தேவனே தனித்துவமானவர் IV
தேவனுடைய பரிசுத்தம் (I)
நம்முடைய கடந்த கூடுகையில் தேவனின் அதிகாரம் குறித்து கொஞ்சம் அதிகமாக பேசினோம். இப்போதைக்கு தேவனுடைய நீதி என்று தலைப்பில் நாம் விவாதிக்கப் போவதில்லை. இன்றைக்கு நாம் பேசப்போகும் தலைப்பானது “தேவனுடைய பரிசுத்தம்” என்ற முற்றிலும் புதிய தலைப்பாகும். தேவனுடைய பரிசுத்தம் என்பது தேவனின் தனித்துவமான சாராம்சத்தின் இன்னுமொரு அம்சமாகும், எனவே நாம் இந்த தலைப்பைக் குறித்து பேசுவது முக்கியமானதாகும். தேவனுடைய சாராம்சத்தின் வேறு இரண்டு அம்சங்களான தேவனின் நீதியான நிலைப்பாடு மற்றும் தேவனின் அதிகாரம் ஆகியவை குறித்து நான் முன்பே பேசினேன், இந்த அம்சங்களும், இன்று நான் உங்களுடன் பேசப்போகும் அம்சமும் எல்லாம் தனித்துவமானவையா? (ஆம்.) தேவனுடைய பரிசுத்தம்யும் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. எனவே இன்று நாம் பேசப் போகும் கருத்து இந்த தனித்துவத்தின் அடிப்படையையும் வேரையும் உருவாக்குவதாக இருக்கும். இன்று நாம் தேவனின் தனித்துவமான சாராம்சமாகிய பரிசுத்தம் குறித்து பேசப் போகிறோம். சில தவறான கருத்துக்கள் இருக்கலாம், அவர்கள் இப்படியும் கேட்கலாம். “ஏன் நாம் தேவனின் பரிசுத்தத்தன்மை குறித்து பேச வேண்டும்?” கவலைப்படாதீர்கள், நான் அதை உங்களிடம் மெதுவாக சொல்கிறேன். நான் சொல்ல வந்ததை நீங்கள் கேட்ட பிறகு, உங்களுடன் நான் தேவனின் பரிசுத்தத்தன்மை குறித்து பேசுவது ஏன் அவசியம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.
முதலில், “பரிசுத்தம்” என்ற வார்த்தையை விவரிப்போம். உங்கள் கருத்து மற்றும் நீங்கள் பெற்ற அனைத்து அறிவையும் சேர்த்து, “பரிசுத்தம்” என்பதன் விளக்கத்தை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? (“பரிசுத்தம்” என்பது முழுக்க முழுக்க மனித சீர்கேடு அல்லது குறைபாடுகள் இல்லாத களங்கமற்றது என்று அர்த்தமாகும். சிந்தனை, பேச்சு அல்லது செயலாக இருந்தாலும் பரிசுத்தம் என்பது எல்லாவற்றையும் நேர்மறையாக வெளிப்படுத்துகிறது.) மிகவும் நல்லது. (“பரிசுத்தம்” என்பது தெய்வீகமானது, கறைப்படாதது, மனிதனால் களங்கப்படுத்த முடியாதது. இது தனித்துவமானது, இது தேவனுடையது, இது அவருடைய அடையாளமாகும்.) இதுதான் உங்கள் விளக்கம். ஒவ்வொரு நபரின் இருதயத்திலும், “பரிசுத்தம்” என்ற சொல்லுக்கு ஒரு நோக்கம், விவரம் மற்றும் விளக்கம் உள்ளது. மிகவும் குறைந்தபட்சமாக, “பரிசுத்தம்” என்ற வார்த்தையை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் மனம் வெறுமையாக இல்லை. இந்த வார்த்தையின் விளக்கத்துக்கு உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது, மேலும் சிலரின் சொற்கள் தேவனின் மனநிலையின் சாராம்சத்தை விவரிக்கும் சொற்களுக்கு சற்றே நெருங்கி வருகின்றன. இது மிகவும் நல்லது. “பரிசுத்தம்” என்ற வார்த்தை நேர்மறையான ஒன்று என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள், இது நிச்சயமாக உண்மைதான். ஆனால் இன்று, தேவனின் பரிசுத்தத்தைப் பற்றி நாம் பேசும்போது, நான் வெறுமனே விவரங்கள் அல்லது விளக்கங்களைப் பற்றி பேச மாட்டேன். அதற்குப் பதிலாக, தேவன் ஏன் பரிசுத்தர் என்று நான் சொல்கிறேன் என்பதையும், தேவனின் சாராம்சத்தை விவரிக்க “பரிசுத்தம்” என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறேன் என்பதையும் உனக்குக் காண்பிப்பதற்கான உண்மைகளை ஆதாரமாக முன்வைப்பேன். நமது ஐக்கியம் முடிந்தவுடன், தேவனின் சாராம்சத்தை வரையறுக்கவும், தேவனைக் குறிக்கவும் “பரிசுத்தம்” என்ற வார்த்தையின் பயன்பாடு முழுமையாக நியாயமானது மற்றும் மிகவும் பொருத்தமானது என்பதை நீ உணருவாய். குறைந்த பட்சம், தற்போதைய மனித மொழியின் சூழலில், தேவனைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது. மனித மொழியின் எல்லா சொற்களிலும் இது தேவனைக் குறிக்க முற்றிலும் பொருத்தமான வழியாகும். இந்த வார்த்தை, தேவனைக் குறிக்கப் பயன்படுத்தும்போது, அது வெற்றுச் சொல் அல்ல, அது ஆதாரமற்ற பாராட்டோ அல்லது வெற்று முகஸ்துதி வார்த்தையோ அல்ல. தேவனின் சாராம்சத்தின் இந்த அம்சத்தின் உண்மையை அறிந்துகொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உதவுவதே நமது கலந்துரையாடலின் நோக்கமாகும். தேவன் மனிதனின் புரிதலுக்கு அஞ்சமாட்டார், ஆனால் அவர் அவனுடைய தவறான புரிதலுக்கு அஞ்சுகிறார். ஒவ்வொரு நபரும் அவருடைய சாராம்சத்தையும், அவரிடம் உள்ளதையும், இருப்பதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். எனவே, தேவனின் சாராம்சத்தின் ஒரு அம்சத்தை நாம் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும், தேவனின் சாராம்சத்தின் இந்த அம்சம் உண்மையில் இருக்கிறதா என்பதை மக்கள் காண அனுமதிக்க பல உண்மைகளை நாம் பார்க்கலாம்.
இப்போது “பரிசுத்தம்” என்ற சொல்லுக்கு ஒரு விளக்கம் நம்மிடம் உள்ளது, சில எடுத்துக்காட்டுகளைப் பற்றி விவாதிப்போம். மக்களின் கருத்துக்களில், அவர்கள் பல விஷயங்களையும் மக்களையும் “பரிசுத்தம்” என்று கற்பனை செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கன்னிப் பெண்களும் பையன்களும் மனிதகுலத்தின் அகராதிகளில் பரிசுத்தர்களாக வரையறுக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பரிசுத்தர்களா? இந்த “பரிசுத்தம்” மற்றும் “பரிசுத்தம்” என்று அழைக்கப்படுபவையும், இன்று நாம் பேசவிருக்கும் ஒரே காரியம் தானா? மனிதர்களுள் ஒழுக்கம் உடையவர்கள், நாகரீகமான தெளிந்த பேச்சை உடையவர்கள், யாரையும் காயப்படுத்தாதவர்கள், தங்கள் வார்த்தைகளால் பிறருக்கு ஆறுதல் தருபவர்கள், ஒத்துக்கொள்ளச் செய்பவர்கள் பரிசுத்தர்களா? பெம்பாலும் நல்லதைச் செய்பவர்கள், தொண்டு செய்பவர்களாக, மற்றவர்களுக்கு பெரும் உதவிகளைச் செய்கிறவர்கள், மக்களின் வாழ்க்கையில் அதிக இன்பத்தைக் கொண்டு வருபவர்கள் பரிசுத்தர்களா? சுய சேவை எண்ணங்கள் இல்லாதவர்கள், யாரிடமும் கடுமையான கோரிக்கைகளை வைக்காதவர்கள், அனைவரையும் சகித்துக்கொள்பவர்கள் பரிசுத்தர்களா? ஒருபோதும் யாருடனும் சண்டையிடாத அல்லது பிறரை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தாதவர்கள் பரிசுத்தர்களா? மற்றவர்களின் நன்மைக்காக உழைப்பவர்கள், மற்றவர்களுக்கு நன்மை அளிப்பவர்கள், எல்லா வகையிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டுபவர்கள் பரிசுத்தர்களா? தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள், தங்களைத் தாங்களே கட்டிப்படுத்திக் கொண்டு, மற்றவர்களை தாராளமாக நடத்துகிறவர்கள் பரிசுத்தர்களா? (இல்லை.) உங்கள் தாய்மார்கள் உங்களை எவ்வாறு கவனித்துக்கொண்டார்கள் என்பதையும், நினைத்துப் பார்க்க கூடிய ஒவ்வொரு வழியிலும் உங்களை கவனித்துக்கொள்வதையும் நீங்கள் அனைவரும் நினைவில் கொண்டுள்ளீர்கள்—அவர்கள் பரிசுத்தர்களா? நீங்கள் பிரியமாக வைத்திருக்கும் சிலைகள், அவர்கள் பிரபலமானவர்கள், பிரசித்தி பெற்றவர்கள் அல்லது பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் பரிசுத்தர்களா? (இல்லை.) பலருக்குத் தெரியாத எதிர்காலத்தைப் பற்றி சொன்ன வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசிகள் குறித்து இப்போது நாம் பார்ப்போம். இந்த மக்கள் பரிசுத்தர்களா? தேவனின் வார்த்தைகளையும் அவர் செய்த கிரியையின் உண்மைகளையும் வேதாகமத்தில் பதிவு செய்ய முடிந்த மக்கள் பரிசுத்தர்களா? மோசே பரிசுத்தனா? ஆபிரகாம் பரிசுத்தனா? (இல்லை.) யோபு எப்படி? அவர் பரிசுத்தனா? (இல்லை.) யோபு தேவனால் ஒரு நீதிமான் என்று அழைக்கப்பட்டான், ஆகவே அவன் கூட ஏன் பரிசுத்தமானவன் அல்ல என்று கூறப்படுகிறது? தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்ப்பவர்கள் உண்மையில் பரிசுத்தமானவர்கள் அல்லவா? அவர்கள் பரிசுத்தமாக இல்லையா? (இல்லை.) நீங்கள் கொஞ்சம் நிச்சயமற்றவர்களாக இருக்கிறீர்கள், உங்களுக்கு பதில் உறுதியாக தெரியவில்லை, “இல்லை” என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை, ஆனால் “ஆம்” என்று சொல்லவும் உங்களுக்கு தைரியம் இல்லை, எனவே இறுதியில் நீங்கள் பாதி மனதுடன் “இல்லை” என்று சொல்கிறீர்கள். உங்களிடம் இன்னொரு கேள்வியைக் கேட்கிறேன். தேவனின் தூதர்கள் தேவன் பூமிக்கு அனுப்பும் தூதர்கள் பரிசுத்தர்களா? தேவதூதர்கள் பரிசுத்தர்களா? (இல்லை.) சாத்தானால் சீர்கேடடையாத மனிதர்கள் பரிசுத்தர்களா? (இல்லை.) நீங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் “இல்லை” என்று பதிலளிப்பீர்கள். எந்த அடிப்படையில்? நீங்கள் குழப்பமடைகிறீர்கள், இல்லையா? ஆகவே, தேவதூதர்கள் கூட பரிசுத்தர்கள் அல்ல என்று ஏன் கூறப்பட்டிருக்கிறது? நீங்கள் இப்போது நிச்சயமற்றவராக உணர்கிறீர்கள், இல்லையா? நாம் முன்னர் குறிப்பிட்ட நபர்கள், விஷயங்கள் அல்லது சிருஷ்டிக்கப்படாதவைகள் எந்த அடிப்படையில் பரிசுத்தர்கள் அல்ல என்பதை நீங்கள் நிரூபிக்க முடியுமா? உங்களால் முடியாது என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். எனவே நீங்கள் சொல்லும் “இல்லை” கொஞ்சம் பொறுப்பற்றது அல்லவா? நீங்கள் கண்மூடித்தனமாக பதிலளிக்கவில்லையா? சிலர் ஆச்சரியப்படுகிறீர்கள்: “நீ உன் கேள்வியை இவ்விதமாக வடிவமைத்துள்ளதால், பதில் நிச்சயமாக ‘இல்லை’ என்று தான் இருக்க வேண்டும்.” எனக்கு தருவாய்க்கேற்ற பதில்களைத் தர வேண்டாம். பதில் “ஆம்” அல்லது “இல்லை.” இதில் எது என்று கவனமாக சிந்தியுங்கள். பின்வரும் தலைப்பைப் பற்றி நாம் பேசிய பின்னர் இதற்குப் பதில் “இல்லை” என்பதும், அது ஏன் என்பதும் உங்களுக்குத் தெரியும். நான் விரைவில் உங்களுக்கு பதில் தருவேன். முதலில், நாம் வேதாகமத்தில் இருந்து வாசிப்போம்.
1. மனிதனுக்கு யேகோவா தேவனின் கட்டளை
ஆதி. 2:15-17 மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்த யோகோவா தேவன், அதனை அவன் உழுது பேணும்படி அவனை அங்கு விட்டு வைத்தார். யோகோவா தேவன் அம்மனுஷனிடம்: தோட்டத்திலிருக்கும் சகல விருட்சங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம்; நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்காதே, ஏனென்றால் நீ அதைப் புசிக்கும் நாளில் நிச்சயம் மரித்துப்போவாய் என்று கட்டளையிட்டார்.
2. ஸ்திரீயின் மீது சர்ப்பத்தின் சோதனை
ஆதி. 3:1-5 யேகோவா தேவன் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களில் சர்ப்பம் அதிக தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கக் கூடாது என்று தேவன் எதற்காகக் கூறினார் என்றது. அந்த ஸ்த்ரீ சர்ப்பத்தை நோக்கி: தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனியை நாங்கள் புசிக்கலாம்; ஆனால் தோட்டத்தின் நடுவே இருக்கும் விருட்சத்தின் கனியைப் நீங்கள் மரிக்காதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். சர்ப்பம் அந்த ஸ்த்ரீயை நோக்கி: நீங்கள் நிச்சயமாகவே சாக மாட்டீர்கள்: ஏனென்றால், நீங்கள் அதைப் புசிக்கும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும் தேவனைப்போல் நீங்கள் நன்மை தீமை அறிந்திருப்பீர்கள் என்று தேவன் அறிவார் என்றது.
இந்த இரண்டு வசனப் பகுதிகளும் வேதாகமத்தில் உள்ள ஆதியாகமப் புத்தகத்தின் பகுதிகளாகும். இந்த இரண்டு வசனப் பகுதிகளையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆரம்பத்தில் மனிதன் சிருஷ்டிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகளை அவை தொடர்புபடுத்துகின்றன; இந்த நிகழ்வுகள் உண்மையானவை. முதலில், யேகோவா தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன மாதிரியான கட்டளை கொடுத்தார் என்று பார்ப்போம்; இந்த கட்டளையின் உள்ளடக்கம் இன்று நமது தலைப்புக்கு மிகவும் முக்கியமானது. “யோகோவா தேவன் அம்மனுஷனிடம்: தோட்டத்திலிருக்கும் சகல விருட்சங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம்; நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்காதே, ஏனென்றால் நீ அதைப் புசிக்கும் நாளில் நிச்சயம் மரித்துப்போவாய் என்று கட்டளையிட்டார்.” இந்த பத்தியில் மனிதனுக்கு தேவனின் கட்டளை சொல்வது என்ன? முதலில் தேவன் மனிதனுக்கு என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று சொல்கிறார், அதாவது பல வகையான மரங்களின் பழங்களைச் சொல்கிறார். எந்த ஆபத்தும் இல்லை, விஷமும் இல்லை; எந்தவொரு கவலையும் சந்தேகமும் இன்றி எல்லாவற்றையும் சாப்பிடலாம், மனிதன் தான் விரும்பியபடி சாப்பிடலாம். இது தேவனுடைய கட்டளையின் ஒரு பகுதியாகும். மற்றொரு பகுதி ஒரு எச்சரிக்கையாகும். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிப்பது கூடாது என தேவன் மனிதனுக்கு சொல்கிறார். இந்த விருட்சத்தின் கனியை அவன் புசித்தால் என்னவாகும்? நீ அதிலிருந்து புசித்தால் நீ நிச்சயமாக சாவாய். இந்த வார்த்தைகள் நேரடியானவையாக இல்லையா? தேவன் அதை உன்னிடம் சொல்லியிருந்தும், அது ஏன் என்று உனக்குப் புரியவில்லை என்றால், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டிய ஒரு சட்டமாக அல்லது கட்டளையாக கருதுவாயா? இத்தகைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால் மனிதனால் கீழ்ப்படிய முடிந்தாலும் முடியாவிட்டாலும், தேவனின் வார்த்தைகள் தெளிவானவையாக இருக்கின்றன. மனிதன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று தேவன் மிகத் தெளிவாகக் கூறினார், அவர் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்றும் கூறினார். தேவன் பேசிய இந்த சுருக்கமான வார்த்தைகளில், தேவனின் மனநிலையை நீங்கள் பார்க்க முடிகிறதா? தேவனின் இந்த வார்த்தைகள் உண்மையானவையா? வஞ்சனை ஏதும் உண்டா? ஏதேனும் பொய் உண்டா? ஏதாவது மிரட்டல் உண்டா? (இல்லை.) தேவன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று நேர்மையாகவும், உண்மையாகவும், அக்கறையாகவும் மனிதனிடம் சொன்னார். தேவன் தெளிவாகவும் வெளிப்படைவாகவும் பேசினார். இந்த வார்த்தைகளில் மறைக்கப்பட்ட பொருள் ஏதேனும் உள்ளதா? இந்த வார்த்தைகள் நேரடியானவை அல்லவா? அனுமானத்திற்கு ஏதாவது தேவை உள்ளதா? யூக வேலை தேவையில்லை. அவற்றின் பொருள் ஒரே நோக்கில் தெளிவாகத் தெரிகிறது. அவற்றை வாசிக்கும்போது, அவற்றின் அர்த்தத்தைப் பற்றி ஒருவர் தெளிவாக உணர்கிறார். அதாவது, தேவன் என்ன சொல்ல விரும்புகிறார், என்ன வெளிப்படுத்த விரும்புகிறார் என்பது அவருடைய இதயத்திலிருந்து வருகிறது. தேவன் வெளிப்படுத்தும் விஷயங்கள் சுத்தமானவை, நேரடியானவை, தெளிவானவை. இரகசிய நோக்கங்களோ, மறைக்கப்பட்ட அர்த்தங்களோ இல்லை. அவர் மனிதனிடம் நேரடியாக பேசுகிறார், அவர் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று கூறுகிறார். அதாவது, தேவனின் இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் இதயம் வெளிப்படையானது மற்றும் உண்மையானது என்பதை மனிதன் பார்க்க முடியும். இங்கே பொய்யின் எந்த தடயமும் இல்லை; நீங்கள் உண்ணக்கூடியதை நீ சாப்பிடக்கூடாது என்று உங்களுக்கு சொல்வது அல்லது நீ சாப்பிட முடியாத விஷயங்களுடன் “அதைச் செய்தால் என்ன நடக்கிறது என்று பார்” என்று சொல்வது ஒரு காரியம் அல்ல. இது தேவன் சொல்லும் அர்த்தம் அல்ல. தேவன் தன் இருதயத்தில் என்ன நினைத்தாலும், அதைத்தான் அவர் கூறுகிறார். இந்த வார்த்தைகளுக்குள் தேவன் தன்னைக் காண்பிப்பதாலும் வெளிப்படுத்துவதாலும் தேவன் பரிசுத்தர் என்று நான் சொன்னால், நான் ஒரு மலையை ஒரு மடுவில் இருந்து உருவாக்கியுள்ளேன் அல்லது நான் ஒரு புள்ளியை சற்று தொலைவில் நீட்டியுள்ளேன் என்று நீங்கள் உணரலாம். அப்படியானால், கவலைப்பட வேண்டாம்; நாம் இன்னும் முடிக்கவில்லை.
நாம் இப்போது, “ஸ்திரீயை மயக்கிய சாத்தான்” குறித்து பேசுவோம். யார் சர்ப்பம்? சாத்தான். தேவனின் ஆராயிர வருட ஆளுகைத் திட்டத்தில் பிரதிபலிப்புப் படலம் என்ற பங்கை அது வகிக்கிறது. தேவனுடைய பரிசுத்தத்தன்மை குறித்து நாம் விவாதிக்கும் போது, அந்தப் பங்கைக் குறித்து நாம் குறிப்பிட வேண்டும். நான் ஏன் இதைச் சொல்கிறேன்? நீ சாத்தானின் தீமையையும் சீர்கேட்டையும் குறித்து அறியவில்லை என்றால், நீ சாத்தானின் சுபாவம் குறித்து நீ அறியவில்லை என்றால், உனக்கு பரிசுத்தத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் முடியாது, பரிசுத்தம் என்பது உண்மையில் என்ன என்று நீ தெரிந்துகொள்ளவும் முடியாது. மக்கள் குழப்பத்தில் சாத்தான் செய்வது சரி என்று நம்புகிறார்கள், ஏனென்றால் அவர்களும் இது போன்ற சீர்கேடான மனநிலையில் தான் வாழ்கிறார்கள். பிரதிபலிப்புப் படலம் இல்லாமல், ஒப்பிட கருத்தும் இல்லாமல், பரிசுத்தம் என்ன என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியாது. எனவேதான் நாம் இங்கே சாத்தானைப் பற்றி குறிப்பிட வேண்டும். இப்படி குறிப்பிடுவது என்பது வெற்றுப் பேச்சு அல்ல. சாத்தானுடைய சொற்கள் மற்றும் செயல்கள் வாயிலாக சாத்தான் எப்படி கிரியை செய்கிறான் என்பதையும் மனிதகுலத்தை எப்படி சீர்கெடுக்கிறான் என்பதையும், சாத்தானின் சுபாவம் மற்றும் முகம் என்ன என்பதையும் நாம் பார்ப்போம். எனவே ஸ்திரீ சாத்தானிடம் என்ன சொன்னாள்? யேகோவா தேவன் தன்னிடம் சொன்னதை சாத்தானிடம் ஸ்திரீ சொன்னாள். இந்த வார்த்தைகளை அவள் சொன்ன போது, தேவன் தன்னிடம் சொன்னதை அவள் உண்மை என்று நிச்சயமாக அறிந்திருந்தாளா? அவளால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. புதிதாக சிருஷ்டிக்கபட்ட அவளுக்கு, நன்மையையும் தீமையையும் பகுத்தறியவும் இயலவில்லை, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற அறிவும் இல்லை. அவளது இருதயத்தில் தேவனுடைய வார்த்தை சரிதான் என்று நிச்சயம் இல்லாதிருந்தாள் என்பதை அவள் சர்ப்பத்துடன் பேசிய வார்த்தைகளை வைத்து நம்மால் தீர்மானிக்க முடிகிறது. அவளது மனப்பாங்கு அப்படித் தான் இருந்தது. எனவே, தேவனுடைய வார்த்தைகள் மீதான நிச்சயமற்ற மனப்பான்மையை பார்த்த சர்ப்பம் சொன்னது. “நீங்கள் நிச்சயமாகவே சாக மாட்டீர்கள்: ஏனென்றால், நீங்கள் அதைப் புசிக்கும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும் தேவனைப்போல் நீங்கள் நன்மை தீமை அறிந்திருப்பீர்கள் என்று தேவன் அறிவார் என்றது.” இந்த வார்த்தைகளில் பிரச்சனைக்குரிய ஏதேனும் உள்ளதா? நீங்கள் இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது உங்களுக்கு சர்ப்பத்தின் நோக்கங்கள் குறித்து உங்களுக்கு ஏதும் புலப்படுகிறதா? அந்த நோக்கங்கள் எவை? அது இந்த ஸ்திரீயை சோதிக்க விரும்பியது, தேவனின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுக்க விடாமல் தடுக்கப் பார்த்தது. ஆனால் இவற்றை அது நேரடியாக சொல்ல வில்லை. எனவே, அது எப்படி மிக வஞ்சகமாக இருந்தது என சொல்லலாம். அதன் பொருளை அது மிகவும் கபடமாகவும் மழுப்பலாகவும் வெளிப்படுத்தி தன்னுடைய நோக்கத்தை அடையப் பார்க்கிறது. ஆனால் அதை மூடிமறைத்து, தன் மனதிற்குள் வைத்து மனிதனிடமிருந்து மறைக்கிறது. சர்ப்பம் இப்படி தான் தந்திரமானது. இது தான் எப்போதும் சாத்தானின் பேசும் முறையும் செயல்படும் முறையுமாக இருக்கிறது. “நிச்சயமாக இல்லை” என்பதை எந்தவொரு வழியிலும் உறுதி செய்யாமல் சொல்லுகிறது. ஆனால் இதைக் கேட்ட போது இந்த பேதை ஸ்திரீயின் மனது அசைக்கப்பட்டது. சர்ப்பம் சந்தோஷப்பட்டது, ஏனென்றால் அதனுடைய வார்த்தைகள் விரும்பிய பலனை தந்தன—சர்ப்பத்தின் தந்திரமான நோக்கம் இப்படிப்பட்டதாக இருந்தது. மேலும், மனிதர்களுக்கு விரும்பக்கூடியதாக தோன்றும் ஒரு பலனை வாக்குறுதியாக அளித்தது, அது அவளைப் பார்த்து, “நீங்கள் அதைப் புசிக்கும் நாளில், உங்கள் கண்கள் திறக்கப்படும்.” என்று சொல்லி மயக்கியது. எனவே அவள் அதை யோசித்தாள்: “கண்கள் திறக்கப்படுவது நல்லது தானே!” அதன் பின்னர் அது இன்னும் கவரக்கூடிய வேறு ஒன்றை சொன்னது, மனிதன் அதுவரை அறியாத வார்த்தைகளை, கேட்பவர் மனதில் பெரும் வல்லமையுடன் சோதனைக்குள்ளாக்கும் வார்த்தைகளை சொன்னது: “தேவனைப்போல் நீங்கள் நன்மை தீமை அறிந்திருப்பீர்கள்.” இவை மனிதனை மயக்கும் வல்லமை கொண்ட வார்த்தைகள் இல்லையா? அது உன்னிடம் ஒருவர்: “உன் முகம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த மூக்கு மட்டும் கொஞ்சம் குட்டையாக இருக்கிறது. அதை மட்டும் சரிசெய்து விட்டால், நீ தான் உலக அழகி!” என்று சொல்வது போன்றது. உண்மையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள எந்த எண்ணமும் இல்லாத ஒருவருக்கு கூட அவரது மனதை அசைத்துப் பார்க்குமா இல்லையா? இவை மயக்கும் வார்த்தைகள் இல்லையா? இந்த மயக்கம் உன்னை சோதிப்பதாக இல்லையா? இது ஒரு சோதனை இல்லையா? (ஆம்.) தேவன் இது போல் ஏதாவது சொல்லியிருக்கிறாரா? நாம் இப்போது கவனித்த தேவனின் வார்த்தைகளில் இது குறித்து ஏதாவது குறிப்பு இருந்ததா? தேவன் தன் இதயத்தில் என்ன நினைக்கிறாரோ அதைச் சொல்கிறாரா? மனிதனால் தேவனின் இருதயத்தை அவருடைய வார்த்தைகளால் பார்க்க முடியுமா? (ஆம்.) ஆனால் சர்ப்பம் அந்த வார்த்தைகளை ஸ்திரீயிடம் பேசியபோது, உன்னால் அதன் இருதயத்தைக் காண முடிந்ததா? இல்லை. மனிதனின் அறியாமை காரணமாக, மனிதன் சர்ப்பத்தின் வார்த்தைகளால் எளிதில் மயக்கப்பட்டு எளிதில் ஏமாற்றப்பட்டான். எனவே உன்னால் சாத்தானின் நோக்கங்களைக் காண முடியுமா? சாத்தான் சொன்னதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை உன்னால் காண முடிந்ததா? உன்னால் சாத்தானின் சதிகளையும் தந்திரங்களையும் காண முடிந்ததா? (இல்லை.) சாத்தானின் பேசும் முறை எந்த வகையான மனநிலையை குறிக்கிறது? இந்த வார்த்தைகளின் மூலம் நீ சாத்தானில் எந்த வகையான சாராம்சத்தைக் கண்டிருக்கிறாய்? இது நயவஞ்சகமானதல்லவா? ஒருவேளை மேலோட்டமாக அது உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம் அல்லது ஒரு வேளை அது எந்த வெளிப்பாட்டையும் காட்டாது இருக்கலாம். ஆனால் அதன் இதயத்தில் அதன் நோக்கத்தை எவ்வாறு அடைவது என்பதைக் கணக்கிடுகிறது, இந்த நோக்கத்தை தான் உன்னால் பார்க்க முடியவில்லை. அது உனக்கு அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளும், அது விவரிக்கும் அனைத்து நன்மைகளும், அதன் மயக்கத்தின் போர்வையால் வருவதாகும். நீ இந்த விஷயங்களை நல்லதாகக் கருதுகிறாய், எனவே அது சொல்வதை மிகவும் பயனுள்ளதாகவும், தேவன் சொல்வதை விட அதிகமானதாகவும் நீ கருதுகிறாய். இது நிகழும்போது, மனிதன் அடிபணிந்த கைதியாக மாறவில்லையா? சாத்தான் பயன்படுத்திய இந்த மூலோபாயம் கொடூரமானதல்லவா? நீ உன்னை சீரழிவில் மூழ்க அனுமதிக்கிறாய். சாத்தான் ஒரு விரலைக் கூட அசைக்காமல், இந்த இரண்டு வாக்கியங்களையும் பேசியதன் மூலம், சாத்தானுடன் இணங்கவும் செய்து சாத்தானை பின்பற்றுவதிலும் நீ மகிழ்ச்சியடைகிறாய். இவ்வாறு, சாத்தானின் நோக்கம் அடையப்பட்டுள்ளது. இந்த நோக்கம் கெட்டதல்லவா? இது சாத்தானின் மிக உண்மையான முகம் அல்லவா? சாத்தானின் வார்த்தைகளிலிருந்து, மனிதன் அதன் மோசமான நோக்கங்களைக் காணலாம், அதன் அருவருப்பான முகத்தையும் அதன் சாராம்சத்தையும் காணலாம். அப்படித்தானே இல்லயா? இந்த வாக்கியங்களை ஒப்பிடுகையில், ஆராய்ந்து பார்க்காமல் நீ யோகோவா தேவனின் வார்த்தைகள் மந்தமானவை, பொதுவானவை மற்றும் சாதாரணமானவை என உணரலாம், அவை தேவனின் நேர்மையை துதிப்பதில் உள்ள உற்சாகத்தை நியாயப்படுத்துவதில்லை. இருப்பினும், நாம் சாத்தானின் வார்த்தைகளையும் சாத்தானின் ஒளிந்திருக்கும் முகத்தையும் ஒரு பிரதிபலிப்புப் படலமாக எடுத்துக் கொள்ளும்போது, தேவனின் இந்த வார்த்தைகள் இன்றைய மக்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டவையாகயில்லையா? (ஆம்.) இந்த ஒப்பீட்டின் மூலம், தேவனின் தூய்மையான குறைபாடில்லா தன்மையை மனிதனால் உணர முடியும். சாத்தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், சாத்தானின் நோக்கங்கள், எண்ணங்கள் மற்றும் அது பேசும் விதம்—இவை அனைத்தும் கலப்படம் செய்யப்பட்டவை. சாத்தானின் பேசும் முறையின் முக்கிய அம்சம் என்ன? உன்னை அதன் இரண்டகத் தன்மையைக் காண அனுமதிக்காமல், உன்னை கவர்ந்திழுக்க சாத்தான் மழுப்பல் பேச்சைப் பயன்படுத்துகிறான், அல்லது அதன் நோக்கத்தை நீ அறியவும் அனுமப்பதில்லை; இரையை எடுக்க சாத்தான் உன்னை அனுமதிக்கிறான், ஆனால் நீயும் அதன் சிறப்பைப் புகழ்ந்து பாட வேண்டும். இந்த சூழ்ச்சி சாத்தானின் பழக்கவழக்க முறை அல்லவா? (ஆம்.) சாத்தானின் வேறு என்ன சொற்களும் வெளிப்பாடுகளும் மனிதனை அதன் ஒளிந்திருக்கும் முகத்தைக் காண அனுமதிக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம். வேதத்திலிருந்து இன்னும் சிலவற்றை வாசிப்போம்.
3. சாத்தானுக்கும் யேகோவா தேவனுக்கும் இடையேயான உரையாடல்
யோபு 1:6-11 ஒரு நாள் தேவபுத்திரர் யேகோவாவின் சந்நிதியில் ஒன்று கூடியிருந்த போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே நின்றான். யேகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். அப்பொழுது சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்? அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா? அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான் என்றான்.
யோபு 2:1-5 பின்னொரு நாளிலே யேகோவாவினுடைய சந்நிதியில் தேவபுத்திரர் ஒன்று கூடியிருந்த போது, அவர்களிடையே சாத்தானும் யேகோவாவினுடைய சந்நிதியில் நின்றான். யேகோவா சாத்தானைப் பார்த்து: நீ எங்கிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யேகோவா சாத்தானை நோக்கி: என் ஊழியனாகிய யோபுவைப் போல பூமியில் எந்தப் பரிபூரணமானவனும் நேர்மையானவனும், தேவனுக்குப் பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய எவரும் இல்லை, அவன்மேல் கவனம் வைத்தாயா? என்றார். முகாந்திரமில்லாமல் அவனை அழிக்க நீ என்னை ஏவின போதும், அவன் இன்னும் தன் நேர்மையில் உறுதியாக இருக்கிறான் என்றார். அதற்கு சாத்தான் யேகோவாவுக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான் என்றான்.
இவ்விரண்டு பத்தியிலும் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயான உரையாடல் முழுமையாக இடம் பெற்றுள்ளது. இதில் தேவன் சொன்னதும் சாத்தான் சொன்னதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவன் அதிகம் பேசவில்லை, மேலும் அவர் மிகவும் எளிமையாக பேசியுள்ளார். தேவனுடைய இந்த எளிமையான வார்த்தைகளில் அவரது பரிசுத்தத்தை நாம் பார்க்க முடியுமா? அது அவ்வளவு எளிதல்ல என்று சிலர் சொல்லுவார்கள். எனவே சாத்தானுடைய ஒளிக்கும் தன்மையை அதன் பதில்களில் பார்க்க முடியுமா? முதலில் நாம் யேகோவா தேவன் சாத்தானிடம் என்ன விதமான கேள்விகள் கேட்டார் என்று பார்ப்போம். “நீ எங்கிருந்து வருகிறாய்?” இது ஒரு நேரடியான கேள்வி இல்லையா? இதில் ஏதாவது உள்ளர்த்தம் உள்ளதா? இல்லை இது ஒரு நேரடியான கேள்வி மட்டுமே. உங்களிடம் யாராவது, “நீ எங்கிருந்து வருகிறாய?” என்று கேட்டால் எவ்வாறு பதிலளிப்பீர்கள். நீங்கள் இப்படிச் சொல்வீர்களா: “அங்குமிங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்”? (இல்லை.) நீங்கள் இப்படி பதிலளிக்க மாட்டீர்கள். எனவே, சாத்தான் இப்படி பதிலளிப்பதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? (சாத்தான் விசித்திரமாக நடந்துகொள்கிறான், ஆனால் அது வஞ்சிப்பதாகவும் இருக்கிறது.) நான் என்ன உணர்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஒவ்வொரு முறையும் நான் இந்த வார்த்தைகளைப் பார்க்கும்போது, அருவருப்பாக இருக்கிறது. ஏனென்றால் சாத்தான் பேசுகிறான் அவன் வார்த்தையில் ஒரு பொருளும் இல்லை. சாத்தான் தேவனுடைய கேள்விக்குப் பதிலளித்தானா? இல்லை, சாத்தான் பேசிய வார்த்தைகளில் ஒரு பதிலும் இல்லை. அதனால் ஒரு பயனுமில்லை. அவை தேவனுடைய கேள்விக்கான பதிலுமில்லை. “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்.” இவ்வார்த்தைகளில் இருந்து நீ புரிந்து கொள்வது என்ன? சாத்தான் எங்கிருந்துதான் வருகிறான்? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் பெற்றுள்ளீர்களா? (இல்லை.) இது சாத்தானின் தந்திரமான திட்டங்களின் “புத்திசாலித்தனம்”—இது உண்மையில் அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க யாரையும் அனுமதிப்பதில்லை. இந்தச் சொற்களைக் கேட்டபின், அது பதில் சொல்லி முடித்திருந்தாலும்கூட, அது என்ன சொன்னது என்பதை இன்னும் உன்னால் அறிய முடியவில்லை. ஆயினும்கூட, தான் மிகச்சரியாக பதிலளித்ததாக சாத்தான் நம்புகிறான். நீ எப்படி உணருகிறாய்? அருவருக்கிறாயா? (ஆம்.) இந்த வார்த்தைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இப்போது நீ அருவருப்பை உணர ஆரம்பித்திருக்கிறாய். சாத்தானின் வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டுள்ளன: சாத்தான் என்ன சொல்கிறானோ அதன் மூலம் அவன் உன்னை தலையைச் சொறிய விட்டுவிடுகிறான், அதனுடைய வார்த்தைகளின் ஆதாரத்தை உணர முடியவில்லை. சில நேரங்களில் சாத்தானுக்கு உள்நோக்கம்இருக்கிறது மேலும் வேண்டுமென்றே பேசுகிறது, சில சமயங்களில் அதன் சுபாவத்தால் நிர்வகிக்கப்பட்டு அத்தகைய வார்த்தைகள் தன்னிச்சையாக வெளிப்படுகின்றன மேலும், சாத்தானின் வாயிலிருந்து நேராக வருகின்றன. சாத்தான் சாத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பற்றி சிந்திப்பதில் அதிக நேரம் செலவிடுவதில்லை, மாறாக, அவை சிந்திக்காமலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. அது எங்கிருந்து வந்தது என்று தேவன் கேட்டதற்கு, சாத்தான் சில தெளிவற்ற வார்த்தைகளால் பதிலளித்தது. நீ மிகவும் புதிராக உணர்கிறாய், சாத்தான் எங்கிருந்து வருகிறான் என்று ஒருபோதும் தெரியாது. உங்களில் யாராவது இப்படி பேசுகிறார்களா? பேச இது என்ன வகையான வழி? (இது தெளிவற்றது மற்றும் ஒரு குறிப்பிட்ட பதிலைக் கொடுக்கவில்லை.) இந்தப் பேசும் முறையை விவரிக்க நாம் எந்த வகையான சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இது திசைதிருப்பல் மற்றும் தவறானது. நேற்று அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த யாராவது விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம். நீ அவர்களிடம் கேள்: “நான் உன்னை நேற்று பார்த்தேன். நீ எங்கே போயிருந்தாய்?” அவர்கள் எங்கு சென்றார்கள் என்று அவர்கள் உன்னிடம் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். மாறாக, அவர்கள் சொல்கிறார்கள்: “நேற்று என்ன ஒரு நாள். அது மிகவும் சோர்வாக இருந்தது!” உன் கேள்விக்கு அவர்கள் பதிலளித்தார்களா? அவர்கள் பதில் தந்தார்கள், ஆனால் நீ விரும்பிய பதிலை அவர்கள் கொடுக்கவில்லை. இது மனிதனின் பேச்சுக் கலையில் இருக்கும் “புத்திசாலித்தனம்”. உன்னால் ஒருபோதும் அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது, அல்லது அவர்களின் வார்த்தைகளின் ஆதாரத்தையும் நோக்கத்தையும் உணர முடியாது. அவர்கள் எதைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியாது, ஏனென்றால் அவர்களின் இதயத்தில் அவர்கள் சொந்தக் கதையை வைத்திருக்கிறார்கள்—இது நயவஞ்சகமானது. இப்படி அடிக்கடி பேசுபவர்கள் உங்களில் யாராவது இருக்கிறார்களா? (ஆம்.) அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன? சில நேரங்களில் உங்கள் சொந்த நலன்களைப் பாதுகாப்பதா, சில சமயங்களில் உங்கள் சொந்தப் பெருமை, நிலை, மற்றும் பிம்பம் ஆகியவற்றைப் பராமரித்து, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களைப் பாதுகாக்கவா? எந்த நோக்கமாக இருந்தாலும், அது உங்கள் நலன்களுடன் பிரிக்க முடியாதது, உங்கள் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மனிதனின் இயல்பு அல்லவா? இப்படிப்பட்ட சுபாவம் கொண்ட அனைவரும் சாத்தானுடன் இல்லை என்றால் அதன் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அல்லவா? இதை நாம் இப்படிச் சொல்லலாம் இல்லையா? பொதுவாக, இந்த வெளிப்பாடு வெறுக்கத்தக்கது மற்றும் அருவருப்பானது. நீங்களும் இப்போது அருவருக்கிறீர்கள், இல்லையா? (ஆம்.)
பின்வரும் வசனங்களைப் பார்ப்போம். யேகோவாவின் கேள்விக்கு சாத்தான் இப்படி பதிலளிக்கிறான்: “யோபு தேவனுக்குக் காரணமில்லாமலா பயப்படுகிறான்?” யோபை குறித்த யேகோவாவின் மதிப்பீட்டை சாத்தான் தாக்கத் துவங்குகிறது, மேலும் அவனுடைய இந்த தாக்குதல் வெறுப்பு நிறம் கொண்டிருந்தது. “அவனைச் சுற்றியும், அவன் வீட்டைச் சுற்றியும், அனைத்துப் பக்கத்திலும் அவன் கொண்டிருக்கும் எல்லாவற்றைச் சுற்றியும் நீர் வேலி அமைக்கவில்லையா?” யோபு மீதான யேகோவாவின் கிரியை குறித்த சாத்தானின் புரிதலும் மதிப்பீடும் இதுதான். சாத்தான் அதை இவ்வாறு மதிப்பீடு செய்து, “அவன் கைகளின் கிரியையை நீர் ஆசீர்வதித்தீர், அவனது பொருள் தேசத்தில் பெருகிற்று. ஆனால் இப்பொழுது நீர் உம் கையை நீட்டி, அவனிடம் உள்ள சகலத்தையும் தொட்டீரானால், அப்பொழுது அவன் உம் முகத்திற்கு முன்பாக உம்மைத் தூஷிப்பான்.” என்றான். சாத்தான் எப்போதும் தெளிவற்ற முறையில் பேசுகிறான், ஆனால் இங்கே அது சில குறிப்பிட்ட சொற்களில் பேசுகிறான். இருப்பினும், இந்த வார்த்தைகள், குறிப்பிட்ட சில சொற்களில் பேசப்பட்டாலும் அவை தாக்குதல் மற்றும் தேவதூஷனமாகும், அது யேகோவா தேவனுக்கே விரோதமான செயல்பாடாகும். இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? நீங்கள் வெறுப்பை உணர்கிறீர்களா? சாத்தானின் நோக்கங்களை உங்களால் காண முடிகிறதா? முதலாவதாக, தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்ற யோபுவைப் பற்றிய யேகோவாவின் மதிப்பீட்டை சாத்தான் மறுக்கிறான். யோபு சொல்லும் மற்றும் செய்கிற எல்லாவற்றையும் சாத்தான் மறுக்கிறது, அதாவது, அது யேகோவாவைப் பற்றிய தனது பயத்தை மறுக்கிறது. இது குற்றச்சாட்டு அல்லவா? யேகோவா செய்கிற மற்றும் சொல்லும் எல்லாவற்றையும் சாத்தான் குற்றம் சாட்டுகிறான், மறுக்கிறான், சந்தேகிக்கிறான். அது நம்பாமல், “நீர் விஷயங்கள் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், பின்னர் நான் அதை எப்படிப் பார்க்காமல் போனேன்? நீர் அவனுக்கு பல ஆசீர்வாதங்களை அளித்திருக்கிறீர், எனவே அவன் எப்படி உமக்கு பயப்படாமல் இருப்பானா?” தேவன் செய்யும் எல்லாவற்றையும் இது மறுப்பதல்லவா? குற்றச்சாட்டு, மறுப்பு, தேவதூஷணம் ஆகிய சாத்தானின் வார்த்தைகள் ஒரு தாக்குதல் அல்லவா? சாத்தான் தன் இதயத்தில் என்ன நினைக்கிறான் என்பதன் உண்மையான வெளிப்பாடு இவை அல்லவா? இந்த வார்த்தைகள் நிச்சயமாக நாம் இப்போது படித்த சொற்களைப் போல இல்லை: “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்.” அவை முற்றிலும் வேறுபட்டவை. இந்த வார்த்தைகளின் மூலம், சாத்தான் அவன் இருதயத்தில் உள்ளவைகளை—தேவன் மீதான அவனுடைய மனப்பாங்கு மற்றும் யோபுவின் தேவ பயத்தை வெறுப்பது ஆகியவற்றை முழுவதுமாக வெளிப்படுத்துகிறான். இது நிகழும்போது, அதன் தீமை மற்றும் தீய தன்மை முற்றிலும் வெளிப்படுகிறது. இது தேவனுக்குப் பயப்படுபவர்களை வெறுக்கிறது, பொல்லாப்புக்கு விலகுகிறவர்களை வெறுக்கிறது, இன்னுமதிகமாக மனிதனுக்கு ஆசீர்வாதங்களை அளிக்கிறார் என்பதால் யேகோவாவை வெறுக்கிறது. தேவன் தம்முடைய கையால் எழுப்பிய, யோபுவை அழிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அது விரும்பி இப்படி சொல்கிறது: அவரை அழிக்க, “யோபு உமக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறான் என்று நீர் கூறுகிறீர். நான் அதை வித்தியாசமாகப் பார்க்கிறேன்.” இது யேகோவாவைத் தூண்டுவதற்கும் சோதிப்பதற்கும் பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது, மேலும் யோபுவை விரும்பத்தகாத முறையில் கையாளும், சரிகட்டும், தீங்கிழைக்கும் மற்றும் தவறாகக் கையாளும் வேலையை சாத்தானிடம் ஒப்படைப்பதற்காக, அது பல்வேறு சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது, இதனால் தேவனின் பார்வையில் நீதியும் பரிபூரணமும் கொண்ட இந்த மனிதனை அழிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த அது விரும்புகிறது. சாத்தானுக்கு இந்த வகையான இருதயம் ஏற்பட காரணம் அந்த சமயத்தில் ஏற்பட்ட ஒரு நொடிப்பொழுது தூண்டுதலா? இல்லை இது அப்படி இல்லை. இது தயாரிப்பில் நீண்ட காலமாக உள்ளது. தேவன்ஒரு நபருக்காக கிரியை செய்து, அக்கறைகொண்டு, இந்த நபரை கருத்தில் கொண்டு பார்த்து, மற்றும் இந்த நபரைப் பாராட்டி அங்கீகரிக்கும்போது, சாத்தானும் அந்த நபரை நெருக்கமாகப் பின் தொடர்ந்து, அவரை ஏமாற்றி, அவருக்குத் தீங்கு செய்ய முயற்சிக்கிறது. தேவன் இந்த நபரை ஆதாயப்படுத்த விரும்பினால், தேவனைத் தடுக்க சாத்தான் தன் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்யும், தனது மறைவான நோக்கத்தை அடைவதற்காக, தேவனுடைய கிரியையை மோசம்போக்கி, சீர்குலைத்து சேதப்படுத்த பல்வேறு தீய சூழ்ச்சிகளைப் பயன்படுத்தும். இது என்ன நோக்கம்? தேவன் யாரையும் ஆதாயப்படுத்துவதை அவன் விரும்பவில்லை; தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆட்கொள்ள விரும்புகிறது, அது அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறது, அவர்களை தன் பொறுப்பிலேற்க விரும்புகிறது. இதனால் அவர்கள் அதனை ஆராதிப்பார்கள், அதனால் அவர்கள் பொல்லாத செயல்களைச் செய்வதில் அதனுடன் இணைந்து, தேவனை எதிர்ப்பார்கள். இது சாத்தானின் கெட்ட நோக்கம் அல்லவா? சாத்தான் மிகவும் தீயவன், மிகவும் மோசமானவன் என்று நீங்கள் அடிக்கடி கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்களா? மனுக்குலம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். உண்மையான சாத்தான் எவ்வளவு மோசமானவன் என்பதை நீங்கள் பார்த்ததில்லை. ஆயினும், யோபு விஷயத்தில், சாத்தான் எவ்வளவு பொல்லாதவன் என்பதை நீங்கள் தெளிவாகக் கவனித்திருக்கிறீர்கள். இந்த விஷயம் சாத்தானின் அருவருப்பான முகத்தையும் சாராம்சத்தையும் மிகவும் தெளிவுபடுத்தியுள்ளது. தேவனுடன் போரிடுவதிலும், அவருக்குப் பின்னாலே செல்வதிலும், தேவன் செய்ய விரும்பும் எல்லா கிரியைகளையும் தரைமட்டமாக்குவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை ஆக்கிரமித்து கட்டுப்படுத்துவது, தேவன் ஆதாயப்படுத்த விரும்புவோரை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்பது தான் சாத்தானின் நோக்கம். அவை அப்படி அழிக்கப்படாவிட்டால், அவர்கள் சாத்தானால் பயன்படுத்தப்படுவதற்கு அதன் வசமாகிறார்கள்—இது தான் அதன் நோக்கம். தேவன் என்ன செய்கிறார்? இந்த வசனப் பகுதியில் தேவன் ஒரு எளிய வாக்கியத்தை மட்டுமே கூறுகிறார்; தேவன் அதற்கு மேல் எதையும் செய்தார் என்று எந்தவொரு பதிவும் இல்லை, ஆனால் சாத்தான் என்ன செய்கிறான், என்ன சொல்கிறான் என்பதற்கு இன்னும் பல பதிவுகள் உள்ளன. பின்வரும் வேதாகம பகுதியில், யேகோவா சாத்தானிடம் கேட்கிறார், “நீ எங்கிருந்து வருகிறாய்?” சாத்தானின் பதில் என்ன? (அது இன்னும் “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்.”) அது இன்னும் அதே வாக்கியம் தான். இது சாத்தானின் குறிக்கோள், சாத்தானின் அழைப்பு அட்டை ஆகிவிட்டது. இது எப்படி? சாத்தான் வெறுப்பு நிறைந்தவன் இல்லையா? நிச்சயமாக இந்த அருவருப்பான வாக்கியத்தை ஒரு முறை மட்டுமே கூறினாலே போதுமானது. சாத்தான் ஏன் அதை திரும்ப திரும்ப சொல்கிறான்? இது ஒரு விஷயத்தை நிரூபிக்கிறது: சாத்தானின் இயல்பு மாறாதது. அதன் அசிங்கமான முகத்தை மறைக்க சாத்தானால் பாசாங்கை பயன்படுத்த முடியாது. தேவன் அதை ஒரு கேள்வி கேட்கிறார், அது இவ்வாறு பதிலளிக்கிறது பாருங்கள். இவ்வாறு இருப்பதால், அது மனிதர்களை எவ்வாறு நடத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்! சாத்தான் தேவனைப் பார்த்து பயப்படுவதில்லை, தேவனுக்குப் பயப்படுவதில்லை, தேவனுக்குக் கீழ்ப்படிவதுமில்லை. ஆகவே, தேவனுக்கு முன்பாக வேண்டுமென்றே பெருமிதம் கொள்ளவும், தேவனின் கேள்வியை அலட்சியப்படுத்தவும், தேவனின் கேள்விக்கு இதே பதிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியும், தேவனைக் குழப்ப இந்த பதிலைப் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. இது தான் சாத்தானின் அசிங்கமான முகம். அது தேவனின் சர்வவல்லமையை நம்பவில்லை, தேவனின் அதிகாரத்தை நம்பவில்லை, நிச்சயமாக தேவனின் ஆதிக்கத்திற்கு அடிபணியவும் தயாராக இல்லை. அது தொடர்ந்து தேவனுக்கு எதிராகவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் தொடர்ந்து தாக்குகிறதாகவும், தேவன் செய்கிற அனைத்தையும் அழிக்க முயற்சிக்கிறதாவும் இருக்கிறது—இது அதனின் தீய நோக்கமாகும்.
யோபு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, சாத்தானால் பேசப்பட்ட இந்த இரண்டு பத்திகளும், அவன் செய்த காரியங்களும், தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தில், அவருக்கு எதிரான எதிர்ப்பின் பிரதிநிதிகளாகும்—இங்கே, சாத்தானின் உண்மையான தன்மைகள் வெளிப்படுகின்றன. சாத்தானின் வார்த்தைகளையும் செயல்களையும் நீ நிஜவாழ்க்கையில் பார்த்திருக்கிறாயா? நீ அவைகளைப் பார்க்கும்போது, அவை சாத்தானால் பேசப்பட்டவை என்று நினைக்காமல், அவை மனிதனால் பேசப்படும் விஷயங்கள் என்று நீ நினைக்கலாம். இதுபோன்ற விஷயங்கள் மனிதனால் பேசப்படும்போது, அது எதைக் குறிக்கிறது? சாத்தானைக் குறிக்கிறது. நீ அதை அடையாளங்கண்டாலும், அது உண்மையில் சாத்தானால் பேசப்படுகிறது என்பதை அப்போதும் உன்னால் உணர முடியாது. ஆனால், இப்பொழுது சாத்தான் தானே என்ன சொல்லி இருக்கிறான் என்று நீ தெளிவாகப் பார்த்திருக்கிறாய். நீ இப்போது சாத்தானுடைய கோரமான முகத்தையும், அவனுடைய தீமையையும் பற்றிய சந்தேகம் இல்லாத, தெளிவானப் புரிதலையும் கொண்டிருக்கிறாய். ஆகவே, சாத்தானின் இயல்பு பற்றிய அறிவைப் பெற இன்றைய மக்களுக்கு உதவுவதில் இந்த இரண்டு பத்திகளும் முக்கியமானவையா? சாத்தானின் கோரமான முகத்தையும், அவனுடைய நிஜமான, உண்மையான முகத்தையும் அடையாளங்காண, இன்று மனிதகுலத்திற்காகக் கவனமாக தக்கவைக்கப்பட, இந்த இரண்டு பத்திகளும் முக்கியமானவைகளா? இதைச் சொல்வது பொருத்தமான விஷயமாகத் தெரியவில்லை என்றாலும், இவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட இந்த வார்த்தைகள் துல்லியமானதாகக் கூட கருதப்படலாம். உண்மையில், இந்தக் கருத்தை நான் வெளிப்படுத்தக்கூடிய ஒரே வழி இதுதான், நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முடிந்தால், அதுவே போதுமானது. யேகோவா தேவனிடத்தில் யோபு கொண்டுள்ள பயத்தைக் குறித்த குற்றச்சாட்டுகளை வீசியெறிந்து, யேகோவா செய்கிற காரியங்களை சாத்தான் மீண்டும் மீண்டும் தாக்குகிறான். சாத்தான் பல்வேறு முறைகளால் யேகோவாவைக் கோபமூட்ட முயற்சிக்கிறான், யோபுவின் சோதனையை யேகோவா கவனியாமல் விட்டுவிடச் செய்யும்படி முயற்சிக்கிறான். எனவே, அவனுடைய வார்த்தைகள் மிகவும் கோபமூட்டும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆகவே, நீங்கள் சொல்லுங்கள்! சாத்தான் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன், அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதைத் தேவன் தெளிவாகக் காண முடியுமா? (ஆம்.) தேவனுடைய இருதயத்தில், தேவன் காண்கிற இந்த மனிதனான யோபு, நீதியுள்ள மனிதனாக தேவன் கருதும் இந்த தேவனுடைய ஊழியக்காரன், பரிபூரண மனிதனான இம்மனிதன் இவ்வகையான சோதனையைத் தாங்க முடியுமா? (ஆம்.) தேவன் அதைப் பற்றி ஏன் அவ்வளவு உறுதியாக இருக்கிறார்? தேவன் எப்போதும் மனிதனின் இதயத்தை ஆராய்கிறாரா? (ஆம்.) அப்படியானால், சாத்தானால் மனிதனின் இருதயத்தை ஆராய முடியுமா? அவனால் முடியாது. சாத்தானால் உன்னுடைய இருதயத்தைக் காண முடிந்தாலும், அவனுடைய பொல்லாத தன்மை ஒருபோதும் பரிசுத்தமானதைப் பரிசுத்தம் என்றும், அசுத்தமானதை அசுத்தம் என்றும் அவனை நம்பவொட்டாது. பொல்லாத சாத்தானால் ஒருபோதும் பரிசுத்தமான, நீதியான அல்லது பிரகாசமான எதையும் உயர்வாக மதிக்க இயலாது. அவனால் அவனுடைய இயல்பு, அவனுடைய தீமைகள் மற்றும் வழக்கமான முறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஓயாமல் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள முடியாது. தேவனால் அவன் தண்டிக்கப்படும்போதும் அல்லது அழிக்கப்படும்போதும்கூட, அவன் தேவனைப் பிடிவாதமாக எதிர்க்கத் தயங்குவதில்லை—இது பொல்லாங்கானது, இதுவே சாத்தானின் இயல்பாகும். அதனால் இப்பகுதியில் சாத்தான் கூறுகிறான்: “தோலுக்குப் பதிலாக தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாக சகலத்தையும் கொடுப்பான் மனுஷன். ஆனால் இப்போது நீர் உமது கையை நீட்டி, அவன் எலும்பையும் மாம்சத்தையும் தொடும், அவன் உமது முகத்துக்கு முன்பாக உம்மை தூஷிப்பான்.” தேவனிடத்திலிருந்து பல நன்மைகளை மனிதன் பெற்றுக் கொண்டதால்தான் அவன் அவருக்குப் பயப்படுகிறான், மனிதன் தேவனிடமிருந்து நன்மைகளைப் பெறுகிறான், எனவே தேவன் நல்லவர் என்று அவன் கூறுகிறான் என்று சாத்தான் நினைக்கிறான். ஆனால், தேவன் நல்லவர் என்பதால் அல்ல, தேவனுக்கு பயப்படத்தக்கதாய் மனிதன் இப்படி பல நன்மைகளைப் பெறுகிறதே அதன் காரணமாகும். தேவன் இந்த நன்மைகளை அவனிடமிருந்து பறித்துக் கொண்டவுடன், அவன் தேவனை விட்டுவிடுகிறான். சாத்தானின் பொல்லாத இயல்பில், மனிதனின் இருதயம் உண்மையிலேயே தேவனுக்குப் பயப்படக்கூடும் என்பதை அவன் நம்பவில்லை. அவனுடைய பொல்லாத தன்மையினால், பரிசுத்தம் என்றால் என்ன, பயபக்தி என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியாது. தேவனுக்குக் கீழ்ப்படிவது என்றால் என்ன அல்லது அவருக்குப் பயப்படுவது என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியாது. இக்காரியங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியாததினால், மனிதனும் தேவனுக்குப் பயப்பட முடியாது என்று அவன் நினைக்கிறான். எனக்குச் சொல்லுங்கள், சாத்தான் பொல்லாதவன் தானே? நமது சபையைத் தவிர, வேறு எந்த மதங்களோ, பிரிவினர்களோ அல்லது மத அல்லது சமுதாய குழுவினர்களோ தேவன் இருக்கிறதை நம்புவதில்லை. இன்னும், தேவன் மாம்சமானார் என்றும், நியாயத்தீர்ப்பின் கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர்கள் நம்புவதில்லை. மேலும் இந்தக் காரணத்தினால் நீ நம்புவது தேவன் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு ஒழுங்கற்ற மனிதன் அவனைச் சுற்றிப் பார்த்து, மற்ற அனைவரையும் தன்னைப்போலவே ஒழுங்கற்றவர்களாய்ப் பார்க்கிறான். ஒரு உண்மையற்ற மனிதன் சுற்றிப் பார்த்து, நேர்மையற்ற தன்மையையும் பொய்களையும் மட்டுமே பார்க்கிறான். ஒரு பொல்லாத மனிதன் மற்ற அனைவரையும் பொல்லாதவர்களாகப் பார்க்கிறான், அவன் பார்க்கும் அனைவரிடமும் சண்டையிட விரும்புகிறான். நேர்மையுள்ளவர்கள் மற்ற அனைவரையும் நேர்மையானவர்களாகவே பார்க்கிறார்கள், எனவே அவர்கள் எப்போதும் மோசம்போக்கப்படுகிறார்கள், எப்போதும் ஏமாற்றப்படுகிறார்கள், அதைக் குறித்து அவர்கள் எதுவும் செய்ய முடிவதில்லை. உங்களுடைய நம்பிக்கையில் உங்களைப் பலப்படுத்தும்படி நான் இந்த சில உதாரணங்களைக் கூறுகிறேன். சாத்தானின் பொல்லாத தன்மை தற்பொழுதைக்கான ஒரு நிர்ப்பந்தம் அல்ல அல்லது சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுவதும் அல்ல, அது எந்தவொரு காரணத்தினாலோ அல்லது சூழல்சார்ந்தோ எழும் தற்காலிக வெளிப்பாடுமல்ல. நிச்சயமாக இல்லை! சாத்தானால் மாற முடியாது, அவன் அப்படித்தான் இருப்பான்! அவனால் எந்த நம்மையும் செய்ய முடியாது. கேட்க இனிமையான ஒன்றை அவன் கூறினாலும் கூட, அது உன்னைக் கவர்ந்திழுப்பதற்காவே இருக்கும். அவனுடைய வார்த்தைகள் எத்தனை இனிமையானதாக, எவ்வளவு நயமுள்ளதாக, எத்தனை மென்மையானதாக இருந்தாலும், அவ்வார்த்தைகளுக்குப் பின்பாக அவ்வளவு தீங்கிழைக்கும், வஞ்சனையான நோக்கங்கள் இருக்கும். இந்த இரண்டு பத்திகளிலும் சாத்தான் எவ்வகையான முகத்தையும், தன்மையையும் காட்டுகிறான்? (நயவஞ்சகமான, தீங்கிழைக்கும் மற்றும் பொல்லாங்கான முகம் மற்றும் தன்மையைக் காட்டுகிறான்.) பொல்லாப்பே சாத்தானின் அடிப்படையான குணம் ஆகும்; எல்லாவற்றிற்கும் மேலாக, சாத்தான் பொல்லாதவன் மற்றும் தீங்கிழைக்கிறவனாவான்.
இப்போது நாம் சாத்தானைப் பற்றிய கலந்துரையாடலை முடித்ததினால், நம்முடைய தேவனைப் பற்றி பேசுவோம். தேவனின் ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டத்தின்போது, தேவனுடைய நேரடியான பேச்சுக்கள் மிகக் குறைவாகவே வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் பதிவுசெய்யப்பட்டவை மிகவும் சாதாரணமானவையாகும். எனவே நாம் ஆதியிலிருந்து ஆரம்பிக்கலாம். தேவன் மனிதனை சிருஷ்டித்தார், அப்போதிலிருந்து மனுக்குலத்தின் வாழ்வை எப்பொழுதும் வழிநடத்திக் கொண்டு வருகிறார். மனிதகுலத்திற்கு ஆசீர்வாதங்களை வழங்குவதிலோ, மனிதர்களுக்கான சட்டங்களையும் கட்டளைகளையும் உருவாக்குவதிலோ, அல்லது வாழ்க்கைக்கான பல்வேறு விதிகளை நிர்ணயிப்பதிலோ, இந்த எல்லா காரியங்களைச் செய்கிறதிலும் தேவனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலாவதாக, தேவன் செய்வதெல்லாம் மனிதகுலத்தின் நன்மைக்காக என்று நீங்கள் உறுதியாகக் கூற முடியுமா? இவை பெரிய, வெற்றுச் சொற்களைப் போல உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் அதிலுள்ள விவரங்களை ஆராய்ந்தால், தேவன் ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ மனிதனை வழிவகுக்கவும் வழிகாட்டவும் நோக்கமாயிருக்கிறாரல்லவா? மனிதனைத் தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்றச் செய்வதோ அல்லது தன்னுடைய நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ள வைப்பதோ, எதுவானாலும் மனிதனுக்கான தேவனுடைய திட்டம் என்னவென்றால், அவன் சாத்தானை ஆராதிப்பதில் விழுந்து விடக்கூடாது மற்றும் சாத்தானால் பாதிக்கப்படக் கூடாது என்பதேயாகும். இது மிக அடிப்படையானது மற்றும் ஆரம்பத்தில் இதுவே செய்யப்பட்டது. ஆதியில், மனிதன் தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதபோது, தேவன் சில எளிய நியாயப்பிரமாணமங்களையும் கட்டளைகளையும் உருவாக்கி, மனதில் நினைக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளடக்கிய ஒழுங்குமுறைகளை உருவாக்கினார். இந்த ஒழுங்குமுறைகள் மிகவும் எளிமையானதாய் இருந்தாலும் அவைகளுக்குள்ளே தேவசித்தம் உள்ளது. தேவன் மனுக்குலத்தை மதிப்புள்ளதாய், நேசத்துக்குரியதாய்க் கருதுகிறார் மற்றும் மிக அன்பாக நேசிக்கிறார். அதனால் அவருடைய இருதயம் பரிசுத்தமானது என்று சொல்லலாமா? அவருடைய இருதயம் சுத்தமானது என்று சொல்லலாமா? (ஆம்.) தேவனுக்கு வேறு ஏதேனும் கூடுதல் நோக்கங்கள் உள்ளனவா? (இல்லை.) ஆகவே இது அவருடைய நீதியும் நேர்மறையான நோக்கம் அல்லவா? தேவனுடைய கிரியையின் பாதையில், அவர் உருவாக்கின எல்லா ஒழுங்குமுறைகளும் மனிதன் மீது ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கி அவனுக்காக வழியை உண்டாக்குகிறது. எனவே தேவனுடைய மனதில் ஏதேனும் சுய சேவைக்கான எண்ணங்கள் உள்ளனவா? மனிதன் சம்பந்தப்பட்ட ஏதேனும் கூடுதலான நோக்கங்கள் தேவனுக்கு உண்டா? தேவன் எவ்வகையிலாவது மனிதனை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா? சிறிதளவும் இல்லை. தேவன் சொல்வதையே செய்கிறார், அவருடைய வார்த்தைகளும் கிரியைகளும் அவருடைய இருதயத்தில் உள்ள எண்ணங்களோடு பொருந்திப்போகின்றன. அதில் கறைபடிந்த நோக்கம் இல்லை, சுயசேவை எண்ணங்கள் இல்லை. அவர் எதையும் தனக்காகச் செய்வதில்லை; அவர் செய்யும் அனைத்தையும், எந்தவொரு தனிப்பட்ட நோக்கங்களும் இல்லாமல், மனிதனுக்காகச் செய்கிறார். அவர் மனிதன் மீது திட்டங்களும் நோக்கங்களும் வைத்திருப்பினும், அதில் எதுவுமே அவருக்கானதல்ல. அவர் செய்யும் அனைத்தும் மனுக்குலத்துக்காகவும், மனுக்குலத்தைப் பாதுகாப்பதற்காகவும், மனுக்குலத்தை வழிதவறிப் போகாமல் காப்பதற்காகவும் மட்டுமே செய்யப்படுகின்றன. எனவே அவருடைய இந்த இருதயம் விலைமதிப்பற்றதல்லவா? அத்தகைய விலைமதிப்பற்ற இதயத்தின் மிகச்சிறிய அடையாளத்தையாவது நீ சாத்தானில் பார்க்க முடியுமா? உங்களால் இதனுடைய சிறிய தடயத்தைக் கூட சாத்தானில் காண முடியாது, உன்னால் பார்க்கவே முடியாது. தேவன் செய்யும் அனைத்தும் இயல்பாகவே வெளிப்படுகிறது. இப்போது, தேவன் கிரியை செய்யும் முறையைப் பார்ப்போம்; அவர் எவ்வாறு தனது கிரியையைச் செய்கிறார்? தேவன் இந்த நியாயப்பிரமாணங்களையும் அவருடைய வார்த்தைகளையும் எடுத்து ஒவ்வொரு நபரின் தலையிலும், பட்டையை இறுக்கும் மந்திரத்தைப்போல,[அ] இறுக்கமாகக் கட்டி, ஒவ்வொரு மனிதனின் மீதும் அவற்றைச் சுமத்துகிறாரா? அவர் இவ்வாறு செயல்படுகிறாரா? (இல்லை.) அப்படியானால், தேவன் எவ்வகையில் தனது கிரியையைச் செய்கிறார்? அவர் பயமுறுத்துகிறாரா? அவர் உங்களிடம் சுற்றிவளைத்துப் பேசுகிறாரா? (இல்லை.) நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதபோது தேவன் உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார்? அவர் உன் மீது ஒரு ஒளியைப் பிரகாசிக்கப்பண்ணி, இதைச் செய்வது சத்தியத்துடன் ஒத்துப்போகாது என்பதை உனக்குத் தெளிவாகச் சொல்லி, பின்னர் நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்குச் சொல்கிறார். தேவன் கிரியை செய்யும் இந்த வழிகளில் இருந்து, உனக்கு எந்த வகையான உறவு அவரிடத்தில் இருப்பதாக உணர்கிறாய்? தேவன் எட்ட முடியாதவர் என்று நீ நினைக்கிறாயா? (இல்லை.) தேவன் கிரியை செய்கிற இந்த வழிகளைப் பார்க்கும்போது, நீ எவ்வாறு உணர்கிறாய்? தேவனின் வார்த்தைகள் குறிப்பாக உண்மையானவை, மேலும் மனிதனுடனான அவரது உறவு குறிப்பாக இயல்பானது. தேவன் இயல்புகடந்த வகையில் உன்னுடன் நெருக்கமாக இருக்கிறார். உனக்கும் தேவனுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லை. தேவன் உன்னை வழிநடத்தும்போது, அவர் உன் தேவைகளைச் சந்திக்கும்போது, உனக்கு உதவும்போது, உன்னை ஆதரிக்கும்போது, தேவன் எவ்வளவு நேசிக்கத்தக்கவர் என்பதையும், அவர் உன்னில் தூண்டும் பயபக்தியையும் நீ உணர்கிறாய்; அவர் எவ்வளவு அன்பானவர் என்பதை நீ உணர்கிறாய், அவருடைய அரவணைப்பை நீ உணர்கிறாய். ஆனால், அவர் உன் சீர்கேடுகள் நிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளும்போது, அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக அவர் உன்னை நியாயந்தீர்க்கும்போது, கண்டிக்கும்போது அவர் எந்த முறையைப் பயன்படுத்துகிறார்? அவர் உன்னை வார்த்தைகளால் கடிந்துகொள்ளுகிறாரா? உன்னுடைய சூழ்நிலை மூலமாக, ஜனங்கள், செயல்பாடுகள் மற்றும் காரியங்கள் மூலமாக அவர் உன்னை ஒழுங்குபடுத்துகிறாரா? (ஆம்.) தேவன் உன்னை எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்துகிறார்? சாத்தான் மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஈடாக தேவன் மனிதனை ஒழுங்குபடுத்துகிறாரா? (இல்லை, மனிதனால் எந்த அளவிற்கு தாங்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அவர் அவனை ஒழுங்குபடுத்துகிறார்.) தேவன் இதமான, மென்மையான, அன்பான அக்கறையான, அசாதாரணமான, சரியான முறையில் கிரியை செய்கிறார். “தேவன் இதைச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும்” அல்லது “அதைச் செய்ய தேவன் என்னை அனுமதிக்க வேண்டும்” என்று நீ சொல்லும்படியாய் அவருடைய வழி உன்னில் தீவிரமான, உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளைத் தூண்டுவதில்லை. காரியங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாத வகையில், தேவன் உனக்கு மனரீதியான அல்லது உணர்ச்சிரீதியான தீவிரத்தைக் கொடுக்கிறதில்லை. அப்படித்தானே? தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிக்கும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது, நீ எவ்வாறு உணருகிறாய்? தேவனுடைய அதிகாரத்தையும் வல்லமையையும் அறிந்து கொள்ளும்போது நீ எவ்வாறு உணருகிறாய்? தேவன் தேவத்துவம் உள்ளவரும் அவமதிக்க முடியாதவர் என்றும் உணருகிறாயா? இந்நாட்களில் உனக்கும் தேவனுக்கும் இடையே இடைவெளியை உணருகிறாயா? தேவனுக்குப் பயப்படுதலை உணருகிறாயா? இல்லை மாறாக, தேவனிடத்தில் பயத்துடனான பயபக்தியை உணருகிறாயா? இது தேவனுடைய கிரியை என்பதினால் அல்லவா ஜனங்கள் இக்காரியங்களை எல்லாம் உணருகிறார்கள்? இவை சாத்தானுடைய கிரியை என்றால் அவர்களுக்கு இந்த உணர்வுகள் இருக்குமா? நிச்சயமாக இருக்காது. தேவன் எப்போதும் மனிதனுடைய தேவையை சந்திக்கவும், அவனை ஆதரிக்கவும், தன்னுடைய வார்த்தைகளையும், தன்னுடைய சத்தியத்தையும், தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்துகிறார். மனிதன் பெலவீனமாக இருக்கும்போது, சோர்வுற்று இருக்கும்போது, தேவன் அவனிடம் “சோர்வாக உணராதே. எதற்காக நீ சோர்வடைகிறாய்? ஏன் பெலவீனமாக இருக்கிறாய்? பலவீனமாக இருக்கக் காரணம் என்ன? நீ எப்போதும் மிகவும் பெலவீனமாக இருக்கிறாய், எப்போதும் எதிர்மறையாக இருக்கிறாய்! நீ உயிரோடு இருக்கிறதினால் பலன் என்ன? அப்படியே செத்துப் போய் முடிந்து விடு!” என்று நிச்சயமாகக் கடினமாய்ப் பேசமாட்டார். தேவன் இவ்வாறு கிரியை செய்கிறாரா? (இல்லை.) இவ்கையில் கிரியை செய்ய தேவனுக்கு அதிகாரம் உண்டா? ஆம், அவர் செய்கிறார். ஆனாலும் அவர் அவ்வாறு கிரியை செய்வதில்லை. தேவன் இவ்வகையில் கிரியை செய்யாததற்கு காரணம் அவருடைய சாராம்சமே, அது தேவனுடைய பரிசுத்தம் என்னும் சாராம்சமாகும். மனிதனிடம் அவர் கொண்டுள்ள அன்பு, மனிதனை மதிப்புடன் கருதுவது, அன்புடன் பேணுவது ஆகியவைகளை ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. இது மனிதனின் வீண்பெருமையினால் நிறைவேற்றப்பட்டதல்ல, ஆனால் தேவன் உண்மையான நடைமுறையில் கொடுத்த ஒன்றாகும்; இது தேவனுடைய சாராம்சத்தின் வெளிப்பாடாகும். தேவன் கிரியை செய்யும் இந்த வழிகள் அனைத்தும் தேவனுடைய பரிசுத்தத்தை மனிதன் காணச் செய்யுமா? தேவன் செயல்படும் இந்த எல்லா வழிகளிலும், தேவனுடைய நல்ல நோக்கங்கள் உட்பட, மனிதனிடத்தில் தேவன் கொடுக்க விரும்பும் பலன்கள் உட்பட, மனிதனிடத்தில் கிரியை செய்வதற்காக தேவன் பின்பற்றும் பல்வேறு வழிகள், அவர் செய்யும் கிரியைகள், மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறவைகள் உட்பட, தேவனுடைய நல்ல நோக்கங்களில் ஏதேனும் பொல்லாப்பை அல்லது வஞ்சகத்தை நீ பார்த்திருக்கிறாயா? (இல்லை.) ஆகவே தேவன் செய்கிற எல்லாவற்றிலும், தேவன் பேசுகிற எல்லாவற்றிலும், தேவன் தன் இருதயத்தில் சிந்திக்கிற எல்லாவற்றிலும், அவர் வெளிப்படுத்தும் தேவனுடைய சாராம்சத்திலும் கூட, தேவனைப் பரிசுத்தமானவர் என்று அழைக்கலாமா? (ஆம்.) உலகிலாவது அல்லது தனக்குள்ளாவது இந்த பரிசுத்தத்தை எந்த மனிதனாவது கண்டிருக்கிறானா? தேவனைத் தவிர, நீ இதை எந்த மனிதனிடமோ அல்லது சாத்தானிலோ பார்த்திருக்கிறாயா? (இல்லை.) இதுவரை நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில், தேவனைத் தனித்துவமானவர், அவர் தாமே பரிசுத்த தேவன் என்று அழைக்கலாமா? (ஆம்.) தேவன் மனிதனுக்கு அளிக்கும் அனைத்தும், தேவனுடைய வார்த்தைகள், தேவன் மனிதனிடத்தில் கிரியை செய்யும் பல்வேறு வழிகள், தேவன் மனிதனுக்கு என்ன சொல்கிறார், அவனுக்கு என்ன நினைவூட்டுகிறார், அவர் என்ன அறிவுறுத்துகிறார், ஊக்குவிக்கிறார் என்பது உட்பட, இவை அனைத்தும் தேவனுடைய பரிசுத்தம் என்னும் ஒரு சாராம்சத்திலிருந்து உருவாகின்றன. இத்தகைய பரிசுத்த தேவன் இல்லை என்றால், அவர் செய்யும் கிரியையைச் செய்ய எந்த மனிதனும் அவருக்குப் பதிலீடு செய்ய முடியாது. தேவன் இந்த மனிதர்களை முழுவதுமாக சாத்தானிடம் ஒப்படைத்திருந்தால், நீங்கள் இன்று என்ன மாதிரியான நிலையில் இருப்பீர்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? நீங்கள் எல்லோரும் இங்கே முழுமையாக, குற்றமற்றவர்களாக அமர்ந்து இருப்பீர்களா? நீங்களும் இப்படிச் சொல்வீர்களா: “பூமியெங்கும் சுற்றித்திரிந்து உலாவி வந்திருக்கிறேன்” என்று. இதுபோன்ற வார்த்தைகளை நீங்கள் மிகவும் தைரியமாக, அளவு கடந்த சுய நம்பிக்கைகொண்டு, ஆணவம் நிறைந்து, தேவனுக்கு முன்பாக பேசுவும், வெட்கமின்றி பெருமை கொள்ளவும் செய்வீர்களா? சந்தேகத்தின் நிழல் இல்லாமல் நீங்கள் நிச்சயமாக செய்வீர்கள்! மனிதனைக் குறித்த சாத்தானுடைய மனப்பான்மையானது, சாத்தானுடைய இயல்பும் சாராம்சமும் தேவனுடையதிலிருந்து முற்றிலும் எதிரானது என்பதை மனிதன் பார்க்க அனுமதிக்கிறது. தேவனுடைய பரிசுத்தத்திற்கு நேர்மாறான சாத்தானுடைய சாராம்சம் என்ன? (சாத்தானின் பொல்லாப்பு.) சாத்தானுடைய பொல்லாத தன்மை தேவனுடைய பரிசுத்தத்துக்கு நேர்மாறானதாகும். பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய இந்த வெளிப்பாட்டையும், தேவனுடைய இந்த பரிசுத்தத்தின் சாராம்சத்தையும் உணர்ந்து கொள்ளாததின் காரணம் என்னவென்றால், அவர்கள் சாத்தானுடைய ராஜ்யத்தின்கீழ், அவனுடைய சீர்கேட்டுக்குள், அவனுடைய வாழ்க்கை இணைப்பிற்குள் வாழ்கிறார்கள். பரிசுத்தம் என்றால் என்ன அல்லது பரிசுத்தத்தை எப்படி வரையறுப்பது என்று அவர்களுக்குத் தெரியாது. தேவனுடைய பரிசுத்தத்தை நீ புரிந்து கொண்டாலும், அவருடைய பரிசுத்தத்தை நீ இன்னும் உறுதிப்பாட்டுடன் வரையறுக்க முடியாது. இது தேவனின் பரிசுத்தத்தைப் பற்றி மனிதனின் அறிவில் உள்ள ஏற்றத்தாழ்வாகும்.
மனிதன் மீதான சாத்தானின் கிரியையை எது விவரிக்கிறது? உங்கள் சொந்த அனுபவங்களின் மூலம் இதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவன் மீண்டும் மீண்டும் செய்யும் காரியமும், ஒவ்வொரு நபரிடத்திலும் செய்ய முயற்சிக்கும் விஷயமுமாகிய இது சாத்தானின் தொன்மையான அம்சமாகும். ஒருவேளை உங்களால் அந்த அம்சத்தைப் பார்க்க முடியாது, அதனால், சாத்தான் மிகவும் பயமுறுத்துகிறவன், வெறுக்கத்தக்கவன் என்பதை நீங்கள் உணர்வதில்லை. இந்த அம்சம் எப்படிப்பட்டது என்று யாருக்காவது தெரியுமா? (அவன் மனிதனைத் தூண்டுகிறான், மயக்குகிறான், சோதிக்கிறான்.) அது சரியானது. இந்த அம்சம் பல வழிகளில் வெளிப்படுகிறது. சாத்தான் மனிதனை ஏமாற்றி, தாக்கி, குற்றஞ்சாட்டவும் செய்கிறான்—இவை அனைத்தும் அந்த அம்சத்தின் வெளிப்பாடுகள் ஆகும். இன்னும் ஏதாவது இருக்கிறதா? (அவன் பொய் சொல்கிறான்.) ஏமாற்றுவதும், பொய் சொல்வதும் சாத்தானுடைய இயற்கையான இயல்பு. இது பெரும்பாலும் இந்த விஷயங்களைச் செய்கிறது. ஜனங்களை அதிகாரம் செய்தல், அவர்களைத் தூண்டிவிடுதல், காரியங்களைச் செய்யும்படி அவர்களை வற்புறுத்துதல், அவர்களுக்குக் கட்டளையிடுதல், வலுக்கட்டாயமாக அவர்களை ஆட்கொள்ளுதல் ஆகியவையும் உள்ளன. இப்போது நான் உங்களுக்கு ஒன்றை விவரிக்கிறேன், அது உங்களை மிகவும் பயமுறுத்தும், ஆனால் உங்களை பயமுறுத்துவதற்காக நான் அதை செய்யவில்லை. தேவன் மனிதனில் கிரியை செய்கிறார், தன்னுடைய மனப்பான்மையிலும், இருதயத்திலும் மனிதனை நேசிக்கிறார். மறுபுறம், சாத்தான் மனிதனை சிறிதளவும் கருத்தில் கொள்வதே இல்லை, மேலும் அது மனிதனுக்கு எவ்வாறு தீங்கு விளைவிப்பது என்று தன் நேரம் முழுவதையும் செலவழிக்கிறது. அப்படித்தானே? மனிதனுக்குத் தீங்கு விளைவிக்க அவன் சிந்திக்கும்போது, அவன் அவசரமான மனநிலையுடன் இருக்கிறானா? (ஆம்.) ஆகவே, மனிதனிடத்திலான சாத்தானின் கிரியையைப் பொறுத்தவரையில், சாத்தானின் தீமை மற்றும் தீங்கிழைக்கும் தன்மையை முழுவதுமாய் விவரிக்கக்கூடிய இரண்டு சொற்றொடர்கள் என்னிடம் உள்ளன, அவை சாத்தானின் வெறுக்கத்தக்கத் தன்மையை அறிய உண்மையிலேயே உங்களை அனுமதிக்கும்: மனிதன் மீதான சாத்தானின் அணுகுமுறையில், மனிதன் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பெறவும், மனிதனுக்குக் கொடியதாய்த் தீங்கு செய்யும் அளவிற்கு ஒவ்வொரு மனிதனையும் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, ஆட்கொள்ள விரும்புகிறான், இதனால் அவன் தன் குறிக்கோளை அடையவும், காட்டுத்தனமான லட்சியத்தை அடைகிறான். “வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்தல்” என்றால் என்ன? அது உன் சம்மதத்துடனா அல்லது சம்மதமில்லாமல் நடக்கிற ஒன்றா? அது உனக்குத் தெரிந்தா அல்லது தெரியாமல் நடக்கிறதா? அது முற்றிலும் உனக்குத் தெரியாமல் நிகழ்கிறது என்பதுதான் பதில்! நீ அறிந்திராத சூழ்நிலைகளில், அனேகமாய் அது உன்னிடம் எதுவும் சொல்லாமலும் அல்லது செய்யாமலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த சூழலும் இல்லாமல் அது நிகழ்கிறது—அங்கே சாத்தான் உன்னைச் சுற்றி சுற்றி வந்து உன்னைச் சூழ்ந்து கொள்ளுகிறான். அவன் தன் சுயநலத்திற்காக உன்னைப் பயன்படுத்த வாய்ப்பைத் தேடி, பின்னர் அவன் உன்னை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து, உன்னை ஆட்கொண்டு, உன் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதும், உனக்குத் தீங்கு விளைவிப்பதுமான அவனுடைய நோக்கத்தை அடைகிறான். இது தேவனிடமிருந்து மனுக்குலத்தைப் பிரிக்க சாத்தான் போராடுகிறதின் முக்கியமான நோக்கமும் செயல்முறையும் ஆகும். இதைக் கேட்கும்போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? (இருதயங்களில் திகிலாகவும் பயமாகவும் உணருகிறோம்.) நீங்கள் வெறுப்படைகிறீர்களா? (ஆம்.) இந்த வெறுப்பை நீங்கள் உணரும்போது, சாத்தான் வெட்கமில்லாதவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சாத்தான் வெட்கமில்லாதவன் என்று நீங்கள் நினைக்கும் போது, உங்களை எப்போதும் கட்டுப்படுத்த விரும்பும், அந்தஸ்து மற்றும் நலன்களுக்கான காட்டுத்தனமான இலட்சியங்களைக் கொண்டவர்கள் மீது நீங்கள் வெறுப்படைகிறீர்களா? (ஆம்.) ஆகவே, மனிதனை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ளவும், ஆக்கிரமிக்கவும் சாத்தான் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்துகிறான்? இது குறித்து நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா? “வலுக்கட்டாயமான ஆக்கிரமித்தல்” மற்றும் “ஆட்கொள்ளுதல்” என்ற இந்த இரண்டு சொற்களையும் நீங்கள் கேட்கும்போது, நீங்கள் வெறுப்படைகிறீர்கள், இந்த வார்த்தைகளிலுள்ள தீமையை நீங்கள் உணர முடியும். உன்னுடைய சம்மதம் இல்லாமலோ உனக்குத் தெரியாமலோ, சாத்தான் உன்னை ஆட்கொள்ளுகிறான், உன்னை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கிறான், உன்னைக் கெடுக்கிறான். உன் இருதயத்தில் நீ எதை ருசிக்க முடியும்? நீ அருவருப்பையும் வெறுப்பையும் உணர்கிறாயா? (ஆம்.) சாத்தானின் இப்படிப்பட்ட வழிகளினால் இந்த அருவருப்பையும் வெறுப்பையும் நீ உணரும்போது, தேவனுக்காக நீ எந்த வகையான உணர்வைக் கொண்டிருக்கிறாய்? (நன்றியுணர்வு.) உன்னை இரட்சித்த தேவனுக்கு நன்றி. எனவே, இப்போது, இந்த நேரத்தில், நீ உன்னிடம் உள்ள அனைத்தையும், நீ இருக்கும் நிலையையும் தேவன் கையகப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் அவரை அனுமதிக்க விரும்புகிறாயா? (ஆம்.) எந்த சூழலில் இவ்வாறு பதிலளிக்கிறாய்? நீ சாத்தானால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு, ஆட்கொள்ளப்படுவாய் என்று பயப்படுகிறதினால் “ஆம்” என்று சொல்கிறாயா? (ஆம்.) உன்னிடம் இந்த வகையான மனநிலை இருக்கக்கூடாது; அது சரியல்ல. பயப்படாதே, ஏனென்றால் தேவன் இங்கே இருக்கிறார். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீ சாத்தானுடைய பொல்லாத சாராம்சத்தைப் புரிந்து கொண்டவுடன், தேவனுடைய அன்பு, தேவனுடைய நல்ல நோக்கங்கள், மனிதனுக்காக தேவன் கொண்டுள்ள மனதுருக்கம் மற்றும் சகிப்புத்தன்மை, அவருடைய நீதியான மனநிலைக் குறித்த மிக துல்லியமான புரிதலோ அல்லது ஆழமான நேசமோ உனக்கு இருக்க வேண்டும். சாத்தான் மிகவும் வெறுக்கத்தக்கவன், ஆனாலும் இது தேவனின் மீதான உன் அன்பையும், தேவன் மீதான உன் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தூண்டவில்லை என்றால், நீ எந்த வகையான நபர்? சாத்தான் இப்படி உனக்குத் தீங்கு செய்ய விரும்புகிறாயா? சாத்தானுடைய பொல்லாப்பையும் அருவருப்பையும் பார்த்த பின்பு, நாம் மனந்திரும்பி தேவனைப் பார்க்கிறோம். தேவனைப் பற்றிய உன்னுடைய அறிவு இப்போது ஏதேனும் மாற்றத்திற்குள்ளாகி இருக்கிறதா? தேவன் பரிசுத்தர் என்று சொல்லலாமா? தேவன் குற்றமற்றவர் என்று சொல்லலாமா? “தேவனின் தனித்துவமான பரிசுத்தம்”—தேவன் இந்த அதிகாரத்திற்கு ஏற்ப வாழ முடியுமா? (ஆம்.) ஆகவே, மனிதனுக்கு இருக்கும் தேவனைப் பற்றிய இந்த புரிதலுக்கு ஏற்ப, தேவனால் மட்டுமே இந்த உலகிலும், மற்ற எல்லாவற்றுக்கு மத்தியிலும் வாழ முடியும் அல்லவா? (ஆம்.) ஆகவே தேவன் மனிதனுக்கு மிகச்சரியாக என்ன கொடுக்கிறார்? உனக்கே தெரியாமல் அவர் உனக்குக் கொஞ்சம் கவனிப்பு, அக்கறை மற்றும் முக்கியத்துவம் மட்டுமே தருகிறாரா? தேவன் மனிதனுக்கு என்ன கொடுத்திருக்கிறார்? தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுத்திருக்கிறார், மனிதனுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார், எதையும் கோராமல், எந்தவிதமான இரகசியமான உள்நோக்கமும் இல்லாமல், நிபந்தனையின்றி மனிதனுக்கு இதையெல்லாம் அளிக்கிறார். அவர் மனிதனுக்கு வழிகாட்டவும், அவனை வழிநடத்தவும் தன்னுடைய சத்தியத்தையும் தன்னுடைய வார்த்தைகளையும் தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்தி, சாத்தானுடைய கேடுகளில் இருந்தும், அவனுடைய சோதனைகளிலிருந்தும், தூண்டுதல்களிலிருந்தும் மனிதனைப் பிரித்து, சாத்தானுடைய பொல்லாத தன்மையையும், கொடூரமான முகத்தையும் மனிதன் பார்க்க அனுமதிக்கிறார். மனுக்குலத்துக்கான தேவனுடைய அன்பும் அக்கறையும் உண்மையானதா? அது நீங்கள் எல்லோரும் அனுபவிக்கக்கூடிய ஒன்றா? (ஆம்.)
உங்கள் விசுவாச வாழ்க்கையின் எல்லா வருடங்களிலும், தேவன் இம்மட்டும் உன்னிடத்தில் செய்த கிரியையைத் திரும்பிப் பார். இக்காரியம் உன்னிடத்தில் ஆழமான அல்லது மேலோட்டமான உணர்வுகளை உண்டாக்கினாலும், இது உனக்கு எல்லாவற்றையும்விட மிகவும் அவசியமான ஒரு விஷயமல்லவா? இது நீ பெற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் தேவையான ஒன்றல்லவா? (ஆம்.) இது சத்தியம் அல்லவா? இது ஜீவன் அல்லவா? (ஆம்.) எப்பொழுதாவது தேவன் உனக்கு ஞானத்தை அளித்துவிட்டு, பின்பு அவர் உனக்குக் கொடுத்த எல்லாவற்றிற்கும் ஈடாக, அவருக்காக எதையாகிலும் நீ கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாரா? (இல்லை.) அப்படியானால் தேவனுடைய நோக்கம் என்ன? தேவன் இதை ஏன் செய்கிறார்? உன்னை ஆக்கிரமிக்கும் நோக்கம் தேவனுக்கு உண்டா? (இல்லை.) மனிதனின் இருதயத்திற்குள் தேவன் தனது சிங்காசனத்தை அமைக்க விரும்புகிறாரா? (ஆம்.) ஆகவே, தேவன் சிங்காசனம் அமைப்பதற்கும், சாத்தானுடைய வலுக்கட்டாயமான ஆக்கிரமித்தலுக்கும் என்ன வித்தியாசம்? தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆதாயப்படுத்த விரும்புகிறார், அவர் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்ள விரும்புகிறார் என்பதன் அர்த்தம் என்ன? மனிதன் தன்னுடைய கைப்பொம்மைகளாகவும், தன்னுடைய இயந்திரங்களாகவும் மாற வேண்டுமென தேவன் விரும்புகிறார் என்று அர்த்தமா? (இல்லை.) அப்படியானால் தேவனுடைய நோக்கம் என்ன? தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்ள விரும்புவதற்கும், சாத்தான் மனிதனை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ள, ஆக்கிரமிப்பு செய்ய விரும்புவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா? (ஆம்.) என்ன வித்தியாசம்? நீங்கள் எனக்குத் தெளிவாக சொல்ல முடியுமா? (சாத்தான் அதை கட்டாயத்தினால் செய்கிறான், தேவனோ மனிதன் தன்னார்வத்துடன் இடங்கொடுக்க அனுமதிக்கிறார்.) இதுவா வித்தியாசம்? உன்னுடைய இருதயத்தினால் தேவனுக்குப் பயன் என்ன? உன்னை ஆட்கொள்வதினால் தேவனுக்குப் பயன் என்ன? “தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்கிறார்” என்பதை உங்கள் இருதயத்தில் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்? இங்கே, தேவனைப் பற்றி நாம் நியாயமாகப் பேச வேண்டும். இல்லையென்றால் ஜனங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, “தேவன் எப்பொழுதும் என்னை ஆக்கிரமிக்கவே விரும்புகிறார். அவர் என்னை எதற்காக ஆக்கிரமிக்க விரும்புகிறார்? நான் ஆக்கிரமிக்கப்பட விரும்பவில்லை, நான் எனக்கே எஜமானராக இருக்க விரும்புகிறேன். சாத்தான் ஜனங்களை ஆக்கிரமிக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள், ஆனால் தேவனும் ஜனங்களை ஆக்கிரமிக்கிறார். இந்த இரண்டும் ஒன்றுதானே? என்னை யாரும் ஆக்கிரமிப்பதை நான் விரும்பவில்லை. நான் நானே!” என்று நினைப்பார்கள். இங்கே இருக்கும் வித்தியாசம் என்ன? இதைக்குறித்து யோசியுங்கள். நான் உங்களிடத்தில் கேட்கிறேன், “தேவன் மனிதனை ஆட்கொள்கிறார்” என்பது வெறுமையான சொற்றொடரா? “தேவன் மனிதனை ஆட்கொள்கிறார்” என்பதற்கு அவர் உன்னுடைய இருதயத்தில் ஜீவித்து, உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துகிறார் என்று அர்த்தமா? அவர் உன்னை உட்காரச் சொன்னால், நீ நிற்பாயா? அவர் உன்னை கிழக்கே போகச் சொன்னால், நீ மேற்கே போவாயா? இந்த வாக்கியங்களில் “ஆக்கிரமிப்பு” என்பது சொல்லப்படுகிறதா? (இல்லை. அது அப்படிச் சொல்லவில்லை. தேவனிடத்தில் இருப்பதையும், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.) தேவன் மனிதனை நிர்வகித்த இந்த ஆண்டுகளில், மனிதன் மீதான தனது கிரியையில், இந்த கடைசி கட்டம் வரையிலும், தேவன் பேசின எல்லா வார்த்தைகளினால் மனிதன் மேல் உண்டான திட்டமிட்ட பலன் என்ன? தேவன் கொண்டிருப்பதையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் கொண்டு மனிதன் வாழ்கிற காரியமா அது? “தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்கிறார்” என்ற வார்த்தைகளுக்குரிய பொருளைப் பார்த்தால், ஏதோ தேவன் மனிதனுடைய இருதயத்தில் நுழைந்து, அதை ஆக்கிரமித்து, அதில் ஜீவித்து, திரும்பவும் வெளியே வராதது போலத் தெரியலாம். அவர் மனிதனின் எஜமானராகிறார், மேலும் மனிதனின் இதயத்தை அவன் விருப்பதுடன் ஆதிக்கம் செலுத்தவும், கையாளவும் அவரால் முடியும், இதனால் தேவன் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறாரோ, மனிதன் அதைச் செய்ய வேண்டும். இந்த அர்த்தத்தில், ஒவ்வொரு மனிதனும் தேவனாக முடியும் என்றும், அவரது சாராம்சத்தையும், மனநிலையையும் கொண்டிருக்க முடியும் என்றும் தோன்றும். ஆகவே, இந்த விஷயத்தில் மனிதனும் தேவனுடைய கிரியைகளைச் செய்ய முடியுமா? “ஆக்கிரமிப்பு” என்பதை இவ்வகையில் விளக்க முடியுமா? (இல்லை.) அப்படியானால் அது என்ன? நான் உங்களிடம் இதைக் கேட்கிறேன்: தேவன் மனிதனுக்குக் கொடுக்கும் எல்லா வார்த்தைகளும், சத்தியங்களும் அவருடைய சாராம்சம், அவரிடத்தில் இருக்கிற மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் வெளிப்பாடா? (ஆம்.) இது நிச்சயமான உண்மை. தேவன் மனிதனுக்குக் கொடுக்கும் எல்லா வார்த்தைகளையும் அவர் கடைப்பிடிப்பதும், கொண்டிருப்பதும் அத்தியாவசியமானதா? இதைக்குறித்து யோசியுங்கள். தேவன் மனிதனை நியாயந்தீர்க்கும்போது, ஏன் நியாயந்தீர்க்கிறார்? இந்த வார்த்தைகள் எப்படி உயிர்ப்பெறும்? தேவன் மனிதனை நியாயந்தீர்க்கும்போது, அவர் பேசும் இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? அவற்றின் அடிப்படை என்ன? மனிதனுடைய சீர்கேடான மனநிலை அவற்றின் அடிப்படையா? (ஆம்.) ஆகையால் மனிதனை நியாயந்தீர்க்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் அடையப்படுகிற பலன், தேவனுடைய சாராம்சத்தைச் சார்ந்ததா? (ஆம்.) ஆகவே, தேவன் “மனிதனை ஆக்கிரமித்தல்” என்பது வெறுமையான சொற்றோடரா? நிச்சயமாக அப்படி இல்லை. ஆகவே தேவன் ஏன் இவ்வார்த்தைகளை மனிதனிடம் கூறுகிறார்? அவர் இவ்வார்த்தைகளைச் சொல்வதில் உள்ள நோக்கம் என்ன? இவ்வார்த்தைகள் மனிதனுடைய ஜீவனாக இருக்க வேண்டும் என்று இவற்றை பயன்படுத்துகிறாரா? (ஆம்.) இவ்வார்த்தைகளில், தான் பேசின சத்தியம் முழுவதையும் மனிதனுடைய ஜீவனாக செயல்படும்படி தேவன் அவற்றைப் பயன்படுத்த விரும்புகிறார். இந்த சத்தியங்கள் அனைத்தையும் தேவனுடைய வார்த்தையையும் எடுத்து தன்னுடைய சொந்த ஜீவனாக மனிதன் மாற்றினால், அதன்பின் அவனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியுமா? அதன் பின்பு மனிதன் தேவனுக்குப் பயப்படுவானா? அதன் பின்பு மனிதன் பொல்லாப்பை விட்டு விலகுவானா? மனிதன் இந்த நிலையை அடைந்தவுடன், தேவனுடைய ராஜரீகத்துக்கும் ஏற்பாட்டிற்கும் அவனால் கீழ்ப்படிய முடியுமா? இதன் பின்பு தேவனுடைய அதிகாரத்திற்கு மனிதன் தன்னை ஒப்புவிப்பானா? யோபைப் போன்ற அல்லது பேதுருவைப் போன்ற ஜனங்கள் தங்கள் வாழ்க்கையின் முடிவை அடையும்போது, அவர்களின் வாழ்க்கை முதிர்ச்சியை அடைந்ததாகக் கருதப்படும்போது, தேவனைப் பற்றிய உண்மையான புரிதல் அவர்களுக்கு இருக்கும்போது, இப்போதும் சாத்தானால் அவர்களை வழிமாற்றி நடத்த முடியுமா? இதன்பின்பும் சாத்தானால் அவர்களை ஆக்கிரமிக்க முடியுமா? சாத்தானால் இன்னும் அவர்களை வலுக்கட்டாயமாக ஆட்கொள்ள முடியுமா? (முடியாது.) ஆகவே எவ்வகையான நபர் இவர்? இவர் தேவனால் முழுவதும் ஆதாயமாக்கப்பட்டவரா? (ஆம்.) இந்த அளவிலான அர்த்தத்தில், தேவனால் முழுமையாகப் ஆதாயப்படுத்தப்பட்ட இந்த வகையான நபரை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? தேவனின் பார்வையில், இந்த சூழ்நிலைகளில், அவர் ஏற்கனவே இந்த நபரின் இருதயத்தை ஆக்கிரமித்துவிட்டார். ஆனால் இந்த நபர் என்ன உணருகிறார்? தேவனின் வார்த்தை, தேவனின் அதிகாரம் மற்றும் தேவனின் வழி ஆகியவை மனிதனுக்குள் இருக்கும் ஜீவனாக மாறுகிறதா? மேலும் இந்த ஜீவன் மனித முழுவதுமாக ஆக்கிரமித்து, அவன் வாழ்க்கையையும், அவன் சாராம்சத்தையும் தேவனைத் திருப்திப்படுத்த போதுமானதாய் மாற்றுகிறதா? தேவனின் பார்வையில், இந்த தருணத்தில் மனிதகுலத்தின் இருதயம் அவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? (ஆம்.) இந்த அளவிலான அர்த்தத்தை இப்போது நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்? உங்களை ஆக்கிரமிப்பது தேவனின் ஆவியானவரா? (இல்லை, தேவனின் வார்த்தையே எங்களை ஆக்கிரமிக்கிறது.) தேவனுடைய வழியும் தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய சத்தியமும் உன்னுடைய ஜீவனாய் மாறியிருக்கிறது. இந்த நேரத்தில், தேவனிடத்திலிருந்து வருகிற ஜீவனை மனிதன் பெற்றிருக்கிறான், ஆனால் அந்த ஜீவன் தேவனுடையது என்று நாம் சொல்ல முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தேவனுடைய வார்த்தையில் இருந்து மனிதன் பெற வேண்டிய ஜீவன் தேவனுடைய ஜீவன் என்று நாம் கூற முடியாது. ஆகையால் மனிதன் எவ்வளவு காலம் தேவனைப் பின்பற்றினாலும், எத்தனை வார்த்தைகளைத் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டாலும், மனிதன் ஒருபோதும் தேவனாக முடியாது. “நான் உன் இருதயத்தை ஆட்கொண்டேன், இப்பொழுது நீ என்னுடைய ஜீவனைக் கொண்டிருக்கிறாய்” என்று தேவன் ஒரு நாள் சொன்னாலும், அதன் பின்பு, நீ உன்னைத் தேவனாக உணர்வாயா? (இல்லை.) பின்பு நீ யாராக மாறுவாய்? நீ தேவனிடத்தில் ஒரு முழுமையானக் கீழ்ப்படிதலைக் கொண்டிருப்பாய் அல்லவா? தேவன் உனக்கு அளித்த ஜீவனால் உன்னுடைய இருதயம் நிரப்பப்படவில்லையா? தேவன் மனிதனின் இருதயத்தை ஆக்கிரமிக்கும்போது என்ன நடக்கும் என்பதற்கான சாதாரண வெளிப்பாடாக இது இருக்கும். இது உண்மை. இந்தக் கோணத்திலிருந்து அதைப் பார்க்கும் போது, மனிதன் தேவனாக முடியுமா? மனிதன் தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தின்படி வாழக்கூடியவனாக இருந்தால், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்கும் ஒருவனாக மாறும் போது, மனிதனால் தேவனின் ஜீவ சாரத்தையும் பரிசுத்தத்தையும் கொண்டிருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது என்ன நடந்தாலும், எல்லாம் செய்து முடித்தபின்பும் மனிதன் இன்னும் மனிதனாகவே இருக்கிறான். நீ சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவன்; நீ தேவனிடம் இருந்து தேவனின் வார்த்தையைப் பெற்று, தேவனின் வழியைப் பெறும்போது, தேவனின் வார்த்தைகளிலிருந்து வரும் ஜீவனை மட்டுமே நீ பெற்றிருக்கிறாய், மேலும் நீ தேவனால் புகழப்படுபவனாக மாறலாம், ஆனால் நீ ஒருபோதும் தேவனின் ஜீவ சாரத்தையும் அதைவிட தேவனின் பரிசுத்தத்தையும் உடையவனாக இருக்க மாட்டாய்.
இப்போது நாம் விவாதித்த தலைப்புக்குத் திரும்புவோம். இந்த கலந்துரையாடலின் போது, நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். ஆபிரகாம் பரிசுத்தமானவனா? யோபு பரிசுத்தமானவனா? (இல்லை.) இந்தப் “பரிசுத்தம்” தேவனின் சாராம்சத்தையும் மனநிலையையும் பிரதிபலிக்கிறது, மேலும் மனிதன் மிகவும் குறைவுள்ளவனாக இருக்கிறான். மனிதன் தேவனின் எல்லா வார்த்தைகளையும் அனுபவித்து, அவற்றின் உண்மை நிலையைக் கொண்டிருந்தாலும்கூட, தேவனின் பரிசுத்த சாராம்சத்தை மனிதனால் ஒருபோதும் பெற்றிருக்க முடியாது; மனிதன் மனிதன் தான். உங்களுக்குப் புரிகிறது தானே? இப்பொழுது “தேவன் மனிதனுடைய இருதயத்தை ஆட்கொள்ளுகிறார்” என்ற இந்த சொற்றொடரைப் பற்றின உங்கள் புரிதல் என்ன? (தேவனுடைய வார்த்தைகளும், தேவனுடைய வழியும், அவருடைய சத்தியமும் மனிதனுடைய ஜீவனாகிறது.) நீங்கள் இந்த வார்த்தைகளை மனப்பாடம் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு ஆழமான புரிதல் உண்டாகும் என்று நான் நம்புகிறேன். “அப்படியானால் தேவனுடைய தூதுவர்களும் தேவதூதர்களும் பரிசுத்தர்கள் அல்ல என்று ஏன் கூறுகிறார்கள்?” என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் இதைக் குறித்து முன்பு சிந்தித்திருக்க மாட்டீர்கள். நான் ஒரு எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்: நீ ஒரு இயந்திர மனிதனை இயக்கும்போது, அதனால் நடனமாடவும், பேசவும் முடியும், மேலும் அது என்ன சொல்கிறது என்பதையும் நீ புரிந்து கொள்ள முடியும். நீ அதை அழகானது, சுறுசுறுப்பானது என்று சொன்னாலும் கூட, அதற்குப் புரியாது, ஏனெனில் அதற்கு ஜீவன் இல்லை. நீ அதன் மின்சார விநியோகத்தை நிறுத்தி விட்டால், அப்போதும் அதனால் நகர முடியுமா? இந்த இயந்திர மனிதன் செயல்படுத்தப்படும்போது, அது சுறுசுறுப்பாகவும் அழகாகவும் இருப்பதாக நீ காணலாம். நீ அதை மதிப்பீடு செய்கிறாய், அது உறுதியாகவோ அல்லது மேம்போக்காகவோ எப்படி இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும், அது இயங்குவதை நீ காணலாம். நீ அதன் மின்சார விநியோகத்தை நிறுத்திவிட்டால், அதில் ஏதாவது வகையான ஆளுமையைப் பார்க்கிறாயா? அது ஏதாவது ஒரு வகையான சாராம்சத்தைக் கொண்டிருப்பதை நீ பார்க்கிறாயா? நான் சொல்வதின் அர்த்தம் உனக்குப் புரிகிறதா? அதாவது, இந்த இயந்திர மனிதன் நகர்ந்தாலும் நின்றாலும், நீ இதை எந்தவிதமான சாராம்சம் கொண்டதாகவும் விவரிக்க முடியாது. இது உண்மையல்லவா? இப்பொழுது, இதுகுறித்து நாம் இனிமேல் பேசப்போவதில்லை. அர்த்தத்தைக் குறித்த பொதுவானப் புரிதல் உங்களுக்கு இருந்தால் அதுவே போதுமானது. நம்முடைய ஐக்கியத்தை இத்துடன் நிறைவு செய்து கொள்ளலாம். மீண்டும் சந்திப்போம்!
டிசம்பர் 17, 2013
அடிக்குறிப்பு:
அ. “பட்டையை இறுக்கும் மந்திரம்” என்பது ஜர்னி டூ த வெஸ்ட் என்ற சீன நாவலில், துறவி டாங் சாங்சாங் பயன்படுத்திய ஒரு மந்திரமாகும். சன் வுகோங்கைக் கட்டுப்படுத்த அவர் இந்த மந்திரத்தைப் பயன்படுத்துகிறார், அவரின் தலையைச் சுற்றி ஓர் உலோகப் பட்டையை இறுக்கி, அவருக்குக் கடுமையான தலைவலியைக் கொடுத்து அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். ஒரு நபரைப் பிணைக்கும் ஒன்றை விவரிக்க இது ஓர் உருவகமாக மாறிவிட்டது.