வீட்டில் ஒரு ஆவிக்குரிய யுத்தம்

ஜனவரி 21, 2024

ஆகஸ்ட் 2018 ல, கர்த்தராகிய இயேசு திரும்பி வந்திருந்தாருன்னும், தேவனுடைய வீட்லருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்ய அவர் சத்தியங்கள வெளிப்படுத்திக்கிட்டு இருந்தாருன்னும் ஒரு நண்பர் என்கிட்ட சொன்னாரு. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நான் வாசிச்சு அவைகள் சத்தியமும் தேவனோட சத்தமுமா இருந்துச்சுங்கறதப் பாத்தேன். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்குற கர்த்தராகிய இயேசுங்கறத நான் தெரிஞ்சுக்கிட்டேன், அதனால நான் அவரோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கிட்டு ஆன்லைன் கூடுகைகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். கர்த்தரை வரவேற்கும் சந்தோஷத்துல நான் முழுசா மூழ்கியிருந்தேன், அப்போது வீட்டுல எதிர்பாராத விதமா ஆவிக்குரிய யுத்தம் துவங்குச்சு.

2018 அக்டோபர் மாசத்துல ஒரு நாள், என்னோட கணவர் எனக்கு ஒரு செய்திய அனுப்பி: “நீ கொஞ்ச நாளாவே திருச்சபைக்குப் போறதில்ல, நீ எப்பவுமே என்ன புத்தகத்த வாசிச்சுக்கிட்டிருக்கற? அந்த ஆன்லைன் கூடுகைகள்ல நீங்க என்ன பேசுறீங்க?” அப்படின்னு கேட்டாரு. நான் இப்பத்தான் கடைசி நாட்களின் தேவனோட கிரியைய ஏத்துக்கிட்டேன், அதனால என்னால அதத் தெளிவாக விளக்கிச் சொல்ல முடியும்னு எனக்குத் தோனல. ஆனாலும் என்னோட கணவர் சின்ன வயசுலருந்தே ஒரு விசுவாசியா இருந்து வந்திருக்காரு, அவர் திருச்சபையில ஒரு சக ஊழியரா இருக்குறாரு. அதனால, கர்த்தரோட வருகையப் பத்திய செய்திய அவரோடு பகிர்ந்துக்கணும்னு நான் நெனச்சேன். அதனால நான், “நாம கடைசி நாட்கள்ல இருக்கறோம், கர்த்தர் திரும்பி வருவாருங்கற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்குது. அவர் மாம்சத்துல திரும்பி வந்திருக்காரு, அவரோட நாமம் சர்வவல்லமையுள்ள தேவன். மனுக்குலத்த சுத்திகரிக்க அவர் வார்த்தைகள் மூலமா நியாயத்தீர்ப்பின் கிரியைய செஞ்சுக்கிட்டிருக்காரு. அந்தப் புத்தகம் சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளப் பத்தினது. இது வேதாகமத்தப் பத்திய பல இரகசியங்கள வெளிப்படுத்துது. நான் தேவனோட புதிய கிரியையால ஈர்க்கப்பட்டுட்டிருக்கேன் சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையோட உறுப்பினர்கள நான் சந்திக்குறேன், அதனால், நிச்சயமா நான் பழைய திருச்சபையில ஆராதனைகளுக்குப் போறதில்ல. சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகள நீங்க வாசிச்சு, நீங்களே அதப் புரிஞ்சுக்கணும்” அப்படின்னு அவர்கிட்ட சொன்னேன். திருச்சபையோட வலைதளத்துக்கான லின்க்கை அவருக்கு அனுப்பி வச்சேன். எனக்கு அதிர்ச்சி தரும் விதமா, கொஞ்ச நாள்லயே சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபைய அவதூறு செய்ய சிசிபி ஆன்லைன்ல பரப்புன பொய்களயும் வதந்திகளயும், திருச்சபை மேல கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்குன போலி ஜாயுவான் வழக்கு உட்பட மொத்தத்தையும் அவர் எனக்கு அனுப்பி வச்சாரு. என்னோட கணவர் பிலிப்பைன்ஸ சேர்ந்தவரா இருந்ததால, சீனாவுல எவ்வளவு போலி செய்திகள் இருக்குதுன்னு அவருக்குத் தெரியாது, அதனால அவர் அத சுலபமா ஏமாத்தப்பட்டாரு. அதனால நான் பதிலளிச்சு, “ஜாயுவான் வழக்கு சிசிபி நீதிமன்றத்துல விசாரிக்கப்பட்டுச்சு அதோடு சிசிபி நீதிமன்றங்கள் எல்லாமே அரசாங்கம் தன்னோட சர்வாதிகாரத்த தக்கவச்சுக்கறதுக்கான கருவிகள் மட்டுந்தான். அவங்களோட விசாரணைகளும் நியாயத்தீர்ப்புகளும் நம்பகத்தன்மை இல்லாதவையா இருக்குது. இத்தனை வருஷங்களா, உலகத்தயே அதிர வச்ச தியனன்மென் சதுக்க மாணவர் எதிர்ப்பாளர்கள் மற்றும் திபெத்திய எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற அநியாயமானதும், பொய்யானதுமா நிறைய வழக்குகள இட்டுக்கட்டியிருக்குது. முதல்ல அவங்க பொய்கள இட்டுக்கட்டி, உண்மைகளத் திரிச்சு, பொய்யான குற்றச்சாட்டுகள சுமத்துறாங்க, அதுக்கப்புறமா அவங்க வன்முறையயும் அடக்குமுறையயும் பயன்படுத்துறாங்க. எப்போதும் கருத்து வேறுபாடுகளக் களையறதுக்கான அவங்களோட தந்திரமா அது இருந்து வருது. அதுமட்டுமல்லாம, அது ஒரு நாத்திகக் கட்சி ஆட்சிக்கு வந்ததுலருந்து மத நம்பிக்கைகள அது கொடூரமா துன்புறுத்தியிருக்குது. ஒரு திருச்சபைய அவங்க கண்டனம் செய்யறதுல நாம எப்படி பங்கு வகிக்க முடியும்? உண்மதான், மேற்கத்திய அறிஞர்கள் இவங்களோட பொய்கள வெளிய கொண்டுவர்றதுக்கான தனி விசாரணைகள மேற்கொண்டிருக்காங்க” அப்படின்னு சொன்னேன். அதுக்கப்புறமா இத்தாலிய மத அறிஞர் பேராசிரியர் மாசிமோ இன்ட்ரோவைன் ஒரு மாநாட்டுல உரையாற்றுன வீடியோவ நான் அவருக்கு அனுப்பி வச்சேன். நான் அவர்கிட்ட, “அந்த வீடியோவப் பாத்ததுக்கப்புறமா உங்களுக்கு உண்மை புரியும். ஒரு ஜாயுவான் பிரதிவாதி நீதிமன்றத்துல, ‘சர்வவல்லமையுள்ள தேவனோட திருச்சபையோடு நான் ஒருபோதும் தொடர்புகொண்டிருந்ததில்ல’ அப்படின்னு சொன்னான். அவங்க திருச்சபையச் சேர்ந்தவங்க இல்லன்னு அவங்களே சொன்னாங்க. திருச்சபையும் அவங்கள அங்கீகரிக்கல. சொல்லப் போனா, சர்வ வல்லமையுள்ள தேவனோட திருச்சபையோடு அவங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்ல. ஆனால் அவங்களுக்குத் தொடர்பு இருந்துச்சுன்னு நீதிமன்றம் வலியுறுத்துச்சு. அவங்க தெரிஞ்சே உண்மைகளத் திரிச்சு திருச்சபைக்கு அவப்பெயர ஏற்படுத்துறதுக்காக வழக்குத் தொடர்ந்தாங்க! ஜாயுவான் வழக்கு கிறிஸ்தவங்களத் துன்புறுத்துறதுக்கான ஒரு சாக்குப்போக்கா சிசிபியால உருவாக்கப்பட்டதுங்கறத இது காட்டுது. மத நம்பிக்கைகளத் தகர்ப்பது அவங்களோட வழக்கமான தந்திரம்” அப்படின்னு சொன்னேன். ஆனா என்னோட கணவர் சிசிபியோட பொய்களால முழுசா அத நம்பிட்டாரு, நான் சொல்றதக் கேட்கல.

அதுக்கப்புறமா அவர் என்னோட விசுவாசத்தின் வழியில குறுக்கிடத் தொடங்கி, அவர் என்னோட ஒவ்வொரு அசைவயும் பாக்கறதுக்காக எங்களோட வீட்ல ஆறு கண்காணிப்பு கேமராக்கள பொருத்தினாரு. ஒரு நாள் சாயங்கால நேரத்துல, ஒரு கேமரா வழியா நான் ஒரு கூடுகையில கலந்திருந்ததப் பாத்துட்டாரு நான் ஏன் இன்னும் இந்தக் கூடுகைகள்ல கலந்துக்கறேன்னு கேட்டு சத்தம் போட்டுக்கிட்டு அறைக்குள்ள திடீர்னு புகுந்தாரு. நான், “இது அமெரிக்கா, விசுவாசிக்கறதுக்கான சுதந்திரம் உள்ள நாடு. இது சட்டத்தால பாதுகாக்கப்படுது. என்னோட விசுவாசத்தக் கடைப்பிடிப்பது சரியான விஷயம். நீங்க ஏன் என்னோட வழியில குறுக்க நிற்குறீங்க? சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் சுவிசேஷம் பல மேற்கத்திய நாடுகள்ல பரவியிருக்குது. அரிசோனாவச் சேர்ந்த திரு மற்றும் திருமதி ஷ்மிட் அவங்களும், சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியையை ஏத்துக்கிட்ட அனுபவங்களப் பத்திப் பேட்டி கெடுத்த டினா, சார்லி போன்றவங்களும் இங்க இருக்காங்க. கனடா, கியூபா, ஜப்பான், பிரான்ஸ், ரஷ்யா, தாய்லாந்து, ஆகிய நாடுகளோட சாட்சிகளும் இன்னும் பல நாடுகளோட சாட்சிகளும் இருக்குது. உலகம் முழுவதிலுமிருந்து கர்த்தரோட வருகைக்காக ஏங்குறவங்க சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பா வந்து அவரோட கிரியைய ஏத்துக்கிட்டாங்க. நாத்திக சிசிபி அரசாங்கத்தோட பொய்கள கண்மூடித்தனமா நம்பறதுக்குப் பதிலா அவரோட கிரியை என்ன சாதிச்சிருக்குது, அது தேவனோட சத்தம்தானா அப்படின்னு நீங்க ஏன் பாக்கக் கூடாது?” அப்படின்னு சொன்னேன். அவர் நான் சொல்றதக் கேட்கல, ஆனா என்னோட தொலைபேசியப் பிடிக்க வந்தாரு. அவரத் தடுக்க முயற்சி செஞ்சு, நான் அவரோட கையில அடிச்சேன். என்னைய பயமுறுத்துற மாதிரி, அவர் இத ஒரு சாக்காகப் பயன்படுத்திக்கிட்டு என்னையப் போலீசுல புகார் செஞ்சாரு. அதுக்கப்புறமா அவர் இரக்கமே இல்லாம சிரிச்சுக்கிட்டு, “உன்னோட தேவன் உன்கிட்ட இல்லயா? அப்படின்னா அவர உதவிக்குக் கூப்பிடு. எந்த நிமிஷமும் போலீஸ் வருவாங்க. இன்னைக்கு ராத்திரி உன்னைய யார் காப்பாத்துவாங்கன்னு பாக்கலாம்” அப்படின்னு சொன்னாரு. எனக்கு ஆத்திரமாவும் இருந்துச்சு கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு. சீனாவுல இருக்குற பல சகோதர சகோதரிகளப் போல நான் காவல்துறையால அழைத்துச் செல்லப்படுவேன்னு பயந்தேன். அப்போ தேவனோட வார்த்தைகள் எனக்கு ஞாபகம் வந்துச்சு: “மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் பிடிக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் நகரும், மாற்றம் பெறும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). உண்மையில எல்லாமே தேவனோட கரங்கள்ல இருக்குது, அவருக்கு எல்லாவற்றின் மேலயும் அதிகாரம் இருக்குது. அன்னைக்கு போலீஸ் என்னையக் கூட்டிட்டுப் போறதும் போகாமலிருப்பதும் முழுக்க முழுக்க தேவனிடத்திலதான் இருக்குது. தேவன் அதை அனுமதிச்சா, அதுல அவரோட சித்தம் இருக்கும், நான் அதுக்குக் கீழ்ப்படிவேன். என்னோட ஜெபத்த ஏறெடுத்ததுக்கப்புறமா நான் அவ்வளவா பீதி அடையல. அஞ்சு நிமிஷம் கழிச்சு போலீசார் வந்தாங்க, அவங்க நிலைமைய உணர்ந்தவுடன் அவங்க என்னையப் பத்திப் புரிஞ்சுக்கிட்டாங்க. அதிகாரிகள்ல ஒருத்தர், வெள்ளைக்காரரா இருந்தாரு. தான் சீனாவுல நேரத்த செலவிட்டிருந்ததாவும், மத நம்பிக்கைகள சீன அரசாங்கம் துன்புறுத்துறதப் பத்தித் தனக்குத் தெரியும்ன்னும் சொன்னாரு. எங்களோட உரையாடலுக்கப்புறமா, அதிகாரி என்னோட கணவர எச்சரிச்சு, “அமெரிக்காவுல நமக்கு மத சுதந்திரம் இருக்குது. உங்க மனைவியோட நம்பிக்கையில தலையிட உங்களுக்கு உரிமை இல்ல” அப்படின்னு சொன்னாரு. அதுக்கு அவரு, “அவளுக்கு விசுவாசம் இருக்கலாம், ஆனா அவள் வீட்ல ஆன்லைன் கூடுகைகள்ல கலந்துக்கக் கூடாது” அப்படின்னு பதில் சொன்னாரு. பிறகு அதிகாரி அவரை மறுபடியும் எச்சரிச்சு: “அவர் உங்களோட மனைவியும் இந்த வீட்டு அங்கத்தினருமா இருக்குறாங்க. வீட்ல கூடுகைகள்ல கலந்துக்க அவங்களுக்கு உரிமை இருக்குது-இது சட்டத்தால பாதுகாக்கப்படுது. வீட்ல கூடுகைகள்ல கலந்துக்கறத உங்களால தடுக்க முடியாது, அப்படிச் செய்யுறது அமெரிக்க சட்டத்த மீறுறதா இருக்குது” அப்படின்னு சொன்னாரு. போலீசார் போனதுக்கப்புறமா, என்ன நடந்துச்சுன்னு நான் மறுபடியும் யோசிச்சேன், அத நம்ப முடியல. பல வருஷங்களா நாங்க ஒண்ணா இருந்து வந்தோம், ஆனா எனக்கு விரோதமா போலீசாரக் கூப்பிட, சர்வவல்லமையுள்ள தேவன் மேல எனக்கு இருந்த விசுவாசத்த ஒரு சாக்காக அவர் பயன்படுத்திக்கிட்டாரு. எனக்குத் தெரிஞ்ச கணவர் எங்க போனாரு? அவர்கிட்ட மனிதத்தன்மை இல்ல. நான் கடந்து வந்தவைகளின் மத்தியில, தேவன் என் பக்கத்துல அமைதியா இருந்து என்னையப் பாதுகாத்தாருங்கறது எனக்குத் தெரியும். நான் தேவனுக்கு நன்றியுள்ளவளா இருந்தேன், அவரைப் பின்பற்றணும்ங்கற என்னோட தீர்மானம் வலுவடஞ்சுச்சு.

நான் என்னோட விசுவாசத்தப் பின்பற்றத் தீர்மானிச்சிருந்ததால, நாங்க பகிர்ந்துக்கிட்ட வங்கி கார்டுகளயும், கார் சாவிகள், எங்களோட கடையோட சாவி, என்கிட்ட இருந்த பணம் போன்ற எல்லாத்தயும் என் கணவர் எடுத்துக்கிட்டாரு. எங்களோட திருமண வாழ்க்கை முழுவதுமா, எங்களோட நிதியயும் தொழிலயும் நிர்வகிச்சது நான் ஒருத்தியாதான் இருந்து வந்தேன், ஆனா இப்போ அவர் அதயெல்லாம் என்கிட்ட இருந்து பறிச்சுக்கிட்டிருந்தாரு. அவர் எங்களோட இணைய சேவையயும் ரத்து செஞ்சாரு, அதனால என்னால ஆன்லைன் கூடுகைகள்ல கலந்துக்க முடியல, நான் உள்ள நுழைய முடியாதபடி முக்கிய படுக்கையறையோட கதவப் பூட்டிட்டாரு. அவர் என்னிடத்துல அதிகதிகமா அன்பில்லாதவரா மாறினாரு. சில நேரங்கள்ல அவர் எங்கே போறாருன்னு நான் அவர்கிட்ட கேட்பேன், அவர் கோபத்துல வேகமாக ஏதையாவது சொல்வாரு, “என் காரியத்துல தலையிடாதே—கேட்கறதுக்கு உனக்கு உரிமை இல்ல. நீ சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிக்க விரும்புனா, நீ இந்த வீட்டை விட்டு வெளியேறலாம். உன்னோட சொந்த வழியப் பாத்துக்கலாம். இனிமேல் நீ கடையில வேலை செய்யக் கூடாது. நீ அதுக்குப் பக்கத்துல எங்கயாவது போனேன்னு தெரிஞ்சா நான் போலீஸக் கூப்பிடுவேன்” அப்படின்னு சொன்னாரு. அவர் எங்களோட நண்பர்கள்கிட்டயும் ஆன்லைன்ல சொல்லப்பட்ட பொய்கள சரமாரியா பரப்புனாரு. அவங்கள்ல சிலர் என்னோட விசுவாசத்த விட்டுவிடச் சொல்லி என்னய வற்புறுத்தி தொடர்ந்து எங்க வீட்டுக்கு வந்தாங்க. ஒரு காலத்துல நிம்மதியா இருந்த எங்களோட வாழ்க்க கண்ணாபாபின்னான்னு நொறுங்கிப்போச்சு. அந்த நேரத்துல, நாங்க ஒண்ணா சேர்ந்து வாழுறதுக்காக, என்னோட கணவரோடு சேர்ந்து வியாபாரம் செய்ய என்னோட தொழில எப்படிக் கைவிட்டேன்னும், அது இந்த நகரத்துல எங்களோட கடைய வைக்க எப்படி உதவுச்சுன்னு நான் யோசிச்சுப் பாத்தேன். ஆனா விசுவாசத்துக்கும் குடும்பத்துக்கும் இடையிலான போராட்டத்துக்கு மத்தியில, எனக்கு உண்மையிலயே என்ன செய்யறதுன்னு தெரியல. நான் ரொம்ப பலவீனமா உணர்ந்தேன். எனக்கு எதுவுமே புரியல. எல்லா விசுவாசிகளும் கர்த்தரேட வருகைக்காக ஏங்குறாங்க இல்லையா? நான் கர்த்தரை வரவேற்று, விசுவாசத்தோடு சரியான பாதையில போனேன். அப்படியிருக்க, ஏன் யாருக்கும் புரியல? இப்படியெல்லாம் யோசிச்சப்ப என்னால அழாம இருக்க முடியல. அப்போது தேவனோட சில வார்த்தைகள நெனச்சுப் பாத்தேன். “நீங்கள் இன்று சுதந்தரித்தக் காரியங்கள் யுகம் முழுவதும் வாழ்ந்த அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், ஏன் மோசே மற்றும் பேதுருவைப் பார்க்கிலும் மகத்தானது. ஆசீர்வாதங்களை உங்களால் ஓரிரு நாட்களில் பெற முடியாது, அதைப் பெரிய தியாகத்தின் ஊடாகச் சம்பாதிக்க வேண்டும். இன்னும் விரிவாகச் சொன்னால், சுத்திகரிக்கப்பட்ட அன்பையும், ஆழமான விசுவாசத்தையும், நாம் அடைய வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கும் பல சத்தியங்களையும், நீதிக்காகப் பயமின்றி போராடுகின்ற மனதையும், தேவன் மீது மரணபரியந்தம் தொடர்ந்து அன்பையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் உறுதி இருக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?”). தேவனோட வார்த்தைகள் எனக்கு பலத்தக் கொடுத்துச்சு, ஜனங்களோட உண்மையான விசுவாசத்தயும் அன்பையும், நாம் எந்த சிரமங்கள எதிர்கொண்டாலும் அவர விட்டு ஒருபோதும் விலகக்கூடாதுங்கறதயும்தான் அவர் விரும்புறாருங்கறத நான் பாத்தேன். தேவனோட சத்தத்தக் கேட்கவும், கடைசி நாட்கள்ல கர்த்தரோட வருகைய வரவேற்கவும் அதிர்ஷ்டசாலியா இருந்தது தேவன் என் மேல வச்ச அன்பா இருந்துச்சு. கிறிஸ்துவப் பின்பற்றுறதுக்காக துன்பப்படுறது மதிப்புமிக்கதும் அர்த்தமுள்ளதுமா இருக்குது, அது நீதியின் நிமித்தமா துன்பப்படுவதா இருக்குது. கர்த்தராகிய இயேசுவப் பின்பற்றின சீஷர்கள நான் நெனச்சுப் பாத்தேன். அவங்க ரோமானியர்களால கொடூரமா துன்புறுத்தப்படட்டாங்க, மதத் தலைவர்களால கண்டனம் செய்யப்பட்டாங்க, சிலர் கர்த்தருக்காக இரத்த சாட்சிகளாவும் மரிச்சாங்க. அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க ஆனா கர்த்தர் அவங்கள நினைவு கூர்ந்தாரு. மெய்யான தேவனைப் பின்பற்றுறதுக்காக நான் தடுக்கப்படுறதயும் துன்புறுத்தப்படுறதயும் நெனச்சு வருத்தப்படக் கூடாதுங்கறதயும், ஆனா பூர்வ காலந்தொட்டு பரிசுத்தவான்களிடத்துலருந்து பாடம் கத்துக்கணும், எந்த கஷ்டத்தின் மத்தியிலயும் கடைசி வரை தேவனைப் பின்பற்றணும்ங்கறதயும் நான் உணர்ந்தேன்.

அதுக்கப்புறமா தேவனோட வார்த்தைகள் இன்னும் சிலத நான் வாசிச்சேன், “தேவன் ஜனங்களுக்குள் செய்யும் செயலின் ஒவ்வொரு படியிலும், அது வெளிப்புறமாக ஜனங்களுக்கு இடையிலான இடைபடுதல்களாக, மனுஷர்களின் ஏற்பாட்டினால் அல்லது மனுஷர்கள் தலையிடுவதால் நடப்பது போலிருக்கும். ஆனால் திரைக்குப் பின்னால், ஒவ்வொரு செயலும், மற்றும் நடக்கும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக சாத்தானால் செய்யப்பட்ட பந்தயமாகும், மேலும் ஜனங்கள் தேவனுக்கான தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டுகிறதாகும். உதாரணமாக, யோபு சோதிக்கப்பட்டபோது, திரைக்குப் பின்னால், சாத்தான் தேவனோடு பந்தயமிடுகிறான், மேலும் யோபுவுக்கு நேரிட்டவை அனைத்தும் மனுஷரின் செயல்களினால், மனுஷர் தலையிட்டதினால் நிகழ்ந்தவையாகும். தேவன் உங்களில் செய்யும் ஒவ்வொரு கிரியையின் பின்னணியிலும் தேவனுடன் சாத்தானின் பந்தயம் இருக்கிறது, அதன் பின்னால் அனைத்தும் ஒரு யுத்தம்தான். … தேவனும் சாத்தானும் ஆவிக்குரிய மண்டலத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும்போது, நீ எப்படி தேவனைத் திருப்திபடுத்த வேண்டும், எப்படி அவருக்கு உனது சாட்சியில் உறுதியாக நிற்க வேண்டும்? உனக்கு நேரிடும் ஒவ்வொன்றும் ஒரு பெரிய உபத்திரவம் என்றும் நீ சாட்சியாக நிற்கவேண்டும் என்று தேவன் விரும்புகிற நேரம் என்றும் நீ அறிந்திட வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்”). மெய்யான வழியை ஏத்துக்கிட்டு, தேவனோட புதிய கிரியையப் பின்பற்றுனதுக்கப்புறமா, என்னோட கணவர்தான் என் வழியில குறுக்கிட்டு அடக்குறதப் போல் தோனுச்சு, ஆனா அதுக்குப் பின்னாடி, என்னோட விஷயத்துல தலையிட சாத்தான் என்னோட கணவரைப் பயன்படுத்தி, மெய்யான வழிய விட்டுட்டு சாத்தானுக்கு அடிபணியச் செய்யறதுக்காக, என்னைய பயமுறுத்தறதுக்கு என்னோட கணவர் மேல எனக்கு இருந்த உணர்வுகளயும் தனிப்பட்ட நலன்களயும் பயன்படுத்திக்கிட்டு இருந்தான். அதனால நான் கடைசியா தேவனுக்குத் துரோகம் செய்திருப்பேன். இது சாத்தானோட தந்திரங்கள்ல ஒண்ணா இருந்துச்சு. அதே நேரத்துல, தேவனுக்கு எதிரா இருக்குற என்னோட கணவரோட பொல்லாத பக்கத்தக் காட்ட தேவன் இந்த சூழ்நிலையப் பயன்படுத்திக்கிட்டிருந்தாரு. திருச்சபையில அவர் பிரசங்கிச்சப்போ, அவர் சகிப்புத்தன்மையப் போதிச்சாரு, கர்த்தரோட வருகைக்காகக் காத்திருக்கச் சொன்னாரு. ஆனா கர்த்தரோட வருகையின் கிரியையால, அவர் அத ஆராய்ந்து பாக்கவே இல்ல அதோடு என்னைய ஒரு எதிரியப் போலவே நடத்தினாரு. அவர் வெறுத்தது என்னைய இல்ல—அவர் வெறுத்ததும் எதிர்த்ததும் தேவனைத்தான். அவர் இவ்வளவு காலமும் ஒரு அவிசுவாசியா இருந்தாரு. அவரோட செய்கைய நினைக்குறப்ப, அதுக்கப்புறம் எனக்கு வேதனையா இல்ல. எனக்கு ரொம்ப கோபம் மட்டும்தான் வந்துச்சு. நாங்க கணவன் மனைவியா இருந்தோம், ஆனா நாங்க வெவ்வேறு பாதையில இருந்தோம். இதுக்கப்புறமும் அவரால் என்னையக் கட்டுப்படுத்த முடியாதுன்னு எனக்குத் தெரியும். அவர் எவ்வளவு அதிகமா அடக்கினாரோ, அவ்வளவு அதிகமா சாட்சியா நின்னு சாத்தானை அவமானப்படுத்தறதுக்காக நான் தேவனைப் பின்பற்ற விரும்பினேன். நான் தேவனைப் பின்பற்ற விரும்புறது மட்டுமல்லாம, ஆனா கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்த சத்தியத்த நேசிக்கும் உண்மையான விசுவாசிகளோடு பகிர்ந்துக்க விரும்பினேன். இந்த எண்ணம் எனக்கு இதக் கடந்துபோகத் தேவையான பலத்தக் கொடுத்துச்சு. கொஞ்ச நாள்லயே, வீட்டுக்குப் பக்கத்துல இருந்த சந்தையிலயே ஒரு புது வேலை கிடச்சுச்சு, அதனால நான் அங்க வேலை செஞ்சு சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டேன். இது ஒரு கஷ்டமான வேலையா இருந்துச்சு, ஆனா தேவனோட வார்த்தைகள் என்னைய வழிநடத்துனதால நான் முற்றிலும் நிம்மதியா உணர்ந்தேன்.

ஆனா என்னோட கணவர் இன்னும் நிறுத்தல. என்ய விசுவாசிப்பத நிறுத்த வைக்குறதுக்காக, நான் வேலைக்கு எடுத்துட்டுப் போற சைக்கிள அவர் திருடிட்டுப் போயிட்டாரு அதோடு அங்க வேலை செய்ய எனக்குத் தடை விதிச்சாரு. என்னோட விசுவாசத்தக் கைவிடச் சொல்லி வாக்குவாதம் செய்யுறதுக்காக சில வாடிக்கையாளர்களயும் என்னோட பணியிடத்துக்கு அனுப்பினாரு. அது மட்டுமில்லாம, என்னோட விசுவாசத்துக்காக எங்களோட குடும்பத்த நான் கைவிடுறதா சொல்லி, அவர் என்னையப் பத்தித் திருச்சபையில பொய்களப் பரப்பினாரு. என்னோட முதலாளி அதத் தெரிஞ்சுக்கிட்டதும், அவங்க என்னைய வித்தியாசமா நடத்த ஆரம்பிச்சாங்க, அதுக்கப்புறம் என்னைய வேலையிலிருந்து நீக்கிட்டாங்க. அப்பத்தான், பிலிப்பைன்ஸ்ல இருந்த என்னோட மாமியார் எதிர்பாராத விதமா மரிச்சாரு. அதனால என்னோட கணவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்துச்சு. வேறு வழியில்லாம, என்னோட கைபேசியயும் கடையோட சாவியயும் என்கிட்டக் கொடுத்துட்டுப் போனாரு. அவர் அமெரிக்காவுக்குப் பொனதும், என்கிட்ட அவர் நடந்துக்கற விதம் ரொம்ப சாதுவாகிருச்சு. அதுக்கப்புறமா நான் ஆன்லைன் கூடுகைகள்ல சேர்றத அவர் அவ்வளவா எதிர்க்கல. அவர் உண்மையிலயே மாறிட்டாருன்னு நான் நெனச்சேன்.

ஆனா ஒரு நாள், தேவனோட கடைசி நாளின் கிரியையின் சுவிசேஷத்த அவரோட திருச்சபையில இருந்த ஒரு சகோதரியோடு நான் பகிர்ந்திருந்தேன்ங்கறத அவர் கண்டுபிடிச்சாரு, அவர் போதகர் மூலம் அவளைத் தொடர்புகொள்ள எனக்குத் தெரியாமலேயே போனாரு. அவள்கிட்ட எல்லாவிதமான பொய்களயும் சொன்னாரு அவள் அவரை நம்பிட்டாள், அதனால அவளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமப் போச்சு. அவர், “சர்வவல்லமையுள்ள தேவனை விசுவாசிப்பதுலருந்து உன்னை யாராலும் தடுக்க முடியாது. ஆனா என்னோட திருச்சபையிலருந்து ஜனங்களக் கூட்டிட்டுப் போக நான் உன்னைய அனுமதிக்க மாட்டேன். நீ இனி அங்க வரக்கூடாது, உன்னோட தொலைபேசிய நம்மளோட கடைக்குள்ள கொண்டுவரக் கூடாது. நீ மறுபடியும் அவங்களோட மெசேஜ்கள வாசிச்சா அல்லது அவங்களோட அழைப்புகளுக்கு பதிலளிச்சா, நான் உன்னைய வெளிய துரத்திருவேன்” அப்படின்னு என்னைய எச்சரிச்சாரு. அவரோட நடத்தை அதிர்ச்சியாவும் கோபப்படுத்தறதாவும் இருந்துச்சு. அந்த சில மாதங்கள்ல, நான் அவர்கிட்ட ரொம்ப பொறுமையா இருந்து வந்தேன். அது என்னைப் பத்தியும் தேவனோட கிரியையப் பத்தியும் அவரோட அணுகுமுறைய மாத்திக்கறதுக்கான தாக்கத்த அவரிடத்துல ஏற்படுத்தியிருக்கணும் என்னோட கணவர் இவ்வளவு பிடிவாதமா இருப்பார்ன்னு ஒருபோதும் நான் நினைக்கல. உலகத்துக்கு அவர் முற்றிலும் பொய்யான முகத்தக் காட்டினாரு. அவர் என்னோட விசுவாசத்தப் பகிர்ந்துக்கல, மத்தவங்களோடு பகிர்ந்துக்கவிடாமலும் என்னைத் தடுத்து, வெட்கமில்லாம சகோதர சகோதரிகளிடத்துல உரிமை கோருறாரு. தேவனோட ஆடுகளை அபகரிக்க வெட்கமில்லாம முயற்சி செய்யறதா அது இல்லையா? தேவனோட ஆடுகள் தேவனோட சத்தத்தக் கேட்டு அவரோட வீட்டுக்குத் திரும்பி வருகின்றன. அது சரியானதும் இயல்பானதுமாகும். விசுவாசம்ங்கறது ஒரு சுதந்திரமான விஷயம், ஆனா சகோதர சகோதரிகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய எதையும் செய்ய அவர் போதகரோடு இணைஞ்சு செயல்படுறாரு. அதனால அவங்க கடைசி நாட்களின் தேவனோட சுவிசேஷத்தக் கேட்கத் துணியாதபடி ஜனங்களத் தவறாக வழிநடத்துறதுக்காக பொய்களப் பரப்புறாரு. அவர் திருச்சபைய மூச்சுத்திணற வச்சு, பட்டினி போடுறாரு, ஜனங்களோட இரட்சிப்பின் வாய்ப்ப அழிச்சுக்கிட்டிருந்தாரு! கர்த்தராகிய இயேசு பரிசேயர்களக் கடிஞ்சுக்கிட்டதப் பத்தி இது என்னைய சிந்திக்க வச்சுச்சு: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை(மத்தேயு 23:13). சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் ‘நல்ல அமைப்பாகத்’ தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்”). அவரோட அந்த வார்த்தைகளயும் செயல்களயும் நான் நேர்ல பாத்திருக்கலேன்னா, தொண்டு நிகழ்வுகள ஏற்பாடு செஞ்ச ஒருத்தர், ரொம்ப பக்தியுள்ளவரா தோன்றுனவரும் உயர்வா எண்ணப்பட்டவருமான ஒருத்தர், கர்த்தரோட வருகையின் கிரியைய ஆராய்ஞ்சு பாரக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ மறுப்பாருங்கறது மட்டுமல்லாம திருச்சபை முழுவதுமா பொய்களப் பரப்புவாருங்கறதயும், மத்தவங்கள ஏமாத்தி, தேவனிடத்துல திரும்பவிடாம தடுப்பாருங்கறதயும் என்னால கற்பனை கூட செஞ்சிருக்க முடியாது. 2,000 ஆண்டுகளுக்கு முன்னாடி கர்த்தராகிய இயேசுவை சிலுவையில அறைஞ்ச பரிசேயர்களுக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு இருக்குது? அவங்க ஜனங்களோட ஆத்துமாக்கள விழுங்கும் பிசாசுகளான நிஜ அந்திக்கிறிஸ்துகளா இருக்காங்க. என் கணவரோட சாராம்சத்தின் முழுமையான உண்மைய நான் பாத்தேன், அவர் ஒரு திருத்த முடியாத பிசாசா இருந்தாரு. விசுவாசிகளும் அவிசுவாசிகளும் ஒத்துப்போறதில்ல. அதுக்கப்புறமும் என்னைய அவரால கட்டுப்படுத்த முடியல. இதையெல்லாம் நெனச்சுப் பாக்குறப்போ, என்னோட விசுவாசத்துக்காகவும் சத்தியத்தப் பின்தொடர்வதுலயும் அதிக நேரத்த செலவிட நான் தீர்மானிச்சேன் அதோடு என்னோட கணவர் என்னைய எப்படி நடத்தினாலும், நான் சர்வவல்லமையுள்ள தேவனைப் பின்பற்றத் தீர்மானிச்சேன்.

ஒரு நாள், விவாகரத்து வழக்கத் தொடங்க விவாகரத்து வழக்கறிஞர் ஒருத்தரக் கூட்டிட்டு வந்தாரு ஒரு மாசத்துக்குள்ள நான் வெளியேறணும்னு கோரிக்கை வச்சாரு. நான் உண்மையிலயே பெலனில்லாதவளா உணர்ந்தேன். நான் எங்க வாழ்வேன்? நான் அலைந்து திரிபவளா ஆவேனா? சகோதர சகோதரிகளுடனான என்னோட தொடர்பை துண்டிக்க முயற்சி செஞ்சு அவர் மறுபடியும் ஒருதடவ எங்களோட வீட்டு இணைய இணைப்பையும் ரத்து செஞ்சாரு. எல்லா நேரங்கள்லயும் கூடுகைகள்ல கலந்துக்க பொது இணைப்புகளப் பயன்படுத்துறதக்காக வெளிய போறதத் தவிர எனக்கு வேற வழியில்ல. என்னோட வாழ்க்கை நெருக்கடியில இருந்துச்சு. வருமானம் இல்லாம, சாப்பாடு, தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் சந்திக்கப்படுவது சிக்கலாகிடும். இதுபோன்ற கடினமான காலங்கள நான் ஒருபோதும் சந்திச்சதில்ல நான் எப்படி சமாளிப்பேன்னு எனக்குத் தெரியல. நான் உண்மையிலயே மனமுடஞ்சு வேதனையில இருந்தேன். இத ஒரு சகோதரி தெரிஞ்சுக்கிட்டதும், அவங்க எனக்கு தேவனோட வார்த்தைகள அனுப்பி வச்சாங்க. “சோதனைகளுக்கு உள்ளாகும்போது, ஜனங்கள் பலவீனமாக இருப்பது அல்லது அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணம் இருப்பது அல்லது தேவனுடைய சித்தம் அல்லது நடப்பதற்கான அவர்களுடைய பாதை குறித்து தெளிவு இல்லாதிருப்பது ஆகியவை இயல்பானவை. எப்படியிருந்தாலும், நீ தேவனுடைய கிரியையில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும். யோபுவைப் போலவே தேவனை மறுக்கக்கூடாது. … உன் அனுபவத்தில், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் நீ எந்தச் சுத்திகரிப்புக்கு உட்பட்டாலும், மனிதகுலத்திடம் தேவன் விரும்புவது என்னவென்றால், சுருக்கமாகச் சொல்வதானால், அவர்களுடைய விசுவாசமும், அவர்மீதுள்ள அன்புமாக இருக்கின்றன. இவ்வாறு கிரியை செய்வதன் மூலம் அவர் ஜனங்களின் விசுவாசம், அன்பு மற்றும் விருப்பங்களைப் பரிபூரணப்படுத்துகிறார்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்”). இத வாசிச்சதுக்கப்புறம் எனக்குப் புரிஞ்சுச்சு என்னோட கணவர் என்னைய விவாகரத்து செய்யுறதா மிரட்டுறது தேவன் அனுமதிச்ச ஒண்ணா இருந்துச்சு. தன்னோட சோதனைகள் வழியா யோபு கடந்துபோனப்ப, கொள்ளையர்கள் அவன்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாங்க, அவனோட பிள்ளைகள் மரிச்சுப்போனாங்க. அவனும் கொப்புளங்களால் மூடப்பட்டு சாம்பற்குவியல்ல உட்கார்ந்தாரு. அவனோட மனைவி அவனை நிராகரிச்சு, அவனோட விசுவாசத்தக் கைவிட்டுட்டு மரிக்கச் சொன்னாள். அவனோட நண்பர்கள் அவனை நியாயந்தீர்த்து பரியாசம் செஞ்சாங்க. இந்த எல்லா உபத்திரவங்களுக்கும் எல்லாத் துன்பங்களுக்கும் மத்தியில, யோபு இன்னும் தேவனைத் துதிச்சாரு: “யேகோவா கொடுத்தார், யேகோவா எடுத்துக்கொண்டார்; யேகோவாவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (யோபு 1:21). இதுதான் உண்மையான விசுவாசம். ஒரு காலத்துல, எது எப்படி இருந்தாலும் சரி, நான் தேவனைத் தொடர்ந்து பின்பற்றிக்கிட்டே இருப்பேன்னு சொல்லி நான் தேவனுக்கு முன்பா ஒரு உறுதியான தீர்மானத்த எடுத்திருந்தேன். ஆனா என்னோட சொந்த வாழ்க்கைக்கு ஆபத்து வருவிக்கும் என் கணவரோட அச்சுறுத்தல்கள எதிர்கொண்டப்போ, நான் எதிர்மறையாகி வேதனையில தவிச்சேன். எனக்கு தேவன் மேல உண்மையான விசுவாசம் இல்லங்கறத நான் பாத்தேன். தேவனுக்குத் துரோகம் செய்யவும் அவரைக் கைவிட வைக்கவும் என் கணவர் என்னைய விவாகரத்து செய்து விடுவதா மிரட்டினாரு. சாத்தானோட சூழ்ச்சிக்கு என்னால இரையாக முடியல. நான் எப்படிப்பட்ட சூழ்நிலைய எதிர்கொண்டாலும் சரி, நான் தேவனைப் பின்பற்றணும்ங்கறதும், சாட்சியா நிற்கணும்ங்கறதும், சாத்தானுக்கு அவமானத்தக் கொண்டுவரணும்ங்கறதும் எனக்குத் தெரியும்.

கொஞ்ச நாள் கழிச்சு எனக்கு வேலை கிடைச்சுச்சு அதனால கூடுகைகள்ல கலந்துக்கவும் என்னோட கடமையச் செய்யவும் இணைய பயன்பாட்டு அட்டைகள என்னால வாங்க முடிஞ்சுச்சு. என் மனசுக்குக் கொஞ்சம் இலகுவா இருந்துச்சு. அதுக்கப்புறமா, விவாகரத்து பத்திரத்துல நான் நிதானமா கையெழுத்து போட்டேன், என் கணவரோட கட்டுப்பாடுகள்ல இருந்து முழுசா சுதந்திரம் பெற்றுக்கிட்டேன். என்னோட விசுவாசத்த என்னால சுதந்திரமா கடைப்பிடிக்க முடியும். நான் என்னோட கடமையத் தொடர்ந்து செஞ்சு, சுவிசேஷத்தப் பகிர்ந்துக்கிட்டேன், என்னோட நிதி முன்னாடி இருந்தத விட குறைவா இருந்தாலும், கவலையில்லாம என்னோட கடமைய என்னால செய்ய முடிஞ்சுச்சு. எனக்கு சந்தோஷமும் சமாதானமும் கிடச்சுச்சு தேவனைப் பின்பற்றி சரியான பாதையில போறது வாழுறதுக்கான அதிக அர்த்தமுள்ள வழிங்கறத நான் உணர்ந்தேன்! வீட்ல நடந்த இந்த ஆவிக்குரிய யுத்தம் முழுவதுலயும் சாட்சியா நிக்க எனக்கு உதவுனதுக்காக நான் தேவனுக்கு நன்றி சொல்லுறேன்!

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

இன்று கத்தோலிக்க திருப்பலி: எனக்கும் பரலோக ராஜ்யத்திற்கும் இடையில் யார் நிற்கிறார்கள்?

நான் ஒரு கத்தோலிக்க திருச்சபைய சேர்ந்தவளாக இருந்தேன். நான் சிறு வயதில் ஒரு கத்தோலிக்க பள்ளிக்குச் சென்றேன், ஆலய காரியங்கள்ல நான் எப்போதும்...

என் போதகர் எனக்கும் தேவனுடைய ராஜ்யத்திற்கும் இடையில் நின்றார்

2020, நவம்பர் மாசத்துல, ஒரு சகோதரர் இணையதள கூடுகையில சேர என்னை அழைச்சாரு. நான் என்னோட திருச்சபையில ஆவிக்குரிய வாழ்வாதாரத்தக் கொடுக்காத அதே...

பரலோக ராஜ்யத்திற்கான பாதையில் என் வழியில் குறுக்கே நிற்பது யார்?

2020 ஆம் வருஷம் ஆகஸ்ட் மாசத்துல, சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் ஆன்லைன் கூடுகைக்கு ஒரு சகோதரி என்னையக் கூப்பிட்டாரு....