நாம் நம்முடைய கோபமான சுபாவத்தை எவ்வாறு சரி செய்வது?

செப்டம்பர் 22, 2021

கேள்வி: பல வருடங்களாக கர்த்தரை விசுவாசித்து இருந்தாலும், நான் இன்னும் பாவம் பண்ணுதலும் பாவத்தை அறிக்கை செய்தலும் என மாற்றி மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறேன், மேலும் நான் கோபகுணம் உள்ளவனாக இருக்கிறேன். என் வீட்டிலோ அல்லது என் நிறுவனத்திலோ எனக்குப் பிடிக்காத ஒன்றை மற்றவர்கள் சொல்லும் போதோ அல்லது செய்யும்போதோ நான் கட்டுக்கடங்காமல் கோபப்படுகிறேன், இது என்னை மிகவும் வருத்துகிறது. நான் என் கோபமான சுபாவத்தையும் பாவம் செய்வதையும் எப்படி சரி செய்வது, மற்றும் கர்த்தருடைய போதனைகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பதையும் நான் தேட விரும்புகிறேன்.

the-way-to-solve-the-anger

பதில்: வணக்கம், நீங்கள் விவரிக்கும் பிரச்சனை விசுவாசிகளிடையே பொதுவானதாகும். நாம் நமது கோபமான சுபாவத்தை சரி செய்ய விரும்பினால், முதலில் கோபத்தின் மூலகாரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். உண்மையில், நாம் நம்முடைய பாவ சுபாவத்தினால் கட்டுப்படுத்தப்படுவதால், நம் எண்ணங்களுக்கு முரணான விஷயங்களை எதிர்கொள்ளும்போது, நாம் அடிக்கடி கடுங்கோபங்கொண்டு, திடீர் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். உதாரணமாக, நம்முடைய ஆணவமான மற்றும் அகந்தையான சுபாவத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு நாம் நம் சொந்தக் கருத்துக்களே முழுமையானவை மற்றும் மிகச் சரியானவை என்று எப்போதும் நினைக்கிறோம், எல்லா விஷயங்களிலும் இறுதி முடிவை எடுக்கவும், மற்றவர்கள் நம்முடைய சொந்த விருப்பங்களின்படி செயல்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம். நம் குடும்பங்கள் நண்பர்கள் அல்லது சகாக்கள் நம் சொந்த யோசனைகளுடன் முரண்பட்டு ஏதாவது செய்தாலோ அல்லது நாம் சொல்வதைக் கேட்காமல் இருந்தாலோ, நாம் நம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் கோபப்பட்டு அவர்களைக் கடிந்து பேசுகிறோம். மேலும், நாம் சுயநலமாகவும் பேராசையுடையவர்களாகவும் இருப்பதால், நாம் செய்யும் அனைத்தும் நம் சொந்த லாபத்திற்காக மட்டுமே செய்கிறோம் மற்றும் நமது விருப்பங்கள் பாதிக்கப்பட்ட உடனேயே, நாம் கட்டுப்பாடில்லாமல் கடுங்கோபங்கொண்டு நமது திடீர் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். … நம்முடைய பாப சுபாவம் சரி செய்யப்படாவிட்டால், நாம் நம்முடைய கோபத்தை சரி செய்ய எந்த வழியும் இருக்காது. நமக்குப் பிடிக்காத விஷயங்களை எதிர்கொள்ளும்போது, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ளக் கடினமாக முயற்சி செய்தாலும், நம்மால் சிறிது நேரம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்த முடியும், அடுத்தக் கணமே நாம் கடுங்கோபம் கொள்ள நேரிடும்.

ஒருவேளை சிலர் கேட்கலாம், “கர்த்தராகிய இயேசுவின் மீட்பைப் பெற்ற பிறகும், நம்முடைய பாவங்கள் நமக்கு மன்னிக்கப்படவில்லையா? நாம் நம்மையும் மீறி ஏன் கடுங்கோபம் கொள்கிறோம், நாம் ஏன் பாவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறோம் மற்றும் நம்மால் ஏன் பாவக்கட்டிலிருந்து தப்பிக்க முடியவில்லை?” என்று. தேவனுடைய வார்த்தைகளின் இரண்டு பத்திகளை நாம் கவனிக்கலாம், பின்னர் நாம் புரிந்துகொள்வோம்: தேவன் சொல்லுகிறார், “மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான்.

இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனை புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

தேவனுடைய இந்த வார்த்தைகளிலிருந்து, கிருபையின் காலத்தில் கர்த்தராகிய இயேசு மனுகுலத்திற்கான மீட்பின் கிரியையை செய்து முடித்தார், இது மனுக்குலத்தின் பாவங்களை மன்னிக்கவும் நியாயப்பிரமாணங்களால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதிலிருந்தும் சபிக்கப்படுவதிலிருந்தும் தப்பிக்க உதவியது என்று நாம் கற்றுக்கொள்ளலாம். கர்த்தராகிய இயேசுவின் இரட்சிப்பை ஏற்று அறிக்கைப்பண்ணும்படி அவரிடம் ஜெபிக்கும் வரையிலும் நம்முடைய பாவங்கள் கர்த்தரால் மன்னிக்கப்படும், நாம் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். கர்த்தராகிய இயேசு செய்தது மனிதனுடைய பாவங்களை மன்னிக்கவும் நியாயப்பிரமாணங்களில் இருந்து மனிதனை விடுவிக்கக்கூடிய மீட்பின் கிரியையாகும். ஆனால் பாவத்தை விட ஆழமானதும் தீர்க்க மிகவும் கடினமானதும், பாவங்களைச் செய்வதற்கும் தேவனை எதிர்ப்பதற்கும் மூலகாரணமான நம்முடைய பாவ சுபாவம் இன்னும் எஞ்சியிருக்கிறது. நம் அனைவருக்கும் இதைப்பற்றிய நேரடியான அனுபவம் உள்ளது: நாம் நம்முடைய மாம்சத்தை அடக்க எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நம்மால் கர்த்தருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்க முடிவதில்லை, நம் கோபத்தைக் கட்டுபடுத்த, தேவனுக்குக் கீழ்ப்படிய, நேர்மையான மனிதர்களாக இருக்க முடிவதில்லை. நம் சொந்த விருப்பங்களுக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களை நாம் சந்திக்கும் போது, நாம் பொய் சொல்லி வஞ்சிப்போம்; இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டப் பேரழிவுகள் நம்மீது வரும்போது நாம் உபத்திரவங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும்போது, நாம் தேவனுடன் விவாதித்து தேவனுக்கு எதிராகச் செல்வோம், அவரைக் குற்றஞ்சாட்டி அவருக்குத் துரோகம் கூடப் பண்ணுவோம். பட்டியல் நீண்டு கொண்டே போகும். நம்முடைய பாவ சுபாவம் தீர்க்கப்படாமல் இருந்தால், நாம் பாவம் செய்வதிலும் பின்னர் பாவத்தை அறிக்கை செய்வதுமான இந்த வேதனையான தொடர்சுழற்சியில் நித்தியமாக வாழ்வோம் மற்றும் பாவத்தின் கட்டுகள் மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாக முடியாது.

தேவன் ஒருமுறை சொன்னார், “நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக(லேவியராகமம் 11:45). “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்(யோவான் 8:34-35). இது எபிரெயர் 10:26-27ல் பதிவு செய்யப்பட்டுள்ளது: “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.” தேவன் பரிசுத்தர் மற்றும் நீதியுள்ளவர், எனவே தொடர்ந்து பாவம் செய்து தேவனை எதிர்க்கும் ஜனங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. ஆகவே, மனுக்குலத்தை இரட்சிப்பதற்கான அவரது நிர்வாகத் திட்டத்தின்படியும் மற்றும் சீர்கேடான மனுக்குலத்திடமான உண்மையான தேவைகளின்படியும் கடைசி நாட்களில் தேவனுடைய வீட்டில் இருந்து தொடங்கும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்து முடிப்பதற்கும், சீர்கேடான மனுக்குலம் அவர்களின் சாத்தானிய இயல்பால் கட்டுப்படுத்தப்படுகிற முக்கியமான பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் சத்தியத்தை வெளிப்படுத்துவார். அவ்வழியில் தான் மனிதர் படிப்படியாக தங்களுடைய சாத்தானிய மனநிலையிலிருந்து தங்களையே விடுவித்துக் கொண்டு, சுத்திகரிக்கப்பட்டு, தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். அது கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசனம் உரைத்ததைப் போன்றதே: “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்(யோவான் 16:12-13). “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்(யோவான் 12:48). மேலும் 1 பேதுரு 4:17 ல் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது, “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது.” வெளிப்படுத்தல் 22:14 கூறுகிறது, “ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் ​நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.” திரும்பி வந்த கர்த்தர் செய்து முடித்த நியாயத்தீர்ப்பின் கிரியையை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மட்டுமே நாம் நம்முடைய கோபமான சுபாவத்தை சரிசெய்ய முடியும், பாவத்தின் கட்டுகளையும் கட்டுப்பாடுகளையும் முழுமையாகத் தூக்கியெறிந்துவிட்டு, நமது பாவ சுபாவம் சுத்திகரிக்கப்பட முடியும் என்பது தெளிவாகிறது.

இப்போது, சர்வவல்லமையுள்ள தேவனின் திருச்சபை மட்டுமே கர்த்தராகிய இயேசு ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார் என்று வெளிப்படையாக சாட்சியமளிக்கின்றது. அவர் சத்தியத்தை வெளிப்படுத்தி, மனுக்குலத்தை முழுமையாக சுத்திகரிக்கவும், ஒரேயடியாக அவர்களைப் பாவங்களின் கட்டுகளிலிருந்து இரட்சிக்கவும் தேவனுடைய வீட்டில் இருந்து நியாயத்தீர்ப்பின் கிரியையை தொடங்கி செய்திருக்கிறார், இப்படி, சத்தியத்தை வெளிப்படுத்தவும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யவும், கர்த்தராகிய இயேசுவின் திரும்பி வருதலின் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். பின் கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன் ஜனங்களைச் சுத்திகரிக்கும் நியாயத்தீர்ப்பின் கிரியையை எவ்வாறு செய்கிறார். சர்வவல்லமையுள்ள தேவன் கூறுகிறார், “கடைசி நாட்களில், மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனுக்குச் சம்பூரணமாகக் கீழ்ப்படிவதை நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்.

சீர்கேடான மனுக்குலத்தை நியாயந்தீர்க்க தேவன் கடைசி நாட்களில் அவர் வெளிப்படுத்திய சத்தியங்களைப் பயன்படுத்துகிறார், அதாவது, சீர்கேடான மனுக்குலத்தை அதன் சாத்தானிய மனநிலையிலிருந்து சுத்திகரிக்கவும், தேவனை எதிர்க்கிற அவர்களின் சுபாவ சிக்கலைத் தீர்க்கவும் அவர் சத்தியத்தைப் பயன்படுத்துகிறார் என்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்பின் கிரியையில், தேவனுடைய 6000 ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் இரகசியங்களை வெளிப்படுத்த சர்வவல்லமையுள்ள தேவன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார், மேலும் நமது விசுவாசத்தில் சுத்திகரிப்பு மற்றும் இரட்சிப்படைவதற்கான பாதையையும் நமக்குக் காண்பிக்கிறார். அதே சமயத்தில், சாத்தானால் உண்டான நமது சீர்கேட்டைப் பற்றிய சத்தியத்தையும், நமது சாத்தானிய சுபாவம் மற்றும் மனநிலைகளையும் அவர் முழுமையாக அம்பலப்படுத்துகிறார். தேவனுடைய வார்த்தைகளின் வெளிப்பாடு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலமாக, நாம் அகந்தை, துன்மார்க்கம் மற்றும் வஞ்சகதன்மையான சாத்தானிய மனநிலைகளால் நாம் நிறைந்திருக்கும் அளவிற்கு சாத்தானால் எவ்வளவு ஆழமாக சீர்கெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும், நாம் வாழ்கிற விதத்தில் மனிதத்தன்மை என்பதே முற்றிலும் இல்லை என்பதையும் நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. அதன்பின் தேவனிடத்தில் நாம் மனந்திரும்பி தேவனுடைய சிட்சையையும், நியாயத்தீர்ப்பையும், உபத்திரவங்களையும், சுத்திகரிப்பையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம், சத்தியத்தையும் மனநிலையில் மாற்றத்தையும் பின்தொடரவும், தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப நம்மையே நடத்தவும் விரும்புகிறோம். படிப்படியாக, நமது சீர்கேடான சாத்தானிய மனநிலையின் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளிலிருந்து நம்மையே நாம் விடுவித்துக் கொள்ள முடிகிறது. இது தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் அடையப்படுகிறது.

என்னை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பழகும் போது, அவர்கள் எனக்குப் பிடிக்காத விதத்தில் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ, உடனே நான் மிகவும் கோபமடைந்து என்னையும் மீறி உடனடியாகக் கோபத்தை வெளிப்படுத்துவேன். ஒவ்வொரு முறையும் நான் கடும்கோபம் கொண்டவுடன், நான் கோபத்தை கட்டுப்படுத்தவில்லை என்று வருத்தப்படுவேன், பிறகு என் பாவங்களை அறிக்கையிட தேவனிடத்தில் ஜெபம் பண்ணுவேன். அதன் பிறகு, எப்படியும், நான் அதே பழைய தவறுகளை மீண்டும் செய்வேன். நான் உண்மையில் கஷ்டப்பட்டேன், ஆனால் நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள எவ்வளவு முயற்சி செய்தாலும், என் கோபமான சுபாவத்தை சரி செய்ய என்னால் முடியவில்லை. ஒருமுறை என் இளைய சகோதரி தன் வேலையை இழந்து கவலையுற்றாள். நான் பலரிடம் உதவி கேட்டு இறுதியில் என் சகோதரிக்கு ஒரு வேலை கிடைத்தது. என் சகோதரி நிச்சயம் மகிழ்ச்சியடைவாள் என்று நான் நினைத்தேன், ஆனால் நான் எதிர்பார்க்காதபடி, அவள் அதிக சம்பளத்துடன் எளிதான வேலையையே விரும்புவதாகக் கூறினாள், பின்னர் அவள் என்னுடன் கலந்தாலோசிக்காமலேயே அந்த வேலை வாய்ப்பை நிராகரித்தாள். இதைப் பற்றி அறிந்தவுடன் நான் மிகவும் கோபமடைந்தேன், அவள் நான் செய்த அன்பான உதவியை புரிந்துகொள்ளவில்லை என்று என் சகோதரியைத் திட்டினேன். அவளுக்கு வேலை தேட நான் கடுமையாக முயற்சித்தேன், ஆனால் அவளோ என்னைப் பற்றி எதையும் யோசிக்காமல், என்னிடம் கலந்தாலோசிப்பதற்கு முன்பதாகவே வேலைவாய்ப்பை நிராகரித்துவிட்டாள். நான் என் சகோதரியிடம் மிகுந்த கோபம் கொண்ட பிறகு, நான் மிகவும் வருத்தப்பட்டேன், நான் அவளை அவ்வாறு நடத்தியிருக்கக் கூடாது என்று நினைத்தேன். அதன்பின் நான் தேவனுக்கு முன்பாக வந்து ஜெபித்து, இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்தேன். பின்னர் நான் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளில் ஒரு பத்தியை வாசித்தேன், “ஒரு மனிதனுக்கு அந்தஸ்து கிடைத்ததும், அவனுக்குத் தன் மனநிலையைக் கட்டுப்படுத்துவது பெரும்பாலும் கடினமாகிறது, அதனால் அவன் அதிருப்தியை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், வாய்ப்புகளைத் துரிதமாய் பயன்படுத்திக் கொள்வதில் இன்பங்கொள்ளுகிறான்; அவன் தனது திறனை வெளிப்படுத்த, தெளிவான காரணமின்றி அடிக்கடி கோபத்தில் பற்றியெரிந்து, தன் அந்தஸ்தும், அடையாளமும் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவை என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவான். நிச்சயமாக, எந்தவொரு அந்தஸ்தும் இல்லாத சீர்கெட்ட ஜனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு அடிக்கடி கோபம் ஏற்படுகிறது. தங்கள் சொந்த அந்தஸ்தையும் மேன்மையையும் பாதுகாப்பதற்காக, சீர்கெட்ட மனுக்குலம் அடிக்கடி தங்கள் உணர்ச்சிகளையும், அவர்களின் ஆணவத் தன்மையையும் வெளிப்படுத்துகிறார்கள். பாவத்தை அழியாமல் காக்கவும், நிலைநிறுத்தவும் மனிதன் கோபத்தில் பற்றியெரிந்து, தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவான். மேலும் இந்த செயல்கள் மனிதன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வழிமுறைகளாகும்; அவை அசுத்தங்களாலும், திட்டங்களாலும், சூழ்ச்சிகளாலும், மனிதனின் சீர்கேடுகளாலும் மற்றும் தீமைகளாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவை மனிதனின் காட்டுத்தனமான லட்சியங்களாலும், விருப்பங்களாலும் நிரம்பியிருக்கின்றன.

சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் வெளிப்பாட்டின் மூலம் என் கோப சுபாவமானது என் ஆணவம் மற்றும் கர்வமான சீர்கேட்டின் தன்மையால் கட்டுப்படுத்தப்படுவதால் வந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். என் இறுமாப்பான மனநிலையால் உந்தப்பட்டு, நான் என்னை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவனாக நம்பினேன், மற்றவர்கள் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்த விரும்பினேன், என் ஆர்வம், முகம் மற்றும் அந்தஸ்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். மற்றவர்களின் வார்த்தைகளும் செயல்களும் என் சொந்த விருப்பங்கள், முகம் மற்றும் அந்தஸ்தின் மீது பாதிப்பை உண்டாக்கினவுடனே, அதிருப்தியை வெளிப்படுத்தவும், மற்றவர்கள் நான் சொல்வதைக் கேட்கும்படி என் சக்தியைக் காட்டவும் நான் மிகுந்த கோபம் கொள்வேன். நான் ஆத்திரத்தில் எரிந்து என் சகோதரியை திட்டியதற்கான காரணம் அவள் என்னைக் கவனிக்காமல், முதலிலேயே என்னிடம் கேட்காமல் வேலை வாய்ப்பை நிராகரித்தது தான் என்று புரிந்து கொண்டேன், மேலும் அவள் என்னை முக்கியமற்றவனாக நடத்துகிறாள் என்று நான் நினைத்தேன். நான் நல்லெண்ணம் கொண்டவன் என்றும் என் சகோதரிக்கு உதவ பெரும் முயற்சிகளை மேற்கொண்டேன் என்றும், அதனால் அவளுக்காக நான் தேடின வேலை பொருத்தமானதோ இல்லையோ, அவள் நிபந்தனையின்றி எனக்குக் கீழ்ப்படிந்து நன்றி சொல்லவேண்டும் என்றும் நினைத்தேன். நான் திமிர் பிடித்தவனாகவும் நியாயமற்றவனாகவும் இருந்தேன், என்னுடைய சாத்தானிய மனநிலைகளின் அடிப்படையில் நான் செயல்பட்டேன். நான் செய்தது தேவனுக்கு அருவருப்பாகவும் மற்றவர்களுக்கு அந்நியப்படுத்துதலாகவும் இருந்தது. நான் இதை உணர்ந்தவுடனே, நான் உண்மையில் என்னையே வெறுத்து வருத்தத்தால் நிரப்பப்பட்டேன், அதன்பின் சாத்தானிய மனநிலையில் வாழ விரும்பவில்லை.

அதன்பிறகு, என் சகோதரி எனக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்வதைப் பார்த்த போது, நான் தேவனிடம் ஜெபித்து என்னையே ஆராய்ந்து பார்க்க அமைதியாக இருப்பேன், பின்னர் அவளுடன் அமைதியாகப் பேசுவேன். படிப்படியாக, நான் சில மாற்றத்தை அடைந்தேன்.

என்னுடைய அனுபவம் ஆழமற்றதாக இருந்தாலும், நமது சீர்கேடான மனநிலையை நாமே சரி செய்ய நமக்கு எந்த வழியும் இல்லை என்பதை நான் இதிலிருந்து உண்மையாகவே கற்றுக்கொண்டேன். கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை மற்றும் சிட்சை மட்டுமே சீர்கேடான மனநிலையின் அடிமைத்தனம் மற்றும் தீங்கிலிருந்து நம்மை இரட்சிக்க முடியும் மற்றும் நம்மை மாற்றவும் சுத்திகரிக்கவும் முடியும்.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

ஜெபம் செய்யும் முறை: கர்த்தரால் கேட்கப்படும்படிக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதற்கான 3 கோட்பாடுகள்

கர்த்தருடைய அங்கீகாரத்தைப் பெற ஜெபிப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த 3 கொள்கைகளும் உங்கள் ஜெபங்களை தேவனின் விருப்பத்திற்கு இணங்கச் செய்யலாம்.

கிறிஸ்தவ பிரசங்கம்: பேரழிவுகள் நம்மீது உள்ளன—தேவனின் பாதுகாப்பைப் பெற அவரிடத்தில் மெய்யான மனந்திரும்புதலைக் கொண்டிருப்பது எப்படி?

இப்போதெல்லாம், தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள், மேலும் பலர் தொடர்ந்து...

இந்த 4 காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நாம் தேவனுக்கு நெருக்கமாவோம்

நமது அன்றாட ஜீவியத்தில், தேவனுக்கு நெருக்கமாகி, தேவனுடன் உண்மையான தொடர்பு வைத்திருப்பதன் மூலம் மட்டுமே, நாம் தேவனுடன் ஒரு சரியான உறவைப்...

கிறிஸ்தவ செய்தி: இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு நமக்கு வாக்குறுதி அளித்தார்: “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்” (வெளிப்படுத்தல் 22:12). இப்போது, அவர் திரும்புவதற்கான எல்லா விதமான அறிகுறிகளும் தோன்றியுள்ளன, மேலும் பல சகோதர சகோதரிகளுக்கு கர்த்தருடைய நாள் நெருங்கிவிட்டது என்ற முன்னறிவிப்புகள் உள்ளன. கர்த்தர் ஏற்கனவே திரும்பிவிட்டாரா? கர்த்தரை வரவேற்க நாம் என்ன செய்ய வேண்டும்?