ஒரு மருத்துவரின் தெரிவு

நவம்பர் 22, 2023

என்னோட சின்ன வயசுல என்னோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துச்சு. என்னோட அம்மா முடக்குவாதத்துல கிடந்து, படுத்த படுக்கையாகி, வருஷம் முழுவதும் மருந்து சாப்பிட்டாங்க. என்னோட அப்பா பல வருஷங்களா கிராமத்துக்கு வெளிய வேலை செஞ்சாரு. கிராம ஜனங்கள் எங்கள இழிவாப் பாத்தாங்க, என்னோட சகோதரனும் சகோதரியும் கிராமத்துல இருக்குற பொல்லாதவங்களால அடிக்கடி கொடுமைப்படுத்தப்பட்டாங்க. எனக்கு ஏழு வயசா இருந்தப்போ, கிராமத்துல ஒரு ரவுடியால துரத்தப்பட்டு அடிக்கப்பட்டேன். நான் ரொம்ப பயந்தேன், எனக்கு இருதய நோய் ஏற்பட்டுச்சு. எங்ககிட்ட சிகிச்சைக்குப் பணம் இல்லாததால, பின்விளைவுகள் ஏற்பட்டு இருந்துச்சு. அதனால, அந்த நிமிஷத்துல இருந்து, நான் என்னோட மனசுல, நான் வளர்ந்ததுக்கப்புறமா, நான் ஒரு சிறந்த மருத்துவராகி, என்னோட அம்மாவயும் என்னையும் குணப்படுத்திக்குவேன்னும், நான் நிறைய பணம் சம்பாதிப்பேன்னும் உறுதி செஞ்சுக்கிட்டேன், அதனால என்னோட குடும்பம் நல்ல வாழ்க்கைய வாழவும் மரியாதைக்குரியதா இருக்கவும் முடியும்.

மருத்துவப் பள்ளியில பட்டம் பெற்றதுக்கப்புறமா, நான் ஒரு நகர்ப்புற சுகாதார மருத்துவ மையத்துல வேலை செய்ய நியமிக்கப்பட்டேன். ஒரு சிறிய மருத்துவ மையத்துல வேலை செய்யறதுல எனக்கு திருப்தி இல்ல. அதனால என்னோட தொழில்முறை திறன்கள மேம்படுத்தவும், நகர மருத்துவமனைக்கு மாறுதல் பெறவும் நான் சிறப்பா செயல்பட்டேன். இது நடக்கணும்ங்கறதுக்காக, நான் மேற்படிப்புக்கு ஒரு பெரிய மருத்துவமனைக்குப் போனேன், அதோடு செய்முறைப் பயிற்சியயும் படிச்சேன். மருத்துவ மையத்துக்குத் திரும்பி வந்ததுக்கப்புறமா, பதவி உயர்வு பெற, நான் ரொம்ப கடினமா உழைச்சேன். நான் கிட்டத்தட்ட ராத்திரியும் பகலுமா வேலை செஞ்சேன், தினமும் நான் ரொம்ப சோர்வா இருந்தேன், என்னோட முதுகு வலிச்சுச்சு. வீட்டுக்குத் திரும்பி வந்ததுக்கப்புறமா, படுக்கையில விழுவதத் தவிர என்னால எதுவும் செய்ய முடியல. கடைசியா, நகரத்துல இருக்குற ஒரு சிறப்பு மருத்துவமனைக்கு வேலைக்காக மாறுதலப் பெற்றேன். மூணு வருஷங்களுக்கப்புறம், நான் மறுபடியும் பதவி உயர்வு பெற்று, இந்த தடவ மருத்துவரா ஆனேன். நான் மனச்சாட்சியோடும் பொறுப்போடும் வேலை செஞ்சதால, என்னோட திறமைகள் ரொம்பவே சிறப்பானதா இருந்துச்சு, நான் மருத்துவமனையில ரொம்ப பிரபலமானவளா இருந்தேன், நிறையப் பேர் என்னையப் பாக்க வந்தாங்க. மெதுவா, நான் அதிக பணத்த சம்பாதிச்சேன், அதோடு என்னோட சகோதரனோட வியாபாரத்துக்கும் பணம் கொடுத்தேன். என்னோட மாமியார் என்னையப் மத்தவங்க முன்னாடி அடிக்கடி பாராட்டினாங்க, என்னோட கணவரும் என்னை ரொம்ப விரும்பினாரு. இவை எல்லாமே என்னோட ஆசைய ரொம்பவே நிறைவேத்துச்சு, நான் ஒரு அற்புதமான வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருந்தேன்னு நெனச்சேன்.

ஆனா இவை எல்லாத்தயும் இழக்கக் கூடிய ஒரு நிலை வந்துச்சு. என்னோட ரொம்ப கால வேலை பாரத்தினாலும் ஒழுங்கற்ற வேலை மற்றும் ஓய்வு நேரமில்லாத காரணத்தினாலும், எனக்கு தூக்கமின்மை நிலை வந்துச்சு. இது படிப்படியா மோசமடைஞ்சுச்சு, எந்த மருந்தும் சிகிச்சையில பலனளிக்கல. அதுக்கப்புறம், எனக்கு வயிற்றுப் பிரச்சினைகளும் இடுப்பு எழும்பு பாதிப்பும் ஏற்பட்டுச்சு, கொஞ்ச நாள்லயே, எனக்கு இதயப் பிரச்சனையும் இருந்துச்சு. குழந்த அழுகறதக் கேட்டவுடனே, எனக்குத் தலைவலி ஏற்பட்டுச்சு, என்னோட இருதயம் படபடத்துச்சு, என்னோட கைகள் நடுங்குச்சு. மாகாண மருத்துவமனை வல்லுநர்கள் இதை வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் இதய நோய்ன்னு கண்டுபிடிச்சாங்க, அதாவது சின்ன தூண்டுதலக் கூட என்னால கையாள முடியலன்னு அர்த்தம், அதோடு குணப்படுத்துறதுக்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எதுவும் இல்ல. சிறப்பு இருதய சிகிச்சை மூலம் மட்டுமே இதக் கட்டுப்படுத்த முடியும். அவங்களோட வார்த்தைகள் அதிர்ச்சியளிக்கறதப் போல இருந்துச்சு. எனக்கு நம்பிக்கையே இல்ல. நான் ரொம்ப இளமையா இருந்தேன், ஆனாலும் எனக்கு குணப்படுத்த முடியாத நோய் இருந்துச்சு. பணமும் புகழும் இருந்து என்ன பயன்? அவை என்னோட வலிய கொஞ்சம் கூட குறைக்கலயேன்னு நான் நெனச்சேன். அப்பத்தான், நான் தினமும் மத்தவங்களோட நோய்களுக்கு சிகிச்சை அளிச்சேன், ஆனா என்னோட சொந்த நோய என்னால குணப்படுத்த முடியலயேன்னு நெனச்சேன். நான் குறிப்பா வேதனையாவும் மனச்சோர்வையும் உணர்ந்தேன். ராத்திரியில எனக்குத் தூக்கம் வராதப்போ, நான் மேற்கூரையப் பார்த்துக்கிட்டு மௌனமா கண்ணீர் வடிப்பேன். இப்படி வாழ்ந்தத ரொம்ப கடினமானதாவும் சோர்வடையச் செய்யுறதாவும் உணர்ந்தேன். குறிப்பா, நான் உதவியற்றவளா உணர்ந்தேன். எனக்கு இந்த நோய் வந்தப்ப, என்னோட வாழ்க்கை அப்பத்தான் ஆரம்பமாகியிருந்துச்சு, எதிர்காலத்துல நான் எப்படி வாழ்வேன்னு எனக்குத் தெரியலயேங்கறதப் போல அப்படின்னு நெனச்சேன். இப்படியே நடந்துக்கிட்டு இருந்தா என்ன பயன்?

நான் வலியிலயும் உதவியற்றவளாவும் இருந்தப்போ, கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பு எனக்குக் கிடைச்சுச்சு. கர்த்தரை விசுவாசிச்சதுக்கப்புறமா, என்னோட பல வருட இதய பிரச்சனையும் தூக்கமின்மையும் அற்புதமா குணமடைஞ்சுச்சு. இவ்வளவு மகத்தான கிருபைய எனக்குக் கொடுத்த கர்த்தருக்கு நான் ரொம்ப நன்றியுள்ளவளா இருந்தேன். கர்த்தருடைய அன்பத் திரும்பச் செலுத்தும்படி, நான் கூடுகைகளுக்குப் போனேன் அதோடு சுவிசேஷத்தப் பிரசங்கிச்சேன். ஜூலை 2006ல, நான் சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கிட்டு, கர்த்தரோட வருகைய வரவேற்றேன். நான் ரொம்ப உற்சாகமா இருந்தேன். சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தையப் புசிச்சுப் பானம்பண்ணுறதன் மூலமா, தேவனோட மூன்று கட்ட கிரியைகளோட இரகசியத்தயும், தேவனோட நிர்வாகத் திட்டத்தின் நோக்கத்தயும், அதோடு, பாவத்துலயிருந்தும் சாத்தானோட அந்தகார ஆதிக்கத்துலயிருந்தும் நம்மள இரட்சிக்கவும், தேவனால இரட்சிக்கப்படுறதுக்கு நமக்கு உதவவும் கடைசியா நம்மள தேவனோட ராஜ்யத்திற்குள்ள கொண்டு சேர்க்கவும் தேவன் கடைசி நாட்கள்ல நியாயத்தீர்ப்பு கிரியையச் செய்யுறாருங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன். தேவனோட வார்த்தைகள்ல, இரட்சிக்கப்பட்டு பரலோகராஜ்யத்துக்குள்ள பிரவேசிக்குறதுக்கான விசுவாசத்த நான் பாத்தேன், அதோடு சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தை பசியால வாடுற என்னோட ஆத்துமாவுக்கு உணவா இருந்துச்சு. ஒரு நாள், சர்வவல்லமையுள்ள தேவனோட வார்த்தைகளின் இந்தப் பத்திய நான் வாசிச்சேன், “உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஓர் எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானரை நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு விண்கல் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்தப் பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷமாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?”). தேவனோட வார்த்தை என்னைய ஊக்கப்படுத்துச்சு. இன்னும் இருளில் இருப்பவங்களும், தேவனோட தோன்றுதலுக்காக அதிகமா ஏங்குறவங்களும், தேவனோட வீட்டுக்குத் திரும்பி வந்து, தேவனோட இரட்சிப்ப ஏத்துக்கும்படியும், அதுக்கப்புறமும் சாத்தானோட தீங்குகள அனுபவிக்காம இருக்கும்படியும் நாம எழுந்து தேவனோட சுவிசேஷத்தப் பரப்புவோம்ன்னு அவர் எதிர்பாக்குறாரு. மனிதகுலத்தின் மீதான தேவனோட அன்பு உண்மையிலயே ரொம்ப பெருசு! கர்த்தரோட சத்தத்தக் கேட்டு அவரை வரவேற்குற பாக்கியம் எனக்குக் கிடைச்சது எவ்வளவு அதிஷ்டம்ன்னு நான் நெனச்சப்போ, நான் வழக்கமா போற திருச்சபையில இருந்தவங்களுக்கு சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு, தேவன் திரும்பி வந்திருந்தாருன்னு சொல்ல விரும்பினேன். அதனால, நான் என்னோட வேலையச் செஞ்சுக்கிட்டே சுவிசேஷத்தப் பிரசங்கிச்சேன். அந்த நேரத்துல, பரிசுத்த ஆவியானவரோட மகத்தான கிரியையால, நான் வழக்கமா போய்க்கிட்டு இருந்த பிரிவோட அஞ்சு திருச்சபைகளோட தலைவர்கள் சக ஊழியர்கள் அதோடு சில விசுவாசிகள் எல்லாருமே தேவனோட புதிய கிரியைய ஏத்துக்கிட்டு புதிய திருச்சபைய உருவாக்கினாங்க. நான் ஒரு உதவிப் போதகரா தேர்ந்தெடுக்கப்பட்டு திருச்சபைப் பணிகளுக்கு பொறுப்பாளியானேன். நான் தேவனோட ஆசீர்வாதத்தயும் வழிகாட்டுதலயும் பார்த்தேன், இது என்னைய ரொம்ப உற்சாகப்படுத்துச்சு. நான், “அதிகமான ஜனங்களை தேவனோட வீட்டுக்குத் திருப்பி கூட்டிக்கிட்டு வரும்படி சபையின் பணியச் செய்ய என்னால முடிஞ்சவரை முயற்சி செய்வேன்” அப்படின்னு நெனச்சேன்.

மார்ச் 2007ல, ஒரு நாள், மேற்பார்வையாளர் என்கிட்ட, அவங்க என்னைய ஒரு திருச்சபைத் தலைவியா இருக்கும்படி பயிற்சிகொடுக்க விரும்புறதா சொன்னாரு. நான் கொஞ்சம் தயங்கினேன். அதுக்கு அர்த்தம் என்னன்னா, வேலைக்குப் போக எனக்கு நேரமில்லாமப் போகலாம், அதோடு நான் தொடர்ந்து வேலை பாக்க முடியாமப் போகலாம். அப்படின்னா என்னோட இத்தனை வருஷ உழைப்பும் வீணாகிப் போயிருச்சு இல்லயா? அதுமட்டுமல்லாம, என்னோட கணவர் நிச்சயமா என்னயத் தொந்தரவு செய்வாரு. அதனால, இத மனசுல வச்சுக்கிட்டு, நான் அந்த நேரத்துல அந்தக் கடமையை ஏத்துக்கல. அதுக்கப்புறம், குறிப்பா நான் குற்ற உணர்ச்சிய உணர்ந்தேன். நான் தேவனுக்கு கடன்பட்டிருக்குறேன்னு எப்பவுமே உணர்ந்தேன். என்னை அறிஞ்சுக்க எனக்கு வழிகாட்டும்படி கேட்டு நான் தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் ஜெபிச்சதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய வாசிச்சேன். “இப்போது நான் உங்கள் முன் கொஞ்சம் பணத்தை வைத்து, அதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தையும் கொடுத்து, நீங்கள் தேர்வு செய்வதை நான் கடிந்துகொள்ளவில்லை என்றால், உங்களில் பலர் பணத்தைத் தேர்வு செய்து சத்தியத்தை விட்டுவிடுவீர்கள். உங்களில் சிறந்தவர்கள் பணத்தை விட்டுவிட்டு, தயக்கத்துடன் சத்தியத்தைத் தேர்வு செய்வார்கள், அதே நேரத்தில் சிலர் பணத்தை ஒரு கையிலும் சத்தியத்தை ஒரு கையிலும் எடுப்பார்கள். இதன்மூலம் உங்கள் உண்மையான நிறங்கள் தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் சத்தியத்தையும் மற்றும் நீங்கள் விசுவாசமாக இருக்கும் எதையேனும் தேர்வு செய்யும்போது, நீங்கள் அனைவரும் இதையே தேர்வு செய்கிறீர்கள், உங்கள் நடத்தை மாறாமல் அப்படியே இருக்கும். அது அப்படியல்லவா? சரியானதற்கும் தவறுக்கும் இடையில் ஊசலாடும் பலர் உங்கள் மத்தியில் இல்லையா? நேர்மறை மற்றும் எதிர்மறை, கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிகளில், குடும்பம் மற்றும் தேவன், குழந்தைகள் மற்றும் தேவன், அமைதி மற்றும் சஞ்சலம், செல்வம் மற்றும் வறுமை, அந்தஸ்து மற்றும் எளிமை, ஆதரிக்கப்படுதல் மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் மற்றும் பலவற்றுக்கு இடையிலான விருப்பத்தேர்வுகளைப் பற்றி நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள். … பல வருட அர்ப்பணிப்பும் முயற்சியும் உங்களுடைய கைவிடுதலையும் அவநம்பிக்கையையும் தவிர வேறொன்றையும் எனக்குத் தரவில்லை, ஆனால் உங்களுக்கான என் நம்பிக்கைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன, ஏனென்றால் எனது நாளானது அனைவருக்கும் முன்பாக முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நீங்கள் இருளான மற்றும் தீய காரியங்களை நாடுவதிலேயே தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள், அவற்றின் மீதான உங்கள் பிடியைத் தளர்த்த மறுக்கிறீர்கள். அப்படியானால், உங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் இதை எப்போதாவது கவனமாகச் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீண்டும் தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்கள் கருத்து என்னவாக இருக்கும்?(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ யாருக்கு விசுவாசமாக இருக்கிறாய்?”). குறிப்பா, நான் தேவனோட வார்த்தைகள சிந்திச்சப்போ, நான் வெட்கப்பட்டேன். தேவன் என்னைய நேருக்கு நேர் நியாயந்தீர்த்ததப் போல இருந்துச்சு. நான் தேவனை திருப்திப்படுத்தணும்னு சொன்னேன், ஆனா நான் உண்மையிலயே ஒரு தெரிவு செய்ய வேண்டியிருந்தப்போ, பொறாமைப்படத்தக்கதான மருத்துவத் தொழிலத் தக்க வச்சுக்கறதுக்காக, என்னோட கடமையை நிராகரிச்சேன். நான் ரொம்ப பொக்கிஷமா கருதுனது தேவனை அல்ல, கௌரவத்தயும் அந்தஸ்தயும்தான்ங்கறதப் பாத்தேன். நான் சாத்தானைப் பின்தொடர்ந்துக்கிட்டு, சாத்தானுக்கு உண்மையா இருந்து, தேவனுக்கு எதிரா கலகம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். குறிப்பா, இதப் பத்தி நான் நெனச்சப்போ, நான் குற்ற உணர்வடைஞ்சேன். நான் உண்மையிலயே ஒரு வித்தியாசமான தெரிவை செய்ய விரும்பினேன், என்னோட வேலைய விட்டுட்டு, தேவனுக்காக அர்ப்பணிக்க விரும்பினேன். ஆனா நான் என்னோட வேலைய விட்டுட்டா, என்னோட குடும்பத்தினர் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கங்கறது எனக்குத் தெரியும், அப்பவும் என்னால அத விட்டுட முடியல. என்னைய வழிநடத்தி வழிகாட்டுமாறு தேவனிடத்துல கேட்டு, தேவனுக்கு முன்பா வந்து ஜெபிக்க மட்டுந்தான் என்னால முடிஞ்சுச்சு. நான் ஜெபிச்சதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் அந்தப் பாட்ட சிந்திச்சுப் பாத்தேன், “மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை.” “நீ ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம். நீ நிச்சயமாக தேவனை ஆராதித்து அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடர வேண்டும். நீ ஒரு மனுஷன் என்பதால், நீ தேவனுக்காக உன்னையே பயன்படுத்தி எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இன்றைய நாளில் நீ உட்படுத்தப்பட்ட சிறிய துன்பங்களை மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் ஏற்றுக் கொண்டு, யோபு மற்றும் பேதுருவைப் போல அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். நீங்கள் சரியான பாதையைப் பின்பற்றுபவர்கள், முன்னேற்றத்தை நாடுபவர்கள். நீங்கள் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் தேசத்தில் எழும்பினவர்கள், நீதியுள்ளவர்கள் என்று தேவனால் அழைக்கப்படுபவர்கள். இதுவே மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை அல்லவா?(ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்). நான் இந்தப் பாட்டப் பாடுனப்போ, என்னோட இருதயத்துல ஒரு சுய குற்ற உணர்வ உணர்ந்தேன். நான் சிருஷ்டிக்கப்பட்ட ஒருத்தி, என்கிட்ட இருக்குற எல்லாமே தேவனிடத்துலயிருந்து வந்தவை. நான் தேவனோட எல்லையற்ற கிருபைய அனுபவிச்சிருக்கேன், நான் தேவனிடத்துலயிருந்து நிறைய ஜீவ வார்த்தைகளின் ஆதாரத்தப் பெற்றிருக்கேன், ஆனாலும் நான் தேவனோட அன்ப திருப்பிச் செலுத்த விரும்பல. என்னோட சொந்த வேலைக்காகவும் எதிர்காலத்துக்காகவும், நான் உண்மையிலயே கடமைய மறுத்துட்டேன். எனக்கு மனசாட்சி இருப்பதா எப்படி சொல்ல முடியும்? நான் யோபுவை நெனச்சுப் பாத்தேன். அவர் கிழக்குப் பகுதியில நல்லா அறியப்பட்டவரா இருந்தாரு, மாபெரும் ஆஸ்தியக் கொண்டிருந்தாரு, ஆனா அவர் புகழயும் செல்வத்தயும் பொக்கிஷமாக கருதல. எல்லாத்தயும் இழந்தப்போ கூட, தேவனோட திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் அவரால கீழ்ப்படியவும், தன்னோட சாட்சியில உறுதியா நிக்கவும், சாத்தானை அவமானப்படுத்தவும் முடிஞ்சுச்சு. அதோடு பேதுரு, கர்த்தராகிய இயேசுவோட அழைப்பக் கேட்டப்போ, அவன் எல்லாத்தயும் விட்டுட்டு, கர்த்தரைப் பின்பற்றினான். அவன் கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷத்த எல்லா இடங்கள்லயும் பிரசங்கிச்சு சாட்சியளிச்சான், அவன் தேவ அன்பையும் தேவனைத் திருப்திப்படுத்துறதயும் பின்தொடர்ந்தான், கடைசியா அவன் தேவனால் பரிபூரணமாக்கப்பட்டான். “நான் அவங்களப் பின்பற்றணும், கடமைய ஏத்துக்கிட்டு, என்னோட சொந்த நலன்கள விட்டுடணும், அதோடு என்னோட எதிர்கால வாய்ப்புகளப் பத்தி சிந்திக்கக் கூடாது” அப்படின்னு நெனச்சேன். இத நெனச்சவுடனே, எனக்கு விசுவாசத்தயும் பலத்தயும் தரும்படியும், எனக்கு ஒரு வழியத் திறந்தருளும்படியும் தேவனிடத்துல கேட்டு, நான் அவரிடத்துல ஜெபிச்சேன். அதுக்கப்புறமா, உள்நோயாளிகள் பிரிவுல நோயாளிகளோட ஓயாத சத்தத்தால எனக்கு மாரடைப்பு ஏற்பட்டுச்சு. மருத்துவமனையில பாதி வருஷம் நோய்வாய்ப்படுதலுக்கான விடுப்பு கேட்க, நான் இந்த வாய்ப்பப் பயன்படுத்திக்கிட்டேன், அதோடு, என்னோட கடமைய முழு நேரமா நிறைவேத்த ஆரம்பிச்சேன்.

ஆனாலும், என்னோட அரையாண்டு விடுப்பு சீக்கிரமா கடந்துபோயிருச்சு, என்னோட மருத்துவமனையின் தலைவர் என்னைய மறுபடியும் வேலைக்குக் கூப்பிட்டாரு. அந்த நேரத்துல, திருச்சபையில சுவிசேஷப் பணி ரொம்ப மும்முரமா இருந்துச்சு, அதனால, நான் என்னோட கணவரோடு கலந்து பேசிட்டு அடுத்த வருஷம் வேலைக்குப் போக முடிவு செஞ்சேன். ஆனா ரெண்டு மாசங்கள் கழிச்சு, மருத்துவமனை என்னைய வேலைக்குத் திரும்பி வரச் சொல்லி மறுபடியும் மறுபடியும் வற்புறுத்துச்சு, அல்லது அவங்களால என்னோட வேலைக்கு உத்தரவாதம் அளிக்க முடியல. என்னோட கணவரும் வேலைக்குத் திரும்பிப் போகச் சொல்லி என்னைய வற்புறுத்தத் தொடங்கினாரு. இந்தக் கட்டத்துல, “நான் என்ன செய்யணும்? நான் வேலைக்குப் போகலேன்னா, வருஷக் கடைசியில பணிநீக்கம் செய்யப்படுவேன். அப்படி நடந்தா என்னோட பல வருஷ உழைப்பு வீணாகிப்போயிறாதா? ஆனா நான் வேலைக்குப் போனா, என்னோட கடமைக்கான என் நேரம் குறைவா இருக்கும். என்னோட இருதயத்தயும் ஆத்துமாவயும் அதுல ஈடுபடுத்த முடியலேன்னா, திருச்சபையோட பணி பாதிக்கப்படும்” அப்படின்னு நான் கொஞ்சம் கவலப்பட்டேன். இதை நெனச்சுக்கிட்டு நான் திரும்பிப் போக சம்மதிக்கல. என்னோட கணவரால என்னைய சம்மதிக்க வைக்க முடியல. அதனால அவர் என்னோட சகோதரரையும் அவரது மனைவியயும் கூப்பிட்டு என்னைய சம்மதிக்க வைக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டாரு. என்னோட சகோதரன், “அவளை வீட்லயே இருக்க வையுங்க. அவளை வெளிய போக விடாதீங்க. உங்களால அவளக் கட்டுப்படுத்த முடியலேன்னா, அவளோட கால்கள உடைச்சுப்போட்டுருங்க. முடங்கிப் போனாலும் கூட, வீட்ல இருக்குற வரை, தன் வேலையக் காப்பாத்திக்கலாம். அவள் வேலைய இழந்தா, நாம எல்லாத்தயும் இழக்கிறோம்” அப்படின்னு சொன்னாரு. நான் இதக் கேட்டதும், என்னோட இதயமே நொறுங்கிப்போச்சு. “நான் தேவனை விசுவாசிக்கறதாலயும் சரியான பாதையில நடக்கறதாலயும், நீங்க என்னைய நடத்துற விதம் இதுதான். கடந்த காலத்துல, நான் வேலையில வெற்றி பெற்றப்போ, நீங்க எல்லாருமே என்னோட வெற்றிய அனுபவிச்சு மகிழ்ச்சியா இருந்தீங்க, புன்னகையோடு என்னைய வரவேற்றீங்க. தேவனை விசுவாசிச்சு என்னோட கடமையச் செய்யுறதால என்கிட்டயிருந்து எதையும் பெற முடியாதுங்கறத இப்ப நீங்க பாக்குறீங்க, அதனாலதான் நீங்க ஒண்ணாக் கூடிக்கிட்டு என்னையத் தடுக்குறீங்க, இது மாதிரியான இரக்கமில்லாத காரியங்களச் சொல்லுறீங்க” அப்படின்னு நான் நெனச்சேன். இதப் பத்தி நான் எவ்வளவு அதிகமா நெனச்சேனோ, அவ்வளவு வருத்தமா இருந்துச்சு. மனுஷர்களோட பாசத்தின் அலட்சியத்த நான் உணர்ந்தேன். ஆனா, “மருத்துவமனை உண்மையிலயே என்னைய பணிநீக்கம் செஞ்சுட்டா நான் என்ன செய்வேன்?” அப்படின்னு நெனச்சேன். நான் மௌனமா தேவனிடத்துல ஜெபிச்சேன், அதுக்கப்புறம் தேவனோட வார்த்தையின் ஒரு பத்தி எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு. “எனது சித்தங்கள் உனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றை நீ புறக்கணிக்காதே. மாறாக, உனது கவனம் முழுவதையும் அவற்றின் மீதே செலுத்தி, மனப்பூர்வமாக இதனை மேற்கொள்ள பிற அனைத்தையும் நீ ஒதுக்கி வைக்கவேண்டும். எப்போதும் உன்னை என் கைகளில் வைத்திருப்பேன். எப்போதும் தன்னம்பிக்கையற்று, உனது கணவர் அல்லது மனைவியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டாம்; நீ எனது சித்தம் நிறைவேற அனுமதிக்க வேண்டும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 9”). தேவனோட வார்த்தை எனக்கு விசுவாசத்தயும் பலத்தயும் கொடுத்துச்சு. தேவன் சிருஷ்டிகரா இருக்காரு, தேவன் எல்லாவற்றின் மேலயும் ராஜரீகம் பண்ணுறாரு. நான் மருத்துவமனையில இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுறதுங்கறது தேவனோட ராஜரீக ஏற்பாட்டப் பொறுத்தது. தேவன் எனக்கு ஒரு வழியத் திறப்பார்ன்னு நான் விசுவாசிச்சேன். என்னோட கணவரால என்னையக் கட்டுப்படுத்த முடியல. என்னோட குடும்பம் என்னைய எப்படித் துன்புறுத்தினாலும், தேவனைத் திருப்திப்படுத்த நான் உறுதியா நிக்க விரும்பினேன். நான் தேவனோட அன்பையும் தேவனோட தன்னலமற்ற தன்மையையும் நெனச்சுப் பாத்தேன், நான் இன்னும் அதிகமா உற்சாகமடஞ்சேன். தேவன் சொல்லுகிறார்: “மனிதகுலம் உயிர்வாழ்வதற்காக தேவன் என்றென்றும் வேதனையை மேற்கொள்ளுகிறார், ஆனால் மனிதன் ஒருபோதும் வெளிச்சத்தின் பொருட்டோ அல்லது நீதிக்காகவோ எதையும் பங்களிப்பதில்லை. மனிதன் ஒரு காலத்திற்கு முயற்சி செய்தாலும், அது ஒரு அடியைக் கூட தாங்க முடியாது, ஏனென்றால் மனிதனின் முயற்சி எப்போதும் மற்றவர்களுக்காக இல்லாமல் தன் சொந்த நலனுக்காகவே உள்ளது. மனிதன் எப்போதும் சுயநலவாதி, அதே சமயம் தேவன் எப்போதும் சுயநலமற்றவர்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது”). சீர்கெட்ட மனுஷர்கள் எப்பவுமே சுயநலவாதிகளா இருக்காங்க, ஆனா தேவன் தன்னலமற்றவரா இருக்காரு. தேவன் எப்படி கிரியை செஞ்சாலும், அவர் செய்யறது எல்லாமே ஜனங்களோட வாழ்க்கைக்காக மட்டுந்தான், அதோடு, நாம அவரால இரட்சிக்கப்படும்படிக்கு, இவை எல்லாமே, சத்தியத்தப் புரிஞ்சுக்கவும், வாழ்க்கையில நம்மள சரியான பாதையில நடத்தவும் உதவுறதுக்காகத்தான். தேவன் ஜனங்களுக்கு எவ்வளவு செஞ்சாலும், அவர் நம்மகிட்டயிருந்து எதையும் கேட்குறதில்ல. இதையெல்லாம் அவர் மறைமுகமா நமக்காகச் செய்யுறாரு. இதற்கிடையில, நான் எல்லாத்தயும் எனக்காகவும், என்னோட சொந்த நலனுக்காகவும் செஞ்சேன். என்னோட கடமையச் செய்யுறதும், திருச்சபைப் பணிகள சிறப்பா கையாளுறதும் என்னோட பொறுப்பும் கடமையுமா இருந்துச்சுங்கறது எனக்குத் தெரியும், ஆனா நான் என்னோட வேலைய இழந்துட்டா, என்னோட புகழ், செல்வம் அதோடு என்னோட குடும்பத்தோட நல்லிணக்கத்த இழக்க நேரிடும்னும் நான் பயந்தேன், அதனால நான் கடமைய நிராகரிச்சேன். நான் சுயநலவாதியாவும், இழிவானவளாவும், மனிதத்தன்மை இல்லாதவளாவும் இருந்தேன்! அதுக்கும் மேலா, என்னோட குடும்பத்தோட துன்புறுத்தல் மூலமா, ஜனங்களுக்கு இடையேயில இருக்குற உணர்ச்சிகளோட புரிதலையும் நான் பெற்றேன். கடந்த நாட்கள்ல எனக்கு நல்ல வேலை இருந்ததால என்னோட குடும்பத்தினர் என்னைய நல்லா நடத்தினாங்க. என்னால அவங்களுக்கு உதவவும் அவங்கள நல்லா காணப்படச் செய்யவும் முடிஞ்சுச்சு, அதனால அவங்க என்னையப் புன்னகையோடு வரவேற்றாங்க. இப்போ, நான் சுவிசேஷத்தப் பிரசங்கிச்சு, என்னோட வேலைய இழக்க நேரிட்டுச்சு, அவங்களுக்குப் பெற்றுக்கறதுக்கு எதுவுமில்ல, அதனால அவங்க என்னையத் துன்புறுத்தி தடை செஞ்சாங்க. ஜனங்களுக்கிடையில அன்பு எங்க இருக்குது? பரிவர்த்தனையும் பரிமாற்றமும் மட்டுந்தான் இருக்குது. குடும்பத்தின் அன்பு நலன்களத்தான் அடிப்படையா கொண்டதா இருக்குது. பணத்தயும், புகழயும், மாம்சீக சுகபோகத்தயும் மட்டுமே நாடச் சொல்லி அவங்க என்னைய வற்புறுத்தினாங்க. இது என் மீதான அன்பு அல்ல. இது எனக்கு தீங்கு விளைச்சு அழிக்கறதா இருந்துச்சு. இத நான் புரிஞ்சுக்கிட்டவுடனே, அதுக்குப் பிறகும், நான் சாத்தானுக்கு சேவை செய்ய விரும்பல. நான் என்னோட கடமைய சிறப்பா செஞ்சு தேவனோட அன்பத் திருப்பிச் செலுத்த விரும்புனேன்.

திடீர்ன்னு, என்னோட கணவர் என்னைய வீட்டை விட்டு வெளிய போகக்கூடாதுன்னு தடை விதிச்சாரு. “நீ வேலைக்குப் போக ஒத்துக்கலேன்னா, நான் உன்னை தேவனை விசுவாசிக்க விடமாட்டேன், தேவனை விசுவாசிக்கறவங்கள நம்ம வீட்டுக்கு வர விடமாட்டேன்” அப்படின்னு கூட அவர் என்னைய மிரட்டினாரு. நான் வேலைய இழந்துட்டா கடுமையா நடந்துக்கறதுக்காக அவரைக் குறை சொல்லக் கூடாதுன்னும் அவர் சொன்னாரு. அவர் அப்படிச் சொன்னதக் கேட்டதும், “அவரோட கோரிக்கைய நான் ஏத்துக்கலேன்னா, அவர் என்னைய வீட்ல அடைச்சு வச்சுருவாரு. என்னால திருச்சபை வாழ்க்கைய வாழவோ அல்லது என்னோட கடமைய நிறைவேத்தவோ முடியாது” அப்படின்னு நான் நெனைச்சேன். அதனால நான் மறுபடியும் மருத்துவமனையில வேலைக்குப் போறதா அவருக்கு உறுதியளிக்கணும். ஆனா, என்னோட மருத்துவமனையின் தலைவர் நோயாளிகளோட சத்தம் எனக்கு மறுபடியும் ஒரு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும்ன்னு பயந்தாரு, அதனால, என்னைய பொது மருத்துவமனையோட வெளிநோயாளி பிரிவுல வேலை செய்யும்படி மாத்திட்டாங்க. வேலை இல்லாத நேரத்துலயும் நான் அலுவலகத்துல உட்கார வேண்டியிருந்துச்சு, அப்படிச் செய்யறதால, என்னால என்னோட கடமைய நிறைவேத்த முடியல. தினமும் அலுவலகத்துல நான் தனியா உக்காந்துக்கிட்டு இருந்தேன். நான் அங்க மாட்டிக்கிட்டு இருந்தப்போ, திருச்சபைக்கு எவ்வளவு அவசர பணி இருந்துச்சுங்கறத நான் யோசிச்சுப் பாத்தேன். திருச்சபையோட பணி தாமதமாகும்ங்கறதும், என்னோட சகோதர சகோதரிகளோட வாழ்க்கை பாதிக்கப்படும்ங்கறதும் எனக்குத் தெரியும், அதோடு, குறிப்பா, நான் குற்ற உணர்வ அடைஞ்சேன். தேவனைத் திருப்திப்படுத்த என்னோட கடமைய சிறப்பா செய்ய விரும்புறதா சொன்னேன், ஆனா என்னோட கணவர் என்னையத் துன்புறுத்தித் தடுத்தவுடனே, நான் ஒத்துக்கிட்டேன். நான் தேவனுக்கு உண்மையுள்ளவளா இருந்தேன்னும், கீழ்ப்படிஞ்சேன்னும் என்னால எப்படிச் சொல்ல முடியும்? இதப் பத்தி நான் எவ்வளவு அதிகமா நெனச்சேனோ, என்னோட கண்ணீர் வழிஞ்சு ஓடுறத நிறுத்த முடியாத வரை, அவ்வளவு வருத்தமா உணர்ந்தேன். அந்த நேரத்துல, நான், “தேவனே, நான் என்னோட கடமைய செய்யவும் உமக்காக அர்ப்பணிக்கவும் விரும்புகிறேன், ஆனா நான் என்னோட கணவராலும் என்னோட சூழலாலும் கட்டுப்படுத்தப்படுறேன். தயவுசெஞ்சு எனக்கு விசுவாசத்தயும் பலத்தயும் தாருங்க” அப்படின்னு தேவனிடத்துல ஜெபிச்சேன். நான் ஜெபிச்சதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய வாசிச்சேன். “ஜனங்களுக்கு தேவனுடைய மனநிலையைப் பற்றிய ஒரு உண்மையான புரிதல் இருந்தால், அவருடைய பரிசுத்தத்திற்கும் நீதிக்கும் நெஞ்சார்ந்த துதியை செலுத்த முடியுமென்றால், அவர்கள் உண்மையிலேயே அவரை அறிந்திருக்கிறார்கள் மற்றும் சத்தியத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும்; அப்போதுதான் அவர்கள் வெளிச்சத்தில் வாழ்கின்றனர். உலகம் மற்றும் ஜீவிய மாற்றங்களைப் பற்றிய ஒரு நபரின் கண்ணோட்டமானது ஒரு முறை மட்டுமே ஒரு அடிப்படை மாற்றத்திற்கு உட்படுகிறது. ஒருவருக்கு ஒரு ஜீவிய இலக்கு இருந்து, சத்தியத்தின்படி நடந்துகொள்ளும் போது, ஒருவர் முற்றிலுமாக தேவனுக்குக் கீழ்படிந்து, அவருடைய வார்த்தைகளின் மூலமாக ஜீவிக்கும்போது, ஒருவர் தனது ஆத்மாவின் ஆழத்தில் சமாதானமானவராகவும், ஒளியூட்டப்பட்டவராகவும் உணரும்போது, ஒருவரின் இருதயம் இருளில்லாமல் இருக்கும்போது, ஒருவர் தேவனுடைய சமூகத்தில் முற்றிலும் விடுதலையோடும் கட்டுப்பாடில்லாமலும் ஜீவிக்க முடியும் போது மட்டுமே, ஒருவர் உண்மையான மனித ஜீவியத்தை ஜீவிக்கிறார், சத்தியத்தைக் கொண்டிருக்கிற ஒரு நபராக மாறுகிறார். மேலும், நீ புரிந்துகொண்ட மற்றும் பெற்றுக்கொண்ட சத்தியங்கள் அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்தும் தேவனிடமிருந்துமே வந்திருக்கின்றன. பிரபஞ்சம் மற்றும் சகல காரியங்களின் அதிபதியுமாகிய மகா உன்னதமான தேவனுடைய அங்கீகாரத்தை நீ பெறும் போதும், நீ மனித சாயலில் வாழும் ஒரு உண்மையான நபர் என்று அவர் சொல்லும் போதும் மட்டுமே, உன் வாழ்க்கை எல்லோரைக் காட்டிலும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். தேவனுடைய அங்கீகாரத்தைக் கொண்டிருக்கிறாய் என்றால் நீ சத்தியத்தைப் பெற்றிருக்கிறாய் என்று அர்த்தம், மேலும் நீ சத்தியத்தையும் மனிதத்தன்மையையும் கொண்ட ஒருவனாக இருக்கிறாய்(வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “மனுஷனுடைய சுபாவத்தை அறிந்துகொள்வது எப்படி”). தேவனோட வார்த்தைய சிந்திச்சதுக்கப்புறமா, நம்மளோட வாழ்க்கையில, சத்தியத்தப் பின்தொடருறதயும், தேவனை அறிஞ்சுக்கறதயும் சிருஷ்டிகரோட அங்கீகாரத்தப் பெறுவதயும் மட்டுந்தான் மகிமைக்குரிய ஒரு விஷயமா கருத முடியும். இது மட்டுந்தான் நிஜ வாழ்க்கை, இதத்தான் நான் தேர்ந்தெடுக்கணும்ங்கறது எனக்குப் புரிஞ்சுச்சு. உலகப் புகழுக்காகவும் செல்வத்துக்காகவும் நான் தீவிரமா மருத்துவம் படிச்சேன். வெற்றி பெற்றதுக்கப்புறமா, என்னோட தலைவர்களாலும் சக பணியாளர்களாலும் நான் பாராட்டப்பட்டேன், அதோடு என்னோட உறவினர்களாலும் நண்பர்களாலாலும் ரொம்ப உயர்வா மதிக்கப்பட்டேன். ஆனா அவைகளப் பெற்றிருந்ததால எனக்கு என்ன பயன்? எனக்கு எவ்வளவு புகழோ, பொருள் செல்வமோ இருந்தாலும், அது என்னோட ஆத்துமாவுல இருந்த வெறுமைய நிரப்ப முடியல. அது என்னோட சரீரத்த சோர்வடையவும் நோய்வாய்ப்படவும் செஞ்சுச்சு, என்னோட வாழ்க்கை இன்னும் அர்த்தமற்றதாவும் பரிதாபமாவும் இருந்துச்சு, நான் எந்தவித சமாதானத்தயோ அல்லது சந்தோஷத்தயோ உணரல. சர்வவல்லமையுள்ள தேவனோட கடைசி நாட்களின் கிரியைய ஏத்துக்கிட்டதுக்கப்புறமா, தேவனோட வார்த்தைகளப் புசிச்சுப் பானம் பண்ணுறதன் மூலமாவும், திருச்சபை வாழ்க்கைய வாழுறதன் மூலமாவும், என்னோட கடமைய செய்யுறதன் மூலமாவும், எப்படி என்னையும் அறியாமலே சத்தியத்தப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்னு நான் நெனச்சுப் பாத்தேன். நான் எப்படி நடந்துக்கணும், தேவனை எப்படி ஆராதிக்கணும்ங்கறதயும் சீர்கெட்ட மனநிலையிலயிருந்து விடுபட்டு சாதாரண மனிதத்தன்மையோடு வாழுறது எப்படிங்கறதயும் நான் தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, இவை எல்லாமே நிதானமாவும் விடுதலையோடும் இருப்பத என்னைய உணர வச்சுச்சு. மனுஷர்கள் சிருஷ்டிக்கப்பட்டவங்களா இருக்காங்கங்கறதயும் தேவனோட சமூகத்துல வாழுறதன் மூலமும், சத்தியத்தப் புரிஞ்சுக்கறதன் மூலமும் மட்டுந்தான் ஜனங்களால சமாதானத்தயும் சந்தோஷத்தயும் பெற முடியும்ங்கறதயும் நான் புரிஞ்சுக்கிட்டேன். இல்லேன்னா, ஜனங்கள் எப்படி வாழ்ந்தாலும் சரி, அவங்களோட வாழ்க்கை எப்பவுமே வெறுமையாவும் துன்பமாவும் இருக்குது. இந்தக் கட்டத்துல, என்னோட குடும்பத்துலயிருந்து நான் எதிர்கொண்ட உபத்திரவத்த தேவன் அனுமதிச்சாருங்கறத நான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தச் சூழலின் மூலமா, தேவனைச் சார்ந்துக்கிட்டு சத்தியத்தத் தேடுறதுக்காக தேவனுக்கு முன்பா வர வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுச்சு. இது சாத்தானோட ஆதிக்கத்தின் கீழ் வாழுறதன் வலியத் தெளிவா பாக்க உதவுச்சு, அதோடு தேவனைப் பின்பற்றுறதயும், சத்தியத்தப் பின்தொடரும் பாதையில செல்லுறதயும் தெரிந்தெடுக்கக் கூடியவளா என்னைய ஆக்குச்சு. தேவனோட நல்ல நோக்கத்த நான் புரிஞ்சுக்கிட்டவுடனே, என்னோட இருதயம் பிரகாசமா இருந்துச்சு. நானும் கூட குடும்பத்தின் கட்டுப்பாடுகள்லயிருந்து விடுபட்டு, மருத்துவமனைய விட்டு வெளியேறுனேன், அதோடு திருச்சபையில என்னோட கடமைய முழுநேரமா செஞ்சேன்.

டிசம்பர் 2007ல ஒரு நாள், நான் என்னோட கடமைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்ததும், என்னோட கணவர் ரொம்ப கோபமா இருந்தாரு. அவர், “மருத்துவமனையில இருந்து கூப்பிட்டாங்க. வேலைக்குப் போகலேன்னா உன்னையப் பணிநீக்கம் செஞ்சுடுவதா சொன்னாங்க. நீ இப்பவே உன்னோட வேலைக்குத் திரும்பிப் போகணும். நீ உன்னோட வேலைய இழந்துட்டா, உன்னோட ஓய்வூதியம் மற்றும் உன்னோட எல்லா சலுகைகளயும் இழந்துபோயிருவ!” அப்படின்னு சொன்னாரு. இதக் கேட்டதும் நான் கொஞ்சம் கலக்கமடைஞ்சேன். நான், “இது உண்மதான். சின்ன வயசுல இருந்தே நல்ல மருத்துவராகி, எனக்குன்னு ஒரு பெயரெடுக்கணும்னு நான் கனவு கண்டேன். இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கப்புறமா, எனக்குப் புகழ், செல்வம் ரெண்டுமே இருக்குது. நான் இப்ப கைவிட்டுட்டா, என்கிட்ட எதுவுமே மிச்சமிருக்காது” அப்படின்னு நெனச்சேன். அந்த எண்ணம் என்னைய என்ன செய்யறதுன்னு தெரிஞ்சுக்க முடியாதபடி செஞ்சுச்சு. அதனால நான் மௌனமா “தேவனே, நான் கௌரவத்தயும், செல்வத்தயும் அந்தஸ்தயும் விட்டுட்டேன்னு நெனச்சேன். ஆனா இப்ப, நான் உண்மையிலயே என்னோட வேலைய விட்டுட வேண்டியதா இருக்குது, நான் இன்னும் கொஞ்சம் வருத்தமா இருக்கிறேன். தேவனே, சத்தியத்தப் புரிஞ்சுக்கவும், இந்தக் காரியங்களால ஆளப்படாம இருக்கவும் என்னைய வழிநடத்துங்க” அப்படின்னு தேவனிடத்துல ஜெபிச்சேன். ஜெபிச்சதுக்கப்புறமா, தேவனோட வார்த்தையின் ஒரு பத்திய நான் வாசிச்சேன். “எல்லா ஜனங்களும் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பற்றி நினைக்கும் வரையில், மனிதனுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்த சாத்தான் புகழ் மற்றும் ஆதாயத்தைப் பயன்படுத்துகிறது. அவர்கள் புகழ் மற்றும் ஆதாயத்திற்காகப் போராடுகிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காகக் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்கிறார்கள். புகழ் மற்றும் ஆதாயத்திற்காக அவர்கள் எந்தத் தீர்மானத்தையும் முடிவையும் எடுப்பார்கள். இவ்வாறு, சாத்தான் ஜனங்களைக் கண்ணுக்குத் தெரியாத கைவிலங்குகளால் கட்டிப் போட்டிருக்கிறது. அவற்றைத் தூக்கி எறியும் வல்லமையும் தைரியமும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அறியாமலேயே இந்தக் கைவிலங்குகளை சுமந்து கொண்டு, மிகுந்த சிரமத்துடன் எப்போதும் முன்னேறுகிறார்கள். இந்தப் புகழ் மற்றும் ஆதாயத்திற்காக, மனிதகுலம் தேவனைத் தவிர்த்து, அவரைக் காட்டிக் கொடுத்து, பொல்லாதவர்களாக மாறுகிறது. எனவே, இவ்வாறு, சாத்தானுடைய புகழ் மற்றும் ஆதாயத்தின் மத்தியில் அடுத்தடுத்து ஒவ்வொரு தலைமுறையும் அழிக்கப்படுகிறது. இப்போதும் சாத்தானுடைய கிரியைகளைப் பார்க்கும்போது, அதன் மோசமான நோக்கங்கள் முற்றிலும் வெறுக்கத் தக்கவையாக இருக்கின்றன அல்லவா? புகழ் மற்றும் ஆதாயமின்றி ஒருவர் ஜீவிக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், இன்றும் நீங்கள் சாத்தானுடைய மோசமான நோக்கங்களைக் காண முடியவில்லை. ஜனங்கள் புகழ் மற்றும் ஆதாயத்தை விட்டுவிட்டால், அவர்களால் இனி முன்னோக்கிச் செல்லும் வழியைக் காண முடியாது, இனி அவர்களால் அவர்களுடைய குறிக்கோள்களைக் காண முடியாது, அவர்களுடைய எதிர்காலம் இருண்டதாகவும், மங்கலானதாகவும் மற்றும் தெளிவற்றதாகவும் மாறிப்போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், மனிதனைக் கட்டிப்போட புகழும் ஆதாயமும் சாத்தான் பயன்படுத்தும் கொடூரமான கைவிலங்குகள் என்பதை நீங்கள் மெதுவாக ஒரு நாள் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நாள் வரும்போது, நீ சாத்தானுடைய கட்டுப்பாட்டை முற்றிலுமாக எதிர்ப்பாய். உன்னைக் கட்டிப்போட சாத்தான் பயன்படுத்தும் கைவிலங்குகளை முழுமையாக எதிர்ப்பாய். சாத்தான் உன்னில் உட்புகுத்திய எல்லாவற்றையும் தூக்கி எறிய விரும்பும் நேரம் வரும்போது, நீ சாத்தானுடன் ஒரு முழுமையான முறிவைக் கடைபிடிப்பாய். சாத்தான் உன்னிடம் கொண்டு வந்த அனைத்தையும் நீ உண்மையிலேயே வெறுப்பாய். அப்போது தான் மனிதகுலத்திற்கு தேவன் மீது உண்மையான அன்பும் ஏக்கமும் இருக்கும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் VI”). தேவனோட வார்த்தைய வாசிச்சதுக்கப்புறமாதான், சாத்தான் எவ்வளவு ஆழமா எனக்குத் தீங்கு செஞ்சிருந்தான்ங்கறத நான் உணர்ந்தேன். புகழும் ஆதாயமும் என்னோட வாழ்க்கையாகியிருந்துச்சு, அதோடு சத்தியத்தக் கடைப்பிடிக்க அது எனக்குத் தடையா இருந்துச்சு. என்னோட குழந்தைப் பருவத்துலயிருந்தே, என்னோட பெற்றோர், “மத்தவங்கள விட சிறந்துவிளங்கு” மற்றும் “நமது முன்னோர்களுக்குப் பெருமை சேர்” அப்படின்னு கத்துக்கொடுத்தாங்க, புகழையும் ஆதாயத்தயும் நான் பெற்றிருப்பதுங்கறது அர்த்தமுள்ளதும் மதிப்புமிக்கதுமான வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருந்ததோட அர்த்தம்ன்னு நெனச்சேன். நான் புகழ், ஆதாயம், அந்தஸ்து போன்றவற்ற நேர்மறையான விஷயங்களாவும், அதோடு வாழ்க்கையில நான் பின்தொடர வேண்டிய ஒரே இலக்கு அதுதான்னும் நெனச்சேன், அதனால நான் புகழ், ஆதாயம், பணம், இன்பம் போன்றவற்ற ஒரே மனசா பின்தொடர்ந்தேன். கடைசியில, நான் சோர்வடையும் அளவுக்கு என்னைய நானே கடுமையா வேதனைப்படுத்தியிருந்தேன். கௌரவமும் அந்தஸ்தும் சாத்தான் ஜனங்களக் கெடுக்கவும் விழுங்கவும் பயன்படுத்தும் தந்திரங்களத் தவிர வேறில்ல. புகழுக்கும் செல்வத்துக்கும் ஆசைப்பட்டு பரிதாபமா செத்த என்னோட சக பணியாளரோட காரியத்த நான் நெனச்சுப் பார்த்தேன். அவர் வெளிநோயாளிகள் துறையோட இயக்குநரா இருந்தாரு, தன்னோட வாழ்க்கையில கடினமா உழைக்க அர்ப்பணிச்சாரு. அவர் எப்பவுமே தாமதமாத்தான் வீட்டுக்கு வருவாரு. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் அதிக பணம் சம்பாதிக்கவும் அவர் விரும்பினாரு. கடைசியில, அவர் தன்னோட புகழையும் பணத்தயும் பெற்றாரு. ஆனா ஒரு நாள் ராத்திரி, அவர் வேலை முடிஞ்சு ரொம்ப தாமதமா கிளம்பினாரு, அவர் ரொம்ப சோர்வடைஞ்ச நிலையில சாலையோரத்துல நடந்துக்கிட்டு இருந்தாரு, ஒரு கார் அவர் மேல மோதுச்சு, அவர் செத்துப்போனாரு. எனக்கு இன்னொரு சக பணியாளர் இருந்தாரு, அவங்க சின்ன வயசுலயே தலைமை செவிலியரா ஆனாங்க. மத்தவங்களுக்கு, அவங்களோட எதிர்காலம் எல்லையற்றதா தோன்றுச்சு, ஆனா அவங்க வேலையில ரொம்ப மும்முரமா இருந்தாங்க. வீட்டுக்குப் போகுற வழியில, அவங்க அப்பவும் சக பணியாளர்களோடு வேலையப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தாங்க, அவங்க கவனமில்லாத நேரத்துல ஒரு ரயில் பாதையக் கடந்தாங்க, அதோடு, அவங்களுக்கு இருபது வயசுதான் ஆகியிருந்த போதும், வேகமா வந்த ரயில்னால அவங்க கொல்லப்பட்டாங்க. என்னோட சக பணியாளர்களோட அனுபவங்களப் பத்தி நான் யோசிச்சப்போ, நான் பயத்துல நடுங்க ஆரம்பிச்சேன். இந்த ஜனங்கள் மருத்துவமனையில இருந்த ஜனங்களால ரொம்ப உயர்வா கருதப்பட்டவங்களாவும் மதிக்கப்பட்டவங்களாவும் இருந்தாங்க. ஆனா, தேவனோட கவனிப்பும் பாதுகாப்பும் இல்லாம, புகழும் செல்வமும் இருந்து என்ன பயன்? கௌரவமும் அந்தஸ்தும் உண்மையிலயே ஜனங்கள சீர்கெடுப்பதுக்கும் தீங்கு செய்வதுக்குமான சாத்தானோட வழியா இருக்குது. அவை, தேவனிடத்துலயிருந்தும் சிருஷ்டிகரோட இரட்சிப்புலயிருந்தும் ஜனங்கள் வெகு தூரத்துக்குப் போகும்படி, தங்களோட வாழ்நாள் முழுவதும் புகழையும் அதிர்ஷ்டத்தயும் கடுமையா பின்தொடர ஜனங்களைத் தூண்டுறதுக்காக சாத்தானால வைக்கப்பட்ட கண்ணிகளா இருக்குது. கௌரவம் அந்தஸ்துங்கற அடிமைத்தனத்தயும் தடைகளயும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தேன், அதனால என்னோட வேலைக்கும் கடமைக்கும் இடையே சரியான தேர்வ செய்ய முடியல. அது அவ்வளவு அவமானமானதா இருந்துச்சு! ஜனங்கள இரட்சிக்கறதுக்கான கடைசி நாட்களின் தேவனோட கிரியை வாழ்நாள்ல ஒருதடவ மட்டுமே கிடைக்குற ஒரு வாய்ப்பு, இப்போ, நான் தேவனோட கிருபையால மெய்யான வழிய ஏத்துக்கிட்டேன், ஆனா சத்தியத்தப் பெறுவதற்கான என்னோட கடமையச் செய்யுற வாய்ப்ப நான் மதிக்கல. இந்த வாய்ப்ப நான் தவறவிட்டா, நான் என்னைய நானே அழிச்சுக்கறேன் இல்லையா? இது வெறும் முட்டாள்தனமா இருக்காதா?

தேவனோட வார்த்தையின் ஒரு பத்தி எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு. “இயல்பானவராகவும், தேவனுக்கான அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிக பாக்கியவான்கள் யாரும் இல்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள், ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்”). தேவனோட வார்த்தை எனக்கு பயிற்சிக்கான பாதையக் கொடுத்துச்சு. இன்னைக்கு, திருச்சபையில சிருஷ்டியின் கடமைய நிறைவேற்றுறதப் பின்தொடருறதுதான் வாழ்க்கையில சரியான பாதையத் தேர்ந்தெடுப்பது, இதுதான் ரொம்ப அர்த்தமுள்ள வாழ்க்கையா இருக்குது. நான் முன்னாடி சாத்தானால சீர்கெடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டேன், சாத்தானிய தத்துவங்களால வாழ்ந்தேன். நான் முழு மனசோடு புகழயும் செல்வத்தயும் பின்தொடர்ந்தேன், சாத்தானோட ஏமாற்றத்தயும் தீங்குகளயும் அனுபவிச்சேன். புகழ், செல்வம், அந்தஸ்து போன்றவற்ற பின்தொடர்வதன் விளைவுகளயும் சாராம்சத்தயும் தேவனோட வார்த்தை எனக்குக் காட்டுச்சு, அதோடு ஜனங்கள சீர்கெடுத்து விழுங்குறதுக்கு இதுதான் சாத்தானோட வழிங்கறத எனக்குப் புரிய வச்சுச்சு. இப்போ, கடைசி நாட்களின் தேவனோட கிரியை ஒரு முடிவுக்கு வந்திருக்குது, தேவனோட நிர்வாகத் திட்டம் முடிவடையப் போகுது, பெரும் பேரழிவு ஏற்கனவே தொடங்கிருச்சு. சத்தியத்தப் பின்தொடர்வதன் மூலம் மட்டுந்தான் நம்மாள இந்த பேரழிவுலயிருந்து தப்பிக்க முடியும். நான் சத்தியத்தப் பின்தொடரலேன்னா, அதோடு விலைமதிப்பற்றதும் குறுகியதுமான இந்த நேரத்த புகழையும் செல்வத்தயும் தொடர பயன்படுத்தினா, கடைசியில, சத்தியத்தையும் தேவனால் கொடுக்கப்பட்டுருக்குற வாழ்க்கையயும் நான் ஒருபோதும் பெறமாட்டேன், தேவனால நான் இரட்சிக்கப்படவும் மாட்டேன். அப்புறம், தேவன் மீதான என்னோட விசுவாசம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமப் போயிரும், அதோடு மீதமுள்ள என்னோட வாழ்நாள் முழுவதும் நான் அதுக்காக வருத்தப்படுவேன். கர்த்தராகிய இயேசு சொன்னதப் போல, “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?(மத்தேயு 16:26). வாழ்நாள்ல ஒருதடவ மட்டுமே கிடைக்குற இந்த வாய்ப்ப நான் மதிக்கணும்னு எனக்குத் தெரியும். என்னோட மாம்சத்துக்காக என்னால அதுக்கப்புறமும் அவசரப்பட முடியல. ஜனங்கள இரட்சிக்கும் தேவனோட கிரியையின் இந்த முக்கியமான காலகட்டத்துல, நான் சத்தியத்தப் பின்தொடர தருணத்தப் பயன்படுத்திக்க வேண்டியிருந்துச்சு அதோடு ஒரு சிருஷ்டியா என்னோட கடமையச் செய்ய வேண்டியிருந்துச்சு. இதுதான் வாழுறதுக்கான ரொம்ப மதிப்புமிக்கதும் அர்த்தமுள்ளதுமான வழி. இத மனசுல நெனச்சுக்கிட்டு, என்னோட வேலைய விட்டுவிட்டு நான் முழு நேரமா என்னோட கடமையச் செய்யத் தொடங்கினேன். என்னோட முடிவப் பத்தி நான் என் கணவர்கிட்ட சொன்னப்போ, அவர் என்ன செய்யறதுன்னு தெரியாம, “கடந்த சில வருஷங்களா, உன்னைய வேலைக்குப் போக வைக்கவும், இந்த வேலையத் தக்க வச்சுக்க வைக்கவும் நான் எல்லா வழிகள்லயும் முயற்சி செஞ்சேன். நாம நல்ல வாழ்க்கைய வாழறதுக்காக, நீ அதிகமா பணம் சம்பாதிக்கணும்னு நான் விரும்பினேன். ஆனா உன்னோட இருதயத்துல உன்னோட தேவன் மட்டுந்தான் இருக்குறாரு. என்னால இதுக்கப்புறமும் உன்னையக் கட்டுப்படுத்த முடியாது. உன்னோட எதிர்காலம் உன் கையில இருக்குது” அப்படின்னு சொன்னாரு. அதுக்கப்புறமா, நான் ராஜினாமா நடைமுறைகளச் செய்ய மருத்துவமனைக்குப் போனேன். என்னோட மருத்துவமனையின் தலைவர், “ஒரு மருத்துவரா இருப்பதுங்கறது ஒரு பாதுகாப்பான வேலை, மருத்துவமனை ஒருபோதும் மூடப்படாது. இப்போதெல்லாம், மருத்துவமனையில வேலை கிடைக்கறது ரொம்ப கடினம். அதுமட்டுமல்லாம, நீங்க இங்க ஒரு முக்கிய பணியாளரா இருக்கீங்க, உங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருக்குது. இப்போதுதான் ஊதியங்கள் அதிகரிச்சுக்கிட்டு வருது, அதோடு எல்லா வகையான புதிய சலுகைகளும் இருக்கும். இத கவனமா யோசிச்சுப் பாரு!” அப்படின்னு சொல்லி, என்னைய மறுபடியும் மறுபடியும் தடுக்க முயற்சி செஞ்சாரு. இது சாத்தானோட சோதனைன்னு எனக்குத் தெரியும். சாத்தான் அவரைப் பயன்படுத்தி என்னைய தேவனிடத்துலயிருந்து விலக்கி, தேவனுக்குத் துரோகம் செய்ய வைக்க விரும்பினான். அதோட தந்திரங்கள்ல நான் விழப்போறதில்ல. அதனால, என்னோட மனப்பான்மைய என்னோட மருத்துவமனையின் தலைவரிடத்துல தெரிவிச்சேன். அவரால செய்ய முடிஞ்சதெல்லாம், என்னோட ராஜினாமா நடைமுறைகள செயல்படுத்துறதுதான். நான் என்னோட வேலைய விட்டுட்டு, மறுபடியும் என்னோட கடமையில என்னைய ஈடுபடுத்திக்கத் தொடங்கியவுடனே, உள்ளத்தின் ஆழத்துல நிம்மதியான ஒரு உணர்வ உணர்ந்தேன். நான் அதுக்கப்புறமும் வேலையால கட்டுப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கல, தேவனோட வார்த்தையப் புசிச்சு பானம்பண்ணுறதுக்கும் என்னோட கடமையச் செய்யுறதுக்கும் எனக்கு அதிக நேரம் கிடைச்சுச்சு. தேவனோட வார்த்தைகளின் வழிகாட்டுதல் என்னை அடிமைத்தனத்துலயிருந்தும் புகழ் மற்றும் அந்தஸ்தோட கட்டுப்பாடுகள்லயிருந்தும் என்னைய விடுவிச்சுச்சு அதோடு எனக்கு வாழ்க்கையில சரியான திசையக் கொடுத்துச்சு.

முந்தைய: சரியான தெரிவு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

அதிக பரபரப்பான மற்றும் வேகமான நவீன வாழ்க்கை முறையால் ஏற்படும் வெறுமை மற்றும் வலிகளிருந்து நாம் விடுபடுவது எப்படி?

நான் ஒரு நெரிசலான தெருவில்நிற்கிறேன், கார்களின் கடுமையான சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருக்கேன், பாதசாரிகள் விரைந்து செல்வதைப் பார்க்கிறேன்,...

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 2)

டான் சுன், இந்தோனேஷியா நான் மீண்டும் சோதனையில் விழுந்து, ஜனங்கள் ஏன் பணத்திற்காக கடினமாக உழைக்கின்றனர் என்பதற்கான மூலக் காரணத்தைக்...

பணத்திற்கு அடிமைப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு

ஜிங்வூ, சீனா என்னுடைய இளம் வயதில், என்னுடைய குடும்பம் ஏழையாக இருந்தது, மேலும், என்னுடைய பெற்றோர்களால் என்னுடைய படிப்பிற்குப் பணம் செலுத்த...

சரியான தெரிவு

நான் ஒரு தொலைதூர மலைப்பகுதியில இருக்குற கிராமத்துல, பல தலைமுறைகளா விவசாயிகளா இருக்குற குடும்பத்துல பிறந்தேன். நான் பள்ளிக்கூடத்துல...