பிறர் காண்பதற்காகக் கடமையைச் செய்வதனால் உண்டாகும் பின்விளைவுகள்

ஜனவரி 7, 2023

2021 ஆம் ஆண்டு, நான் பல திருச்சபைகளின் பணிக்குப் பொறுப்பாக இருந்தேன். அவை சமீபத்திலேயே ஸ்தாபிக்கப்பட்டிருந்தன, அவற்றின் பணிகள் அனைத்தும் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்தன. பணியை வழிநடத்த எங்கள் மேல்மட்டத் தலைவர் அடிக்கடி வர வேண்டியிருந்தது, மேலும் பிரச்சனைகள் கண்டறியப்படும்போது அவர் சரியான நேரத்தில் ஐக்கியத்தைக் கொடுப்பார். குறிப்பாக சுவிசேஷப் பணி குறித்து அவர் மிக அதிகமாக் கேட்டார். பிற திருச்சபைகளின் சுவிசேஷப் பணி மிகவும் நன்றாக நடந்ததைக் கண்டு, மெய்யான வழியை ஆராய்ந்து ஒவ்வொரு மாதமும் அவர்கள் திருச்சபைகளில் பலர் இணைந்தனர், நான் உண்மையிலேயே பொறாமைப்பட்டேன். மேல்மட்டத் தலைவருக்கு சுவிசேஷப் பணிதான் மிகவும் முக்கியமானது அந்த அம்சத்தில் நான் மிகவும் குறைவுபட்டே காணப்பட்டேன் என்று நான் நினைத்தேன். என்னால் அதைச் சிறப்பாகச் செய்ய முடியாமால், எங்கள் சுவிசேஷப் பணி தடைபட்டால், எனக்குத் திறமையில்லை என்றும், என்னால் வேலை செய்ய முடியவில்லை என்றும், என்னைப் பணி நீக்கம் செய்வதாகவும் தலைவர் சொல்வது உறுதி. ஆகையால் சுவிசேஷப் பணியில் நான் சிறிது காலத்திற்கு அதிக முயற்சி எடுத்தேன், காரியங்கள் எப்படி நடக்கின்றன என்பது குறித்து சகோதர சகோதரிகளிடம் அடிக்கடி விசாரித்தேன், தீர்வு காண்பதற்காகப் பிரச்சினைகளை அவர்களுடன் தொகைப்படுத்தினேன், ஆனால் நான் பிற பணிகளைக் குறித்து அதிகம் கேட்கவோ அல்லது பின்தொடரவோ இல்லை. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, எங்களுடைய சுவிசேஷப் பணியில் ஓரளவு நல்ல முடிவுகளைப் பெற்றோம். ஆனால் எங்களுடைய நீர்ப்பாய்ச்சும் பணியின் செயல்திறன் குறைந்து போனது. சில புதிய விசுவாசிகள் சிரமங்களை எதிர்கொண்டனர் அல்லது அவர்களுடைய போதகர்களால் தொந்தரவு செய்யப்பட்டனர், சரியான நேரத்தில் நீர்ப்பாய்ச்சுதலையும் ஆதரவையும் பெறாமல் இருந்தனர். அதனால் அவர்கள் எதிர்மறையாகி, கூடுகைகளில் கலந்து கொள்வதை நிறுத்தினர். இதைப் பார்த்து, எங்களிடம் நீர்ப்பாய்ச்சும் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருந்ததையும், அதனால் நாங்கள் சில புதிய விசுவாசிகளுக்கு நீர்ப்பாய்ச்சுகிறவர்களாக இருக்க பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் நான் யோசித்தேன். ஆனால் அப்போதுதான் அந்த நேரத்தில் மேல்மட்டத் தலைவர் முக்கியமாக சுவிசேஷப் பணியில்தான் கவனம் செலுத்தினார் என்பதும், பிற திருச்சபைகள் அனைத்தும் அந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டன என்பதும் எனக்குத் தோன்றியது. என்னால் நல்ல முடிவுகளைப் பெற முடியவில்லை என்றால், எனக்குத் திறமை இல்லை என்று தலைவர் நினைப்பது நிச்சயம். சுவிசேஷப் பணியில் என் ஆற்றலை மையப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதைக் கருத்தில் கொண்டு, புதியவர்களைப் பண்படுத்துவது குறித்து நான் அதிகமாகச் சிந்திக்கவில்லை. தலைவர் எங்கள் பணியைப் பின்னர் சரிபார்த்தபோது, சமீபத்திய மாதங்களில் நாங்கள் புதிய விசுவாசிகளுக்குப் பயிற்சி அளிக்கவில்லை என்பதையும், திருச்சபையின் புதிய உறுப்பினர்கள் சரியான நேரத்தில் நீர்ப்பாய்ச்சுதலைப் பெறவில்லை என்பதையும் கண்டறிந்தார். அவர் கோபமாக, “நாம் புதிய விசுவாசிகளைப் பண்படுத்த வேண்டும் என்பது தேவனுடைய வீட்டிற்கு மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறது. நமது பணியின் மிகவும் முக்கியமான ஒரு பகுதியை நீங்கள் நிறுத்திவிட்டீர்கள்—ஏன்?” என்று சொன்னார். நீர்ப்பாய்ச்சும் பணிக்கான என் பொறுப்பை அவர் ரத்து செய்தார். நான் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன். ஆனால் நான் அந்தப் பொறுப்பில் இல்லாதது நல்லதுதான் என்று நினைத்தேன். செய்ய வேண்டிய நிறைய திருச்சபைப் பணிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை, அதனால் சுவிசேஷப் பணிக்கான பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொள்வதன் மூலம் என்னால் அதைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது. எனக்குள் இருக்கும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு எனக்குக் கொஞ்சம்கூட இல்லை. அடுத்த நாள் என் தியானங்களில்தான், புதியவர்களுக்கு நீர்ப்பாய்ச்சுவது போன்ற முக்கியமான ஒன்றிற்கான என் பொறுப்பு பறிக்கப்பட்டிருப்பதில் கற்றுக்கொள்ள எனக்கு ஒரு பாடம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். இதைக் கருத்தில் கொண்டு நான் உண்மையில் என்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருந்தது. நான் என் இருதயத்தில் தேவனிடம் ஒரு அமைதியான ஜெபம் செய்தேன், என்னைப் பிரகாசமாக்கி என்னைப் பற்றி அறிந்துகொள்ள வழிநடத்துமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். ஜெபம் செய்த பிறகு எனது தலைவர் சமீபத்தில் சரிபார்த்துக் கொண்டிருந்த பணியில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன் என்பதை உணர்ந்தேன். தலைவர் எதையாவது குறிப்பிடவில்லை என்றால், என் பொறுப்பு வரம்பிற்குள் ஒரு பிரச்சனை எழும்பியபோதும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் பிறர் காண்பதற்காக மட்டுமே வேலை செய்யவில்லையா? பின்னர் தேவனுடைய சில பொருத்தமான வார்த்தைகளைக் கண்டேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “சுவிசேஷேத்தைப் பரப்பும் பணியில் குறிப்பாகச் சில திருச்சபைகள் மெதுவாக இருக்கின்றன, மேலும் தவறான தலைவர்கள் தங்கள் கடமைகளில் தவறுவதும் மிகவும் அதிகமாகத் தவறுகளைச் செய்வதுமே இதற்குக் காரணம். பல்வேறு பணிகளைச் செய்யும்போது, உண்மையில் அதில் பல சிக்கல்கள், விலகல்கள் மற்றும் கவனக்குறைவுகள் இருக்கும்; இதைப் தவறான தலைவர்கள் தீர்த்து, திருத்தி, பரிகாரம் செய்ய வேண்டும்—ஆனால் அவர்களுக்குப் பாரம் இல்லாதததாலும், ஓர் அரசு ஊழியரின் ஒரு பங்கையே அவர்களால் ஆற்றமுடிவதாலும் உண்மையான பணியைச் செய்யாததாலும், அவர்கள் ஆபத்து விளைவிக்கும் குழப்பத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சில திருச்சபைகளின் உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை, ஒருவருக்கு ஒருவர் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார்கள், சந்தேகப்பட்டு ஒருவருக்கொருவர் எச்சரிக்கை உணர்வோடு இருக்கிறார்கள்; தேவனுடைய வீடு அவர்களைப் புறம்பாக்கி விடுமோ என்று பதட்டத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். தவறான தலைவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ளும்போது, அவர்கள் எந்தக் குறிப்பிட்ட பணியையும் செய்வதில்லை. தங்களுடைய வேலை இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்று தவறான தலைவர்கள் சிறிதளவுகூட வேதனைப்படுவதில்லை; எந்த ஒரு உண்மைப் பணியை செய்வதற்கும் அவர்கள் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை, மேலும் அதற்குப் பதிலாக தங்கள் பணி மேலுள்ளவருக்கு மட்டுமே செய்யப்படுவது போல, எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்று மேலே இருந்து ஆணை வருவதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். மேலிருந்து எந்த குறிப்பிட்ட தேவையும் கூறப்படவில்லை என்றால், மேலும் நேரடியான ஆணை அல்லது கட்டளை கொடுக்கப்படாவிட்டால், அப்போது அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள், மேலும் கவனக்குறைவாகவும் செயலற்றும் இருப்பார்கள். மேலுள்ளவர் செய்யச்சொல்லி எவ்வளவு கொடுத்தாலும் செய்வார்கள், தள்ளினால் நகர்வார்கள் இல்லாவிட்டால் எதையும் செய்யாமல், அக்கறை இன்றியும் செயலற்றும் இருப்பார்கள். ஒரு தவறான தலைவர் என்றால் யார்? மொத்தமாகச்சொன்னால், அவர்கள் நடைமுறைப் பணிகளைச் செய்யமாட்டார்கள், அதாவது அவர்கள் தலைவர்களாக தங்கள் பணியைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் முக்கியமான, அடிப்படையான பணிகளைக் கடுமையான முறையில் புறக்கணிப்பார்கள். அதுதான் ஒரு தவறான தலைவர்(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்). தவறான தலைவர்கள் தங்களை நல்லவர்களாகக் காண்பிக்க தங்களால் முடிந்த அதிகபட்ச முயற்சியைச் செய்வதை தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக நான் பார்த்தேன். அவர்கள் தங்கள் தலைவர்கள் வலியுறுத்துவதை அல்லது அனைவரும் பார்க்கக்கூடிய காரியங்களை மட்டுமே செய்கின்றனர். ஒரு தலைவர் எதையும் கட்டளையிடவில்லை என்றால், அந்த வேலை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அதைக் கண்டுகொள்வதில்லை அல்லது வெறுமென சிரத்தையற்று செய்கிறார்கள். அந்த மாதிரியான நபர் தனது கடமையில் திருச்சபையின் பணியை ஆதரிப்பதோ அல்லது எந்த நடைமுறைப் பணியையும் செய்வதோ இல்லை. அவர்களிடம் எந்த மனிதத்தன்மையோ ஒழுக்கமோ இருப்பதில்லை, மற்றும் அவர்கள் சத்தியத்தைத் தேடுபவர்களாகவோ அல்லது நேசிப்பவர்களாகவோ இருப்பதில்லை. ஒரு கடமையைச் செய்யும்போது கூட, அவர்கள் இடையூறு செய்கிறவர்களாகவும், பொல்லாப்பு செய்கிறவர்களாகவும் மட்டுமே இருக்கின்றனர். முன்பு, என்னிடம் நல்ல மனிதத்தன்மை இல்லை என்பதை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை, ஆனால் அப்போது நான் அம்மாதிரியான நிலையில் இருப்பதைப் பார்த்தேன். நான் என் கடமையை எப்படிச் செய்தேன் என்பதைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். மேல்மட்டத் தலைவர் உண்மையிலேயே சுவிசேஷப் பணிக்கு முன்னுரிமை அளித்ததை நான் பார்த்தேன், நான் அதில் சிறப்பாக இல்லை என்பதனால் அந்த அம்சத்தில் அவர் எனக்கு நிறைய வழிகாட்டுதலையும் உதவியையும் கொடுத்தார், நான் தொடர்ந்து அதில் போராடிக் கொண்டிருந்தால் நான் பணிநீக்கம் செய்யப்படுவேனோ என்பது குறித்து கவலைப்பட்டேன். என் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, நான் சுவிசேஷப் பணியில் அதிக கவனம் செலுத்தவும், எங்கள் பணியின் பிற அம்சங்களைப் புறக்கணிக்கவும் ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் பிற காரியங்கள் என் வரம்பிற்குள் இருந்தன, நான் அவற்றைப் பின்பற்றவேண்டும் என்ற ஒரு தெளிவற்ற எண்ணம் இருந்தது, ஆனால் தலைவர் அந்தக் காரியங்களைப் பற்றி கேட்கவில்லை என்பதால், அவை அவ்வளவு முக்கியமானவை அல்ல என்றும் நான் நினைத்தேன், அதனால் நான் அவற்றைச் செய்யவில்லை. தலைவர் கோரிய வேலையையும், என் பெயருக்கும் அந்தஸ்துக்கும் பயனளிக்கும் காரியங்களையும் மட்டுமே நான் செய்தேன். நான் தேவனுடைய சித்தத்தைக் கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளவில்லை. நான் என் கடமையில் ஒரு தலைவரின் பொறுப்புகளைச் செய்து முடிக்கவில்லை. நான் பிறர் காண்பதற்காகவும் என் தலைவரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் மட்டுமே காரியங்களைச் செய்து கொண்டிருந்தேன். என் கடமையில் நான் கொண்டிருந்த அணுகுமுறை ஏற்கனவே எனது வேலையை பாதித்திருந்தது. நல்ல திறன் கொண்ட புதிய விசுவாசிகள் ஒரு கடமையை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு நாம் நீர்ப்பாய்ச்சிப் பண்படுத்த வேண்டும் என்று தேவனுடைய வீடு அநேக முறை ஐக்கியப்பட்டது. அது ராஜ்யத்தின் சுவிசேஷத்தின் விரிவாக்கத்திற்குப் பயனளிக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக நான் இதுபோன்ற முக்கியமான பணியைச் செய்யவில்லை, இது எங்களுடைய பணியைக் கடுமையாக தாமதப்படுத்தியது. அது பொல்லாப்பு செய்வதாக இருந்தது. அவ்விதமாகச் சிந்திப்பது மிகவும் வருத்தமாக இருந்தது. நான் தேவனிடம், “தேவனே, நான் மிகவும் பொய்யானவளாகவும் தந்திரமானவளாகவும் இருக்கிறேன். நான் வெறுமனே என்னை நல்லவளாகக் காட்டுவதற்காக வேலை செய்து வருகிறேன், மேலும் திருச்சபையின் பணியை தாமதப்படுத்தியிருக்கிறேன். தேவனே, நான் மனந்திரும்ப விரும்புகிறேன்!” என்று ஜெபம் செய்தேன்.

அதன் பிறகு, அந்திக்கிறிஸ்துகளின் மனநிலைகளை வெளிப்படுத்தும் தேவனுடைய வார்த்தைககளில் சிலவற்றை நான் வாசித்தேன், அது என்னை நானே புரிந்துகொள்ள எனக்கு உதவியது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “சத்தியத்தைக் கடைப்பிடிப்பதைப் பொறுத்த வரையில் அந்திக்கிறிஸ்துகளின் மனப்பாங்கு இதுதான்: அது அவர்களுக்குப் பயனுடையதாக இருந்தால், அதற்காக எல்லோரும் அவர்களைப் புகழ்ந்து பாராட்டுவார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாகக் கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள், மேலும் தோற்றத்திற்காகச் சில அடையாள முயற்சிகளை எடுப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு நன்மை தராவிட்டால், அதை யாரும் பார்க்காவிட்டால், மேல்மட்டத் தலைவர்கள் யாரும் அங்கு இல்லை என்றால், அதன் பின் அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் பேச்சே இருக்காது. சூழலைப் பொறுத்தும், நேரத்தைப் பொறுத்தும், அது பொதுவெளியிலா அல்லது மறைமுகமாகவா செய்யப்படுகிறது, அதனால் எவ்வளவு பெரிய நன்மை கிடைக்கும் என்பதைப் பொறுத்துமே அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்; இப்படிப்பட்ட விஷயங்களில் அவர்கள் அசாதாரண அறிவும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள், எந்த நன்மையும் இல்லை அல்லது அவர்களுக்கு பொது வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய முயற்சிகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு செய்தாலும் ஒருவரும் பார்க்கவில்லை என்றால், அவர்கள் எந்த வேலையும் செய்யமாட்டார்கள். தேவனுடைய வீட்டால் நேரடியாக அந்தப் பணி ஏற்பாடு செய்யப்பட்டால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்யவேண்டி நேர்ந்தாலும் கூட, அவர்கள் அது அவர்களது அந்தஸ்துக்கும் நற்பெயருக்கும் பயன் தருமா என்பதைத்தான் கருத்தில் கொள்ளுவார்கள். அது அவர்கள் அந்தஸ்துக்கு நல்லது மற்றும் அவர்கள் பேர்புகழை மேம்படுத்துவதாக இருந்தால், அவர்கள் தங்களால் முடிந்த அளவு ஈடுபட்டு அதைச் சிறப்பாகச் செய்வார்கள்; ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதாக எண்ணுவார்கள். தங்கள் அந்தஸ்துக்கும் நற்பெயருக்கும் அது பலனளிக்கவில்லை என்றால், மேலும் அதை மோசமாகச் செய்வது அவர்களுக்குக் கெட்டபெயர் உண்டாக்கும் என்று தெரிந்தால், அதைவிட்டு வெளியேற ஒரு வழியையோ அல்லது சாக்குபோக்கையோ சிந்திப்பார்கள். அவர்கள் எந்தக் கடமையைச் செய்தாலும் சரி, அவர்கள் ஒரே கொள்கையைத்தான் கடைப்பிடிப்பார்கள்: அவர்களுக்குச் சில நன்மைகளைப் பொறுக்கி எடுக்க வேண்டும். தங்களுக்கு செலவேதும் இல்லாத, கஷ்டப்படவும், எந்த விலையும் கொடுக்கத் தேவை இல்லாத வகையிலுமான, மேலும் தங்கள் நற்பெயருக்கும் அந்தஸ்துக்கும் நன்மை அளிக்கிற வேலைகளைத்தான் அந்திக்கிறிஸ்துகள் அதிகமாக விரும்புவார்கள். மொத்தத்தில், எதைச்செய்தாலும் அந்திக்கிறிஸ்துகள் முதலாவதாக தங்கள் சொந்த நலன்களையே எண்ணுவார்கள், மேலும் இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடிவெடுத்த பின்னரே அவர்கள் செயல்படத் தொடங்குவார்கள்; அவர்கள் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் உண்மையாக, முழுமனதோடு மற்றும் முற்றிலுமாக சத்தியத்துக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள், ஆனால் தேர்ந்து நிபந்தனையுடனேயே அப்படிச் செய்வார்கள். இந்த நிபந்தனை என்ன? அவர்களுடைய அந்தஸ்தும் நற்பெயரும் பாதுகாக்கப்பட வேண்டும், எந்த இழப்பும் இருக்கக் கூடாது என்பதே அது. இந்த நிபந்தனை நிறைவு அடைந்தால் மட்டுமே என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து தெரிவு செய்வார்கள். அதாவது சத்தியத்தின் கொள்கைகளை, தேவனுடைய ஆணைகளை, மற்றும் தேவனுடைய வீட்டின் பணிகளை எவ்வாறு கையாளுவது அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் காரியங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து அந்திக்கிறிஸ்துகள் தீவிரமான கவனம் செலுத்துகின்றனர். தேவனுடைய சித்தத்தை எப்படி நிறைவேற்றுவது, தேவனுடைய வீட்டின் நன்மைகளைச் சேதப்படுத்தாமல் இருப்பது, தேவனை எப்படித் திருப்திப்படுத்துவது, அல்லது சகோதர சகோதரிகளுக்கு எவ்வாறு நன்மை உண்டாக்குவது என்பது பற்றி எல்லாம் அவர்கள் சிந்தித்துப்பார்க்க மாட்டார்கள்; இவை எல்லாம் அவர்கள் சிந்திக்கும் விஷயங்கள் அல்ல. அந்திக்கிறிஸ்துகள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்? தங்கள் சொந்த அந்தஸ்தும் புகழும் பாதிக்கப்படுமோ, மேலும் தங்கள் கௌரவம் குறைந்துபோகுமோ என்பதைத் தான். சத்தியத்தின் கொள்கைகளின்படி எதையாவது செய்வது திருச்சபைக்கும் சகோதர சகோதரிகளுக்கும் நன்மைசெய்யும், ஆனால் அவர்களின் சொந்த நற்பெயர் பாதிக்கப்பட்டு, தங்களுடைய சொந்த வளர்ச்சியும், தங்களுடைய சுபாவமும் சாராம்சமும் எத்தகையது என்று பலருக்கும் தெரியச் செய்துவிடும் என்றால், அவர்கள் நிச்சயமாகச் சத்தியத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட மாட்டார்கள். நடைமுறைப் பணியைச் செய்வது அவர்களைப் பற்றி பலரையும் உயர்வாக நினைக்கவும், அவர்களை உயர்வாகப் பார்த்து பாராட்டவும், அல்லது தங்கள் வார்த்தைகள் அதிகாரம் பெற்று பலரையும் அவர்களுக்குக் கீழ்ப்படியவும் வைக்கும் என்றால் அவர்கள் அந்த வகையிலேயே அதைச் செய்வதைத் தேர்ந்தெடுப்பார்கள்; இல்லாவிட்டால், தேவனுடைய வீட்டினுடைய அல்லது சகோதர சகோதரிகளுடைய நலன்களைக் கருத்தில் கொள்வதற்காக அவர்கள் தங்கள் சொந்த நலன்களை புறக்கணிப்பதைத் தேர்ந்துகொள்ள மாட்டார்கள். இதுவே அந்திக்கிறிஸ்துகளின் சுபாவமும் சாராம்சமும் ஆகும். இது சுயநலமானதும் வஞ்சகமானதும் அல்லவா?(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி ஒன்பது: அவர்கள் தங்களைத் தாங்களே வேறுபடுத்திக்கொள்ளவும், தங்கள் சொந்த நலன்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொள்ளவும் மட்டுமே தங்கள் கடமையைச் செய்கிறார்கள்; தேவனுடைய வீட்டின் நலன்களை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை, மேலும் தனிப்பட்ட மகிமைக்கு மாற்றாக அந்த நலன்களை விற்றுப்போடுகிறார்கள் (பகுதி மூன்று)”). “அந்திக்கிறிஸ்துகள் தந்திரமிக்க வகையினர், இல்லையா? அவர்கள் எதைச் செய்தாலும் எட்டு அல்லது பத்துமுறை அல்லது அதற்கு மேலும் மறைமுகமாகக் கணக்கிடுகிறார்கள். ஒரு கூட்டத்தில் மிகவும் உறுதியான நிலைகளைப் பெறுவது எப்படி, சிறந்த நற்பெயரையும் உயர்ந்த அந்தஸ்தையும் எப்படி அடைவது, மேலிருப்பவரை முகஸ்துதி செய்து அவரின் தயவை எப்படிப் பெறுவது, சகோதர சகோதரிகளின் ஆதரவை, அன்பை, மரியாதையை எப்படிப் பெறுவது என்ற எண்ணங்களே அவர்களது தலையில் உள்ளன, மேலும் அவர்கள் இவற்றைஅடைய எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள். அவர்கள் எந்தப் பாதையில் நடக்கிறார்கள்? அவர்களுக்கு, தேவனுடைய வீட்டின் நலன்கள், திருச்சபையின் நலன்கள், தேவனுடைய வீட்டின் பணிகள் ஆகியவை அவர்களின் முக்கிய அக்கறை அல்ல, அதுமட்டுமல்லாமல் இவை எல்லாம் மிகக்குறைவாக அவர்கள் அக்கறை கொள்ளும் விஷயங்கள் ஆகும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ‘இந்த விஷயங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எல்லோரும் தங்களைப் பற்றியே கவலைப்படுகிறார்கள், பிறரைப்பற்றி நினைப்பதில்லை; மக்கள் தங்களுக்காவும், தங்கள் நற்பெயர் மற்றும் அந்தஸ்துக்காகவுமே வாழவேண்டும். இதுவே இருப்பதில் உயரிய இலக்கு. தனக்காக வாழ வேண்டும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று யாருக்காவது தெரியாவிட்டால், அவர்கள் முட்டாள்கள். சத்தியத்தின் கொள்கைகளின்படி நடந்து, தேவனுக்கும் அவருடைய வீட்டின் ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டால், அதில் எனக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா, அவ்வாறு செய்வதன் மூலம் ஏதேனும் சாதகங்கள் இருக்குமா என்பதைப் பொறுத்து அது இருக்கும். தேவனுடைய வீட்டின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியாத காரணத்தால், நான் வெளியேற்றப்பட்டு, ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை வந்தால், அப்போது நான் கீழ்ப்படிவேன்.’ இவ்வாறு, தங்கள் சொந்த நற்பெயரையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காக, அந்திக்கிறிஸ்துகள் பெரும்பாலும் சில சமரசங்களைத் தேர்வு செய்கிறார்கள். அந்திக்கிறிஸ்துகள் அந்தஸ்துக்காக எந்த விதமான துன்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவர்கள் என்றும், நல்ல ஒரு நற்பெயருக்காக அவர்கள் எந்த விதமான விலையையும் கொடுக்கக் கூடியவர்கள் என்றும் நீங்கள் கூறலாம். ‘எப்போது வளைந்து கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்கக்கூடாது என்பதை ஒரு மாபெரும் மனிதனுக்குத் தெரியும்’ என்ற பழமொழி அவர்களைப் பொறுத்த வரையில் உண்மையாக இருக்கிறது. இது சாத்தானின் தர்க்கவாதம் அல்லவா? இது உலகில் வாழ்வதற்கான சாத்தானின் தத்துவம், மேலும் இது சாத்தானின் உயிர்வாழும் கொள்கையும் கூட. இது முற்றிலும் அருவருப்பானது!(வார்த்தை, தொகுதி 4. அந்திக்கிறிஸ்துகளை அம்பலப்படுத்துதல். “தொகுதி ஒன்பது: அவர்கள் தங்களைத் தாங்களே வேறுபடுத்திக்கொள்ளவும், தங்கள் சொந்த நலன்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொள்ளவும் மட்டுமே தங்கள் கடமையைச் செய்கிறார்கள்; தேவனுடைய வீட்டின் நலன்களை அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை, மேலும் தனிப்பட்ட மகிமைக்கு மாற்றாக அந்த நலன்களை விற்றுப்போடுகிறார்கள் (பகுதி இரண்டு)”). அந்திக்கிறிஸ்துகள் சுபாவத்தின்படி தந்திரமானவர்களாகவும் வஞ்சகர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் மிகவும் சுயநலமானவர்களாகவும் மோசமானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதை தேவனுடைய வார்த்தைகளிலிருந்து என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் தங்கள் கடமையில் தங்கள் சொந்தப் பெயரையும் அந்தஸ்தையும் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர், மற்றும் தங்கள் நலன்களை முதன்மைப்படுத்துகின்றனர். அவர்களுக்கு ஏதாவது நன்மைபயக்குமானால், அவர்களின் நற்பெயருக்கு நன்மைபயக்குமானால், தலைவர்களின் பாராட்டையும் சகோதர சகோதரிகளின் ஆதரவையும் பெற்றுத் தருமானால், அவர்கள்முழு மூச்சுடன் அதில் செயல்பட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் தலைவர்கள் கவனிக்காத பணிகளைப் பொறுத்தவரை, அவை செய்யப்பட்டிருந்தாலும், அல்லது அவர்களின் பெயர் அல்லது அந்தஸ்துக்கு உதவாத காரியங்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவற்றுக்கு விலைக்கிரயம் செலுத்த விரும்புவதில்லை. ஒரு அந்திக்கிறிஸ்து ஏதாவது செய்வதற்கு முன்பு, அவர்கள் தங்கள் நற்பெயரையும் அந்தஸ்தையும் எவ்வாறு பாதுகாப்பது என்பதையும், தங்கள் சொந்தப் பலனை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும் கணக்கிடுகின்றனர். திருச்சபையின் பணியை நிலைநிறுத்துவதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கருத்தில் கொள்வதில்லை. நான் எப்படிச் செயல்பட்டேன் என்பதை நினைத்துப் பார்க்கையில், நான் ஒரு அந்திக்கிறிஸ்துவைப் போன்ற அதே மனநிலையை வெளிப்படுத்தியதைப் பார்த்தேன். என் கடமையில் திருச்சபையின் பணிக்கு எது நன்மைபயக்கும் என்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை, மேலும் நான் திருச்சபையின் பணியை நிலைநிறுத்தவில்லை. அதற்குப் பதிலாக, என் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என் தலைவருக்கு எது நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும், அவரை எப்படித் திருப்திப்படுத்துவது, அவர் என் குறைகளைப் பார்க்காமல் மறைப்பது எப்படி என்று நான் மனதிற்குள் வெறுமனே கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். தலைவர் சுவிசேஷப் பணியைக் குறித்து அதிகமாகக் கேட்பதை நான் கவனித்தபோது, அது அவருக்கு முக்கியமானது என்று நான் எண்ணினேன், அதனால் என்னுடைய பதவியைப் பாதுகாக்க, நான் சுவிசேஷப் பணிக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுத்தேன், அந்தப் பணியைப் பின்தொடர்ந்து அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்தேன். ஆனால் தலைவர் கொஞ்ச காலம் நீர்ப்பாய்ச்சுகிற பணியில் கவனம் செலுத்தாமல் இருந்ததைப் பார்த்து, எனது பணியின் அந்த அம்சத்தை நான் புறக்கணித்தேன். நான் அதில் நேரம் செலவழித்தாலும், தலைவரின் பாராட்டைப் பெற மாட்டேன் என்று நினைத்தேன். நாங்கள் நீர்ப்பாய்ச்சுவதில் குறைவுபட்டிருந்தோம் என்பதையும், புதிய விசுவாசிகள் சரியான நேரத்தில் நீர்ப்பாய்ச்சப்படாததனால் ஏற்கெனவே பின்விளைவுகள் ஏற்பட்டிருந்ததையும் நான் நன்கு அறிந்திருந்தேன், ஆனால் நான் அப்போதும் அதில் கவனம் செலுத்தவில்லை, நீர்ப்பாய்ச்சும் பணியானது என் முகத்திற்கு முன்பாகவே பாதிக்கப்படுவதற்கு அப்படியே விட்டுவிட்டேன். நான் உண்மையிலேயே என் கடமையில் ஈடுபட்டிருந்தது போலத் தோன்றினேன், மேலும் தலைவர் என்ன கேட்டாலும் அதைச் செய்ய நான் விரைந்து செல்வேன். ஆனால் உண்மையில், நான் சொந்த வேலையைச் செய்துகொண்டிருந்தேன், பொய்யான தோற்றத்துடன் ஜனங்களை வஞ்சித்தும், தேவனை ஏமாற்றியும் வந்தேன். நான் சுயநலவாதியாகவும், நம்பத்தகாதவளாகவும், தந்திரமானவளாகவும் இருந்தேன். அவ்வளவு முக்கியமான பணியை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன், ஆனால் ஒவ்வொரு முறையும் என் சொந்த நலன்களையே எண்ணிக்கொண்டும் கணக்குப்போட்டுக்கொண்டும் இருந்தேன். எனது பெயர் மற்றும் அந்தஸ்தின் மீதான நாட்டத்திற்கான ஒரு ஆதாயமாகவே எனது கடமையைக் கருதினேன். நான் ஒரு அந்திக்கிறிஸ்துவின் பாதையில் இருந்தேன், நான் செய்த எல்லாமே தேவனுக்கு அருவருப்பாக இருந்தது. நான் அதைப் புரிந்துகொண்டதும், நான் திருச்சபையின் பணிக்கு இடையூறாக இருந்தேன் என்பதையும், என்னைப் பணிநீக்கம் செய்வது மிகையாகாது என்பதையும் நான் உணர்ந்தேன். நான் மிகவும் சுயநலவாதியாகவும், தந்திரமானவளாகவும், பொறுப்பற்றவளாகவும் இருந்தேன், அவ்வளவு முக்கியமான பணிக்கு நான் தகுதியில்லாதவளாக இருந்தேன். நான் குற்ற உணர்ச்சியையும் வருத்தத்தையும் உணர்ந்தேன், மேலும் நான் தேவனுக்குப் பெரிதும் கடன்பட்டிருந்தேன் என்பதாகவும் உணர்ந்தேன்! தலைவர் எதையாவது விசாரித்தாலும் விசாரிக்காவிட்டாலும், அது எனது பணியின் வரம்பிற்குள் இருந்த வரை, நான் அதை முழு ஈடுபாட்டுடன் செய்வேன், எனது மீறுதல்களை உண்மையிலேயே ஈடுசெய்வேன் என்று நான் மனதிற்குள் தேவனிடம் ஜெபம் செய்தேன். நான் ஆச்சரியப்படும் விதமாக, நான் தேவனிடம் மனந்திருந்த ஆயத்தமானதும், தலைவர் என்னை மீண்டும் நீர்ப்பாய்ச்சும் பணியைச் செய்யச் சொன்னார். அந்தத் தருணத்தில் நான் பெரிதும்நெகிழ்ந்து போனேன். நான் அந்தக் கடமையை முற்றிலும் பொக்கிஷமாகக் கருத வேண்டியிருந்தது என்றும், எனது பெயரையும் அந்தஸ்தையும் மீண்டும் ஒருபோதும் நினைக்கவே கூடாது என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு நான் எனது பணியில் என்னை ஈடுபடுத்தினேன். அவசரத் தேவைக்கு ஏற்ப நான் கவனம் செலுத்தாத பணிகளுக்கு முன்னுரிமை அளித்தேன், அவற்றைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றைப் பின்தொடர்ந்தேன், மேலும் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை கண்டறிந்தேன். நான் அவ்விதமாக பணி செய்ய ஆரம்பித்ததும் மிகவும் நன்றாக உணர்ந்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, திருச்சபைகள் சுத்திகரிப்புப் பணியைச் செய்ய வேண்டும் என்று தேவனுடைய வீடு கட்டளையிட்டது. சுவிசேஷ மற்றும் நீர்ப்பாய்ச்சும் பணிகளுக்கு நான்தான் பொறுப்பு என்பதாகவும், அவை முக்கியமானவை என்பதாகவும், சுத்திகரிப்புப் பணிக்கான முதன்மைப் பொறுப்பு எனக்கு இல்லை என்பதாகவும் எனக்குத் தோன்றியது. எனது சக ஊழியரால் அதனைக் கவனித்துக்கொள்ள முடியும் என்று நான் நினைத்தேன். ஆகவே, நான் எனது சிந்தனையில் அதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. அந்தப் பணியை எவ்வாறு செய்வது என்பது குறித்து எனது சக ஊழியருடன் நான் சுருக்கமாக விவாதிதிக்க மட்டும் செய்தேன் மற்றும் அவர் போய் அதை கவனிக்கச் செய்தேன். அந்த வேலையில் அவரது முன்னேற்றத்தையோ அல்லது போராட்டங்களையோ குறித்து நான் அவரிடம் ஒருபோதும் விசாரிக்கவில்லை. ஒரு கூடுகையில், சுத்திகரிப்புப் பணி எப்படி நடந்து கொண்டிருந்தது என்று தலைவர் கேட்ட போது நான் ஆச்சரியப்பட்டேன். அவர் வேறொரு திருச்சபையைப் பற்றிக் கேட்டார், அவர்கள் யாரை நீக்கினார்கள், அந்த ஜனங்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதையும், அவர்கள் ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார்களா அல்லது அவர்கள் அந்தப் பணியில் எதையாவது புரிந்து கொள்ளவில்லையா என்பதையும் அறிய விரும்பினார். நான் மிகவும் பதட்டமடைந்தேன் ஏனென்றால் நான் சுத்திகரிப்புப் பணியைக் கவனிக்கவில்லை, எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் கேட்டு, என்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்றால், தலைவர் நிச்சயமாக நான் நடைமுறைப் பணியைச் செய்யவில்லை என்று சொல்வார். எனது கடமை மாற்றப்பட்டால் அல்லது நான் பணிநீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்வது? அந்த நேரத்தில் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது: கூடுகை முடிந்தவுடனே போய் அந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும், நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பெறவும், நான் யாரைக் குறித்து நிச்சயமில்லாமல் இருந்தேனோ அவர்களைப் பார்க்கவும் வேண்டும், மேலும் அவர்கள் நீக்கப்பட வேண்டுமா என்பதைப் பற்றி உடனடியாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும், இதனால் தலைவர் அது குறித்து விசாரித்தால் என்னால் ஒரு அடிப்படையான பதிலைக் கொடுக்க முடியும். அந்த வகையில் என்னால் சில உண்மையான பணிகளைச் செய்ய முடிந்தது என்று அவர் நினைப்பார். கூடுகை முடிந்த போது, அது ஏற்கெனவே நள்ளிரவைக் கடந்திருந்தது, நான் அப்போதும் அந்தத் திட்டத்தைப் பற்றி எனது சக ஊழியரிடம் கேட்க விரும்பினேன். நான் அவரைத் தொடர்புகொள்ளத் தயாராகிக்கொண்டிருந்த போது, நான் கொஞ்சம் தயக்கத்தை உணர்ந்தேன். நான் மீண்டும் பிறர் காண்பதற்காக மட்டுமே வேலை செய்து கொண்டிருக்கவில்லையா? அவ்விதமாக அதை ஆராய்வது சிரத்தையில்லாமல் செயல்படுவதாக இருந்தது. நாம் தவறான முடிவிற்கு வந்து, நீக்கப்படக்கூடாத ஒருவரை நீக்கினால், அது சகோதர சகோதரிகளின் வாழ்க்கையைக் குறித்து பொறுப்பற்று இருப்பதாக இருக்கும் அல்லவா? நான் கவனமாக ஆராயாமலும் முடிவைக் குறித்துச் சிந்திக்காமலும் விரைந்து செயல்பட்டு, தவறான நபர் நீக்கப்பட்டால், அது என் வேலையில் பொறுப்பில்லாமல் இருந்ததாக மட்டுமல்லாமல், அது சகோதர சகோதரிகளுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் இருக்கும். அதை நினைத்து எனக்குக் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது, நான் அமைதியாக ஜெபம் செய்தேன், “தேவனே, நான் மீண்டும் பிறர் காண வேண்டும் என்பதற்காக வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நான் இப்போது சுத்திகரிப்புப் பணியைப் பின்தொடர்வதில் அவசரப்படுகிறேன். உமது சித்தத்தைக் கருத்தில்கொண்டு எனது கடமையை நன்றாகச் செய்வதற்காக அல்லாமல், எனது நற்பெயருக்காகவும் பதவிக்காகவுமே செய்கிறேன். நான் தந்திரமாகச் செயல்பட்டு, உம்மை மீண்டும் ஏமாற்றுகிறேன். தேவனே, நான் எனது கடமையில் சிறிதளவும் உண்மையாக இல்லை, ஆனால் நல்லவளாகத் தோன்றுவதற்காகவே காரியங்களைச் செய்கிறேன். இதெல்லாம் உமக்கு அருவருப்பானது. தேவனே, நான் சுயமாகச் சிந்தித்து உம்மிடம் மனந்திரும்ப விரும்புகிறேன்.” அப்போது, சமீபத்தில் நான் படித்த தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “நீ ஒரு தலைவனாக இருந்தால், நீ எத்தனை திட்டங்களுக்குப் பொறுப்பாக இருந்தாலும் சரி, தொடர்ந்து ஈடுபட்டு கேள்விகளைக் கேட்பது உன் பொறுப்பாகும், அதே வேளையில் விஷயங்களைச் சோதித்தறிந்து பிரச்சினைகள் எழும்போது உடனுக்குடன் அவற்றைத் தீர்க்க வேண்டும். இது உன்னுடைய வேலை. ஆகவே, நீ ஒரு வட்டாரத் தலைவராக, மாவட்டத் தலைவராக, திருச்சபைத் தலைவராக அல்லது ஏதாவது குழுத்தலைவர் அல்லது மேற்பார்வையாளர் என யாராக இருந்தாலும் சரி, உன்னுடைய பொறுப்புகளின் நோக்கெல்லையை உறுதிசெய்தபின், இந்தப் பணியில் உன் பங்கை ஆற்றுகிறாயா, ஒரு தலைவராக அல்லது ஊழியராக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளைச் நிறைவேற்றி விட்டாயா, எந்த வேலையை நீ செய்யவில்லை, எந்த வேலையை நீ சரியாகச் செய்யவில்லை, எந்த வேலையை நீ செய்ய விரும்பவில்லை, எந்த வேலை பயனற்றதாக இருந்து வருகிறது, எந்த வேலையின் கொள்கையை நீ புரிந்துகொள்ளவில்லை என்று அடிக்கடி நீ சோதித்தறிய வேண்டும், இவை எல்லாம் நீ அடிக்கடி சிந்திக்க வேண்டியவை. அதே வேளையில், நீ பிறரோடு ஐக்கியம் கொள்ளவும் அவர்களிடம் கேள்விகளைக் கேட்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் மேலும் தேவனுடைய வார்த்தைகளில் மற்றும் பணி ஏற்பாடுகளில் ஒரு திட்டத்தை, கொள்கைகளை மற்றும் நடைமுறைப்படுத்தும் ஒரு வழியை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு வேலை ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, அது நிர்வாகம், மானிட உறவு அல்லது திருச்சபை வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அல்லது எந்த வகையான சிறப்புப் பணியாக இருந்தாலும், அது தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகளைச் சார்ந்ததாக இருந்தால், அது நீ நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாக இருந்தால், உன் பொறுப்புக்ளின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தால், நீ அதில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இயல்பாகவே, எந்த ஒரு திட்டமும் பின்தங்கிவிடக் கூடாது என்ற சூழலை அடிப்படையாகக் கொண்டே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்(வார்த்தை, தொகுதி 5. தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்புகள்). தேவனுடைய வார்த்தைகள் மிகவும் தெளிவாக உள்ளன. திருச்சபையின் பணிக்குப் பொறுப்பான தலைவராக, நாம் எத்தனைத் திட்டங்களை மேற்பார்வை செய்தாலும், ஒவ்வொன்றும் நடக்க வேண்டிய விதத்தில் நடக்கும்விதமாக நாம் அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை மேற்பார்வையிடவும், அவற்றை விசாரித்து சரிபார்க்கவும் வேண்டும். இதுதான் ஒரு தலைவரோ அல்லது ஊழியரோ செய்ய வேண்டியதும், உண்மையான பணியைச் செய்வதற்கான ஒரே வழியுமாக இருக்கிறது. ஆனால் தெளிவாகத் தெரியக் கூடிய முடிவுகளைத் தரக்கூடிய முக்கியமான வேலையையோ அல்லது தலைவர் வழக்கமாகக் கேட்கும் பணிகளையோ என்னால் செய்து முடிக்க முடியும் வரை, அது நடைமுறைப் பணியைச் செய்ததாக இருந்தது என்று நினைத்தேன். ஆனால் மேல்மட்டத் தலைவர் அதிகம் கேட்காத அல்லது உண்மையில் வெளிப்படையாக வருமானம் தராத காரியங்களில் நான் அரிதாகவே வேலை செய்தேன் அல்லது பின்தொடர்ந்தேன். ஆனால் உண்மையில், நான் எனது கடமையில் எனது வரம்பிற்குள் இருந்த எல்லாவற்றிலும் என்னை முழுவதுமாக ஈடுபடுத்தியிருக்க வேண்டும். சில திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு, சிறிது காலமாக விவாதிக்கப்படாமல் இருந்தன, ஆனால் அதற்காக அவை நிறுத்தப்பட்டு, பின்தொடர வேண்டியதில்லை என்பது அர்த்தமில்லை. நான் முன்னுரிமையின்படி அவற்றைக் கவனித்திருக்க வேண்டும். நான் அவற்றைப் பற்றி ஒருபோதும் கேட்காமல், அது அவற்றின் முன்னேற்றத்தைத் தடுத்திருந்தால், அது பொறுப்பற்றதாகவும், தேவனிடம் அர்ப்பணிப்பு இல்லாததாகவும் இருந்திருக்கும். எனது பணியின் மீதான எனது அணுகுமுறையைப் பற்றி நான் சிந்தித்தேன். சுத்திகரிப்புப் பணி மிகவும் முக்கியமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் அது நான் முதன்மையாக பொறுப்பேற்க வேண்டிய ஒன்றல்ல, அது நன்றாக நடந்தால், நான் அதில் எடுக்கும் முயற்சியை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தேன், அதனால் நான் அதை மனதாரச் செய்யவோ அல்லது அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவோ இல்லை. அதன் முன்னேற்றம் பற்றி எனக்குத் தெரியவில்லை. தலைவர் அதைப் பற்றிக் கேட்கிறார் என்பதைக் கேட்டதும் நான் அதைச் சரிபார்க்க விரைந்து சென்றேன். தலைவர் என் பணியைப் பற்றி விசாரித்தபோது என்னால் ஒரு பதிலைக் கொடுக்கக்கூடிய விதத்தில் நான் சில எளிய பின்தொடர்தலைச் செய்ய விரும்பினேன், அப்போது அவர் நான் உண்மையான பணியைச் செய்யவில்லை என்பதைக் கண்டுபிடித்து என்னைப் பணி நீக்கம் செய்ய மாட்டார். நான் தந்திரமாகச் செயல்பட்டு, வஞ்சகமாக இருந்தேன், என் பெயரையும் அந்தஸ்தையும் பாதுகாத்தேன், திருச்சபையின் பணிகளுக்குப் பொறுப்பேற்கவில்லை. அது பொல்லாப்பு செய்ததாக இருந்தது!

அதன் பிறகு எனது கடமையிலுள்ள சமீபத்திய அணுகுமுறையையும் செயல்திறனையும் குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன். தேவனுடைய வார்த்தைகளின் இந்தப் பத்திகள் நினைவுக்கு வந்தன: “தேவன் தம்மிடம் ஒப்படைத்ததை ஒரு மனிதன் ஏற்றுக் கொள்ளும்போது, அவர்களுடைய கிரியைகள் நன்மையானதா தீமையானதா என்பதையும், அந்த மனிதன் கீழ்ப்படிந்தானா இல்லையா என்பதையும், அந்த மனிதன் தேவனுடைய சித்தத்தைப் பூர்த்திசெய்தானா இல்லையா என்பதையும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்தத் தரத்தைப் பூர்த்திசெய்கிறதா இல்லையா என்பதையும் தீர்மானிப்பதற்கான ஒரு தரத்தை தேவன் கொண்டிருக்கிறார். ஒரு மனிதனின் இருதயத்தின்பால் தேவன் அக்கறை காட்டுகிறார், மேலோட்டமாக, அவர்களுடைய கிரியைகளில் அக்கறை காட்டுவதில்லை. ஒருவன் எவ்வாறு செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் எதையாவது செய்யும் வரை தேவன் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதாக அது இல்லை. அது தேவனைப் பற்றி ஜனங்கள் கொண்டிருக்கும் தவறான புரிதல் ஆகும். தேவன் விஷயங்களின் இறுதி முடிவை மட்டுமல்ல, ஒரு நபரின் இருதயம் எப்படி இருக்கிறது மற்றும் விஷயங்களின் வளர்ச்சியின் போது ஒரு நபரின் மனநிலை எவ்வாறாக இருக்கிறது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் மற்றும் அவர்களுடைய இருதயத்தில் கீழ்ப்படிதல், அக்கறை மற்றும் தேவனை திருப்திப்படுத்தும் விருப்பம் உள்ளனவா என்பதை அவர் கவனிக்கிறார்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் I”). “எல்லோரும் சத்தியத்தைப் பின்தொடர விரும்பினாலும், அதன் எதார்த்துக்குள் பிரவேசிப்பது என்பது எளிய விஷயம் அல்ல. சத்தியத்தைத் தேடுவதில் கவனம் செலுத்தி சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே முக்கியமானது. நீ ஒவ்வொரு நாளும் இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீ எந்தப் பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை எதிர்கொண்டாலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிடாதே; சத்தியத்தை எப்படித் தேடுவது என்று கற்றுக்கொண்டு உன்னைக் குறித்து நீயே சிந்திக்க வேண்டும், மேலும் முடிவில் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இது எல்லாவற்றிலும் முக்கியமானது; நீ எதைச் செய்தாலும், உன்னுடைய சொந்த நலன்களைப் பாதுகாக்க முயற்சி செய்யாதே, மேலும் உன் நலன்களை நீ முன்னிலைப்படுத்தினால், உன்னால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாது. தங்களுக்குக் கிடைக்கும் சாதகத்தை மட்டுமே சிந்திக்கும் அந்த மக்களை நோக்கிப் பார்—அவர்களில் யாரால் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியும்? அவர்களில் ஒருவராலும் முடியாது. சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் மக்கள் யாவரும் நேர்மையானவர்கள், சத்தியத்தை நேசிப்பவர்கள் மற்றும் இரக்க நெஞ்சுடையவர்கள். அவர்கள் எல்லோரும் மனச்சாட்சியும் அறிவும் உள்ளவர்கள், அவர்களால் தங்கள் சொந்த நலன்களை, வீண்டம்பத்தை, கர்வத்தை விட்டுவிட முடிபவர்கள்; இவர்களால் மாம்சத்தைக் கீழ்ப்படுத்த முடியும். சத்தியத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய மக்கள் இவர்களே. … சத்தியத்தை நேசிப்பவர்கள் நேசிக்காதவர்களை விட வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்: சத்தியத்தை நேசிக்காதவர்கள் எப்போதும் சாத்தானின் தத்துவங்களைக் கவனத்தில் கொண்டு வாழ்கிறார்கள், வெறுமனே வெளிப்பிரகாரமான நடத்தை மற்றும் பக்தியில் திருப்தி அடைகிறார்கள் ஆனால் அவர்கள் உள்ளத்தில் இன்னும் கட்டுப்பாடற்ற ஆசைகளும் ஏக்கங்களும் இருக்கின்றன, மற்றும் அவர்கள் இன்னும் அந்தஸ்தையும் உயர்நிலையையும் தேடுகிறார்கள், இருப்பினும் ஆசீர்வதிக்கப்படுவதையும் ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பதையும் விரும்புகிறார்கள்—ஆனால் அவர்கள் சத்தியத்தைத் தேடாததால் மற்றும் தங்கள் சீர்கேடான மனநிலைகளை விட்டுவிட முடியாததால், அவர்கள் எப்போதும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறார்கள். எல்லாவற்றிலும் சத்தியத்தை விரும்பும் ஒவ்வொருவரும் சத்தியத்தைத் தேடுகிறார்கள், தங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள் மற்றும் தங்களை அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள், மேலும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள், மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலும் மற்றும் தேவனைக் குறித்த பயமும் அவர்கள் இருதயத்தில் உண்டு. அவரைப் பற்றி ஏதேனும் கருத்துகள் அல்லது தவறான புரிதல்கள் எழுந்தால், அவர்கள் உடனடியாக தேவனிடம் ஜெபித்து அவற்றைத் தீர்க்க சத்தியத்தைத் தேடுகிறார்கள்; அவர்கள் தேவனுடைய சித்தம் திருப்தியடையும் அளவிற்குத் தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள்; மேலும் அவர்கள் சத்தியத்திற்காகப் பாடுபடுகிறார்கள் மற்றும் தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்கிறார்கள், தங்கள் இருதயத்தில் அவருக்குப் பயந்து எல்லா பொல்லாத செயல்களையும் விட்டு விலகுகிறார்கள். இவர் எப்போதும் தேவனுக்கு முன்பாக வாழும் ஒரு நபர் ஆவார்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “நல்ல நடத்தை என்பதற்கு ஒருவரின் மனநிலை மாறிவிட்டது என்று அர்த்தமல்ல”). நான் நன்றாக தோற்றமளிப்பதற்காகவே எனது கடமையில் காரியங்களைச் செய்தேன், தலைவரின் மதிப்பைப் பெறுவது குறித்தும், அதன் மூலம் எனது பதவியைப் பாதுகாப்பது குறித்துமே எப்போதும் சிந்தித்தேன். நான் புத்திசாலியாக இருந்ததாக நினைத்தேன், ஆனால் உண்மையில் நான் முட்டாளாக இருந்து வந்தேன். தேவனுடைய வார்த்தைகள் தெள்ளத் தெளிவாக உள்ளன—தேவன் ஒரு நபருடைய இருதயத்தை அவர்களின் கடமையில் பார்க்கிறார். அவர்களுடைய கடமையில் அவர்களுடைய அணுகுமுறையானது அவரது சித்தத்தைக் குறித்து அக்கறையுடையதாக இருக்கிறதா என்று அவர் பார்க்கிறார், அவர்கள் எவ்வளவு வேலை செய்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அவர்களைப் பாராட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பதில்லை. மேலும், ஜனங்களைப் பணிநீக்கம் செய்வதற்கான கொள்கைகள் திருச்சபைக்கு உள்ளன. குறுகிய காலத்திற்குத் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்பதற்காக யாரும் எளிதாக நீக்கப்படுவதில்லை. அவர்களுடைய இருதயம் சரியான இடத்தில் இருந்தால், அவர்களால் திருச்சபையின் பணியை நிலைநிறுத்த முடியும், அவர்கள் அனுபவமின்மையின் காரணமாக சில தவறுகளைச் செய்தால், தேவனுடைய வீடு அவர்களை ஆதரித்து, அவர்களுக்கு உதவும். அவர்களுக்குத் திறமை இல்லாததால் அவர்களால் வேலையை உண்மையில் கையாள முடியவில்லை என்றால், திருச்சபை அவர்களுக்கு மற்றொரு கடமையை ஏற்பாடு செய்யும். ஒட்டுமொத்தமாக, உங்கள் இருதயத்தை சரியான இடத்தில் வைத்திருப்பதே முக்கியம். உங்கள் கடமையில் உங்களுக்குத் தவறான எண்ணம் இருந்தால் அல்லது தேவனுடைய சித்தத்தை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்றால், நீங்கள் பெயரையும் அந்தஸ்தையும் மட்டுமே நாடினால், அல்லது தலைவர்கள் உங்களை மதிப்பதற்காக நீங்கள் தந்திரம் செய்து வஞ்சகமாக இருந்தால், நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பது போலத் தோன்றலாம் மற்றும் உங்களால் துன்பப்பட்டு விலைக்கிரயம் கொடுக்கவும் முடியலாம், ஆனால் உங்கள் நோக்கங்கள் தவறானவை, மேலும் நீங்கள் எல்லாவற்றையும் உங்களுக்காகவே செய்கிறீர்கள். அது சிறிதும் உங்கள் கடமையைச் செய்வதாகாது, தேவனுடைய அங்கீகாரத்தையும் பெறாது. தேவனுடைய வீட்டிற்கு சுத்திகரிப்புப் பணி ஒரு முக்கியமான திட்டம் என்பதை நான் அறிந்தேன். எனது சக ஊழியர்களின் முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதும் மேற்பார்வையிடுவதும் எனது வேலையின் ஒரு பகுதியாக இருந்தது. நான் சரியான அணுகுமுறையைக் கொண்டிருந்திருக்க வேண்டும் மற்றும் கொள்கையின்படி எனது கடமையைச் செய்திருந்திருக்க வேண்டும். அதன் பிறகு, சுத்திகரிப்புப் பணியில் எனது சக ஊழியர்ககளுடைய முன்னேற்றம் குறித்துப் பேசவும் அவர்கள் என்ன சிரமங்களை எதிர்கொண்டார்கள் என்று கேட்கவும் அவர்களிடம் சென்றேன். அதன் பிறகு, ஊழியர்களின் எண்ணிக்கையை அறிய அவர்களுக்கு உதவ நானே நேரடியாக வேலைசெய்தேன், சுத்திகரிப்புக்கான நிலைமைகளுக்குப் பொருத்தமான நபர்களை நாங்கள் நீக்கினோம். அதைச் செய்த பிறகு நான் மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன்.

அந்த அனுபவங்கள் மூலம் நான் மிகவும் அதிகமாகப் பெற்றுக்கொண்டேன். தலைவர் முன்னுரிமை அளித்து கவனம் செலுத்தும் பணியைச் செய்வதுதான் நடைமுறை பணியைச் செய்வது என்று நான் எப்போதும் நினைத்தேன். ஆனால் இந்த அனுபவங்கள் மூலம், என்னிடம் சரியான நோக்கங்கள் இல்லாமல், பெயர், அந்தஸ்து மற்றும் மற்றவர்களின் பாராட்டிற்காகவோ அல்லது ஒரு தலைவரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ எனது கடமையைச் செய்தால், அது நான் என் கடமையைச் செய்யாமல், பிறர் பார்ப்பதற்காக வேலையைச் செய்வது என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு நான் எவ்வளவு வேலை செய்தாலும், தேவன் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஒரு கடமையைச் செய்யும்போது, தேவன் நமது இருதயங்களைக் குறித்து அக்கறை கொள்கிறார், மேலும் அவர் நமது கடமையைப் பற்றிய நமது மனப்பான்மையையும், நாம் திருச்சபையின் பணியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறோமா என்றும், நம்மால் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவும், அவருடைய வார்த்தைகளின்படி வாழவும் முடிகிறதா என்றும் பார்க்கிறார். அதுதான் மிகவும் முக்கியமானது. தேவனுடைய வழிகாட்டுதலின் நிமித்தமாகவே நான் முற்றிலுமாக இதைப் புரிந்துகொண்டேன். தேவனுக்கு நன்றி!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கள்ளக்கிறிஸ்துகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருந்ததிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்

நான் ஒரு வீட்டுத் திருச்சபையில சக ஊழியரா இருந்தேன். 2000 ல ஒரு நாள், மேல்மட்டத் தலைவர்கள் ஒரு சக ஊழியர் கூட்டத்தக் கூட்டினாங்க. அவங்க,...

நான் எப்படி ஒரு பாதுகாப்பான வேலையை விட்டு விட்டேன்?

நான் ஒரு ஏழ்மயான பின்தங்கின கிராமப்புற குடும்பத்தில பிறந்தேன். சிறு குழந்தையா இருந்தப்பவே, என்னோட அப்பா நான் கடினமா படிக்கணும், அப்பதான்...

கஷ்டமான சூழலின் சோதனை

என்னோட சின்ன வயசுல இருந்தே, எப்போதுமே நான் சமூகத்தால தாக்கப்பட்டேன். நான் செய்யுற எல்லாத்துலயும் மத்தவங்களோட ஒத்துப்போறத நான் விரும்புனேன்....

Leave a Reply