தினாங்க. என்னைய வெளியே துரத்தப் போறதா அவங்க எப்பவும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பள்ளிக்கூடத்து நிதியக் கட்டுப்படுத்திவச்சுக்கிட்டு, எனக்குன்னு ஒரு சின்ன இடங்கூட இல்லாம எடுத்துகிட்டாங்க. அவங்க என்கிட்ட தொடர்ந்து மோசமான விஷயங்களச் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பெரும்பாலும் எனக்கு சாப்பிடக்கூட வெறுப்பா இருக்கும். கொஞ்ச நாளாவே, நான் தொடர்ந்து கோபமா இருந்தேன், சாப்பிடுறதுக்கு சிரமப்பட்டேன், அதனால என்னோட உடல்நிலை ரொம்ப பாதிக்கப்பட்டுச்சு. நான் நடக்குறப்ப என்னோட பார்வை இருண்டுபோயிரும், நான் கிட்டத்தட்ட பலதடவ மயக்கம் போட்டேன். எனக்கு இரைப்பை அரிப்பு அழற்சி உண்டாயிருச்சு, சாயங்கால நேரங்கள்ல எனக்கு ரொம்ப வலிக்கும், கொஞ்சம் நிவாரணத்தப் பெற ஒரே வழி என்னோட வயித்துக்கு மேல ஒரு தலையணைய வைச்சுக்கறதுதான். ராத்திரியில என்னால தூங்க முடியாதப்ப நான் விளையாட்டு மைதானத்துக்குப் போய், நான் கட்டுன பயிற்சிக்கூடத்தயும், அலுவலகங்களயும், சிற்றுண்டிச்சாலைகளயும் தங்கும் விடுதிகளயும் பார்ப்பேன், நான் ரொம்ப கடினமா உழைச்சுக் கட்டிய பள்ளிக்கூடத்தயும் உத்துப் பார்ப்பேன். அது உண்மையிலயே எனக்கு ரொம்ப பாரமா இருந்துச்சு. இந்தப் பள்ளிக்கூடத்தத் திறக்க, நான் எவ்வளவு தூரம் பயணம்பண்ணுனேன்னும், மத்தவங்க என்னயப் பாராட்ட எவ்வளவு முயற்சி செஞ்சுருப்பேன்னும், நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன்னும் எனக்குத் தெரியல. நான் அடஞ்சிருந்த கொஞ்ச வெற்றிகள், இப்ப என்னோட சொந்த மகனாலயே பறிக்கப்பட்டுருச்சு. அது என் வாழ்நாள் முழுவதுக்குமான வேலை. நான் தொடர்ந்து விசுவாசத்தக் கடைபிடிச்சா, இதையெல்லாம் நான் இழந்துபோக வேண்டியிருக்கும். இதப் பத்தி யோசிக்கறது எனக்கு இருதயத்துல கத்தி குத்துறதப் போல இருந்துச்சு. அந்த நேரத்துல நான் ரொம்ப பலவீனமா உணர்ந்தேன் ராத்திரியில எப்பவுமே ரகசியமா அழுதுக்கிட்டிருந்தேன். நான் தேவனிடத்துல, “தேவனே, நான் என் வாழ்க்க முழுசும் கட்டியெழுப்புன இந்தத் தொழில நான் இழக்கப் போறேன், என்னால அதை விட்டுற முடியாது. இந்தச் சூழ்நிலைய சமாளிக்க எனக்கு வழிகாட்டுங்க” அப்படின்னு கண்ணீரோட ஜெபிச்சேன்.

அதுக்கப்புறம், சகோதர சகோதரிகள் தேவனோட வார்த்தைகள்ல சிலத என்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. அது எனக்குப் நடப்பதுக்கான பாதையக் கொடுத்துச்சு. தேவனின் வார்த்தை கூறுகிறது: “இப்போது நீ பேதுரு எடுத்தத் துல்லியமான பாதையைத் தெளிவாகக் காண முடியும். நீ பேதுருவின் பாதையைத் தெளிவாகக் காண முடிந்தால், இன்று செய்யப்படும் கிரியையைப் பற்றி நீ உறுதியாக இருப்பாய், எனவே நீ குறைகூறவோ அல்லது செயலற்றவனாக இருக்கவோ அல்லது எதற்கும் ஏங்கவோ மாட்டாய். அந்த நேரத்தில் நீ பேதுருவின் மனநிலையை அனுபவிக்க வேண்டும். அவர் துக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவர் இனியும் ஓர் எதிர்காலத்தையோ அல்லது எந்த ஆசீர்வாதங்களையுமோ கேட்கவில்லை. அவர் ஆதாயம், மகிழ்ச்சி, புகழ் அல்லது அதிர்ஷ்டத்தை உலகில் நாடவில்லை. அவர் மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை மட்டுமே வாழ முயன்றார், இது தேவனின் அன்பிற்காகத் திருப்பிச் செலுத்துவதோடு அவர் தேவனுக்கு மிகவும் விலையேறப்பெற்றதாக இருந்ததை அர்ப்பணிப்பதுமாக இருந்தது. பின்னர் அவர் இருதயத்தில் திருப்தி அடைந்திருப்பார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்”). தேவனோட வார்த்தைகள சிந்துச்சுப் பாத்தது என்னோட கண்களத் திறந்துச்சு. அந்த நாட்கள்ல, பேதுருவும் கூட தன்னோட விசுவாசத்துக்காகத் தன் குடும்பத்தினரோட அடக்குமுறையை அனுபவிச்சாரு. அவர் தனக்குன்னு ஒரு பேர உருவாக்கி, குடும்பத்துக்கு பெருமை சேர்க்கணும்னு அவரோட குடும்பத்தினர் விரும்புனாங்க, ஆனா அவர் அவங்களால பின்வாங்கிச் போகல. கர்த்தராகிய இயேசு அவரை அழைச்சப்போ, கர்த்தரைப் பின்பற்றி அர்த்தமுள்ள வாழ்க்கையப் பின்தொடரனும்ன்னு எல்லாத்தையும் விட்டுட்டாரு. பேதுருவோட அனுபவம் என்னையப் பிரகாசிப்பதா இருந்துச்சு. பேதுரு தேவன் மேல உண்மையான விசுவாசம் வைச்சுருந்தாரு, அவரைப் பின்பற்றதுக்காக எல்லாத்தையும் விட்டுற முடிஞ்சுச்சு. அவர் சத்தியத்தப் பின்தொடர்ந்து, தேவனை அறிஞ்சுக்கிட்டு, அன்பு கூர்ந்து, கடைசியில தேவனோட அங்கீகாரத்தப் பெற்றுக்கிட்டாரு. நான் கொஞ்ச காலமாதான் விசுவாசியா இருந்து வந்திருக்குறேன், சத்தியத்தப் பத்திய மேலோட்டமான புரிதல்தான் இருந்துச்சு, ஆனா கடந்தகாலத்துல பெயருக்காகவும் அந்தஸ்துக்காகவும் நான் கொண்டிருந்த நாட்டம் எனக்குக் கொண்டுவந்த துயரத்த நெனச்சுக்கிட்டு, அதோட தேவனோட அங்கீகாரத்தப் பெற்ற பேதுருவால தெரிந்துகொள்ளப்பட்ட பாதையப் பார்த்தப்போ உண்மையிலயே என்னைய ஊக்கப்படுத்துவதா இருந்துச்சு. நான் பேதுருவோட முன்மாதிரியப் பின்பற்றி, பேரையும் நன்மதிப்பயும் விட்டுட்டு, சத்தியத்தப் பின்தொடர விரும்புனேன். அதுக்கப்புறம், நான் பள்ளிக்கூடத்த விட்டு வெளியேறவும் என்னோட விசுவாசத்தக் கடைப்பிடிச்சு கடமையச் செய்யவும் தீர்மானிச்சேன்.

சில நாட்களுக்கு பிறகு, என்னோட மகன் என்னைய பள்ளிக்கூடத்துலருந்து வெளியேத்துனதக் கேள்விப்பட்ட என்னோட பழைய இராணுவ நண்பர்கள்ல சிலர் ரொம்ப கோபமடஞ்சாங்க, நான் அதத் திரும்ப கைப்பத்துறதுக்காக எனக்கு இங்கும் அங்கயும் இருந்து யோசனைகளோட வந்தாங்க. நண்பர்கள், உறவினர்கள் எல்லாருமே அநீதியக் கண்டிச்சாங்க, நான் சொந்தமா பள்ளிக்கூடத்தக் கட்டுனேன்னும், வேற யாருக்கும் அதுல பங்கு இல்லன்னும் சொல்லி, கிராமச் செயலாளர் எனக்கு அலுவலக சான்றிதழ் கொடுத்து உதவினாரு. இதை எல்லாம் நான் கேட்ட உடனே, நெனச்சேன் அந்தச் சான்றிதழக்கொண்டு, என்னோட இராணுவ நண்பர்கள் பள்ளிக்கூடத்தத் திரும்பப் பெற எனக்கு உதவுனாங்கன்னா, அந்த பழைய கௌரவம் மறுபடியும் எனக்குக் கிடைக்கும்ன்னு நான் நெனச்சேன். ஆனா மறுபடியும் பெயரையும் அந்தஸ்தையும் தொடரணும்கிற வெறி எனக்கு இருப்பத உணர்ந்துகிட்டேன், அதனால நான் மௌனமா தேவனிடத்துல, மாம்சத்தக் கீழ்ப்படுத்தறதுக்கு எனக்கு பலம் தாங்கன்னு ஜெபிச்சேன். என்னோட ஜெபத்துக்கு அப்புறம் யோபுவோட அனுபவத்த நான் நெனச்சுப் பாத்தேன். அவனோட உடைமைகள் எல்லாமே ஒரே ராத்திரியில அவன்கிட்டயிருந்து பறிபோயிருச்சு, அது ரொம்ப வேதனையா இருந்தாலும் கூட, அவை எல்லாத்தையும் திரும்பப் பெற அவன் தன்னோட சொந்த பலத்த சார்ந்துக்கல, அதுக்குப் பதிலா, அவன் ஜெபிச்சு தேவனோட ஏற்பாடுகளுக்கு கீழ்ப்படிஞ்சாரு. என்னோட சொத்து, யோபுவின் சொத்துக்கு எந்த விதத்துலயும் சமமானது இல்ல, ஆனா இந்தச் சூழ்நிலையின் மத்தியில கூட நான் ஜெபிச்சு தேவனைத் தேடாம, அதை நானா திரும்பப் பெற்றுக்க விரும்புனா, அது எப்படி தேவனுக்கு கீழ்ப்படிந்ததா இருக்கும்? நான் பள்ளிக்கூடத்த மீட்டெடுத்து எல்லா நாளும் அத நடத்துறதுல மும்முரமா இருந்தா, என் விசுவாசத்தக் கடைப்பிடிக்கறதுக்கும், என் கடமைய சிறப்பாக செய்யறதுக்கும் எனக்கு ஆற்றல் இருக்காது. இப்ப என் மகன் என்கிட்டருந்து பள்ளிக்கூடத்த எடுத்துக்கிட்டதால, என்னோட விசுவாசத்தக் கடைப்பிடிச்சு என் கடமைய முழு மனதா செய்ய முடியும். அது ஒரு அற்புதமான விஷயமா இருந்துச்சு, அதோடு, தேவனே எனக்கு ஒரு பாதைய திறந்து கொடுப்பதா அது இருந்துச்சு. இந்த எண்ணம் என்னோட இருதயத்த ரொம்பவே பிரகாசமாக்குச்சு. என்னால பள்ளிக்கூடத்த விட்டுற முடியாதுன்னு உணர்ந்தேன், ஏன்னா, நான் ரொம்ப ஆழமா சீர்கெட்டுப்போயிருந்தேன், நற்பெயருக்கும் அந்தஸ்துக்கும் அதிக கவனம் செலுத்தினேன்.

அதுக்குப் பிறகு, சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் வாசிச்சேன்: “இத்தகைய அசுத்தமான நிலத்தில் பிறந்த மனிதன், சமுதாயத்தால் மோசமாகக் கெடுக்கப்பட்டிருக்கிறான், நிலப்பிரபுத்துவ நெறிமுறைகளால் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். மேலும் அவன் ‘உயர் கல்வி நிறுவனங்களில்’ கற்பிக்கப்பட்டிருக்கிறான். பின்னோக்கிய சிந்தனை, அசுத்தமான அறநெறி, வாழ்க்கைப் பற்றிய குறுகிய பார்வை, வாழ்க்கைக்கான இழிவான தத்துவம், முழுவதும் உபயோகமற்ற வாழ்க்கை, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்—இந்த விஷயங்கள் அனைத்தும் மனிதனின் இதயத்தில் தீவிரமாய் ஊடுருவி, அவனுடைய மனசாட்சியைக் கடுமையாக வலுவிழக்கச் செய்து தாக்கியுள்ளன. இதன் விளைவாக, மனிதன் எப்பொழுதும் தேவனிடமிருந்து தூரத்தில் இருக்கிறான், எப்பொழுதும் அவரை எதிர்க்கிறான். மனிதனுடைய மனநிலை நாளுக்கு நாள் அதிகக் கொடூரமாகிறது. தேவனுக்காக எதையும் விருப்பத்துடன் விட்டுவிட, விருப்பத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிய, மேலும், விருப்பத்துடன் தேவனுடைய தோன்றுதலைத் தேட ஒருவர் கூட இல்லை. அதற்குப் பதிலாக, சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ், சேற்று நிலத்தில் மாம்சக் கேட்டிற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இன்பத்தைப் பின்தொடர்வதைத் தவிர மனிதன் வேறொன்றும் செய்வதில்லை. சத்தியத்தைக் கேட்டாலும்கூட, இருளில் வாழ்கிற அவர்கள் அதை கைக்கொள்ள யோசிப்பதுமில்லை, அவர் பிரசன்னமாவதைப் பார்த்திருந்தாலும்கூட தேவனைத் தேடுவதற்கு அவர்கள் நாட்டங்கொள்வதுமில்லை. இவ்வளவு ஒழுக்கம் கெட்ட மனிதகுலத்திற்கு இரட்சிப்பின் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவ்வளவு சீர்கெட்ட ஒரு மனிதகுலம் எவ்வாறு வெளிச்சத்தில் வாழ முடியும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்”). தேவனோட வார்த்தைகள் என்னோட துல்லியமான நிலைய வெளிப்படுத்திக் காட்டுச்சு. என் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சின்ன வயசுலருந்தே, “மனுஷன் மேல்நோக்கிப் போவதற்குப் போராடுகிறான்; தண்ணீரோ கீழ்நோக்கிப் பாய்கிறது” “உழைப்பின்றி ஊதியம் இல்லை,” மற்றும் “மற்றவர்களை விட சிறந்தவனாய் இரு, உன் முன்னோர்களுக்கு மரியாதையை ஏற்படுத்து” என்பதப் போன்ற விஷயங்கள எனக்குக் கத்துக் கொடுத்தாங்க. இந்த சாத்தானிய தத்துவங்கள் என்னோட இருதயத்துக்குள் ஆழமா வேரூன்றியிருந்துச்சு, வாழ்க்கையயும் மதிப்புகளயும் பத்திய ஒரு தவறான பார்வையத்தான் அது எனக்குள்ள ஏற்படுத்துச்சுச்சு. முன்னேற முயற்சிக்கறதும், மத்தவங்கள விட சிறந்து விளங்குவதும், நற்பெயரையும் அந்தஸ்தையும் அடைவதும்தான் மதிப்பு மரியாதயோடு வாழ ஒரே வழின்னுன்னு நான் நெனச்சேன். நல்ல பேரெடுக்க எந்தவிதமான கஷ்டத்தயும் நான் தாங்கிக்கத் தயாரா இருந்தேன். நான் தற்காப்புக் கலைப் பள்ளிக்கூடத்த நிறுவிக்கிட்டு இருந்தப்ப, குறிப்பா ஒவ்வொரு நாளும் களைப்படையச் செய்வதா இருந்துச்சு, நான் நெத்தி வியர்வை சிந்தி சம்பாதிச்ச பணத்த அரசாங்க அதிகாரிகளின் தயவு கிடைக்கறதுக்காக பயன்படுத்துனேன், தரைமட்டும் பணியறது, இனிமையாப் பேசுறதுன்னு கண்ணியம் இல்லாம வாழ்ந்துக்கிட்டிருந்தேன். கொஞ்சம் தவறு நடந்து பிரச்சனை ஏற்பட்டு துரதிர்ஷ்டம் வந்துருமோன்னு பயந்து, பண்டிகை நாட்கள்ல பல்வேறு துறை தலைவர்களுக்கு பரிசுகள அனுப்புவேன். சிக்கலான இந்த தனிப்பட்ட உறவுகள பராமரிப்பது சரீரம், மனசுன்னு ரெண்டையும் சோர்வடைய செஞ்சுச்சு, ஆனா நான் அதுல ஆழமா மூழ்கியிருந்தபடியினால, என்னால வெளிவர முடியல. என்னையச் சுத்தியிருந்தவங்க பெயரையும் அந்தஸ்தயும் பெற்றதுக்குப் பிறகு எல்லா வகையான மூர்க்கத்தனமான செயல்களயும் செய்யத் தொடங்கி, சீர்கேட்டுலயும், லஞ்சம் வாங்குறதுலயும், விபச்சாரிகளப் பாக்குறதுலயும், சூதாட்டத்துலயும், கட்டுப்பாடு இல்லாம ஈடுபட்டு வந்தாங்க. இப்படித்தான் சாத்தான் முழுசா ஜனங்களை சீர்கெடுத்து, தீங்கு செய்யுறான். நான் என் சொந்த கையால கட்டிய பள்ளிக்கூடத்த என்னோட மகனே பறிச்சுக்கிட்டதும் கூட, பெயர் மற்றும் ஆதாயத்தால மேற்கொள்ளப்பட்டதாலதான். இவைகளப் பெற்றுக்கறதுக்காக அவன் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்ப துச்சமா நெனச்சுட்டான். இது, சகோதரர்களும், அம்மாக்களும், மகன்களும் அரியணையக் கைப்பற்ற ஒருத்தரை ஒருத்தர் கொலை செஞ்சுக்குற பண்டைய ஏகாதிபத்திய குடும்பங்கள எனக்கு நினைவூட்டுச்சு. ஜனங்கள் தங்களோட மனிதத்தன்மையயும் பகுத்தறிவையும் இழந்து போகிற அளவுக்கு அவங்கள சீர்கேடுக்குறது சாத்தானோட தவறான உபதேசங்களும் பொய்களும்தான். அந்த நேரத்துலதான், பெயரும் ஆதாயமும் எப்படி சாத்தான் மனிதகுலத்தை பிணைக்குற கட்டுகளா இருக்குதுங்கறத நான் பார்த்தேன். பெயரையும் ஆதாயத்தையும் தேடி, நாம சாத்தானோட தத்துவங்களின்படி வாழ்ந்தா, நாம இன்னும் அதிகமா சீர்கேடு நிறைஞ்சவங்களா மாறுவோம், நம்ம வாழ்க்கை ரொம்ப வேதனையுள்ள ஒன்னா மாறும். பெயர், ஆதாயம் அப்படிங்கற சேற்றுல நான் மூழ்கியிருந்தப்ப, தேவனோட வார்த்தைகள்தான், சத்தியத்தப் பின்தொடர்றதுதான் வாழ்க்கையில சரியான பாதைங்கறதயும், ரொம்ப அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைங்கறதயும் எனக்குக் காட்டுச்சு. ஆனா நான் சாத்தானிய தத்துவங்களால பிணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு கிடந்தேன், அதனால, பணம், நற்பெயர், அந்தஸ்து போன்ற இன்பங்களை நான் இழந்தப்போ, அத விட்டுவிடுவது எனக்குக் கடினமா இருந்துச்சு. நான் ரொம்பத் துன்பப்பட்டேன். அது எல்லாத்தையும் திரும்பப் பெற்றுக்க நான் ஒரு வழக்கை நடத்த விரும்பினேன். நான் ரொம்ப முட்டாளா இருந்தேன். நான் அந்த வழியில போயிருந்தா, நான் சாத்தானால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பேன், கடைசியில அதோடு சேர்ந்து நானும் அழிக்கப்பட்டிருப்பேன். கர்த்தராகிய இயேசு சொன்னார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?(மத்தேயு 16:26). உண்மதான். ஒருத்தர்கிட்ட எவ்வளவுதான் பணமும், அந்தஸ்தும் இருந்தாலும், அதை வச்சு சத்தியத்தையும் ஜீவனையும் வாங்க முடியாது! என் வாழ்க்கையோட பெரும்பகுதிய நான் செலவழிச்சு கட்டியெழுப்பிய உடைமைகளயும், நற்பெயரையும் அந்தஸ்தையும் நான் இழந்துபோயிருந்தேன், ஆனா இந்த அனுபவத்தின் மூலமா, இந்த விஷயங்கள் ஜனங்களுக்கு எப்படித் தீங்கு விளைவிக்குதுங்கறதயும், அவைகளப் பின்தொடர்வதுனால வரும் பயங்கரமான விளைவுகளையும் நான் பார்த்தேன். அதோடு கூட, சத்தியத்தப் பின்தொடர்வதுல உள்ள அர்த்தத்தயும் மதிப்பையும் நான் உணர்ந்துக்கிட்டு தேவனைப் பின்பற்றுறதுக்கும் ஒரு கடமையச் செய்யறதுக்கும் அவைகள விட்டுவிடக் கூடியவனா மாறுனேன். தேவன் என் மேல வச்சுருந்த அன்பும் இரட்சிப்பும் அதுதான். தேவனோட சித்தத்த நான் புரிஞ்சுகிட்ட பிறகு, என் மகனோடு எதுக்காகவும் நான் சண்டைபோட விரும்பல அவன் மேல வழக்கு தொடரவும் விரும்பல. தேவனோட ஆளுகைக்குக் கீழ்ப்படியறது, சத்தியத்தப் பின்தொடருவது, கடமையச் செய்யுறதுன்னு இதுலதான் நான் கவனமா இருந்தேன்.

அப்போதுலருந்து, நான் திருச்சபையில சுவிசேஷத்தப் பகிர்ந்து வந்திருக்குறேன், அதுக்கப்புறமா மத்தவங்களோட பாராட்டுதல் எனக்குக் கிடைக்கலேன்னாலும், என்னோட இருதயத்துல நான் ரொம்ப சமாதானமா உணருறேன் ஒவ்வொரு நாளும் நான் ரொம்ப திருப்தியா உணருறேன். தேவனை விசுவாசிக்கறதும் பின்பற்றுறதும் சிறந்த தெரிந்துகொள்ளுதல் அப்படிங்கறதயும், வாழுறதுக்குக்கான மிகச்சிறந்த அர்த்தமுள்ள வழி அப்படிங்கறதயும் என்னோட இருதயத்துல நான் உறுதியா நம்புறேன். தேவனுக்கே நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

நான் எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை விட்டு விட்டேன்?

நான் ஒரு ஏழ்மயான பின்தங்கின கிராமப்புற குடும்பத்தில பிறந்தேன். சிறு குழந்தையா இருந்தப்பவே, என்னோட அப்பா நான் கடினமா படிக்கணும், அப்பதான்...

சுவிசேஷத்தை நன்றாகப் பிரசங்கிப்பதற்கு பொறுப்பு முக்கியமானது

நான் எப்பவும் என் கடமைகள பெருசா எடுத்துக்காம அதிக முயற்சி செய்யாம இருந்தேன். நான் அடிக்கடி விஷயங்கள கவனமில்லாம செஞ்சேன். சுவிசேஷத்த...

தன்னிச்சையாக செயல்பட்டது எனக்குத் தீங்கு விளைவித்தது

2012 கடைசில, நான் திருச்சபைத் தலைவியா ஊழியம் செய்ய ஆரம்பிச்சேன். திருச்சபையில எல்லா திட்டங்களும் மெதுவா முன்னேற்றமடஞ்சிகிட்டு வந்ததையும்,...