கடைசி நாட்களின் அடையாளம்: இரத்த நிற மலர் சந்திர கிரகணம் 2022 இல் தோன்றுகிறது

மே 3, 2022

ஆசிரியரின் குறிப்பு: சமீபத்திய ஆண்டுகளில், “இரத்த நிலவு” என்ற வான நிகழ்வு அடிக்கடி தோன்றியது. தொற்றுநோய்கள், பூகம்பங்கள் மற்றும் பஞ்சங்கள் போன்ற பல்வேறு பேரழிவுகள் மோசமடைந்து வருகின்றன. கடைசி நாட்களைப் பற்றிய வேதாகம தீர்க்கதரிசனங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளன, யேகோவாவின் மகத்தான மற்றும் பயங்கரமான நாள் நெருங்கிவிட்டது. பெரும் பேரழிவுகள் இப்போது நம்மீது வந்துள்ளன, எனவே கர்த்தருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க வேண்டும்? இந்த கட்டுரையில் பதில் உள்ளது.

தொடர்புடைய வல்லுநர்கள் கணித்தபடி, 2022 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி, வானத்தில் இரத்த நிற மலர் சந்திர கிரகணம் கண்ணுக்குத் தெரியும். உண்மையில், இரத்த நிலவுகள், சூப்பர்நிலவுகள் மற்றும் சூப்பர் இரத்த நிலவுகள் போன்ற அற்புதமான காட்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து தோன்றுகின்றன, எடுத்துக்காட்டாக 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டின் இரத்த நிலவுகள், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தோன்றிய நான்கு இரத்த நிலவுகளின் தொடர், சூப்பர் நீல இரத்த நிலவு 2018, இது 152 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி தோன்றிய சூப்பர் ரத்த ஓநாய் சந்திரன், ஒரு சூப்பர்மூன், ஒரு இரத்த நிலவு மற்றும் ஓநாய் சந்திரனின் மூன்று வானியல் காட்சிகளை மிகச்சரியாக இணைத்தது, மேலும் இது மிகவும் திகைப்பூட்டும் வானியல் அதிசயம் என்று பாராட்டப்பட்டது. மேலும், 2021 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி ஒரு அரிதான காட்சி தோன்றியது—முழு சந்திர கிரகணத்தின் போது ஒரு சூப்பர் இரத்த நிலவு தென்பட்டது.

இரத்த சந்திரன்களின் தோற்றம் வரவிருக்கும் அசாதாரண மற்றும் பெரிய நிகழ்வுகளை குறிக்கிறது என்று பல தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் கூறியுள்ளனர். இரத்த சந்திரன்களின் தோற்றமே யோவேல் 2:29-31 புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்று உறுதியாக நம்பும் பல வேதாகம வல்லுநர்களும் உள்ளனர். “ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். யேகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.” மேலும், வெளிப்படுத்துதல் 6:12 ல் இது பின்வருமாறு கூறுகிறது: “அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.” “பெரிதும் பயங்கரமுமான நாள்” யோவேல் புத்தகத்தில் தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் பேரழிவுகளைக் குறிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பேரழிவுகள் பெருமளவில் வளர்ந்து வருவதை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம், பூகம்பங்கள், பஞ்சங்கள், வாதைகள் மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. உலக நிலைமை கொந்தளிப்பில் உள்ளது மற்றும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து போர்களின் வெடிப்புகள், வன்முறை சம்பவங்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன; உலகின் வளிமண்டலம் வெப்பமடைந்து வருகிறது, மேலும் தீவிரமான வானிலை மற்றும் அனைத்து வகையான வானியல் அதிசயங்களும் எப்போதும் நிகழ்கின்றன. வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட கடைசி நாட்களின் அறிகுறிகள் ஒவ்வொன்றாக வெளிவந்தன, பெரும் பேரழிவுகள் வந்துவிட்டன. எனவே, நாம் எவ்வாறு தேவனை வரவேற்று அவருடைய இரட்சிப்பைப் பெற வேண்டும்? கர்த்தராகிய இயேசு சொன்னார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது(யோவான் 10:27). “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). இது வெளிப்படுத்துதலின் 2 மற்றும் 3 அதிகாரங்களில் பல இடங்களில் தீர்க்கதரிசனமாக கூறப்பட்டுள்ளது: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இந்த தீர்க்கதரிசனங்களிலிருந்து, தேவன் வார்த்தைகளை பேசுவார், மக்களை சுத்திகரிப்பதற்கும் இரட்சிப்பதற்கும், மக்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கும் கடைசி நாட்களில் ஒரு புதிய கட்ட கிரியையைச் செய்வார் என்பதையும் நாம் காணலாம். தேவனின் சத்தத்தைக் கேட்பதன் மூலமும், தேவனின் தோற்றத்தையும் கடைசி நாட்களின் கிரியையைத் தேடுவதன் மூலமும், கர்த்தராகிய இயேசுவின் வருகையை நாம் வரவேற்க முடியும், தேவனால் இரட்சிக்கப்பட்டு பூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பைப் பெறலாம், மேலும் தேவனுடன் ஒரு அழகான சென்றுசேரும் இடத்திற்குள் நுழைய முடியும். இல்லையெனில், நாம் தேவனின் இரட்சிப்பை இழப்போம், கடைசி நாட்களின் பெரும் பேரழிவுகளில் சிக்கி, அகற்றப்பட்டு தண்டிக்கப்படுவோம். இதைப் பற்றி தேவன் என்ன சொல்கிறார் என்பது இங்கே:

எல்லாவிதமான பேரழிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும்; எல்லா நாடுகளும், எல்லா இடங்களும் பேரிடர்களை அனுபவிக்கும்: கொள்ளைநோய், பஞ்சம், வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இந்தப் பேரழிவுகள் ஏதோ ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் நடப்பதில்லை, அவை ஓரிரு நாட்களுக்குள் முடிவடைவதுமில்லை; மாறாக அவை இன்னும் அதிகதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்து, மேலும் மேலும் கடுமையானதாகிவிடும். இந்த நேரத்தில் எல்லா விதமான பூச்சிகளால் உண்டாகும் கொள்ளை நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பும், நரமாமிசத்தை உண்ணும் நிகழ்வுகள் எல்லா இடங்களிலும் நிகழும். இதுவே எல்லா தேசங்கள் மற்றும் ஜனங்கள் மீதான என்னுடைய நியாயத்தீர்ப்பாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 65” என்பதிலிருந்து

இந்தப் பரந்த உலகில், மீண்டும் மீண்டும் பெருங்கடல்கள் நிலங்களுக்குள் பாய்கின்றன. நிலங்கள் பெருங்கடல்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சர்வத்தையும் ஆளுகிறவராகிய அவரைத் தவிர இந்த மனித இனத்தை வேறு எவராலும் வழிநடத்த முடியாது. தேவனையன்றி இந்த மனித இனத்திற்காக கிரியை செய்யவோ ஆயத்தங்களைச் செய்யவோ வலிமைமிக்க ஒருவரும் இல்லை. இந்த மனித இனத்தை ஒளியுள்ள சென்றுசேருமிடத்திற்கு வழிநடத்தக்கூடிய மற்றும் பூமிக்குரிய அநீதிகளிலிருந்து விடுவிக்கக்கூடிய ஒருவரும் இல்லை. மனிதகுலத்தின் எதிர்காலத்தைக் குறித்து தேவன் புலம்புகிறார்; மனிதகுலத்தின் வீழ்ச்சியைக் கண்டு துக்கப்படுகிறார் மற்றும் மனிதகுலம் படிப்படியாகச் சிதைவை நோக்கி அணிவகுத்து வருவதாலும், திரும்பி வராத பாதையில் செல்வதாலும் வேதனைப்படுகிறார். தேவனுடைய இருதயத்தை உடைத்து, பொல்லாங்கனைத் தேடுகிற அத்தகைய மனிதகுலம் எந்த திசையில் செல்லக்கூடும் என்று யாரும் சிந்தித்ததில்லை. இதனால் தான் என்னவோ தேவனுடைய கோபத்தை யாரும் உணர்வதில்லை. தேவனைப் பிரியப்படுத்த ஒரு வழியைத் தேடுவதில்லை. அவரிடம் நெருங்கிச் செல்ல முயற்சிப்பதில்லை. வருத்தத்தையும் வேதனையையும் யாரும் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. தேவனுடைய சத்தத்தைக் கேட்ட பிறகும், மனிதன் தனது சொந்த பாதையில் தொடர்கிறான்; அவரிடமிருந்து விலகிச் செல்கிறான்; அவருடைய கிருபையையும் பராமரிப்பையும் தவிர்த்து விடுகிறான்; அவருடைய சத்தியத்தைத் தவிர்க்கிறான்; தேவனின் எதிரியான சாத்தானுக்குத் தன்னை விற்க விரும்புகிறான். தேவனை நிராகரித்து பின் அதைக் குறித்து சிந்திக்காத இந்த மனிதகுலத்தை நோக்கி தேவன் எவ்வாறு செயல்படுவார் என்பது பற்றியும் மனிதன் தனது பிடிவாதத்தைத் தொடர்வது பற்றியும் எவரேனும் எதையேனும் சிந்தித்ததுண்டா? தேவனுடைய தொடர்ச்சியான நினைவூட்டல்களுக்கும் அறிவுரைகளுக்கும் காரணம், அவர் இதுவரை இல்லாத அளவில் மனிதனின் மாம்சமும் ஆத்துமாவும் தாங்க முடியாத ஒரு பேரழிவைத் தன் கைகளில் தயார் செய்து வைத்திருப்பதே என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்தப் பேரழிவு மாம்சத்தின் தண்டனை மட்டுமல்ல, ஆத்துமாவின் தண்டனையும் ஆகும். தேவனுடைய திட்டம் நிறைவேறும்போது, அவருடைய நினைவூட்டல்களும் அறிவுரைகளும் திருப்பி செலுத்தப்படவில்லையேல், எத்தகு ஆத்திரத்தை அவர் கட்டவிழ்த்துவிடுவார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினமும் இதுவரை அனுபவித்திராத அல்லது கேட்டிராத ஒன்று போல அது இருக்கும். எனவே நான் சொல்கிறேன், இந்த பேரழிவானது முன்னெப்போதும் நிழ்ந்திராததாகும். அது ஒருபோதும் மீண்டும் நிகழாது. ஏனென்றால் தேவனுடைய திட்டம் மனிதகுலத்தை ஒரு முறை மட்டுமே சிருஷ்டிப்பதும் ஒரு முறை மட்டுமே இரட்சிப்பதும் ஆகும். இதுவே முதலும் கடைசியுமாகும். எனவே, இம்முறை தேவன் மனிதனை இரட்சிக்க எடுத்துக்கொண்டுள்ள கடினமான நோக்கங்களையும் தீவிரமான எதிர்பார்ப்பையும் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்” என்பதிலிருந்து

தேவனுடைய கிரியையானது ஒரு பலம் வாய்ந்த அலை போல முன்னோக்கி சீறிப் பாய்கிறது. அவரை யாரும் தடுத்து நிறுத்த இயலாது. அவர் முன்னேறிச் செல்வதை யாரும் தடுக்க இயலாது. அவருடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேட்பவர்களும், அவரைத் தேடுபவர்களும், அவருக்காகத் தாகம் கொள்பவர்களும் மாத்திரமே அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ள இயலும். அப்படி இல்லாதவர்கள் பெரும் பேரழிவிற்கும் உரிய ஆக்கினைத்தீர்ப்பிற்கும் ஆளாவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

இன்றைய நற்செய்தி: நோவாவின் நாட்கள் இறுதி காலங்களில் நெருங்குகின்றன—தேவனின் தோற்றத்தை நாம் எவ்வாறு தேட வேண்டும்?

தேவனின் எச்சரிக்கை இங்கே. நோவாவின் நாட்களின் அறிகுறிகள் கடைசி நாட்களில் தோன்றின. ஆகவே, கடைசி நாட்களின் பேழைக்குள் நுழைய தேவனின் தோற்றத்தை நாம் எவ்வாறு தேட வேண்டும்? வழியைக் கண்டுபிடிக்க இந்த கட்டுரையைப் படியுங்கள்.

தமிழ் பைபிள் பிரசங்கம்: கர்த்தராகிய இயேசு எப்போது திரும்பி வருவார்? நாம எப்படி அவரை வரவேற்க முடியும்?

இதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள் “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்” மத்தேயு 24:36, கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிற செய்தி உங்களுக்குத் தெரியும்.

கிறிஸ்தவ பிரசங்கம்: பேரழிவுகள் நம்மீது உள்ளன—தேவனின் பாதுகாப்பைப் பெற அவரிடத்தில் மெய்யான மனந்திரும்புதலைக் கொண்டிருப்பது எப்படி?

இப்போதெல்லாம், தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் பலர் தொடர்ந்து...

Leave a Reply

2 கருத்துரைகள்

  1. கர்த்தரின் வருகை நிச்சயம் அதற்குரிய அடையாளங்கள் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது கர்த்தரின் வருகைக்கு ஆயத்தப் படுங்கள் பிறரை ஆயத்தபடுத்துங்கள்