ஆசீர்வாதங்களைப் பின்தொடர்வது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றதா?

ஜனவரி 7, 2023

2018 ஆம் வருஷத்துல, சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைச்சுச்சு. கர்த்தரோட வருகைய வரவேற்கக் கிடச்ச வாய்ப்னால நான் ரொம்பவே உற்சாகமடைந்தேன். சீக்கிரமாவே, சுவிசேஷத்த எப்படிப் பகிர்வதுன்னு கத்துக்க ஆரம்பிச்சேன். ஆனா, நான் பெரும்பாலும் பகல் முழுவதுமா வேலை செஞ்சிட்டு, ராத்திரியில களைப்படஞ்சு வீட்டுக்கு வந்ததால, என்னோட கடமையில கவனம் செலுத்துவது ரொம்பவே கடினமா இருந்துச்சு. நான் என்னோட வேலைய ஒதுக்கி வச்சிட்டு, முழுநேரமா சுவிசேஷத்தப் பகிர்ந்துக்க விரும்புனேன். ஆனா, என்னோட நடைமுறைச் சூழ்நிலையால அதச் செய்ய முடியல. நான் அஞ்சு பிள்ளைகள வளர்த்து வந்தேன், நான் அவங்களப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலேன்னா, அவங்களப் பராமரிக்க நான் தகுதியில்லாதவன்னு அரசாங்கம் நெனைக்கும்பார்க்கும். அவங்க என்கிட்ட இருந்து பறிக்கப்படுவாங்க. என்னோட வாழ்க்கையில நிறைய மன அழுத்தம் இருந்துச்சு, ஆனா, ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனா, எனக்கு எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் சரி, நான் நிச்சயமா என்னோட கடமையைச் செய்யணும்ங்கறது எனக்கு தெரியும்.

2019 ஆவது வருஷத்துல, நான் ஒரு திருச்சபைத் தலைவரா ஆனேன், என்னோட நாட்கள் இன்னும் பரபரப்பா மாறுச்சு. என்னோட வேலை நாட்கள வாரத்துல ஆறு நாட்கள்ல இருந்து நான்கு நாட்களா குறைச்சுக்க முடிவு செஞ்சேன். ஒருவேளை, என்னோட தியாகங்களினால தேவன் என்னை ஆசீர்வதிப்பார்ன்னு நெனச்சேன். என்னோட வேலை நேரம் குறைந்ததால், நான் அதிகமா வியாபாரம் செய்யலன்னாலும், என்னோட வாழ்க்கை உண்மையிலயே அதனால பாதிக்கப்படல எல்லாமே சுமூகமா நடந்ததால, எங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளோ, வேறு எந்த தொந்தரவோ இல்ல. என்னோட வாழ்க்கையில நடந்த விஷயங்கள் சமாதானமானவைங்கறத உணர்ந்தேன் ஏன்னா, தேவனுக்காக நான் செஞ்ச உற்சாகமான அர்ப்பணிப்புக்கு நான் தகுதியானதப் பெற்றுக்கிட்டிருந்தேன். என்னோட கடமையச் செய்வதுக்கு அதிக நேரம் கிடச்சதால நான் ரொம்ப சந்தோஷமடஞ்சேன். ஆனா, பெருந்தொற்று பரவிய பிறகு, 2021 ஆவது வருஷத்துல எல்லாமே மாறிருச்சு.

தொற்றுநோய் காரணமா நான் நடத்தி வந்த சிகையலங்கார நிலையத்தின் வருமானம் கடுமையா சரிஞ்சுச்சு. வியாபார அளவு வாடகைய கொடுக்கக் கூட போதுமானதா இல்ல. அதனால, வாடகை குறைந்த கடைக்கு மாறிப் போவதத் தவிர, எனக்கு வேறு வழியில்ல. ஆனா, அதுக்கு சில சீரமைப்புகள் தேவைப்பட்டுச்சு. அதற்கு உதவி செய்யும்படி கட்டுமானத்துல வேலை செய்யற ஒருத்தரக் கண்டுபிடிச்சேன், ஆனா, சில வாரங்களுக்குப் பிறகு என்னோட திட்டத்துக்கு நிறைய நேரம் தேவைப்படும்ன்னு சொன்னாரு. அவருக்கு நிறைய வேலைகள் இருந்துச்சு, அதோடு, போதுமான பணியாளர்களும் இல்ல. அதனால, அவர் என்னோட சேர்ந்து வேலை செய்வத நிறுத்த வேண்டியதாயிருந்துச்சு. என்ன நடக்குதுங்கறத என்னோட அக்கம் பக்கத்தினர்களும் வாடிக்கையாளர்களும் பாத்துக்கிட்டிருந்தாங்க, புதிய கடையின் பணிகள் முடிவடையலேன்னா, நான் ஒரே நேரத்துல ரெண்டு இடங்களுக்கு வாடகை செலுத்த வேண்டியிருக்கும்ன்னு சொன்னாங்க, அது ரொம்பவே அதிக செலவா இருக்கும். ஒரு விசுவாசியா இருக்குற எனக்கு அது எப்படி நடக்கலாம்? முதல்ல, நான் முழு நம்பிக்கையோட, எல்லாமே தேவனோட ஆளுகையயும் ஏற்பாடுகளயும் பொறுத்ததுதான் அப்படின்னு அவங்ககிட்ட சொன்னேன், என்னால குறை சொல்ல முடியல. அதுக்கப்புறமா, வேற ஒரு கட்டுமானக் குழுவுல வேலை செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தரக் கண்டுபிடிச்சேன். ஆனா, உடம்பு சரியில்லாததால, அவர் என்னோட திட்டத்தையும் கைவிட்டுட்டார். நேரம் சும்மா வேகமா கடந்துபோய்க்கிட்டிருந்துச்சு, கடை இன்னும் சரி செய்யப்படல. தொடர்ந்து மூணு மாசங்களா, ஒரே நேரத்துல ரெண்டு கடைகளுக்கு வாடக கொடுத்து வந்தேன். அதுக்கப்புறமா, புதிய கடையில குழாய்ல இருந்து கசிவு தொடங்குச்சு, அதோடு, கசிவைக் கண்டுபிடிக்க மேல் கூரையை தகர்க்க வேண்டியிருந்துச்சு. கடையில அந்த மாற்றத்தச் செய்ய ஏற்கெனவே எனக்கு சுமார் £3,000 மொத்தமா செலவாகியிருந்துச்சு. நான் உண்மையிலயே அதிருப்தியடஞ்சு குழப்பமா இருந்தேன். எனக்கு ஏன் அப்படி ஒண்ணு நடக்கணும்—நான் ஏன் இவ்வளவு பணத்த செலவழிக்கணும்? ஒரு நல்ல கட்டுமானப் பணியாளரக் கண்டுபிடிக்க தேவன் எனக்கு உதவுவார்ன்னு நான் ஆரம்பத்துல இருந்து நெனச்சுக்கிட்டே இருந்தேன். ஆனா, அதிர்ச்சியளிக்கும் விதமா, அந்த நபர் ஹீட்டரை நிறுவிக்கிட்டு இருந்தப்போ பாதியில வேலைய விட்டுட்டாரு, குழாயில இருந்து கசிவு தொடங்கி, அவர் செஞ்சிருந்த வெப்ப சீரமைப்புல பாதிய அழிச்சிருச்சு. அந்த நேரத்துல எனக்கும் கொரோனா தொற்று வந்துச்சு. நான் குறை சொல்ல ஆரம்பிச்சேன்: தேவன் ஏன் எனக்கு அப்படிப்பட்ட காரியம் நடக்க அனுமதிச்சாரு? நான் திருச்சபையில ஒரு கடமைய செஞ்சுக்கிட்டிருந்தேன், அதுக்காக வேல செஞ்சு பணம் சம்பாதிக்குற நேரத்தக் குறச்சுக்கிட்டேன். அப்படியிருக்க, நான் ஏன் பல கடினமான காரியங்கள சந்திச்சுக்கிட்டிருந்தேன்? என்னோட இருதயத்துல குறை சொல்லுதல் மட்டுந்தான் நெறச்சிருந்துச்சு.

அதுக்கப்புறமா, என்னோட கடமையில அதிக உற்சாகமான மனசு எனக்கு இல்ல. நான் இன்னும் என்னோட கடமைய செஞ்சுக்கிட்டிருந்தேன், ஆனா, என்னோட இருதயம் அதுல இல்ல. என்னோட கடையில உள்ள பிரச்சினைகள எப்படி சரிசெய்வதுங்கறதுல நான் முழுவதுமா கவனம் செலுத்தினேன். இது எனக்கு ஒரு உண்மையான சிக்கலா இருந்துச்சு, இதன் விளைவா நான் கூடுகைகள்ல அதிகமா கவனம் செலுத்தல. நான் எப்போதுமே கூடுகைகளுக்குப் பிறகு, ஒரு விவர சுருக்கத்த உருவாக்குவேன், ஆனா, அதுக்கப்புறமா நான் அதை செய்ய விரும்பல. மத்தவங்களோடு ஐக்கியங்கொள்வதுக்கும், பிரச்சினைகளத் தீர்க்க உதவுவதுக்கும், நான் தூங்கும் நேரத்தில் கொஞ்சத்தை என்னால் தியாகம் செய்ய முடிஞ்சுச்சு, ஆனா, இப்போது அவங்க பிரச்சனைகளத் தீர்க்க என்னைத் தேடியபோது, நான் தொலைபேசியில் பதிலளிக்க விரும்பல. சகோதர சகோதரிகள் நல்ல நிலையில் இருக்கிறார்களா இல்லையாங்கறதப் பார்க்க நான் அவங்களத் தேடிச் செல்வதுண்டு, தங்களோட கடமைகள்ல அவங்களுக்குப் போராட்டங்கள் இருந்தா, அவங்க எதிர்கொள்ளும் சிரமங்களின் அடிப்படையில தேவனோட வார்த்தைகள ஐக்கியங்கொண்டேன், ஆனா, இதுக்கப்புறமா, நான் அப்படிப்பட்ட எந்த வேலையயும் செய்ய விரும்பல. நான் என்னோட கடமையில இன்னும் அதிக மெத்தனமா மாறிட்டேன். ஒரு நாள் மேலிடத்தலைவர் ஒருத்தர், நான் என்னோட பொறுப்புகள ஏத்துக்கணும்னும், எல்லா புதிய திருச்சபை உறுப்பினர்களுக்கும் கூடுகைகள ஒழுங்கு பண்ணவும், அவங்களுக்கு முறையா தண்ணீர் பாய்ச்சவும் கவனமாய் இருக்கணும்னும், விரிசல்களின் வழியே ஒருவரைக் கூட நழுவ விடக்கூடாதுன்னும் என்கிட்ட சொன்னாரு. உண்மையில் அவரோட ஏற்பாட்டுக்கு நான் எதிரா இருந்தேன். அப்படி செஞ்சா, வீட்ல உள்ள காரியங்களக் கவனிக்க எனக்கு அதிக நேரம் இருக்காது. என்னோட ஓய்வு நேரத்த என்னோட குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் செலவு செய்யவும், மாம்சத்த திருப்திப்படுத்தவும் விரும்புனேன். நான் இன்னமும் ரொம்ப மோசமான நிலையில மூழ்குனேன், தேவனோட வார்த்தைகள வாசிக்க, வேத தியானத்தக் கூட செய்ய விரும்பல. முன்பெல்லாம், நான் அதிகாலையில எழுந்திருச்சு தேவனோட வார்த்தைகள வாசிச்சுட்டு, பகல் நேரத்துல அதன் ஒலிப்பதிவ கேட்பேன், ஆனா இப்போ, நான் காலையில எழுந்திருக்கவோ தேவனோட வார்த்தைகள வாசிக்கவோ விரும்பல, ஏன்னா, என்னோட முயற்சிகளுக்கு ஈடாக நான் ஆசீர்வதிக்கப்படல, அதோடு, நான் நிறைய தடைகள சந்திச்சிருந்தேன். கூடுகைகள்ல என்ன ஐக்கியங்கொள்றதுன்னு எனக்குத் தெரியல. குறைந்தபட்சமா நான் திருச்சபையில என்னோட பதவிய தக்க வச்சுக்கும்படிக்கு, எல்லாமே சரியா இருந்துச்சுங்கறதப்போல நான் நடிச்சுக்கிட்டிருந்தேன். நான் என்னோட கடமையில ஏமாத்த ஆரம்பிச்சேன். நிலம எப்படி இருக்குதுன்னு ஒருவர் என்கிட்ட கேட்கும்போது, நான் எதுவுமே செய்யாத ஒரு காரியத்தை, கொஞ்சம் செஞ்சு முடிச்சிட்டேன்னு சொல்லி என்னோட சகோதர சகோதரிகள ஏமாத்துவேன். என்னோட அந்த அணுகுமுறை முழுக்க முழுக்க தேவன் என்னை ஆசீர்வதிக்காததாலும், அந்த சிரமங்கள எதிர்கொள்ள என்னை அனுமதிச்சிருந்ததாலும்தான். நான் தேவனிடத்துல பயபக்தியக் காட்டல, அவரை ஆராதிக்கவும் இல்ல.

நான் ரொம்ப மோசமான நிலையில இருந்தேன், அதனால, நான் சந்திச்சுக்கிட்டிருக்குற காரியங்களப் பத்தித் தலைவியிடத்துல சொன்னேன். அவர் தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய என்ன வாசிக்கச் செய்தார்: “சோதனைகளுக்கு உள்ளாகும்போது, ஜனங்கள் பலவீனமாக இருப்பது அல்லது அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணம் இருப்பது அல்லது தேவனுடைய சித்தம் அல்லது நடப்பதற்கான அவர்களுடைய பாதை குறித்து தெளிவு இல்லாதிருப்பது ஆகியவை இயல்பானவை. எப்படியிருந்தாலும், நீ தேவனுடைய கிரியையில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். யோபுவைப் போலவே தேவனை மறுக்கக்கூடாது. யோபு பலவீனமாக இருந்தபோதும், தன் பிறந்த நாளையே சபித்தாலும், மனித ஜீவிதத்தின் அனைத்தும் யேகோவாவால் வழங்கப்பட்டது என்பதையும், அவை அனைத்தையும் எடுத்துச் செல்லும் ஒருவராக இருப்பதும் யேகோவா என்பதையும் அவன் மறுக்கவில்லை. அவன் எவ்வாறு சோதிக்கப்பட்டாலும், அவன் இந்த நம்பிக்கையை நிலைநாட்டினான். உன் அனுபவத்தில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நீ எந்தச் சுத்திகரிப்புக்கு உட்பட்டாலும், மனிதகுலத்திடம் தேவன் விரும்புவது என்னவென்றால், சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய விசுவாசமும், அவர்மீதுள்ள அன்புமாக இருக்கின்றன. இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் ஜனங்களின் விசுவாசம், அன்பு மற்றும் விருப்பங்களைப் பரிபூரணப்படுத்துகிறார். தேவன் ஜனங்கள் மீது பரிபூரணத்தின் கிரியையைச் செய்கிறார், அவர்களால் அதைப் பார்க்க முடியாது மற்றும் உணர முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், உன் விசுவாசம் தேவைப்படுகிறது. எதையாகிலும் மனிதக் கண்ணால் பார்க்க முடியாதபோது ஜனங்களின் விசுவாசம் தேவைப்படுகிறது மற்றும் உன் சொந்தக் கருத்துக்களை விட்டுவிட முடியாதபோது உன் விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்குத் தெளிவு இல்லாதபோது, உன்னிடம் எதிர்பார்க்கப்படுவது விசுவாசம் மற்றும் நீ உறுதியான நிலைப்பாட்டை எடுத்து சாட்சியாக இருப்பதும் ஆகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). தேவனோட வார்த்தைகள வாசிச்சது எனக்கு நடக்குற காரியங்கள்ல தேவனோட நோக்கம் என்னங்கறதப் பத்தி நான் முழுசா புரிஞ்சுக்காம இருந்தேன்ங்கறத எனக்குக் காட்டுச்சு. நான் நம்பிக்கையற்றவனாவும், கைவிடப்பட்டவனாவும் உணர்ந்தேன், தேவனோட ராஜரீகத்தப் பத்தி சந்தேகம் கூட இருந்துச்சு. ஆனா, நான் தேவனை பக்தியா பின்பற்றுபவன்னு திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தேன். என்னோட வியாபாரம் நல்லா நடந்துக்கிட்டிருந்தப்ப, என்னோட உடல் ஆரோகியமா இருந்தப்ப, தேவன் என்னை அளவுக்கதிகமா ஆசீர்வதிச்சிருக்கிறாரு, அவருக்காக என்னைய இன்னும் அதிகமா அர்ப்பணிக்க முடியும்ன்னு நெனச்சேன். நான் இக்கட்டான சூழ்நிலைகள்ல சிக்கியப்போ, வாழ்க்கையில சிரமங்கள் ஏற்பட்டப்போ, தேவனைக் குறை சொல்ல ஆரம்பிச்சேன். அது எப்படி விசுவாசத்தக் கொண்டிருப்பதாகும்? யோபு தன்னோட குடும்ப உடைமைகள் எல்லாத்தையும் இழந்து தன் பிள்ளைகள் எல்லாரையும் இழந்தப்ப, அவன் தேவனைக் குறை சொல்லல, அதுக்குப் பதிலா தேவனோட நாமத்தத் துதிச்சான். அவனோட மனைவி அவனோட விசுவாசத்துல அவன தடுமாறச் செய்ய முயற்சித்தப்ப, அவன் அவள ஒரு பயித்தியக்காரின்னு சொல்லி திட்டினான், “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” (யோபு 2:10). தேவன் மீதான தன்னோட விசுவாசத்துல, யோபு பரிவர்த்தன செய்றவனாவோ அல்லது கோரிக்கை வைப்பவனாவோ இல்ல. அவன் ஆசீர்வாதங்கள அனுபவிச்சாலும் சரி, பேரழிவை சந்திச்சாலும் சரி, அவன் தேவனுக்குக் கீழப்படிஞ்சான். யோபு தேவன் மேல உண்மையான விசுவாசம் வச்சிருந்தான். எந்தவிதத்துலயும் என்னைய அவனோடு ஒப்பிட முடியாதுங்கறத உணர்ந்தேன். என்னோட வாழ்க்கையில ஒணுக்குப் பின்னாடி ஒண்ணா கஷ்டம் வருவதப் பார்த்து, நான் கொஞ்சம் அதிருப்தியடஞ்சேன். ஒரு விசுவாசியான எனக்கு ஏன் இப்படிப்பட்ட விஷயங்கள் நடக்குதுன்னு எனக்குத் தெரிஞ்சவங்க என்கிட்ட கேட்டாங்க, எல்லாம் சரியாத்தான் இருந்துச்சுன்னு நான் சொன்னாலும் கூட, காலப்போக்குல, நான் என்னோட இருதயத்துல கலங்க ஆரம்பிச்சேன், தேவனோட ஆளுகைய நான் சந்தேகிக்க ஆரம்பிச்சேன். யோபுவோட அனுபவத்தின் மூலமா, மத்தவங்க சொன்ன விஷயங்களின் மூலமா சாத்தான் என்னையத் தாக்கி, தேவனை மறுதலிக்கவும் குற்றப்படுத்தவும் என்ன தூண்டுறான்ங்கறத நான் உணர்ந்தேன். அந்த அனுபவத்துல நான் முழுவதுமா சாட்சியில்லாதவனா இருந்தேன்—நான் சாத்தானோட கேலிக்கூத்தா மாறுனேன். நான் நடந்துக்கிட்ட விதத்துனால நான் ரொம்பவே வெட்கத்தாலும் வருத்தத்தாலும் நெறஞ்சிருந்தேன்.

அதுக்கப்புறம், தேவனோட வார்த்தைகளின் இன்னும் சில பத்திகள நான் வாசிச்சேன். “ஜனங்களின் ஜீவித அனுபவங்களில், அவர்கள் பெரும்பாலும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். நான் எனது குடும்பத்தையும் ஜீவிதத்தையும் தேவனுக்காக விட்டுவிட்டேன், அவர் எனக்கு என்ன கொடுத்தார்? நான் அதைச் சேர்க்க வேண்டும், அதை உறுதிப்படுத்த வேண்டும்—சமீபத்தில் எனக்கு ஏதேனும் ஆசீர்வாதம் கிடைத்ததா? இந்த நேரத்தில் நான் நிறைய கொடுத்திருக்கிறேன், நான் ஓடினேன் ஓடினேன். மிகவும் கஷ்டப்பட்டேன்—அதற்குப் பதிலாக தேவன் எனக்கு ஏதாவது வாக்குத்தத்தங்களை அளித்துள்ளாரா? அவர் என் நல்ல கிரியைகளை நினைவில் வைத்திருக்கிறாரா? என் முடிவு என்னவாக இருக்கும்? தேவனுடைய ஆசீர்வாதங்களை என்னால் பெற முடியுமா? … ஒவ்வொரு மனிதரும் தொடர்ந்து இத்தகைய கணக்கீடுகளை தங்கள் இருதயத்திற்குள் செய்கிறார்கள். அவர்கள் தேவனிடம் தங்களின் உந்துதல்கள், லட்சியங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளை வைக்கிறார்கள். ஒரு பரிவர்த்தனை மனநிலையைத் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தன் இருதயத்தில் மனிதன் தொடர்ந்து தேவனைச் சோதித்து வருகிறான். தொடர்ந்து தேவனைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுகிறான். தனது சுய முடிவுக்காக தேவனோடு தொடர்ந்து வழக்கை வாதாடுகிறான். தேவனிடமிருந்து ஒரு அறிக்கையைப் பிரித்தெடுக்க முயற்சிக்கிறான். அவனது தேவைகளுள் தேவனால் அவனுக்கு எதைக் கொடுக்க முடியும், எதைக் கொடுக்க முடியாது என்பதைப் பார்க்கிறான். தேவனைப் பின்பற்றும் அதே நேரத்தில், மனிதன் தேவனை தேவனாக கருதுவதில்லை. மனிதன் எப்போதுமே தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றான். அவன் இடைவிடாமல் எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறான். ஒவ்வொரு அடியிலும் அவரை அழுத்துகிறான். ஒரு அங்குலம் வழங்கப்பட்ட பிறகு ஒரு மைல் தூரம் பெற முயற்சிக்கிறான். தேவனுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் அதே நேரத்தில், மனிதன் அவருடன் வாதாடுகிறான். அவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும் போது அல்லது அவர்கள் சில சூழ்நிலைகளில் தங்களைக் கண்டறிந்தால், பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், செயலற்றவர்களாகவும், தங்கள் கிரியையில் மந்தமானவர்களாகவும், தேவனைப் பற்றி குறை கூறுபவர்களாக மட்டுமே இருப்பார்கள். மனிதன் முதன்முதலில் தேவனை நம்பத் தொடங்கிய காலத்திலிருந்து, அவன் தேவனை ஒரு அமுதசுரபி என்றும் சுவிஸ் இராணுவ கத்தி என்றும் கருதினான். தேவன் மிகப் பெரிய அளவில் தனக்குக் கடன்பட்டுள்ளதாக அவன் கருதினான். தேவனிடமிருந்து ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் பெற முயற்சிப்பது அவனது உள்ளார்ந்த பூரணம் மற்றும் கடமை என்று கருதினான். தேவனுடைய பொறுப்பு மனிதனைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும், அவனுக்காக வழங்குவதும் ஆகும் என்று கருதினான். தேவனை நம்புகிற அனைவருக்கும் ‘தேவ நம்பிக்கை’ பற்றிய அடிப்படை புரிதல் இதுதான். தேவ நம்பிக்கை பற்றிய அவர்களின் ஆழமான புரிதல் இதுதான். மனிதனுடைய இயல்பின் சாராம்சம் முதல் அவரது அகநிலை தேடல் வரை, தேவ பயத்துடன் தொடர்புடைய எதுவும் இல்லை. தேவனை நம்புவதில் உள்ள மனிதனுடைய நோக்கத்துக்கும் தேவனை வழிபடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனை நம்புவது என்பது தேவனுக்குப் பயந்து அவரை வணங்க வேண்டும் என்று மனிதன் ஒருபோதும் கருதவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை. இத்தகைய நிலைமைகளின் வெளிச்சத்தில், மனிதனுடைய சாராம்சம் வெளிப்படையானது. இதன் சாராம்சம் என்ன? மனிதனுடைய இருதயம் தீங்கிழைக்கும், துரோகத்தையும் வஞ்சகத்தையும் கொண்டுள்ளது. நேர்மறையான, நேர்மை மற்றும் நீதியை அது நேசிப்பதில்லை. அதனிடம் அவமதிப்பு மற்றும் பேராசை உள்ளது. மனிதனுடைய இருதயம் தேவனிடம் நெருக்கமாக முடியவில்லை. மனிதன் அதை தேவனுக்குக் கொடுக்கவில்லை. தேவன் ஒருபோதும் மனிதனுடைய உண்மையான இருதயத்தைப் பார்த்ததில்லை. அவர் மனிதனால் வணங்கப்படவில்லை. தேவன் எவ்வளவு பெரிய விலைக்கிரயம் கொடுத்தாலும், அவர் எவ்வளவு கிரியை செய்தாலும், அல்லது அவர் மனிதனுக்கு எவ்வளவு வழங்கினாலும், மனிதன் குருடனாகவும், எல்லாவற்றிலும் முற்றிலும் அலட்சியமாகவும் இருக்கிறான். மனிதன் ஒருபோதும் தன் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கவில்லை. அவன் தன் இருதயத்தை தனக்காக வைத்துக்கொள்ள விரும்புகிறான். தன் சொந்த முடிவுகளை எடுக்க விரும்புகிறான்—இதன் உட்பொருள் என்னவென்றால், தேவனுக்குப் பயப்படுவதற்கும் தீமைகளைத் தவிர்ப்பதற்கும் அல்லது ராஜரீகத்திற்கும் தேவனுடைய ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படிய மனிதன் விரும்பவில்லை என்பதாகும். தேவனை தேவனாக வணங்கவும் அவர் விரும்பவில்லை. இன்றைய மனிதனுடைய நிலை இதுதான்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II”). “தேவனை இருதயத்தில் வைத்திருப்பவர்கள் எப்படிச் சோதிக்கப்பட்டாலும், அவர்களின் பற்றுறுதி மாறாமல் இருக்கும்; ஆனால், இருதயத்தில் தேவனைக் கொண்டிராதவர்களுக்கு, தேவனுடைய கிரியை அவர்களின் மாம்சத்திற்குச் சாதகமாக இல்லாதிருந்தால், அவர்கள் தேவனைப்பற்றிய தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்கிறார்கள், மற்றும் தேவனை விட்டு விலகிக்கூடப் போகிறார்கள். முடிவு பரியந்தம் உறுதியாய் நிலை நிற்காதவர்கள் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை மட்டுமே நாடுகிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுக்காகத் தங்களைச் செலவுபண்ணுவதற்கும் மற்றும் தங்களையே அவருக்கு அர்ப்பணிப்பதற்கும் விருப்பம் எதுவும் கொண்டிருப்பதில்லை. தேவனுடைய கிரியை ஒரு முடிவுக்கு வருகின்றபோது, இப்படிப்பட்ட கீழ்த்தரமான ஜனங்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மற்றும் இவர்கள் எந்த அனுதாபத்திற்கும் தகுதியற்றவர்களாய் இருக்கிறார்கள். மனிதப்பண்பு இல்லாத அவர்கள் உண்மையிலேயே தேவனை அன்புகூர முடியாதவர்களாக இருக்கிறார்கள். சூழல் பாதுகாப்பாக மற்றும் பாதுகாக்கபட்டதாக இருக்கும்போது அல்லது லாபம் ஈட்டப்படும்போது, அவர்கள் தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுடன் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் விரும்பும் விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டால் அல்லது இறுதியாக மறுக்கப்பட்டால், அவர்கள் உடனடியாகக் கலகம் செய்கிறார்கள். ஒரே ஓர் இரவின் இடைவெளியில்கூட, அவர்கள் புன்னகைக்கும், ‘கனிவான’ நபராக இருப்பதில் இருந்து ஒரு அசிங்கமான தோற்றமுடைய மற்றும் கொடூரமான கொலையாளி நிலைக்குச் செல்லக்கூடும், அவர்கள் அர்த்தமின்றி அல்லது காரணமின்றி தங்களது நேற்றைய உபகாரியை திடீரென்று தங்கள் ஜென்ம விரோதியாக, நடத்துகிறார்கள். இந்தப் பேய்களை, கண்சிமிட்டாமல் கொல்லும் இந்தபேய்களை வெளியேற்றாவிட்டால், அவை மறைந்திருக்கும் ஆபத்தாக மாறாதா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்”). தேவனோட வார்த்தைகள் என்னோட இருதயத்துக்குள்ல ஆழமா மறஞ்சிருப்பத எனக்குக் காட்டுச்சு. தேவனுக்குக் கீழ்ப்படிஞ்சு ஆராதிக்கணும்னு நான் விசுவாசிக்கல, அதுக்குப் பதிலா, அவரோட கிருபையிலயும் ஆசீர்வாதத்துலயும் மகிழ்ச்சியா இருப்பதுக்காக விசுவாசிச்சேன். நான் கடமையச் செய்யும்படிக்கு, வேல செஞ்சு பணம் சம்பாதிப்பதுக்கான என்னோட நேரத்தக் குறைச்சுக்கிட்டது, நான் இன்னும் அதிகமா ஆசீர்வதிக்கப்பட்டவனா இருக்கணும்ங்கறதுக்காகத்தான். நான் விட்டுவிட்ட எல்லாமே தேவனோடு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதுக்காக மட்டுமே இருந்துச்சு, உண்மையான விசுவாசத்தினாலோ அன்பினாலோ அல்ல. என்னோட வாழ்க்கையில முதன்முதல்ல பிரச்சனைகள் வர ஆரம்பிச்சப்ப, நான் என்னோட கடமையில உறுதியா இருந்தேன், ஏன்னா, அந்த கஷ்டங்கள் கடந்து போகும்ன்னும், அதுக்கப்புறமா தேவன் என்ன இன்னும் அதிகமா ஆசீர்வதிப்பாருன்னும் நெனச்சேன். ஆனா, காரியங்கள் தொடர்ந்து கடினமா இருந்துச்சு. நான் புதிய கடையில பிரச்சனைகள சந்திச்சு நிறைய பணத்த இழந்துட்டேன். இதுக்கப்புறமும், என்னோட கடமையச் செய்ய எனக்கு எந்த உற்சாகமும் இல்ல, நான் தேவனைக் குறை சொல்ல ஆரம்பிச்சேன். தேவனோட ஆசீர்வாதம் இல்லாம, நான் முன்பு போல, தொடர்ந்து தேவனுக்காகக் கடினமாக உழைக்க விரும்பல. நான் என்னோட சொந்த சௌகரியத்தப் பத்தி அதிகமா சிந்திக்க விரும்புனேன். விஷயங்களப் பத்தி நான் நெனச்ச விதம், நான் எதிர்கொண்ட கஷ்டங்களிலினால என்னையத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்குச்சு, இந்தப் போராட்டங்கள் மத்தியில, நான் தேவனோட சித்தத்தத் தேடவோ, அல்லது சத்தியத்தக் கைக்கொண்டு உறுதியா நிற்பது எப்படின்னு தேடவோ தவறிட்டேன். அதுக்குப் பதிலா, என்னோட பணப் பிரச்சனைகள நானே சரிசெய்ய வழிகளக் கண்டறிய முயற்சி செஞ்சுக்கிட்டு, என்னோட கடமையில சமாளிச்சிக்கிட்டும் பொறுப்பில்லாமலும் இருந்தேன். தேவனுக்கு என்னோட இருதயத்தில் இடமில்லாதிருந்துச்சு. கடமையின் மீதான என்னோட அணுகுமுறையின் மூலமாவும் தேவனுக்கு நேரான என்னோட அணுகுமுறையின் மூலமாவும், நான் தேவனை உண்மையா பின்பற்றுபவன் இல்லங்கறத உணர்ந்தேன். நான் எப்போதும் தேவனை நேசிப்பதா சொன்னேன், ஆனால் நான் வாழ்க்கையில கஷ்டங்கள சந்திச்சப்போ தேவனைக் குறை சொன்னேன். நான் அவரோடு வாக்குவாதம் செஞ்சு காரியங்கள முடிச்சுக்க முயற்சி செஞ்சேன், இது தேவன் சொன்னதப் போலவே இருக்குது: “ஒரே ஓர் இரவின் இடைவெளியில்கூட, அவர்கள் புன்னகைக்கும், ‘கனிவான’ நபராக இருப்பதில் இருந்து ஒரு அசிங்கமான தோற்றமுடைய மற்றும் கொடூரமான கொலையாளி நிலைக்குச் செல்லக்கூடும், அவர்கள் அர்த்தமின்றி அல்லது காரணமின்றி தங்களது நேற்றைய உபகாரியை திடீரென்று தங்கள் ஜென்ம விரோதியாக, நடத்துகிறார்கள்.” தேவன் தம்முடைய வார்த்தைகள்ல வெளிப்படுத்தியதப் போலவே என்னோட நடத்தையும் இருந்துச்சு. தேவன் என்னைய ஆசீர்வதிச்சபோது மட்டுமே, நான் என்னோட கடமைய நல்லா செஞ்சேன். தேவனிடத்துல நான் விரும்புறதக் கேட்டுக்கிட்டு, ஒருவித கடன் கொடுத்தவனைப் போல நான் நடந்துக்கிட்டேன். ஆனால் உண்மையில, தேவன் எனக்கு ஜீவனைக் கொடுத்தாரு—அவர் எனக்கு எல்லாத்தையும் கொடுத்தாரு. அவர் எனக்கு போதுமானதை விட அதிகமாகவே கொடுத்திருந்தாரு. நான் ஏன் இன்னமும் தேவனை நிந்திக்கவும், அவரோடு தர்க்கம் பண்ணி வாக்குவாதம் செய்யவும் விரும்புனேன்? அதோடு, என்னோட கடமைய சரியா செய்யாம இருப்பதன் மூலமா, நான் அவரோடு சண்டை போட்டேன். நான் இதப் பத்தி சிந்திச்சபோது, அதிகமதிகமாக அவமானமடஞ்சேன். நான் தேவனிடத்துக்கு மனந்திரும்பலேன்னா, என்னைப் போன்ற ஒருவரை தேவன் வெறுத்து புறம்பாக்க மாட்டாரா? என்னோட மனசுக்குள்ள, “தேவனே, எனக்கு மனசாட்சியே இல்லை. உமது கிருபைய நான் ஏற்கனவே அதிகமா அனுபவிச்சிருந்தேன். ஆனா, நான் உங்களிடத்துல ஒண்ணுக்குப் பின் ஒண்ணா கோரிக்கைகள வச்சுக்கிட்டே இருக்குறேன். என்னோட விருப்பங்கள் நிறைவேறாதப்ப, நான் எதிர்மறையாகி, குறை சொல்லுறேன். தேவனே, நான் என்னோட உண்மையான முகத்தப் பார்த்துட்டேன், என்னைய நானே வெறுக்குறேன். எனக்கு இருக்குற இந்தத் தவறான நோக்கங்கள மாத்திக்க இயலும்படி, தயவு செஞ்சு எனக்கு உதவுவீராக” அப்படின்னு தேவனிடத்துல ஒரு ஜெபம் செஞ்சேன்.

அதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகள்ல இத வாசிச்சேன்: “உன் பிள்ளைகள் நோயிலிருந்து விடுபடவும், உன் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும், உன் மகன் ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடிக்கவும், உன் மகள் ஒரு நல்ல புருஷனைக் கண்டுபிடிக்கவும், உன் எருதுகள் மற்றும் குதிரைகள் நிலத்தை நன்றாக உழுதிடவும், உன் பயிர்களுக்கு நல்ல வருட வானிலை கிடைக்கவும், நீ தேவனை விசுவாசித்த பிறகு சமாதானத்தை ஆதாயம் செய்யவும் மட்டுமே அவரைப் பின்பற்றுகிறாய். இதைத்தான் நீ நாடுகிறாய். உன் குடும்பத்திற்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காற்று உங்களை கடந்து செல்லாமலிருக்கவும், உன் முகம் மண்துகள்களால் தீண்டப்படாமல் இருப்பதற்காகவும், உன் குடும்பத்தின் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்காகவும், நீ எந்தவொரு பேரழிவிலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், தேவனின் அரவணைப்பில் வாழவும், வசதியான வீட்டில் வாழவும், இப்படியாக உன் நாட்டம் வசதியாக வாழ்வதற்கு மட்டுமே இருக்கிறது. எப்போதும் மாம்சத்தைப் பின்தொடர்கிற உன்னைப் போன்ற ஒரு கோழை—உனக்கு இருதயம் இருக்கிறதா, உனக்கு ஆவி இருக்கிறதா? நீ ஒரு மிருகம் அல்லவா? பதிலுக்கு எதையும் கேட்காமல் நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுக்கிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. தேவனை விசுவாசிக்கிறவர்களில் நீ ஒருவனா? உண்மையான மனித வாழ்க்கையை நான் உனக்கு வழங்குகிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. நீ ஒரு பன்றி அல்லது நாயிலிருந்து வேறுபடவில்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு”).“எல்லா சீர்கெட்ட மனிதர்களும் தங்களுக்காகவே வாழ்கின்றனர். ஒவ்வொரு மனிதனும் தனக்கும் பிசாசுக்கும் முன்னிலை வகிக்கிறான்—இதுவே மனித இயல்பின் சுருக்கமான வரையறையாகும். ஜனங்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவே தேவனை விசுவாசிக்கிறார்கள்; அவர்கள் காரியங்களை விட்டுவிட்டு தங்களை தேவனுக்கு என்று ஒப்புக்கொடுப்பது, ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே, மேலும் அவர்கள் அவருக்கு உண்மை உள்ளவர்களாக இருப்பது, பிரதிபலன் பெறுவதற்காகவே. மொத்தத்தில், இது எல்லாமே ஆசீர்வதிக்கப்பட்டு, பிரதிபலன் பெற்று, பரலோக ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்காகவே செய்யப்படுகின்றன. சமூகத்தில், மக்கள் தங்கள் சொந்த நலனுக்காகவே வேலை செய்கிறார்கள், மற்றும் தேவனுடைய வீட்டில், ஆசீர்வதிக்கப்படுவதற்காகவே அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே ஜனங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு அதிகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்கிறார்கள்: மனிதரின் சாத்தானிய சுபாவத்துக்கு இதைவிடச் சிறந்த சான்று எதுவும் இல்லை(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பகுதி மூன்று”). தேவனோட வார்த்தைகள வாசிச்சது, நான் எவ்வளவு சுயநலவாதியாவும் இழிவானவனாவும் இருந்தேன்ங்கறத எனக்குக் காட்டுச்சு. “ஒவ்வொரு மனிதனும் தன் வெற்றியை நோக்கி உழைத்து, துரதிர்ஷ்டசாலிகளை அவரவர் தலைவிதிக்கு விட்டுவிடட்டும்” அப்படிங்கற கருத்தால நான் கட்டுப்படுத்தப்பட்டிருந்தேன். நான் என்ன செஞ்சாலும் சரி, அதன் பலனை அடையணும்னு நெனச்சேன், எனக்கு பயனளிக்காத எதையும் நான் செய்ய விரும்பல. இப்படிப்பட்ட தத்துவம், இப்படிப்பட்ட சிந்தனை, என்னோட இருதயத்துக்குள்ள ஆழமா வேரூன்றி இருந்துச்சு, நான் எப்பவுமே எனக்காகவே வாழ அது வழிவகுத்துச்சு. என்னோட விசுவாசமும், தேவனுக்காக நான் செய்த தியாகங்களும் கூட, நான் ஆசீர்வதிக்கப்படணும்ங்கற—ஒரே ஒரு குறிக்கோளுக்காக மட்டுமே இருந்துச்சு. நான் தேவனை ஏமாத்திக்கிட்டு இருந்தேன். நான் ரொம்பவே சுயநலவாதியாவும் தந்திரமான நபராவும் இருந்தேன். நான் தொடர்ந்து என்னோட தனிப்பட்ட நலன்களயும், தேவனோட கிருபையயும் ஆசீர்வாதத்தயும் எப்படிப் பெறுவதுங்கறதயும் பின்தொடர்ந்தேன். அவர் ஆசீர்வதிக்கணும்னு நான் நெனச்சபடி தேவன் என்னை ஆசீர்வதிகலங்கறத நான் பார்த்தப்போ, நான் துன்பமடையவும் குறைகளால் நிறைந்தவனாகவும் ஆனேன். அந்தச் சூழ்நிலையில் தேவனோட சித்தம் என்னவா இருந்துச்சு? நான் அதைத் தேடவோ சிந்திக்கவோ இல்ல, நான் அதப் பத்திக் கவலைப்படவுமில்ல. நான் என்னோட சரீர நலன்கள்ல மட்டுமே கவனம் செலுத்துனேன். சத்தியத்தப் பெறுவதுக்கான வாய்ப்புகள நான் இழந்துக்கிட்டு இருக்கலயா? தேவன் வந்து, நம்மள இரட்சிக்கக் கடைசி நாட்கள்ல மாம்சமாகியிருக்காரு. அவர் நமக்காக தமது இரத்தத்தயும், வியர்வையயும், கண்ணீரையும் ஊற்றி, நிறைய வார்த்தைகளப் பேசியிருக்கிறாரு, அதன் மூலமா, இந்த வார்த்தைகளாலும், இந்த சத்தியங்களாலும், நம்மால பாவத்துக்கும் தீமைக்கும் தப்பிக்கவும், சாத்தானோட சீர்கேட்டுக்கும் தீங்குக்கும் தப்பிக்கவும் முடியும். ஆனா, நான் சத்தியத்தப் பின்தொடர்ந்துக்கிட்டிருக்கல—நான் அதப் பத்தி ரொம்ப குறைவாகவே சிந்திச்சேன். நான் மாம்ச சுகபோகங்கள்ல பேராசை வச்சு, அதப் பத்தி கவலப்பட்டுக்கிட்டும் கணக்குப் போட்டுக்கிட்டும் இருந்தேன். நான் தொடர்ந்து அப்படியே நடந்துக்கிட்டிருந்தா, என்னைப் போன்ற ஒருவரை தேவன் என்ன செஞ்சிருப்பார்? நான் புறம்பாக்கப்பட்டு, அழிஞ்சுபோயிருப்பேன். நான் மனசுக்குள்ள, “தேவனே, தயவுசெஞ்சு என்னை இரட்சியும். தயவுசெஞ்சு என்னை அறிஞ்சுக்கவும் நடப்பதுக்கான பாதையக் கண்டறியவும் எனக்கு உதவுவீராக” அப்படின்னு ஒரு ஜெபம் செஞ்சேன். நான் தினமும் இப்படிப்பட்ட ஜெபம் செஞ்சேன்.

அதுக்கப்புறமா, நான் இத தேவனோட வார்த்தைகள்ல வாசிச்சேன்: “தேவனை விசுவாசிப்பது துன்பத்தை அனுபவிப்பதைப் பற்றியது அல்லது அவருக்காக எல்லா விதமான காரியங்களையும் செய்வது என்று நீ நினைக்கலாம்; தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் உனது மாம்சம் சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்லது உனது ஜீவிதத்தில் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்பதற்காக அல்லது நீ வசதியாகவும் எல்லாவற்றிலும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக என்று நீ நினைக்கலாம். இருப்பினும், இவை எதுவும் தேவன் மீதுள்ள விசுவாசத்துடன் ஜனங்கள் பிணைக்க வேண்டிய நோக்கங்கள் அல்ல. இந்த நோக்கங்களுக்காக நீ விசுவாசித்தால், உனது கண்ணோட்டம் தவறானது. மேலும், நீ பரிபூரணப்படுத்தப்படுவதற்கு சாத்தியமில்லை. தேவனுடைய கிரியை, தேவனுடைய நீதியுள்ள மனநிலை, அவருடைய ஞானம், அவருடைய வார்த்தைகள் மற்றும் அவரது அதிசயமான மற்றும் புரிந்துகொள்ள முடியாத தன்மை ஆகியவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களாகும். இந்தப் புரிதலைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட கோரிக்கைகள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் உனது இருதயத்திலிருந்து அகற்றுவதற்கு நீ இதைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை அகற்றுவதன் மூலம் மட்டுமே நீ தேவன் கோரிய நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும், இதைச் செய்வதன் மூலம்தான் நீ ஜீவனைப் பெற்று தேவனைத் திருப்திப்படுத்த முடியும். தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் அவரை திருப்திப்படுத்துவதும், அவர் விரும்பும் மனநிலையில் வாழ்வதும் ஆகும். இதனால் அவருடைய கிரியைகளும் மகிமையும் இந்தத் தகுதியற்ற ஜனக்கூட்டத்தின் மூலம் வெளிப்படும். தேவனை விசுவாசிப்பதற்கான சரியான கண்ணோட்டம் இதுதான். மேலும், நீ நாட வேண்டிய இலக்கு இதுவே ஆகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). “மனுஷனின் கடமைக்கும், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா அல்லது சபிக்கப்பட்டவனா என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடமை என்பது மனுஷன் நிறைவேற்ற வேண்டியது; அது அவனுக்குப் பரலோகம் கொடுத்த கிரியை, மேலும் அது பிரதியுபகாரம், நிபந்தனைகள் அல்லது காரணங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. அப்போதுதான் அவன் தனது கடமையைச் செய்கிறான். ஆசீர்வதிக்கப்படுவது என்பது, யாரோ ஒருவன் பரிபூரணனாகி, நியாயத்தீர்ப்பை அனுபவித்தபின் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறான் என்பதாகும். சபிக்கப்படுவது என்பது, ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்தபின்பும் ஒருவனின் மனநிலை மாறாதபோதும், அவன் பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிக்காமல் தண்டிக்கப்படும்போதும் வழங்கப்படுவது என்பதாகும். ஆனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது சபிக்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும், அவர்களால் செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டும்; தேவனைப் பின்தொடரும் ஒருவன் செய்ய வேண்டிய குறைந்தபட்ச விஷயம் இது. நீ ஆசீர்வதிக்கப்படுவதற்காக மட்டுமே உன் கடமையைச் செய்யக்கூடாது, மேலும் சபிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் நீ செயல்பட மறுக்கவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: மனுஷனுடைய கடமையின் செயல்திறன்தான் அவனது கடமையின் முக்கிய விஷயமாகும், அவனால் தனது கடமையைச் செய்ய இயலாது என்றால், இதுவே அவனது கலகத்தன்மையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு”). தேவன் மேல உண்மையான விசுவாசம் இருப்பதா நான் பலமுறை சொல்லி வந்திருக்கேன், ஆனா, அது முழுவதுமே என்னோட கற்பனைதான்ங்கறத நான் உணர்ந்தேன். என்னோட விசுவாசம் 2 தீமோத்தேயு 4:7-8ல் பவுல் சொன்னதப் போலவே இருந்துச்சு. “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.” பவுல் கர்த்தருக்கு ஊழியம் செஞ்ச பிறகு நீதியின் கிரீடத்துக்காகக் காத்திருந்தான். என்னோட விசுவாசத்துலயும், அதுதான் என்னோட இலக்கா இருந்துச்சு—அதாவது ஆசீர்வதிக்கப்படணும். தேவனோட வார்த்தைகள் விசுவாசத்துக்கான அர்த்தத்தயும், என்னோட விசுவாசத்துல எனக்கு இருக்க வேண்டிய சரியான நாட்டத்தையும் சொல்லுச்சு. நான் முன்பு போய்க்கிட்டிருந்த தவறான பாதைய மாத்திக்கத் தயாரா இருப்பத உணர்ந்தேன், ஏன்னா, அது என்னை இன்னும் அதிகமா சீரழிச்சு, நான் தேவனுக்கு சத்துருவா மாறுவதுக்கு மட்டுமே வழிவகுக்கும். தன்னோட பெற்றோருக்கு உண்மையிலயே அன்பின் நிமித்தமா கீழ்ப்படியாம இருந்து, அவங்ககிட்டயிருந்து எதையாவது கேட்டுக்கிட்டே இருக்கும் ஒரு குழந்தையப் போலதான் நான் இருந்தேன். அத்தகைய குழந்தை பெற்றோரால ஒருபோதும் விரும்பப்படாது, ஆனா, அவங்களுக்கு வலியை மட்டுமே ஏற்படுத்தும். என்னோட விசுவாசத்தப் பத்திய என்னோட நோக்கமும் பார்வையும் எனக்கே அவமானமா இருந்துச்சு. நான் தேவனிடத்துல இருந்து என்ன மாதிரியான பிரதிபலனை எதிர்பார்த்துக்கிட்டிருக்குறேன்? அவரோட கிருபையயும் ஆசீர்வாதத்தயும் நான் ஏற்கனவே அனுபவிச்சிருந்தேன், அதோடு, அவரது வார்த்தைகள்ல இருக்கிற சத்தியங்கள்ல இருந்து வாழ்வாதாரத்தையும், அவரோட பராமரிப்பயும் பாதுகாப்பயும், அதோடு கூட, நான் சுவாசிச்ச காற்று, நான் உணரும் சூரிய ஒளி, என்னோட தினசரி உணவையும் பெற்றிருந்தேன். இது எல்லாமே தேவனால் கொடுக்கப்பட்டுச்சு. என்னோட ஜீவன் கூட தேவனால எனக்குக் கொடுக்கப்பட்டுச்சு. நம்மளோட சிருஷ்டிகரின் அன்பை நான் எப்படித் திருப்பிச்செலுத்தணும்? என்னுடைய ஒவ்வொரு அணுவையும் நான் கொடுத்தாலும், என்னால ஒருபோதும் அவருக்குத் திருப்பிக் கொடுக்க முடியாது. அப்படியிருந்தும், நான் இன்னும் தேவனைக் குறை சொன்னேன், வாக்குவாதம் செஞ்சேன், அவரோடு என் கணக்கத் தீர்த்துக்கவும் முயற்சி செஞ்சேன். கொஞ்சம் கூட சுய விழிப்புணர்வு இல்லாம, நான் உண்மையிலயே மனிதநேயம் இல்லாதவனாய் இருந்தேன். நான் தேவனைப் பின்பற்றி என்னோட கடமைய செஞ்சேன், இது என்னோட பொறுப்பும், நான் செய்ய வேண்டிய மிக அடிப்படையான காரியமுமாய் இருந்துச்சு. சத்தியத்தப் பின்தொடரவும் இரட்சிப்பைப் பெறவும் தேவன் எனக்குக் கொடுத்த வாய்ப்பாகவும் இது இருந்துச்சு. நான் என்னோட கடமையச் செய்யலேன்னா, என்னால சத்தியத்தப் பெற்றிருக்கவோ என்னோட சீர்கெட்ட மனநிலைய மாத்தியிருக்கவோ முடியாது. தேவனுக்கே நன்றி! ஒரு கடமையச் செய்வதுங்கறது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்குதுங்கறதயும், ஒரு மனுஷனோட பொறுப்புங்கறதயும் நான் இப்ப உணருறேன். என்னோட கடமையச் செய்வது தேவனோடு நான் செய்யும் ஒப்பந்தமாக இருக்கக்கூடாது. அதோடு கூட, நான் எப்படிப்பட்ட சிரமங்கள சந்திச்சாலும் சரி, நான் வியாதிப்பட்டாலும் சரி என்னோட தொழில் சரியா நடக்கலேன்னாலும் சரி, நான் அதை ஏத்துக்கணும்ங்கறதயும், குறை சொல்லக்கூடாதுங்கறதயும் புரிஞ்சுக்கறேன். ஒரு சிருஷ்டியாக, இந்தப் பகுத்தறிவயும் நடத்தையயும்தான் நான் கொண்டிருக்கணும். இப்படிப்பட்ட புரிதலைப் பெற்றுக்க எனக்கு அனுமதிச்ச தேவனுக்கு நான் நன்றியுள்ளவனா இருக்குறேன். இப்ப நான் அதிகமா பணம் சம்பாதிக்கல, என்னோட வாழ்க்கைத் தரம் சற்று தாழ்ந்துதான் இருக்குது, ஆனா, நான் முன்பை விட சிக்கனமா இருக்குறேன்—நான் அதிகமா செலவு செய்வதில்ல. என்னால இன்னும் சமாளிக்க முடியும். என்னோட கடமையின் மீதான என் அணுகுமுறைய பாதிக்க உடல்நலப் பிரச்சனைகளயும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளயும் என்னால அனுமதிக்க முடியாது. சகோதர சகோதரிகளுக்கு நான் தொடர்ந்து உதவி செஞ்சு வர்றேன். என்னோட கடமையில ஒவ்வொரு பணியயும் முடிக்க என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யுறேன். இந்தச் சூழ்நிலைய அனுபவிச்சது, நான் எவ்வளவு சுயநலவாதியாவும் மோசமானவனாகவும் இருந்தேன்ங்கறத எனக்குக் காட்டுச்சு, அதோடு, என் விசுவாசத்துலயும் பின்தொடர்தல்லயும் எனக்கு இருந்த தவறான பார்வையப் பத்திய சில புரிதலை எனக்கு கொடுத்துச்சு. இது எல்லாமே தேவனோட வார்த்தைகளின் வழிகாட்டுதலாலேயே அடையப்பட்டுச்சு.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

என் குடும்பத்தின் துன்புறுத்தலை நான் எப்படி எதிர்கொண்டேன்

நான் சின்னவளா இருந்தப்போ, என் அம்மா அடிக்கடி: “ஒரு பொண்ணுக்கு, ஒரு நல்ல கணவனும் ஒரு இணக்கமான குடும்பம் அமையறத விட சிறந்த வாழ்க்க எதுவும்...

பெருந்தொற்றின் போது நோய்வாய்ப்பட்ட பிறகு ஏற்பட்ட சிந்தனைகள்

கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனோட சுவிசேத்த ஏத்துகிட்ட உடனயே, தேவனோட வார்த்தைகள்ல இருந்து, தேவன் கடைசி நாட்கள்ல தம்மோட கிரியைய...