மனம்திறந்து பேசப் பயப்படுவதற்குப் பின்னால் இருப்பது என்ன

ஜனவரி 21, 2024

2020 ஆம் வருஷம் மார்ச் மாதம் நான் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியய ஏத்துக்கிட்டு, சீக்கிரமா ஒரு கடமயச் செஞ்சேன். கொஞ்ச நாளுக்குள்ள், நான் சுவிசேஷ மூப்பரா தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனக்கு ரொம்ப உற்சாகமா இருந்திச்சி, நான் நெனச்சேன், “எனக்கு முன்னால ரொம்ப நாள தங்கள் கடமய செஞ்சிக்கிட்டிருந்த சகோதர சகோதரிகளுக்குக் பதிலா நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் சத்தியத்தத் தேடும் ஒரு திறமயான நபரா என் சகோதர சகோதரிகளுக்கு தெரிஞ்சேன்னு தோணுது. நான் என் கடமய நல்லா செய்யணும், அப்பதான் அவங்க ஒரு தவறான நபர தேர்ந்தெடுக்கலன்னு அவங்களால பாக்க முடியும்.” அதுகப்புறம், நான் சுறுசுறுப்பா பணிய தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். அது மோசமான நிலையில இருந்ததால, அவங்களோடு ஐக்கியப்பட உடனடியா தேவனுடய வார்த்தைய தேடி, நல்ல சுவிசேஷ அனுபவம் கிடச்ச உடன் அவங்களோடு தொடர்பு கொண்டேன். கொஞ்ச காலம் கழிச்சி, தங்கள் கடமைகள்ல செயலற்று இருந்த சில சகோதர சகோதரிங்க, சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிச்சாங்க, நான் நினச்சேன், “இந்தாப் பணியில எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் திறம இருக்கிறது போலத் தெரியுது. என் தலைவர்கள் இத அறிஞ்சா, நான் இதில நல்லா செய்றேன்னு என்ன உறுதியா வளர்ப்பாங்க.” இத மனதில கொண்டு நான் இன்னும் உற்சாகம் அடஞ்சி என் கடமயில இன்னும் ஊக்கம் அடஞ்சேன். அப்புறமா, சுவிசேஷப் பணி பலனளிப்பது உறுதியானப்ப, நான் அந்த நல்ல செய்திய குழுவுக்கு அனுப்பி, என்னுடய எல்லா சகோதர சகோதரிகளூம் என் கடமயின் நல்ல பலன பாப்பாங்கன்னு நம்பினேன். அப்பப்ப சகோதர சகோதரிகளின் மத்தியில என்ன வெளிக்காட்டிக்கவும் செஞ்சேன். அவங்க பணிய பத்தி அறிஞ்சிக்கிட்டதும், நான் முதல்ல அவங்களுக்கு ஏதாவது பிர்ச்ச்சினைகள் அல்லது கஷ்டங்கள் இருக்கான்னு கேட்டேன், அப்புறமா வேண்டும்னே சொன்னேன், “உங்க பிரச்சினைகளயும் கஷ்டங்களயும் தீர்க்கிறது மட்டுமில்லாம, ஏரளாமான மத்த பணிகளயும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு நாளும் நேரம் பாக்காம வேல செய்றேன், தூங்குறத்துக்கே தாமதமாயிருது.” நான் இப்படிச் சொன்னதும், சில சகோதர சகோதரிங்க சொன்னாங்க, “இதுவர எங்களுக்கு எதக் கஷ்டமும் இல்ல. நீங்க கடினமா உழைக்கிறீங்க சகோதரி.” அவங்க அப்படிச் சொன்னதால நான் சந்தோஷப்பட்டேன். நான் என் கடமையில ஒரு பாரம் கொண்டிருக்கேன், ஒரு விலைய கொடுக்க விரும்புறேன்னும், நான் ஒரு பொறுப்புள்ள நபர்னும் அவங்க நினைக்கணும்னு நான் உணர்ந்தேன்.

ஒரு நாள் ஒரு சகோதரர் தன் மனசில உள்ளதப் பேசி ஐக்கியப்பட எங்கிட்ட வந்தாரு. அவர் சொன்னாரு, “நான் என் கடமையில மக்கள என்ன பெருமயா பாக்க வைப்பதற்காக எப்பவும் முயற்சிசெய்றேன். பணிய கண்காணிக்கிறப்ப, நான் எப்பவும் ஒரு குழுத்தலைவர்ங்கற நிலையில இருந்து பேசும்போது என்ன பெருமய காட்டிக்கிறேன்….” அதக் கேட்டப்ப என் இருதயம் துணுக்கிட்டுது. நானும்கூட அப்படித்தானே இருக்கேன்? பணிய கண்காணிக்கறப்ப, நான் எப்பவும் எல்லாருக்கும் நான் இப்ப ஒரு சாதரண விசுவாசி இல்ல, ஒரு மூப்பர்னு தெரியப்படுத்த விரும்பினேன். சில சமயங்கள்ல நான் வேணும்னே ஏராளமான வேலைக்கு நான்தான் பொறுப்புன்னும் வேல அதிகமா இருக்கிறதுனால தாமதமாத்தான் தூங்க முடியுதுன்னும் குறிப்பிட்டேன். எனக்கு ஒரு பாரம் இருக்குதுன்னும், என் கடமையில பொறுப்புணர்வு இருக்குதுன்னும் மத்தவங்க பாக்கணும்னு நான் விரும்பினேன். இதில, மத்தவங்க என்ன பெருமையா பாக்கணும்னு என்ன நான் முன்னிறுத்தினேன். நான் மனசு விட்டுப் பேசி இந்த நிலைக்கு இணைஞ்சி ஒரு தீர்வக் காண ஐக்கியப்படணும்னு நான் விரும்பினேன். ஆனா அப்புறமா நெனச்சேன், “இப்ப நான் சுவிசேஷ மூப்பர். என் சீர்கேட்ட பத்தி நான் இப்ப வெளிப்படயா பேசினா, இந்த சகோதரர் நான் ரொம்ப சீர்கேடானவன்னும் அந்தஸ்துக்கு முன்னுரிம கொடுக்கிறேன்னும் உணர மாட்டாரா? என்னை பத்தி இவருக்கு ஒரு மோசமான எண்ணம் ஏற்படாதா? அதுக்கப்புறம் நான் கட்டி வச்சிருக்கிற நல்ல பிம்பம் போயிடுதா.” இத நினச்சி, நான் வெளிப்படைய பேச வேண்டாம்னு முடிவு செஞ்சேன், அதனால் இப்படிச் சொல்லி அவர தேற்றினேன், “அது சரி, எங்கிட்டயும் சீர்கேடு இருக்கத்தான் செய்யுது.” அப்புறம் ஐக்கியப்பட்டு சில வார்த்தைகளச் சொன்னேன், அவ்வளவுதான்.

இன்னொரு தடவ, நான் பொறுப்பில இருந்த ஒரு குழு, ஒரு குழுத்தலைவர தேர்ந்தெடுத்திச்சி, நான் நெனச்சேன், “ஏற்கெனவே ஒரு குழுத் தலைவர் பணிக்குப் பொறுப்பா இருக்கிறதுனால நான் அதக் கண்காணிக்கத் தேவ இல்லன்னு நெனச்சேன்.” பின்னால, அந்தக் குழு பணியப் பத்தி விவாதிக்கும்போது, நான் அதக் கவனமா கேக்கல. அவங்க கூட்டங்கள்ல கூட நான் அக்கற இல்லாம இருந்தேன். அப்படியே ஒரு மாசம் தெரியாமலேயே கழிஞ்சி போச்சி, அந்தக் குழுவின் செயல்திறன் குறிப்பிடும்படியா குறஞ்சிடுச்சி. ஒரு கூட்டத்தில, தேவனுடய வார்த்தைகள அடிப்படையா கொண்டு சகோதர சகோதரிங்க எல்லாரும் பணி பற்றிய தங்கள் மனப்பாங்க சிந்திச்சுப் பாத்தாங்க, அதுமட்டுமல்லாம தங்கள் சீர்கேட்ட வெளிப்படுத்த மனந்திறந்து பேசினாங்க. நான்தான் பொறுப்பா இருந்தேன், அவங்க பணிய மேற்பார்வ செய்தப்ப அக்கற இல்லாம இருந்தேன், அது அவங்க பணி திறன் கொறஞ்சு போக காரணமாயிருச்சி, ஆனா அதச் சொல்ல எனக்கு தைரியம் இல்ல ஏன்னா நான் என் கடமயில விடாமுயற்சியும் பொறுப்பும் உள்ள ஒருத்தின்னு அவங்க இருதயங்கள்ல பிம்பமா கட்டப்பட்டிருந்திச்சி, எல்லாருக்கும் என் மேல உயர்வான எண்ணம் இருந்துது. நான் வெளிப்படையா பேசினா என் சகோதர் சகோதரிகளுக்கு என்ன பத்திய கருத்து உருவாகும். நான் அக்கற இல்லாம என் கடமயில பொறுப்பில்லாம இருந்தேன்னு அவங்க நினைப்பாங்க. என் தலைவர்களுக்குத் தெரிஞ்சிதுன்னா, அவங்களுக்கு என்ன பத்திய மோசமான மதிப்பீடு உருவாகி என்ன பணிநீக்கம் செய்யலாம். அது நம்பமுடியாத அளவுக்கு சங்கடமாக இருக்கும். இந்த நேரத்தில, தலைவர் நான் ஐக்கியப்பட விரும்புறேனான்னு கேட்டார், எனக்கு குழப்பமா போயிருச்சி. நான் ஐக்கியப்பட விரும்புனேன், ஆனா நான் வெளிப்படயா பேசினா என் பிம்பம் கெட்டுப்போகுமேன்னு பயந்தேன், இருந்தாலும் நான் பேசலேன்னா என்ன மறச்சி தந்திரமா நடந்துக்கிறதாக இருக்கும். அப்ப நான் என்ன செய்றது? நான் ரொம்பவும் கவலைக்குள்ளேனேன். கடைசியா நான் நினச்சேன், “பரவாயில்ல, இப்ப நான் ஐக்கியப்படல்ல. குறைந்தபட்சம் இந்தக் கணத்த நான் கடந்து போவேன்.” கூட்டத்துக்கு அப்புறம் நான் ரொம்ப வருத்தமடஞ்சி குற்ற உணர்வுக்கு ஆளானேன். ஒரு பெரிய பாரம் என்ன கீழ அழுத்துறதா உணர்ந்தேன். அதனால தேவனிடம் ஜெபிச்சி கேட்டேன். என் சீர்கேட்ட வெளிப்படயா பேச நான் ஏன் பயப்படுறேன்? நான் ஏன் எப்பவும் வேஷம் போட்டுக்கிறேன், எப்பவும் ஏன் அந்தஸ்தயும் பிம்பத்தயும் முன்னிலைப்படுத்துறேன்?

பின்னால நான் தேவனுடய வார்த்தைகள்ல ரெண்டு பகுதிகள வாசிச்சி என்னைப் பத்தி கொஞ்சம் புரிதல அடஞ்சேன். தேவனின் வார்த்தை கூறுகிறது: “ஜனங்கள் எப்போதும் பொய்த்தோற்றத்தைப் புனைந்து கொள்ளும்போதும், எப்போதும் தங்களைப் பற்றிய உண்மையை மறைத்துக்கொள்ளும் போதும், தங்களைப் பிறர் உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக எப்போதும் நடிக்கும்போதும், தங்கள் குற்றங்களையும் குறைபாடுகளையும் பார்க்க முடியாதபோதும், எப்போதும் ஜனங்களுக்குத் தங்களுடைய சிறந்த பக்கத்தைக் காட்ட முயற்சி செய்யும்போதும் அது என்ன மனநிலையாக இருக்கிறது? இது அகந்தை, போலித்தனம், மாயம், இதுவே சாத்தானின் மனநிலை, இதுவே தீமையான ஒன்று. சாத்தானின் ராஜ்யத்தின் உறுப்பினர்களை எடுத்துக்கொள்ளுங்கள்: அவர்கள் எவ்வளவு தூரத்துக்குச் சண்டையிட்டு, பகைத்து அல்லது இரகசியமாகக் கொலை செய்தாலும் யாரும் அதை அறிவிக்க அல்லது வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஜனங்கள் தங்கள் பிசாசின் முகத்தைப் பார்ப்பார்கள் என்று பயப்படுகிறார்கள் மேலும் அதை மறைக்க அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். ஜனங்களின் மத்தியில் தங்களை மறைத்துக்கொள்ள தங்களால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் மக்களை நேசிக்கிறார்கள் என்றும், அவர்கள் எவ்வளவு தூரம் பெரியவர்கள், புகழ்பெற்றவர்கள் மற்றும் சரியானவர்கள் என்றும் கூறிக்கொள்ளுகிறார்கள். இதுவே சாத்தானின் சுபாவம். சாத்தானின் சுபாவத்தின் சிறப்பம்சம் தந்திரமும் மோசடியும் ஆகும். இந்த தந்திரம் மற்றும் மோசடியின் நோக்கம் என்ன? மக்களை ஏமாற்றி, அதன் சாராம்சத்தையும் உண்மை நிறத்தையும் அவர்களைப் பார்க்கவிடாமல் செய்து இவ்வாறு தன்னுடைய ஆளுகையை நீட்டிக்கும் நோக்கம்தான். சாதாரண ஜனங்களுக்கு இத்தகைய வல்லமையும் அந்தஸ்தும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்களும் கூட, மற்றவர்களிடம் தங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கவும், அவர்களைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டை மக்கள் கொண்டிருக்கவும், அவர்கள் தங்கள் இருதயத்தில் இவர்களுக்கு உயர் அந்தஸ்தைக் கொடுக்கவும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுவே சீர்கேடான மனநிலை என்பது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒருவரது நடத்தைக்கு வழிகாட்ட வேண்டிய கோட்பாடுகள்”). “ஒரு நேர்மையான நபராக இருக்க, நீ முதலில் உன் இருதயத்தை எல்லாரும் பார்க்கும்படியும், நீ நினைக்கும் எல்லாவற்றையும் பார்க்கும்படியும், உன் உண்மையான முகத்தைப் பார்க்கும்படியும் திறந்து வைக்க வேண்டும்; நீ அழகாகத் தோற்றமளிக்க உன்னை மாறுவேடமிட்டுக்கொள்ளவோ அல்லது பொதியில் மறைத்துக்கொள்ளவோ முயற்சிக்கக்கூடாது. அப்போதுதான் மற்றவர்கள் உன்னை நம்பி உன்னை நேர்மையானவனாகக் கருதுவார்கள். இதுவே, ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கான மிக அடிப்படையான பயிற்சியும் முன்நிபந்தனையுமாகும். நீ எப்போதும் பாசாங்கு செய்கிறாய், எப்போதும் பரிசுத்தம், நற்குணம், மகத்துவம் மற்றும் உயர்ந்த நல்லொழுக்க குணங்களைக் கொண்டிருப்பதாக நடிக்கிறாய். ஜனங்கள் உன் சீர்கேட்டையும் உன் தோல்விகளையும் பார்க்க நீ அனுமதிக்கிறதில்லை. நீ ஒரு தவறான தோற்றத்தை ஜனங்களுக்கு வழங்குகிறாய், அதனால் அவர்கள் உன்னை நேர்மையானவன், பெரியவன், சுய தியாகம் செய்பவன், பாரபட்சமற்றவன் மற்றும் சுயநலமற்றவன் என்று நம்புகின்றனர். இது வஞ்சனையானது. இது வஞ்சகமும் பொய்மையும் இல்லையா? சிறிது காலத்திற்குப் பிறகு மக்கள் உன் உண்மையான இயல்பைப் பார்க்க முடியாதா? எனவே, மாறுவேடம் போடாதே, உன்னைப் பொதியில் மறைத்துக்கொள்ளாதே; மாறாக, உன்னையும் உன் இருதயத்தையும் மற்றவர்கள் பார்க்கும்படி வெளிப்படுத்து. நீ உன் இருதயத்தை மற்றவர்கள் பார்க்கும்படி திறந்து வைக்க முடியுமானால், உன் நேர்மறையான மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தக் கூடுமானால்—அப்பொழுது நீ நேர்மையாக இருக்கிறாய் அல்லவா? மற்றவர்கள் பார்க்கும்படி நீ உன்னைவெளிப்படுத்த முடியும் என்றால், தேவனும் உன்னைப் பார்த்து, ‘நீ மற்றவர்கள் பார்க்க உன்னை வெளிப்படுத்தி விட்டாய், அதனால் நீ நிச்சயம் எனக்கு முன்பாகவும் நேர்மையானவன்’ என்று கூறுவார். மற்றவர்களின் பார்வையில் அப்படி இல்லாமல், நீ தேவனுக்கு மட்டுமே உன்னை வெளிப்படுத்தி, மற்றவர்களுடன் கூட்டாக இருக்கும்போது எப்போதும் பெரியவனாகவும் நல்லொழுக்கமுள்ளவனாகவும், நீதியுள்ளவனாகவும் தன்னலமற்றவனாகவும் நடிப்பாயானால், அப்பொழுது தேவன் என்ன நினைப்பார் மற்றும் சொல்வார்? அவர் இவ்வாறு கூறுவார்: ‘நீ உண்மையிலேயே ஏமாற்றுபவன்; நீ முற்றிலும் மாய்மாலக்காரன் மற்றும் அற்பமானவன்; நீ ஒரு நேர்மையான நபர் அல்ல.’ தேவன் உன்னை இவ்வாறு கண்டிப்பார்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கான மிக அடிப்படையான பயிற்சி”). தேவனுடய வார்த்தை துல்லியமா என் நிலைய வெளிப்படுத்திச்சி. நான் ஒரு சுவிசேஷ மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால, எனக்கு சாதாரண சகோதர சகோதரிகள விட அதிக செயல்திறனும் உயரமும் இருப்பதா நான் உணர்ந்தேன், அதனால எப்பவும் என நல்ல பக்கத்த எல்லாரும் பாக்கணும்னு விரும்புனேன். மத்தவங்க பார்த்திரக் கூடாதுன்னு என் சீர்கேட்டயும் குறைகளயும் மறச்சேன். என் கடமையில நான் திறம்படச் செய்யும் போது அது எடுத்துக்காட்ட விரும்புனேன். குழுவுக்கு என்னைப் பற்றிய செய்திகள் உடனுக்குடன் அனுப்புனேன், ஏன்னா அத சகோதர சகோதரிகளும், தலைவர்களும், உடன் ஊழியர்களும் பாக்கணும்னு விரும்புனேன். அதிகமான வேலைய கண்காணிக்கிறதனால எனக்கு நேரமே இல்லன்னு மத்தவங்கக்கிட்ட வேணும்னே சொன்னேன், அதனால என் கடமயில நான் எவ்வளவு பொறுப்பா இருக்கேன்னு அவங்களால பாக்க முடியும். நான் வெள்ள அடிச்சி என்ன மறச்சிக்கிட்டு, ஒரு நேர்மறயான, பொறுப்பான, சத்தியத்த தேடுறவள்ங்கற பிம்பத்த நிறுவ நினச்சேன். என் சகோதர சகோதரிங்க என்ன பெருமையோடு பார்க்கணுங்கறதுதான் என் நோக்கம். ஆனா உண்மையில நான் அப்படி இருக்கவேயில்ல. நான், என் கடமயில என்ன முன்னிலப்படுத்தி, அக்கற இல்லாம, நடைமுற வேலையச் செய்யாம ரொம்ப சீர்கெட்டவளா இருந்தேன், ஆனா நான் ஒருபோதும் மனதில் உள்ளத வெளிப்படுத்தி என் சீர்கேட்டையும் குறைபாடுகளயும் குறிச்சி ஐக்கியப்பட்டதில்ல, ஏன்னா, நான் அந்தஸ்துக்காக ஏங்குறவ, பொறுப்பில்லாதவன்னு என் சகோதர சகோதரிங்க அறிஞ்சிருவாங்க. அப்புறம் அவங்க இருதயங்கள்ல இருக்கிற நல்ல பிம்பத்த இழந்திடுவேன்னு நான் பயந்தேன். இதப் பத்தி சிந்திச்சதும் அருவருப்பா உணர்ந்தேன். போலியா நடிச்சி நான் மத்தவங்களோடு பழகினேன், என்ன மறச்சி அவங்கள என்னபத்தி பெருமையா எண்ண வச்சேன். இது தேவன் வெறுக்கும் ஓர் அகந்தயான, வஞ்சகமான, சாத்தானிய மனநில. நான் இதற்கு முன் சுவிசேஷ மூப்பராக சேவ செஞ்சத நினச்சிப் பாத்தேன், கூட்டங்களின் போது, அடிக்கடி சகோதர சகோதரிங்க சொல்றத கேட்டிருக்கேன், “ஒவ்வொருத்தருக்கும் சீர்கேடான சாத்தானிய மனநில இருக்கு, ஒவ்வொருத்தரும் அந்தஸ்த்ல ஆனந்தம் அடயுறாங்க. அந்தஸ்த அடஞ்சு அதப் பராமரிக்க நாம எல்லாரும் விஷயங்கள செய்ய முடியும்.” அந்த நேரத்தில, நான் நினச்சேன், “எனக்கு அந்தஸ்து இருந்தா, நான் நிச்சயமா அத தக்கவைக்க விஷயங்களச் செய்ய மாட்டேன்.” ஆனா உண்மைகளும் தேவனுடய வார்த்தயும் எனக்கு வெளிப்படுத்திச்சி. என் பிம்பத்தயும் அந்தஸ்தயும் தக்கவைக்க, நான் நடிச்சு என்ன வெள்ள அடிச்சேன், நான் குறிப்பா அகந்தயாகவும் ஏமாற்றுக்காரியாவும் இருந்ததப் பாத்தேன். நான் அம்பலப்படுத்தப் படாததனாலதான் நான் அந்தஸ்த தேடமாட்டேங்கற நம்பிக்க எனக்கு இருந்திச்சின்னு அப்பதான் என்னால பாக்க முடிஞ்சிது. நானும் சாத்தானால சீர்கெடுக்கப்பட்ட ஒரு நபர்தான், என்னிடம் முழுசா சாத்தானிய மனநிலைகள் இருந்துது, அப்புறமா, சத்தியத்தக் கடைப்பிடிச்சி தங்கள அம்பலப்படுத்துற நேர்மயான மக்களயே தேவன் விரும்புறார்ங்கறத நினச்சிப் பாத்தேன். நான் நடிச்சி, சத்தியத்தக் கடப்பிடிக்கலங்கறத உணர்ந்ததும், அசௌகரியமா உணர்றத என்னால தடுக்க முடியல. நான் சிந்தித்தேன், “நான் நேரமையான நபரா இருந்து என் சீர்கேட்ட ஒவ்வொருத்தர்க்கிட்டயும் அம்பலப்படுத்தணும்.”

சில நாள் கழிச்சி, சக ஊழியர் கூட்டத்தில, நான் என்ன மறச்சிக்கிட்டு, ஏமாத்தி, நடைமுறைப் பணியச் செய்யாம இருந்தங்கறத என்னை வெளிப்படுத்தி ஐக்கியப்பட்டு, ஒரு நேர்மையான திறந்த மனதுடய நபரா இருக்க விரும்பினேன். ஆனா ஐக்கியப்பட இருந்தப்ப நான் மீண்டும் தயங்கினேன். “நான் ஆராய்ந்து என்னை வெளிப்படுத்தினா சகோதர சகோதரிகள் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க? நான் மிகவும் கஷ்டப்பட்டு கட்டிய நல்ல பிம்பம் போயிடுமில்லயா? என் சகோதர சகோதரிங்க இதனால என்னை கீழானவளாக பாத்தா அது ரொம்ப சங்கடமா இருக்கும். மத்த சகோதர சகோதரிங்க முதல்ல ஐக்கியப்படட்டும், நான் கொஞ்ச நேரம் காத்திருக்கிறது நல்லது.” ஆனா நான் இப்படி நினச்சப்ப, அசௌகரியமா உணர்ந்தேன். நான் என்னுடைய சீர்கேட்ட வெளிப்படுத்த விரும்பல, ஆக இது இன்னும் நடிக்கிறதும் அந்தஸ்த தக்கவைக்க விரும்புறதும்தானே? எனக்கு உண்மையிலேயே போராட்டமா இருந்திச்சி. நான் பேசினா, மத்தவங்க என்ன மோசமா பாக்கலாம். நான் பேசலன்னா, எனக்கு குற்ற உணர்வா இருக்கும். நான் தேவனிடத்தில ஜெபிச்சேன், சத்தியத்தக் கடைப்பிடிக்க வழிகாட்டும்படி வேண்டுனேன். அந்த நேரத்தில, தேவனுடய வார்த்தைகளின் ஒரு பகுதிய பாத்தேன். “உண்மையில் பரிசேயர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களைச் சுற்றிப் பரிசேயர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்த ஜனங்கள் ஏன் ‘பரிசேயர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்? பரிசேயர்கள் எவ்வாறு விவரிக்கப்படுகிறார்கள்? அவர்கள் மாய்மாலக்காரர்கள், முற்றிலும் போலியானவர்கள், அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் வேடமிடுபவர்கள் ஆவர். அவர்கள் என்ன வேடமிடுகிறார்கள்? அவர்கள் நல்லவர்களாகவும், அன்பானவர்களாகவும், நேர்மறையானவர்களாகவும் இருப்பதாக நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையில் இப்படித்தான் இருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் மாய்மாலக்காரர்கள் என்பதை கருத்தில் கொள்கையில், அவர்களில் வெளிக்காட்டப்படுவதும் வெளிப்படுவதும் பொய்யானதாகும்; அது அனைத்தும் பாசாங்காகும், அது அவர்களின் உண்மையான முகம் அல்ல. அவர்களின் உண்மை முகம் எங்கே மறைந்துள்ளது? அது அவர்களின் இருதயங்களில் ஆழமாக மறைந்துள்ளது, மற்றவர்களால் அதை ஒருபோதும் பார்க்க முடியாது. வெளிப்புறத்தில் உள்ள அனைத்தும் நடிப்பு, அது அனைத்தும் போலியானது, ஆனால் அவர்களால் ஜனங்களை மட்டுமே முட்டாளாக்க முடியும்; அவர்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்தி அனுபவிக்கவில்லை என்றால், அப்போது அவர்களால் சத்தியத்தை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது, எனவே அவர்களின் வார்த்தைகள் எவ்வளவு இனிமையானவையாக இருந்தாலும், இந்த வார்த்தைகள் சத்தியத்தின் யதார்த்தமாக இல்லாமல் உபதேசத்தின் வார்த்தைகளாகவே இருக்கும். சிலர் உபதேசத்தில் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், மிக உயர்ந்த பிரசங்கங்களைப் பிரசங்கிக்கும் எவரையும் அவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகிறார்கள், அதன் விளைவாக சில ஆண்டுகளிலேயே அவர்களின் உபதேசம் இன்னும் அதிகமாக வளர்கிறது, அவர்கள் பலரால் போற்றப்பட்டு வணங்கப்படுகிறார்கள், அதன் பிறகு அவர்கள் தங்களையே உருமறைப்பு செய்து கொள்கிறார்கள், மேலும் அவர்கள் சொல்வதிலும் செய்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தி தங்களைக் குறிப்பாகப் பக்தியுள்ளவர்களாகவும், ஆவிக்குரியவர்களாகவும் காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களை உருமறைத்துக் கொள்ள இந்த ஆவிக்குரியக் கோட்பாடுகள் என்று அழைக்கப்படுகிறதைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள், அது ஜனங்களின் கருத்துகளுடன் பொருந்தக்கூடிய உண்மை போலத் தோன்றுகிற, ஆனால் சத்தியத்தின் எந்த யதார்த்தமும் இல்லாத காரியங்களாகும். ஜனங்களின் கருத்துகள் மற்றும் ரசனைகளுக்கு இணங்கக் கூடிய இந்த விஷயங்களைப் பிரசங்கிப்பதன் மூலம், அவர்கள் பலரையும் ஏமாற்றுகின்றனர். மற்றவர்களுக்கு அத்தகைய ஜனங்கள் மிகவும் பக்திநிறைந்தவர்களாக மற்றும் தாழ்மையானவர்களாகத் தோன்றுகிறார்கள், ஆனால் அது உண்மையில் போலியானதாகும்; அவர்கள் சகித்துக் கொள்பவர்களாக, பொறுமையுடையவர்களாக, அன்பானவர்களாகத் தோன்றுகிறார்கள், ஆனால் உண்மையில் அது பாசாங்கு ஆகும்; அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் அது உண்மையில் ஒரு நடிப்பாகும். மற்றவர்கள் அத்தகையவர்களைப் பரிசுத்தவான்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையில் போலியானதாகும். உண்மையிலேயே பரிசுத்தமான ஒருவரை எங்கே காணலாம்? மனிதனின் பரிசுத்தம் அனைத்தும் போலியானது. அது அனைத்தும் ஒரு நடிப்பு மற்றும் பாசாங்கு ஆகும். வெளிப்புறத்தில் அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவராகத் தோன்றுகிறார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் மற்றவர்கள் பார்க்கும்படி வெறுமனே நடிக்கிறார்கள். யாரும் பார்க்காத போது, அவர்கள் சிறிதளவும் விசுவாசமாக இருப்பதில்லை, அவர்கள் செய்யும் அனைத்தும் அக்கறையற்றவையாகும். மேலோட்டமாக, அவர்கள் தேவனுக்காகத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள் மற்றும் தங்கள் குடும்பங்களையும் தொழில்களையும் விட்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள் ரகசியமாக என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் சொந்தத் திட்டத்தை நடத்துகிறார்கள் மற்றும் திருச்சபையில் தங்கள் சொந்த செயல்பாட்டை நடத்துகிறார்கள், திருச்சபையில் லாபம் சம்பாதிக்கிறார்கள் மற்றும் தேவனுக்கு வேலை செய்கிறோம் என்ற போர்வையில் காணிக்கைகளை ரகசியமாகத் திருடுகிறார்கள்…. இந்த ஜனங்கள் நவீன பாசாங்குத்தனமான பரிசேயர்கள் ஆவர். இந்த ஜனங்களான பரிசேயர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்கள் அவிசுவாசிகளின் மத்தியிலிருந்து வெளிப்படுகிறார்களா? இல்லை, அவர்கள் அனைவரும் விசுவாசிகளின் மத்தியில் வெளிப்படுகிறார்கள். இவர்கள் ஏன் பரிசேயர்களாக மாறுகிறார்கள்? அவர்களை யாராவது அப்படி மாற்றி விட்டார்களா? இது தெளிவாக அப்படியில்லை. காரணம் என்ன? அது ஏனென்றால் அவர்களின் சாராம்சமும் சுபாவமும் இப்படித்தான் இருக்கிறது, அவர்கள் சென்ற பாதை இதற்குக் காரணமாகும். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிப்பதற்கும் திருச்சபையிலிருந்து லாபம் பெறுவதற்குமான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் சிந்தைகளையும் வாய்களையும் தேவனுடைய வார்த்தைகளால் ஆயுதபாணியாக்கி, போலியான ஆவிக்குரிய கோட்பாடுகளைப் பிரசங்கித்து, தங்களைப் பரிசுத்தமாக தொகுப்பு செய்து, பின்பு திருச்சபையிலிருந்து லாபம் ஈட்டும் நோக்கத்தை அடைய இதை மூலதனமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் வெறுமனே உபதேசங்களைப் பிரசங்கிக்கிறார்கள், ஆனால் சத்தியத்தை ஒருபோதும் நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. தேவனுடைய வழியைப் பின்பற்றாத போதிலும், வார்த்தைகளையும் உபதேசங்களையும் தொடர்ந்து பிரசிங்கப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் மாய்மாலமான பரிசேயர்கள் ஆவர். நல்லொழுக்கம் மற்றும் நன்னடத்தை என்று கூறப்படுவதும், மற்றும் அவர்கள் விட்டுக்கொடுத்ததும் ஒப்புக்கொடுத்ததுமான காரியமானது முற்றிலும் கட்டாயப்படுத்தப்பட்டவை ஆகும்; அவை அனைத்தும் அவர்கள் போட்டுக் கொள்ளும் வேடங்கள் ஆகும். அவை முற்றிலும் போலியானவை ஆகும்; அந்தச் செயல்கள் அனைத்தும் பாசாங்கு ஆகும். இந்த ஜனங்களின் இருதயங்களில் தேவன் மீது சிறிதளவு பயபக்தி கூட இல்லை, அவர்களிடம் தேவன் மீதான உண்மையான விசுவாசமும் இல்லை. அதற்கும் மேலாக, அவர்கள் விசுவாசமில்லாதவர் ஆவர். ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், அப்போது அவர்கள் இந்த மாதிரியான பாதையில் நடப்பார்கள், அவர்கள் பரிசேயர்களாக மாறுவார்கள். அது பயமுறுத்துகிறதாக இல்லையா? பரிசேயர்கள் கூடும் ஆவிக்குரிய இடமானது சந்தையாக மாறுகிறது. தேவனுடைய பார்வையில் இது மதமாகும்; அது தேவனுடைய திருச்சபை அல்ல, அது அவர் ஆராதிக்கப்படும் இடமும் அல்ல. இவ்வாறு ஜனங்கள் சத்தியத்தைப் பின்தொடரவில்லை என்றால், அவர்கள் தேவனுடைய பேச்சுக்களைப் பற்றிய எவ்வளவு எழுத்தியல்பான வார்த்தைகள் மற்றும் மேலோட்டமான உபதேசங்களினால் தங்களைத் சித்தப்படுத்திக் கொண்டாலும், அதனால் எந்தப் பயனும் இருக்காது(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஆறு குறிகாட்டிகள்”). தேவனுடய வார்த்தைகள வாசிச்சவுடன் நான் பயந்து உள்ளுக்குள் நடுங்கிக்கிட்டிருந்தேன். மத்தவங்க என்னப்பத்தி உயர்வா நினைக்கிறதுக்காக நான் எல்லாத்திலேயும் வேஷம்போட்டு நடிச்சேன், அதனால எல்லாரும் என்னுடய நல்ல பக்கத்தயே பாக்க முடிஞ்சிது. நான் என் குறைகள் ஒரு போதும் குறிப்பிடல அல்லது அதப் பத்தி மனந்திறந்து பேசல. எப்பவும் மக்களுக்கு போலி எண்ணங்கள ஏற்படுத்தி என் சகோதர சகோதரிகள குழப்பினேன். நான் பரிசேயர்களப் போலவே இருக்கலயா? பரிசேயர்கள் ஒவ்வொரு நாளும் தேவாலயத்தில மக்களுக்கு வேத வசனங்கள விளக்கி நாற்சந்திகள்ல நின்னு ஜெபிச்சாங்க. அவங்க தேவன நேசிச்சாங்க, பக்தியுள்ளவங்கன்னு எல்லாரும் நினச்சாங்க அவங்கள் நோக்கிப் பாத்து வணங்கினாங்க. ஆனா அவங்க தேவனுக்கு பயப்படவே இல்ல, அல்லது தேவன எல்லாத்துக்கு மேலாக எண்ணல, அல்லது தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியல. குறிப்பா கர்த்தராகிய இயேசு தோன்றி கிரிய செஞ்சப்ப, கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகள்ல அதிகாரமும் வல்லமையும் இருக்குதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிது, ஆனா தங்கள் அந்தஸ்தயும் வருமானத்தயும் தக்க வைக்க, அவங்க வெறியோடு தேவதூஷணம் சொல்லி, எதுத்து, தேவனுடைய கிரியய கண்டனம் செஞ்சாங்க. அவங்களோட வெளிப்புற செய்கைகள் போலியானவை, தங்கள வேஷமிட்டு மறைக்க பயன்படுத்தின விஷயங்கள், தோற்றத்தில தெய்வீகமா இருந்தாலும், அவங்க சாராம்சத்தில நயவஞ்சகமானவங்க, சத்தியத்த வெறுத்தாங்க. கர்த்தராகிய இயேசு பரிசேயர்கள எப்படி சபிச்சருங்கறது எனக்கு ஞாபாகத்தில இருக்கு, “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்(மத்தேயு 23:27-28). பின் நான் என்னப் பத்திச் சிந்திச்சேன். நானும் அப்படித்தான் இல்லயா? நான் ஒரு சுவிசேஷ மூப்பர் ஆகிட்டதால, வெளிப்பார்வைக்கு, நான் சீக்கிரமே எழுந்திருச்சேன், ரொம்ப நேரம் விழிச்சிருந்தேன், என்னுடய கடமயில செயலூக்கத்தோடு இருந்தேன், ஆனா இதெல்லாம் மாயை, மத்தவங்க பாக்குறதுக்கு ஒரு நடிப்பு. ஒரு தவறான நபர தேர்ந்தெடுக்கலன்னு மத்தவங்களுக்கு காட்டுறதுக்கு நான் செயலூக்கத்தோடு என் கடமயச் செஞ்சேன். என் சகோதர சகோதரிகளின் நிலைய தீர்க்கிறதுல நான் திறமையா இருந்தபோது, நான் உடனடியா குழுவுக்கு ஒரு செய்தி அனுப்புனேன் அல்லது என் சகோதர சகோதரிகளிடம் சொன்னேன், ஏன்னா நான் என் கடமயில திறமையா, பொறுப்பா இருக்கேன்னு என் தலைவர்களும் மத்தவங்களும் அறியணும்னு நான் விரும்புனேன். என் கடமய என்னுடய சொந்த உந்துதலோடும் நோக்கங்களோடும் செஞ்சேங்கறத நான் பாத்தேன். மத்தவங்க என்னைப் பத்தி உயர்வா நினைக்கணும்னு மட்டுந்தான் நான் விரும்புனேன். நான் எந்த நடமுற வேலைகளயும் செய்யலன்னு எனக்குத் தெளிவா தெரியும், அடிக்கடி படங்காட்டி, அந்தஸ்த தேடினேன், ஆனா நான் சீர்கேட்ட பத்தி குறிப்பிடவோ பேசவோ இல்ல. மனந்திறந்து பேச எனக்குப் பல வாய்ப்புகள் கிடச்சுது, ஆனா திரும்பத் திரும்ப நான் சத்தியத்தக் கடைப்பிடிக்கல, சத்தியத்தத் தேடி கடமைப் பொறுப்ப நிறைவேத்தும் ஒரு நபராக, என் சகோதர சகோதரிகள் தவறாகக் கருதி என்னை பாராட்டும்படி மோசடி செய்வதற்கு ஏமாற்றுவதையும், வேஷமிட்டு நடிப்பதையும் மறைப்பதையும் பயன்படுத்தினேன். மாயக்காரர்களாகிய பரிசேயர்களப் போல, மக்கள ஏமாத்தி, அவர்கள வென்றெடுத்து அவங்கள எனக்கு முன்னால கொண்டுவர விரும்பி நான் தேவன எதிர்க்கும் பாதயில நடந்தத கண்டேன். தேவன் பரிசேயர்கள் சபிச்சாரு. நான் மனந்திரும்பலேனா என்னையும் தேவன் வெறுத்து அகற்றுவாரு.

பின்னால, நான் தேவனுடய வார்த்தயின் இன்னொரு பகுதியப் படிச்சேன், “எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அது என்னவாக இருந்தாலும், அதைத் தீர்க்க நீங்கள் சத்தியத்தைத் தேட வேண்டும், எந்த வகையிலும் உன்னை மறைக்கவோ அல்லது பிறருக்காக பொய்யான முகத்தை அணிந்துகொள்ளவோ கூடாது. உன்னுடைய குறைபாடுகள், உன்னுடைய இல்லாமைகள், உன்னுடைய தவறுகள், உன்னுடைய சீர்கெட்ட மனநிலைகள்-அனைத்திலும் முற்றிலும் வெளிப்படையாக இரு, மேலும் அவை அனைத்தையும் பற்றி ஐக்கியம் கொள். அவற்றை உள்ளே வைக்க வேண்டாம். உன்னை எப்படி வெளிப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது சத்தியத்திற்குள் பிரவேசிப்பதற்கான முதல் படியாகும், மேலும் இது மேற்கொள்வதற்கு மிகவும் கடினமான முதல் தடையாகும். நீ அதை மேற்கொண்டவுடன், சத்தியத்திற்குள் பிரவேசிப்பது எளிதாக இருக்கும். இந்த நடவடிக்கை எடுப்பது என்பது நீ உன் இருதயத்தைத் வெளிப்படுத்தி உன்னிடம் உள்ள நன்மையான அல்லது தீமையான, நேர்மறையான அல்லது எதிர்மறையான அனைத்தையும் காட்டுவது; மற்றவர்கள் பார்க்கும்படியாகவும், தேவன் பார்க்கும்படியாகவும் உன்னை வெளிப்படுத்திக் காட்டுவது; தேவனிடத்தில் எதையும் மறைக்காமல், எதையும் மூடிவைக்காமல், மாறுவேடமிடாமல், வஞ்சகமும் தந்திரமும் இல்லாமல், இருப்பதைப்போலவே, மற்றவர்களிடம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது என்பதைக் குறிக்கிறது. இவ்வாறு, நீ வெளிச்சத்தில் வாழ்கிறாய், மேலும் தேவன் உன்னை கண்காணிப்பது மட்டுமல்லாமல், நீ கொள்கையுடனும் குறிப்பிட்ட அளவு வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுவதை மற்ற ஜனங்களாலும் கூட பார்க்க முடியும். உன் சொந்த நற்பெயர், சுயமரியாதை மற்றும் அந்தஸ்துக்காக நீ எதையும் மறைக்கவோ, எந்தவித மாற்றங்களைச் செய்யவோ அல்லது எந்தவிதத் தந்திரங்களையும் உபயோகிக்கவோ வேண்டியதில்லை, மேலும் நீ செய்திருக்கிற எந்த தவறுகளுக்கும் கூட இது பொருந்தும்; அத்தகைய அர்த்தமற்ற கிரியை தேவையற்றதாகும். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ நிம்மதியாகவும் சோர்வின்றியும், முற்றிலும் வெளிச்சத்திலும் வாழ்வாய். அப்படிப்பட்ட ஜனங்களால் மட்டுமே தேவனுடைய புகழைப் பெற முடியும். உன்னுடைய எண்ணங்களையும் யோசனைகளையும் எவ்வாறு களைந்துபோடுவது என்பதை நீ கற்றுக்கொள்ள வேண்டும். நீ செய்யும் எந்தெந்த செயல்கள் தவறாக இருக்கின்றன, மற்றும் தேவன் விரும்பாதவைகளாகிய உன்னுடைய நடத்தைகள் எவைகளாக இருந்தாலும், நீ உடனடியாக அவற்றை மாற்றியமைத்து, அவற்றைச் சரிசெய்யக் கூடியவனாய் இருக்க வேண்டும். அவற்றைத் சரிசெய்வதற்கான நோக்கம் என்ன? சாத்தானுக்குச் சொந்தமானவைகளான உனக்குள் உள்ள விஷயங்களை நிராகரித்து, அவற்றை சத்தியத்தால் மாற்றியமைக்கும்போது, சத்தியத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத் தீர்மானிப்பதும் ஆகும். நீ தந்திரம் மற்றும் வஞ்சகம் போன்ற உன்னுடைய சாத்தானிய சுபாவங்களைச் சார்ந்திருந்ததுண்டு, ஆனால் இப்போது நீ அப்படி இல்லை; இப்போது, நீ விஷயங்களைச் செய்யும்போது, நேர்மை, தூய்மை மற்றும் கீழ்ப்படிதல் போன்ற மனநிலையுடன் செயல்படுகிறாய். நீ எதையும் மறைத்துவைக்கவில்லை என்றால், நீ தவறான தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை என்றால், ஒரு பாசாங்குக்காரனாக, ஒரு பொய்யான தோற்றத்தை உடையவனாக இல்லையென்றால், நீ சகோதர சகோதரிகளுக்கு உன்னை வெளிப்படையாக வைத்தால், உன்னுடைய உள்ளான எண்ணங்களையும் சிந்தனைகளையும் மறைக்காமல் இருந்து, அதற்குப் பதிலாக, உன்னுடைய நேர்மையான நடத்தையை மற்றவர்கள் பார்க்கும்படி அனுமதிக்கும்போது, சத்தியம் படிப்படியாக உன்னில் வேரூன்றும், அது மலர்ந்து, கனி தரும், அது கொஞ்சம் கொஞ்சமாக பலன் தரும். உன்னுடைய இருதயம் அதிகமாக நேர்மையாகவும், அதிகமாக தேவனைச் சார்ந்ததாகவும் இருந்தால், நீ உன் கடமையைச் செய்யும்போது தேவனுடைய வீட்டின் நலன்களைப் பாதுகாக்க உனக்குத் தெரியுமானால், மேலும் நீ இந்த நலன்களைக் காத்துக்கொள்ளத் தவறும்போது உன்னுடைய மனசாட்சி கலங்கினால், சத்தியம் உன்னில் விளைவை ஏற்படுத்தியிருக்கிறது, மேலும் அது உன்னுடைய வாழ்க்கையாக மாறியிருக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனுடய வார்த்தையில இருந்து நான் என்ன புரிஞ்சிக்கிட்டேன்னா, வேஷமிட்டு நடிக்கிறதோ, அல்லது தவறான எண்னங்கள ஏற்படுத்துறதோ இல்ல, என் சொந்த சீர்கேட்டயும் குறைகளயும் வெளிப்படுத்தி, உண்மையான சுயத்தக் காட்டி, என் சகோதர சகோதரிகள என் இருதயத்துள் பார்க்க அனுமதிப்பதே ஒரு நேர்மையான நபருக்குத் தேவைப்படுவது. என்னப் பத்தி மத்தவங்க உயர்வா நினைக்கிறதுக்காக, எப்படி நான் எப்பவும் வேஷமிட்டு நடிச்சி என்ன மறச்சிக்கிட்டேங்கறதுயும், கூட்டங்கள்ல என் சீர்கேட்ட பத்தி வெளிப்படுத்த நான் எப்படி துணியாம இருந்தேன்னும் நான் சிந்திச்சிப் பாத்தேன். நான் ஒரு மோசடிக்காரியாக இருந்தேன், தேவனால் வெறுத்து அருவருக்கப்படுபவளாகக் காணப்பட்டேன், மேலும் இப்படி வாழ்றது களைப்பூட்டுறது, வேதனையானது. இத உணர்ந்ததும் தேவனிடம் ஜெபிச்சேன், “தேவனே! என்னை மக்கள் பெருமையா பாத்து பாராட்ட வைக்க நான் வேஷமிட்டு நடிச்சேன். இது உமக்கு வெறுப்ப தருவதுன்னு எனக்குத் தெரியும். இப்போ, என்னை நானே வெறுக்கிறேன். தேவனே, நான் சத்தியத்தக் கடைப்பிடிச்சி ஒரு நேர்மயான நபராக இருக்க விரும்புறேன். தயவுசெஞ்சி எனக்கு வழிகாட்டும்!” ஜெபிச்ச பிறகு, எவ்வாறு நான் உண்மையான பணிய செய்யலங்கறத பற்றி ஐக்கியப்பட்டு எப்படி நடிப்பிலும் ஏமாற்றுவதிலும் ஈடுபட்டேங்கறத அம்பலப்படுத்தினேன். ஐக்கியத்துக்குப் பிறகு என் இருதயத்தில இருந்த பாரம் நீங்கி நான் நிம்மதிய உணர்ந்தேன். என் சகோதர சகோதரிகள் என்ன தாழ்வா பாக்கல. என் தலைவர்கள் என்ன கண்டிக்கவோ கையாளவோ இல்ல; மாறா, அவங்க பொறுமயா ஐக்கியப்பட்டு எப்படி நடமுற பணிய செய்யணும்னு வழிகாட்டினாங்க. சத்தியத்தக் கடைப்பிடிச்சி நேர்மயான நபரா இருக்குறதால சமாதானமும் பாதுகாப்பும் கிடைக்கிறத நான் உணர்ந்தேன். என் பிரச்சினைகளும் குறைகளும் அம்பலப்படுத்தப்பட்டாலும், என் சகோதர சகோதரிகளின் ஐக்கியத்தாலும் உதவியாலும், சரியான நேரத்தில என் வழிகள மாத்தி என் கடமய சிறப்பா செய்ய முடிஞ்சிது, இது எனக்கு நன்மையா இருந்திச்சி.

அதன் பிறகு, என் சகோதர சகோதரிகளிடம் நான் தொடர்ந்து மனந்திறந்து பேசி ஐக்கியப்பட்டேன், என் சீர்கேடான மனநிலய வெளிப்படுத்தி வேஷம்போட்டு நடிப்பத நிறுத்தினேன். ஒருமுற ஒரு சகோதரர் எனக்கு அனுப்பியிருந்த செய்தியில், “நீங்க ஒரு சுவிசேஷ மூப்பரா இருக்கீங்க. நாங்க பிரசங்கிக்கும்போது நீங்க ஏன் வந்து சுவிசேஷத்த ஏற்கக்கூடியவங்களோடு ஐக்கியப்படக் கூடாது? இது நீங்க செய்ய வேண்டியதுன்னு தோணுது” ண்ணு இருந்தது. அந்தச் செய்தியப் பாத்து நான் ரொம்ப கோபப்பட்டேன். நான் நினச்சேன், “நீங்க வெறும் ஒரு குழுத் தலைவர்தான். எனக்கு கட்டளையிட உங்களுக்கு எது உரிமை தருது? இது நீங்க என்ன விசாரிப்பது போல இருக்குது. நீங்க நான் ஓய்வில்லாம பணிசெய்றேனா அல்லது எனக்கு நேரம் இருக்குதான்னு கூட கேக்கல.” நான் பதிலளித்தேன், “சுவிசேஷப் பணி என்ன மட்டும் நம்பி இருக்க முடியாது. அத செய்ய எல்லாரும் ஒத்துழைக்கணும்.” அதுக்குப் பிறகு எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்வு ஏற்பட்டிச்சி, ஏன்னா நான் ஒரு ஆணவமான மனநிலைய காட்டுறதா நான் உணர்ந்தேன். என் சகோதரர் எங்கப் பணிய கருத்தில் கொண்டு உண்மைகள பேசுறார். நான் அத ஏத்துக்கிட்டிருக்கணும். அத நிராகரிச்சதோட அவருக்கு கோபமா பதிலளிச்சேன். இது நியாமற்றதில்லயா? நான் செஞ்சது அவரக் காயப்படுத்தி கட்டுப்படுத்தியிருக்கும். நான் அவருக்கிட்ட மனம் திறந்து பேசி என் பிரச்சினைய ஒத்துக்க விரும்புனேன், ஆனா என் பிம்பத்த என்னால் விடமுடியாது. முன்னால இந்த சகோதரர் மேல் எனக்கு நல்ல எண்ணம் இருந்தது. நான் அவர்க்கிட்ட மனந்திறந்து பேசினா அவர் என்ன தாழ்வா பாப்பாரா? இத நினைக்கும்போது, மீண்டும் நான் வேஷமிட்டு நடிப்பதற்கு விரும்பினேன் என்பத உணர்ந்தேன். நான் தேவன நோக்கி ஜெபித்தேன், என் சுயத்த விட்டு சத்தியத்த கடைப்பிடிப்பதற்கு வழிகாட்டும்படி அவரிடம் வேண்டினேன். பின், நான் என்னுடய சீர்கேட்ட பத்தி என் சகோதரரிடம் மனம்திறந்து பேசினேன். அவர், தான் பேசிய போது அவருக்கு ஆணவ மனநிலை இருந்ததாகவும் என் உணர்வுகள கருதலைன்னும் பேசி, மாறவிரும்புவதாகக் கூறினார். தேவனுடய வார்த்தைகளின் வழிகாட்டலில் நாங்க எங்களைப் பத்தியும், ஒரு நேர்மயான நபரா நடப்பது பத்தியும் சிந்திச்சோம், இது எனக்கு குறிப்பா நிம்மதிய கொடுத்திச்சி.

இந்த அனுபவத்தின் மூலமா, கடைசி நாட்கள்ல தேவனால வெளிபப்டுத்தப்பட்ட வார்த்தைகள் மக்கள் உண்மயில சுத்திகரிச்சி ரட்சிக்கும்னு நான் உணர்ந்தேன். தேவனுடய வார்த்தையின் வெளிப்பாடு இல்லாம இருந்திருந்தா, நான் எப்போதுமே நடிச்சி என்ன மறச்சிக்கிட்டிருந்திருப்பேன், என் சொந்த சீர்கேட்டயும் குறைகளயும் உண்மயிலேயே புரிஞ்சிக்க முடிஞ்சிருக்காது, நான் மாறியிருக்க முடியாது. தேவனுடய வழிகாட்டலுக்கும் ரட்சிப்புக்கும், சத்தியத்தக் கடைப்பிடிச்சி ஒரு நேர்மயான நபராக இருக்கும்போது அமைதியும் நிம்மதியும் கிடைக்குங்கறது உணரவச்சதுக்காகவும் தேவனுக்கு நன்றியுடயவளா இருக்கேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

சாலையில் ஒரு முட்கரண்டி

நான் கிராமப்புறத்துல பிறந்து ஏழ்மையான குடும்பத்துல வளர்ந்தேன். என்னோட பெற்றோர் பாமர விவசாயிகளா இருந்தாங்க, அவங்க ரொம்ப கொடுமைய...

கஷ்டமான சூழலின் சோதனை

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன்....