தேவனை அறிதல் பற்றி

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை

தொகுதி 2, தேவனை அறிதல் பற்றி

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்ற நூலின் தேவனை அறிதல் பற்றி எனும் இரண்டாம் தொகுதி, தேவனுடைய தோற்றமும் கிரியையும் என்பதில் இருப்பவற்றின் தொடர்ச்சியாகக் கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனின் அனைத்து மனுக்குலத்துக்குமான உரைகளைக் கொண்டுள்ளது. உலகத்தைப் படைத்ததில் இருந்து தேவன் செய்துவந்திருக்கிற கிரியை, அதில் அடங்கி இருக்கும் மனுக்குலத்திற்கான அவருடைய சித்தம் மற்றும் அவருடைய எதிர்பார்ப்புகள், அவருடைய கிரியையிலிருந்து தேவன் என்ன கொண்டிருக்கிறாரோ மற்றும் என்னவாக இருக்கிறாரோ அவை எல்லவற்றினுடைய வெளிப்பாடு, அது மட்டும் அல்லாமல் அவருடைய நீதி, அவருடைய அதிகாரம், அவருடைய பரிசுத்தம் மற்றும் எல்லாவற்றிற்கும் அவரே ஜீவ ஆதாரம் எனும் உண்மை ஆகிய பல்வேறுபட்ட சத்தியங்களை தேவன் விளக்குகிறார். இந்தப் புத்தகத்தைப் படித்த பின், தேவனை உண்மையிலேயே விசுவாசிப்பவர்களே, இந்தக் கிரியையைச் செய்யக் கூடியவர் மற்றும் இந்த மனநிலைகளை பொழியக் கூடியவரே எல்லாவற்றையும் ராஜரிகம் செய்யும் ஒருவர் என்று உறுதிப்படுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள் மேலும் அவர்களால் தேவனுடைய அடையாளம், அவரதுநிலை, மற்றும் அவருடைய சாராம்சம் ஆகியவற்றை உண்மையிலேயே அறிய முடியும், அதன் மூலம் கடைசிநாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவனே தேவன், தனித்துவமானவர் என்று உறுதிப்படுத்துவார்கள்.

கடைசிக்கால கிறிஸ்துவின் உரைகள்