கிழக்கத்திய மின்னல் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தோன்றலும் கிரியையுமா?

பிப்ரவரி 11, 2022

மிங்பியான்

சமீப காலங்களில், கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு சர்வவல்லமையுள்ள தேவனாக மனுவுருவாகி மறுபடியும் வந்துள்ளதாகக் கிழக்கத்திய மின்னல் வெளிப்படையாக சாட்சியளித்து வருகிறது. தேவனுடைய வீட்டில் ஆரம்பித்து சர்வவல்லமையுள்ள தேவன் பலலட்சம் வார்த்தைகளை வெளிப்படுத்தி நியாயத்தீர்ப்பின் கிரியைகளைச் செய்துவருகிறார். கிழக்கத்திய மின்னலின் தோற்றம் முழு மத உலகத்தையும் அசைத்திருக்கிறது, மேலும் தேவனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பலர் சர்வவல்லமையுள்ள தேவனின் பேச்சுகளைக் கேட்டு அவை தேவனுடைய குரல் என்று அறிந்துகொண்டுள்ளனர். சர்வவல்லமையுள்ள தேவன்தான் மறுபடியும் வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு என்று அவர்கள் உறுதியடைந்து ஒருவர் பின் ஒருவராக சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக வந்திருக்கின்றனர். கிழக்கத்திய மின்னல் தோன்றுவதை இந்த வேதாகம வசனம் நிறைவேறியுள்ளது: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27). இந்த “மின்னல்” தான் சத்தியம், தேவனுடைய வார்த்தை; “கிழக்கில் இருந்து தோன்றி” என்பதற்கு சத்தியம் சீனாவில் இருந்து வெளிவந்திருக்கிறது என்று அர்த்தம், “மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது” என்பதற்கு அது மேற்கை அடைந்திருக்கிறது என்று அர்த்தம்; “மனுஷகுமாரனுடைய வருகை” என்பது மனுவுருவான தேவன் தோன்றி கிழக்கில்—சீனாவில்—கிரியை செய்து இறுதியாக அவருடைய கிரியையை மேற்கிற்குள் விரிவாக்கியுள்ளார் என்பதைக் குறிக்கிறது. இந்த வார்த்தைகள் இப்போது நிறைவேறியுள்ளன. இருந்தாலும், சிசிபியின் பொய்களை நம்புவதாலும் போதகர்கள் மற்றும் மூப்பர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையைக் கண்டனம் செய்வதாலும், பல சகோதர சகோதரிகள் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியையை ஆராய்ந்து பார்க்கத் துணிவதில்லை. கிழக்கத்திய மின்னல்தான் மெய்யான வழியும் தேவனுடைய தோன்றலும் கிரியையுமாய் இருந்தால், சீன அரசும் சபைப் போதகர்களும் மூப்பர்களும் ஏன் அதைக் கண்டனம் செய்யவேண்டும் என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கிழக்கத்திய மின்னல் தான் உண்மையிலேயே மறுபடியும் வந்திருக்கும் கர்த்தராகிய இயேசுவின் தோன்றலும் கிரியையுமாக இருக்கிறதா? பின்வரும் ஐக்கியத்தில் நாம் அந்தத் தலைப்பில் கவனம் செலுத்துவோம்.

மெய்யான வழி பழங்காலத்தில் இருந்தே பாடுகளை அனுபவித்துள்ளது

கர்த்தராகிய இயேசு ஒருமுறை கூறினார் “இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள்(லூக்கா 11:29). “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்(யோவான் 3:19-20). இந்த உலகத்தின் தீமையையும் இருளையும் ஓர் அறுவை மருத்துவனின் துல்லியத்தோடு கர்த்தராகிய இயேசு அம்பலப்படுத்தி, மனுக்குலம் முழுவதும் சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழ்கிறது என்றும் தேவன் இருப்பதை அதனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் காட்டுகிறார். கிருபையின் காலத்தில், மனுக்குலத்தை மீட்பதற்காக, கர்த்தராகிய இயேசு தாமே மாம்சமாகி பூமியில் கிரியை செய்ய வந்தார். ரோம அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து யூத மதத் தலைவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தனர். மிகவும் சீர்கெட்டு பொல்லாதது ஆகிய மனுக்குலம் வெளிப்படையாகவே தேவனை மறுதலித்து எதிர்த்தது என்பது தெளிவாகிறது. இப்போது கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவன் வந்து மனிதன் முழு இரட்சிப்பை அடைய உதவுவதற்காக எல்லா சத்தியங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், அவர் மத உலகம் மற்றும் சீன அரசாங்கத்தினால் வெறியோடு கண்டனம் செய்யப்பட்டு, எதிர்க்கப்பட்டு, இந்தத் தலைமுறையினரால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். இது சரியாக கர்த்தராகிய இயேசுவின் இந்த வார்த்தைகளின் நிறைவேறுதல்தான்: “மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது(லூக்கா 17:24-25). சீன அரசு ஒரு நாத்திக அரசு. அதனுடைய முக்கிய சாராம்சமே தேவனை எதிர்ப்பதுதான். அதனால் சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபையை அது கண்டனம் செய்வதில் புதுமை ஒன்றும் இல்லை. இருந்தாலும், கர்த்தருடைய வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இன்றைய மத உலகின் போதகர்களும் மூப்பர்களும் சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றலையும் கிரியையையும் தேடி ஆராயாமல் அதற்குப் பதிலாக வெறியோடு ஏன் அவரை எதிர்த்துக் கண்டனம் செய்கிறார்கள்? இது கவனமாக ஆராயத் தகுந்தது ஆகும். உண்மையில், சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளிலும் கிரியையிலும் இருக்கும் அதிகாரத்தையும் வல்லமையையும் பார்த்த பல போதகர்களும் மூப்பர்களும் இருக்கின்றனர். இருந்தாலும், தேவன் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்த பலரும் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளில் இருந்து அவர்தான் உண்மையில் மறுபடியும் வருகை தந்துள்ள கர்த்தராகிய இயேசு என்று அறிந்து ஒவ்வொருவராக சர்வவல்லமையுள்ள தேவனின் முன்பாக வருவதைக் கண்டு மத உலகின் இந்தப் போதகர்களும் மூப்பர்களும் எல்லா விசுவாசிகளும் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றினால் ஒருவரும் இனிமேலும் தங்களைப் பின்பற்றவோ வணங்கவோ மாட்டார்கள் என்று பயந்து போய்விட்டனர். தங்கள் நிலையையும் பிழைப்பையும் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் “மெய்யான வழியைக் காத்து மந்தையைப் பாதுகாப்பதாக” நடிக்கின்ற அதேவேளையில் சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றலையும் கிரியையும் கண்டனம் செய்து, விசுவாசிகளை மெய்யான வழியை ஆராயவிடாமல் குறுக்கே நிற்கின்றனர். இந்த உண்மையில் இருந்து, தேவனின் இரு மனுவுருவெடுத்தலின் தோற்றம் மற்றும் கிரியையைக் கண்டனம் செய்த மத உலகம் மிகவும் இருண்டதாவும் தீயதாகவும் மாறிப்போய்விட்டதால் தேவனுக்கு எதிராகத் தன்னால் முடிந்த அளவு தன்னை நிறுத்திக் கொண்டதையும் பார்க்கிறோம். ஆகையால், தேவன் தம்முடைய கிரியைச் செய்ய இந்தப் பொல்லாத உலகத்திற்கு வரும்போது அவர் சாத்தானின் வல்லமைகளால் கண்டனம் செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றே ஆகும்.

ஆகவே மெய்யான வழியை நாம் ஆராயும்போது, மத உலகின் தலைவர்களிடம் இருந்து கண்டனத்தையும் எதிர்ப்பையும் சந்தித்தால் நாம் என்ன போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்? முந்திய நாட்களில் உள்ள பேதுரு, யோவான் மற்றும் பிற சீஷர்களைப் பற்றி நாம் சிந்தித்தால், கர்த்தராகிய இயேசுவைக் கண்டனம் செய்த மதத் தலைவர்களின் பொய்யை அவர்கள் கண்மூடித்தனமாக நம்பவில்லை. ஆனால் அவர்கள் தாழ்மையாக கர்த்தருடைய குரலைத் தேடி கவனித்தார்கள். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் சத்தியம் என்றும் தேவனுடைய குரல் என்றும் அவர்கள் அறிந்துகொண்ட போது, அவர்களால் தங்கள் கருத்துக்களை உதறித் தள்ளிவிட்டு கர்த்தரைப் பின்பற்ற முடிந்தது. முடிவில் கர்த்தருடைய இரட்சிப்பை அடைந்தார்கள். இது கர்த்தராகிய இயேசு கூறியது போலவேதான் உள்ளது, “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்(மத்தேயு 7:7). கிழக்கத்திய மின்னல்தான் மெய்யான வழி என்பதை அறிய விரும்பினால், நாம் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியை ஆராய்ந்து சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தியுள்ள வார்த்தைகளை வாசிக்க வேண்டும். விஷயத்தின் உண்மையை அறிய இதுதான் ஒரே வழி. போதகர்களும் மூப்பர்களும் கூறுவதை நாம் கண்மூடித்தனமாக நம்பினால், இயேசுவின் நாட்களில் சாதாரண யூத மக்கள் பரிசேயர்கள் சென்ற வழியிலேயே நடந்து கர்த்தராகிய இயேசுவை எதிர்த்து நிராகரித்தது போல நாமும் நடந்து மெய்யான வழியை ஆராயும் வாய்ப்பை இழந்து என்றென்றும் கர்த்தரின் வருகையை வரவேற்க முடியாமல் போய்விடுவோம்.

கிழக்கத்திய மின்னல்தான் மெய்யான வழி என்று நம்மால் எவ்வாறு உறுதியாக இருக்க முடியும்?

அப்படியானால் கிழக்கத்திய மின்னல்தான் மெய்யான வழி என்று நம்மால் எப்படி உறுதியாக இருக்க முடியும்? நாம் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளை வாசிப்போம். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “மெய்யான வழியைத் தேடுவதில் மிக அடிப்படையான கொள்கை எது? பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த வழியில் இருக்கிறதா இல்லையா என்பதையும், இந்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடாக இருக்கின்றனவா, யார் சாட்சி கொடுக்கக்கூடும், அது உனக்கு என்ன கொண்டு வரக்கூடும் என்பதையும் நீ பார்க்க வேண்டும். மெய்யான வழிக்கும் தவறான வழிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்கு அடிப்படை அறிவைத்தரும் பல அம்சங்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் மிகவும் அடிப்படையானது பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கூறுவதாகும். தேவன் மீதான ஜனங்களுடைய விசுவாசத்தின் சாராம்சமானது தேவனுடைய ஆவியானவரின் மீதான விசுவாசமாகும், ஏனென்றால் மாம்சமான தேவனில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசமும் கூட, தேவனுடைய ஆவியானவரின் உருவகமாக இந்த மாம்சத்தில் இருக்கிறது, அதாவது அத்தகைய விசுவாசம் இன்னும் ஆவியானவர் மீதான விசுவாசமாக இருக்கிறது. ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன, ஆனால் இந்த மாம்சம் ஆவியானவரிலிருந்து வந்தது, மேலும் வார்த்தை மாம்சமாகி விட்டதால், மனிதனது விசுவாசத்தில் தேவனின் உள்ளார்ந்த சாராம்சம் இன்னும்கூட இருக்கிறது. எனவே, இது மெய்யான வழியா இல்லையா என்பதை வேறுபடுத்துவதில், எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும், அதன் பிறகு இந்த வழியில் சத்தியம் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். சத்தியமானது இயல்பான மனிதத்தன்மையின் ஜீவ மனநிலையாக இருக்கிறது, அதாவது, தேவன் ஆரம்பத்தில் மனிதனை சிருஷ்டித்தபோது அவனுக்குத் தேவைப்பட்டது முழு மனிதத்தன்மை (மனித உணர்வு, நுண்ணறிவு, ஞானம் மற்றும் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை அறிவு ஆகியவை) ஆகும். அதாவது, இந்த வழி ஜனங்களை இயல்பான மனிதத்தன்மையுள்ள ஜீவிதத்திற்கு வழிநடத்திச் செல்லுமா இல்லையா என்பதையும் பேசப்படும் சத்தியம் இயல்பான மனிதத்தன்மையின் யதார்த்தத்திற்கு ஏற்ப தேவைப்படுகிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும், இந்த சத்தியம் நடைமுறையானதாகவும் உண்மையாகவும் இருக்கிறதா இல்லையா, இது மிகவும் சரியான நேரமாக இருக்கிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். அங்கு சத்தியம் இருந்தால், அது ஜனங்களை இயல்பான மற்றும் உண்மையான அனுபவங்களுக்கு வழிநடத்திச் செல்ல முடியும்; மேலும், ஜனங்கள் இன்னும் இயல்பாகி விடுகிறார்கள், அவர்களின் மனித உணர்வு இன்னும் முழுமையானதாகிறது, மாம்சத்தில் அவர்களின் ஜீவிதம் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு இன்னும் ஒழுங்காக மாறுகிறது, மேலும் அவர்களின் உணர்வுகள் இன்னும் இயல்பாக மாறுகின்றன. இதுதான் இரண்டாவது கொள்கை. வேறு ஒரு கொள்கையும் உள்ளது, அதாவது ஜனங்களுக்கு தேவனைப் பற்றிய அறிவு அதிகரித்து வருகிறதா இல்லையா, அத்தகைய கிரியையையும் சத்தியத்தையும் அனுபவிப்பது அவர்களுக்கு தேவன் மீதான அன்பைத் தூண்டி அவர்களை தேவனுடன் எப்போதும் நெருங்கி வரச்செய்யுமா இல்லையா என்பதாகும். இதில் இந்த வழி மெய்யான வழியா இல்லையா என்பதை அளவிட முடியும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்”).

மெய்யான வழியையும் பொய்யான வழியையும் வேறுபடுத்தும் மூன்று முக்கிய கொள்கைகள் உள்ளன என்று தேவனுடைய வாத்தைகள் தெளிவாகக் கூறுகின்றன. முதலாவதாக, அந்த வழியில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருக்கிறதா என்று பாருங்கள். தேவன் ஆவியானவராக இருக்கிறார், தேவன் மாம்சத்தில் கிரியை செய்தாலும், அவருடைய சாராம்சம் அவருடைய ஆவியாகவே இருக்கிறது, ஆகையினால் தேவனுடைய கிரியையும் ஆவியானவரின் கிரியையும் ஒன்றாகச் செல்ல வேண்டும். இரண்டாவதாக, அந்த வழியில் சத்தியம் இருக்கிறதா என்று பாருங்கள். தேவனுடைய வார்த்தை மட்டுமே சத்தியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும்; சத்தியமே நம் ஜீவனாக மாற முடியும், நம்முடைய நடத்தை, நம்முடைய ஒழுக்கம், மற்றும் தேவனை நாம் ஆராதித்தல் ஆகியவற்றை ஆளுகை செய்யும் கொள்கையும் அதுவே, மேலும் அது நம்முடைய சரியான மனிதத்தன்மையை நாம் மீட்டெடுக்க நமக்கு உதவவும் செய்யலாம். மூன்றாவதாக, அந்த வழி தேவனைப் பற்றிய அறிவை என்றென்றும் பெருகச் செய்ய ஜனங்களுக்கு உதவுகிறதா என்று பாருங்கள். ஏனெனில் தேவனுடைய கிரியை தேவனாலேயே செய்யப்படுகிறது, ஏனெனில் அவர் வெளிப்படுத்துவதெல்லாம் அவர் என்ன கொண்டிருக்கிறாரோ மற்றும் அவர் என்னவாக இருக்கிறாரோ என்பதுதான், மேலும் மனிதனை இரட்சிக்க அவர் ஒவ்வொரு முறையும் தோன்றி கிரியை செய்யும்போதும் அவர் மனிதனிடம் அவருடைய சித்தத்தைப் பற்றியும் அவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் கூறுகிறார்; நாம் எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவருடைய கிரியையை நாம் அனுபவிக்கிறோம், தேவனில் நம்முடைய விசுவாசம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ தேவனைப் பற்றிய நம்முடைய அறிவும் அவ்வளவு அதிகமாக வளர்கிறது.

உதாரணமாக, கர்த்தராகிய இயேசு தமது கிரியையைச் செய்வதற்காக வந்தபோது, அவர் மனிதனுக்கு மிக அதிகமான கிருபையை அளித்தார், அவர் வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கி பிசாசுகளைத் துரத்தினார், மேலும் அவர் மனுக்குலத்துக்கு மனந்திரும்புவதற்கேற்ற வழியைக் கொண்டுவந்தார். பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புவதையும், தன்னை நேசிப்பதைப் போல பிறனையும் நேசிப்பதையும், தன்னுடைய சிலுவையை சுமப்பதையும், பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் இருக்க வேண்டியதையும், ஏழு எழுபது தரம் மற்றவர்களை மன்னிப்பதையும், தன்னுடைய முழு இருதயத்தோடும் சிந்தையோடும் தேவனை நேசிப்பதையும், இது போன்ற பலவற்றையும் அவர் மனுஷனுக்குப் போதித்தார். கர்த்தராகிய இயேசுவின் போதனைகளில் இருக்கும் இந்த வார்த்தைகளை மனிதன் ஒருவனால் பேசி இருக்க முடியாது. கர்த்தராகிய இயேசு வந்து சத்தியத்தை வெளிப்படுத்தும் முன்னர், நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்களுக்கு எப்படி வாழ்வது என்பது மட்டுமே தெரிந்திருந்தது; மற்றவர்களை எப்படி நேசிப்பது மற்றும் மன்னிப்பது என்பது தொடர்பான சத்தியங்களைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் எதுவும் இருந்ததில்லை. ஆனால் கர்த்தரைப் பின்பற்றி அவருடைய போதனைகளைக் கடைப்பிடித்தபோது, அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் சத்தியம் என்றும் அது அக்காலத்து மக்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய பாதையைக் காட்டுகிறது என்றும் கண்டார்கள். கர்த்தராகிய இயேசுவின் கிரியை மூலம் தேவனுடைய மனநிலை இரக்கத்தாலும் கிருபையாலும் நிரம்பி வழிவதை மக்கள் புரிந்துகொண்டு கர்த்தரிடத்தில் திரும்புவதற்கு மனதுள்ளவர்கள் ஆனார்கள். அக்காலத்தில் கர்த்தராகிய இயேசுவின் கிரியையானது பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள், மற்றும் பரிசேயர்களின் தொடர் கண்டனம், எதிர்ப்பு, மற்றும் துன்புறுத்தலைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையிலும், கர்த்தாராகிய இயேசுவைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. இறுதியாக, இந்த மதத் தலைவர்கள் ரோம அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கர்த்தாரகிய இயேசுவை சிலுவையில் அறைந்தனர். இப்படிச் செய்வதன் மூலம் கர்த்தராகிய இயேசுவின் கிரியையை ஒழித்துவிடலாம் என்று அவர்கள் நம்பினார்கள். இருந்தாலும், தேவனை மனப்பூர்வமாக விசிவாசித்தவர்கள், அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் மூலம் அவருடைய கிரியை தேவனிடத்தில் இருந்தது வந்தது என்று கண்டு அக்காலத்து ரோம அதிகாரிகளும் மதத் தலைவர்களும் எவ்வளவு தூரத்துக்குத் துன்புறுத்திய போதும் விசுவாசம் பொங்கி வழியும் இருதயங்களோடு அவரைப் பின்பற்றி கர்த்தருடைய சுவிசேஷத்தைப் பரப்பினார்கள். இப்போது கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷமானது பிரபஞ்சம் மற்றும் உலகத்தின் மூலைமுடுக்கையெல்லாம் சென்றடைந்திருக்கிறது, மேலும் எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது. கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள் மற்றும் கிரியையின் பலனில் இருந்து அவருடைய கிரியை தேவனிடத்தில் இருந்து வந்தது என்றும் அதுவே மெய்யானவழி என்றும் நம்மால் பார்க்க முடிகிறது.

அது போலவே, சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியை மெய்யானவழியா இல்லையா என்பதை நாம் உறுதிசெய்ய விரும்பினால், சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையில் சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறதா, அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறதா, மேலும் அது தேவனைப் பற்றிய அதிக அறிவை அனுமதிக்கிறதா என்பதை நாம் பார்க்கலாம். கடைசி நாட்களில் சர்வவல்லமையுள்ள தேவன் வந்திருக்கிறார், மேலும் கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் பணியை அடிப்படையாகக் கொண்டு, சுத்திகரித்தலையும் முழு இரட்சிப்பையும் அடைய மனிதனுக்கு உதவி செய்வதற்காக எல்லா சத்தியங்களையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்; அவர் மனுஷனை நியாயந்தீர்த்து சுத்திகரிக்கும் கிரியையின் படியைச் செய்கிறார், மேலும் பாவம் செய்தல் பாவ அறிக்கை செய்தல் என்னும் சுழற்சியில் துன்பப்படும் ஒரு வாழ்க்கையில் இருந்து நம்மை இரட்சிக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நிச்சயமாக, தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனின் கிரியை முதன்மையாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதாகும். இந்த அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம், அவர் மனுஷனிடம் அதிக சத்தியத்தைக் கொண்டுவருகிறார், மேலும் கடைபிடிப்பதற்கான பல வழிகளையும் அவனுக்குச் சுட்டிக்காட்டுகிறார், இதன் மூலம் மனுஷனை ஜெயங்கொண்டு அவனது சொந்த சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை இரட்சிக்கும் அவரது நோக்கத்தை அடைகிறார். ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியைக்குப் பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை”). “இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)”). தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் இரகசியம், தேவனின் மனுவுருவெடுத்தலின் இரகசியம், மனுக்குலத்தின் எதிர்கால பலாபலன் மற்றும் சென்று சேருமிடம், எடுத்துக்கொள்ளப்படுதலின் அர்த்தம், கள்ளக்கிறிஸ்துக்களில் இருந்து உண்மையான கிறிஸ்துவை எப்படி வேறுபடுத்தி அறிவது, மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டது குறித்த சத்தியம், பாவத்தின் பிடியில் இருந்து எப்படி விடுபடுவது, எவ்வாறு தேவனுக்குப் பயந்து தீமையை விட்டு விலகுவது போன்ற சத்தியங்களை சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகள் நமக்குச் சொல்லுகின்றன. நம்முடைய தேவையின் அடிப்படையில் இந்த சத்தியங்கள் எல்லாம் தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை கிருபையின் காலத்தில் இருந்த சத்தியங்களை விட உயர்ந்தவை ஆகும். அவை நமக்கு அவருடைய நிர்வாகக் கிரியையைப் பற்றிச் சொல்வதோடு மட்டுமல்லாமல், ஆணவம், பொல்லாப்பு, சுயநலம், வஞ்சகம் மற்றும் அரக்கத்தனம் போன்ற நம்முடைய சாத்தானுக்குரிய மனநிலைகளையும் அம்பலப்படுத்துகின்றன. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சைக்கு உட்படுவதன் மூலம், தேவன் எவ்வாறு மனிதனுடைய சீர்கேட்டை வெறுக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம், எந்த ஒரு குற்றத்தையும் சகித்துக்கொள்ளாத தேவனுடைய நீதியுள்ள பரிசுத்தமான மனைநிலையை நாம் அறிந்துகொள்கிறோம், மேலும் நமக்குள் தேவனுக்குப் பயப்படும் ஓர் இருதயம் எழுகிறது. அதன் பின் நாம் எளிதில் பாவம் செய்து தேவனை எதிர்க்கத் துணிவதில்லை, நாம் நமது மாம்சத்தை விட்டுவிட்டு சத்தியத்தைக் கடைப்பிடிக்க விரும்புகிறவர்களாய் மாறுகிறோம், மேலும் நாம் படிப்படியாக ஓரளவுக்கு மனுக்குலத்தின் சாயல் உள்ளவர்களாக வாழத் தொடங்குகிறோம். நமக்குள் ஆழமாக வேரோடிக் கிடக்கும் சாத்தானுக்குரிய மனநிலைகளை தேவனுடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இல்லாமல் நம்மால் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது என்பதை உண்மையாகவே புரிந்துகொள்ளும் நிலைக்கு வருகிறோம்; நாம் மதத்தில் இருக்கும் மற்றவர்களைப் போலவே இருப்போம், நிரந்தரமாகப் பாவம் செய்வது அறிக்கையிடுவது என்ற சுழற்சிக்குள் மாட்டிக்கொள்வோம். கடைசிவரை தேவனை விசுவாசித்தாலும் கூட, நம்மால் தேவனிடத்தில் இருந்து முழு இரட்சிப்பையும் அடைய முடியாது. கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை அனுபவிப்பதன் மூலம், தேவனுடைய மனநிலையானது இரக்கமும் அன்பும் கொண்டது மட்டுமல்லாமல், அதைவிட மேலாக, அது நீதியுள்ளது, மகத்துவமானது, எந்த ஒரு குற்றத்தையும் சகித்துக்கொள்ளாதது என்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய மனநிலை இரக்கமும் அன்பும் கொண்டது அல்லது நீதியும் மகத்துவமும் உடையது என்பது ஒருபுறம் இருக்க, அது எப்போதும் மனுஷனுக்கான தேவனுடைய மாபெரும் இரட்சிப்பைக் கொண்டுள்ளது.

மேலும், அது தேவனுடைய கிரியை அல்லது மெய்யான வழியாக இருந்தால், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறது மற்றும் அது பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்பட்டிருக்கிறது, மேலும் எந்த ஒரு எதிரிப் படையும் தேவனுடைய கிரியையின் வழியில் குறுக்கே நிற்க முடியாது. 1991 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றி சர்வவல்லமையுள்ள தேவன் கிரியை செய்யத் தொடங்கியதில் இருந்தே, சீன அரசும் மத உலகமும் சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபையை எதிர்த்துத் துன்புறுத்துவதை நிறுத்தவில்லை. ஆனால் இந்த எதிரிப் படைகளாலும் தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷம் எந்த வகையிலும் தடைபடவில்லை, மேலும் இருபது ஆண்டுகள் என்னும் ஒரு குறுகிய காலவரையறையிலேயே, அது சீனாவின் முக்கியப் பகுதிகள் எங்கும் அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பரவியுள்ளது. சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளின் புத்தகமான மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை நீண்ட நாட்களாக ஆன்லைனில் கிடைக்கிறது, மேலும் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வெளிப்படையாகப் பிரசங்கிக்கப்பட்டு முழு மனுக்குலத்துக்கும் சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாட்களின் தேவனுடைய கிரியைக்கு சாட்சிப் பகரும் திரைப்படங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள், வரைபடங்கள் மற்றும் நகைச்சுவை உரையாடல்கள் மட்டுமல்லாமல் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்புக்கும் சிட்சைக்கும் உட்படுத்தப்பட்டு தங்கள் சீர்கேடான மனநிலைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு மாற்றம் அடைந்த அனுபவம் பெற்ற சகோதர சகோதரிகளின் அனுபவ சாட்சிகள் யாவும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. தேவனின் வருகைக்குக் காத்துக்கொண்டிருக்கும் பல மெய்யான விசுவாசிகள் தேவனுடைய குரலைக் கேட்டு இந்த அனுபவ சாட்சிகளைப் பார்த்திருக்கிறார்கள்—அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி பிரவேசித்துள்ளது. சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகள்தான் சபைகளுக்குப் பரிசுத்த ஆவியானவர் கூறியவைகள், மேலும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் மறுபடியும் வந்திருக்கும் கர்த்தராகிய இயேசு, அதாவது கிழக்கத்திய மின்னல்தான் மெய்யான வழி என்பதில் அவர்கள் உறுதியடைந்திருக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தின் கீழ் வந்திருக்கிறார்கள். இப்போது சிஏஜி சபைகள் உலகம் முழுவதிலும் பல நாடுகளில் நிறுவப்பட்டு வருகின்றன, மேலும் இது முற்றிலுமாக கர்த்தராகிய இயேசுவின் தீர்கக்ததரிசனத்தை நிறைவேற்றுகிறது: “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்(மத்தேயு 24:27).

சகோதர சகோதரிகளே, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியையின் பலனில் இருந்து, கிழக்கத்திய மின்னல்தான் பரிசுத்த ஆவியானவரின் கிரியை மற்றும் சத்தியத்தின் வெளிப்பாடு, மேலும் தேவனுடைய கிரியையை அனுபவிப்பதன் மூலம், தேவனைப் பற்றிய நமது அறிவு தொடர்ந்து வளரும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். கிழக்கத்திய மின்னல்தான் மெய்யான வழி, மறுபடியும் வந்துள்ள கர்த்தராகிய இயேசுவின் தோன்றலும் கிரியையுமாக இருக்கிறது. ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி தேவனால் ஆசீர்வதிக்கப்பட முடியுமா இல்லையா என்பது நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களில்தான் உள்ளது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது. அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது. அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்பவர்களும், அவரைத் தேடுபவர்களும், அவருக்காக தாகம் கொள்பவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இல்லாதவர்கள் பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்”). “கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது, மேலும் நீங்கள் வஞ்சகத்திற்கு பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக தூஷணம் செய்யும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீ இன்னும் நம்பினால், நீ இறுதியில் தண்டிக்கப்படுவாய் மற்றும் நீ ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பாய். இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் பேசப்படும் இத்தகைய சத்தியத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனின் இரட்சிப்புக்கு நீ தகுதியற்றவனாக இருக்கிறாய் அல்லவா? நீ தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்கு போதுமான பாக்கியம் இல்லாத ஒருவன் அல்லவா? அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாகக் கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் வாழ்வின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.

கிறிஸ்தவ சிந்தனை: கிறிஸ்தவம் ஏன் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது?

அநேக மக்கள் குழப்பமடைகிறார்கள்: கர்த்தரை நம்புபவர்கள் அனைவரும் பைபிளைப் படிக்கிறார்கள், அப்படியானால் கிறிஸ்தவத்தில் ஏன் பல பிரிவுகள் உள்ளன? விடை காண இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது

By Zhang Lan, South Korea “தேவன் அவரது மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்,@பின்னர் அதை எடுத்துக்கொண்டார், பின்னர் அவர் இஸ்ரவேலரை கிழக்கிற்கு...

ஆவணப்படம் | சர்வவல்லமையுள்ள தேவனின் தோன்றல் மற்றும் கிரியை (பகுதி ஒன்று)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு கூறினார், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது" (மத்தேயு 4:17). (© BSI)...

Leave a Reply