பணத்திற்கு அடிமைப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு

ஜனவரி 29, 2022

ஜிங்வூ, சீனா

என்னுடைய இளம் வயதில், என்னுடைய குடும்பம் ஏழையாக இருந்தது, மேலும், என்னுடைய பெற்றோர்களால் என்னுடைய படிப்பிற்குப் பணம் செலுத்த முடியவில்லை, எனவே பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக நான் வேலிகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்தேன். ஒரு முறை, நான் விவசாய வேலை செய்துகொண்டிருந்தபோது எனது சுண்டுவிரலை வெட்டிவிட்டேன். சிகிச்சைக்குப் பணம் இல்லாத காரணத்தால் அது முழுமையாக குணமடையவில்லை. இன்னும் என்னால் அதை முழுமையாக நீட்ட முடிவதில்லை. நான் திருமணம் செய்த பின்னர், எனது கணவரும் நானும் இன்னும் ஏழைகளாகவே இருந்தோம். எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்களை இழிவாக பார்த்து எங்களைத் தவிர்த்தனர். செல்வந்தர்கள் பெறும் மரியாதையை நான் பார்த்த போது, அவர்களால் எப்படி கவலையில்லாமல் உணவுண்ண முடிகிறது மற்றும் ஆடை உடுக்க முடிகிறது என்று நான் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன். மக்கள் எப்போதும் கூறுவதாவது: “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது,” “பணம் மட்டுமே எல்லாமாக இல்லை, ஆனால் அது இல்லாமல், உங்களால் எதுவும் செய்ய முடியாது,” மற்றும் “ஒருவனை வேலைக்கு அமர்த்துபவனே வேலை என்ன என்பதைத் தீர்மானிப்பவனாய் இருக்கிறான்.” அப்போது, இவை அனைத்தும் உண்மை என்று நான் நினைத்தேன். பணத்தைப் பயன்படுத்தி, உங்களால் உணவுண்ண மற்றும் ஆடை உடுக்க முடியும், மேலும், அது உங்களுக்கு மரியாதை மற்றும் போற்றுதலைக் கொண்டுவரும். பணம் தான் எல்லாம் என்று நான் நினைத்தேன். கடினமாக உழைத்து அதிகப் பணம் சம்பாதிப்பதாக நான் சூளுரைத்தேன். நான் வறுமையிலிருந்து தப்பித்து, ஒரு செல்வந்தனைப் போல வாழ விரும்பினேன்.

qiannu

பின்னர், எனது கணவரும் நானும் ஒரு பள்ளியின் சிற்றுண்டிச்சாலையை நடத்தப் பணியமர்த்தப்பட்டோம். அங்குத் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உணவுண்டனர். பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, நாங்கள் மற்றொரு தொழிலாளியை மட்டும் வேலைக்கு அமர்த்தினோம். எனது கணவரும் நானும் தினமும் காலை 4 மணி முதல் நள்ளிரவு கடந்த பிறகு வரையிலும் வேலை செய்தோம். எனக்கு மோசமாகச் சளி பிடித்திருந்தபோதும்கூட நான் வேலை செய்தேன். அதிகமாகச் சம்பாதிக்க, நாங்கள் நிறைய விவசாய வேலைகளையும் செய்தோம். அதிக வேலை நிறைந்த பருவகாலங்களின்போது, இரவில் அனைத்தையும் நடவு செய்வதற்காகவும் அறுவடை செய்வதற்காகவும் நாங்கள் கூடுதல் நேரம் வேலை செய்தோம். நாங்கள் இரவு பகலாக வேலை செய்ததால், எனக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. சில நேரங்களில், காய்கறிகளை நறுக்கும் போது நான் லேசாகத் தூங்கி என் கைகளை வெட்டிக்கொண்டேன். வெட்டுக்காயங்கள் உப்பு மற்றும் தண்ணீரால் மூடப்பட்டிருக்கும். அது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. நான் மிகவும் சோர்வாக இருந்த போதிலும், ஒவ்வொரு முறை என்னுடைய வருவாய் அதிகரிப்பதை பார்த்தபோது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இவை அனைத்தும் அதற்குத் தகுதியானது என நான் உணர்ந்தேன். மேலும், அந்தச் செல்வந்தர்கள் அவர்களின் ஆடம்பரமான உடையில் உணவுண்டு சிரித்துக்கொண்டிருப்பதை நான் பார்த்தபோது, “நான் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும்!” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன், நான் கடினமாக உழைத்தால்தான், நான் விரைவில் செல்வந்தர்களின் வரிசையில் இணைவேன் என்று நான் நினைத்தேன்.

தினமும் குளிர்ச்சியான தண்ணீரைப் பயன்படுத்தியதனால், எனக்குக் கடுமையான முடக்கு வாதம் ஏற்பட்டது. எனது மூட்டுகள் உருக்குலையத் தொடங்கின. பல ஆண்டுகள் சோர்வுமிக்க வேலை காரணமாக, எனது முதுகெலும்பில் ஒரு வட்டு நகர்ந்துவிட்டது, இதன் விளைவாக எலும்பு ஹைப்பர்பிளாசியா மற்றும் சியாட்டிகா நோய்கள் ஏற்பட்டன. அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் மற்றும் மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார், ஆனால் நான் பணம் சம்பாதிப்பதை நிறுத்த விரும்பவில்லை, எனவே நான் அதற்கு மறுத்துவிட்டேன். மூன்று நாட்கள் கூட மிக நீண்ட காலமாக இருந்திருக்கும். எனவே, நான் இரவு பகலாக வேலை செய்வதைத் தொடர்ந்தேன். இறுதியில், சரியான நேரத்தில் உணவுண்ண முடியாததால் அல்லது போதுமான தூக்கம் இல்லாததால், எனக்கு இரைப்பை அழற்சி மற்றும் இரைப்பைக் குடல் அழற்சி வந்துவிட்டது. அதன் பின்னர், எனக்குக் கருப்பை மயோமாஸ், கருப்பைச் சரிவு, இதய நோய், மாரடைப்பு, மற்றும் தீவிரமான இரத்தச் சோகை நோய் ஆகியவை வந்துவிட்டன. ஒன்றன் பின் ஒன்றாக நோய் வந்துகொண்டே இருந்தது. தாங்க முடியாத அளவு வலி இருந்தது, மேலும், என்னால் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை. என்னால் எண்ண முடியாத அளவு நான் கண்ணீர் வடித்தேன். நான் நம்பிக்கை இழந்தவளாக இருந்தேன். “வாழ்வதில் என்ன அர்த்தமுள்ளது? பணம் சம்பாதிப்பதற்காகப் போராடி நம் வாழ்க்கையைக் கழிப்பது தான் அதன் அர்த்தமா?” என்று நான் சிந்தித்தேன், என்னிடம் அதற்குப் பதில் இல்லை. சமுதாயத்தில் எதையும் சாதிக்க என்னிடம் பணம் இருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். எனவே, “உன்னால் நிமிர்ந்திருக்க முடியும் வரை, உன்னால் வேலை செய்ய முடியும்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மேலும், அப்படியே நான் பணத்தைப் பின்தொடரச் சென்றுவிட்டேன். ஆனால் ஒரு நாள் நான் மருத்துவமனைக்குச் சென்று, எனக்கு ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்ற இரண்டு வகையான புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தேன். அவர்கள் இதை என்னிடம் சொன்னபோது, திடீரென நான் பலவீனமாக உணர்ந்தேன். நான் எனது படுக்கையில் படுத்துப் பல மணிநேரம் அழுதேன். நான் சிகிச்சைக்காக அனைத்து வகையான மருத்துவமனைகளுக்கும் சென்று, கிட்டத்தட்ட எங்கள் சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்துவிட்டேன். ஒன்றும் பலனளிக்கவில்லை, மேலும், நான் எடுத்துக்கொண்ட மருந்து எனது உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு இரவும், அனைத்தும் அமைதியாக இருக்கும்போது, நான் எனது படுக்கையில் படுத்துக்கொண்டு விரக்தி நிலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருப்பேன். பணம் சம்பாதிப்பதற்காக நான் எனது வாழ்க்கையைச் செலவிட்டேன், மேலும் செல்வந்தன் ஆகாதது மட்டுமல்லாமல், எனது உடல்நலமும் கெட்டுவிட்டது, மற்றும் எனது வாழ்க்கை பரிதாபகரமாக இருந்தது. வாழ்வதில் என்ன பயன்? இனியும் பணம் சம்பாதிக்க முயற்சிப்பதற்காக என்னை நானே கொலை செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் எனது கணவர் பணத்தை நேசித்தார். “நீ உயிருடன் இருக்கும் வரை, நீ வேலை செய்துகொண்டே இரு!” என்று அவர் கூறினார். அவரது அலட்சியம் என்னை வருத்தத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியது, ஆனால் பெரும்பாலும் நான் உதவியற்றவளாகவே உணர்ந்தேன். நான் எனது 40-களில் இருந்தேன். நான் ஒருபோதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்ததில்லை. எனது மகனுக்குத் திருமணமாவதை நான் பார்க்கவில்லை. அவ்வாறு மரணமடைய நான் விரும்பவில்லை. நான் வாழ விரும்பினேன். ஆனால் பணம் இல்லாமல், நான் எவ்வாறு சிகிச்சை பெற்று உயிர்பிழைப்பது? தொடர்ந்து பணம் சம்பாதிப்பதே அதற்கான ஒரே வழி. எனவே, நான் மருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போதே தொடர்ந்து வேலை செய்தேன்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, எனது கணவர் எங்களுடைய மீதமுள்ள சேமிப்புகளை வைத்து ஒரு நிலக்கரி கட்டி ஆலையைத் திறந்தார். அதற்கு அடுத்த ஆண்டு, எண்ணெயைப் பிரித்தெடுக்கும் ஒரு ஆலையை அவர் திறந்தார். பிணியுற்றிருந்த போதும், தினமும் இரண்டு ஆலைகளுக்கும் சென்று, பழக்கமில்லாத வேலைகளைச் செய்தேன். பல வருடக் கடின உழைப்பிற்குப் பிறகு, நாங்கள் இறுதியாகச் சிறிது பணத்தைச் சம்பாதித்தோம். நகரத்தில் ஒரு வீடு, ஒரு காரை நாங்கள் வாங்கி, ஒரு நல்ல வாழ்க்கையை அனுபவித்தோம். எங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்களை முகஸ்துதி செய்துப் போற்றினர். எங்களின் சமூக நிலை மாறியது. எங்களுக்கு ஒரு புதிய அடையாளம் கிடைத்தது. நாங்கள் எங்களைக் குறித்து மகிழ்ச்சியாக இருந்தோம். இத்தனை வருடத் துன்பங்கள் இறுதியில் பலனளித்துள்ளதாகத் தோன்றியது. ஆனால் நல்ல காலம் நீடிப்பதில்லை. இத்தனை வருடக் கடின உழைப்பிற்குப் பிறகு எனது உடல் நிலைகுலையத் தொடங்கியது. “உங்களின் நோய்கள் மிகவும் சிக்கலானவையாக உள்ளன. உங்களின் எந்தவொரு உறுப்பும் சரியாக வேலை செய்யவில்லை. எங்களால் ஒன்றும் செய்யமுடியாது” என்று மருத்துவர் கூறினார். அவரது வார்த்தைகள் மரணத் தண்டனையைப் போல் இருந்தன. என்னால் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் வீட்டிற்குச் சென்று மரணத்திற்காகக் காத்திருக்க வேண்டுமா? என்னிடம் பணம் இருந்தது, மேலும் எனது செழிப்பான வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வந்தேன். ஆனால் அதனால் என்ன பயன்? எவ்வளவு பணத்தாலும் என்னை இப்போது காப்பாற்ற முடியாது. நோயின் வலி கிட்டத்தட்ட இறந்துவிடலாம் என்று என்னை நினைக்கச் செய்தது. என்னால் வேறு என்ன செய்ய முடியும்? நான் என்னையும் மீறி, மேலே பார்த்து, “பரலோகமே! என்னைக் காப்பாற்று!” என்று அழுதேன்.

என்னுடைய நம்பிக்கையற்ற தருணத்தில், எனது தோழி சர்வவல்லமையுள்ள தேவனின் இறுதி நாட்களின் சுவிசேஷம் குறித்து என்னிடம் பகிர்ந்தாள். மனுக்குலத்தை இரட்சிக்கவும், சத்தியத்தை வெளிப்படுத்தவும், மற்றும் வாழ்வின் இரகசியங்களை வெளிக்கொணரவும் இறுதி நாட்களில் தேவன் மாம்சமானதாக அவள் கூறினாள். உலகில் பொல்லாப்பு மற்றும் அந்தகாரத்தின் மூலாதாரம், ஏன் நம் வாழ்க்கை வெறுமையாகவும், துன்பம் நிறைந்ததாகவும் உள்ளது, நோய்கள் எங்கிருந்து வருகின்றன, நம் விதி யாருடைய கைகளில் உள்ளது, நம் வாழ்வின் உண்மையான அர்த்தத்தை எதனால் வழங்கமுடியும், மற்றும் பலவற்றைக் குறித்து அவர் வெளிப்படுத்துகிறார். மேலும், அவரது வார்த்தைகளைப் படித்து உண்மைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், இந்த விஷயங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும், பின்னர் நம் துன்பம் நீங்கும் என்று அவள் கூறினாள். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் ஒரு பத்தியை எனது தோழி எனக்குப் படித்துக் காட்டினாள், “மனிதர்கள் அனுபவிக்கும், பிறப்பு, மரணம், வியாதி மற்றும் முதுமை ஆகியவற்றால் வரும் ஜீவகாலம் முழுவதற்குமான துன்பத்தின் மூலக்காரணம் என்னவாக இருக்கிறது? இந்த விஷயங்களை ஜனங்கள் கொண்டிருக்கக் காரணம் என்னவாக இருந்தது? முதன்முதலில் சிருஷ்டிக்கப்பட்டபோது மனிதர்கள் அவற்றைக் கொண்டிருக்கவில்லை, அல்லவா? அப்படியானால், இவை எங்கிருந்து வந்தன? மனிதர்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டு, அவர்களின் மாம்சம் சீர்கெட்டுப்போன பிறகு, அவை உருவாகின. மனித மாம்சத்தின் வேதனையும், அதன் துன்பங்களும், வெறுமையும், மனித உலகின் மிகவும் துயர் மிகுந்த விவகாரங்களும், சாத்தான் மனிதகுலத்தை சீர்கெட்டுப் போகச் செய்தவுடனேயே வந்துவிட்டன. மனிதர்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பிறகு, அது அவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, அவர்கள் மேன்மேலும் சீரழிந்தனர். மனிதகுலத்தின் வியாதிகள் மேன்மேலும் தீவிரமாகின. அவர்களின் துன்பம் மேன்மேலும் கடுமையானது. மனித உலகின் வெறுமையையும் சோகத்தையும் ஜனங்கள் உணர்ந்தனர், ஜனங்களுக்கு உயிர்வாழ்வதற்கு வழி இல்லாமல் போனது, மேலும் அவர்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லாமல் போனது. இவ்வாறு, இந்தத் துன்பம் சாத்தானால் மனிதர்கள் மீது கொண்டுவரப்பட்டது(“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “உலகத் துன்பங்களை தேவனின் ருசிபார்த்தலின் முக்கியத்துவம்”).

“தேவன் நம்மை சிருஷ்டித்த போது, நாம் அனைவரும் அவரின் பாதுகாப்பின் கீழ் வாழ்ந்து வந்தோம், மரணம், நோய், அல்லது கவலைகள் இல்லாமல் ஏதேன் தோட்டத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் மனுக்குலத்தை சாத்தான் சோதித்துச் சீர்கெடச் செய்தபோது, நாம் தேவனுக்குத் துரோகம் செய்து, அவரது அக்கறை மற்றும் பாதுகாப்பை இழந்தோம். நாம் சாத்தானின் ஆதிக்கத்தில், சாத்தானின் கோட்பாடுகளின்படி வாழ்ந்து வருகிறோம். புகழ், செல்வம் மற்றும் அந்தஸ்திற்காக நாம் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுகிறோம், பொய் சொல்கிறோம், ஏமாற்றுகிறோம் மற்றும் சண்டையிடுகிறோம். இதிலிருந்து தான் நமது ஆவிகளில் நோய், வலி மற்றும் துயரம் உருவாகிறது. மேலும், வாழ்க்கை என்பது வலி மிகுந்தது, மிகவும் சோர்வடையச் செய்யக்கூடியது, அல்லது மிகவும் கடினமானது என்று இந்தத் துன்பம், இந்தக் கவலைகள், அனைவரையும் உணரச்செய்கிறது. சாத்தான் நம்மைச் சீர்கெடச் செய்ததினால் தான் இவை அனைத்தும் ஏற்படுகிறது. இவ்வாறு சாத்தான் நம்மைத் துன்புறுத்துகிறான். ஆனால் நம்மை இரட்சிப்பதற்காகத் தேவன் மாம்சமாகி இவ்வுலகிற்கு வந்திருக்கிறார். நாம் இரட்சிப்படைவதற்கும், சுத்திகரிக்கப்படுவதற்கும் உதவும் அனைத்து சத்தியங்களையும் அவர் வெளிப்படுத்துகிறார். நாம் தேவனின் வார்த்தைகளை வாசித்து அதன்படி வாழ்ந்தால், நாம் அவரது பாதுகாப்பையும் வழிகாட்டல்களையும் பெற்று, சீர்கேட்டிலிருந்து நம்மை நாமே விடுவித்துக்கொள்ளலாம் மற்றும் தேவனின் இரட்சிப்பைப் பெறலாம், மேலும், இறுதியில் நாம் சென்றடையும் இடத்திற்குள் அவரால் கொண்டுவரப்படலாம்” என்று எனது தோழி ஐக்கியத்தில் கூறினாள். அவளுடைய வார்த்தைகளைக் கேட்டதும், நான் ஒரு வகையான நம்பிக்கையைப் பெற்றேன். சர்வவல்லமையுள்ள தேவனால் என்னைத் துன்பங்களிலிருந்து இரட்சிக்கமுடியும் என்று நான் உணர்ந்தேன், எனவே சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியையைப் பார்க்க நான் ஒப்புக்கொண்டேன். மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற புத்தகத்தின் பிரதியை எனது தோழி எனக்கு வழங்கினாள். அதன் பின்னர், தேவனின் வார்த்தைகளை நான் தினமும் வாசித்தேன், மேலும், எனது சகோதர சகோதரிகளைச் சந்தித்தேன்.

என்னுடைய தியானங்களின் போது ஒரு நாள், தேவனின் வார்த்தைகளின் ஒரு வாசிப்பு குறித்த காணொளியை நான் பார்த்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “உனது பின்னணி எதுவாக இருந்தாலும், உனக்கு முன் எத்தகைய பயணம் இருந்தாலும், ஒருவராலும் பரலோகத்தின் திட்டங்களிலிருந்தும் ஏற்பாடுகளிலிருந்தும் தப்ப முடியாது. ஒருவராலும் தங்கள் தலைவிதியைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால், சர்வத்தையும் ஆளுகிறவராகிய தேவன் மட்டுமே இத்தகைய கிரியையைச் செய்ய வல்லவராயிருக்கிறார். மனிதன் தோன்றிய நாள் முதல், தேவன் எப்பொழுதும் இவ்வாறு கிரியை செய்து, பிரபஞ்சத்தை நிர்வகித்து, எல்லாவற்றிற்குமான மாற்ற விதிகளையும் அவற்றின் இயக்கத்தின் பாதையையும் கட்டளையிட்டு வருகிறார். எல்லாவற்றையும் போலவே, மனிதன் அமைதியாகவும் அறியாமலும் தேவனிடமிருந்து வரும் மதுரத்தாலும், மழையாலும் மற்றும் பனித்துளியாலும் போஷிக்கப்படுகிறான்; எல்லாவற்றையும் போலவே தேவனுடைய கரத்திலுள்ள திட்டத்தின்படி அவனை அறியாமலேயே ஜீவிக்கிறான். மனிதனுடைய இருதயமும் ஆவியும் தேவனுடைய கரத்தில் வைக்கப்பட்டுள்ளன. மனித ஜீவிதத்தின் அனைத்தும் தேவனுடைய கண்களால் பார்க்கப்படுகின்றன. நீ இதை விசுவாசிக்கின்றாயா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஜீவனுள்ளவையானாலும் ஜீவனற்றவையானாலும், தேவனுடைய எண்ணங்களுக்கு ஏற்ப எல்லா காரியங்களும் மாறும், மாற்றம் பெரும், புதுப்பிக்கப்படும் மற்றும் மறைந்துவிடும். இதுவே தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் முறையாகும்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனே மனிதனுடைய ஜீவனின் ஆதாரம்”). என்று சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார். நான் இந்தக் காணொளியைப் பார்த்தபோது, தேவன் தான் நம்முடைய சிருஷ்டிகர் என்றும், அவர் அனைத்தின் மீதும் ஆட்சிபுரிகிறார் என்றும் நான் அறிந்துகொண்டேன். தேவன் மனுக்குலம் முழுவதிற்கும் தேவையானதை வழங்கி போஷிக்கிறார். நமது தலைவிதியும், நமது வாழ்க்கையும் மரணமும், மற்றும் நமது மகிழ்ச்சி உள்ளிட்டவை அவரது கரத்தில் உள்ளது. பரபரப்பாக இருப்பது மற்றும் வேகப்படுவதன் மூலம் அவற்றை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் தேவனின் ராஜ்யபாரத்தை நான் புரிந்துகொள்ளவில்லை. செல்வந்தனாக முயற்சித்து, எனது விதியை மாற்ற நான் எனது சொந்த வலிமையை நம்பி இருக்க முயற்சி செய்தேன். நான் சிறிது பணத்தைச் சம்பாதித்தாலும், நான் மகிழ்ச்சியாக உணரவில்லை. எனது ஆத்துமா வலியில் இருந்தது, மேலும், எனது உடல்நலம் கெட்டுவிட்டது. அப்போது தான், ஜனங்கள் தேவனை விசுவசித்து அவரைத் தொழுதுகொள்ளவில்லை என்றால், மற்றும் அவரது ராஜ்யபாரத்திற்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை என்றால், மேலும், ஆசை காரணமாக அவர்களது தலைவிதியை அவர்கள் எதிர்த்தால், அவர்கள் வீணாக வேதனையுற்று, அவர்களின் மரணத்திற்குப் பிறகு நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை நான் உணர்ந்தேன். பின்னர் தேவன் மட்டும் தான் என்னுடைய மெய்யான உதவி என்பதை நான் அறிந்துகொண்டேன், மேலும், நான் ஜெபம் செய்து என்னுடைய உடல்நலத்தை அவரிடம் ஒப்படைத்தேன். நான் வாழ்ந்தாலும் அல்லது மரணமடைந்தாலும், தேவனின் ராஜ்யபாரத்திற்கு நான் அடங்கியிருப்பேன்.

அதன் பின்னர் அடிக்கடி திருச்சபை வாழ்க்கையில் நான் இணைந்தேன். எனது சகோதர சகோதரிகள் எவ்வாறு தேவனின் வார்த்தைகளை வாசித்து, சத்தியத்தைப் பின்தொடர்ந்தனர், தங்கள் கடமையைச் செய்து தேவனைப் பிரியப்படுத்த முயல்கின்றனர் என்பதை நான் கண்டேன், மேலும், அவர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். நான் எனது பழைய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று ஒரு புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். எனவே தேவனிடம் நான் அடிக்கடி ஜெபம் செய்து, கூடுகைகளில் கலந்துகொள்ளவும் எனது கடமையைச் செய்யவும் அதிக நேரம் கிடைக்கும் வகையில் வழி செய்து தருமாறு தேவனிடம் கேட்டேன். பின்னர், ஒரு புதிய சாலை கட்டுமானத்திற்காக எங்களின் எண்ணெய் எடுக்கும் ஆலை கோரப்பட்டது. முன்பைப் போல் நான் இரண்டு ஆலைகளுக்கு இடையில் சென்று வர வேண்டிய தேவையில்லை. மற்றவர்களைச் சந்திக்க, தேவனின் வார்த்தையில் ஐக்கியமாக, தேவனின் வார்த்தை குறித்துச் சிந்திக்க, மற்றும் தேவனை நெருங்க எனக்கு அதிக நேரம் இருந்தது. நான் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக உணர்ந்தேன். அதன் பின்னர், எனது உடல்நலம் நன்றாக மேம்படத் தொடங்கியது. நான் உற்சாகமாக உணர்ந்தேன், மேலும், எனது உடல் வலுவாக இருப்பதாக உணர்ந்தேன். நான் நிம்மதியாகவும் தொல்லையில்லாமலும் இருப்பதாக உணர்ந்தேன். நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருந்தேன்.

பின்னர், தேவனின் வார்த்தைகளின் ஒரு வாசிப்பு குறித்த மற்றொரு காணொளியை நான் பார்த்தேன். சர்வவல்லமையுள்ள தேவன் சொல்லுகிறார்: “‘பணம் உலகைச் சுற்ற வைக்கிறது’ என்பது சாத்தானுடைய ஒரு தத்துவமாகும். மேலும் இது ஒவ்வொரு மனித சமுதாயத்திலும் ஒட்டு மொத்த மனிதகுலத்திலும் நிலவுகிறது. இது ஒரு போக்கு என்று நீங்கள் கூறலாம். ஏனெனில் இது ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் புகுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, ஜனங்கள் இந்தச் சொல்லை ஏற்கவில்லை. ஆனால் அதன் பின் அவர்கள் மெய்யான ஜீவிதத்துடன் தொடர்பு கொள்ளும்போது அதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும், உண்மையில் இந்த வார்த்தைகள் சத்தியம் என்று உணரத் தொடங்கினர். இது சாத்தான் மனிதனைக் கெடுக்கும் செயல் அல்லவா? … ஆகவே, மனிதர்களைச் சீர்கெடுக்க சாத்தான் இந்த போக்கைப் பயன்படுத்திய பிறகு, அது அவர்களிடம் எவ்வாறு வெளிப்படுகிறது? பணம் இல்லாமல் ஒரு நாள் கூட சாத்தியமில்லை என்றும், நீங்கள் பணம் இல்லாமல் இந்த உலகில் ஜீவிக்க முடியாது என்றும் நினைக்கின்றீர்களா? ஜனங்களின் நிலையானது அவர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களுடைய மரியாதையும் அதனைப் போன்றது. ஏழைகளின் முதுகு அவமானத்தால் வளைந்திருக்கிறது. பணக்காரர்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்து பெருமையாக நிற்கிறார்கள், சத்தமாகப் பேசுகிறார்கள், மற்றும் ஆணவத்துடன் ஜீவிக்கிறார்கள். இந்த வார்த்தை மற்றும் போக்கு ஜனங்களுக்கு எதைத் தருகிறது? பணத்தைத் தேடுவதில் பலர் எந்த தியாகத்தையும் செய்கிறார்கள் என்பது உண்மையல்லவா? அதிகமான பணம் தேடுவதில் பலர் தங்கள் கண்ணியத்தையும் நேர்மையையும் இழக்கவில்லையா? மேலும், பணத்திற்காக தங்கள் கடமையைச் செய்வதற்கும் தேவனைப் பின்பற்றுவதற்குமான வாய்ப்பைப் பலரும் இழக்கவில்லையா? இது ஜனங்களுக்கு இழப்பு அல்லவா? (ஆம்.) இந்த முறையையும் இந்தப் பழமொழியையும் பயன்படுத்தி மனிதனை இவ்வளவாகக் கெடுக்கும் சாத்தான் வஞ்சனையானதல்லவா? அது தீங்கிழைக்கும் தந்திரம் அல்லவா?(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் V”). என்று சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார். நான் இந்தக் காணொளியைப் பார்த்த பின்னர், உலகம் சார்ந்த நாட்டங்களைப் பின்தொடரவும் பணத்தை வழிபடவும் செய்த சாத்தானின் சீர்கேடு மற்றும் சமூகத்தின் ஆதிக்கம் காரணமாகவே இந்தப் பத்து ஆண்டுகளையும் வலி மற்றும் சோர்வுடன் செலவழித்தேன் என்பதை நான் புரிந்துகொண்டேன். என்னுடைய குழந்தைப் பருவத்தில், நான் வறுமையில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, நான் விலக்கி வைக்கப்பட்டு, இழிவாகப் பார்க்கப்பட்டேன். நன்றாக வாழ்ந்து மரியாதையைப் பெறும் செல்வந்தர்களை நான் பார்த்தபோது, இந்த உலகில் நீங்கள் வாழ்வதற்குப் பணம் என்பது கட்டாயம் தேவை என்று நான் உணர்ந்தேன். “பணம் மட்டுமே எல்லாமாக இல்லை, ஆனால் அது இல்லாமல், உங்களால் எதுவும் செய்ய முடியாது,” “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது,” “ஒருவனை வேலைக்கு அமர்த்துபவனே வேலை என்ன என்பதைத் தீர்மானிப்பவனாய் இருக்கிறான்,” “எல்லாவற்றிற்கும் முந்தினது பணம் மட்டுமே,” மற்றும் “ஐசுவரியத்தை அடைய மனுஷன் எதையும் செய்வான்.” இந்தச் சாத்தானுக்கேற்ற தவறான கருத்துகள் எனது இதயத்தில் வேரூன்றி எனது எண்ணங்களைக் கட்டுப்படுத்தின. பணம் தான் எல்லாமும் என்றும், அது என்னை போற்றப்படவும், மதிக்கப்படவும் மற்றும் மகிழ்ச்சியடையவும் செய்யும் என்றும் நான் நினைத்தேன். பணம் ஒன்றை மட்டுமே நான் எனது இலக்காக வைத்தேன், அதிகம் சம்பாதிப்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். நான் மயக்கமாக அல்லது சோர்வாக அல்லது உடம்பு சரியில்லாதது போல் உணர்வது பற்றி மற்றும் எனது உடலால் அதைத் தாங்க முடியவில்லை என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. செல்வந்தராகி ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ்வது பற்றி நான் நினைத்த போது, நான் எனது பல்லைக் கடித்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றினேன். எனக்குப் புற்றுநோய் வந்தபோது கூட அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. உண்மையில், இது பணத்தை இன்னும் முக்கியமானதாக்கியது, ஏனெனில் சிகிச்சை பெறவும் உயிர் பிழைக்கவும் எனக்குப் பணம் தேவைப்பட்டது. அப்போதும் கூட, பணம் சம்பாதிக்க முயல்வதை நான் நிறுத்தவில்லை. நான் சாத்தானின் கட்டுப்பாட்டில் இருந்தேன், பணத்திற்கு அடிமையாக இருந்தேன். என்னிடம் கார், வீடு மற்றும் சிறிது பணம் இருந்தபோதும், நான் மதிக்கப்பட்டுப் போற்றப்பட்ட போதும், நான் மகிழ்ச்சியாக உணரவில்லை. எனக்குப் பல நோய்கள் இருந்தன, மேலும் எனக்குப் புற்றுநோயும் இருந்தது. எனது பணத்தால் எனது வலியைக் குறைக்க முடியவில்லை, மேலும், பணத்தால் எனது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான் மிகுந்த வலியையும் விரக்தியையும் உணர்ந்தேன். அதிகப் பணத்தால் எந்தப் பயனும் இல்லை. முன்பு, நான் பணத்திற்காக எனது வாழ்க்கையைப் பணயம் வைத்தேன். இப்போது நான் எனது வாழ்க்கையைப் பணத்தைப் பயன்படுத்தி வாங்கினேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக வாழ்ந்தேன், ஆனால் இப்போது வெறும் கையுடன் இருக்கிறேன். பணத்தைப் பின்தொடர்வதென்பது வாழ்வதற்கான தவறான வழி என்பதை நான் தெளிவாகக் கண்டேன். பணம் என்பது நமக்குத் தீங்கிழைக்கவும், நம்மைச் சீர்கெடச் செய்யவும் சாத்தான் பயன்படுத்தும் ஒரு தந்திரமாகும். இது நம் கழுத்தைச் சுற்றிச் சாத்தான் வைக்கும் ஒரு நுகத்தடி ஆகும். தேவனின் வார்த்தை இல்லை என்றால், சாத்தான் நம்மைக் கட்டவும், கட்டுப்படுத்தவும் நமக்குத் தீங்கு விளைவிக்கவும் பணத்தைப் பயன்படுத்துகிறது என்பதை நான் அறிந்திருக்கமாட்டேன், மேலும், இப்போது வரை சாத்தான் என்னை வழிநடத்தி, வேதனைப்படுத்தி, என்னை வைத்து விளையாடிக்கொண்டிருந்திருப்பான். ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளவில்லை, அதனால் அவர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லை என்று நான் கண்டேன். அவர்கள் பணத்தை முதன்மைப்படுத்தி ஜனக்கூட்டத்தைப் பின்தொடர்ந்தனர். இது அவமானகரமானது. தேவனின் சத்தத்தைக் கேட்டு, அவருக்கு முன் சென்று, சாத்தானின் நிந்தனையிலிருந்து தப்பித்தது என்னுடைய அதிர்ஷ்டமாகும். இது தேவனின் இரட்சிப்பாகும், மேலும், அவருக்கான நன்றிகளால் எனது மனம் நிறைந்துள்ளது.

பின்னர், எனது கணவர் பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தபோது, ஆலையில் நான் வேலை செய்ய வேண்டியிருந்தது. சில நேரங்களில், அது எங்களின் சந்திப்பு நேரங்களில் நடந்தது. நான் பங்கேற்றிருந்தாலும், நான் குழப்பமாக உணர்ந்தேன். நான் எனது மனதில் குற்ற உணர்வுடன் இருந்தேன். பணம் சம்பாதிப்பதற்காக நான் எவ்வாறு என்னை நோயுறச் செய்தேன் என்று நினைத்தேன். மருத்துவர் எனக்கு மரணத் தண்டனையை வழங்கினார். நான் மரணத்தின் விளிம்பில் இருந்தபோது தேவன் தான் என்னை இரட்சித்து இரண்டாவது வாய்ப்பை வழங்கினார். ஆனால் என்னால் எனது கடமையைச் செய்து அவரது அன்பை ஈடு செய்ய முடியவில்லை. நான் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதாக உணர்ந்தேன். “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?(மத்தேயு 16:26). என்று கர்த்தராகிய இயேசு கூறியுள்ளதை நான் சிந்தித்துப் பார்த்தேன். மேலும், 1 திமொத்தேயு 6:8 இல் “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் உங்களின் வாழ்க்கையை இழப்பது தான் அதிகப் பணம் சம்பாதிப்பதற்கான அர்த்தம் என்றால், அதிகம் பணம் சம்பாதிப்பதில் என்ன பயன்? நிலக்கரி ஆலையை வாடகைக்கு விடுவது குறித்து நான் சிந்தித்தேன். நான் குறைவான பணத்தையே சம்பாதித்தேன், ஆனால் நான் வாழ்வதற்கு அது போதுமானதாக இருந்தது, மேலும், என்னால் தேவனை ஆராதித்து எனது கடமையைச் செய்ய முடிந்தது. ஆனால் எனக்கு வேறு சிந்தனைகள் இருந்தன. நிலக்கரி ஆலை நல்ல வருமானத்தைத் தந்துகொண்டிருந்தது, மேலும், ஒரு தொழிலைத் தொடங்குவதென்பது மிகவும் கடினமாக இருந்தது. அதை விட்டுக்கொடுப்பதற்கு நான் வெட்கப்பட்டேன். நான் தயங்கினேன். என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை, எனவே நான் தேவனின் உதவிக்காக ஜெபம் செய்தேன்.

ஒரு நாள், தேவனின் வார்த்தைகளில் நான் இதை வாசித்தேன்: “ஆனால் இந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மிகவும் எளிமையான வழி உள்ளது. இது ஒருவருடைய பழைய ஜீவித முறைக்கு விடை கொடுப்பது ஆகும்; ஜீவிதத்தில் ஒருவருடைய முந்தைய இலக்குகளுக்கு விடை கொடுப்பது ஆகும்; ஒருவருடைய முந்தைய ஜீவித முறை, ஜீவிதத்தைக் குறித்தக் கண்ணோட்டம், நாட்டங்கள், ஆசைகள் மற்றும் இலட்சியங்களைச் சுருக்கமாக்கிப் பகுப்பாய்வு செய்வதும்; பின்னர் தேவனுடைய விருப்பத்துடனும் மனிதனுக்கான கோரிக்கைகளுடனும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றில் ஏதேனும் தேவனுடைய விருப்பத்திற்கும் கோரிக்கைகளுக்கும் இசைவானதா என்பதைப் பார்ப்பதும், அவற்றில் ஏதேனும் ஒன்று ஜீவிதத்தின் சரியான மதிப்புகளை வழங்குகிறதா என்பதைப் பார்ப்பதும், ஒருவரை சத்தியத்தைப் பற்றிய பெரிய புரிதலுக்கு இட்டுச்செல்கிறதா என்பதைப் பார்ப்பதும், மேலும் ஒருவரை மனித நேயத்துடனும் மனிதனாகவும் ஜீவிக்க அனுமதிப்பதும் ஆகும். ஜீவிதத்தில் ஜனங்கள் பின்பற்றும் பல்வேறு இலக்குகளையும் அவர்களுடைய எண்ணற்ற ஜீவித முறைகளையும் நீ மீண்டும் மீண்டும் ஆராய்ந்து, கவனமாகப் பிரிக்கும்போது, அவற்றில் ஒன்றுகூட சிருஷ்டிகருடைய உண்மையான மனித நோக்கத்துடன் ஒத்துப் போவதாக காணமாட்டாய். அவை அனைத்தும் சிருஷ்டிகருடைய சர்வவல்லமை மற்றும் பராமரிப்பிலிருந்து ஜனங்களை விலகச் செய்கின்றன; அவை அனைத்தும் கண்ணிகளாக இருக்கின்றன, அவை ஜனங்களை ஒழுக்கத்திலிருந்து வழுவச் செய்கின்றன மற்றும் அவை நரகத்திற்கு இட்டுச் செல்கின்றன. இதை நீ உணர்ந்தபிறகு, உன் பணியானது ஜீவிதத்தைப் பற்றிய உன் பழைய பார்வையை ஒதுக்கி வைப்பது, பல்வேறு கண்ணிகளிலிருந்து விலகி இருப்பது, தேவன் உன் ஜீவிதத்தைப் பொறுப்பேற்று உனக்காக ஏற்பாடுகளைச் செய்ய வழிவிடுவது; தேவனுடைய திட்டங்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் கீழ்ப்படிய முயற்சிப்பது, தனிப்பட்ட விருப்பமின்றி ஜீவிப்பது, மற்றும் தேவனை வணங்கும் நபராக மாறுவது மட்டுமேயாகும்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”). தேவனின் வார்த்தைகளை வாசிக்கும்போது, முன்பு நான் நம்பியிருந்த, செல்வந்தராக முயற்சித்தல் என்ற சாத்தானின் வாழ்க்கை விதிகளைக் குறித்து நான் சிந்தித்தேன். “பணம் உலகைச் சுற்ற வைக்கிறது” மற்றும் “பணம் மட்டுமே எல்லாமாக இல்லை, ஆனால் அது இல்லாமல், உங்களால் எதுவும் செய்ய முடியாது.” என்று நான் நம்பினேன். செல்வந்தராவதற்கும், ஜனத்தின் மரியாதையைச் சம்பாதிப்பதற்கும், நான் பணத்திற்காகக் கஷ்டப்பட வேண்டி இருந்தது. அந்த நாட்கள் வலி மிகுந்ததாகவும் துயரம் மிகுந்ததாகவும் இருந்தன. பணம் அவ்வளவு முக்கியமானதா? அது உண்மையில் எனக்கு என்ன வழங்க முடியும்? அதனால் வீடு, கார், வாங்க முடியும், ஒரு செழிப்பான வாழ்க்கையை வாழ அது எனக்கு உதவ முடியும், மேலும், எனக்கு மரியாதையைக் கொண்டுவரும், மேலும், அது எனக்குத் தற்காலிக மாம்ச இன்பத்தைத் தரக்கூடும். ஆனால் என் மனதில் உள்ள வெறுமையை நிரப்பவோ அல்லது வலியை நிறுத்தவோ அதனால் முடியவில்லை, அது எனக்கு அமைதியையோ மகிழ்ச்சியையோ தரவில்லை, நோயிலிருந்து எனது வேதனையை அதனால் முடிவுக்குக் கொண்டுவர முடியவிவில்லை, மேலும் அதனால் எனது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான் எனது உள்ளூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் குறித்துச் சிந்தித்துப் பார்த்தேன். அவரிடம் பணமும் அந்தஸ்தும் இருந்தது, ஆனால் புற்றுநோயால் மரணமடைந்தார். வேதனை மற்றும் மரணத்திலிருந்து தப்பிக்கப் பணம் மற்றும் அந்தஸ்தால் அவருக்கு உதவ முடியவில்லை. வாழ்க்கையை வலி மற்றும் வெறுமையுடன் வாழ்ந்து, அதை முடிவுக்குக் கொண்டுவரத் தற்கொலை செய்துகொண்ட செல்வந்தர்கள் குறித்தும், அத்துடன் பணத்திற்காகப் பொய் சொன்ன, ஏமாற்றிய, சண்டையிட்ட, மற்றும் மற்றவர்களை வஞ்சனையுடன் ஏமாற்றி, மனிதத்தன்மை மற்றும் மனசாட்சி அனைத்தையும் இழந்தவர்கள் குறித்தும் நான் கேள்விப்பட்டேன். பணம் சார்ந்த ஆதாயத்தைப் பின்தொடர்வது ஜனத்தை மேலும் சீர்கெடவும், மேலும் தரம் குறையவும் செய்கிறது என்று இந்த அனைத்துக் கதைகளும், என்னுடைய சொந்த அனுபவமும் எனக்குப் புரியச் செய்தது. அது அவர்களைத் தேவனிடமிருந்து விலக்கிப் பாவத்தை நோக்கிக் கொண்டுசெல்கிறது. யோபு குறித்து நான் நினைத்துப் பார்த்தேன், அவன் பணத்தையோ பொருள் சார்ந்த சௌகரியங்களையோ நாடவில்லை. யோபு தேவனின் ராஜ்யபாரத்திற்குக் கீழ்ப்படிந்து, அனைத்திலும் தேவனின் செய்கைகளை அறிய முயன்றான், இறுதியில், தேவனின் ஆசிர்வாதத்தைப் பெற்றான். பேதுருவை இயேசு அழைத்தபோது, அவன் அனைத்தையும் விட்டுவிட்டு எவ்வாறு தேவனைப் பின்தொடர்ந்தான் என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். அவன் தேவனை அறிய முயன்றான், மற்றும் தேவனை அன்பு செய்தான், தேவன் அவனை பரிபூரணமாக்கினார், மேலும் அவன் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தான். இதிலிருந்து, தேவனை அறிந்து, அவரைத் தொழுது, அவரது வார்த்தைக்கு இணங்க வாழ்ந்து, அவரின் பாராட்டைப் பெறுவது, உள்ளிட்டவை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்களாகும். விசுவாசம் மற்றும் சரியான பாதையைக் கண்டுபிடிப்பதென்பது எனக்குக் கடினமாக இருந்தது. செல்வம் மற்றும் உலகம் சார்ந்த மகிழ்ச்சிகளை நான் தொடர்ந்து துரத்திச் சென்று, சத்தியம் மற்றும் இரட்சிப்பின் மீதான எனது தேடலைக் கைவிட்டால், அது முட்டாள்தனமானது என்று நான் அறிந்தேன். இது குறித்து நான் சிந்தித்தபோது, நான் அமைதியாக உணர்ந்தேன். நான் இனிப் பணத்திற்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை. சத்தியத்தைப் பின்தொடர எனக்கு அதிக நேரமும் வலிமையும் தேவைப்பட்டது. அதன் பின்னர், ஆலையை வாடகைக்கு விடுவது குறித்து நான் எனது கணவருடன் கலந்துரையாடினேன். தேவனின் அற்புதமான திட்டங்களின் உதவியுடன், நாங்கள் அதை வாடகைக்கு விட்டோம். தினமும் என்னால் கூடுகைகளில் கலந்துகொண்டு எனது கடமையைச் செய்ய முடிந்தது.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், எனது கணவர் திடீரென நோயுற்று மரணமடைந்தார். அவரது மரணம் எனக்குக் கடினமானதாக இருந்தது, மேலும், வாழ்க்கை என்பது எவ்வளவு நிலையற்றது என்று அது எனக்குக் காட்டியது. எனது கணவர் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதியைப் பணம் சம்பாதிக்க முயற்சிப்பதிலேயே செலவிட்டார். அவரது இரத்த அழுத்தம் 200-க்கு மேல் இருந்தது, ஆனால் அவர் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தார். அவரது இடுப்பெலும்பு முறிந்த போதும், முழுவதுமாகக் குணமடைவதற்கு முன்னர் அவர் பணிக்குச் சென்றார், மேலும், நான் வலியுறுத்தியபோதும் அவர் ஓய்வெடுக்கவில்லை. அவரும் பணத்திற்கு அடிமையாக இருந்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் சாத்தானால் கட்டுப்படுத்தப்பட்டார் மற்றும் சாத்தானால் அவருக்குத் தீங்கு விளைவிக்கப்பட்டது. மரணத்தை எதிர்கொள்ளும்போது கூட அவர் அதை விடவில்லை. அவர் பணம் சம்பாதித்து ஒரு நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்பினார், ஆனால் அவர் தனது வாழ்க்கையை இழந்தார். புகழ் மற்றும் செல்வத்தால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை அல்லது அவரது வலியைக் குறைக்க முடியவில்லை அல்லது மரணத்தை ஏமாற்ற அவருக்கு உதவ முடியவில்லை. இது “ஜனங்கள் தங்களது ஜீவிதத்தைப் பணத்தையும் புகழையும் துரத்தச் செலவழிக்கிறார்கள்; அவர்கள் இந்த வைக்கோல்களைப் பிடித்துக்கொண்டு, அவற்றை தங்களின் ஒரே ஆதரவு என்று நினைத்து, அவற்றைக் கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் ஜீவிக்க முடியும், மரணத்திலிருந்து தப்பிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் இறக்கப் போகும் நேரத்தில் தான், இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன, மரணத்தை எதிர்கொள்ளும் போது அவை எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன, அவை எவ்வளவு எளிதில் சிதறுகின்றன, எங்கும் திரும்ப முடியாவண்ணம் எவ்வளவு தனிமையாகவும் உதவியற்றதாகவும் இருக்கின்றன என்று உணர்கிறார்கள். ஜீவிதத்தைப் பணத்தால் புகழால் வாங்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஒரு நபர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவர்களுடைய நிலை எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அனைவரும் மரணத்தை எதிர்கொள்ளும்போது சமமான ஏழைகள் மற்றும் அற்பமானவர்களே. பணத்தால் ஜீவிதத்தை வாங்க முடியாது, புகழ்ச்சி மரணத்தை அழிக்கமுடியாது, பணமோ புகழோ ஒரு நபருடைய ஜீவிதத்தை ஒரு நிமிடம் வரையிலோ, ஒரு நொடி வரையிலோ நீட்டிக்க முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள்(வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III”) என்று தேவன் கூறியது போல் இருந்தது. பணம் சம்பாதிக்க முயல்வதைச் சுற்றி ஓடியே எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் எவ்வாறு செலவழித்தேன் என்று நான் பார்க்கும்போது, நான் மரியாதை மற்றும் புகழ்ச்சியைப் பெற்றிருந்தாலும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் சாத்தானால் நான் சித்திரவதை செய்யப்பட்டேன் என்பதை நான் கண்டேன். ஆனால் தேவன் என்னை இரட்சித்தார். பணத்தின் பெரும் சுழலிலிருந்து அவர் என்னை இரட்சித்து வாழ்வில் எனது திசையை மாற்றினார். இப்போது, நான் சத்தியத்தைப் பின்தொடர்ந்து எனது கடமையைச் செய்கிறேன், நான் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் உணர்கிறேன். இது பணத்தால் வாங்க முடியாத ஒன்றாகும். என்னை இரட்சித்ததற்காக சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்தவ பிரசங்கங்கள்: வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன—இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகம தீர்க்கதரிசனங்களின் கடைசிச் சம்பவங்கள் தோன்றியுள்ளன. இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? இந்த கட்டுரையைப் படியுங்கள், அதற்கான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

பணம் சம்பாதிக்க விரைந்தோடுவது உண்மையிலேயே சந்தோஷமான வாழ்வைத் தருமா? (பகுதி 1)

டான் சுன், இந்தோனேஷியா “உங்களிடம் பணம் இல்லாதிருக்கும் போது உங்கள் பிள்ளையைக் கல்லூரிக்கு அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள்...

கிறிஸ்தவர்கள் துன்பப்படுவதற்கு தேவன் ஏன் அனுமதிக்கிறார்?

பல கிறிஸ்தவர்கள் குழப்பமடைகிறார்கள்: தேவன் அன்பாயிருக்கிறார், அவர் சர்வ வல்லவர், அப்படியிருக்க அவர் ஏன் நம்மை துன்பப்படுவதற்கு...

கர்த்தர் கதவைத் தட்டும்போது நாம் அவரை எப்படி வரவேற்க வேண்டும்?

இன்றைய பைபிள் செய்தி: கர்த்தர் கடைசி நாட்களில் திரும்பி வரும்போது எப்படி நம் கதவுகளைத் தட்டுவார்? அவருடைய வருகையை நாம் எவ்வாறு வரவேற்க முடியும்? கண்டுபிடிக்க படிக்க க்ளிக் செய்யவும்.